எறும்பு போல சிறுகச் சிறுகச் சேர்- மநு புத்திமதி (Post No.5551)

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 17 October 2018

 

Time uploaded in London – 7-42 AM

(British Summer Time)

 

Post No. 5551

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மநு நீதி நூல்- PART 30

 

(ஸ்லோகங்கள் 4-205 முதல் காண்போம்.)

 

நாலாவதுஅத்யாயம் முதல் பகுதியில் பல இடங்களில் பூனையைக் குறிப்பிபீட்டார். பசு போல உடனேபலன் தராவிட்டாலும் அதர்மம் மெதுவாகப் பலன் தந்து ப்ரம்பரையையே அழித்துவிடும் என்று சொன்னார். உர்த்ராக்ஷ பூனை போல இராதே, பஞ்சதந்திரக் கதை கொக்கு போல இராதே என்று சொன்னதையும் மநு நூல்- பகுதி 29ல் கண்டோம். இந்தப் பகுதியில் எறும்பு போல வாழ் என்கிறார்!!

4-205-228 எங்கு சாப்பிடக்கூடாது, என்ன சாப்பிடக் கூடாது என்று அவர் சொல்லுவதைப் பார்த்தால் ஏன் ஹோட்டல்களில் சாப்பிடக்கூடாது என்று தெளிவு பிறக்கும்; ஒருவர் எங்கு சாப்பிடுகிறார், என்ன சாப்பிடுகிறார் என்பதில் கவனம் தேவை. ‘நீ அதுவாக ஆகிவிடுவாய்’ (YOU ARE WHAT YOU EAT, YOU ARE WHERE YOU EAT- YOU ARE THAT) என்பார் .

 

4-229,233 எது நல்ல தானம் என்று சொல்கையில் தண்ணீர் தானம் முதல் வேதம் கற்பிக்கும் தானம் வரை சொல்லி வேத தானமே சிறந்தது என்கிறது

 

4-235-தானம் கொடுப்பவர், தானம்    வாங் குபவர் புண்ணியம் பற்றி செப்பும்

4-238 எறும்பு போல புண்ணியம் சேர்; சிறுகச் சிறுக சேர் என்று புகல்கிறது

யா காவாராயினும் நா காக்க!!!

4-256 சொல்,பேச்சின் முக்கியத்தைக் கூறும். பேச்சுதான் எல்லாவற்றுக்கும் மூலம், ஆணிவே ர் என்று பகரும்.

வள்ளுவன் சொன்ன எல்லாம் நினைவுக்கு வரும்.

 

 

 

நாலாவது அத்யாயம் நிறைவு பெற்றது.

 

–சுபம்-

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 October 2018

 

Time uploaded in London – 7-09 AM

(British Summer Time)

 

Post No. 5546

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)

மூட நம்பிக்கைகள் பற்றிய ஒரு ஆங்கிலப் புஸ்தகம் லண்டன் பல்கலைக் கழக லைப்ரரியில் கிடைத்தது. அதில் பல விநோத நம்பிக்கைகள். ஒன்று யானை பற்றியது. நான் இதுவரை கேள்விப் பட்டத்தில்லை. லண்டனில் என் வீட்டிலும் நிறைய மர யானை பொம்மைகள்  உண்டு. அவை ஒவ்வொன்றும் நவக் கிரஹங்கள் போல ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றன. இப்படி நிற்கக் கூடாதாம். வெள்ளைக்காரர்கள் சொல்கிறார்கள்.

 

“மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை”

 

என்னும் திருமூலர் பாடலின் தத்துவம் பற்றி காஞ்சி பரமாசார்யார் சொல்லிவிட்டார். அதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது?

 

இருந்த போதிலும் திருமூலர் காலத்திலிருந்து மர யானை பொம்மைகள் தமிழ் நாட்டில் இருந்தது தெரிகிறது. எங்கள் மதுரையில் புகழ்பெற்ற கல் யானை கூட உண்டு. ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வந்து கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவி  ளையாடல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

யானையின் அபார ஞாபக சக்தி, பழி வாங்கும் குணம், உ.வே.சாமிநாத ஐயர், காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன யானக் கதைகள், சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பெண்ணின் பாடலுக்கு மயங்கி தானியக் கதிர்களைச் சாப்பிடாமல் நின்ற யானை, புத்தர், மஹாவீரர் ஆகிய பெரியோர்களின்

தாய்மார்களின் கனவில் தோன்றிய

யானைகள், புத்தர் முன் மண்டியிட்ட யானை, யானை லத்தி காப்பிக் கொட்டை ஸ்பெஷல் காப்பி, கஜ சாஸ்திரம், கோவில்களில் கஜ பூஜை, யானைக்கு உள்ள பல பெயர்கள்– என்று நூற்றுக் கணக்கான யானை புராணங்களை எழுதிய எனக்கு நேற்று ஆங்கிலப் புஸ்தகத்தில் படித்த செய்தி வியப்பு அளித்தது.

 

 

அதாவது வீட்டில் யானை பொம்மையோ, வரைபடமோ, காலண்டரோ எது இருந்தாலும் அது வாசல் கதவை நோக்கிய வண்ணமாக இருக்க வேண்டுமாம்! அப்படியில்லாவிடில் துரதிர்ஷ்டமாமம்!!!

 

ஒரு லண்டன் வாசி எழுதுகிறார்,

என் வீட்டில் மர யானை பொம்மைகள் உண்டு. நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். நான் சொன்னேன்; நான் சரியான அதிர்ஷ்டக் கட்டை. ராமே

ஸ்வரம் போனாலும் சனைஸ்சரன் விட மாட்டான் என்ற பழமொழி போல எனக்கு யானை பொம்மை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை. உடனே என் ஆங்கில நண்பர் சொன்னார்:– அட, உங்களுக்குத் தெரியாதா? யானை பொம்மையை வாசலை நோக்கி வரவேற்பது போல வைக்க வேண்டும் என்று.

அன்று முதல் யானை பொம்மையை வாயில் திசை நோக்கி வைத்தேன். பின்னர், ஒரே அமோகம் தான்.

 

 

யானை முடி தாயத்து!

 

இன்னொரு பெண்மணி எழுதுகிறார்– யானை பொம்மை, யானை முடி தாயத்து– இவை எல்லாம் அதிர்ஷ்டச் சின்னங்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? ஆனால் பொம்மை வாசலை நோக்கி இருக்க வேண்டும்.

 

இன்னொரு பெண்களுக்கான பத்திரிக்கையில் ஒரு குறிப்பு:

எனது அப்பா திடீரென்று இறந்து போனார். பின்னர்தான் தெரிந்தது. எதேச்சையாக யாரோ கை பட்டு எங்கள் வீட்டு யானை பொம்மை திசை மாறித் திரும்பி இருந்தது என்று. அதாவது அவர் மரணம் அடையப் போவதை, யானை முன்னரே தெரிந்து கொண்டுவிட்டது.

 

இன்னொரு அன்பர் பத்திரிக்கையி     எழுதுகிறார்; அவர் கிண்டல் செய்கிறாரோ, உண்மையைச் செப்புகிறாரோ; துப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவர் மப்புடன் எழுதியது இதுதான்:

 

உங்களுக்குத் தெரியாதா?

யானைக்கு என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டால் மதம் பிடித்துவிடும். ஆகையால் வாயிற் கதவுகளை நோக்கி வையுங்கள்.

 

மற்றொரு பெண்மணி யானை முடி தாயத்து  அதிர்ஷ்டம்

அளிக்கும் என்கிறார். நான் குருவாயூர்

அருகில் உள்ள யானை முகாமுக்கு சென்றிருந்தேன். அங்கு 50, 60 யானைகளைப் பராமரிக்கிறார்கள்.

 

 

சிலர் யனைப் பாகனுடன் ‘கிசு கிசு’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன என்று கேட்ட போது தமிழும் மலையாளமும் அறிந்த ஒருவர் எனக்கு விளக்கினார். யானை முடி வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டுமாம். அவர் கண்ணுக்கு முன்னால் யானையின் வால் முடியைப் பிடுங்கி நமக்குக் கொடுப்பாராம். எனக்கு அதிர்ஷ்டமும் வேண்டாம்; யானை முடியைப் பிய்த்து அதைக் கொடுமைப் படுத்திய பாவமும் வேண்டாம் என்று சொல்லி விட்டு நைஸாக நகர்ந்து விட்டேன்.

 

இதில் வேடிக்கை என்ன வென்றால், யானையை உலகிற்குக் காட்டியவனே இந்தியந்தான். ஆப்பிரிக்கவின் புகழ்மிகு எகிப்திய ஓவியங்களில் யானையே இல்லை. தென் கிழக்காஸிய நாடுகள் முழுதும் இந்திரனின் அதிர்ஷ்டக்கார வெள்ளை யானை ஐராவதம்தான் சி   லைகளிலும், கொடிகளிலும்!!! தாய்லாந்து போன்ற நாடுகளின் அரசாங்க சின்னங்களிலும் உளது.  தமிழ்நாட்டுக் கோவில்களில் பூமியைக் காக்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் எட்டு யானைகள் கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றிலும் உள. சங்க இலக்கியப் பாடல்களில் யானைக் குறிப்புகள் பற்றி ஒரு ஆராய்ச்சி புஸ்தமே உளது. ஸரஸ்வதி மஹால் லைப்ரரி (தஞ்சாவூர்) யில் கஜ சாஸ்திரம் இருக்கிறது.

ஸிந்து-ஸர்ஸ்வதி நாகரீக முத்திரையில் யானைப் படம் உளது; ஆயினும் ஆப்பிரிக்காவில் தந்த சிற்பங்கள் உள. யானைப் படமோ சிலையோ இல.

யானை என்னும் பிராணி வெப்ப மண்டல நாட்டுப் பிராணி. அது ஐரோப்பியா சென்றது 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான். டேரியஸ், அலெக்ஸான்டர் ஆகியோர் படை எடு  , ப்புக்கு முன்னால் அவர்கள் யானையைப் பார்த்தது இல்லை. மாமூத் போன்ற யானையின் மூதாதையர் இருந்ததோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி இருந்தும் யானை பொம்மை பற்றி இவ்வளவு நம்பிக்கைகள் எப்படிப் பரவின என்பது ஆரய்ச்சிக்குரிய விஷயம்.

 

(யானை பற்றிய என்னுடைய ஆங்கிலக் கட்டுரையில் வெள்ளைக்காரர்களின் பெயர்களையும் புஸ்தகம், பத்திரிக்கைகளின் பெயரையும் கொடுத்துள்ளேன்)

“பொம்மையில் மறைந்தது மாமத யானை

பொம்மையை மறைத்தது மாமத யானை”– ஆங்கிலத் திருமூலர்.

