திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426)

Research Article Written by London swaminathan

 

Date: 7 December 2016

 

Time uploaded in London: 9-50 am

 

Post No.3426

 

 

Pictures are taken by Tamil Conference Booklet.

 

contact; swami_48@yahoo.com

 

(English version of this research article is also posted)

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த காளிதாசனும் சங்கப் புலவர்களும் கடலில் வாழும் திமிங்கிலங்கள் பற்றி அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அவ்வப்பொழுது நாடு முழுதும் உள்ள கடற்கரைகளில் இறந்துபோன திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவதையும், சில நேரங்களில் உயிருடன் கரை ஒதுங்கி தத்தளிப்பதையும் பத்திரிக்கைகளில் படிக்கிறோம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் திமிங்கிலங்கள் நம் நாட்டுக் கரை ஓரமுள்ள கடற் பகுதியில் வந்து சென்ற விஷயங்களைக் காளிதாசன் பாடலும் காளிதாசன் புலவர் பாடல்களும் காட்டுகின்றன.

 

இப்போது அவை நம் நாட்டுக் கடற்பகுதிகளில் வசிப்பதில்லை. நம்மவர்கள் வேட்டையாடி அழித்திருக்கலாம் அல்லது கடல் வெப்ப நிலை மாற்றத்தால் அவை வேறு பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம்.

இதோ காளிதாசன் பாடல்:

 

காளிதாசன் கண்ட அற்புதக் காட்சி இது; திமிங்கிலங்கள் ஏராளமான மீன்களுடன் கூடிய தண்ணீரை உறிஞ்சி, மீன்களை வாயில் வைத்துக் கொண்டு, தலையிலுள்ள ஓட்டை வழியாக நீரைப் பாய்ச்சுவதைக் காளிதாசன் கண்டு மகிழ்ந்துள்ளான். இதை எல்லாம் விமானத்திலிருந்து இராமபிரான், சீதைக்குக் காட்டுவதாக கவி புனைந்துள்ளான் காளிதாசன்.

சசந்த்வமதாய நதீமுகாம்ப: சம்மீலயந்தோ விவ்ருதானனத்வாத்

அமீ சிரோபிஸ்திமய: சரங்ரைரூர்த்வம் விதன்வதி ஜலப்ரவாஹான்

ரகுவம்சம் 13-10

அமீ-இந்த, திமய: – திமிங்கிலங்கள்,  விவ்ருத் ஆனனத்வாத்- – திறந்த வாய்களை உடையதால், சமத்வம் – பிற கடல்வாழ் உயிரினங்களுடன் கூடிய, நதீமுகாம்ப:- ஆற்றின் முகத்வார நீரை,  ஆதாய- எடுத்து, சம்மீலயந்த: – வாய்களை மூடிக்கொள்கின்றன, சரங்க்ரை:- துளைகளுடன் கூடிய தலைகளின் வழியாக நீர்ப்பெருக்கை, ஊர்த்வம்- மேல் நோக்கி, விதன்வந்தி- விடுகின்றன.

(திமிங்கிலங்கள் உண்மையில் மூச்சுக் காற்றை வெளியேற்றவே கடலின் மேல் மட்டத்திற்கு வருகின்றன. அவை மேல் மட்டத்துக்கு வரும்போது வீசும் மூச்சுக் காற்று நீரில் குளிர்ந்து நீர்த்துளி ஆவதாலும், காற்றுடன் கடல் நீர் வீசுவதாலும் தண்ணீர் தெளித்தது போலாகிரறது. மேலும் திமிங்கிலங்களின் நீச்சலாலும் நீர்த்திவலைகள் வெளியே வரும். அதன் தலை ஓட்டையிலிருந்து வருவது மூச்சுக் காற்றுதான்; தண்ணீர் அல்ல என்பது விஞ்ஞான உண்மையாகும்)

தமிழ்க் கடலில் திமிங்கிலங்கள், Whales & Sperm Whale

Whales

இதோ சங்கப் புலவர்களின் திமிங்கிலப் பாடல்கள்:–

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக் கரை ஓரமாக திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றிருக்க வேண்டும். ஏனெனில் திமிங்கிலங்கள் தலையிலிருந்து உயரே பாய்ச்சும் நீரானது, காற்றினால் அடித்துவரப்பட்டு  மீனவர் குடிசைகள் மீது விழுந்ததாகத் தமிழ்ப் புலவர்கள் பாடுகின்றனர். அது மட்டுமல்ல தலையில் அதிக எண்ணையுடன் வரும் SPERM WHALE ஸ்பேர்ம் வேல் – எனப்படும் திமிங்கிலம் பற்றியும் பாடுகின்றனர். இது தவிர சுறாமீன்கள் செய்யும் அட்டூழியங்கள், வலைகளைக் கிழித்துக் கொண்டு வெளியேறுவது ஆகியன பற்றியும் பாடியுள்ளனர். இப்பொழுது தமிழ்நாட்டின் கரை ஓரங்களில் திமிங்கிலங்களைக் காணமுடியாது. எப்போதாவது வழி தவறி, திசை மாறி அடித்துவரப்படும் திமிங்கிலங்களை மட்டுமே பார்க்கலாம்.

 

பேர் ஊர் துஞ்சும்; யாரும் இல்லை;

திருந்துவாய்ச் சுறவம் நீர் கான்று, ஒய்யெனப்

பெருந்தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி

போர் அமை கதவப் புரைதொறும் தூவ,

கூர் எயிற்று எகினம் நடுங்கும் நல்நகர்ப்

…………………

நற்றிணைப் பாடல் 132

 

பெரிய ஊர் உறங்கும் வேளை; தூங்காதவர் யாரும் இல்லை; பெரிய வாயுடைய திமிங்கிலம் தண்ணீரைப் பாய்ச்சும். குளிர்ந்த காற்று ஒய்- என்ற ஒலியுடன் வீசும்;  அந்தக் காற்றில் திமிங்கிலத் தலையிருந்து பொங்கும் நீர் அடித்து வரப்படும். கடலோரமாகவுள்ள மீனவர் வீடுகளில் அது மழைபோலப் பெய்யும்; இரட்டைகதவுகளின் துவாரம் வழியாக அது வீட்டுக்குள்ளேயும் தெரிக்கும்.

Sperm whale

கபிலர் பாடிய நற்றிணைப் பாடல் 291-ல் எண்ணைத் தலையுடைய SPERM WHALE ஸ்பெர்ம் வேல் பற்றிப் பாடுகிறார்:-

 

நீர்பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்

நெய்த்தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு

குப்பை வெண்மணல் ஏறி, அரைசர்

ஒண்படைத் தொஉகுதியின் இலங்கித் தோன்றும்

தண் பெரும் பௌவ நீர்த்துறைவற்கு

……………….

 

இது ஒரு கடற்கரைக் காட்சி; எண்ணைச் சத்தை அதிகமாகக் கொண்ட தலையையுடைய ஒரு திமிங்கிலம்  வழிதவறிப்போய் கடற்கரையோர சேற்றில் சிக்கிக் கொண்டது. அதைச் சாப்பிட பெரிய கொக்குக் கூட்டம் வெண்மணலில் குவிந்துவிட்டன. அது எப்படி இருக்கிறது என்றால் ஒரு அரசரின் படை போல உள்ளது.

 

நற்றிணைப் பாடல் 175-ல் மீன் எண்ணை பற்றிய குறிப்பு வருகிறது. மீன் பிடித்து வந்த பரதவர் (மீனவர்), மீன்களைக் கடற்கரையில் குவித்துவிட்டு பெரிய கிளிஞ்சல்களில் மீன் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுவர் என்று ஒரு புலவர் பாடி இருக்கிறார். இது சுறா போன்ற எண்ணைச் சத்துடைய மீன்களில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணையாக இருக்கலாம். இதுதான் மீனவர்களின் எரிபொருள்.

