லண்டனில் ஆயுர்வேதக் கண்காட்சி (Post No.4697)

Date: 3 FEBRUARY 2018

 

Time uploaded in London- 7-58 am

 

Compiled by London swaminathan

 

Post No. 4697

 

PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

 

லண்டன் மாநகரில் யூஸ்டன் (Euston or Euston Square) ரயில் நிலையம் அருகில் வெல்கம் சென்டர் (Wellcome Centre) என்ற புகழ்பெற்ற மருத்துவ ஆராய்ச்சி நிலயம் உள்ளது. இந்தியாவின் ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் தொடர்பான ஏராளமான மருத்துவ பொக்கிஷங்களின் உறைவிடம் இது. இப்பொழுது ஒரு ஆயுர்வேத கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இது ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும். ஆனால் திங்கட்கிழமையில் கண்காட்சி மூடப்பட்டிருக்கும்.

 

 

இந்தக் கண்காட்சி பற்றியும் வெல்கம் என்பவர் யார் என்றும் சில செய்திகளைக் காண்போம்.

ஹென்றி வெல்கம் (1853-1936) என்பவர் அமெரிக்காவில் பிறந்தவர். அவர் லண்டனுக்கு ஒரு மருந்து விற்பனையாளராக வந்தார். பின்னர் ஒரு பெரிய மருத்துவ தொழில் நிறுவனத்தை அமைத்து வெற்றி கண்டார். அவருக்கு வரலாற்றில்– குறிப்பாக மருத்துவ வரலாற்றில்— பேரார்வம் இருந்தது. அவர் ஒரு தர்ம சிந்தனையாளர், ஆராய்ச்சியாளர், பழம்பொருள் சேகரிப்பாளர். ஆகையால் உலகம் முழுதும் குறிப்பாக இமய மலைப் பகுதி மூலிகைச் செல்வங்கள், ஆயுர்வேத நூல்கள் ஆகியவற்றைச் சேகரித்தார். அவர் சேகரித்த நூல்களும், பொக்கிஷங்களும் உலகம் முழுதும் பரவலாக வைக்கப்பட்டுள்ளன. அவர் அமைத்த அறக்கொடை நிறுவனமான வெல்கம் ட்றஸ்ட் (Wellcome Trust) இன்று 70  நாடுகளில் ஆரய்ச்சிப் பணிகளுக்கு நிதி உதவி செய்கிறது.

 

வெல்கம் சென்டரில் எப்போதும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களுடன் புதிதாக ஆயுர்வேத கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. பெரிய புத்தகக் கடை, காப்பிக் கடை, நூலகம் ஆகியன இந்த இடத்தின் சிறப்புகள்; எப்போதும் மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் கூடி இருப்பர்.

 

ஆயூர்வேதக் காட்சியில் நிறைய விஷயங்கள் உள்ளன. சம்ஸ்கிருத பாரசீக, திபெத்திய மொழி நூல்களும் சுவடிகளும் இருக்கின்றன. ஒரு புறம் வீடியோவில் திபெத்திய மூலிகைச் செல்வம் பற்றிய ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும். மறுபுறம் சம்ஸ்கிருத ஸ்லோகங்களுடன்  மருத்துவ செய்தி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்.

 

2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அவதரித்த சுஸ்ருதர் என்ற மஹா மேதைதான் உலகில் அறுவைச் சிகிச்சையின் தந்தை (Father of Surgery)  என்ப போற்றப்படுகிறார். அவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய விஷயங்கள் உலகப் பிரசித்தமானவை.

