GMT Time uploaded in London – 10-52 am Post No. 5956 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Date:13 JANUARY 2019 GMT Time uploaded in London –19-42 Post No. 5931 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Pictures shown here are taken
from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers.
This is a non- commercial blog.
Adam and Eve : Jokes
Compiled by S.Nagarajan
There are hundreds of jokes available about Adam and Eve. Given below is some of them.
1
“God, I’ve been thinking..”
says Eve one day.
“What’s on your mind Eve?”
says God.
“Well, I know that you
created me and this beautiful garden and all of these wonderful creatures, but
lately I’ve been feeling that maybe there’s more to life.”
“Go on…” says God.
“Sometimes I get a bit bored
– I fancy a bit of fun. And I get a bit fed up with all the heaving lifting and
carrying, and warding off the mammoths and sabre-toothed tigers, not to mention
that bloody snake. This garden can be dangerous place.”
“I see,” says God,
pausing for thought.
“Eve, I have a cunning
plan,” says God, “I shall create Man for you.”
“Man?” asks Eve,
“What is Man?”
“Man…” says God,
“Is a flawed creature. He will have many weaknesses and disgusting habits.
Man will lie, cheat and behave like an idiot – in fact mostly he’ll be a
complete pain in the backside. But on the plus side he’ll be big and strong,
and will be able to protect you, and hunt and kill things, which might be handy
sometimes. He will tend to lose control of mind and body when aroused, but with
a bit training can reach an acceptable standard in the bedroom department, if
you know what I mean.”
“Hmm,” says Eve,
“Seems like this Man idea might be worth a try, but tell me God, is
there anything else I need to know?”
“Just this,” says God, “Man comes with one condition… In keeping with his arrogant, deluded, self-important character, Man will naturally believe that he was made first, and frankly we all have better things to do than argue, so you must keep all this a secret between us, if that’s okay with you. You know, woman to woman..”
2
Painting
A Briton, a Frenchman and a Russian are viewing a painting of Adam and Eve
frolicking in the Garden of Eden. “Look at their reserve, their
calm,” muses the Brit.
“They
must be British.”
“Nonsense,”
the Frenchman disagrees. “They’re naked, and so beautiful. Clearly, they
are French.”
“No way! They have no clothes and no shelter,” the Russian points out, “They have only an apple to eat, and they are being told they live in a paradise. Obviously, they are Russian.”
3
Sherlock
Holmes was sent to heaven to find Adam and Eve.
He
came back within a day and said he had found them.
Watson
: “How did you find them so quickly?”
Sherlock Holmes : “Elementary, my dear Watson, they were the only ones that didn’t have belly buttons!”
4
How did Adam
introduced himself to Eve?
“Madam I’m Adam”
This is a
palindrome.
Read left to right
or right to left, the same words will appear!
swami_48@yahoo.com Date: 27 December 2018 GMT Time uploaded in London – 8-20 am Post No. 5842
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
சங்கத் தமிழ் வளர்த்த மதுரை– இயல் இசை நாடகம் — ஆகிய முத்தமிழையும் வளர்த்தது. மதுரை தந்த எம்.எஸ். சுப்புலெட்சுமியை யாரும் மறக்க முடியாது. பரிதிமாற் கலைஞர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு தமிழ்ப் பணி ஆற்றிய மதுரை வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியின் தமிழ் நாடகங்களை எவரும் மறக்க முடியாது.
அந்தக் காலத்தில் மதுரை, நாடகங்களின் ஆதார பூமியாக விளங்கியது. நாடகம் வளர்த்த சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம், நாடகம் எழுதிய பம்மல் சம்பந்த முதலியார் ஆகியோரையும் மறப்பதற்கில்லை.
ஆயினும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் லைப்ரரிக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வாரம்தோறும் செல்லும்போது அந்தக் காலத்தில் தெருக்கூத்து, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியோர் பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் என்பது புரிகிறது; தெரிகிறது.
இது டாக்டர் பட்டம் பெறுவதற்கு நிறைய தகவலுள்ள துறை. நானும் அவ்வபோது கண்ட நாடகங்களைப் பற்றிய தகவல்களைப் பேஸ்புக்கில் வெளியிட்டு வந்தேன்.
