பாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த போது! (Post No.5064)

Written by London Swaminathan 

 

Date: 31 May 2018

 

Time uploaded in London – 20-46

 

Post No. 5064

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

பாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த  போது! (Post No.5064)

பழங்கால இந்தியாவில் கடல் வாணிபம் எப்படி நடந்தது என்ற சுவையான தகவல்களை பழைய நூல்கள் தருகின்றன. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் பாண்டிய இளவரசி மீனாட்சியையும் சூர சேனப் பெண்மணி காஞ்சன மாலையையும் தொடர்பு

படுத்திப் பேசுவதைக் காணலாம்; சூரசேனர் என்பது வட இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்கள். துவாரகை (குஜராத்) முதல்- மதுரா வரை ( உத்தரப் பிரதேசம்) ஆண்ட இனம்.  இதை புராணம் என்று ஒதுக்கிவிடலாம். பிற்கால நூல்களிலும் இத்தகைய தொடர்பு நீடித்து வந்தது  சமண மத நூல்களில் காணக்கிடக்கிறது.

(தெற்கிலிருந்து வடக்கே போன பிராமணர்களை அந்தந்த தேசத்தின் பெயர் சொல்லி அழைப்பர்; திராவிட தேசத்திலிருந்து சென்ற பிராஹ்மணர்களை திரவிட் (கிரிக்கெட் வீரரின் பெயர் த்ரவிட்) என்றும் பாண்டிய தேசத்திலிருந்து போன பிராஹ்மணர்களை பாண்டே, பாண்ட்யா (குஜராத்தி பிராஹ்மணர்) என்றும், தெலுங்க தேச பிராஹ்மணர்களை ‘தில்லான்’ (த்ரிலிங்க=தெலுங்க தேச) என்றும் அழைப்பர்.

 

ஆவஸ்யகா சூர்ணி என்ற சமண மத நூல் சில சுவையான விஷயங்களைச் சொல்கிறது:-

மதுரை நகரிலிருந்து சௌராஷ்டிரத்துக்கு  வழக்கமான கப்பல் போக்குவரத்து உண்டு; மதுரை மன்னன் பாண்டுசேனனின் (பாண்டிய மன்னன்) இரண்டு மகள்கள் அந்தக் கப்பலில் சௌராஷ்டிரத்துக்கு சென்று கொண்டிருந்தனர். இடையிலே புயல் வீசி கப்பல் கவிழத் துவங்கியது. உடனே கப்பலைக் காப்பாற்ற எல்லோரும் கந்தனையும் ருத்ரனையும் (சிவன்) பிராத்தித்தார்கள் என்று ஒரு குறிப்பு இருக்கிறது.

 

 

இப்போதைய மதுரையில் கடல் கிடையாது; 60,70 மைல்களுக்கு அப்பால்தான் கடல் உண்டு. கிருஷ்ணர் இருந்த மதுராவிலும் கடல் கிடையாது. ஆக இவர்கள் சொல்லுவது கடல் கொண்ட, இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்த தென் மதுரையாகவே இருக்க வேண்டும்; பாண்டு சேனன் என்பது பாண்டிய மன்னனின் திரிபே; மேலும் அவர்கள் முருகனையும் (கந்த) சிவனையும் (ருத்ர) கும்பிட்டது தமிழர்கள் என்பதைக் காட்டுகிறது. இதற்குப் புறநானூற்றில் நக்கீரர் பாடிய பாடலே சான்று; ஒரே புற நானூற்றுப் பாடலில் சிவன், முருகன் எல்லோரையும் போற்றுகிறார் நக்கீரர்.

 

இந்த நூல் 16 வகை கடற்காற்றுகளைப் பற்றி பேசுகிறது. அவையாவன

 

1.ப்ராசீன வாத (கீழைக் காற்று)

2.உதீசீன வாத (வாடைக் காற்று)

3.தக்ஷினாத்ய வாத (தென்றல் காற்று)

4.உத்தர பௌரஸ்த்ய ( எதிர்க்காற்று)

5.சத்வசுக (எல்லாத் திசைகளிலும் வீசும் காற்று)

6.தட்சிண பூர்வ துங்கார (தென்கிழக்கில் வீசும் புயல்)

7.அபர தக்ஷிண பீஜாபா (தெ. மே. திசைக் காற்று)

8.அபர பீஜாப (மேலைக் காற்று)

9.அபரோத்தர கர்ஜப (வ.மே. திசைக் காற்று)

10.உத்தர சத்வசுக

11.தக்ஷிண சத்வசுக

12.பூர்வ துங்கார

13.தக்ஷிண பீஜாப

14.பஸ்சிம பீஜாப

  1. பஸ்சிம கர்ஜப
  2. உத்தர கர்ஜப

 

இவ்வளவு வகையான பிரிவினைகள் இருப்பதால் இந்துக்கள் அல்லது பொதுவில் இந்தியர்கள் கடல் வாணிபத்திலும் கப்பல் போக்குவரத்திலும் வேறு எவரையும் சார்ந்து இருக்கவில்லை என்பது வெள்ளிடை மலையென விளங்கும். பதினாறு வகைக் காற்றுகளுக்கு தனிதனி ஸம்ஸ்க்ருதப் பெயர்களைத் தந்துள்ளனர்.

 

இந்தியா ஒரு விவசாய நாடு; பருவக் காற்று மழை நாடு; அதனால்தான் உலக மஹா கவி காளிதாசன் ஆறு பருவ காலங்கள் பற்றி ‘ருது சம்ஹாரம்’ எனும் நூலை இயற்றினான. மேக தூதம் என்னும் காவியத்தில் மத்தியப் பிரதேச உஜ்ஜைனி நகரிலிருந்து இமயமலை வரை பருவக் காற்று அடித்துச் செல்லும் மேகத்தின் காட்சிகளைப் பாடுகிறான். மேலும் சாகுந்தல நாடகத்தில் ஏழு வகை மேகங்கள் பற்றியும் பாடுகிறான்

காளிதாசன் சாகுந்தல நாடகத்தில் வானத்திலுள்ள ஏழு வகைக் காற்று மண்டலங்கள் பற்றியும் பேசுகிறான்.

மனைவியைக் கொன்ற பிராஹ்மணன்!

 

‘குவலய மாலா’ என்னும் நூலில் ஒரு சுவையான சம்பவம் வருகிறது.

குவலய மாலா நூலை உத்யோதண என்பவர் கி.பி.779ல் இயற்றினார்.

ஒரு ஏழைப் பிராஹ்மணன் பிழைப்பு தேடி ஒரு கழைக் கூத்தாடி, பாணர்கள் கூட்டத்தைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனுடன் அவன் மனைவி, மகன்களும் வருகின்றனர். ஒரு கிராமத்தில் கழைக் கூத்தாடிகள் கூடாரம் அடித்துத் தங்கி வித்தைகளைச் செய்து காட்டினர். அவன் மனைவியும் ஆசையோடு அதைப் பார்க்க வந்தாள். அவன் ஆத்திர ப்பட்டு அவளைத் தவறாக நினைத்து கொன்று விடுகிறான். பின்னர் ஆத்திரத்தில் அறிவு கெட்டுப் போய்விட்டேனே என்று அழுது புரண்டு தானும் மனைவியின் சிதைத் தீயில் பாய்கிறான்.

 

எல்லோரும் அவனை எரியும் நெருப்பிலிருந்து மீட்டு பண்டிதர் சபைக்கு அழைத்துச் செல்கின்றனர். அவன் பாவ  மன்னிப்புப் பரிகாரம் என்ன என்று கேட்ட போது எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி புண்ய தலங்களுக்க்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்கள்; அதோடு அவனிடமுள்ள கொஞ்ச நஞ்சத்தையும் தானம் செய் வேண்டும் என்றனர். (அவனும் அவ்வாறே செய்தான்)

 

இது போன்று கழைக் கூத்தாடிகள் கிராம ,கிராமமாகச் சென்று வியாபாரம் செய்தது முதலிய பல செய்திகள் அக்காலத்தின் போக்குவரத்து வசதிகளைக் காட்டுகின்றது.

 

சுபம்—

வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! (Post No.5058)

Written by London Swaminathan 

 

Date: 29 May 2018

 

Time uploaded in London – 14-35

 

Post No. 5058

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! (Post No.5058)

தாயுமானவர் பாடிய அற்புத சக்திகள் பற்றிய பாடல் நாம் எல்லோரும் அறிந்ததே:

 

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின்  இரதம் வைத்தைந்து லோகத்தையும்

வேதித்து விற்றுன்ண்ணலாம்;

வேறொருவர் கானாமல் உலத்துலாவரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடிருக்கலாம்

மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;

சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்

தன்னிகரில் சித்தி பெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.

 

அற்புதங்களின் ப்ட்டியலைத் தரும் தாயுமானவர் மனதை அடக்குவதுஅதை விடக் கடினம் என்கிறார்.

 

இந்த மாதிரி அற்புதங்களை தமிழ் சித்தர்கள் சர்வ சாதாரணமாகச் செய்து வந்தனர். அவர்களுக்கு அது ஒரு விளையாட்டு போல! இறைவனின் அற்புதங்களை சொல்லும் தமிழ் மொழி நூல்களும் அதை திரு ‘விளையாடல்’ என்றே செப்பும். ஸம்ஸ்க்ருதத்தில் அதை லீலா விநோதங்கள் அல்லது விபூதி என்பர்.

இதற்கெல்லாம் மிக மிக முந்தைய அற்புத துதிகள் உலகின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் உள்ளன.

 

ரிக் வேதம் 3500 ஆண்டு முதல் 8000 ஆண்டுவரை பழமையுடைத்து என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு. அதில் பத்தாவது மண்டலத்தில் ஜடை தரித்த (கேசீ) முனிவர்களைப் பற்றியும் அந்த முனிவர்களின் சக்தி குறித்தும் வருகிறது

 

ஏழு ரிஷிகள் சூரியனை முனிவனாக உருவகித்து பாடிய பாடல் அது.

அதில் வரும் சில வரிகளைக் காண்போம்:

கேசீ பூமியையும் சோதியையும் தாங்குகிறான்

 

முனிவர்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். காற்று போலச் செல்கிறார்கள்.

நாங்கள் காற்றின் மேலே ஏறினோம்; மானுடர்களே; நீங்கள் தூல தேகத்தையே பார்க்கிறீர்கள்

 

காற்றின் குதிரையும் வாயுவின் நண்பனுமான முனி, தேவனால் ஊக்கம் அடைந்து, கிழக்கு மேற்கிலுள்ள இரு கடல்களுக்கும் செல்கிறான்.

 

அப்சரஸ், கந்தர்வர்கள் செல்லும் இடங்களிலும் வனவிலங்குகள் செல்லும் இடங்களிலும் ( வானம், காடு)  முனிவன் சஞ்சரிக்கிறான்.

 

கேசீ ஜடையுள்ளவன். அவன் ருத்திரன் விஷத்தை அருந்தினான்.

 

இந்தப் பாடலில் வரும் விஷம் அருந்தும் வரிகள் நமக்கு விஷம் உண்டு பெயர் பெற்ற திரு நீலகண்டன் (சிவ பெருமான்) கதையை நினைவு படுத்துகிறது.

 

இந்தத் துதியின் அடிக்குறிப்பில் ரிக் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் கூறுவதாவது:-

முனிவர்கள் தங்கள் நேர்மையான வாழ்க்கை நடைமுறைகளால் வாயு, ருத்திரன் போன்ற தேவர்களின் தன்மையை அடிய முடியும்.  அவர்களைப் போல சிறந்த சக்திகளையும் பெற முடியும். எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்; நீண்ட அழகான முடியுடைய முனிவர்கள் தவத்தின் போது மழிப்பதில்லை. தீ ஜோதி, பூமி ஆகியவற்றைத் துதிப்பார்கள்.

