அனுமன் தோல்வி! ஆனைக்கும் கூட அடி சறுக்கும்! (Post No.4917)

அனுமன் தோல்வி! ஆனைக்கும் கூட அடி சறுக்கும்! (Post No.4917)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 April 2018

 

Time uploaded in London –  16-36 (British Summer Time)

 

Post No. 4917

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

கம்பன் ஒரு உண்மைக் காட்சியை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறான். கும்ப கர்ணனுக்கு, ஒரு வீரன் போல அனுமன் சவால் விடுக்கிறான். கும்பகர்ணனும் அதை ஏற்று ஒரேயடியில் அனுமனை வீட்டுக்கு அனுப்புகிறான். பின்னொரு முறை கும்பகர்ணன் அனுமனே! உன் கூட சண்டை போட எனக்கு ஆசை. வாயேன் என்கிறான். அப்போது அனுமன் உண்மை பேசுகிறான். இதோ பார்! நான் ஒரு முறை உனக்குச் சவால் விட்டேன். தோற்றால் இனிமேல் உன்னுடன் சண்டை போட மாட்டேன் என்றேன்; நான் தோற்றதால் இனிமேல் எனக்கு போர் செய்ய நியாயம் இல்லை என்று ஒப்புக்கொண்டு போய் விடுகிறான். சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு? முன் ஒன்று பின் ஒன்று பேசுவார் அக்காலத்தில் இல்லை!

 

யுத்த காண்டத்தில் கும்ப கர்ணன் வதைப் படலத்தில் கம்பன் ( அனுமன் வாய் மொழி மூலம்) சொல்கிறான்:

எறிகுவென் இதனை நின்மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல்

மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை

அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னொடு அமரும் செய்யேன்

பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும்புகழ் பெறுதி என்றான்

 

பொருள்

இந்த மலையை உன்மேல் எறியப் போகின்றேன். இமைப் பொழுதில் உன் சக்தி அழியும். ஆனால் நீ இந்த மலையைத் தடுத்துவிட்டால், உன் பலத்தை உலகமே தெரிந்து கொள்ளும். அப்படித் தடுத்துவிடால் நான் திரும்பிப் போய்விடுவேன். உன்னோடு சண்டை போட மாட்டேன். இந்தச் செயலைச் செய்து உலகப் புகழ் பெறலாமே! என்று அனுமன் கிண்டல் தொனியில் பேசுகிறான்.

 

அதற்குக் கும்பகர்ணன் சொன்னான்:–

 

மாற்றம் அஃது உரைப்பக் கேளா மலை முழை திறந்தது என்னக்

கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை

ஏற்றெனன் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின்

தோற்றனென்  உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான்

 

 

பொருள்

அனுமன் சொன்ன சொல்லைக் கேட்டு கும்பகர்ணன் நகைத்தான். மலைக் குகை போன்ற வாயைத் திறந்து சிரித்தான். நீ எறியும் மலையைத் தாங்கும் போது என் தோள்கள் சிறிது தளர்ந்தாலும் நான் தோற்றவன் ஆவேன் என்றான் கும்ப கர்ணன்.

 

அடுத்த இரண்டு பாடல்களில் அனுமன் மலையை எறிந்ததையும் அது கும்பகர்ணனின் தோளில் பட்டு நூறாகச் சிதைந்து போனதையும், அதைப் பார்த்து அனுமன், இவனை ராமனின் அம்புகள் மட்டுமே தாக்க முடியும் என்று எண்ணித் திரும்பிப் போனதையும் சொல்கின்றன.

 

அவ்வளவு வலிமை ராவணன் தம்பிக்கு!

 

இதே படலத்தில் பின் ஒரு காட்சி. சுக்ரீவன் மீது கும்பகர்ணன் எறிந்த சூலத்தை அனுமன் முறித்து விடுகிறான். அபோது கும்பகர்ணனும் அனுமனின் செயலை- ஆற்றலை — வியந்து என்னுடம் போருக்கு வா என்கிறான். அதற்கு அனுமன் சொன்ன பதில்:

முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய

பின் இலை பழுது எனப் பெயர்ந்து போயினான்

 

பொருள்:

முன்பு இனிமேல் உன்னை எதிர்த்துப் போரிட மாட்டேன் என்று சொல்லி போரை முடித்துக் கொண்டேன். இனிமேல் உன்னுடன் போர் செய்வது பிழையாகும் என்று விளம்பிவிட்டு அனுமன்  அகன்றனன்.

 

சொன்ன சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு.

ஆனைக்கும் கூட அடி சறுக்கும்; அனுமனுக்கும் கூட தோல்வி வரும்!

(ஆயினும் இறுதி வெற்றி வானர சேனைக்கும் ராமனுக்கும் என்பதை மறத்தல் கூடாது– அறம் வெல்லும்- பாவம் தோற்கும் என்பது கம்பன் வாக்கு. தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ.

 

–சுபம்–

லெட்சுமணன் படித்த ‘ஸ்கூல்’ பற்றி கம்பன் தகவல் (Post No.4916)

லெட்சுமணன் படித்த ஸ்கூல் பற்றி கம்பன் தகவல் (Post No.4916)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 April 2018

 

Time uploaded in London –  14-27 (British Summer Time)

 

Post No. 4916

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

நான் வாழும் லண்டனில் வேலைவாய்ப்பு பேட்டிகளில் எந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் படித்தான் என்பதற்கும் மார்க் (mark) உண்டு. நேருஜி படித்த ஈடன் (Eton) பள்ளி, மற்றும் அரசியல் பேர்வழிகளின் பிள்ளைகள் படித்த கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு (Cambridge, Oxford) பல்கலைக் கழகங்கள், பிரைவேட் ஸ்கூல் (மாதத்துக்கு 2000, 3000 பவுண்டு பீஸ்/fees) ஆகியவற்றுக்கு தனி மதிப்பு. அதிலிருந்தே அவர்களின் குணநலனும், அந்தஸ்தும், அறிவும் புலப்படும் என்ற ஒரு அசட்டு நம்பிக்கை.

 

ராமனின் தம்பி லெட்சுமணன் படித்த ஸ்கூலில் தியரி (theory) கிடையாதாம்; அதிகம் பிராக்டிகல் (practical) பாடங்கள்தானாம்! இதைக் கம்பனே இலக்குவன் வாய்மூலம் இயம்புகிறான். அதைப் படித்து கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், கம்பன் எவ்வளவு   நுணுக்கமாகப் பார்க்கிறான் என்பது புலப்படும்,

 

“நீ ராமன் தம்பி, நான் ராவணன் தம்பி, வா, கொஞ்சம் வீர வசனம் பேசுவோம்; அதில் யார் வெல்கிறார்கள் என்று முதலில் பார்ப்போம் என்கிறான்” கும்பகர்ணன்.

 

அதற்கு இலக்குவன் பதில் சொல்கிறான். “அப்பனே நான் படித்த பள்ளிக்கூடத்தில் எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்த பாடம் வேறு; நீங்கள் சொல்லினால் பேசுவீர்கள்; நாங்கள் வில்லினால்தான் பேசுவோம்; அதுதான் நான் கற்ற பாடம்”.

 

முதலில் போர்க்களத்தில் வாக்குவாதம் நடத்துவது என்பதே இந்திய வழக்கு; பகவத் கீதை இதற்குச் சான்று. யுத்த காண்டத்தில் பல எதிர் எதிர் தரப்பு வீரர்கள் சொற் கணைகளைப் பெய்த பின்னரே விற்கணைகளைத் தொடுப்பர் என்பதைக் கம்பனும் காட்டுவான் .

இலக்குவன் மட்டும் எங்கள் ஸ்கூல் சிலபஸ் School syllabus வேறு என்று சொல்வதை கம்பன் கவி வழி சுவைப்போம்:

 

இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம்

பொரநின்றேம் இது காணிய வந்தனர் புலவோர்

பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து

விராவு நல் அமர் விளைக்குதும் யாம் என விளம்பா

யுத்த காண்டம், கும்ப கர்ணன் வதைப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்

நீ ராமனுக்குத் தம்பி; நான், ராவணனுக்குத் தம்பி. இருவரும் இப்போது போரிட நிற்கிறோம்.  இப்போரினைப் பார்க்க தேவர்களும் வந்தனர். புகழத் தக்க பழமையான போர் முறையில், நம் பலத்துக்கேற்ற வகையில் முதலில் கொஞ்சம் கதைப்போம்; பின்னர் கை கலப்போம் – என்று கும்ப கர்ணன் செப்பினான்.

 

இலக்குவன் பதில்

 

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர்

மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்பால்

வில்லினால் சொல்லின் அல்லது வெந்திறல் வெள்கச்

சொல்லினால் சொலக் கற்றிலம் யாம் எனச் சொன்னான்

பொருள்

இருளையே உருக்கி வார்த்து செய்தாற் போல இருந்த கும்ப கர்ணன் சொல்லினைக் கேட்ட (மல்யுத்தம் செய்ததால் உரம் ஏறிப்போன தோள் கொண்ட)  இலக்குவன் உரைத்தான்— “உனக்கு பதில் சொல்வது வில்லினால் மட்டுமே இயலும். வீரத்துக்கு இழுக்கு உண்டாக்கும் வகையில் சொல்லினால் சொல்ல யாம் கற்கவில்லை”.

 

என் வில்தான் பேசும்; சொல் வேண்டாம்; இதுதான் நான் கற்றது.

நல்ல அருமையான பதில்

 

சில கம்பன் பாட்டில் சொல் நயம் இருக்கும்; சில கம்பன் பாட்டில் பொருள் நயம் இருக்கும்; இன்னும் சில பாடல்களில் இரு நயமும் இருக்கும்.

 

படித்துச் சுவையுங்கள்.

 

-சுபம்–

பாரதி போற்றி ஆயிரம் – 78 (Post No.4915)

COMPILED by S NAGARAJAN

 

Date: 15 April 2018

 

Time uploaded in London –  7-04 AM  (British Summer Time)

 

Post No. 4915

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 78

  பாடல்கள் 654 முதல் 665

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

                           பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு பத்தாம் அத்தியாயமான பாரதி பார்வையில் பாரதி இடம்பெறுகிறது.

பத்தாம் அத்தியாயம்: பாரதி பார்வையில் பாரதி

1 முதல் 12 வரை உள்ள பாடல்கள்

 

காலச்சக் கரத்தின் மேற்பகு தியெனில்

     காணுமு யிர்களின் பிறப்பாகும்

சீலமு றவது சுழல்கையில் கீழே

    சென்றிட லென்பது இறப்பாகும்

ஓலமிட் டழுவதில் பயனென் பிறந்தோர்

     ஒருநாள் மடிவது முறையாகும்

கோலமிட் டழித்தல் போல்பிறப் பிறப்பும்

    கோலம்மா றிவரல் இயல்பாகும்

 

எவரிறந் தாலும் மறுகணம் மறத்தல்

    இப்புவி மாந்தர் குணமாகும்

அவர்போல் எனையும் மறந்திடு வாரெனில்

    அதுவே வாழ்வின் நிலையாகும்

தவறா ததுவே நிகழும் எனயென்

    தமிழ்நாட் டினையும் நினைந்திட்டேன்

தவறாய் நினைத்தேன் எனும்படி என்றும்

    தமிழகம் என்னைப் போற்றிடுதே

 

என்பெய ராலே எண்ணிலா மன்றம்

    இருப்பதைக் கண்டு வியக்கின்றேன்

என்கவி தைகளை பலவடி வத்தில்

     எங்கணும் பாடக் கேட்கின்றேன்

என்னைப் பற்றிய ஆய்வுகள் பலவும்

     ஏடுக ளில்வரக் காண்கின்றேன்

என்தமிழ் நாட்டார் எனைமறப் பாரோ

    என்பதைக் கண்டு மகிழ்கின்றேன்

 

இந்நாள் எனையான் திரும்பிப் பார்க்கின்

     என்வாழ் வெனக்கே திகைப்பூட்டும்

அந்நாள் நடந்ததைச் சொல்கிறேன் எந்தன்

     ஆடையே பிறர்க்கு நகைப்பூட்டும்

எந்நா ளும்நான் நிம்மதி யாக

    இருந்தேன் என்றிட வாய்ப்பில்லை

இந்நாள் அதனை நினைத்துப் பார்த்தால்

    எனக்கே என்நிலை புரியவில்லை

 

