க்ளோனிங் cloning- அதிசய ஹிந்து விஞ்ஞானம்! (Post No.5198)

Research Article Written by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 12-59  (British Summer Time)

 

Post No. 5198

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆண்களும் குழந்தை பெறலாம் என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். மஹாபாரத்திலுள்ள அதிசயக் குழந்தை, சோதனைக் குழாய் குழந்தை போன்ற பத்து விஷயங்களை (26-3-2014) அதில் விளக்கி இரண்டு கட்டுரைகளாக (கீழே இணைப்புகளைக் காட்டியுள்ளேன்) தந்தேன்.

இப்போது மேலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சுவையான செய்திகள்

 

‘க்ளோனிங்’ CLONING என்றால் என்ன?

மனிதனை அல்லது உயிரினங்களை அச்சு எடுப்பது ஆகும். அதாவது ஒரு உயிர் அணுவிலிருந்து அந்த உயிரினத்தையே உருவாக்கலாம். இப்படிச் சில ஆடுகளை உருவாக்கி உலகையே வியக்கவைத்தனர் விஞ்ஞானிகள்

உடனே அட! ஆயிரம் காந்திகளை அல்லது ஆயிரம் ஆதிசங்கரர்களை உருவாக்கலாம்; அவர்களுடைய ஒரு உயிருள்ள செல் கிடைத்தால் போதும் என்றனர். ஐய்யயோ, வேண்டாமப் பா; ஆயிரம் ஹிட்லர்களையும் எவனாவது ஒருவன் உருவாக்கி  விடுவான்; இத்தைகைய ஆராய்ச்சிகளுக்கு கட்டு திட்டங்கள் வேண்டும், வரம்பு முறைகள் வேண்டும் என்றெல்லாம் பத்திரிக்கைகளும் டெலிவிஷன்களும் அலறின; நிற்க

 

‘ஸப்ஜெக்டு’க்கு வருவோம்!

இந்து மத இதிஹாச புராணங்களில் பல அதிசய விஷயங்கள் உள்ளன. விஞ்ஞானம் வளர, வளர அவைகள் எல்லாம் விளங்குகின்றன.

 

விஷ்ணுபுராணத்தில் ஒரு கதை வருகிறது:

நிமி என்ற அரசன் விதேக நாட்டை ஆண்டு வந்தான் (தற்போதைய பீஹார்- தெற்கு நேபாளம்); அவன் ஒரு 1000 ஆண்டு யாகத்துக்குத் திட்டமிட்டான்; குல குருவான வசிஷ்டரை அ ணுகி, ‘ஐயனே, அருள் புரியும் என்றான். அவர் சொன்னார்: மன்னர் மன்னா! நான் இந்திரனிடம் ஏற்கனவே ‘அட்வான்ஸ்’ வாங்கிவிட்டேன்; அவன் என்னை 500 ஆண்டு யாகத்துக்கு ‘புக்’ பண்ணிவிட்டான்; அதனால் ஒன்றும் குறைந்து போகாது; முடித்தவுடன் ஓடோடி வருகிறேன்’.

நிமி இதைக் கேட்டு விட்டு ஒன்றும் பதில் சொல்லவில்லை. வசிஷ்டர் நினைத்தார் ‘மௌனம் சம்மதம்’ என்பது பழமொழி. ஆகியால் வந்துவிடுவோம் என்று சென்றுவிட்டார்.

 

 

ஆனால் நிமியோ வேறு ஒரு ரிஷியை அழைத்து யாகத்தை நடாத்திவிட்டார். அந்த ரிஷியின் பெயர் கௌதமர்.

 

ஆசையோடு ஓடி வந்த வசிஷ்டர் அரண்மனையின் கதவைத் தட்டினார்; மன்னர் உறங்கிக் கொண்டு இருப்பதாக வாயில் காப்போன் செப்பினான்.

வந்ததே கோபம், வசிட்டனுக்கு.

பிடி சாபம்! நிமி, நீ இன்று முதல் நிமிர முடியாது; நீ விதேகன் (வி+தேஹ) ஆகக்கடவது! அதாவது உடல் அற்றவன் ஆவாய்.

 

மன்னன் எழுந்தான். ஐயா வசிட்டரே! தூங்கும் போது ஒருவருக்கு சாபம் போட எந்த ஸ்ம்ருதியில் ( இந்துக்களின் சட்டப் புத்தகம்) ‘ரூல்’ இருக்கிறது? இது அநியாயம்; இந்தாரும், பிடி சாபம்!

நீரும் அழிந்து போகக் கடவது!

 

இருவரும் அழிந்தனர். வசிஷ்ட மஹா முனிவன்  ஒரு short cut ஷார்ட் கட் (குறுக்கு வழி) கண்டுபிடித்து வந்துவிட்டார். நிமி, விதேஹன் ஆனதால் அவன் ஆண்ட நாட்டுக்கு விதேஹ நாடு என்று பெயர் ஏற்பட்டது.

 

உடனே அறிஞர் பெருமக்கள் மஹாநாடு கூட்டி புதிய அரசன் யார் என்று தீர்மானித்தனர். நிமியைக் ‘கடைந்து’ ஒரு மன்னனை உருவாக்குவோம் என்று நிமியின் இறந்து கிடந்த உடலைக் ‘கடைந்து’ மிதி என்ற ஒரு மகனை உருவாக்கினர். அவன் ஆண்ட பட்டிணம் மிதிலை ஆகி, அங்கே ஜனகன் ஆண்டு, சீதையை வயல் வெளியில் கண்டு எடுத்து, ராமாயணம் உருவான கதை எல்லோரும் அறிந்ததே.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள வினைச் சொல்லை அப்படியே ‘உடலைக் கடைந்து’ என்று எழுதிவிட்டனர். மொழிபெயர்த்த ஆங்கிலேயர்களும் இந்துக்கள் சரியான முட்டாள்கள் என்று நகைத்துக் கொண்டே  அப்படியே மொழி பெயர்த்து விட்டனர். ஆண்கள் குழந்தை பெறுவதா! என்று அங்கலாய்த்தனர். இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்தவுடன் ‘கடைதல்’ என்பது க்ளோனிங்- அச்சு எடுத்தல் – படி எடுத்தல் – என்று விளங்குகிறது. மஹாபாரதத்திலுள்ள பத்து அதிசயங்களையும் இன்னும் பல அதிசயப் பிறப்புகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போதுதான் நான் சொல்வது விஞ்ஞானக் கற்பனைக் கதையோ அல்லது பிதற்றலோ அன்று என்பது தெள்ளிதின் விளங்கும்!

 

இன்னொரு கதை பார்ப்போம்; வேனன் கதை!

 

வேனன் என்றொரு மன்னன் இருந்தான் இவன் கதையும் பல புராணங்கள் மநு ஸ்ம்ருதியின் வியாக்யானம் ஆகியவற்றில் வருகிறது.

வேனன் சொன்னான்

பிராஹ்மனணர்களே!

நான்தான் யாக யக்ஞங்களின் ஆகுதிகளைப் பெற தகுதியுடையவன்; ஆகையால் இந்திரன் சந்திரன் என்று சொல்லி வீணடிக்காமல் எல்லாவற்றையும் எனக்கே நல்குக.

 

ஐயர்மார்கள் சொன்னார்கள்

“மன்னா; கோபித்துக்கொள்ளாது அப்படியெலாம் வழக்கமும் இல்லை; மேலும் நமக்கும் மேலே ஒருவன் உளன்.”

மன்னன், பிடிவாதம் பிடிக்கவே, சரி ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும்’ என்று கருதி பிராஹ்மண மஹாநாட்டு முடிவுப்படி மன்னனை தர்ப்பை புல்லைக் கொண்டே கொன்றுவிட்டனர்.

 

 

இந்து அகராதியில் ‘மன்னன் அற்ற’ (அ+ராஜக) என்றால் சட்ட ஒழுங்கற்ற ‘அ+ ராஅஜக’ என்று பொருள்; நாடு முழுதும் அராஜகம் தாண்டவ மாடியது. மீண்டும் ஐயர்கள் மஹாநாடு கூட்டி வேனனின் உடலைக் கடைந்து, பிள்ளையை உண்டாக்குவோம் என்று பணியைத் துவக்கினர் (ஹரி வம்ஸம் என்னும் நூல் வேனனின் உடலில் வலது கையைத் தேய்த்து……….என்று விளம்பும்). எல்லோரும் உடலைத் தேய்த்தவுடன் அல்லது கடைந்தவுடன் ஒரு கறுப்பு, குள்ள உருவம் வந்தது. நீ இங்கே அமர் நிஷத்த என்றனர். ஸம்ஸ்க்ருதத்தில் ‘நிஷத்த’. அவர்கள் நிஷாதர்கள் ( பழங்குடி வேடுவர்கள் ) ஆனார்கள். அவர்களை விந்திய மலைக்கு அனுப்பிவிட்டனர்.

அதாவது ஐயர்கள் செய்த முதல் க்ளோனிங் ஜ்ராஸ்ஸிக் பார்க் Jurassic Park கதை போல எதிரிடை விளைவை உண்டாக்கிவிட்டது. முதல் எக்ஸ்பெரிமெண்ட் தோல்வி.

பிராஹ்மணர்கள் மீண்டும் ஒரு மஹா நாடு கூட்டி இரண்டாவது முதல் தேய்தபோது—உடலை    கடைந்த போது– அற்புதமான, ஒளிவீசும் பிருது தோன்றினான். அவன் ஆண்டதால் பூமிக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘ப்ருத்வீ ‘என்ற பெயரும் நிலைத்தது.

கதையை நிறுத்திவிட்டு சிறிது ஆராய்ச்சி செய்வோம்; புராணங்கள் எவ்வளவு அழகாக உண்மையை உரைக்கின்றன என்று பாருங்கள். முதல் க்ளோனிங் பரிசோதனை தோல்வி அடைந்து அறிவற்ற ஒருவன் வரவே அவனைக் கொல்லாமல் விந்திய மலைக்கு அனுப்ப, அவன் நிஷாதர்களென்ற ஒரு இனத்தை உருவாக்க, பிறகாலத்தில் அவர்களில் ஒருவனாக வால்மீகி எனும் மாமுனிவன் உருவாக வழிவ கடைந்தனர்.

