இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 2 (Post No.4213)

Written  by S.NAGARAJAN

 

Date: 15 September 2017

 

Time uploaded in London- 5-25 am

 

Post No. 4213

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

15-9-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 30வது) கட்டுரை

இரஸவாதத்தால் தங்கமாக்கியோர்!

 

இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 2

by ச.நாகராஜன்

 

 

“ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நகர்வதற்கு முன்னர் காத்திரு; அடி எடுத்து வைப்பதற்கு முன்னர் விழியைப் பதி; அனைத்தையும் உற்று கவனி. – நிக்கோலஸ் ஃப்ளாமல்

 

 

   இரஸவாதத்தில் பித்துப் பிடித்து அலைவோர் ஏராளம். இவர்களை நாகத்திலிருந்து வெளீப்படுவதாகச் சொல்லப்படும் நாகமணிக் கல்லைத் தேடி அலைவோருடன் ஒப்பிடலாம்.

     தங்கள் கையில் இரஸவாதப் பொடி இருப்பதாகவும் அதனால் தங்கத்தை “உருவாக்க முடியும் என்றும் கூறும் இவர்கள் தங்கப் பொடியையும் கூடக் காண்பிப்பார்கள்.

ஆகவே தங்கம் பற்றிய சில இரகசியங்களை அனைவரும் அறிந்து கொள்வது ந்ல்லது.

உண்மையான தங்கத்தையும் போலித் தங்கத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

 

     இரஸவாத நிபுணர்களும் பொற்கொல்லர்களும் தங்கத்தின் மீதான ஆசையுடன் ‘தங்கமான துறையில் ஈடுபடுபவர்களும்  தங்கத்தின் தூய்மையைப் பார்ப்பதற்கு என்ன வழியைச் சொல்கின்றனர்? அதைச் சூடாக்கி, உருக்கிப் பார்ப்பதே சிறந்த வழி என்று அனைவரும் ஏகோபித்துக் கூறுகின்றனர்.

 

 

இப்படி உருக்குவதால் தூய்மையற்ற இதர உலோகங்கள் மற்றும் கசடுகள் அகன்று விடும்.

 

  இன்னொரு பழைய வழி தங்கத்தை உரைகல்லில் உரசிப் பார்ப்பது. தங்கத்தையும் அத்துடன் ஒப்பிட வேண்டிய இன்னொரு உலோகத்தையும் உரைகல்லில் உரசிப் பார்த்தால் உடனே நல்ல வித்தியாசம் தெரியும். இதனால் போலிகளைத் தூக்கி எறிந்து விடலாம்.

 

  இன்னொரு வழி – அடர்த்தியை வைத்துக் கண்டு பிடிப்பது. தங்கத்தையும் , தங்கத்தைப் போல உள்ள இன்னொரு உலோகத்தையும் ஒரே எடையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பீக்கரில் நீரை விட்டு அதில் தங்கத்தைப் போட வேண்டும். தங்கம் உடனடியாக நன்கு உள்ளே அமுங்கி மூழ்கி விடும். அப்போது நீரின் மட்டத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் தங்கத்தை எடுத்து விட்டு ஒப்பிட வேண்டிய பொருளை அதே பீக்கரில் போட்டுப் பார்த்து நீர் மட்டத்தைப் பார்க்க வேண்டும். ஒப்பிடும் பொருள் தங்கமாக இருந்தால் அதே மட்டத்தை நீரில் காட்டும்; இல்லையேல் நீர் மட்டம் உயரும்.

 

 

இந்தச் சுலபமான வழியும் போலிகளைக் காட்ட உதவும்.

       தங்கத்தை உருவாக்கும் இரஸவாதிகள் அதை இப்படிப்பட்ட அறிவியல் வழிகளின் மூலம் அது தங்கம் இல்லை என்று சொல்லும் போது நம்ப மறுக்கின்றனர்; அல்லது மிகவும் மன வருத்தம் கொள்கின்றனர்.

 

     தங்கம் போல இருக்கும் ஒரு பளபளப்பான பொருள் நார்டிக் கோல்ட் ((Nordic Gold) இதில் 89% தாமிரம், 5% அலுமினியம், 5% துத்தநாகம், 1% டின்

இதை உருவாக்க முயலும் போது அலுமினியத்தை உருவாக்குவது மிகவும் கஷ்டம்.

 

    இன்னொரு தங்கம் போல இருக்கும் பொருள் கோல்ட் டாம்பாக் (Gold Tombac or Red arsenic Tombac)

இதில் 85% தாமிரமும் துத்தநாகமும் உள்ளது ரெட் ஆர்செனிக் டாம்பாக்கில் 98% தாமிரமும் 2% ஆர்செனிக்கும் உள்ளது.

லெட் ஐயோடின் (Lead Iodine) பார்க்கத் தங்கம் போலவே இருக்கும்.

 

 

இரஸவாதக்கலையில் ஈடுபட்டவர்கள் பல விதமாக தங்கம் இருப்பதாக நம்புகின்றனர்.

கெபர் (Geber)  தங்கமானது நுட்பமான பாதரஸத்தால் ஆனது என்றும் கந்தகம் போன்றவை அதற்கு தங்க வண்ணத்தை அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

 

 

சென் யின் என்னும் சீன இரஸவாதி தனிம மாற்றத்தால் (Tranmutation) தங்கத்தை விட உயர்தரமான சில மூலகக் கூறுகள் அதில் கலந்திருக்கும் என்று கூறுகிறார்.

சில இரஸவாதிகளோ திரவ வடிவத்தில் தங்க திரவத்தை குடித்தே இருக்கின்றனர்.

 

பெரிய இரஸவாதிகள் யாரும் தங்களைச் சாதாரணமான பொற்கொல்லர்கள் சோதனை செய்வதை விரும்பியதில்லை. படாடோபமான அவர்களது பகட்டுக்கு முன் மற்றவர்கள் எம்மாத்திரம்! அப்படி ஒருவர் சோதனை செய்வது தனக்கு இழைக்கும் அவமதிப்பு என்றும் தெய்வ குற்றம் என்றும் கருதினர்.

 

பிரான்ஸை சேர்ந்த பிரபல இரஸவாதியான நிக்கோலஸ் ஃப்ளாமெல் (Nicholas Flamel) 1330ஆம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர்.

புத்தக விற்பனையாளரான நிக்கோலஸ் இரண்டு கடைகளுக்குச் சொந்தக்காரர். சாதாரண எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர் ஒரு நாள் ஒரு கனமான பழைய புத்தகத்தை எடுக்க வேண்டி இருந்தது. அதைத் திறந்து பார்த்தவர் அசந்து போனார். அதில் பல எழுத்துக்கள் மாறி மாறி இருந்தன. பல மொழிகளில் அந்தப் புத்தகம் எழுதப் பட்டிருந்தது.

 

 

நிக்கோலஸிற்கு பல மொழிகள் அத்துபடி. நிக்கோலஸின் மனைவியான பெரெனெல்லி அவரை விட பத்து வயது மூத்தவர். அவரும் இந்தப் புத்தகத்தைப் பார்த்து விட்டு இந்த மர்மமான புத்தகத்தில் உள்ள சங்கேத சொற்களில் இருந்த புதிரை அவிழ்க்க ஐரோப்பா முழுவதும் சுற்றினார். இறுதியில் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஆப்ரஹாம் (Abraham the mage) என்று அவர்கள் கண்டு பிடித்தனர்.

 

   ஆப்ரஹாம் உடல் முழுவதும் தங்க மயமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவர் எழுதிய கோடக்ஸ் (Codex) என்ற புத்தகம் நிக்கோலஸை இரஸவாதத்தில் புகுத்தியது.

  அவருக்கு இறந்தவருடன் தொடர்பு கொள்வதோ அல்லது மந்திர தந்திரங்களோ தெரியாது. ஆனால் அவரது மனைவியோ இதில் வல்லுநர்.

 

இருவரும் இணைந்து கடைசியில் ஒரு வழியாக கோடக்ஸ் புத்தக்த்தில் இருந்த மர்மத்தைக் கண்டு பிடித்துவிட்டனர். நிக்கோலஸின் மனைவி “என்றும் இளமையுடன் இருப்பதற்கான ஒரு மருந்தை கண்டுபிடித்தார்,

 

   ஆனால் அந்த விசித்திரமான இளமை மருந்தைத் தொடர்ந்து அவர்கள் அருந்த வேண்டும். கோடக்ஸ் புத்தகம் கூறும் சரியான வழி முறைப்படி அருந்தாவிட்டால் ஒரு நாளில் ஒரு வருட வயது மூப்பு வந்து விடும்.

 

  இதற்கிடையில் இங்கிலாந்தின் அரசிக்கு உயர் ஆலோசனை கூறும் ஜான் டீ என்பவரை அவர்கள் தங்கள் சிஷ்யனாக ஏற்றனர். ஆனால் விதி வசமாக அவரே இவர்களைக் கொல்ல முயன்றார். ஆகவே நிக்கோலஸும் அவரது மனைவியும் தாங்கள் இறந்து விட்டதாக தங்கள் முடிவை உலகிற்கு அறிவிக்க போலியாக நடிக்க வேண்டியதாயிற்று,

   நிகோலஸின் அபார சக்தியைப் பற்றி ஏராளமான கதைகளும் சம்பவங்களும் உண்டு.

 

 

அவரைச் சுற்றி ஒளி வட்டம் உண்டு என்றும் அவர் பல மிருகங்களின் கண் கொண்டு பார்க்க வல்லவர் என்றும், அவர் எந்த வித உலோகத்தின் அணுவையும் மாற்ற வல்லவர் என்றும் இன்ன பிற சக்திகள் அவருக்கு உண்டு என்றும் ஏராளமான செய்திகள் உலவி வந்தன.

 

இரஸவாதத்தில் குறிப்பிடத் தகுந்த ஒருவராக கூறப்படுபவர் நிக்கோலஸ். இரஸவாத மர்மம் போலவே அவர் வாழ்வும் கூட ஒரு மர்மம் தான்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

,,

பிரபல கணித மேதையான கோடல் (Godel)  குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தார். அதனுடைய இறுதி கட்ட விசாரணை நீதிபதியின் முன்னர் வந்தது. அதே நீதிபதி தான் ஐன்ஸ்டீனின் குடியுரிமை பற்றி விசாரித்து அளித்தவர். ஆகவே கோடலுடன்  ஐன்ஸ்டீனும் இன்னொரு நண்பரான ஆஸ்கர் மார்கென்ஸ்டர்னும் (Oscar Morgenstern) கூடச் சென்றனர். ஐன்ஸ்டீனைப் பார்த்த நீதிபதிக்குத் தலைகால் புரியவில்லை.

 

அவருடன் நெடுநேரம் தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நாஜி ஜெர்மனியில் என்னவெல்லாம் நடந்தது உள்ளிட்ட அனைத்தையும் கூறி முடித்த நீதிபதி கடையில் கோடல் பக்கம் திரும்பினார்: “ நமது அரசியல் சாஸனத்தை நீங்கள் நன்கு படித்திருப்பீர்களே!  அதெல்லாம் இங்கு நடைபெற வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருப்பீர்களே என்றார்.

