இந்துக்கள் கருத்து: டாக்டர்கள், வழக்கறிஞர்கள் பற்றி!

doctor

Research Article No.1995

Written  by London swaminathan

Date 15th July 2015

Time uploaded in London: 18-49

நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள் – அர்த்த சாஸ்திரம் 3-20-24

எந்த ஒரு அரசன் சட்டப்படி, நியாயமாகக் குடிமக்களைப் பாதுகாக்கிறானோ அவன் சொர்க்கத்துக்குச் செல்லுவான்; அநியாய தண்டனைகள் விதிக்கும் அரசன்/நீதிபதி சொர்க்கத்துக்குச் செல்லமாட்டான் – அர்த்த சாஸ்திரம் 3-1-41

குற்றத்துக்கு ஏற்ற தண்டனை தருவதும், தவறு செய்தவர்களைத் தண்டிப்பதும்,  தன் மகனேயானாலும் தண்டிப்பதுமே இவ்வுலகத்தையும் மேலுலகத்தையும் காக்கின்றன – அர்த்த சாஸ்திரம் 3-1- 42

டயோஜெனிஸ் என்ற கிரேக்க தத்துவமேதை 2300 ஆண்டுகளுக்கு முன்னர், டாக்டர்களைப் பற்றியும், வழக்கறிஞர்கள் பற்றியும் என்ன சொன்னார் என்று நேற்று பார்த்தோம். அதாவது,

டாக்டர்கள் = உயிர் பறிக்கும் யம தர்மர்கள்

வக்கீல்கள் = பணம் பறிக்கும் கொள்ளைக்காரர்கள்

என்ற கருத்து அந்தக் காலத்திலேயே அங்கு இருந்தது.

நமது நாட்டில் டாக்டர்கள் பற்றியும், நீதித் துறை அறிஞர்கள் பற்றியும் மிக உயர்ந்த கருத்தும் மரியாதையும் இருந்தது. நீதித்துறையில் வழக்கறிஞர்கள் என்ற பிரிவு இருந்ததற்கான குறிப்புகள் எனக்குக் கிடைக்கவில்லை. நீதித்துறை பற்றி மனுதர்ம சாத்திரத்தில் எட்டாவது அத்தியாயத்தில் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. கௌடில்யர் ( சாணக்கியர்)  எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் மூன்று, நான்காவது அத்தியாயங்களில் டாக்டர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மிகவும் அதிசய விஷயம் அந்தக் காலத்திலேயே நுகர்வோர் பாதுகாப்பு இருந்திருக்கிறது. இதெல்லாம் இப்பொழுதுதான் மேலை நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது. நிறைய பேர் டாக்டர்கள் மீதும், ஆஸ்பத்திரிகள் மீதும் மில்லியன் கணக்கில் பணம் கேட்டு வழக்குப் போட்டபின்னர் இதையெல்லாம் மேலை நாட்டில் கொண்டுவந்தனர்.

இந்துக்களின் யஜூர் வேதத்தில் ருத்ரம் என்னும் பகுதியில், சிவபெருமானையே டாக்டர் (பிஷக்) என்று போற்றுகின்றனர். இது போல மற்ற கடவுளருக்கும் அடைமொழி இருப்பதை முன்னரே கொடுத்துள்ளேன்.

medicalstamps1

அர்த்தசாத்திரம் சொல்லுவதாவது:

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாதான் உலகிலேயே நாகரீகம் வாய்ந்த நாடு- பணக்கார நாடு என்று எனது 1800 கட்டுரைகளிலும் ஏராளமான சான்றுகலைக் கொடுத்துவிட்டேன். புறச் ச்சுழல், நுகர்வோர் பாது காப்பு என்பதெல்லாம் அப்போதே நாம் விவாத்தித்த தலைப்புகள்:

“நோயாளியின் உயிருக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சிகிச்சையாக இருந்தால் முதலில் அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னரே சிகிச்சையைத் துவக்க வேண்டும்.சிகிச்சை காரணமாக நோயாளி இறந்தாலோ, உடலூனம் அடைந்தாலோ டாக்டருக்கு தண்டணை கொடுக்க வேண்டும்” – 4-1-56

“நோயாளிக்கும் இது பற்றி சொல்லவேண்டும் அல்லது மேற்கண்டவாறு டாக்டருக்கு தண்டனை உண்டு. ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தினால் என்ன தண்டனையோ அதே தண்டனை தரவேண்டும்”

காயமடைந்த அல்லது விஷ உணவினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்குச் சிகிச்சை தருவதற்கு, ஒரு வீட்டிற்கு டாக்டர் சென்றால், அது பற்றி கண்காணிப்பு அதைகாரிகளான கோப அல்லது ஸ்தானிக- ருக்கு அறிவிக்க வேண்டும் – 2-36-10

இது போன்ற கடுமையான விதிகள் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே நடைமுறையில் இருந்ததால், டாக்டகள் எல்லோரும் ஒழுங்குக் கட்ட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர்.

21  Pirmoji širdies operacija

சில பழமொழிகள்:

வைத்யே க்ருஹச்தே ம்ரியதே கதன்னு

டாக்டர் வீட்டில் இருக்கும்போது மரணம் எங்கே வரும்?

ஆனால் அனுபவமில்லாத , தாமதமாக வரும் டாக்டர்கலைக் கண்டிக்கும் பழமொழிகளும் இருந்தன:

அனுபவ ரஹிதோ வைத்யே  லோகே நிஹந்தி ப்ராணின: ப்ராணான்

அனுபவமில்லாத மருத்துவன் உயிரை வாங்கிவிடுவான்

சீர்ஸே ஸர்ப: தேசாந்தரே வைத்ய:

தலைக்கு மேலே பாம்பு தொங்குகிறது, மருத்துவரோ எங்கோ இருக்கிறார்.

ஹத்வா ந்ருனாம் சஹஸ்ரம் பஸ்ச்சாத் வைத்யோ பவேத் சித்த:

ஆயிரம் பேரைக் கொன்றவனே (அரை) வைத்தியன்.

அதாவது மருத்துவர்கள், தவறுகளின் மூலமும், அனுபத்தின் மூலமும் பாடம் கற்கிறார்கள்.

judiciary 2

நீதித்துறை பொன்மொழிகள்

சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் தவறிழைப்போருக்கான (3-11) தண்டனைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

நீதி மன்றத்துக்கு விசாரணைக்கு வரும் அரசன் புரோகிதர்களுடனும் ஆலோசகர்களுடனும் தகுத உடையில் வரவேண்டும் (மனு ஸ்மிருதி 8-1)

18 வகையான குற்றங்கள் இருக்கின்றன (இந்தப் பட்டியல் எட்டாம் அத்தியாயத்தில் உள்ளது). அரசன் நீதி வழங்கவரவில்லையானால், புரோகிதர்களையும், மூன்று நீதிபதிகளையும் அனுப்ப வேண்டும்(மனு ஸ்மிருதி.

பொய்ச்சாட்சியம் கொடுப்பவன் குற்றவாளி

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். கண், வாய் ஆகிய உறுப்புகளில் ஏற்படும் மாற்றம்,தனை அறியாது செய்யும் சேட்டைகள், அபிநயம், பேச்சு, நடை ஆகியன குற்றவாளியைக் காட்டிவிடும். (மனு ஸ்மிருதி 8-25/26)

அரசனோ அல்லது அவனது சுற்றத்திலுள்ள ஒருவரோ வழக்கு தொடர முடியாது. அதுபோல பிறர் கொண்டுவந்த வழக்கையும் விசாரிக்காமல் ஒதுக்கமுடியாது.

வேட்டைக்குச் செல்லுபவன் எப்படி, காலடிச் சுவடு, ரத்தக் கறை ஆகியவற்றைக் கொண்டு மிருகத்தைக் கண்டுபிடிப்பானோ அதுபோல அரசனும் ஊகத்தின் மூலம் உண்மையைத் தொடரவேண்டும்.