Sperm Whale

நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்

கொழுமீன் கொள்ளை அழி மணல் குவைஇ

மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய

சிறு தீ விளக்கில் துஞ்சும்……………

 

கம்பனும் கூட திமிங்கில எலும்புக்கூடு பற்றி ஒரு பாடலில் கூறுகிறான்

அண்டமும் அகிலமும் அடைய அன்று அனலிடைப்

பண்டு வெந்தென நெடும் பசை வறந்திடினும் வான்

மன்டலம் தொடுவது அம் மலையின் மேல் மலை எனக்

கண்டனன்  துந்துபி கடல்  அனான் உடல் அரோ

 

தென்புலக் கிழவன்  ஊர் மயிடமோ திசையின் வாழ்

வன்பு உலக்கரி மடிந்தது கொலோ மகரமீன்

என்பு உலப்புற உலர்ந்தது கொலோ இது எனா

அன்பு உலப்பு அரிய நீ உரை செய்வாய் என அவன்

 

துந்துபிப் படலம் , கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

மிகுந்த ரத்தம் வற்றிப் போயிருந்தாலும், ஊழித்தீயில் வெந்தது போன்றும் வான மண்டலத்தைத் தொடுவது போன்றும், கடல் போலப் பரவிக் கிடக்கும் துந்துபி என்னும் அசுரனின் உடல் எலும்புக் குவியலை, ருசியமுக மலையில் கண்டான்; அது வேறு ஒரு மலைபோலக் காணப்பட்டது.

 

அதைப் பார்த்த ராமன் சொன்னான்:- இது என்ன தென் திக்கில் பயணம் செய்யும் எமதர்மனின் வாகனமான எருமைக் கடாவா? திக்குகள் தோறும் உள்ள யானைகள் இறந்து கல்லானதோ! மகரம் என்னும் பெரிய  மீன் இறந்தபின்னர் உலர்ந்து கிடக்கும் எலும்புக்கூடா? என்று வியந்து சுக்ரீவனை நோக்கி உனக்குத் தெரிந்ததைச் சொல் என்றான்.

Whale Bone

உடனே துந்துபி என்னும் அரக்கனை வாலி கொன்ற வரலாற்றைச் சுக்ரீவன் சொன்னான்.

இங்கு வருணிக்கப்படும் மகர மீன் சுறாமீன் அல்ல; பெரிய திமிங்கிலமாகும். மகர என்ற சொல்லை டால்பின், சுறாமீன், திமிங்கிலம் ஆகிய எல்லாவற்றிற்கும் பயன்படுத்துவர்.

 

—subham–

 

ஓரெழுத்து தமிழ் சொற்கள் (Post No.3400)

Compiled by London swaminathan

 

Date: 29 November 2016

 

Time uploaded in London: 10-30 AM

 

Post No.3400

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

தமிழில் ஓரெழுத்துச் சொற்கள் பல உள்ளன. ரங்கூனிலிருந்து வெளியான தமிழ்ப் பிரகாசிகை நூலிலுள்ள மூன்று பக்கங்களை இங்கு வெளியிடுகிறேன்.

 

 

 

-SUBHAM–

 

இந்திய, அமெரிக்க, ஜப்பானிய, சீன கம்பெனிகள் (Post No 3392)

Written  by S NAGARAJAN

 

Date: 27 November 2016

 

Time uploaded in London:4-58 AM

 

Post No.3392

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

நாட்டு நடப்பு

 

இந்திய, அமெரிக்க, ஜப்பானிய, சீன கம்பெனிகள் எவைபயனுள்ள ஒரு பட்டியல்!

.நாகராஜன்

 

இந்திய பொருளாதாரம் சிறந்து உயர்ந்து இந்தியா வல்லரசாவது உறுதி. இதற்கு மக்கள் இந்தியப் பொருள்களையே வாங்கி ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும்.

 

விரிந்து வரும் இந்திய சந்தையை பல நாடுகளும் ஆக்கிரமிக்க எண்ணம் கொள்வது இயல்பே.

 

இந்த நிலையில் இந்திய அமெரிக்க சீன ஜப்பானிய நிறுவனங்கள் எவை என்று தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகி விட்டது.

 

குறிப்பாக சீனா இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எல்லை  மீது தீய பார்வையைக் கொண்டுள்ளது. ஆகவே சீனப் பொருள்களைத் தவிர்ப்பதற்கு இந்தப் பட்டியல் பெருமளவு உதவும்.

பட்டியல் இதோ:

 

Indian companies

 

Micromax  is an Indian company

IBall is an Indian company

HCL is an Indian company

Intex is an Indian company

Karboun is an Indian company

Virgin is an Indian company

Videocon is an Indian company

XOLO is an Indian company

 

Chinese companies

 

Lenovo is a Chinese company

Coolpad is a Chinese company

Gionee is a Chinese company

Huawei is a Chinese company

Xiaomi is a Chinese company

OnePlus is a Chinese company

Alibaba is a Chinese company

ZTE is a Chinese company

Haier is a Chinese company

Vivo is a Chinese company

LeEco is a Chinese company

Oppo is a Chinese company

 

 

Taiwanese companies

 

Acer is a Taiwanese company

HTC is a Taiwanese company

Asus is a Taiwanese company

 

 

American companies

 

Dell is an American company

Apple is an American company

HP is an American company

Motorola is an American company

Microsoft is an American company

 

Canadian company

 

BlackBerry is a Canadian company

Japanese companies

 

Sony is a Japanese company

Toshiba is a Japanese company

Panasonic is a Japanese company

 

Netherlands company

 

Philips is a Netherlands company

 

South Korean companies

 

Samsung is a South Korean company

LG is a South Korean company

 

Finland company

 

Nokia is a Finland company

 

இந்தத் தகவலைத் தரும் நவீன் என்பவர் ஒரு வேண்டுகோளையும் முன் வைக்கிறார் இப்படி:

Please try to use Indian made products as much as possible and ban or do not use any products manufactured by Chinese companies.

 

தகவல் ஆதாரம் TRUTH வார இதழ் (28-10-2016 இதழ்)

 

சிந்திப்போம்; செயல்படுவோம்!

*****

 

 

 

ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்தில் அந்தணரும் வேதமும்! (Post No3383)

Written by S NAGARAJAN

 

Date: 24 November 2016

 

Time uploaded in London: 5-58 AM

 

Post No.3383

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 12

இந்தக் கட்டூரையில் எட்டுத்தொகையில் உள்ள ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து  ஆகிய நூல்களில் வேதம், அந்தணர் பற்றி வரும் சிறப்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன

 

  ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்தில் அந்தணரும் வேதமும் !

 

                      ச.நாகராஜன்

ஐங்குறுநூறு

எட்டுத்தொகை நூல்களில் உள்ள ஐங்குறுநூறு மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகளில் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் 3 அடி  முதல் 6 அடி வரை உள்ள மொத்தம் ஐநூறு பாடல்களைக் கொண்டது.

தோழி ஒருத்தி தலைவனிடம் சொல்லும் பாடலாக அமைவது நான்காம் பாடல். ஓரம்போகியார் என்ற புலவர் பாடியது.

ஆதனையும் அவினியையும் வாழ்த்தி ஆரம்பிக்கும் இப்பாடல் பகைவர்கள் புல்லைத் தின்னட்டும் பார்ப்பார் .வேதம் ஓதட்டும் என்று கூறுகிறது.

வாழி ஆதன் வாழி அவினி                                 

பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக                             

என் வேட்டோளே யாயே யாமே                                     

பூத்த கரும்பின் காய்ந்த நெல்லில்                             

கழ்னி ஊரன்  மார்பு                                                    

பழனம் ஆகற்க என் வேட்டேமே

 

 

இதன் பொருள் ஆதன் வாழ்க! அவினி வாழ்க! பகைவர்கள் புல்லைத் தின்னட்டும். பார்ப்பார் வேதம் ஓதட்டும். என்று விரும்பினாள் தாய்.

கரும்பு பூத்து காய்ந்த நெல் உடைய விளை நிலம் உடையவனின் மார்பு அனைவருக்கும் உரிய சொத்தாக ஆகாமல் (எனக்கு மட்டும்) இருக்கட்டும் என்பது என் ஆசை!

 

அடுத்து 387ஆம் பாடலைப் பார்ப்போம். இதைப் பாடியவர் ஓதலாந்தையார்.

அந்தணர் செவிலியிடம் சொன்னதாக அமைகிறது இந்தப் பாடல்.

அறம் புரி அருமறை நவின்ற நாவில்                       

திறம் புரி கொள்கை அந்தணர் தொழுவல் என்று              

ஓண் தொடி வினவும் பேதையும் பெண்டே                        

கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை                             

இன் துணை இனிது பாராட்டக்                               

குன்று உயர் பிறங்கல் மலல இறந்தோளே             

           

அறத்தைப் புரியும் வேதத்தைச் சொன்ன நாவைக் கொண்ட நல்ல கொள்கையை உடைய அந்தணரை மிக்க மரியாதையுடன் தொழுகிறேன் என்று சொல்லி வளையலை அணிந்த என் மகளைக் கண்டீரா என்று வினவுகின்ற பேதைப் பெண்ணிடம், அவர்,“கேள்! சுரத்திடை (வீணான நிலத்தின் ஊடே செல்லும் வழியில்) சிகரங்கள் உடைய மலையைக் கடந்து அவளைப் புகழும் அவளது இன் துணையுடன் கண்டேன்! என்றார்.

