சபரிமலை தரிசனம் : கம்யூனிஸ்டுகளின் அக்ரமம்! (Post no.5604)

WRITTEN BY S NAGARAJAN

Date: 30 October 2018

Time uploaded in London – 7-24 AM (British Summer Time)

Post No. 5604

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

சபரிமலை தரிசனம் : கம்யூனிஸ்டுகளின் அக்ரமம்!

ச.நாகராஜன்

1

சொந்தத்தில் சூன்யம் வைத்துக் கொள்வது என்று ஒரு பழமொழி உண்டு.

கம்யூனிஸ்டுகளுக்கு இந்தப் பழமொழி சபரிமலை தரிசன விஷயத்தில் நூற்றுக்கு நூறு பொருந்துகிறது.

சூன்யத்தைத் தானே வைத்துக் கொண்டு விட்டார்கள்.

தெய்வ சாபம் மற்றும் தேச சாபம் அவர்களை விடாது.

விளைவை சீக்கிரத்தில் அனுபவித்தே ஆக வேண்டும்.

விளைவு தேர்தல் முடிவின் ரூபத்தில் வந்து சேரும்.

கம்யூனிஸ்டுகளின் அக்ரமம் சபரிமலை சாஸ்தாவிந் அருளினால் ஒரு முடிவுக்கு வந்தே தீரும்!

சொந்த நாட்டிலேயே அழிந்து விட்ட கம்யூனிஸம் இந்தியாவில் இழுத்துக் கொண்டு இருக்கிறது.

சுவாசம் சீக்கிரம் நின்று விட அவர்களே வழியைத் தேடிக் கொண்டு விட்டார்கள்.

சுவாமியே சரணம் ஐயப்பா!

2

ஜனநாயகம் என்றால் என்ன அர்த்தம்? எந்தக் கடையனும் சமூகத்திற்கு எதிராக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று அர்த்தமா?

ஊடக தர்மம் என்றால் என்ன அர்த்தம்?

120 கோடி இந்தியர்,நாட்டுக்குச் சொந்தமானவர்கள் வாழ்கையில், அதில் ஓரிரு தேச துரோகிகள்  சொல்வதை தினமும் ஒரு மணி நேரம் ஒளி பரப்பி அதை ஒட்டு மொத்த நாட்டின் கருத்தாகச் சித்தரிக்க முற்படுவது தான் ஊடக தர்மமா?

நீதி மன்ற நியாயம் என்றால் என்ன அர்த்தம்?

120 கோடி மக்களுக்கும் ஒரே நீதி ஒரே நியாயம் ஒரே சட்டம் என்பதல்லாமல் ஹிந்துக்களுக்கு மட்டும் தனியாக ஒரு சட்டம், இதர மதங்களுக்கு இதே இந்தியாவில் ஒரு தனிச் சட்டம் என்பதா நீதி மன்ற நியாயம்?

ஹிந்துக்களுக்கான நாட்டில் ஹிந்துக்களை மட்டும் பாதிக்கும் விதத்தில் சட்டம் இருப்பது நியாயமாகுமா?

எண்ணிப் பார்த்து இதில் உள்ள குறைகளைக் களைய வேண்டிய தருணம் வந்து விட்டது, இல்லையா?!

3

செகுலரிஸம் என்றால் ஹிந்து விரோதம் என்று அர்த்தமா?

அப்படித்தான் கடந்த 70 ஆண்டு கால பாரத வரலாறு கூறுகிறது.

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் ஒரு பெண் பாதிரியாராக இருக்க முடியாது.

பெண்ணியவாதிகளில் எந்த ஒரு பெண்ணாவது இதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறாரா?

ஊடகத்தில் இது பற்றிய எந்த ஒரு விவாதமாவது இடம் பெற்றிருக்கிறதா?

இஸ்லாமியரின் மசூதிகளில் பெண்களை அனுமதிப்பதுண்டா?

பெண்ணியவாதிகளில் எந்த ஒரு பெண்ணாவது இதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறாரா?

ஊடகத்தில் இது பற்றிய எந்த ஒரு விவாதமாவது இடம் பெற்றிருக்கிறதா?

இஸ்லாமியரின் மத சம்பந்தமான பணத்தை இதர வழிகளில் செலவழிக்க அரசால் முடியுமா? அதை வஃப் போர்ட் அல்லவா தீர்மானிக்கிறது!

கிறிஸ்தவரின் மத சம்பந்தமான பணத்தை இதர வழிகளில் செலவழிக்க அரசால் முடியுமா? அதை வடிகன் காட்டும் வழியில் இநதிய கிறிஸ்தவ தலைமைப் பீடம் அல்லவா தீர்மானிக்கிறது!

ஆனால் ஹிந்து கோவில்களின் பணமோ அரசு சொல்லும் வழியில் பணத்தை ஹிந்து கோவில்களுக்கான ஆக்கபூர்வமான வழியில் அல்லாமல் எதற்கு வேண்டுமானாலும் செலவழிக்கப்படுகிறது.

நீதி மன்றங்கள் இஸ்லாமியர் பற்றியோ அல்லது கிறிஸ்தவர் பற்றியோ எந்த ஒரு வழக்கையும் மத ரீதியாக சுயேச்சையாக விசாரித்துத் தீர்ப்பு சொல்ல முடியாது.

அதாவது செகுலரிஸம் என்பது ஹிந்து விரோதம் – ஹிந்து விரோதம் மட்டுமே – என்பது உறுதியாகிறது!

4

பாரம்பரிய பழக்கம் என்பது ஹிந்து  மதத்தில் ஒரு முக்கியமான அங்கம்.

சபரி மலை, திருப்பதி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஆலயங்களில் ஆங்காங்கு வழி வழியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்கள், சடங்குகள், திருவிழாக்கள் அப்படியே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கு என்ன சங்கடம், தெரியவில்லை.

அதிக வருமானம் வரும் ஒரு கோவிலின் அதிகப்படியான பணத்தை, வருமானம் அவ்வளவாக இல்லாத கோவிலுக்கு அல்லவா கொடுக்க வேண்டும்?

அதை விடுத்து நலத் திட்டங்கள் என்ற பெயரால் நினைத்தபடி செலவழிக்க அரசுக்கு என்ன உரிமை?

இதற்கான ஆலய வாரியம் ஒன்றல்லவா சுயேச்சையாக செயல்படும் விதத்தில் அமைக்கப்பட வேண்டும்?

கம்யூனிஸ்டுகள், நாத்திகக் கும்பலான திராவிட இயக்க ஆதிக்கத்திலிருந்து கோவில்கள் விடுபட இதுவல்லவா வழி?

சபரிமலையில் கம்யூனிஸ்டு பெண்களையும், இஸ்லாமிய பெண்களையும் மாறு வேடத்தில் – குறிப்பாக 10 முதல் 50 வயதுக்குள்ளவராக இருப்பவரைத் தேர்ந்தெடுத்து – வலிய அனுப்ப முற்படுவது நியாயமா?

ஹிந்துக்களும் யோக்கியமான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இது பற்றித் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

உரிய முறையில் ஹிந்துக்களுக்கான அடிப்படை உரிமைகளை – அதிகப்படியான உரிமைகளை அல்ல – அடிப்படை உரிமைகளை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்; அதற்குரிய சட்டங்களை இயற்ற வேண்டும்!

இதற்கு ஹிந்துக்கள் ஒரே குரலாக ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும்.

இதை இயக்கபூர்வமான வழியில் செய்ய வேண்டுமெனில், ஆர் எஸ் எஸ் ஒன்றே தான் வழி!

நான்ய பந்தா வித்யதேயனாய!

இதை விட வேறு வழி ஒன்றுமில்லை!

***

ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி ) (Post No.5601)

WRITTEN BY S NAGARAJAN

Date: 29 October 2018

Time uploaded in London – 6-13 AM (British Summer Time)

Post No. 5601

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஹிந்து மதம் பற்றி டேவிட் ஃப்ராலி (வாமதேவ சாஸ்திரி)

ச.நாகராஜன்

1

வாமதேவ சாஸ்திரி எனப்படும் அமெரிக்கரான டேவிட் ஃப்ராலி (பிறப்பு :21-9-1950) ஹிந்து மதத்தின் சிறப்பியல்புகளைத் தொடர்ந்து தனது நூல்களாலும் சொற்பொழிவுகளாலும் விளக்கி வருபவர்.

சுமார் 30 நூல்களை எழுதியவர். நியூ மெக்ஸிகோவில் அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃ வேதிக் ஸ்டடீஸ் நிறுவனத்தை நிறுவியவர். யோகா, ஆயுர்வேதம், ஜோதிடம் ஆகியவற்றில் நிபுணர். Hinduism Today இதழில் அவரது கட்டுரைகள் அவ்வப்பொழுது இடம் பெற்று வருகின்றன.

அவரது மனைவி யோகினி சாம்பவி சோப்ராவும் அவருக்கு உறுதுணையாக அவரது பணிகளில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

இந்திய அரசால் 2015ஆம் ஆண்டு பத்ம பூஷண் பட்டம் கொடுக்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.

2

அவர் How I became a Hindu – ஹௌ ஐ பிகேம் எ ஹிந்து – என்ற அருமையான நூலை எழுதியுள்ளார்.