 

யானைகள் வாழ்க

–SUBAHM–

 

வைச்ச பொருள்?! – 2 (Post No.5541)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 October 2018

 

Time uploaded in London – 6-33 AM (British Summer Time)

 

Post No. 5541

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

ஆய்வுக் கட்டுரைகளை காப்பி அடித்து தங்கள் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டாம். சிலர் கட்டுரைகள் வெளியான தளம், எழுதியவர் பெயர் இல்லாமல் நண்பர்களுக்கு அனுப்ப அவர்கள் தங்கள் பெயரில் அனுப்பி வெளியிடுகிறார்கள். எழுதியவர் பெயர், வெளியிட்ட இணையதளமான www.tamilandvedas.comஇன் பெயர் ஆகியவற்றையும் நண்பர்களுக்கு இணைத்து அனுப்புங்கள்.

வைச்ச பொருள்?! – 2

 

.நாகராஜன்

5

பொருள் என்பதைச் செல்வம் என்ற அர்த்தத்தில் வள்ளுவர் கையாளும் போது பல சிக்கல் நிறைந்த விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறார், வெவ்வேறு குறட்பாக்களில்.

அருள், பொருள் ஆகிய இரண்டு வார்த்தைகள் தமிழ் தந்த அரும் வார்த்தைகள். அருள் என்ற வார்த்தைக்கு ஈடு இணையான இன்னொரு வார்த்தை எந்த மொழியிலும் கிடையாது.

 

பால் பிரண்டன் உள்ளிட்ட மேலை நாட்டோர் வியந்து போற்றிய வார்த்தை இது. பொருள் என்பதும் அதே போன்ற அருமையான வார்த்தை.

 

இந்த இரண்டையும் சீர் தூக்கிப் பார்க்கும் வள்ளுவரின் பான்மை வியத்தற்குரியது.

 

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்  பொருட்செல்வம்

பூரியார் கண்ணு முள  – குறள் 241

 

மிகத் தெளிவாக அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் என்றும் பணத்தால் பெறப்படும் சகல சௌகரியங்களும் அற்பர்களிடத்தும் உள்ளன என்கிறார்.

 

ஆனால் அந்தப் பொருளைக் கொண்டே அருளைப் பெறலாம் என்பதும் அவர் முடிபு.

 

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு – குறள் 757

அன்பானது பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித் தாயால் வளரும்.

பெற்ற பணத்தை நல்ல வழியில் செலவழித்தால் அருளை அடையலாம்.

 

பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார்

அற்றார் மற்றாதல் அரிது   – குறள் 248

பணம் இல்லாவிட்டாலும் கூட ஒருவேளை பின்னால் வரக் கூடும்; ஆனால் அருள் இல்லையெனிலோ ஒன்றுமே இல்லாதவர்கள் தாம் அவர்கள்; அவர்கள் வளத்தைப் பெறுதல் அரிது.

 

ஆனால் அந்த அருள் மறு உலகத்தில் செல்லுபடியாகும் ஒன்று; பொருள் இல்லையெனில் இவ்வுலக வாழ்க்கை இல்லை! அருள் அவ்வுலகிற்குத் தேவை;பொருள் இவ்வுலகத்திற்குத் தேவை!

 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு   – குறள் 247

 

 

இந்தப் பொருள் இருந்தால் பொருளற்றவர் கூடப் போற்றப்படுவர். பொருளற்றவர் என்றால் இங்கு மதிக்கவே தகாதவர் என்று அர்த்தம்.

 

பொருளற்றவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்  – குறள் 751

அருமையான இந்தக் குறளில் பொருள் என்னும் வார்த்தை பல பரிமாணங்களைக் காட்டுகிறது.

 

உலகியல் ரீதியான பொருள் தான் – பணம் தான் – சிறப்புடைய பொருள். அதுவன்றி வேறு எதுவும் ஒரு பொருள் அல்ல. மதிக்கத் தகாதவரைக் கூட மதிக்கும்படி வைக்கும் ஒரு அற்புதம் செல்வமே.

 

காசே தான் கடவுளடா!

பொருள் என்னும் பொய்யாவிளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று    -குறள் 753

பொருள் மட்டும் இருந்தால் போதும். அதுவே நந்தா விளக்கு. நினைத்த தேசத்திற்கெல்லாம் சென்று வெல்வதோடு இருளை ஒழித்து விடும். இருள் என்பது இங்கு பகை உள்ளிட்ட பல அர்த்தங்களை உள்ளடக்கியுள்ளது.

 

ஆகவே வள்ளுவரின் கட்டளை ‘செய்க பொருளை

எப்படியாவது பணத்தை சம்பாதித்துக் கொள். பகைவரின் கர்வத்தை அடக்க வல்ல  கூர்மையான வாள் அதை விட வேறில்லை.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரியது இல்     – குறள் 759

 

 

ஆனால் இந்தப் பொருளை நியாயமான வழியில் சம்பாதிக்க வேண்டும்.பிறரை அழவைத்துப் பெற்றால் நீ அழப்போவது நிச்சயம் (குறள் 659)

 

சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமட்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்றுகுறள் 660

சலத்தால்கெட்ட வழியால்வஞ்சனையால்பொருளைப் பெற்றால் அது நிலைக்காது; அது பச்சை மண்பாண்டத்தில் நீரை ஊற்றி வைப்பதற்குச் சமம்.

 

சம்பாதித்த பணம் குறையாமல் இருக்க ஒரு வழி உண்டு.

பிறனுடைய கைப்பொருளைக் கைப்பற்றாமல்கவராமல்வஞ்சனையால் அடையாமல் இருத்தல் வேண்டும்.

 

இப்படி வழி காட்டும் குறள் இது:-

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன் கைப்பொருள்  – குறள் 178

ஆனால் இப்படிப் பெரும் செல்வத்தை சம்பாதித்து என்ன பிரயோஜனம்? அதனை நன்கு அனுபவிக்க அல்லவா வேண்டும்?

 

அனுபவிக்காமல் செத்துப் போனால் அந்தச் செல்வத்தைக் கொண்டு செத்தபின் அவன் என்னதான் செய்யப் போகிறான்?

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்   – குறள் 1001

 

சேர்த்த பணத்தால்செல்வத்தால்எல்லாம் அடையலாம் என்று எண்ணி அதைச் சேர்த்து வைத்து யாருக்கும் கொடுக்காமல் செத்தொழிந்தால் அடுத்த பிறப்பு இழிந்த பிறப்பாகவே அமையும்.

 

பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு   – 1002

அப்பாடா!

தலை சுற்றும் அளவுக்குப் பொருளைப் பற்றிய பொருள் வாய்ந்த குறள்கள் இவை.

செல்வம் என்ற அர்த்தத்தில் எப்படிப் பொருளைச் சேர்க்க வேண்டும், அப்படிச் சேர்ப்பது எவ்வளவு முக்கியம், அதைக் காக்கும் வழி என்ன, அடுத்த பிறவி நல்லதாக அமைய வழி என்ன என்பன உள்ளிட்ட அற்புத உண்மைகளை அள்ளிக் கொட்டுகிறார் வள்ளுவப் பிரான்.

இதில் அப்பர் கூறிய வைச்ச பொருள் பற்றி நமக்குத் தெரியவில்லை.

 

அதற்கு இன்னும் பல குறட்பாக்களை ஆராய வேண்டும்.

ஆராய்வோம்!

                     –தொடரும்

 

 

***

 

 

 

 

வைச்ச பொருள்?! – 1 (Post No.5537)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 14 October 2018

 

Time uploaded in London – 5-44 AM (British Summer Time)

 

Post No. 5537

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

ஆய்வுக் கட்டுரைகளை காப்பி அடித்து தங்கள் பெயரில் போட்டுக் கொள்ள வேண்டாம். சிலர் கட்டுரைகள் வெளியான தளம், எழுதியவர் பெயர் இல்லாமல் நண்பர்களுக்கு அனுப்ப அவர்கள் தங்கள் பெயரில் அனுப்பி வெளியிடுகிறார்கள். எழுதியவர் பெயர், வெளியிட்ட இணையதளமான www.tamilandvedas.comஇன் பெயர் ஆகியவற்றையும் நண்பர்களுக்கு இணைத்து அனுப்புங்கள்.

 

 

வைச்ச பொருள்?! – 1

 

.நாகராஜன்

1

திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரில் அருளிய தேவாரப் பாடலைப் படித்தேன் :

 

வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்

 

சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கின் அல்லால்

மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்

அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலாப் பேதை நெஞ்சே

 

‘வைத்த பொருள்’ என்ற சொற்களுக்குச் சரியான பொருள் புரியாமல் குழப்பம் வந்தது.

 

சரி ‘பொருள்’ என்பதன் ‘பொருளைப்’ புரிந்து  கொள்ளத் திருவள்ளுவரை நாடலாம் எனத் திருக்குறளை எடுத்தேன்.

வள்ளுவரோ ‘பொருள்’ பற்றிய ‘பொருள் களஞ்சியமாக’ இருக்கிறார்! நுனிப்புல் மேய முடியாது.

 

2

பொருள் என்ற சொல்லிற்கான பொருளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,

பொருள் என்றால் உண்மை அல்லது மெய்ப்பொருள்

பொருள் என்றால் வினை.

பொருள் என்றால் செய்தி.

பொருள் என்றால் பயன்

பொருள் என்றால் உறுதிக் குணம்

பொருள் என்றால் சிறந்தது

பொருள் என்றால் சொற் பொருள் அல்லது உரை

பொருள் என்றால் பொருள் நூல் (Economics)

பொருள் என்றால் நூல் பொருள்

பொருள் என்றால் உடைமை 

பொருள் என்றால் பண்டம் அல்லது வஸ்து

பொருள் என்றால் செல்வம்

பொருள் என்றால் மதிப்பு

 

 

பொருளுக்கான இத்தனை ‘பொருள்களையும் குறளில் ஏற்றி ஒன்றுடன் ஒன்று இணைத்து அருமையான ஒரு ‘பொருள் மாலையைஅவர் தொடுத்து விட்டார். (பொருள் மாலை என்பதை நான் இங்கு பொருள் களஞ்சியம் என்ற பொருளில் தந்துள்ளேன். வள்ளுவரோ 1230ஆம் குறளில் ஒரு மனைவி தன் கணவரை பொருள் மாலையாளர் என்று குறிப்பிடுகிறாள். அதாவது அவள் கணவன் பொருள் தேடுவதையே இயல்பாகக் கொண்டவனாம். பொருள் என்பது இங்கு செல்வம் என்ற பொருளைத் தரும். குறள் : பொருள் மாலையாளரை உள்ளிருள் மாலை, மாயும் என் மாயா உயிர்! இதன் அர்த்தம் : பொருள் தேடுவதையே இயல்பாகக் கொண்டுள்ள என் கணவரை நினைத்து நினைத்து வருந்தி, அவர் அருகில் இல்லாததால்,இது வரை மாயாதிருந்த என் உயிர் இதோ, இந்த மயக்கம் தரும் மாலைப் பொழுதில் நிச்சயம் மாய்ந்து விடும் – கற்பியலில், பொழுது கண்டு இரங்கல் என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் வருகிறது)

 

பொருளுக்கான பொருளை அறிய சுமார் 96 குறட்பாக்களைப் படித்து ஆராய்ந்து உண்மைப் பொருளைத் தேற வேண்டும்.

