பாரதியாரின் சரித்திர அலசல்

IMG_3419

Article No. 2061

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 11 August  2015

Time uploaded in London :– 6-01

 

மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த எதிரிகள்! – 1

By .நாகராஜன்

 

 

பாரதியாரின் சரித்திர அலசல்

ஹிந்து தேச சரித்திரத்தை மஹாகவி பாரதியாரிடமிருந்தே தெரிந்து கொள்ள வேண்டும். அதி அற்புதமாக பகுப்பாய்வு செய்யும் திறமை கொண்ட மேதை அவர்.

இந்தியர்களில் ஜாதீய ஐக்கியம் எங்ஙனம் உண்டாகும்?’ என்ற அற்புதமான நீண்ட கட்டுரையை ஒரு சிறு நூலாக புதுவையிலிருந்து அவர் வெளியிட்டுள்ளார். இதன் விலை பை 3 (3 பைசாக்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதுவை சூரியோதயத்தினின்று பெயர்த்தெழுதப்பட்டது என்ற குறிப்புடன் இது பிரசுரிக்கப்பட்டுள்ளதுஇது அனைத்து ஹிந்துக்களாலும் படிக்கப்பட வேண்டிய ஒரு கட்டுரை.

 

 

அனைவரும் இந்தியரே

கட்டுரையில் உள்ள மிக முக்கியமான சில பாராக்களை மட்டும் இங்கு பார்ப்போம்:-

 

கிரேக்கர்கள் முதலியவர்கள் இந்தியாவின் மேல் படையெடுத்து வந்த காலத்திலும் இந்தியாவாஸிகளுக்கு இந்தியர்களென்னும் நாமங்கொடுத்து வியவஹரித்து வந்தவர்களேயொழிய வேறில்லை.

 

பின்னும் சில மொகலாயர்கள் படையெடுத்து வந்த காலத்திலும் இந்தியாவின் புத்திரர்களுக்கு இந்தியரென்னும் பொது நாமம் சூட்டியே வியவஹரித்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான வேதாந்த மதம் பரவியிருந்திருக்க வேண்டும், அல்லது ஒருகால் வேறு வித மதங்களிருப்பினும் ஒரு ஜாதியின் பெயரை அவர்களது ஜன்ம தேசத்தைக் கொண்டு கூப்பிடும்பொழுது வழக்கத்தையனுசரித்து இந்தியர்களென்னும் ஒரே நாமம் சூட்டியிருக்க வேண்டும். மதங்கள் பலவகையுள்ள இதர தேசங்களின் சுதேசிகளைப் பல ஜாதியினராகப் பிரிவினை செய்து கூப்பிடவில்லை. இங்கிலாண்டு, சீனா, ஜப்பான், அமெரிக்கா முதலிய இடங்களின் சுதேசிகளாகிய இங்கிலீஷ்காரர்களிலும், ஜப்பானியர்களிலும், சீனாக்காரர்களிலும், அமெரிக்கர்களிலும் சிலர் கிறிஸ்து மதத்தையும், சிலர் மகம்மதீய மதத்தையும், இன்னும் பலவித மதங்களையும் அவலம்பித்தபோதிலும், ஹிந்து மதத்தையவலம்பித்த ஆங்கிலேயன் தன்னை ஹிந்து ஜாதியென்று சொல்லிக் கொள்ளவில்லை, மஹம்மதீய மதத்தையவலம்பித்த ஓர் அமெரிக்கன் தன்னை மஹம்மதீய ஜாதிக்குச் சேர்ந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வத் தேசங்களிலுள்ள ஜாதீயாரெல்லாரும் தத்தம் அபிப்ராயத்துக்குத் தக்கன மனத்தையும் இஷ்ட தேவதையையும் வைத்துக் கொண்டார்களேயொழியத் தங்கள் ஜாதியை விட்டு நீங்கவில்லை

 

இப்படி ஆணித்தரமாக தன் வாதத்தை மஹாகவி முன் வைக்கிறார். இதற்கான காரணம் என்ன? இந்த தேசத்தவர்களை ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவனையும் ஒவ்வொரு ஜாதியாக ஆங்கிலேயன் பிரிக்க நினைத்ததே காரணம். அதில் அவன் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டான் என்று இன்றைய (2015ஆம் ஆண்டு) நிலையை வைத்து வெட்கத்துடன் துக்கப்பட வேண்டியிருக்கிறது.

 

 IMG_3326

பிரித்தாளும் சூழ்ச்சி

இந்த பிரிவினை வாதத்தை ஆங்கிலேயன் விதைத்த போதே அதைக் கண்டனம் செய்கிறார் மஹாகவி பாரதியார்.

தொடர்ந்து அடுத்த பாராவைப் பார்ப்போம்:_

 

 

ஆனால் இந்தியாவில் மஹம்மதீயம், கிறிஸ்தவம் முதலிய நூதன மதங்களை நுழைத்த பரதேச மதப்பிரவசன கர்த்தர்களும், அவர்களுக்குச் சகாயமாக இருந்து வேலை செய்த பிற்காலத்திய அயல்நாட்டிலிருந்து வந்து இந்தியாவின் மேல் படையெடுத்த சத்துருக்களும், நூதன மதத்திற் சேர்ந்த இந்தியர்களுக்கு அப்பெயரைக் கொண்ட ஜாதியரென்று பெயர் கொடுத்து மறுபடியும் இவர்கள் தங்கள் தாய்நாட்டாருடன் கூடிக் கொள்வனை கொடுப்பனை செய்தும், உண்டு, உடுத்தி, உலாவியுமிருக்கவொட்டாமல் பிரித்து வைத்துக் காலக்கிரமத்தில் இவர்களது ஸஹோதர இந்தியர்கள் மீது பலத்த துவேஷத்தையும் விருத்தி செய்து விட்டார்கள். சுயநலத்தை நாடியே இப்பிரதேச பாதிரிகளும், மற்றுமுள்ள மதகுருமார்களும் இத்தகைய பேதத்தை உண்டு பண்ணி விட்டார்கள். இந்தப் பேதத்தை அவ்வக்காலத்திய அன்னிய ஜாதி இராஜாங்கங்களும் விருத்தி செய்து தங்கள் நிலைமையை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தன.”

இன்றைய ஹிந்துமுஸ்லீம் பிரச்சினைக்கு, மைனாரிட்டி மதத்தவர்கள் என்ற பிரச்சினைக்கு காரணம் தேசீய உணர்வு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஆங்கிலேயனின் சூழ்ச்சியே காரணம் என்பதை மஹாகவி இப்படி மிகத் தெளிவாகக் கூறுகிறார் .

 

 

அத்தோடு மட்டுமல்ல, பாபர் முதல் ஆங்கிலேயர் வரையுள்ள அனைவரும் இந்தியருக்குள் வேற்றுமை உணர்ச்சியை வித்திட்டு வளர்த்தனர் என்பதையும் அவர் தனது கட்டுரையில் விரிவாக எடுத்துரைக்கிறார்.