மதுரையில் இருந்ததொரு நாடகக் கம்பெனி பற்றிய சுவையான விவரம் இதோ:–
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியை 1910ஆம் ஆண்டில் .எஸ். எம். சச்சிதானந்தம் பிள்ளை துவக்கினார். இளைஞர்களைக் (பால்யர்கள்) கொண்டே இதை இயக்கினார். அவர் பல நாடகங்களை இயற்றினார்; அவற்றில் சில:-
கங்காராம் அல்லது கவர்னர்ஸ் கப்
பஞ்சாப் கேசரி
வீர சிவாஜி
அவர் சொல்லும் தகவல்
நல்ல நீதிகளைக் கொண்ட நாடகங்களால் உலகத்தவர்கள் நல்ல நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்பது பெரியோர் அபிப்பிராயம்; எனக்கும் அந்த அபிப்பிராயம் உண்டு.
காலஞ்சென்ற கன்னையாவைப் போல நானும் ஏராளமான பொருட்செலவில் தசாவதாரம் என்ற பிரயாதிமிக்க நாடகத்தை நடத்தி முடித்தேன்.
பிறகு காலப்போக்கை அனுசரித்து ஜனசாரச் சீர்திருத்தம் சம்பந்தமான நாடகம் நடத்த முற்பட்டு
ராஜாம்பாள், மனோஹரன், கள்வர் தலைவன் முதலியன்வும்
பதிபக்தி, பம்பாய் மெயில் முதலியனவும் நடத்தினேன்.
கிண்டியில் நடக்கும் குதிரைபந்தயம் என்னும் சூதாட்டத்தினால் விளையும் தீமைகளை விளக்க ‘கவர்னர்ஸ் கப்’ என்ற இந்த நாடகத்தை எழுதினேன் (ஆண்டு 1935).
வரகவி அ .சுப்பிரமணிய பாரதியிடம் தந்துஅவர் திருத்தியமைத்தபின் அச்சிட்டேன்; அவருக்கு நன்றி
என் நாடகத்தில் பிரதான நடிகர்கள்
டி ஆர் பாபு ராவ், காளி, என். ரத்தினம்
XXX
தமிழ் கூறு நல்லுலகம் சச்சிதானந்தம் பிள்ளைக்கும் நாடக நடிகர்களுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளது.
TAGS–
சச்சிதானந்தம் பிள்ளை, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, தமிழ் நாடகங்கள், கன்னையா
Research Article written by London Swaminathan swami_48@yahoo.com Date: 25 December 2018 GMT Time uploaded in London – 16-00 Post No. 5831
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பழங்கால
இந்தியாவில் நிறைய தர்ம சாஸ்திரங்கள் (சட்ட நூல்கள்) இருந்தன. அவைகளில் சிறந்தது
மநுதர்ம சாஸ்திரம் என்பதால் எல்லோரும் தங்களை மநுநீதி
மன்னன் என்று புகழ்ந்து கொண்டனர். 2000
ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனுநீதிச் சோழனும் அவர்களில் ஒருவன். பாண்டியர் செப்பேடுகளும்
மநு நீதி வழுவாது ஆண்ட மன்னர்கள் என்று பாண்டியர்களைப் புகழ்கின்றன. மநு என்பவர் ரிக் வேத காலத்தில்
வாழ்ந்தவர். 4000 முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமையுடைத்து என்று அறிஞர்களால் போற்றப்படும்
ரிக்வேதத்தில் மநுவின் பெயர் உளது. கிருஷ்ணனும் பகவத் கீதையின் நாலாவது அத்தியாயத்தின்
முதல் ஸ்லோகத்தில் தான் முன்னொரு காலத்தில் விவஸ்வானுக்கு உபதேசித்ததை அவருடைய
மகனான வைவஸ்வத மநுவுக்கு உபதேசித்ததாகவும் அவர் சூரிய குல முதல் மன்னனான
இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்ததாகவும் அர்ஜுனனிடம்
சொல்கிறார்.
ஆக மஹாபாரதத்துக்கும் முந்தையவர் மநு. அதாவது கி.மு 3102க்கும் முன்னர்!
