ஆண்டாளைத் தோற்கடித்த சம்பந்தர்!  தாவர இயலில் முதல் பரிசு யாருக்கு? (Post.15,290)

Written by London Swaminathan

Post No. 15,290

Date uploaded in London –  20 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் ஒரு TEEN AGE GIRL டீன் ஏஜ் கேர்ள் ; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் ஒரு TEEN AGE BOY டீன் ஏஜ் பாய்; இருவரும் இளம் வயதில் ஜோதியில் கலந்து இறைவனுடன் ஐக்கியமானார்கள்; நூறு கோடியில் ஒருவர்தான் ஸ்பான்டேனியஸ் கம்பஸன்SPONTANEOUS COMBUSTION    என்ற அற்புதம் மூலம் தன்னைத்தானே ஜோதியாக மாற்றிக்கொள்ள முடியும் . சம்பந்தர் தன்னுடன் இருந்தவர்களையும் சிவன் அடிக்கு அழைத்துச் சென்றார் இப்படி தானாக ஜோதியாகும் சம்பவங்கள் (SPONTANEOUS COMBUSTION  )  உலகில் அமெரிக்கா முதலிய நாடுகளில் ஒரு சில மட்டும் பதிவாகியுள்ளன. நிற்க சொல்ல வந்த விஷயம் BOTANY பாட்டனி என்னும் தாவரவியல் விஷயம்.

ஆண்டாளும் சம்பந்தரும் திருவில்லிபுத்தூரிலும் சீர்காழியிலும் எந்தப் பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள் என்ற செய்தி அவர்கள் வரலாற்றில் இல்லை . அவர்கள் இருவரும் தாவரவியல் என்னும் பாட்டனிBOTANY பாடத்தில் நல்ல மார்க் எடுத்திருக்க வேண்டும்! அதிலும் முதல் பரிசினை சம்பந்தர் தட்டிக்கொண்டு போய்விட்டார்!

ஆண்டாள் பாடிய  நாச்சியார் திருமொழியில் 143 பாடல்களில்  சுமார் 27  தாவரங்களைக் குறிப்பிட்டுள்ளார் . ஆனால் சம்பந்தரோ ஒரே பதிகத்தில் , ஒரே ஊரில், பத்துப்பாடல்களில் முப்பது தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் இதைப்  படித்தவுடன் சங்க காலத்தில் சாதனைபுரிந்த பிராமணப்புலவன் கபிலன்தான் நினைவுக்கு வருகிறார் அவர் ஒரே பாடலில் — குறிஞ்சிப்பாட்டு — ஒரே மூச்சில் தொடர்ச்சியாக 99  தாவரங்களைப்  பாடி விட்டார்!  இது, தமிழ் மொழி உலகுக்கு கொடுத்த ஒரு அதிசயம்!

ஆண்டாள் குறிப்பிட்ட 27 தாவரங்கள் இதோ :

ஊமத்தை, முருக்கம், கரும்பு, முல்லை, மருதம் காயாம் பூ, காக்கணம் பூ, காரகில், சந்தனம், தாமரை , நெல் (அரிசி.அவல்), ஆலம், குருந்தம், துளசி, கடம்பம், புன்னை, குருக்கத்தி, ஞாலல் , கோவை, செருந்தி, செண்பகம், மா, எருக்கு, களாப்பழம், கோங்கு, கொன்றை,காந்தள்

இவை தவிர அவரை ,துவரை என்ற சொற்கள் இருந்தாலும் அவை அவர்+ ஐ என்ற பொருளிலும் துவரை= துவாரகாபுரி என்ற பொருளிலுமே கையாளப்பட்டுள்ளன.

****

சம்பந்தரின் தாவர அறிவு

வேங்கை, குங்கும, செருந்தி, செண்பகம், ஆனைக்கொம்பு, ஆரம், மாதவி, சுரபுன்னை, விளா, மூங்கில்,  பாக்கு, ஈச்சம், இளமருது, இலவங்கம், ஊமத்தம், சந்தனம், காரகில், முல்லை, மல்லிகை, மெளவல், மா, வாழை, குருந்தம், கோங்கு, குரவம், பாதிரி –26

ஐங்கணை -தாமரை, கருங்குவளை, அசோகு, மா, முல்லை  +5

இவ்வளவு மரம் செடி கொடிகளை ஒரே ஊரில் பாடியதற்கு என்ன கரணம்? அங்கு இருந்தது நந்தவனமா? அல்லது பொட்டானிக்கல் கார் டனா? என்று எண்ண வேண்டியுள்ளது! 