எப்படி கிறிஸ்துவோ அல்லது கிறிஸ்தவ மதமோ தனது ஆன்மீகத் தேடலுக்கு உகந்த தீர்வைத் தரவில்லை என்பதையும், எப்படி இஸ்லாமும் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக இந்த நூலில் குறிப்பிடுகிறார்.

ஹிந்து மதத்தின் தொன்மையையும், வேதத்தின் சிறப்பையும் ஆய்ந்து உணர்ந்த அவர் தன் வாழ்க்கையை அதைப் பரப்புவதிலேயே அர்ப்பணிக்க முன் வந்தார்.

319பக்கங்கள் கொண்ட இந்த நூல் பல கோணங்களில் ஹிந்து மதத்தை ஆராய்கிறது.

ஹிந்து என்ற வார்த்தையைப் பற்றி நூலின் இறுதி அத்தியாயத்தில் அவர் விளக்குகிறார்.

1) இந்தியா என்பது சிந்து ஸ்தானம்

2) உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகச் சொல்கின்றனர் (ஏகம் சத்; விப்ரா: பஹுதா வதந்தி)

3) வேதம் அற்றது என்று சொல்லிக் கொள்ளும் தர்மம் உட்பட அனைத்து தர்மங்களையும் வேத பாரம்பரியம் ஒருங்கிணைக்கும் அடிப்படையைக் கொண்டது.

4) இந்தியாவிற்கும் அப்பால் உள்ள, பிரபஞ்ச லயத்துடன் இணைந்து வாழ விரும்பும், அனைத்துப் பண்பாடுகளையும் அது ஏற்கிறது. அனைத்து உயிரினங்களையும் அது மதிக்கிறது.

5) ஆக இப்படிப்பட்ட ஹிந்து மதம் இந்தியாவின் மதம் மட்டுமல்ல; பிரபஞ்சம் முழுமைக்குமான உண்மையை எல்லாவிடங்களிலும் உள்ள மனிதர்களுக்கு, காலம், இடம், ஆகியவற்றிற்கு பொருத்தமான தேவைகளுக்கென ஏற்ற ஒன்று.

6) ஹிந்து தர்மம் மானவ தர்மம். மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. மனிதருக்கு தேவைப்படும் ஆரோக்யம், சந்தோஷம், படைப்பாற்றல் திறத்ன் மற்றும் முக்தி ஆகியவற்றைக் காட்டும் மதம் அது.

7) அதன் ஆசிர்வாதம் உலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்குமாக!

3

இறுதி அத்தியாயத்தின் மூலத்தை அப்படியே கீழே வழங்குகிறோம்:

THE MEANING OF THE TERM HINDU

In the Vedic age the land of India was called Sapta Sindhu, the land of the seven rivers. The same name appears in the Zend Avesta, the holy book of

the ancient Persians, as Hapta Hindu, with the Sanskrit ‘s’ replaced with an ‘h’, a sound shift that occurs in various Indian dialects as well. The

Greeks called the land India or Indika, which also derives from the term Sindhu, removing the initial sound altogether. So clearly Sindhu or Hindu was a name for India going back to very ancient times.

India was Sindhu Sthana, the land of the rivers or Sapta Sindhu Sthana, the land of the seven rivers.

Sindhu has three meanings in Sanskrit. It means a particular river now called the Indus, a river in general, or the ocean. Clearly Sindhu in the land of

Sapta Sindhu refers to river in general and not simply to the Indus as a particular stream only.

It meant India as a great land of many rivers. The main river in Vedic India was the Saraswati and in later times became the Ganges. So Sindhu Sthana is also Saraswati Sthana and later Ganga Sthana, not

simply the region of the Indus.

Dharma, Sindhu Dharma or Hinduism is the name of the culture and religions of this great and diverse subcontinent. Hinduism as Sindhu Dharma

has three meanings following the meanings of Sindhu.

1) It is the river religion (Sindhu Dharma). It flows and develops like a river. Not limited by an historical revelation, Hinduism continues to grow

and develop through time without losing track of its origins in the eternal.

2) It is a religion of many rivers, a pluralistic

tradition that accepts the existence of many paths,

many sages and many holy books and is always

open to more.

3) Sindhu means the ocean. Hinduism is a religion like the ocean that can accept all streams without overflowing. This is also the meaning of Hinduism as Sanatana Dharma or the universal tradition.

Sindhu became Hindu not only among the Persians but also in some dialects in India, particularly in the West of the country. By the twelfth century in the Prithviraj Raso by the poet Chand Baradai, probably the oldest work in the

Hindi language, we already find the term Hindu proudly used in India for the religion and people of the region.

Since Hinduism as Sindhu Dharma refers to all the religions and philosophies of India, it naturally includes Buddhist, Jain and other Indic traditions.

In this regard Hinduism is not limited to the Vedic tradition and accepts both Vedic and non-Vedic streams.

On the other hand, the Vedic tradition itself is pluralistic and is not limited to existing Vedic paths. It is based on the great Vedic statement,

“That which is the One Truth, the sages speak in many ways (ekam sad vipra bahudha vadanti).”

The Vedic tradition, therefore, has the basis to integrate all the dharmas of India including those that regard themselves as non-vedic.

Yet beyond India, Hinduism can accept all cultures that seek to live in harmony with the universe and respect all creatures. Such a definition would make

Hinduism a religion not merely of India but a way of organically adapting the universal truth to the needs of time, place and person everywhere.

Hindu Dharma is a human or Manava Dharma, encompassing all aspects of human life. It shows what all human beings require for health,

happiness, creativity and liberation. May its blessings come to all!

***

நன்றி : டேவிட் ஃப்ராலி – How I became a Hindu

தங்க புத்தர்! (Post No.5595)

WRITTEN BY S NAGARAJAN

Date: 27 October 2018

Time uploaded in London – 5-43 AM (British Summer Time)

Post No. 5595

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 26-10-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி நான்காம்) கட்டுரை  

தங்க புத்தர்!

ச.நாகராஜன்

அறிவியலுக்கும் புத்த மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு நாளுக்கு நாள் அது வலுப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம், ‘எதையும் நீயே ஆராய்ந்து பார்த்து, கண்டுபிடித்து ஒப்புக்கொள்’ என்ற புத்தரின் உபதேசம் தான்! அறிவியலும் இதையே தானே சொல்கிறது!!

அத்துடன் கூட இப்போதுள்ள தலாய்லாமா பிரபல விஞ்ஞானிகளை தனது தர்மஸ்தலாவிற்கு வரவழைத்து அறிவியலும் புத்த மதக் கொள்கைகளும் இணைவதற்கான பாலமாக இலங்குகிறார். அவரது அறிவுரைப்படி நிறைய லாமாக்களும், புத்த பிக்ஷுக்களும் அமெரிக்காவில் உள்ள தலை சிறந்த பரிசோதனை மையங்களுக்குச் சென்று தன்னார்வத்துடன் தியானம் உள்ளிட்ட பல வித சோதனைகளுக்கும் உள்ளாகின்றனர்; வியக்கவைக்கும் உண்மைகளை வெளியுலகிற்கு அளிக்கின்றனர்.

புத்த மதத்தை இப்போது “மனம் பற்றிய அறிவியல்” (Science of Mind) என்று கூறத் தொடங்கியுள்ளனர். நீல்ஸ் போர், ஓப்பன்ஹீமர், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் புத்த மதக் கொள்கைகளை தங்கள் ஆய்வு உரைகளில் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.

புத்த மதத்திற்கும் தங்கத்திற்கும் கூட நிறைய தொடர்பு உண்டு; புத்தமதத்தைப் பொறுத்த வரை தங்கம் சூரியனுடன் இணைக்கப்படும் அரிய ஒரு உலோகம். தீ ஜுவாலை அல்லது அறிவு அல்லது விழிப்பு ஆகியவற்றுடன் தங்கம் தொடர்பு படுத்தப்படுகிறது. அறிவு, ஞானம், தூய்மை, சந்தோஷம், சுதந்திரம் ஆகிய அனைத்துமே தங்கத்தினால் குறிப்பிடப்படுகிறது.

அறிவியலும் கூட சூரியனையும் தங்கத்தையும் அவற்றின் பல அரிய சிறப்புக்களுக்காக ஆராய்கிறது; வியப்பூட்டும் உண்மைகளை விளக்குகிறது.

புத்த மதம் அறிவுறுத்தும் அஷ்ட மங்கலம் எனப்படும் எட்டுப் பொருள்களான ஜோடி மீன்கள் இரண்டு, தங்கத் தாமரை, எட்டு ஆரங்கள் கொண்ட தர்ம சக்கரம் உள்ளிட்ட அனைத்தும் தங்கத்தால் செய்யப்படுபவையே. சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும் நல்கும், சிரிக்கும் புத்தர் – லாஃபிங் புத்தா – சிலைகளில் பொதுவாக தங்கப் பூச்சு பூசப்படுகிறது.

உலகெங்கும் ஏராளமான இடங்களில் புத்தரின் சிலைகள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன; ஆனால் அதை விட கூடுதலான் அளவில் புத்தரின் திருவுருவம் தங்கத்தில் வார்த்து எடுக்கப்பட்டுள்ளது. திபத்தில் உள்ள சிலைகள் அனைத்தும் பத்தரைமாத்து தங்கத்தால் பூசப்பட்டுள்ளன. தாய்லாந்தில் பாங்காக்கில் உள்ள வாட் ட்ரைமிட் ஆலயத்தில் உள்ள தங்க புத்தர் முழுவதும் தங்கத்தால் ஆனது. இதன் எடை மலைக்க வைக்கும் 5.5 டன்கள்! இதன் உயரம் 3.91 மீட்டர்.அகலம் 3.01 மீட்டர். உலகின் மிகப் பெரிய தங்க புத்தர் சிலை இது தான்!