 

உடனே கோடல், “உண்மையைச் சொல்லப் போனால்.. என்று ஆரம்பித்தார்.

அவ்வளவு தான், கூட இருந்த நண்பர் அவர் தோளைப் பலமாக இடித்தார். உடனே கோடல் புரிந்து கொண்டு தன் வாயை மூடிக் கொண்டார்.

 

பிறகென்ன,அவருக்கு நீதிபதி குடியுரிமையை வழங்கினார்.

நல்ல வேளையாக உண்மையைச் சொல்ல ஆரம்பிக்கவில்லை கோடல்.(அமெரிக்க சாஸனத்தைத் தா படித்ததில்லை என்று சொன்னாலும் ஆபத்து, நாஜி ஜெர்மனியில் அவர் நடந்ததாகச் சொல்லியதை எதிர்த்துச் சொன்னாலும் ஆபத்து தான்!)

 

சில சமயம் சில இடங்களில் உண்மையைச் சொல்லக் கூடாது இல்லையா?

***

 

 

 

இரஸவாதக்கலை நிபுணர்கள்? – 1 (Post No.4204)

Written  by S.NAGARAJAN

 

Date: 12 September 2017

 

Time uploaded in London-6-36 am

 

Post No. 4204

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 8-9-17 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

இரஸவாதத்தால் தங்கமாக்கியோர்!

 

இரஸவாதக்கலை நிபுணர்கள்? – 1

 ச.நாகராஜன்

 

 

“புலமைவாதம் என்பது என்ன? நுட்பமாக வாதிடுவது தான். இறையியல் என்பது என்ன? தெளிவற்ற சொல்நடை தான்! ஜோதிடம் என்பதோ சிக்கலான பரந்த ஒரு சாஸ்திரம். இவை எல்லாம் இரஸவாதத்திற்கு முன்னர் சிறுபிள்ளைத்தனமான குழந்தை விளையாட்டுக்களே! – ஆல்பர்ட் பாய்ஸான் (இரஸவாதக்கலை நிபுணர்)

                              

           இரஸவாதம் என்று கூறியவுடனேயே நமக்கு நினைவுக்கு வருவது பா சித்தர்கள் மற்றும் யோகிகளே!

 

 

   சமீப காலத்தில் நன்கு வரலாற்று ஆவணங்களுடன் கூடிய மாபெரும் அவதார சித்தர் ராமலிங்க சுவாமிகள் எனலாம். வள்ளலார் என்று நாடு போற்றும் அவரை உரிய விதத்தில் தமிழர்கள் உலகளாவிய விதத்தில் அறியச் செய்து மரியாதை செய்யத் தவறி விட்டார்கள் என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு விஷயம்.

 

அவதாரம் என்றால் மேலிருந்து கீழிறங்கல் என்று பொருள். விண்ணிலிருந்து அபூர்வமாக வந்துதித்த ராமலிங்க சுவாமிகள், “கடைவிரித்தோம்; கொள்வாரில்லை என்ற ஏக்கத்துடன் ‘உடலுடன் மறைந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி ‘உடலுடன் மறைந்தவர் சமீப கால வரலாற்றில் இவர் ஒருவரே!

   சுவாமிகளின் வாழ்க்கையில் தண்ணீரால் விளக்கு எரிந்தது உள்ளிட்ட ஏராளமான அற்புதங்கள் நடந்துள்ளன. அவரது அணுக்கத் தொண்டரான தொழுவூர் வேலாயுத முதலியார் அவரது வரலாற்றை மிகவும் அழகுற எழுதியுள்ளார். அவர் வள்ளலாரை  ஒரு பெரிய இரஸவாதி (He is a great Alchemist) என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

பொன் செயல் வகையை இறைவனே தனக்கு உணர்த்தியதாக சுவாமிகளே கீழ்க்கண்ட தனது பாடலில் கூறியுள்ளார் இப்படி:

 

 

“ என்செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி

    என்னை வாழ்விக்கின்ற பதியைப்

பொன் செயல் வகையை உணர்த்தி என் உள்ளத்தே

   பொருந்திய மருந்தையென் பொருளை

வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க

   வைத்த சன்மார்க்க சற்குருவைக்

கொள்செயல் ஒழித்த சத்திய ஞானக்

    கோயிலில் கண்டு கொண்டேனே

“பொன் செயல் வகையை உணர்த்திதனக்கு அருள் செய்தது இறைவனே என்று அவர் குறிப்பிட்டிருப்பது அவரது ரஸவாதக் கலை நிபுணத்வத்தை ஐயமின்றி உணர வைக்கிறது.

   அத்துடன் இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த கடிதத்தில் பொன் உரைக்கும் உரைகல்லும் வெள்ளி உரைக்கின்ற உரைகல்லும் வாங்கி அனுப்பும்படி கேட்டிருக்கிறார். அவை வந்து சேர்ந்ததை இன்னொரு கடிதத்தில் அடிகளார் தெரிவிக்கிறார்.

 

 

இரஸவாத வித்தையை வள்ளலார் செய்து காண்பிக்கவே அதைத் தாமும் பெற பலரும் அவரை அணுகினர். அவர்களிடமெல்லாம், “இச்சையற்றவனுக்கே இதைச் செய்ய இயலும். ஆகவே இதில் இறங்க முயற்சிக்க வேண்டாம் என்று அவர் அருளுரை பகர்ந்தார்.

 

தூய மனதுடன் ஆசையற்றவர்களுக்கே இரஸவாத வித்தை கைகூடும் என்பது பெரியோர் வாக்கு.

(ஊரன் அடிகள் எழுதிய இராமலிங்க அடிகள் வரலாறு 450 – 452 ஆம் பக்கங்களில் இந்தக் குறிப்பைக் காணலாம்.)

 

    இன்னும் பழைய வரலாற்றை உற்று நோக்கினால் ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடி பொன்னாலான நெல்லிக்கனிகளை ஒரு ஏழைக்கு அளித்ததையும், வித்யாரண்யர் இறைவி அருளால் தங்கம் பெற்று விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவ உதவியதையும் பார்க்கிறோம்.

 

 

    ஏராளமான சித்தர்கள் தாமிரத்தை தங்கமாக்கிய கதைகள் தமிழகத்தில் நிறைய உண்டு.

இதே போல மேலை நாட்டிலும் இரஸவாத நிபுணர்களைப் பற்றிய பல வரலாறுகள் உள்ளன.

ஜன் பாப்டிஸ்ட் வான் ஹெல்மாண்ட (Jan Baptista Van Helmont – பிறப்பு 12-1-1580 மறைவு 31-12—1644) தெற்கு நெதர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் மருத்துவர். இரசாயன வல்லுநரான அவர் கார்பன் டை ஆக்ஸைடைக் கண்டுபிடித்தார். ஜீரணம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு பல உண்மைகளைக் கண்டறிந்தார்.

 

 

தான் செய்த மருத்துவத்திற்குப் பணம் வாங்க மறுத்த அபூர்வ மனிதர் அவர். தாவரக் கலையில் அசாத்திய நிபுணர்.

மனித உடலையும் மனிதன் வாழும் உலகையும் நன்கு அறிவதற்கான ஆரம்பம் இரஸவாதமே என்று அவர் திடமாக நம்பினார்.

 

ஆகவே அதை ஆராய ஆரம்பித்தார். எல்லா மூலகங்களுக்கும் ஆதி மூலம் ஒன்று உண்டு என்று அவர் நினைத்தார். அவர் இரஸாவாதக் கலையில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட ஒரு இரஸவாதக்கலை நிபுணர் அப்படி தங்கம் ஆக்கியதைத் தான் நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார். தங்கமாக ஆக்கும் மாயப் பொடி காவிக் கலரில் இருப்பதாக அவர் கூறினார். பாதரஸத்தை இந்தப் பொடியின் மூலமாக 200 கிராம் தங்கமாக ஆக்கியதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தகுந்தது!

 

 

இன்னொரு குறிப்பிடத்தகுந்த ரஸவாதி சீனாவைச் சேர்ந்தவர்.

 ஜீ ஹாங் (Ge Hong) என்ற பெயரைக் கொண்ட அவர் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ரஸவாதி.

எல்லோரும் இறவாமல் அமரத்தன்மை எய்தலாம் என்பது அவரது முக்கிய நம்பிக்கை. எல்லாமே ஒன்றாக “ஏகம் என்ற நிலையில் இருப்பதாக அவர் கருதி அந்த “ஏக நிலையை அடைய பெரும் உள்மன சாந்தியையும் தெளிவையும் அடைய வேண்டும் என்றார் அவர்.

 

 

இரஸவாதத்தால் மூலிகைகள் மற்றும் கூட்டுபொருள்களால் அந்த ஆற்றலைக் கூட்ட முடியும் என்று கூறினார்.

 இரஸவாதம் மூலமாக உருவாக்கப்படும் தங்கம் அழியாது, எரியாது, மறையாது, “இறக்காது என்பது அவர் கொள்கை.

இந்த அனைதது நலன்களையும் அந்தத் தங்கம் உடலுக்குத் தந்து விடும் என்பது அவர் கொள்கை. கந்தகத்தையும் வெடியுப்பையும் பற்றி முதன் முதலில் அவரே எழுதியுள்ளார். இதுவே பின்னால் கன் பவுடர் செய்ய உதவியது என்பது குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம்.

 

 

நீடித்த ஆயுளைத் தரும் இளமைப் பொடியைக் கண்டுபிடிக்கப் போனவர் அதற்கு எதிராக யுத்தத்திற்குப் பயன்படும் கன் பவுடரைக் கண்டுபிடித்தது ஒரு விசித்திரமே!

இன்னும் சிலரை அடுத்துப் பார்ப்போம்.

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

    பன்னாட்டு விண்வெளிநிலையத்தில் ஜப்பானிலிருந்து சென்ற முதல் கமாண்டரான கோயிச்சி வகாடாவுடன் (Koichi Wakata) துணையாகச் சென்றது யார் தெரியுமா?

ஜப்பானின் ரொபாட் அஸ்ட்ரானட்டான கிரோபோ (Kirobo robot) என்னும் ரொபாட் தான்! டோக்கியோ பல்கலைக்கழகம் வடிவமைத்த இந்த ரொபாட் விண்வெளிநிலையத்திற்கு 2013இல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வந்து சேர்ந்தது. கிரோபோ என்றால் நம்பிக்கை என்று பொருள்.

 

 

கிரோபோவின் உயரம் 13 அங்குலம் தான். 7.1 அங்குலம் அதன் அகலம். 5.9 அங்குலம் அதன் கனம். அதன் எடையோ ஒரு கிலோகிராம் தான். அது ஜப்பானிய மொழியில் பேச வல்லது.

அது மற்றவர் பேசுவதைப் புரிந்து கொள்ளும். முகத்தைப் பார்த்து ஆளையும் புரிந்து கொள்ளும்; வீடியோ ரிகார்டிங் செய்யும்.

 

 

விண்வெளியில் ஜீரோ கிராவிடி நிலை இருக்கும் என்பதால் அதற்குத் தகுந்தாற் போல கிரோபோ வடிவமைக்கப்பட்டது.

