Post No. 15,195
Date uploaded in London – 18 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அருணகிரி நாதர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு 1300-க்கும் அதிகமான திருப்புகழ் பாடல்களை விட்டுச் சென்றார். அத்தனையும் சந்தக் கவிகள்! அவர் பாடியது முருகன் மேல் என்பதில் ஐயமில்ல; எந்தப்பாடலிலும் முருகனை விட்டுக் கொடுக்காவில்லை ஆயினும் இந்துக்கள் வணங்கும் அத்தனை தெய்வங்களையும் இடையிடையே போற்றித் துதிபாடியுள்ளார்.
அதில் சில பாடல்களில் முருகனை விட வேறு சில தெய்வங்கள் தூக்கலாகவே உள்ளன. குறிப்பாக அவர் தேவியர்களைப் புகழந்து பாடும்போது சிவ பெருமானின் மனைவியான உமையை, பார்வதியைப் பல நாமமங்களால் வாழ்த்துகிறார்; ஒருவர் லலிதா சஹஸ்ரநாமத்தைப் படித்துவிட்டு அந்த தேவியர்கள் பெயர்களைப் பார்த்தால் இவர் தினமும் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் செய்தாரோ என்று எண்ணத் தோன்றும் .
இதோ சில ஒப்பீடுகள்:

இதோ தேவியர் பெயர்களை எல்லாம் அடுக்கி ஒரு பாடல்:
https://www.kaumaram.com/ தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்
அமுத மூறுசொ லாகிய தோகையர்
பொருளு ளாரையெ னாணையு னாணையெ
னருகு வீடிது தானதில் வாருமெ …… னுரைகூறும்
அசடு மாதர்கு வாதுசொல் கேடிகள்
தெருவின் மீதுகு லாவியு லாவிகள்
அவர்கள் மாயைப டாமல்கெ டாமல்நி …… னருள்தாராய்
குமரி காளி வராகி மகேசுரி
கவுரி மோடி சுராரி நிராபரி
கொடிய சூலி சுடாரணி யாமளி மகமாயி
குறளுரூப முராரி சகோதரி
உலகதாரி உதாரி பராபரி
குரு பராரி விகாரி நமோகரி அபிராமி
சமர நீலி புராரி தனாயகி
மலை குமாரி கபாலின னாரணி
சலில மாரி சிவாய மனோகரி பரையோகி
சவுரி வீரி முநீர் விட போஜனி
திகிரி மேவுகை யாளி செயாளொரு
சகல வேதமுமாயினை தாய் உமை அருள் பாலா.
இந்தப்பாடலில் குறைந்தது 30 தேவியர் பெயர்கள் வந்துவிட்டன!
……… சொல் விளக்கம் ………

