உடல்நல மேம்பாட்டிற்கான அருமையான பரிந்துரைகள்!! (Post No.15,350)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,350

Date uploaded in London – 21 January 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2026 ஹெல்த்கேர் ஜனவரி இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

2026ம் ஆண்டில் l……

 உடல்நல மேம்பாட்டிற்கான அருமையான பரிந்துரைகள்!! 

ச. நாகராஜன்

2026ம் ஆண்டு உற்சாகமாகப் பிறந்து விட்டது. உலகம் முழுவதும் கொண்டாட்டம் தான்! 

உடல்நல மேம்பாட்டிற்கான பரிந்துரைகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன.

அவற்றில் சில இதோ: 

உடல்பயிற்சி செய்க

சீராக உடல்பயிற்சி செய்வது உடல்நலத்தையும் மனநலத்தையும் சீராக்குகிறது. செண்டர்ஸ் ஃபார் டிஸீஸ் கண்ட்ரோல் (Centers for Disease Control – CDC) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி 1)உடல்பயிற்சியானது உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வழி வகுக்கிறது, 

2)இதய சம்பந்தமான நோய்கள் பற்றிய அபாயத்தை நீக்குகிறது,

 3) உங்களது எலும்புகளையும் தசைகளையும் வலுப்படுத்துகிறது.

நடைப்பயிற்சியை ஒருபோதும் விட்டு விடாதீர்கள்.

சீராக நீரைப் பருக வேண்டும்

போதுமான நீரைப் பருகாவிடில் உங்கள் உடல் சோர்வடையும். கவனம் சிதறி விடும். ஆகவே ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 8 டம்ளர் நீரை அருந்த வேண்டும். 

உங்கள் உடல்நலத்தைப் பற்றி சீராக ஆய்வு செய்க

Fitness Tacking காலத்திற்கேற்ற அவசிய ஆய்வாக ஆகி விட்டது. இதற்கான பல APPS உங்கள் போனில் உள்ளன; ஸ்மார்ட் வாட்சிலும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் நடைபயிற்சியில் எத்தனை அடிகள் எடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று கண்காணிக்கலாம். உங்கள் இதயத் துடிப்பையும் ரத்த அழுத்தத்தையும் அளக்கலாம்; கண்காணிக்கலாம். ஒரு சிறிய நோட்புக்கில் இவற்றைப் பதிவு செய்து கொள்ளலாம். தேவையெனில் உடனே மருத்துவரை அணுகலாம். 

மல்டிவிடமின் சாப்பிடுங்கள்

சீரான உணவுத் திட்டம் இருந்தபோதும் கூட சில சமயம் அவசரத்தையும் பல்வேறு நெருக்கடியான வேலைகளைக் கருதியும் நாம் சத்தான உணவை மேற்கொள்ள முடிவதில்லை. ஆகவே டாக்டர்களின் பரிந்துரையின் படி மல்டிவிடமின் சாப்பிடலாம். 

பணி செய்யும் போது 30 நிமிடம் நிற்கப் பழகுங்கள்

வேலை, வேலை, வேலை! சாப்பிடக் கூட மறக்கும்படியான அழுத்தம். உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை கொலம்பியா பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அது நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது உடல்நலத்தைப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிந்து பணி செய்யும் போது அரைமணி நேரத்திற்கு ஒருமுறை நில்லுங்கள் என்கிறது. சில அடிகள் நடக்கவும் செய்யலாம்.

இயற்கையோடு இயைந்து பழகுங்கள்

இயற்கை பல உடல் மற்றும் உள்ள நோய்களைத் தீர்க்க வல்லது. முடிந்தபோதெல்லாம் இயற்கை வனப்பைக் காணச் செல்லுங்கள். உற்சாகமான மனநிலையைப் பெறலாம். புத்துணர்ச்சி பெறலாம். 

மூலிகைகள்கீரைகளை உணவில் சேருங்கள்

இயற்கை தந்த கொடையான மூலிகைகள் மற்றும் கீரைகளை முடிந்த அளவு உணவில் சேருங்கள். 

தேவையான அளவு ஆழ்ந்த உறக்கம் தேவை

குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் நன்கு உறங்க வேண்டும்.போன், கம்ப்யூட்டர், டிவி ஆகியவற்றை ஒரு மணி நேரம் முன்னாலேயே மூடி விட்டு உறங்கப் பழகுங்கள்.