 

இரண்டாவது Kலோனிங் எக்ஸ்பெரிமெண்டில் ப்ருது தோன்ற, உலகம் உய்வு பெற்றது

 

உடலைத் தேய்த்து— உடலைக் கடைந்து- அதாவது செத்துப்போன ஒரு ஆணின் ‘ஸெல்’ (cell) லிலிருந்து ஒரு மனிதனை உருவாக்கினர். அதை அப்படியே எழுதியும் வைத்தனர். விஞ்ஞானம் வளராதபோது செத்துப்போன ஆண் உடலில் இருந்து ஒரு மனிதனா என்று நகைத்தோம்! இப்பொழுது வியக்கிறோம். இதிஹாச, புராணங்களில் உள்ள பெயர்கள் பல்லாயிரம்; அதில் இது போல அதிசயச் செய்திகள் விகிதாச்சரப்படி குறைவே; பெயர் தெரியாமல் இறந்த புராண மனிதர்கள் இன்னும் பல்லாயிரம்; அவர்களையும் கணக்கெடுத்தால் இந்த மாதிரி செய்திகள் குறைவே; ஆகவே இருக்கும் புராணக் கதைகளை அறிவியல் நோக்கில் நாம் பார்க்க வேண்டும்.

 

 

முன்னரே எழுதிவிட்டேன்; அகஸ்த்யர் கடலைக் குடித்தார் என்றால் அகஸ்த்யர் கடல் கடந்து தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார் என்று பொருள்

அகஸ்த்யர் விந்திய மா மலையை கர்வபங்கம் செய்தார் என்றால் முதல் முதலில் மலை வழியாக சாலை அமைத்து தென்னகம் வந்தார் என்று பொருள்.

 

 

அதற்கு முன் பஞ்ச பாண்டவர்கள் ராமன், ராவணன் முதலானோர் படகு அல்லது கடலோர வழிகலையே பயன்படுத்தி தென்னகம் வந்தனர்.பகீரதன், பல்லாயிரமாண்டு தவம் செய்து கங்கையைக் கொணர்ந்தான் என்றால் அவன் முன் னோர்கள் செய்ய முயன்று தோல்வியுற்ற கங்கை நதி திசை மாற்றுத் திட்டத்தில் வெற்றி பெற்றான் என்று பொருள்.

 

 

ஆக புராணக்காரர்களின் மொழிகளைப் புரிந்து கொண்டால் இனி வரப்போவதையும் சொல்ல  முடியும். அதை நான் ஏற்கனவே இரண்டு கட்டுரைகளில் தந்துவிட்டேன்.

 

கண்டு மகிழ்க

 

–சுபம், சுபம்-

 

  1. ஆண்களுக்குகுழந்தை | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about ஆண்களுக்கு குழந்தை … குழந்தை பெறலாம். … ஆண்களும் …

  1. ஆண்களுக்கும்குழந்தை | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about ஆண்களுக்கும் குழந்தை … ஆண்களும் … //tamilandvedas.com/2017/05/23/%e0%ae …

மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்துவிட்டது!-பகுதி1 …

tamilandvedas.com/2014/03/26…

Gandhari, Draupadi, Kunti. கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண் 934 தேதி …

Previous Post
பகுதி 2: – மஹாபாரத மர்மங்கள்: விஞ்ஞான விளக்கம் கிடைத்தது

கரூவூர் ஆநிலை- சுவையான வரலாறு! (Post No.5197)

Written by S NAGARAJAN

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London –   7-34 AM (British Summer Time)

 

Post No. 5197

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கொங்குமண்ட  சதகம்

பிரமனின் படைப்புத் தொழிலை காமதேனு செய்த தலம் கருவூர் திரு ஆநிலை

.நாகராஜன்

கருவூர் என்பது கொங்கு நாட்டுத் தலங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

கரூவூர் ஆநிலை என்று வழங்கப்படும் இதன் வரலாறு சுவையான ஒன்று. இது பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழினுள் ஒன்று. திருஞானசம்பந்தரின் பதிகம் பெற்ற தலம் இது.

கொங்கு தேசத்தில் இருபத்துநான்கு நாடுகள் உள்ளன.

அவையாவன: பூந்துறை நாடு, தென்கரை நாடு, காங்கேய நாடு, பொன்கலூர் நாடு, ஆறை நாடு, வாரக்கனாடு, திருவாவினன்குடி நாடு, மண நாடு, தலையனாடு, தட்டய நாடு, பூவாணியனாடு, ஆரையனாடு, ஒடுவங்க நாடு, வடகரை நாடு, கிழங்கு நாடு, நல்லுருக்கனாடு, வாழவந்தி நாடு, அண்ட நாடு, வெங்கால நாடு, காவடிக்கனாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, காஞ்சிக்கோயில் நாடு, குறும்பு நாடு ஆகியவையாகும்.

இவற்றில் கருவூர் ஆநிலை வெங்கால நாட்டில் உள்ளது.

திருஆநிலை என்று புகழப்படும் இது சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து பதிகளுள் ஒன்றாகும். கருவூர்த் தேவர் பிறந்த இடம். இறைவனின் திருநாமம் பசுபதிநாதர். இறைவி : சுந்தரவல்லி.

காமதேனு வழிபட்டதால் கோவிலுக்கு திருஆநிலை என்று பெயர் ஏற்பட்டது

இதைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 11ஆம் பாட்டில் புகழ்ந்துரைக்கிறது இப்படி:-                                                            

 

வீழுஞ் சடையார் பசுபதி யீச்சுரர் வெண்ணெய்மலை                 

சூழும் புகழொடு தோற்றிய நாடொழு தர்ச்சிக்கநீ

ராழுங் கடல்புவி யண்டமெ லாமுற வண்டர்தொழ

வாழும் பசுவுற் பவமான துங்கொங்கு மண்டலமே

 

 

இதன் பொருள் : பசுபதி ஈஸ்வரரைப் பூஜித்து கடல் சூழ்ந்த பூமியையும் மற்றுமுள்ள அண்டங்களையும் பிரம்மாவைப் போல படைத்தல் தொழிலைச் செய்த காமதேனு பிறந்தது வெண்ணெய் மலை சூழ்ந்த கருவூர். அது உள்ளது கொங்கு மண்டலமே.

 

கருவூரின் வரலாறு : ஒரு காலத்தில் காமதேனு கருவூர்ச் சிவபெருமானைப் பூசித்து வணங்கி வந்தது. பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்வதால் கர்வம் மிகப் பெற்றார். அதை அடக்க,  பிரமதேவனைப் போல படைக்கும் ஆற்றலைப் பெறுவாய் என சிவபிரான் காமதேனுவிடம் திருவாய்மலர்ந்தருள, அவ்வாறே காமதேனு அந்த ஆற்றலைப் பெற்று சராசரங்களை முன்போலப் படைத்தது. அக்கருவூருக்கு வடதிசையில் புசிப்பு நிமித்தம் வெண்ணெய் மலையென ஒன்று வகுத்துப் பூசித்துக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த தலத்திற்கு திரு ஆநிலை என்று பெயர் வழங்கி வரலாயிற்று.

 

இந்தத் தலத்தைப் பற்றி கரூர்ப் புராணத்தில் வரும் பாடல் வருமாறு:-

வருதிநீ சுரபி தொல்லை மறையவன் போல வேலை        

பொருதிரை யாடை ஞாலத் தெமையருச் சனைபு ரிந்து                   

 தருகுதி சராச ரங்க ளனைத்தையு மென்முன் றாழா              

விரைமலர் தூவித் தேநு விடையோடும் போயிற் றன்றே               

  • கரூர்ப் புராணம்

கொங்கு மண்டலச் சதகம் போற்றும் திரு ஆநிலை இன்று கரூர் என்று புகழ் பெற்று விளங்குகிறது.

***

 

 

‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’ (Post No.5194)

Written  by London swaminathan

 

Date: 8 JULY 2018

 

Time uploaded in London –  6-41 am (British Summer Time)

 

Post No. 5194

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’

-நறுந்தொகை, வெற்றி வேற்கை (அதிவீர ராம பாண்டியன்)

 

‘மிதிலைக்கு அரசனான ஜனகனுக்கு ஒன்றுமே தெரியாது; அவருக்கு மண்ணாசைதான் அதிகம்’ என்று சில முனிவர்கள் குறை கூறினார்கள். அவரது குருவான யாக்ஞவல்கியரின் காதிலும் இது விழுந்தது. ஜனகனின் பெருமையை உலகிற்கு உணர்த்த ஒரு தந்திரம் செய்தார். ஒரு நாள் எல்லா ரிஷி முனிவர்களும் இருந்த சமயத்தில், ஜனகனுடைய அவையில் யக்ஞவல்கியர் தத்துவச் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார்.

 

அச்சமயத்தில் ஒரு சேவகன் ஓடி வந்து அரசே! குதிரை லாயம் தீப்பிடித்து எரிகிறது; அணைக்க முடியவில்லை’ என்றான். அரசன், ‘சரி, போ’ என்றார். கொஞ்ச நேரம் ஆயிற்று; மற்றொரு காவலன் வந்து மன்னர், மன்னவா! அரண்மனையின் ஒரு புறத்திலும் தீ பரவிவிட்டது; எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றான்; மன்னனோ ‘‘சரி, நீ போகலாம்’ என்றார்.

 

முதல் காவலன் வந்து சொன்னபோது சில  முனிவர்கள் பயந்து தண்ணீர் குடிக்கப் போவது போல பாவனை செய்து வெளியேறினர். இரண்டாவது காவலன் வந்து சொன்னபோது அசெம்பிளியில் பாதி காலி; ஒவ்வொரு முனிவரும் ஏதோ அவசர வேலை இருப்பது போல வெளியே போயினர்.