 

சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘தீக நிகாயம்’ என்ற பௌத்த மத நூலும் ஆறு அதி மானுட சக்திகளை விவரிக்கிறது. ரிக் வேதம் காலத்தினால் பழமையானதால் அவர்கள் மறை பொருளில் பேசுவர். ஆனால் பிற்காலத்தில் எழுந்த பௌத்த, சமண சமய நூல்கள் நமக்குப் புரியும் நடையில் எல்லாவற்றையும் நுவல்வர்.

 

இதோ புத்த மத நூல் இயம்புவன:

 

“ஒரு மனிதன் பல மனிதர்கள் ஆகலாம்; பலர் ஒன்றாகலாம்.

மலைகள், சுவர்கள் ஊடே நுழைந்து செல்லலாம்

தண்ணீருக்குள் முங்கு நீச்சல் அடிப்பது போல பூமிக்குள் மூழ்கி எழுந்திருக்கலாம்.

தண்ணீர் மீது நடந்து செல்லல்லாம்

யாருக்கும் தெரியாமல் மாயமாய் உலவலாம்

காற்றின் மீது சம்மணம் போட்டவாறு பறக்கலாம்.

 

நிலவையும் கதிரவனையும் தொடலாம்;

பிரம்ம லோகம் வரை மானுட உடலில் செல்லலாம்.”

 

 

இவை அனைத்தும் சாதாரண மனிதனால் செய்ய இயலாது.

சமண மத நூல்களும் இதையே சொல்லும்.

 

அஷ்டமா சித்திகள்

 

 

ஹேம சந்திரர் எழுதிய த்ரிசதிசலாகா புருஷ சரிதத்தில் வரும் விஷயம் பின்வருமாறு:

 

“ஊசியின் காதில் நுழையும் அளவுக்கு உருவத்தைக் குறுக்கலாம்.

மேரு மலையை முழங்கால் அளவாகக் காட்டும் வரை உயரலாம்

காற்றை விட லேஸாகலாம்.

இந்திரனின் வஜ்ராயுதத்தை விட வலிமை பெறலாம்.

 

பூமியில் இருந்தவாறே கிரஹங்களைத் தொடலாம்

 

நீரின் மீது நடக்காலாம். பூமிக்குள் பு குந்து எழலாம்

பொந்துக்குள் நுழைவது போல மலைகளுக்குள் எளிதில் நுழையலாம்.

உருவமே தெரியாமல் மறையலாம்; வானம் முழுதும் வியாபித்தும் நிற்கலாம்.”

 

ஆக ரிக் வேதம், பழங்கால மொழியில் பகன்றதை பிற்கால நூல்கள் எளிய மொழியில் செப்பின என்றால் மிகை இல்லை.

அஷ்டமா சித்திகள் — அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள்.

அஷ்டமா சித்திகள் என்பதில் மேற் சொன்ன அற்புதங்கள் எல்லாம் அடக்கம். ஆனால் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை எண்வகைச் சித்திகளில் மட்டுமே காணப்படுகிறது. இது பர காயப் பிரவேசம் ஆகும். அதாவது ஒருவர் உடலில் உள்ள உயிர் வேறு ஒருவரின் உடலுக்குள் புகலாம். இதைத் திருமூலர் கதையில் விளக்கியுள்ளேன்

 

–சுபம்–

 

யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்! (Post No.5056)

Written by S NAGARAJAN

 

Date: 29 MAY 2018

 

Time uploaded in London –  8-06 am  (British Summer Time)

 

Post No. 5056

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கொங்கு மண்டல சதகம்

யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்!

 

ச.நாகராஜன்

 

உலக வரலாறு கண்ட சிறந்த மன்னர்களுள் சோழ மன்னன் கரிகால் சோழனும் ஒருவன். சிறந்த வீரன். நீதிமான். பல சிறந்த வியத்தகு சம்பவங்களைத் தன் வாழ்க்கையில் கொண்டவன்!

 

அவன் புகழை கொங்கு மண்டல சதகம் பாடல் 33 எடுத்துரைக்கிறது.

பாடல் வருமாறு:-

நீர்மை காவிரி நாட்டினை யாண்ட நிருபரினற்

பேருறு வான்கரி காலன் கரந்து பிழைத்ததன்றி

ஏருறு சிங்கா தனமேறக் கையாலெடுத்துமத

வாரணங் கண்டு கொடுபோன துங்கொங்கு மண்டலமே

கொங்கு மண்டல சதகம் – பாடல் 33

பாடலின் பொருள் : சோழ மண்டலத்தை ஆண்ட மன்னர்களுள் திறமை வாய்ந்த மன்னனான கரிகால் சோழன் தன் உயிர் பிழைத்தல் காரணமாக மாறு வேடமாக இருந்து பிழைத்ததும், இவனைச் சிங்கதானம் ஏற்ற யானை எடுத்துப் போனதும் கொங்கு மண்டலம் என்பதாகும்.

பாடல் குறிக்கும் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று தான். அதற்கு ஆதாரமாக இந்தப் பாடல் விளங்குவதால் இது தனியிடத்தைப் பெறுகிறது.

 

இது குறிக்கும் வரலாறு இது தான்:

உறையூரில் அரசு புரிந்து வந்த உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்னும் சோழ மன்னன் அழுந்தூர் வேள்மகளை மணந்தான். கருப்பமுற்று அவளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இன்னும் ஒரு முகூர்த்த காலத்தில் பிள்ளை பிறப்பானாயின் அவன் சக்கரவர்த்தி ஆவான் என்பதைச் சொல்லக் கேட்ட அரசி, தன்னைத் தலைகீழாகக் கட்டும் படி கூறி நல்ல ஹோரை வந்தவுடன் இறங்கி ஆண்மகனைப் பிரசவித்தாள்.

இளம் பருவத்திலேயே குழந்தையின் தந்தை இறந்தான். உள்நாட்டுக் குழப்பமும், வெளிநாட்டிலிருந்து வந்த சண்டையும் அவனை அரியணை ஏறச் செய்யவில்லை. பிழைப்பதே அரிதாக இருந்தது. மாறுவேடம் பூண்ட இளவரசன் கொங்கு நாட்டில் புகுந்து ஊர் ஊராய்த் திரிந்து வாழ்ந்தான்.

இதற்கிடையில் உறையூரில் சிங்காதனம் ஏறத் தக்க ஒருவனைத் தேடவேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது. அக்கால வழக்கப்படி பட்டத்து யானையை விடுவதென்று தீர்மானித்து அதன்படியே யானையை கழுமலத்திலிருந்து கட்டவிழ்த்து அனுப்பி அதன் பின்னால் அனைவரும் சென்றனர்.

 

யானை கருவூர் சென்றது.அங்கிருந்த கரிகாலனைத் தன் பிடரி மீது தூக்கி வைத்துக் கொண்டு திரும்பியது.

கரிகாலன் அரசனாக்கப்பட்டான். ஆனால் இது பொறாத தாயத்தார் (உறவினர்) அவனைச் சிறைப்படுத்தினர். அது மட்டுமின்றி சிறைக்குத் தீயும் வைத்தனர். அந்த நெருப்பையும் மீறி அவன் சிறையிலிருந்து தப்பி வந்தான். தனது மாமன் இரும்பிடர்த்தலையாரின் துணையைப் பெற்று பகைவர்களை வென்று அரியணை ஏறினான்.

சிறையில் தீ எரிந்த போது அந்த நெருப்பால் கருகிய காலைப் பெற்றதால் கரிகாலன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான்.

கரிகாலனின் காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் கி.மு. 100 என்று நிச்சயிக்கின்றனர். அதாவது  2118 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பாகச் செங்கோலோச்சியவன் கரிகாலன்!

 

இவனைப் பற்றி பழமொழி கூறுகையில்.

“கழுமலத்தில் யாத்த களிறுங் கருவூர்

விழுமியோன் மேற்சென் றதனால்” – பழமொழி

என்று கூறுகிறது.

பழமொழியின் இன்னொரு பாடல் இது:-

 

“சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்

பிடர்த்தலைப் பேரானைப் பெற்று – கடைக்கால்

செயிரறு செங்கோல் செலீஇனான் இல்லை

உயிருடையா ரெய்தா வினை”  (பழமொழி)

 

பொருனராற்றுப்படையில் வரும் குறிப்பு இது:-

 

“மூச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்

இச்சகக் கரமே அளந்ததால் – செச்செய்

அரிகான் மேற்றேன் றொடுக்கு மாய்புன னீர்நாடன்

கரிகாலன் கானெருப் புற்று   – (பொருனராற்றுப்படை)

 

திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் திருக்கச்சியேகம்பம் பதிகத்தில் வரும் ஒரு பாடலையும் கீழே பார்ப்போம்:

“விண்ணுளார் மறைகள் வேதம் விரித் தோதுவார்

கண்ணுளார் சழலின் வெல்வார் கரிகாலனை

நண்ணுவார் எழில்கொள் கச்சிநக ரேகம்பத்

தண்ணலா ராடுகின்ற வலங்காரமே”

 

எத்தனை அற்புதமான மன்னன் கரிகாலன்; அவனை ஆதரித்தது கொங்கு மண்டலமே என்கிறது கொங்கு மண்டல சதகம்.

தமிழருக்குப் புகழ் சேர்த்த மன்னன் கரிகாலனைக் கொண்டாடுவோமாக!

***

டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)

Written by London Swaminathan 

 

Date: 28 May 2018

 

Time uploaded in London – 7-43 am

 

Post No. 5054

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள் (Post No.5054)

தாய்லாந்து நாட்டில் குனோய் KUNOI என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருத்துவமனை கல்வெட்டுகள், அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த டாக்டர்கள், நர்ஸ்கள், அங்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தகவலகளை பொறித்துள்ளன. இது ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள கல்வெட்டு. குனோய் KUNOI என்னும் இடத்தில் தோண்டும் வேலைகள் நடந்தபோது இந்தக் கல்வெட்டுகள் கிடைத்தன. இதில் பெரிய, நடுத்தரமான, சிறிய கல்வெட்டுகள் உள. நடுத்தர அளவு கல்வெட்டுகளில் இந்தச் செய்திகள் உள. இவை ஏழாவது ஜயவர்மன் காலத்தியவை. அவன் இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தை ஆண்டனன். மருத்துவமனை பற்றிய கல்வெட்டு அடிப்பகுதி உடைந்து காணாமற்போய்விட்டது

 

 

கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேயா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் 1500 ஆண்டுகளுக்கு இந்து மத ராஜாக்கள் ஆட்சி நடந்தது. அந்த நாடுகள் அனைத்திலும் முக்கியமான ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் இருக்கின்றன. அவைகளில் இருந்து மிக முக்கியமான செய்திகள் கிடைக்கின்றன. பெரும்பாலான கல்வெட்டுகள் பாங்காக், காங்கேயன் முதலிய நகரங்களில் மியூஸியங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகளில் கிடைத்த கல்வெட்டுகள் ஆயிரத்துக்கும் அதிகம்.

 

வட தாய்லாந்து வழியாக KHMER க்மேர் (குமரிக் கண்ட?) நாகரீகம் தாய்லாந்தில் நுழைந்தது. வியட்நாமில்தான் மிகப்பழைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டு உளது. இது ஸ்ரீஇமாறன் (திருமாறன்) என்ற பாண்டிய மன்னனுடையது. அதன்பிறகு கம்போடியாவில் நிறைய ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. சம்பா என்று அழைக்கப்பட்ட வியட்நாம் ஆட்சியில் மட்டுமே 800 ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகள் உள.

 

வட தாய்லாந்தில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கிடைத்தது. இதுதான் தாய்லாந்தின் பழைய கல்வெட்டு. இதில் மஹேந்திரவர்மன் என்ற மன்னன், சிவனின் வாஹனமான நந்தியை நிர்மாணம் செய்தி உளது.

