


சாமுண்டீஸ்வரி கோயில் படங்கள்

Post No. 15,337
Date uploaded in London – 15 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நான் கண்ட மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் (Post No.15,337)
கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று மைசூர் நகரத்துக்கு மிகவும் அருகிலுள்ள சாமுண்டீஸ்வரி கோயில் ஆகும். மைசூர் நகரத்துக்கு பெயர் கொடுத்ததே இந்தக் கோவில்தான் . மகிஷாசுரன் என்ற அசுரனை தேவி வதம் செய்த காட்சி மஹாபலிபுரம் போன்ற பல இடங்களில் இருந்தாலும் மைசூர் நகரமே அந்த அரக்கனின் பெயரைத் தக்க வைத்துக்கொண்டது.
மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி கோயில் அமைந்துள்ளது.
மூன்றாவது முறையாக இந்தக் கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் ஜனவரி 2026 (3-1-2026) முதல் வாரத்தில் கிடைத்தது . இந்த முறை காரில் கோவில் அருகே சென்றதால் பெரிய மகிஷாசுரன் சிலையையும் பெரிய நந்தி சிலையையும் பார்க்கச் செல்லவில்லை இப்போது கண்ட மிகப்பெரிய மாற்றம் போகும் வழி முழுதும் கடைகள் , கடைகள், கடைகள்! அங்குள்ள கூட்டத்தில் முட்டி மோதி மேலே சென்றால் கோவிலிலும் கூட்டம் 200 ரூபாய் டிக்கெட் வாங்கியும் முக்கால் மணிநேரம் காத்திருந்தோம், சில நிமிட தரிசனத்துக்காக; ஆயினும் அந்த தரிசனத்தில் ஒரு மனத் திருப்தி.
சக்தி தேவியின் தலங்களில் மக்களைக் கவர்ந்திழுக்கும் க்ஷேத்திரங்களில் இது தனிச் சிறப்பு வாய்ந்தது; ஏனெனில் அருகில் மகாபலேஷ்வர் என்ற சிவத்தலமும் நாட்டின் மிகப்பெரிய நந்தி களில் ஒன்றும் மஹிஷாசுரனின் மிகப்பெரிய உருவமும் ஒருங்கே அமைந்துள்ள மலை இது
புல்லட் பாய்ண்டுகளில் சுவையான விஷயத்தைக் காண்போம்
1
மஹிஷாசுரனுரு என்பதே மருவி மைசூர் ஆனது
2
இது மைசூர் உடையார் வம்ச அரசர்களின் குல தெய்வம். முன் காலத்தில் விஜயதசமி/ தசரா பண்டிகையின் போது பெரிய யானை மீதுள்ள அம்பாரியில் மன்னர் பவனி வந்தார்; இப்போது அந்த தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி பவனி வருகிறாள் . இதைக் காண லட்சக்கணக்கான மக்கள் நவராத்ரி முடியும் தசரா நாளில் வருகின்றனர்.
3
தேவியால் வதம் செய்யப்பட மஹிஷாசுரனின் பிரம்மாண்டமான சிலை கோவிலிலிருந்து சற்று தொலைவில் உள்ளது அவன் கையில் வாளும் பாம்பும் இருக்கிறது .
4
தஞ்சாவூர் பெரிய கோவில், லெபாக்ஷி போன்ற இடங்களில் உள்ளது போன்ற பெரிய நந்தி ; யாரும் மறக்க முடியாத பெரிய உருவம். மேலும் நந்தியின் உடலில் அலங்கார வேலைப்பாடுகள். இந்த நந்தி 15 அடி உயரமும், 24 அடி நீளமும், இதன் கழுத்தைச் சுற்றி பெரிய மணிகளைக் கொண்டு மிகப் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றது.
5
இவ்வளவையும் காண, 3500 அடி உயரமுள்ள மலை ஏற வேண்டும். தற்காலத்தில் காரில் சென்று கோவில் வாசலில் இறங்கலாம்; மலை ஏறும் வழக்கம் மலை ஏறிவிட்டது.
6
கோவிலின் வரலாறு ஹோய்சாள, விஜயநகர, மைசூர் உடையார் வம்ச அரசர்களால் ஆராதிக்கப்பட்ட அம்மன் சுமார் ஆயிரம் ஆண்டு வரலாறு உடையவள்.
7
அசுரனை வதம் செய்ததால் அஷ்ட புஜ துர்க்கை வடிவம் கொண்டுள்ளாள் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அன்னையின் கீழ், மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் இருக்கிறான். திரிசூலத்தால் அன்னை இவனைக் குத்தியபடி காட்சியளிக்கிறாள்.
8
கர்ப்பக்கிரகம் எனப்படும் கருவறை வாசலில் நந்தினி, கமலினி என்னும் துவாரபாலகியர் காட்சி தருகின்றனர். சந்நிதியின் வலப்புறம் பைரவர் இருக்கிறார். இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் நிறுவப்பட்டதாக ஐதீகம்.
9
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி, கன்னட மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
முக்கிய திருவிழா நவராத்திரி ஆகும். நவராத்திரி விழாவின் போது, அம்பிகை ஒன்பது விதமான ரூபங்களில் இங்கே அலங்கரிக்கப்படுவார். ஏழாவது நாளன்று மைசூர் மஹாராஜா தானம் செய்த நகைகளைக்கொண்டு அம்பாளுக்கு அலங்காரம் செய்வார்கள்.
நந்தி சிலை


மகிஷாசுரன் சிலை
10
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் படிகளை, உடையார் மன்னர்கள் செதுக்கினார். மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் மற்றும் அவரது மூன்று ராணிகளான ராமவிலாசா, லட்சுமிவிலாசா மற்றும் கிருஷ்ணவிலாசா ஆகியோரின் ஆறடி சிலை வைக்கப்பட்டுள்ளது.
11
Address
Chamundeshwari Temple Address: Chamundi Hill Rd, Mysuru, Karnataka, 570010, India
—subham—Tags- மைசூர், சாமுண்டீஸ்வரி கோயில் , நந்தி சிலை, மகிஷாசுரன் சிலை, படங்கள், லண்டன் சுவாமிநாதன்