பண்டைக் காலத்தில் அயுத்தயா என்னும் இடம்  சிதிலமடைய அங்கு இந்த சிலை யாரும் கவனிப்பாரின்றி கிடந்தது. பாங்காக் புதிய தலைநகரமாக ஆக்கப்படவே அப்போதிருந்த அரசன் பழைய சிலைகளை புதிய இடத்தில் நிறுவுமாறு கட்டளையிட்டான். சிலைகள் நகர்ந்தன. தங்க புத்தரும் பாங்காக்கில் வாட் சோடாநரம் என்ற இடத்தில் ஒரு ஆலயத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டது. அந்த ஆலயமும் இடியும் நிலைக்கு வரவே சிலை வாட் ட்ரைமட் ஆலயத்திற்கு வந்தது. அங்கு இடமே இல்லாததால் தகரத்தைக் கூரையாகக் கொண்ட ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டது. புது கட்டிடம் ஒன்று கட்டப்படவே 1954ஆம் ஆண்டு சிலையை அங்கு கொண்டு போவதற்காக சிலையை எடுத்தனர். அப்போது சிலை சிறிது சேதமடைந்தது. சாதாரணமாக இது ஒரு துரதிர்ஷ்டமாகக் கருதப்படும். ஆனால் அதுவே ஒரு நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாக அமைந்தது. தங்க புத்தர் தானே வெளிப்பட்டார்.

சிலையில் சிறிது தங்கம் தென்படவே ஜாக்கிரதையாக மேல் பூச்சைப் பிரித்தனர். உள்ளே அற்புதமான தங்க மய புத்தர் தரிசனம் தந்தார்.

அதை முறைப்படி ஆராயவே அதன் மதிப்பு உலகிற்குத் தெரிய வந்தது. இப்போது உலகின் மிகப் பெரிய தங்கச் சிலையாக பாங்காக்கில் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் தங்க புத்தர்!

அறிவியல் அறிஞர்களின் பார்வை புத்த மதத்தின் பக்கம் இப்போது திரும்பவே, தங்க புத்தரின் சிலையை தரிசிக்க சாமான்யர்களுடன் விஞ்ஞானிகளும் வருகின்றனர்.

பாங்காக்கில் தங்க பிரேமில் மஞ்சள் வண்ணத்தில் பல புத்தரின் படங்களை ஆங்காங்கே வீடுகளிலும், ஹோட்டல்களிலும், பார்க்கலாம். அத்துடன் அங்குள்ள பெரிய கட்டிடங்கள் கூட தங்கம் மற்றும் மஞ்சள் வண்ணக்கலவையிலான உட்புற அலங்காரங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். அறிவியலும் ஆன்மீகமும் தங்கம் மூலம் இணையும் ஒரு தலமாக பாங்காக் வாட் ட்ரைமின் ஆலயத் தலம் திகழ்கிறது!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிஸன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி வாழ்க்கையை அணுக வேண்டிய முறையைக் கற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சியாக அமைகிறது. அவருக்கு 67 வயது ஆகி விட்ட நிலையில் ஒரு நாள் மாலையில் அவர் தனது லாபரட்டரியிலிருந்து வீடு திரும்பினார். இரவு சாப்பாடு முடிந்த போது ஒரு ஆள் ஓடி வந்து ஒரு அவசரத் தகவலைச் சொன்னான். சில மைல்கள் தள்ளி இருந்த எடிஸனின் ஆய்வு மற்றும் உற்பத்தி கம்பெனி தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது என்பது தான் அந்த மோசமான அவசரத் தகவல்.

அவர் மிக அமைதியாக தனது மகனை நோக்கிக் கூறினார் : “போ,போ! சீக்கிரம் உன் அம்மாவையும் அவளது தோழிகளையும் அழைத்து வா. இப்படிப்பட்ட தீப்பிடிக்கும் காட்சியை அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.” ஒரு குழந்தையின் குதூகலத்துடன் இதைக் கூறிய எடிஸன், “நீ கவலைப்படாதே! தேவையில்லாத எல்லாக் குப்பையும் ஒரு வழியாக ஒழிந்து போயிருக்கும்” என்றார்.

ஒரு கெட்டதில் நல்லதைப் பார்க்கும் உடன்மறை எண்ணம் கொண்ட எடிஸன் வாழ்வில் மோசமான நிகழ்ச்சி எப்போது  நடந்த போதும், “சரி போ! அப்படி நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும்” என்ற தைரியத்துடனேயே இருந்தார்

மனம் உடைந்து போகாத நிலையில் அவர் மறுநாள் பத்திரிகையாளரிடம், தான் திரும்பித் தொழிலை ஆரம்பிக்க முடியாத அளவுக்கு மிகவும் வயதான ஒருவன் அல்ல என்று கூறினார். “இது போல எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்து விட்டேன். சலிப்பும் சோர்வும் மனிதனை அணுகாதபடிக்கு வைக்கும் நிகழ்வுகள் இவை” என்றார்.

முற்றிலும் அழிந்து போன தொழிலகம் மூன்றே வாரங்களில்  பழையபடி இயங்கத் துவங்கியது. நான்காம் வாரத்திலிருந்து பழையபடி இரண்டு ஷிப்ட் வேலை துவங்கியது. புதிய தயாரிப்புகளை உலகிற்கு வழங்க ஆரம்பித்தது. அன்றைய மதிப்பில் தீப்பிடித்ததால் நஷ்டம் பத்து லட்சம் டாலர்கள்! (இன்றைய மதிப்பில் 230 லட்சம் டாலர்கள்!) எடிஸன் தன் உழைப்பினாலும் தைரியத்தினாலும் அந்த வருடமே அன்றைய மதிப்பில் நூறு லட்சம் டாலர் வருமானத்தை ஈட்டிக் காட்டினார். மனித வரலாற்றில் வெகு சில பேர்களே இப்படிப்பட்ட மோசமான நிகழ்வுகளை துணிவுடன் எதிர்கொண்டு அதையும் மீறி நல்ல முன்னேற்றத்தை அடைந்து காண்பித்திருக்கிறார்கள். தைரியமும் உழைப்புமே உயர்வுக்கான வழி!

திருநீலகண்டம் அருளப்பெற்ற திருக்கொடி மாடச் செங்குன்றூர்! (Post No.5592)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 26 October 2018

Time uploaded in London – 6-41 AM (British Summer Time)

Post No. 5592

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

திருநீலகண்டம் அருளப்பெற்ற திருக்கொடி மாடச் செங்குன்றூர்!

ச.நாகராஜன்

சீர்காழியில் அவதரித்து, தேவாரம் அருளிய திருஞானசம்பந்தர் பல்வேறு ஊர்களுக்கும் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடி அருளி வந்தார்.

ஒரு சமயம் காவேரிக்குத் தென்கரையிலுள்ள ஆலயங்களைத் தரிசித்து வருகையில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள திருச்செங்கோடு திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். திருச்செங்கோடு என்று நாம் அழைக்கும் ஊர் திருக்கொடி மாடச் செங்குன்றூர் என அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஊராகும். அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்துப் பின்னர் பொன்னி நதிக்கு மேற்புறம் உள்ள திருநண்ணா முதலிய தலங்களைத் தரிசித்துப் பின்னர் மீண்டும் திருச்செங்கோட்டிற்கு எழுந்தருளினார்.

அப்போது குளிர்காலம்.கடும் பனியால் அனைவரும் வருந்திக் கொண்டிருந்தனர். பலநாள் அங்கு அவர் பக்தர் குழாமுடன் வசித்து வருகையில் குளிர் ஜுரம் கண்டு அடியார்கள் பலரும் வாடினர்.

அதைக் கண்ட அருளாளர் திருஞானசம்பந்தர் ‘அவ்வினைக் கிவ்வினை எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி அருளினார். குளிர் ஜூரம் அடியர்களைத் தீண்டக் கூடாது என்று ஆணையிட்டுப் பாடினார்.

 

அவ்வளவு தான், குளிர் ஜுரம் உடனே அடியார்களை விட்டு அகன்றது. அதுமட்டுமல்ல, அந்த நாட்டில் பலரையும் வருத்தி வந்த அந்த நளிர் ஜுரம் நாட்டை விட்டே அகன்றது.

இந்தப் பதிகம் திருநீலகண்டம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

இன்றும் இதை விபூதி இட்டு ஓதுவாரை ஜுரம் பீடிக்காது என்பது அனுபவப் பழக்கமாகும்.

திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டம் வருமாறு:-

1.116 திரு நீலகண்டப் பதிகம்  

பண் – வியாழக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1249 அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.1
1250 காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.2
1251 முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.3
1252 விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.4
1253 மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.5
1254 மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.6
(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.116.7
1255 கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.8
1256 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.9
1257 சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1.116.10
1258 பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.
1.116.11

(இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.) முதலாம் திருமுறை

இப்படிப்பட்ட புகழ் வாய்ந்த திருக்கொடி மாடச் செங்குன்றூர் உள்ள மண்டலம் கொங்கு மண்டலமே என்று கொங்குமண்டலச் சதகத்தின் 48ஆம் பாடல் கொங்கு மண்டலத்தைப் போற்றிப் புகழ்கிறது.