சுயபுத்தி இல்லாமல் ஏதேதோ செய்வதாய்

     சூழ்ந்தவர் யாரும் சொல்ல

சுயசாதி வெறுப்புக்கு ஆளாகி அவரோடு

    சுற்றத்தால் ஒதுக்கப் பட்டேன்

சுயமாக எதனையும் செய்திட இயலாத

    சூழ்நிலைக் கைதி யானேன்

சுயசரி தம்எழுத முயன்றாலும் அதனையும்

    தொடராமல் நிறுத்த லானேன்

 

என்னிளம் பருவத்தின் பெருமைகள் ஈதென

     இயம்பிட ஏது மில்லை

சின்னஞ்சி றுவர்க்குள விளையாட்டில் கலந்திட

    சிறிதேனும் உரிமை யில்லை

இன்னுமோர் கொடுமையாய் சிறுமியைக் கொணர்ந்து

    என்மனைவி யாக்கி வைத்தார்

பின்னுமோர் சோதனை தந்தையார் மடிந்திட

    போகயிட மின்றி நின்றேன்

 

நிரந்தர மில்லாமல் ஊர்ஊராய் ஓடிநான்

     நிலையற்ற வாழ்வு வாழ்ந்தேன்

அரசனாம் தருமன்போல் அல்லல்கள் பலபட்டு

    அஞ்ஞாத வாசம் செய்தேன்

கரம்பிடித் திட்டநல் மனைவியொடு மக்களின்

     கடமையைச் செய்தி டாத

முரடனாய் வாழ்வியல் புரியாது முரண்படும்

    மூடனாய் தூற்றப் பட்டேன்

 

இத்தனைத் துயர்கள் இருப்பினும் கவிதை

     இயற்றுதல் மட்டும் நின்றதில்லை

எத்தனைத் தடைகள் குறுக்கிட்ட போதும்

     எழுதாமல் இருக்க இயலவில்லை

சித்தத்தில் ஒளிரும் சுடரென இருந்தென்னைச்

     சிறப்புறச் செய்தது தமிழன்றோ?

நித்தமென் சுவாசக் காற்றென இயங்கி

    நிலைபெறச் செய்தது கவியன்றோ?

 

வறுமையே தொடர்ந்தென்னைத் துரத்திய போதும்

    வடித்திடும் பாடலில் ஒருபோதும்

சிறுமையோ குறையோ நேர்ந்திட விடாமல்

     சீருடன் ஆய்ந்ததைப் படைத்திட்டேன்

பெறுமிச் சுதந்திரப் பயிரினை வளர்த்திட

    பாடுபட் டோரில் என்பெயரும்

உறுமென் பதுவே போதுமத னிலுமே

    உயர்நிலை எனக்குத் தந்திட்டார்

 

என்கவியைப் பாடாத மேடையில்லை எங்கும்

     என்புகழைப் பேசாத சபையுமில்லை

என்றாலும் நானன்று பாடியே மகிழ்ந்திட்ட

    இனிய பாரதமின்னும் தோன்ற வில்லை

என்சாதி என்மதம் என்னினம் என்மொழி

     எனமூளும் சண்டைகள் ஓய வில்லை

என்றுதான் இவையெலாம் தீருமோ அதுவரை

     என்பாடல் ஒலிப்பதில் பொருளு மில்லை

 

நல்லதோர் வீணையைச் செய்ததை மீட்டிட

     நல்லிசை அதனிலே கேட்க வில்லை

பல்லெழில் மிக்கதோர் ஓவியம் வாங்கியும்

    பார்த்திட விழிகளோ இரண்டு மில்லை

சொல்லழகு கொண்டதென என்கவியைப் பாடினார்

     சொல்பொருளை செயலாக்க முனைய வில்லை

அல்லல்கள் பலபட்டு அயராமல் இயற்றிய

    அருங்கவிகள் போல்நாடு அமையவில்லை

 

 

என்றென் தமிழ்மொழி உலகம் முழுதும்

ஏற்கும் செம்மொழி யாகிடுமோ

என்றென் பாரதம் எல்லா நலனும்

இருக்கும் நாடாய் உயர்வுறுமோ

என்றிவ் வுலகம் மாந்தர் யாவரும்

என்றும் சமமென இணைந்திடுமோ

அன்றென் கவிதைகள் உயிர்பெற் றிடுமே

அவற்றுள் நிலையாய் வாழ்வேனே!!!

 

பாரதி பார்வையில் பாரதி முற்றும்

பாரதி பத்துப்பாட்டு நூல் முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 76 & 77 (Post No.4909)

Bharatiyar- Tamil drama acted by Ramanan; Directed by Raman; pictures posted by Manion CGS

Compiled by S NAGARAJAN

 

Date: 13 April 2018

 

Time uploaded in London –  7-17 AM  (British Summer Time)

 

Post No. 4909

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 76

  பாடல்கள் 632 முதல் 641

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு எட்டாம் அத்தியாயமான பாப்பா பார்வையில் பாரதி தொடர்கிறது.

எட்டாம் அத்தியாயம்: பாப்பா பார்வையில் பாரதி

19 முதல் 28 வரை உள்ள பாடல்கள்

 

பாப்பா தனக்கொரு பாட்டு நீ

     பாடிக் கொடுத்ததைக் கேட்டு

பாப்பாக்கள் அத்தனை பேரும் இங்கு

     பயனடை தோம்வந்து பாரும்

 

சிட்டுக் குருவியைப் போல இங்கு

     சிறுவர்கள் திரிந்திட வேண்டும்

வட்டமிடும் பறவை கண்டு மனம்

    மகிழ வேண்டுமெனச் சொன்னாய்

 

காக்கைக் கும்கருணை காட்டு நீ

     கோழியு டன்விளை யாடு

ஊக்க முளகுதிரை மாடு ஆடு

    உறுதியாய் எம்தோழர் என்றாய்

 

பிள்ளையாய் இருந்திடும்போதே நாங்கள்

     பிறவுயிரை நேசிக்கக் கற்று

வள்ளலார் ஜீவகா ருண்யம் எங்கள்

     வாழ்வோடு ஒன்றவழி சொன்னாய்

 

நேரம் பிரித்துவொரு நாளில் எங்கள்

    நிகழ்வுகள் வகுத்துநீ தந்தாய்

சாரமுள பட்டியல் அன்றோ? – அதில்

     தேர்ந்திங்கு நடந்திடல் என்றோ?

 

தீமையை எதிர்கொள்ள வேண்டும் எனும்

     தீரத்தை எமக்கு நீ தந்தாய்

ஊமைபோல் இருந்திடு வோமோ? – வரும்

     உலுத்தரை விட்டுவைப் போமோ?

 

துன்பத்தில் சோர்ந்திடு வோமோ வெறும்

    சோம்பலில் மூழ்கிவிடு வோமோ?

அன்பினைத் துறந்திடு வோமோ? – தெய்வ

     அருளினை மறந்திடு வோமோ?

 

தமிழ்தனை வணங்கிட வேண்டும் நாம்

     சார்ந்த பாரதம் காக்க வேண்டும்

அமிழ்தில் இனியதிந்த தேசம் எனும்உன்

    அரியவா சகம்போற்ற வேண்டும்

 

அன்று நீ சொன்னவை யாவும் முன்பு

    அந்தபாப் பாக்கள் கேட் டிருந்தால்

இன்றுபெரி யவரான பின்னால் இங்கு

     இத்தகைய தீமையிருந் திராது

 

இந்நாளில் நாங்களுன் பாட்டைக் கேட்டு

    எம்வாழ்வில் அதுபோல் நடப்போம்

எந்நாளும் எம்தலை முறைகள் அதனை

    ஏற்றுனைப் போற்றநீ வாழ்க!

பாப்பா பார்வையில் பாரதி முற்றும்

xxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 77

  பாடல்கள் 642 முதல் 653

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஒன்பதாம் அத்தியாயமான சித்தர் பார்வையில் பாரதி இடம்பெறுகிறது.

ஒன்பதாம் அத்தியாயம்: சித்தர் பார்வையில் பாரதி

1 முதல் 12 வரை உள்ள பாடல்கள்

 

பதினெட்டு சித்தர்கள் இந்த நாட்டில்

     பாங்குடனே வாழ்ந்ததாய்ச் சொல்வா ருண்டு

அதிலென்ன கணக்கென்று அதற்கும் மேலே

     அங்குமிங்கு மாய் சித்தர் பலபே ருண்டு

அதிசயங்கள் எனவுலகம் வியந்து போற்றும்

      அட்டமா சித்திகளும் பெற்றா ருண்டு

அதிலொருவன் எனயானும் இங்கு வந்தேன்

     அருட்கவி பாரதியே உன்னைக் கண்டேன்

 

அத்வைத நிலைகண்ட நீயும் அந்நாள்

     யானுமொரு சித்தனென சொல்லிக் கொண்டு

எத்தனைபேர் அன்றதனை ஏற்றுக் கொண்டார்

    ஏற்கனவே பித்தனென்றார் இதையேற் பாரா?

உத்தமனே உனக்குள்ளே இருந்த ஆன்ம

     ஒளிச்சுடரை உணர்ந்தவர்கள் சிலரே யன்றோ?

இத்தரையில் குருவெனவே உனக்குற் றோரை

     யாவருக்கும் அருள்கிடைக்க உரைத்தா யன்றோ?

 

தத்துவத்தை யாவருக்கும் உரைப்ப தற்கு

     தகுதிமிக்க ஞானியர்கள் பலபேர் வந்தார்

எத்தனைநாள் விரிவாக உரைத்த போதும்

    ஏதுமே புரியவில்லை என்றார் பல்லோர்

அத்தனென உனக்கமைந்த குள்ளச் சாமி

    அரியநற் தத்துவத்தை உரைக்கக் கேட்டு

சத்தான அதன்பொருளை யாவ ருக்கும்

     சாற்றினாய் உயர்ராமா நுசனைப் போல

 

குட்டிச்சு வர்தன்னை கிணற்றில் காட்டி

    குழப்புதற்குப் பரிதியையும் காட்டி நின்றால்

வெட்டித்த னமென்றதை நினைத்தி ருப்பார்

    வித்தகனே நீயன்றோ பொருளு ணர்ந்தாய்

சுட்டெரிக்கும் பரிதியது கிணற் றினுள்ளே

    சுடராகத் தெரிதல்போல் நம்முள்ளத்தில்

திட்பமுடன் சிவமென்னும் சுடரைக் கண்டு

    சிந்தனையற் றுச்சுவர்போல் இருப்போம் என்றாய்

 

அன்பினையே சிவமென்றார் திருமூ லர்தாம்

     அதற்கிலக் கணமாம் கோவிந்த சாமி

என்றுமுன் கல்விநலம் சிறப்ப தற்கு

     எந்தையென நீமகிழ வந்த தாலே

துன்பமெலாம் தீர்ந்திட்டாய் ஞானந் தன்னை

     தெளிவுறவே உணர்ந்திட்டாய் பாத்தி ரந்தான்

இன்னருளை ஏற்குமெனில் கொடுப்ப தற்கு

    ஏற்றகுரு தேடிவரல் இயல்பே யன்றோ?

 

குவளைக்கண்ணன் கொணர்ந்த யாழ்ப்பா ணத்தார்

     குருவெனவே அமைந்ததிலே நிறைவு கண்டாய்

இவருந்தன் இல்லத்தில் நுழைந்த தாலே

     ஈடற்ற வீடின்றே உற்றே னென்றாய்

தவறாமல் யாவரையும் உரைத்து நீயும்

    தகுதியுள்ள சீடனென உணர்த்து கின்றாய்

அவரைப்போல் தத்துவத்தில் நிறைவு பெற்று

    அரியதொரு சித்தனென உயர்ந்து நின்றாய்

 

மனத்தினில் புகுந்துள்ள அசுர சக்தி

    மாண்பிழக்கச் செய்துவிடும் மனிதர் தம்மை

சினத்தினை முதலில் நாம் துறந்தால் போதும்

    சீரிய நற்குணங்கள் நமக்குள் மேவும்

தினந்தினம் சினத்தினில் மூழ்கி மூழ்கி

    திசைமாறிச் சென்றோர்க்கு உய்வே யில்லை

அனலாக நமைஎரிக்கும் அதனை விட்டால்

     ஆன்மநெறி வாய்க்குமென்றார் உனைப்போ லுண்டோ?