இதில் விநோதம் என்னவென்றால் அதேகாலத்தில் காஞ்சீபுரத்தில் மாபெரும் பல்லவ மன்னனான மஹேந்திர பல்லவன் நந்தி சின்னத்தோடு ஆட்சி புரிந்துள்ளான். இருவருக்குமிடையேயான தொடர்பு ஆராயப்படவேண்டியது. கம்போடிய, தாய்லாந்து மன்னர்களும் பல்லவர்களைப் போல  ‘வர்மன்’ பட்டத்துடன் ஆண்டனர் என்பதும் குறிப்பிடற்பாலது.

 

மஹேந்திரவர்மன் கல்வெட்டு சூரின் (SURIN PROVINCE) மாகாணத்தில் கிடைத்   தது; அவன் எல்லா நாடுகளையும் வெற்றிகொண்டதற்காக சிவ பிரானுக்கு ‘நந்தி’ அமைத்ததாகக் கல்வெட்டு செப்புகிறது

 

இந்தியாவை போலவே அங்கும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் தானம் கொடுத்தது, கோவில் கட்டியது முதலிய செய்திகள் உள. இவை இல்லாவிடில் அந்த நாட்டின் வரலாறே அழிந்து போயிருக்கும். தமிழ் நாட்டிலும் இப்படி பிரம்மதேய (பிராமணருக்கு தானம்), தேவதான (கோவிலுக்கு தானம்) கல்வெட்டுகள் இல்லாவிடில் வரலாறே தெரியாமல் போயிருக்கும். இலக்கியங்களில் தேதி தெரியாது; கல்வெட்டுகளில் ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கும்.

 

பாங்காக் நகர மியூஸியத்தில் இரண்டாவது உதயாதித்ய  வர்மணின் ஸம்ஸ்க்ருத கல்வெட்டு பல சுவையான செய்திகளைத் தருகிறது பிராமண அர்ச்சகர் பரம்பரை பற்றிய செய்தி இது. தமிழ்நாட்டில் வேள்விக்குடி சாசனம் எப்படி பிராமணர்களுக்கு பாண்டிய மன்னர்கள் பழங்காலம் முதல் தானம் செய்ததைக் குறிப்பிடுகிறதோ அதே போல இந்த தாய்லாந்து கல்வெட்டு கைவல்ய சிவாச்சார்யார்கள் பற்றி சுமார் 400 ஆண்டுக் கதைகளைக் கோடிட்டுக் காட்டுகிறது

 

இது பிரசாத் கோக் சுதோத் தாம் என்னும் இடத்தில் கிடைத்தது. இப்பொழுது பாங்காக் தேஸீய மியூஸியத்தில் இருக்கிறது

 

க்மேர் வன்ம்சத்தை ஸ்தாபித்த ஜயவர்மன் காலத்தில் இருந்து அந்த பிராமணக் குடும்பம் மன்னர்களுக்கு சேவை செய்து வருவதாகக் கூறும் இக் கல்வெட்டு 1052 ஆம் ஆண்டினது ஆகும்; ஜயவர்மன் 802-ல் வம்சத்தை நிறுவினான். அவன் ஜாவவிலிருந்து (இந்தோநேஷியா) வந்து இந்திரபுரத்தில் அரசு நிறுவிய கதை; பின்னர் அதை ஹரிஹராலயத்துக்கு மாற்றிய கதை ஆகிய அனைத்தையும் இக் கல்வெட்டு விளம்புவதால் தாய்லாந்து வரலாற்றுக்கும் க்மேர் வரலாற்றுக்கும் இன்றியமையாதது இது என வரலாற்றுப் பேரறிஞர்கள் உரைப்பர்.

 

 

அத்தோடு க்மேர் அரசாட்சி முறை, அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுக்குக் குருவாக விளங்கிய பிராமணர்கள் ஆகியோர் பற்றிய செய்திகளையும் மொழிகிறது.

11 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

பிரஸாத் பனம் ரங் (PRASAT PHNOM RUNG) என்னும் இடம் மிகப் பிரஸித்தமானது. அங்குதான் நிறைய இந்துக் கடவுளரின் சிலைகள், சிற்பங்கள் இடம் பெறுகின்றன. அங்கு 11 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் கிடைத்தன. இதிலிருந்து வட தாய்லாந்தின் 400 ஆண்டு வரலாற்றை அறிகிறோம். பத்தாம் நூற்றாண்டு முதல் ஆண்ட நரேந்திர ஆதித்யன், அவன் மகன் ஹிரண்யன் ஆகியோரின் வீரப் பிரதாபங்களை இவை நுவலும்.

 

27க்கு 53 (27×53) செண்டிமீட்டர் உடைய (ஒன்றரை அடிக்கும் மேல் உயரம்) உள்ள ஒரு ஸம்ஸ்க்ருத கல்வெட்டு சிவ பெருமானின் துதியோடு துவங்குகிறது. சிவ பெருமானை மஹா யோகி என்று புகழ்கிறது. அதில் ஹிரண்யன் தனது தந்தைக்குத் தங்கத்தினால் சிலை செய்து வைத்ததாகப் புகல்வான். சைவ மடங்களுக்குப் புதுக் கட்டிடங்கள் கட்டியதைக் கொண்டாடும் முகத்தான் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது.

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸம்ஸ்க்ருத கல்வெட்டு நாலே வரிகளில் உளது.

 

மடங்களில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள், சிவன், விஷ்ணு, லிங்கம் ஆகிய மூர்த்திகளை நிறுவியது ஆகியான பற்றிப் பகரும் கல்வெட்டுகளும் உள. அனைத்தும் அரிய பெரிய செய்திகளைத் தருகின்றன.

 

தமிழர் ஒருவர் சென்று ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டுக் கோவில்களுடன் ஒப்பிடுவது பல முக்கிய செய்திகளைத் தரக்கூடும். ஸம்ஸ்க்ருத மொழி அறிவின்றி பழந் தமிழர்களின் கடலாதிக்கத்தை அறிவது அரிதிலும் அரிது.

 

ஆங்கிலேயர்கள் எழுதிய 1992 ஆம் ஆண்டு நூலில் உள்ள தகவல்களை நான் வடித்துத் தந்தேன். அவர்களுக்கு ஆழமான அறிவும் பற்றும் இல்லை என்பதால் நாம் ஆராய வேண்டியது அவஸியமாகும். ஆயிரம்   ஸம்ஸ்க்ருத

கல்வெட்டுகளை ஆராயும் கடமை நமக்குளது.

ஸம்ஸ்க்ருதம் படிக்க! தமிழ்  வாழ்க!!

 

-சுபம்,சுபம்-

மிகச் சிறந்த ஆங்கிலக் காதல் கவிதை எது? (Post No.5050)

Written by S NAGARAJAN

 

Date: 27 MAY 2018

 

Time uploaded in London –  7-06 am  (British Summer Time)

 

Post No. 5050

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பல புத்தகங்கள”oughtsours, not a flower of which but took root and grew…கவிதை பிறந்த கதை!

 

மிகச் சிறந்த ஆங்கிலக் காதல் கவிதை எது? – 1

ச.நாகராஜன்

How Do I Love Thee? by Elizabeth Barrett Browning

 

1

1997ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரிட்டனில் பி.பி.சி.ஒரு கருத்துக் கணிப்பை எடுத்தது. ‘மிகச் சிறந்த காதல் கவிதையாக நீங்கள் கருதுவது எந்தக் கவிதையை? என்பது தான் கேள்வி.

வில்லியம் ஷேக்ஸ்பியர்

டி.ஹெச்.லாரன்ஸ்

பிலிப் சிட்னி

தாமஸ் ஹார்டி

டபிள்யூ.பி.ஈட்ஸ் இன்னும் இன்ன பிற கவிஞர்கல் எல்லாம் எழுதிய கவிதைகளைப் புறம் தள்ளி விட்டு மக்கள் தேர்ந்தெடுத்த சிறந்த காதல் கவிதையின் தலைப்பு : How Do I Love Thee?

கவிதையை இயற்றியவர் :  Elizabeth Barrett Browning

கவிதை எழுதப்பட்டு 168 ஆண்டுகள் கழிந்து விட்ட போதிலும் கவிதையின் முதல் இரண்டு அடிகளை இன்றும் ஆயிரக்கணக்கானோர் போற்றி அதை அடிக்கடி சொல்லி மகிழ்கின்றனர்.

மக்களின் மனம் கவர்ந்த காதல் கவிதை இது தான்:

How do I love thee? Let me count the ways

I love thee to the depth and breadth and height

My soul can reach, when feeling out of sight

For the ends of Being and ideal Grace.

I love thee to the level of everyday’s

Most quiet need, by sun and candlelight.

I love thee freely, as men strive for Right;

I love thee purely, as they turn from Praise.

I love thee with the passion put to use

In my old griefs, and with my childhood’s faith.

I love thee with a love I seemed to lose

With my lost saints—I love thee with the breath,

Smiles, tears, of all my life!—and, if God choose,

I shall but love thee better after death.

 

2

 

 

எலிஸபத் பாரெட் ப்ரௌனிங் யார்? பிரபல ஆங்கிலக் கவிஞரான ராபர்ட் ப்ரௌனிங்கின் மனைவி. (பிறப்பு : 6-3-1806 மறைவு : 29-6-1861)

இந்தக் கவிதை பிறந்த கதையே சுவாரசியமான ஒன்று.

எலிஸபத் பாரெட் – ராபர்ட் ப்ரௌனிங் – இவர்களிடையே மலர்ந்த காதல் கதையும் சுவாரசியமான ஒன்று.

எட்வர்ட் மோல்டன் பாரட் என்பவருக்குப் பிறந்த 12 குழந்தைகளில் மூத்தவர் எலிஸபத் பாரெட்.

எட்வர்டுக்கு ஜமைக்காவில் பெரிய தோட்டங்கள் இருந்தன. அடிமைகளை வைத்து அங்கு அவர் வேலை வாங்கி வந்தார். என்றாலும் கூட குடும்பத்தை அங்கு கொண்டு செல்லவில்லை. இங்கிலாந்தில் ஹெர்போர்ட்ஷைர் என்ற இடத்தில் ஹோப் எண்ட் என்ற பெயருடைய பெரிய மாளிகை ஒன்றில் தன் குடும்பத்தினரை வசிக்க வைத்தார். அனைத்துக் குழந்தைகளுக்கும் வீட்டிலேயே படிப்பு உண்டு. எல்லாக் குழந்தைகளின் மீதும் அளவற்ற பாசத்தைப் பொழிந்த எட்வர்ட் அதே அளவுக்குக் கண்டிப்பையும் காட்டினார். அவரது சொல் தான் அங்கு மந்திரம். அதற்கு மேல் அப்பீலே கிடையாது.

குழந்தைகள் யாருக்கும் திருமணம் கிடையாது என்று அந்தத் தந்தை முடிவெடுத்தார்.

கண்டிப்பான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த எலிஸபத்துக்கு 15 வயது நிறைந்தது. ஒரு நாள் குதிரை மீது அவர் சவாரி செய்யும் போது கீழே விழ அது அவரை ஆபத்தான நோய்க்கு இட்டுச் சென்றது. அவரது நரம்புகள் பலஹீனமாயின.

அவரது நிலையைக் கண்ட தந்தையார் அவரை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

எலிஸபத்தின் தாயாரும் அவரது ஒரு சகோதரரும் இறக்கவே அவர் துடிதுடித்துப் போனார்.

இந்த நிலையில் அடிமைகளை வைத்து வேலை வாங்கும் முறை முடிவுக்கு வரவே தந்தையின் வருமானம் படுத்தது.

எலிஸபத்தின் தந்தை தனது ஹோப் எண்ட் வீட்டை விற்று விட்டு லண்டனில் 50, விம்பிள்டன் ஸ்ட்ரீட்டுக்குக் குடி பெயர்ந்தார். இந்த வீதி பின்னால் உலகப் புகழ் பெற்று விட்டது.