பாடல் வருமாறு:-

திருக்கூட்டத் தாரையுஞ் சேர்ந்த நளிர்சுரந் தீரவன்பின்         பெருக்காக “வவ்வினைக் கிவ்வினை யாமெனப்” பீடுபெறத்   திருக்காழிப் பிள்ளையார் நற்றமிழ் பாடவத் தேயமுற்றும்     வருத்தாதந் நோயின்னும் நீங்கிய துங்கொங்கு மண்டலமே

இப்பாடலின் திரண்ட பொருள் : – சீர்காழிப் பிள்ளையாராகிய திருஞானசம்பந்த  மூர்த்தி நாயனார்  திருச்செங்கோடு என வழங்கும் திருக்கொடி மாடச் செங்குன்றூருக்குத் திருக்கூட்டத்தாருடன் எழுந்தருளியிருந்த சமயம் அவ்வடியார்களை நளிர் ஜுரம் தீண்டவே. “அவ்வினைக் கிவ்வினையாம்” என்ற பாடலைத் தொடக்கமாகக் கொண்டு பதிகம் அருளவே அவ்வூர் மட்டுமன்றி அந்நாடு முழுவதும் அந்நோய் தீர்ந்தது. அப்படி ஓதப்பெற்ற தலத்தைக் கொண்டது கொங்கு மண்டலமே.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

***

வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணன் இல்லை- மநு சவுக்கடி (Post No.5587)

Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 October 2018

Time uploaded in London – 7-54 am

(British Summer Time)

Post No. 5587

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

மநு நீதி நூல் – பகுதி 31

முதல் நான்கு அத்தியாயங்களை முடித்துவிட்டோம்; ஐந்தாவது அத்தியாயத்தின் முதல் 55 ஸ்லோகங்களை ஆராய்வோம்.

 

பிராஹ்மணர்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று மநு சொன்னதை முன்னர் எழுதினேன். பெண்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று தொல்காப்பியர் கட்டளை இட்டதையும் சொன்னேன். இப்பொழுது பிராஹ்மணர்கள் வெங்காயம், உள்ளிப் பூண்டு  (வெள்ளைப் பூண்டு), மஷ்ரூம் mushroom எனப்படும் காளான் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது (5-5, 5-19). சிலவகை மீன், மாமிசம் ஆகியவற்றை கடவுளுக்குப் படைத்தோ நீத்தாருக்குப் படைத்தோ உண்ணலாம் என்கிறார்.

வெங்காயம், பூண்டு சாப்பிடுபவன் ஜாதிப்ப்ரஷ்டம் ஆனவன் (தள்ளி வைக்கப்பட்டவன்) என்கிறார் 5-19

தப்பித் தவறி சாப்பிட்டுவிட்டால் கடுமையான விரதங்கள் நோன்புகளை அனுஷ்டிக்கக் கட்டளை இடுகிறார் (5-21, 5-20)

நோன்பு விவரங்களை 11 ஆவது அத்தியாயத்தில் தருவேன்.

இந்தப் பீடிகையுடன் நான் ‘மானவ தர்ம சாஸ்திர’த்தின் ஐந்தாவது அத்தியாயத்தைத் தொடங்குவதற்குக் காரணம் என்ன?

இப்போதுள்ள மநு தர்ம சாஸ்திரத்தில் பல முரண்பாடுகள் உள்ளன. அந்த முரண்பாடுகளுக்குக் காரணம் அவ்வப்போது நிகழ்ந்த இடைச் சொருகல்கள் ஆகும்.

இன்னொரு விஷயத்தையும்  நினைவிற் கொள்ள வேண்டும் ; சட்டம் என்பது காலத்துக்கு காலம் மாறு படும்; இடத்துக்கு இடம் வேறு படும். அமெரிக்காவில் இன்றும் சில மாநிலங்களில் மரண தண்டனை உண்டு இன்னும் சில மாநிலங்களில் கிடையாது. இந்தியாவில் சில மாநிலங்களில் மதுவிலக்கு உண்டு. அங்கு பாட்டிலுடன் நின்றால் குற்றம்!

இனி ஐந்தாம் அத்தியாயத்தின் முக்கிய அம்சங்களைக் காண்போம்:

மநு நீதியை முழுதும் படிப்போர் அவருடைய அறிவாற்றலைப் புகழ்வர்; இடைச் செருகல்களைக் கண்டு கொள்வர். 40, 50 ஸ்  லோகங்களில் “சூத்ராள்” பற்றிச் சொன்னதைக் கூப்பாடு போட்டு அவரைத் திட்டத் தேவை இல்லை. ஏனெனில் “பிராஹ்மணாள்”களே அவரைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

இதே அத்தியாயத்தில் பிராஹ்மணர்கள் மாமிசம் சாப்பிடலாம்; அகஸ்தியரும் இதைச் செய்தார் என்று ஒரு வரி வருகிறது. இது ஒரு நல்ல ஜோக்/ joke தமாஷ்.5-22

அகஸ்தியர் கதையில் அவர் வாதாபி,என்ற அரக்கனை, அவன் சஹோதரன் இலவலன் கறியாகச்   சமைத்துப் போட்டு, ஏ வாதாபியே வெளியே வா- என்று கட்டளை இட்டான். அவரோ தவ வலிமையால் ‘வாதாபி ஜீர்ணோ பவ’ என்று சொன்னவுடன் அவன் அகஸ்தியர் வயிற்றுக்குள் ஜீரணமாகி விடுகிறான் இதை மாமிசம் சாப்பிடும் பிராமணர்கள் செய்ய முடியாது. ஆகையால் அங்கு அகஸ்தியரின் பெயரை மநு வம்புக்கு இழுத்திருக்க மாட்டார். அது மட்டுமல்ல,2000 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் கடந்து பாண்டிய மன்னன் ஸ்ரீமாறனை அழைத்துச் சென்று வியட்நாமில் (சம்பா தேசம்) ஒரு அரசு அமைத்தார். அந்த அரசு தென் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும், துலுக்கர்கள் நுழைவதற்கு முன், 1500 ஆண்டுகளுக்க் கொடி கட்டிப் பறந்தது. இதன் பொருள் என்ன? அகஸ்தியர், மநு சொன்ன கட்டளையை மீறி வெளிநாட்டுக்குப் போனார். இதைப் புராணங்கள் அகஸ்தியர் ‘கடலைக் குடித்தார்’ என்று சொல்லும்.

ஆகவே மாமிசம் சாப்பிட்ட கதை மநு எழுதியதல்ல. பிற்காலப் பிற்சேக்கை!

மச்சம், மாமிசம் சாப்பிடுவது பற்றி மநு ஸ்ம்ருதியில் பல குழப்பங்கள் இருக்கின்றன . ஏன்?

சுமார் 2000ஆண்டுகளுக்கு முன் உருவான 2500 சங்கத் தமிழ்ப் பாடல்களில் பிராஹ்மணர்களை மரக்கறி உணவு உண்ணும் ‘வெஜிட்டேரியன்’ vegetarians களாகவே காட்டியுள்ளனர். பிராஹ்மணர் வீட்டுக்குப் போனால்  அந்தப் பெண்மணி உனக்கு என்ன உணவு தருவாள் என்று ஆற்றுப்படை நூலில் இருக்கிறது. அந்த மெனு menu வில், எல்லாம் வெஜிட்டேரியன்!!! பிராஹ்மணர் தெருவுக்குள் நாயோ கோழியோ- போக முடியாது- அவ்வளவு சுத்தமான இடம் அக்ரஹாரம் என்றும் தமிழ் இலக்கியம் விதந்து ஓதுகிறது.

இங்கே காட்டப்படும் மநுவின் 55 ஸ்லோகங்களை திருவள்ளுவர் தமிழ் வேதத்தில்– திருக்குறளில்- ‘புலால் மறுத்தல்’, ‘கொல்லாமை’ ஆகிய இரண்டு அதிகாரங்களில் மொழி பெயர்த்துள்ளார். ஆக ஒரிஜினல் மநு , திருவள்ளுவர் காட்டும் மநுவே. ஏனையன பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையே.

ஆனால் திவஸத்திலும், யாகங்களிலும் மாமிசம் சேர்க்கலாம் என்ற மநுவின் கட்டளைக்கு ஆதாரங்கள் இல்லாமலும் இல்லை. வங்காளி, அஸ்ஸாமி பிராஹ்மணர்கள் மீன்களை ‘ஜல வாழைக்காய்’ போல எண்ணி சாப்பிடுவதை உலகம் அறியும். தர்மம் என்பது கால, தேச,வர்த்தமானங்களை (சூழ்நிலை) அனுசரித்ததே என்று மநு ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். இன்றும் கூட நமது பார்லிமெண்டுகளும் சட்ட சபைகளும் பழைய சட்டங்களுக்குத் திருத்தம் கொண்டு வருவதும் புதுச் சட்டங்களியற்றுவதும் மநு சொன்ன ‘பார்முலா’ formula தான்.

Goldsmith 

த்விஜன் யார்?

