பாரதி போற்றி ஆயிரம் – 39 (Post No.4674)

Date: 29 JANUARY 2018

Time uploaded in London- 5-47 am

COMPILED by S NAGARAJAN

Post No. 4674

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

பாரதி போற்றி ஆயிரம் – 39

  பாடல்கள் 222 முதல் 231

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கவிஞர் தமிழழகன் பாடல்கள்

கோகிலக் கவிஞன்!

தெய்வத் தமிழினில் செய்வதே பாட்டெனச்

      சிந்தை உயர்த்திடுவான் – அதைக்

கைவரும் மாகலை காட்டி நமையும்

      கனவில் பெயர்த்திடு வான்

ஞாலம் வியந்திடக் காலம் கடந்தும் மெய்ஞ்

        ஞான ரதம் விடுவான்; – அதன்

மூலம்  புதுயுகச் சீலம் நமக்குற

         மோன பதம் நடுவான்!

நாட்டொரு மைக்கெனக் கூட்டழைப் பிட்டு

        நவயுகம் காட்டிடு வான்; – இசைப்

பாட்டும் பனுவலும் பாரதத் தாயின்

        பணிக்குமே சூட்டிடுவான்!

எத்தொழிலையும் இகழ்ச்சி இல் லாமல்

      இயற்றுக முன்னம் என்பான்; – தவ

உத்தமர் தாம் அவர் உண்மைத்தெய் வங்களாகி

      ஓங்குக பின்னும் என்பான்!

பெண்அடி மையினை எண்ணிடும் மூடர் தம்

        பேச்சினைத் தூற்றுமென்பான்; – அவர்

மண்ணடி மை யற மாதா பராசக்தி

        மாறிய தோற்ற மென்பான்!

சாதிகள் ஏதென்றும் சண்டை ஏ தென்றும்

       சகோதர வாதிடுவான்; – யார்க்கும்

நீதிகள் சொல்வதில் நிச்சயம் மாறாத

       நேர்மையும் ஓதிடு வான்!

புல்லிலும் வைரப் புதுப்படை வாங்கி முன்

       போருக் கெனத் திமிர்வான்; – நெடு

வில்லிலும் வாளிலும் வெல்படை  வாணி

       விஜய னொடும் நிமிர்வான்!

பழமை உரத்தின் செழுமையி லே வேர்ப்

       பலாவின் புதுமை செய்வான்; – அவை

முழுமையும் பின்னர்ப் பழமையாய் மாற

       முனையும் விதமும் சொல்வான்!

தனி என வாழும் மனிதனுக் கும்சமு

       தாயத்தின் பங்கை இட்டான்; – அதற்(கு)

இனி ஓர் விதி செய்வம் என்றுமுன் கூறி

       இதயமும் நன்கு தொட்டான்!

பாரதி இவ்வரும் பண்புறு நாட்டின்

      பரவசக் கோகிலமாம்! – அவன்

பேர் எதி லும் நிற்கப் பேணுவோர் வாழ்வெலாம்

      பின்பும் குதூகலமாம்!

தமிழழகன்: சந்தக்கவிமணி என்ற பட்டம் பெற்றுள்ள இவர் ஏராளமான கவிதைகளைப் புனைந்துள்ளார். பாரதிதாசன் விருது பெற்றுள்ளார்.

தொகுப்பாளர் குறிப்பு: 7-12-1975 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.

நன்றி: கவிஞர் தமிழழகன்; நன்றி: தினமணி சுடர்

***

பாரதி போற்றி ஆயிரம் – 38 (Post No.4670)

Date: 28 JANUARY 2018

Time uploaded in London- 6-07 am

COMPILED by S NAGARAJAN

Post No. 4670

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

பாரதி போற்றி ஆயிரம் – 38

  பாடல்கள் 218 முதல் 221

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

சங்கு சுப்பிரமணியன், மதிவண்ணன், ஆர்.பி.சாரதி பாடல்கள்

இலக்கியத் தலைவன் பாரதியார்

கம்பனைப் பெற்ற நாட்டில்

  கவிமணம் ஓயு நாளில

வம்பரின் மந்தை தன்னில்

  வளர்த்திட தேச பக்தி

உம்பர் மா உலகதாக

  உயர்த்திடத் தமிழகத்தை

அம்புவி வந்த வீ ர!

  அருங்கவி பாரதியார்!

