தொல்காப்பியன் புகழ் (Post No.5217)

Written by London swaminathan

 

Date: 14 JULY 2018

 

Time uploaded in London – 14-37  (British Summer Time)

 

Post No. 5217

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம் எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் ஆசிரியர் தொல்காப்பியர். அவர் குறித்துப் பல புலவர்கள் கூறிய பொன் மொழிகளைக் காண்போம்:

1.ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோன் – –பனம்பாரனார்

 

2.நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்

– பன்னிரு படலப் பாயிரம்

 

3.துன்னரும் சீர்த்தித் தொல்காப்பியன்

-புறப்பொருள் வெண்பா மாலை சிறப்புப் பாயிரம்

 

4.ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பிய முனி

–இலக்கணக் கொத்து சிறப்புப் பாயிரம்

 

சூத்திரங்களின் எண்ணிக்கை

இளம்பூரணர் உரை- 1595

நச்சினார்க்கினியர் உரை – 1611

 

பழம்பாடல்களின் படி 1612

 

பல சூத்திரங்களை ஒன்றாக இணத்தும் பகுத்தும் பார்த்ததால் இந்த வேறுபாடு என்று அறிஞர் பெருமக்கள் நுவல்வர்.

தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள்:–

சொல் அதிகாரம்

எழுத்து அதிகாரம்

பொருள் அதிகாரம்

 

பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பது ஆன்றோர் கருத்து.

 

 

தொல்காப்பியருக்குப் பிடித்த எண் 9

 

மூன்று அதிகாரங்களிலும் தலா ஒன்பது இயல்கள் உள.

அவையாவன:

 

எழுத்து அதிகாரம்

 

1.நூல் மரபு

2.மொழி மரபு

3.பிறப்பியல்

4.புணரியல்

5.தொகை மரபு

6.உருபியல்

7.உயிர் மயங்கியல்

8.புள்ளி மயங்கியல்

9.குற்றியலுகரப் புணரியல்

 

சொல் அதிகாரம்

 

1.கிளவியாக்கம்

2.வேற்றுமை இயல்

3.வேற்றுமை மயங்கியல்

4.விளி மரபு

5.பெயரியல்

6.வினையியல்

7.இடையியல்

8.உரியியல்

9.எச்சவியல்

 

பொருள் அதிகாரம்

1.அகத்திணயியல்

2.புறத்திணையியல்

3.களவியல்

4.கற்பியல்

5.பொருளியல்

6.மெய்ப்பாட்டியல்

7.உவமவியல்

8.செய்யுளியல்

9.மரபியல்

 

தொல்காப்பியருக்குத் தெரிந்த மொழிகள்:–

தமிழ், ஸம்ஸ்க்ருதம் (ஐந்திரம் எனும் இந்திரன் பெயரில் உள்ள ஸம்ஸ்க்ருத இலக்கணம் கற்றவர். இந்த இலக்கணம் கிடைக்கவில்லை)

 

தொல்காப்பியரின் காலம்

கி.மு.முதல் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை

 

இவர் ஆய்த எழுத்து என்பப்படும் மூன்று புள்ளி எழுத்து பற்றிக் குறிப்பிடுவதால் முதல் நூற்றாண்டுக்குப் பிறப்ப

ட்டவர் என்பது சிலர் கருத்து.

 

இவர் எண்வகைத் திருமணம் பற்றியும் வேத காலக் கடவுளரான இந்திரனையும் வருணனையும் தமிழர் கடவுள் என்று குறிப்பிடுவதாலும்,  பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பர். இன்னும் சிலர் அவை இடைச் சொருகல் என்று சொல்லி தப்பித்துக் கொள்வர்.

 

இவர் அகஸ்த்ய ரிஷியின் சிஷ்யர். அவருக்கும் இவருக்கும் இடையே நடந்த மோதல் பற்றி ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ பகர்வர். அதே நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் உண்மைப் பெயர் த்ருண தூமாக்கினி என்பர். தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் கீதையும் போற்றும் உசனஸ் ரிஷி பிறந்த காப்பிய கோத்திரத்தை சேர்ந்தவர் என்றும் செப்புவர்.

 

 

பொய்யுரை பேசும் திராவிடர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆதாரங்கள் தொல்காப்பியத்துக்கு உள்ளேயே இருக்கின்றன.

இவர் எழுத்து அதிகார உச்சரிப்பில் வேதம் பற்றிச் சொல்கிறார்.

மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ள தர்ம, அர்த்த, காம, மோக்ஷத்தை அதே வரிசையில் அறம், பொருள், இன்பம் என்று சொல்கிறார்.

மேலும் இந்து தெய்வங்கள் அனைவர் பெயரையும் சொல்கிறார். சிவன் பெயரைச் சொல்ல வில்லை

 

இவர் நூலுக்கு ‘சர்டிபிகேட்’ கொடுத்தவர் கேரளத்து பிராஹ்மணன், சதுர்வேத சிகாமணி- நான்மறை முற்றிய அதங்கோட்டு (திருவிதாங்கோடு) ஆசார்யார்

 

இது அரங்கேறிய இடம்- நிலம் தரு திரு வில் பாண்டியன் சபை.

 

அக்காலத்தில் தமிழ் நாட்டின் எல்லை: குமரி மலை, திருப்பதி (வேங்கட மலை)

இவருக்கு பனம்பாரனார் உள்பட 12 சீடர்கள்.

இவர் பிறந்த இடமோ, இறந்த இடமோ, தாய் தந்தையர் பெயரோ தெரியாது.

 

இவர் இந்து தெய்வங்களைத் தவிர வேறு எவரையும் குறிப்பிடவில்லை. இவரது காலத்தில் பௌத்தமோ ஜைனமோ பிரபலம் ஆகாததால் இப்படி மௌனம் காத்திருக்கலாம்.

தொகாப்பிய ஏடுகளில் 2000 பாட பேதங்கள் இருந்தன. அவைகளை அறிஞர்கள் தட்டிக்கொட்டிச் சீர் செய்துவிட்டனர்.

 

இவர் நூலிலும் , சிலப்பதிகாரத்திலும், திருக்குறளிலும் அதிகாரம் என்னும் சொல் பயிலப்படுவதால் மூன்று நூல்களும் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கபட்டு நமக்கு வழங்கியிருக்கலாம்.

 

தொல்காப்பியத்துக்குப் பல உரைகள் இருந்தாலும் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் உரைகளே சிறப்புடைத்து.

 

–SUBHAM–

 

காதல் முக்கோணத்தில் சிக்கிய புலவன்/அரசன்! (Post No.5214)

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

Written by London swaminathan

 

Date: 13 JULY 2018

 

Time uploaded in London – 7-42 am  (British Summer Time)

 

Post No. 5214

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?”– —பத்ரகிரியார் புலம்பல்

 

பர்த்ருஹரி என்ற பெயரில் புலவர்களும் அரசர்களும் இலக்கிய வித்தகர்களும் இருந்தனர். விக்ரமாதித்தன் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தனர். பத்ரகிரியார் என்ற தமிழ் சித்தரும் பர்த்ருஹரியும் ஒரே கதை உடையவர்கள் அவருடன் பட்டினத்தாரும் சம்பந்தப்படுத்தப் படுகிறார்; ஒரே குழப்பம்!!! ஆனால் இதற்குள் ஒரு சுவையான கதை இருக்கிறது!