சிறிது நேரத்தில் மூன்றாவது காவலன் வந்து அரசே; இந்த அறை வரை தீ வந்துவ்ட்டது; எங்களால் தீ ஜ்வாலையைத் தாங்க முடியவில்லை; நாங்கள் வெளியேறுகிறோம்; நீங்களும் வெளியேறுங்கள் என்று கெஞ்சினான். மீதியிருந்த முனிவர்கள் கைத்தடி காலணி, கமண்டலம் சகிதம் குதிங்கால் பிடறியிற் அடிக்க ஓடினர்.

ஜனகன் சொன்னான்,

“மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் நமே தஹ்யதி கிஞ்சன”-

 

“ எரிவதில் என்னுடையது என்றும் எதுவும் இல்லை!” —

 

 

தீயின் உக்கிரம் மெதுவாகத் தணிந்தது; ஜனகனும் யாக்ஞவல்கியரும் தொடர்ந்து தத்துவ விவாதம் நடாத்திக் கொண்டு இருந்தனர். ஓடிப்போன முனிவர்கள் ஒவ்வொருவராகத் திரும்பி வந்தனர். அவர்கள் வந்த காரணம், மன்னன் இறந்தானா? தலைமைக் குரு இறந்தாரா என்று பார்க்கத்தான்!

 

எல்லோரும் மீண்டும் வந்து அமர்ந்த பின்னர் குரு சொன்னார்:

“உண்மை ஞானி ஜனக மாமன்னன் ஒருவன்தான் ; நீங்கள் எல்லோரும் உயிர் பிழைக்க ஓடியதோடு கமண்டலமும் கைத்தடியும் எரிந்து விடும் என்று அஞ்சி அவைகளையும் எடுத்து ஓடினீர்; ஜனகனோ இந்த அரண்மனையே தன்னுடையது அல்ல” என்ற ஆன்ம ஞானம் பெற்றவன் என்றார்.

 

முனிவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்; ‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’.
“மிதிலை எரிந்திட வேதப் பொருளை

 

வினவும் சனகன் மதி—தன்

 

மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது

 

வல்ல நம் அன்னை மதி”–       (சுப்ரமண்ய பாரதி)

–சுபம்-

மரணம் உண்டா, இல்லையா? – திருதராஷ்டிரனின் கேள்வி? (Post No.5193)

Written by S NAGARAJAN

 

Date: 8 JULY 2018

 

Time uploaded in London –   5-52 AM (British Summer Time)

 

Post No. 5193

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

மஹாபாரதச் செல்வம் : ஸம்வாதம்

 

மரணம் உண்டா, இல்லையா? – திருதராஷ்டிரனின் கேள்வி?

 

ச.நாகராஜன்

1

மஹாபாரதம் ஐந்தாவது வேதம் என்று புகழப்படுகிறது. வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன் சாரத்தை மஹாபாரதம் தருகிறது. வேதங்களை அனைவரும் கற்று ஓத முடியாது; அதற்குரிய காலமும் போதாது. ஆனால் மஹாபாரதத்தை அனைவரும் படிக்கலாம். அதை படிக்க போதுமான காலமும் மனித வாழ்வில் உண்டு.

பல மர்மங்களை வேதம் மட்டுமே அவிழ்க்கிறது. அந்த மர்மங்களை மஹாபாரதத்தில் தேடிப் பார்த்தால் கிடைக்கும்.

மர்மத்தை அவிழ்க்கும் விடையும் கிடைக்கும்.

உத்யோக பர்வத்தில் நாற்பத்திரண்டாவது அத்தியாயம் ஸநத்ஸுஜாதருக்கும் திருதராஷ்டிரனுக்கும் நடந்த அருமையான சம்வாதம் ஒன்றை விளக்குகிறது.

அதன் சாரத்தை சுருக்கமாக இங்கே காணலாம்.

2

திருதராஷ்டிரன் : ஸநத்ஸுஜாதரே! மரணம் (மிருத்யு) என்பது இல்லையென்று நீர் உபதேசித்திருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். தேவர்களும் அசுரர்களும் மரணம் இல்லாமல் இருப்பதற்காக குருகுல வாசத்தை அனுஷ்டித்தார்களே; அவ்விரண்டில் எது உண்மை?

 

ஸநத்ஜ்ஸுஜாதர் : சிலர் கர்மாவினால் மரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் மரணம் இல்லை என்று சொல்கிறார்கள். மரணம் என்னும் மிருத்யு இருக்கிறான்; இல்லை என்கிற இரண்டும் சத்தியமாக இருக்கின்றன. சில வித்வான்களால் இந்த மிருத்யுவானது அனாத்மாவில் ஆத்ம புத்தியாகிய மோகமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

நானோ ஆத்ம ஸ்வரூபத்திலிருந்தும் தவறுதலான அஞ்ஞானத்தை மிருத்யுவாக – மரணமாகச் – சொல்கிறேன். அதேபோல தன் ஸ்வரூபத்தில் இருக்கையில் தவறாமையை மோட்சமாகச் சொல்கிறேன். தவறுதலால் அசுரர்கள் அவமானத்தை அடைந்தார்கள். தவறாமையால் தேவர்கள் பிரம்மமானார்கள்.

மரணமானது பிராணிகளை புலி போலத் தின்பதில்லை. ஏனெனில் மரணத்தின் ரூபமானது அறியப்படுகிறதில்லை, அல்லவா? சிலர் இதைக் காட்டிலும் வேறாக யமனை மிருத்யுவாகவும், புத்தியில் வசிப்பவனாகவும், மரணமற்றவனாகவும், பிரம்மநிஷ்டனாகவும், அந்தத் தேவனைப் புண்ணியசாலிகளுக்கு சுகத்தையளிக்கிறவனும் பாவிகளுக்குத் துக்கத்தைக் கொடுக்கிறவனுமாகப் பித்ருலோகத்தில் ராஜ்யத்தை ஆள்பவனாகவும் சொல்கிறார்கள்.

இவனுடைய ஆணையால் மனிதர்களுக்குக் கோபமும் தவறும் லோபரூபமான மிருத்யுவும் உண்டாகின்றன.

அகங்காரத்தினால் சாஸ்திரங்களுக்கு விரோதமான வழிகளில் செல்கின்றவன் ஆத்மாவின் தியானத்தை அடைவதில்லை.

மோகத்தை அடைந்தவர்களான அவர்கள் அந்த மரணத்தின் வசமாகி, இங்கிருந்து பரலோகம் சென்று மறுபடியும் கீழே விழுகிறார்கள். பிறகு புலன்களை (கர்மங்களை) அனுசரித்து அவர்களைச் சுற்றுகின்றன. இதனால் மரணம் காரணமாக அவன் மிருத்யு ஆகிறான். அவர்களுக்குக் கர்மம் பயன் தரத் தொடங்குகின்றன. அவர்கள் அந்த கர்ம பயனில் விருப்பமுள்ளவர்களாகி அதனைத் தொடர்கிறார்கள்.

ஆகவே அவர்கள் மரணத்தைத் தாண்டுவதில்லை.

தேகத்தை எடுத்த ஒருவன் பரமாத்மாவை அடையக் கூடிய யோகத்தை அறியாததால் போகத்தின் சேர்க்கையை அடைகிறான். அது புலன்களுக்கு மகா மோகத்தை உண்டு செய்கிறது.

புலன்களின் சேர்க்கை புலன் இன்பத்தை நினைக்கச் செய்து அனுபவிக்கத் தூண்டுகின்றன. காமமும் குரோதமும் மூடர்களை மிருத்யுவுக்குக் கொடுக்கின்றன.

தீரர்களோ தைரியத்தினால் மிருத்யுவைத் தாண்டுகிறார்கள்.

எந்த வித்வான் விஷயங்களை (புலனின்பம் தொடர்பானவற்றை) தள்ளுகிறானோ அவனை மிருத்யுவானவன் பிடிப்பதில்லை.

காமங்களை அனுபவிக்கும் ஒருவன் காமங்களுடன் நசிக்கிறான்.

காமங்களை விட்டவன் எல்லா புண்ணிய பாவத்தையும் நாசம் செய்கிறான்.

இதோ பிராணிகளுக்கு அஞ்ஞான ரூபமான இருளாகிற நரகமானது காணப்படுகிறது. பிராணிகள், மோகத்தை அடைந்து மேலே பார்த்துக்கொண்டு பள்ளத்திற்கு எதிராய்ப் போவது போல ஓடுகின்றன. இவ்வுலகில் மூடனுடைய செய்கை போன்ற செய்கையில்லாத இந்த மனிதனுக்கு மிருத்யுவானவன் புல்லால் செய்யப்பட்ட புலி போல என்ன செய்வான்?

விஷயங்களை நினையாமல் இருப்பவன் வேறு ஒன்றையும் நினைப்பதில்லை. அப்போது மிருத்யுவானவன் புல்லால் செய்த பாம்பு போல ஆகிறான்.

கோபத்தாலும் லோபத்தாலும் உண்டான மோஹ பயங்களுடன் கூடிய இந்த ஆத்மாவே மிருத்யு.

இவன் உமது சரீரத்தில் இருக்கிறான்.

இவ்வித மிருத்யு உண்டாவதைத் தெரிந்து கொண்டு ஞானத்தில் இருப்பவன் இவ்வுலகத்தில் மிருத்யு பற்றிய பயத்தை அடைவதில்லை. அவனுடைய விஷயத்தில் மிருத்யுவானவன் மிருத்யுவின் விஷயத்தை அடைந்து மனிதன் நசிப்பது போல நசிக்கிறான்.

 

3

மரணத்தைப் பற்றி மஹாபாரதத்தில் பல இடங்களில் முக்கியமான கருத்துக்கள் இடம் பெறுகின்றன.

அதில் மிக முக்கியமான விஷயமாக சொல்லப்படுவது மரணம் ஏற்படுவது கோபத்தாலும் லோபத்தாலுமே என்பது தான்.

புலனின்பத்தால் ஏற்படும் கர்மங்களின் வழியே ஜனன மரணச் சுழல் ஏற்படுகிறது. விஷய தோஷங்களை விட்டவன் தீரனாகி மரணத்தை வெல்கிறான்.