ஆக
மநுவின் காலம் மிகப்பழமையா னது. ஆனல் இப்போதுள்ள மநு நீதி நூல் சூத்திரர்களுக்கு
எதிராக 40, 50 ஸ்லோகங்கள் சேர்க்கப்பட்ட UPDATED
EDITION அப்டேடட்
எடிஸன். அதாவது புதிய பதிப்பு.
மநுவும்
ரிக் வேதமும் ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம்
பற்றிக் கதைப்பதில்லை. மநுவும் ரிக்வேதமும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஸரஸ்வதி நதி பற்றிப் பேசுகின்றன. ஆகவே மநு என்பவர்—அதாவது ஒரிஜினல் மானவ
தர்ம சாஸ்திரத்தை எழுதிய வைவஸ்வத மநு — மிகப்பழையவர். ஆயினும் பாலைவனத்தில்
கெட்டுப் போகாமல் இருக்கும் ஹமுராபியின் களிமண் பலகைகளைக் கண்டு மகிழ்ந்த மேலை
நாட்டினர் ஹமுராபியின் சட்ட புஸ்தகததை விதந்து ஓதுவர். இது மநு பற்றி அறியாததால்
வந்த தோஷம்!
ஹமுராபி
யார்?
ஹமுராபி
என்னும் மன்னன் பாபிலோனிய அரசன். அவன் கி.மு.1792-ல்
அரசாட்சி செய்யத் துவங்கினான். அவனுக்கு முன்னரே பாபிலோனியா, சுமேரியா
முதலிய அரசுகளின் கீழ் சட்டங்கள் இருந்தபோதும் ஹமுராபி அதை ஒரு முறைப்படுத்தி
கல்வெட்டிலும், களிமண்
பலகைகளிலும் எழுதிவைத்தான். அதில் சூசா (SUSA IN
IRAN) என்னும் இடத்தில் அவன் எழுப்பிய பெரிய கல்தூணில்
செதுக்கி வைத்தது முக்கியமானதாகும். ஏனெனில் அது நிறுவப்பட்ட இடத்திலிருந்து
அகற்றப்பட்டு வேறிடத்தில் இருந்ததை பிரெஞ்சு அதிகாரிகள் பாரீஸிலுள்ள லூவர்
மியூஸியத்தில் கொண்டு வைத்தனர்.இதனால் ஹமுராபியின் புகழ் பரவியது.
‘பல்லுக்குப்
பல்,கண்ணுக்குக்
கண்’ என்று
தண்டனை கொடுப்பது அவன் வழக்கம்..
முதலில்
மநுவின் சட்ட நூலுக்கும் ஹமுராபி சட்டத்துக்கும் உள்ள மேம்போக்கான
ஒற்றுமைகளைக் காண்போம்:
மநு
என்பவன் விவஸ்வானின் மகன்; விவஸ்வான் என்பவன் சூரிய பகவான்.
விவஸ்வானின் புதல்வன் எ ன்பதால்தான் வைவஸ்வத மநு என்று பெயர் பெறுகிறான். அவனுக்கு முன்னரும்
பல மநுக்கள் இருந்தனர். மநுவிடமிருந்து சூரியகுல முதல் மன்னனான இக்ஷ்வாகுவுக்கு, தான்
யோக
விஷயங்களைச் சொல்லிக் கொடுத்ததாக கிருஷ்ணன் கூறுகிறார் (கீதை 4-1). இங்கு சூரியன்
– மநு – சட்டம் பற்றிய தொடர்பு தெரிகிறது.
.
முதல்
ஒற்றுமை
இது போலவே பாபிலோனியாவிலும் ஹமுராபி
நிறுவிய கல்தூணில் ஷாமாஷ் என்னும் சூரியதேவனே ஹமுராபிக்கு உபதேசிக்கிறார்
ஹமுராபி
என்பதை சமர+ரவி (போர் சூரியன்) என்பதன் திரிபு என்றே நான் கருதுகிறேன்.