 7-11-2013 முதல் 13-5-2014 முடிய விண்வெளி நிலையத்தில் இருந்த வகாடாவிற்கு அது நன்கு துணை செய்தது.முதன் முதலாக வகாடாவுடன் ரொபாட்டான கிரோபோ ஜப்பானிய மொழியில் உரையாடியது.

 

 

மனிதனும் ரொபாட்டும் எப்படி ஒருவருக்கொருவர் துணையாக அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் என்பதை ஆராய்வதற்காக அது விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.

 

 

18 மாத காலம் விண்வெளியில் இருந்த கிரோபோ இரண்டு கின்னஸ் சாதனைகளைச் செய்தது. ஒன்று, அது தான் விண்வெளியில் மனிதனுக்குத் துணையாகச் சென்ற முதல் ரொபாட்.

 

இன்னொன்று அதுவே அதிக உயரத்தில் பேசிய ரொபாட்!

விண்வெளிவீரரான வகாடாவிற்கு கிரோபோவினால் ஏக பெருமை. கிரோபோ ரொபாட்டை வைத்து உலகில் ஏராளமான ஜோக்குகள் உண்டு. அனைவரும் படித்து மகிழலாம்.

****

 

 

 

இந்துக்களின் மூன்று உலக மஹா கண்டுபிடிப்புகள்!!! (Post No.4200)

Written by London Swaminathan

 

Date: 10 September 2017

 

Time uploaded in London- 17-10

 

Post No. 4200

 

Pictures are taken from various sources; thanks.

 

வேதத்தில் இந்துக்கள் கேட்பது என்ன?

 

ரிக் வேதத்தில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உண்டு. சில துதிகளைப் படித்தால் அவர்கள் (ரிஷிகள்) என்ன வேண்டினார்கள் என்பது தெரியும்:

 

ஒவ்வொரு துதியும் இறைவனின் மகத்தான சக்தியைப் போற்றும் . இறைவனின் சாதனைகளைப் பட்டியலிடும். பின்னர் செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள், நல்ல பிள்ளைகளை வேண்டும். சில நேரங்களில் பாவ மன்னிப்பு, நோயிலிருந்து விடுதலை ஆகியனவும் இடம்பெறும்; இதோ சில எடுத்துக் காட்டுகள்:–

இந்திரனுக்கு (கடவுளுக்கு) துதி:

ஓ இந்திர த்யௌஸ் அசுரன் உனக்கு அடி பணிந்தான்; நீண்ட நிலப்பரப்புடைய பிரம்மாண்டமான பூமி உன் வசமாயின.

 

எல்லா கடவுளரும் இந்திரனை முன்னிலையில் வைத்தனர்-1-131-1

 

உனக்கு இரண்டாவது (ஈடு, இணை) என்பதே இல்லை 1-32-12

 

முப்பது சால்களில் இந்திரன் சோமபானம் குடித்தான்.7-66-4

பின்னர் இந்திரன் சொல்கிறான்:

நான் ஆகாயத்தையே தூக்கினேன்; மஹா பலசாலிகளில் மிகப்பெரியவன்; நான் சோம பானத்தைப் பருகவில்லையா?

 

சோமபானத்துக்கு அவ்வளவு சக்தி! (சுரா பானம் என்பது மதுபானம்; அதை வேதம் நிந்திக்கிறது)

 

அக்னிக்கு ஒரு துதி:

 

அக்னியே! நீ ஒரு தூதன்; நன்மை செய்பவன்; கருணையின் வடிவம்;  பலத்தின் மகன்; உனக்கு உயிர்வாழும் அனைத்தையும் தெரியும்.

அக்னிக்கு, நான் ஒரு புதிய சக்திவாய்ந்த துதிப் பாடல் பாடுவேன்; என்னுடைய சொற்களையும் பாடலையும் கொண்டுவருகிறேன்.

விலை மதிப்புடைய பொருட்களை உடைய தண்ணீரின் மகனே!

நீ பூமியின் மீது உரிய பருவத் தி ல் அமர்ந்து இருக்கிறாய். 1-143-1

 

மருத் (காற்று) தேவனுக்கு ஒரு துதி:

மின்னலைச் சுமக்கும் தேர்களில் விரைந்து வருவாயாக; குதிரைகளில் ஈட்டிகளை ஏந்தி, இனிய பாடல் பாடிக்கொண்டு வருக  1-88-1

 

கடவுளின் அழகையும் ரிஷிகள் போற்றினர்:

இந்திரனின் ஒரு அடைமொழி சுசிப்ரா= அழகான கன்னம்/ மூக்    குடையோன்

 

அக்னியின் ஒரு அடைமொழி= அழகிய தோற்றம் உடையோன்

சீனிவாலி என்னும் தேவி மீதான துதி:

அழகிய விரல்கள், அழகிய கைகள், பல மகன்களை ஈன்றெடுத்த தாயே! அகலமான கூந்தல் உடையோய்! ஆண்களின் ராணியே! அந்த சீனீவாலிக்கு புனித அன்பளிப்புகளைத் தருவோம் 2-32-7

 

செல்வம் வேண்டும்1

எல்லோரும் விரும்புவது செல்வமே.

இதோ சில துதிப்பாடல்கள்

 

எங்களுக்குச் செல்வத்தைக் கொணர்க; அதையே விரும்பி நிற்கிறோம் 8-45

 

இந்திரனுக்கு ஒரு துதி:

ஓ, சோமபானப் பிரியனே! உங்கள் உண்மையுள்ள, ஆனால் ஒன்ர்ருக்கும் உதவாதவர்கள் நாங்கள்

ஆயிரக்கணக்கில் அழகான குதிரைகளை அளிப்பாயாக! ஓ செல்வச் சீமானே!

பலத்தின் தேவதையே! உனது தாடைகள் வலுவானவை; சக்திவாய்ந்தவன் நீ.

ஆயிரக்கணக்கான அழகான குதிரைகளையும் பசுமாடுகளையும் அருள்வாயாக 1-29

மேலும் ஒரு துதி

ஓ!இந்து, சோமா! எல்லா பக்கங்களிலும் செல்வத்தைக் குவிப்பாயாக

ஆயிரக்கணக்கான மடங்கு பொக்கிஷங்களை அள்ளித் தருக–9-40

அளவற்ற தனத்தை அருள்க; ஓ இந்து செல்வத்தைத் தா.

தங்கத்தையும் குதிரைகளையும் பசுக்களையும் தா 9-41-4

 

ஓ மருத்துக்களே! செல்வத்தை அருள்க; நிலயான, குன்றாத செல்வத்தை அருள்க

நூறு ஆயிரம் படங்கு, இன்னும் எப்போதும் பெருகட்டும் 1-64-15

 

 

ஓ அக்னி எங்கள் பிரபுக்களுக்கு அதிகம் செல்வத்தைக் கொடு 8-1-24

அற்புத இந்திரனே! அற்புதமான செல்வத்தை எங்களுக்குக் கொண்டு வா 7-20-7

 

நிலத்தை உழுவதற்கு முன் சொல்லும் மந்திரம்:

சுபமான உழுகலனே( சீதாவே), அருகில் வருக; உன்னை மதிக்கிறேன்; உன்னை வணங்குகிறேன்

 

நீ எங்களை ஆசீர்வதி; எங்களுக்கு வளத்தைக் கொடு; அளவற்ற உணவுதானியங்களை அள்ளிக் கொடு 7-57-6

வருணனுக்கு ஒரு துதி:

பாவத்திலிருந்து எங்களை விடுவி

அரசனே! எனக்கு என்றும் திடமான செல்வம் குறையவே கூடாது 2-2-8

 

வேதங்களில் உள்ள துதிகள் இந்துக்களின் மகத்தான மூன்று கண்டுபிடிப்புகளைக் காட்டும்!

மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்ட அரிய பெரிய கண்டு பிடிப்புகள் அவை!

வேதத்தின் எல்லா துதிகளிலும் இவை இழையோடி நிற்கும்!

 

மனித இனத்தையே மாற்றிய மூன்று இந்துக்களின் கண்டு பிடிப்புகள்

1.பசு மாடு

காட்டில் எவ்வளவோ மிருகங்கள் பால் கொடுத்தும் தாய்ப்பாலுக்கு நிகரான ஒரே மிருகம் பசு என்பதைக் கண்டுபிடித்து அதற்கு வேத காலத்திலேயே கோ மாதா, காம தேனு என்று பெயரிட்டு மனித குலத்துக்கு அளித்தான்

உலகில் எகிப்திய, பாபிலோனிய, மாயன் நூல்களில் எங்குமே இப்படி ஒன்றைக் காண இலயவில்லை.

2.குதிரை

காட்டில் வேகமாகச் செல்லும் சிறுத்தை முதலியன இருந்தும் சாக பட்சிணியான குதிரையே மனிதனுக்குப் பயன் படும் என்று அதை வசமாக்கி தேரில் பூட்டி உலகிற்கு அளித்தவன் இந்து!

வேதத்தில் துதிக் குத் துதி பசுவும் குதிரையும் பாய்ந்தோடும்!

உலகில் எந்த நாட்டு பழைய நூல்களில்ம் இத் தகைய போற்றுதலைக் காண இயலவில்லை.

 

3.டெசிமல் சிஸ்டம்! தசாம்ச முறை

 

மனித குல அறிவியல் முன்னேற்றத்துக்கு, ராக்கெட்டுகள் பறந்ததற்கு, கம்ப்யூட்டார்கள் செயல்பாட்டூகு எல்லாம் அடித்தளமிட்டது தசாம்ச முறை! இந்துக்கள் உலக மஹா மேதாவிகள்! அதி சூர கணிதப் புலிகள்! வேதத்தில் துதிக்குத் துதி 100, 1000, 10000, 1000000, கோடி என்று அடுத்தடுத்து வரும்.

உலகம் காணாத விந்தை இது. நாம் இல்லாவிடில் உலகம் விஞ்ஞானத்தில் ஒரு அங்குலம் கூட முன்னேறியிராது.

 

இன்றுவரை உலகில் பசும்பாலோ, பால் பொருட்களோ இல்லாவிடில் மனித இனம் மறு நிமிடமே நோயில் வாடி அழியும்.

 

இந்துக்கள் வாழ்க! வேதங்கள் வெல்க!!