சங்கு சுப்பிரமணியன்: பாரதியைப் பெரிதும் போற்றி பாரதியின் பாடல்களைப் பரப்பியவர். தேசபக்தர். சங்கு கணேசன் நடத்தி வந்த சுதந்திரச் சங்கு பத்திரிகையில் உடன் இருந்தவர்.

தொகுப்பாளர் குறிப்பு: இந்தப் பாடல் இலக்கியத் தலைவன் பாரதியார் என்ற கட்டுரையின் முடிவில் வரும் பாடல். இது சுதந்திரச் சங்கு 9-9-1931 தேதியிட்ட இதழில் வெளியானது.

இதை குமரிமலர் பத்திரிகையில் திரு ஏ.கே.செட்டியார் பாரதியைப் பற்றிய பழைய இதழ்களில் வந்த கட்டுரைகளை வெளியிடும் போது மீண்டும் வெளியிட்டார்.

நன்றி: குமரி மலர்.

பாரதி

மதிவண்ணன்

வான்வியப்பு! தீத்தெறிப்பு! நீர்ச்சிலிர்ப்பு!                  மலர் வனப்பு! இவையனைத்தும் ஒன்றாய்ச் சேர்ந்த           தேன் படைப்பு பாரதியின் பாடல்! நாட்டின்                சிறுமை கண்டு பொங்கி வந்த அவரின் பாட்டால்   கூன்படைத்து பள்ளத்தில் வீழ்ந்தி ருந்த                குருடர்களும் எழுச்சியுற்று விழியைப் பெற்றார்!                நான் படைத்த பாட்டெல்லாம் அன்னை நாட்டின்             நலம் பாட வந்ததென்றார் பாரதியார்                       இலக்கியத்தில் இருள்படிந்த நேரம் வந்த                இளங்கதிர் தான் பாரதியார்! வெற்றுச் செய்யுள்             கலக்கி வந்த காலத்தில் அமுதைப் பாட்டில்         கலந்தளித்தார்! குயில் பாட்டும் கண்ணன் பாட்டும்  பலமுறையும் படித்தாலும் இன்பம் ஊட்டும்!           பாஞ்சாலி சபதத்துள் வீ ரம் பொங்கும்!                  நிலை வாயில் பாரதியார், பணிந்து சென்றால்           நிச்சயமாய் இலக்கியத்தின் இல்லம் காண்போம்!

மதிவண்ணன்: கவிஞரைப் பற்றிய விவரங்கள் தேவை.

தொகுப்பாளர் குறிப்பு: 7-12-1975 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கவிதை.

நன்றி: கவிஞர் மதிவாணன் நன்றி: தினமணி சுடர்

ஒரு கவிஞனின் வணக்கம்!

மதிவண்ணன்

சொற்பதங்கள் அனைத்துக்கும் பொற்பதங்களைத் தந்தே அற்புதமாய் நடக்கவைத்த விற்பனனே! பாரதியே!       ஊமைக்கு நீயோ உயிர்நாக்கு போன்றவன் தான்          தீமைக்கு என்றாலோ தீ நாக்காய் எழுந்தவன் நீ!      வானத்தைச் சொற்களினால் வளைத்துப் பிடித்தவன் நீ! மோனத்திலும் கவிதை மோகனத்தைக் கண்டவன் நீ!      நெஞ்சப் பூக்களுக்கு நிறக் கவர்ச்சி தந்தவன் நீ!       வஞ்சத்தை மாய்க்கின்ற வாளை எடுத்தவன் நீ!          தேனில் நனைத்தெடுத்த தீயின் சொல் தொடுத்து        வானில் கால் பதித்த மண்ணில் விதைத்தவன் நீ!        சமுதாயச் செவிகட்குச் சரியான நேரத்தில்             அமுதாய கவிகளை அறிவித்த பாவலனே!            மண்ணுக்குப் பாடியவோர் மாகவிஞ! என்மேல் உன்                                   கண்பார்வை வேண்டும்! கவிஞன் வணங்குகிறேன்!

மதிவண்ணன்: கவிஞரைப் பற்றிய விவரங்கள் தேவை.

தொகுப்பாளர் குறிப்பு: 12-12-1982 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

நன்றி: கவிஞர் மதிவாணன் நன்றி: தினமணி சுடர்

பாரதிச் சுடர்

ஆர்.பி.சாரதி

தமிழெனும் சோலையில்                           தனிமலர் பூத்தது                                     தங்க மலரடியோ!

தங்கம் உருகித்                                      தேனாய்ப் பாய்ந்தது                                   தெய்வக் கற்பனையோ!