 

சுஸ்ருதர் செயற்கை மூக்கு எப்படிச் செய்வது எப்படிப் பொருத்துவது (Rhinoplasty) என்று சொன்ன விஷயங்களும், அவர் வருணிக்கும் நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சை கருவிகளும் (Surgical Instruments) உலக மக்களை வியப்பில் ஆழ்த்தின. இந்த மருத்துவக் கருவிகள் நம்மிடையே இன்று இல்லாவிடினும், அதன் மாதிரிகளைத் (Replicas) தயாரித்துக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

 

இந்தக் கண்காட்சிக்கு ஆயுர்வேத மனிதன் என்ற பெயர் சூட்டியதற்குக் காரணமாக அமைந்ததது ஒரு 18ஆவது நூற்றாண்டின் நேபாளி ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் ஆயுர்வேத நூல்களில் சொல்லப்பட்ட வண்ணம் ஒரு மனிதனின் உடலுறுப்புகள் ரத்த நாளங்கள் வரையப்பட்டுள்ளன.

ஆயுர்வேதம் இன்று இந்தியாவுக்கு அப்பாலும் பயிலப்படுகிறது.

கண்காட்சியிலுள்ள வேறு பல சுவையான விஷயங்களைத் தனியாகத் தருகிறேன்.

–Subham–

ஏழு லட்சம் புத்தகங்களை முஸ்லீம் வெறியன் எரித்தது ஏன்? (Post No.4686)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 17-03

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4686

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

எகிப்திலுள்ள அலெக்ஸாண்ட் ரியா நகரில் (Alexandrian Library) இருந்த நூலகத்தை மத வெறிபிடித்த காலிபா உமர் எரித்து அழித்தது எப்படித் தெரியுமா?

 

“இங்கேயுள்ள 700,000 புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதையே, சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம். அப்போது குரான் ஒன்றே போதுமே! இந்த நூல்கள் எதற்காக?”

 

இங்கேயுள் ள   புத்தகங்கள் எல்லாம் குரான் சொல்லுவதற்கு எதிரான கருத்துக்களைச் சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்; அப்படியானால் உடனே தீக்கிரையாக்க வேண்டும்.

இரண்டு விதத்தில் நோக்கினாலும் தீ வைத்துக் கொளுத்துங்கள்!

 

இந்தியாவில் பீஹாரில் இருந்த நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் அதன் நூலகத்துக்கும் முஸ்லீம்கள் தீ வைத்தபோதும் இதேதான் சொல்லியிருப்பார்கள்.

xxx

 

மதவெறியர்களுக்கு ஆப்ரஹாம் லிங்கன் பதிலடி

ஒரு முறை  ரெவரென்ட் திரு ஷ்ரிக்லி என்பவர் ராணுவத்தில் மருத்துவ மனைக்கான சமய குருவாக (Chaplain) நியமிக்கப்பட்டார். இது அமெரிக்க ஒய்.எம்.சி.ஏ. (Young Men’s Christian Association) நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. உடனே ஒரு கூட்டம் போட்டு, ஒரு கமிட்டியை அமைத்து, வாஷிங்டனுக்கு அனுப்பினர்.

 

ஆப்ரஹாம் லிங்கன் அறையில் நடந்த சம்பாஷனை:–

 

“ஐயா, நாங்கள் இந்த திருவாளர் ஷ்ரிக்லி நியமனம் விஷயமாகப் பார்க்க வந்திருக்கிறோம்.”

 

லிங்கன்: “ஓ, கவலையே படாதீர்கள். என்னுடைய தீவிர சிபாரிசுடன் நியமனத்தை செனட் சபைக்கு அனுப்பிவிட்டேன். வெகு விரைவில் அவர்கள் அதை உறுதிப்படுத்துவர்”.

“ஐயா, நாங்கள்……… நாங்கள்………. அந்த நியமனம் வேண்டாம், கூடாது என்று சொல்ல வந்திருக்கிறோம்”.

 

லிங்கன்:-

“அ ப்படியா சேதி! கதையே மாறுகிறதே. சரி, என்ன காரணத்தால் நீங்கள் வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள்.

“ஐயா, அவர், நம்முடைய பைபிள் கூற்றுக்கு எதிரான பிராசாரத்தை முன்வைக்கிறார்.

லிங்கன்:-

அட, அப்படி என்ன சொன்னார்?