NUMBERS IN SANSKRIT

एकं सत् विप्रा बहुधा वदन्ति

एकम् = 1

दशकम् = 10

शतम् = 100

सहस्रम् = 1000

दशसहस्रम् = 10000

लक्षम् = 100000

दशलक्षम् = 10^6

कोटि = 10^7

अयुतम् = 10^9

1010 से अधिक परिमाण

नियुतम् = 10^11

कंकरणम् = 10^13

विवर्णम् = 10^15

परार्धः = 10^17

निवाहः = 10^19

उत्संगः = 10^21

बहुलम् = 10^23

नागबलः = 10^25

तितिलम्बम् = 10^27

व्यवस्थान – प्रज्ञापतिः = 10^29

हेतुहीलम् = 10^31

कराहुः = 10^33

हेतविन्द्रीयम् = 10^35

सम्पत-लम्भः= 10^37

गणनागतिः= 10^39

निर्वाद्यम्= 10^41

मुद्राबलम्= 10^43

सर्वबलम्= 10^45

विषमग्नागतिः= 10^47

सर्वाग्नः= 10^49

1050 से अधिक परिमाण

विभूतांगम्= 10^51

तल्लाक्षणम्= 10^53

ஏகம் = 1

த³ஸ²கம் = 10

ஸ²தம் = 100

ஸஹஸ்ரம் = 1000

த³ஸ²ஸஹஸ்ரம் = 10000

லக்ஷம் = 100000

த³ஸ²லக்ஷம் = 106

கோடி = 107

அயுதம் = 109

1010 ஸே அதி⁴க பரிமாண

நியுதம் = 1011

கங்கரணம் = 1013

விவர்ணம் = 1015

பரார்த⁴​: = 1017

நிவாஹ​: = 1019

உத்ஸங்க³​: = 1021

ப³ஹுலம் = 1023

நாக³ப³ல​: = 1025

திதிலம்ப³ம் = 1027

வ்யவஸ்தா²ன – ப்ரஜ்ஞாபதி​: = 1029

ஹேதுஹீலம் = 1031

கராஹு​: = 1033

ஹேதவிந்த்³ரீயம் = 1035

ஸம்பத-லம்ப⁴​:= 1037

க³ணனாக³தி​:= 1039

நிர்வாத்³யம்= 1041

முத்³ராப³லம்= 1043

ஸர்வப³லம்= 1045

விஷமக்³னாக³தி​:= 1047

ஸர்வாக்³ன​:= 1049

1050 ஸே அதி⁴க பரிமாண

விபூ⁴தாங்க³ம்= 1051

தல்லாக்ஷணம்= 1053

-Mahabharat according to Kurukkal

एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं

कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |

बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो

मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25

एकं पङ्क्तिशतं सहस्रमयुतं लक्षंप्रपूर्वायुतं

कोटिश्चार्बुदकञ्च पद्मकमधो खर्वंनिखर्वं तथा |

बृन्दञ्चैव महासरोजमपरश्शङ्खस्समुद्रोन्तिमो

मद्ध्यञ्चैव वरार्द्ध संज्ञकमिमा संख्यां विदुः पण्डिताः ||1.25

ekam1

dasam 10

satam 100

sahasram 1000

ayutham10,000

laksham 100000

parapurvayutham10,00,000

koti 10000000

arpudham 100000000

padmakam 1000000000

karvam 10000000000

nikarvam 100000000000

bruntham 1000000000000

mahasarojam 10000000000000

sangam 100 00 00 00 00 00 000

avaramahasanagam

samudram 1 00 00 00 00 00 00 00 00

madhyam

parartham

samnjak imam sankhyaam vidhu: Pandithaa;

–SUBHAM—

சிவபெருமானின் விநோத அஸ்திரம்! எரி, அரி, கால்!! (Post No.4197)

Written by London Swaminathan

 

Date: 9 September 2017

 

Time uploaded in London- 16-10

 

Post No. 4197

 

Pictures are taken from various sources; thanks.

 

தேவாரத்தில் சம்பந்தப் பெருமான்) அற்புதமாகப் பாடி வைத்திருக்கிறார். திரிபுரங்களை எரிக்க சிவபெருமான் பயன்படுத்திய அற்புத அஸ்திரம் “எரி, அரி, கால்!” அதாவது அக்னி, திருமால், வாயுதேவன்.

வேதம் போற்றும் மூன்று தேவர்கள் இந்த மூவர். இவர்களை ஒரு சேர விடுத்தாராம். முதலில் பாடலையும் கருத்தையும் காண்போம். பிறகு விஞ்ஞானச் செய்திகளை ஆராய்வோம்:

 

கல் ஆல் நிழல் கீழாய் இடர் காவாய் என வானோர்

எல்லாம் ஒரு தேராய் அயன் மறைபூட்டி நின் று உய்ப்ப

வல்லாய் எரி காற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல்

வில்லால் எயில் எய்தான் இடம் வீழிம் மிழலையே

 

பொருள்

கல்லால மரத்தின் கீழிருந்து சனகாதி முனிவர்களுக்கு அறம் உறைத்த பெருமானே! எங்களைக் காப்பாற்றுக என்று தேவர்கள் எல்லாம் வணங்கி வேண்டி நிற்க,

ஒளி திகழும் சூரிய சந்திரரர்கள் தேர்ச் சக்கரங்களாகவும்,

பிரமன் சாரதியாகவும்,

வேதங்கள் குதிரைகளாகவும் திகழ

காற்றுப் போன்று வேகமாகச் செல்லும்

எரிக்கும் நெருப்பைக் கொண்டு,

திருமாலாகிய அம்பினால்,

மேருமலையயை வில்லாகவும்,

வாசுகி எண்ணும் பாம்பை நாணாகவும்,

கொண்டு அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரித்தான்.

அவனுடைய இடமாவது திருவீழிமிழலை

எல்=ஒளி, கோல்=அம்பு, எரி=அக்னி, அரி=திருமால், காற்று=வாயு

 

திருநெடுங்களப் பாடலில் சம்பந்தர் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்:

கூறு கொண்டாய் மூன்றுமொன்றாக்

கூட்டியோர் வெங்கணையால்

மாறுகொண்டோர் புரமெரித்த

மன்னவனே……………………

 

பொருள்

உமா தேவியை ஒருபாகத்தில் கூறாகக் கொண்டாய்;  நெருப்பு, காற்று, திருமால் ஆகிய மூன்றும் இணைத்து ஓர் அம்பு ஆக்கி அதனைச் செலுத்தி முப்புரங்களைக் கொண்டாய்.

 

ஆக அசுர சக்திகளை அழிக்க திருமாலின் உதவி தேவை

 

வேதத்தில் அங்கொன்று இங்கொன்றுமாக எடுத்து அனர்த்தம் சொல்லும் வெள்ளைகா ர ர்கள் இது போன்ற அதிசய விஷயங்களை விட்டு விடுவார்கள். ஆகாயத்தில் தொங்கிய (FLOATING METAL FORTS)  கோட்டைகள் என்ன? வெளி உலகவாசிகளின் (ALIEN ATTACK) தாக்குதலா?  தேவர்களுக்கு அந்தக் கோட்டையில் இருந்துகொண்டு அவர்கள் தொல் லை தர, சக்திவாய்ந்த தேவர்கள் அஞ்சியது ஏன்?

 

ஸ்டார்வார்ஸ் ஏவுகணைத் (STARWARS PROJECT- MISSILE PREVENTION) தடுப்பு திட்டத்தை விட, பெரிய திட்டத்தில் முச்சக்திகளை இணைத்து சிவபெருமான் மூன்று கோட்டைகளை எரித்தது எப்படி?

இதுபோன்ற பல கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தோன்றுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேதத்தில் உள்ள வாசகம் திரிபுராந்தகன். அக்காலத்தில் கற்பனைக் கதை எழுதக் கூட இந்த விஷயங்கள் அவர்களுக்குப் புரிபட்டிராது. எதிர்கால  அறிவியல் விளக்கம்தான் இத்தகைய புதிர்களை விடுவிக்கும்!

 

–subham–

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 5 (Post No.4195)

Written  by S.NAGARAJAN

 

Date: 9 September 2017

 

Time uploaded in London-5-37 am

 

Post No. 4195

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை (ஏழாம் ஆண்டு 28வது கட்டுரை)

ஈயத்தைத் தங்கமாக்கும் வித்தை!

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 5

 ச.நாகராஜன்

 

 

“இரஸவாதம் என்பது என்ன? உபயோகமற்றவற்றை நீக்கி  உபயோகமானவற்றை மூல அடிப்படை பொருளாகவும் சாரமாகவும் மாற்றும் ஒரு கலையே இரஸவாதக் கலையாகும். – பிலிப்பஸ் ஆரோலஸ்

 

                              

           நியூடனின் குறிப்புகளை நன்கு ஆராய்ந்த பிரின்ஸிப்பிற்கு நியூடனும் பாயிலும் நிச்சயம் ஈயத்தைத் தங்கமாக மாற்ற முடியும் என்று நம்பினர் என்பது நன்கு தெரிந்தது.

அவர்கள் எவ்வளவு தூரம் அதில் முன்னேறி இருந்தனர்?

 

     தங்கமாக மாற்றும் ஆராய்ச்சியில் கிட்டத்தட்ட அவர்கள் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தனர் என்றே பிரின்ஸிப் நம்புகிறார்.

 

     ஏனெனில் ராபர்ட் பாயில் சட்டத்தை வெகுவாக மதிப்பவர். அவர் ஹவுஸஸ் ஆஃப் பார்லிமெண்டில் தங்கம் தயாரிப்பதை எதிர்த்து இருந்த சட்டத்தை நீக்கி தங்கமாக மாற்றுவதை சட்டபூர்வமாக ஆக்க வேண்டும் என்று வெகுவாக முயன்றார்.

ஏனெனில் சட்டத்திற்கு உட்பட்டே எதையும் செய்ய வேண்டுமென்பது அவர் கொள்கை.

 

    இறுதிக் கட்டத்தை அவர் எய்தி விட்டதாக நம்பியதாலேயே அவர் அப்போதிருந்த சட்டத்தில் உரிய மாறுதலைச் செய்ய வேண்டுமென விரும்பினார் என்கிறார் பிரின்ஸிப்;

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பாயில் 1691ஆம் ஆண்டு இறந்தார்.

 

   தங்கத்தை உருவாக்கும் – ரெட் எர்த் (Red Earth)சிவப்பு பூமியை எப்படி செய்வது என்பதை அவர் விளக்கமாக எழுதி ரகசியமாக வைத்திருந்தார். பாயிலின் உதவியாளரும் அவரது சட்டபூர்வ உதவியாளரும் தத்துவ ஞானியும் இரஸவாதக் கலை ஆர்வலருமான  ஜான் லாக் (John Locke)  என்பவர் அவரது குறிப்புகளை அவரது மறைவிற்குப் பின்னர் சற்று தாராள மனதுடன் நியூட்டனுக்கு அனுப்பி வைத்தார்.

 

    ஆனால் அந்தக் குறிப்புகளை வைத்து நியூட்டன் என்ன செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

பாயில் இறந்த ஒரு ஆண்டுக்குப் பின்னர் நியூட்டனுக்கு மனத்தளவில் ஒரு சோர்வு வியாதி ஏற்பட்டது. அது எதனால் என்பது இன்று வரை பெரிய விவாதப் பொருளாகி விட்டது.

 

     அது பாதரஸ விஷத்தினால் தான் என்பது பலரது கருத்து.

ரெட் எர்த்தை தயாரிப்பதில் பாதரஸத்தை வெப்பமாக்கி குளிரவைப்பது அடிக்கடி செய்ய வேண்டிய ஒரு செய்முறை.

இந்த செய்முறையை ஊக்கமுடன் நியூடன் செய்திருப்பார் என்றும் அதன் காரணமாகத்தான் அவருக்கு இந்த வியாதி வந்திருக்க வேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர்.