கமழுங் கற்பனை                                    கவினிதழ் விரித்தது                                கவிதை அமிழ்தடியோ

அமிழ்தில் குழைந்து                                    அனலிற் கனன்றது                                அற்புதம் பாரடியோ!

பார்மிசை யெங்கணும்                             பேரொளி பாய்ந்தது                                 பாரதிச் சுடரடியோ!

ஆர்.பி.சாரதி: கவிஞரைப் பற்றிய விவரங்கள் தேவை.

தொகுப்பாளர் குறிப்பு: 7-12-1975 தினமணி சுடர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

நன்றி: ஆர்.பி.சாரதி நன்றி: தினமணி சுடர்

***

பாரதி போற்றி ஆயிரம் – 37 (Post No.4666)

Date: 27 JANUARY 2018

Time uploaded in London- 6-51 am

COMPILED by S NAGARAJAN

Post No. 4666

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

  பாடல்கள் 214 முதல் 217

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

         நா.சீ.வரதராஜன் பாடல்கள்        

பாரதியின் பராசக்தி

ஆதார சக்தியினை, அணுவில், காற்றில்,

       அனைத்திலுமே கலந்தவளை, அமுதை, ஞான

மாதாவை, பிணி தீர்க்கும் மருந்தை, வாழ்வில்

       மலர்ச்சியினை, உயிர்ச்சுடரை, உணர்வை, பண்டை

வேதாகமம் சொல்லும் பொருளை, மூன்று

        விதம்கிளைத்து வினைபுரியும் மூலத்தைத்தான்

நாதாந்த வடிவான சக்தி என்றே

        நாவினிக்கப் பாரதியார் பாடக் கண்டோம்!

விண்டுரைக்க அரியவளாய், கோள்கள் சுற்ற

       விரிந்திருக்கும் வான்வெளியாய், வானில் காற்று

மண்டலமாய், உயிர்ப்பு தரும் மழையாய், பின்னர்

       வாழ்வழித்துப் பாழ்விளைக்கும் வெள்ளக் காடாய்,

பண்டுமுதல் இன்றுவரை பகலைச் செய்யும்

       பரிதியெனும் ஒளியருளாய், உழைக்கும் போதில்

மண்டுகின்ற பலதொழிற்கும் ஆற்றல் கூட்டும்

       மாமாயப் பெருவலியாய் அவளைக் கண்டோம்!

காலமெனும் பெருவனத்தில் அண்டக்கோளக்

       கவின்மரத்தில் முரல்வண்டாய் அவளைக் காட்டும்

கோலமுறும் அவள்வடிவம் அன்பே என்னும்

       கூடுகின்ற இன்பமவள் படிமம் என்னும்.

ஞாலமிதும், விண்ணகமும், திசைகள் யாவும்,

       நல்லவற்றில், அல்லவற்றில், அவளைக் காணும்!

மூலமவள், முடிவுமவள் என்றே பாடும்!

       மூண்டுவிட்ட பக்திச்சொல் நடனம் ஆடும்!

ஊழிக்கூத்துப் பாடலில் அன்னை

        உருவம் பொலிவாய் அசைகிறது -கவி

        ஓசையில் நெஞ்சே கசிகிறது!

உறுமிக் கொண்டே ஞானச் சுடராய்

       உயரும் ஒளியே தெரிகிறது – பின்

       ஊர்த்துவ நடனம் புரிகிறது!

பாழும் பதறித் திசைகள் சிதறிப்

       பரவும் கூத்தும் விரிகிறது – தமிழ்ப்

       பாடல் விந்தை புரிகிறது!

பண்ணில், சொல்லில், உமையைச் சிவனைப்

       பற்றிக் கொண்டே படர்கிறது – உயர்

       பரவச நிலையை அடைகிறது!

கவிஞர் நா.சீ.வரதராஜன் : அமரர் நா.சீ.வரதராஜன் பெருங் கவிஞர்.பல நூல்களை இயற்றியவர். பாரதி கலைக்கழகத்தின் கவிமாமணி பட்டம் பெற்றவர். இவரது புனைப்பெயர்:பீஷ்மன்; பிறப்பு : 20-5-1930

தொகுப்பாளர் குறிப்பு : கல்கி வார இதழில் வெளியாகியுள்ள பாடல் இது. வெளியான ஆண்டு 1978.