தீரனுக்கு முன்னால் மிருத்யுவானது புல்லால் செய்த புலி. புல்லால் செய்த பாம்பு.

அருமையான இந்த உவமைகள் மூலம் ஸநத்ஸுஜாதர் வாயிலாக மரணபயத்தை வெல்ல வழி கூறும் மஹாபாரதம்,அந்த வழியைக் கடைப்பிடித்தால், அவர்களுக்கு மரணம் இல்லை, ஆனால் மிருத்யுவுக்கே மிருத்யு ஏற்படும் என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறது.

இந்தக் கருத்து பல இடங்களில் வெவ்வேறு விதமாகத் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுகிறது.

 

ஐந்தாவது வேதமாகக் கொண்டாடப்படும் மஹாபாரதம் அனைவருக்கும் ஒரு வரபிரசாதம்!

***

காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் கங்கைக்கும் இடையே தாழ்வாரம்! (Post No.5189)

Written by S NAGARAJAN

 

Date: 7 JULY 2018

 

Time uploaded in London –   5-47 AM (British Summer Time)

 

Post No. 5189

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் கங்கைக்கும் இடையே தாழ்வாரம்!

 

ச.நாகராஜன்

 

சொந்த நாட்டில் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம்

இனி அஞ்சிடோம்  – மகாகவி பாரதியார்

 

ஹிந்துக்களின் புனித பூமி

அயோத்யா

மதுரா

காசி

அயோத்யாவில் ராமர் பிறந்தார். ராம ஜென்ம பூமி அது.

மதுரா கிருஷ்ணனின் பூமி. கிருஷ்ண பூமி அது.

காசி விசுவநாதர் ஹிந்துக்களின் புனித தெய்வம். கங்கையோ பாவங்களைப் போக்கும் நதி. விசுவநாத கங்கா பூமி அது.

இந்த மூன்றிலும் இருந்த் ஹிந்து பாரம்பரிய சின்னங்களை முகலாய ஆட்சி தரைமட்டமாக்கியது. அத்தோடு நிற்கவில்லை, அங்கு மசூதிகளை அமைத்தது.

பாபர் மசூதியை அகற்றி அயோத்யாவில் ராமர் கோவில் அமைப்பதையும், காசி விசுவநாதர் சொத்தை காசி கோவிலுக்கு கொடுப்பதையும், மதுராவில் உள்ள மசூதியை அகற்றி அங்கு கிருஷ்ணர் கோவில் அமைப்பதையும் நியாயமாக இஸ்லாமியர் ஏற்று நடவடிக்க எடுத்திருந்தால் அவர்கள் பாராட்டுக்குரியவர்களாக அமைந்திருப்பர். முன்னோர்கள் செய்த இழிசெயலை நீக்கிய புண்ணியம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்.

ஆனால் நிலைமை அப்படியில்லை.

வழக்கு.

வழக்குக்கு மேல் வழக்கு.

போகட்டும், நியாயம் ஜெயிக்கும்.

 

இப்போது காசி விசுவநாதர் ஆலயத்திற்கும் கங்கைக்கும் இடையே பிரம்மாண்ட்மான ஒரு நடையை அமைக்க 600 கோடி ரூபாய் செலவில் ஒரு திட்டம் உருவாகி இருக்கிறது.

 

வரவேற்க வேண்டிய திட்டம் இது.

நடை அல்லது தாழ்வாரம் 56 மீட்டர் – அதாவது சுமார் 183 அடி அகலம் கொண்டது. நீளம் சுமார் 400  மீட்டர் – 1308 அடி.

இங்குள்ள சுமார் 166 வீடுகளை இதற்காக அகற்ற வேண்டியிருக்கிறது.

இதில் 56 பேர்கள் உடனடியாக சம்மதித்து விட்டனர். இன்னும் 60 பேரிடம் அவர்கள் இடத்தை வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நியாயமான உரிய இழப்பீட்டை அரசு வழங்க முன் வந்திருக்கிறது.

ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 400 ஆண்டு பழமையான அமிர்தேஷ்வர் மஹாதேவரின் கோவில் ஒரு வீட்டின் உள்ளே இருக்கிறது.

இன்னும் பெரிய மற்றும் குட்டி கோவிலக்ள் 46 அகற்றி வேறு இடத்தில் ஸ்தாபிதம் செய்யப்பட்டால் தான் இந்தத் திட்டம் நிறைவேறும்.

பொதுவாக அரசிற்கு மக்களின் ஆதரவு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொகுதி இது.

ஆகவே அரசியல்வாதிகள் உள்ளே நுழைந்து குழப்பம் விளைவிக்க முயல்வது இயற்கையே!

1669ஆம் ஆண்டு ஔரங்கசீப் காசி விசுவநாதர் ஆலயத்தை இடித்தான். அங்கு க்யான்வாபி மசூதியைக் கட்டினான்.

அஹல்யாபாய் ஹோல்க்ர் ம்சூதியை அகற்றி விட்டு காசி விசுவநாதர் கோவிலை அமைக்க எவ்வளவோ முயன்றார். அது முடியவில்லை. ஆகவே மசூதிக்கு அடுத்தாற்போல் புதிய இடத்தில் காசி விசுவநாதர் ஆலயத்தை 17870இல் நிறுவினார்.

 

இப்போதைய கங்கா தர்ஷன் திட்டத்தின் கீழ் இந்த தாழ்வாரம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இங்குள்ள ஜனநெரிசலையும் இதர பல பிரச்சினைகளையும் இந்த கோவில் நடை தீர்க்கும்.

இதை வரவேற்போம்.

இதைப் பற்றிய தனது கருத்தை ஆங்கில வார இதழான ‘ட்ரூத்’ தனது 29-6-2018 இதழில் தந்துள்ளது.

அது அப்படியே கீழே தரப்பட்டுள்ளது:-

 

  1. The ndtv and National Herald channels both shaded under typical secular minority

politics have now expressed concern over  secular sentiments associated with the recent

Government move to bring in certain changes  for betterment in the environment and

restoration approach to the pristine Kashi  Viswanath temple, the abode of Lord Shiva

in Varanasi. The very old temples on the approach road with encroachment or no

encroachment, built in the past have also been  regarded as sacred places of worship since decades or centuries, and deserve to be honoured and protected through mutual  agreement between the developing  authorities and the temple owners keeping in mind that– SANTHIMITTE VARAM THYAGA: for some great purpose often sacrifice must fetch higher priority. While some reports reveal that many of the house owners are happy with the deal, those having private temples disagree to the plan. The Authorities are reported  to have assured that they will only get rid of the encroachments and ensured rehabilitation of the shrines and idols that fall along the route. This need to be honourably and diligently pursued.

  1. As per PTI reports from Allahabad, the Kashi Vishwanath Mandir Trust had filed a suit in 1991 claiming that a temple was constructed by Maharaja Vikramaditya more than 2,000 years ago on the site, where the mosque had been later erected.

Alleging that the temple was demolished by Mughal emperor Aurangzeb in 1669 and a mosque constructed on a part of the land with the remains of the razed place of worship, the Trust has sought removal of the Gyanvapi Masjid from the site and possession of the entire piece of land.

In its application before ADJ Varanasi, the Anjuman Intazamia Masjid had contended that a “Mandir-Masjid dispute” could not be adjudicated by a civil court as it was “barred by law” and demanded that the trust’s petition be dismissed at the outset.

However the lower court dismissed the application. The Sunni Waqf Board had moved the court challenging the ADJ Varanasi’s orders turning down its request for being made a party to the civil suit. Initially,both parties had challenged the lower court orders filing petitions under Article 226 (power of High Courts to issue certain writs) of the Constitution.

Upon the high court’s advice, Anjuman Intazamia Masjid had filed an amendment application under Article 227 dealing with power of superintendence over all courts by the high court, which was allowed. The Sunni Waqf Board could not come up with the same and, hence, was granted one week’s time. Justice Chandra directed that the petitions be placed before the bench having the requisite jurisdiction.

  1. Non-Hindu perpetrators unashamedly feel pride on the existence of their super imposed monuments on Hindu shrines as a mark of their past victory and dominance, and the pseudo- secularists join them. May good sense dawn upon Hindus, now victims of induced divisionism, and all others concerned, to usher in the victory of Truth and glory to the All-merciful Lord Kashi Viswanath.

நன்றி : TRUTH VOLUME 86 ISSUE 11 –   29-6-2018

 

***

 

 

 

ஹிந்து மாநாடு – அட்வகேட்கள் உரை (Post No.5182)

Written by S NAGARAJAN

 

Date: 5 JULY 2018

 

Time uploaded in London –   8-53 AM (British Summer Time)

 

Post No. 5182

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஏழாவது அகில இந்திய ஹிந்து மாநாடு – அட்வகேட்கள் உரை!

ச.நாகராஜன்

 

மிக அருமையாக நடந்து முடிந்த ஏழாவது அகில இந்திய ஹிந்து மாநாட்டில் பல அறிஞர்கள் தங்களது சிறப்பான கருத்துக்களை முன் வைத்தனர். இதில் அட்வகேட்களின் பங்கு முக்கியமானது.அவர்கள் கூறியவை சட்டம் பற்றியது.

ஒவ்வொரு ஹிந்துவும் சிந்திக்க வேண்டிய முக்கியமான கருத்துக்கள் இவை.

இவற்றின் சாரத்தைச் சுருக்கமாகத் தமிழிலும் மூலத்தை ஆங்கிலத்திலும் காணலாம்.