சங்கராச்சார்யார்
முதலிய மதிக்கத்தக்க பெரியோர்களிடம் பக்தர்கள் பேசுகையில் தம்முடைய எச்சில்
அவர்கள் மீது தெறிக்காமல் இருக்க பயபக்தியாக வாய் புதைத்து– வாயில் கை வைத்துக்
கொண்டு பேசுவர்- இது போல ஷாமாஷ் என்னும் சூரிய/ நீதி தேவதையிடம் சட்டங்களைப்பெறும் ஹமுராபி பவ்யமாக நிற்பது சிலைகளில்
காண்பிக்கப்பட்டுள்ளது.
நாலாம்
ஒற்றுமை
பிற்காலத்தில்
அசோக சக்ரவர்த்தியும் ஹமுராபி போல பொது இடங்களில் தர்ம விதிக்ளை மக்கள் பேசும்
பாலி மொழியில் எழுதி வைத்தார். ஹமுராபியும் களிமண் பலகை தவிர பெரிய கல்வெட்டுகளில், மக்கள் பேசும் அன்றாட அக்கடியன்
மொழியில் எழுதி வைத்தார்.
அசோகன்
இப்படி செய்தது ஹமுராபியைப் பார்த்து
என்று சொல்லுவதைவிட இப்படி ஒரு வழக்கம் இந்தியாவிலும் இருந்திருக்க வேண்டும் என்று
தெரிகிறது. அசோகன் நிறுவிய பல்லாயிரம் கல்வெட்டுகளில் இன்று 30+ மட்டுமே உள்ளன. இது போல, பழங்கால இந்திய கல்வெட்டுகள் பருவக்
கோளாற்றினாலும் வெளிநாட்டுக் காட்டுமிராண்டிப் படை எடுப்புகளினாலும் அழிந்தன என்று
கருதலாம்.
ஐந்தாம்
ஒற்றுமை
ஹமுராபி
கல்வெட்டில் 282 சட்டங்கள் மட்டுமே உள. இவை எல்லாம் மநுவும் பிரஸ்தாபித்த
விஷயங்களே.ஆனால் மநுவோ பாரதப் பண்புகளைக் காட்டி ஒவ்வொன்றையும்
விவரிக்கிறான். ஹமுராபி அப்படி எதுவும் சொல்லாமல் சட்டங்களை மட்டும் சொல்கிறான்.
ஆறாம் ஒற்றுமை
ஷமாஷ்
என்னும் நீதி தேவதை,சூரிய தேவன்; ‘உடு’ என்றும் சுமேரியாவில்
அழைக்கப்பட்டான். ‘உடு’ என்பது நட்சத்திரம், விண்மீன்
என்றும் தமிழ் .ஸம்ஸ்க்ருத்தில் புழக்கத்தில் உள்ளது
ஏழாம்
ஒற்றுமை
ஹமுராபி
அம்மோரைட் என்னும் இனத்தை சேர்ந்தவன்.அமர என்பது மலை நாடு, பர்வதப் பிரதேசம் என்று புராணங்கள்
சொல்லும்
வேற்றுமை
ஹமுராபி
‘கண்ணுக்குக்
கண், பல்லுக்குப் பல்’லென்னும் பழிவாங்கும் சட்டத்தைச்
சொல்கிறான். மநுவோ ஆளுக்குத் தக,நேரத்துக்குத்
தக, சூழ்நிலைக்குத் தக தண்டனை கொடு என்று
ஏழாம் அத்தியாயத்தில் சொல்கிறான். பசுவின் கன்று இறந்ததால் அதுபட்ட துயரத்தைக்
கண்டு தன் மகனையே பலி கொடுத்த மநு நீதிச் சோழன் கதை ஹமுராபி சட்டம் போலக் காணப்பட்டாலும் அனைவரும்
தடுத்தும் மன்னன் செய்த செயல் அது. இறுதியில் அனைவரும் உயிர் பெற்று எழுந்த
அற்புதமும் நிகழ்ந்தது.