‘கழுதை தேய்ந்து கட்ட எறும்பு ஆனதைப் போல’, இப்போது த்ரிகால சந்தியா வந்தனம், அக்னி ஹோத்ரம், தினமும் பஞ்ச மஹா யக்ஞம் செய்யும் பிராஹ்மணர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிது. ஆக த்விஜன் என்பது ஆதிகாலத்தில் முதல் மூன்று ஜாதிகளைக் குறித்திருக்க வேண்டும். க்ஷத்ரியர்கள் மாமிஸம் சாப்பிடுவதில் வியப்பில்லை. ராமன் திவஸத்துக்கு மிருகங்களைக் கொண்டு வந்ததாக வால்மீகி ராமாயணம் செப்பும். அசோக மாமன்னன் கூட முழுக்க ‘வெஜிட்டேரியன்’ ஆகாமல் அரண்மனையில் வெட்டப்படும் மிருகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத்தான் சொன்னான். அறவே நிறுத்த உத்தரவிடவில்லை என்பதை அவனது சாஸனங்கள் காட்டும். ஆக “த்விஜன்” என்று மநு சொல்லுவது பிராஹ்மணர்களை மட்டும் அல்ல. பிராஹ்மண, க்ஷத்ரிய, வைஸ்யர்களையும் தான் என்று பொருள் கொண்டால் தவறில்லை.  இப்போதும்கூட செட்டியார், ஆசாரி ஆகிய ஜாதிகள் பூணூல் போடுவதைப் பார்க்கிறோம். பூணூல் போட்ட பின் இரண்டாவது பிறப்பு; அதாவது இருபிறப்பாளன்/ த்விஜன்.

காளிதாசன் படைப்பிலும்கூட ஒரு பிராஹ்மண விதூஷகனைக் கிண்டல் செய்யும்போது அசைவம் பற்றி வருகிறது. சங்கப் பாடலில் புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பலரும் போற்றிய மஹா பிராஹ்மணன் கபிலன், மாமிஸ உணவு  பற்றிப் பாடியதை வைத்து சிலர் கதைத்தனர். ஆயினும் அவை எல்லாம் பசையற்ற வாதமாகக் கரைந்து ஓடிவிட்டது.

2000 ஆண்டு இலக்கியம் காட்டும் பிராஹ்மனணர்கள்- மரக்கறி உண்ட ‘வெஜிட்டேரியன்’களே.

மிருகங்களை அடித்துக் கொன்று சாப்பிடுவோருக்கு என்ன என்ன நேரிடும் என்று மநு சொல்லுவதையும் ஒப்பிட்டுப்  பார்த்தால் இது தெள்ளிதின் விளங்கும்.5-51,5-45, 5-38 ETC.

 

டார்வின் கொள்கை!

வலுவற்ற மிருகங்கள் வீழ்ந்து அழியும்; வலியோரே வாழ்வர் SURVIVAL OF THE FITTEST என்று டார்வின் சொன்னார். மநுவும் துணிச்சல் மிக்கோருக்கு கோழைகளுணவு COWARDS ARE THE FOOD OF THE BRAVE ஆகி விடுவர் என்று மநுவும் சொல்லும் அரிய கருத்து ஒப்புநோக்கத தக்கது.5-29

பிராஹ்மணர்களுக்கும் சாவு உண்டா?

அத்தியாய ஆரம்பத்தில் மநு கூட்டிய மஹாநாட்டுக்கு வந்தவர்கள் ஒரு வினா எழுப்ப அதற்கு மநு கொடுத்த பதில் சிந்தி   க்கத் தூண்டுவது. மஹா புனிதமான வேதங்களை ஓதும் பிராஹ்மணர்களுக்கு மரணம் வருகிறதே! அது எப்படி சாத்தியம்? என்று சிலர் வியக்க மநு 4 காரணங்களை முன் வைக்கிறார். அதில் ஒன்று தவறான உணவு! இங்கே சாவு என்பதைவிட அவர்களும் கூட ‘இளம் வயதில் இறப்பது எப்படி’ என்று பொருள் கொள்க.5-4

மநுவின் சொல்லாடல் திறன்!

‘மாம்ஸ’ம் என்ற சொல்லை மநு விவரிக்கும் பாங்கு அழகாக இருக்கிது. என்னை உண்பவன் ஆக நான் மாறிவிடுகிறேன் ( மாம்+ சஹ ). இப்போது நீங்கள் மாட்டை உண்டால் அடுத்த ஜன்மத்தில் மாடு மனிதன் ஆகும்; நீங்கள் மாடு ஆவீர்கள். அந்த மனிதன் உங்களை உண்பான் (மாம்+ சஹ= என்னை + அவன்); என்னை அவன் உண்டான் ; நான் அவனை உண்ணுவேன்.5-55

சின்னக் குழந்தைகளுக்குக் கூட இது தெரியும்; எறும்பு முதலிய ஜந்துக்களைக் குழந்தைகள் துன்புறுத்தினால் தாய்மார்கள் எச்சரிப்பர். அடுத்த பிறவியில் ‘நீ எறும்பாக, அது நீ ஆகி’ உன்னை துன்புறுத்தும் என்பர். மறு பிறப்புக்கொள்கை சங்க தமிழ் பாடல்களிலும் திருக்குறளிலும் மலிந்து கிடக்கிறது

இறுதியாக மற்ற ஒன்றையும் காட்ட விழைகிறேன். மநு சொல்லும் மிருகம், மீன் வகை பற்றியே அதிக சம்சயங்கள் உண்டு. அவரோ வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஸரஸ்வதி நதி பற்றிக் கட கதைக்கிறார். இப்படி அவர் சொன்ன மீன் வகைகள் பற்றியே ஐயப்பாடுகள் எழுவதற்குக் காரணம் அவர் மிக, மிக, மிக முற்காலத்தவர். மநு சொன்ன ஸுமுகன் என்ற மன்னன் பற்றி சுமேரியாவில் மட்டுமே காண முடிகிறது. இந்திய வரலாற்றில் அப்படி ஒரு மன்னன் பெயர் இல்லை என்று பாஷ்யக்காரர்கள் அனைவரும் பகர்வர். முன்னரே எழுதிவிட்டேன்;

மாமிசத்துக்குப் பதிலாக மாவில் அதே போல உருவம் செய்வது 5-37ல் சொல்லப்பட்டுள்ளது. யாககங்களில் இப்படி உருவ பொம்மைகளே போடப்பட்டன.மிருகங்கள் பலி இடப்படவில்லை என்போர் இதை ஆதாரமாகக் காட்டுவர். ஆதிகால மிருக பலி காலப்போகில் மாவு உருவ பலியாக மாறியது போலும்!

ஸ்லோகம் 5-46, 5-47 இந்த இரண்டு பாடல்களில் கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்றும் அவன் நினைத்ததெல்லாம் நடக்கும் என்றும் சொல்கிறார்.

ஆகையால் ஆய்ந்து அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர், ‘ஒரிஜினல்’ மநுவை, போலி மநுவில் இருந்து பிரித்து எடுத்து, காய்தல் உவத்தலின்றி, சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல, அவரை எடை போடுவதே முறை.

ஐந்தாம் அத்தியாயம் முதல் 55 ஸ்லோகங்கள்

வாழ்க மநு- வளர்க ‘ஒரிஜினல்’ மநு நீதி!

வைச்ச பொருள் – 5 (Post No.5569)

WRITTEN BY S NAGARAJAN

Date: 21 October 2018

Time uploaded in London – 7-17 AM (British Summer Time)

Post No. 5569

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வைச்ச பொருள் – 5

ச.நாகராஜன்

    

            13

திருப்பாதிரிப்புலியூரில் பாடிய பாடலிலும் சிதம்பரத்தில் பாடிய பாடலிலும் அப்பர் பிரான் ‘வைச்ச பொருள்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இரு முறை அவர் குறித்த பொருளைப் பற்றி நமது சிந்தனை ஒரு தெளிவுக்கு வரும் போது அதை உறுதிப் படுத்த ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

‘தமிழ் ஞானசம்பந்தனின்’ நமச்சிவாயப் பதிகம் தான் அது.

காதல் ஆகி,கசிந்து, கண்ணீர் மல்கி,

ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயவே

வள்ளுவப் பிரான் கூறிய மெய்ப்பொருள் பற்றி அருமையாக திருஞானசம்பந்தர் விளக்கி விட்டார். வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நமச்சிவாய நாமம் தான் என்று.

அப்பர் பிரான் இதை உறுதிப் படுத்துகிறார்;

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது ஜோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே   (நான்காம் திருமுறை)

நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

நமச்சிவாயவே நாநவின் றேத்துமே

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

ஆக மெய்ப்பொருள் ஆகிய நமச்சிவாய என்னும் நாமத்தைச் சொல்லி அதை டெபாஸிட் செய்து வைப்பதைத் தான் அப்பர் பிரான் சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது.

வைத்த பொருள் நமச்சிவாய நாமம் தான்! ‘அது நமக்கு ஆகும்’ என்று அச்சம் ஒழிந்தார் அப்பர்.

மெய்ப்பொருளைக் கண்டு அதைச் சொல்லி அதைச் சேர்த்து பத்திரமாக வையுங்கள்; அது உமக்குப் பின்னால் இகத்திற்கும், பரத்திற்கும், ‘ஆகும்’ என்ற அற்புதக் கருத்தை அவர் இரு முறை வலியுறுத்தியுள்ளார்.

வள்ளுவப் பிரான் வழியில் மெய்ப்பொருள் காண விழைகையில் இந்தப் பொருளை நாம் அடைகிறோம்.