நன்றி: கல்கி வார இதழ்; நன்றி: அமரர் நா.சீ.வரதராஜன்

***

பாரதி போற்றி ஆயிரம் – 35 (Post No.4663)

Date: 26 JANUARY 2018

Time uploaded in London- 7-21 am

Written  by S NAGARAJAN

Post No. 4663

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

((SECOND PART WAS POSTED YESTERDAY))

  பாடல்கள் 198 முதல் 205

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பண்டித ஜனாப் K.அப்துல் சுகூர் (1933) பாடல்கள்

பாரதியார் பா மணம்

தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியிலே என்ற மெட்டு

  1. பூ மணக்குது புகழ் மணக்குது

புண்ணியர் பாடலிலே

பா மணக்குது பயன் மணக்குது

பாரதி பாட்டுள்ளே

  1. இனிமை மொழி யினிசையிலங்குது

இன்பப் பாடலிலே

பனி மொழிச்சியர் கலைமணக்குது

பாரதி பாட்டுளே

  1. காவியக்கனி கனிந்திருக்குது

காமர்ப் பாடலிலே

பாவியலணி பரந்திருக்குது

பாரதி பாட்டுளே

  1. புண்ணிய நெறி பொலிந்திருக்குது

புதுமைப் பாடலிலே

பண்ணியல்களின் நடைநடக்குது

பாரதி பாட்டுளே

  1. தகைமைதத்துவந் தவழ்ந்திருக்குது

தண்ணார் பாடலிலே

பகைமை குன்றிய வாழ்க்கை தங்குவது

பாரதி பாட்டுளே

  1. தேஞ்சாரம் பசுந் தேறலிருக்குது

தேசப் பாடலிலே

பாஞ்சாலி நிறை படர்ந்திருக்குது

பாரதி பாட்டுளே

  1. ஜெயந்தொனிக்குது திறனொலிக்குது

திவ்யப் பாடலிலே

பயந்தொதுங்குது தீண்டாமைப் பேய்

பாரதி பாட்டுளே

  1. சாதிக்கொடுமைகள் தகர்ந்தழியுது

சங்குப் பாடலிலே

பாதகர் செயும் மோசமோடுது

பாரதி பாட்டுளே

(கவிதையின் இறுதிப் பகுதி அடுத்து வரும்)

– “பாரதி”     – மாதப் பத்திரிகை

உத்தம பாளையம்  1933 ஆகஸ்டு

கவிஞர் குறிப்பு : தெரியவில்லை

தொகுப்பாளர் குறிப்பு : மகாகவி பாரதியார் பற்றிய பல அரிய விஷயங்களை மிகவும் சிரமப்பட்டு சேகரித்து தனது இதழான குமரி மலர் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார் திரு ஏ.கே.செட்டியார் அவர்கள். 1974ஆம் ஆண்டு இதழ்களைப் பார்த்தால் பல சிறப்பான செய்திகளை அறியலாம். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல்.

நன்றி: என்றென்றும் எம் நினைவில் இருக்கும் – திரு ஏ.கே.செட்டியார்; குமரி மலர்

***

பாரதி போற்றி ஆயிரம் – 36 (Post No.4658)

Date: 25 JANUARY 2018

Time uploaded in London- 5-48 am

Written  by S NAGARAJAN

Post No. 4658

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

  பாடல்கள் 206 முதல் 213

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பண்டித ஜனாப் K.அப்துல் சுகூர் (1933) பாடல்கள்

பாரதியார் பா மணம் (தொடர்ச்சி)

தேனிருக்குது தினையிருக்குது தென்பழனியிலே என்ற மெட்டு

9) சேவை முறைகள் சேர்ந்திருக்குது

        தேசப் பாடலிலே

   பாவையர் சுதந் தரமிலங்குது

        பாரதி பாட்டுளே

10) விடுதலையெனும் வீ ணையொலிக்குது

வித்தகப் பாடலிலே

படுபவத் தொழில் பறந்திரியுது

பாரதி பாட்டுளே

  1. அச்சமென்ற சொலகன்றிருக்குது

அன்புப் பாடலிலே

பச்சமென்ற சொல்பரவி நிற்குது

பாரதி பாட்டுளே

12) கொஞ்சுங்காதல் திறந்தொனிக்குது

குயிலின் பாடலிலே

பஞ்சமோடிட வழியிருக்குது

பாரதி பாட்டுளே

13) அடிமையென்ற சொலகன்றிருக்குது

அமுதப் பாடலிலே

படிதலென்ற சொற்பழுதுபட்டது

பாரதி பாட்டுளே

14) முத்தமிழெனும் வெற்றிமுழங்குது

முரசுப் பாடலிலே
பத்தழகுகள் பரவிநிற்குது

பாரதி பாட்டுளே

15) அண்டத்தை வெல்லும்

ஆண்மைதங்குது அழகுப்பாடலிலே

பண்டைத்தமிழர் வீ றிலங்குது

பாரதி பாட்டுளே

16) பாரதியென்றிட சக்திஜெனிக்குது

பாப்பாப் பாடலிலே

“பாரதி”மாளிகை  தன்னிலுலாவுது

பாரதி பாடல்களிலே

                               (கவிதை முற்றும்)