அரசனே விசாரிக்கையில், சாட்சியங்கள், வழக்கின் தன்மை, இடம், பொருள், ஏவல் ஆகியவற்றை அறியவேண்டும். (மனு ஸ்மிருதி 8-44/46)

judiciary

அந்தக் காலத்தில் நீதித்துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், தண்டனை வழங்குவோர், போலீஸ் ஆகியோர் இருந்தனர். ஆனால் வழக்கறிஞர்கள் என்பவர்கள் இருந்ததாகத் தெரியவில்லை. மருத்துவத் துறையில் டாக்டர், நர்ஸ், கம்பவுண்டர்கள் இருந்தது திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரம் மூலம் தெரியவருகிறது.

swami_48@yahoo.com

செய்நன்றி:- நன்றியுள்ள யானையும், குடிகாரப் பாம்பும்!

panchatantra

கட்டுரை எண் –.1989

Compiled by London swaminathan

Date 12th July 2015

Time uploaded in London: காலை 6-46

 

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு

என ஆற்றுங்கொல்லோ உலகு –குறள் 211

இவ்வளவு மழை பெய்து பூமியை வளப்படுத்துகிறதே மழை. அதற்கு நாம் என்ன நன்றி செய்யமுடியும்? அதே போல பலனை எதிர்பார்க்காமல் செய்ய்யும் உதவியே சிறந்தது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு – குறள்- 110

என்ன தப்பு செய்தாலும் அதற்கு எல்லாம் பரிகாரம் உண்டு. நன்றியை மறந்த ஜீவன்களுக்கு விமோசனமே இல்லை.

 9129e-elephant2b1

 

நமது பஞ்ச தந்திரக் கதைகளிலும், ஈசாப் கதைகளிலும் நன்றியுள்ள பிராணிகள் பற்றி நிறையவே படித்து இருக்கிறோம். இப்பொழுது பேஸ்புக், யூ ட்யூப் வீடியோ பதிவுகளைப் பார்க்கையில் அவை எல்லாம் கதை அல்ல, உண்மையே என்று தெரிகிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு யானை முதலையின் வாயில் சிக்கியவுடன் குரல் கொடுத்தது. உடனே மற்ற யானைகள் வந்து அதைக் காப்பாற்றியது நமது கஜேந்திர மோட்சக் கதையை நினைவு படுத்தியது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ஒரு பேராசிரியர் வளர்த்த ஹசிகோ என்ற பெயருடைய நாய் தினமும் பேராசிரியருடன் ஸ்டேஷனுக்குப் போய் அவரை வழியனுப்பிவிட்டு வரும். அவர் திடீரென இறக்கவே அதை அறியாத நாய் ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதம் அதே ஸ்டேஷனுக்கு அதே நேரத்தில் சென்று காத்திருந்துவிட்டு இறந்து போனது. டோக்கியோவில் இதற்கு வைத்த சிலையை அறியாத ஜப்பனியர் யாருமிலர். இப்படி எத்தனையோ கதைகளையும் ரிக் வேதத்தில் வரும் சரமா என்னும் நாய் பற்றியும் மஹாபாரதத்தில் தர்மனைப் பின்பற்றிச் சென்ற நாய் பற்றியும் முன்னரே எழுதிவிட்டேன். இரண்டு புதிய சம்பவங்களைப் பார்ப்போம்.

மவுன்ட் வில்சன் வானாராய்ச்சிக்கூட விஞ்ஞானி டாக்டர் வால்டர் ஆடம்ஸ் கூறிய விநோத சம்பவம்:

ஒரு காட்டில் வேட்டையாடச் சென்ற வேட்டைக்காரர் ஒரு யானை மிகவும் கஷ்டப்பட்டு நொண்டிக்கொண்டே செல்வதைப் பார்த்தார். அதைப் பின் தொடர்ந்து சென்றார். அது திடீரென்று கீழே சாய்ந்து விழுந்தது. அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அதன் காலில் பெரிய முள் குத்தி காயம் புரையோடிப் போயிருந்தது. உடனே அவர் முள்ளை எடுத்துவிட்டு காயத்துக்கு மூலிகை மருந்து தடவி காட்டிற்குள் போக விட்டார்.

நீண்ட காலத்துக்குப் பின்னர் அந்த வேட்டைக்காரர் அந்த ஊருக்கு வந்த சர்கசுக்குச் சென்றார். கையில்  அதிகம் காசு இல்லாத வேட்டைக்கரர் தானே. மிகவும் விலை குறைவான டிக்கெட் வாங்கி பின்னால் அமர்ந்திருந்தார். அந்த சர்கஸில் யானைகள் சாஹசம் செய்யும் காட்சி வந்தது. அதில் ஒரு யானை திடீரென்று கூட்டத்தில் பாய்ந்து அந்த வேட்டைக் காரரை துதிக்கையினால் அலாக்காகத் தூக்கி வந்து அதிக பணம் கொடுப்போர் அமரும் ஆசனத்தில் உட்காரவைத்துவிட்டு ஒரு சலாம் போட்டது. பின்னர் சர்கஸ்காரன் கொடுத்த பணியை செவ்வனே செய்தது. மறு நாள், காரணம் அறிந்த பத்திரிக்கைக்காரர்கள், அந்தச் செய்தியை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் வெளியிட்டனர். (உ.வே.சாமிநாத அய்யர் சொன்ன யானைக் கதைகளை, காஞ்சி மஹாசுவாமிகள் சமாதானப்படுத்திய யானை பற்றிய கதைகளை முன்னரே எழுதி இருக்கிறேன். கட்டுரையின் கடைசியில் உள்ள பட்டியலைக் காண்க).

46f37-snake-frog

நன்றியுள்ள பாம்பு!

ஒரு மீனவர் மீன் பிடிக்கச் சென்றார். கொஞ்ச நேரத்துக்குள் தூண்டிலில்மாட்டும் புழுக்கள் தீர்ந்துவிட்டன. அதிக மீன்களோ பிடிக்கவில்லை. ஏது செய்வதென்று அறியாது திகைத்தார். அப்பொழுது பூட்சுக்குப் பக்கத்தில் ‘உஸ்’ என்ற ஓசை கேட்டது. ஒரு குட்டிப் பாம்பு ஒரு சின்ன தவளையை வாயில் வைத்துக் கொண்டு நின்றது. மீன்பிடிக் கம்பால் அதைப் பிடித்து வாயிலிருந்த தவளையை எடுத்துக் கொண்டு அதைத் துண்டு துண்டாக்கி மீன் பிடிக்கத் துவங்கினார். பாம்போ அதே இடத்தில் நின்றது.

அடப் பாவமே! நம் உணவுக்காக அதன் உணவைப் பறித்துவிட்டோமே என்று பரிதாபபட்டு, தான் அவ்வப்போது சுவைத்துக் கொண்டிருந்த விஸ்கி மதுபானக் குப்பியிலிருந்து இரண்டு சொட்டு விஸ்கியை அதன் வாயில்விட்டார். பாம்பும் சென்றுவிட்டது

சிறிது நேரத்துக்குப் பின்னர் அதே பாம்பு மூன்று தவளைகளை வாயில் வைத்துக் கொண்டு அங்கே நின்றது!!

 hachiko

Picture of the most famous dog Hachiko  of Japan. The statue is in Tokyo. The dog went looking for his master every day for nine years and nine months.

I have given the famous stories of grateful dogs in my post, VEDIC DOG AND CHURCH DOG, posted on 18 January 2013(வேத நாயும் மாதாகோவில் நாயும்)

.Nature-India---Snakes---Gliding-Snake

Please read other animal stories posted earlier in this blog:

  1. Animal Einsteins (Part 1 and Part 2)
  2. Can parrots recite Vedas?
  3. Why do animals worship Gods?
  4. Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri
  5. Elephant Miracles

6). 45 Words for Elephant

  1. Can Birds Predict your Future?
  2. Two Little Animals That Inspired Indians
  3. Three Wise Monkeys from India
  4. Mysterious Tamil Bird Man

11.Alexander’s Dog and Horse, posted November 24, 2014

12.Vedic Sarama and Greek Hermes, posted on 24 June 2015

(இவை எல்லாம் தமிழிலும் மொழி பெயர்க்க ப்பட்டுள்ளன.)

Contact London Swaminathan at swami_48@yahoo.com

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு

earth

Research paper No 1949

Written by London swaminathan

Date: 22 June 2015

Uploaded in London at 9-45

அண்டம்= பிரபஞ்சம்

பிண்டம் = நமது உடல்

அண்டம், பிண்டம் என்பதெல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இவை வேத காலம் முதல் வழங்கி வரும் சொற்கள். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றால் என்ன பொருள்? நாம் பிரபஞ்சத்தில் காணும் எல்லாவற்றின் சிறு வடிவமே நமது உடல். இது இந்து மதத்தில் உள்ளது வெளிநாட்டினருக்குத் தெரியாது. அவர்கள் இதை கிரேக்க மொழியில் இதைப் பார்த்தவுடன் இது கிரேக்கர்களின் கண்டுபிடிப்பு என்று ‘என்சைக்ளோ பீடியா’ (கலைக் களஞ்சியம்) எல்லாம் எழுதி வைத்து விட்டனர். அவர்கள் இதை மைக்ரோகாஸ்ம், மேக்ரோ காஸ்ம் என்று அழைப்பர்.