பொருள் என ஆரம்பிக்கும் குறட்பாக்கள் 13.

பொருள் என முடியும் குறட்பாக்கள் 6

பொருள் என வார்த்தை வரும் குறட்பாக்கள் 66.

இத்தனை குறட்பாக்களையும் படித்து முடித்தால் தான் அப்பர் வைத்த “வைச்ச பொருளின் முடிச்சை அவிழ்க்க முடியும்!

 

 

3

பொருளைப் பலவாறாக இனம் பிரிக்கிறார் வள்ளுவர். உறு பொருள், உல்கு பொருள், தெறு பொருள், செம் பொருள், மெய்ப் பொருள், தேறும் பொருள் என இப்படிப் பலவகைப் பொருள்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாப்பொருளும் குறளில் இருக்கிறது!

 

4

முதலில் இல்லற வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்.

தூக்கிவாரிப் போடும் ஒரு குண்டை வள்ளுவர் தூக்கிப் போடுகிறார்பெண்ணியவாதிகள் முன்பு.

குறள் 141 – அதிகாரம் பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

அறம் பொருள் கண்டார்கண் இல்.

பிறனுடைய மனைவியிடத்தில் அவளது பெண்மையை அடைய விரும்பி நடக்கும் பேதைமை கொண்டு நடக்கும் அறியாமை அறம், பொருள் கண்டு தெளிந்தவரிடத்தில் இல்லை.

ஆக இங்கு ஒருவனுடைய மனைவி அவனுக்குப் பொருள் என்பதைச் சொல்கிறார் வள்ளுவர்.

ஆணை முன் நிறுத்தி அவனுடைய பொருள் மனைவி என்பதால் அவர் ஆணுக்கு முன்னுரிமை கொடுக்கிறாரா? –பெண்ணியவாதிகள் குதர்க்கமாகப் பேசுவர் இப்படி!

ஆனால் உண்மையில் குறள் முழுவதையும் ஓர்ந்து படித்தால் இதன்Corollaryயாககிளைத் தேற்றமாகவருவது ஒரு பெண்ணுடைய (மனைவியின்) பொருள் ஆண் (அவள் கணவன்) என்பதாகும்.

 

இப்படித்தான் குறளைப் படிக்க வேண்டும்.

இதை எப்படி வலியுறுத்திச் சொல்ல முடியும் என்றால் பல குறள்களையும் இணைத்துப் படிக்க வேண்டும்.

இந்தக் குறளுக்கு இணை குறள் 63வது குறள் (மக்கட் பேறு)

தம் பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும்

 

ஒரு தம்பதிக்கு தமது பொருள் என்பது அவர்களுடைய மக்களேஅந்த மக்கட் செல்வம் அவரவர் செய்த முன் வினையின் பயனாக வந்து அமையும். (தன் பொருள் என்று ஆணைக் குறிப்பிடவில்லை இங்கு; தம் பொருள் என்கிறார்! மனமொத்த தம்பதிக்குப் பிறந்ததால் தம் பொருள்!)

ஆழ்ந்த ஹிந்து தத்துவத்தைக் கூறும் குறள் இது. (இவன் தந்தை என் நோற்றான் கொல்? – குறள் 70 அதே மக்கட் பேறு அதிகாரம்தந்தை நோன்பு நோற்க வேண்டும்! தாய் சும்ந்து ஈன்று அவன் சான்றோன் என்று கேட்டு உவக்க வேண்டும்!)

ஆக மனைவிக்கு உடைமை அவள் கணவன். கணவனுக்கு உடைமை அவனது மனைவி. இருவருக்கும் உடைமை அவர்கள் பெற்ற மக்கட் செல்வம்.

 

வேறொரு வகை பெண்கள் உண்டு. அவர்கள் பொருட் பெண்டிர்!

குறள் 913 .அடுத்தவன் மார்பைத் தடவி, அவன் பர்ஸையே பார்த்து தன் முந்தானையை விரிக்கும் விலை மகளிரே பொருட் பெண்டிர்.

 

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ யற்று.

 

இருட்டு அறையில் பிணத்தைத் தழுவி நிற்பதற்கு ஒப்ப, விலைமகளிரின் அணைப்பு பொய்யான தழுவுதல் ஆகும். என்ன ஒரு அற்புதமான உவமை!

ஆக பெண்களில் பொருள் பெண்டிரையும் இனம் காட்டி விடுகிறார் வள்ளுவர்.

 

அவரா வைச்ச பொருளின் முடிச்சை அவிழ்க்க வழி சொல்லாமல் இருப்பார்?!

தொடர்ந்து படியுங்கள்இன்னும் சற்று ஆராய்வோம்….

                       –தொடரும்

***

 

மஹாபாரதப் பெரும்போர்! எத்தனை பேர் போரிட்டனர்? (Post No.5527)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 11 October 2018

Time uploaded in London – 8-04 AM (British Summer Time)

Post No. 5527

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

மஹாபாரதப் பெரும்போர்! எத்தனை பேர் போரிட்டனர்? எத்தனை பேர் போருக்குப் பின் உயிருடன் இருந்தனர்?

ச.நாகராஜன்

போர்! போர்! மஹாபாரதப் பெரும்போர்!

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கு இடையே நடந்த பெரும் போர் அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் இடையிலே நடந்த பெரும் யுத்தம்.

கௌரவர் பக்கம் பதினொரு அக்ஷௌஹிணி சேனை இருந்தது.

பாண்டவர்களிடமோ ஏழு அக்ஷௌஹிணி சேனை மட்டுமே இருந்தது.

ஒரு அக்ஷௌஹிணி சேனை என்றால் என்ன அர்த்தம்?

21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள், 109350 காலாட்படையினர் கொண்டது ஒரு அக்ஷௌஹிணி.

அப்படியெனில், கௌரவரிடம் இருந்தது 2,40,570 ரதங்கள், 2,40,570 யானைகள், 7,21,710 குதிரைகள், 7,65,450 காலாட்படை  வீரர்கள் இருந்தனர்.

பாண்டவரிடமோ 1,53,090 ரதங்கள், 1,53,090 யானைகள், 4,59,270 குதிரைகள், 7,65,450 காலாட்படை வீரர்கள் இருந்தனர்.

உக்கிரமான போர் பதினெட்டு நாட்கள் நடந்தது.

இரு தரப்பிலும் ஏராளமானோர் இறந்தனர்.

போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஸ்தீரி பர்வம் விவரிக்கிறது.

அதன் படி நூற்றறுபத்தைந்து கோடியே இருபதினாயிரவர் இந்தப் போரில் கொல்லப்பட்டனர்.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இருபத்திநாலாயிரத்து நூற்றறுபத்தி ஐந்து பேர்கள்.

இப்படி மிகச் சரியாக கணக்கைச் சொல்ல முடிகிறதென்றால் போர் முடிந்தவுடன் அன்றன்று எத்தனை பேர் இறந்தனர், எத்தனை பேரைக் காணோம் என்பதைக் கணக்கிட ஒரு துல்லியமான முறை மஹாபாரத காலத்தில் இருந்தது என்பதை ஊகித்துத் தெரிந்து கொள்ளலாம்.

போர் முடிந்தவுடன் கௌரவர் பக்கம்  மீதி இருந்தவர்கள், கிருபர், கிருதவர்மா, அஸ்வத்தாமா ஆகிய மூவர் மட்டுமே.

பாண்டவர் பக்கம் போரில் மீதி இருந்தது பஞ்ச பாண்டவர்கள் ஐவர், கிருஷ்ணர், சாத்யகி ஆகிய ஏழு பேர்கள் மட்டுமே.

இப்படி ஒரு போரில் பெரிய சேனை கொண்டிருந்த கௌரவர் ஏன் ஜெயிக்க முடியவில்லை?

அவர்கள் பக்கம் வயதிலே முதிர்ந்த பீஷ்மாசாரியர், வில் வித்தையைக் கற்றுக் கொடுத்த ஆசாரிய துரோணர்,  கிருபர், அஸ்வத்தாமா, பெரும்போர் வீரனான கர்ணன், ஆயிரம் யானை பலத்தைக் கொண்ட துரியோதனன், அவனது சகோதரர்கள் இன்னும் ஏராளமான வீரர்கள் இருந்தனர்.

பாண்டவர்களிடம் பஞ்ச பாண்டவர் ஐவர், சாத்யகி,அபிமன்யு உள்ளிட்ட பெரும் வீரகள் இருந்தனர். இவர்களுடன் கிருஷ்ணர் ஆயுதம் எடுக்காமல் அர்ஜுனனின் சாரதியாக மட்டுமே இருந்தார்.

இருந்தும் கூட பாண்டவர் வென்றது எப்படி?

ஏனெனில் நடந்த போர் அறத்திற்கும் மறத்திற்குமான போர். தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர்.

இதில் யதோ தர்ம: ததோ கிருஷ்ண:

எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கே கிருஷ்ணர்.

யதோ கிருஷ்ண; ததோ ஜய:

எங்கு கிருஷ்ணரோ அங்கேயே வெற்றி.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத |

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ச்ருஜாம்யஹம் ||

எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஊறு விளைவிக்கப்படுகிறதோ, எப்போதெல்லாம் அதர்மம் எழுச்சியுறுகிறதோ அப்போதெல்லாம் என்னை நானே சிருஷ்டித்துக் கொள்கிறேன்.

இது கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கீதையில் கூறும் வாக்கு.

இதற்கிணங்க அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டி, தீயோரை அழித்து நல்லோரைக் காக்க எடுத்த அவதாரமே கிருஷ்ணாவதாரம்.

புல்லரிக்க வைக்கும் போர் நிகழ்ச்சிகள் மிக விவரமாக மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

குருக்ஷேத்திரத்தில் நடந்த இந்தப் போரில், போர் வீரர்களின் அணிவகுப்பிற்கும், சண்டைக்கும் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு யுத்த களத்திற்கென இருந்திருக்க வேண்டும்.