– “பாரதி”     – மாதப் பத்திரிகை

உத்தம பாளையம்  1933 ஆகஸ்டு

கவிஞர் குறிப்பு : தெரியவில்லை

தொகுப்பாளர் குறிப்பு : மகாகவி பாரதியார் பற்றிய பல அரிய விஷயங்களை மிகவும் சிரமப்பட்டு சேகரித்து தனது இதழான குமரி மலர் பத்திரிகையில் வெளியிட்டு வந்தார் திரு ஏ.கே.செட்டியார் அவர்கள். 1974ஆம் ஆண்டு இதழ்களைப் பார்த்தால் பல சிறப்பான செய்திகளை அறியலாம். அவற்றுள் ஒன்று இந்தப் பாடல்.

நன்றி: என்றென்றும் எம் நினைவில் இருக்கும் – திரு ஏ.கே.செட்டியார்; குமரி மலர்

***

பாரதி போற்றி ஆயிரம் – 34 (Post No.4654)

Date: 24 JANUARY 2018

Time uploaded in London- 5-44 am

Written  by S NAGARAJAN

Post No. 4654

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

SHARE IT WITH AUTHOR’S AND BLOG’S NAME; DON’T DELETE IT; PICTURES ARE NOT OURS. BEWARE OF COPYRIGHT LAWS.

பாரதி போற்றி ஆயிரம் – 34

  பாடல்கள் 194 முதல் 197

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

மரணத்தை வென்ற மகாகவி

ஆசை தனக்கொரு காணிநிலம்என்று

   அற்புதப் பாட்டிசைத்தான் – அன்று

ஆறறிவற்றவர் தம்மிடையே தமிழ்

   ஆனந்தக் கூத்தடித்தான்!

மீசை துடித்திட மேனிகொதித்திட

   வீரக்கனல் வடித்தான் – கவி

வேந்தன் உலகத்து மாகவிவாணரை

   வெல்லும் தமிழ் கொடுத்தான்

தந்தையர் நாடென்ற பேச்சினிலேஒரு

    சக்தி பிறக்குதென்றான் – அவன்

சாப்பிடும்  சோற்றுக்கு வைக்கவில்லைகவிச்

    சந்ததி வைத்துச் சென்றான்

சிந்தையணுவிலும் ரத்தத்திலும் இந்த

    தேசத்தில் பாசம்வைத்தான் – அட!

தீயொரு பக்கமும் தேனொரு பக்கமும்

    தீட்டிக் கொடுத்து விட்டான்!

சந்திரர் சூரியர் உள்ளவரையிலும்

   சாவினை வென்றுவிட்டான் – ஒரு

சாத்திரப் பாட்டினில் பாரததேசத்தின்

   தாய்மையை வார்த்துவிட்டான்

இந்திர தேவரும் காலில்விழும்படி

   என்னென்ன பாடிவிட்டான் – அவன்

இன்றுநடப்பதை அன்றுசொன்னான்புவி

   ஏற்றமுரைத்து விட்டான்!

வங்கத்து நீரினை மையத்துநாட்டுக்கு

   வாரிக்கொணர் என்றான் – அந்த

வானம் அளந்துவிஞ் ஞானம்படைத்திட

   வாரும்தமிழ ரென்றான்

சிங்க மராட்டியர் கற்பனைக்கீடொரு

   சேரத்துத் தந்தமென்றான் -இந்த

தேசபெருமைக்கு ஆரம்பம் செய்தவன்

   பாரதித்தேவன் என்பான்!

தொகுப்பாளர் குறிப்பு:  இந்தக் கவிதை 1978ஆம் ஆண்டில் கல்கி வார இதழில் கண்ணதாசன் எழுதி வந்த ‘கண்ணதாசன் பக்கம் என்ற தொடரில் வெளியாகியுள்ளது.