Annapoorani, Kasi

Kanthimathi
குமரி காளி வராகி மகேசுரி … 1குமரி, 2காளி, 3வராகி, 4மகேஸ்வரி,
கவுரி மோடி சுராரி நிராபரி … 5கெளரி, 6மோடி, முதலிய பெயர்களை
உடையவள், தேவர்களுக்குக் கண் போன்றவள், பொய்யிலி,
கொடிய 7சூலி 8சுடாரணி 9யாமளி 10மகமாயி … உக்ரமான சூலத்தை
ஏந்தியவள், ஒளி மயத்தவள், சியாமளப் பச்சை நிறம் உடையவள், மகமாயி,
குறளு ரூப முராரி சகோதரி … வாமன உருவம் கொண்ட
11திருமாலின் சகோதரி,
உலக தாரி 12உதாரி 13பராபரி … உலகத்தைத் தரித்துப் புரப்பவள்,
தயாள குணம் உடையவள், முதன்மை பூண்டவள்,
குருபராரி 14விகாரி 15நமோகரி 16அபிராமி … குருவாகிய சிவனுக்குக்
கண் போன்றவள், வேறுபாடுகளைப் பூண்டவள், வணங்கப்படுபவள், அழகுள்ளவள்,
சமர 17நீலி பு18ராரி தன் நாயகி … போர் வல்ல துர்க்கை, திரிபுரம்
எரித்த சிவபெருமானின் பத்தினி,
மலை 19குமாரி 20கபாலி நல் 21நாரணி … இமயவன் புதல்வி, கபாலம் ஏந்தியவள், நல்ல குணம் வாய்ந்த நாராயணி,
22சலில மாரி சிவாய 23மனோகரி பரை 24யோகி … நீர் பொழியும்
மேகம் போன்றவள், சிவ சம்பந்தப்பட்டு விரும்பத்தக்கவள்,
பரா சக்தி, யோகி,
சவுரி 25வீரி முநீர் 26விட போஜனி … வலிமை உள்ளவள், வீரம்
உள்ளவள், பாற்கடலில் எழுந்த ஆலஹால விஷத்தை உண்டவள்,
27திகிரி மேவு கையாளி 28செயாள் … சக்கரம் ஏந்திய திருக்கரத்தை
உடையவள், இலக்குமி,
ஒரு சகல 29வேதமும் ஆயின தாய் 30உமை அருள் பாலா …
ஒப்பற்ற எல்லா வேதமுமாய் நிறைந்த தாய் உமா தேவி (ஆகிய பார்வதி) ஈன்றருளிய பாலனே,
……………………………………………
லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்களுடன் ஒப்பிடுவோம்
நாமத்தின் எண்ணை அடைப்புக் குறிக்குள் கொடுத்துள்ளேன்
உதார கீர்த்தி 848
உமா 633
ஓஜோவதீ /ஒளிமயமானவள் 767
கெளரி 635
சிவப்ரியா 409
திரிபுரா 626
நாராயணீ 298
பத்மநாப சகோதரி 280
பராபரா 790
பார்வதீ 246
போகினி 293
மனோன்மணி 207
மஹாமாயா 215
மஹாரதி/ அழகானவள் 218
மஹாலக்ஷ்மீ 210
யோகினி 653
வேத வேத்யா/ வேத மாதா 335
இன்னும் நிறைய இடங்களில் வர்ணங்களைக் குறிக்கும் யாமளா நீலி ஆகியன வருகின்றன . வாராஹி என்பவள் அம்பாளின் சக்தி பெற்ற BODYGUARD பாடிகார்ட் போன்றவள்
***

Durga, Kali,
வேறு பல திருப்புகழ்களில் மேலும் அம்பாளின் பெயர்களைக் காணலாம் . இதோ சில எடுத்துக் காட்டுகள் :
அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே … அம்பிகை,
கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை
உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே,
…………………………………………………
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற … வீர
லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும்மங்களமாக வீற்றிருக்கிற
மேரு மங்கை யாள வந்த பெருமாளே. … உத்தர மேரூரில்*5
ஆட்சிபுரியும் பெருமாளே.
***
செனனி சங்கரி ஆரணி நாரணி … உலகங்களைப் பிறப்பித்தவள்,
சங்கரி, வேத முதல்வி, நாராயணி,
விமலி யெண்குண பூரணி காரணி … குற்றமற்றவள்,
எண்குணங்களும்*2 நிறைந்தவள், காரணமானவள்,
சிவைப ரம்பரை யாகிய பார்வதி அருள்பாலா … சிவை, பராபரை
ஆகிய பார்வதி அருளிய குழந்தாய்,
***
வேத வித்தகீ வீமா … வேத ஞானியே, பயங்கரியே,
விராகிணி … பற்று அற்றவளே,
வீறுமிக்க மா வீணா கரே … சிறப்புமிக்க அழகிய (விபஞ்சி என்ற)
வீணையை கையில் ஏந்தியவளே,
மகமேரு வுற்றுவாழ் சீரே … மகாமேரு மலையில் தங்கி வாழும்
சிறப்பை உடையவளே,
சிவாதரெ … சிவனுடைய உடலில் பங்கு கொண்டவளே,
அங்கராகீ … உடம்பெல்லாம் பரிமள கந்தங்களைப் பூசியவளே,
ஆதி சத்தி சாமாதேவி பார்வதி … ஆதிசக்தியே, சாமவேதம்
போற்றும் தேவியே, பார்வதியே,
நீலி … நீல நிறத்தவளே,
துத்தியார் நீள் நாக பூஷணி … புள்ளிகள் நிறைந்த நீண்ட
நாகங்களை ஆபரணமாக அணிந்தவளே,
ஆயி நித்தியே கோடீர மாதவி … அன்னையே, என்றும்
இருப்பவளே, சடையுள்ள துர்கா தேவி,
என்றுதாழும் … என்றெல்லாம் துதி செய்து வணங்குகின்ற
ஆர்யை பெற்ற சீராளா நமோநம … மஹாதேவி பெற்ற சீராளனே,
போற்றி, போற்றி
****