 

14

வள்ளுவரின் இதர பொருள் சம்பந்தமான குறள்களையும் படித்தால் சகல பொருள்களும் விளங்கும்.

இது சம்பந்தமாக நன்கு ஆராய விரும்புவோருக்காக பொருள் வரும் குறள்களின் எண் இங்கு தரப்படுகிறது:

5,63,91,122,128,141,171,176,178,199,212,226,241,246,247,248,249,252,254,285,307,351,355,356,358,371,423,424,434,462,477,507,583,592,615,644,660,695,741,746,751,753,754,755,756,757,759,760,857,870,897,901,909,911,913,914,925,933,938,1001,1002, 1009,1046,1230

பொருள் என்று ஆரம்பிக்கும் குறள்கள் : 199,246,248,252,351,675,751,753,913,914,938,1002,1230

பொருள் என முடியும் குறள்கள்:
178,509,741,751,756,

பிறன் பொருள், தம் பொருள், நற்பொருள், செம்பொருள், மெய்ப்பொருள், கைப்பொருள்,எண்பொருள்,பொருள் பெண்டிர்,பொருளாயம்,தேறும் பொருள், நன்பொருள்,பொருளாட்சி,பொருளுடைமை, உறுபொருள், தெறுபொருள், ஆன்ற பொருள்,பெரும் பொருள், பொருள்மாலையாளர், அரும் பொருள், ஒண் பொருள், சிறு பொருள், வான் பொருள், வேண்டாப் பொருள் என இப்படி பொருள் என்ற சொல்லைப் பல வித கோணங்களில், பலவித பரிமாணங்களுடன்  கையாளும் வள்ளுவரின் திறன் வியக்கற்பாலது. அதற்கு இடம் தந்து பொருளுக்கு வலுவூட்டும் அற்புதத் தமிழ் மொழியின் அருந்திறனும் எண்ணி எண்ணி வியத்தற்குரியது.

இவற்றையெல்லாம் விரிவாகச் சொல்வதென்றால் அது ஒரு நூலாகவே அமையும்.

ஆகவே நேரம் கிடைத்த போதெல்லாம் திருக்குறளை ஓதி உணர்ந்து, நுணுகி ஆராய்ந்து செம்பொருளையும் மெய்ப்பொருளையும் காணுதல் வேண்டும்.

15

வள்ளுவரும் செம்பொருள், மெய்ப்பொருள் எனக் கூறி இறைவனின் உண்மைத் தன்மையை விளக்குகிறார். அதை அறிவதே உண்மை அறிவு என்கிறார்,

பிறப்பென்னும் பேதைமை நீஙகச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு    (குறள் 358)

பிறப்பு என்னும் பேதைமையை நீக்கிக் கொள்ள சிறப்பு என்னும் வீடு பேற்றை அளிக்க வல்ல செம்பொருளாம் பரம் பொருளைக் காண்பது அறிவு.

இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு   (குறள் 5)

கடவுளின் பெரும் புகழைச் சொல்லி வருவோர்க்கு பிறப்பு, இறப்பு ஆகிய இருவினையும் சேரா.

அந்த இறைவனின் நாமமாகிய நமசிவாய மந்திரத்தை ஓதி ஓதி அதை தன் வைப்பு நிதியாக ஆக்கிக் கொண்ட அப்பர் பிரான் நமக்கும் அந்த இரகசியத்தைச் சொல்லி அருள்கிறார்.

நமச்சிவாய என்று வைச்ச பொருள் நமக்கு என்றும் ஆம்!

நமச்சிவாய வாழ்க ! நாதன் தாள் வாழ்க!

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

– கட்டுரைத் தொடர் நிறைவடைகிறது.

***

TAMIL WORD SEARCH- 14 VISHNU NAMES (Post No.5565)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 20 October 2018

Time uploaded in London – 6-46 am

(British Summer Time)

Post No. 5565

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

TAMIL WORD SEARCH 1-  14 VISHNU NAMES (Post No.5565)

கீழேயுள்ள கட்டங்களில் விஷ்ணுவின் 14 நாமங்கள் உள.

கண்டுபிடித்து, உச்சரித்து புண்ணியம் பெறுங்கள்

தா வா கே வா தா னா S
மோ த் ந் W
த் ச் ரி னா வி சூ A
ரா யு வி ணா கோ து M
சா நா தா க் மா I
கே பா ந் ரா ஸ்ரீ WORD
ஷி மா நா வா SEARCH
ரி வி ஷ் ணு NO-1

ANSWER:–

அச்யுதா, அனந்தா, கோவிந்தா,கேசவா, நாராயணா,மாதவா, விஷ்ணு, மதுசூதனா, த்ரிவிக்ரமா,

வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா,

–subham–

வைச்ச பொருள் – 4 (Post No.5564)

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 October 2018

Time uploaded in London – 6-39 AM (British Summer Time)

Post No. 5564

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

வைச்ச பொருள் – 4

ச.நாகராஜன்

9

வள்ளுவர் மெய்ப்பொருளைக் காணச் சொல்லி அறிவுறுத்திய குறளை மனதில் கொண்டு மிகப் பெரும் மகானான தாயுமானவர், உலக மகா கவியான பாரதியார், சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை ஆகியோர் “பொருள்” பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம்.

 

(ஊர் அனந்தம் எனத் தொடங்கும் பாடல்)

என்று கூறும் தாயுமானவர் உள்ளதிலேயே ‘பெரிய பொருளைப்’ பணிகுவாம் என்று கூறி அருளுகிறார்.

துரியநடு வூடிருந்த பெரியபொருள் யாததனைத் தொழுதல் செய்வாம்.         (அருமறையின் எனத் தொடங்கும் பாடல்) என்றும் கூறி பெரிய பொருள் கருத்தை வலியுறுத்துகிறார்.

பொருளாகக் கண்டபொரு ளெவைக்கும்முதற் பொருளாகிப போத மாகித்
தெருளாகிக் கருதுமன்பர் மிடிதீரப் பருகவந்த செழந்தே னாகி
அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரணஆ னந்த மாகி
இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம் இறைஞ்சி நிற்பாம்

பொருளுக்கெல்லாம் முதல் பொருளாக இருப்பதோடு இருள் தீர விளங்கும் பொருளினை இறைஞ்சி நிற்போம் என்று வேறு சொல்கிறார்.

 

அவரே, எங்கும் நிறைகின்ற பொருள் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடி அதன் இயல்பை நன்கு விளக்குகிறார். தெளிவான பாடல்கள் பதினொன்றும் இதோ:


அவனன்றி யோரணுவும் அசையாதெ னும்பெரிய
ஆப்தர்மொழி யொன்றுகண்டால்
அறிவாவ தேதுசில அறியாமை ஏதிவை
அறிந்தார்கள் அறியார்களார்
மௌனமொ டிருந்ததார் என்போ லுடம்பெலாம்
வாயாய்ப் பிதற்றுமவரார்
மனதெனவும் ஒருமாயை எங்கே இருந்துவரும்
வன்மையொ டிரக்கமெங்கே
புவனம் படைப்பதென் கர்த்தவிய மெவ்விடம்
பூதபே தங்களெவிடம்
பொய்மெயிதம் அகிதமேல் வருநன்மை தீமையொடு
பொறைபொறா மையுமெவ்விடம்
எவர்சிறிய ரெவர்பெரிய ரெவருறவ ரெவர்பகைஞர்
யாதுமுனை யன்றியுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.1.

அன்னே யனேயெனுஞ் சிலசமயம் நின்னையே
ஐயாஐயா என்னவே
அலறிடுஞ் சிலசமயம் அல்லாது பேய்போல
அலறியே யொன்றும் இலவாய்ப்
பின்னேதும் அறியாம லொன்றைவிட் டொன்றைப்
பிதற்றிடுஞ் சிலசமயமேல்
பேசரிய ஒளியென்றும் வெளியென்றும் நாதாதி
பிறவுமே நிலயமென்றுந்
தன்னே ரிலாததோ ரணுவென்றும் மூவிதத்
தன்மையாங் காலமென்றுஞ்
சாற்றிடுஞ் சிலசமயம் இவையாகி வேறதாய்ச்
சதாஞான ஆனந்தமாய்
என்னே யெனேகருணை விளையாட் டிருந்தவா
றெம்மனோர் புகலஎளிதோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.2.

வேதமுடன் ஆகம புராணமிதி காசமுதல்
வேறுமுள கலைகளெல்லாம்
மிக்காக அத்துவித துவித மார்க்கத்தையே
விரிவா யெடுத்துரைக்கும்
ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை
உண்டுபணு ஞானமாகும்
ஊகம்அனு பவவசன மூன்றுக்கும் ஒவ்வுமீ
துலகவா திகள்சம்மதம்
ஆதலி னெனக்கினிச் சரியையா திகள்போதும்
யாதொன்று பாவிக்கநான்
அதுவாதலா லுன்னை நானென்று பாவிக்கின்
அத்துவித மார்க்கமுறலாம்
ஏதுபா வித்திடினும் அதுவாகி வந்தருள்செய்
எந்தைநீ குறையுமுண்டோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.3.