10-9-1978 அல்லது 17-9-1978 தேதியிட்ட இதழாக இருக்கலாம். (இதழில் ஒன்பதாம் பக்கத்தில் வெளியாகியுள்ளது)

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

‘***

பாரதி போற்றி ஆயிரம் – 32 (Post No.4642)

Date: 21 JANUARY 2018

Time uploaded in London- 6-12 am

Compiled  by S NAGARAJAN

Post No. 4642

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 32

  பாடல்கள் 180 முதல் 187

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியும் பாரதிதாசனும் (தொடர்ச்சி)

“காதலி னாலுயிர் தோன்றும் – இங்கு

     காதலி னாலுயிர் வீ ரத்தி லேறும்

காதலி னாலறி வெய்தும் – இங்கு

    காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்!

பாரதி சொன்னத னாலே – காதல்

    பாட்டர்கள்  நெஞ்சிலும் ஏறுந் தன் னாலே!

பாரதி தாசனும் சொன்னார் – எனின்

    பாரதி சொன்னதன் பின்பவர் சொன்னார்!

பிள்ளைக் கனியினைக் காட்டி – இன்பம்

   பெற்றவன் மற்றவர் பெற்றிடத் தந்தான்!

வெள்ளை மனத்தொரு பெண்ணின் – நெஞ்சில்

    வீ ழ்ந்தவன் நமையும் வீ ழ்ந்திடச் செய்தான்!

கற்பனை வாழ்விது மாயம் – எனக்

    காட்டிய சாமிகள் சாத்திரச் சாயம்

விற்பனன் பாரதி சொல்லில் – கெட

   வீ ழ்வது தான் அவன் காவிய மாயம்!

நிற்பது ஊர்வது யாவும் – இந்த

   நீணிலத் துள்ளநல் லின்பங்கள் யாவும்

அற்புதச் சிந்தனை யாவும் – நிலை

    ஆவதில்லை என்ற சூதரைக் கொண்டா!

சோலை மரங்க ளனைத்தும் –தினம்

    தோன்றுவ தேயொரு விதையினி றென்றால்

சோலைகள் பொய்யென லாமோ – இதைச்

    சொல்லொடு சேர்ப்பவர் மூடர்க ளன்றோ?

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தன் – புவி

    பேணி வளர்த்திடு மீசன்!

மண்ணுக் குள்ளேசில மூடர் – நல்ல –

    மாத ரறிவைக் கெடுத்தார்!

எண்ணித் துடித்தவன் சொன்னான் – “கண்கள்

    இரண்டினி லொன்றைக் கெடுத்திட லாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்

    பேதமை யற்றிடும்! ஆம்; – இது உண்மை!

(அடுத்த பகுதியுடன் இக்கவிதை முடியும்)

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்

***

பாரதி போற்றி ஆயிரம் – 31 (Post No.4637)

Date: 20 JANUARY 2018

Time uploaded in London- 6-31 am

Compiled  by S NAGARAJAN

Post No. 4637

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 31

  பாடல்கள் 174 முதல் 179

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியும் பாரதிதாசனும்

களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியைக்

களைநீக்கி வடித்த கவிஞன் பாரதி!

களைநீக்கித் தந்த கழனியிற் பலவாய்

கனிக்காடு கண்டவர் பாரதிதாசன்!

இருள்சூழ்ந் திருந்த இவ்வைய முழுதும்

எழக்கதி ரான இளைஞன் பாரதி!

எழுந்த கதிர்முன் மானிடச் சாதிக்கு

இரத்தம் ஊட்டினர் பாரதி தாசன்!

ஆதி பத்திய வேரறுக் குந்திறன்

ஆக்கித் தந்த வல்லவன் பாரதி!

அந்த வேரை அறுத்தபின் மறுவேர்

அண்டாது காத்தவர் பாரதி தாசன்!

நிலைகுலைந் திருந்த நெஞ்சினைத் தூக்கி

நில்லெனச் சொன்ன வல்லோன் பாரதி!

நிற்க வைத்த நெஞ்சினைத் தட்டி

நிலைக்க வைத்தவர் பாரதி தாசன்!

எங்கள் நாடுஎங்கள் மொழியென

இயம்புந் திறனைத் தந்தவன் பாரதி!

இயம்ப மறுத்து ஏளனம் செய்தோர்

எலும்பை முறித்தவர் பாரதி தாசன்!

முன்னவர் சொன்ன பண்பா டனைத்தும்

முறையாய்த் தந்த மூத்தவன் பாரதி!