அஸ்திர சஸ்திர பிரயோகங்கள், போர் வியூகங்கள், மகா ரதர்கள், அதி ரதர்கள் உள்ளிட்ட வியத்தகு விவரங்கள் நுணுக்கமாக விளக்கப்பட்டுள்ளதை மஹாபாரத்தில் காணலாம்.

உலக இலக்கியங்களில் போர் நிகழ்ச்சிகளை இவ்வளவு துல்லியமாக, அதிக விவரங்களுடன் தந்த நூல் மஹாபாரதத்தை அன்றி வேறொன்றில்லை என்பது மெய்.

தர்மத்தின் வெற்றியை எடுத்துரைப்பதால் இதற்கு ஜயம் என்ற பெயர் உண்டு.

இதை மாலையில் படித்தால் பகலில் மனத்தாலும் இந்திரியங்களாலும் செய்த பாவம் அகலும்.

இதைக் காலையில் படித்தால் இரவில் செய்த பாவங்கள் அகலும்.

ஜயம் என்னும் இதைப் படிக்கும் இடத்தில் ஸ்ரீயும், கீர்த்தியும், வித்தையும் எப்போதும் சந்தோஷமும் இருக்கும்!

இப்படி மஹாபாரதம் படிப்பதன் பயனை இந்த நூலே அறுதிட்டு உறுதியுடன் கூறுவதைக் காணலாம்.

பாரதம் படிப்போம்; அறவழியில் நிற்போம்!

***

There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி! (Post No.5514)

 

There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி! (Post No.5514)

 

 
WRITTEN BY S NAGARAJAN

Date: 7 October 2018

 

Time uploaded in London – 6-53 AM (British Summer Time)

 

Post No. 5514

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

There is no Death : கவிஞர் லாங்பெல்லோவின் அமர வரி!

 

.நாகராஜன்

 

 

அமெரிக்க கவிஞர் லாங்பெல்லோ (1807 – 1882)

மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர். “

 

 

There is no Death! What seems so is transition;
  This life of mortal breath
Is but a suburb of the life elysian,
  Whose portal we call Death என்ற அமரவரிகளை எழுதியவர்.
அவரது சிறு பெண் குழந்தை ஃபானி திடீரென இறந்த போது மனம் வருந்தி இந்தக் கவிதையை அவர் எழுதினார். 1848ஆம் ஆண்டு நவம்பர் 12 தேதியிட்ட டயரிக் குறிப்பில் அவர் எழுதினார் : “ நான் இன்று மிகவும் சோகமாக இருக்கிறேன். எனது சின்னக் குட்டியை இழந்து தவிக்கிறேன். அவளைப் பார்க்க வேண்டும் என்கிற கட்டுப்படுத்த முடியாத தணியாத தாகம் என்னை வருத்துகிறது.

ரெஸிக்னேஷன் என்று அவர் எழுதிய முழுக் கவிதை இது தான்.

 

 

 

RESIGNATION

 

HENRY WADSWORTH LONGFELLOW

    Written in the autumn of 1848, after the death of his little daughter Fanny. There is a passage in the poet’s diary, under date of November 12, in which he says: “I feel very sad to-day. I miss very much my dear little Fanny. An inappeasable longing to see her comes over me at times, which I can hardly control.”
THERE is no flock, however watched and tended,
  But one dead lamb is there!
There is no fireside, howsoe’er defended,
  But has one vacant chair!
 
The air is full of farewells to the dying,         5
  And mournings for the dead;
The heart of Rachel, for her children crying,
  Will not be comforted!
 
Let us be patient! These severe afflictions
  Not from the ground arise,         10
But oftentimes celestial benedictions
  Assume this dark disguise.
 
We see but dimly through the mists and vapors;
  Amid these earthly damps
What seem to us but sad, funereal tapers         15
  May be heaven’s distant lamps.
 
There is no Death! What seems so is transition;
  This life of mortal breath
Is but a suburb of the life elysian,
  Whose portal we call Death.         20
 
She is not dead,—the child of our affection,—
  But gone unto that school
Where she no longer needs our poor protection,
  And Christ himself doth rule.
 
In that great cloister’s stillness and seclusion,         25
  By guardian angels led,
Safe from temptation, safe from sin’s pollution,
  She lives, whom we call dead.
 
Day after day we think what she is doing
  In those bright realms of air;         30
Year after year, her tender steps pursuing,
  Behold her grown more fair.
 
Thus do we walk with her, and keep unbroken
  The bond which nature gives,
Thinking that our remembrance, though unspoken,         35
  May reach her where she lives.
 
Not as a child shall we again behold her;
  For when with raptures wild
In our embraces we again enfold her,
  She will not be a child;         40
 
But a fair maiden, in her Father’s mansion,
  Clothed with celestial grace;
And beautiful with all the soul’s expansion
  Shall we behold her face.
 
And though at times impetuous with emotion         45
  And anguish long suppressed,
The swelling heart heaves moaning like the ocean,
  That cannot be at rest,—
 
We will be patient, and assuage the feeling
  We may not wholly stay;         50
By silence sanctifying, not concealing,
  The grief that must have way.
இந்தக் கவிதையைப் பற்றிப் பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஹென்றி ஃபோர்ட் குறிப்பிடும் வரிகள் இவை :

 

“Life cannot die. Longfellow was right – ‘There is no death’. It is not poetry, it is science. Life that can die would not be life…. I expect to go on and gather more experience. I expect to have opportunities to use my experience. I expect to retain this central cell, or whatever it is, that is now the core of my personality. I expect to find conditions of life further on, just as I found conditions of life here, and adapt myself to them just as I adapted myself to these….. We cannot stop”

Henry Ford in The Power that wins by Trine – Page 180-181

 

 

 

 

 

 

 

 

 

 

 

உயிர் வாழ்க்கை இறக்க முடியாதது. லாங்பெல்லோ, “ இறப்பு இல்லை” என்று சொன்ன போது அவர் சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். அது கவிதை அல்ல; விஞ்ஞானம். இறந்துபடும் உயிர் வாழ்க்கை ஒரு வாழ்க்கையாக இருக்க முடியாது. … தொடர்ந்து செல்ல விரும்புகிறேன்; அதிக அனுபவம் பெற விரும்புகிறேன். எனது அனுபவங்களைப் பயன்படுத்த வாய்ப்புக்களை நான் எதிர்பார்க்கிறேன். இந்த மைய செல்லை, அல்லது அது எதுவாகத் தான் இருக்கட்டுமே, எனது ஆளுமையின் அடிநாதத்தை நான் தக்க வைத்துக் கொள்ள விழைகிறேன். இங்கு நான் காணும் நிலைகளைப் போல உயிர்வாழ்க்கையின் நிலைகளை மேலும் காண விழைகிறேன்; இங்கு அதற்குத் தக என்னைப் பொருந்தச் செய்தது போல அவற்றிற்கு என்னை பொருந்தச் செய்வேன். நாம் நின்று விட முடியாது.” –

ட்ரைனின் ‘இன் தி பவர் தட் வின்ஸ்’ நூலில் ஹென்றி போர்ட்

பக்கம் 180-181

இதை விட அருமையாக யாரால் வாழ்க்கையின் தொடர்ச்சியான மறுபிறப்பு பற்றிச் சொல்ல முடியும்?

 

லாங்பெல்லோ உள்ளிட்ட உலகின் தலையாய கவிஞர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள் மறுபிறப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்களே.

 

ஹிந்து மதத்தின் மறுபிறப்புக் கொள்கை அறிவுக்கு உகந்தது என்பதையே இது காட்டுகிறது, இல்லையா!

புராணங்கள் புளுகு மூட்டைகளா? பொய் சொல்கின்றனவா? (Post No.5508)

Research Article Written by London Swaminathan

 
swami_48@yahoo.com
Date: 5 October 2018

 

Time uploaded in London –8-47 am (British Summer Time)

 

Post No. 5508

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

புராணங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது எப்படி?

 

புராணங்கள் பழையதா? வேதங்கள் பழையதா?

புராணங்களும் வேதங்களும் பழமையானவையே;

சான்று உளதா?

அதர்வண வேதத்தில் புராணங்கள் பற்றிப் பேசப்படுகிறது. வெளிநாட்டினரும் கூட கி.மு.850 என்று தேதி குறிக்கும் சதபத பிராமணத்தில் புராண இதிஹாசம் என்ற தொடர் வருகிறது. இதற்குப் பின்னர் ஏரளமான குறிப்புகள் உள.

Atharva Veda (25-6-4); (11-7-24)

Satapata Brahmana (11-5-6-8)

‘புரா’ என்றால் ‘முன்பு’ ‘முன் காலம்’ Once upon a time, Long long ago என்று பொருள். வேத காலத்திலேயே நாம் முன்னொரு காலத்தில் என்று கதை சொல்லி இருப்போமானால், நாம் தான் உலகிலேயே பழமையான இனம் என்பதற்கு வேறு சான்றே தேவை இல்லை.

 

‘புரா அபி நவம்’ என்ற விளக்கமும் உண்டு. பழைய கதைதான்; ஆயினும் என்றும் புதுக்கருக்கு அழையாத தங்கம் போல ஜ்வலிக்கிறது என்பதால் ‘புரா அபி நவம்’  — அதாவது முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இலங்குவது– என்று பொருள் சொல்லுவர். 18 புராணங்கள் பற்றி முன்னர் வெளியான கட்டுரைகளின் குறிப்பை அடியில் காண்க. புதிய விஷயங்களுக்கு வருவோம்

 

புராணங்கள் என்றால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் கட்டுக் கதைகள் என்ற எண்ணம் ஏற்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

 

 

1.வின்டர்நீட்ஸ் (Winternitz) என்ற இந்தியவியல் அறிஞர் சொன்னார்- ‘சூதர்’கள் எனபடும் கவி பாடும் மக்களிடையே இது போனதால் தரம் தாழ்ந்துவிட்டது. உயர்குடி மக்களிடையே இரு இருந்திருந்தால் இப்படி ஏற்பட்டிராது.

 

2.ஆதிகாலத்தில் வரலாற்றை வாய் மொழியாக, பாடல் வாயிலாக, பாமர மக்களுக்கு என படைக்கப்பட்டவை புராணங்கள். இதற்கு ஐந்து லட்சணங்கள் உண்டு. அதில் வரலாறும், பூகோளமும் அடக்கம். ஆயினும் இந்துக்கள் மஹா புத்திசாலிகள், ‘ரொம்ப அட்வான்ஸ்ட்’ (far advanced) என்பதால் அவ்வப்பொழுது புது வரலாற்றைப் (updating) புகுத்தினர். இப்படி உலகில் அவ்வப்பொழுது புது வரலாற்றை எழுதியோர் இந்துக்கள் மட்டுமே. வெளிநாட்டுப் பேதைகள் கடைசி தேதியைப் பார்த்துவிட்டு புராணங்கள் பிற்காலத்தியவை என்று முத்திரை குத்திவிட்டனர். பெயரிலேயே புராண (பழையவை) என்ற சொல் இருக்கையில் புதியவை என்று அரை வேக்காடுகள் செப்பியது ‘சூடான ஐஸ்க்ரீம்’ (Hot Icecream!!!) என்று சொல்லுவதற்கு இணையானது. குப்தர் காலம் வரை பிற்சேர்க்கை இருந்ததால் புராணங்கள் குப்தர் காலத்தியவை என்பது காமாலைக் கண்ணர்களின் வாதம்.