இது எப்படி கிரேக்க மொழிக்கும் போனது? இந்துக்கள் வேத காலத்துக்குப் பின்னால் ஐரோப்பா முழுதும் குட்யேறி வேத நாகரீகத்தைப் பரப்பினர். விஞ்ஞான ரீதியில் அமைந்த சம்ஸ்கிருத மொழியைப் பரப்பினர். இதனால் கிரேக்கம், லத்தீன் மொழிகள் எல்லாம் பிறந்தன. இதற்குப் பின் ஐரோப்பிய மொழிகள் தோன்றின. மொழிகளில் இப்படி அபூர்வ ஒற்றுமை கண்டவுடன், வெள்ளைக்காரகள், அங்கிருந்து நாம் இங்கு வந்ததாகக் கதை கட்டிவிட்டனர். ஏனெனில் இது இந்தியாவை அவர்கள்  ஆளவும் மதத்தைப் பரப்பவும் வசதியாக இருந்தது. ஆக அந்தக் காலத்திலேயே இந்தக் கொள்கை அங்கு போனதற்கு எடுத்துக் காட்டாக வேதத்தில் உள்ள சரமா நாய்க் கதை கிரேக்க இதிஹாசத்தில் ஹெர்மஸ் என்ற பெயரில் உள்ளது. பஞ்ச பூதம், சப்த ஸ்வரம், பூமி என்பவள் தாய் — முதலிய கொள்கைகளை அவர்கள் நம்மிடமிருந்து எடுத்துக் கொண்டனர். அதில் ஒன்றுதான் இந்த அண்டம்—பிண்டம் பற்றிய கொள்கை.

பிதகோரஸ் முதலிய கிரேக்க அறிஞர்கள் இந்தியாவை நன்கு அறிவர். அவருக்குப் பின் வந்த சாக்ரடீஸின் சீடர் பிளாட்டோ, அவரது சீடர் அரிஸ்டாடில், அவரது சீடர் அலெக்ஸாண்டர். இதனால் அலெக்சாண்டருக்கு இந்தியா மீதும் சாது சந்யாசிகள் மீதும் அபார பற்று.

kircher_079-694x1024

“யத் அண்டே தத் பிரஹ்மாண்டே”

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்பதை வடமொழியில் யத் அண்டே த பிரம்மாண்டே – என்பர். இதை கிரேக்கர்கள் மைக்ரோ காஸ்ம் (உடல்), மேக்ரோகாஸ்ம் (பூமி அல்லது பிரபஞ்சம்) என்றனர். உபநிஷதங்களும், “ஒன்றே எல்லாவற்றிலும் உள்ளது, எல்லாம்  ஒன்றில் உள்ளது” — என்று கூறின. எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. அவைகளைத் தனியாகப் பிரிக்கமுடியாது என்றனர். விஞ்ஞானிகள் அணு மற்றும் அணுசக்தி பற்றிக் கொண்ட கருத்துகள் இதே போல இருக்கும். உபநிஷதங்கள் பிரம்மத்தையும் ஆத்மாவையும் வருணிப்பது விஞ்ஞான- பௌதீக கருத்துக்களை ஒத்திருக்கும்:

“இது பெரியதுக்குள் பெரியது, சிறியதெல்லாவற்றையும் விடச் சிறியது. பருப்பொருளும் அல்ல; நுணுக்கமானதும் அல்ல. தீயும் அல்ல, தண்ணீரும் அல்ல. நிழலும் அல்ல, இருட்டுமல்ல; ஆகாசமுமல்ல, வாயுவுமல்ல; எதிலும் ஒட்டாதது, சுவை இல்லாதது, வாசனை இல்லாதது, கண், காது, மூக்கு, வாய் இல்லாதது.உள்ளுக்குள் இல்லை, வெளியே இல்லை. எடுத்தாலும் குறையாது. அதிலிருந்து அதை எடுத்தால் அது குறையாது, அதுவே மிஞ்சி நிற்கும் (பூர்ணமதப் பூர்ணமிதம் ……………….. பூர்ணம் ஏவா உதிச்யதே)- பிருஹதாரண்யக உபநிஷத்தில் உள்ள இவை எல்லாம் இயற்பியலில் “குவாண்டம் தியரி” போல இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுவர்.

இந்துக்கள் எல்லாவற்றையும் விட வேகமானது மனம் என்பர். ஒளியானது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் பயணம் செய்து ஓராண்டில் கடக்கும் தொலைவை ஒளி ஆண்டு என்பர். இந்த வேகத்தை எதுவும் எட்ட முடியாது. இதற்கு அருகில் கூட வரமுடியாது என்கிறது விஞ்ஞானம். ஆயினும் மனோவேகம் என்பது 500 ஆண்டு ஒளி ஆண்டுக்கு அப்பால் உள்ளதையும் விட ஒரு நொடியில் நினைக்கும் சக்தியாகும். ஆனால் அவ்வேகத்தில் போக முடியுமா? நினைப்பது வேறு, போவது வேறு அல்லவா? ஆயினும் இந்து சாது சந்யாசிகள் அந்த வேகத்தில் செல்ல முடியும் என்கின்றனர். நாரதர் முதலிய த்ரிலோக சஞ்சாரிகள் நினைத்த மாத்திரத்தில் இவ்வாறு பயணம் செய்தனர்.

சாந்தோக்ய உபநிஷத் சொல்கிறது:

இருதயத்தில் ஒரு சிறு ஆகாசம் உள்ளது. இது விரிவடையும் அளவுக்கு வெளியே ஆகாசம் உள்ளது. அதை எல்லோரும் அறிய வேண்டும். வெளியே சூரியன், சந்திரன், நட்சத்திரங்களை எல்லாம் உள்ளடக்கிய பேராகாசம் இருதயத்தில் உள்ள ஆகாசத்துக்குள் இருக்கிறது.

சுவாமி விவேகாநந்தரும் இதை தனது சொற்பொழிவுகளில் தந்துள்ளார். நம்முடைய மனது போலவே பிரபஞ்ச மனது ஒன்று உள்ளது. எல்லாம் ஒன்றினுள் ஒன்று அடக்கம் என்பார்.

திருமூலர்

தமிழில் உடல் என்பது பிண்டம் என்றும், பிரபஞ்சம் என்பது பிரம்மாண்டம் என்றும் பல பாடல்களில் வருகிறது. ஆயினும் திருமூலர்தான் இக்கருத்தை அதிகமான பாடல்களில் சொல்கிறார். இதோ ஒரு பாடல்:

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே

garudapurana

கருட புராணம்

சாதாரண மனிதனுக்குப் புரியவைக்க உடலில் உள்ள ரத்த நாளங்களை ஆறுகளுக்கும், மேடு பள்ளங்களை- மலைகள் பள்ளத் தாக்குகள் ஆகியவற்றுக்கும், முடி முதலியவற்றை தாவரங்களுக்கும் ஒப்பிடுவர்.

கருட புராணத்தில் ஒரு நீண்ட வருணனை உள்ளது:

உள்ளங்கால்=அதலம்

கணைக்கால்=விதலம்

முழந்தாள்=சுதலம்

அதற்குமேல்=நிதலம்

தொடை=தராதலம்

ஆசனவாய்ப் பகுதி=ரசாதலம்

இடை=பாதாளம்

நாபி=பூலோகம்

வயிறு=புவர் லோகம்

இருதயம்=சுவர்கம்

தோள்=மஹாலோகம்

முகம்=ஜனலோகம்

நெற்றி=தபோலோகம்

தலை=சத்தியலோகம்

திரிகோணம்=மேரு

கீழ்க்கோணம்=மந்தரம்

வலப்பக்கம்= கயிலை

இடப்பக்கம்= இமயம்

மேற்பக்கம்=நிஷதம்

தென்பக்கம்=கந்தமாதனம்

இவ்வாறு ஈரேழு 14 புவனங்களையும் மனித உடலுக்குள் அடக்கிய பின்னர் இடக்கை ரேகைகளை வருண பர்வதத்துகும்,எலும்பை நாவலந்தீவுக்கும், மேதசை சாகத் தீவுக்கும், தசயை குசத் தீவுக்கும்,நரம்பை கிரவுஞ்ச தீவுக்கும் ஒப்பிட்டுவிட்டு ஏழு கடல்களை உடலில் ஓடும் திரவங்கள் ஆகியவற்றுக்கு ஒப்பிடுகிறது.