முறையாய்த் தந்ததை வகைவகை யாக்கி

முளைக்க விட்டவர் பாரதி தாசன்!

செந்தமிழ் மலரின் தேனுண்ண வாசலைத்

திறந்து விட்ட தலைவன் பாரதி!

திறந்த வாசலின் வழிப்புறம் மாடுகள்

செல்லாது காத்தவர் பாரதி தாசன்!

வகுத்தவன் முன்னோன்; காத்தவன் பின்னோன்!

வாழும் தமிழன் காவலர் இவர்கள்!

(வேறு)

பாருக்குள் ளேசம தர்மமும்ஒன்றிப்

      பற்றுஞ்ச கோதரத் தன்மையும்சொல்லி

யாருக்கும் தீமைசெய் யாமலேஎன்றும்

      அன்பு கொளுந்திறந் தந்தவன் முன்னோன்!

உண்மையின் பேர்தெய்ம் என்போம்அன்றி 

       ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

உண்மைகள் வேதங்கள் என்போம்பிறி(து)

      உள்ளமறைகள் கதையெனக் கண்டோம்!

கடலினைத் தாவும் குரங்கும்வெங்

       கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்தத னாலேதெற்கில்

      வந்து சமன்செயும் குட்டை முனியும்

நதியினுள் ளேமுழு கிப்போய்அங்கு

       நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுறவே மணம் செய்ததிறல்

       வீமனும் கற்பனைஎன்றவன் முன்னோன்!

அன்னவன் கைகளிற் பட்டால்பிள்ளை

       அழுதகண் ணீரிலும் உதிரங் கொதிக்கும்

கன்னியர் நன்னெறி வீழமறம்

       காட்டு பவர்க்கவன் காட்டு விலங்காம்!

                         (நீண்ட கவிதை தொடரும்)

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்

***

பாரதி போற்றி ஆயிரம் – 30 (Post No.4633)

Date: 19 JANUARY 2018

Time uploaded in London- 6-18 am

Compiled  by S NAGARAJAN

Post No. 4633

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 30

  பாடல்கள் 169 முதல் 173

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியைக் கண்டேன் (இறுதிப் பகுதி)

பாரதி :-

ஆற்று வாரிலை தேற்று வாரிலை

     அலறி நெஞ்சினை மாற்று வாரிலை

காற்றி லேறிஅவ் விண்ணையுஞ் சாடுவான்

     கடல்க டந்த நாடுகள் பலவினும்

தூற்று கின்ற உமியெனப் பறப்பதும்

     சொந்த நாட்டின் அரசி லிருப்பவர்

சோற்றி லான பிண்டங்க ளாயவர்

     துயரை நீக்க வழியிலா திருப்பதும்

கண்டு கண்டு வேகிறேன்! தம்பி!இஅக்

     காத கர்தமை நம்பி என் பிள்ளைகள்

துண்டு துண்டாய் வீழ்கிறார் பாரடா!

     சூழி லங்கை நாட்டினைப் பாரடா!

அண்டை யுள்ள நாட்டினில் சாகிறான்!

     அண்ண னோவெறும் மாடுபோல் நிற்கிறான்!

கண்ட துண்டோ எங்கணும், இத்தகு

     கைக ளற்ற கோழையர் குழுவினை?

ஆங்கி லர்க்கு வேறொரு நாட்டினில்

      அவதி நேர்ந்ததென் றறிந்த வேளையில்

வீங்கு தோளுடன் ஆங்கில நாட்டினர்

      வேலெ டுத்துப் பாய்வரே! தம்பி நீ

ஓங்கி நின்ற தமிழரின் பிள்ளையாய்

      உடலெடுத்தும் என்னடா புண்ணியம்?

பாங்கி லாதவன் பகுத்தறி வற்றவன்

      பைந்த மிழ்த்திரு நாட்டினை ஆள்கிறான்!

எண்ண எண்ணத் துடிக்கிற தேயடா!

      எந்த நாட்டினில் இந்த அநீதியை

மண்ணில் வீழ்ந்த மழையெனப் போற்றுவர்!

      மடையர்! சீச்சீ! தமிழ ராஇவர்!

புண்ணை உண்டு புன்பசி ஆற்றிடும்

      புல்ல ரென்று சொல்வதே மெய்ப்பொருள்!

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிடும்

      கல்வி யற்றவர் தாயகம் தென்னகம்!