“ஐயா நம் சுதந்திரப் போருக்கு எதிர் தரப்பில் இருந்த எதிரிகளையும் பரம பிதா மன்னிப்பார் என்கிறார். அது எப்படி சரியாகும்? இறைவன் எல்லையற்ற தண்டனை தருவார் என்பதை அவர் ஏற்கவில்லை.

இவரை ஆஸ்பத்திரி சமய குருவாக நியமித்தால் நம் மதத்துக்கே ஆபத்து”.

மற்றவர்களும் ‘’ஆமாம், ஆமாம்’’ என்று ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

 

ஆப்ரஹாம் லிங்கன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். என்ன சொன்னீர்கள்? எதிரிகளையும் இறைவன் மன்னிப்பார் என்று அவர் கருதுகிறார் என்று சொன்னீர்களா? அப்படியானால் இவர்தான் இந்தப் பதவிக்கு மிகவும் தகுதியானவர்”

 

ஆப்ரஹாம் லிங்கனின் பதில் அந்தக் குழுவுக்கு நெத்தியடி, சுத்தியடி கொடுத்தது போல இருந்தது.

xxx

 

கிறிஸ்தவர் என்ன செய்தார்கள்?

அமெரிக்க வரலாற்றுப் பாடம் முடிந்தது.

வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார்:-

மாணவர்களே! இவ்வளவு நேரம் பாடம் கேட்டீர்களே! ப்யூரிடன் (Puritan) கிறிஸ்தவர்கள் அமெரிக்காவில் என்ன செய்தார்கள்?

ஒரு மாணவன் எழுந்தான்:-

“ஐயா, அவர்கள் தங்கள் வழியில் இறைவனைக் கும்பிட்டார்கள்; அதே வழியில் மற்றவர்களையும் கும்பிட வைத்தார்கள்.”

 

(கட்டாய மதமாற்றத்தை அந்தப் பையன் அழகாக சொல்லி முடித்தான். வாத்தியார் அதை ரசிக்கவில்லை!)

 

சுபம்–

ஆண்களை விட பெண்களுக்கு சக்தி அதிகம்-சாணக்கியன் (Post No.4685)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 15-07

 

Written  by LONDON SWAMINATHAN

 

Post No. 4685

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 
((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

ஆண்களை விட பெண்களுக்கு எல்லா அம்சங்களிலும் அ பார சக்தி இருப்பதாக உலக மஹா ஜீனியஸ்/ மஹா புத்தி சாலி, மேதாவிப் பிராஹ்மணன் சாணக்கியன் ,2300 ஆண்டுகளுக்கு முன்னர் இயம்பியதைப் படித்தால் அதிசயமாக இருக்கும்.

 

“ஆண்களை விட ஒரு பெண் இரண்டு மடங்கு சாப்பிடுவாள்;

ஆண்களை விட பெண்களுக்கு நான்கு மடங்கு புத்தி அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு துணிச்சல் ஆறு மடங்கு அதிகம்;

ஆண்களை விட பெண்களுக்கு செக்ஸ் (Sex drive) விஷயங்களில் எட்டு மடங்கு ஆர்வம் அதிகம்”.

ஆஹாரோ த்விகுணஹ ஸ்த்ரீணாம் புத்திஸ்தாஸாம் சதுர்குணா

ஷட்குணோஅத்யவஸாயஸ்ச காமஸ்சாஷ்டகுணஹ ஸ்ம்ருதஹ

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 17

 

xxx

 

எந்த ஜாதியானாலும் கல்யாணம் கட்டு!

 

 

“விஷப்பொருளில் அமிர்தம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

அசிங்கமான அழுக்கான பொருள்களுக்கு இடையே தங்கம் இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மக்களிடம் அறிவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்;

கீழ் மட்டத்தில் பிறந்த பெண் குணவதியாக இருந்தால் அவளை ஏற்றுக்கொள்”

விஷாதப்யம்ருதம் க்ராