திருப்புகழ் பாடலில் ரிஷி, முனிவர்கள்! ஒரே பாட்டில் ஐந்து பெரியோர்கள்!! (Post.15238)

Written by London Swaminathan

Post No. 15,238

Date uploaded in London –  3  December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் கூறும் விஷயங்களை விளக்குவதற்கு ஒரு என்சைக்ளோபீடியாவே தேவைப்படும்; அவ்வளவு விஷயங்களையும் அவர் சந்தமிகு பாடல்களில் புகுத்தியுள்ளார் என்பதை உரைகளைப் படிக்கும்போதுதான் தெரியும். அந்தப் பழைய உரைகளை தற்காலத்தில் நமக்கு எளிய தமிழில் காலஞ்சென்ற திரு கோபால சுந்தரம் விளக்கியுள்ளார் 

சங்கீதத்தை நமக்கு அளித்தவர்கள் தும்புருருவும் நாரதரும் ஆவார்கள். அதை அருணகிரிநாதர் கூறும் அழகே தனி; இதோ அந்தப் பாடல் :

From kaumaram.com

மதிய மண்குண மஞ்சு நால்முக

     நகர முன்கலை கங்கை நால்குண

          மகர முன்சிக ரங்கி மூணிடை …… தங்குகோண

மதன முன்தரி சண்ட மாருத

     மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு

          வகர மிஞ்சிய கன்ப டாகமொ …… ரொன்றுசேருங்

கதிர டங்கிய அண்ட கோளகை

     யகர நின்றிடும் ரண்டு கால்மிசை

          ககன மின்சுழி ரண்டு கால்பரி …… கந்துபாயுங்

கருணை யிந்திரி யங்கள் சோதிய

     அருண சந்திர மண்ட லீகரர்

          கதிகொள் யந்திர விந்து நாதமொ …… டென்றுசேர்வேன்

அதிர பம்பைகள் டங்கு டாடிக

     முதிர அண்டமொ டைந்து பேரிகை

          டகுட டண்டட தொந்த தோதக …… என்றுதாளம்

அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ

     டிதவி தம்பெறு சிந்து பாடிட

          அமரர் துந்துமி சங்கு தாரைகள் …… பொங்கவூடு

உதிர மண்டல மெங்கு மாயொளி

     யெழகு மண்டியெ ழுந்து சூரரை

          உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி …… சிந்திவீழ

உறுசி னங்கொடெ திர்ந்த சேவக

     மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற

          வுரக னும்புலி கண்ட வூர்மகிழ் …… தம்பிரானே.

……… சொல் விளக்கம் ………

தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது  ஸ்ரீ கோபால சுந்தரம் From kaumaram.com

மதியம் மண் குணம் அஞ்சு நால் முக(ம்) நகர(ம்) முன்கலை …

சந்திரனது உதவியைக் கொள்ளும் மண்ணின் குணம் ஐந்தாகும்.*1 (அந்த

மண்ணுலகம்) நாற் கோண வடிவைக் கொண்டது. (பஞ்சாட்சரத்தில்)

ந என்னும் எழுத்தையும், (பஞ்ச*2 கலைகளில்) முன் கலையான நிவர்த்தி

கலையையும் கொண்டது.

கங்கை நால் குண(ம்) மகரம் … நீர் (அப்பு மண்டலம்)

நான்கு*3 குணம் கொண்டது. இது பஞ்சாட்சரத்தில் ம என்னும்

எழுத்தைக் குறிக்கும்.

முன் சிகர(ம்) அங்கி மூணிடை தங்கு கோண(ம்) … அப்பு

மண்டலத்துக்கு முன் உள்ள அக்கினி மண்டலம் பஞ்சாட்சரத்தில்

சி என்னும் எழுத்தைக் குறிக்கும். (இந்த அக்கினி மண்டலம்)

மூன்று*4 குணமும் முக்கோணமும் கொண்டது.

மதனம் முன் தரி சண்ட மாருதம் இரு குணம் பெறில் அஞ்சு

எல் ஓர் தெரு வகரம் … அழித்தல் தன்மையை தன்னிடத்தே

கொண்டுள்ள பெருங் காற்று (வாயு மண்டலம்) இரண்டு*5

குணங்களைப் பெற்றதாய், ஐந்துடன் ஒன்று சேர்கின்ற (ஆறு) ஒளி

பொருந்திய வீதியாகும். (அதாவது வாயு மண்டலம் ஆறு கோண

வடிவானது). பஞ்சாட்சரத்தில் உள்ள வா என்னும் எழுத்தைக் குறிக்கும்.