பின்னர் நவக் கிரஹங்களை கீழ்கண்டவாறு ஒப்பிடும்:

சூரியன்= நாத சக்ரம்

சந்திரன்=பிந்து சக்ரம்

அங்காரகன்=நேத்திரம்

புதன்=இருதயம்

குரு= வாக்கில்

வெள்ளி/சுக்ரன்

சனி=நாபி

ராஹு=முகம்

கால்=கேது

இவை எல்லாம் இந்துக்களின் சிந்தனை சென்ற வழித் தடத்தை காட்டும். அறிவியல் பூர்வமாகச் சிந்தித்ததோடு பிரபஞ்சத்தையே தன்னில்  – ஒரு மனிதனிடத்தில் – அடக்கிவிட்டனர்.

Global human chain

அஹம் பிரம்மாஸ்மி

நானே பிரம்மம் என்பது வேத வாக்கு. நான் என்பதை சம்ஸ்கிருதத்தில் ‘அஹம்’ என்பர். சம்ஸ்கிருத அரிச் சுவடியில் அ- என்பது முதல் எழுத்து, ஹ—என்பது கடைசி எழுத்து. உலகிலுள்ள எந்தப் பொருளையும் இந்த எழுத்துக்களால் சொல்லிவிடலாம். ஆக அஹம் – நான் – என்பது உலகம் முழுவதையும் உள்ளடக்கியது. அஹம் என்றால் உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் நாம் குறிக்கிறோம்:-

அஹம்= பிண்டம்

அ – – ஹ = பிரம்மாண்டம்

அஹத்தில் (நான்/என்னில்,பிண்டத்தில், எனது உடலில்) அடங்கிவிட்டது பிரம்மாண்டம்!!!

—சுபம்—-

மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்!

k quote3

Compiled by S NAGARAJAN

Article No.1909; Dated 4 June 2015.

Uploaded at London time: 6-22 am

By ச.நாகராஜன

 

மூன்று சொல் முத்துக்கள்

தமிழ் நூல்களில் மூன்று சொற்களில் அமைந்துள்ள சொல்லோவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. ஒவ்வொரு சொற்றொடரும் ஆழ்ந்த கருத்து. இலக்கிய அழகு, இன்சுவை, உணர்ச்சி வெளிப்பாடு போன்ற பல அம்சங்களை இனிதே தரும்.

கண்ணதாசனின் பாடல்களில் மூன்று சொல் முத்துக்களை எடுங்கள் என்றால் சுலபமாக அப்பாடல்களில் உளத்தைக் கொடுத்தோர் முன்னூறு பாடல்களை மூச்சு விடாமல் சொல்லி விடுவர்.

மொத்தப் பாடல்களையும் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் வியப்பு தான் மேலிடுகிறது. நாம் வியக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், கண்ணதாசனே கண்ணதாசனின் பாடல்களை கடும் விமரிசனத்திற்காகப் பார்த்தாலும் ஆச்சரியம் தான் படுகிறார். (கட்டுரையின் கடைசி பாராவைக் காண்க). அப்படி ஒரு பரந்த களத்தின் அடிப்படையில் அவரது பாடல்கள் எழுந்துள்ளன.

குறளில் மூன்று சொல் முத்துக்கள்

முதலில் குறளில் மூன்று சொல் முத்துக்களைப் பார்ப்போம்.(முழுவதையும் அல்ல, இடம் கருதி சிலவற்றைத் தான்!

செயற்கரிய செய்வார் பெரியர்     குறள்  26

அந்தணர் என்போர் அறவோர்      குறள்  30

அன்றறிவாம் என்னாது அறம்செய்க  குறள்  36

அறத்தான் வருவதே இன்பம்       குறள்  39

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை   குறள்  49

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?      குறள்  54

தம்பொருள் என்பதம் மக்கள்       குறள்  63

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்   குறள்  71

அன்பின் வழியது உயிர்நிலை    குறள்  80

மறவற்க மாசற்றார் கேண்மை    குறள்  106

நன்றி மறப்பது நன்றன்று     குறள்  108

அடக்கம் அமரருள் உய்க்கும்   குறள்  121

எல்லார்க்கும் நன்றாம் பணிதல்   குறள்  125

யாகாவார் ஆயினும் நாகாக்க   குறள்  127

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை   குறள்  439

அப்பப்பா, ஆழ்ந்த கருத்து மூன்றே சொற்களில்!

k quote1

மஹாகவி பாரதியாரின் மூன்று சொல் முத்துக்கள்

அடுத்து மகாகவி பாரதியாரின் கவிதைகளில் மிகச் சில எடுத்துக்காட்டுக்களைப் பார்ப்போம்.

அன்பென்று கொட்டு முரசே!

பெரிதினும் பெரிது கேள்

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே

வீணையடி நீ எனக்கு

நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!

ஆசை முகம் மறந்துபோச்சே!

மனதில் உறுதி வேண்டும்

பயமெனும் பேய்தனை அடித்தோம்

இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மூன்று சொல் மன்னன் கண்ணதாசன்

 

இந்த வகையில் கவியரசரின் கவிதைப் பூங்காவில் நுழைவோம்; கண்ணுக்கினிய சில நல்ல மலர்களைப் பார்ப்போம்.

செந்தமிழா எழுந்து வாராயோ – உன்

சிங்காரத் தாய்மொழியைப் பாராயோ

அன்பு நெறியிலே அரசாள – இந்த

அகிலமெல்லாம் தமிழர் உறவாட

துன்பங்கள் யாவும் பறந்தோட

தூய மனங்கொண்டு கவிபாட                 படம்: மதுரை வீரன்

தமிழனின் தாய்மொழியைப் பாராட்டி அகில உலக தமிழரை ஒன்று கூட்டி தூய மனம் கொண்டு கவி பாடி துன்பங்கள் யாவும் பறந்தோடச் செய்வோம் என்ற கற்பனையில் உயர்ந்த சிந்தனையைப் பார்க்கலாம்!

துள்ளித் திரிந்த பெண்ணொன்று

துயில் கொண்டதேன் இன்று

தொடர்ந்து பேசும் கிளியொன்று

பேச மறந்ததேன் இன்று                       படம்: காத்திருந்த கண்கள்

அல்லி பூத்த முகத்தினிலே முல்லை பூத்த நகை எங்கே, துள்ளித் திரிந்த பெண்ணொன்று இன்று துயில் கொண்டதேன்? கவிஞர் கேட்கிறார். அவரே பதிலும் சொல்கிறார். அன்னை தந்த சீதனமோ, என்னை வெல்லும் நாடகமோ என்று!

மயக்கம் எனது தாயகம்

மௌனம் எனது தாய்மொழி

கலக்கம் எனது காவியம்  –  நான்

கண்ணீர் வரைந்த ஓவியம்                      படம்: குங்குமம்

Kannadasanlyric2PoonaalPohatumPoda_000

சோகம் ஒலிக்கும் குரலில் கலக்கம் வந்த காரணத்தையும் கவிஞர் கூறி விடுகிறார். நானே எனக்குப் பகையானேன் –என் நாடகத்தில் நான் திரையானேன் என்று.

ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபுஆத்மன: (உனக்கு நீயே நண்பன்; உனக்கு நீயே பகைவன் என்ற கீதையின் கருத்து சாதாரணமாக இங்கு வந்து விழுவதைப் பார்க்கலாம்)

போனால் போகட்டும் போடா

போனால் போகட்டும் போடா – இந்த

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

போனால் போகட்டும் போடா         படம்: பாலும் பழமும்

வாழ்க்கை கணக்கை சில வரிகளில் போட்டு வாழ்க்கை என்பது வியாபாரம், வரும் ஜனனம் என்பது வரவாகும், அதில், மரணம் என்பது செலவாகும் என்று வரவு செலவு கணக்கை இவ்வளவு கச்சிதமாக மூன்று மூன்று சொல் அடுக்குகளில் காண முடிகிறதே! நமக்கும் மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த தலைவன், அவன் தான் அனைத்தையும் இரவல் தந்தவன், அதை இல்லை என்றால் அவன் விடுவானா?

கவிஞரின் ஆணித்தரமான கேள்விகள் எவ்வளவு சிந்தனையைக் கிளப்பி விடுகிறது?

தொட்டால் சுடுவது நெருப்பாகும்

தொடாமல் சுடுவது சிரிப்பாகும்!