 

சித்தத்தில் பற்றனைத்தும் நீங்கி னோனே

    சித்தனாவான் ஆனால்நீ புதுமைச் சித்தன்

எத்தினமும் மாறாத காதல் மாண்பை

    இங்கும்நீ உரைத்ததினால் வியந்தார் பல்லோர்

முத்திரையாய் ஆடவர்க்கும் கற்புண் டென்றே

     மொழிந்ததினால் திகைத்திட்டார் ஆண்க ளெல்லாம்

வித்தகனே உனைப்போல வாழ்வோ டொன்றி

    வியன்ஞானம் உரைத்தவர்தாம் எவரும் உண்டோ?

 

ஓரட்சரம் ஈரட்சரம் ஐந்து எட்டு

     ஒலிக்கின்ற நவாட்சரம் என்றே நம்முள்

யாரட்சரம் பெரிதெனவே போட்டி யிட்டு

     எத்தெய்வத் தையுமிகழல் முறையோ நன்றோ

பாரதனில் பலபெயரில் வழங்கிட் டாலும்

    பாங்குடைய தெய்வமெலாம் ஒன்றே யன்றே

தாரகமாய் சாமிநீ என்று ரைக்கும்

     தத்வமஸி என்பதனை ஏற்றா யன்றோ?

 

கனகலிங்கம் தனக்குநீயும் போட்ட பூணூல்

    காலமெலாம் சமுதாயம் சொல்லி வந்த

அனலாக சுட்டெரித்த சாதித் தீயை

    அணைப்பதற்கு வார்த்திட்ட மழைநீரன்றோ?

இனமென்றும் மதமென்றும் சாதி யென்றும்

    ஏனிங்கு மானிடர்கள் பிரிந்து நின்றார்

அனவருளும் இறைவனுளான் அறீவீ ரென்ற

     அத்வைத நிலையதனில் கண்டா யன்றோ?

 

பட்டினால் உத்தரியம் தந்தே உன்னைப்

    பான்மையுடன் அணிகயென உரைத்த போது

மட்டற்ற பட்டுப்பூச் சிகளைக் கொன்றே

     வடித்திட்ட உடையன்றோ பட்டின் ஆடை

இட்டமுடன் இதையணிந்தால் அவைதாம் வந்தே

     எமதுயிரை உடுத்தனையோ என்றே கேட்கும்

தொட்டாலே பாவமென்று உரைத்தா யன்றோ?

     தெய்வநிலை அதிலுன்னுள் உணர்ந்தா ரன்றோ?

 

சித்தரென்போர் தமக்கெங்கும் சமாதி யுண்டு

    திருக்கோயில் அவர்க்கென்றே அமைவ துண்டு

இத்தரையில் நான்சாகா திருப்பே னென்றே

     இயம்பியவன் பூதவுடல் தனக்கு இங்கே

எத்துமடை யாளமில்லை என்ற போதும்

    ஏற்றதத் துவமோடு தமிழ றிந்தோர்

சித்தமெலாம் நீயிருக்கும் கோயி லாக

    சித்தனென நிலைபெற்றாய் என்றும் வாழ்க!

 

 

சித்தர் பார்வையில் பாரதி முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

பாரதி போற்றி ஆயிரம் – 74 & 75 (Post No.4900)

From Bharati drama; Ramanan acting as Bharati; directed by Raman.

COMPILED by S NAGARAJAN

 

Date: 10 April 2018

 

Time uploaded in London –  6-25 AM  (British Summer Time)

 

Post No. 4900

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 74

  பாடல்கள் 614 முதல் 621

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு எட்டாம் அத்தியாயமான பாப்பா பார்வையில் பாரதி துவங்குகிறது.

எட்டாம் அத்தியாயம்: பாப்பா பார்வையில் பாரதி

1 முதல் 8 வரை உள்ள பாடல்கள்

 

 

பாப்பா வுக்கென பாடல் வடித்த

     பாரதி உன்னைப் போற்றுகிறோம்

பாப்பா வாழ்வைச் செம்மைப் படுத்தப்

     பாடிய உன்புகழ் சாற்றுகிறோம்

பாப்பா வுக்கென உனக்கு முன்னே

     பாடிய புலவர் எவருண்டு?

பாப்பா பாட்டைக் கேட்டபின் அதுபோல்

     பாடிய கவிஞர் பலருண்டு

 

பிள்ளை மனதில் பதிபவை யன்றோ

     பின்னாள் அவரை உருவாக்கும்

வெள்ளைத் துகிலில் படியும் சிறந்த

    வண்ணம் போலே கலந்துவிடும்

கள்ளம் இல்லா நெஞ்சில் சிறந்த

    கருத்தைப் பதிப்பேன் எனநீயும்

தெள்ளந் தெளிந்த உயர்ந்த கருத்துகள்

    தீந்தமிழ்ப் பாட்டாய் உரைத்தாயே!

 

ஔவை அந்நாள் எமக்குத் தந்த

     ஆத்தி சூடி தனைப்போலே

செவ்வை மிகுந்த கால மாற்றம்

     தேர்ந்து நீயும் பாடிவைத்தாய்

அவ்வவர்க் குரிய முறையில் புதிய

     ஆத்தி சூடி தனைத்தந்தாய்

ஒவ்வொரு வரியிலும் தேசிய உணர்வை

     ஊட்டி நீயும் பாட்டிசைத்தாய்

 

அச்சம் தவிர்க ஆண்மை தவறேல்

    அரிய தொடக்கம் இதுவாக

உச்சம் இதுவென சாவதற் கஞ்சேல்

     உரைத்தது மேனோ நற்கவிஞ

இச்சம யத்திற் கிதுவே சரியென

     எமக்கும் அதைநீ உணர்த்தினையோ?

நிச்சயம் சுதந்திரப் போரில் எம்முயிர்

     நீங்குதல் இயல்பென நினைத்தனையோ?

 

உணவைக் குறையென அனைவரும் சொல்வார்

    ஊன்மிக விரும்பென் றுரைத்தாயே

உணவே உடலை உறுதிசெய் திடற்கு

    ஊட்டம் தருமென நினைத்தாயோ!

பணத்தைப் பெருக்கு என்றொரு சொல்லை

     பாங்குடன் எமக்கு உரைத்தாயே

பணமில் லாமல் வாழ்நாள் முழுதும்

     பட்டதை நீயும் நினைத்தாயோ?

 

சோதிடம் பார்த்தே பலரது வாழ்க்கை

    சோதனை யாகிப் போனதினால்

சோத்டம் தனையிகழ் என்றாய் தெளிந்து

    சொல்லெதை யுமென வழியுரைத்தாய்

மேதினி தன்னில் உழைப்பே என்றும்

     மேன்மை தந்திடும் என்பதனால்

ஓதினை கைத்தொழில் போற்றுக என்றே

     ஓய்தல் ஒழியென உரமளித்தாய்

 

எண்ணுவ துயர்வாய் இருந்திட வேண்டின்

    ஐம்பொறி ஆட்சிகொள் என்றாயே

திண்ணிய ராகிட குன்றென நிமிர்ந்துநில்

     தீயோர்க் கஞ்சேல் சொன்னாயே

பெண்ணைப் போற்றிடத் தையலை உயர்வுசெய்

     பிள்ளைக ளுக்கே உரைத்தாயே

நுண்ணிய அறிவுரை இருசொற் களிலே

     நுணுக்க முடன்நீ வடித்தாயே

 

உனக்கு முன்னும் ஆத்தி சூடி

    உரைத்தவ ருண்டு அறிவோமே

உனக்குப் பின்னும் ஆத்தி சூடி

    உரைத்திட வருவார் உணர்வோமே

தினமும் வாழ்வில் கடைப்பிடித் திடவே

     சிறந்த கருத்துகள் பலவற்றை

மனதில் பதியும் வகையில் உரைத்தே

     மாண்புறச் செய்தாய் பாரதியே

பாப்பா பார்வையில் பாரதி தொடரும்

 

பாரதி போற்றி ஆயிரம் – 75

  பாடல்கள் 622 முதல் 631

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு எட்டாம் அத்தியாயமான பாப்பா பார்வையில் பாரதி தொடர்கிறது.

எட்டாம் அத்தியாயம்: பாப்பா பார்வையில் பாரதி

9 முதல் 18 வரை உள்ள பாடல்கள்

 

 

முரச றைந்தஉன் பாடல் – வாழ்வின்

முழுமை தந்திடும் பாடல்

உரமளிக்கும்நற் பாடல் – வாழ்வை

உணர வைத்திடும் பாடல்

 

பிள்ளைக்குச் சொல்வது போல – நீ

பெரியவர்க் குமதைச் சொன்னாய்

உள்ளத்தைச் செம்மைப் படுத்த – பல

உயர்ந்த கருத்துகள் சொன்னாய்

 

மதங்களின் பெயர்களைச் சொல்லி – நாம்

மதம்பிடித் தலைந்திட லாமோ?

இதமற்ற செயலது வன்றோ? – என

எளிய உவமையில் சொன்னாய்

 

பூனைதனைச் சுட்டிக் காட்டி – அது

போட்ட குட்டிகளும் காட்டி

காணும் பலவண்ணம் சொன்னாய் – அதைக்

கண்டும் பயனில்லை இன்னும்

 

சாதிகள் வந்தது எதனால் – மனிதர்

செய்திட்ட தொழில்முறை யதனால்

வாதித்து உயர்வுதாழ் வென்றே – அதனை

வகைப்படுத் தல்என்ன நியாயம்?

 

குடும்பந் தனிலுள்ள பேரில் – ஒருவர்

குறையென்றும் நிறையென்றும் உண்டோ?

தொடுத்திட்ட சாதியும் அதுவே – அதில்

தாழ்வில்லை என்றுரைத் தாயே

 

பெண்ணின் சிறப்பினை உன்போல – இங்கு

பேசிய வரில்லை எங்கும்

கண்ணிரண் டிலது ஒன்றே – அவற்குக்

கல்விக்கண் தரவேண்டு மென்றாய்

 

விரிந்து பரந்துள்ள பூமி – இதில்

வினயமு டன்வாழ லாகும்

பிரிந்து பலசண்டை செய்வார் – அவர்

பேதமை கண்டு துவண்டாய்

 

வல்லர சாகிட எண்ணி – பிறர்

வாழும் நிலத்தைப் பறித்தார்

வல்லமை யுள்ளநல் தெய்வம் – தந்த

வாழ்வென் பதைஏன் மறந்தார்?

 

பெரிய வரிடமிதைச் சொல்லி – எந்தப்

பயனு மில்லையென்று தள்ளி

சிறியவ ரிடம்சொல்ல வந்தாய் – அதைச்

சீரோடு கேட்டே  உயர்வோம்

பாப்பா பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

பாரதி போற்றி ஆயிரம் – 72 & 73 (Post No.4890)

Date- 7 April 2018

 

British Summer Time- 7-09 am

 

Compiled by S Nagarajan

 

Post No.4890

 

Pictures are taken from various sources; thanks.

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 72

 

  பாடல்கள் 588 முதல் 600

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஏழாம் அத்தியாயமான புதுமைப் பெண் பார்வையில் பாரதி துவங்குகிறது.

ஏழாம் அத்தியாயம்: புதுமைப்பெண் பார்வையில் பாரதி

1 முதல் 13 வரை உள்ள பாடல்கள்

ஆதிபொது வுடைமையாம் சமுதா யத்தில்

     அன்னைக்கே முதலிடமாய் ஆய்ந்தோர் சொல்வார்

ஓதுவால்கா முதல்கங்கை வரையென் கின்ற

     உன்னதநூல் ஆய்வுமதை உரக்கப் பேசும்

போதித்துத் தந்தையின் வழியென் கின்ற

     பேசுநிலப் பிரபுத்வ சமுதா யத்தில்

வாதித்துச் சொத்துரிமை தன்னில் பெண்ணும்

     வலிமையுள தமதுடைமை என்றே கொண்டார்

 

அந்நாளில் தொடங்கியபெண் ணடிமைத் தன்மை

    அடுத்தடுத்து மென்மேலும் இறுக்க மாகி

எந்நாளும் மாறாத கொடுமை யாக

     இன்றுவரை தொடர்வதனை என்ன சொல்வோம்?