TAGS– ஹமுராபி, மநு, சட்டப்புத்தகம், ஒற்றுமை, சூரிய தேவன்
WRITTEN by London Swaminathan swami_48@yahoo.com Date: 24 December 2018 GMT Time uploaded in London – 9-16 am Post No. 5824
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
statue of Nikitin
இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதன் மெகஸ்தனீஸ், சீன யாத்ரீகர்கள் யுவான் சுவாங் பற்றியெல்லாம் நாம் அதிகம் படித்திருக்கிறோம். ஆனால் ரஷ்ய-இந்திய உறவுகள் பற்றி அதிகம் அறிந்ததில்லை; இதோ சில சுவையான தகவல்கள்:-
ரஷ்ய மொழியில் நிறைய ஸம்ஸ்க்ருத மொழியின் செல்வாக்கைக் காணலாம். முன்காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் தாவர வகைகள்,பிரணிவகைகளின் குறிப்புகள் நிறைய உள்ளன.
இதன் பிறகு பர்லாம்- ஜோஸப் கதைகளில் புத்தரின் வாழ்க்கை பயன் பத்தப்பட்டுள்ளது.
முதலில் ரஷ்யர்களுக்கு இந்தியாவுடன் நேரடி தொடர்பு இல்லை. எல்லாம் பாரஸீகம் (ஈரான்) மூலமாகவே ஏற்பட்டது.
இந்ந்தியாவின் ஜாதி முறைகள், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன ரஷ்ய நாட்டுப்புற கதைகளில் தாக்கத்தை உண்டு பண்ணின. ஈரானிய ,பல்கேரிய படைப்புகள் இதில் பெரும் பங்காற்றின.
மஹா அலெக்ஸாண்டரின் (The Romance of Alexander by Pseudo Callisthenes) காதல் லீலைகள் என்ற புத்தகத்தில் 11, 12 ஆவது நூற்றாண்டு தொடர்புகள் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து போலந்து, ஹாலந்து நாட்டினர் எழுதிய பழைய பூகோளப் புஸ்த்கங்களிலும் பல விஷயங்கள் உள்ளன.
தொல்பொருட் துறை சான்றுகள்
ரஷ்யாவின் கீவ் (Kiev இப்போது உக்ரைன் நாட்டின் தலைநகர்) கிடைத்த நாணயங்களும், பிற பொருட்களும் இந்திய- ரஷ்யத் தொடர்பை உறுதிப்படுத்தின. அவை எட்டு ஒன்பது நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை.
வால்கா (River Volga) நதியின் முகத்வாரத்திலுள்ள இடில்-கஜரான் (Itil-Kazaran) துறைமுகம் வழியாக நடந்த வணிகத்தை அராபிய வட்டாரங்கள் உறுதிப் படுத்துகின்றன.
14- ஆவது நூற்றாண்டில் இந்திய சுல்தான்கள், ரஷ்யாவுடன் வணிகத்தொடர்பு வைத்தனர். கியாசுதீன் துக்ளக் (1320-25)ஆட்சியில் , அவருடைய ராணுவத்தில், ரஷ்யர்கள் இருந்ததை ‘துக்ளக்நாமா’ என்னும் நூல் குறிப்பிடுகிறது.
ரஷ்ய அரசர் வாஸிலி இவனோவிச்சின் (Vasily Ivanovich) அரசவைக்கு, மொகலாய மன்னர் பாபரின் தூதர் க்வாஜா ஹுஸைன் 1532-ல் வந்ததை நிகனோவ்ஸ்காயா க்ரானிக்கிள் என்னும் நூல் காட்டுகிறது.
இவான் தி டெர்ரிபிள் (Ivan The Terrible, 1533-84) என்ற ரஷ்ய மன்னர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவுடனான வணிகத் தொடர்பு வளர்ந்தது. மாஸ்கோவில் இந்தியப் பொருட்கள் குவிந்தன.
ஓர்ஸ்க்(Orsk) என்னும் இடத்தில்கிடைத்த வெண்கலப் பாத்திரத்தில் 16ம் நூற்றாண்டு குருமுகி லிபி எழுத்துக்கள் காணப்படுகின்றன.
1615-16-ல் இந்திய வணிகர்கள் ஆஸ் ட் ரா கான் (Astrakhan) என்னும் இடத்தில் ரத்தினக் கற்கள், வாசனைத் திரவியங்கள் முதலியவற்றில் வியாபாரம் செய்ததோடு லேவாதேவி (வட்டிக்கு கடன் கொடுக்கும் வியாபாரம்) செய்ததும் தெரிகிறது.