 

முதலில் கதையைப் படித்துவிட்டு ஆராய்ச்சியைத் தொடர்வோம்.

 

உஜ்ஜைனி நகரத்தில் பர்த்ருஹரி என்று ஒரு அரசர் இருந்தார். அவரை ஒரு பிராஹ்மணன் சந்தித்து ஒரு அற்புத பழத்தைக் கொடுத்து இதைச் சாப்பிடுவோர் நீண்ட காலம் வாழ்வர் என்றார்.

 

பர்துருஹரியின் பல மனைவியரில் இளையவர்தான் அவரது மனதைக் கவர்ந்த பேரழகி; அவள் பெயர் பிங்களா. ஆகையால் அன்புக் காதலி பிங்களாவுக்கு அந்தப் பழத்தைக் கொடுத்து “அன்பே! ஆருயிரே! தேனே! கற்கண்டே! இதை சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று ஒரு பெரியவர் சொன்னார். என் இதய ராணியான உனக்காக இதைக் கொண்டு வந்தேன்” என்று பகர்ந்தார்.

அவர் நாதா! உங்கள் அன்பே உலகில் பெரியது என்று சொல்லி, அதை ஒளித்து வைத்து, அவளது கள்ளலக் காதலன் போலீஸ் அதிகாரி மஹிபாலனுக்கு அளித்தாள். அவனுக்கோ பிங்களாவை விட ஒரு பேரழகி காதலி இருந்தாள் அவள் பெயர் லாகா.

 

“உலகிலேயே நீதான் அழகி” என்று சொல்லி அவளை ஏமாற்றிவிட்டு, அதை லாகாவிடம் கொடுத்தான். அவளுக்கோ மன்னர் மீதூ தீராக் காதல்! ஆறாக் காதல்! ஆகையால் அந்தப் பழத்தைக் கொண்டு வந்து

பர்த்ருகிரியாரே நீர்தான் என் இதய ராஜா; இது ஒரு அற்புத பழம். இதை ஒரு பெரியவர் எனக்குக் கொடுத்தார். இதைச் சாப்பிட்டவர் நீண்ட காலம் வாழ்வர் என்று சொல்லி பர்த்ருஹரியிடம் கொடுத்தாள்.

 

அவர் நொந்து போனார்; வெந்து போனார்; உளவாளிகள் மூலம் முக்கோணக் காதலை அறிந்தார். இந்த உலகில் நிலைத்தது காமமும் அல்ல; நமது உயிரும் அல்ல என்ற ஞானோதயம் பிறந்தது; தனது

சஹோதரனான விக்ரமாதித்யனிடம்  ஆட்சியை ஒப்படைத்து துறவியானார்.

 

இவர்தான் புகழ் பெற்ற 300 ஸம்ஸ்க்ருதப் பாடல் இயற்றிய பர்த்ருஹரியா என்பது அறிஞர்கள் விவாதிக்கும் விஷயம் ஆகும். அந்த பர்த்ருஹரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் நீதி சதகம் 100, ச்ருங்கார சதகம் 100, வைராக்ய சதகம் 100 என்று 300 பாடல்களை ஸம்ஸ்க்ருதத்தில் மழைபோலப் பொழிந்து உலகப் புகழ் பெற்றவர்.

 

இது தவிர வாக்படீயம் முதலிய இலக்கண நூல்களை இயற்றிவர் ஒருவரும் உளர். ஆக  காலத்தால் வேறுபட்ட பர்த்ருஹரிக்கள் யார் யார், அவர்தான் பத்ர்கிரியார் எனப்படும் தமிழ் சித்தரா என்று காலாகாலமாக அறிஞர் பெருமக்கள் விவாதித்து வருகின்றனர்.பல விக்ரமாதித்யன்கள்; பல பர்த்ருஹரிக்கள்; கொஞ்சம் குழப்பம்தான்.

 

எது எப்படியாகிலும் சுவையான கதையுடன் ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிய செய்தியும் கிடைக்கிறது. ‘வாழ்க்கை நிலையாமை’ பற்றிப் பாடாத தமிழ்ப் புலவரோ ஸம்ஸ்க்ருதப் புலவரோ இல்லை.

xxx

பர்த்ருஹரி, தனது முன்னாள் மனைவியைச் சந்திக்கும் ஓவியம்

 

நாட்டுப் புற பாடல்களில் பர்த்ருஹரி

வட இந்தியா முழுதும், குறிப்பாக ராஜஸ்தான், சட்டிஸ்கர் முதலிய மாநிலங்களில் பிச்சை எடுக்கும் ஆண்டிப் பண்டாரங்கள் இந்த பர்த்ருஹரியைப் புகழ்ந்து பாடிக்கொண்டே வருவர். அவரது பெயர் துறவியானவுடன் கோபிசந்த் ஆனது. அவர் கோரக்நாதர் என்பவரின் சீடர் என்றும் செப்புவர்

 

தமிழ் பத்ர கிரியாருக்கு பட்டினத்தார் குரு; வட இந்திய பர்த்ருஹரிக்கு குரு– கோரக் நாத். 500 ஆண்டுக் கால இடைவெளியில் பல பர்த்ருஹரிக்கள் இருந்தாலும் சுவை குறையாமல் பாடிச் சென்றுவிட்டனர்.

 

XXXX

தமிழ் சித்தர் பத்ரகிரியார்

பத்ரகிரியார் ஒரு புகழ் பெற்ற சித்தர். அவர் ஒரு அரசனாக இருந்ததாகவும் பட்டினத்தார் அவரை துறவியாக மாற்றியதாகவும்

ஒரு வரலாறு உண்டு. அவர் எழுதியது பத்ரகிரியார் புலம்பல் எனப்படும்.  சில இடங்களில் திருமூலரின் தாக்கம் தெரியும். இது ஒரு தத்துவப் பாடல் ஆகும்.  இவரது பார்வை ஏனைய சித்தர்களைப் போலத்தான். இவர் சிவ வாக்கியர் போல ஜாதிகளில் நம்பிக்கை அற்றவர்.  சம்த்துவத்தைப் போற்றும், ஜாதிகளை  எதிர்க்கும் கபிலர் அகவலை பத்ரகிரியாரும் குறிப்பிடுவார். அதே போல பத்திரகிரியாரை பிற்காலத்தில், ராமலிங்க சுவாமிகள் முதலானோர் பாடல்களில் போற்றுவர்.

 

இவரது காலம் பட்டினத்தார் காலமாகிய பத்தாம் நூற்றாண்டு ஆகும்.

 

பத்ரகிரியார் பாடலில் சில சுவையான பகுதிகள்

 

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்து

தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்?

 

வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஒழிந்தே நிட்டையிலே

ஏகாந்தமாக இருப்பது இனி எக்காலம்?

 

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொல்படியே

சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?

 

ஆசாரம் நேயம் அநுஷ்டானமும் மறந்து

பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்றிருப்பது எக்காலம்?

 

மனத்தை வில்லாக்கி வான் பொறியை நாணாக்கி

எனது அறிவை அம்பாக்கி எய்வது இனி எக்காலம்?

 

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தால் போல்

உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம்?