தெரிந்தே கெடுப்பது பகையாகும்

தெரியாமல் கெடுப்பது உறவாகும்

படம்: படித்தால் மட்டும் போதுமா – (அண்ணன் காட்டிய வழியம்மா பாடலில்)

எப்படி இருக்கிறது புது வியாக்கியானம்?

பிறக்கும் போதும் அழுகின்றான்

இறக்கும் போதும் அழுகின்றான்

ஒருநாளேனும் கவலை யில்லாமல்

சிரிக்க மறந்தாய் மானிடனே                படம்: கவலை இல்லாத மனிதன்

kanna2

தத்துவப் பாடல்களின் மன்னன் என்பதை நிரூபிக்க எத்தனை பாடல்கள் வேண்டும்?

உள்ளம் என்பது ஆமை – அதில்

உண்மை என்பது ஊமை!

சொல்லில் வருவது பாதி – நெஞ்சில்

தூங்கிக் கிடப்பது நீதி!              படம்: படித்தால் மட்டும் போதுமா

எனக்கே வியப்பு ஏற்படும்!

தன் பாடல் தொகுதி இரண்டாவது பாகத்தின் முன்னுரையில்  3-9-1971 தேதியிட்டு கவியரசர் இப்படி எழுதுகிறார். அது ஒரு சுய விமரிசனம் தான்!

“”இந்தப் பாடல்களை எல்லாம் படித்துப் பார்க்கும் போது எனக்கே கூட வியப்பு ஏற்படும்…….

 

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் , உலகத்து நடப்பிலும் எந்த நிகழ்ச்சிகள் நேர்ந்தாலும், அங்கே என் பாடலொன்று எதிரொலிக்கும்.”

உண்மை தானே! கண்ணதாசன் பாடல் இல்லாத வாழ்க்கை நிகழ்வுகளே இருக்காது தானே.

மூன்று சொற்களிலேயே முடிப்போம்!

கண்ணதாசன் பாடலின்றி இருக்காது!

                                     ***********

கண்ணதாசனின், இரு சொல் விந்தைகள்!

kannadasan-mgr

எம்.ஜி.ஆருடன் கண்ணதாசன்

Written by S.NAGARAJAN

Article No.1904;

Dated 2 June 2015.

Uploaded at London time: 6-21 am

By ச.நாகராஜன்

தமிழில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்!

தமிழின்  ஏராளமான சிறப்புக்களில் ஒன்று, எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். நுட்பமான கருத்துக்களை, ஆழ்ந்த தத்துவங்களை சிறு சொற்களால் கூறி விளங்க வைக்கும் மொழி உலக மொழிகளிலேயே இது ஒன்று தான். ஏன், வடமொழி, ஆங்கிலம் மற்றும் இதர மொழிகள் இதனுடன் இப்படிப் போட்டி போட முடியாதா என்ற கேள்வி எழுவது இயல்பே! இந்த மொழிகளிலும் இப்படிச் சுருங்கச் சொல்லும் வார்த்தைகள் உண்டு; சூத்திரங்கள் உண்டு. ஆனால் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைய வைக்கும் வேர்ச் சொற்களும் ஒரு சொல்லுக்கு ஏராளமான பொருள்களும் தமிழில் மட்டுமே உண்டு.

இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்!

ஒவ்வொரு சொல்லும் இனிமையானது; ஒவ்வொரு சொல்லும் அழகானது! இதுவே தமிழுக்கு உள்ள தனிச் சிறப்பு.

இதில் இரு சொற்களில் ஏராளமான கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அடக்கிக் காட்டியவர் கண்ணதாசன்! இது அவர் அப்பன், பாட்டன், முப்பாட்டனிடமிருந்து அவர் பெற்ற சொத்து! தமிழ்ச் சொத்து!

வள்ளுவனின் இரு சொல் விளையாட்டு

எடுத்துக் காட்டாக வள்ளுவரின் குறளை எடுத்துக் கொள்வோம். அவர் கடலை (கடல் போன்ற அளவு கருத்துக்களை) குறுக இரு சொற்களில் அடக்கிக் காட்டியவர்.

கற்கக் கசடற – குறள் 391

செய்க பொருளை – குறள் 759

என்னைமுன் நில்லன்மின் – குறள் 771

உண்ணற்க கள்ளை – குறள் 922

இருநோக்கு இவளுன்கண் – குறள் 1091

நினைத்தொன்று சொல்லாயோ – குறள் 1241

காண்கமன் கொண்கனை – குறள் 1265

வருகமன் கொண்கன் – குறள் 1266

பெரும் சிறப்புகளை அடக்கிய இந்த இரு சொல் காவியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன.

இளங்கோவடிகளின் இரு சொல் அறிவுரை

அடுத்து சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் காப்பிய முடிவில் மனித குலத்திற்கே மாபெரும் செய்தியைச் சுருக்கமாகச் சொல்கிறார் – இரு இரு சொற்களால்! இதை மிஞ்சிய அறவுரையை, அறிவுரையை யாரும் தர முடியாது.

வஞ்சிக் காண்டத்தில், வரந்தரு காதையில் 186 முதல் 202 முடிய உள்ள வரிகளைப் படித்தால் இளங்கோவடிகளின் அற்புத தவமும் தமிழின் சிறப்பும் புரியும், இதில் சில இரு சொற் ஓவியங்கள் இதோ:-

தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்

பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;

ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;

தானம் செய்ம்மின்: தவம்பல தாங்குமின்;

செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;

பொய்க்கரி போகல்மின்; பொருள்மொழி நீங்கல்மின்;

அருமையான தமிழ் மொழியின் விந்தைகளை இரு சொற்களில் எப்படி பார்க்க முடிகிறது, பார்த்தீர்களா!

இப்படி தேவார திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம்,சங்க இலக்கியம், சமீப கால நூல்கள் போன்ற அனைத்திலுமே இந்த இரு சொல் விந்தை ஏராளம் உண்டு.

பாரதியாரின் இரு சொல் மந்திரம்

கடைசியாக மஹாகவி பாரதியார் இதில் ஆற்றிய விந்தைகள் ஏராளம் உண்டு; இடம் கருதி சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

வாழிய செந்தமிழ்!

சுடரே போற்றி!

விதியே வாழி!

செய்க தவம்!

சாகாவரம் அருள்வாய்!

வந்தேமாதரம் என்போம்!

நெஞ்சு பொறுக்குதிலையே!

ஆயிரக் கணக்கில் இப்படி இரு சொல் ஓவியங்களைத் தமிழில் எடுக்க முடியும்; வேறு மொழிகளில் இனிமையும் நீர்மையும் கொண்டுள்ள உவமைகளைக் காண்பது அரிது!

கண்ணதாசனின் இரு சொல் திரை ஓவியங்கள்

இந்த பாரம்பரியத்தில் வந்த கண்ணதாசனுக்குக் காலம் கை கொடுத்தது; திரைப்படத் துறை மின்னி மின்னி முன்னேறும் பருவத்தில் அவர் பாடலாசிரியராக பல்வேறு வாழ்க்கை நிலைக் களன்களுக்காக பாடல் எழுத வேண்டிய சூழ்நிலையை இறைவன் உருவாக்கி இருந்தான்.

கலங்காதிரு மனமே என்ற இரு சொல் முத்திரையுடன் தன் காலடித் தடத்தை திரைப்படப் பாடல் துறையில் அவர் பதித்தார். இது தான் அவர் இயற்றிய முதல் திரைப்படப் பாடல்.கன்னியின் காதலி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்!

கலங்காதிரு மனமே! – நீ

கலங்காதிரு மனமே!  – உன்

கனவெல்லாம் நனவாகும்

ஒரு தினமே!

இனி பல சொல்லோவியங்களை இரு சொற்களில் படைத்து திரையுலகப் பாடல்களில் ஒரு தனி ஏற்றத்தைத் தந்த கண்ணதாசனின் பாடல்களைத் தொகுத்து அவற்றின் சிறப்பை எழுத ஒரு தனி நூல் தேவையாயிருக்கும் என்பதால் சில பாடல்களை மட்டும் இங்கே சுட்டிக் காட்டி முடிக்கலாம்! வாசகர்கள் அசை போட்டு அதன் சிறப்புகளை மனதில் ஏற்றி மகிழ முடியும்!

பாடலும் படமும்!

கங்கைக்கரைத் தோட்டம்

கன்னிப் பெண்கள் கூட்டம் –ஓ

கண்ணன் நடுவினிலே

காலை இளங்காற்று

பாடிவரும் பாட்டு

எதிலும் அவன் குரலே   – படம் : வானம்பாடி

அழகு ரசிப்பதற்கே

அறிவு கொடுப்பதற்கே

மனது நினைப்பதற்கே – ஆஹா!