இந்நாளில் கூடயெம் பெண்டிரெல்லாம்

     எமக்குற்ற விதியிதுவே என்று ஏற்று

உந்தியெழ மாட்டாமல் அடங்கிப் போனார்

     உலைவைத்தல் பாய்விரித்தல் வாழ்வாய்க் கொண்டார்

 

சங்கயிலக் கியகாலம் உயர்ந்த தென்று

     சாற்றுவோர் பெண்டிற்கங் குயர்வுண் டென்பார்

இங்கதனை ஆயுங்கால் முழுமை யாக

    ஏற்பதற் கில்லையென இயம்ப வேண்டும்

அங்கந்நாள் பரத்தையரைத் தேடிச் செல்லல்

    அதனாலே ஊடலெனன் ஒழுக்க மாக்கி

பங்கமுறச் செய்தாரே பெண்டிர் தம்மைப்

    பார்க்கிலிது பெண்டிர்க்குப் பெருமை யாமோ?

 

இதிகாசம் என்றுநாம் பெருமை பேசும்

     இராமா யணந்தனில் மட்டு மென்ன?

பதிவிரதா தர்மத்தை நாட்டு தற்குப்

     பண்புள்ள சீதைதீக் குளிக்கச் செய்தார்

மதிகுலத்துப் பாண்டவர்தம் மனையாளான

    மகத்தான திரௌபதியைச் சூதில் வைத்து

கதியற்ற நிலையிலவள் துகிலு ரிந்தார்

    கண்டதெலாம் பெண்ணடிமைத் தனமே யன்றோ?

 

அம்பிகையை சமபாகம் ஏற்றி ருக்கும்

     அரனாரின் அடியார்தாம் செய்த தென்ன?

தம்மனைவி தனையடியார் கேட்ட போது

     தயங்காது தந்துஇயற் பகையா யானார்

அம்மட்டோ மகள்கூந்தல் அறுத்துத் தந்தார்

    அரன்கோயில் மலர்முகர்தல் குற்ற மென்று

அம்மம்மா நாசியுடன் கரம்து ணித்தார்

     அங்கும்பெண் ஆணுக்கு அடிமை தானே?

 

அந்நியர் படையெடுப்பு நேரும் போதில்

      ஆங்கவர்க்குப் பலியாடு பெண்கள் தானே

அந்நாளில் தமைக்காத்துக் கொள்ள வேண்டி

     ஆடவர்கள் பெண்களைத் தானம் தந்தார்

இந்நாளில் கூடயிங்கு பெண்க ளுக்கு

     எந்தவுரி மையுமென்றும் இல்லை என்றார்

எந்நாளும் பெண்களுக்கும் தம்மைப் போல

      இதயம்உண் டென்பதனை மறந்தே போனார்

 

கும்மியடிப் பெண்ணே என்றெம்மைக் கைகளைக்

     கொட்டவைத்தாய் எங்கள் பாரதியே

செம்மையு டன்எம்மை வாழவைக்க அன்று

      சிந்தித்தவன் நீயே பாரதியே

 

எண்ணற்ற காலங்கள் ஆடவரா லுற்ற

     பெண்னடி மைத்தனம் தீர்ப்பதற்கே

மண்ணிலோர் ஆடவன் குரல்கொடுத்தாய் என்றும்

     மாறாத சரித்திரம் இதுவல்லவா?

 

மனைத்த லைவிக்கு வாழ்த்துசொன் னாயவள்

     மகத்து வந்தனை ஆய்ந்துரைத்தாய்

அனைத்தை யுமவள் பயனுறச் செய்து

    அனுபவ மாக்குவள் என்றுரைத்தாய்

 

சீனவீ ராங்கனை சியூசினி பேச்சை

     செம்மைமி குந்தநல் பாடலென

தானருந் தமிழில் தந்துபெண் விடுதலை

     தானுணர வழி காட்டிவிட்டாய்

 

பாரதம் விடுதலை பெறுவதென்றால் முன்னம்

     பாவையர் விடுதலை வேண்டுமென்றாய்

யாரதை அந்நாளில் ஏற்றார்கள் வந்த

      எதிர்ப்பினை ஏற்றுநீ ஓங்கிநின்றாய்

 

பள்ளிக்குப் பெண்ணை அனுப்புவதே பெரும்

     பாபமென் றெண்ணிய காலத்திலே

எள்ளிந கைத்தவர் தம்மையொ துக்கியே

     ஏட்டினை எம்கையில் தந்துவிட்டாய்

 

கல்விகற் றால் பெண்கள் தம்முரை மைதன்னைக்

     கண்டுகொள் வாரென்று எண்ணியன்றோ

நல்லபெண் னென்றிடில் நாணம்அச் சத்துடன்

     நாடும் மடமையும் வேண்டுமென்றார்

 

புதுமைப்பெண் பார்வையில் பாரதி தொடரும்

XXXX

 

பாரதி போற்றி ஆயிரம் – 73

  பாடல்கள் 601 முதல் 613

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஏழாம் அத்தியாயமான புதுமைப் பெண் பார்வையில் பாரதி தொடர்கிறது.

ஏழாம் அத்தியாயம்: புதுமைப்பெண் பார்வையில் பாரதி

14 முதல் 26 வரை உள்ள பாடல்கள்

 

 

ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்விதத்திலும்

     அறிவினில் குறையேதும் இல்லையென்றாய்

பேணும்நற் கல்வியைப் பெற்றுப் புதுமைப்பெண்

     புகழ்பெற லாமென வழியமைத்தாய்

 

கூடத்தி னில் பெண்ணை நிற்க வைத் துப்பலர்

    கூடிப் பலப்பல பேசுவதோ?

மூடத்த னமென்று காறியு மிழ்ந்துபின்

     முறையான காதலின் வாழ்த்துரைத்தாய்

 

கற்பெனல் பெண்ணுக்கு மட்டுமென் றேயதை

    காலங்கா லமாகச் சொல்லிவந்தார்

உற்றமு றையினில் இருவர்க்கும் பொதுவென

    உணர்த்திய ஆண்மகன் நீயல்லவா?

 

பொட்டுக்கட் டும்தேவ தாசிமுறை யென்று

     பெண்மையைக் கேவலம் செய்து விட்டார்

கொட்டிய கும்மியில் பொட்டுக்கள் யாவையும்

    கட்டவிழ்ந் துவிழச் செய்துவிட்டாய்

 

ஜனநாய கம்தந்த ஓட்டுரி மைகூட

     சற்றும் எமக்கிங்கு இல்லையென்றார்

துணிவோடு அதனையும் தந்தனர் என்றிடின்

     தூயநின் பாடலின் உரமல்லவா?

 

பெண்மை வாழ்கென்று போற்றினாய் பாரதி

பெண்மை வெல்கவென்று வாழ்த்தினாய் பாரதி

உண்மைக் கவிஞனின் உயரிய நோக்கினால்

திண்ண மாய்யாவும் நிகழ்ந்தன பாரதி

 

மாதர் பட்டங்கள் யாவையும் பெற்றனம்

ஓதத் தகுமுயர் சட்டங்கள் கற்றனம்

சாதம் சமைத்திடல் மட்டுமல் லாதுயாம்

சாத னைகள்பல செய்தனம் பணிகளில்

 

மருத்து வந்தனில் வியத்தகு சாதனை

திருத்த முடனிங்கு செய்தனர் பெண்களே

பெருமை மிகுந்த காவலதி காரியாய்

பொறுப்பினை ஏற்றதில் சிறந்தனர் பெண்களே

 

வாட்டம் தருவது எனும்பல பணிகளும்

நாட்ட முடன்செய்து நற்புகழ் பெற்றனர்

வீட்டை யாளல்இல் லாளெனல் மாற்றியே

நாட்டை யாண்டனர் நங்கையர் இத்தினம்

 

கண்ணில் காதலி காட்டிய பணியென

விண்ணைச் சாடுவர் ஆடவர் என்றனை

எண்ணி வியப்புற இன்றொரு மங்கையே

விண்ணைச் சாடினள் உயிர்பண யமாக்கியே

 

சமயப் பணிகளில் சார்ந்ததை ஏற்றுளோர்

சமூகப் பணியொடு கல்வியும் வளர்த்தனர்

எமக்கின் றமைந்துள எண்ணிலா புகழையும்

எமதல உனதென சமர்ப்பித் தோமே!

 

இத்தனையும் இருந்தாலும் பெண்கள் வாழ்வில்

     ஈவ்டீசிங் இழிவால்தற் கொலைகள் நேரும்

எத்தர்கள் பெண்களைக் கடத்திச் சென்று

     எவர்க்கோ விற்றிடல் தொடரும் இன்னும்

எத்துவர தட்சனைத் தீயில் பெண்கள்

    எரிகின்றார் தீயின்னும் அணைய வில்லை

இத்தனையும் தீர்கின்ற நாள்தான் அன்றோ

    இங்குநின் கனவுநிறௌ வேறும் நாளே…

 

அடிமைத்தன மென்கின்ற விலங்கை மாட்டி

     அறியாமை இருளிலெமைப் பூட்டி வைத்தார்

ஒடித்தாய்நின் கவிதையெனும் ஆயு தத்தால்

     ஒளிவிளக்காய் கல்விதனை ஏற்றச் செய்தாய்

அடிவிளக்கில் இருள்சற்றே இருத்தல்போல

     அதில்சில குறைகளின்னும் இருந்திட் டாலும்

விடிவுவரும் இருள்முழுதும் விலகிப் போகும்

     வித்தகனே புதுமைப்பெண் போற்ற வாழ்க!

 

புதுமைப்பெண் பார்வையில் பாரதி முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 70 & 71 (Post No.4882)

Date- 5 April 2018

 

British Summer Time- 4-59 am

 

Written by S Nagarajan

 

Post No.4882

 

Pictures are taken from various sources;thanks.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 70

  பாடல்கள் 570 முதல் 578

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

பாரதி பத்துப்பாட்டு

 

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி தொடர்கிறது.

 

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

21 முதல் 29 வரை உள்ள பாடல்கள்

 

காதல் போயின் சாதல் என்றே

    கழறும் படிசெய்தாய்

நீதம் அதுவே என்றிடும் வண்ணம்

    நீடுற உரைத்திட்டாய்

ஆதலி னாலே நீயே எந்தன்

    ஆரு யிரைக்கவரும்

காதல னாக வந்தாய் எந்தன்

    கான மதைக்கேட்டாய்

 

பாட்டினில் உன்போல் இதயந் தன்னை

    பறிகொடுத் திடுவோர்கள்

நாட்டினி லெங்கும் இருந்திடு வாரோ

    நானுந் தன்மேலே

காட்டிய காதலில் உள்ளம் நெகிழ்ந்தாய்

    கனிவுட னதையேற்றாய்

ஏட்டிலும் காணா காதல் இதுவென

    எனைப்பி ரிந்தே சென்றாய்

 

ஆயினு மென்ன காதல் தனையே

    அவம தித்தல்போல்

ஆயிடை மறுநாள் நானொரு குரங்கிடம்

    அதே பாடல் பாட

ஏயின அம்பாய் காயம் பட்டாய்

    என்மேல் கோபமுடன்

போயினை எந்தன் காதல் தனையே

    போலியென் றேநினைத்தாய்

 

குரங்கி லிருந்தே மனிதன் வரவென

    குறித்தார் நூல்களிலே

மரங்க ளின்மேல் தாவிட லாலே

    மனமே குரங்கென்றார்

குரங்கை விரும்பும் எந்தன் மனமும்

    குரங்காய் நினைத்தாயோ?

தரங்கெட்ட குயில் எனவே வெறுத்துத்

     தனியாய் தவித்தாயோ?