 

–பத்ரகிரியார் புலம்பல்

ஓவியங்கள்

நாடுப்புறப் பாடல்களில் மட்டுமின்றி ஓவியங்களிலும் பர்த்ருஹரியின் தாக்கத்தைக் காணலாம்.

 

மொகலாயர் கால ஓவியங்களில் பர்த்ருஹரி பிச்சை எடுக்கும் காலத்தில் தனது பழைய மனைவியைச் சந்தித்த ஓவியமும் உளது.

 

-subham–

குறள் கதை — ‘உண்டிக்கழகு விருந்தோடுண்டல்’ (Post No.5203)

Written by London swaminathan

 

Date: 10 JULY 2018

 

Time uploaded in London – 11-59 am  (British Summer Time)

 

Post No. 5203

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

‘உண்டிக்கழகு விருந்தோடுண்டல்’—வெற்றி வேற்கை, அதி வீர ராம பாண்டியன்

 

சாப்பாட்டிற்கு அழகு, விருந்தாளிகளுடன் பகுத்து உண்ணுதல் ஆகும். விருந்தோம்பல் என்னும் பண்பு பாரத நாட்டில் மட்டுமே உண்டு. இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் என்பதற்கு இது மிகப்பெரிய சான்று

 

வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் விருந்தாளிக்குப் போட்டுவிட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. அதை ஒரு தர்ம கைங்கர்யமாகவும் சொல்ல வில்லை. அன்ன சத்திரங்கள் ஆயிரம் அமைக்கவுமில்லை. மநு ஸ்ம்ருதியும், சிலப்பதிகாரமும், திருக்குறளும் சங்க இலக்கியமும் மட்டுமே செப்பும் கருத்து இது.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)

 

பொருள்

தம்மிடமுள்ள உணவை எல்லோருக்கும் பகுத்துக் கொடுத்து தானும் உண்ண வேண்டும்; பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்; நல்லோர் கூறிய எல்லா அறங்களிலும் இதுவே சிறந்த தர்மம்.

தனக்கு மட்டுமே சமைப்பவன் பாவி என்று பகவத் கீதையில்ன் கண்ணன் நுவல்கிறான்.

யஜ்ஞசிஷ்டாசினஹ சந்தோ முச்யந்தே சர்வகில்பிஷைஹி

புஞ்சதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மாமகாரணாத்

(பகவத் கீதை 3-13)

 

பொருள்

யக்ஞம் செய்து மிஞ்சியதை உண்ணும் சாதுக்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால் எவர்கள் தமக்கெனவே சமைக்கின்றார்களோ அந்த பாபிகள் பாவத்தையே உண்கிறார்கள்.

 

இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு பெரியபுராணத்திலுள்ள இளையான்குடி  மாற நாயனார் வரலாறு ஆகும்.

இளையான்குடி என்பது ஒரு சிறிய கிராமம். அங்கே ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் பயிர்த் தொழில் செய்யும் வேளாளர் குலத்தில் உதித்த பெருந்தகை. வந்தோருக்கெல்லாம் விருந்தளிப்பவர். இதனாலேயே ஏழ்மை நிலை அடைந்தவர். இவர் புகழை உலகிற்கு அறிவிக்க இறைவன் ஒரு திருவிளையாடல் செய்தான்

 

ஒரு நாள் இரவில் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது ஒரு துறவி அவர் வீட்டின் கதவைத் தட்டினார். வந்தவர்க்கு நள்ளிரவானாலும் சாப்பாடு போட வேண்டுமே என்று எண்ணி மனைவியிடம் என்ன இருக்கிறது? என்று வினவினார். அவர் முகமே பதில் சொல்லிவிட்டது.

விருந்தினருக்கு உணவளிக்க பக்கத்து வீட்டுக்குக் கூட போக முடியாத மழை ஒரு புறம்; இருள் மறு புறம். திடீரென அவர் மனைவிக்கு ஒரு  விஷயம் ஞாபகம் வந்தது. அன்று காலையில்தான் நெல் வயலில் தானியத்தை விதைத்து இருந்தார்கள். கொட்டும் மழையில் கிடைத்த தானியங்களை அள்ளி வரும்படி மனைவி சொன்னவுடன் அவரும் தலையின் மீது துண்டைப் போட்டுக்கொண்டு வயல் வெளியில் சேற்றிலும் சகதியிலும் மிதந்த விதை நெல்லை பொறுக்கி எடுத்து வடிகட்டி வைத்து நெல்லை மட்டும் அரிந்து கழுவினார். அதை உலையில் ஏற்றி சோறு வைத்தார்.

 

இதற்குள் கறியமுது வேண்டுமே என்று சிந்திக்க கொல்லைப்புற கீரை செடிகள் நினைவுக்கு வந்தன. அவைகளையும் பறித்து தண்டு ஒரு கூட்டு இலை ஒரு கறியமுது என்று விதவிதமாகச் சமைத்துவிட்டு விருந்தாளியை அழைக்க திண்ணைக்கு வந்தார். ஆனால் விருந்தாளி மாயமாய் மறைந்து விட்டார்! வந்திருந்தவர் சிவ பெருமானே என்பதை அறிந்தார். அவரும் ஒளி வடிவில் ரிஷப ஆரூடனாகக் காட்சி தந்தார்.

 

யார் ஒருவன் பகுத்துக் கொடுக்காமல் சாப்பிடுகிறானோ அவன் குற்றம் புரிந்தவனே. அவன் தோழர்களுக்கு உணவு அளிக்காவிடில் அவனை நேசிப்போர் யாரும் இரார்– இது ரிக் வேத மந்திரத்தின் ஒரு பகுதி (10-117-4/6)

 

விருந்தினரை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று காசிக் காண்டம் என்னும் நூலில் அதிவீர ராம பாண்டியர் எழுதியுள்ளார். இதை ஒருவர் பின்பற்றினால் வந்தவரின் உள்ளத்தை வென்றுவிடலாம். சிலர் நன்றாகச் சாப்பாடு போடுவர். ஆனால் பேசத் தெரியாமல் பேசி, போட்ட சாப்பாட்டின் பலனைக் கெடுத்துவிடுவர்.

விருந்தினனாக ஒருவன் வந்தெதிரின்

வியத்தல் நன்மொழியினுரைத்தல்

திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்

எழுதல்முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றவன்றன் அருகுற விருத்தல்

போமெனிற் பின்செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல்லிவ் வொன்பான்

ஒழுக்கமும் வழிபடு பண்பே

 

–SUBHAM–

புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை! (Post No.5202)

Written by S NAGARAJAN

 

Date: 10 JULY 2018

 

Time uploaded in London –   6-32 AM (British Summer Time)

 

Post No. 5202

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சங்க காலம் பொற்காலம்

 

புலவர்களின் தமிழைப் பார்த்தார்கள்; ஜாதியைப் பார்க்கவில்லை!

 

ச.நாகராஜன்

 

 

சங்க காலத்தில் ஜாதி பேதம் இன்றைய திராவிட கண்களின் விஷப்பார்வை போல பார்க்கப்படவில்லை என்பது ஒரு அருமையான செய்தி.

 

அந்தக்காலத் தமிழர்கள் தமிழைப் பார்த்தார்கள்; தமிழ் கூறும் கருத்துக்களைப் பார்த்தார்கள்.

 

பாடியவர் அந்தணரா, அரசரா, இடையரா, எயினரா, கூத்தரா, தட்டாரா, வணிகரா, வேளாளரா என்று பார்க்கவில்லை.