எலிஸபத்திற்கு மாடியில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அங்கு அவர் போதை மருந்துக்கு அடிமைப்பட்டு விட்டாரோ என்ற சந்தேகம் எழவே அந்த அறை எப்போதும் பாதுகாப்பாக மூடப்பட்டது.

தந்தையார் பிரார்த்தனை செய்ய அங்கு வருவார். சகோதர, சகோதரிகள் அவரைப் பார்க்க அனுமதி உண்டு. அங்கு வந்து பேசுவர்.

இயல்பாகவே பாரட்டுக்கு கவிதை மீது நாட்டம் பிறந்தது. கவிதைகளை எழுதலானார். அதை அனைவரும் ஆவலுடன் படித்தனர். தந்தையாரும் மகிழ்ந்தார். ‘பா’ என்று செல்லமாக அழைக்கப்படும் எலிஸபத் பாரட்டுக்கு புகழும் வந்து குவிந்தது.

பல கவிதைத் தொகுதிகளை வெளியிட ஆரம்பித்தார்.

அவரது டாக்டருக்கோ கவிதை என்றாலே பிடிக்காது. அது மூளையைக் கெடுக்கும் ஆபத்தான சமாச்சாரம் என்பது அவரது தாழ்ந்த அபிப்ராயம். ஆனால் இதையும்  மீறி அவரது கவிதைப் படைப்புகள் மலர்ந்தன.

ராபர்ட் ப்ரௌனிங்கின் (தோற்றம் 7-5-1912 மறைவு : 12-12-1889) கவிதைகளின் பால் எலிஸபத்துக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

அவர் தனது குறிப்புகள் ஒன்றில் அவரை மேற்கோள் காட்டி அவரைப் பாராட்டி எழுதினார்.

இதனால் மனம் மகிழ்ந்த ராபர்ட் ப்ரௌனிங் எலிஸபத்துக்கு ஒரு கடிதம் எழுதினார்.

இதில் பிறந்தது ஒரு அபூர்வமான காதல் கதை!

 

How Do I Love Thee? by Elizabeth Barrett Browning

3

 

1845ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதியன்று தனது முதல் கடிதத்தை ராபர்ட் ப்ரௌனிங் எழுதி எலிஸபத்துக்கு (பா என்பது அவர் செல்லப் பெயர்) அனுப்பினார்.

 

“I love your verses with all my heart, dear Miss Barrett… into me it has gone, and part of me has it become, this greatliving poetry of yours, not a flower of which but took root and grew…”  என்று ஆரம்பித்த அவர் கடிதம் “பா”வின் கவிதை வரிகளை,

 

“fresh strange music ,true new brave thoughts என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியது.

 

இதனால் அகம் மகிழ்ந்த பா பதிலுக்குத் தன் இதய ஆழத்திலிருந்து நன்றி தெரிவித்துப் பதில் கடிதம் எழுதினார். இப்படி ஆரம்பித்த காதல் கடிதப் பரிமாற்றம் நீண்டது.

காதலை இது வரை அறியாத பா 39ஆம் வயதில் ஒரு புதிய உணர்வைப் பெற்றார்.

 

நூற்றுக் கணக்கில் 1845-46ஆம் ஆண்டில் காதல் கடிதங்கள் இருவருக்கும் இடையே பறந்தன.

ஆனால் இந்தக் காதல் மிகவும் ரகசியமாகவே இருந்தது. அப்பாவோ பொல்லாத அப்பா! அவருக்கு இதெல்லாம் பிடிக்காது.

 

1846இல் பா இப்படி எழுதினார்:

 

‘For I have none in the world who will hold me to make me live in it, except only you – I have come back for you alone…at your voice…and because you have use for me! I have come back to live a little for you. I love you – I bless God for you – you are too good for me, always I knew.

காதல் என்பது புனிதமானது. உண்மைக் காதலுக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஒருவரை  ஒருவர் புரிந்து கொண்டு ஈருடல் ஓருயிர் ஆவதே காதல். பைபிளே கூறி விட்டது: “Three things will last forever–faith, hope, and love–and the greatest of these is love.” (I Corinthians 13: 13.)

 

உலகில் மிகப் பெரிய விஷயம் காதல் தான்.

ஆனால் பா-வைப் பார்க்க ஆசைப்பட்ட ப்ரௌனிங்கிற்கு அவரிடமிருந்து அழைப்பே வரவில்லை. பலமுறை பார்க்க வரலாமா என்று கேட்டார்.

கடைசியாக ப்ரௌனிங்கிற்கு பாவிடமிருந்து அழைப்பு வந்தது.

1845, மே மாதம் 20ஆம் தேதி சரியாக 3 மணிக்கு ப்ரௌனிங் பாவின் மேல் மாடிக்கு வந்தார். தனது காதல் தேவதையின் கண்களை ப்ரௌனிங் கண்டார். மயங்கிப் போனார்.

அடிக்கடி சந்திப்பு தொடர்ந்தது. மெதுவாக படுக்கையிலிருந்து கைத்தாங்கலாக பாவை ப்ரௌனிங் எழுப்பி நிறுத்தினார்.

பின்னர் நடக்க வைத்தார். ஜன்னல் அருகே சென்ற பா மலர்களைப் பார்த்தார். நீல வானத்தைப் பார்த்தார். மகிழ்ந்தார்.

அவருக்கு உற்சாகம் ஊட்டிய ப்ரௌனிங் அவரை வெளியே செல்ல வைத்தார். நல்ல உடல் நலத்தையும் உள்ள வலிமையையும் பெறுமளவு ஊக்கினார்.

இருவரும் மணம் புரிவது என்று தீர்மானித்தனர். ஆனால் தந்தையோ இந்தக் காதலைச் சற்றும் விரும்பவில்லை.

ஆகவே ஒரு நாள் தன் பணிப்பெண்ணுடன் சர்ச்சுக்குச் செல்ல தீர்மானித்தார் பா.

1846, செப்டம்பர் 12ஆம் தேதி பா தன் பணிப்பெண்ணுடன் செயிண்ட் மேரிலெபோன் சர்ச்சுக்குச் சென்றார். ப்ரௌனிங்கை மணம் புரிந்தார். வீடு திரும்பினார். திருமணம் ரகசியமாகவே இருந்தது.

இப்போது அவர் திருமதி ப்ரௌனிங். எலிஸபத் பாரெட் ப்ரௌனிங்!

செப்டம்பர் 19ஆம் தேதி தனது பணிப்பெண்ணுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

வீடு என்பது அவரைப் பொறுத்த மட்டில் ஒரு சிறை தான்.

அந்தச் சிறையிலிருந்து இப்போது விடுதலை! சுதந்திரப் பறவையாக அவர் பறந்தார்.

இதனால் அவரை வெறுத்த தந்தை இறுதி வரை அவரைப் பார்க்கவே இல்லை.

 

ப்ரௌனிங் தனது அருமை மனைவியுடன் பாரிஸ் சென்றார். பின்னர் ஃப்ளோரென்ஸ் சென்றார்.

பா உடல் நலம் தேறி நன்கு நடமாட முடிந்தது. 1849இல் அவர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றார்.

குழந்தை பெற்ற மகிழ்ச்சியில் இதுவரை தான் ரகசியமாக எழுதி வைத்திருந்த 44 சானெட் பாடல்களை அவர் ப்ரௌனிங்கிடம் தந்தார். அதைப் பார்த்த ப்ரௌனிங் வியந்தார்.

43ஆம் பாடலாக அமைவது தான் : How Do I Love Thee?

இதில் உள்ள ஒவ்வொரு வரியும் ஆழ்ந்த பொருள் கொண்டது.

தனது லண்டனுக்குப் பின்னர் வருகை தந்த பா தனது சகோதரிகளைக் கண்டு மகிழ்ந்தார். தந்தை மட்டும் பேசவே இல்லை. பாவின் மகனை தன் வீட்டில் ஒரு நாள் பார்த்த அந்தத் தாத்தா,இது யார்? என்று கேட்க பாவின் பையன் என்று பதில் வந்தது.

அட, இங்கு எதற்கு வந்தான், பிரார்த்தனை புரியவா என்று மட்டும் அவர் கூறினார்.

தன்னை விட 6 வயது இளையவரான ப்ரௌனிங்கை மணம் புரிந்தார் பா. ஆனால் மண வாழ்க்கை சிறப்பாக நீடித்தது.

1859இல் அவரது உடல் நலம் பாதித்தது. 1861 ஜூன் 29ஆம் தேதி அவர் படுக்கையில் அமைதியாக உயிர் துறந்தார். ப்ரௌனிங் அருகில் மௌனமாக அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கிய பா இறுதியாக, “Do you know me?” என்று கேட்டார்.

“My Robert, My heaven, my beloved” என்று முணுமுணுத்தவாறே அவர் ஆவி பிரிந்தது. ஃப்ளோரென்ஸில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இதற்குப் பின்னர் 28 ஆண்டுகள் மணம் புரியாமல் வாழ்ந்தார் ப்ரௌனிங்.

அவரை மணம் புரிய ஆசைப்பட்ட ஒரு பெண் அவரிடம் கேட்க, அவரோ, “My heart is buried in Florence” என்று பதில் கூறினார்.

ப்ரௌனிங் 1889, டிசம்பர் 12ஆம் தேதி மறைந்தார். அவரை இங்கிலாந்திலேயே வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் நல்லடக்கம் செய்தனர்.

இறுதியாக அடக்கம் செய்வதற்கு முன்னர் அவர் உடலைப் பார்த்தவர்கள் அவர் கழுத்தில் எப்போதும் தொங்கும் ஒரு தங்க லாக்கெட்டைப் பார்த்தனர். லாக்கெட்டைத் திறந்து பார்த்த போது அதில் அவரது காதல் தேவதையான பாவின் தலைமுடி சிறிது இருந்தது.

4

ப்ரௌனிங்- பா ஆகிய இருவரின் காதல் பற்றிய பல புத்தகங்கள் உள்ளன.

How Do I Love Thee?  பாடலுக்கான வரிக்கு வரி வியாக்யானங்களும் பல உள்ளன!

படித்துப் பாருங்கள்!

***

செக்ஸ் தாக்குதல் பற்றி மநு முன் எச்சரிக்கை (Post No.5048)

 

Written by London Swaminathan 

 

Date: 26 May 2018

 

Time uploaded in London –  7-23 am

 

Post No. 5048

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மநு நீதி நூல்- Part 17

செக்ஸ் தாக்குதல் பற்றி மநு முன் எச்சரிக்கை (Post No.5048)

 

இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி…..

 

இன்றைய கட்டுரையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்-

 

செக்ஸ் துஷ்பிரயோகம் (பாலியல் தொல்லைகள் Sex Abuse) நடைபெறாதபடி

தடுக்க மநு சில அழகான யோசனைகளைச் சொல்கிறார்.


1.வயதான குருவுக்குக் கைகால் பிடித்துவிட்டு, கால்கழுவி வழிபடுவது எல்லாம் சரி. ஆனால் குருவின் மகன் ஒரு நாள் பாடம் நடத்தினால் குருவுக்கு உரிய மரியதைகளைக் கொடு. ஆனால் தொட்டுப் பழகாதே. குரு வீட்டிலுள்ள குழந்தைகளே ஆனாலும், குளிப்பாட்டுவது சோப்புப்  போடுவது ஆகியவற்றைச் செய் யாதே 2-209

 

2.பெண்கள் விஷயத்தில் மிகவும் கவனம் தேவை. அம்மாவேயானாலும், சஹோதரிகளே ஆனாலும் தனியாக பெண்களுடன் இராதே. ஏன் எனில் மனத்தின் சக்தி மிகவும் அபாயகரமானது.