பீட்டர் தி க்ரேட் (Peter The Great, 1689-1725) காலத்திலும் வணிகம் வளர்ந்த செய்திகள் நிறைய உள்ளன.
Voyages Beyond Three Seas by A Nikitin
இந்தியாவுக்கு விஜயம் செய்தது பற்றி (1471-1474)
மூன்று கடல் கடந்த யாத்திரை என்ற நூலில் அபனாஸி நிகிடின் என்பவர் எழுதினார். இதுதான் ரஷ்யாவில் வெளியான இந்தியா பற்றிய முதல் விரிவான நூல். அவர் வால்கா நதிக் கரையிலுள்ள் ட்வேர் (Tver- Kalinin காலினின்) என்ற ஊரைச் சேர்ந்த வணிகர். இந்த நூல் புகழ்பெற்றதால் இதை சோபிஸ்காயா க்ரானிக்கிள் என்ற தொகுப்பில் சேர்த்துவிட்டு அந்த படைப்புகளை, நிகிடின் இறந்த பின்னர் மாஸ்கோவுக்குக் கொண்டு சென்றனர். அந்த அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
அவர் எல்லா வார்த்தகர்களும் செல்லும் வழியில், முதலில் இரானுக்குச் சென்றார். அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணமானார். அவர் எதையும் உன்னிப்பாக கவனிப்பவர். ஆகையால் எந்தெந்தப் பொருட்கள் எங்கு விளைகின்றன, அவற்றின் விலை என்ன, வாசனைத் திரவியங்கள், மிளகு ஆகியன எங்கு அதிகம் கிடைக்கும், குதிரைகளின் விலை என்ன– என்றெல்லாம் எழுதிவைத்தார். அவர் வெறும் வியாபாரி அல்ல. அறிவு வேட்கை உடையவர். ஆகையால் அனைத்துத் தகல்களையும் சேகரித்துப் பதிவு செய்தார்.
கான்ஸ்டாண்டிநோபிளில் உள்ள ஜஸ்டீனியச் சக்ரவர்த்தி சிலையை இந்திய சிலைகளோடு ஒப்பிடுவார். இந்தியப் பண்பாடு, விஜயநகர சாம்ராஜ்யம், பாமினி சுல்தான் ஆட்சி ஆகியன பற்றி அவர் குறிப்பிட்டவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாகும்.
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்
ரஷ்ய அதிபர் நிகிடா குருஸ்ஷேவ் 1955ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அப்போது பிரதமர் நேருவிடம் நிகிடின் (Nikitin) காலம் முதலே நம் இரு நாடுகளும் தொடர்பு கொண்டிருந்தன என்று பெருமை பேசினார்.
அட அப்படியா! அவருக்கு ரஷ்யாவில் உரிய கௌரவம் அளிக்கப்பட்டதா? என்று நேருஜி கேட்டார்.
அட, அதை ஏன் கேட்கிறீர்கள்? அவர் பிறந்த ட்வேர் (Tver) என்னும் ஊரில் அவருக்கு சிலையே வைத்திருக்கிறோம் என்றார் குருஷேவ்.
உண்மையில் சிலை எதுவும் இல்லை!
பின்னர் குருஷேவ் ஒரு போன் அடித்து உடனே நிகிடினுக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யுங்கள்; நேருஜி ரஷ்யா வருவதற்குள் சிலை இருக்க வேண்டும் என்று கட்டளை போட்டார். பின்னர் என்ன?
கம்யூனிஸ்ட் தலைவர் சொல்லுவது போல சிலை வைக்காவிடில் அதிகாரிகளின் தலை அல்லவா போகும்.
இதுதான் நிகிடின் சிலை உருவான வரலாறு
Stamps with Nikitin’simage
சென்னைக்கு வந்த லெபிடேவ்
கல்வித்துறையில் உருவான இந்திய- ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் படைப்புகள் மிகப்பல.