திருமாந்துறை பதிகம்

செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி,

செண்பகம், ஆனைக்

கொம்பும், ஆரமும், மாதவி, சுரபுனை, குருந்து, அலர்

பரந்து உந்தி,

அம் பொன் நேர் வரு காவிரி வடகரை மாந்துறை

உறைகின்ற

எம்பிரான், இமையோர் தொழு, பைங்கழல் ஏத்துதல்

செய்வோமே.

1

விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து

உந்தி,

அளவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவான்,

அத்

துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச் சுட விழித்தவன்,

நெற்றி

அளக வாள்நுதல் அரிவை தன் பங்கனை அன்றி, மற்று

அறியோமே.

2

கோடு தேன் சொரி குன்று இடைப் பூகமும் கூந்தலின்

குலை வாரி

ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்,

வாடினார் தலையில் பலி கொள்பவன், வானவர் மகிழ்ந்து

ஏத்தும்

கேடு இலாமணியைத் தொழல் அல்லது, கெழுமுதல்

அறியோமே.

3

இலவம், ஞாழலும், ஈஞ்சொடு, சுரபுன்னை, இளமருது,

இலவங்கம்,

கலவி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை கண்டன்;

அலை கொள் வார்புனல், அம்புலி, மத்தமும், ஆடு அரவு

உடன் வைத்த

மலையை; வானவர் கொழுந்தினை; அல்லது வணங்குதல்

அறியோமே.

4

கோங்கு, செண்பகம், குருந்தொடு, பாதிரி, குரவு, இடை

மலர் உந்தி,

ஓங்கி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை,

பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டு அவி(ம்) மலர்

சேர்த்தி,

தாங்குவார் அவர், நாமங்கள் நாவினில் தலைப்படும்

தவத்தோரே.

5

பெருகு சந்தனம், கார் அகில், பீலியும், பெரு மரம்,

நிமிர்ந்து உந்தி,

பொருது காவிரி வடகரை மாந்துறைப் புளிதன்

எம்பெருமானை

பரிவினால் இருந்து, இரவியும் மதியமும் பார் மன்னர்

பணிந்து ஏத்த,

மருதவானவர் வழிபடும் மலர் அடி வணங்குதல்

செய்வோமே.

6

நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள்மலர் அவை

வாரி

இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை,

அன்று அங்கு

அறவன் ஆகிய கூற்றினைச் சாடிய அந்தணன்,

வரைவில்லால்

நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன், நிரை கழல்

பணிவோமே.

7

மந்தம் ஆர் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள்,

மாணிக்கம்

உந்தி நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை;

நிந்தியா எடுத்து ஆர்த்த வல் அரக்கனை நெரித்திடு

விரலானை;

சிந்தியா மனத்தார் அவர் சேர்வது தீ நெறி அதுதானே.

8

நீலமாமணி நித்திலத்தொத்தொடு நிரை மலர் நிரந்து உந்தி

ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை

மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலர் அடி இணை

நாளும்

கோலம் ஏத்தி நின்று ஆடுமின்! பாடுமின்! கூற்றுவன்

நலியானே.

9

நின்று உணும் சமண், தேரரும், நிலை இலர்; நெடுங்கழை,

நறவு, ஏலம்,

நன்று மாங்கனி, கதலியின் பலங்களும், நாணலின் நுரை

வாரி,

ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை, ஒரு காலம்

அன்றி, உள் அழிந்து எழும் பரிசு அழகிது; அது அவர்க்கு

இடம் ஆமே.

10

வரை வளம் கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானை,

சிரபுரம்பதி உடையவன் கவுணியன், செழுமறை நிறை

நாவன்,

அர எனும் பணி வல்லவன், ஞானசம்பந்தன் அன்பு உறு

மாலை

பரவிடும் தொழில் வல்லவர், அல்லலும் பாவமும் இலர்

தாமே.

–Subham—

Tags- தாவர இயல், முதல் பரிசு, யாருக்கு?, ஆண்டாள், தாவரங்கள் சம்பந்தர், திருமாந்துறை பதிகம், botany

Leave a comment

Leave a comment