அனைவரையும் மதித்தார்கள் – தமிழுக்காக, தமிழில் அவர்கள் தந்த கருத்துக்களுக்காக.

எடுத்துக்காட்டாக அகநானூற்றில் வரும் புலவர்கள் சிலரின் ஜாதியை இங்கு சுட்டிக் காட்டலாம்- இன்றைய திராவிட இயக்கங்கள் தீய நோக்கில் பரப்பும் விஷ பிரசாரத்தைத் தடுக்கவே இது தரப்படுகிறது.

 

ஜாதி மட்டுமல்ல, ஆண், பெண் என்ற பாலின பேதம் கூட அந்த காலத்தில் பார்க்கப்படவில்லை. பெண்பாற் புலவர்களும் உண்டு.

தமிழின் முன்னால் அனைவரும் சமம் என்ற உயர் நோக்கைச் சங்க காலம் கொண்டிருந்தது என்பதை இதன் மூலம் உணரலாம்.

பாடிய புலவர்களின் ஒரு பட்டியல் இதோ:

 

அந்தணர்:

ஆமூர்க் கௌதமன் சாதேவனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கபிலர்

கோடிமங்கலம் வாதுளி நற் சேந்தனார்

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்

நக்கீரனார்

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

மதுரை இளங்கௌசிகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கௌணியன் தத்தனார்

மாமூலனார்

இந்தப் பெயர்கள் மூலம் பொதுவாக ஊர்ப் பெயர்களை புலவர்கள் தம் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதைக் காணலாம்.

எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். கவுண்டின்ய கோத்திரம், கௌசிக கோத்திரம், வாதூல கோத்திரம் என்று இப்படிப் பல கோத்திரங்களை அவர்கள் பெயருடன் இணைத்துக் கொண்டிருந்தனர்.

 

அரசர்

அண்டர்மகன் குறுவழுதியார்

அதியன் விண்ணத்தனார்

ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

சேரமான் இளங்குட்டுவன்

பாண்டியன் அறிவுடைநம்பி

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி

பாலை பாடிய பெருங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

வீரைவெளியன் தித்தனார்

 

 

இடையர்

இடைக்காடனார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார்

எயினர்

எயினந்தைமகன் இளங்கீரனார்

விற்றூற்று மூதெயினனார்

 

கூத்தர்

உறையூர் முதுகூத்தனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன்கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் கடுவன்மள்ளனார்

மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்றேவனார்

 

தட்டார்

தங்காற் பொற்கொல்லனார்

மதுரை பொன்செய்கொல்லன் வெண்ணாகனார்

 

மந்திரத்தலைவர்

ஏனாதி நெடுங்கண்ணனார்

 

வண்ணக்கர்

வடமவண்ணக்கன் டேரிசாத்தனார்

 

வணிகர்

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

மதுரை அறுவைவாணிகன் இள வேட்டனார்

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

வேளாளர்

ஆர்க்காடுகிழார்மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணத்தனார்

ஆவூர் மூலங்கிழார்

மேற்படியார் மகனார் பெருந்தலைச்சாத்தனார்

உமட்டூர்கிழார்மகனார் பரங்கொற்றனார்

காட்டூர்கிழார்மகனார் கண்ணனார்

கோடியூர்கிழார்மகனார் நெய்தற்றனார்

செல்லூர்கிழார்மகனார் பெரும்பூதங்கொற்றனார்

நல்லாவூர்கிழார்

நெய்தற்சாய்த்துய்ந்த ஆவூர் கிழார்

நொச்சியமங்கிழார்

பொதும்பில்கிழார் வெண்கண்ணனார்

மதுரைக் காஞ்சிப் புலவர்

மதுரை மருதங்கிழார்மகனார் பெருங்கண்ணனார்

மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்

மாற்றூர்கிழார்மகனார் கொற்றங்கொற்றனார்

வடமோதங்கிழார்

 

அருந்தொடரால் பெயர் பெற்றோர்

அந்தியிளங்கீரனார்

இம்மென்கீரனார்

ஊட்டியார்

நோய்பாடியார்

வண்ணப்புறக்கந்தரத்தனார்

பெண்பாற்புலவர்

அஞ்சில் ஆந்தைமகள் நாகையார்

அள்ளூர் நன்முல்லையார்

ஒக்கூர் மாசாத்தியார்

ஔவையார்

கழார்க் கீரனெயிற்றியார்

குமிழிஞாழார் நப்பசலையார்

நக்கண்ணையார்

போந்தைப் பசலையார்

மதுரை நல்வெள்ளியார்

முள்ளியூர்ப் பூதியார்

வெள்ளிவீதியார்

வெறிபாடியகாமக்கண்ணியார்

 

75 புலவர்களின் பெயர்களை மேலே காணலாம். இந்தப் புலவர்கள் வெவ்வேறு ஜாதியினரைச் சேர்ந்தவராய் இருப்பினும் தமிழால் ஒன்றுபட்டவர்கள். சமமானவர்கள். மதிப்பைப் பெற்றவர்கள். ஆண், பெண் என்ற வேறுபாடும் சங்க காலத்தில் பார்க்கப்படவில்லை என்பதற்கும் இந்தப் பட்டியலே சான்று!

***

 

1916 வரை தமிழ் நாவல்கள், நாடகங்கள்! (Post No.5200)

Compiled by London swaminathan

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London – 15-08  (British Summer Time)

 

Post No. 5200

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மலேயாவிலிருந்து வந்த சகலகலாவல்லி பத்திரிக்கை விளம்பரப்படி 1916 ஆம் ஆண்டு வரை வந்த தமிழ் நாவல்கள், நாடகங்களின் பட்டியல் கீழே உள்ளது. அக்காலத்திலேயே இத்தனை புஸ்தகங்களை எழுதி தமிழ்  வளர்த்தோரை நினைவுகூறுவது நம் கடமை.

 

இந்த நாவல்களைப் படிக்கையில் அக்கால எழுத்து நடை, மக்களின் விருப்பம், கலாசார வழக்கங்கள் ஆகிய தெளிவாகத் தெரியும் குறிப்பாக ஒருவருக்குத் திருமணம் செய்ய முனையும்போது பெண் வீட்டார் என்ன நினைக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதெல்லாம் இன்று வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கும்.

இதோ பட்டியல்:-

 

 

 

–SUBHAM–

அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி………Part 2 (Post No.5192)

Written  by London swaminathan

 

Date: 7 JULY 2018

 

Time uploaded in London –  15-58 (British Summer Time)

 

Post No. 5192

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

கட்டுரையின் முதல் பகுதியில் மிதிலை நகரம் பற்றிய சில கதைகளைக் கண்டோம். இப்போது மேலும் பல  சிறப்புகளைக் காண்போம்:-

 

மிதிலை, விதேஹ என்ற பெயர்களுடன், திரபுக்தி (இப்போது திர்ஹுத் மாவட்டம்) முதலிய பெயர்களும்

இந்தப் பகுதிக்கு உண்டு.

பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ண பகவானுடன் இந்திரப் பிரஸ்தம் (டில்லி) நகருக்குச் சென்று விட்டு ராஜக்ருஹம் நகருக்குத் திரும்புகையில் இங்கே வந்தனராம். கர்ண மாமன்னன் தனது திக் விஜயத்தில் மிதிலையையும் வென்றானாம். இதெல்லாம் மாபாரதச் செய்திகள்.