முக்கியமான ஒரு விஷயம் ஜெராஸிம் லெபிடேவ் (Gerasim Lebedev) 1749-1817) வின் ஈடுபாடு ஆகும். இவர் முதலில் வந்தது சென்னை மாநகருக்கு. அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கியதால் கொஞ்சம் தமிழ் கற்றார். ஆனால் பின்னர் கல்கத்தாவுக்குச் சென்று வங்காளி மொழியில் மூழ்கிவிட்டார். ஏற்கனவே பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் தெரிந்த அவருக்கு மொழி ஆராய்ச்சியில் ஈடுபாடு ஏற்பட்டதில் வியப்பு இல்லை.
லெபெடேவ் பிறந்த ஊரிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றவுடன் இசைத்துறையில் ஆர்வம் கொண்டார். தானாகவே வயலின் கற்றுக் கொண்டார். ஒரு இசைக் குழுவில் சேர்ந்து வியன்னா வரை சென்றார். பின்னர் அவர் ஆங்கில ‘பாண்டி’ல் (English Band) சேர்ந்தவுடன் 1785ம் ஆண்டில் சென்னைக்கு வந்தார். அந்தக் குழுவுக்கு அப்போதைய சென்னை மேயர் ஒரு வரவேற்பும் கொடுத்தார்.
ஈராண்டுக் காலம் சென்னையில் தங்கிய அவர் கொஞ்சம் தமிழ் கற்ற பின்னர், கல்கத்தாவுக்குச் சென்று வங்காளி மொழியையும், ஸம்ஸ்க்ருதத்தையும் பயின்றார்.
அவர் பிராமணர்கள் பற்றியும் இந்திய கலாசாரம், மதம் பற்றியும் விரிவாக எழுதினார். அவருடைய நூல்கள்:
A GRAMMAR OF THE PURE AND MIXED EAST INDIAN DIALECTS (1801,LONDON)
AN IMPARTIAL CONTEMPLATION OF THE EAST INDIAN SYSTEMS OF BRAHMINS (1805, ST.PETERSBURG)
A COLLECTION OF HINDUSTANI AND BENGALI ARRIAS
BENGALI DICTIONARY
கலகத்தாவில் கோரக்நாத் தாஸ் என்பவரிடம் வங்காளி மொழியைக் கற்றுக்கொண்டு அவருக்கு வயலினும் ஐரோப்பிய இசையும் கற்பித்தார். முதல் முதலில் இந்திய ராகங்களை மேலை இசைக் கருவிகளில் புகுத்தியவர் லெபிடேவ். ஐரோப்பிய பாணியில் நாடக அரங்கை உருவாக்கி வங்காளி நடிகர்களை நடிக்க வைத்தார். வங்க மொழிப் படைப்புகளை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து வங்காளி-ரஷ்யன் அகராதியையும் வெளியிட்டார். ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் லண்டனில் தங்கி இந்திய மொழிகள் பற்றி நூல் வெளியிட்டார்.
ரஷ்யா சென்ற பின்னர், செயின் ட் பீட்டர்ஸ்பர்க்கில் தேவ நாகரி, வங்காளி லிபிக் அச்சுக்கள் கொண்ட அச்சகம் வைத்து நூல்களைலை எவெளியிட்டார். வங்காளி மொழிக்கு இவர் செய்த சேவையை நினைவு கூறும் முகத்தான் கல்கத்தாவில் இவரது நினைவுப் பலகைகளும் எழுப்பப்பட்டுள்ளன.
1795-ல் ஹிந்து தியேட்டரை (நாடக அமைப்பு) உருவாக்கினார்.
நிகிடின், லெபிடேவ் ஆகியோர் இந்திய பண்பாட்டுக்கு ஆற்றிய சேவை சிறப்பானவை.
ஏசு கிறிஸ்து இந்தியா வருகை
ஏசு கிறிஸ்து இந்திய முனிவர்களிடம் பாடம் கற்றதை தற்கால பைபிளில் வெட்டிவீட்டனர்.அவருடைய 20 ஆண்டு இளமைப் பருவத்தைச் சொல்லாமல் ஏசு, மீண்டும் வந்தார் என்று பைபிள் சொல்கிறது அவர் 12 ஆண்டுகளுக்கு இமய மலையில், முனிவர்களிடம் பாடம் கேட்டதாக நிகலஸ் நோட்டோவிச என்ற ரஷ்ய பயணி எழுதிவைத்துள்ளார். அவர் திபெத்திய நூல்களை இதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளார்.