ஆதி அநாதி இரண்டு பூரணி காரணி விந்து வெளியான
நாத பராபரம் என்ற யோகி உ(ல்)லாசம் அறிந்து … முதலும்,
முதலற்றதுமாய் உள்ள இரண்டுமாய் நிற்கின்ற முழு முதல்வி,
சகலத்துக்கும் ஆதி காரணமாக இருப்பவளாகிய பரா சக்தியும், விந்து
வெளியான நாதம் (விந்து சம்பந்தமான நாத ஒலி கூடி முழங்கும்
இடத்தில்) பரம் பொருளாகக் காட்சி தர, யோகிகள் காணும் அந்த
பரமானந்த ஒளியை அறிந்து அனுபவித்து,
………………………………………………
மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி
மடந்தை அபிராமி … மாது, எல்லாவற்றுக்கும் ஈசுவரி, வஞ்சிக்
கொடி போன்றவள், காளி, பிடாரி, விபஞ்சி என்னும் வீணையை
ஏந்திய சரசுவதி, சக்தி, பேரழகியான மடந்தை, அபிராமி
வாழ் சிவகாம சவுந்தரி ஆலம் மெ(மே) லாம் முக பஞ்ச
வாலை புராரி இடந்தகு உமையாயி … வாழ்வு பொலியும் சிவகாம
செளந்தரி, பிரளய கால வெள்ளத்தின் மேலாகிய ஐந்து முகம் கொண்ட பாலாம்பிகை, திரிபுரத்தை எரித்த சிவனது இடது பாகத்துக்குத் தக்க பொருந்திய உமா தேவி ஆகிய எமது தாய்,
வேத புராணம் விளம்பி நீல முராரியர் தங்கை மேலொடு கீழ்
உலகங்கள் தரு(ம்) பேதை … வேதங்களையும், புராணங்களையும்
சொன்னவள், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனாகிய (முராரி
என்னும்) நீலநிறத் திருமாலின் தங்கை, பதினான்கு உலகங்களையும்
ஈன்று அளித்த மாது,
வேடம் எ(ல்)லாம் உக சங்க பாடலொடு ஆடல் பயின்ற
வேணியர் நாயகி தந்த பெருமாளே. … (ஆடலுக்கு உரிய)
வேடங்களெல்லாம் நிலை கலங்க, (பொற்)சபையில் பாடல்களுடனும்
ஆடல்களும் பயின்ற சடையை உடைய சிவ பெருமானின் தேவி ஆகிய பார்வதி பெற்ற பெருமாளே.


இந்தப் பெயர்கள் எல்லாம் சஹஸ்ரநாமத்தில் உள்ளன.
லலிதா சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்வோருக்கும் உரைகளைப் படிப்போருக்கும் மேலும் பல நாமங்கள் கிடைக்கும். அதே போல திருப்புகழில் மேலும் பல பாடல்களைப் படிப்போருக்கும் மேலும் பல நாமங்கள் கிடைக்கும்.
—subham—-
Tags திருப்புகழ் லலிதா சஹஸ்ரநாமம், தேவியர் பெயர்கள்,