 

மூன்றாம் நாளில் நீவரும் போதில்

    முன்னிலும் கொடுமையதாய்

நான்செய் செயலை நேரினில் கண்டாய்

    நாடியோர் மாட்டினிடம்

மீண்டும் அந்தக் காதல் பாடல்

    மோகத் துடனிசைக்க

ஏன்தான் இந்தக் குயிலைக் கண்டேன்

    எனநீ நொந்தனையே

 

காதலைநீ மதித்திடல்தான் உண்மை யென்றால்

    கருத்தற்ற குரங்கிடமும் மாட்டைக் கண்டும்

காதல்பாட் டிசைத்திடுதல் சரியா என்றே

    கடுங்கோபத் துடன்நீயும் கேட்டு நின்றாய்

வாதமேதும் செய்யாமல் கண்ட தெல்லாம்

     மாயையென்றே நானெடுத்து உரைத்த போதில்

ஏதமென அதையேற்க மறுத்து விட்டாய்

     என்றாலும் அதையுணர்த்தல் எளிதே யல்ல

 

நடவாத ஒன்றினையே நடந்த தாக

     நாமறிந்தோர் சிலநேரம் சொல்வ துண்டு

திடமாக அதைநம்பும் சிலபே ராலே

     தீங்குகளும் சிலநேரம் நிகழ்வ துண்டு

படமாகக் கண்முன்னே நீயே நேரில்

    பார்த்ததையே நானிங்கு மாயை யென்றால்

தடம்மாறும் என்பேச்சை நம்பப் போமோ

     தானதனைச் சிந்தித்தென் கதையைச் சொன்னேன்

 

முன் ஜென்மச் சிந்தனை இல்லாத பேரிந்த

     மேதினியில் எங்கும் இல்லை

இன்றதனை உணர்ந்திடின் அதிலுற்ற காதலையே

     எண்ணுவார் மாற்ற மில்லை

அன்றந்தப் பிறவியில் நான் கொண்ட காதலை

     அழகாகப் பாடித் தந்தாய்

என்றுமென் நினைவினை எந்நாளும் நிலைபெறும்

    இலக்கியமாய் சூடத் தந்தாய்

 

இக்காலம் கதைகளை எவ்வடிவில் கண்டாலும்

    யாவிலும் ஆழமாக

முக்கோணக் கதைகளே பெருமளவில் வருமதன்

     முன்னோடி நீயே யன்றோ

அக்காலந் தனில்நீயும் அருமையுள நாடகமாய்

     அரியயென் முன்ஜென் மத்தை

எக்காலத் திலுமெவரும் எண்ணியே வியந்திடவே

     ஏற்றமுற இயம்பலானாய்

  குயில் பார்வையில் பாரதி தொடரும்.

xxxxxxxxxxxxxxxxxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 71

  பாடல்கள் 579 முதல் 587

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி தொடர்கிறது.

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

30 முதல் 38 வரை உள்ள பாடல்கள்

இருவ ரென்னை விரும்பி நின்ற போதில்

ஒருவர் மீதும் உளம்தி ரும்பா நாளிலே

அருமை யான அரச மரபின் செம்மலாய்

பெருமை மிக்க இளவ லங்கு வந்தனன்

 

கண்ட போதே காத லென்றால் பொருந்துமோ?

பண்ப தல்ல என்ற சொல்லும் பொய்த்ததே

கண்ட போதில் இதயம் மாறி கலந்ததால்

மண்ணின் மாண்பு மாறி யாவும் மறந்ததே

 

திடமு டனிரு மனமி ணைந்து திளைத்ததால்

உடலி ரண்டும் உளமுருகி ஒன்றலால்

இடமு டனொரு கால மென்ப தின்றியே

தடம்ப திக்கத் தந்து விட்டேன் தன்னையே

 

காத்தி ருந்த இருவ ரதனைக் கண்டனர்

ஆத்தி ரத்தில் அறிவி ழந்து வந்தனர்

நேத்தி ரத்தில் ரத்தம் வாளில் நேர்பட

தீத்தெ றித்தல் போல வெட்டிச் சாய்த்தனர்

 

உடலினையான் தந்திட்ட காத லர்தாம்

     உயிரையே எனக்காகத் தந்த போதில்

திடமுடனே கலக்கமின்றி என்னைப் பார்த்து

    திரும்பவும்நாம் மறுபடியும் பிறப்போ மென்றார்

மடமையென சிலர்சொல்வார் ஆனால் என்னே

     மறுபடியும் நானிங்கு பிறந்து வந்தேன்

கடவுளே செய்திட்ட சதியோ என்ன

     கருங்குயிலாய் நானிங்கு தோன்றி வந்தேன்

 

முன்பிறப்பில் தனிலுற்ற இவற்றை யெல்லாம்

     முழுமையாய் உன்னிடத்தில் சொன்ன போதில்

என்னயிது இவையெல்லாம் மெய்யோ பொய்யோ

     ஏற்பதோ வேண்டாமோ எனக்கு ழம்பி

பின்னுமதன் உண்மைதனைக் காண்ப தற்கு

    பேடையேஉன் காதலன்யார் என்று கேட்டாய்

முன்னிற்கும் நீயேதான் என்று சொல்ல

     முகமலர்ந்து எனைத்தொட்டாய் பெண்ணானேன் நான்

 

 குயிலாக எனையேற்றல் இயலா தென்றே

     குமரியாய் மாற்றினாய் என்ற போதும்

செயிரறு செல்லம்மா தனைவி டுத்து

     சேர்ந்தென்னு டனிங்கு சிலநாள் வாழ்தல்

உயிர்ப்புள மட்டிலும் கனவில் கூட

     ஒருபோதும் பொருந்தாது எனயெ ழுந்தாய்

பயின்றிடத் தக்ககாவி யமாய் மாற்றி

     பாவடிவில் யாவையுமே பாடித் தந்தாய்

 

இக்கதையின் பொருள்தன்னைக் காண்ப தற்கு

     எவரேனும் முனைவாரோ என்று கேட்டாய்

அக்கறையாய் அவ்விதமே கூர்ந்து நோக்கி

     ஆய்வு செய்தோர் உண்டெனினும் அவர்க்குள் ளேயும்

மிக்கபல முரண்பாடும் அதனா லிங்கே

     மேலும்பல விவாதமும் விளைந்த தன்றோ?

தக்கபடி இதன் பொருளை நீயும் அந்தத்

     தெய்வமும் அன்றியார் உணர்ந்து சொல்வார்?

 

பாரதி உன் குயில்பாட்டை பூரணமாய் உணர்ந்தவர்கள்

      பாரினிலே எவரு மில்லை

சாரமுள அதன்பொருளை உணர்ந்திட்டேன் என்றெவரும்

      சாற்றிடவும் துணிச்ச லில்லை

வேரத்னைக் காணாமல் வேதாந்த விருட்சத்தை

      விளைவிப்பார் யாரு முண்டோ?

யாரதனைப் படித்தாலும் பொருள்பலவாய் தோன்றிடவே

     யாத்தாயோர் கவிதை வாழி!

 

குயில் பார்வையில் பாரதி முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

 

 

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 68 & 69 (Post No.4876)

Date- 3 April 2018

British Summer Time- 6-25

Compiled by S Ngarajana

Post No.4876

 

பாரதி போற்றி ஆயிரம் – 68

  பாடல்கள் 526 முதல் 549

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஐந்தாம் அத்தியாயமான கண்ணன் பார்வையில் பாரதி இடம் பெறுகிறது.

ஐந்தாம் அத்தியாயம்: கண்ணன் பார்வையில் பாரதி

1 முதல் 24 வரை உள்ள பாடல்கள்

திருமாலின் அவதாரம் பத்தினுள் யான்மட்டும்

     திகழ்தனிப் பெருமை பெற்றேன்

ஒருமைப்பா டிதுவென்ன பாரதம் எங்கணும்

     உயர்திருக் கோயி லுற்றேன்

கருதரிய எண்ணற்ற காவியங் கள்இந்தக்

     காசினியில் பெற்று வந்தேன்

உருவினில் மனிதனாய் இருப்பினும் தெய்வமென

     உணர்ந்திடும் செயல்பு ரிந்தேன்

 

சிறையினில் பிறந்தவன் என்றபோ தும்பிறவிச்

     சிறைதனை நீக்க வந்தேன்

மறைந்துநான் வாழ்ந்திட நேர்ந்தபோ தும்மாயை

     மறைந்திடச் செய்து வாழ்ந்தேன்

கறையென்று சொல்லிடும் லீலைகள் புரிந்தாலும்

     களங்கமற் றுத்தி கழ்ந்தேன்

உறைந்திடும் களத்தினுள் உலகுய்ய கீதையை

     உரைத்துவழி காட்டி நின்றேன்

 

என்றுமென் தாசனாய் திகழ்அக் ரூவர்போல

     எண்ணற்ற பேர்க ளுண்டு

தன்னரும் தோழனாய் கருதியே இணைந்திட்ட

     தனஞ்செயன் நட்பு முண்டு

அன்பினால் வளர்த்தெந்தன் அன்னையாய் விளங்கிய

    யசோதை பாச முண்டு

நன்னிய ராதைபோல் நாயகி பாவத்தில்

     நாடிய பக்த ருண்டு

 

ஒவ்வொரு வருமெனை  ஒவ்வொரு நிலையினில்

    உணர்ந்திடக் கூடு மென்றால்

செவ்விய பல்வேறு நிலைகளில் ஒருவரே

     சேவிக்க இயல்வதுண்டோ

எவ்விதம் பாரதி நீமட்டும் எனக்குளே

      இத்தனை வடிவு கண்டாய்

இவ்விதம் இதற்குமுன் கண்டவர் யாருமிலை

     இனிவரப் போவ தில்லை

 

எந்தனைத் தாயாகக் கண்டபின் சேயாக

     எவ்விதம் காணயியலும்? – நெஞ்சில்

வந்திக்கும் குருவாக ஏற்றபின் சீடனாய்

     மதித்திடல்தா னெவ்விதம்? – மேலும்

விந்தையாய் அரசனொடு சேவகன் எனயிரு

     வியன் நிலை அமைவதுண்டோ? – இன்னும்

அந்தமார் நாயகன் தானேநா யகியாக

     ஆகிடும் நிலையுமுண்டோ?

 

என்றாலும் இத்தனை வடிவங் களில்காண

     என்னாலே இயலுமென்று என்றும்

என்மீது கொண்டதோர் பக்தியா லல்லவா

     எண்ணற்ற பாவடித்தாய் இங்கு

இன்றுமதை ஆய்வோர்கள் ஒவ்வொரு நிலைக்குமோர்

     இலக்கணம் கண்டவுந்தன் அரிய

பன்முகச் சிந்தனையின் படிமங்க ளைக்கண்டு

    பாங்குடன் போற்றுகின்றார்

 

போர்க்களம் தன்னில் பகவத்கீ தைதனை

     புகன்றிடும் போதினிலேநான்

யார்யாரின் வடிவில் இருக்கின் றேனென

     யாவையும் உரைக்கையிலே அதில்

பார்த்தனாய் உள்ளேன் பாண்டவ ருள்ளென

     பகர்ந்ததை நினைத்தாயோ? – கவிதைத்

தேர்தனில் என்னை இருத்தியே பாக்களாம்

     தெறிகணைத் தொடுத்தாயோ?

 

தெய்வத்தை உணர தோழமை முதலென

     தேர்ந்துனை அருச்சுனனாய் யாவும்

செய்தன்று என்னுடன் இருந்தவன் நீயென

     செப்பிடும் வகையினிலே எந்தன்

துய்யநற் குணங்களைத் தொகுத்தளித் தாயென்னை

     சிலிர்த்திடச் செய்துவிட்டாய் வாழ்வில்

உய்வுற வேண்டுவோர் உனைப்போல் தோழமை

     உணர்ந்தால் உயர்ந்திடுவார்

 

அன்னையின் வடிவினிலே எந்தன்

     அற்புத தரிசனம் நீயுணர்ந்தாய்

விண்ணையும் கடந்துசென்ற அந்த

     விராட்சொ ரூபத்தை உணர்த்திவிட்டாய்

தண்ணொளி தருநிலவும் பிறவும்

     தாய்தரு பொம்மைகள் எனக்கண்டாய்

நண்ணும்பொய் வேதங்கள் நீ

     நகைத்திடத் தந்ததும் சொல்லி வைத்தாய்

 

தந்தையின் நோக்கினிலே எந்தன்

     தன்மையை உரைத்திட முயலுகையில்

விந்தைப் பயித்தியமாய் கண்ட

     விசித்திரச் செயல்களைப் பாடலுற்றாய்

எந்தயி டத்திருப்பேன் நான்

     எங்கெதைச் செய்வேன் எவரறிவார்?

அந்தநி லைதன்னை மிக

    அற்புதம் என்றிடப் பாடிவைத்தாய்

 

சேவகன் எனநீயும் எனை

    செப்பிட முயல்கையில் யான்வியந்தேன்

ஏவலைச் செய்பவனாய் சொல்ல

    எவ்விதம் துணிந்தாய் எனநினைந்தேன்

காவல் புரிபவனாய் எனைக்

     காட்டிய பொழுதினும் மிகநயமாய்

மேவரும் தெய்வமென எந்தன்

    மேன்மையும் எளிமையும் கலந்துரைத்தாய்

 

அரசன் என்பவனை இந்த

     அகிலம் எவ்விதம் தூற்றுமென

தரமுடன் விரித்துரைத்தாய் எந்தன்

     சக்கரம் சுழன்ற மறுகணமே

தருமம் தழைத்ததென்றே எந்தன்

     தகுதியை யாவரும் உணரவைத்தாய்

கருத்தில் பதிந்திடவே இந்தக்

     கண்ணனின் தன்மையை எடுத்துரைத்தாய்

 

எங்கணும் வெற்றியே எதிலும் வெற்றி

    எனைப்போல் பெற்றவர் எவரும் இல்லை

இங்கெவர் இவ்விதம் உரைத்திட் டாலும்

    யாவும் தோல்வியாய் முடிதற் கூடும்

அங்கதை மாற்றியே தோல்வி நேர்ந்தால்

    அவன்செயல் என்றதை ஏற்பின் உள்ளப்

பங்கயம் தனில்நான் உதிப்பே னென்று

    பகர்ந்திட்ட சீடனென என்னைக் கண்டாய்

 

கண்ணனைக் குருவாகக் கொள்க யென்றே

     கருத்தற்ற கிழவனவன் சொன்னதாலே

நண்ணிய போதிலென் செயல்கள் கண்டு

     நாடியதே தவறென்று நினைத்து விட்டாய்

உண்மையுள மெய்ப்பொருளை ஓர்நா ளில்நான்

    உபதேசம் செய்தபோதில் எனையுணர்ந்தாய்

கண்ணிலுறும் தோற்றமல்ல ஆன்ம ஞானம்

    கருத்திலும் இறையுணர்வு என்று கண்டாய்

 

தீராத விளையாட்டுப் பிள்ளை யாக

     தெருவிலே செய்திட்ட குறும்பை யெல்லாம்

நேராகக் கண்டவன்போல் பாடி நின்றாய்

    நீயுமந்த கோபியருள் ஒருவன் தானோ?

சீரான அப்பாடல் கேட்கும் போதில்

     சிறுவயதின் நினைவெல்லாம் தோன்றச் செய்தாய்

ஆராத ஆவலுடன் எந்தன் உள்ளம்

    ஆயர்பா டிச்செல்ல ஏங்கு தப்பா

 

தனக்கொரு பெண்குழந்தை வேண்டு மென்று

     தவித்திட்ட யசோதையாம் எந்தன் தாயார்

எனக்கேயோர் பெண்ணைப்போல் அலங்க ரித்து

    ஏக்கமது தீர்ந்திட்டாள் அந்த நாளில்

உனக்குமது போலாசை வந்த தாலோ

     ஒருநொடியில் பெண்குழந்தை யாக்கி வைத்தாய்

அனந்தம்பா எனக்கெனநீ இசைத்திட் டாலும்

    அச்சின்னஞ் சிறுகிளிக்கோ ஈடே யில்லை

 

நாயகி பாவத்திலே என்னை

நாடிய பொழுதினிலே

தூயநின சிந்தையதும் திரிந்து

துயரப் பட்டதெலாம்

ஆயபல் கருத்துக்கள் அதிலே

ஆழ்கடல் முத்தெனவே

ஏயநற் கவிதைகள் நீயும்

ஏக்கமுற் றுப்பாடினாய்

 

பாங்கிகள் அருகிருந்தால் என்னைப்

பார்த்திடச் சென்றிடவே

ஆங்கவர் தடையெனவே அவரை

அனுப்பியே வைத்ததுவும்

ஓங்கிய மரங்களுள் காட்டில்

ஓய்வின்றித் தேடியதும்

தேங்கிய காதலினால் நீயும்

தெவிட்டாமல் பாடிவைத்தாய்

 

கன்னியர் பலரென்னைக் காதலித்தார் அக்

    காதலைக் கவியாகச் சொல்லிவைத்தார்

என்னையே பெண்ணாகப் பார்த்தவர்கள் புவியில்

    எங்குமெந் நாளிலும் இருந்ததில்லை

துன்னிய வடிவெலாம் நானாகினேன் என்று

     தூயநற் கவியாகப் பாடிவைத்தாய்

என்னதான் நினைத்துக் கண்ணம்மாவாய் கண்டு

    எந்தனை நீயங்கு உருவகித்தாய்

 

பெண்ணாக நீயென்னைக் கண்டிட்டாலும் அதில்

    பழம்பிற விக்கதையில் ஆணாக்கினாய்

திண்மையுள ராமன்நான் என்றபோது  உன்னை

    சீதையெனும் பெண்ணாகச் சொல்லிக்கொண்டாய்

வண்மையுள நரசிங்கம் நானாகிட நீ

     மகிமையுள மைந்தனெனும் உறவுசொன்னாய்

உண்மைநிலை இவற்றுக்குள் ஆய்ந்தாலன்றோ உன்

     உள்ளத்தின் பக்திதனை உணரக்கூடும்

 

பன்னிரு ஆழ்வார்கள் தாமளித்த அரிய

    பாசுரங் களென்னும் கடலினிலே

அன்புரு கவிஞநீ மேகமாகி பல

     அருங்க ருத்துக்களாம் நீரைமொண்டு

இன்னிசைக் கலந்து என்மேலே தேன்போல்

     இனியகவி மழையாகப் பொழிந்துவிட்டாய்

என்றுமென் நெஞ்சினுள் நினைவென்னும் நல்ல

    ஏற்றமிகு பயிரினை விளையவைத்தாய்

 

நண்பனாய்க் காண பார்த்தனுண்டு எனை

    நாயகனாய்க் காண ராதையுண்டு

திண்ணிய குருவாய் சாந்தீபினி பண்பு

    திகழ்கின்ற சீடனுக்கு சாத்யகியே

நண்ணிய தாயென யசோதையே நாளும்

    நாடும்பிள்ளைமைக்கு கோபியரே

எண்ணிட இதுபோல் நாயகிக்கு உவமை

    எவருண்டு எவ்விதம் பாடினாயோ?

 

பற்பல மருத்துவம் இருந்தாலும் அதன்

     பாதைகள் வெவ்வே றானாலும்

முற்றிய பிணியைத் தீர்ப்பதற்கே அவை

    முயன்றிடும் என்பது இயல்பன்றோ?

அற்புத பாவனை எதிலேனும் மக்கள்

    அறிந்தெனை நாடி அடைந்திங்கு தம்மை

ஏற்றிடும் பிறவிப் பிணிதீர நீ

    ஏந்திய மருத்துவ நெறிகளன்றோ?

 

முனிவருள் பிருகு தேவரிஷி தம்முள்

    முகடெனும் நாரதன் ருத்திரருள்

முனிந்திடும் சங்கரன் வசுக்களிலே நான்

     மூண்டெழும் அக்கினி தளபதியுள்

இனியதமிழ் முருகன் யட்சருளே எவரும்

     ஈடில்லா குபேரன் எனகீதை

தனில்சொன்ன நானினி கவிஞருள்நான் என்றும்

     தமிழ்க்கவி பாரதி என்பேன்வாழி!

 

 

கண்ணன் பார்வையில் பாரதி முற்றும்

 

xxxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 69

  பாடல்கள் 550 முதல் 569

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி துவங்குகிறது.

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

1 முதல் 20 வரை உள்ள பாடல்கள்

வானப் பறவையென வாழினும் பூமியில்

கான மிசைக்கும் கருங்குயில்நான் எங்கும்

பயிலும்நல் பாட்டோச கேட்டாலே மக்கள்

குயிலின் குரலென்றே கூறி மகிழ்ந்திடுவார்

ஆடலும் பாடலும் ஆங்கொன்றி னுக்கொன்று

நாடும் துணையாகி நானிலத்தில் தாமிணையும்

ஆட மயிலென்றும் அவ்வாறே இன்சுவையாய்ப்

பாடக் குயிலென்றும் பாங்காய் உரைத்திடுவார்

ஆனாலும் என்ன பயன் ஆடும் மயிலுக்குத்

தானாக முன்வந்து தேசியச் சின்னமெனும்

உன்னதத் தன்மை உவந்தளித்தா ரென்னை

என்னகார ணத்தாலோ எல்லாரும் மறந்திட்டார்

இவ்விதம் நேர்ந்ததை எண்ணிக் கலக்கமுற

செவ்வையாய் ஓங்கும் சிறப்பளித்தாய் பாரதியே

முப்பெரும் பாட்டெழுதி மூன்றினுள் ஒன்றாக

இப்பறவை தன்னை இலக்கிய மாக்கிவிட்டாய்

கண்ணன் திரௌபதிக்குக் காணும் வரிசையில்

கன்னங் கரியயெனைக் காவிய மாக்கிவிட்டாய்

கண்ணன் கடவுள் கருதுமுயர் பாஞ்சாலி

பெண்டிரில் தெய்வமென பேசும் பெருமையுற்றாள்

என்ன தகுதி இவரோ டிணைத்திந்த

சின்னஞ் சிறுகுயிலை சீர்பெறச் செய்தாய்

குயிலெங்கும் கூவும் குரலோசை தன்னை

இயல்பாய் செவிமடுப்பார் எங்கணும் உண்டு

அதிலுறும் இசையை அனுபவித் தாங்கே

மதிப்போர் சிலரேனும் மாநிலத்தில் தாமுண்டு

கேட்ட இசைதன்னில் காவியம் கண்டிட

பாட்டுத் தலைவாநின் போல்வேறு யாருண்டு?

புதுவை நகரின் புனிதமுள்ள தோப்பு

எனைத்தந்து உந்தன் எழில்கவிதை பெற்றதுவோ?

அன்றாடம் செல்லும் அருமையான தோப்பதனில்

அன்று நிகழ்ந்திட்ட அற்புதம் தானெதுவோ?

எந்நாளும் கேட்கும் எமதுகுர லோசைதான்

அந்நாளில் உன்மனதை அவ்விதமேன் ஈர்த்ததுவோ?

உன்பாட்டில் எல்லோரும் உள்ளம் உருகிடுவார்

என்பாட்டில் நீமகிழ என்னதான் உள்ளதுவோ?

என்னதான் காரணம் யாருமறி யாரெனினும்

என்பெயரால் காவியம் இன்தமிழ்தான் பெற்றதுவே!

பாரதிநின் பாடல்களில் காதல் தன்னைப்

     பாடாத இடமென்று எதுவும் இல்லை

பாரதனில் நாம்காணும் காட்சி யெல்லாம்

     பாங்குடைய காதலன்றி ஏது மில்லை

சாரமுள அதன்சிறப்பைச் சொல்வ தற்கும்

     சாகாத காவியமாய்ப் படைப்ப தற்கும்

சீராகஎன் கதையைத் தேர்ந்திட் டாயோ?

     சிறுகுயிலின் காதலென இசைத்திட் டாயோ?

குயில் பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

xxxx

 

பாரதி போற்றி ஆயிரம் – 66 & 67 (Post No.4870)

Date: 1 April, 2018

 

 

Time uploaded in London- 7-17 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4870

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 66

  பாடல்கள் 485 முதல் 491

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு மூன்றாம் அத்தியாயமான பராசக்தி பார்வையில் பாரதி தொடர்கிறது.