நாள் : 3-6-2018

வக்கீல்களின் கூட்டம்

 

அ.ராம்நதி (கோவா) :- அரசியல் சட்டத்தை செகுலராக மாற்றுவது ஊழலில் ஒரு வழியாகும். செகுலரிஸம் என்ற வார்த்தை அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அந்தக் கணத்திலிருந்து அரசியல் சட்டத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையே ஒரு ஆழமான பள்ளம் ஏற்பட்டு விட்டது. இப்போது இந்த ஊழல் நீதித்துறைக்குள்ளும் ஊடுருவி விட்டதால், நமது தேசமும்,சமுதாயமும் ஒரு அபாயகரமான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளது. இதில் மிக முக்கியமான தரமும் தேசியமும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இன்று நீதிபதிகள் எப்படி நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது தெளிவாக இல்லை. இன்றைய நடைமுறையில் நியமனங்கள் அனைத்துமே தகுதியின் அடிப்படையில் அல்லாமல் பரிந்துரைகளினால் மட்டுமே செய்யப்படுவதால், நீதித்துறை சரியல்லாத நடத்தையுள்ள புதிராக ஆகி விட்டது. இந்த நிலை மாற வேண்டுமானால், மாற்ற வேண்டும் என்கிற உறுதியா சக்தி வேண்டும். செயல்திறன் என்னும் சக்தி வேண்டும். அனறிவு என்கின்ற சக்தி வேண்டும்.இவை அனைத்தும் தர்மத்தின் மூலமாகத்தான் கிடைக்கும். ஆகவே பயபக்தியுள்ள குடிமக்களே “இலட்சிய நீதித்துறையை” உருவாக்க முடியும்; அதை செயல்படுத்த முடியும். இந்த நோக்கங்களுக்காக, பயபக்தியுள்ள வக்கீல்கள் முயற்சிகளை எடுக்க வேண்டும்.

 

 

இவ்வாறு அரசு ஆலோசகரான கேரளாவைச் சேர்ந்த அட்வகேட் கோவிந்த் கே.பரதன் ஏழாவது அகில இந்திய ஹிந்து மாநாட்டின்  அட்வகேட் கூட்டத்தின் முடிவு நாளன்று, 3-6-2018 அன்று அட்வகேட் கூட்டத்தின் இரண்டாவது தினத்தில், பேசினார்.

“நீதித்துறையில் ஊழலை ஒழிக்க எடுக்க வேண்டிய உரிய நடவடிக்கைகள்” என்ற பொருள் பற்றி வழிகாட்டுதல் உரையை அவர் நிகழ்த்தினார். கூட்டத்திற்கு அட்வகேட்கள் சேஷநாராயண் பாண்டே, ஹிந்து ஃப்ரண்ட் ஃபார் ஜஸ்டிஸை சேர்ந்த ஹரிசங்கர் ஜெயின், ஹிந்து வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்த நிலேஷ் சங்கோல்கர் ஆகியோர் வருகை தந்தனர்.

ஆ.இலட்சிய நீதித்துறைக்காக வக்கீல்கள் முயற்சி எடுக்க வேண்டும் : நிலேஷ் சங்கோல்கர்

இப்போதைய நீதித்துறை பிரிட்டிஷ் நடைமுறையைக் கொண்டது. இதில் ஏற்படும் தாமதம் நியாயமற்ற ஒன்று. ஆகவே வக்கீல்கள் இந்தக் குறையைக் களைய முன் வர வேண்டும். இலட்சிய நீதித்துறையை உருவாக்க அதில் உள்ள ஊழலை வெளிப்படுத்துவது நமது பொறுப்பாகும். இன்றைய சட்ட அடிப்படையில் அநீதிக்குள்ளானவர்களுக்கு நீதி வழங்க நாம் முயற்சிகளை எடுக்க வேண்டும்.குற்றமிழைக்காதவர்கள் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்யும் போலீஸ்காரர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்க எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

. தேசீய ஆதாரவளங்கள் மீது முதல் உரிமை ஹிந்த்துகளுக்கே! – அட்வகேட் ஹரி சங்கர் ஜெயின்

 

சுதந்திரத்திற்குப் பின் இஷ்டத்திற்குத் தக பல முறை அரசியல் சட்டம் மாற்றப்பட்டிருக்கிறது. சில செகுலர் விதிகள், “முஸ்லீம்களுக்கே தேசிய ஆதாரவளங்களில் முன்னுரிமை உண்டு என்று சொல்கின்றன. என்றபோதிலும் இந்த தேசம் கடவுளுக்கும், ஹிந்து தர்மத்திற்கும், ஹிந்துக் குடிமக்களுக்கும் உரியது. ஆகவே,  இந்த தேசத்தின் நிலப்பரப்பும் ஆதார வளங்களும் முதலில் ஹிந்துக்களுக்கு உரியன. மைனாரிட்டிகள் அதற்கு உரிமை கொண்டாட முடியாது.

கூட்டத்தின் முடிவில் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் தேசிய வழிகாட்டி டாக்டர் சாருதத்த பிங்களேஹிந்து ராஷ்டிரத்திற்கு வக்கீல்களின் பங்களிப்பு  ‘எதிர்காலத்தில் ஒன்றுபட்ட முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்பன போன்ற பொருள்கள் பற்றி வழிகாட்டினார்.

 

 நன்றி : TRUTH VOL.86 NO. 10

 

 

***

மேற்கண்ட தமிழ் உரைகளின் மூல ஆங்கில வடிவம் முழுமையாகக் கீழே தரப்பட்டுள்ளது.

 

*‘Advocates’ Convention’ under the aegis of the 7th All India Hindu Convention*

  1. *To turn the Constitution secular is also corruption ! – Adv. Govind K. Bharatan, Kerala*

 

*Ramnathi (Goa)* – The corruption does not merely means monetary exchange; however, to turn the Constitution secular is also a way of corruption. The word ‘Secularism’ was included in the Constitution, and from that moment only, a chasm has been created between Constitution and Spirituality. Presently, since the corruption

has penetrated the judiciary, the Nation and society are facing grave situation. Today, it is not clear how the judges are getting appointed. In this process, important components such as quality and nationalism are overlooked. At present, since the appointments are made more on the basis of recommendations rather than qualifications, the judiciary is riddled with inappropriate conduct. If such a situation needs to be changed, energy of will, energy of action and energy of Knowledge are required, and these can be obtained only from Dharma. Therefore, only devout civilians can create ‘Ideal judiciary’ and make it work. For this purpose, devout advocates should make efforts, stated Government counsel Adv. Govind K. Bharatan from Kerala. He was speaking on the concluding day, on 3rd June, of 2-day ‘Advocates Convention’ under the aegis of 7th All India Hindu Convention being held at Shri Vidyadhiraj Meeting Hall in Shri Ramnath Temple. He guided on the topic ‘Appropriate actions to be taken against corruption being practised in the judiciary’. On this occasion, Adv. Sheshnarayan Pandey, Adv. Hari Shankar Jain of ‘Hindu Front for Justice’, Adv. Nilesh Sangolkar of Hindu Vidhidnya Parishad and other dignitaries were present.

 

  1. *Advocates need to make efforts for the ideal judiciary ! – Adv. Nilesh Sangolkar*

Present judiciary is based on British system. The delay caused in it is unjust. Therefore,

advocates should try to remove this shortcoming. To create ideal judiciary by people by exposing the corruption in the judiciary is our responsibility. We should make efforts to extend justice to the victims of injustice by using prevalent laws and ensure that a legal action is taken against the Policemen who register false offences against innocents.

 

  1. *Hindus have the first right on the national resources ! – Adv. Hari Shankar Jain*

After Independence, the rulers have altered the Constitution as per their will several times. Some secular rulers said, ‘Muslims have the first right on the national resources.’ However, this nation belongs to God, Hindu Dharma and aboriginal Hindus. Therefore, the land and resources of the country belong first to Hindus; minorities cannot claim any right on them.

At the conclusion of the Convention, National guide of Hindu Janajagruti Samiti Sadguru (Dr.) Charudatta Pingale guided on ‘The Contribution of advocates for the ‘Hindu Nation’, ‘United efforts to be made in the future’ etc.[- Yours Truly, Ramesh Shinde, National Spokesperson, Hindu Janajagruti Samiti, Contact No. 09987966666]

 

Source : TRUTH VOL.86 NO. 10

***

 

மேலே உள்ளவற்றில் பல உண்மைகள் சட்டம் பற்றி முழுமையாக அறிய வாய்ப்பில்லாத ஹிந்துக்கள் பலருக்கும் தெரியாதவை. சட்டத்தில் மைனாரிட்டிகளுக்கு உள்ள உரிமைகளும் ஹிந்துக்களுக்கு மறுக்கப்பட்ட உண்மைகளும் நிறைய உள்ளன. இவற்றை அட்வகேட்கள் ஒன்று கூடி களைய முன்வந்திருப்பது அனைவருக்குமான நற்செய்தி.

 

ஒன்றுபடுவோம்; உரிமைகளைப் பெறுவோம்; இந்தக் கருத்துக்களுக்கு மொத்த சமுதாயத்தின் ஆதரவைத் திரட்டுவோம்!

***

 

புத்தரும் அற்புதங்களும்! (Post No.5178)

Written by S NAGARAJAN

 

Date: 4 JULY 2018

 

Time uploaded in London –   5-23 AM (British Summer Time)

 

Post No. 5178

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

புத்த தரிசனம்

புத்தரும் அற்புதங்களும்!

 

ச.நாகராஜன்

புத்தர் அற்புதங்களுக்கு என்றுமே மதிப்பு கொடுத்ததில்லை. ஆனால் மக்களோவெனில் அற்புதங்களைக் கண்டு வியந்தனர்.

அதைச் செய்பவர்களைப் போற்றி வணங்கினர்.

புத்தர் பெறுதற்கரிய பெரும் ஞானத்தை அடைந்தவர். விபாசனம் (உள்ளொளி) கண்டவர். நிர்வாணத்தை அடைந்தவர். அவருக்கு அற்புதங்கள் ஒரு பொருட்டல்ல.

மந்திரவாதியாக இருந்து மாயாஜாலங்களை மக்களுக்கு முன்னே நிகழ்த்துவதை அவர் அறவே வெறுத்தார். அற்புதங்கள் உள்ளொளியைக் காண உதவாது என்பதை அவர் அறிந்தார்.

பிந்தோல பாரத்வாஜர் என்பவர் செய்த அற்புதங்களை அவர் விரும்பவில்லை. அது தவறு என்று சொன்னார்.