 

    ஆனால் நியூட்டனின் மனோவியாதிக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. நியூட்டனுக்கு பெண்கள் என்றாலே ஒரு அலர்ஜி. ஜான் லாக் ஒரு பணக்கார விதவையை நியூட்டனுடன் பழகச் செய்தார் என்றும் இந்தப் பழக்கம் பிடிக்காததனால் தான் அவருக்கு மனத்தளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது என்று பொதுவான கருத்தைப் பலரும் சொல்கின்றனர்.

 

    ரஸவாதக்கலையில்  நியூட்டனின் செய்முறை பலிக்காது என்றும் அதற்குத் தேவையானது அணுப்பிணைப்பு முறை என்றும் இன்று நவீன அறிவியல் முன்னேற்றத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் காலத்தில் இந்தத் தொழில்நுட்பம் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

     எது எப்படி இருந்தாலும் 18ஆம் நூற்றாண்டு ஆராய்ச்சிகள்

கூட்டுப்பொருள்களைப் பற்றி நன்கு அறிய உதவின என்பதே பிரின்ஸிப்பின் முடிவு.

 

பண்டைய கிரேக்கம் சொல்லும் அடிப்படை  நான்கு பூதங்களான நீர், நிலம், காற்று, தீ முதலியவை பற்றிய கொள்கையும் மோகமும் காலப்போக்கில் ஒரு முடிவுக்கு வந்தது போலவே ரஸவாதக்கல் பற்றிய மோகமும் நியூட்டனுக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தது.

1727ஆம் ஆண்டு நியூட்டனின் மறைவுக்குப் பின்னர் அவரது ரெட் எர்த் வெளியில் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும்.    

   ஆனால் இந்த ரஸவாதக் கல் பற்றிய மோகம் இப்போது புதிய வடிவில் ஆரம்பமாகியுள்ளது.

 

 

     நுரையீரல் புற்றுநோய் முற்றிய நிலையில் அறுவைச் சிகிச்சை ஆபத்தானது என்றும் பயனளிக்காது என்றும் இன்றைய அறிவியல் கூறுகிறது. ஆகவே இப்படிப்பட்ட நோயாளிகளுக்கு இளமையை மீட்கும் ரஸவாதக் கலை தேவை என்கின்றனர் மருத்துவர்களில் ஒரு சாரார்.  அவர்கள் தீராத வியாதிகளைத் தீர்க்க ரஸவாதக் கல் தேவை என்கின்றனர்.

ரஸவாதக் கல் என்றால் அது ஒரு கல் இல்லை; அது பொடியாக (powder) இருக்கும் ஒரு அபூர்வப் பொருள், அவ்வளவே!

 

இந்த மாயப்பொடியைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகளுடன் மருத்துவர்களும் இணைந்துள்ளனர் இப்போது.

ஆக ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பதுகளிலிருந்து ஈயத்தைத் தங்கமாக்கும் கலை பற்றிய ஆய்வில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாறுதல் ஏற்பட்டுள்ளது.

 

 

இதில் இன்று பல ஆய்வுக் கட்டுரைகளையும் பரபரப்பாக விற்பனையாகும் புத்தகங்களையும் எழுதியுள்ள நியூமென்னும் பிரின்ஸிப்பும் இதில் வெற்றி பெற்றே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆய்வைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 

அவர்கள் ஆய்வு வெற்றி பெற்றால் அதனால் உலகம் “தங்க மயமாகும் என்பதில் சந்தேகம் என்ன?

இந்தக் குறுந்தொடரில் வெளி வந்துள்ள குறிப்புகளின் அடிப்படையில் ரஸவாதக் கலையில் ஆர்வமுள்ளவர்களும் ஆய்வு மேற்கொண்டு சங்கேதச் சொற்களின் புதிர்களை அவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறலாம்! முயன்றால் முடியாதது ஒன்று இல்லையே!

   (அடுத்து ரஸவாதக் கலை நிபுணர்கள் பற்றி வரலாறு கூறும் செய்திகளைப் பார்ப்போம்)

 

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

முன்னாள் ஜனாதிபதியும் பாரத ரத்னா விருது பெற்றவருமான பெரும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இளைஞர்களை உத்வேகப்படுத்துவதில் வல்லவர்.

நீங்கள் மகத்தானவர்களாக ஆகி தேசத்தையும் மகத்தானதாக ஆக்குங்கள் என்பதே அவர் இளைஞர்களுக்குத் தந்த அறிவுரை.

2006 ஆகஸ்ட் 28ஆம் தேதி  பழங்குடி மாணவர்கள் குழு ஒன்றை அவர் சந்தித்தார்.

லீட் இந்தியா 2020 (Lead India 2020) என்ற இயக்கத்தை ஒட்டி இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த சீதாராமபுரம் என்ற ஊரிலிருந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் அந்தக் குழுவில் இருந்தார். பார்வையற்றவரான அவர் பெயர் ஸ்ரீ காந்த் பல்லா.

அப்துல்கலாம் அவர்கள் அனைவரையும் நோக்கி ஒரு கேள்வி கேட்டார்””நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள்?”

அதற்கு ஸ்ரீ காந்த், “பார்வையற்ற இந்திய ஜனாதிபதியாக ஆக விரும்புகிறேன்” என்று பதில் அளித்தார்.

இதைக் கேட்ட கலாம் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

பெரிய குறிக்கோளை லட்சியமாகக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி கூறும் அவர் அந்த மாணவரை வெகுவாகப் பாராட்டி லட்சியத்தை நோக்கி முன்னேறச் சொன்னார்.

இன்று 23 வயதாகும் ஸ்ரீ காந்த் ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 கோடி நிறுவனமான பொல்லாண்ட் இண்டஸ்ட் ரீஸின் தலைமைப் பொறுப்பு அதிகாரி.அங்கு இப்போது 150 பார்வையற்றோ பணி புரிகின்றனர். சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படாத பாக்கேஜிங் தயாரிப்புகளை ஐந்து கிளைப் பிரிவுகளில் அவர்கள் தயார் செய்கின்றனர். அதன் வருடாந்திர விற்பனை ஏழு கோடியைத் தாண்டி விட்டது.

கலாம் அவர்களின் உத்வேகப் பேச்சு இப்படி ஆயிரக்கணக்கானோரை உயர்த்தி உள்ளது!

***

 

 

ஆரோக்கியத்துடன் வாழ சரகர் கூறும் அறிவுரை! – 1 (Post No.4187)

Written  by S.NAGARAJAN

 

Date: 6 September 2017

 

Time uploaded in London- 5-27 am

 

Post No. 4187

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

 

ஹெல்த்கேர் செப்டம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ஆயுர்வேத மஹிமை

 

நீடித்து ஆரோக்கியத்துடன் வாழ சரகர் கூறும் ஏழு மூன்றுகள் பற்றிய அறிவுரை! – 1

 

ச.நாகராஜன்

 

உலக மக்களுக்காக கருணையுடன் படைக்கப்பட்ட நூல் சரக சம்ஹிதை.

 

உலகில் தோன்றியவர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் நீடித்து வாழ அற்புதமான வழிமுறைகளை அவர் இந்த நூலில் எளிய முறையில் விளக்கியுள்ளார்.

அதில் அவர் ஏழு மூன்றுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

 

உயிர் வாழ வாழ்க்கைக்கு ஆதாரமான மூன்று விஷயங்கள்

மூன்று விதமான வலிமைகள்

மூன்று விதமான காரணங்கள்

மூன்று விதமான வியாதிகள்

வியாதி உருவாக மூன்று விதமான அமைப்புகள்

மூன்று விதமான வைத்தியர்கள்

மூன்று விதமான சிகிச்சை முறைகள்

இவற்றை அறிந்து கொள்ளுங்கள் என்கிறார் சரகர்.

இதை அறிந்தவர் பூவுலகில் மனிதப் பிறவி எடுத்த பயனைப் பெறுவார்; அதாவது நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்வார்.

உயிர் வாழ வாழ்க்கைக்கு ஆதாரமான மூன்று விஷயங்கள் யாவை?

 

உணவை உட்கொள்ளுதல்

தூக்கம்

பிரம்மசர்யம் அனுஷ்டித்தல்

இந்த மூன்றினால் கட்டுப்பாடான வாழ்க்கை அமைகிறது. உடல் வலிமை பெறுகிறது. வனப்பும் பொலிவும் கூடுகிறது.வளர்ச்சி ஏற்படுகிறது. முழு ஆயுள் வரை இவை நீடிக்கின்றன. ஒன்றே ஒன்று, இதையொட்டி இங்கு விவரிக்கப்படும் வியாதிக்கான காரணங்களை வரவழைக்காமல் இருக்க வேண்டும், அவ்வளவு தான்!

 

இந்த மூன்று ஆதாரங்கள் உப ஸ்தம்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஸ்தம்பம் என்றால் தூண்.

ஒரு வீட்டிற்கு ஆதாரமாக அமைபவை தூண்களே. அல்லது இந்தக் காலத்தில் சுவர்களே! அவற்றின் வலிமையைப் பொறுத்தே வீட்டின் ஆயுள் காலம் நிர்ணயிக்கப்படும்.

இந்த ஆதாரமான சுவர்களுக்கு அல்லது தூண்களுக்கு வலிமை ஊட்டும் வகையில் துணைத் தூண்கள் அதாவது உப ஸ்தம்பங்கள் தேவைப்படுகின்றன.

 

அதே போல இந்த உலகில் மனிதப் பிறவி எடுத்ததற்கான காரணத்தின் ஆதாரமாக சென்ற பிறவியில் நாம் செய்த வினைப்பயன்கள் அமைகின்றன.

 

பிறவி எடுத்தாகி விட்டது. இனி அதற்கு வலிமை ஊட்ட உப ஸ்தம்பங்களாக உணவு, தூக்கம், பிரம்மசர்யம் ஆகிய மூன்றும் அமைகின்றன.

உணவு என்று இங்கு குறிப்பிடப்படுவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு மட்டுமே!

 

தூக்கமும் பிரம்மசர்யமும் கூட அளவுடன் அனுசரிக்கப்பட வேண்டும். அவை நீடித்த ஆரோக்கிய வாழ்வுக்கு உதவும்படியாக இருக்க வேண்டும்.

 

 

அடுத்தது மூன்று விதமான வலிமைகள்.

ஒன்று இயல்பாக உடலில் அமைந்த்திருக்கும் பலம்

இன்னொன்று ஒவ்வொரு மனிதனின் வயது மற்றும் பருவ காலத்தை ஒட்டி ஏற்படும் பலம்

அடுத்தது சரியான உணவுத் திட்டமுறை போன்றவற்றால் நாம் பெறும் பலம்.

 

இயல்பான உடல் பலம் பிறப்பால் வருவது.இது இயற்கையான தாதுக்களால் அமைவது. இயல்பாக அமைவதால் இதற்கு வேறு ஒரு அன்னியத் துணை எதுவும் தேவை இல்லை.

சிலர் பிறப்பிலேயே பலவானாக இருக்கிறார்கள். சிலர் பிறப்பிலேயே நோஞ்சானாக இருக்கிறார்கள். இது மரபணுவால் வரும் அமைப்பு.

 

மழைகாலம், வெயில் காலம் போன்ற பருவகால மாறுதல்கள் மற்றும் வயதால் வருவது இன்னொரு விதமான பலம்.

அடுத்து நெய் மற்றும் இதர உணவு வகைகளைச் சரியான முறையில் எடுத்துக் கொள்வது,  சரியான முறையில் ஓய்வெடுப்பது, உடல்பயிற்சி போன்றவை இளமையைத் தக்க வைத்துப் பெறும் பலமாகும்.

 

அடுத்து வியாதிகள் உருவாவதற்கான காரணங்கள் மூன்று.

புலன்களை அதிகமாகப் பயன்படுத்துவது,

புலன்களைப் பயன்படுத்தாமலேயே இருப்பது,

புலன்களைத் தவறாகப் பயன்படுத்துவது, இதையொட்டிய செய்கைகள், காலம் இவற்றால் வியாதிகள் உருவாகின்றன.

எடுத்துக்காட்டாக கண்களை எடுத்துக் கொள்வோம். பிரகாசமான ஒரு பொருளை உற்று நெடு நேரம் பார்த்தால் கண்கள் என்ன ஆகும்?

 

எதையும் பார்க்காமலேயே இருந்தால் கண்களின் பயன் தான் என்ன?

அதே போல தவறாகப் பயன்படுத்துவது என்பது – கண்களை ஒரு பொருளின் அருகே கொண்டு சென்று பார்ப்பது அல்லது வெகு தூரத்திலிருந்து பார்க்க முயல்வது, பயமுறுத்தும் அல்லது ஆச்சரியமூட்டும் காட்சிகளைப் பார்ப்பது போன்றவையாகும்.

இதே போல அதிக ஓசை காதுக்கு ஆகாது. கெட்ட நாற்றம், இரசாயன பொருள்களின் நாற்றம் போன்றவற்றை மூக்கினால் ஏற்படும் வியாதிகளுக்குக் காரணமாகச் சொல்லலாம்.

எதையும் அதிகப்படியாக உண்பதை நாக்கின் மூலம் ஏற்படும் வியாதிக்கான காரணமாகச் சொல்ல்லாம்.

தவறான மசாஜ், குளிர்ந்த நீரில் திடீரெனக் குளிப்பது போன்றவை வியாதிகளுக்குக் காரணமாக அமையும்.

பேச்சு, மனம், உடல் ஆகிய இவை சரியான முறைப்படி உபயோகப்படுத்தபப்ட வேண்டும்.

அதிகமான பேச்சு ஆபத்து. தீய எண்ணம் கொண்ட மனம் தீமைக்கு வித்து.  நல்ல ஆரோக்கியத்திற்கு வழி வகுக்காத பழக்க வழக்கங்களைக் கொண்ட உடல், வியாதிக்கான மூல காரணமாகும்.

 

ஆகவே பேச்சு, மனம், உடல் ஆகிய மூன்றையும் பத்திரமாகக் கட்டுப்பாடுடன் கண்காணிக்க வேண்டும்.

மழை காலமோ அல்லது கோடை காலமோ வழக்கத்திற்கு மாறாக நீண்டிருந்தால் அதுவும் கூட அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டதாகும். அதே போல குறைந்திருந்தால் குறைவாகப் பயன்படுத்தப்பட்டதாகும். மழை காலமோ இதர பருவமோ வழக்கத்திற்கு மாறாக இன்னொன்றைத் தந்தால் அது தவறான பயன்படுத்தலுக்கு அடையாளமாகும்.

வியாதிகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒன்று உடல் தோஷத்தால் வருவது.

 

 

அடுத்தது வலிப்பு, விஷம் முதலியவற்றை உட்கொள்வது, காற்று, தீ, விபத்து போன்றவற்றால் வருவது.

அடுத்தது மனதிற்கு ஒத்தது அல்லது மனதிற்கு ஒவ்வாதது ஆகியவற்றால் ஏற்படும் மனோவியாதி

மனோவியாதியால் அவஸ்தைப்படும் புத்திசாலியான ஒருவன் தனக்கு  தீங்கு பயக்கும் விஷயம் என்ன என்பதை மீண்டும் மீண்டும் ஆலோசித்து தீங்கு பயப்பனவற்றை அகற்ற வேண்டும்.

மனோ வியாதிகளைக் குணமாக்கும் நல்லோர்களை ஒருவன் ஆதரிக்க வேண்டும்.

 

 

ஆன்மா, தேசம், காலம், வர்த்தமானம், குடும்பம், பலம், திறன் ஆகியவை பற்றிய அறிவை ஒவ்வொருவனும் பெற வேண்டும்.

 

இப்படி சரகர் அறிவுரை வழங்குகிறார்.

 

சரகர் சாமான்யனான ஒருவனை கருத்தில் கொண்டு அவனுக்கு அன்புடன் கூறிய அறிவுரையைக் கனிவான சொற்களால் வழங்குவது உள்ளத்தை நெகிழ வைக்கிறது.

சரக சம்ஹிதையின் பதினொன்றாம் சூத்திரத்தில் இடம் பெறுபவற்றையையே இங்கு இப்போது நாம் பார்க்கிறோம்.

இதன் தொடர்ச்சியை அடுத்துக் காண்போம்.

 

The Power of Subconscious Mind (Post No.4182)

Written by S.NAGARAJAN

 

Date: 4 September 2017

 

Time uploaded in London- 7-47 am

 

Post No. 4182

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

The Power of Subconscious Mind

 

S.Nagarajan

 

 

The amazing power of  subconscious mind has been explained by Joshph Murphy in his book titled, “ The Power of Your Subconscious Mind”.

 

 

     Miraculous cure could be obtained by this mind power. In his book he has explained about this thus:    

    “Some years ago, I was invited to lecture at the Yoga Forest University, in Rishikesh, India. While I was there, I had a long conversation with a surgeon who was visiting from Bombay. From him, I learned the astonishing story of Dr. James Esdaille.

 

 

        Esdaille was a Scottish surgeon who practiced in Bengal during the 1840s. This was before ether or other modern methods of chemical anesthesia began to be used. Nevertheless, between 1843 and 1846, Dr. Esdaille performed some four hundred major surgical operations of  all kinds. These included amputations, removal of tumors and cancerous growths, and operations on the eye, ear, and throat. All these operations were performed under mental anesthesia only. Patients said  they felt no pain, and none of them died during surgery.

 

 

      Just as amazing, the mortality rate of Esdaille’s patients following surgery was extremely low. This was well before Western scientists such as Louis Pasteur and Joseph Lister pointed out the bacterial origin of infection.

 

 

    No one realized that postoperative infections were due to unsterilized instruments and virulent organisms. Nevertheless, when Esdaille suggested to his patients, who were in a hypnotic state, that no infection or septic condition would develop, their subconscious minds responded to his suggestion. They set in motion the processes needed to fight off the life-threatening dangers of infection.

 

 

Think of it: Over a century and a half ago, this Scottish surgeon who had gone halfway around the world discovered how to use the miraculous wonder-working powers of the subconscious mind. It is enough to cause you to be seized with awe. The transcendental powers that inspired Dr. Esdaille and that protected his patients from mortal danger can  be yours, too.

 

 

        Your subconscious mind can give you independence of time and space. It can make you free of all pain and suffering. It can give you the answer to all problems, whatever they may be. There is a power and an intelligence within you that far transcends your intellect, causing you to marvel at the wonder of it all. All these experiences cause you to rejoice and believe in the miracle-working powers of your own subconscious mind.”

 

 

 

So in order to get the full positive power we have to remove all negative thoughts and nurture positive thoughts in our mind.

This will pave way for our success in every sphere.

***

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 4 (Post No.4179)

Written by S.NAGARAJAN

 

Date: 2 September 2017

 

Time uploaded in London-5-44 am

 

Post No. 4179

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Pictures are representational only; no link to he article.

 

 

அறிவியல் துளிகள் ஏழாம் ஆண்டு 27வது கட்டுரை

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 4

 ச.நாகராஜன்

 

 

“இந்தப் புத்தகத்தில் இருப்பதை உங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவயவில்லை என்றால் நீங்கள் தத்துவம் பற்றிப் படிக்கவே வேண்டாம் – பேஸிலியஸ் வாலெண்டினஸ்

                              

           12 திறவுகோல்கள் (Twelve Keys) என்ற புத்தகத்தைப் புரிந்து கொண்டு அதன் படி செய்தால் ஈயம் தங்கமாக மாறும் என்று சத்தியம் செய்து கூறுகிறார் பேஸிலியஸ் வாலெண்டினஸ்.

 

     முதலில் எனது கொள்கை ரீதியான கருத்துக்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை அது புரியாவிட்டாலும் கூட செய்முறையில் நான் கூறியதைச் செய்து பாருங்கள் என்கிறார் அவர்.

 

     “ஒரு மருத்துவர் எப்படி ஒருவரின் உடல் பாகங்களை நன்கு உணர்கிறாரோ அது போல தங்கத்தைப் பகுத்து அதன் மூலக்கூறுகளை நன்கு அறிந்து கொள்ளுங்கள். இப்படிச் செய்து தங்கம் தங்கமாக ஆகுமுன்னர் இருந்த நிலையை அடையுங்கள். அதன் விதை,நடு மற்றும் இறுதி நிலை பற்றி அறியுங்கள். அத்துடன் அதன் பெண் சக்தியையும் அறியுங்கள். – இப்படித் தன் விளக்கத்தை ஆரம்பிக்கிறார் அவர்.

 

       இதைப் படித்து ரஸவாதக் கல்லை அடையும் நீங்கள் பாக்கியவான்கள் என்ற ஆசீர்வாதத்துடன் தனது முதல் திறவுகோலை அவர் விளக்க ஆரம்பிக்கிறார்.

 

             எப்படி ஒரு மருத்துவர் முதலில் உடலின் உள் பாகங்களின் அழுக்கையெல்லாம் நீக்குகிறாரோ அதைப் போல எடுத்துக் கொள்ளும் உலோகத்தின் அழுக்கை நீக்குங்கள் என்பது அவரது முதல் அறிவுரை.

 

    தனது இரண்டாவது திறவுகோலில் அவர் தரும் உவமைகள் மிக்க சுவையானவை. ஒரு பெரிய மனிதரின் வீட்டில் பல விதமான பானங்கள் இருக்கும்.ஒவ்வொன்றுக்கும் ஒரு வித சுவை உண்டு.

 

ஒரு மணப்பெண் திருமணத்தின் போது தன் அழகுக்கு அழகூட்டும் விதமாக பல்வேறு ஆபரணங்களை அணிவாள். ஆனால் அவளது மண வாழ்க்கையின் முதல் இரவன்று எத வித ஆடை, அணிகலன் இன்றியே அவள் தன் வாழ்க்கையைத் துவங்குவாள்.

 

அது போலவே நமது தம்பதிகளான அபல்லோவும் டயானாவும் மிக பிரமாதமான ஆடைகளுடனேயே இருக்கின்றனர். அவர்களது தலையும் உடல்களும் வெவ்வேறு விதமான நீரால் கழுவப் படுகிறது. நமது மணமகனை வெவ்வேறு எதிரெதிரான நீரால் கழுவுவது முக்கியம்.

 

இங்கிருந்து சங்கேதமான வார்த்தைகளை பேஸிலியஸ் பயன்படுத்துகிறார்.

இதைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் தங்கமாக்கும் கலையை அறிவர்.

 

அடுத்த திறவுகோலில் கந்தக ஆவி பற்றியும் அதனுடன் சேர்க்க வேண்டிய பொருள்களைப் பற்றியும் விளக்குகிறார். அனைத்தும் சங்கேதச் சொற்களாலேயே தான்!

அடுத்த திறவுகோலில் அனைத்தையும் பாதுகாத்துப் பேணும் உப்பைப் பற்றி விளக்குகிறார்.

 

இவ்வாறு 12 திறவுகோல்களில் தங்கமாக மாற்றும் ரஸவாதக் கலையைச் சொல்லி தான் சொல்வது அனைத்தும் உண்மை, இதைப் பின்பற்றுவோர் ரஸவாதக்கல்லை நிச்சயம் அடைவர் என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

 

மிக்க பொறுமையுடன் பல்வேறு நூல்களைப் படித்து பல சோதனைகளை மேற் கொண்டால் பேஸிலியஸ் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆராய்ச்சியில் தான் இன்று பலரும் இறங்கியுள்ளனர்.

பிரின்ஸிப் 12 திறவுகோல்கள் நூலைப் படித்த பின்னர் அதில் தங்கம் ‘ஆவியான உருவில் (vapour form) உருவாகும் விதம் தரப்பட்டிருப்பதாகக் கருதினார்.

 

இதே போன்று ஆவியாக தங்கம் உருவாவது பற்றிக் கூறும் இதர ஆவனங்களை அவர் சேகரிக்க ஆரம்பித்தார். பாயிலின் ஆவணங்களைப் பார்த்த போது அதில் பிலாஸபர்ஸ் மெர்குரி அதாவது பாதரஸத்தின் ஒரு திரவ வடிவம் மிக மிக மெதுவாக தங்கத்தைக் கரைப்பது பற்றிக் கூறப்பட்டிருப்பதைப் படித்தார். இது தங்கத்தை உருவாக்குவதில் மிக முக்கியமான ஒரு படியாகும்.

 

நியூடன் பாயிலிடமிருந்து பிலாஸபர்ஸ் மெர்குரி பற்றி அறிய முயன்றார். ஆனால் பாயில் அதை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாகப் பாதுகாத்து வந்தார்.

 

நியூட்டனும் கூட தனது குறிப்புகளில் பல சங்கேத வார்த்தைகளையே பயன்படுத்தியுள்ளார். ரஸவாதம் பற்றி இதுவரை பிரசுரிக்கப்படாத நியூட்டனின் குறிப்புகள் பத்து லட்சம் வார்த்தைகளுக்கும் அதிகமாக உள்ளன என்பது விந்தையான ஒரு தகவல். அதில் அவர் க்ரீன் லயன் (green lion) நெப்டியூன் டிரைடெண்ட் (neptune trident)  என்றெல்லாம் குறிப்பிடுகிறார். இவற்றின் பொருள் என்னவென்று புரியவில்லை.

 

நியூட்டனை நன்கு புரிந்து கொள்ள பல சோதனைகளை நியூமேன் செய்ய வெண்டியிருந்தது. அதில் ஒரு சோதனையின் பெயர் டயானா மரம் (The Tree of Diana)  என்பதாகும்!

 

பழைய கால உலை, கருவிகள் ஆகையவற்றை இந்தியானா பல்கலைக் கழக இரசாயனப் பிரிவின் உதவியோடு உருவாக்கி பல சோதனைகளை அவர் செய்ய ஆரம்பித்தார்.

இந்த டயானா மர சோதனை பிரமிக்க வைக்கும் ஒன்றாகும்.

அதில் உலோகங்கள் மரம் போல ‘வளர்வதைப் பார்க்கலாம்!

 

       வெள்ளியையும் பாதரஸத்தையும் திடமாக இருக்கும் நிலையில் கலவையாக்கி, பின்னர் கரைக்கப்பட்ட வெள்ளி மற்றும் பாதரஸத்துடன் கூடிய நைட்ரிக் அமிலத்தில் மூழ்க வைத்தால் வெள்ளியின் சில துணுக்குகள் கிளைகள் போல உருவாகும் என்பதை நியூமேன் சோதனையில் தானே நேரில் கண்டறிந்தார்.

இன்று இரசாயனத்தில் இது ஒரு சாதாரண சோதனையாக ஆகி விட்டாலும் கூட நியூட்டன் காலத்தில் அவருக்கு உலோகம் வளர்க்கப்படக் கூடிய ஒன்றே என்பதை அறிய மிகவும் உதவியது.

நியூமேன் போலவே பிரின்ஸிப்பும் மிகப் பெரும் மேதைகளான நியூட்டன், பாயில், ஸ்டார்கி ஆகிய மூவர் கண்டறிந்த பிலாஸபர்ஸ் மெர்குரி என்பதை உருவாக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

இதற்கான செய்முறை மிக சிக்கலானது; நீண்டது.

பிரின்ஸிப் பிலாஸபிகல் மெர்குரியுடன் தங்கத்தைச் சேர்த்து அதை சீலிடப்பட்ட ஒரு முட்டை வடிவிலான கண்ணாடியில் வைத்து என்ன நடக்கிறது என்று பார்த்தார். என்ன ஆச்சரியம்! விசித்திரமான விஷயங்கள் ஆரம்பமாயின.

அந்தக் கலவை கொதிக்க ஆரம்பித்தது. பிறகு அது பசை போன்ற திரவமாக மாறியது. பல நாட்கள் கொதிக்க வைக்கப்பட்ட பின்னர் சுரங்கத்தில் தாங்கள் பார்த்ததாக பழைய காலத்தில் சுரங்கத் தொழிலாளிகள் சொன்னார்களே, அந்த விசித்திரத்தைப் பார்த்தார்.

ஆம், முட்டை வடிவிலான கண்னாடிக் குடுவையிலே தங்கமும் பாதரஸமும் (மரம் போல) வளர்ந்திருந்தன.

ஆனால் அந்த மரத்தில் அதிக அளவு தங்கம் உருவாகவில்லை. அவர் போட்ட தங்கத்தை விட புதிதாக உருவாகி இருந்த தங்கம் மிகக் குறைந்த அளவே தான் இருந்தது. என்றாலும் கூட மிகக் கடுமையான சோதனைச் சாலை கட்டுப்பாடுகளின் மூலமாக ஒரு திடமான உலோகம் மீண்டும் மீண்டும் சோதனை செய்யப்பட்ட நிலையில் கொப்பளித்து, நிறம் மாறி, ஒளி விடும் பொறிகளை உருவாக்கி வேறு ஒரு நிலையை அடையும் என்பதை உறுதியாகக் காண முடிந்தது

 

இது நியூமேனுக்கும், பிரின்ஸிப்புக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

(12 திறவுகோல்கள் புத்தகத்தில் உள்ள 12 படங்களைப் பார்க்க விரும்புவோர் கீழ்க்கண்ட இணையதளத்தில் பார்க்கலாம்: https://en.wikipedia.org/wiki/The_Twelve_Keys_of_Basil_Valentine  

புத்தகத்தை ஆங்கிலத்தில் படிக்க விரும்புவோர் http://www.levity.com/alchemy/twelvkey.html உள்ளிட்ட பல தளங்களிலிருந்து புத்தகத்தைத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.)                                       (தங்க ரகசியம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

அமெரிக்காவில் பேரறிஞர் ஐன்ஸ்டீன் வாழ்ந்த காலத்தில்,

ஹாரி பாலட் க்ளாதியர்ஸ் (Harry Ballot Clothiers) என்பது பிரின்ஸ்டனில் நாஸா வீதியில் உள்ள ஒரு பெரிய ஆடை நிறுவனமாகப் புகழ் பெற்றிருந்தது. அங்கு நல்ல ஆடைகளை வாங்காதவர்களே இல்லை.

 

பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் தன் உடை விஷயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்துபவர் இல்லை. அவரது பழைய கோட் மிகவும் அழுக்காக இருந்தது.

 

அவரது உதவியாளராக இருந்த பெண்மணியான ஹெலன் ட்யூகாஸ் (Helen Dukas) அவரது அழுக்கு கோட்டை எப்படியாவது தூக்கி எறிய வேண்டும் என்று கங்கணம் பூண்டிருந்தார்.

ஆனால் ஐன்ஸ்டீனுக்கோ அதில் துளிக் கூட சம்மதம் இல்லை.

 

ஒரு போதும் அந்தக் கோட்டை தூக்கி எறியக் கூடாது என்று அவர் கண்டிப்பாகச் சொல்லி விட்டார்.

 

அதை டிரை க்ளீனரிடம் போட்டால் போதும் என்றார் அவர்.

அடுத்த நாள் ஹெலன் ஹாரி பாலட் கடைக்குச் சென்று அங்கிருந்த கடைக்காரரான வெண்ட் ராஃப் (Wendroff) என்பவரிடம் ஐன்ஸ்டீனின் கோட்டைக் காண்பித்து அதே போல ஒரு புது கோட் கிடைக்குமா என்று கேட்டார்.

புது கோட் கிடைத்தது.

 

அது புதிது என்பதற்கான சீட்டை அதிலிருந்து கிழித்து எறிந்து விட்டு அதை டிரை க்ளீனர் கொண்டு வரும் மூட்டையில் சேர்த்தார் ஹெலன்.

 

டிரை க்ளீனிங்கிலிருந்து வந்த கோட்டைப் பார்த்த ஐன்ஸ்டீன் ‘அட, நான் சொன்னது சரியாக இருக்கிறதே. டிரை க்ளீனிங் செய்யப்பட்ட கோட் எவ்வளவு ஜோராக இருக்கிறது! என்றார்.

 

      நடந்தது என்னவென்று யாருக்கும் தெரியாது. ஹெலனுக்கு மட்டுமே வெளிச்சம்!

****

 

மேலை நாட்டினர் போற்றும் வாஸ்து சாஸ்திரம்! (Post No.4173)

Written by S.NAGARAJAN

 

Date: 30 August 2017

 

Time uploaded in London- 5-52 am

 

Post No. 4173

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

by ச.நாகராஜன்

 

 

ஹிந்து தத்துவத்திற்கும் அதைச் சார்ந்த கலைகளுக்கும் உல்கெங்கும் இப்போது பெரும் வரவேற்பு உள்ளது.

யோகா

ஆயுர்வேதம்

வாஸ்து சாஸ்திரம்

 

 

ஆகியவை மேலை நாட்டினரால் நாளுக்கு நாள் அதிகமாகப் பின்பற்றப்படுகின்ற்ன.

 

இவை அனைத்தும் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்திற்கும் ஆன்ம உயர்விற்கும் வழி வகுக்கின்றன என்பது உண்மை.

பௌதிக ரீதியாக மட்டும் அனைத்தையும் அணுகும் மேலை நாட்டு விஞ்ஞானம் ஆன்மீக ரிதியாகவும் அனைத்தையும் அணுகும் ஹிந்துத்வத்திடம் போட்டி போட முடியாது என்கின்ற சாஸ்வதமான உண்மையை உலகம் இப்போது உணர்கிறது.