 

உலகிலேயே நீண்ட காவியமான மஹா பாரதத்திலுள்ள ஒரு வரி  மிகவும் பிரபல்யமானது.

 

காவலர்கள் ஓடோடி வந்து மன்னர் மன்னவா! மிதிலை நகரம் எரிந்து கொண்டிருக்கிறது என்று கூச்சலிட்டனராம். வேதப் பொருளை வினவிக் கொண்டிருந்த மாமன்னன் தத்துவ வித்தகன் ஜனகன் சொன்னானாம்:

 

“மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் நமே தஹ்யதி கிஞ்சன”–

“இதில் எரிவதில் என்னுடையது என்றும் எதுவும் இல்லை!” —

என்று அவர் விடை இறுத்தாராம்.

 

அவ்வளவு உயர் நிலையை அடைந்த ஜீவன் ஜனகன்.

 

ராமன் நடந்தே சென்றான்!

ராமாயணத்தில் ஒரு சுவையான செய்தி உண்டு. அயோத்தி நகரிலிருந்து ராம லக்ஷ்மணர்களை அழைத்துச் சென்ற விஸ்வாமித்ர மஹரிஷி நாலே நாட்களில் மிதிலைக்கு வந்ததாகப் படிக்கிறோம். தற்போதைய அயோத்திக்கும் ஜனக்பூருக்கும் இடையுள்ள தூரம் சுமார் 450 கிலோமீட்டர் (சுமார் 270 மைல்கள்) ராம லக்ஷ்மணர்கள் விசால நகரில் ஓரிரவு தங்கினராம். ஆக ஐந்து நாட்கள் என்றி வைத்துக் கொண்டாலும் அந்தச் சிறுவர்களும் கிழட்டு முனிவரும் ஒரு நாளைக்கு சுமார் 54 மைல்கள் நடந்திருக்க வேண்டும்.

 

ஒரு வேளை குதிரையில் சென்றிருந்தால் இன்னும் அதிகம் பயணித்து இருக்கலாம்!

பெண் கொடுக்க காசி மன்னன் மறுப்பு

 

காசி மன்னன் பிரம்மதத்தன் விதேஹ நாட்டு மன்னனுக்குப் பெண் கொடுக்க மறுத்து விட்டா னாம். அவனுக்கு நிறைய மனைவிகள் உண்டு. என் மகள் சக்களத்தி தொல்லைக்கு உள்ளாவள் என்பதே அவர் சொன்ன காரணம்.

 

 

மிதிலை நகரம் இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் எல்லோருக்கும் பயன்பட்டது. சமண மத்தின் கடைசி தீர்த்தங்கரர் ஆன மஹா வீரர் இந்த ஊரில் 30 ஆண்டுகள் வசித்தார். அவருடைய மாமா பெயர விதேஹ தத்தா. மஹாவீரரின் மாமா சேடகனும் மிதிலையை ஆண்டவர்களில் ஒருவர்.

நாலு புறமும் மார்க்கெட்!

 

மிதிலை பற்றிய தகவல் 2300 ஆண்டுக்கு முந்தைய ஜாதகக் கதைகளில் இருந்தே அதிகம் கிடைக்கின்றன. ராமாயண மஹாபாரத, புராண, சமண சமய நூல்களும் பல தகவல்களைப் பொழிகின்றன.

 

மிதிலை நகரின் நான்கு வாயில்களிலும் நான்கு மார்க்கெட்டுகள் இருந்தனவாம். மக்கள் பொருள்களைக் கொணர்ந்து விற்றனர .விதேஹ நாட்டில் 16000 கிராமங்கள், 16,000 நாட்டியப் பெண்கள், 16,000 கிடங்குகள் இருந்தனவாம் (16000= ஏராளமான)

 

புத்தரின் சீடன் ஒருவன் வண்டிகள் நிறைய பொருட்களை ஏற்றிக் கொண்டு ஸ்ரவஸ்தி நகரிலிருந்து மிதிலைக்கு வந்து பண்டமாற்று வியாபாரம் செய்தான் என்று பௌத்த நூல்கள் பகரும்.

 

ஜனகருக்கு அறிவுரை வழங்கிய  அறிஞர் பெருமக்கள், கோசல, குரு, பாஞ்சால தேசங்களிலிருந்து வந்தனராம் அவர்கள்:

அஸ்வல, ஜரத்கார்வ, அர்த்தபாக கார்கி வாசக்நவி (பெண்), உத்தாலக ஆருணி, விதக்தா, சாகல்ய, கஹோல கௌசிகதேய

 

இதுதவிர பிரஹ்மாயூ என்ற பெயருடைய பிராஹ்மண அறிஞனின் பெயரும் புஸ்தகங்களில் அடிபடுகிறது. அவரை புத்தர் தனது மதத்துக்கு இழுத்தாராம். புத்தரும் புத்தரின் சீடர்களும் மிதிலைப் பெரு நகரில் பேருரை ஆற்றினர்.

அங்கதி என்ற மிதிலை மன்னனுக்கு மூன்று அமைச்சர்கள் உதவினராம்; திருவிழா நாட்களில் அந்நகரம் தேவ லோகம் போலக் காட்சி தந்ததாம்.

சூர்யப்ரக்ஞாப்தி ஜியசத்து என்பவர் மிதிலையை ஆண்டதாகக் கூறுவர். இது கோசல நாட்டின் ப்ரசேனஜித் என்பர் சிலர்.

 

மிதிலை நகரிலிருந்து ஆட்சிபுரிந்த சாதின என்ற அரசன் ஆறு சத்திரங்களைக் கட்டினான். அவற்றில் தினமும் ஆறு லட்சம் துண்டுகள் பரிமாறப் பட்டனவாம்.

 

வேத இலக்கியத்தில் நமீசாப்ய என்பவன் ஆண்டதாக ஒரே ஒரு தகவல் இருக்கிறது.

 

ஜாதக் கதைகள்,சமண, பௌத்த நூல்களில் வரும் மன்னர்களின் பெயர்கள் ஆராய்ச்சிக்குரியது. இந்த மன்னர்களின் பெயர்களை நாம் கேட்டதே இல்லை.

 

நான் ஆங்கிலத்தில் 1500-க்கும் மேலான

அரசர்களின் பெயர்களை வெளியிட்டேன். இந்தியாவை ஆண்ட 3000 அரசர் என்று தலைப்பிட்டு எழுதினேன். ஜாதகக் கதைகள், கதாசரித் சாகரம், விக்ரமாதித்தன் கதைகள் ஆகியவற்றிலுள்ள பெயர்களை எல்லாம் பொறுமையாகத்  தொகுத்தால் 3000 மன்னர்களை விட மிஞ்சிவிடும்!!