 

3.முக்கிய உபநிஷதங்கள் அனைத்தும் புத்தர் காலத்துக்கு முந்தையவை; அவைகளில் புத்தமத வாடையே கிடையாது; அப்படிப்பட்ட சாந்தோக்ய உபநிஷதத்தில் ஒரு அருமையான தகவல் உளது. நாரத முனிவர் தான் கற்ற விஷயங்களைப் பட்டியலிடுகையில் நான்கு வேதங்களுடன் புராணத்தையும் சொல்கிறார். ஆக நாரதருக்கும், உபநிஷதத்துக்கும் முந்தையவை புராணங்கள்.

 

ஆயினும் 18 புரானங்களும் வெவேறு காலத்தில் எழுத்து வடிவம் பெற்றமைக்கு அவைகளுக்கு உள்ளேயே சான்றுகள் தென்படுகின்றன.

 

4.ரோமஹர்ஷணரும்  அவரது புதல்வன் உக்ரஸ்ரவசும் பெரும்பாலான புராணங்க ளை யாத்தனர். இயற்பியலில் மூன்று வர்ணங்களை (primary colours சிவப்பு, மஞ்சள்,நீலம்) ஆதார வர்ணனங்கள் என்பர். அவைகளின் கலவையே ஏனைய வர்ணங்கள்; இது போல மூன்று புராணங்களே ஆதார அல்லது ஆதி புராணங்கள்- பிரம்ம,வாயு, மத்ஸ்ய புராணங்கள். ஏனையவை இவைகளிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்தவையே.

பிரம்ம புராணத்திலிருந்து  அக்னி புராணம் வந்தது.

 

மத்ஸ்ய புராணத்திலிருந்து பத்ம புராணம் வந்தது.

வாயு புராணத்திலிருந்து பிரஹ்மாண்ட புராணம் வந்தது.

 

 

பின்னால் வந்த 12 புராணங்களை ஒப்பிட்டு ஆராய்ந்தால் அவைகளிடையே பெரும்பாலான விஷயங்களில் ஒற்றுமை காணப்படுகிறது. அதாவது மேற்கூறிய மூன்று ஆதி புராணங்களைத் தழுவி நிற்கின்றன. முதல் மூவர்- முதல் மூன்று ஆழ்வார்கள் –என்று சொல்லலாம்.

 

5.அந்தக் காலத்தில் உலகில் எங்கும் நிகழாத மஹா அற்புதமான மஹா நாட்டை இந்துக்கள் நடத்தி வந்தனர். உலகில் வேறு எங்குமிலாத புதுமை அது. அதாவது 12 ஆண்டுகள் நீண்ட ஒரு மஹாநாட்டை நடுக்காட்டில் நடத்தினர்

ரிஷி,முனிவர்கள் மஹாநாடு கூட்டி புராணங்களை இயற்றுவர், பாடுவர், மாற்றுவர், எடிட் செய்வர், அப்டேட் செய்வர்; எழுதுவர்; இப்படி நைமிசாரண்யமென்ற ஒரு காட்டின் நடுவில் ரோமஹர்ஷணர் சொன்னதுதான் வாயு புராணம்.

 

விஷ்ணு புராணம்,பாகவத புராணம் போன்ற புகழ்மிகு புராணங்கள் பின்னால் எழுந்தவை.

 

 

  1. மக்களைக் கவர்வதற்காக மிகைப்பட்ட கூற்றுகளைப் புராணம் சொல்லுவோர் மொழிந்தனர். தசரதனுக்கு 60,000 மனைவியர், காசி மன்னன் அலார்கா 36, 000 ஆண்டுகள் ஆண்டான்; ராமன் 24,000 ஆண்டுகள் ஆண்டான் என்றெல்லாம் கதை விட்டனர். ஆனால் வேதங்களோ மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகளே என்று திரும்பத் திரும்ப பாடுகின்றன. தீர்க தமஸ் 100 ஆண்டு வாழ்ந்ததையும், மஹீதாஸ ஐதரேயர் 116 வயது வரை இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை. உண்மையில் ஆயிரம் என்பதில் மூன்று பூஜ்யங்களை நீக்கி விட வேண்டும்; ஏனெனில் இது போன்ற ‘கப்ஸா’க்கள் சுமேரியாவிலும் உண்டு; மூன்று தமிழ்ச்சங்கங்கள் வரலாற்றிலும் உண்டு. ஆதிகால மக்கள் இப்படி ஆயிரம் என்பதைச் சேர்த்துச் சொல்லுவர். மஹாபாஷ்யம் யாத்த பதஞ்சலி முனிவர் மட்டும் அறிவியல் முறையில் கணக்கிட்டு ராமன் 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார் என்று அறுதியிட்டுக் கூறினார்.

ஆக மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் புராணங்களுக்கு புளுகு மூட்டைகள் என்ற அவப்பெயரை சம்பாத்தித்துத் தந்தன.

7.புராணங்கள் மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தவை என்பதால் காலப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரே மன்னனின் தம்பிகள் அண்ணன்கள், தாயாதிகள் ஆண்டதையும் குழப்பிக்கொண்டு ஆண்டுகளை மாற்றி எழுதினர். பாண்டியர்களில் ஒரே நேரத்தில் ஆண்ட சஹோதரர்கள் உண்டு. சேர மன்னர்களில் இரண்டு வம்சங்கள் ஒரே நேரத்தில் ஆண்டதும் உண்டு. இவை பிற்காலத்தியவை; ஆகையால் குழப்பம் மிகக் குறைவு. பழங்கால விஷயங்களில் இது அதிகம்.

 

  1. ஒவ்வோரு புராணமும் அந்தந்த ஊர் தெய்வத்தைப் புகழ்வதற்காக, நம்மூர் ஸ்தல புராணங்கள் போல புதுக்கதைகளைஎட்டுக் கட்ட்டினர். சிலர் மன்னர்களை தெய்வங்கள் என்று புகழ்ந்தனர். சிலரை அவதார புருஷர் என்று காட்டினர். நமது காலத்திலேயே சத்ய சாய்பாபா, தான் ஷீரடி பாபாவின் மறு அவதாரம், தான் கடவுள், என்று சொன்னதை அறிவோம். இவ்வாறு ஒவ்வொரு புராணமும் பேசத் துவங்கியவுடன் குழப்பம் அதிகரித்தது.

 

  1. மர்மங்கள் ரஹஸியங்கள் அதிசயங்கள், அற்புதங்கள் இல்லாத விடத்திலும் அவைகளை அற்புதம் போலச் சித்தரித்தன. எடுத்துக்காட்டாக அகஸ்தியர் விந்திய மலை வழியாக முதல் சாலை (First Land Route) போட்டார். இதை ‘விந்திய கர்வ பங்கம்’ என்று பெரிது படுத்தினர். அகஸ்த்யர் பண்டிய மன்னர்களை அழைத்துக்கொண்டு கப்பற் படையுடன் தென் கிழக்காசியா சென்றார். அவர் வியட்நாம் இந்தோநேஷியா போனதை அகஸ்த்யர் ‘கடலைக் குடித்தார்’

என்று எழுதின. பகீரதன் மாபெரும் சிவில் எஞ்சினீயர். (Civil Engineer) அவன் கங்கை நதியை பாறைகளைப் புரட்டி திசை திருப்பினான். இதை கங்கையை 16, 000 ஆண்டு தவம் செஉ,,து பூமிக்குக் கொணர்ந்தான் என்றனர்; பரசுராமன் கேரள பூமியை பயிரிடும் பூமியாக மாற்றினான் அவன் கடலில் இருந்து பூமியை மீட்டதாக எழுதினர். பாண்டியன் வேல் விட்டவுடன் கடல் பின்வாங்கி ‘நிலம் தரு திருவில் பாண்டியன்’ ஆனது போல,பல கதைகளை எழுதினர் எஞ்சினீயரிங் விஷயங்கள், அதி அற்புத மனித சாதனைகளை  அதிசயங்களாக காட்டினர். அதாவது பழங்காலத்திலிப்படி மறைபொருளில் பேசுவது வழக்கம் அதைப் புரிந்து கொள்ளாமல் கடலைக் குடித்தார், காகம் மூலம் காவிரியை உண்டாக்கினார் என்றெல்லாம் புராணங்கள் செப்பத் துவங்கின.

  1. மிகப் பெரிய குழப்பம் ஒரே பெயரில் பலர் ஆண்டதால் ஏற்பட்டது. மூன்று தசரதர்கள், ரிக் வேதத்தில் வரும் பல மநுக்கள், சர்யாதி, யயாதி போன்ற பெயரில் பல காலங்களில் பல மன்னர்கள் இருந்ததைப் புரிந்துகொள்ளாமல் ‘இவர் அவரே’, ‘அவர் இவரே’ என்று பகர்ந்து குட்டை யைக் குழப்பினர். துருக்கி-இராக் பகுதியை ஒரு தசரதன் கி.மு 1400ல் ஆண்டதை குயூனிபார்ம் களிமண் கல்வெட்டுகள் காட்டுகின்றன. ராமாயண தசரதனை நாம் அறிவோம்; அசோக சக்ரவர்த்தியின் பேரன் பெயரும் தசரதனே. இப்படிப் பல பெயர்கள் வந்தவுடன் கதை சொல்லுவோர் அறியாமை காரணமாக புலம்பினர்; வைவஸ்வத மநு– ஒரு மன்னன். மநு சம்வரணி– வெறும் கிராமத் தலைவன்; இருவர் பெயரும் ரிக் வேதத்தில் வருகின்றன. மநு சம்வரணியின் மகன் நாபானேதிஷ்டா. அவனை யார் மகன் என்ன ஜாதி என்றெல்லாம் பிற்காலப் புராணங்கள் புதுக்கதைகளை புகன்றன. இது ஒரு எடுத்துக் காட்டுதான்; தமிழ் இலக்கியத்திலும் பல கபிலர்கள், பல அகஸ்தியர்கள் உள்ளனர். ஆறு அவ்வையார்கள் இருக்கின்றனர். நாம் இக்காலத்திலேயே குழம்பினால் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் குழப்பம் உண்டாவது இயல்பே.