 

ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை அவர் அப்படியே சுட்டிக் காட்டுகிறார். அவரது கூற்றை அப்படியே பார்ப்போம்:“’பிரித்தாளுவதுஎன்பது இக்காலத்திய ஆங்கிலேய இராஜதந்திரத்தில் மிக்க கௌரவமான முறையாகக் கையாளப்பட்டு வருகிறது

 

 அவரது கட்டுரையின் முக்கியமான பகுதியைத் தொடர்ந்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

                                                   –தொடரும்

ஒரு சுவையான கதை : இக்கரைக்கு அக்கரை பச்சை!

man path

 Article No. 2059

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 10  August  2015

Time uploaded in London :– 16-53

கவலை மலையும், அதைக் கரைக்க கடவுள் உதவியும்

“இக்கரைக்கு அக்கரை பச்சை” என்ற தமிழ்ப் பழமொழிக்கு இணையான பழமொழி எல்லா மொழிகளிலும் இருக்கிறது. இதை விளக்க இதோ ஒரு சுவையான கதை. சுவாமி ராமதாஸ் சொன்ன கதை:

அம்மாவுக்கு கவலை, அப்பாவுக்கு கவலை, பெண்ணுக்கு கவலை, பிள்ளைக்கு கவலை, கோடிவீட்டு கோமளா, மாடி வீட்டு மாலதி, எதிர்வீட்டு எத்திராஜ், அடுத்தவீட்டு அங்கு சாமி, பக்கத்துவீட்டு பங்கஜம்மாள், முதல் வீட்டு முத்து சாமி, கடைசி வீட்டு கந்த சாமி – இப்படி எல்லோரும் கவலைக் கடலில் மூழ்கித் தத்தளித்தனர். அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார்.

உங்கள் எல்லோருடைய கவலையையும் போக்கவல்ல ஒரே ஆசாமி, இறைவனே. ஆகையால் பலமாகக் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். ஊர் கூடி தேர் இழுத்தது போல, ஊரே கூடி ப்ராரத்தனை செய்தது. இறைவன் பக்தி வலையில் எளிதில் சிக்குவான். ஆகவே பகதர்களின் பிராத்தனையை செவிமடுத்து ஓடிவந்தான்.

இது என்ன? இவ்வளவு பேரும் கூடிப் பிரார்த்திக்கிறீர்களே! என்ன விஷயம் ?என்றான். எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைத்தனர். எனக்கு இந்தக் கவலை, அந்தக் கவலை என்று மூச்சுவிடாமல் அடுக்கினர்.

இறைவன் சொன்னான், “இதோ பாருங்கள். இது உங்கள் பிராரப்த கர்மம். அனுபவித்தே தீர வேண்டும் ஆனால் ஒரு சலுகை தருகிறேன். இதோ இந்த பெரிய சமவெளியில் உங்கள் கவலைகளை எல்லாம் தூக்கி எறியுங்கள் என்றான். உடனே பக்த கோடிகள் எல்லோரும் கவலைகளை விட்டெறிந்தனர். கவலைகள் மலை அளவுக்கு உருப்பெற்று, இமயமலைக்குப் போட்டியாக கவலை மலை உண்டானது.

கடவுள் சொன்னார், “நல்லது; இப்பொழுது இதிலிருந்து ஏதாவது ஒரு கவலையைப் பொறுக்கி எடுங்கள், பின்னர் வீட்டுக்குப் போகலாம் என்றார். உடனே எல்லோரும் கவலை மலை மீது பாய்ந்து, இதுவரை தான் அனுபவித்த பெரிய கவலையை ஒதுக்கிவிட்டு, ஜாக்கிரதையாக மற்றவனின் கவலையை எடுத்தனர்.

கண்தெரியாதவர், கண்களையுடைய முடவனின் கவலையைப் பெற்றார். குழந்தை இல்லாத மலடி தன், கவலையை விட்டு, குழந்தையுள்ளவளின் கவலையை எடுத்தாள். பணக்காரனின் கவலையை ஏழை எடுத்தான். இப்படி ஒவ்வொருவரும் தனது கவலையை விட்டு மற்றவனின் கவலையுடன் மாற்றுப் போட்டுக் கொண்டனர். எல்லோரும் , “அப்பாடா, இனிமேல் எல்லாம் இன்பமயம்தான், நம் வாழ்வு வளம் பெறும் என்று பெரு மூச்சுவிட்டனர். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

29VZMP_PAPIKONDALU_2294921g

இரண்டே நாட்களில் ஊர் முழுதும், பெரிய முக்கல், முனகல் சப்தம். கடவுளே என்னால் இந்தப் புதிய கவலையைப் பொறுக்கவே முடியாது. பழைய கவலையே பரவாயில்லை. அதுவாவது பழகிப் போய்விட்டது என்று கதறினர்.

மீண்டும் கூட்டுப் பிராரத்தனை. கடவுள் மனமிரங்கி இரண்டாவது முறை தோன்றி, அன்பர்களே, நண்பர்களே! இப்போது என்ன பிரச்சனை? என்றார். எல்லோரும் இக்கரைக்கு அக்கரை பாசை என்று எண்ணி ஏமாந்துவிட்டோம். தயவுசெய்து எங்களுடைய பழைய கவலைகளைத் திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றனர்.

இறைவனும் “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று ஆசீர்வதித்தார்.

இறைவன் எல்லோருக்கும் சரியாகப் படி அளந்துள்ளான். விரலுக்கேற்ற வீக்கத்தையும், ஏழைக்கேற்ற எள்ளுருண்டையையும் கொடுத்திருக்கிறான். அதை விளங்கிக் கொண்டு, ஏற்றுக் கொண்டால் கவலை என்பதே இராது.

–சுபம்–

இலண்டன், ஆக்ஸ்போர்ட் நகரங்களில் நவக்ரஹ சிலைகள்!

Article No. 2050

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 7  August  2015

Time uploaded in London : – 12-36

ஆக்ஸ்போர்ட் நகர ஆஷ்மோலியன் மியூசியத்திலுள்ள இரண்டு வகை நவரத்ன சிலைகள், பொம்மைகளின் படங்களும், லண்டன் நகரிலுள்ள பிரிட்டிஷ் மியூசியத்திலுள்ள தனித்தனி நவக்ரஹ சிலைகளும் நவக்ரஹ துதிகளுடன் வெளியிடப்படுகிறது. புகைப்படங்கள் : லண்டன் சுவாமிநாதன் எடுத்தவை.

IMG_2298.JPG (720×720)

IMG_5723.JPG (1200×1600)

கீழேயுள்ளவை லண்டன் நகர பிரிட்டிஷ் மியூசிய சிலைகள்

IMG_1768 (2)

IMG_1769 (2)

IMG_1770 (2)

IMG_1771 (2)

IMG_1772 (2)

IMG_1773

IMG_1774 (2)

IMG_1775 (2)

IMG_1776 (2)

IMG_1777

IMG_1778 (2)

IMG_1779 (2)

IMG_1780 (2)

எகிப்து, சுமேரியாவிலும் த்ருஷ்டி பொம்மை, கந்த சஷ்டிக் கவச வரிகள்!!

Drishti-Bomma

Research Article No. 2040

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 3  August  2015

Time uploaded in London : – 17-51

(This has been published in English already)

கந்த சஷ்டிக் கவசம் தெரியாத அல்லது கேட்டறியாத தமிழர்கள் இருக்க முடியாது.தேவராஜ சுவாமிகள் அருளிய இக்கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. வட இந்தியாவில் இதே போல துளசிதாசர் இயற்றிய ஹன்மான் சாலீசா மிகவும் பிரசித்தமானது. இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அனுமன் பெயரைச் சொல்லிய மாத்திரத்தில் பூதப் பிசாசுகள் நடுங்கி ஓடி விடும். அதே போல கந்த சஷ்டிக் கவசம் சொன்னால் பேய், பிசாசுகள், பில்லி, சூனியம் அண்டாது.