 ஆர்கானிக் உணவைச் சேருங்கள்

நன்கு பயிரிடப்பட்ட ஆர்கானிக் உணவு வகைகளை உணவில் சேர்ப்பதில் குறியாக இருங்கள். 

நன்றி பாராட்டுங்கள்

உங்கள் வாழ்வை வளமாக்க உதவும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சமூகத்தில் இணைந்து வாழும் அண்டை அயலார் ஆகியோரிடம் நன்றி பாராட்டத் தவறாதீர்கள். ஒரு டயரியில் குறித்து வைத்துக் கொண்டு அனைவரையும் பாராட்டப் பழகுங்கள். 

புத்தகம் படியுங்கள்

டிவி, கம்ப்யூட்டரைத் தொடர்ந்து பார்ப்பதை விட்டு விட்டு நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். 

அதிக பழவகைகளைச் சேர்த்து சாப்பிடுங்கள்

நல்ல பழங்களையும் புதிதாக பயிரிடப்பட்ட கறிகாய்களையும் உணவுத் திட்டத்தில் சேருங்கள் குளிர்சாதனப்பெட்டியில் பழைய உணவு வகைகளைச் சேர்த்து வைத்து சாப்பிடுவதைத் தவிருங்கள். 

உங்கள் தோற்றத்தை ( Posture) மேம்படுத்துங்கள்

மிடுக்கான தோரணை உங்களை மேம்படுத்தும் என்கின்றனர் ஹார்வர்ட் ஹெல்த் நிபுணர்கள். 

ஜீனியைக் கட்டுப்படுத்துங்கள்

ஜீனியைக் கட்டுப்படுத்துவது உங்கள் எடையைச் சீராக்கும். அனைத்து சத்துணவு உட்கொள்ளலையும் பயன்படச் செய்யும். இதை ஒரு குறிக்கோளாக வைத்து சர்க்கரை வேண்டாம் என்று தைரியமாகச் சொல்லி அதைத் தவிர்த்து விடுங்கள். 

தியானம் செய்க

தியானத்தின் பலன்களைப் பற்றி அன்றாடம் வெளிவரும் செய்திகளைப் படித்தாலேயே போதும் அது எவ்வளவு இன்றியமையாதது என்பதைத் தெரிந்து கொள்ள! சில நிமிட தியானம் உங்கள் மன ஆற்றலை மேம்படுத்தும். உடலை வளப்படுத்தும்.

 இசை கேட்டு இன்புறுக

சங்கீத சௌபாக்கியம் என்றும் குன்றாத நல் பாக்கியம். உங்கள் கவலையையும் மனச்சோர்வையும் போக்க வல்லது இசை. தேர்ந்தெடுத்த இசைப் பாடல்களைக் கேட்டு மகிழ்வதை அன்றாடப் பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

 குடும்பத்தினரிடமும் நண்பர்களுடனும் பழகுங்கள்

நெடுநேரம் தனியே தனித்திருப்பதை விட்டுவிட்டு குடும்பத்தினருடன் அளவளாவுங்கள். நண்பர்களைச் சந்திக்க மறக்காதீர்கள்.

 மினரல்கள் தேவை

சில மினரல்கள் நல்ல உடல்நலத்தைக் கொள்வதற்கு அவசியம் தேவை. கால்சியம் மற்றும் மக்னீஷியத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். உங்கள் குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்து தேவையான மினரல்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

நல்ல பொழுதுபோக்கு தேவை

கிரிக்கெட், டென்னிஸ் செஸ் – ஏதோ ஒரு பொழுதுபோக்கு தேவை. உங்களுக்குப் பிடித்த விஷயம் ஒன்றில் மனதை ஈடுபடுத்துங்கள்.

வாழ்க்கையே உற்சாகமயமாக இருக்கும். 

அன்றாட வேலைகளைத் திட்டமிடுங்கள்

பரபரப்புடன் ஓடி ஓடி வேலை செய்யாமல் அன்றாடப் பணிகளைத் திட்டமிடுங்கள். பொருள்களை அதனதன் இடத்தில் வைத்துப் பராமரியுங்கள். நேரமும் மிச்சமாகும்; படபடப்பும் குறையும்.

 என்ன நண்பர்களே! 2026க்குத் தயாரா? உடல்நலமும் மன நலமும் மேலோங்கட்டும்.

வாழ்க வளமுடன்! நலமுடன்!

***

Leave a comment

Leave a comment