 

வசிஷ்டர், அகஸ்தியர் போன்றோர், பல கதைகளில் வருவர். அது கோத்திரப் பெயர். இந்திரன் என்றால் ‘மன்னன்’ ‘தலைவன்’ என்று பொருள். அதை எல்லாம் ஒரே ஆள் தலையில் கட்டிக் கதை எழுதினர். எல்லா வசிட்டர்களுக்கும் அருந்ததியை மனைவியாக காட்டினர். கற்புள்ளா எல்லோரும் அருந்ததிதானே!! சங்கத் தமிழ் இலக்கியத்திலேயே மன்னர் மனைவிகளை அருந்ததி என்று சங்கப் புலவர்கள் ஆறு இடங்களில் பாடினர். ஆகப் பெயர்க் குழப்பம் மஹா குழப்பத்தில் முடிந்தது.

 

 

சூரியன், சந்திரன், இந்திரன் ஆகிய பெயர்கள் இன்று வரை தென்கிழக்காசியா முழுதும், காஷ்மீர் வரை கண்டி வரையும் ஸம்ஸ்க்ருத்தில் உள்ளபடியே (தமிழர்களாலும் ) பயன் படுத்தப் படுகின்றன. அக்காலத்திலும் இப்படி உபயோகித்தனர். ஆனால் பௌராணிகர்கள், சுவை ஊட்டுவதற்காக, உண்மையான சந்திரனும் சூரியனும் மனிதனுடன் உறவாடியதாகப் பேசிவிட்டனர். இன்று ராஜேந்திரன் பாஸ்கரன் (சூரியன்) என்றால் நம் அலுவலக்த்தில் வேலை பார்க்கும் சக ஊழியர் என்று அறிவோம்; அந்தக் காலத்தில் உண்மையான சூரியன் வேத கால இந்திரன் என்றெல்லாம் எழுதிவிட்டனர் புராணங்களில். வேதங்களை ஆராய்ந்த முப்பது வெளி நாட்டு அறிஞர்களும் இன்று வரை ரிக் வேதம் குறிப்பிடுவது ஒரு இந்திரனையா, ‘ஒரு’ கடவுளையா, ‘ஒரு’ இயற்கைச் சக்தியையா என்று சொல்லவில்லை; சொல்லவும் முடியாது!

புராணங்கள் பெரிய கலைக் களஞ்சியங்கள்; உலகிலேயே மாபெரும் இலக்கியம்; பல லட்சம் பாக்களை   கொண்டவை; வராலாறும் பூகோளமும் பாடுபவை ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம். தாவரவியல் அறிவியல்,விலங்கியல் , வறட்சி, பூகம்பம் முதலியன பற்றி அவற்றில் உள. பல லட்சம் பாக்களை  ஆராய நமக்கு ஒரு 100 ஆண்டு ஆயுள்  போதாதே! என்ன செய்வது!

 

  1. புராணங்கள்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/புராணங்கள்

Posts about புராணங்கள் written by Tamil and Vedas

  1. 18 புராணங்கள்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/18…

Posts about 18 புராணங்கள் written by Tamil and Vedas

 

 

–சுபம்–

 

அற்புத தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி! (Post No.5504)

WRITTEN BY S NAGARAJAN

Date: 4 October 2018

 

Time uploaded in London – 5-52 AM (British Summer Time)

 

Post No. 5504

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

அற்புத தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி!

 

.நாகராஜன்

நம்முடைய காலத்திலேயே வாழ்ந்து நமக்கு சுருக்கமான வார்த்தைகளில் பெரிய அரிய உண்மைகளை விண்டுரைத்தவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜே.கிருஷ்ணமூர்த்தி.

பெருத்த சிந்தனையாளர். தத்துவ ஞானி. ஆன்மீகத்தை அள்ளித் தந்தவர். மனம், தியானம், உலகியல் வாழ்வு, சமூக மாற்றம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை எளிமையாக விளக்கியவர்.

அவரது சொற்களிலேயே அவரது தத்துவம் இது தான்:

உன்னை மாற்றிக் கொள் (CHANGE YOURSELF)

நீயே தான் உலகு (YOU ARE THE WORLD)

1895ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி மதனபள்ளியில் தெலுங்கு அந்தணர் குடும்பத்தில் பிறந்த ஜே.கே. தியாஸபி இயக்கத்தில் ஈடுபட்டு பெரும் புகழ் பெற்றார். அவரது உயரிய ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்பதே ஒரு அனுபவம் என்ற நிலையில் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் அவரது உரைகளைக் கேட்டு இன்புற்றனர்; பயனுற்றனர்.

1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் நாள் அவர் மறைந்தார். அவரது வாழ்வு திடுக்கிடும் திருப்பங்கள் நிரம்பிய ஒன்று. பரபரப்பூட்டும் சம்பவங்கள் அடங்கியது. வியப்பூட்டும் உயரிய தியாகங்கள் நிறைந்தது.

90 வயது வாழ்ந்த அவரது நீண்ட வாழ்வில் அவர் எழுதிய நூல்கள் பல. ஆற்றிய உரைகள் பல. அவரது அனைத்துச் சொற்பொழிவுகள், எழுத்துக்கள் 17 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 1933 முதல் 1967 முடிய உள்ள காலகட்டத்தில் அடங்குபவை இவை.

இது 50 தொகுதிகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17 தொகுதிகளின் விவரம் இதோ:-

  • Volume 1 (1933–1934): The Art of Listening(1991).
  • Volume 2 (1934–1935): What Is the Right Action?(1991)
  • Volume 3 (1936–1944): The Mirror of Relationship(1991).
  • Volume 4 (1945–1948): The Observer Is the Observed(1991)
  • Volume 5 (1948–1949): Choiceless Awareness(1991)
  • Volume 6 (1949–1952): The Origin of Conflict(1991).]
  • Volume 7 (1952–1953): Tradition and Creativity(1991).
  • Volume 8 (1953–1955): What Are You seeking?(1991).
  • Volume 9 (1955–1956): The Answer is in the Problem(1991).
  • Volume 10 (1956–1957): A Light to Yourself(1991).[
  • Volume 11 (1958–1960): Crisis in Consciousness(1991).
  • Volume 12 (1961): There is No Thinker, Only Thought(1991).
  • Volume 13 (1962–1963): A Psychological Revolution(1992).
  • Volume 14 (1963–1964): The New Mind(1992).
  • Volume 15 (1964–1965): The Dignity of Living(1992).
  • Volume 16 (1965–1966): The Beauty of Death(1992)
  • Volume 17 (1966–1967): Perennial Questions(1992)

இந்தப் பதினேழு தொகுதிகளும் சுமார் 5500 பக்கங்கள் கொண்டவை. ஜே.கே எழுதியவை 2412 நூல்களில் அடங்கும் என்றும் சுமார் 4580 வெளியீடுகளைக் கொண்டது என்றும் இவை 53 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிகிறது. 46822 நூலகங்களில் இவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அவரது படைப்புகள் சுமார் இரண்டு கோடி வார்த்தைகளை உள்ளடக்கியது. 75 புத்தகங்கள், 700 ஆடியோகேஸட், 1200 வீடியோ கேஸட் உள்ளிட்டவை இப்போது கிடைக்கின்றன.  2010இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின் படி 22 மொழிகளில் இவரது படைப்புகள் சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இப்போது நிகழ்நிலைஆன் லைன் –  மூலம் படிக்கவும் இவரது நூல்கள் கிடைக்கின்றன.

இவரது சிந்தனையால் கவரப்பட்ட அறிஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் மிக நீண்டது. இடம் கருதி சிலரை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

George Bernard Shaw, Henry Miller, Anne Morrow Lindbergh, Alan Ginsburg, Federico Fellini, Khalil Gibran, Pandit Jawaharlal Nehru, Indira Gandhi, Erick Fromm, Prof. David Bohm, Charlie Chaplin, Greta Garbo, John Kenneth Galbraith, Svetlana (Stalin) Peters, Dalai Lama.

இவரது உரையைக் கேட்ட அல்டஸ் ஹக்ஸ்லி,புத்தரின் உரையைக் கேட்பது போல இருக்கிறது. அப்படிப்பட்ட வலிமை, நுட்பம், அதிகாரபூர்வமான கருத்துக்கள் என்றார்.

ஜே.கேயின் கருத்துக்கள் உண்மை ஒளியைக் காண விழைவோருக்கான ஒரு அபூர்வ பொக்கிஷமாகும்.

படிப்போம்; உயர்வோம்!

***

 

 

 

வார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்! மநு நீதி நூல்- PART 28 (Post No.5502)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 3 October 2018

 

Time uploaded in London –8-50 am  (British Summer Time)

 

Post No. 5502

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மநு நீதி நூல்- PART 28

MANAVA DHARMA SASTRA FOURTH CHAPTER CONTINUED……………..

வார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்! (Post No.5502)

மநு நீதி நூலின் நாலாவது அத்தியாயத்திலுள்ள சுவையான விஷயங்களை முதலில் பகிர்வேன்; முதல் 26 கட்டுரைகளில் நிறைய அதிசயங்களைக் கண்டோம்.

 

பள்ளிக்கூட மாணவர்களுக்கு வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்று கிறிஸ்தவ நாடுகள் அமல் படுத்திய வழக்கத்தை இன்று கடைப் பிடிக்கிறோம். ஆனால் கிறிஸ்துவுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழந்த, ரிக் வேதம் புகழும், ஸரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடும், மநு தர்ம சாஸ்திரமோ மாதத்துக்கு குறைந்தது ஆறு நாட்கள் விடுமுறையை அமல் படுத்தியது. சில மாதங்களில் ஆறுக்கும் மேலான நாட்கள் விடுமுறை. அதிசயத்திலும் மஹா அதிசயம்– 4000 ஆண்டுகளாக இன்று வரை வேத பாடசாலைகள் இதைப் பின்பற்றி வருகின்றன.

 

மாதத்தில் இரண்டு அஷ்டமிக்கள்

மாதத்தில் இரண்டு சதுர்தஸிக்கள்

மாதத்தில் பௌர்ணமி, அமாவாஸை

 

முதலியன வேதம்படிக்க விலக்கப்பட்ட நாட்கள்.

 

இந்தப் பகுதியில் மநு ஒரு விஞ்ஞானி என்பதையும் காட்டுகிறார். அவர் பெரிய ஸவுண்ட் (SOUND ENGINEER) எஞ்சினீயர். இடி இடித்தால், கன மழை பெய்தால், பூகம்பம் ஏற்பட்டால், விண்கற்கள் விழுந்தால் 24 மணி நேரம் பள்ளி விடுமுறை (SLOKAS 103, 104, 105). ஆதாவது வேத அத்தியயனம் கிடையாது.