அற நூலான வேதமோதும் அந்தணரை மரியாதையுடன் தொழுவது இங்கு குறிப்பிடப்படுகிறது. அவர் உண்மையை மட்டுமே உரைப்பவர் என்பதால் அவரிடம் தன் மகளைப் பற்றி வினவும் தாயை இப்பாடலில் காண்கிறோம்.

வேதம் உரைக்கும் நா பொய் சொல்லாது அல்லவா!

 

பதிற்றுப்பத்து

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களைக் கொண்ட நூல் இதில் இரண்டு பத்துகள் கிடைக்கவில்லை. மீதம் 80 பாடல்கள் கிடைத்துள்ளன.

பாடல் 74 சேர மன்னனைப் புகழ்ந்து பாடும் ஒரு பாடல்.   

 

கேள்வி கேட்டுப் படிவம் ஓடியாது                        

வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப

 

ஆரம்ப வரிகளிலேயே மன்னனை  கேள்வி கேட்பவன் என்று புகழ்கிறார் புலவர். வேதத்தின் இன்னொரு பெயர் கேள்வி.

 அந்த இன்னொரு பெயரால் வேதம் இங்கு குறிப்பிடப்படுகிறது.

படிவம் ஒடியாது என்பதன் மூலம் எந்த வித விதிமுறைகளையும் விடாது என்பது சொல்லப்படுகிறது 

வேள்வி வேட்டனை என்பதால் விதி முறையின் படி வேள்விகளை இயற்றியவன் சேர மன்னன் என்பது கூறப்படுகிறது உயர்ந்தோர் உவப்ப என்பதால் மேல் உலகில் உள்ளோர் அதனால் உவந்தனர் என்கிறார் புலவர். அதாவது வேள்வியினால் தேவர்கள் மனம் மகிழ்ந்தனர் என்பதை புலவர் வலியுறுத்துகிறார்.

 

ஆக சங்க இலக்கியத்தில் அறம் கூறும் வேத வழியில் நிற்பவன் மன்னன் என்பதும் வேள்விகளை முறைப்படி நடத்துபவன் என்பதும் அப்படிப்பட்ட மன்னனைப் புலவர் புகழ்ந்து போற்றுவதையும் பல இடங்களில் காண்கிறோம்.

 

நமஸ்தே ருத்ர மன்யவ உதோ த இஷவே நம:

நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யாமுத தே நம:

 

என்று கம்பீரமாக கோவிலக்ளிலும் இல்லங்களிலும் இன்று ஓதப்படும் ருத்ரம் உள்ளிட்ட வேத ரிக்குகள் அன்றும் சங்க காலத்தில் மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் பக்தியுடனும் மன்னர்களாலும் புலவர்களாலும் மக்களாலும் போற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதை அனைத்து சங்க இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன.

பரம்பரை பரம்பரையாக தொன்று தொட்டு வழங்கி வரும் வேதம் அதே விதிமுறைகளின் படி இன்றும் ஓதப்பட்டு வருவது, அழியாத ஒரு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் பாரத மக்கள் என்பதை வலியுறுத்துகிறது, இல்லையா?!

********

 

 

வேதமும் அதை ஓதுகின்ற அந்தணரும் உயரிய இடத்தைப் பெற்றிருப்பதை சங்க இலக்கியம் ஒவ்வொன்றும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.

***********

 

மரமும் மேகமும் கொடை வள்ளல்கள்- புலவர்கள் புகழாரம் (Post No.3373)

Written by London Swaminathan

 

Date: 20 November 2016

 

Time uploaded in London: 18-27

 

Post No.3373

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

காளிதாசனும் கம்பனும் வள்ளுவனும் சங்கப் புலவர்களும் கையாளும் உவமைகள் பாரதப் பண்பாடு ஒன்றே என்று காட்டுகின்றன. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை; ஒரே வகையான உவமை. ஆயினும் உலகில் , வேறெங்கும் இந்த உவமைகளைக் காணமுடியாது. மரமும் மேகமும் உலகம் முழுதும் காணப்படும். ஆயினும் பாரதப் புலவர்களுக்கு மட்டுமே அவைகளைப் பார்த்த மாத்திரத்தில் நற்சிந்தனை எழுகின்றது.

 

காளிதாசன் எழுதிய சாகுந்தல நாடகத்தில் கூறுவான்:-

 

பவந்தி நம்ராஸ் தரவ: பலாகமை

நர்வாம்புபிர்தூர விலம்பினோ கனா:

அனுத்ததா: சத்புருஷா: சம்ருத்திபி:

ஸ்வபாவ ஏவைஷ பரோபகாரிணாம்

–சாகுந்தலம் 5-12

பொருள்:-

பழங்கள் நிறைந்த மரம் வளைந்து வணங்கி கீழ்நோக்கி நிற்கிறது. நீர் நிரம்பிய மேகம் விண்ணில் தாழத் தவழ்கிறது. நகரும் பொருளான மேகமும் நிலையான பொருளான மரமும் கூட உதவி கொடுக்கத் தயாராக பணிந்து நிற்கின்றன. நல்லோரும் இப்படித்தான். அவர்களுக்குச் செல்வம் கிடைத்தால் பணிவாக இருப்பர். பணிவே அவர்களுக்கு அணிகலன்.

 

வள்ளுவனும் இதை அழகாகச் சொன்னான்:

பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றார்ச் செல்வம்

நயனுடையான் கட் படின் – குறள் 216

 

ஊர் நடுவில் ஒரு மரத்தில் பழங்கள் காய்த்தால் எப்படிப் பயன்படுமோ அதுபோல நல்லோரிடம் வந்த செல்வம் எல்லோருக்கும் பயன்படும்; எளிதில் கிடைக்கும்.

 

 

புறநானூற்றுப் பாடலில்

கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடலில் பாரியை இகழ்வது போலப் புகழ்கிறார். அங்கும் மேகம் உவமை வருகிறது:-

 

பாரி பாரி என்று பல ஏத்தி

ஒருவர் புகழ்வர், செந்நாப்புலவர்

பாரி ஒருவனும் அல்லன்

மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே

–புறம் 107, கபிலர்

 

பொருள்:-

 

இது என்ன வேடிக்கையாக இருக்கிறது. செந்நாப் புலவர்கள் எல்லோரும் கொடுப்பதில் சிறந்தவன் பாரி, பாரி என்று புகழ்ந்து தள்ளுகிறார்களே. பாரி ஒருவன் மட்டும்தான் உலகத்தைக் காப்பதற்கு உள்ளானோ! மாரியும் (மழையும்) உலகைக் காப்பாற்ற இருக்கிறது! (பாரியை மட்டம் தட்டுவது போலப் புகழ்வது)!

 

தராசு போல இரு

 

நீதி வெண்பா இயற்றிய ஒரு தமிழ்ப் புலவர், தராசு போல இரு என்று ஒரு அருமையான உவமை தருகிறார்:

 

ஆக்கம் பெரியர் சிறியார் இடைப்பட்ட

மீச்செலவு காணின் நனி தாழ்ப — தூக்கின்

மெலியது மென்மேல எழச் செல்லச் செல்ல

வலிதனே தாழுந்துலைக்கு

 

(துலை= துலா = தராசு)

பொருள்:

தராசுத்தட்டில் வைத்து நிறுத்தால் மெல்லீய பொருளுள்ள தட்டு மேலே போகப்போக பாரமான தட்டு கீழே போகும். அது போல, கல்வி, செல்வம் ஆகிய இரண்டிலும் சிறந்த பெரியோர்கள் செருக்குடையோரைக் கண்டால் தாழ்ந்து போவர்.

 

அதாவது நிறைகுடம் தழும்பாது; குறைகுடம் கூத்தாடும்.

 

–SUBHAM—

 

புலி நிகர் புலிட்ஸர்! (Post No.3353)

Written by S NAGARAJAN

 

Date: 14 November 2016

 

Time uploaded in London: 9-08 AM

 

Post No.3353

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

இந்த வார பாக்யா இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

புலிட்ஸர் பரிசுகள் அளிக்கப்பட ஆரம்பித்து நூறு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டிய சிறப்புக் கட்டுரை!