கந்த சட்டிக் கவசத்தில் வரும் வரிகள், பில்லி சூனியம் பற்றி மிகவும் விளக்கமாக விளம்புகிறது. இதே நம்பிக்கை பழங்கால எகிப்திலும் இருந்தது. மத்தியக் கிழக்கில் இப்பொழுது சிரியா, இராக் நாடுகள் உள்ள சுமேரியாப் பகுதியிலும் இருந்தது. இதற்கெல்லாம் மூலம், அதர்வண வேதம் அதன் பத்தாவது மண்டலத்தில் இந்த விஷயங்கள் வருகின்றன.  கேரளத்தில் இப்பொழுதும் மாந்த்ரீகச் சடங்குகள் நடக்கின்றன. நம்மூர் அரசியல்வாதிகள் கூட எதிரிகளை ஒடுக்கவோ, மடக்கவோ, ஒரேயடியாக ஒழிக்கவோ இத்தகைய “மிளகாய் யாகங்களை” நடத்துகின்றனர்.

வேத கால மக்கள் உலகெங்கிலும் பரவியபோது நல்ல விஷயங்களை எடுத்துச் சென்றது போலவே இது போன்ற “ஆபிசாரப் பிரயோகங்களையும்” எடுத்துச் சென்றனர்.

இங்கிருந்து போனதற்கு என்ன ஆதாரம்? ரிக் வேத கலம் முதல் இன்று வரை இது மட்டுமின்றி எல்லாச் சடங்குகளையும் நாம் மட்டுமே செய்து வருகிறோம். இடையில் வந்த கலாசாரம் என்றால் என்றோ மறைந்து போயிருக்கும்.

bes

எகிப்திய பேஸ்

இப்பொழுது என்னைப் பொன்றோர் லண்டனில் குடியேறி ஒவ்வொரு தலை முறையிலும் எப்படி பழைய வழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வருகிறோமோ அப்படி ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் குடியேறிய இந்துக்கள் விட்டு விட்டனர். ஆனால் அவை அனைத்தும் எகிப்திய பபைரஸ் (பேப்பர்) தாளிலும், சுமேரியக் களிமண் பலகைகளிலும் பொறித்து வைக்கப்பட்டுள்ளன.

“பில்லி சூனியம்

பெரும்பகை அகல

……………………………….

ஆனை அடியினில் அரும் பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைகளுடனே பல கலசத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

……………………………………………………………………..

இப்படி நாம் கவசம் சொல்லுகிறோம். விநாயக கவசத்தில் சுருக்கமாக மாரணம் என்ற ஒரு சொல்லில் இவை அடக்கப்படுவிட்டது. பில்லி, சூனியம், ஏவல் வைப்போர், இப்படி எதிரிகளின் வீட்டில் மயிர், எலும்பு, நகம், பொம்மைகள் ஆகியவற்ரைப் புதைத்து வைத்து அவர்களை ஒடுக்குவர். இதைத் தான் தேவராய சுவாமிகள் விளக்கமாகப் பாடியுள்ளார்.

bes in Louvre

எகிப்தில் பல சிலைகள் மூஞ்சி சிதைக்கப் பட்டுப் மூளியானதற்கு இத்தகைய சடங்குகள் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதி யுள்ளனர். ஒருவருடைய உருவத்தைச் செய்து அதன் மீது மந்திரம் ஏவி அதை உடைத்தால் அவர் அழிந்து போவார் அல்லது மனம் உடைந்து போவார் என்ற நம்பிக்கை உலகெங்கிலும் நிலவியது.

எகிப்தியர் கீழ்கண்ட முறைகளைக் கையாண்டனர்:-

1.சாபம் இடும் மந்திரங்களைச் சொல்லுவது

2.களிமண் அல்லது மெழுகு பொம்மைகளைச் செய்து, சில சடங்குகளுக்குப் பின்னர், அவைகளை உடைப்பது

3.துர் தேவதைகளை அழைத்து அவர்களுக்கு கெட்ட சொப்பனங்களை உண்டாக்கி பயமுறுத்துவது

4.ஐஸிஸ் என்னும் தேவதையைக் குறித்தே பெரும்பாலான உச்சாடனங்கள் சொல்லப் படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக பேஸ் என்னும் குள்ள தெய்வம் உதவி செய்யும். இது நல்லதுக்கும் பொல்லாததுக்கும் உதவும் விகடகவி, பபூன் போன்ற உருவமுள்ள தெய்வம். ஆண்குறி பெரிதாகக் காட்டப் பட்டிருக்கும். திருஷ்டி பொம்மை போல நாக்கு வெளியே தொங்கும். அதைப் போலவே அவலட்சணமாக இருக்கும்.  நன்மை, தீமைகளுக்கு உதவும் மாந்த்ரீக தெய்வம். நம் பண்பாட்டில் கணபதி விக்னங்களை உருவாக்கவும் செய்வார், உடைக்கவும் செய்வார் என்பது போல.

250px-Kanthristi

இது தவிர எகிப்தியர்கள் ஏராளமான வகை தாயத்துகளைப் பயன்படுத்தினர். மம்மி என்னும் சவங்களுடன் நிறைய தாயத்துக்கள் கிடைக்கின்றன. நாம் யந்திரத் தகடுகளில் எழுதி அதை தாயத்துக்குள் போட்டுக் கழுத்தில் தொங்க விடுவதுபோல எகிப்தியர், புதிய பபைரஸ் புல் காகிதத்தில் எழுதி அதை தாயத்தாக வைத்துக் கொண்டனர். நாம் சங்கரன் கோவில் முதலிய கோவில்களிலும் மாரியம்மன் கோவில்களிலும் உடல் உறுப்புகளை வெள்ளியில் செய்து காணிக்கை உண்டியலில் போடுவது போல எகிப்தியர்களும் செய்தனர். எனது முந்தைய ஆராய்ய்சிக் கட்டுரைகளில் இது போன்ற பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன். இந்த நம்பிக்கை கிரேக்க நாடு வரை சென்று பரவியது.

அதர்வ வேதம் பத்தாவது மண்டலம் சொல்லும் விஷயங்கலை தமிழ் மாறன் எழுதிய, “அதர்வ வேதம் அருளும் ஆனந்த வாழ்வு” (பக்கம்175-182) நூலில் காண்க.

hecate 2

கிரீஸ் நாட்டில்

வெளிநாட்டுக் காரர்கள் சரித்திரம் எழுதியபோது பிதகோரஸ், சாக்ரடீஸ், பிளாட்டோ ஆகியோரைக் காட்டி உலகில் மிகவும் முன்னேறிய மக்கள் கிரேக்கர்கள் என்று புகழ்ந்து வைத்துள்ளனர். அவர்களுடைய மூட நம்பிக்கைகளையோ, அட்டூழியங்களையோ பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் உலகில் யாரும் அடிமைப்படுத்தாத சுதந்திர நாடு கிரேக்கம்.

ஆனாலங்கும் மேற்கூறிய எல்லா நம்பிக்கைகளும் இருந்தன. சாக்ரடீஸ் விஷம் அருந்தி சாவதற்கு முன்னர். ஆத்ம நண்பன் கிரீட்டொவை அழைத்து, குறிப்பிட்ட தெய்வத்துக்கு மறக்காமல் கோழியடித்துக் கும்பிட்டு விடு என்று சொல்லிவிட்டுச் செத்ததை முன்னரே எழுதி இருக்கிறேன்.அவர் சேவல்கோழி காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல் செய்திருந்தார்.