 

இன்று லண்டன், நியூயார்க் முதலிய இடங்களில் இருந்து வரும் வானவியல் (ASTRONOMY MAGAZINES) பத்திரிக்கையில் மாதம் தோறும் எந்த நாள் இரவில் வானத்தின் எந்தப்பகுதியில் விண்கற்கள் வீழ்ச்சி (METEORITE SHOWERS) வரும் என்று அட்டவணை தருகிறார்கள். பூமியில் ஒவ்வொரு நிமிடமும் டன் கணக்கில் விண்கற்கள் விழுகின்றன. அவற்றில் 99 சதவிகிதம் காற்று மண்டலத்திலேயே பஸ்மமாகி (சாம்பல்) விடும்.சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பூகம்பம், விண்கல் வீழ்ச்சி முதலியவை குறித்துப் பேசியிருப்பது, அதுவும் சட்டப் புத்தகத்தில் பேசியிருப்பது, ஆச்சர்யமான விஷயம். அவருக்குத் தெரியாத விஷயமே இல்லை போலும்.

அது மட்டுமல்ல; பிராஹ்மணன், பாம்பு, க்ஷத்ரியனைப் (SLOKA 135, 136) பகைக்காதே- உன்னை அடியோடு அழித்து விடுவர் என்று எச்சரிக்கிறார்.

நல்லது செய்பவனுக்கு கெடுதியே வராது என்று (SLOKA 146) கண்ண பிரான் பகவத் கீதையில் (6-40) மொழிந்ததை இவரும் செப்புகிறார்.

 

சில மிருகங்கள் (SLOKA 113)  குறுக்கே போனால் வேத அத்தியனம் கிடையாது என்றும் உரைக்கிறார். பூனை, பாம்பு, தவளை உள்பட. இது அந்தக் கால (மூட) நம்பிக்கை போலும்.

 

சில மிருகங்களின் ஒலி கேட்டாலும் வேதப் படிப்பு ‘ஸ்டாப்’!

 

சுடுகாடு, தீட்டு விஷயங்களைச் சொல்லிவிட்டு, அந்தக் காலங்களில் வேத படிக்காதே என்று ஆணை இடுகிறார்

 

இன்றைய பகுதியில் எந்தக்  காலங்களில் எப்படி வேதம் படிக்க வேண்டும் என்று இயம்புகிறார்.

 

அது மட்டுமல்ல மாமிசம் (SLOKA 131) சாப்பிட்டால் வேதம் படிக்காதே என்பார். காரணம்- அந்தக் காலத்தில் மூன்று ஜாதிகள் வேதம் பயின்றன.

வாஹன சவாரியின் (SLOKA 120) போது வேதம் சொல்லக் கூடாது என்று சொன்னவர் குதிரை, ஒட்டக சவாரியுடன் கடற் பயணத்தையும் குறிப்பிடுகிறார். ஆனால் பிராஹ்மணர்கள் வெளி நாடு செல்ல மநு தடை போட்டதையும், தமிழ்ப் பெண்கள் வெளி நாடு செல்ல தொல்காப்பியன் தடை போட்டதையும் முன்னரே எழுதியுள்ளேன். ஆகவே மநு சொல்லுவது மூன்று ஜாதியினருக்கு என்பது என் ஊகம்.

 

வேதம் என்பது ஒலி அடிப்படையில் அமைந்த அறிவியல் நூல். ஆகையால் அவர் பல சப்தங்கள், அதிர்வுகள் ஏற்படுகையில் வேதத்தைப் பயிலாதே என்று சொல்லுகிறார்.

 

ஒரு (SLOKA 121) ஸ்லோகத்தில் ரிக், யஜூர், சாம வேதம் ஆகிய மூன்றும் முறையே தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள் (இறந்த முன்னோர்) ஆகியோருக்கானவை என்ற புதுக் கருத்தை  முன்வைக்கிறார்.

ஸ்லோகம் 138 மிகவும் பிரஸித்தமான ஸ்லோகம்

உண்மையச் சொல்; இனிமயானதை மட்டும் சொல்; உண்மையே ஆனாலும் கசப்பானதைச் சொல்லாதே

 

இப்படிப் பல சுவையான விஷயங்களை கீழே உள்ள ஸ்லோகங்களில் காண்க. நாலாவது அத்தியாயத்திலுள்ள வேறு அதிசயங்களை அடுத்த கட்டுரையில் நோக்குவோம்

 

கீழேயுள்ள இணைப்புகளைக் காண்க—

 

 

 

 

 

 

–subham-

ஹிந்து காந்திஜி! – 2 (Post No.5496)

WRITTEN BY S NAGARAJAN

Date: 2 October 2018

 

Time uploaded in London – 6-08 AM (British Summer Time)

 

Post No. 5496

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்துத்வம் வாழ வழி காட்டியவர்

சென்ற ஆண்டு இதே நாளில் ஹிந்து காந்திஜி – 1 வெளியாயிற்று. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி திருநாளில் அடுத்த கட்டுரை மலர்கிறது.

ஹிந்து காந்திஜி! – 2

ச.நாகராஜன்

1

புனிதமான தினம் அக்டோபர் இரண்டாம் தேதி. இந்தியாவிற்கு மட்டுமல்ல இந்தப் புனித தினம். மனித குலத்திற்கே புனிதமான தினம் காந்திஜியின் ஜென்ம தினம்.

அதில் ஏராளமான சிந்தனைகள் மலர்வதில் வியப்பில்லை. ஆனால் அனைவரும் வாழ வேண்டும். சர்வே ஜனா சுகினோ பவந்து என்ற ஹிந்து மதத்தின் ஆணி வேரான கொள்கையை கைக் கொண்டு அதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த மகான் காந்திஜி.

ஹிந்து மதம் பற்றிய தனது கருத்துக்களை வெளியிட அவர் ஒருபோதும் தயங்கியதில்லை.

நையாண்டி செய்து வரும் கடிதங்கள், கேலியாக கேள்வி கேட்கும் கடிதங்கள். உண்மை அறியத் துடிக்கும் கடிதங்கள், மதமாற்றம் செய்யத் துடிக்கும் விஷமிகளின் கடிதங்கள், இந்தியாவை மத அடிப்படையில் துண்டாட நினைக்கும் துரோகிகளின் கடிதங்கள், ஒன்றும் அறியா அப்பாவிகளின் கடிதங்கள் – இதில் எதையும் அவர் துச்சமாகத் தூர எறிந்ததில்லை. அவற்றிற்குத் தக்க பதிலை தொடர்ந்து வழங்கியே வந்தார்.

அருமையான கலைக் களஞ்சியமாக அவர்து பதில்களும், கட்டுரைகளும் திகழ்கின்றன. இவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். ஹிந்து காந்திஜியைத் தரிசித்து மகிழ்வோம்.

 

2

 

சார்லஸ் ப்ராட்லா பிரிட்டனைச் சேர்ந்த நாத்திகவாதி.(Charles Bradlaugh Birth 26-9-1833 death 30-1-1891). சமூக சீர்திருத்தவாதி.

ஒரு சமயம் இவர் பிரிட்டிஷ் பார்லிமெண்டின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வொரு உறுப்பினரும் ‘பைபிள் சாட்சியாக உண்மையாகத் தொண்டு செய்கிறேன்என்று பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பின்னரே அவர் சபையில் அமர முடியும். இந்த சம்பிரதாயத்தைப் பின்பற்ற முடியாது என்று கூறிய ப்ராட்லா வழக்கு ஒன்றைத் தொடுத்தார்; வெற்றியும் பெற்றார். ஆகவே பைபிளின் பேரால் பிரமாணம் எடுக்காமலேயே சபை உறுப்பினர் ஆனார்.

இவர் 1891ஆம் ஆண்டு மரணமடைந்த போது அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி – ஆம், மஹாத்மாவே தான். அப்போது அவருக்கு வயது 21!

பைபிளை ஏற்க மறுத்த ப்ராட்லா அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்கவில்லை. இந்த ப்ராட்லாவைக் குறிப்பிட்டு காந்திஜிக்கு வந்த கடிதம் ஒன்றைப் பார்ப்போம்.

 

எஸ்.டி.நட்கர்னி என்பவர் வட கானராவைச் சேர்ந்த் கார்வார் நகரைச் சேர்ந்தவர். அவர் 1925ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியிட்டு ஒரு கடிதத்தை காந்திஜியின் எங் இந்தியா பத்திரிகைக்கு அனுப்பினார். நீண்ட அந்தக் கடித்தத்தில் அவர் ப்ராட்லாவைச் சுட்டிக் காட்டி கீழ்க்கண்டவாறு எழுதிய பகுதியை மட்டும் இங்கு பார்ப்போம்:

 

“கடவுளை மறுக்கும் ப்ராட்லாவைப் பற்றி தாங்கள் குறிப்பிடும் போது அவருக்குத் தெரிந்த வகையில் உள்ள கடவுளை அவர் மறுப்பதாகக் கூறுகிறீர்கள். நாம் எல்லோரும் கடவுளைப் பற்றிக் கூறும் விளக்கங்கள் வெவ்வேறு விதமாக இருப்பினும், அவ்விளக்கங்களுக்கு அடிப்படையில் தவறாத ஏதோ ஒரே விதமான கருத்து இருப்பதாக நீங்கள் கூறுகின்றீர்கள். கடவுளை ப்ராட்லா மறுப்பதிலும் இந்தக் கருத்து அடங்கி இருக்கிறதா? ப்ராட்லா அறிஞர்; இவ்விஷயங்களை ஊன்றிக் கவனிக்கும் சக்தியும் அவருக்குப் போதிய அளவு உண்டு, அப்படியிருக்க, அவர் கடவுள் இருப்பதை மறுக்கும்படி செய்வது எது?