 

புலி நிகர் புலிட்ஸர்!

ச.நாகராஜன்

அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு என்றால் ஒரே ஆனந்தம். தங்கள் பணிக்கான உயரிய அங்கீகாரம் புலிட்ஸர் பரிசு என அவர்கள் கருதுகின்றனர்.

 

பத்தாயிரம் டாலர் பரிசுத் தொகை, தங்க மெடல் இவற்றிற்கெல்லாம் மேலாக அவர்கள் பெறும் பெரும் அங்கீகாரம் உலகிலேயே பத்திரிகைத் தொழிலின் மிகச் சிறந்த பரிசாகும்.

இந்த புலிட்ஸர் பரிசு 1917ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.  சரியாக நூறு ஆண்டுகள் நிறைவடைகின்றன!

 

 

பத்திரிகைத் துறையில் மிகப் பெரும் சாதனையாளரான புலிட்ஸரை ஒரே வரியில் விவரித்து விடலாம். புலிக்கு நிகராகப் பாய்ந்து செய்திகளைப் பிடித்தவர் புலிட்ஸர்.

அவரது வாழ்க்கையே உத்வேகமூட்டும் ஒன்று.

புலிட்ஸர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகருக்கு அருகில் உள்ல  மகோ என்ற இடத்தில்  பிறந்த யூதர். (தோற்றம் 10-4-1847 மறைவு: 29-10-1911).

 

 

அமெரிக்க ராணுவம் ஆள் எடுக்கிறது என்று கேள்விப் பட்டு ராணுவத்தில் சேர அமெரிக்கா வந்தார். ராணுவத்தில் பணியாற்றினார். போர் முடிந்த பின்னர் நியூயார்க் திரும்பினார்.

அவர் இள வயதில் செய்யாத வேலை இல்லை. அவருக்குக் கண் பார்வை வேறு மங்கல். அமெரிக்கா வந்த போது அவருக்கு ஆங்கிலமும் தெரியாது. 17 வயது இளம் வாலிபர்!

வெய்ட்டராகப் பணிபுரிந்தார். மூட்டைகளைத் தூக்கினார். கல்லறையில் சவப்பெட்டியை வைப்பதற்காகக் குழிகளைக் கூட வெட்டினார்.

 

 

ஜெர்மானிய பத்திரிகை ஒன்றிற்கு நிருபர் தேவைப் படுகிறார் என்று கேள்விப்பட்டு அதில் சேர்ந்தார். பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டவுடன் தனக்கு எது உகந்தது என்பதை நொடி நேரத்தில் முடிவெடுத்தார்

 

பத்திரிகை. ஆம், பத்திரிகைத் தொழில் தான் தனது சுவாசம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

செய்தி என்றால் அவருக்கு வெல்லக் கட்டி. ஒரு செய்தியை எப்படித் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும், அதில் எது முக்கியம், மக்கள் எதை விரும்புவர், அதை அவர்களுக்கு என்ன சொற்களில் எப்படித் தர வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு அத்துபடியானது.

 

36ஆம் வயதில் சொல்லும்படியாகச் சற்றுப் பணம் சேர்ந்தது.

அப்போது 1883ஆம் ஆண்டில் நியூயார்க் வோர்ல்ட் என்ற பத்திரிகை விற்பனைக்கு வந்தது. அது வருடத்திற்கு இமாலய நஷ்டம் என்று சொல்லக் கூடிய நாற்பதினாயிரம் டாலர் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.

தைரியமாக அதை வாங்கினார் அவர்.

 

அவர் கைக்குப் பத்திரிகை வந்தவுடன் பத்திரிகை செய்தியே ஒரு புது வடிவம் கொண்டது.

சம்பிரதாயம் தூக்கி எறியப்பட்டது.சின்னச் சின்ன எழுத்துக்களில் சுவாரசியமின்றி தரப்பட்ட செய்திகள் புது வடிவம் கொண்டன! முதன் முதலாக முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி என்று ஒன்றை பெரிய கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்தார்.

என்ன விஷயம் என்பதைப் பளிச்செனப் பார்த்த மக்கள் மிக்க ஆவலுடன் பத்திரிகையை வாங்கிப் படித்தனர். நாளுக்கு நாள் சர்குலேஷன் கூடியது.

 

 

பளீர் தலைப்புகள், விறுவிறுப்பான செய்திகள், வேகமான எழுத்தோட்டம், உடனடிச் செய்தி என ஏராளமான அம்சங்களைத் தாங்கிய பத்திரிகை 15000 பிரதிகள் விற்பனை என்பதிலிருந்து ஒரு லட்சத்திஐம்பதினாயிரம் என்ற அளவுக்குத் தாவியது.. 1883இல் பிரதிகள் ஆறு லட்சம் என்ற அளவுக்கு உயர்ந்தது.

சக போட்டியாளர்கள் அரண்டு போயினர்.

பத்திரிகை தர்மத்தை அவர் மீறுகிறார் என வயிற்றெரிச்சலுடன் கூவிப் பார்த்தனர்.

 

 

எல்லோ ஜர்னலிஸம் (மஞ்சள் பத்திரிகை) என்ற புது வார்த்தையே புலிட்ஸரால் தான் உருவானது.

மக்கள் புலிட்ஸரின் ஸ்டைலுக்கு மகத்தான ஆதரவு தரவே எதிர்ப்புகள் அமுங்கிப் போயின.

 

பத்திரிகைத் துறையில் நேர்மையான சுதந்திரம் வேண்டும் என்று அவர் முழங்கினார். வெறும் செய்திகளை மட்டும் தருவது பத்திரிகையாளரின் வேலை இல்லை, செய்திகளின் ஆதாரத்தைத் தூண்டித் துருவிக் காண வேண்டும், அத்தோடு துப்பறிந்து ஆராய்ந்து என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் இன்வெஸ்டிகேடிவ் ரிபோர்டிங் என்பதைத் தொடங்கினார்.

இதனால்  அரசியல்வாதிகள் உட்பட்ட பலருக்கும் சங்கடம் ஏற்பட்டது. எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும் அவர் விடவில்லை.

43ஆம் வயதில் அவரது பார்வை முற்றிலுமாகப் போனது. தனது நியூயார்க் மாளிகையிலிருந்தே அவர் பத்திரிகை நிர்வாகத்தை நடத்தலானார்.

 

 

அவர் நியமித்த காப் என்ற  எடிட்டருக்கும் அவருக்கும்  தலையங்கம் சம்பந்தமாக அவ்வப்பொழுது கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. கடைசியில் அவருக்கு சுதந்திரத்தைத் தந்து தன் கருத்துக்களையும் அவருக்குத் தெரிவிக்கலானார்.

 

தனது தகவல் தொடர்புக்கு ஒரு ரகசிய கோடிங் முறையை அவர் தயாரித்தார். அந்த குறிப்பிட்ட இரக்சிய கோடிங் அமைப்பிற்காக 20000 வார்த்தைகள் அடங்கிய ஒரு பெரிய புத்தகமே உருவானது.

64ஆம் வயதில் கான்ஸர் நோயினால் அவர் இறந்தார்.

அவரது உயிலில் எழுதப்பட்ட விருப்பத்தின் படி  அவர் பெயரால் 1917இல் இன்வெஸ்டிகேடிவ் ரிபோர்டிங் உள்ளிட்ட பத்திரிகைத் துறைகளுக்கு பரிசுகள் அளிக்கப்படலாயின..

 

 

சுவையான சம்பவங்கள் நிரம்பிய வாழ்க்கை அவருடையது.

ஒருமுறை புரபஸர் தாமஸ் டேவிட்ஸன் என்பவர்,” மிஸ்டர் புலிட்ஸர், நீங்கள் நிருபர்களிடம் மிகவும் மிருதுவாகப் பேசி நடந்து கொள்கிறீர்கள். ஆனால் எடிட்டர்களிடமோ மிகவும் கடுமையாக இருக்கிறீர்கள், இது சரியா என்று கேட்டார்.அதற்கு உட்னே புலிட்ஸர்,”நல்லது, அது ஏனென்றால் ஒரு நிருபர் என்பவர் எனது நம்பிக்கையாக இருக்கிறார். ஆனால் எடிட்டரோ எனக்கு ஏமாற்றம் அளிக்கிறார்” என்று பதில் அளித்தார். அவரது

இந்த பதில் முத்திரை பதிலாக பத்திரிகை உலகில் பேசப்படுகிறது.