ஒரு நாள் நாலந்தா நகருக்கு அருகில் இருந்த மாந்தோப்பான பாவாரிகாவில் அவர் தங்கியிருந்தார். கேவத்தா என்ற பெயருடைய ஒரு இல்லறத்தான் புத்தரை அங்கு வந்து தரிசித்தார்.

அவரது பக்கத்தில் நின்று அவரை வணங்கியவாறே கேவத்தா கூறினார் :”ஐயனே! நாலந்தா இப்போது பெரிய நகரமாக வளர்ந்து விட்டது. வளம் வாய்ந்ததாக இருக்கிறது. அங்குள்ள மக்கள் தங்களை மிகவும் மதித்துப் போற்றுகின்றனர். ஆகவே, இப்போது உங்களின் சீடர்களில் யாரேனும் ஒருவர் நாலந்தா நகரில் மக்கள் பார்க்கும் படி அற்புதங்களைச் செய்தால் அவர்கள் இன்னும் அதிகமாக உங்களை வியந்து போற்றி வணங்குவர். உங்கள் சீடர்களில் ஒருவரை அப்படிச் செய்யும் படி தாங்கள் சொல்வீர்களா?”

புத்தர் கேவத்தாவைப் பார்த்துக் கூறினார் :”கேவத்தா! எனது சீடர்கள் யாரையும் மனித ஆற்றலை மிஞ்சிய அபூர்வ சக்திகளைக் காட்டி சாமான்ய மக்களின் நன்மைக்காக அற்புதங்கள் செய்யப் பணித்ததில்லை. பணிக்கமாட்டேன்.”

கேவத்தா பணிவுடன் மூன்று முறை தனது வேண்டுகோளை திருப்பித் திருப்பிச் சொன்னார்.புத்தர் மூன்று முறையும் அவரது வேண்டுகோளை நிராகரித்தார்.

புத்தரின் வாழ்வில் இன்னொரு சுவையான நிகழ்ச்சியும் நடந்தது.

 

நதிக்கரையோரம் ஒரு சமயம் புத்தர் தன் சீடர்களுடன் தங்கி இருந்தார். படகோட்டி அக்கரையிலிருந்து இக்கரைக்கு பயணிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தான்.

அப்போது ஜடாமுனியுடன் இருந்த ஒரு துறவி புத்தருக்கு முன்னால் வந்தார். அவரைச் சற்று ஏளனமாகப் பார்த்தார்.

பின்னர் அனைவரும் பார்க்கும்படி ஆற்று நீரின் மேல் தனது பாதங்களை வைத்து நடக்க ஆரம்பித்தார். அனைவரும் பிரமிப்புடன் பார்த்தவாறு இருக்க அவர் அக்கரை சென்று சேர்ந்தார்.

இதைப் பார்த்த சீடர்களில் ஒருவர்,” ஐயனே! அதோ அந்த துறவி போல நீங்களும் இப்படிச் செய்ய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

புத்தர், “அட! என்ன நீ சொல்கிறாய்? இது மதிப்பே இல்லாத ஒரு விஷயம். பொறு! இப்போதே உனக்கு இதன் மதிப்பு எவ்வளவு என்று காண்பிக்கிறேன்” என்றார்.

அந்தச் சமயம் இக்கரைக்கு வந்து பயணிகளை இறக்கி விட்ட படகோட்டியை அவர் அழைத்தார்.

அவரை நோக்கி புத்தர்,” அக்கரைக்குப் பயணியை ஏற்றிச் சென்றாயே! அவர் உனக்கு எவ்வளவு கொடுத்தார்?” என்று வினவினார்.

“அவர் அரை மஸாகா (அரை பைசா)கொடுத்தார்” என்றார் படகோட்டி.

புத்தர் தன் சீடரை நோக்கினார்:”பார்த்தாயா! அந்த துறவி ஆற்றைக் கடந்தாரே அது அரை பைசா மதிப்பைத் தான் கொண்டது. ஆனால் இந்த யோக சித்தியை அடைய அவர் நெடுங்காலம் தன் உடலை வருத்தி இருக்க வேண்டும். மக்களின் நலனுக்காகச் செலவழிக்க வேண்டிய எனது நேரத்தைப் பயன்படுத்தி அரை பைசாவில் செய்து முடிக்கக் கூடிய இந்தக் காரியத்தை நான் ஏன் செய்ய வேண்டும்?”

 

பொதுவாக மக்கள் தங்களைச் சுற்றி இருப்பவர்களின் உண்மையான மதிப்பை எப்போதுமே அறிவதில்லை.

மலினமான பரபரப்பான அற்புதங்கள் போன்றவற்றிற்கு பெரிய மதிப்புத் தருகின்றனர். அற்புதங்களைச் செய்பவர்களை அதீத மனிதராகக் கருதுகின்றனர்.

ஆனால் புத்தரோ தனது ஞானத்தாலும் உள்ளொலியாலும் உயரிய நிர்வாணத் தன்மையாலும் மக்களுக்கு உண்மையைப் போதித்தார். அற்புதங்கள் ஆற்றுவதை அவர் விரும்பவில்லை.

பெரிய உளவியல் நிபுணர் போல மக்களின் நாடித் துடிப்பை அறிந்து அவர்களை எப்போது மக்கள் சேவையில் பணியாற்றத் தயாராக இருக்குமாறு செய்தார்.

புத்த தரிசனம் ஒன்றே அவர்களை நல்வழிப் படுத்தியது!

***

கடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள் (Post No.5160)

Compiled by LONDON SWAMINATHAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –  7-19 AM (British Summer Time)

 

Post No. 5151

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஜூலை 2018 மாத காலண்டர் (விளம்பி வருஷம் ஆனி- ஆடி மாதம்)

 

ஏகாதஸி விரதம்- ஜூலை 9,23; பௌர்ணமி- ஜூலை 27;

அமாவாஸை- ஜூலை 12;

முஹூர்த்த தினங்கள் – ஜூலை 1, 2, 5, 11

பண்டிகை நாட்கள் – ஜூலை 13 பார்ஸ்வ சூர்ய கிரஹணம்/ இந்தியாவில் தெரியாது, 14 பூரி ஜகந்நாத ரத யாத்திரை, 17 தக்ஷிணாயண புண்ய காலம், 27- வியாஸ/ குரு பூர்ணிமா, பூரண சந்திர கிரஹணம்

கடவுள் பற்றி 31 தமிழ், ஸம்ஸ்க்ருத பழமொழிகள்

 

ஜூலை 1 ஞாயிற்றுக் கிழமை

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

 

ஜூலை 2 திங்கட் கிழமை

 

திக்கற்றவருக்கு தெய்வமே துணை

 

ஜூலை 3 செவ்வாய்க் கிழமை

நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு

 

ஜூலை 4 புதன் கிழமை

 

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (குறள்)

 

ஜூலை 5 வியாழக் கிழமை

ஹரி ஸ்ம்ருதிஹி ஸர்வவிபத் விநாசினி

ஹரியை நினைந்தவருக்கு துன்பங்கள் பறந்தோடும்

ஜூலை 6 வெள்ளிக் கிழமை

கடவுள் நினைத்தால் நடக்கதானவும் நடக்கக்கூடும் (கதா சரித் ஸாகரம்)

சுதுஷ்கரமபி கார்யம் சித்யத் யனிக்ரஹவதீஸ்விஹா தேவதாஸு

 

 

ஜூலை 7 சனிக் கிழமை

ஸ்வேச்சேசாரா ஹி தேவதாஹா

தெய்வங்கள் அதன்போக்கில் செயல்படும்

 

ஜூலை 8 ஞாயிற்றுக் கிழமை

ஸர்வ தேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி

அனைத்துக் கடவுளருக்கு அளிக்கும் நமஸ்காரங்கள் கேசவனை அடைகின்றன

 

ஜூலை 9 திங்கட் கிழமை

ஸங்க்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து (விஸ்ணு ஸஹஸ்ரநாமம்)- நாராயணன் என்ற ஒலி கேட்ட மாத்திரத்தில் துன்பங்கள் அகலும்

 

ஜூலை 10 செவ்வாய்க் கிழமை

ஒரே கருத்துடையவர்களை ஒன்று சேர்ப்பதில் இறைவன் (பிரம்மா) வல்லவன் (பாத தாடிதக)

ஸர்வதா ஸத்ருசயோகேஷு நிபுணாஹா கலு ப்ரஜாபதிஹி

ஜூலை 11 புதன் கிழமை

இறைவனின் சக்தி எல்லாக் கதவுகளையும் திறந்துவிடும் (ராமாயண மஞ்சரி)- ஸர்வத்ர விவ்ருத த்வாரா தைவசக்திர்  கரீயஸீ

 

ஜூலை 12 வியாழக் கிழமை

சேஷன் என்னும் நாகம் உலகையே தாங்குவது கண்டு கிருஷ்ணன் அதைப் படுக்கையாக வைத்துக் கொண்டான் (குமார ஸம்பவம் 3-13)

வ்யாதிஸ்யதே பூதரதாமவேக்ஷ்ய க்ருஸ்ணேன தேஹோத்த்ரணாய சேஷஹ

 

ஜூலை 13 வெள்ளிக் கிழமை

கடவுள் நினைத்தால் விஷம் அமிர்தமாக மாறும்; அமிர்தம் விஷமாக மாறும்– விஷமயம்ருதம் க்வச்சித் பவேதம்ருதம் வா விஷமிஸ்வரேச்சயாச்சயா- ரகுவம்சம் 8-46

 

 

ஜூலை 14 சனிக் கிழமை

கடவுள் அருள் இருந்தால் எதிரியும் அன்பைப் பொழிவான்

ஸானுகூலே ஜகந்நாதே விப்ரியஹ சுப்ரியோ பவேத் (சுபாஷிதரத்ன கண்டமஞ்சுசா)

 

ஜூலை 15 ஞாயிற்றுக் கிழமை

இறைவனின் எண்ணத்தை எவரும் தடுக்கவியலாது- மஹா பாரதம்

பலீயஸீ கேவலம் ஈஸ்வரேச்சா

 