கிரேக்கர்கள் ஹெகதி என்னும் தெய்வத்தை முச்சந்திகளில் நிறுத்திவைத்து பேய் பிசாசு, துர் தேவதைகளுக்குப் பரிகாரம் செய்தனர். ஹெகதி என்பது சக்தி என்ற சொல்லின் திரிபு. நாம் முச்சந்திகளில் இரவில் போகப் பயப்பட்டது போல அவர்கள் முச்சந்திகளில் உணவு வைத்து வழிபட்டனர். அது நள்ளிரவில் முச்சந்திகளில் ஊளையிடும் நாய்களுடன் தோன்றும் என்று நம்பினர். இப்பொழுது எல்லா, எகிப்திய, சுமேரிய, கிரேக்க தெய்வங்களையும் மியூசியங்களில் காணலாம்.

ரிக் வேதத்தில் பூஷன் என்னும் தெய்வம் சாலைத் தெய்வமாகவும் , வழிப்போக்கர்களுக்கு உதவும் தெய்வமாகவும் போற்றப்படுகிறது.

pazuzu, british museum

சுமேரியப் பண்பாட்டில்

கண் திருஷ்டி விழுந்தால் கெடுதி என்ற நம்பிக்கை சுமேரியாவில் இருந்தது. நாம் வீட்டு வாசல்களிலும் கடை வாசல்களிலும் பூதம் போல, அவலட்சணமான ஒரு உருவத்தை வைக்கிறோம். அல்லது த்ருஷ்டி கழிய பூசனிக்காய் மீது வரைந்து தொங்க விடுகிறோம். சுமேரியர்கள் இதே போல பசசுஜு என்னும் அவலட்சண தேவதையை வாயில்களில் தொங்கவிட்டனர். போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம் – என்பது போல அதை தாயத்தாகச் செய்து கழுத்திலும் மாட்டிக் கொண்டனர். அவர்களும் இந்துக்களைப் போல சாபங்கள் கொடுத்தனர். தீய சக்திகளை ஒழிக்க இரவு பூஜைகளைச் செய்தனர். அவர்களுடைய உச்சாடனங்கள், அதர்வ வேத மந்திரங்கள் போல இருக்கும்.

பெண்களை வசீகரிக்க மந்திரங்கள் வைத்திருந்தனர். இப்பொழுது வெளிநாடுகளில் காதலர் தின அட்டைகளில் ஒரு இருதயத்தை அம்பு (மன்மதன் மலர் அம்பு) துளைப்பது போல வரைந்து உலகெங்கிலும் பயன்படுத்துகின்றனர். இது அதர்வ வேத மந்திரத்தில் உள்ள வர்ணனை என்பதை முன்னொரு கட்டுரையில் தந்தேன். எல்லா உச்சாடனங்களையும், அதர்வ வேத மந்திரங்களையும் ஒப்பிட்டால் நாம்தான் மூலம்/ வேர் என்பது வெள்ளிடை மலை யென விளங்கும்.

எகிப்தில் பேஸ், சுமேரியாவில் பசுஜு. கிரேக்கர்கள் இவைகளின் பெயருக்கு இணையான கிரேக்க தெய்வங்களைச் சொன்னார்கள்.

pazzuzu assyrian

Source:

Dictionary of the Ancient Near East by British Museum

Ancient Egypt by David Silverman

Atharva Vedam (Tamil Book) by Tamilmaaran

Dictionary of World Myth by Roy Willis

Encyclopaedia of Gods by Michael Jordan

Pictures from various sources

pazuzu 3

கோமாதாவும் குலமகளிரின் கண்ணாடி மோதிரமும்!

Ranjit_Singh_Stamp_1966_1

ஞான ஆலயம் 2015 ஆகஸ்ட் மாத இதழில் வெளியாகி இருக்கும் கட்டுரை இது.

கோமாதாவும் குலமகளிரின் கண்ணாடி மோதிரமும்!

Article No. 2035

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 1st August  2015

Time uploaded in London : – 22-30

By ச.நாகராஜன்

மஹாராஜா ரஞ்சித் சிங்கின் ஆட்சி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெண்மணிகளின் கையில் உள்ள மோதிரத்தில் ஒரு கண்ணாடி பளபளக்கும். அதில் அவர்களுடைய முகங்களின் மங்களகரமான பிரதிபிம்பம் பளிச்செனத் தெரியும். இதற்குப் பின்னால் ஹிந்து பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு அதிசயமான சுவையான உண்மைச் சம்பவம் இருப்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்!

சீக்கிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த மஹாராஜா ரஞ்சித் சிங் (தோற்றம் 13-11-1780; மறைவு:27-6-1839) பஞ்சாபை அரசாண்ட காலம்.லாகூரில் சுறுசுறுப்பாக எப்போதும் உயிர்த்துடிப்புடன் இயங்கும் ஒரு வீதியின் மூலையில் உள்ள கிணற்றிலிருந்து பஞ்சாபிய மங்கையர் நீரை எடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு நீரைக் குடித்துத் தாகத்தைத் தணிக்க பசுக்கள் உள்ளிட்ட மிருகங்களும் கூடி இருந்தன.

கொம்புகளை விடுவிக்க முடியாத பசு

அந்தப் பசுக்களில் ஒன்று அருகில் இருந்த சுவர் ஒன்றின் கீழே குனிந்து அங்கிருந்த குழியில் இருந்த தானியங்களை உண்ண முயன்றது. துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழியில் பசு மாட்டின் கொம்புகள் மாட்டிக் கொண்டன. அதை எடுக்க முயன்ற போது அதன் தலை இன்னும் அதிக ஆழத்தில் மாட்டிக் கொண்டது. அதன் அம்மா என்ற ஓலச் சத்தம் கேட்டுப் பெண்கள் அனைவரும் அங்கு ஓடினர். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆடவரின் துணையை அவர்கள் நாடவே ஏராளமானோர் வந்து பசுவிற்கு உதவ முயன்றனர்.

அங்கிருந்த பலரும் சுவரை ஜாக்கிரதையாக இடித்துப் பசுவைக் காப்பாற்றி விடலாம் என்றனர். ஆனால் குழுமியிருந்தோரில் ஒருவன் மட்டும் பசுவின் கொம்புகளை வெட்டிப் பசுவை குழியிலிருந்து அகற்றி விடலாம் என்றான். அவனை அனைவரும் வெகுவாகத் திட்டினர்.இறுதியில் சுவர் ஜாக்கிரதையாக இடிக்கப்பட்டது. பசு மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் கொம்புகளுடன் வெளியே மீண்டது. கூட்டத்தினர் ஆரவாரம் செய்து கோமாதாவுக்கு ஜே எனக் கூவியவாறே கலைந்தனர்.

இந்த சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அரசவை ஒற்றர்களுள் ஒருவன் நடந்த சம்பவத்தை அப்படியே மஹாராஜா ரஞ்சித் சிங்கிடம் கூறினான்.

மறுநாள் கொம்புகளை வெட்டலாம் என்று சொன்னவன் தர்பாருக்கு அழைக்கப்பட்டான்.

ranjith1

ராஜ விசாரணை

மஹாராஜா ரஞ்சித் சிங் அவனை கூர்மையாக நோக்கினார்.

“நீ தான் நேற்று பசுவின் கொம்புகளை வெட்டலாம் என்று கூறியவனா?”

பயந்தவாறே, அவன், “ஆமாம், மஹாராஜா!” என்றான்.

“நீ ஒரு ஹிந்துவா?”

“ஆமாம், மஹாராஜா!”

“எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஒரு ஹிந்துவால் எப்படி பசுக்களின் கொம்புகளை வெட்டலாம் என்று கூற முடியும்?”

நடுநடுங்கிய அவன் கம்மிய குரலில், “தப்பு தான், மஹாராஜா” என்றான்.