 

புலிட்ஸர் அமெரிக்க ஜனாதிபதியை விட உலகம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த மக்களின் சக்தியும் அவர்களின் கருத்துச் சுதந்திரமும் என்பது வேற்று கிரகங்களில் வசிப்பவர்களிடம் கூட செல்வாக்கைச் செலுத்தும் என்று எண்ணினார். இது சம்பந்த்மாக பிரம்மாண்டமான ஒரு விளம்பர போர்டைக் கூட நியூ ஜெர்ஸியில் நிறுவ அவர் விரும்பினார். அந்த விளம்பரத்தை செவ்வாய் கிரகத்தில் இருப்பவர் கூடப் பார்க்கும் படி பெரிதாக அமைக்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.

 

 

தன் எண்ணத்தை அவர் அனைவரிடமும் சொன்ன போது இதை எப்படி மறுப்பது என்று யாருக்கும் புரியவில்லை. ஒரே ஒருவர் மட்டும் மெதுவாகக் கேட்டார் இப்படி: “சரி சார்! அதை எந்த மொழியில் எழுதுவது, அதைச் சொல்லுங்கள்!”

அவ்வளவு தான், புலிட்ஸரால் பதில் சொல்ல முடியவில்லை. செவ்வாய் கிரக வாசிகளின் மொழி யாருக்குத் தான் தெரியும்?!

 

அமெரிக்க பத்திரிகை வரலாற்றில் புலிட்ஸரின் பெயர் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டதற்கான காரணம் : “பொது ஜன சேவையில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுஜனங்களின் ஒழுக்க நெறிகளை உயர்த்துவதை ஊக்குவிப்பதற்காகவும், அமெரிக்க இலக்கியத்தை மேம்படுத்தவும், கல்வியை மேம்படுத்தவும் அவர் புலிட்ஸர் பரிசுகளை நிறுவியது தான்!

 

*********.

 

 

 

 

 

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த பரிசு! (Post No.3326)

Written by London Swaminathan

 

Date: 6  November 2016

 

Time uploaded in London: 20-54

 

Post No.3326

 

 

Pictures are taken from various sources.

 

contact; swami_48@yahoo.com

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் – என்பது திரைப்படப் பாடல் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது இல்லை; அது மனுஸ்மிருதி சொல்லும் வாசகம் என்பது இன்று தெரிந்தது.

 

108 ஆண்டுகளுக்கு முன் பேட்fஈல்டு ( REV J E PADFIELD ) என்னும் பாதிரியார், வீட்டில் இந்துவின் நெறிமுறைகள் ( Hindu at Home) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டார். அதில் திருமணம் பற்றிப் படிக்கையில் பல சுவையான விஷயங்கள் கிடைத்தன. ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரையில் விளக்கமாக கொடுத்துவிட்டேன். அதிலிருந்து சில சுவையான பகுதிகளை மட்டும் தருகிறேன்.

 

காதல் திருமணம் ஓகே’ (OK)!

 

மனு எட்டு வகையான திருமணங்கள் பற்றிச் சொல்லுகிறார். இதை தொல்காப்பியரும் அப்படியே தமிழர் திருமண வகை என்று சொன்னதை முன்னர் எழுதிய தொல்காப்பிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தந்தேன்.

 

ஒரு பெண் தானாக கணவனைத் தேடுவதோ, ஒரு ஆண் தானாக பெண்ணை நெருங்கி மணம் முடிப்பதோ தவறில்லை என்று சொல்கிறார் மனு:-

 

மூன்றாவது அத்தியாயத்தில் திருமணம் பற்றி நிறைய எழுதியுள்ளார். பத்துவகையான குடும்பங்களில் பெண் எடுக்கக்கூடாது என்று குஷ்டம், க்ஷயரோகம், கால்,கை வலிப்புள்ள குடும்பங்கள்  பட்டியலைத் தருகிறார். அத்தோடு உடலில் அதிக முடியுள்ள குடும்பங்களிலும் திருமணம் செய்யக்கூடாது, வேத ஆசார அனுஷ்டானங்கள் இல்லாத குடும்பங்களையும் தவிர்க்கவேண்டும் என்பார்.

மனு நீதி பற்றிப் பேசியவுடன் சில திராவிடங்களும் மார்கசீயங்களும் பொங்கி எழும். அவர்கள் எல்லோரும் செத்த பாம்பை அடிக்கும் வீரர்கள் என்பது மனு நீதி நூலைப் படிப்பவர்களுக்குப் புரியும். ஏனெனில் மனு சொல்லும் விதிகளை பிராமணர்களே பின்பற்றுவது இல்லை; முன்னர் பின்பற்றியதும் இல்லை என்பது இதை முழுக்கப் படித்தால் விளங்கும். ஒரு வேளை நமக்குத் தெரிந்து மனு நீதியைப் பினபற்றிய ஒரே ஆள் மனுநீதிச் சோழனாகத்தான் இருக்கும்.!!

 

வாயாடிப் பெண்ணையும், சிவப்புத் தலை முடி உடைய பெண்ணையும். திருமணம் செய்யக்கூடாது. அதிக முடியோ, முடியே இல்லாமலிருந்தாலோ கல்யாணம் செய்யக்கூடாது. வியாதியுடையவர், உடலுறுப்புகள் கூடுதலாக இருப்பவரையும் மணம் முடிக்காதே என்பார் (3-7, 8)

 

அன்ன நடை அல்லது யானை போல அசைந்தாடும் நடை யுடைய பெண்ணை, அழகிய முடி, பல் வரிசையுடைய பெண்ணை திருமணம் செய்யலாம் என்பார்.(3-10)

 

சகோதர் இல்லாத பெண் அல்லது ஊர் பேர், குலம் கோத்திரம் தெரியாத தந்தையுடைய பெண்ணையும் தவிர்க்கவும் என்கிறார்(3-11)

 

இரண்டாவது மனைவி

அவரவர் முதல் மனைவியை சொந்த ஜாதியில் கட்டலாம்; ஆசை காரணமாக மேலும் மனைவி வேண்டுமானால், ஜாதி வரிசைப்படி திருமணம் செய்யலாம் (1.பிராமணர், 2.அரசர் குலம், 3.வணிகர் குலம் என்பது வரிசை) (3-12)

 

ஒரு பெண் பருவம் அடைந்தவுடன் மூன்றாண்டுகளுக்குக் காத்திருக்கலாம். அதற்குப் பின் அவள் தனக்குரிய தகுந்த ஆடவனைத் தேடலாம். தந்தையே முன்வந்து மணம் முடிக்காதபோது அவளே ஒருவரைத் திருமணம் செய்வதில் தவறில்லை. அவளை திருமணம் செய்ய முன்வரும் ஆடவனும் தவறிழைக்காதவனே (9-91)

 

ஆனால் அப்படித் தன் காதலனுடன் செல்லுகையில் தந்தை, தாய், சகோதரர் கொடுத்த நகையுடன் ஓடிவிடக் கூடாது. அப்படிப் போனால் அந்தப் பெண் திருடி ஆவாள் (9-92)

 

முப்பது வயது ஆண் 12 வயதுப் பெண்ணையும், 24 வயது ஆண் 8 வயதுப் பெண்ணையும் மணக்கலாம்.(9-94)

 

(எனது கருத்து:- மனு தர்மத்தில் வேத காலத்தில் இருந்த பெண் சுதந்திரம் பல பாடல்களில் வருகிறது ஆனால் இங்கே எட்டு வயதுப் பெண் திருமணம் பற்றிச் சொல்லுவது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஆகையால் ஒரிஜினல் மனு ஸ்மிருதியுடன் அவ்வப்போது சில பிற்கால விதிகளும் இடைச் சொருகலாக வந்தன என்று கொள்ளுவதே பொருத்தம்)

 

 

கற்பு என்பது இருவருக்கும் பொதுவானது; ஆணும் பெண்ணூம் ஒருவருக்கொருவர் விசுவாசமாக இருக்க வேண்டும். இருவரும் சாகும் வரை பிரியக்கூடாது (9-101, 102)

 

கடவுள் கொடுக்கும் பரிசு

 

பெண் என்பவள் கடவுள் கொடுக்கும் பரிசு; ஏதோ தானாக முன்வந்து எடுத்துக் கொண்டதாக எண்ணக்கூடாது. மனைவியை எப்போதும் ஆதரித்து கடவுளைத் திருப்தி செய்ய வேண்டும் (9-94/96)

 

எப்போது விவாக ரத்து செய்யலாம்?