 

இதற்கு காந்திஜி 30-4-1925 தேதியிட்ட எங் இந்தியா இதழில் இப்படி பதில் அளித்தார்:

 

ஸ்ரீ நட்கர்னியின் சாமர்த்தியமான கடிதத்திற்கு இடம் கொடுக்க நான் மறுக்க முடியாது. எனினும், ஜைன மதமோ அல்லது பௌத்த மதமோ நாத்திக மதங்கள் அல்ல என்ற எனது அபிப்ராயத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். கடவுளைப் பற்றிய கீழ்க்கண்ட விளக்கங்களை நான் ஸ்ரீ நட்கர்னிக்கு எடுத்துக் கூறுகிறேன். கர்மாவின் மொத்த சாரமே கடவுள் ஆகும். நேர்மையானதைச் செய்யும்படி மனிதனை வற்புறுத்துவது கடவுளே; உயிர் வாழும் அனைத்தின் நிறைவே கடவுள். விதியன் கைப்பொம்மையாக மனிதனை ஆட்டி வைப்பதும் கடவுள் தான். தமக்கு ஏற்பட்ட சோதனைகளையெல்லாம் தாங்கும் சக்தியைப் ப்ராட்லாவுக்கு அளித்தது கடவுளே; நாத்திகவாதிக்கு மறுப்பாக இருப்பதும் கடவுளே தான்

 

பிரார்த்தனையின் அர்த்தமும் அவசியமும்  பற்றி காந்திஜி உத்தியோக மந்திரைச் சேர்ந்த பிரார்த்தனை மைதானத்தில் ஆற்றிய சொற்பொழிவு 23-1-1930 எங் இந்தியா இதழில் வெளியானது. அதில் ப்ராட்லாவைப் பற்றி காந்திஜி குறிப்பிட்டார்.

 

அந்தப் பகுதி மட்டும் இங்கு தரப்படுகிறது:

முதல்தரமான சந்தேகவாதியோ அல்லது நாத்திகரோ கூட ஒரு தார்மிகக் கொள்கையின் அவசியத்தை ஒப்புக் கொள்ளுகிறார்கள். அக்கொள்கையை அனுசரிப்பதே நல்லது என்றும் அதை அனுசரிக்காமல் இருப்பது தீங்கு என்றும் கருதுகிறார்கள். ப்ராட்லாவின் நாத்திகம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் அவர் கூட, உண்மையைப் பேச வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தினார். உண்மையைப் பேசியதற்காக மிகுந்த துன்பத்திற்குள்ளானார். அதனால் தான், மதத்தை மறுக்கும் ஒரு மனிதன் கூட மதமின்றி வாழ்வதில்லை, வாழ முடியாது என்று நான் கூறியுள்ளேன்.

 

 

ப்ராட்லா அறிந்த மதம் கிறிஸ்தவமே. அதையே அவர் எதிர்த்தார். இதனால், அவர் கிறிஸ்தவ பாதிரிகளின் கடும் எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது; மிகுந்த துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருந்தது. ஆனால் அப்படிப்பட்ட நாத்திகவாதியும் கூட உண்மையைப் பேச வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தியதை காந்திஜி பாராட்டத் தவறவில்லை.

 

ஹிந்து மதக் கொள்கைகளையும் அது கூறும் பிரார்த்தனை, சத்தியம் உரைத்தல் உள்ளிட்ட அனைத்தையும் ஆயிரக்கணக்கான முறை வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் மகாத்மா எடுத்துரைத்து வந்தார்.

 

30-1-1891 அன்று மறைந்த ப்ராட்லாவின் ஈமச்சடங்கில் கலந்து கொண்ட மகாத்மா 57 வருடங்களுக்குப் பிறகு அதே ஜனவரி 30ஆம் தேதி சுடப்பட்டு இறந்தது ஒரு ஆச்சரியகரமான தற்செயல் ஒற்றுமை தானோ?!

 

picture by Krishna srinivasan, SFC, USA

3

காந்திஜியை மதமாற்றம் செய்வதற்காகவும் குறைந்த பட்சம் வாதத்தில் வெல்வதற்காகவும் வந்த பாதிரிகள் எத்தனையோ பேர்!

அத்தனை பேரிடமும் தான் ஒரு ஹிந்து என்பதை ஆணித்தரமாக அடித்து உரைத்ததோடு ஹிந்து கொள்கைகளான விக்கிரக வழிபாடு, மறு ஜென்மம் போன்றவற்றை தீவிரமாக ஆதரித்துப் பேசி அதன் உண்மை விளக்கங்களையும் அவர் முன் வைத்தார்.

 

13-3-1937 தேதியிட்ட ஹரிஜன் இதழில் வெளியாகியுள்ள  விக்கிரக வழிபாடு பற்றிய உரையாடல் ஒன்றைப் பார்ப்போம்.

ஒரு கத்தோலிக்க பாதிரியார் காந்திஜியிடம் வந்தார். அவருக்கும் காந்திஜிக்கும் நடந்த உரையாடல் இது:

 

காந்திஜி : ஏதாவதொரு விதத்தில் விக்கிரக வழிபாட்டை அனுசரிக்காமல் இருப்பது முடியாத காரியம். ஒரு மசூதியை ஆண்டவனின் இருப்பிடம் என்று முஸ்லிம் கூறுகிறார்; மசூதியைப் பாதுகாப்பதற்காகத் தமது உயிரையே கொடுக்கிறார். அவர் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? ஒரு கிறிஸ்தவர் சர்ச்சுக்கு ஏன் போகிறார்? அவர் பிரமாணம் செய்ய வேண்டியிருக்கும் போது பைபிளை வைத்துக் கொண்டு ஏன் பிரமாணம் செய்கிறார்? அவ்விதம் செய்வதை நான் ஆட்சேபிக்கவில்லை. மசூதிகளும், சமாதிகளும் கட்டுவதற்காக ஏராளமான செல்வத்தைக் கொடுப்பது விக்கிரக வழிபாடு அல்லவா? கன்னிமேரியும், மற்ற கிறிஸ்தவ மகான்களும் கல்லிலோ அல்லது ஓவியத்திலோ, திரையிலோ அல்லது கண்ணாடியிலோ உள்ள கற்பனை உருவங்களே அல்லவா? அந்த உருவங்களின் முன் ரோமன் கத்தோலிக்கர்கள் முழந்தாளிட்டுப் பணிவது விக்கிரக வழிபாடு அல்லவா?

 

 

கத்தோலிக்கப் பாதிரியார்: நான் என் தாயாரின் புகைப்படத்திற்கு மரியாதையாக அதை வணங்குகிறேன். ஆனால் அதை பூஜிப்பதில்லை.நான் கிறிஸ்தவ மகான்களையும் பூஜிப்பதில்லை. நான் கடவுளை வழிபடும்போது, அவர் சிருஷ்டி கர்த்தா, அவர் எந்த மானிடரையும் காட்டிலும் மேலானவர் என்ற உண்மையை ஒப்புக் கொள்ளுகிறேன்.

 

காந்திஜி : அது போலவே, நாங்கள் வழிபடுவது கல்லை அல்ல; கல்லிலும் உலோகத்திலும் செய்யப்பட்டுள்ள விக்கிரகங்களிலிருக்கும் கடவுளையே வணங்குகிறோம்.

பாதிரியார்: கிராமவாசிகள் கற்களையே கடவுள் என்று பூஜிக்கிறார்கள்.

 

காந்திஜி : இல்லை. அவர்கள் கடவுளை மாத்திரமே பூஜிக்கிறார்கள். கடவுளுக்குக் குறைந்த எதையும் அவர்கள் பூஜிப்பது இல்லை. கன்னி மேரியின் முன்னிலையில் முழந்தாளிட்டு வணங்கும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர் மூலமாக கடவுளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றே நீங்கள் கோருகிறீர்கள். அதுபோலவே ஒரு ஹிந்து, கல் சிலையின் மூலம் கடவுளுடன் தொடர்பு கொள்ள முற்படுகிறார். முஸ்லீம்கள் மசூதிக்குள் செல்லும் போது  பயபக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் செல்லுகிறார்கள். உலகம் முழுவதுமே ஏன் ஒரு மசூதியாக இருக்கக் கூடாது? அற்புதமான பரந்த ஆகாயம் ஏன் மசூதியின் விதானமாக இருக்கக் கூடாது? எனினும். நான் முஸ்லீம்களை அறிந்து கொண்டுள்ளேன்; அவர்கள் விஷயத்தில் அனுதாபம் கொள்ளுகிறேன். கடவுளை வணங்குவதற்காக ஒரு மசூதிக்குச் செல்லுவது அவர்களுடைய வழியாகும். கடவுளை வணங்க, ஹிந்துக்கள் அவர்களுடைய சொந்த வழியைப் பின்பற்றுகிறார்கள். நாம் கடவுளை அணுகும் வழிகள் தான் வேறானவையேயன்றி, கடவுள் வெவ்வேறானவர் அல்ல.

 

பாதிரியார்: கடவுள் தங்களுக்கு உண்மையான வழியைக் காட்டியதாக கத்தோலிக்கர்கள் நம்புகின்றனர்.

 

காந்திஜி: கடவுளின் சித்தம், பைபிள் என்ற நூலில் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மற்ற நூல்களில் குறிப்பிடப்படவில்லை என்றும் நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? கடவுளின் சக்தியை நீங்கள் ஏன் ஓர் எல்லைக்கு உட்படுத்துகிறீர்கள்?

 

பாதிரியார் : ஆனால், கடவுளிடமிருந்து நமக்குத் தகவல் கிடைத்தது என்பதை, மனிதர் செய்ய முடியாத அற்புதமான செயல்களின் மூலம் ஏசுநாதர் நிரூபித்தாரே.

 

காந்திஜி : முகமது நபியும் கூட அவ்விதமே தான் கூறுகிறார். கிறிஸ்தவரின் சாட்சியத்தை நீங்கள் ஒப்புக் கொண்டால், முஸ்லீமின் சாட்சியத்தையும் ஹிந்துவின் சாட்சியத்தையும் கூட ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

 

பாதிரியார் : அசாதாரணமான அற்புதங்கள் எதுவும் தம்மால் செய்ய முடியாதென்றும் முகமது நபி கூறினார்.

 

காந்திஜி : இல்லை; கடவுள் இருப்பதை அசாதாரண அற்புதங்களின் மூலம் நிரூபிக்க அவர் விரும்பவில்லை. எனினும், கடவுளிடமிருந்து தமக்குச் செய்திகள் வருவதாக அவர் கூறிக் கொண்டார்.

 

 

4

ஹிந்துத்வம் பற்றிய காந்திஜியின் கட்டுரைகள் ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். போலி கிறிஸ்தவ பாதிரிகள் மற்றும் போலி இஸ்லாமியர்களின் வாதங்களை அவர் கிழி கிழி என்று கிழித்துத் தூக்கி எறிகிறார். தைரியமாக. மிக தைரியமாக!

 

அதிர்ஷ்டவசமாக அவரது எழுத்துக்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றை வரிவரியாகப் படித்தால் ஹிந்து மதத்தின் பெருமையை உணரலாம்.

 

நாத்திகவாதியான ப்ராட்லாவுக்கும் அவரால் பதில் கூற முடிகிறது. மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரிகளுக்கும் அவரால் பதில் கூற முடிகிறது.

 

அது தான் ஹிந்து காந்திஜியின் மேதைத்தனம். ஹிந்துத்வத்தில் ஊறி புடம் போட்ட தங்கமே தான் ஹிந்து காந்திஜி!

***