“அது ஒரு இயல்பான தப்பாக எனக்குத் தெரியவில்லை.” உறுதியான குரலில் கூறிய கூரிய அறிவு படைத்த மஹாராஜா ரஞ்சித் சிங் அவனுடைய தாயாரை அரசவைக்கு உடனே அழைத்து வருமாறு பணித்தார்.

அவனுடைய வயதான தாயார் அரசவைக்கு வந்தார். அனைவரும் அந்தப் பெண்மணி என்ன கூறப் போகிறாள் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கினர்.

அந்தப் பெண்மணியிடம் ராஜா கேட்டார்:”நீ ஒரு ஹிந்துப் பெண்மணி தானா!”

“ஆமாம், மஹாராஜா” அவள் உறுதி படத் தெரிவித்தாள்.

“அப்படியானால் நிஜத்தைச் சொல். இப்படிப்பட்ட மகா மோசமான ஒரு பிள்ளையை நீ எப்படிப் பெற்றாய். கோமாதாவின் கொம்புகளை வெட்டு என்று சொல்லும் பிள்ளையை நீ பெற்ற காரணம் என்ன?”

தர்பாரே அமைதியாக அவளது பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தது.

மெதுவாக யோசித்த பின்னர் அவள் கூறலானாள்:-“மஹாராஜா! அதற்கு என்னால் ஒரு காரணத்தை மட்டுமே யூகிக்க முடிகிறது. இவனைக் கர்ப்பமுற்ற அந்த நாளில் முதன் முதலாகக் காலையில் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். அப்போது   காலணி தைக்கும் ஒருவன் செத்த மிருகத்தின் தோலை உரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது ஒரு பசுவின் தோலாக இருந்திருக்கக்கூடும். அது காரணமாக இருக்கலாமோ, என்னவோ”

மஹாராஜா கூவினார்: ”அது தான் சரி! இப்போது எனக்குப் புரிகிறது, இவன் ஏன் அப்படிச் சொன்னான் என்று!”

gold mirror

 

சரியான தீர்வு: கண்ணாடி பதித்த மோதிரம்

சற்று யோசித்த மஹாராஜா கூடியிருந்த அனைவரின் முன்னிலையிலும் மந்திரியிடம் கூறினார்:” தற்செயலாக இந்தப் பெண்மணி வெளியில் எட்டிப் பார்த்த போது நடந்த சம்பவம் போல எனது ராஜ்யத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இன்னும் ஒன்று நடக்கவே கூடாது. கர்ப்ப ஸ்தீரிகள் நல்லனவற்றைப் பார்க்க வேண்டும். நல்லனவற்றை பிரார்த்தனையாக உச்சரிக்க வேண்டும். நல்லனவற்றையே கேட்பதுடன் பழைய பாரம்பரியத்தை மதிக்க வேண்டும். ஆகவே அவர்கள் எழுந்தவுடன் தங்கள் முகத்தையே பார்க்கும் படி கைகளில் ஒரு சிறிய கண்ணாடியை எப்போதும் அணிய வேண்டும். இது எனது ஆணை என்று இன்றே பறை சாற்றுங்கள்.”

அன்று உருவானது தான்  சிறிய கண்ணாடி பதித்த மோதிரங்கள்.  அவற்றில் அழகிய தங்கள் முகங்களை விழித்தவுடன் பஞ்சாபிய மங்கையர் பார்க்க ஆரம்பித்தனர்.

காலம் காலமாக வரும் இந்தப் பழக்கத்தினாலேயே பஞ்சாபிய மங்கையரிடன் கண்ணாடி பதித்த மோதிரம் இன்றும் காணப்படுகிறது.

heart mirror

கோமாதாவின் மீது பக்தி, கர்ப்ப காலத்தில் இறை சிந்தனை, காலையில் கராக்ரே வஸதே லக்ஷ்மி கர மத்யே சரஸ்வதி கர மூலேது கோவிந்த: ப்ரபாதே கர தர்சனம்என்று ப்ராத ஸ்மரண ஸ்லோகம் சொல்லும் போது குல மங்கையர்கள் தங்கள் திரு முகங்களைப் பார்க்க உதவும் மோதிரம் ஆகிய அனைத்தையும் ஹிந்து பாரம்பரியத்தைக் காக்கும் உணர்வில் இணைக்கும் உண்மை வரலாறு தான் எவ்வளவு சுவையானது?! உலகில் கோ மாதாவை உள்ளார்ந்து அனைத்து விதத்திலும் போற்றும் நாடு பாரதம் ஒன்றே!

************

ஸ்ரீ ராமரிடமுள்ள ஐந்து வீரங்கள்!

ram-with-dwaja

Article No.2009

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 22  July 2015

Time uploaded in London : 8-07 காலை

 

இராம பிரானைப் பற்றி உலகம் முழுதும் 300-க்கும் மேலான வெவ்வேறு வகையான ராமாயணங்கள் இருப்பதை முன்னரே எழுதியுள்ளேன். இது தவிர கம்பன், வால்மீகி, துளசிதாசர் ஆகியோர் கூறாத சில சம்பவங்கள், சங்க இலக்கியமான புறநானூற்றில் இரண்டு பாடல்களில் இருப்பதையும், ஆழ்வார் பாடல்களில் மேலும் சில சம்பவங்கள் இருப்பதையும் காட்டினேன். இப்பொழுது உதிரியாக உள்ள ஒரு பாடல் ராமனை எப்படி வருணிக்கிறது என்று காண்போம்.

உலகில் மற்ற நாடுகளில் ஏ.கே.47 துப்பாக்கியாலும் ‘மிஷின் கன்’ எனப்படும் இயந்திரத் துப்பாக்கியாலும் அதிகம் பேரைச் சுட்டுக் கொல்லுவோருக்கு ‘பெரிய வீரன்’ பட்டம் கொடுப்பார்கள். ஆனால் இந்தியாவில் “புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்” என்று அவ்வையார் பாராட்டுவதை இரண்டு மஹாவீரர்கள் (மஹா வீர அனுமன், சமண தீர்த்தங்கரர் மஹாவீரர் ) பற்றிய கட்டுரையில் தந்தேன்.

ராமனிடம் ஐந்து விதமான வீர குணங்கள் உள்ளன. இவைகளைப் பின்பற்ற ஒருவனுக்கு மஹா வீரம் தேவை. ஏனெனில் கஷ்ட திசையில் மாட்டிக் கொண்ட நல்லவர்களும் கூட, எளிதில் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு. ஆனால் ராம பிரானோ எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்த போதிலும் தர்மத்தின் வழியையே கடைப் பிடித்தான். அதனால் அவனிடம் ஐந்து நற்குணங்கள் இருப்பதாகப் புலவர் பெருமக்கள் போற்றுவர்:-

rama-travel

தியாக வீரம்

கைகேயியின் வசப்பட்ட தசரதன் சொல்லிய சொல்லுக்காக, அந்த சத்ய பராக்ரமன் ராமன், தனக்குக் கிடைக்கவேண்டிய பெரும் அரச பதவியைத் தியாகம் செய்தான். இதைவிடப் பெரிய தியாகம் உளதோ! அப்பா, அம்மாவை எதிர்த்து போர்கொடி தூக்குவோம் என்று சூளுரைத்த லெட்சுமணனை அமைதிப்படுத்தி அவனையும் தன் வழிப்படுத்தினான்.

 

தயாவீரம்

வேடர் குலத் தலைவனான குகனையும், குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும், அரக்கர் குல விபீஷணனையும் தனது சஹோதரர்களாக ஏற்றான். சாதி, குல வேற்றுமைகளை மிதித்து நசுக்கிய முதல் மாவீரன் அவன். எல்லோரிடமும் தயை என்னும் இரக்கம் காட்டினான். சபரிக்கு மோட்சம் கொடுத்தான். மாபெரும் தவறு இழைத்த அஹல்யைக்கு சாப விமோசனம் அளித்தான்.