மூன்றாம் அத்தியாயம்: பராசக்தி பார்வையில் பாரதி

31 முதல் 37 வரை உள்ள பாடல்கள்

எத்தனையோ தெய்வங்களைப் பாடிடினும் யாவிலுமிச்

     சக்திதன்னை யேநீயும் கண்டாய் – அவை

     அத்தனையும் என்வடிவே என்றாய் – உலகில்

சக்திதாசர் என்றிடவே வாழ்ந்தவரும் உன்போலே

     தத்துவத்தில் உறுதிகொண்ட தில்லை – கவியில்

     நித்தமெனைக் கண்டதுந்தன் எல்லை

 

மணக்குளத்து விநாயகர் நான்மணிமா லைதனிலும்

     மணப்பதெலாம் என்புகழே யன்றோ? – அதன்

     மகத்துவத்தை உணர்த்துவதுதான் என்றோ? – பாவில்

இணக்கமாய் சக்திதொழில் யாவுமெனில் சஞ்சலமேன்

     எனவுரைத்து போற்றினையே என்னை – அதனை

     இனியுணர்ந்து போற்றுவரே உன்னை

 

முருகனவன் பெருமைகளை உரைக்கின்ற போதினிலே

     அருமையுடன் ஒருவரியைச் சொன்னாய் -குகன்

     அருளாகிய தாய்மடிமேல் என்றாய் – மேலும்

ஒருமுறையா இருமுறையா உமைமைந்தன் என்பதனை

     திருக்குமரன் சிறப்பெனவே கொண்டாய் – மயில்மேல்

     வரும்முருகன் தனிலுமெனைக் கண்டாய்

 

கலைமகளும் திருமகளும் கண்களெனக் கொண்டதினால்

     காமாட்சி என்றபெயர் பெற்றேன் – அதுபோல்

     காணுமுந்தன் பாட்டினிலும் உற்றேன் – இன்று

நிலையுரைக்க இயலாத பரமனோடு கண்ணனையும்

     நிகழ்சக்தி வடிவெனவே சொன்னாய் – எதிலும்

     நீக்கமற நிற்பவள்யான் என்றாய்

 

எங்கணும் சக்தி எதனிலும் சக்தி

    என்பதே உந்தன் கவித்துவ சக்தி

அங்கத னால்நீ ஆவேச முற்றே

    யாரையும் பணிய மறுத்திட் டாயே

சிங்கமென் றுன்னைச் சொல்லிடும் வண்ணம்

    சீரிய மேனி இருந்திட்ட போதும்

அங்கங் கலைந்தே அளவிலா துன்பம்

    அடைந்த தினாலுடல் சிதைவுற் றாயே

 

நூறாண்டு வாழ்ந்திட வரமது கேட்டாய்

     நோயுடன் அவ்விதம் வாழ்ந்திடல் நன்றோ?

சீரான வாழ்வின்றி எத்தனைக் காலம்

     சிந்தைநொத் துலகில் இருந்திடக் கூடும்?

ஆறான தொருநாள் சமுத்திரம் தன்னில்

     ஆவலாய் சங்கமம் ஆகிடுந் தானே

பேரான படைப்புகள் போதுமென் றேநான்

     பிள்ளையே உந்தனை அழைத்துக் கொண்டேன்

 

என்றுமிங் கொருவன் எத்தனைக் காலம்

     இருந்தனன் என்பதில் பெருமைதான் உண்டோ?

பொன்றிடும் முன்னர் வேடிக்கை மனிதர்

     போலவீ ழாமல்சா திக்கநி னைத்தாய்

இன்றுள படைப்பே இவ்வுல கிங்கே

     இருந்திடும் வரையுன் சிறப்பினைக் கூறும்

நன்றினை என்றுன் கவிமலர் யாவும்

     நான்மகிழ் தேற்றேன் வாழ்கநீ வாழ்க!

பராசக்தி பார்வையில் பாரதி முற்றும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய அறிமுகம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 xxxx

பாரதி போற்றி ஆயிரம் – 67

  பாடல்கள் 492 முதல் 525

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு நான்காம் அத்தியாயமான பாஞ்சாலி பார்வையில் பாரதி இடம் பெறுகிறது.

 பாஞ்சாலி பார்வையில் பாரதி

1 முதல் 34 வரை உள்ள பாடல்கள்

திருவுடைப் பாஞ்சால நாட்டினில் தோன்றலால்

       திகழ்பாஞ் சாலி யென்பார்

துருபதன் மகளாய் வளர்ந்ததால் எந்தனை

      திரௌபதி என்ற ழைத்தார்

கிருட்டிணன் தங்கையென கருநிறம் பெற்றதால்

      கிருட்டிணை என்று சொன்னார்

பெருந்திறல் கொண்டதோர் பாண்டவர் தேவியென

      புகழ்தலே உயர்வாய்க் கொண்டேன்

 

தீயவை யாவையும் தீய்த்திட வந்ததால்

      தீயினில் தோன்றி வந்தேன்

தீயதை மாசுகள் தீண்டாது என்பதால்

      திகழ்ஐவர் தேவி யானேன்

ஆயயிப் புவிமுறைகள் ஏதுமெனக் கேலாது

     ஆய்ந்தவர் இதை யுணர்வார்

தூயநன் னெறிதனில் நினைத்ததால் அல்லவோ

     தெய்வமாய் சிறப்புப் பெற்றேன்

 

 

அரனருள் முற்பிறவி வரத்தினால் தோன்றினும்

      அரிமகிழ் தங்கை யானேன்

அரண்மனை தன்னிலே வளர்ந்தவ ளாயினும்

     அடவியில் வாழலானேன்

அரணெனும் ஐவர்தம் தேவியா யிருந்தும்

     அடுத்தவன் இழுத்துச் சென்று

அரசவை தன்னிலே ஆடைகள் பறித்திட

      அபலையென தவித்து நின்றேன்

 

அன்றுமுதல் என்மனதில் நான்கொண்ட பாரமே

     அரிய பாரதமாய் ஆக

என்றுமென் நெஞ்சத்தில் குமுறிய ஆவேசம்

     ஏயும்குருச் சேத்ர மாக

அன்றங்கு பதினெட்டு அக்ரோணி சேனைகள்

     அவளால் அழிந்த தென்று

என்றுமெனைப் பழிப்போர்கள் இருந்தாலும் காரணம்

     எவரிங்கு ஆய்ந்து சொன்னார்?

 

பாரதி எனும்புலவா – இந்தப்

பாஞ்சாலி துயரினை நீயுணர்ந்தாய்

பாரதிர்ந் திடநடந்த – அந்தப்

பாரதப் போரின் காரணத்தை

ஈரநெஞ் சத்துடனே – ஆய்ந்து

எனது நிலையினைத் தேர்ந்துரைத்தாய்

சீரற்ற கௌரவர்கள் – செய்த

சூழ்ச்சியால் விளைந்ததை ஆய்ந்துரைத்தாய்

 

காலத்தின் கண்ணாடியாய் – பல

கவிதைகள் புனைகின்ற பணியிருந்தும்

சாலநற் சுதந்திரப்போர் – தனில்

சற்றேனும் ஓய்வற்ற உழைப்பிருந்தும்

ஏலவோர் இடமுமின்றி – சென்று

எங்கெங்கோ உறைகின்ற வாழ்விருந்தும்

சீலமாய்ப் பாஞ்சாலி – நிலையை

சிறப்புறப் பாடுவேன் எனயெழுந்தாய்

 

எண்ணற்றா காவியம் நாட்டினுண்டு – அதில்

     எனைப்பற்றிப் பாடினோர் பலருண்டு

திண்ணமாய் முன்னமென் கதையுரைத்த – ஞானம்

     திகழ்கின்ற வியாசனின் பெருமையுண்டு

உண்டிடத் திகட்டாத அமுதமென்ன – வில்லி

     உரைத்திட்ட அற்புதப் பாடலுண்டு

பண்ணிலே எனதருங் கதையைநாளும் – இங்கு

     பாடியே வைத்திட்டோர் நிறையவுண்டு

 

எத்தனைப் பேரென்னைப் பாடியென்ன? – அதில்

     எவருமென் நிலையெண்ணித் துடித்ததுண்டோ?

பித்தனைப் போலந்த துரியன்அன்று – செய்த

     பேய்ச்செயல் கண்டிங்கு பதைத்ததுண்டோ?

நித்தமும் நிகழ்கின்ற எளியசெயலாய் – எந்தன்

     நிலைபற்றி இயல்பாக எழுதிவைத்தார்

அத்தகை யோர்க்கெலாம் எனதுவாழ்வு – பெண்ணின்

     அவலமல்ல ஆங்கதுவோர் கதைமட்டும்தான்

 

பாரதி நீயொருவன் தானே அய்யா

     பதறினாய் குமுறினாய் கோபமுற்றாய்

சீரற்ற மாந்தரின் சிறுமை கண்டு

    சீறினாய் மாறினாய் சாபமிட்டாய்

யாரவர் நெட்டைக ரங்க ளென்றாய்

    எல்லாரும் பெட்டைகள் எனப்பழித்தாய்

வேரற்ற மரமாக வீழ்ந்தி டாமல்

    வீறுகொண் டெழுந்தெனை முழங்கச் செய்தாய்

 

பாரதத்தை என்னுருவில் பார்த்திட் டாயோ?

      பாஞ்சாலி பாரத மாதாஎன்றே

சாரமுடன் உன்மனதில் தேர்ந்திட் டாயோ?

      சார்ந்திட்ட தீவிர வாதியாக

சூரனெனும் பீமனை நினைத்திட் டாயோ?

      சூழ்நிலையை உணர்ந்தவையில் பேசிநின்ற

வீரனருச் சுனந்தன்னை மிதவா தத்தின்

      விளங்குமொரு வடிவமெனப் படைத்திட் டாயோ?

 

தருமனையே அறத்திற்கோர் வடிவ மென்றே

     தக்கோர்கள் யாவருமே புகழ்ந்து சொல்வார்

தருமன்போல் என்றேதான் பண்பிற் கெல்லாம்

     தலைமையுறு உவமையென எவரும் சொல்வார்

தருமனவன் சூதாட்டம் தன்னில் கொண்ட

     தாளாத மோகத்தால் ஈடு பட்டே

தருமத்திற் கெதிராக எனையே அங்கு

     தான்வைத்து ஆடியதை எவர்தான் சொன்னார்?

 

ஆதலினால் தருமன்தான் நாட்டை வைத்தே

    ஆடிய போதேநீ கோபம் கொண்டு

சீதமதி குலத்திற்கே களங்கம் நேர

     சீச்சீயிவன் சிறியர்செய்கை செய்தான் என்றாய்

ஏதமுற அதன்பின்னும் மனையாள் தன்னை

     ஏற்றதொரு பணயமென வைத்திட் டானே

ஈதறமோ நற்செயலோ எனக்கொ தித்தே

     இவன்கையை எரித்திடுவோம் என்றிட் டாயே

 

இத்தனைக் கடுமையுடன் – தருமனை

     எவர்விமர் சித்தாலும்

அத்தனைப் பேருமாங்கே – அவர்மேல்

     ஆத்திரம் கொண்டிருப்பார்

வித்தகம் ஏன்நானும் – அவரை

     விழியால் எரித்திருப்பேன்

நித்தியப் புலவனேநீ – காட்டிய

     நியாயங்கள் அருமையன்றோ?

 

ஆதலி னால்தானே – அதனை

      அனைவரும் ஏற்கின்றார்

நாதனைப் பழித்தபோதும் – உந்தன்

     நடுநிலை நானுணர்ந்தேன்

வேதனைப் பட்டவள்நான் – நானே

     வியந்திட விரித்துரைத்தாய்

சாதனை செய்திட்டாய் – புதிய

     சரித்திரம் படைத்திட்டாய்

 

பாரதப் போர்நடக்கக் – காரணம்

     பாஞ்சாலி சிரிப்புயென்றே

பாரத நாடெங்கும் – கதையைப்

     பாங்குடன் சொல்லுகின்றார்

யாரதில் என்செயலை – மிகவும்

    இயல்பென உணர்த்துகின்றார்?

பாரதி நீயல்லவோ – திருத

     ராட்டின ராயுரைத்தாய்

 

  தடுமாறி விழும்போதில் – பெற்ற

     தாய்கூட நகைப்பளன்றோ?

கடுஞ்செய லாகிடுமோ – மைத்துனி

     கண்டங்கு சிரித்திடல்தான்

நடுநிலைக் கருத்திதுதான் – இதனை

     நயமுறச் சொல்லவைத்தாய்

எடுத்திதை யாருரைத்தார்? -இன்னும்

     ஏன்பழங் கதையுரைத்தார்?

 

காவியம் ஒன்றைப் படைத்திட நீயும்

    கருதிய போதினிலே

மேவிய கதைகள் எத்தனை எத்தனை

     மனதினில் உதித்திருக்கும்

பாவினில் வடிக்கப் பொருத்தம் நானென

     பல்வகைப் பாத்திரங்கள்

தாவிமுன் வந்தே எந்தனைப் பாடென

     தாமே கேட்டிருக்கும்

 

சங்க இலக்கியம் தனிலுறை மாந்தர்

     சரித்திரம் அறியாயோ?

பொங்கும் பக்தியில் சிறந்தவர் தம்மை

     போற்றிட உணராயோ?

தங்கும் ஐம்பெருங் காப்பியங்களில்தான்

    தகுந்தவர் கிடையாதோ?

எங்கும் புகழ்ந்திடும் இராமா யணத்துள்

    ஏதும் பொருந்தாதோ?