மிஞ்சி அகன் படாகம் ஒர் ஒன்று சேரும் கதிர் அடங்கிய

அண்ட கோளகை யகர(ம்) நின்றிடும் … விரிந்துள்ள ஆகாயம்

ஒப்பற்ற ஒன்று சேரும் குணத்தை (சப்தத்தைக்) கொண்டதாகும். (இந்த

ஆகாய மண்டலம்) சூரிய சந்திரர் அடங்கி விளங்குவதான அண்ட

உருண்டையான வட்ட வடிவம் கொண்டது. இதை ய என்னும் எழுத்து நின்று விளக்கும்.

(இ)ரண்டு கால் மிசை ககன(ம்) மின் சுழி (இ)ரண்டு கால்

பரி கந்து பாயும் … (ரேசகம், பூரகம் என்னும்) இரண்டு வழி கொண்டு

அண்டமாகிய ஒளி கொண்ட உச்சியில் (கபாலத்தில்) இடை கலை,

பிங்கலை*6 என்னும் நடையுள்ள குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும்.

கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர்

கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் …

(அவைகளை வசப்படுத்த) இந்திரியங்களின் அருள் ஜோதி விளங்க,

சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் ஆகிய மும்

மண்டலங்களில் பொருந்தியுள்ள மூர்த்திகள் பிரசன்னமாகும் மந்திர

சக்தியால் லிங்கவடிவ சிவத்துடன் நான் என்று சேர்வேன்?

அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து

பேரிகை டகுட டண்டட தொந்ததோதக என்று தாளம்

அதிக … ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின

வகையில் எழுப்ப, அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை

(தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்

கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக

என்று தாளம் மிக்கு ஒலிக்க,

விஞ்சையர் தும்ப்ரு நார்தரொடு இத விதம் பெறு சிந்து பாடிட

அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு …

பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர்

என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை

வகையைப் பாட, தேவர்கள் தேவபேரிகை, சங்கம், தாரைகள் (நீண்ட

ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே

மேலெழுந்து பொங்க,

உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை

உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ உறு சினம்

கொண்டு எதிர்த்த சேவக … இரத்தப் பெருக்கின் வெள்ளம்

எல்லாவிடத்தும் பரவ, தீயின் ஒளி வீச, குதித்து எழுந்து போருக்கு வந்த

சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன், எலும்புகளும்

மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே,

மழை புகுந்து உயர் அண்டம் வாழ்வுற உரகனும் புலி கண்ட ஊர்

மகிழ் தம்பிரானே. … மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர்

வாழ்வுறும்படி, பாம்பு உருவராகிய பதஞ்சலியும், புலி உருவரான

வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய

சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே.

*1 – மண்ணின் ஐந்து குணங்கள்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

*2 – ஐந்து கலைகள்:

நிவிர்த்திகலை – ஆன்மாக்களை பாசத்தினின்று விடுவிப்பது.

பிரதிஷ்டாகலை – ஆன்மாக்களை முக்தியில் உய்ப்பது.

வித்யாகலை – பந்தநிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தருவது.

சாந்திகலை – ஆன்மாக்களுக்கு எல்லாத் துன்பங்களும் சாந்தமாகச் செய்வது.

சாந்தியதீதகலை – சாந்தி பெற்ற ஆன்மாக்களுக்குத் துன்பங்களை முற்றும் ஒழியச் செய்வது.

*3 – நீரின் நான்கு குணங்கள்:சப்தம், பரிசம், உருவம், ரஸம்.

*4 – தீயின் முக்குணங்கள்:சப்தம், பரிசம், உருவம்.

*5 – வாயுவின் இரண்டு குணங்கள்:சப்தம், பரிசம்.

*6 – இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:

நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் ‘பூரகம்’ என்றும், வெளிவிடும் காற்றுக்கு ‘ரேசகம்’ என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு ‘கும்பகம்’ என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட ‘ஆதாரங்கள்’ (நிலைகள்,சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் ‘பிரம

கபால’த்தில் உள்ள ‘ஸஹஸ்ராரம்’ (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் ‘மூலாதார’த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று ‘மண்டல’ங்களும் (அக்கினி,

ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து ‘நாடி’களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.

‘இடைகலை’ பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.

‘பிங்கலை’ பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.

‘சுழு முனை’ இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.

‘சுழு முனை’ ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. ‘இடைகலை’யும், ‘பிங்கலை’யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.

சுவாச நடப்பை ‘ப்ராணாயாமம்’ என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்மன அமைதி ஏற்படும்.

*****

ஒரே பாட்டில் ஐந்து முனிவர்கள்!