 

–சுபம்–

சங்க இலக்கியத்தில் யூபம்- பகுதி 2 (Post No.5187)

RESEARCH ARTICLE by London swaminathan

 

Date: 6 JULY 2018

 

Time uploaded in London –   7-26 am

 (British Summer Time)

 

Post No. 5187

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

நேற்றைய கட்டுரையில் புறநானூறு, அகநானூறு, பெரும்பாணாற்றுபடை முதலிய சங்ல நூல்களில் காணப்படும் யூபம் எனும் வேள்வித் தூண் பற்றிய செய்திகளைக் கண்டோம். ரிக் வேத ஸம்ஸ்க்ருதச் சொல்லை புறநானூற்றுப் புலவர்கள் தயக்கமின்றி தமிழ் பாக்களில் அள்ளித் தெளித்திருப்பதையும் சுவைத்தோம். இன்று எண்-17 க்கும் யூபத்துக்கும் உள்ள தொடர்பையும் ராவணன் மகன் மேகநாதன் நூற்றுக் கணக்கில் யூபங்கள் நட்டதையும் காண்போம்.

 

முதுகுடுமிப் பெருவழுதியைப் பாராட்டிய நெட்டிமையார், “நீ வென்ற பகைவர்கள் எண்ணிக்கை அதிகமா? அல்லது நீ செய்த யாகங்களும், அதன் காரணமாக நட்ட யூபத் தூண்களும் அதிகமா? என்று வியந்தார். அவனுக்குப் போட்டி ராவணன் மகன் மேக நாதன். அவனூடைய யாக பூமியில் நூற்றுக் கணக்கான யூப ஸ்தம்பங்கள் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டம் செப்பும்.

யூபம் என்பது இருவகைப்படும் ஒன்று அலங்காரத்துக்காக யாகப் பந்தல்களில் நடப்படும் தூண்கள். மற்றொன்று வேள்விக்காக நடப்படும் யூபம். இது 17 முழம் அளவு உடையது.

ஏன் 17 முழம்?

இது ஒரு மர்மமான எண்; வேதத்தில் பல இடங்களில் இது காணப்படுகிறது. வாஜபேய யாகத்தில் 17 குதிரை ரதங்களின் போட்டி நடைபெறும் ஏனெனில் 17 என்பது பிரஜாபதியின் எண் என்றெல்லாம் விளக்கப்படுகிறது (எனது முந்தைய கட்டுரைகளில் விளக்கம் உளது)

அது மட்டுமல்ல இந்த 17-க்கும் அடி முதல் நுனி முடிய 17 பெயர்களும் இருக்கின்றன. (எனது ஆங்கிலக் கட்டுரையில் பெயர்கள் உள; கண்டு மகிழ்க)

 

 

 

பால காண்டத்திலும் (14-22) யூபம் பற்றிய சுவையான செய்திகள் உண்டு.

பால காண்டத்தில் அஸ்வமேத யாகம் பற்றிய செய்திகளில் 21 கம்பங்கள் நடப்பட்டதாக வால்மீகி பாடுகிறார். அதன் உயரம் 21 முழம் என்பார்.

 

ஏன் 21?

பிராஹ்மணர்கள் முத்தீ வழிபடுவோர். அதாவது ஆஹவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்னி என்ற முத்தீயை வழிபடுவதால் ஒவ்வொன்றுக்கும் ஏழு ரிஷிகள் வீதம் (ஸப்த ரிஷி 3×7= 21) 21 நடப்பட்டதாம்.

யூபஸ்தம்பத்தை– வேள்வித்தூணை– புத்தாடை கட்டி அலங்கரித்து அதன் மேல் பழக்குலைகள், இலை தழை தோரணங்கள் கட்டுவராம். யூப ஸ்தம்பத்தின் இடை, நடு, அடி, முடி ஆகியவற்றுக்குப் பிரத்யேக மான ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

 

முதல் கட்டுரையில் யூபம் நட்ட தமிழ் மன்னர்களின் பெயர்களைக் கண்டோம். இந்தோநேஷியவில் மூலவர்மன், அஸ்வ வர்மன், குண்டுங்கா பெயர்களைக் கண்டோம். ராஜஸ்தான், உத்தரப் பிரதேச யூபங்களில் குஷாண, மாளவ, மோகாரி அரச குடும்பங்களின் பெயர்களும் விக்ரம, குஷாண, க்ருத யுக ஆண்டுகளின் பெயர்களும் காணப்படுகின்றன.

 

பொது ஆண்டு 102 முதல் மூல வர்மனின் பொ.ஆ.400 வரை ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது இந்துக்களின் வரலாற்று உணர்வைக் காட்டும்.

 

இதில் பிராஹ்மணர்களுக்குக் கொடுத்த தக்ஷிணையும் இடம்பெறுகிறது. இந்தோநேஷியா நாட்டில் மூல வர்மன் நடத்திய யாகத்தின் பெயர் பஹுசுவர்ணகம். இதில் ஐயர்களுக்கு தங்கம் தரப்படும்.

 

இது வால்மீகி ராமாயணம் பால காண்டத்திலும் (1-95) உளது; ஆக வால்மிகீ ராமாயணம் சொல்வதும் கல்வெட்டு சொல்வதும் வரலாற்று உண்மைகளே!

 

யூபம் என்ற சொல்லை யாதவ ப்ரகாஸரின் ‘வைஜயந்தி’ எனும் ஸம்ஸ்க்ருத அகராதி நன்கு விளக்குகிறது.

யூபம் பற்றிய அலங்காரம், தோற்றம், எண்ணிக்கை, அதன் தாத்பர்யங்கள் ஆகியவற்றைக் காண்கையில் இது யாக பலிக்கான தூண் அல்ல, பெரிய தத்துவங்களை விளக்க வந்த வேள்வித்தூண் என்பது குன்றிலிட்ட விளக்கு போல விளங்கும். பலிக்கான மிருகம் தூணிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட பின்னரே யாகம் நடந்ததையும் மாவு ரூபத்தில் மிருக பொம்மைகள் யாகத்தீயில் இடப்பட்டதையும் வியாக்யானங்கள் விளக்குகின்றன.

 

அவையனத்தையும் மெய்ப்பிக்கிறது 17, 21 முதலான மர்ம எண்கள். வெறும் பலிக்கு ஒரு தூண் என்றால் இவ்வளவு விளக்கம் வந்திராது.

 

காஞ்சி சுவாமிகள் 400 வகை யாகங்கள் இருப்பதாக்ச் சொன்ன விஷயத்தை தனிக் கட்டுரையில் முன்னர் தந்தேன். இதோ மேகநாதன் செய்த 7 யாகங்கள்:

அக்னிஷ்டோம

அஸ்வமேத

பஹுஸுவர்ணக

ராஜசூய

கோமேத

வைஷ்ணவ

மஹேஸ்வர

(வால்மீகி ராமாயணம், உத்தரகாண்டம் 25-8)

வாழ்க யூப ஸ்தம்பம்! வளர்க தமிழ்!!

OLD ARTICLE

Mysterious Number 17 in the Vedas! (Post No.3916) | Tamil and …

tamilandvedas.com/2017/05/17/mysterious-number…

 

 

  1. 400 Types of Yagas (Fire Ceremonies) | Tamil and Vedas

tamilandvedas.com/2014/03/06/400-types-of-yagas…

Prince Charles and Camilla Parker with Swami Chidananda Saraswati at Rishikesh taking part in a Yajna. “The Brahmin spoiled himself and spoiled others. By …

 

  1. Pancha Maha Yajnas | Tamil and Vedas

tamilandvedas.com/tag/pancha-maha-yajnas

Posts about Pancha Maha Yajnas written by Tamil and Vedas. about; … Prince Charles doing Yajna in … called also Veda-yajnah,Sacrifice to Brahman or the Vedas.