 

கணவன் ஏதேனும் கடமையை நிறைவேற்றப் போயிருந்தால் மனைவி 8 வருடம் வரை அவனுக்காக காத்திருக்கலாம்; உயர் படிப்புக்குப் போயிருந்தால் 6 வருடங்களும், சுற்றுலா போயிருந்தால் 3 வருடங்களும் அவனுக்காக காத்திருக்கலாம்.

(அதற்குப் பின்னும் வராவிட்டால் அவள் வேறு ஒருவரை மணம் முடிக்கலாம் என்பது கருத்து)

 

வெறுப்பை  கொட்டும் மனைவியை ஓராண்டு பொறுத்துக் கொள்ளலாம்; பின்னர் அவளை விட்டு நீங்கலாம். குடித்துவிட்டுக் கூத்தாடும் மனைவி, கணவனை அடிக்கும் மனைவி, ஊதாரியாகச் செலவு செய்யும் மனைவியை உடனே விட்டுவிடலாம். (9- 76/80)

மனைவி மலடியாக இருந்தால் 8 வருடங்களுக்குப் பின்னரும், பிறந்த குழந்தைகள் எல்லாம் இறந்துவிட்டால் 10 வருடங்களுக்குப் பின்னரும், புதல்விகளை மட்டுமே பெற்றெடுத்தால் 11 வருடங்களுக்குப் பின்னரும் பிரியலாம். ஆனால் திட்டித் தீர்க்கும் மனைவியை உடனே விட்டுவிடலாம் (9-81)

மனு ஸ்மிருதியின் மொழிபெயர்ப்பு தமிழிலும் கிடைக்கும். இங்கே பிரிட்டிஷ் லைப்ரரியில் பல பதிப்புகள் உள்ளன. திருலோக சீதாராம் எளிய நடையில் மொழி பெயர்த்துள்ளார். பெண்களை மனுஸ்மிருதி போற்றுவது போல உலகில் பழங்கால இலக்கியம் எதுவும் போற்றியதில்லை. நாமே படித்துப் பார்த்தால் அதைக் கண்டு வியப் போம்.

 

பிராமணர்களுக்கு எவ்வளவு சலுகை தருகிறதோ அந்த அ ளவுக்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கிறது. அதாவது எளிதில் பின்பற்றமுடியாத கடுமையான விதிகள். இதை யார் எந்தக் காலத்தில் பின்பற்றினார்கள் என்று நான் எண்ணுவேன். ஆகையால் மனுஸ்மிருதியில் ஏதேனும் ஒன்றிரண்டு ஸ்லோகங்களை மட்டும் மேற்கோள் காட்டும் வெள்ளைத் தோல் அறிஞர்கள், திராவிடங்கள், மார்கசீயங்கள் சொற்களை நம்பாமல் மெய்ப்பொருள் காண்பதறிவு.

 

 

-சுபம்–

புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 1 (Post No.3311)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 2  November 2016

 

Time uploaded in London: 5-17 AM

 

Post No.3311

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 4

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 1

 

                       BY ச.நாகராஜன்

                            

 

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான புறநானூறு 158 புலவர்களால் பாடப்பட்ட 4  அடி முதல் 40 அடிகள் வரி கொண்ட நானூறு பாடல்களைக் கொண்ட அழகிய நூல். இதில் சங்க காலத் தமிழர்களின் பொதுவான வாழ்க்கை முறை, நம்பிக்கை, சடங்குகள் ஆகியவற்றைக் காணலாம். முக்கியமாக தமிழர்களின் வீரம், அனைவரும் வாழ வேண்டும் என்ற மிகச் சிறந்த உயர்ந்த கொள்கை, கல்வி, கொடை, அறப் பண்புகள் ஆகியவை பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம். மன்னர்களைப் பற்றிய வியத்தகு செய்திகள் சுவையானவை. அதைப் பாடியவர்களோ தமிழின் அருமைச் செல்வங்கள் என்பதையும் உணரலாம்.

 

 

மிக உயரிய பண்புகள் உடையவர்களே மன்னனாக இருக்க முடியும் என்பதும் அவனது அறம் கூறும் அவையில் ஆன்றவிந்தடங்கிய  கொள்கைச் சான்றோருக்கே முதலிடம் என்பதும், ப்ழி எனின் உயிரையும் கொடுத்து அதை நீக்குவர், புகழ் எனின் உலகையும் கொடுத்து அதைக் கொள்வர் என்பன போன்ற் செய்திகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

அந்தப் பழைய காலத்தில் அந்தணருக்கும் அவர்க்ள் ஓதும் ஆதிநூலாம் வேதத்திற்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.ஏராளமான யாகங்கள் மக்களின் நலனுக்காக மன்னனால் செய்யப்பட்டதையும் பாடல்கள் தெரிவிக்கின்றன.

மன்னர்களைப் பற்றிய செய்திகளைத் தனிக் கட்டுரைகளில் படிக்கலாம்.

நமது ஆய்வுக்கான கருப்பொருளுக்கு உரித்த பாடல்கள் என்ற விதத்தில் புறநானூறில் 2,15,26,93,166,224,361,362,400 ஆகிய ஒன்பது பாடல்கள் உள்ளன. இரு பாடல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

வேதம் அந்தணர் பற்றிய செய்திகளை மட்டும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

 

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்

நாஅல் வேத நெறி திரியினும்

திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி

நடுக்கின்றி நிலியரோவத்தை – அடுக்கத்து

சிறுதலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை

அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்

முத்தீ விளக்கின் துஞ்சும்

பொற்கோட்டு  இமயமும் பொதியமும் போன்றே!

புறநானூறு பாடல் 2 (வரிகள் 17 முதல் 24 முடிய)

முரஞ்சியூர் முடிநாகராயர்  சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப் புகழ்ந்து பாடிய பாடலில் வரும் வரிகள் இவை.

பால் புளிக்கலாம். பகல் இரவாகலாம் நான்கு வேத நெறியும் திரிந்து போகலாம், ஆனால் உன்னைச் சேர்ந்தோர் மாற மாட்டார்கள். ஒழியாது நெடுங்காலம் விளங்கி துளக்கமின்றி நிற்பாயாக! சிறிய தலை, பெரிய கண் கொண்ட பெண் மான்கள், அந்தணர்கள் அந்தி வேளையில் செய்யும் கடமையில் ஆகுதியைச் செய்யு எழும் முத்தீ விளக்கில் உறங்கும். பொற்சிகரங்களை உடைய இமயமும் பொதியமும் போல நீ நீடூழி வாழ்வாயாக!

இதில் வேதநெறி ஒருநாளும் திரிந்து போகாது என்பதையும் அந்தணர் மாலை சந்தியாகாலத்தில் ஆற்றும் கடமையைப் பற்றியும் அழகுறச் சொல்கிறார் புலவர். ஆகுதியைச் சொரியும் முத்தீ பற்றிய செய்தியும் இங்கு சொல்லப்படுகிறது. இமயமும் பொதியமும் ஒரே பாடலில் அடுத்தடுத்து வருவது சங்க இலக்கியம் சுட்டிக் காட்டும் பாரத தேச ஒருமைப்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறது.

பொதியமும் ஆல்ப்ஸும் போல் வாழ்க என்று சொல்லவில்லை. ஒரே தேசத்தில் இருக்கும் போற்றப்படத் தக்க இரு மலைகள் நீடூழி காலம் இருப்பது போல நீ புகழுடன் வாழ்வாயாக என்கிறார் சங்கப் புலவர். அவர் நாக்கு தங்க நாக்கு. அந்த மன்னவன் அழியாமல் இன்றும் நம் உணர்விலும் உயிரிலும் தமிழ் வழியே  கலந்து நிற்கிறான்!

பண்டு தொட்டு இருந்து வரும் புகழத் தக்க நல்ல பழக்கங்களே உண்மையே பேசும் புலவர் நாக்கில் வந்து துள்ளி விழும் என்பதற்கான எடுத்துக்காட்டுப் பாடலும் ஆகும் இது!

இந்தப் பாடலில் ம்காபாரத சம்பவமும் வருகிறது. அதை ஆய்வின் உரிய இடத்தில் காண்போம்.