 

வித்யாவீரம்

அவனுடைய விவேகம், வித்யா வீரம் எனப்படும். போர்க்களத்தில் ஆயுதங்களை இழந்த இராவணனைக் கொல்லாது “இன்று போய் நாளை வா” — என்று இயம்பினான். சீதையை ஒப்படைத்தால் உயிர்ப்பிச்சை போடுவதாகக் கூறினான். ஒரு வண்ணான் சொன்ன சொல்லை மதித்து, தனது மனைவியின் தூய்மையை, கற்பினை நிலநாட்ட அவளை பூக்குழி இறங்க உத்தரவிட்டான். ஜனநாயகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய முதல் தலைவன் அவன். இராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்.

 

பராக்ரமவீரம்

21 தலை முறை க்ஷத்ரிய மன்னர்களை அழித்த பரசுராமனையும் வெற்றி கொண்டு தனது பராக்ரமத்தை நிலநாட்டினான் ராமன். ஏழு மராமரங்களை ஒரே அம்பினால் துளைத்ததோடு, ஏழு கோடி அவுணர்களையும் அழித்தொழித்தான். ராவண சம்ஹாரம், அவனது வீர பராக்ரமத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

தர்மவீரன்

“இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று புதுநெறி புதுக்கிய நாயகன் அவன். எல்லா அரசர்களும் பல மனைவியரை மணக்க, சீதையைத் தவிர வேறு ஒரு பெண்ணை சிந்தையாலும் தொடாதவன் அவன். சத்திய நெறி தவறாதவன்

அவன் ஸ்ருதபாஷி= உண்மை விளம்பி

அவன் மிதபாஷி = குறைவாகப் பேசுபவன்

அவன் ஹித பாஷி = இனிமையான சொற்களையே நவில்வான்

பூர்வபாஷி = சிறிதும் தலைக் கனம் இல்லாமல் தானே வலியச் சென்று நலம் விசாரிப்பவன்.

 ராமன்

இதோ அவனைப் புகழும் பாடல்:

பஞ்சவீரா:சமாக்யாதா ராம ஏவ து பஞ்சதா

ரகுவீர இதி க்யாத: சர்வ வீரோப லக்ஷண:

 

வாழ்க இராமபிரான் திரு நாமம்! வளர்க அறம்!!

 

 

மேலும் 33 இந்து மதப் பழமொழிகள்!

Karnan_Movie_

Article No.2007

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 21  July 2015

Time uploaded in London : 8-14 am

1.அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு

The next house to that of Harischandra

The proverb is said ironically about a person who pretends to be honest, but is a well known liar

2.கொல்லைக்குப் பல்லி, குடிக்குச் சகுனி

The Palli plant (Buchnera) to the garden, and Saguni to the family.

The Palli plant  saps the soil of the garden, while Saguni ruined the Kaurava family completely.

3.கார்த்திகைக்குப் பின் மழை இல்லை; கர்ணனுக்குப் பின் கொடை இல்லை

There is no rain after Kartikai;there is no generosity surpassing Karna’s

4.கையில் இருந்தால் கர்ணன்

If he has something in his hand, he will be charitable like Karnan

5.படைக்கும் ஒருவன், கொடைக்கும் ஒருவன்

Only one for the army, and only one for the charity

karna

6.கூரை ஏறி கோழி பிடிக்கமாட்டாத குருக்களா வானம் கீறி வைகுண்டம் காட்டுவார்?

Can spiritual teachers who are unable to climb a roof  to catch a fowl, rend the skies and shoe people Vishnu’s abode Vaikuntham?

7.உள்ளங்கையில் வைகுண்டம் காட்டுகிறேன்

He will show you heaven (Vaikuntham) in the palm of his hand

8.விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் என்ன உறவு என்று கேட்டானாம்

விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சிற்றப்பன் என்றானாம்

After having heard the Ramayana discourse all night, he asked how Rama was related to Sita?

Or After having heard the Ramayana discourse all night, he said Raman was Sita’s uncle!

John has been to school to learn to be a fool

9.கிட்டினால் ராமா, கோவிந்தா, கிட்டாவிட்டால் ஒன்றுமில்லை

If we get what we want, we worship the idol as Rama or Govinda, if we do not get it, the idol is nought

rama young

10.ஹரி ஹரி என்றால் சிவ சிவ என்கிறான்

If I say Vishnu, he says Shiva

அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில மண்ணு

11.ஹை என்றால் ஆண்டிக்குக் கோபம், ஹர என்றால் தாதனுக்குக் கோபம்

If I say Hari, the Saiva mendicant gets angry, if I say Siva, the Vaishnava mendicant gets angry

12.ஊர்க்குருவி மேல் ராமபாணம் தொடுக்கிறதா?

Is a good arrow to be shot at a sparrow?

KURUVI WINDOW

13.காசி முதல் ராமேஸ்வரம் வரை தெரிந்தவன்!

He knows everything from Benares to Rameswaram (ironical)

Jack of all trades and Master of none

14.குருவிக்குத் தகுந்த ராமேஸ்வரம்

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை

The bird should be suited to Rameswaram

The task a man attempts should be suited to his ability

15.இராமர் மங்கையோடு இணங்கினது அவம்

It was Rama’s weakness that he yielded to a woman

16.கூழைக் குடித்தாலும் குப்பை சுமந்தாலும், குப்பைக்காட்டுப் பெண்கள் ருக்குமணி; பாலைக் குடித்தாலும், பட்டைக் கட்டினாலும்,பட்டணத்துப் பெண்கள் பறக்கை (தட்டுவாணி)

Though village women drink water gruel and carry manure on their heads, they are precious jewels or Rukmani, one of the wives of Lord Krisna;though the women in cities drink milk and dress in silk, they are gad-abouts.

17.மதனும் ரதியும் போல் வாழ்ந்திருக்க வேண்டும்

To live happily like Kama and his wife rathy

க்ருஷ்ண கங்கா, காஷ்மீர்

18.நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் விசாரிக்கப்படாது

Wit is not right to investigate the origin of a river or a Rishi(sage)

Do not think of their possibly insignificant origin, rather admire thei excellent qualities

19.மஹாலக்ஷ்மி பரதேசம் போனாற்போல

As the goddess of wealth went to a far country

(used of rich men who are not at home or unsympathetic to their needy friends)

20.என்றைக்கும் போடாத லக்ஷ்மி இன்றைக்கும் போடவில்லை; தினம் போடுகிற … யாளுக்கு இன்றைக்கு என்ன வந்தது?

Lakshmi who never gives als, did not give today; but what evil has befallen the dancing girl who always gives, but did not do so today?

21.தைரிய லக்ஷ்மி தன லக்ஷ்மி

The Goddess of bravery is the Goddess f wealth

Faint heart never won fair lad

Nought venture nought win

lakshmi in thai exhibition

Picture shows Lakshmi in Bangkok (Thailand) exhibition

22.ஆண்டியே சோற்றுக்கு அலயறச்சே தன் லிங்கம் பால் சோற்றுக்கு அலைகிறது!