சொல்லான திற்சற்றும் வாராத பிள்ளையைத்
தொட்டில்வைத் தாட்டிஆட்டித்
தொடையினைக் கிள்ளல்போற் சங்கற்ப மொன்றில்
தொடுக்குந் தொடுத்தழிக்கும்
பொல்லாத வாதனை எனும்சப்த பூமியிடை
போந்துதலை சுற்றியாடும்
புருஷனி லடங்காத பூவைபோல் தானே
புறம்போந்து சஞ்சரிக்கும்
கல்லோ டிரும்புக்கு மிகவன்மை காட்டிடுங்
காணாது கேட்ட எல்லாங்
கண்டதாக காட்டியே அணுவாச் சுருக்கிடுங்
கபடநா டகசாலமோ
எல்லாமும் வலதிந்த மனமாயை ஏழையாம்
என்னா லடக்கவசமோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.4.

கண்ணார நீர்மல்கி யுள்ளநெக் குருகாத
கள்ளனே னானாலுமோ
கைகுவித் தாடியும் பாடியும் விடாமலே
கண்பனித் தாரைகாட்டி
அண்ணா பரஞ்சோதி யப்பா உனக்கடிமை
யானெனவு மேலெழுந்த
அன்பாகி நாடக நடித்ததோ குறைவில்லை
அகிலமுஞ் சிறிதறியுமேல்
தண்ணாரு நின்னதரு ளறியாத தல்லவே
சற்றேனும் இனிதிரங்கிச்
சாசுவத முத்திநிலை ஈதென் றுணர்த்தியே
சகநிலை தந்துவேறொன்
றெண்ணாம லுள்ளபடி சுகமா யிருக்கவே
ஏழையேற் கருள்செய்கண்டாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.5.

காகமா னதுகோடி கூடிநின் றாலுமொரு
கல்லின்முன் னெதிர்நிற்குமோ
கர்மமா னதுகோடி முன்னேசெய் தாலுநின்
கருணைப்ர வாகஅருளைத்
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ
தமியனேற் கருள்தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ்
சங்கேத மாய்க்கூடியே
தேகமா னதைமிகவும் வாட்டுதே துன்பங்கள்
சேராமல் யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகசநிட் டைக்கும்என்
சிந்தைக்கும் வெகுதூரம்நான்
ஏகமாய் நின்னோ டிருக்குநா ளெந்தநாள்
இந்நாளில் முற்றுறாதோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.6.

ஒருமைமன தாகியே அல்லலற நின்னருளில்
ஒருவன்நான் வந்திருக்கின்
உலகம் பொறாததோ மாயாவிசித்ரமென
ஓயுமோ இடமில்லையோ
அருளுடைய நின்னன்பர் சங்கைசெய் திடுவரோ
அலதுகிர்த் தியகர்த்தராய்
அகிலம் படைத்தெம்மை யாள்கின்ற பேர்சிலர்
அடாதென்பரோ அகன்ற
பெருமைபெறு பூரணங் குறையுமோ பூதங்கள்
பேய்க்கோல மாய்விதண்டை
பேசுமோ அலதுதான் பரிபாக காலம்
பிறக்கவிலை யோதொல்லையாம்
இருமைசெறி சடவினை எதிர்த்துவாய் பேசுமோ
ஏதுளவு சிறிதுபுகலாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.7.

நில்லாது தேகமெனும் நினைவுண்டு தேகநிலை
நின்றிடவும் மௌனியாகி
நேரே யுபாயமொன் றருளினை ஐயோஇதனை
நின்றனுட் டிக்க என்றால்
கல்லாத மனமோ வொடுங்கியுப ரதிபெறக்
காணவிலை யாகையாலே
கையேற் றுணும்புசிப் பொவ்வாதெந் நாளும்உன்
காட்சியிலிருந்து கொண்டு
வல்லாள ராய்இமய நியமாதி மேற்கொண்ட
மாதவர்க் கேவல்செய்து
மனதின் படிக்கெலாஞ் சித்திபெற லாஞானம்
வாய்க்குமொரு மனுவெனக்கிங்
கில்லாமை யொன்றினையும் இல்லாமை யாக்கவே
இப்போ திரங்குகண்டாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.8.

மரவுரி யுடுத்துமலை வனநெற் கொறித்துமுதிர்
வனசருகு வாயில்வந்தால்
வன்பசி தவிர்த்தும்அனல் வெயிலாதி மழையால்
வருந்தியு மூலஅனலைச்
சிரமள வெழுப்பியும் நீரினிடை மூழ்கியுந்
தேகநம தல்லவென்று
சிற்சுக அபேஷையாய் நின்னன்பர் யோகஞ்
செலுத்தினார் யாம்பாவியேம்
விரவும்அறு சுவையினோடு வேண்டுவ புசித்தரையில்
வேண்டுவ எலாமுடுத்து
மேடைமா ளிகையாதி வீட்டினிடை வைகியே
வேறொரு வருத்தமின்றி
இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம்
எப்படிப் பிழைப்பதுரையாய்
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.9.

முத்தனைய மூரலும் பவளவா யின்சொலும்
முகத்திலகு பசுமஞ்சளும்
மூர்ச்சிக்க விரகசன் னதமேற்ற இருகும்ப
முலையின்மணி மாலைநால
வைத்தெமை மயக்கிஇரு கண்வலையை வீசியே
மாயா விலாசமோக
வாரிதியி லாழ்த்திடும் பாழான சிற்றிடை
மடந்தையர்கள் சிற்றின்பமோ
புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத
பொன்னாட்டும் வந்ததென்றால்
போராட்ட மல்லவோ பேரின்ப முத்திஇப்
பூமியி லிருந்துகாண
எத்தனை விகாதம்வரும் என்றுசுகர் சென்றநெறி
இவ்வுலகம் அறியாததோ
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.10.

உன்னிலையும் என்னிலையும் ஒருநிலை யெனக்கிடந்
துளறிடும் அவத்தையாகி
உருவுதான் காட்டாத ஆணவமும் ஒளிகண்
டொளிக்கின்ற இருளென்னவே
தன்னிலைமை காட்டா தொருங்கஇரு வினையினால்
தாவுசுக துக்கவேலை
தட்டழிய முற்றுமில் லாமாயை யதனால்
தடித்தகில பேதமான
முன்னிலை யொழிந்திட அகண்டிதா காரமாய்
மூதறிவு மேலுதிப்ப
முன்பினொடு கீழ்மேல் நடுப்பாக்கம் என்னாமல்
முற்றுமா னந்தநிறைவே
என்னிலைமை யாய்நிற்க இயல்புகூ ரருள்வடிவம்
எந்நாளும் வாழிவாழி
இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
எங்குநிறை கின்றபொருளே.11.

அற்புதமான இந்தப் பாடல்கள் மூலம் ‘ஏது பாவித்திடினும் அதுவாகி வந்தருள்செய் அற்புதப் பெரும் பொருளைப் பற்றி விளங்கிக் கொள்ள முடிகிறது.

                   10

மகாகவி பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் முதல் பாடலாக பிரம துதியைப் பாடுகிறார்.

ஓமெனப் பெரியோர் கள்-என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர்

தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்
நாமமும் உருவும் அற்றே-மனம்

நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும்

அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்

நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த

நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;

என்று இப்படி பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடலான பிரம துதியில் பாரதியார் ‘ஆமெனும் பொருள் அனைத்தாய் என்றும் ‘அந்த நிர்மலப் பொருளினை நினைந்திடுவேன் என்றும் பாடுகிறார்.

ஆக அனைத்திலும் ஊடுருவி ‘ஆம் எனும் பொருள், ‘நிர்மலப் பொருள் இருக்கிறது.

அந்தப் பொருளினை நாம் அறிந்திட வேண்டாமா – இப்படிக் கேட்கிறார் பின்னால் வந்த நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை.

11

அவர் கேள்விகள் பல.

சூரியன் வருவது யாராலே ?

சூரியன் வருவது யாராலே ?

சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்

கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?

பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?

அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்

தரையில் முளைத்திடும் புல்ஏது ?
மண்ணில் போட்டது விதையன்று

மரஞ்செடி யாவது யாராலே ?
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்

கருவில் வளர்ப்பது யார்வேலை ?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்

ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ ?

எத்தனை மிருகம்எத்தனைமீன்!

எத்தனை ஊர்வன பறப்பனபார் !
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !

எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள் !

எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்

யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள் ;

அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்

என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்

நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

“எல்லா மிப்படிப் பலபேசும் ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !
அந்தப் பொருளை நாம்நினைத்தே அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.” என்று முத்தாய்ப்பாகத் தன் கருத்தைக் கூறும் அவர்,
எந்தப் படியாய் எவர்அதனை எப்படித் தொழுதால் நமக்கென்ன ? என்கிறார்.


12

ஆக அப்பர் கூறிய “வைச்ச பொருளை இப்போது அறிய முடிகிறது. அவரே கோயில் எனப்படும் சிதம்பரத்தில் பாடிய இன்னொரு பாடலின் மூலம் நமக்கு ஒரு குறிப்பு (clue) கிடைக்கிறது.

வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய

அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற

பிச்சன் பிறப்புஇலி பேர் நந்தி உந்தியின்மேல் அசைத்த

கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே!

இப்போது வைச்ச பொருள் என்ன என்று விளங்குகிறது. அந்தப் ‘பொருள்’ என்ன?

