


Post No. 15,351
Date uploaded in Sydney, Australia – 22 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தாய்லாந்தில் நான் கண்ட அதிசய பூமாதேவி வழிபாடு; அதர்வண வேத பூமி சூக்த எதிரொலி !
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமா தேவியை இந்துக்கள் வழிபட்ட செய்தி அதர்வண வேதத்தில் உள்ளது. பூமி சூக்தம் / பிருத்வீ சூக்தம் என்னும் சம்ஸ்க்ருத கவிதை பூமியையும் அதன் செல்வத்தையும் அற்புதமாக வருணிக்கிறது புறச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய முதல் கவிதை அது ; இந்த பூமா தேவியை தாய்லாந்து மக்களும் தென்கிழக்காசிய நாடுகளின் மக்களும் வழிபடுகின்றனர். தோட்டங்களிலும் தெருச் சந்திப்புகளிலும் புத்த சமயக் கோவில்களிலும் பூமா தேவி சிலைகளும் பொம்மைகளும் உள்ளன அதற்கு பெளத்த மதத்தினர் பயபக்தியுடன் ஊது பத்தி ஏற்றி வழிபடுகின்றனர்.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து , பாங்காக் பாலஸ் என்னும் அரண்மனை 15 நிமிட நடைதான் என்று ஹோட்டல் பெண்மணி சொன்னார் ; நாங்களும் நடை கட்டினோம். ஒரு சாலைச் சந்திப்பில் இளம் சிட்டு களும் இளைஞர்களும் ஒரு சிலையைச் சுற்றிக் கூட்டமாகக் கூடி இருந்தனர். அது என்ன சிலை என்று வியப்புடன் அருகில் சென்றோம்; அங்கு பலரும் போட்டி போட்டுக்கொண்டு ஊதுபத்தி ஏற்றிக் கொண்டிருந்தனர்; பலர் பூச்செண்டுகளை சமர்ப்பித்தனர் என்ன சிலை என்று கேட்டபோது மதர் எர்த் = அன்னை பூமி= பூமா தேவி என்றனர் ; எங்களுக்கு ஒரே வியப்பு.
கொஞ்ச நேரத்தில் அரண்மனையை அடைந்தோம் அங்கும் ஒரு மண்டபத்தில், பூமா தேவியைக் கண்டோம் ; பாங்காக் நகரினைவிட்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு விமானத்தில் ஏறும் முதல் நாள் ௭-௧-௨௦௨௬ல் வேறொரு பெரிய தங்க புத்தர் கோவிலுக்குச் சென்றோம் அங்கும் பூமாதேவியைத் தரிசித்தோம் ; இவ்வாறு மும்முறை அவளைத் தரிசித்தவுடன் தாய் மக்களுக்கு ஏன் அவள் மீது இவ்வளவு அன்பு என்பதை படித்து அறிந்தேன்.
***