While the mendicant is praying for rice his Linga cries for Milk and Rice

23.ஆவுடையாரையும் லிங்கத்தையும் ஆறு கொண்டுபோகவே, சுற்றுக் கோவில் சுவாமி எல்லாம் சர்க்கரை பொங்கலுக்கு அழுதது போல

Like all the little gods of the surrounding temples crying for sweatmetas,, while the river carries off the sacred stone Nandi/bull and Linga

24.சடைத் தம்பிரான் சாற்றுக்கு அழுகிறானாம், லிங்கம் பஞ்சாமிர்தத்துக்கு அழுகிறதாம்

It is said that the chief priest of a Saivite temple was crying for pepper-water, and the Linga was crying for a dish consisting of five kinds of fruits.

25.முறையோ என்று கேட்பவன் கழுத்திலே லிங்கம் கட்டினால், மறைவிலே அறுத்துப் போடுவிடுவான்

If you tie a Linga round the neck of a person who objects to t, he will secretly untie it and throw it away

Applicable to many marriages in India, when the girl-bride or the young bride-groom, is forced to marry unwillingly – with sad results.

2big linga

26.ஜாண் (சாண்) பண்டாரத்துக்கு முழம் விபூதி (லிங்கம் அல்லது தாடி)

A mendicant who in only a span high wears a Siva mark (linga) a foot long

27.அஞ்ஞானம் பிடித்த பெண்ணுக்கு சிவஞானம் என்று பெயர்!

The widow is seized with stupidity, but her name is The Wisdom of Siva

28.சீச்சீ என்கிறதும் இந்த வாய்தான், சிவா சிவா என்கிறதும் இந்த வாய்தான்

With the same mouth you say Fie, Fie and Siva Siva

With the tongue bless we God, and therewith curse we men (James 4,9)

29.காட்டுப் பூனைக்கு சிவராத்ரி விரதமா?

Will wild cat observe the Fast of Sivaratri?

30.நக்குகிற நாய்க்குச் செக்கு என்றும் சிவலிங்கம் என்றும் தெரியுமா?

A dog is not able to distinguish an oil mill from a Linga.

31.குரங்கின் தலையில் கரகம் வைத்து  காளி கும்பிடுவது போல!

Like putting a pot of sacred water on the head of a monkey and worshipping Kali!

The proverb is said of a person who employs a well-known fool to perform a duty that is to done with the greatest care.

big linga

32.சிவலிங்கத்தின் மேல் எலிப் போல

Like a rat on the top of a Linga

Said of a wife who mounted her husband’s head. She wilfully did what her husband told her not to do = henpecked husband

33.பிள்ளையாருக்கு பெண் கொள்ளுகிறது போல

Like procuring a wife for Ganesa

Ganesa’s another, Parvati once asked him, if he was not going to marry, his reply was: I shall when I meet a woman like you. His mother got so angry over this reply, and she cursed him and ordered him to stand near the public roads to wait for a wife

36 FT TALL DUTCH FLOWER ELEPHANT

என்னுடைய பழைய கட்டுரைகள்:

யானை பற்றிய நூறு பழமொழிகள், ஜூன் 5, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – Part 1, ஜூன் 22, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – பகுதி 2, ஜூன் 22, 2012

இராமன் பற்றிய பழமொழிகள் ஏப்ரல் 10, 2014

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள், மே 31, 2012,
பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3) ஜூன் 26, 2012 & ஜூன் 28, 2012
பாரதி பாட்டில் பழமொழிகள், ஜூன் 25, 2012
அப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது) ஜூன் 26, 2012

ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
உடம்பைக் கடம்பால் அடி

20,000 Tamil Proverbs (English article)

ஆயிரத்துக்கும் மேலான பழமொழிகளை தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாகத் தொகுத்துள்ளேன்.

இதை வெளியிடுவோர் தொகுத்தவர் பெயர், பிளாக் பெயருடன் வெளியிட்டு தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என்று இறைஞ்சுகிறேன் — லண்டன் சுவாமிநாதன்

Pictures are taken from various sources; thanks for face book friends.

பகுதி-2: கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான இரண்டு பழைய தமிழ் நூல்கள்

IMG_5060

Article No.1999

Compiled  by London swaminathan

Date 17th July 2015

Time uploaded in London: 5-50 AM 

 

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் மூன்று தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ளனர். மூன்றும் ‘மினி’ புத்தகங்கள். நேற்று விவிலிய நூலுக்கு எதிரான பகுதியை வெளியிட்டேன். இது கிறிஸ்தமதப் பிரசாரத்துக்கு எதிரான மற்றொரு சிறிய நூல். 1829 அல்லது 1889-ல் வெளியிடப்பட்டிருக்கலாம். பிரிட்டிஷ் நூலகத்தில் 1890-ஆம் ஆண்டு வரவு வைக்கப்பட்டுள்ளது. 

 

எழுதியவர்:உடுப்பிட்டி ஆறுமுகபிள்ளை, யாழ்ப்பாண கிறிஸ்தவ மத கண்டன சபை

I found three very old Tamil books in the British Library,London, which were in very bad condition. Two of them are Anti- Christian booklets published in 1829 or 1889 from Jaffna, Sri Lanka.

IMG_5061 IMG_5062

IMG_5063 IMG_5064

IMG_5065 IMG_5066

IMG_5067 IMG_5068

IMG_5069 IMG_5070

-சுபம்-

கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான இரண்டு பழந்தமிழ் நூல்கள்- பகுதி 1

IMG_5071

எழுதியவர்:-உடுப்பிட்டி ஆறுமுகபிள்ளை, யாழ்ப்பாண கிறிஸ்தவ மத கண்டன சபை

 

Article No.1997

Compiled  by London swaminathan

Date 16th July 2015

Time uploaded in London: 8-48 

 

I found three very old Tamil books in the British Library,London, which were in very bad condition. Two of them are Anti- Christian booklets published in 1829 or 1889 from Jaffna, Sri Lanka. The pages were brittle and brownish. The library authorities cautioned me about it and asked me to handle them with care. These are interesting booklets that came out at the height of Anti Hindu propaganda by the Christian missionaries against Linga worship and Krishna worship. To read it you have to zoom and enlarge the pages.

IMG_5072 IMG_5073 IMG_5074

IMG_5075 IMG_5076 IMG_5077

IMG_5078 IMG_5079 IMG_5080

IMG_5081 IMG_5082 IMG_5083

Another booklet will be uploaded separately.

swami_48@yahoo.com

கோவில்களில் கபட நாடகம்: இரண்டு கதைகள்

church stamp

Article No.1991

Compiled by London swaminathan

Date 13th July 2015

Time uploaded in London:  காலை 10-00

மஹாபரதத்திலுள்ள குலிங்கப் பறவையின் கதை, பஞ்சதந்திரக் கதைளிலும், மாமல்லபுரம் சிற்பத்திலுமுள்ள ருத்திராட்சப் பூனை கதை ஆகியவற்றை இதற்குமுன்னர்  பார்த்துவிட்டோம். இன்று வேறு இரண்டு சுவையான விஷயங்களைப் பார்ப்போம்.

சர்ச்சில் கபட நாடகம்

ஒரு மாதாகோவிலில் கிறிஸ்தவப் பாதிரியார் தனது பிரசங்கத்தை முடிக்கையில் “அன்பர்களே, அடுத்த ஞாயிற்றுக் கிழமை சொற்பொழிவில் நான் “கபட வேடம் போடுவோர்” பற்றி உரையாற்ற எண்ணியுள்ளேன். அதை நன்கு புரிந்து கொள்ளும் முகத்தான் நீங்களும் ஒன்று செய்ய வேண்டுகிறேன். புனித பைபிளில் மார்க் சுவிசேஷத்தில் உள்ள 17ஆவது அத்தியாயத்தை அனைவரும் படித்து வருக–என்றார்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. எல்லோரும் கபடவேடதரிகள் பற்றிய சுவையான சொற்பொழிவுக்காகக் காத்திருந்தனர். பாதிரியார் பேச்சைத் துவங்கினார்: “அன்பர்களே சென்ற ஞாயிறன்று உங்களுக்கு நான் விடுத்த வேண்டுகோள் நினைவிருக்கும் என்று நம்புகிறேன். எத்தனை பேர் நான் சொன்னது போல, “மார்க் சுவிஷேச”த்தின் 17ஆவது அத்தியாயத்தைப் படித்தீர்கள்? தயவுசெய்து படித்தவர்கள் மட்டும் கையை உயரத்தும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” – என்றார். மாதாகோவிலில் உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் கையை உயர்த்தி தாம் படித்ததை பட்டவர்த்தனமாக அறிவித்தனர்.