ஜூலை 16 திங்கட் கிழமை

ஆண்டவனின் அருள் இருக்கும்போது அடையமுடியாததும்  உண்டோ?- கதா சரித் ஸாகரம்

ப்ரஸன்னே ஹி கிமப்ராப்யமஸ்தீஹ பரமேஸ்வரே

ஜூலை 17 செவ்வாய்க் கிழமை

பிரம்மாவின் படைப்புகள் நம்ப முடியாத அளவுக்கு அற்புதமானவை- கதா சரித் ஸாகரம்

ப்ரஜாபதேர் விசித்ரோ ஹி ப்ராணிஸர்கோஸதிகாதிகஹ

 

ஜூலை 18 புதன் கிழமை

எவரும் சிவபிரானின் உண்மைப் பெருமையை உணரவில்லை– குமார சம்பவம் 5-77

ந ஸந்தி யாதாத்யர்விதஹ பினாகினஹ

ஜூலை 19 வியாழக் கிழமை

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்

 

ஜூலை 20 வெள்ளிக் கிழமை

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

 

ஜூலை 21 சனிக் கிழமை

உலகங்கள் அனைத்துமே பிரம்மாவினால் உருவாக்கப்பட்டன- வால்மீகி ராமாயணம் 4-24-41

லோகோ ஹி ஸர்வோ விஹிதோ விதாத்ரா

ஜூலை 22 ஞாயிற்றுக் கிழமை

கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும்

ஜூலை 23 திங்கட் கிழமை

கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்தாற்போல

ஜூலை 24 செவ்வாய்க் கிழமை

சிவாய நம ஓம் என்போர்க்கு அபாயம் ஒருபோதும் இல்லை

ஜூலை 25 புதன் கிழமை

கடவுளின் லீலைகளை யாரே அறிவார்?- விக்ரமோர்வஸீயம்

கோ தேவதா ரஹஸ்யானி தர்க்கயிஷ்யதி

 

ஜூலை 26 வியாழக் கிழமை

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியனுக்கு மேல் தெய்வமும் இல்லை

 

ஜூலை 27 வெள்ளிக் கிழமை

சிவ சிவ என்கிலர் தீவினையாளர்

ஜூலை 28 சனிக் கிழமை

மதுநமக்கு மதுநமக்கு மதுநமக்கு விண்ணெலாம்

மதுரமிக்க ஹரிநமக்கு மதுவெனக் கதித்தலால்- பாரதி

 

ஜூலை 29 ஞாயிற்றுக் கிழமை

துன்பம் நெருங்கி வந்த போதும்—நாம்
சோர்ந்துவிடல் ஆகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வம் உண்டு—துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!- பாரதி

 

ஜூலை 30 திங்கட் கிழமை

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.- பாரதி

ஜூலை 31 செவ்வாய்க் கிழமை

ஏகம் ஸத் விப்ராஹா பஹுதா வதந்தி- ரிக் வேதம்

உண்மை/ கடவுள் ஒன்றே; அறிஞர்கள் பலவாறு பகர்வர்.

 

–Subham–

 

 

 

 

 

 

காந்திஜியும் மத மாற்றமும் (Post No.5155)

Written by S NAGARAJAN

 

Date: 28 JUNE 2018

 

Time uploaded in London –   7-27 AM (British Summer Time)

 

Post No. 5155

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

காந்திஜியும் மத மாற்றமும்

 

ச.நாகராஜன்

 

மஹாத்மா காந்தி அடிக்கடி தான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதாகக் கூறி வந்தார்.

கிறிஸ்தவ மிஷனரிகள் அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களை மதம் மாறச் செய்வதில் அவர் வருத்தமும் கோபமும் கொண்டார்.

பல்வேறு சமயங்களில் அவர் அவர்களை இதற்காகக் கண்டித்துள்ளார்.

ஒரே ஒரு உரையை மட்டும் இங்கு காணலாம்:

23-4-1931 தேதியிட்ட அவரது உரையில் பல கருத்துக்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன.

அவற்றின் சாரத்தைத் தமிழிலும் மூலத்தை – ஒரிஜினலை – ஆங்கிலத்திலும் கீழே காணலாம்.

மனிதாபிமானத்திற்காக அல்லாமல் மதமாற்றத்திற்காக கல்வி,மருத்துவ உதவி போன்றவற்றை ஏழை மக்களுக்கு அவர்கள் செய்வதாக இருந்தால் அதை நான் ஆதரிக்க மாட்டேன்.

ஒவ்வொரு தேசமும் அதன் மத நம்பிக்கை இதர தேச மத நம்பிக்கை போலவே நல்லது என்று கருதுகிறது.

இந்தியாவில் உள்ள மத நம்பிக்கைகள் அங்குள்ள மக்களுக்கு நிச்சயமாகப் போதுமானது. ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது இந்தியாவிற்குத் தேவையே இல்லை.

 

மனிதாபிமானம் என்றபெயரில் மதம் மாற்றுவது ஆரோக்கியமான விஷயம் அல்ல. இங்குள்ளோர் அதனால் மிகவும் வருத்தமடைகின்றனர். மதம் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். அது இதயத்தைத் தொடும் ஒன்று. கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் ஒரு டாக்டர் ஏதோ ஒரு வியாதியை எனக்குக் குணப்படுத்தி விட்டார் என்பதற்காக நான் ஏன் மதம் மாற வேண்டும்? அவரது செல்வாக்கில் நான் இருக்கும் போது அப்படி ஒரு டாக்டர் அதை ஏன் எதிர்பார்க்க வேண்டும் அல்லது அப்படி மாற ஏன் யோசனை கூற வேண்டும்? அவரது மருத்துவத்தினால் குணமாவதே அவருக்கான சிறந்த பரிசும் திருப்தியும் இல்லையா? ஒரு மிஷனரி கல்வி நிலையத்தில் நான் படிக்கையில் கிறிஸ்தவபோதனைகள் என் மேல் ஏன் திணிக்கப்பட வேண்டும்? எனது அபிப்ராயத்தில் இவை என்னை மேலே தூக்கி விடும் ஒன்றல்ல; இரகசிய எதிர்ப்பிற்காக இல்லையென்றாலும் அது சந்தேகத்திற்கு இடமளிக்கும் ஒன்றாகும். மதமாற்ற வழிமுறைகளானது சீஸரின் மனைவி போல சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.மதசார்பற்ற விஷயம் போல மத நம்பிக்கை இருத்தல் வேண்டும். அது இதயம் பேசும் மொழியால் தரப்படும் ஒன்று. ஒரு மனிதன் ஜீவனுள்ள நம்பிக்கையைத் தன்னிடம் கொண்டிருந்தால் அது ரோஜா மலரின் வாசனை போல மணம் பரப்பும். கண்ணுக்குத் தெரியாத அதன் தன்மையினால் கண்ணுக்குத் தெரியும் மலர் இதழ்களின் அழகை விட அதன் செல்வாக்கு வெகு தூரம் வரை பரப்பும்.

 

நான் மதமாற்றத்திற்கு எதிரானவன் இல்லை. ஆனால் அதன் நவீன முறைகளுக்கு எதிரானவன். மதமாற்றம் என்பது இன்று வணிகமாகி விட்டது. ஒரு மிஷனரி அறிக்கையில் ஒரு மனிதனை மதமாற்ற தலைக்கு ஆகும் செலவு எவ்வளவு என்றும் அதன் அடிப்படையில் அடுத்த “அறுவடைக்கு” ஆகும் செலவுக்கு பட்ஜெட் தர வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருப்பதை நான் படித்தேன்.

 

“ஆமாம். இந்தியாவின் பெரிய மத நம்பிக்கைகள் அதற்குப் போதும். கிறிஸ்தவம், யூதம் தவிர ஹிந்து அதன் கிளைகள்,இஸ்லாம்,ஜொராஷ்ட்ர மதம் ஆகியவை ஜீவனுள்ள மதங்கள். எந்த ஒரு மதமும் பூரணமானதல்ல.

எல்லா மதங்களும் சமமானவை. ஆகவே வேண்டுவது என்னவெனில் உலகின் பெரும் மதங்களைப் பின்பற்றுவோரிடையே நட்புடனான தொடர்பு வேண்டுமேயன்றி மற்றவற்றை விட பெரிது என்று காட்டும் பயனற்ற முயற்சி தேவையில்லை. அப்படிப்பட்ட நட்பு ரீதியிலான தொடர்பால் நமது மதத்தில் உள்ள குறைகளையும் தேவையற்றவற்றையும் களைந்து விட முடியும்.

 

மேலே நான் கூறியவற்றால், இந்தியாவில் மதமாற்றத்திற்கான தேவை இல்லை. சுய தூய்மை, ஆன்மாவை உணர்தல் ஆகிய மாற்றமே இன்றைய அவசரத் தேவை.  இதை மதமாற்றம் என்று சொல்லப்படுவதற்கு என்றுமே அர்த்தமாகக் கொண்டதில்லை.

 

இந்தியாவை மாற்ற வருபவரிடம், “வைத்தியரே, முதலில் உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும்” என்று சொல்ல வேண்டுமல்லவா?

(மகாத்மா காந்தி நூல்கள் தொகுதி 46 பக்கம் 28)

**

ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

 

Gandhiji clarified his views on the role of foreign missionaries in India. (23-4-1931)

 

“(If) instead of confining themselves purely to humanitarian work such as education,

medical services to the poor and the like, they would use these activities of theirs for

the purpose of proselytizing, I would certainly like to withdraw. Every nation considers

its own faith to be as good as that of any other. Certainly, the great faiths held by the

people of India are adequate for her people. India stands in no need of conversion from

one faith to another.