இன்னொரு பாடலைக் காண்போம்:

பாடல் 93இல்  வரும் வரிகள் இவை:

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புற் பரப்பினர் (வரிகள் 7,8)

இங்கு அறத்தை விரும்பிய கொள்கையை உடைய நான்குமறைகளை உடைய அந்தணர் நல்ல கூற்றிலே பொருந்திய பசுமையான தர்ப்பைப் புல்லைப் பரப்பினர் என வருகிறது.

அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தைப் போற்றிப் பாடும் பாடலில் வரும் வரிகள் இவை.

அந்தணர்கள் வாழ்க்கை என்பதே அறத்தைப் போற்றி கடைப்பிடிக்கும் வாழ்க்கை என்பது அந்தக் காலத்திலேயே தர்ப்பையைப் பயன்ப்டுத்தும் பயன்பாடு இருந்ததும் இதிலிருந்து தெரிய வருகிறது.

இன்றும் அந்தணர் பவித்ரம், கூர்ச்சம் ஆகிய தர்ப்பையிலான விசேஷ பசும்புல்லைப் பயன்படுத்துவது தொன்று தொட்டு இருந்து வரும் பழைய பண்பாட்டுச் சடங்குகள் அறுதலின்றித் தொடர்கிறது என்ற வியப்பூட்டும் செய்தியை விளக்குகிறது.

இந்த அந்தணர், அற வாழ்க்கை, தர்ப்பைப் பயன்பாடு என்பதெல்லாம் தமிழர் வாழ்க்கை ஏற்றுக் கொண்ட ஒரு அங்கம். அது பொய்யில் புலவர்கள் போற்றும் பொருளாக இருந்ததையும் சங்க இலக்கியம் உணர்த்துகிறது.

 

இரண்டு பாடல்களிலேயே சில வரிகளிலேயே இவ்வளவு செய்திகள். இன்னும் சில பாடல்களை அடுத்துக் காண்போம்.

-தொடரும்

குறிப்பு: சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் (1950இலிருந்து) எழுந்த விளக்கவுரைகளில் பெரும்பாலானவை ஒரு விளக்கத்தையும் தராது என்பதை சுலபமாக பழைய உரைகளை ஒப்பிட்டுக் கண்டு விடலாம். இதை ஒரு செயல்பயிற்சியாக வைத்து பல உரைகளையும் ஒப்பு நோக்கி ஆராய்பவர் விளக்கவுரைகளை எழுதுபவரின் ‘அறிவை’ நன்கு அறிய முடியும் என்பது திண்ணம். பாடலை நாமே படிப்பது எப்போதுமே பயன் தரும். வல்லார் வாய் விளக்கம் கேட்டால் அது உட்பொருளையும் கண்டுணர வழிவகை செய்யும்..

 

 

தினமணி ரகசியம்: திருடனுக்கு தேள் கொட்டிய கதை! (Post No.3298)

18-05-1996_din_001_cty_mds

Written  by London Swaminathan

 

Date: 28 October 2016

 

Time uploaded in London: 18-59

 

Post No.3298

 

Pictures are taken from various sources; thanks

 

திருடனுக்கு தேள் கொட்டினால் என்ன ஆகும்? சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. கூச்சல் போட முடியுமா? அப்படிப் போட்டால் ‘உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்பது போல, தேள் கொட்டிய கடுப்புடன், ஆட்கள் அடிக்கும் கடுப்பும் சேர்ந்து விடும்.

 

இதே போல பத்திரிக்கைகளில் தவறு நேர்ந்தால் சில விஷயங்களில் “திருத்தம்” என்று போடுவோம். இன்னும் சில விஷயங்களில் திருத்தம் போடாமலிருப்பதே மேல். அதாவது தேள் கொட்டிய திருடன் போல மௌனமாக இருந்து விடுவோம்.

நான் 16 ஆண்டுக்காலத்துக்கு மதுரை தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராகவும்(SENIOR SUB EDITOR)  5 ஆண்டுக் காலத்துக்கு மேல் பி பி சி தமிழோசையில் ப்ரொட்யூசராகவும் (PRODUCER,BBC WORLD SERVICE) வேலை பார்த்தபோது நிறைய சுவையான அனுபவங்கள் உண்டு. திடீர் திடீரென சில நினைவுகள் வரும்போதெல்லாம் அவைகளை எழுதுகிறேன். முன்னர் கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்,  A N சிவராமனின் லவ் லெட்டர் நோட்டு என்றெல்லாம் சில கட்டுரைகள் எழுதினேன். இந்த பிளாக்கில் நேரம் கிடைக்கும்போது வாசியுங்கள்

 

 

ஒரு முறை சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் என்பதற்குப் பதிலாக, கேஸ் காலி புரம்

 

என்று வெளியாகிவிட்டது. மறுநாள் எங்கள் சப் எடிட்டர்களில் ஒருவரே கண்டுபிடித்து செய்தி ஆசிரியர் வெ.சந் தானத்திடம் காட்டினார். பேசாமலிருப்பதே உத்தமம், திருத்தம் எதுவும் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

 

 

இன்னொரு தடவை இதைவிட மோசமான ஒரு தவறு நேர்ந்தது. குன்றக்குடி அடிகளார் என்பதற்குப் பதிலாக, குறக்குன்டி அடிகளார்

என்று அச்சாகிவிட்டது. அப்போதும் திருத்தம் வெளியிடக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. வெறும் இடமாறு தோற்றப் பிழைதான்! ஆயினும் அர்த்தம், அனர்த்தம் ஆகிவிட்டது.

 

 

பாதிக்கப்பட்டவர்களும் திருத்தம் வெளியிடச் சொல்லி ஆட்சேபணை கிளப்பவில்லை. அவர்களைப் பொருத்தமட்டில் இந்த செய்தியை இப்படித் திருத்தி வாசியுங்கள் என்று வெளியிட்டால், அது “எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை” என்று நாமே காட்டிக் கொடுத்ததாகிவிடும் என்பது தெரியும். ஆயினும் இந்தச் செய்தி, அதன் புரூப் PROOF ஆகியன யார் கையில் எல்லாம் போயிற்றோ அவர்கள் எல்லாருக்கும் திட்டும் வசையும் கிடைக்கும். அப்போதுதான் அடுத்த முறையாவது சரியாக படி (புரூப்) திருத்துவர் என்பது தாத்பர்யம்!!

 

இதுதான் திருடனுக்கு தேள் கொட்டிய கதை!

 

MOBILE TEXTS மொபைல் டெக்ஸ்ட்

 

இதெல்லாம் ஏன் திடீரென்று நினைவுக்கு வந்தது என்றால், தினமும் மொபைல் போனில் TEXT டெக்ஸ்ட் அனுப்பும்போது நாம் ஒன்று அடிக்க அதுவாக ஏற்கனவே இருக்கும் சொற்களில் ஒன்றைப் போட்டுவிடுகிறது அவசரத்தில் சரி பார்க்காமல் SEND அனுப்பு என்ற பட்டனை சொடுக்கினால் அது பெரிய தலைவலியாக முடியும். இப்படி நானே சிலருக்கு டெக்ஸ்ட் அனுப்புகையில் மிகவும் அபத்தமான MESSAGE மெஸ்ஸேஜ் போனதுண்டு. பின்னர் VERY SORRY வெரி ஸாரி சொல்லி தப்பித்துக் கொண்டேன்.

 

ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஸ்டைல் புக் STYLE BOOK என்று ஒன்று உண்டு. அதாவது அந்தப் பத்திரிக்கையில் ஊர்ப் பெயரையோ ஆட்கள் பெயரையோ எழுதும் போது இந்தமாதிரி SPELLING ஸ்பெல்லிங்தான் இருக்க

வேண்டும். சில சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பர்.

 

முஸ்லீம்களின் ஒரு பிரிவினர் பெயரை அப்படியே எழுதினால் தமிழில் அபஸ்வரமாக இருக்கும் என்பதால் சன்னிSUNNY முஸ்லீம் என்று எழுதுவோம். இதற்கு இடக்கர் அடக்கல் (EUPHEMISM என்று தமிழில் பெயர். டாய்லெட் போய் வந்தோம் என்று சொல்லுவதற்குப் பதிலாக, நாம் “கால் கழுவி வந்தோம்” என்போம்.