வேத காலத்தில் இருந்த மனுவே இப்படிச் சொல்கிறாரே! அப்படியானால் அப்போதும் செக்ஸ் Sex Abuse சில்மிஷங்கள் நடந்தனவோ என்று நாம் எண்ணுவோம். கோடிப் பேரில்  ஒன்று இப்படி நடக்கலாம். அல்லது எதிர்காலத்தில் இப்படி நடக்கப் போவதை முன் உணர்வால் அறிந்து சொல்லி இருக்கலாம் 2-215

 

 

ஆனால் மநு ஒரு மாபெரும் உளவியல் நிபுணன் (Great psychologist). மநுவே சொல்லி விட்டார் நான் தொட்டால் என்ன என்று எவரும் சொல்லி விடக்கூடாது என்பதற்காக அழகாகப் பீடிகை போடுகிறார்.

  1. மாணவர்களின் சிகை அலங்காரம் பற்றிப் பேசுகிறார் 2-219
  2. மாணவர்கள் என்ன , எவ்வளவு, எப்போது குரு தட்சிணை தரவேண்டும் என்றும் விளம்புகிறார்.

 

  1. வேதம் பயிலும் மாணவர்கள் ஆபத்துக் காலத்தில் பிராமணர் அல்லாதோரிடமும் வேதம் கற்கலாம் என்பார். அப்படியானால் வேதத்தைக் கற்பிக்கும் அளவுக்கு மற்ற ஜாதியினரும் முன்னேறியிருந்ததை மநு ஸ்ம்ரூதி காட்டுகிறது— 2-241

6.பிராமணர் அல்லாத பெண்களுக்கு எப்படி மரியாதை செலுத்த வேண்டும் என்றும் பகர்கிறார். 2-210

 

7.மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் பெரும் மரியாதைக்கு உரியவர்கள். அவர்கள் பிராமணர் வீடுகளில் யாக குண்டங்களில் எரியும் முத்தீக்குச் சமம் ஆனவர்கள் என்று உரைக்கிறார் 2-225

  1. மனைவி, நவ மணிகள் நன்னடத்தை கல்வி அறம் முதலியவற்றை எவரிடமும் பெறலாம் (ஜாதி வேறுபாடு இல்லை)- 2-240

இனி எஞ்சியுள்ள ஸ்லோகங்களை மிகச் சுருக்கமாகக் காண்போம்:

 

2-206 கல்வி கொடுத்த ஆசிரியர், சடங்கு செய்விக்கும் உபாத்யாயர், பெரியப்பா, மற்றும் தன்னை நல்வழிப்படுத்தியவர் (God father) ஆகியோரை குரு போல மதிக்க வேண்டும்.

2-207 கல்வியிலும் தவத்திலும் மேன்மையுடையோர், ஒரே வருணத்தில் பிறந்தோர், குருவின் புத்திரர்கள், தாயத்தார் ஆகியோரிடம் மாணவன் மரியாதை காட்ட வேண்டும்

2-208 வேதம் முழுதும் அத்யயனம் செய்த ஒருவன் சிறியவனாயினும், ஒரே வயதுடைய வனாயினும், பழைய மாணவன் ஆனாலும் அவனுக்கும் மரியாதை செலுத்தல் அவசியம்.

NO   SEX  ABUSE

 

2-209 குருவின் மகனுக்கு குருவைப் போல மதிப்பு தரலாம்; ஆயினும் அவன் காலைக் கழுவுதல், உடலைத் தேய்த்துக் குளிப்பாட்டுதல், எண்ணய் தேய்த்தல், குழந்தை விட்டுச் சென்ற எச்சிலை உண்ணுதல் கூடாது.

2-210 குரு பத்னியானவள் ஒரே ஜாதியானால் குருவுக்குரிய அளித்து மரியாதைகளையும் செய்க; வேறு ஜாதியானால் எழுந்து நின்று வணக்கம் செய்க

2-211 குருவின் மனைவிக்கு எண்ணை தேய்த்து விடுதல், தலை வாறுதல் முதலியன செய்தல் கூடாது.

2-212 மாணவன் இளைஞனாக இருப்பின், குருவின் மனைவி யுவதியாக இருப்பின் கால்களைத் தொட்டு வணங்காதே

2-213 பெண்கள் அலங்காரப் பிரியர்கள்; அதன் மூலம் மற்றவர்களைக் கவர்வர்; ஆகையால் கவனக் குறைவு சிறிதும் ஆகாது.

2-214 புலன் அடக்கம் உள்ளோரையும் இல்லாதோரையும் கவர்ந்து இழுக்கும் சக்தி பெண்களுக்கு இருக்கிறது.

2-215 தாய், சகோதரி, மகள் ஆகிய எந்தப் பெண்ணாயினும்      அவர்களுடன் தனிமையில் இருக்கக் கூடாது. புலன்களின் சேட்டை மகத்தானது. பெரிய ஆட்களையும் விழுத்தாட்டிவிடும்.

 

2-216 குருவின் மனைவியும் தானும் இளமைப் பருவத்தில் இருந்தால் உடலில் படாமல், கால்களைத் தொடாமல் வணங்க வேண்டும்

2-217 ஊரில் இருக்கையில், வெளியூர் சென்று திரும்புகையில் குருவின் மனைவி காலில் விழுந்து ஆசி பெறுக

2-218 மண்ணை வெட்ட வெட்ட ஊற்று நீர் பெருகும்; குருவைப் போற்றி  வணங்க, வணங்க  அறிவு பெருகும் ( திருக்குறளிலிலும் உளது)

 

STUDENTS’ HAIR STYLE

2-219 பிரம்மச்சாரி மாணவன் சடை வைத்துக் கொள்ளலாம்; குடுமி வைத்துக் கொள்ளலாம்; மொட்டை அடித்துச் சில இடங்களில் அரை வட்டாக சிரைத்து, சடை வைத்துக் கொள்ளலாம். சூரியன் உதிக்கும், மறையும் சந்தியா காலங்களில் தூங்கக் கூடாது.

 

2-220 ஒருவன் சூரிய உதயத்துக்குப் பிறகு தூங்கினால் பகலிலும் மாலை சூரிய அஸ்தமனத்துக்கு முன்னால் தூங்கினால் இரவிலும் காயத்ரி மந்திரம் ஜபித்து உண்ணாவிரதம் இருப்பதே பரிகாரம்.

2-221 பரிகாரம் செய்யாவிடில் நரகத்தில் வீழ்வர்.

2-222 அந்தி வேளைகளில் உறங்காமல் ஆசமனம் செய்து ஜபம் செய்ய வேண்டும்

ANY CASTE IS OK

2-223 நல்ல காரியங்களை நாலாம் வருணத்தார் செய்தாலும், பெண்கள் செய்தாலும் தருமத்துக்கு எதிராக இல்லாதவரைக்கும் ஏற்கலாம்

2-224 அறம் பொருள் இன்பம் (தர்ம அர்த்த காம) இவைகளில் இதைவிட அது பெரிதா, இது பெரிதா என்பர் ; நான் சொல்கிறேன் ஒன்றுக்கு ஒன்று முரண்படாதவாறு மூன்றுமே முக்கியம்

2-225 ஞானம் தரும் குரு=கடவுள், பிறவி தந்த தந்தை= பிரம்மா; தன்னைத் தாங்கிய தாய் = பூமிதேவி,  அண்ணன் = தனது மறு உரு என்று அறிக

 

2-226 தான் துன்பம் அடைந்தாலும் குரு, தாய், தந்தை, மூத்தோன் ஆகியோரை அவமதிக்கக் கூடாது.

 

RESPECT THE GREAT THREE

2-227 மாதா, பிதா, குரு ஆகிய மூவருக்கும் எத்தனை பிறவி எடுத்தாலும் நன்றிக் கடனைச் செலுத்த முடியாது

2-228 தாயார், தந்தை, குரு ஆகிய மூவரின் விருப்பப்படியே அனைத்தையும் செய்க; அல்லது அவை பலிக்காது

2-229 மூவரையும் வழிபடுவதே சிறந்த தருமம். அவர்கள் அனுமதியுடனே தரும காரியங்களைச் செய்க

 

2-230 அந்த மூவரும் முத்தீயாக, மூன்று ஆசிரமங்களாக, மூன்று வேதங்களாக, மூன்று உலகங்களாக சிறந்து விளங்குகிறார்கள்

2-231 தந்தை கார்கபத்னி தீயாகவும், தாய் தட்சிணாக்னி தீயாகவும், குரு ஆஹவனீய தீயாகவும், முத்தீயாக ஒளி வீசுவர்

2-232 மூவரிடம் பக்தியுடையோன் மூன்று உலகங்களையும் வென்று சூர்யாதி தேவர்கள் போல ஒளி வீசுவான்.

 

2-233 தாயின் பக்தியால் இம்மை இன்பமும் தந்தையின் மீதான பக்தியால் மறுமை இன்பமும், குருவின் மீதுள்ள பக்தியால் பிரம்மலோகமும் கிடைக்கும்.

 

2-234 மூவரையும் ஆதரிப்பவர்கள் செய்வதெல்லாம் உருப்பெறும்/ பலிக்கும். மூவரையும்  ஆதரிக்காதோர் செய்வன பலிக்காது

 

2-235 மூவரும் உயிர் வாழ்கையில் வேறு எல்லா தர்மங்களையும் விட அவர்களுக்குப் பணிவிடை செய்வதே மேலானது

 

2-236 அவர்களுடைய அனுமதியுடன் மறுமை இன்பத்துக்குரிய விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம்; முடிந்தவுடன் அவர்களிடம் சொல்லவும்.

 

2-237  இவர்களுடைய பணிவிடையே மேலானது; ஏனையவை இரண்டாம் தரமானவை

SHUDRAS AND LOW CASTE GIRLS OK

2-238 உயர்ந்த அறிவை சூத்திரனிடமும், மோக்ஷ மார்கத்தைச் சண்டாளனிடமும், குணமுள்ள பெண்ணை தாழ்ந்த குலத்தில் இருந்தும் கூட ஏற்கலாம்

2-239 விஷத்திலிருந்து அமுதத்தைதைப் பெறலாம்;

சிறுவனிடமிருந்தும் நல்ல கருத்தைக் கற்கலாம்;

பகைவனிடமிருந்து நல்லொழுக்கத்தையும் கற்கலாம்;

அழுக்கான பொருளிடமிருந்து தங்கத்தை எடுக்கலாம்.

2-240 பெண்கள், நவ ரத்தினங்கள், கல்வி, அறம் ஒழுக்கம், நல்ல உபதேசம், கலைகள் ஆகியவற்றை எவரிடமிருந்தும் எடுத்துக் கொள்க.

 

ஏனைய வருணத்தாரிடம் கற்றல்

 

2-241 பிராமணர் இல்லாதபோது ஏனைய இரு வர்ணத்தாரிடம் வேதம் கற்கலாம்; படிப்பு முடியும் வரை பிராமண குருவுக்குள்ள அத்தனை மரியாதையும் தருக.

 

2-242 மோக்ஷம் விரும்பும் மாணவன் க்ஷத்ரிய, வைஸ்ய குருவுடனோ, அனுஷ்டானம் இல்லாத பிராமண குருவுடனோ வசிக்கக் கூடாது.

2-243 இல்லற இன்பம் வேண்டாதோன் வாழ்நாள் முழுதும் குருவுக்குச் சேவை செய்து நைஷ்டிக பிரம்மச்சாரியாக காலம் தள்ளலாம்

2-244 இறக்கும் வரை இப்படி குருவுக்கு மரியாதை செய்பவன் மறுமை இன்பம் அடைவான்

 

குரு தட்சிணை

 

2-245 வேதம் பயிலும் முன், குருதட்சிணை கொடுக்காதே; பட்டமளிப்பு விழாவின்போது- அதாவது படிப்பு நிறைவாகி வீடு திரும்பும் போது, சக்திக்கேற்ப குரு தட்சிணை கொடு

 

2-246 குருவுக்கு ஏற்ற தட்சிணை- நிலம், பொன், பசு, குதிரை ஆசனம், தானியம், உணவு, ஆடைகள், குடை, செருப்பு

 

2-247 குரு இறந்து விட்டால் அவரது மகனிடம் அல்லது தாயத்தாரிடம் பணிவிடை செய்க

 

2-248 இவர்கள் யாரும் இல்லை என்றால் குரு செய்த ஹோம குண்டத்தில் வாழ்நாள் முழுதும் ஹோமம் செய்க

 

2-249 இதுவரை சொன்ன நோன்புகளைக் கடைப்பிடிக்கும் மாணவன் இக, பர சௌபாக்யம் அடைவான். அவனுக்கு மறுபிறவி கிடையாது.