வாழ்க்கை வாழ்வதற்கே   – படம்  வாழ்க்கை வாழ்வதற்கே

வரவு எட்டணா

செலவு பத்தணா

அதிகம் இரண்டனா –

கடைசியில் துண்டனா     படம் பாமா விஜயம்

பாட்டுப் பாடவா

பார்த்துப் பேசவா

பாடம் சொல்லவா

பறந்து செல்லவா       படம்  தேன்நிலவு

பேசுவது கிளியா – இல்லை

பெண்ணரசி மொழியா

கோவில்கொண்ட சிலையா

கொத்து மலர்க்கொடியா

பாடுவது கவியா – இல்லை

பாரிவள்ளல் மகனா

சேரனுக்கு உறவா

செந்தமிழர் நிலவா     படம் : பணத்தோட்டம்

கண்ணெதிரே தோன்றினாள்

கனிமுகத்தைக் காட்டினாள்

நேர்வழியில் மாற்றினாள்

நேற்றுவரை ஏமாற்றினாள்           படம்  இருவர் உள்ளம்

நீ என்பதென்ன

நான் என்பதென்ன                 படம் வெண்ணிற ஆடை

தோட்டத்து மாப்பிள்ளை

வீட்டைத் தேடிவந்தால்

சும்மா வரலாமா                   படம்   இதயத்தில் நீ

களங்கமில்லா காதலிலே

காண்போம் இயற்கையெலாம்          படம்   இல்லறஜோதி

பொன்னென்பேன் சிறு

பூவென்பேன் – காணும்

கண்ணெண்பேன் வேறு

என்னென்பேன்?!                  படம் போலீஸ்காரன் மகள்

kanna2

நூற்றுக்கணக்காக உள்ள இரு சொற்பாடல்களில் மேலே பத்தைப் பார்த்தோம்.

இவற்றில் நவரஸங்களும் ததும்பும்; உணர்ச்சிகள் பொங்கும்; தமிழ் சுருக்கமாக விளையாடும்; விரிவாக அர்த்தத்தைத் தரும்.

இவற்றைத் தொகுத்துப் பாடினாலே

வரும் சுகம்

இது நிஜம்!

மூன்று சொல் கவிதைகளுக்குள் மூழ்க வேண்டுமெனில் அது ஒரு கடல் அல்லவா! அங்கு முத்தும் பவழமும் சங்கும் – இன்னும் விலை மதிப்பில்லா மணிகள் அனைத்தும் அல்லவா கிடைக்கும்.

கவியரசின் அனுபவி ராஜா அனுபவி படத்தின் முத்தான வார்த்தைகள் நினைவுக்கு வருகிறதா –   முத்துக் குளிக்க வாரீகளா!!

-தொடரும்

 

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

IMG_4075

Compiled by London Swaminathan

Research Article No.1894; Dated 28 May 2015.

Uploaded at London time 20-12

Tamil Proverbs with English Translation

1.அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

The face is the index of the mind

2.அகோர தபசி, விபரீத சோரன்

All saint without, all devil within

3.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது

Great engines turn on small pivots

அச்சாணி

4.அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்

The fox knows much, but more, he that catcheth him

5.அஞ்சில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

A young twig is easier twisted than an old tree

6.அஞ்சில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?

The child is father to the man

7.அஞ்சும் மூன்றும் உண்டானால் அறியாப் பெண்ணும் கறியாக்கும்

A house well-furnished makes a good house wife

8.அடங்காத மாடுக்கு அரசன் மூங்கில் தடி

அடியாத மாடு படியாது

Restive horses must be roughly dealt with

மாடு

9.அடாது செய்பவர் படாது படுவர்

Do evil and look for like.

10அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்கள்

Spare the rod and spoil the child

11.அடிக்கும் பிடிக்கும் சரியாப் போச்சு

ஆனைக்கும் பானைக்கும் சரி

Tit for tat

12.அடி நாக்கில் நஞ்சு, நுனிநாக்கில் அம்ருதம்

A smooth tongue and an evil heart

13.அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

Little strokes fell great oaks

அம்மி

14.ஆண்டவர் எப்படியோ தொண்டரும் அப்படியே

Like God, like worshipper

15.அதிக ஆசை அதிக நஷ்டம் ; பேராசை பெரு நஷ்டம்

Much would have more, and lost all

16.அத்ருஷ்டமும் ஐஸ்வர்யமும் ஒருவர் பங்கல்ல;

லெட்சுமி ஓரிடத்தில் இருக்கமாட்டாள்

Fortune’s wheel is ever revolving

17.அதிவிநயம் துர்த்த லக்ஷணம்

கண்டால் காமாட்சி நாயக்கர் காணாவிட்டால் வடுகப்பயல்

கண்டால் காமாட்சி நாயக்கர் காணாவிட்டால் காமாட்டி நாயக்கர்

கண்டால் முறை சொல்லுகிறது, காணாவிட்டால் பெயர் சொல்லுகிறது

Too much courtesy, too much craft

18.அப்பன் அருமை, அப்பன் செத்தால்தான் தெரியும்

Blessings are not valued till they are gone

19.அப்பா என்றால் உச்சி குளிருமா?

Fair words fill not the belly

20.அப்பியாசம் கூசா வித்தை

சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்

Practice makes perfect

சித்திரம்

21.அம்மாவாசை அன்னம் என்றைக்கும் அகப்படுமா?

போனால் வாராது, பொழுது விடிந்தால் கிடைக்காது

Christmas comes but once a year

22.அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிரே!

What can you expect of a hog but his bristles?

23.அரசனுக்கு ஒரு சொல், அடிமைக்கு தலைச் சுமை

What is sport to the boy is death to the frog

24.அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்

Justice stays long, but strikes at last

25.அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி

As is the king, so are the subjects

அரசன்

26.அரைக் காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது

One cloud is enough to hide all the sun

27.அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்?

You must walk before you run

28.அலைகடலுக்கு அணை போட முடியுமா?

Against God’s wrath no castle is proof

29.அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்

பள்ளம் என்று ஒன்று இருந்தால் மேடு என்று ஒன்று இருக்கும்

முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருஷம் வீழ்ந்தவனும் இல்லை

Sadness and gladness succeed each other

30.அல்லார் அஞ்சலிக்கு நல்லார் உதை மேல்

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்

A kick from the wise is better than a kiss from a fool

குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால்

31.அவரவர் அக்கரைக்கு அவரவர் படுவார்

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்

Everyone rakes the embers to bake his own cake

32.அவனன்றி ஓர் அணுவும் அசையாது

There is a special providence in the fall of a sparrow

33.அழ அழச் சொல்லுவர் தம்மக்கள், சிரிக்க சிரிக்கச் சொல்லுவர் பிறர்

A friend’s frown is better than a foe’s smile

சிரிக்க சிரிக்கச்

34.அழுத பிள்ளை பால் குடிக்கும்

அரிப்புள்ளவன் சொரிந்து கொள்வான்

கேட்டால்தான் கிடைக்கும்

Ask and it shall be given

35.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்

Too much of anything is good for nothing

36.அள்ளாது குறையாது. சொல்லாது பிறவாது

Every why has a wherefore

37.அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்

Sins wilfully committed, must woefully expiated

38.அறிவு மனதை அரிக்கும்

In much knowledge, the is no rest

39.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிப்பான்

Beggars mounted run their horses to death

40.அன்பற்ற மாமிக்கு கும்பிடும் குற்றமே

வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்

Where there is no love, all is fault

பொன் குடம்

41.அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறி

A friend in need is a friend indeed

42.அன்று தின்னும் பலாக்காயினும் இன்று தின்னும் களாக்காய் மேல்

A bird in the hand is worth two in the bush

43.ஆம் காலம் ஆகும், போம் காலம் போகும்

Men rise with Fortune’s smile or fall with Fortune’s frown

44.ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்

Let patience have her perfect work

Haste makes waste

45.ஆசானுக்கும் அடைவு தப்பும்

யானைக்கும் கூட அடி சறுக்கும்

Good swimmers are sometimes drowned

46.ஆசை வெட்கம் அறியாது

Love will creep where it cannot walk

Love is blind

47.ஆஸ்தியில்லாதவன் மனிதன் அல்ல.

பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருள் அல்லார்க்கு அவ்வுலகம் இல்லை

A man without money is a bow without an arrow

48.ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

ஆடத்தெரியாத –—அடியாள், தெருக் கோணல் என்றாளாம்

A bad workman quarrels with his tool

goat

49.ஆட்டைக் காட்டி வேங்கையைப் பிடிக்க வேண்டும்

சின்ன மீனைப் போட்டாத்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்

Venture a small fish to catch a big one

50.ஆடை பாதி, ஆள் பாதி

ஆடை இல்லாதவன் அரை மனிதன்

Dress is half a man

தொடரும்…………………………..

கண்ணதாசனைப் புரிந்து கொள்வது எப்படி?

Written by S NAGARAJAN

Research Article No.1868; Dated 16 May 2015.

Uploaded in London at 6-35 am

By ச.நாகராஜன்

கவியுளம் காண்க!

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்                            ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்

 

என மஹாகவி பாரதியார் பாடியிருப்பது எத்துணை ஆழ்ந்த பொருள் படைத்தது!

ஆயிரம் காவியம் கற்பார்கள்; ஆனால் கவிஞன் என்ன சொல்ல வந்தான், எப்படிச் சொல்லி உள்ளான் என்பதைப் புரிந்து  கொள்ளாமல் தன் மனதில் தோன்றியதைக் கவிஞன் கூறியதாக நினைத்துக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களின் ‘மனத்தடைகள்’ பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

இந்த ‘மனத்தடைக்காரர்கள்’ கவியரசு கண்ணதாசனைக் கொண்டாட நினைக்கும் போது சங்கடம் தான் ஏற்படுகிறது; ஏற்படும்.

தனக்குப் “பிடித்தவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களைக்’ கவியரசு கண்ணதாசன் கூறும் போது ஒன்று, அதை மறைத்து விடுகிறார்கள், இல்லை, மாற்றி விடுகிறார்கள்! இரண்டுமே தவறு!

காலத்தை வென்ற ஒரு கவிஞனாக ஒருவன் எப்படி மிளிர முடியும்? சமகாலத்தவரான இந்தத் தலைமுறையினர் தன்னை என்ன சொல்வார்கள், அடுத்த தலைமுறையினர் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் நினைத்து பயந்தா கவிஞன், கவிதை எழுதுகிறான்!

எல்லா குறுகிய எல்லைகளையும் மீறி அவன் படிப்படியாக வளர்கிறான்; பல்வேறு பரிமாணங்களைக் கொள்கிறான்.

பக்குவம் வாய்ந்த இறுதி வடிவமே அவனது முகிழ்ச்சி.

 

தன்னைப் பற்றிக் கண்ணதாசன்

உண்மையைச் சொல்ல மிகுந்த நெஞ்சுரம் வேண்டும்! அதுவும் தன்னைப் பற்றி விமரிசித்து உண்மையைச் சொல்வதென்றால் இன்னும் அதிக தைரியம் வேண்டும்!

காந்திஜியின் சோதனை, அதனால் தான், ‘சத்திய சோதனை’ ஆனது.

கவியரசு கண்ணதாசனும் இந்த சத்தியத் தீயில் தன்னைப் புடம் போடவே நினைத்தார். அதன் வெளிப்பாடாகவே அவர் தன்னைப் பற்றி இப்படிக் கூறியுள்ளார்:-

“கவிஞன் ஒருவன் அரசியல்வாதியாகவும் இருந்தால் கவிதைக் கருத்துக்கள் எவ்வளவு முரண்படும் என்பதற்கு இந்தத் தொகுப்புகளே சான்று.

யார் யாரைப் போற்றியிருக்கிறேனோ அவர்களைக் கேலி செய்தும் இருக்கிறேன்.

யார் யாரைக் கேலி செய்திருக்கிறேனோ அவர்களைப் போற்றியும் இருக்கிறேன்…

கருத்து எதுவாயினும் கவிதை என்னுடையது .. ..

கருத்து உங்களைக் குழப்பும்; கவிதை உங்களை மயக்கும். .. ..

என்னை மையமாக வைத்தே எல்லோரும் சண்டை போட்டுக் கொள்ளலாம்.

எந்தத் தலைவரையும் பழிப்பதிலும் புகழ்வதிலும், என் தமிழ் எப்படி விளையாடி இருக்கிறதென்பதை இப்போது படியுங்கள். விமர்சனங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிடுங்கள்.”

கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள் நூலுக்கு  25-9-1968 இல் அவர் தந்த ‘என்னுரை’யில் உள்ள சில பகுதிகளே மேலே தந்திருப்பவை.

ஒரு தலைமுறையை சுமார் 30 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால் இந்த முன்னுரையை எழுதியே ஒன்றரை தலைமுறைகள் கடந்தாகி விட்டது. (கவிதைகள் இன்னும் முன்னாலேயே படைக்கப்பட்டிருக்க வேண்டும்)

ஆனால் இன்றைய விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சி எதுவுமற்ற தேசிய தமிழ் கவிஞராக அவர் ஒளிர்கிறார்.

தனது கவிதைகளை அப்படியே மாற்றாமல் அவரே வெளியிட்டு அதனை விமரிசிப்போர் விமரிசிக்கட்டும் என்று அவரே கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். ஆக நமக்குப் ‘பிடித்தவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களை” – புராணங்கள், ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்கள், சம்ஸ்கிருதம், அதில் தோன்றிய நூல்கள், தொன்மங்கள், நம்பிக்கைகள் உள்ளிட்டவற்றை அவரே கூறியிருக்கும்போது அதை மறைக்கக் கூடாது; மாற்றக் கூடாது.

கவிஞனின் வழியில் சென்று அவன் கூறும் சாசுவத உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் மட்டும் போதாது, முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.திறந்த மனதுடன் படிக்க வேண்டும். அப்போது தான் அவரது முழுப் பரிமாணங்களையும், அவனது “ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தையும்” காண முடியும்!

செம்மொழி என்ற சிறப்பு அடைமொழிக்கும் மேலான தெய்வ மொழியாம் தமிழ் மொழியைப் புரிந்து கொள்ள சங்க இலக்கியம் மற்றும் அதற்குப் பின்னால் தோன்றிய பக்தி இலக்கியம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.

அதில் தோய்ந்திருக்கும் மனம் கண்ணதாசனை அணுகும் போது ஆனந்தப்படும்; மகிழ்ச்சிக் கூத்தாடும்.

அங்கே ராமனும், கண்ணனும்,தமிழும், சம்ஸ்கிருதமும், சத்தியக் கொள்கைகளும், நித்திய உண்மைகளும் அற்புதமாக நடனமாடும்.

காழ்ப்பு உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, குறுகிய மொழிவெறி, அரசியல் கலந்த, அதில் தோய்ந்த தமிழ்ப் பற்று ஆகியவற்றை உதறி எறிந்தால் கண்ணதாசன் முழுமையாக இறுதி வடிவில் நம் முன் வருவார்.

பார்வை நேராக இருக்க வேண்டும்; நேரடியாக இருக்க வேண்டும்!

மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்தால், “மஞ்சள் பத்திரிக்கையே” கண்ணுக்குப் புலப்படும்!

கண்ணதாசனோ திறந்த வெள்ளைக் காவியம்! அவரை அணுக வெள்ளை மனம் – பிள்ளை மனம் – வேண்டுமல்லவா!

01kannadasan

கண்ணதாசனை –

அனைத்துக் குறுகிய எல்லைகளையும் மீறி, தடை கடந்த நிலையில் திறந்த மனதுடன் அணுகுவோம்; புரிந்துகொள்வோம்; ஆனந்திப்போம்!

***********

சம்ஸ்கிருத பொன் மொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும்

தொகுத்தவர்—லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்: 1865; தேதி 14 மே 2015

லண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்: 20-29

1.அஞ்ஞாத குல சீலஸ்ய வாஸோ தேயோ ந கஸ்யசித் – ஹிதோபதேசம்

குல ஒழுக்கங்களை அறியாமல் எந்த ஒருவருக்கும் இடம் தரக்கூடாது.

“குலத்து அளவே ஆகும் குணம்”- அவ்வையார்/மூதுரை

“ஆழம் தெரியாமல் காலை விடாதே”

2.அதரே பயசா தக்தே தக்ரம் பிபதி ப்பூத்க்ருத்ய

பாலால் சுடப்பட்ட பின்னால், மோரைக் கண்டால் கூட பூ.. பூ.. அன்று ஆற்றிக் குடிப்போம்.

“பட்டால்தான் தெரியும் பார்ப்பானுக்கு”

“சூடு கண்ட பூனை”

3.அதிகஸ்யாதிகம் பலம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமோ அவ்வளவுக்கு அவ்வளவு பலன்.

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் – குறள்

“அடிக்க அடிக்க அம்மியும் நகரும்”

“எறும்பூரக் கல்லும் தேயும்”

4.அத்ருவாத் துருவம் வரம்

நிச்சயமில்லாமல் இருப்பதைவிட நிச்சயமாக இருப்பதே சிறந்தது

“துணிந்தவனுக்கே உலகம் கிடைக்கும்”

“வெட்டு ஒன்று, துண்டு இரண்டு!”

5.அனதிக்ரமணீயானி ஸ்ரேயாம்சி- அபிக்ஞான சாகுந்தலம்

உயர்ந்த விஷயங்களை மீறக்கூடாது

பெரியவாள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி

மூத்தோர் சொல்லைத் தட்டாதே

வழியே ஏகுக, வழியே மீளுக—வெற்றி வேற்கை

6.அனார்யஜுஷ்டேன பதா ப்ரவ்ருத்தானாம் சிவம் குத: -கதா சரித் சாகரம்/கதைக்கடல்

பண்படற்றவர்களால் வழிநடத்தப்படுவோருக்கு நற்கதி ஏது?

“தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே” – அவ்வையாரின் முதுரை

7.அநார்யப் பரதார வ்யவஹார: – அபிக்ஞான சாகுந்தலம்

பிறர் மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பது அநாகரீகமாகும் (ஆரியர் அற்றவர்/ பண்பாடாதல்லவர் வழக்கு)

“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்”– குறள்

8.அந்யாயம் குருதே யதி க்ஷிதிபதி: கஸ்தம் ந்ரோத்தம் க்ஷம: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அரசனே தவறு செய்தால் அதைத் தடுக்க யாருக்கு சக்தி உண்டு?

“வேலியே பயிரை மேய்ந்தால்?”

9.அபி சாஸ்த்ரேஷு குசலா லோகாசார விவர்ஜிதா:  சர்வே தே ஹாஸ்யதாம் யாந்தி – பஞ்சதந்திரம்

சாத்திரங்களில் எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாலும், உலக விவகாரம் தெரியாவிட்டால் பிறரின் நகைப்புக்கு உள்ளாக நேரிடும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவில்லாதார் – குறள்

படகு உடைந்தபோது நீந்தத் தெரியாத சந்யாசிக்கு நேர்ந்த கதி—ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

10அபூஜ்யா யத்ர பூஜ்யந்தே பூஜ்யாம் து விமானனா

த்ரீணி யத்ர ப்ரவர்த்தந்தே துர்பிக்ஷம் மரணம் பயம் – –பஞ்சதந்திரம்

மதிக்கப்படக் கூடாதோர் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, மதிக்கப்பட வேண்டியவர்கள் எங்கு அவமதிக்கப்படு கிறார்களோ அங்கே மூன்று வரும்: வறுமை, சாவு, பயம்.

வேங்கை வரிப்புலி  நோய் தீர்த்த விடகாரி

ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் – பாங்கு அறியாப்

புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம் – மூதுரை/அவ்வையார்

நிரில் தத்தளித்த தேளைக் காப்பாற்றினாலும் அது கொட்டதான் செய்யும் – ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

அஷ்டமி, நவமி பற்றி சத்ய சாய் பாபா

தொகுத்தவர்- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்- 1862; தேதி 13 மே 2015

லண்டன் நேரம்: 19-12

வளர்பிறையின் எட்டாவது, ஒன்பதாவது நாட்களாகிய அஷ்டமி, நவமி திதிகளை நல்லவை அல்ல என்று மக்கள் கருதுவது மிகவும் தவறாகும். ஏனெனில் உண்மை இதற்கு நேர் மாறானது. இவ்விரு நாட்களும் இவ்வுலகில் அவதாரங்கள் தோன்றிய திரு நாட்களைக் குறிப்பனவாகும். கண்ணன் எட்டாம் நாளாகிய அஷ்டமியிலும், ராமன் ஒன்பதாம் நாளாகிய நவமியிலும் தோன்றினர்.

கண்ணன் தோன்றிய ரோகிணி நட்சத்திரம் யோக ஆற்றலைப் பெறுவதோடு தொடர்புடையது. இராமர் தோன்றிய புனர்பூசம், சரணாகதி நெறியோடு தொடர்புடையது. அதாவது இந்த நட்சத்திரத்தில் தோன்றியவன் எளிதில் இரக்கம் கொண்டு, தன்னிடம் அடைக்கலமாக வந்த யாருக்கும் தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்யும் இயல்பினன்.

சாதனையைத் தொடங்குவதற்கு இந்த நாட்களைத் தேர்ந்தெடுங்கள்; பூசை செய்யவும், வழிபாடு செய்யவும், நீங்களே தேர்ந்தெடுத்த கடவுள் வடிவத்தை நாடுவதற்கும் இந்நாட்களைத் தேர்ந்தெடுங்கள். இந்நாட்களுடனும், நட்சத்திரங்களுடனும் கெட்டவற்றைத் தொடர்பு படுத்தாதீர்கள். நீங்கள் இவற்றை மதித்து வழிபடுங்கள். இந்நாளில் இதுவே என் அறிவுரையாகும்

–பிரசாந்தி, அக்டோபர் ,1965

பாட்டுக்கு பத்து ரூபாய்! ஞானியார் அடிகள் கதை

ஞானியார்  அடிகள் படம்

Written by London swaminathan

Article No.1859; Dated 12 May 2015.

Uploaded in London at 14-32

செங்குந்தர் ஜாதியில் பிறந்து பின்னர் துறவறம் மேற்கொண்ட ஞானியார் அடிகள் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். அவர் தெலுங்கு மொழியை சென்னை கேசவுலு நாயுடுவிடம் இருந்தும் சம்ஸ்கிருத மொழியை ராமநாத சாஸ்திரிகள் இடமிருந்தும் தமிழ் மொழியை சி.மு.சாமிநாத அய்யர் என்னும் பெரும் புலவரிடமிருந்தும் கற்றார்.

சாமிநாத அய்யர் தினமும் பாடம் சொல்லி முடித்தவுடம் ஒரு பாடலை எழுதி வீட்டுப் பாடமாகக் (ஹோம் ஒர்க்) கொடுப்பார். அந்தச் செய்யுளில் என்ன “சீர், தளை” இருக்கிறது என்பதை ஞானியார் அடிகள் எழுதி வைப்பார். மறுதினம் வரும் போது அதைச் சரிபார்த்துவிட்டு, ஐயர் மேலும் ஒரு பாடல் எழுதுவார்.

ஒருமுறை அவருக்கு பொருள் தட்டுப்பாடு போலும்.அது மனதை வாட்டியதாலோ என்னவோ கீழ்கண்டவாறு ஒரு கவிதையை ‘ஹோம் ஒர்க் நோட்புக்’கில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

“நற்பாடலிபுரத்து நாதனே! நாயினேன்

பொற்பாம் நினதடியைப் போற்றினேன் தற்போது

வேண்டுஞ் செலவிற்கு வெண்பொற்காசுப் பத்து

ஈண்டு தருக இசைந்து”—

என்னும் வெண்பாவினை எழுதி வைத்துவிட்டுச் சென்றார். இந்தச் செய்யுளுக்கு இலக்கணக் குறிப்பு எழுத வேண்டியது அடிகளார் வேலை.

மறுநாள், ஐயர் வழக்கம்போல பாடம் கற்பிக்க வந்தார். அன்றைய பாடம் முடிந்த பின் மேலும் ஒரு செய்யுளை எழுதுவதற்காக குறிப்புப் புத்தகத்தைத் திறந்தார். அதில் பத்துரூபாய் பணமும் இருந்தது கண்டு வியந்தார்.

“இது என்ன? நான்பாட்டுக்கு (அதாவது என் மனம் போனவாறு) ஏதோ கவிதை எழுதி வைத்தேன். பொருள்மட்டும்தானே எழுதச்சொன்னேன்” என்றார். உடனே அடிகாளாரும் “நான் பாட்டுக்குப் பொருள் தந்தேன்; வேறு எதுவும் இல்லை” என்றார்.

தமிழ் நயம் உணர்ந்தோர் இதில் வரும் “பாட்டுக்கு”, “பொருள்” என்ற சொற்கள் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் அண்டு இன்புறுவர்.

(இதை 1958-ஆம் ஆண்டு சிங்கப்பூர் தமிழ் முரசு ஆண்டு மலரில் படித்தேன்)