–    அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்

***

சுவாமி இந்து தமிழ் குறுக்கெழுத்து போட்டி -1 விடை (Post No.5555)

WRITTEN by London Swaminathan

 
swami_48@yahoo.com
Date: 18 October 2018

 

Time uploaded in London – 10-19 am

(British Summer Time)

 

Post No. 5555

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சுவாமி இந்து தமிழ் குறுக்கெழுத்து போட்டி -1 விடை (Post No.5555)

 

குறுக்கே

 

3.மலைமகளின்  நாமம்

5.கண்ணன் அருளியது

6.வேதகால இலக்கியம்

9.பாக்களின் பெயர் கொண்ட பாவை

11.காவிரியை உண்டாக்கிய முனி

13.செல்வ தேவதைகள் 8

14.இறந்தோருக்கு அளிப்பது

15.அயோத்திமன்னன் கதை

16.சிவனின் மனைவி

17.சர்ச்சைக்குரிய குந்தி மகன்

18.காற்றுக்கு அதிபதி

19.கடலுக்கு அதிபதி

20.தேவனின் எதிரி

25.நாட்டின், நூலின் பெயர்

26.கடவுளின் வாஹனம்

28.தீ வழிபாடு

  1. தீயின் அதிபதி

 

xxx

 

 

 

 

கீழே

 

1.ராமனின் மனைவி

2.முதல் தெய்வம்

3.பாவம் செய்தவன்

4.சிவனின் படை

7.கிருஷ்ணன், காதலி திருமணம்

8அன்னைக்கு அடுத்த தெய்வம்

9.சிவன் கழுத்தில் இருப்பது

12.நெற்றியில் வைப்பது

13.வேத கால பெண் தெய்வம்

14.நீத்தார் நினைவு தினம்

20.ராமனின் கால்பட்டு எழுந்தவள்

21.தேவலோக நர்த்தகி

22.விஷ்ணுவும் சிவனும்

23.ஐந்தெழுத்து

  1. ஓரெழுத்து மந்திரம்

27.முனிவர்கள் செய்வது

30.கலைமகள்.

 

–சுபம்–

 

வைச்ச பொருள்?! – 3 (Post No.5553)

PICTURE POSTED BY LALGUDI VEDA

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 18 October 2018

 

Time uploaded in London – 6-19 AM (British Summer Time)

 

Post No. 5553

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

வைச்ச பொருள்?! – 3

 

ச.நாகராஜன்

6

ஒருவன் வாழ்க்கையில் எதைக் காக்க வேண்டும்?

‘காக்க பொருளா அடக்கத்தை என்கிறார் வள்ளுவர்.

பொருளாக அடக்கத்தைக் காக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போது நல்ல குணமாக, சிறந்த செல்வமாக என்பன உள்ளிட்ட பல அர்த்தங்களை நாம் பெறுகிறோம்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு   -குறள் 122

 

இதில் ஆக்கம் என்ற சொல்லை அர்த்தத்துடன் புகுத்தும் வள்ளுவர் உயிருக்கு அடக்கத்தை விடச் சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை என்கிறார்.

 

கோபத்தை ஒரு பொருளாக, தனது அதிகாரத்தைக் காட்ட வல்லது என்று எண்ணும் ஒருவனது கேடு நிச்சயம். அது எப்படி எனில் நிலத்தை ஓங்கிக் கையால் அறைந்தவனின் கதி தான் அவனுக்கு என்கிறார் வள்ளுவர்.

 

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் ̀கைபிழையா தற்று   – குறள் 307

கோபம் இல்லாமல் அடக்கத்துடன் ஒருவன் இனிய சொற்களைச் சொல்லி வந்த போது ஒரு தீச்சொல்லை – சுடு சொல்லை – மனம் புண்பட வைக்கும் ஒரு சொல்லைச் – சொன்னால் கூட மற்ற எல்லாச் சொற்களினால் உண்டாகும் நற்பயன் அனைத்தும்  தீயதாகவே முடியும்.

ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்

நன்றாகா தாகி விடும்    – குறள் 128

 

APPAR TEMPLE PICTURE BY LALGUDI VEDA

7

அடுத்து அரசாட்சி செய்வோருக்கு பொருள் செயல் வகை பற்றி எடுத்துக் கூறுகையில் அவர் உறு பொருள், உல்கு பொருள், தெறு பொருள் பற்றிக் கூறுகிறார்.

 

உறு பொருள் என்பது அரசுக்கு வந்து சேரும் இறை.

உல்கு பொருள் என்பது அரசு சுங்கமாக எடுத்துக் கொள்ளும் பொருள்.

தெறு பொருள் என்பது பகை மன்னரை வென்றவுடன் அவர்கள் செலுத்தும் திறை அல்லது கப்பம் என்பதாகும்.

இந்த மூன்றும் வேந்தனுக்கான பொருள்.

இங்கு பாரதியாரின் வார்த்தைகளைச் சற்று நோக்கலாம்,

தந்த பொருளைக் கொண்டே ஜனம் தாங்குவர் –

உலகத்தில் அரசரெல்லாம் – அந்த

அரசியலை இவர் அஞ்சு தரு பேயென்றே நினைத்திடுவார் நெஞ்சு பொறுக்குதிலையே என்றார் அவர்

ஜனத்தைப் பரிபாலனம் செய்ய வேந்தனுக்குத் தேவையான பொருளை ஜனங்களே தருவர். நல்ல அரசு அமையின் நலத்திட்டங்கள் மூலமாக அது அவர்களையே மீண்டும் வந்தடையும்.

 

உறு பொருளும் உல்கு பொருளும் ஒன்னார்த்

தெறுபொருளும் வேந்தன் பொருள்   – குறள் 756

 

அத்துடன் இன்னும் ஒரு அறிவுரையை அவர் தருகிறார்:

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்    – குறள் 752

மிக அருமையான இந்தக் குறளுக்கு ஏராளமான விளக்கங்கள் உண்டு. இரண்டை மட்டும் இங்கே பார்க்கலாம்.

பொருள் அல்லவரை – ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவரையும்

பொருளாகச் செய்யும் – மதிப்புடையவராக ஆக்கும்

பொருளல்லது -பொருள் அல்லாமல்

இல்லை பொருள் – வேறு சிறப்புடைய பொருள் எதுவும் இல்லை!

 

 AUTHOR OF TAMILVEDA-TIRUKKURAL- HINDU SAINT TIRUVALLUVAR

இன்னொரு விளக்கம் : பொருளாகப் போற்ற முடியாத தகுதி அற்றவரைக் கூட ஒரு மதிப்புடையவனாக ஆக்குவது செல்வத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை!

இதே பொருள் செயல் வகை அதிகாரத்தில் வள்ளுவர் ஒண்பொருள் பற்றியும் எண்பொருள் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு    – குறள் 760

அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பேறுகளை – தார்மார்த்த காம மோக்ஷம் என்ற நான்கு பேறுகளை – ஹிந்து மதம் எடுத்துக் கூறுகிறது.

 

 

சிறந்ததாகிய பொருளை  ஒருவன் ஈட்டி விட்டால் அவன் எளிதாக அறத்தையும் இன்பத்தையும் அடைவான் என்பது இக்குறளின் பொருள்.

வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணது எய்த இருதலையும் எய்தும் என்கிறது நாலடியார்.

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றனுள் நடுவில் இருக்கும் பொருளை அடைந்து விட்டால் அதன் மூலம் அறத்தைச் செய்து அதை அடையலாம்; இன்பத்தையும் அடையலாம்.

 

 

8

இப்படிப் பொருளின் பல்வேறு வகைகளைச் சொல்லி வரும் வள்ளுவர் செம்பொருள், மெய்ப்பொருள் பற்றிச் சொல்வதைக் கேட்டால் அப்பரின் வைச்ச பொருள் பற்றி அறிந்து விடலாம்.

ஒருவரை ஒருவர் சேரவிடாமல் வெறுப்பை வளர்ப்பவர் பண்பில்லாதவர்கள் (குறள் 851இன் பொருள் இது)

மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவினவர்  (குறள் 857)

மாறுபாட்டை உண்டாக்க நினைக்கும் தீய அறிவினை உடையவர்கள் வாழ்வின் வெற்றியைத் தரும் அறநூல்களின் மெய்ப்பொருளைக் காண மாட்டார்கள்.

அட,மெய்ப்பொருள் என்று ஒரு வார்த்தையை இங்கு வள்ளுவர் சொல்கிறாரே!

 

 

மெய்ப்பொருளா? அதை அறிந்தால் என்ன பயன்?

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி   – குறள் 356

கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையா நெறிதனை அடைவார்கள்!

ஆகவே எப்பொருள்  எத்தகைய தன்மை வெளியில் கொண்டிருப்பினும் அதை நன்கு ஆராய்ந்து அதன்  உண்மைப் பொருளைக் காண வேண்டும்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பதறிவு – குறள் 355

 

வைத்த பொருள் என்று அப்பர் கூறியதன் உள்ளர்த்தம் பத்திரமாகப் பாதுகாக்கும் இடத்தில் வைக்கப்பட்ட வைப்புழியா?Safe Depositஆ?

 

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப்புழி  (குறள் 226)

வறியவரின் பசிப்பிணியைத் தீர். அவர்கள் வயிற்றில் நீ இடும் உணவு உனக்கு பிற்காலத்தில் உபயோகப்படும் வைப்புழி – அதாவது Safe Deposit !

 

அட,அப்பர் வைத்த பொருள் என்று கூறும் போது நமக்கு ஒரு சேஃப் டிபாஸிட்டைத் தான் சொல்கிறாரோ?

இன்னும் பார்ப்போம்!

***