காத்லீன் காக்ஸ் என்ற பெண்மணி தி பவர் ஆஃப் வாஸ்து லிவிங் ( Kathleen Cox – The Power of Vastu Living) என்ற நூலை எழுதி வாஸ்து சாஸ்திரத்தின் பெருமையை உலகம் உணரச் செய்திருக்கிறார்.

 

1985ஆம் ஆண்டு நியூயார்க்கிலிருந்து நியூடெல்லி வந்தவர் இங்குள்ள ஹிந்து வாழ்க்கை முறையைக் கண்டு வியந்து போனார்.

1990இல் நிரந்தரமாக டில்லியை தன் இருப்பிடமாக ஆக்கிக் கொண்டார்.

 

 

காலையில் எழுந்ததிலிருந்து இரவு வரை ஒவ்வொரு ஹிந்துவும் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்கள், சடங்குகள் அனைத்தும் அவரை வியப்பில் ஆழ்த்தின. வெறும் உடல் வளர்ச்சிக்காக மட்டுமின்றி ஆன்மீக வளர்ச்சிக்காகவும் அவை அமைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அவர் வாஸ்து சாஸ்திரத்தின் பால் தன் மனதைச் செலுத்தி அதைக் கற்றுத் தேர்ந்தார்.

மூன்று முக்கிய விஷயங்களை வாஸ்து சாஸ்திரத்தின் மூலமாக அவர் வலியுறுத்துகிறார்.

 

 

  • ஐம்பூதங்களைப் போற்றி பிரபஞ்சத்தின் லயத்தை ஒருவர் மதிக்க வேண்டும்.
  • இயற்கை உலகை நாம் வாழும் இடத்திலும் நாம் பணி புரியும் இடத்திலும் இணைக்க வேண்டும். இயற்கையின் வெளி உலகும் வீட்டில் நாம் வாழும் உலகும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாத தொடர்புடன் இருக்கிறது.
  • நாமும் கூட இறைசக்தியின் ஒரு அங்கமே என்பதை உணர்ந்து நாம் யார் என்பதை உணரத் தலைப்பட வேண்டும்

ஆகிய இந்த மூன்று கொள்கைகளை வலியுறுத்தி வாஸ்து சாஸ்திரம் எப்படி நம் வாழ்க்கையை வளப்படுத்த முடியும் என்பதை அவர் 400 பக்கங்களில் தெளிவு படுத்துகிறார்

 

.

அவரது இணையதளம் www.vastuliving.com பல உண்மைகளை விளக்குகிறது.

கோவில்கள் அனைத்தும் வாஸ்து சாஸ்திரப்படியே அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு வழிபாட்டிற்காகக் குழுமும் மக்களுக்கு உயரிய ஆன்மீக அனுபவங்கள் ஏற்படும் வகையில் அவை அமைக்கப்பட்டுள்ளன.

 

சிற்ப சாஸ்திரம், ஆகம சாஸ்திரம், வான சாஸ்திரம் முதலானவை ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருப்பதை அதை நன்கு அறிந்தோர் உணரலாம்

.

ஹிந்து வாழ்க்கை முறையில் அனைத்துக் கலைகளும் அற்புதமாக இணைக்கப் பட்டிருப்பதை மேலை நாட்டினர் உணர்ந்து அதை நமக்கே திருப்பிச் சொல்லி நம் அருமையை விளக்கும் போது தான் நாம் நமது சாஸ்திரங்களை மதிக்கத் தலைப்படுகிறோம்.

 

வேதனையான் உண்மை இது!

 

ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்கள் பதிக்கப்படாமல் சுவடி வடிவிலேயே உள்ளன.

 

சில சுவடிகள் பதிக்கப்பட்டு அந்த நூல்கள் தரும் தாக்கத்திற்கே மேலை உலகம் வியப்பின் உச்சிக்கு ஏறும் போது அனைத்தும் பதிக்கப்பட்டால் நமது பெருமை எந்த உயரத்திற்குச் செல்லும்!

நினைத்துப் பெருமைப்படலாம்; வாஸ்து உள்ளிட்ட் அனைத்தையும் பழைய காலம் போல அனைவரும் கற்றுப் பின்பற்றலாம்.

 

 

ஹிந்து வாழ்க்கை முறை உலகெங்கும் பரவ ஹிந்துக்கள் அதை வாழ்ந்து காட்ட வேண்டும்!

****

தமிழ்ச் சுவடி மர்மம்- Part 2! (Post No.4169)

Written by S.NAGARAJAN

 

Date: 28 August 2017

 

Time uploaded in London- 5-37am

 

Post No. 4169

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழ்ச் சுவடி மர்மம்!

 

மாயச் சதுர மர்மத்தைச் சுவடிகளிலிருந்து விளக்கும் தமிழ்ப் பெண்மணி தஞ்சாவூர் சத்தியபாமா! – 2

 

ச.நாகராஜன்

****

 

 

மாயச் சதுரத்த்தை அமைக்கும் மூன்றாவது வகை ஒரு கூட்டு எண்ணை கொடுக்கப்பட்டு அதற்காக சதுரத்தை அமைப்பதாகும்.

ஒரு பாடலைப் பார்ப்போம்:

 

கப்பலெண் மிகாமல் இரண்டோர் எட்டில்

    கருதிய பதினொன்றில் பதிமூன் றாக்கிச்

செப்பமுடன் நவமாக்கிப் பக்க மாக்கிச்

    சேர்ந்ததோர் நான்காறில் செய்த பின்பு

ஒப்பிய இலக்கத்தைப் பாதி யாக்கி

    ஒன்று தள்ளி ராசியின்மேல் பதினா லாக்கி

எப்படியும் முதலேழில் மூன்றில் ஐந்தாம்

    ஈரைந்தில் பதினாறாம் இயம்ப லாமே

         (சுவடி எண்  1475)

 

 

இரண்டு படிகளில் சொல்லப்பட்டுள்ள இக்கணக்கின் வழிமுறையில் முதலில் 2,8,11,13,9,15,4,6 ஆகிய சிறு சதுரங்களில் முறையே 1,2,3,4,5,6,7,8 ஆகிய எண்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் பதினாறு சதுரங்களை எண்களுடன் காண்போம்:

 

 

 

1 2 3 4
5 6 7 8
9 10 11 12
13 14 15 16
       

 

 

இதில் இரண்டாம் கட்டத்தில் 1, எட்டாம் கட்டத்தில் 2 என்று இப்படி முறையே எண்களைப் பதிக்க வேண்டும்.

வருகின்ற சதுரம் முதல் படியில் இப்படி இருக்கும்

  

  1   7
  8   2
5   3  
4   6  

 

நவம் என்றால் ஒன்பது. ரா – இங்கு பன்னிரெண்டு.

பஷீகம் – 15 நாட்கள் கொண்டது. இங்கு 16. இவ்வாறாகச் சதுரத்தை அமைத்துக் கொண்ட பின்னர்க் கூட்டுத் தொகையில் பாதியில் ஒன்றைக் கழிக்க வேண்டும். பின்பு முறையே 12,14,1,7,3,5,10,16 ஆகிய கட்டங்களில் முன் கூறப்பட்ட எண்ணில் ஒன்றைக் குறைத்து இறங்கு வரிசையில் எழுத வேண்டும்.

 

சான்றாக சுவடியில் தரப்பட்டிருந்த மாயச் சதுரத்தின் கூட்டுத் தொகை 64. 64இல் பாதி 32.

ஒன்றைக் கழிக்க வருவது 31.

 

முன்னர் அமைத்த மாயச் சதுரத்தில் நிறைவு செய்யப்படாத கட்டங்களில் (12,14,1,7,3,5,10,16) முறையே 31,30,29,28,27,26,25,24 ஆகிய எண்களை நிரப்ப வேண்டும்.

 

 

  

29 1 27 7
26 8 28 2
5 25 3 31
4 30 6 24

 

மாயச் சதுரம் இப்போது அமைந்து விட்டது.

இந்த மாயச் சதுரத்தில் எந்த வரிசையையும் இடமிருந்து வலமாகக் கூட்டினாலும் மேலிருந்து கீழாகக் கூட்டினாலும் மூலை விட்டங்கள் வழியே கூட்டினாலும் வரும் கூட்டுத் தொகை 64!

 

 

போனஸாக இன்னொரு விந்தையும் இதில் உண்டு!

நான்கு மூலைகளில் உள்ள கட்டங்களில் அமைந்துள்ள எண்களைக் கூட்டினாலும் வருவது 64 தான்!!

 

    இப்படி இந்தச் சுவடி தரும் விந்தை பல!

இவற்றை நன்கு ஆராய்ந்த திருமதி சத்தியபாமா ஆய்வின் முடிவில் தரும் முடிவுகள் ஐந்து.

 

 

  • அறிவிற்கு விருந்தூட்டும் தமிழரின் சிறந்தப் பொழுது போக்குக் கணித விளையாட்டுக் குறித்து அறிந்து கொள்ள இந்த மாயச் சதுரங்கள் ஆதாரங்களாக விளங்குகின்றன.
  • மாயச் சதுரங்களை அமைப்பதற்கான இத்தகைய பாடல்கள் வேறு எந்தக் கணித நூல்களிலும் இதுவரை கிடைக்கவில்லை. அந்த நிலையில் இவை அரிதானவையாக விளங்குகின்றன.
  • மாயச் சதுரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யும் ஒரு சில கணக்குகள், கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், பல கணக்கு வகை முதலான நூல்களில் காணப்படுகின்றன.
  • மாயச் சதுரங்களை உருவாக்கும் மேலை நாட்டினரின் கணிதச் செய்முறைகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யக் கூடிய ஆய்வுக் களமாக இவை விளங்குகின்றன.
  • காலம் குறித்த செய்திகள் கூறப்படவில்லை என்றாலும் காலத்தில் பழமையானவையாகப் பழந்தமிழரின் கணித அறிவை உலகிற்குப் பறை சாற்றுவனவாக இவை விளங்குகின்றன.

 

 

இந்த ஒரு சுவடியிலேயே இவ்வளவு அரிய பாடல்களைக் காணும் போது இன்னும் கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம், பல கணக்கு வகை போன்ற நூல்களை ஆராய்ந்தால் நாம் பெறக் கூடிய விந்தைகள் எவ்வளவோ.

 

திருமதி சத்தியபாமா அவர்களின் முழு ஆய்வையும் பதிப்பிக்க தமிழ் உலகம் முன் வர வேண்டும்.

 

தமிழின் பெருமை எல்லயற்றது.

தமிழரின் அறிவு நுட்பமானது; பரந்து பட்டது.

இதை உலகம் அறிய வழி செய்ய வேண்டும்.

              ***                                 (குறிப்பு: திருமதி

 

சத்தியபாமா அவர்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் அவரை இந்தத் துறையில் நன்கு தூண்டலாம். அவரது ஆய்வு பற்றி மேலும் கூடுதல் தகவல்களை இந்தத் தளத்திற்கு அனுப்பச் சொல்லலாம். எனக்கு அறிமுகமில்லாத நிலையில் அவரைப் பாராட்டி அவரையும் அவரது ஆய்வையும் நமது தளத்தின் மூலமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியுறுகிறேன்.)

–Subham–