Post No. 15,203
Date uploaded in London – 20 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் இரண்டு சுவையான விஷயங்கள் வருகின்றன : ஒன்று அவர் ஜோதிடத்தை, அதாவது குறி சொல்லுதல்/ வேலன் வெறியாடலை விவரமாக வருணித்துக் கிண்டல் செய்கிறார்.
இரண்டாவது , விபூதி பற்றிச் சொல்கிறார் ; இந்த விபூதி விஷயத்தை வைஷ்ணவர்கள் ஏன் மறைக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை பாசுரத்தைப் படிப்பதற்கு முன்பாக எனது வாதத்தை விளங்கிக் கொள்வதற்கு இரண்டு மூன்று விஷயங்களைச் சொல்லி விடுகிறேன். .
ஒன்று, அவர் பயன் படுத்தும் தவளப்பொடி என்பது விபூதிதான் ; ஏனெனில் தவள என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வெண்மை, வெள்ளை என்று பொருள் ; சரசுவதி பற்றி எல்லாத் துதிகளிலும் அவளை வருணிக்கும்போது இது வருகிறது ; அருணகிரிநாதர் தமிழில் கூட தவள சரசுவதி என்று பாடுகிறார்
இரண்டாவது இந்த விஷயம் மாணிக்க வாசகர் பாடிய திருக்கோவையாரிலும் வருகிறது
மூன்றாவது அருணகிரி பாடிய இன்னும் ஒரு பாடலில் வெண்பொடி என்று விபூதியைப் புகழ்கிறார்.
நாலாவதாக , நம்மாழ்வார் பாடிய இன்னுமொரு பாசுரத்தில் நீறு என்ற சொல்லை சாம்பலுக்குப் பயன்படுத்துகிறார் . நாமும் நீறு பூத்த நெருப்பு , திருநீறு என்ற சொற்களில் சாம்பலை/ விபூதியைக் குறிக்கிறோம்.
ஐந்தாவதாக, யாரவது வேலன் போல வெறியாடினாலோ, சாமி ஆடினாலோ பூஜாரியானவர் விபூதி அடித்து சாமியை மலை ஏற்றுவார் என்றும் படிக்கிறோம் இதைத்தான் நம்மாழ்வார் சொல்கிறார் என்பது என்னுடைய கருத்து ; இதோ நம்மாழ்வார் பாசுரம்
3182 இவளைப் பெறும் பரிசு இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ
குவளைத் தடங் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் திருநாமத்தால்
தவளப் பொடிக் கொண்டு நீர் இட்டிடுமின் தணியுமே (5)
3182. Her friends say,
“To cure her sickness don’t dance with the Anangu.
She has large eyes like kuvalai flowers
and a red mouth like a kovvai fruit and her body is pale.
Say the divine name of him
who killed the angry rutting elephant kuvalayabeedam.
Put on her forehead the divine red powder of the god
and her sickness will go away.”
ஆங்கில மொழி பெயர்ப்பில் சிவப்புப் பொடி என்று தவறாக மொழிபெயர்த்துள்ளார் . வைஷ்ணவர்கள் வெளியிட்ட தமிழ்ப் பொழிப்புரைகளில் பக்கதர்களின் பாததுளிகள் (தூள்) என்று உரை செய்கின்றனர் .
இந்த இடத்தில் சிவப்பும் இல்லை! பக்தர்களின் பாதமும் இல்லை!! .
****
சரியான மொழிபெயர்ப்புக்கு நாம் திருக்கோவையாரைப் பார்க்க வேண்டும்.
தவளத்த நீறணியும் தடந்தோள்
அண்ணல் – திருக்கோவையார்
23. குறிப்பறிந்து கூறல்
தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்னொருபால்
அவளத்த னாம்மக னாந்தில்லை யானன் றுரித்ததன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையுந்
துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே
இதன் பொருள்: சுரும்பு ஆர் குழல் தூ மொழி- சுரும்பார்ந்த குழலையுடைய தூமொழியாய்;
தவளத்த நீறு அணியும் தடந் தோள் அண்ணல் – வெண்மையையுடைய நீற்றைச் சாத்தும் பெரிய தோள்களையுடைய அண்ணல் ;
தன் ஒரு பாலவள் அத்தன் ஆம் மகன் ஆம் தில்லையான் தனதொரு பாகத்துளளாகிய
அவட்குத் தந்தையுமாய் மகனுமாந் தில்லையான்; அன்று உரித்தது அன்ன
கவளத்தயானை – அவன் அன்றுரித்த யானையையொக்குங் கவளத் தையுடைய யானையை: கடிந்தார் கரத்த கண் ஆர் தழையும்
துவளத் தகுவனவோ – நம்மேல் வாராமற் கடிந்தவருடைய கையவாகிய கண்ணிற்காருந் தழையும் வாடத் தகுவனவோ? தகா
****
இதில் தவளத்த நீறு – விபூதி அணிந்த என்ற பொருளில் வந்திருக்கிறது . ஆகையால் நம்மாழ்வாரும் விபூதியைப் பூசி சாமியை மலை ஏற்றுங்கள் என்கிறார் என்பதே சரியான பொருள்; இதை மறுப்பாரும் உளரோ ?
இரண்டாவது பகுதியில் அணங்கு ஆடுதல் பற்றி நம்மாழ்வாவர் தரும் அதிசய விஷயங்களைக் காண்போம்
****

சாமி ஆடுதல்: எனது பழைய கட்டுரை
டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும்
Posted on April 15, 2012
To be continued………………………
Tags–அணங்கு ஆடுதல், வேலன் வெறியாடல், குறி சொல்லுதல்