இரண்டாவது அத்தியாயம் இத்துடன் முடிகிறது.

–SUBHAM–

இரண்டே கோவில்களில் 304 ராமர் சிலைகள்! (Post no.5042)

இரண்டே கோவில்களில் 304 ராமர் சிலைகள்! (Post no.5042)


WRITTEN by London Swaminathan 

Date: 24 May 2018

Time uploaded in London – 6-26 am (British Summer Time)

Post No. 5042


PICTURES ARE FROM BHARAT  KALYAN; THANKS
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

தாய்லாந்தில் இந்துக் கடவுள்கள்- 1

 

தாய்லாந்தில்  ஏராளமான இந்துக் கடவுளரின் சிலைகளும் ஓவியங்களும் உள. பிள்ளையார், பிரம்மா முதல் குபேரன், காலா வரை உண்டு. குறிப்பாக காலத்தால் அழியாத காவிய நாயகன் ராமனுக்குப் பல சிலைகள், ஓவியங்கள்! எண்ணிலடங்கா விக்ரஹங்கள், சித்திரங்கள்!!

தாய்லாந்திய கலைச் செல்வங்களைக் கண்டு ரஸிக்க அந்த நாட்டின் ஏழு வரலாற்றுக் காலங்களை அறிதல் இன்றியமையாதது; அவையாவன:–

 

 

த்வாராவதி காலம் – 6 முதல் 11 நூற்றாண்டு வரை

 

ஸ்ரீ விஜய காலம் – 8 முதல் 13 நூற்றாண்டு வரை

 

லோப் புரி காலம் (லவ புரி) –11 முதல் 13 நூற்றாண்டு வரை

 

சுகோதையா காலம் –13 முதல் 14 நூற்றாண்டு வரை

 

அயுத்தயா காலம் (அயோத்யா)- 17 முதல் 18 நூற்றாண்டு வரை

 

தோன்புரி (தன புரி) காலம்- 1767 முதல் 1782 வரை

பாங்காக் காலம் (அண்மைச் செல்வங்கள்)- 1782 முதல் இன்று வரை.

 

ஒரே நேரத்தில் வெவ்வேறு பகுதிகளில் கலை வளர்ச்சி நடந்தது. குறிப்பாக கம்பபோடியாவிலுள்ள க்மேர் (KHMER) இந்து அரசர்களின் செல்வாக்குப் பெருகப் பெருக இந்துக் கலை வளர்ச்சி பெற்றது.

ராமாயண சிற்பங்கள் உள்ள கோவில்கள்:

 

1.ப்ரஸாத் பனம் ரங் கோவில்

2.பிமை கோவில்

3.வாட் ப்ரா கியவோ (மரகத புத்தர் கோவில்)

  1. வாட் ப்ரா ஜெதுபோன் (ஜேத வன) கோவில்
  2. வட் நங் பியாக விஹார

 

இவைகளில் கடைசி இரண்டு ( வாட் ப்ரா ஜெதுபோன் (ஜேத வன) கோவில்,

வட் நங் பியாக விஹார)  கோவில்களில் 152+ 152= 304 சிற்பங்கள் ராமாயணக் காட்சிகளைச் சித்தரிப்பதாக அங்கு இரண்டு  ஆண்டுக் காலம் தங்கி ஆராய்ந்த தில்லிப் பலகலைக் கழக ஸம்ஸ்க்ருதப் பேராசிரியர் ஸத்ய வ்ரத சாஸ்திரி சொல்கிறார்.

 

ஒரு கோவிலில் சலவைக் கற் சிற்பங்கள் அது தவிர மரச் சிறபங்கள். மற்றொரு கோவிலில் கற் சிலைகள். இவை அனைத்தும் கோவிலைச் சுற்றி செதுக்கப்பட்டுள்ளன அல்லது வரையப் பட்டுள்ளன.

 

பர்மா செய்த அட்டூழியம்

1767 ஆம் ஆண்டில் பர்மியர்கள் புகுந்து கிடைத்த நூலகங்கள், கோவில்கள் எல்லாவற்றையும் தீயிட்டுக் கொளுத்தினர். அதனால் பழைய செல்வங்கள் அழிந்தன. அவர்கள கைப்படாத இடங்களில் உள்ள கலைப் பொக்கிஷங்கள் தப்பிப் பிழைத்தன.

பெரும்பாலும் 300 ஆண்டுப் பழமை உடைத்து. ஏனைய பழைய சிற்பங்களை பர்மியர்கள் தீக்கிரையாக்கிவிட்டனர். அசுர சக்தியின் ஆவிர்பாகங்கள்; நாளந்தா பல்கலைக் கழகத்தைத் தீக்கிரையாக்கிய துலுக்கப் படைகள் போன்ற தீய சக்திகள்!

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் தேசீய மியூசியம் உளது. அந்த அருங் காட்சியகத்தில் இந்திரஜித், ராவணன் முதல் இராமன் வரை பல கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘தாய்’ மக்களின் இதய கீதம் இராமாயணம். பௌத்த மத நாடானானும் ஏதோ ராமாயணம் தமது நாட்டிலேயே நடந்ததாக நினைக்கின்றனர். வால்மீகிக்கும் கம்பனுக்கும் தெரியாத புதிய ராமாயண கதா பாத்திரங்களையும் படைத்துள்ளனர். அனுமானின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி மீன் தேவதை; அவர்களுக்குப் பிறந்த பிள்ளையும் உடல் மனித முகத்துடனும் வால் (கால் பகுதி) மீனின் துடுப்புகளாகவும் காட்டப்பட்டுள்ளன. வர்ண ஜாலம் ஜொலிக்கும் ராமர், லெட்சுமணர், அனுமார் ஓவியங்களைப் பார்க்க விநோதமாக இருக்கும்.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் வேத கால இந்திரன், யமன், குபேரன் வருணன், பிரம்மா, விஷ்ணு, சிவன் சிலைகள் பற்றிக் காண்போம்.

 

இத்துடன் இணத்துள்ள  ஆங்கிலப் பக்கங்களைப் படியுங்கள்; ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்கள் எப்படித் திரிக்கப்பட்டுள்ளன என்பது விளங்கும்

 

 

தொடரும்……….

சுபம்

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 2 (Post No.5041)

Written by S NAGARAJAN

 

Date: 24 MAY 2018

 

Time uploaded in London –  4-35 AM   (British Summer Time)

 

Post No. 5041

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 25-5-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பன்னிரண்டாம்) கட்டுரை

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 2

.நாகராஜன்

 

திருஷ்டியை அறிவியல் ரீதியில் விளக்கம் கொடுக்க முன்வந்த முதல் அறிஞர் பிரபலமான ப்ளூடார்க் தான்! மனிதனின் கண்களிலிருந்து வெளிவரும் ஆற்றல் சில சமயங்களில் மிருகங்களை அல்லது குழந்தைகளைக் கூடக்  கொல்லும் ஆற்றல் படைத்தது என்று அவரது சிம்போஸியாக்ஸில் (Symposiacs) அவர் விளக்குகிறார். அவர் மேலும் இது பற்றி விளக்குகையில், “சிலருக்கு இன்னும் அதீதமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது. அவர்கள் பார்வையினாலேயே சாபம் இட வல்லவர்கள்’ என்கிறார்!

ஐஸிஸ் தன் கண் பார்வையினாலேயே பிப்ளாஸ் நகர மன்னனின் மகனைக் கொன்றாள் என்றும் ப்ளூடார்க் கூறுகிறார்.

இதே போல கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெலியோடோரஸ், “ அருமையான ஒன்றை பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தானானால் சுற்றி இருக்கும் சூழ்நிலையையே அவன் மாற்றுகிறான்; உயிரைப்  போக்கும் அளவு மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறான், அத்துடன் தனது விஷத்தைக் கண் மூலம் தனக்கு அருகில் இருக்கும் அனைத்தின் மீதும் பாய்ச்சுகிறான்” என்கிறார்.

இஸ்தான்புல் பசெஷெய்ர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியரான யில்டிரன் என்பவர் பி.பி.சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “இன்று சிரியா என்று அழைக்கப்படும் பழையகால மெஸபொடோமியாவில் கண்டு பிடிக்கப்பட்ட தாயத்து மிக மிகப் பழமையானது” என்கிறார். அதாவது திருஷ்டி பற்றிய எண்ணமும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதும் ஆதிகாலப் பழக்கம் என்கிறார் அவர்.

பல வித மணிகளினால் ஆன மாலை, ருத்ராட்ச மாலை போன்றவையும் தீய திருஷ்டிகளை விலக்கும் ஆற்றல் படைத்தவை என நம்பப்படுகின்றன!

துருக்கியில் வாழ்ந்த பழங்குடியினர் தங்களது சுவர்க்க தேவதையான் தெங்ரி நீல நிறத்துடன் இருப்பதால இளநீல வண்ணத்தை கொண்ட தாயத்துகளையும் கோபால்ட், தாமிரம் ஆகியவற்றையும் பயன்படுத்தினர். இன்றும் துருக்கியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண் திருஷ்டி டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்!

இத்தாலியில் திருஷ்டிக்குப் பெயரான மால் ஓச்சியோ (Mal Occhio) என்பதையே தலைப்பாகக் கொண்டு  அகடா டே சாண்டிஸ் ஒரு டாகுமெண்டரி திரைப்படத்தை எடுத்தார். அதில் திருஷ்டியினால் தலைவலி, வயிற்றுவலி போன்றவை வந்து அவஸ்தைப் படுவோர் அதைப் போக்க செய்ய வேண்டிய சடங்கை விளக்குகிறார். பல அறிஞர்களைச் சந்தித்து கண் திருஷ்டி பற்றிய அவர்களது கருத்தையும் கேட்டு திரைப்படத்தில் அதை அவர் தந்துள்ளார். முடிவான கருத்து என்னவென்றால் இதை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது என்பது தான்!

நியூயார்க்கில் வாழும் மரியா பராட்டா (Maria Barattaa Ph.D)ஒரு உளவியல் நிபுணர்.

அவர் இத்தாலியைச் சேர்ந்தவர். சைக்காலஜி டு டே இதழில் கண் திருஷ்டி பற்றி உளவியல் ரீதியாக அவர் எழுதியுள்ள கட்டுரையில் ஒரு சுவையான சம்பவத்தை விவரிக்கிறார்.

தனது 92 வயதான இத்தாலிய அப்பாவிடம் தனக்கு வயிறு சரியில்லை என்றும் ‘’மால் ஓச்சியோ” இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்ல, அவர் உடனே, “எதையாவது கண்டதைச் சாப்பிட்டிருப்பாய்” என்று பதில் கூறியவர், “எதற்கும் இருக்கட்டும்” என்று திருஷ்டியைப் போக்கும் பிரார்த்தனை மந்திரத்தையும் மகளுக்காக உச்சரித்தாராம்.

இந்தியாவில் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கம் போலவே இத்தாலியிலும் அவ்வப்பொழுது திருஷ்டி சுற்றிப் போடுவது வழக்கம்!

இத்தாலிய நம்பிக்கையின் படி தாயத்துகளை நீங்களாக வாங்கிப் போட்டுக் கொள்ளக் கூடாது; யாராவது ஒருவர் தான் அதை உங்களுக்குத் தர வேண்டும்!