பாதிரியாருக்கு ஒரே சிரிப்பு. அன்பர்களே! மார்க்-கில் 17-ஆவது அத்தியாயமே கிடையாது. உங்களைப் போன்றோருக்குதான் இதுபோன்ற நல்லுபதேசங்கள் அவசியம். ஆகவே அமைதியாக இருந்து கேளுங்கள் என்று உபந்யாசத்தைத் துவக்கினார்!

எல்லோர் முகத்திலும் அசடு வழிந்தது!

–ஆதாரம்: திசாரஸ் ஆப் அனெக்டோட்ஸ்

20 armed ganesh,chicago

பிள்ளையார் கோவில் பூசாரி கதை

ஒரு ஊரில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. பக்தர்கள் கூட்டம் நெருக்கித் தள்ளியது. பூசாரிக்கு ஒரே மகிழ்ச்சி. இதுதான் நல்ல தருணம் என்று “மைக்”-கைக் கயில் எடுத்து ஒரு முக்கிய அறிவிப்பு என்றார். ஊசி விழுந்தால்கூட கேட்கும் அளவுக்கு நிசப்தம்.”

“மெய்யன்பர்களே! அடுத்த வெள்ளிக் கிழமை சதுர்த்தி வருகிறது. பிள்ளையாருக்கு மிகவும் விசேஷமான நாள்; அது மட்டுமல்ல; வெள்ளிக் கிழமையும் சேர்ந்து வருவது அபூர்வம். ஆகையால் பெரிய பாலாபிஷேகம் நடைபெறவுள்ளது. பக்தர்கள் எல்லோரும் தங்களாலியன்ற அளவுக்கு பால் கொண்டு வரவேண்டும். இதற்காகவே க.மு..செ.து.வ.அ.ப.ம.ரா. செட்டியார் அவர்கள் மூடியுடன் கூடிய பெரிய தொட்டி (டேங்க்) ஒன்றைத் தானம் கொடுத்துள்ளார். அன்பர்கள் அனைவரும் அதிகாலையில் பால் கொண்டுவந்து அதில் கொட்டினால் போதும். உங்கள் அனைவருக்கும் இறையருள் கிட்டி எண்ணியதெல்லாம் நடைபெறும் என்றார்.

பக்தர்களுக்கு மிகவும் சந்தோஷம். இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று எண்ணினர். கோவிலுக்கு வெளியே வந்ததுதான் தாமதம்! அவர்களின் சுபாவ குணங்கள் என்னும் பூதங்கள் அவர்களைப் பிடித்துக்கொண்டன. உடனே எண்ணம் மாறியது.

நான் பெரிய குடத்தில் தண்ணீர் கொண்டுபோய் பொழுது விடிவதற்குள் தொட்டியில் விட்டுவிடுவேன். இருட்டில் யாருக்கும் தெரியாது. மேலும் மூடி இருப்பதால் அதை யாரும் அறியார் என்று ஒவ்வொருவரும் எண்ணினர்.

வெள்ளிக்கிழமயன்று எள் போட்டால் எண்ணையாகிவிடும் அளவுக்குப் பக்தர் கூட்டம். எல்லாரும் “பயபக்தி”யுடன் பொழுது விடிவதற்குள், இருள் சூழ்ந்திருக்கும் போது குடம் குடமாகத் தொட்டியில் கொட்டினர் – பால் அல்ல – அத்தனை குடங்களிலும் தண்ணீர்!!!

பூசாரி வந்தார். தொட்டி முழுவதும் நிரம்பியிருப்பதை அறிந்தார். கோவிலுக்குச் சொந்தமான நிறைய வெள்ளிக் குடங்களை வரிசையாக வைத்து எல்லா பக்தர்களும் வரிசையாக பாலை நிரப்பி வந்து கொடுக்கலாம் என்றார். “அந்த கைங்கரியத்தைச் செய்ய பகதர்களுக்குள் போட்டா போட்டி. ஆனால் ஒவ்வொரு குடத்திலும் நீர் மட்டுமே வந்தது. பால் வரவில்லை. ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொண்டனர். அசடு மட்டுமா வழிந்தது? கூடவே விளக்கெண்ணையும் சேர்ந்து வழிந்தது.

பூசாரிக்கு மஹா கோபம்! பிள்ளையாருக்கோ மனதுக்குள் பெரிய சிரிப்பு. சிலையைப் பார்த்தோருக்குக் கூட ஒரு புன்னகை பளிச்சிட்டது போலத் தோன்றியது!

பூசாரி உரத்த குரலில் பிருஹத் ஆரண்யக உபநிஷத் மந்திரத்தைச் சொன்னார்:

“அஸதோ மா சத் கமய” — (அறியாமையிலிருந்து என்னை அறிவொளிக்கு அழைத்துச் செல்)

“தமஸோ மா ஜ்யோதிர் கமய” — (இருளிலிருந்து என்னை ஞான ஒளிக்கு அழைத்துச் செல்)

“பக்தர்கள்” கூட்டம் கலைந்தது! ஆனால் பிரசாதம் வாங்க மறக்கவில்லை!!

ஆதாரம்: பள்ளியில் தமிழ் ஆசிரியர் சொன்னாரா அல்லது வாரியார், கீரன் போன்றோர் சொற்பொழிவினில் கேட்டதோ நினைவில்லை.

abrus

வள்ளுவரின் மூன்று அற்புதமான உவமைகள்:

கபட நாடகம் பற்றி பத்து குறட்பாக்களே பாடிவிட்டார் வள்ளுவர்.

தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து

வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று – குறள் 274

பொருள்: சந்யாசி வேஷத்தில் பாவம் செய்பவன்= புதரில் ஒளிந்திருந்து பறவைகளைப் பிடிக்கும் வேடன்

வலியில் நிலைமையான் வல் உருவம் பெற்றம்

புலியின் தோல் மேன் போர்த்து மேய்ந்தற்று – குறள் 273

பொருள்: – போலி சந்யாசி = புலித் தோலைப் போர்த்திக்கொண்டு மேயும் கபட பசு

புரங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி

மூக்கிற் கரியார் உடைத்து — குறள் 277

சந்யாசியின் வேடம் = குன்றிமணியின் (குண்டுமணி விதை) சிவப்பு நிறம்

போலி சந்யாசியின் மனம் = குன்றிமணியின் கரிய மூக்கு

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும் — குறள் 271

போலி ஒழுக்கசீலனைக் கண்டு அவன் உடலில் இருக்கும் பஞ்சபூதங்களும் (நிலம், நீர், தீ, வான், வளி) நகைக்கும். அதாவது ஒருவன் மனைவி, கணவன், அப்பா, அம்மா, உறவினர், நண்பர்களை ஏமாற்றலாம். ஆனால் அவன் மனச் சாட்சி அவனைப் பார்த்துச் சிரிக்கும். அதை ஏமாற்றவே முடியாது!