 

–சுபம்–

 

மந்திரிக்கழகு? தந்திரிக்கழகு? 2 கதைகள் (Post No.5180)

Compiled by London swaminathan

 

Date: 4 JULY 2018

 

Time uploaded in London –   7-45 am (British Summer Time)

 

Post No. 5180

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை

வெற்றி வேற்கை/ நறுந்தொகை (அதிவீரராம பாண்டியன்)

 

மந்திரிக்கு அழகு என்ன?

இனி நடக்கப்போவதை அறிந்து மன்னனுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன் – குறள் 638

பொருள்-

அறிந்து கூறுவோர் இல்லாமல் மன்னன் தானே அறியும் ஆற்றல் அற்றவன்; அவன் மதிக்காவிட்டாலும் அமைச்சனின் கடமை– நன்மை தருவனவற்றை எடுத்துரைத்தலாம்.

 

மன்னன் மஹாபலி மிகவும் தயாள குணம் உடையவன். ஆயினும் அரக்கர் குலத்தவன். அவனுடைய ஆற்றல் பெருகினால் ஆபத்து விளையும் என்று கருதி, திருமால் குள்ளன் வடிவத்தில்– வாமனன் வடிவத்தில்- பிராமண கோலத்தில் யாசிக்கச் சென்றார். யாசகம் கேட்டு வந்தவன் சாதாரண பிராஹ்மணன் அல்ல என்பதை அசுர குருவான சுக்ராச்சார்யார் அறிவார்.

 

ஆகையால் மஹாபலி சக்ரவர்த்தியை எச்சரித்தார். இந்த ஆள் சாதாரணமானவர் அல்ல. அவன் கேட்பதை எல்லாம் தந்து விடாதே. உ னது ராஜ்யத்தில் ஒரு பகுதி மட்டும் கொடுத்து திருப்பி அன்னுப்பிவிடு என்றார். ஆனால் ‘விநாஸ காலே விபரீத புத்தி’ வரும் அல்லவா. விதி கெட்டுப்போனால் மதி கெட்டுப் போகும் அல்லவா?  மன்னன், மந்திரியின் சொல்லைக் காற்றில் பறக்கவிட்டான்.

ஐயரே, யாது வேண்டும் ? என்றான்

ஒன்றும் அதிகம் வேண்டாம்; மூன்று அடி மண் போதும் என்றான்.

அரசனோ சிரித்துக் கொண்டே எடுத்துக் கொள் என்றான்

வந்திருந்த வாமனனோ  ‘ஓங்கி உலகு அளந்த உத்தமனாக’ வடிவு எடுத்து பூமியை ஒரு காலடியாலாலும் ஆகாய த்தை ஒரு காலடியாலும் அளந்து விட்டு, அன்பனே, மூன்றாவது அடிக்கு எங்கே வைப்பது? என்று வினவ, மன்னனும் என் தலையில் வைக்க என்றான்.

அவனுக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்தது. தானம் கொடுத்த பலன் ஒன்று; விஷ்ணுவின் காலடி பெற்ற புண்ணியம் இரண்டு.

 

மன்னன் மஹாபலி ஒன்றும் தவறிழைக்காதவன் என்பதால் நீ ஆண்டுதோறும் எனது நட்சத்திரமான ஓணம் அன்று இதே பூமிக்கு விஜயம் செய்து மக்களின் வாழ்த்துக்களைப் பெறு என்றான். அதுவே ஓணம் பண்டிகை ஆயிற்று.

 

தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை

 

தந்திரிக்கு– அதாவது சேனைத் தலை வனுக்கு– அழகு என்ன?

போரில் அஞ்சாது ஆண்மையோடு இருத்தல்.

 

மஹாபரதக் கதை எல்லோருக்கும் தெரியும். துரியோதணனுக்கு எவ்வளவோ நல்ல புத்திமதி சொல்லி நல்வழிப்படுத்த முயன்றார் பீஷ்மர். ஆனால் அவன் கேட்ட பாடில்லை. அது மட்டுமல்ல. மஹாபாரதப் போரில் அவரை படைத் தளபதியாக நியமித்தான்; கட்டாயம் அதர்மம் தோற்கும் என்பதை அறிந்தும் அஞ்சாது போரிட்டு மடிந்தார்; உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினையாது உப்பிட்டவரை உள்ளளவும் நினைந்து உயிர் நீத்தார் பீஷ்மர். போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று சொன்ன கிருஷ்ணனையும் இரண்டாம் நாள் போரில் சக்ர ஆயுதம் ஏந்த வைத்தார். போரெனில் இது போர்; புண்ணி யத்திருப்போர் என்று போற்றும் வ கையில் செயல்பட்டார். இது போல் தமிழ் நாட்டில் சிறுத்தொண்டர் ஆற்றிய சேவையையும் சொல்லலாம்.

 

-SUBHAM-

ஐந்து ஐந்தாக உள்ள விஷயங்கள்! – 1 (Post No.5174)

Written by S NAGARAJAN

 

Date: 3 JULY 2018

 

Time uploaded in London –   5-49 AM (British Summer Time)

 

Post No. 5174

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சம்ஸ்கிருத செல்வம்

 

 

ஐந்து ஐந்தாக உள்ள விஷயங்கள்! – 1

 

ச.நாகராஜன்

 

சம்ஸ்கிருதத்தில் உள்ள லட்சக்கணக்கான பாடல்களில் உள்ள ஒரு சிறப்பு பல விஷயங்களை எளிதாக மனனம் செய்யுமளவு அவை அடுக்கடுக்காக சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள் நிறைய இருப்பது தான்!

 

இப்படி இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து போன்ற எண்ணிக்கையில் உள்ளவற்றை வரிசையாக சொல்லப்பட்டிருக்கும் ஸ்லோகங்கள் தனியே தொகுக்கப்பட்டுள்ளன.

 

இங்கு ஐந்து ஐந்தாக உள்ள சில விஷயங்களைப் பார்க்கலாம்.

அக்ஷய நிதி 5

அழியாத செல்வங்கள் ஐந்து. அவை எவை?

சீலம் – ஒழுக்கம்

சௌர்யம் – வீரம்

அனாலஸ்யம் – சுறுசுறுப்பு

பாண்டித்யம் – சிறந்த மேதையாக இருக்கும் படிப்பு

மித்ர சங்க்ரஹம் – நல்ல நண்பர்களின் இணக்கம்

Conduct, Valour, Briskness, Scholarship, Association of friends -இந்த ஐந்தும் அழியாத செல்வங்கள். அக்ஷய நிதி.

 

 

சீலம் சௌர்யமனாலஸ்யம் பாண்டித்யம் மித்ரசங்க்ரஹம்|

அசோரஹரணீ யானி பஞ்சைதான்யக்ஷயோ நிதி||

– சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம்  158/243

துதிக்க வேண்டிய அக்னி 5

பிதா – தந்தை

மாதா – தாய்

அக்னி – தீ

ஆத்மா – ஆத்மா

குரு – ஆசான்

இந்த ஐவரும் வணங்கப்பட வேண்டியவர்கள்.