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை

     தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ

          மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ …… மயலூறி

………………………………………………

கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக

     ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ

          கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் …… தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்

     திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக

          வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் …… தருவேளே

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்

     அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்

          வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு …… முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்

     திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர

          நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் …… வருவோனே

நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ

     யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி

          நினைத்த காரிய மநுக்கூல மேபுரி …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

தமிழிலும் ஆங்கிலத்திலும்  பொருள் எழுதியது  ஸ்ரீ கோபால சுந்தரம். From kaumaram.com

………………………………

வியாகுல வெறுப்பு அதாகியெ உழைத்தே விடாய் படு

கொடியேனை … துன்பமும் வெறுப்பும் கொண்டு உழைத்து களைப்புக் கொள்ளும் கொடியவனாகிய என்னை,

கலக்கமாகவே மலக் கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே

தவிக்காமலே … கலக்க நெஞ்சினனாய், (ஆணவம், கன்மம், மாயை

என்ற) மும்மலக் கூடாகிய இந்த உடலில் நிரம்ப நோய்களுக்குள்ளாகி தவிக்க வைக்காமல்,

உனை கவிக்கு(ள்)ளாய் சொ(ல்)லி கடைத்தேறவே செயும்

ஒரு வாழ்வே … உன்னை பாட்டில் அமைத்து ஈடேறச் செய்யும்

ஒப்பற்ற அருள் செல்வமாகிய வாழ்வைத் தந்து,

கதிக்கு நாதன் நி (நீ) உனைத் தேடியே புகழ் உரைக்கு

நாயெனை அருள் பார்வையாகவெ … நற்கதியை தருகின்ற நாதன்

நீ, உன்னைத் தேடி உனது திருப்புகழை உரைக்கும் நாய் போன்ற

சிறியேனை உன் அருள் பார்வையால்

கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும் … உன்

திருவடியைக் கூடுவதற்காகவே சிறந்ததான தாய் அன்பை எனக்கு

அருள் புரிய வேண்டும்.

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என

முகத்து ஆறு தேசிக … எல்ல மலைகளுக்கும் தலைவனே, சிவகாமி

அம்மையின் தலைவராகிய சிவபெருமானின் அழகிய குமாரனே, ஆறு திரு முகங்களை உடைய குருமூர்த்தியே,

வடிப்ப மாது ஒரு குறப் பாவையாள் மகிழ் தரு வேளே …

வடிவழகுள்ள மாதாகிய குறப் பெண் வள்ளி மகிழும் வேளே,

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி

இடைக் காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருள் கோலமாய்

வரு முருகோனே …  வசிஷ்டர், காசியப்பர், தவத்தில் சிறந்த யோகிகள்,அகத்திய மாமுனிவர், இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் அமைத்த பாடல்களில் பொருள் உருவாய் வரும் முருகோனே,

நிலைக்கு நான் மறை மகத்தான பூசுரர் திருக்கொணா மலை

தலத்து … அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை* என்னும் தலத்தில்

ஆரு(ம்) கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்

வருவோனே … விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே,

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே எடுத்த வேல்

கொ(ண்)டு பொடி தூளதா எறி … நிகழ்கின்ற ஏழு பிறப்பு என்னும் கடல் வற்றிப் போய் அழிய, திருக்கரத்தில் எடுத்த வேலைக் கொண்டு

(பகைவர்களைப்) பொடிப்பொடியாகப் போகும்படிச் செலுத்தி,

நினைத்த காரியம் அநு(க்) கூலமே புரி பெருமாளே. …

நினைத்த காரியங்களெல்லாம் நன்மையாகக் கைகூடும்படி அருளும் பெருமாளே.

****

* திருக்கோணமலை இலங்கையில் உள்ளது. தட்சிண கயிலாயங்கள் மூன்று- திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திருக்கோணமலை. கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்.

****

அகத்தியர்

பல இடங்களில் அகத்தியர் பெயரையும் அருணகிரிநாதர் பாடிப் பரவுகிறார்:

காலனிடத்தணுகாதே காசினியிற் பிறவாதே  — பாடலிலும் வெடித்தவார்குழல் விரித்து வேல்விழி –பாடலிலும் அகத்தியரைச் சந்திக்கலாம்

****

From kaumaram.com

ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்



மணிபூரகம்



அநாகதம்



விசுத்தி



ஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்



மேல்வயிறு



இருதயம்



கண்டம்



புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே

பூதம்

மண்


அக்கினி



நீர்



காற்று



ஆகாயம்



மனம்





வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்

அக்ஷரம்

ஓம்


ந(கரம்)



ம(கரம்)



சி(கரம்)



வ(கரம்)



ய(கரம்)





தலம்

திருவாரூர்


திருவானைக்கா



திரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்



திருக்காளத்தி



காசி
(வாரணாசி)

திருக்கயிலை



கடவுள்

விநாயகர்


பிரமன்



திருமால்



ருத்திரன்



மகேசுரன்



சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்

–subham—

Tags- திருப்புகழ், பாடல், ரிஷி, முனிவர்கள், ஒரே பாட்டில், ஐந்து பெரியோர்கள், அகத்தியர், வசிட்டர், இடைக்காடர், தும்புரு, நாரதர்

Leave a comment

Leave a comment