 

பி.பி சி. தமிழோசையில் நான் மயிரிழையில் தப்பித்தார் என்று எழுதியபோது என் ‘பாஸ்’ BOSS சங்கர் அண்ணா, “தம்பி அடுத்த முறை எழுதும் போது நூலிழையில் தப்பினார்” என்று சொல்லுங்கள் என்று சொல்லிக்கொடுத்தார்.

 

மற்றொரு இலங்கைப் பெண்மணி, துப்பாக்கி என்பதற்குப் பதிலாக துவக்கு என்று சொல்லும் போதும் திருத்துவார். பாரிய, பாரதூரமான, அங்குரார்ப்பணம் என்ற சொற்களைப் பயன்படுத்துகையிலும் நல்ல தமிழ்ச் சொற்களைத் தருவார்.

 

இன்னும் பல சுவையான விஷயங்களை நினைவுக்கு வருகையில் தருகிறேன்.

 

-சுபம்–

 

 

பூர்வ ஜன்மத்தை அறிய முடியும்: மனு சொல்லும் செய்தி (Post No.3295)

manus_code_of_law_a_critical_edition_and

Written by London Swaminathan

 

Date: 27 October 2016

 

Time uploaded in London: 20-37

 

Post No.3295

 

Pictures are taken from various sources; thanks

 

 

மனு தர்ம சாத்திரத்தில் உள்ள அதிசயச் செய்திகளை இது வரை நாலைந்து கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்; எல்லாம் என்னுடைய பிளாக்கில் நிரந்தரமாக இடம் பெற்றிருக்கிறது; நிதானமாகப் படியுங்கள். கட்டுரையைக் கண்டு பிடிக்காமல் போனால் எனக்கு ஈ மெயில் e mail அனுப்புங்கள். கட்டுரையின் முகப்பின் என் ஈ மெயில் e mail உள்ளது.

 

‘பூர்வ ஜன்மம் அறியும் உபாயம்’—என்பதை  முதலில் காண்போம்:

 

“நன்னடத்தையும், வேத பாராயணமும், சுய கட்டுப்பாடும் (புலனடக்கம்), அக்னி கார்யமும் உடையோருக்கு தாழ்வு/ வீழ்ச்சி என்பதே வராது (மனு 4-146)

 

“தினமும் வேத பாராயணம், தவம், பிறருக்கு தீங்கு செய்யாமை — ஆகியன இருந்தால் முன் ஜன்மப் பிறவிகளை அறிய முடியும். (4-148)

 

“தினமும் வேத அத்தியயனம் செய்து பூர்வ ஜன்மத்தை அறியும் த்விஜன் (இரு பிறப்பாளன்) நித்திய ஆனந்தம், சதா ஆனந்தம் பெறுவான் (4-149)

 

பூர்வ ஜன்மத்தை அறிதல் பற்றி சுவாமி விவேகாநந்தர் சொன்னதை முன்னர் ஒரு கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். அவரும் கூட பூர்வ ஜன்மத்தை தன்னால் அறிய முடியும் என்றும், ஒரு திரைப்படச் சுருள் போல அவை அனைத்தும் நம் உள்ளே சுருட்டி வைக்கப்பட்டுளது என்றும் ஆனால் கடந்த காலத்தை அறிய தனக்கு விருப்பமில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.

 

பிராமணன் வெங்காயம் சாப்பிடலாமா?

 

“பிராமணர்களைக் கொல்லும் விஷயங்கள்:–வேதத்தைப் படிக்காமல் இருப்பது, ஆசாரத்தைக் கடைப்பிடிக்காமல் இருப்பது, கடமையிலிருந்து தவறுவது, தவறான உணவு வகைகளைச் சாப்பிடுவது- இவையே பிராமணன் மரணம் அடையக் காரணங்கள் (இவை இல்லாவிடில் மரணமில்லாப் பெரு வாழ்வு கிட்டும்) –மனு 5-4

 

“வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காளான் (MUSHROOMS) வகைகள் ஆகியவற்றை இருபிறப்பாளர்கள் (பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்)  சாப்பிடக்கூடாது. –மனு 5-5

 

“மரத்திலிருந்து வரும் சாறு, கன்று போட்ட பசுவின் பால் ஆகியவற்றையும் சாப்பிடக்கூடாது”  5-6

 

இதன் பிறகு மாமிச வகைகளில் எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்ற நீண்ட பட்டியலும் உள்ளது. ஆனால் இரு பிறப்பாளர் என்பதால் க்ஷத்ரியர்கள், வைஸ்யர்களுக்காச் சொன்னதாகக் கொள்ளலாம். ஆனால் யாகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மாமிசத்தை கடவுளுக்குப் படைத்த பின்னர் சாப்பிடலாம் என்றும் ஐந்தாவது அத்தியாயத்தில் கூறுகிறார்.

 

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பிராமணர்கள் உணவு பற்றிச் சொல்லுகையில் முழுக்க முழுக்க மரக்கறி உணவுகளே இடம்பெறுகின்றன. நாயும் கோழியும் புக முடியாத தெருக்கள் பிராம ண ர்களின் அக்கிரகாரம் என்றும் சங்கத் தமிழ் இலக்கியம் செப்பும். இதைப் பார்க்கும்போது சங்க காலத்துக்கு நீண்ட நெடுங்காலத்துக்கு முந்தையது மனு தர்ம சாத்திரம் என்று தெரிகிறது.

அகத்தியர் மாமிசம் சாப்பிட்டார்!

“யாகத்திற்காகவும், உயிரே போய்விடும் என்றபொழுது உயிர் வாழ்வதற்காகவும் பறவைகள், காட்டு மிருகங்களை, பிராமணர்கள் சாப்பிடலாம். அகத்தியர் கூட இதைச் செய்தார்” (5-22)

இதை எழுதும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. என்னுடைய மனைவி வழியில் சொந்தம் உடைய ஒருவர் அடிக்கடி வெளி நாட்டிற்கு அலுவலக விசயமாக வருவார். சனிக்கிழமைகளில் மாலை வரை விரதம் இருப்பார். ஹோட்டல்களில் தங்கினாலும் அமாவாசை தர்ப்பணம் செய்யத் தவறமாட்டார். ஆனால் சந்தியாவந்தனம் முதலியன செய்வதில்லை. ஒரு முறை அவருடன் லண்டனில் Mac Donald மக் டொனால்டில் சாப்பிட நேரிட்டது அவர் Chicken சிக்கன் (கோழி இறைச்சி) ஆர்டர் கொடுக்கப்போனார். உடனே நான் கோபத்துடன் நீங்கள் எப்படி இதைச் செய்யலாம்? என்று கேட்டேன். பின்னர் நீங்கள் செய்யும் உபவாசம், தர்ப்பணம் இவைகளுக்கு எல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விடுமே என்றேன். வாக்குவாதம் வலுத்தது. “அகத்தியர் கூட மாமிசம் சாப்பிட்டிருக்கிறாரே” என்று சொன்னார். அப்போது எனக்கு மனுதர்மத்தில் அகத்தியர் பெயர் இருப்பது தெரியாது. ஆனால் இல்வலன் வாதாபி கதையில் அவர் நர மாமிசம் (வாதாபி ஜீர்ணோ பவ: கதை ) சாப்பிட்டது எனக்கு தெரியும்  உடனே அப்படியே அகத்தியர் சாப்பிட்டதாக வைத்துக்கொள்வோம். அகத்தியர் கடலைக் குடித்தது போல் நீங்கள் குடிக்க முடியுமா? வாதாபி ஜீர்ணோ பவ என்று சொல்லி மனிதனை ஜீர்ணம் செய்தாரே அதைப் போலச் செய்ய முடியுமா?  என்று கேட்டேன். நாங்கள் இருவரும் தமிழில் இப்படி சண்டைபோட்டதைப் பார்த்த வெள்ளைக்காரர்கள் எங்களை முறைத்துப் பார்த்தவுடன் வாக்குவாதத்தை நிறுத்திவிட்டு பேசாமல் சாப்பிட்டோம். அதிலிருந்து  அவர் மீதான மதிப்பு போயே      போய்விட்டது.

 

ஆக அகத்தியர் பெயரை மனுதான் சொன்னாரா அல்லது பிற்கால இடைச் செருகலா என்று தெரியாவிட்டாலும் யாராவது மாமிசம் சாப்பிட்டுவிட்டு, அகத்தியர் பெயரைச் சொன்னால் அகத்தியர் செய்த மற்ற  செயலையும் செய்யச் சொல்லுங்கள்!!

–Subham–