“Let me now amplify the bald statement. I hold that proselytizing under the cloak of

humanitarian work is, to say the least, unhealthy. It is most certainly resented by the

people here. Religion after all is a deeply personal matter, it touches the heart. Why

should I change my religion because a doctor who professes Christianity as his religion

has cured me of some disease or why should a doctor expect or suggest such a change

whilst I am under his influence? Is not his medical relief its own reward and

satisfaction? Or why should I, whilst I am in a missionary educational institution, have

Christian teaching t^mist upon me? In my opinion these practices are not uplifting and

give rise to suspicion if not even secret hostility. The methods of conversion must be

like Caesar^ wife above suspicion. Faith is imparted like secular subjects. It is given

through the language of the heart. If a man has a living faith in him, it spreads its aroma

like the rose its scent. Because of its invisibility, the extent of its influence is far wider

than that of the visible beauty of colour of the petals.

“I am, then, not against conversion. But I am against the modern method of it.

Conversion nowadays has become a matter of business like any other. I remember

having read a missionary report saying how much it cost per head to convert and then

present a budget for ‘the next harvest’.

“Yes, I do maintain that India’s great faiths all suffice for her. Apart from Christianity

and Judaism, Hinduism and offshoots, Islam and Zoroastrianism are living faiths. No one

faith is perfect.

All faiths are equally dear to their respective votaries. What is wanted therefore is living

friendly contact among the followers of the great religions of the world and not a clash

among them in fruitless attempt on the part of each community to show the superiority

of its faith over the rest. Through such friendly contact it will be possible for us all to rid

our respective faiths of shortcomings and excrescences.

“It follows from what I have said above that India is in no need of conversion of the kind

I have in mind. Conversion in the sense of self-purification, self-realization is the crying

need of the times. That, however, is not what is ever meant by proselytizing. To those

who would convert India, might it not be said, ‘Physician heal thyself’ ? (Complete Works of Mahatma Gandhi – Volume 46:Page 28)

**

மதமாற்றம் பற்றிய காந்திஜியின் கருத்துக்களை இதற்கு மேல் விளக்க வேண்டிய தேவை இல்லை.

இன்றைய போலி செகுலரிஸவாதிகள் காந்திஜியை தங்கள் துஷ்பிரசாரத்திற்கு இனியும் இரையாக்கத் தேவையில்லை.

1931ஆம் ஆண்டு அவர் கூறிய இந்தக் கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தும்.

மதமாற்றப் பாதிரிகள் இன்னும் தீவிரமாக மக்களை ஏமாற்றுவதை நாடெங்கும் தினம்தோறும் பார்த்து வருகிறோம்.

கடலோரப் பகுதிகளிலும், மலைவாழ் மக்களின் பட்டி தொட்டிகளிலும், தேசத்தின் எல்லையோரப் பகுதிகளிலும் அவர்களின் முயற்சி அதிக அளவில் அதிகப் பணச்செலவில் இன்றும் தொடர்கிறது.

மதமாற்றத்திற்காக தேசத்தைத் துண்டாடும் கலவரங்களைத் தூண்டிவிடும் அளவிற்கு இன்றைய நிலைமை மோசமாகி விட்டது.

 

கிறிஸ்தவ பாதிரிகளே, முதலில் உமது வியாதியிலிருந்து நீவீ ர்  உம்மைக் குணப்படுத்திக் கொள்ளும் என்று காந்திஜியின் வார்த்தைகளை அப்படியே கூறி அவர்களை உடனடியாக பாரதத்தை விட்டு அகற்றுவதே இன்றைய தேவை.

***

காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்! (Post No.5139)

Written by S NAGARAJAN

 

Date: 23 JUNE 2018

 

Time uploaded in London –  6-46 am  (British Summer Time)

 

Post No. 5139

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கர்ம பலன் அதிசயம்

காலம் வருமுன்னே காலன் வர மாட்டான்!

 

ச.நாகராஜன்

 

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்.

ஹிந்து மதம் கூறும் கர்ம பல சித்தாந்தத்தின் படி இது சத்தியம்.

சில உண்மை சம்பவங்களைப் பார்ப்போம்.

1

டைட்டானிக் கப்பல் விபத்தைப் பற்றி அனைவரும் அறிவோம்.

அதன் முதல் பயணத்திலேயே அது விபத்திற்குள்ளானது.

அதில் பயணம் செய்தவர்களுள் ஜேம்ஸ் க்ரக் (James Kruck) என்பவரும் ஒருவர். சிகாகோவைச் சேர்ந்தவர் அவர். மூழ்க முடியாத கப்பல் என்று வர்ணிக்கப்பட்ட டைட்டானிக் மூழ்கவே அதில் பல நூறு பேர் உயிரிழந்தனர். (2222 பேர்கள் கப்பலில் இருந்தனர்; 1517 பேர்கள் உயிரிழந்தனர்)

ஆனால் அதில் ஜேம்ஸ் க்ரக் உயிர் பிழைத்தார்.

பின்னர் அடுத்து டார்பிடோவிற்கு இலக்கான லூஸிடானியா(Lusitania) வில் அவர் பயணித்தார்.

அதிலும் அவர் உயிர் பிழைத்தார்.

பின்னர் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிகள் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதின.

 

அதில் ஒன்றில் பயணம் செய்தவர் நமது ஜேம்ஸ் க்ரக்.

அந்த விபத்திலும் கூட ஒரு சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்தார்.

 

அவருக்கு 68 வயதான போது மூன்றாம் மாடி ஜன்னலிலிருந்து கீழே விழுந்தார். காயங்கள் ஏற்பட்டாலும் உயிர் பிழைத்தார்.

மரணத்தை வென்ற மாவீரனாக அவர் காணப்பட்டார்.

ஆனால் என்ன அதிசயம்!

 

ஒரு அடி ஆழம் கூட இல்லாத ஒரு சிற்றோடையை ஒரு நாள் அவர் கடக்க நேரிட்டது. அப்போது மாரடைப்பு ஏற்பட அந்த நீரோடையில் அவர் விழுந்தார். உயிர் துறந்தார்.

காலனை விரட்டி விரட்டி அடித்த அவ்ர் காலம் வந்தவுடன் அவன் வசமானார்.

அதிசயம், ஆனால் உண்மை!

 

2

 

கல்கத்தா செய்தித்தாளான அம்ருத பஜார் பத்ரிகா தனது 23-6-1974 தேதியிட்ட இதழில் ஒரு உண்மைச் சம்பவத்தைப் பிரசுரித்தது.

திருமதி கான்சிலேரியா வில்லானுவேவா (Mrs Cancilaria Villanueva) தென் பிலிப்பைன்ஸில் (Southern Philippines) ஒரு கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வயது 52.

தீவுகளுக்கு இடையே பயணித்துக் கொண்டிருந்த அலோஹா (Aloha) என்ற அந்தக் கப்பல் திடீரென்று தீ விபத்தால் பற்றி எரிந்து உடைந்தது. ஜாம்போங்கா டெல் -நார்ட் (Zamboanga Del –Norte) என்ற மாகாணத்தின் அருகில் அது ஜூன் 2ஆம் தேதி மூழ்கியது. அதில் பயணித்த 271 பயணிகளில் 4 பேர் உயிரிழந்தனர்.

 

அதிலிருந்து விழுந்த கான்சிலேரியா ஒரு கடல் ஆமையின் முதுகில் ஏறினார். அந்த ஆமை அவரை இரண்டு நாள் பாதுகாப்புடன் சுமந்தது. 48 மணி நேரம் கழித்து அவர் ஒரு கப்பலைப் பார்த்தார். உதவி கோரிக் கத்தினார். கப்பலில் வந்த மாலுமி அவர் ஒரு பெரிய எண்ணெய் டிரமில் ஏறி வந்து கொண்டிருந்ததாக நினைத்தார். ஆனால் உண்மையில் பார்த்தால் அது ஒரு கடல் ஆமை. யாராலும் இதை நம்ப முடியவில்லை.

அவரைப் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றினர் மாலுமிகள்.

என்றாலும் கூட ஆமை அங்கிருந்து போகவில்லை. இரண்டு முறை கப்பலை சுற்றி விட்டு, தனது ‘பயணி’ பாதுகாப்பாக இருபப்தை உறுதி செய்தவிட்ட பின்னர், மெதுவாக அது அங்கிருந்து நகர்ந்தது.

 

இந்த அதிசயச் செய்தியை Bulletine Today என்ற பத்திரிகை வெளியிட்டது. அது உலகச் செய்தி ஆனது.

காலம் வரவில்லை அந்தப் பெண்மணிக்கு; ஆகவே காலனும் அவரிடம் வரவில்லை.

 

 

3

சவாய் மதோபூரில் ஜக்கர்பந்த் அருகே படகு ஒன்று விபத்திற்குள்ளானது. தாயும் தந்தையும் நதியில் மூழ்கி இறந்தனர்.

 

அவர்களது ஒரு வயது மகன் ஒரு புல் கட்டில் விழ அந்தக் குழந்தை உயிர் பிழைத்தது.

இதை PTI பெரிதாக வெளியிட்டது.

4

இன்னொரு  PTI செய்தி. நியூயார்க்கிலிருந்து வந்த செய்தியை அது 26-2-1952 அன்று வெளியிட்டது.

 

பல மாடி அடுக்குக் கட்டிடம். அதில் ஆறாவது மாடி ஜன்னலிலிருந்து ஒரு மூன்று வயதுக் குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது. டெலிவிஷன் ஏரியலில் தடுக்கிக் கீழே வந்து விழுந்த குழந்தை அம்மா அம்மா என்று கத்திக் கொண்டே சாதாரணமாக எழுந்து நடந்தது!

 

5

ஈரானில் ஒரு பூகம்பம். இடிபாடுகளுக்கு இடையே ஏழு நாட்கள் கழித்து இரு குழந்தைகள் உட்பட ஏழு பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இது போன்ற பூகம்ப மீட்புச் செய்திகள் ஏராளம் உண்டு.

 

6

‘ஈஸ்வரஸ்ய வஷே சர்வம் சராசரமிதம் ஜகத்’

 

இந்த சராசரம் ஈஸ்வரனின் வசம் உள்ளது.

உண்மை; அனைத்தையும் நமது கர்மமே நிர்ணயிக்கிறது.

காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்!

சம்பவங்கள் ஆயிரம் ; உள்ளே உறைந்திருக்கும் சத்தியம் ஒன்றே தான்!

***