 

இத்தனைக் கதைகள் இருந்திட்ட போதிலும்

    ஏனந்த பாரதம் தன்னை

நித்தமும் நிலைத்திடும் காவிய மாக்கிட

     நீதேர்ந் தெடுத்தனை யென்று

இத்தினம் உந்தனை ஆய்வுகள் செய்பவர்

    ஏதேதோ காரணம் சொல்வார்

அத்தனைக் கும்மேலாய் ஆழ்மனத் தில்இந்த

     அபலையை நினைத்தனை யன்றோ?

 

இவ்விதம் பாரதக் கதைதன்னில் ஓர்பகுதி

    எழுதலென ஏற்ற பின்பும்

எவ்விதம் எப்பகுதி தனைநாமும் தேர்ந்திங்கு

    ஏற்பதென குழப்பம் தோன்றும்

செவ்விய பாரதம் சமுத்திர மல்லவோ

     செப்பமுற அதனுள் மூழ்கி

வவ்வியே ஓர்முத்தை எடுத்திடல் எளிதாமோ

     வாய்த்தசோ தனைதான் அன்றோ?

 

சந்திரன் மரபினில் வந்திட்ட மன்னவர்

    சரித்திரம் பற்பல உண்டு

அந்தநாள் அத்தின புரத்தினில் நடந்துள

    அரியணைப் போட்டிகள் உண்டு

எந்நாளும் யாவரும் போற்றிடும் கண்ணனின்

    எண்ணற்ற லீலைகள் உண்டு

இந்தநாள் நினைப்பினும் பதறிடும் குருசேத்ர

     யுத்தத்தின் கொடுமையும் உண்டு

 

எந்தனைப் பற்றியே பாடுதல் என்றாலும்

     யானன்று வேள்வி தன்னில்

செந்தணலில் தோன்றிய சிறப்புண்டு எனக்குற்ற

    சுயம்வரப் போட்டி உண்டு

இந்திரப் பிரத்தத்தின் அரசியெனும் புகழுண்டு

    இருண்டவன வாசம் உண்டு

சிந்திய இரத்தத்தில் சீற்றம் தணிந்தெந்தன்

    சிகைதனை முடித்த துண்டு

 

இத்தனையும் விடுத்து – ஏன்

எந்தன் சபதத்தை

அத்தினம் தேர்ந்தெடுத்தாய்? – யான்தான்

அதனை அறிந்திடுவேன்

 

இளமைப் பிராயத்தில் – நீ

எந்தன் கதைதன்னை

விளங்கும் தெருக்கூத்தில் – அந்நாள்

விருப்ப முடன்பார்த்தாய்

 

திரௌபதி வேடத்தில் – உள்ள

திறன்மிகு நடிகர்தனை

துரியன் சபைதனக்கே – அந்த

துச்சா தனன்தானும்

 

இழுத்து வருகியிலே – காண்போர்

இதயம் துடித்திருக்க

அழுது கதறிநிற்கும் -அந்த

அபலை பதைத்திருக்க

 

ஆடை பறித்திடுவாய் – என்று

அண்ணன் சொன்னவுடன்

வேடன் பறவைதனை – அங்கு

வீழ்த்திடும் நிலைபோல

 

துச்சா தனன்பாய்ந்தான் – அவளைத்

துகிலு ரியமுனைந்தான்

அச்சத் துடனதனைக் – காண

அனைவரும் காத்திருந்தார்

 

அந்நிலை தான்கண்டே – நீயும்

ஆத்திரம் கொண்டெழுந்தாய்

இந்நிலை வந்ததுஏன் – என

எண்ணிலா வினாதொடுத்தாய்

 

தெருக்கூத் தென்பதையே – மறந்து

தீரமாய் வாதிட்டும்

ஒருவரும் ஏற்கவில்லை – சிறுவன்

உளரலென விடுத்தார்

 

அன்றுன் பிள்ளைப் பிராயத்த்தில் – கொண்ட

     அரியநற் சிந்தனை வித்தன்றோ – நித்தம்

பன்னருங் கேள்வியாய் கிளைவிட்டு – பின்னர்

     பாஞ்சாலி சபதமாம் விருட்சமாகி – தமிழில்

என்றுமே நிலைத்திடும் காவியமாய் – எளிய

     இன்னருங் கவிகளாய் கனிகளாகி – கற்றோர்

உண்டிடத் திகட்டாத நிலைபெற்றது – என்னை

     உன்னத நிலைக்கு உயர்த்திட்டது

 

எளியபதம் எளியநடை எளிதாய் இங்கு

     எவருமதன் பொருளுணர இனிமை யோடு

தெளிவுறவே அமையுமொரு காவி யந்தான்

     தெள்ளுதமிழ்க் கிந்நாளில் தேவையென்று

அளியுறவே அந்நாளில் அமைத்துத் தந்தாய்

     அதற்குரிய தலைவியென என்னைக் கண்டாய்

ஒளியினால் சூழலையே சிவக்க வைக்கும்

     உயர்ரத்ன மாயுளங்கள் சிவக்கச் செய்தாய்

 

சமநோக்கே நற்கவிஞன் பன்பு என்றே

     சகுனிக்கும் சிலநியாயம் உரைத்திட் டாயே

எமதன்னை எனயேற்று எந்தன் குரலாய்

     எண்ணற்ற கேள்விகளைத் தொடுத்திட் டாயே

தமதரும் பக்தியினால் பலரும் இங்கே

     திரௌபதி கோயிலென அமைத்த போது

நமதன்னை கற்கோயில் தானா காண்பாள்

    நான்சொற்கோ யில்தருவேன் எனதந் தாயே

 

பாரதக் கதைபுவியில் வாழ்கின்ற வரையிந்தப்

     பாஞ்சாலி தானும் வாழ்வாள்

பாரமுள என்கதையைப் பாங்குடனே பாடியதால்

     பாவலனே நீயும் வாழ்வாய்

பாரதிநின் படைப்பினிலே யாவுமே மறைந்தாலும்

     பாஞ்சாலி சபதம் போதும்

பாரதனில் உன்புகழைக் காலமெலாம் காத்திருக்கும்

    பைந்தமிழ்போல் வாழ்க! வாழ்க!!

 

 

     பாஞ்சாலி பார்வையில் பாரதி முற்றும்

 

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி

கவிஞரைப் பற்றிய அறிமுகம் ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

 

***

 

“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)

“நடப்பது நடந்தே தீரும்” கம்பன் Philosophy பிலாஸபி/ தத்துவம் (Post No.4868)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 31 MARCH 2018

 

Time uploaded in London –  6-14 am (British Summer Time)

 

Post No. 4868

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மஹாபாரதத்தில் கர்ணன் என்னும் கதா பாத்திரமும், ராமாயணத்தில் கும்பகர்ணன் என்னும் கதபாத்திரமும் அற்புதமான படைப்புகள்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு—

என்ற குறளுக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்கள். இது புறநானூற்றிலும் (புறம்.34, ஆலத்தூர் கிழார் பாடியது) ராமாயண மஹா பாரதத்திலும் உள்ள வாசகம்.

கும்பகர்ணன் வாய்மொழி மூலமாக கம்பன் உதிர்க்கும் கருத்துக்களைச் சில பாடல்கள் மூலம் காண்போம்

 

 

ஆகுவது ஆகும் காலத்து ஆகும்; அழிவதும் அழிந்து சிந்திப்

போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்!

சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்?

ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்

 

யுத்த காண்டம்,கும்ப கர்ணன் வதைப் படலம், கம்ப ராமாயணம்

 

ராமனிடம் அடைக்கலம் புக மாட்டேன் என்று மறுத்து, வீடணனிடம் கும்பகர்ணன் சொன்ன சொற்கள்:-

“என்றும் வாழ்பவனே! உரிய காலத்தில் ஆக வேண்டியது ஆகியே தீரும்; அழிய வேண்டியது. அதற்குரிய காலத்தில் அழிந்து சிதறிப் போகும். அவ்வாறு அழிய வேண்டியதை அருகேயிருந்து பாதுகாத்தாலும், அழிந்தே போவது உறுதி. இதைக் குற்றமற உணர்ந்தவர், உன்னைக் காட்டிலும் யார் உள்ளனர்? வருத்தப் படாமல்

(ராமனிடமே) நீ திரும்பிச் செல். என்னை நினைத்து நீ வருந்தாதே — என்று கூறினான் கும்பகர்ணன்.

 

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதே

 

என்பது கும்பகர்ணனின் முடிவு.

ராமனிடம் சரணடைந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் உண்டு என்று வீடணன் சொல்கிறான். அதற்கு மறுமொழி தந்த கும்பகர்ணன், நீ சொல்வது எல்லாம் சரிதான்; அதர்மத்தின் தரப்பிலுள்ள நாங்கள் எல்லோரும் இறப்பது உறுதி. நானும் ராவண னும் அரக்கர் சேனையும் கூண்டோ டு, கைலாஸம் போகப் போகிறோம். எங்களுக்கு எல்லாம் எள் இறைத்து நீர் தெளித்து இறுதிக் கடன்கள் செய்து     நாங்கள் நரகம் புகாமல் , தடுக்க ஒருவராவது தேவை. ஆகையால் நீ வெற்றி பெறும் ராமர் தரப்புக்கே சென்று விடு என்கிறான்.

 

 

இதோ சில பாடல்கள்:

 

கருத்து இலா இறைவன் தீமை கருதினால் அதனைக்காத்துத்

திருத்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம்? தீராது ஆயின்

பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி

ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா

 

பொருள்

“தலைவன் ஒருவன் ஆலோசனை செய்யாமல் தீய செயல் செய்ய நினைத்தால் அதைத் தடுத்து நிறுத்த முடியுமானால் நல்லது. முடியாதாயின் அவனது பகைவரை (ராமனை) அடைந்து பெறக்கூடிய பயன் உண்டா? ஒருவன் இட்ட சோற்றை உண்டவர்க்கு உரிய செயல் போரில் இறங்கி போரிட்டு, அன்னம் இட்டவர்க்கு முன்னமேயே இறக்க வேண்டியதே

 

அடுத்த பாட்டிலெல்லோரும் அழிந்தபின்னர் ராவணன் அனாதையாக அழிவதைப் பார்க்க விரும்பவில்லை என்கிறான்.

 

இராமன் செலுத்தும் அம்பு மழையில் அரக்கர் அனைவரும் அழிவர். அவ்வாறு அழிந்து விட்டால் அயோத்தி வேந்தனிடம் அடைக்கலம் அடைந்த நீ இல்லாவிட்டால் எள்ளுடன் கூடிய நீரைக் கொடுத்து தர்ப்பணம் செய்ய யார் உளர்? இருந்தால் அவரைக் காட்டுவாய்- என்கிறான் கும்பகணன்.

எய்கணை மாரியாலே இறந்து பாழ்படுவேம் பட்டால்

கையினால் எள் நீர் நல்கிக் கழிப்பாரைக் காட்டாய்

 

 

வீடணன் Philosophy பிலாஸபி பிறவி நோய்க்கு மருந்து ராமன்

 

ராமனைச் சரணடைந்தால் என்ன பயன் கிட்டும் என்று விபீஷணன் உரைக்கிறான். அதிலும் கம்பன் இந்துமத தத்துவங்களை மொழிகிறான்

 

 

இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் கரந்த வீரன்

அருளும் நீ சேரின் ஒன்றோ அபயமும் அளிக்கும் அன்றி

மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம், மாறிச் செல்லும்

உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே.

 

பொருள்

 

அறியாமை உடைய எனக்கும் அருள் பொழிந்த வீரன் ராமன்.

நீ வந்தால் உனக்கும் அருள் புரிவான். உனக்கு அபயம் (பாதுகாப்பு) தருவான்.

அஞ்ஞானம் நிறைந்த பிறவி நோய்க்கு அவன் மருந்தாக அமைவான்.

உருண்டு செல்லும் வண்டிச் சக்கரம் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் இயல்புடையது வாழ்க்கை. இதனை நீக்கி மோட்சத்தை அருளுவான் ராமன்.

 

அதாவது ஜனன- மரண பிறவிச் சுழலிலிருந்து விடுவிப்பான்.

 

ஆக கும்ப கர்ண வதைப் படலத்தில் யார் யார் எல்லாம் பேசுகிறார்களோ அவர்கள் மூலம் எல்லாம் இந்துமதக் கருத்துகளை ஜூஸாகப் பிழிந்து தருகிறான் கம்பன்.

படிக்கப் படிக்கப் பேரின்பம் கிடைக்கும்.

சுபம்