 

 

பஞ்சாக்னயோ மனுஷ்யேன பரிசார்யா: ப்ரயத்னத: |

பிதா மாதாக்னிராத்மா ச குருச்ச பரதர்ஷப: ||

  • விதுரநீதி 1 -179

மீமாஸத்தின் அங்கங்கள் (பிரிவுகள்)

விஷயா – பொருள்

விஷய – சந்தேகம்

பூர்வபக்ஷம் – முதல் நோக்கில் தெரிவது

உத்தரபக்ஷம் – பதில்

சித்தாந்தம் – முடிவு

Topic, Doubt,Prima Facie, Reply, Conclusion -ஆகிய இந்த ஐந்துமே மீமாஸ்த்தின் அங்கங்கள்

 

 

விஷயோவிஷயச்சைவ பூர்வபக்ஷச்தயோத்தரம் |

நிர்ணயச்சேதி பஞ்சாங்க: சாஸ்த்ரேதிகரணம் ஸ்ம்ருதம் ||

சர்வதர்ஷன் கௌமுதி

 

யாகம்

தேவா – கடவுள்

ஹவிர்த்ரவ்யம் – யாகத்தின் திரவியங்கள்

மந்த்ரம் – மந்திரம் (ரிக், யஜுர், சாமம்)

ரித்விக் – குருக்கள்

தக்ஷிணா – தக்ஷிணை

 

தேவானாம் த்ரவ்ய ஹவிஷாம்ருக்சாமயஜுஷாம் ததா|

ருக்த்விஜாம் தக்ஷிணானாம் ச சம்யோகே யக்ஞ உச்யதே ||

பஞ்சாங்கம் (காலண்டர்)

திதி – நாள்

வாரம் – வாரம்

நக்ஷத்ரம் – நக்ஷத்ரம்

யோகம் – இரு நக்ஷத்ரங்களின் கூட்டில் உள்ள காலம்

கரணம் – கரணம்

 

திதி வார நக்ஷத்ரம் யோக: கரணமேவ ச |

தத்பஞ்சாங்கமிதி  ப்ரோக்தம் ||

-சப்தகல்பத்ரும:

உணர்ச்சியை வெளிப்படுத்தும் உடல் அங்கங்கள்

சித்தம்  – மனம்

அக்ஷி    – கண்கள்

ப்ரு       – கண் இமைகள்

ஹஸ்தம் – கைகள்

பாதம்   – கால்கள்

Mind,Eyes,Eyebrows,Hand, Feet  ஆகிய இந்த ஐந்து உடல் பாகங்களும் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டுபவை.

 

சித்தாக்ஷிப்ரூஹஸ்தபாதைரங்கசேஷ்டாதி சாப்யத: |

பாத்ராத்யவஸ்தாகரணம் பஞ்சாங்கோபினயோ மத: || –

மாளவிகாக்னிமித்ரத்திற்கு காதயவேமா எழுதிய பாஷ்யம் 1.6/7

 

ஐந்து ஐந்தாக இப்படித் தொகுத்துக் கூறும் பாடல்கள் ஏராளம் உள்ளன. மேலும் சிலவற்றை அடுத்துப் பார்ப்போம்.

***

எலிச் செட்டியார் கதை! (Post No.5173)

Written by London swaminathan

 

Date: 2 JULY 2018

 

Time uploaded in London –   14-53 (British Summer Time)

 

Post No. 5173

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

“வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்” என்று வெற்றி வேற்கையில் அதிவீர ராம பாண்டியன் கூறுகிறார்.

 

கதாசரித் சாகரம் என்னும் உலகின் முதல் பெரிய கதைத் தொகுப்பு நூல் ஒரு சுவையான கதையைச் சொல்கிறது இது ஒரு ஸம்ஸ்க்ருத நூல்; கதைக் கடல் என்ற பெயரில் தமிழிலும் கிடைக்கும்.

 

வர்த்தகர்கள் கிடைக்கும் சிறு லாபத்தையும் மேலும் மேலும் முதலீடு செய்து வணிகத்தையும் லாபத்தையும் வளர்ப்பார்கள்.

 

பாடலிபுத்ரம் (பாட்னா, பீஹார்) நகரில் முன்னொரு காலத்திலொரு ஏழைச் செட்டி மகன் இருந்தான். அவன் பிழைக்க வழி ஏது என்று கருதிக் கொண்டிருந்தபோது ஒரு செத்துப் போன எலியைக் கண்டான். அதைக் கையில் தூக்கிக் கொண்டு போனபோது ஒருவன் பூனையைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதைக்  கண்டான். பூனைக்கு எலி மாமிசம் பிடிக்குமே விலைக்கு வேண்டுமா? என்று வினவினான். உடனே அவன் என்னிடம் இரண்டு உழக்கு பச்சைக் கடலை மட்டுமே உளது என்றான்.

 

அதற்கென்ன, ரொம்ப பேஷ்! இந்தா எலி என்று பண்டம் மாற்று செய்தான். அதைச் சுண்டல் சுண்டி ஒரு சாலை ஓரத்தில் கடை விரித்தான்.

அருகில் ஒரு தண்ணீர் பானையும் வைத்தான். சாலையில் விறகு சுமந்து செல்லுபவர்கள், “அப்பா, சுண்டல் என்ன விலை?” என்று வினவ, “அவன் பணம் ஏதும் வேண்டாம்’ ஆளுக்கு இரண்டு விறகு கொடுங்கள் போதும்” என்று சுண்டலைப் பொட்டலம் போட்டுக் கொடுத்தான். அத்தோடு இன்னும் கொஞ்சம் சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்து நாலணாவுக்கு விற்றான். பின்னர் அதற்குச் சுண்டல் கடலை வாங்கி பொட்டலம் போட்டு விற்கவே ஒரு மாதத்தில் ஏழரை ரூபாய் கிடைத்தது.

 

பிறகு விறகு வியாபாரத்தை ஒரு வருஷம் செய்யவே 300 ரூபாய் கிடைத்தது. பிறகு கடையை பெரிதாக்கி ஐந்தே வருஷங்களில் ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதித்தான். பிறகு அதை முதலீடு செய்து மளிகைக் கடை வைத்தான். பத்தே வருஷங்களில் ஊரே மதிக்கும் படி பணக்காரச் செட்டியானான் இருபது வருஷத்துக்குள் மிகப் பெரிய பணக்காரனானவுடன் அரசன் கூட அவனிடம் கடன் வாங்க வந்து நின்றான். அவன் எலியின் மூலம் இவ்வளவு பணம் சம்பாதித்ததால் அவன் பெயரே ‘எலிச் செட்டியார்’ என்று பிரபலமானது.

இது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸம்ஸ்க்ருதத்தில்

எழுதப்பட்ட நூல். ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு எடுத்துக் காட்டு

 

இந்தக் காலத்திலும் கூட உலகின் மிகப் பெரிய பணக்காரர்       களில் ஒருவரான மித்தல் (Lakshmi Mittal) கதை இப்படித்தான்; பழைய இரும்புகளை வாங்கி விற்றவர், மூடப் போகும் இரும்பு ஆலைகளை வாங்கி லாபம் சம்பாதித்தார். பின்னர் பெரிய இரும்பு வணிகர் ஆனார். இன்று உலகின் பெரிய பணக்காரர்   பட்டியலில் அவர் பெயர் உள்ளது.

‘முயற்சி திருவினை ஆக்கும்’ ( திரு = ஸ்ரீ= செல்வம்)

 

சுபம்.