Post No. 15,309
Date uploaded in London – 26 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த மூன்று மாத காலண்டர்களில் ஆதிசங்கரரின் பிரஸ்னோத்தர ரத்ன மாலிகாவில் உள்ள பொன்மொழிகளைக் கண்டோம்; அதன் தொடர்ச்சியை இந்த ஜனவரி மாதக் காலண்டரில் காண்போம். இது அந்த நூலின் க்டைசி பகுதியாகும்
***
ஜனவரி 2026 பண்டிகைகள்
3-திருவாதிரை; 14-போகிப் பண்டிகை; 15-பொங்கல்/ மகர சங்கராந்தி; 16-கணுப்பொங்கல்/மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்; 26-குடியரசு தினம்; 7-திருவையாறு தியாகராஜர் ஆராதனை;
25-ரதசப்தமி; 26- குடியரசு தினம் பீஷ்ம அஷ்டமி; 18- தை அமாவாசை;30- காந்திஜி நினைவு தினம்.
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள்-14,29; அமாவாசை-18 பெளர்ணமி-3;
முகூர்த்த தினங்கள்- ஜனவரி 14;
***
ஜனவரி 1 வியாழக்கிழமை
வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளை அடைந்த தன்யன் யார் ?
சந்நியாசி /துறவி
***
ஜனவரி 2 வெள்ளிக்கிழமை
எல்லோருடைய மதிப்பையும் பெறும் மான்யன் யார்
கல்வி அறிவோடு துறவி போல் வாழ் பவன் மான்யன் ஆவான்
***
ஜனவரி 3 சனிக்கிழமை
யாருக்கு சேவை செய்ய வேண்டும்?
தர்மம் செய்வோனுக்கு .
***
ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமை
யாரை வாரிவழங்குவோன் என்று சொல்லலாம்?
யாசிப்பவரைத் திருப்தி செய்வோனை.
***
ஜனவரி 5 திங்கட் கிழமை
ஒருவனுக்கு கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியம் என்ன ?
ஒருவனின் உடல் ஆரோக்கியம்.
***
ஜனவரி 6 செவ்வாய்க்கிழமை
யார் பலன்களை அனுபவிப்பவன்?
உழுதுண்டு வாழ்வோன்.
***
ஜனவரி 7 புதன் கிழமை
பாவம் ஒட்டாதவன் யார் ?
ஜபம் செய்வோனை பாவங்கள் பீடிக்காது.
***
ஜனவரி 8 வியாழக்கிழமை
பூரணமானவன் யார் ?
குழந்தைகள் உடையவன் முழு மனிதன்
***
ஜனவரி 9 வெள்ளிக்கிழமை
மனிதர்களுக்கு மிகவும் கடினமான காரியம் எது?
மனத்தைக் கட்டுப்படுத்துவதே.
***
ஜனவரி 10 சனிக்கிழமை
யார் பிரம்மச்சாரி ?
பெண்களை நினைக்காமல் /நாடாமல்/ தனது சக்தியை சேமித்துவைப்பவன் பிரம்மச்சாரி
***
ஜனவரி 11 ஞாயிற்று க்கிழமை
இந்த உலகத்துக்கு ஆதாரமாக இருப்பவன் யார் ?
சூரியன்.
***
ஜனவரி 12 திங்கட் கிழமை
எல்லோருக்கும் வாழ்வினை அளிப்பது எது?
மழை.
***
ஜனவரி 13 செவ்வாய்க்கிழமை
வீரன் யார் ?
பயந்தவர்களைக் காப்பவன்
***
ஜனவரி 14 புதன் கிழமை
பாதுகாப்பு தருவோன் யார் ?
ஆன்மீக குரு
***
ஜனவரி 15 வியாழக்கிழமை
ஜகத் குரு யார் ?
சிவா பெருமான்
***
ஜனவரி 16 வெள்ளிக்கிழமை
அவித்யை என்பது என்ன ?
நான் யார் என்பதை மறந்து விடுவது (தன்னை அறியாமல் இருப்பது.)
***
ஜனவரி 17 சனிக்கிழமை
யாருக்குத் துன்பமே வராது?
கோபப்படாதவனுக்கு.
***
ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை
சந்தோசம் என்பது என்ன?
திருப்தியுடன் வாழ்வது (போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து)
***
ஜனவரி 19 திங்கட் கிழமை
அரசன் என்பவன் யார்?
தன குடிமக்களை மகிழ்ச்சியாக வாழவைப்பவன்.
***
ஜனவரி 20 செவ்வாய் க்கிழமை
நாய் என்று யாரைச் சொல்லலாம்?
கீழ்மக்களுக்கு தொண்டு செய்ப்பவனை.
***
ஜனவரி 21 புதன் கிழமை
இந்திர ஜாலம் என்று எதைச் சொல்லலாம் ?
இந்தப் பிரபஞ்சத்தை.
***
ஜனவரி 22 வியாழக்கிழமை
எது சத்தியம் ?
பிரம்மம் (இறைவன்)
***
ஜனவரி 23 வெள்ளிக்கிழமை
உயர்ந்த லட்சியம் எது ?
அத்வைதம்
***
ஜனவரி 24 சனிக்கிழமை
இறைவனுக்கு சமமானவர் யார் ?
தாய் – அன்னை
***
ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை
வணங்கத்தக்கவரும் குரு போன்றவரும் யார்?
தந்தை.
***
ஜனவரி 26 திங்கட் கிழமை
யாருடைய வார்த்தை எப்போதும் பொய்க்காது?
எவர் ஒருவர் உண்மை பேசுபவராகவும் மவுனம்/நாவடக்கம் கடைப்பிடிப்பபவராகவும் இருக்கிறாரோ அவர் வார்த்தை பொய்க்காது.
***
ஜனவரி 27 செவ்வாய்க்கிழமை
நாம் மீண்டும் மீண்டும் பிறப்பது ஏன் ?
புலன்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதால்
***
ஜனவரி 28 புதன் கிழமை
யாருக்கு அன்னம் இட வேண்டும் ?
எவன் ஒருவன் பசியுடன் உள்ளானோ அவனுக்கு.
***
ஜனவரி 29 வியாழக்கிழமை
பகவான் யார் ?
ஹரியும் சிவனும் இணைந்த கடவுள்; சங்கர நாராயணன்.
***
ஜனவரி 30 வெள்ளிக்கிழமை
வேதங்களுக்கு எல்லாம் மூலம் எது?
ஓம்காரம்
***
ஜனவரி 31 சனிக்கிழமை
முக்தி என்பது என்ன ?
அறியாமை / அவித்யையிலிருந்து விடுபடுவதே முக்தி/ மோட்சம்
–subham—
Tags- ஜனவரி காலண்டர், ஆதிசங்கரர், பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா, கடைசி பகுதி