வரலாற்றை அலசிப் பார்த்தால் பல பிரபலங்கள் தீய திருஷ்டிப் பார்வையைக் கொண்டவர்களாக இருப்பது தெரியவரும்.

இந்தப் பட்டியலில் ஆங்கிலக் கவிஞர் பைரன், போப் ஒன்பதாம் பயஸ், போப் பதிமூன்றாம் லியோ, இரண்டாம் கெய்ஸர் வில்லியம், மூன்றாம் நெப்போலியன் உள்ளிட்ட பலர் இடம் பெறுகின்றனர்.

போப் ஒன்பதாம் பயஸ் கையில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த ஒரு நர்ஸை ஜன்னல் வழியே பார்த்தார். சில விநாடிகளிலேயே அந்தக் குழந்தை இறந்து விட்டது. இது அனைவருக்கும் பரவியது. இதன் பின்னர் அவர் செய்யும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் கெட்ட விளைவுடனேயே முடிந்தது. அவர் 1878ஆம் ஆண்டு மறைந்தார்.

இதே போல போல் போப் பதிமூன்றாம் லியோ பார்வையும் மற்றவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துமாம். அவர் போப்பாக இருந்த காலத்தில் ஏராளமான கார்டினல்கள் இறந்து விட்டதால் அவரைக் கண்டாலேயே அனைவருக்கும் பயமாம் – தனக்கும் சாவு வந்து சேருமோ என்று தான் பயம்! முத்தாய்ப்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பது கண் திருஷ்டியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆனந்தம் தரும் செய்தியாக அமைகிறது. அதையும் பார்த்து விடுவோம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மேதைகள் எவ்வளவு நேரம் தினமும் தூங்குவார்கள்?

இதோ ஆராய்ச்சி தரும் தகவல்கள் :

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தினமும் 10 மணி நேரம் தவறாமல் உறங்குவார். இது தவிர பகல் நேரத்தில் குட்டித் தூக்கமும் அவருக்கு உண்டு.

இதற்கு நேர்மாறானவர் பிரபல விஞ்ஞானியான நிகோலஸ் டெல்ஸா. அவர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் தான் இரவில் தூங்குவார்.

இதை ஈடு கட்டும் விதமாக பகல் நேரத்தில் குட்டித் தூக்கமாக பல முறை அவர் தூங்குவதுண்டு.

லியனார்டோடாவின்சியின் தூக்கப் பழக்கம் சற்று விசித்திரமானது. செயல்படாமல் நெடுநேரம் இருக்கக் கூடாது என்பது அவரது கொள்கை. ஆகவே அவர் 20 முதல் 120 நிமிடம் வரை தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். இப்படி பகலிலும் இரவிலுமாகச் சேர்த்து ஒரு நாளக்கு ஐந்து மணி நேரத்திற்கு மேல் அவர் தூங்க மாட்டார். இதனால் அவர் இடைவிடாது செயலூக்கத்துடன் தனது பணிகளைச் செய்து வந்தார். இப்படி உறங்கும் பழக்கத்திற்கு டா வின்சி தூக்க அட்டவணை (The Da Vinci Sleep  Schedule) என்றே பெயர் வைக்கப்பட்டு விட்டது. இதற்கு உபர்மேன் தூக்க அட்டவணை (Uberman Sleep Schedule) என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது ஒரு நாளை ஆறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் 20 நிமிடம் மட்டுமே தூங்கும் முறைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே உறங்க முடியும்.

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் சரியாக இரவு 10 மணிக்கு உறங்கப் போவார்.காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பார்.

தாமஸ் ஆல்வா எடிஸனோ இரவு 11 மணிக்கு உறங்கச் சென்று அதிகாலை 4 மணிக்கு எழுந்து விடுவார். ஸ்பேஸ்  கம்பெனியின் உரிமையாளரான இலான் மஸ்க் இரவு 1 மணியிலிருந்து காலை 7 மணி வரை ஆறு மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்.

வெற்றிகரமான மேதைகள் பொதுவாகக் குறைந்த நேரமே தூங்குகின்றனர். பெரிய சாதனைகளைப் புரிகின்றனர்!

 

****

 

கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள் (Post No.5035)

கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள் (Post No.5035)
WRITTEN by London Swaminathan 

Date: 22 May 2018

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

Post No. 5035

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

பழங்காலத்தில் கீழை நாடுகளில் ஒரு நம்பிக்கை இருந்தது. ஒருவர் சத்தியத்தின் பெயரில் சூளுரைத்து கடலை விரட்டலாம். தண்ணீர் மீது நடக்கலாம்; நதிகளை ஓடாமல் செய்யலாம் என்று நம்பினர். இந்தக் கதைகள் சிலப்பதிகாரம், திருவிளையாடல் புராணம், புத்த, ஜைனமத நூல்களில் உள்ளன. மோஸஸ் கடலைக் கடந்த கதை, ஜீஸஸ் சிஷ்யன் கடலைக் கடந்த கதை எல்லாவற்றுக்கும் மூலம் ரிக்வேதம் என்று முதல் கட்டுரையில் நேற்று காட்டினேன்.

 

 

தமிழர்களைப் போலவே சீனாவிலும் மன்னன் செய்த செயலைப் பார்க்கையில் இரு ஒரு பழங்காலச் சடங்கோ என்று எண்ணத் தோன்றுகிறது.

 

திருவிளையால் புராணத்தில் ஒரு கதை இருக்கிறது; அதன் தலைப்பு “கடல் சுவற வேல்விட்ட படலம்”. 96 அஸ்வமேத யாகம் செய்த உக்கிரகுமார பாண்டியன் மீது இந்திரன் பொறாமை அடைந்தான். ஏனெனில் எவரேனும் 100 அஸ்வமேத யாகம் செய்தால் இந்திரன் பதவி பறிபோய்விடும் இதனால் இந்திரன் மதுரை நகர் மீது கடல் தண்ணீர் பாயும்படி ஏவிவிட்டனன். இது தமிழ்ச் சங்கம் இருந்த தென் மதுரையாக இருக்கலாம்.  பாண்டிய மன்னன் சிவ பக்தன் என்பதால் சிவபெருமானே அவன் கனவில் தோன்றி கடலைக் கட்டுக்குள் வைக்க அனுப்பினான் என்பது கதை. உடனே அவன் இரவோடு இரவாக கடல் மீது வேல் ஒன்றை எறிய  அது பின்வாங்கியது.

உண்மை பேசுவோர், நியாயமான ஆட்சி நடத்துவோருக்கு இப்படிப் பட்ட அபூர்வ சக்திகள் இருந்ததாக மக்கள் நம்பினர். நல்லாட்சி நடக்கும் நாட்டில் பயிர்கள் தாமாகவே செழித்து வளரும் என்று வள்ளுவனும் செப்புவான்.

சீனாவில் நடந்த அதிசயம்

மிலிந்த பன்னா என்னும் நூலில் ஒரு கதை வருகிறது:–

“மன்னாதி மன்னா! சீனாவில் ஒரு மன்னன் நாலு மாதங்களுக்கு ஒரு முறை, கடலுக்குக் காணிக்கை செலுத்துவதற்காக சபதம் செய்கிறான். அவன் தேரில் ஏறி கடலுக்குள் ஒரு லீக் ( மூன்றரை மைல்) தொலைவு செல்வான் அவன் உள்ளே நுழைந்தவுடன் கடல் பின் வாங்கி விடும். அவன் தேர் வெளியே வந்தவுடன் கடல் அந்த இடத்தில் பாய்ந்து முழுகடித்துவிடும்”.

இது புத்தமத நூலில் உள்ள கதை. ஆக பரசுராமன் கோடரியை எறிந்து கேரள பூமியை மீட்ட கதை, மஹாவம்சம் எனும் இலங்கை நூலில் உள்ள கதை ஆகியன எல்லாம் ஸத்தியத்தின் மூலம் சபதம் செய்து தண்ணீரைக் கட்டுப்படுத்த முடியும் என்று காட்டுகின்றன; நிலம் தரு திருவில் பாண்டியன், கடல் சுவற வேல் விட்ட உக்கிரப் பெருவழுதி அல்லது உக்கிர குமாரன் அகியோர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலும் உண்டு.

 

From my earlier post:–

மஹாவம்சக் கடல் கதை

சுனாமி/ கடல்கோள்
அத்தியாயம் 22-ல் ஒரு காதல் கதை வருகிறது. இது காகவனதீசன் மன்னன் காலத்தில் நடந்தது.
கல்யாணி என்னும் நகரில் தீசன் என்ற மன்னனின் மனைவிக்கு (ராணிக்கு) ஜய உதிகன் என்பவன் ஒரு காதல் கடிதத்தை புத்த பிக்கு போல வேடம் அணிந்த ஒருவர் மூலம் அனுப்புகிறான். அவன் ராஜா ராணி வரும் போது அதை ராணியின் முன்னால் போடுகிறான். சத்தம் கேட்டுத் திரும்பிய தீசன், ராணிக்கு வந்த காதல் கடிதத்தைப் படித்துவிட்டுக் கோபம் அடைகிறான். கோபத்தில் உண்மையான தேரரையும், தேரர் வேடத்தில் இருந்த போலியையும் வெட்டி வீழ்த்துகிறான். இதனால் கடல் (அரசன்) கோபம் கொண்டு பொங்கி நாட்டுக்குள் புகுந்தது. இது கி.மு 200க்கு முன் நடந்தது.

இது போன்ற சுனாமி தாக்குதல் கதைகள் பல தமிழ் இலக்கியத்திலும் உண்டு. கடல்மேல் வேல் எறிந்து கடலின் சீற்றத்தை அடக்கிய பாண்டியன் கதைகளை திருவிளையாடல் புராணத்தில் (கடல் சுவற வேல் எறிந்த உக்ர பாண்டியன்) காணலாம். ராமனும் கடல் பொங்கியவுடன் வருண பகவானுக்கு எதிராக கடலில் அம்புவிட்டதை ராமாயணத்தில் படிக்கிறோம்.

உடனே கடலின் சீற்றத்தை அடக்குவதற்காக, தீசன் தன் மகளை ஒரு தங்கக் கலசத்தில் வைத்து அனுப்புகிறான். அது கரை ஒதுங்கியபோது காகவனதீசன் அவளைக் கண்டு கல்யாணம் செய்துகொள்கிறான்.

 

இதில் நமக்கு வேண்டிய விஷயம் கடல் பொங்கிய (சுனாமி) விஷயமாகும். இதன் காலத்தை ஆராய்தல், முதல் இரு தமிழ்ச் சங்கங்களை விழுங்கிய கடற்கோள்களின் (சுனாமி) காலத்தை அறிய உதவலாம். சிலப்பதிகாரத்தில் ஒரு கடற்கோள் பற்றி நாம் படிக்கிறோம்.

வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
-காடுகாண் காதை, சிலப்பதிகாரம்

இதை ஒப்பிட்டால் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் மற்றும் முதல் இரு தமிழ்ச் சங்கங்களில் ஒன்றின் காலம் ஆகியன உறுதிப்படலாம். இலங்கை கடற்கோள் நடந்தது கி.மு.200–க்கு முன்.

 

xxx

சம்பந்தர் செய்த அற்புதம்

தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்ற பாடலகளைப் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றுமுள்ள ஏனைய சிவனடியார்கள் வாழ்விலும் நதி நீர் , கடல் நீர் முதலியவற்றை அடக்கி ஆண்ட செய்திகள் உள. திருஞான சம்பந்தர் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய   போது   படகோட்டிகளும் பயந்து தயங்கி நின்றதாகவும் அவர் அடியார்களுடன் படகில் ஏறி தேவாரம் பாட, படகு அமைதியாக தவழ்ந்து மறு கரை சேர்ந்ததாகவும் ஸ்தல புராணங்கள் நுவலும். கொள்ளம்புதூரில் வெட்டாறு வெள்ளப் பெருக்கெடுத்தபோது சம்பந்தர் நதி கடந்த அதிசயம் சைவ வரலாற்றில் உள்ளது

 

கொள்ளம்புதூரில் ஆண்டுதோறும் ஓட (படகு) விழா நடப்பதோடு அந்த ஆற்றுக்கே ஓடம்போக்கி ஆறு என்றும் பெயர் வைத்துவிட்டனர்.

to be continued…………….