(வேறு)

பாரதி உரைத்த இந்தப்

    பாடலைக் கேட்டேன்! நெஞ்சின்

வேரதிர்ந் ததடா! எங்கள்

    வியன் தமிழ் நாடே உன்னைப்

பாரதப் பூசை செய்யும்

    பாவிகள் கையி னின்று

கூறுபோட் டெடுத்தா லன்றிக்

    குறையற வழியே இல்லை!

             (இந்தக் கவிதை முற்றும்)

குறிப்பு: இந்தக் கவிதையில் வரும் கவிஞரின் கருத்துக்கள் பல அவரால் பின்னர் மாற்றிக் கொள்ளப்பட்டன!

கவிஞர் கண்ணதாசன்: கவியரசு கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 5000க்கும் மேற்பட்ட இதர பாடல்களையும் புனைந்தவர். தமிழ்நாட்டில் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தோற்றம்: 24-6-1927 மறைவு: 17-10-1981. இதழ் ஆசிரியர். பல காவியங்களைப் புனைந்தவர். நாவல் ஆசிரியர். பல சிறந்த நூல்களை எழுதியவர். பல விருதுகளை வென்றவர்.சிறந்த பேச்சாளர்.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்

***

பாரதி போற்றி ஆயிரம் – 29 (Post No.4629)

Date: 18 JANUARY 2018

Time uploaded in London- 5-33 am

Compiled  by S NAGARAJAN

Post No. 4629

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 29

  பாடல்கள் 165 முதல் 168

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியைக் கண்டேன் (தொடர்ச்சி)

வாழ்பவர்க்குச் சோறுத ராதவன்!

    மாண்ட வர்க்குமண்டபம் கட்டுவோ

ஆள்ப வர்க்குத் துதிபல பாடுவோன்

     அச்ச மென்பதன் அரும்பெறல் மைந்தனாம்!

சூழ்சு டற்புவி தனைஇவன் முன்னையர்

     துளைத்த காதையைச் சொல்வத லாலொரு

வாளெடுக்கும் திறனுமில் லாதவன்

    வம்பெ தற்கென ஒதுங்கியே செத்தவன்!

அன் றிலங்கையை ஆயிர மாயிரம்

     ஆனை தானைகள் வென்றதைச் சொல்லுவான்!

இன்றி லங்கையில் ஆதர வற்றவன்

     இன்ன வன் துணைத் தம்பிய ரல்லரோ?

இன்னும் இந்தத் திசைகல் எட்டினும்

     இழிந்தி ருப்பவன்! தமிழர் திருமகன்,

வென்றி கொண்ட வீரனின் பிள்ளையாம்!

      வீணர் சொன்ன பொய்மைக் கதையடா!

இருவர் சேர்ந்தங் கொருவரை மற்றவர்

       ஏற்றிப் பாடும்பரஸ்பர முகஸ்துதி

தரும மானது தமிழரின் நாட்டினில்!

       தம்பி நீஇவர் தலைகவிழ்ந் தாரெனப்

பொருமிச் சாவதும் போர்செயச் செல்வதும்

      பொருத்த மற்றதுன் பெற்றவர் உற்றவர்

கரும மட்டும் கணக்கினி லேற்றுவாய்

      கண்கள் மூடுமுன் கவலைகள் மாற்றுவாய்!

யான்:

சோர்ந்து கூறும் சொற்களோ பாரதி?

      தூய தேன் தமிழ்ப் பாவினம் பற்பல

ஆய்ந்து வைத்தவன், அன்னையின் நாட்டினர்

       அடிமை தீர்த்திடும் போர்முர சானவன்

வேய்ந்த கூரையாய் வெள்ளொளிக் கைகளால்

        வீர நாட்டினைக் காக்கத் துடித்தவன்

தேர்ந்த பாவலன் செந்தமிழ்ச் சாரதி

       சிந்தை நொந்தியோ செப்படா பாரதி!

            (கவிதையின் இறுதிப் பகுதி அடுத்து வெளிவரும்)

கவிஞர் கண்ணதாசன்: கவியரசு கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 5000க்கும் மேற்பட்ட இதர பாடல்களையும் புனைந்தவர். தமிழ்நாட்டில் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தோற்றம்: 24-6-1927 மறைவு: 17-10-1981. இதழ் ஆசிரியர். பல காவியங்களைப் புனைந்தவர். நாவல் ஆசிரியர். பல சிறந்த நூல்களை எழுதியவர். பல விருதுகளை வென்றவர்.சிறந்த பேச்சாளர்.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***