புத்தமதக் கதை என்ன?
புத்த பகவான் போதி / அரச மரத்துக்கு அடியில் தவம் செய்து கொண்டிருந்தாராம்; அப்போது அவர் தவம் வெற்றி பெற்றால் தனக்கு ஆபத்து என்று உணர்ந்த மாரன் என்னும் துஷ்ட தேவதை அவருடைய தவத்தைக் கெடுக்க அவரைத் தீண்ட வந்தான் . உடனே பூமாதேவி புத்தருக்கு மேலே நின்று தனது நீண்ட தலை முடியிலுள்ள நீரைப் பிழிந்தாள்; அந்த நீர் மாரனை அடித்துக் கொண்டு சென்றுவிட்டது என்பது பெளத்தர்கள் சொல்லும் கதை .
பூமா தேவி ஏன் வந்தாள்? புத்த பகவானின் கை காட்டும் முத்திரைகள் பல; அதில் ஒன்று பூமி ஸ்பர்ச முத்திரை ; புத்தர் இந்த பூமி ஸ்பர்ச முத்திரையால் பூமியைத் தொட்டவுடன் அவள் வந்தாள் என்பது விளக்கம்.
அதர்வண வேத சொற்கள்
என்னுடைய விளக்கம் என்ன வென்றால் இந்தக் கதைகளுக்கு புராதன பெளத்த புனித நூல்களில் ஆதாரம் இல்லை ; இவைகளுக்கெல்லாம் அதர்வ வேத பூமா தேவி வருணனையும் கங்காதேவி பற்றிய புராதனக் கதைகளும் காரணம்.; தாய் லாந்தில் பூமாதேவி பற்றிய எல்லா சொற்களும் தூய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ; அவை அனைத்தும் அதர்வண வேதத்தில் இருக்கின்றன. .அவைகளைக் காண்போம்.
தாய்லாந்தின் முக்கிய அரசியல் கட்சியான ஜனநாயகக் கட்சியின் சின்னமும் தண்ணீர் வாரியத்தின் சின்னமும் இந்த தேவிதான் .
Phra Mae Thoranee
Mae Thoranee Vasudhara, Phra Mae Thorani, Prithvi, Bhumi
தரணி, வசுந்தரா, பூமி, ப்ருத்வீ, வசுதரா
மா = மாதா
ப்ரா= ஸ்ரீ
மாரன்- காம தேவன், மன்மதன் ; ஆசைகள்
Vasundharā (वसुन्धरा).—A name for mother earth meaning “she who has very fertile soil and unlimited wealth”.Vasuṃdharā (वसुंधरा).—The earth; नानारत्ना वसुंधरा (nānāratnā vasuṃdharā); R.4.7; वसुंधरा काल इवोप्तबीजा (vasuṃdharā kāla ivoptabījā) Ś.6.24.
Dharaṇi (धरणि) or Dharaṇī (धरणी).—f. [dhṛ-ani vā ṅīp]
1) The earth; लुठति धरणिशयने बहु विलपति तव नाम (luṭhati dharaṇiśayane bahu vilapati tava nāma) Gītagovinda 5.
2) Ground, soil.
***
Atharva veda says
” Mata Bhumi putroham prithivyah ” (माता भूमि पुत्रोहं पृथिव्या🙂 Meaning “Earth is my mother I am her son”.
There are scores of other verses that glorify Mother Earth. The hymn of these verses is known as “Prithivi Sukta ” in AtharvaVeda .In these verses, prithi is described as vasudhara or vasudha (Possessor of wealth).
பூமா தேவியைப் புகழந்து அவளுக்குத் தாயார் என்று பெண்ணின் உருவம் கொடுத்ததும் இந்துக்கள்தான் ; பூமியின் செலவச் செழிப்பையும் புறச் சூழல் மகிமையையும் முதலில் எடுத்துரைத்தவும் இந்துக்கள்தான். வெள்ளைக்காரர்களை கூட அதர்வண வேதத்துக்கு கொடுக்கும் தேதி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னந்தியது என்பதாகும்; நாமோ ஆவை மனித இனம் தோன்றியது முதல் அவை வானத்தில் ஒலி ரூபத்தில் இருக்கிறது என்று சொல்கிறோம்.

மாரன் (காம தேவன்; ஆசைகளின் ஒட்டுமொத்த உருவம் ); அன்னை பூமியும் புத்தரும்


ஜனநாயகக் கட்சியின் சின்னமும் தண்ணீர் வாரியத்தின் சின்னமும்
***
லண்டன் சுவாமிநாதன் புஸ்தகம் :
அதர்வண வேத பூமி சூக்தம்
சொல்லும் வியப்பான செய்திகள், லண்டன் சுவாமிநாதன்

—subham—
Tags- தாய்லாந்து, பூமாதேவி வழிபாடு, மதர் எர்த் , புத்தர், பெளத்த மதக் கதை , பாங்காக் நகரம் , மாரன், பூமி ஸ்பர்ச முத்திரை, லண்டன் சுவாமிநாதன், படங்கள்