–subham–

நீர் மேல் நடக்கும் அற்புத வித்தை! (Post No.5032)

WRITTEN by London Swaminathan 

 

Date: 21 May 2018

 

Time uploaded in London – 10-31 AM (British Summer Time)

 

Post No. 5032

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

அஷ்டமா சித்தி (எட்டு வகை அற்புத சக்திகள்) பெற்றவர்களுக்கு நீர் மேல் நடக்கும் வித்தை மிகவும் எளிது. ஹடயோகம் பயின்றவர்களுக்கு இது இயலும்.

 

கண்ணன் பிறந்தவுடன் வசுதேவர், அக்குழந்தையைக் கூடையில் வைத்துக்கொண்டு சென்றபோது யமுனை நதி திறந்து வழிவிட்டதை நாம் அறிவோம். இந்துக்களின் கணக்குப்படி இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. பின்னர் இது போன்ற தண்ணீர் அற்புதங்களை பைபிளின் பழைய, புதிய ஏற்பாடுகளிலும் புத்த மத நூல்களிலும் அலெக்ஸாண்டரின் வரலாற்றிலும், ஆதி சங்கரர் வரலாற்றிலும் காண்கிறோம்.

 

இதற்கெல்லாம் ஆதி மூலமாக இருப்பது ரிக் வேதக் கவிதையாகும் (3-33). அந்தக் கவிதை விஸ்வாமித்ர மஹரிஷிக்கும் இரண்டு நதி தேவதைகளுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும். கவிதை என்ற கண்ணோட்டத்திலும் மிக அற்புதான கவிதை. நதிகளைப் பெண்களாகப் போற்றும் கவிதை; உவமைகள் மிக்க கவிதை. அந்த ‘’தண்ணீர் அற்புதக்’’ கவிதையைக் காண்பதற்கு முன்னர் நீர் வித்தைகளை வில்லியம் நார்மன் பிரவுன் என்பவர் எப்படிப் பிரித்துள்ளார் என்பதைக் காண்போம்.

தண்ணீர் வித்தைகள் ஆறு வகையானது:-

1.ஒருவர் தனது அற்புத சக்தியினால் கடல் அல்லது ஆறுகளை இரண்டாகப் பிரியும் படி செய்து காய்ந்த தரையில் நடந்து போவது.

 

2.அற்புத சக்தியினால் நீரின் ஆழத்தைக் குறைத்து அதில் நடந்து செல்வது.

 

  1. தண்ணீர் அப்படியே நிற்க, அதன் மேல் நடந்து செல்வது

 

4.தண்ணீரில் விரைந்து செல்ல காற்றோ அலைகளோ அல்லது தாமரை போன்ற பொருள்களோ உதவுவது

 

  1. அல்லது தண்ணீர் மேல் HOVERCRAFT ஹோவர்கிராஃட் போன்று பறந்து செல்வது

 

  1. மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ இரண்டோ கலந்து உதவுவது.

 

ஆதி சங்கரரின் சீடரான பத்மபாதரை எதிர்க்கரையில் இருந்த சங்கரர் அழைத்தார். உடனே அவர் நீர் என்றும் பாராது விரைந்து செல்ல அவர் நீர் மீது கால் வைத்த இடம் எல்லாம் தாமரை மலர் தோன்றி அவரைத் தாங்கிச் சென்றது. இதனால் அந்த சிஷ்யருக்கு பழைய பெயர் மறைந்து போய் தாமரைக் காலன் (பத்மபாதர்) என்ற புதுப்பெயர் தோன்றியது.

 

புத்தர் கடல்மேல் பறந்து வந்து இலங்கைக்கு வந்ததாக புத்த மத நூல்கள் இயம்பும். புத்தர்களின் சீடர்கள் அற்புத சக்தியால் ஆற்று வெள்ளத்தைக் கடந்ததையும் அவைகள் விளம்பும்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலியர்களுக்கும் மோஸசுக்கும் செங்கடல் திறந்து வழிவிட்டதாகப் பகரும்

 

ஏசுவின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவரான பீட்டர் நீரின் மேல் நடந்த கதையை பைபிள் நுவலும்.

 

இப்படி ஏராளமான கதைகளைப் பழங்குடி மக்களும் பகர்வர்.

 

ஆனால் உலகிலேயே பழமையான நூலில் — ரிக் வேதத்தில் – இவைகளைக் காணும்போது நாம்தான் இந்தக் கலையை உலகிற்குக் கற்பித்தோமோ என்றும் தோன்றும். ரிக் வேதத்தின் காலம் கி.மு 1500 முதல் 6000 வரை என்று அறிஞர்கள் செப்புவர்.

 

ரிக்வேதக் கவிதை 3-33

 

விபாசா (வியாஸ), சுதுத்ரி (சட்லெஜ்) இரண்டு பஞ்சாப் நதிகள் இப்பாடலில் இடம் பெறுகின்றன.

 

விஸ்வாமித்ரர்–

அடடா! என்ன அற்புதம் ! மலைகளில் பிறந்து கடலுக்குப் போகும் உங்கள் அழகே, அழகு! போட்டி போடும் இரண்டு குதிரைகளப் போல பாய்கிறீர்களே. கன்றுகளை அன்பாக நாவால் நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசு போல இரு கரைகளையும் அலைகள் என்னும் நாவால் தொடுகிறீர்களே.

 

இந்திரனுடைய கட்டளைக்குப் பணிந்து தேரில் விரைந்து செல்லும் தேவர்கள்  போலப் பிரகாஸிக்கிறீர்கள். அதே வேகத்தில் கடலை நோக்கி ஓடுகிறீர்கள்! அலைகள் ஒன்றன் மீது ஒன்று புரள்வது ஒருவரை ஒருவர் நாடுவது போல உளதே!

 

தாய் போன்ற சுதுத்ரி நதியே! சௌபாக்கியவதியான விபாஸையே! கன்றுகளை நாடும் தாய் போல ஒருமித்துப் பாய்கிறீர்களே!

 

 

இரண்டு நதிகளும் சொல்லுகின்றன

நாங்கள் நீரினால் நிலத்தை வளப்படுத்தி இறைவனால் படைக்கப்பட்ட கடலுக்குப் போகிறோம். எங்களை எவராலும் தடுக்க இயலாது. நீவீர் எம்மை அழைத்த காரணம் யாதோ?

விஸ்வா:-

 

நான் ஸோம லதை எனப்படும் அற்புத மூலிகையை எடுக்க செல்கிறேன். நான் குஸிகனின் புதல்வன்; ஏ, சுதுத்ரி நதியே ஒரு கணப்பொழுது  ஓடாமல்தான் நில்லேன்.

 

நதிகள் பதில்

விருத்திரன் எங்களைத் தடுத்து நிறுத்திய போது வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் அந்த விருத்ரனைக் கொன்றான். நல்ல கைகள் உள்ள ஸவிதா எங்களை இந்த வழியில் செலுத்தினான். அவன் கட்டளைபடி வெள்ளப் பிரவாஹம் எடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

 

விஸ்வா

நல்லது; இந்திரன் அந்த அஹி என்னும் பாம்பைக் கொன்று செய்த நற்செயல் என்றும் போற்றப்பட வேண்டியதே தடை செய்தவர்களை அவன் வஜ்ர ஆயுதம் கொண்டு அழித்தான்

 

நதிகள் பதில்

 

ஓ, துதிபாடும் முனிவா; எதிர்கால சந்ததியினர் உன்னுடைய இந்தக் கவிதையைப் போற்றுவார்கள் ; நீயும் மறந்து விடாதே; ஆனால் மக்களுக்கு முன்னர் எங்களைத் தாழ்திவிடாதே.

விஸ்வா:

சஹோதரிகளான நதிகளே! நான் சொல்லுவதை அன்போடு செவிமடுங்கள்; நான் தொலை தூரத்தில் இருந்து தேரோடும் வண்டிகளோடும் வந்து இருக்கிறேன். கொஞ்சம் தாழ்வாகப் பாய்ந்து செல்லுங்கள் உங்கள் நீரோட்டம் காளை மாட்டு வண்டியின் அச்சுக்குக் கீழே பாயட்டும்

நதிகள் பதில்

ஓ, கவிஞரே! நீ தொலைவில் இருந்து தேர், காளை மாட்டு வண்டிகளோடு வந்ததாகச் சொல்லுவது எங்கள் காதில் விழுந்தது குழந்தைக்குப் பால் ஊட்டும் தாய் போலவும் காதலனைக் கட்டித் தழுவ ஓடிவரும் காதலியின் அன்பு போலவும் நாங்களும் உன்னைத் தாழ்ந்து வணங்குவோம்.

விஸ்வா:–

நதிகளே; என்னைக் கடக்க உதவினீர்கள்; அதைப் போல பரதர்களும் படைகளும் கடந்து செல்ல உதவுங்கள்; பின்னர் பிரவாஹம் எடுத்துப் பாய்ந்து செல்லுங்கள்; உங்களைப் போற்றுவேன்

 

பரதர்களும் பசுக்களை நாடிக் கடந்து சென்றனர்.  உங்கள் அன்பு எனக்குக் கிடைத்தது; உங்கள் அலைபோல செல்வத்தைப் பொழியுங்கள்;  உணவு தான்யம் பெருகட்டும்; வளம் கொழிக்கட்டும்; பாய்ந்து செல்க.

 

எங்கள் மாட்டு வண்டியின் நுகத்துக்கு கீழே பாயுங்கள். எங்கள் காளை மாடுகள் ஒரு பாவமும் அறியாத ஜந்துக்கள் அவைகளுக்குத் தீங்கு செய்துவிடாதீர்கள்.

 

 

இது போல பல அற்புதக் கவிதைகள மந்திர சக்தியால் நதிகளைக் கட்டுப்படுத்தியதைக் காட்டுகின்றன (குறிப்பாக 10-136)

இந்தக் கவிதையில் என்ன அற்புதம் இருக்கிறது?

விஸ்வாமித்ரன் வேண்டியவுடன் நதிப் பிரவாஹம் குறைந்தது. வண்டியின் அச்சுக்குக் கீழே பாய்ந்தது. உடனே அவரும், பரதர்களும்  கடந்து சென்றனர்.

 

பாடலில் உள்ள உவமைகள் ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்ற மாணிக்க வாசகரின் பாடலை நினைவு படுத்தும்

நதிகளைத் தாயாக போற்றுவதையும் பூமியைத் தாயாக போற்றுவதையும் உலகம் நம்மிடம் கற்றது.

காளை மாடுகளுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற அன்புப் பிரவாஹம் நதிப் பிரவாஹம் போல உளது.

 

வேத கால இந்துக்களுக்கு கடல் தெரியாது என்று பிதற்றும் பித்துக்குளிகளுக்கு  இந்த நதிக் கவிதையும் ஸரஸ்வதி நதிக் கவிதையும் சாட்டை அடி கொடுக்கிறது. மலைமீது தோன்றி கடல் வரை செல்லும் நதிகள் பற்றிய மாபெரும் பூகோள அறிவு அக்காலத்தில் இருந்தது. அதுமட்டுமல்ல கவிதையில் காணும் உவமைகள் அமைதியான ,நனி நாகரீகம் மிக்க வேத காலத்தை நம் கண்களுக்கு முன்னால் கொணர்கிறது.

 

‘வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’– பாரதி.

 

-சுபம்-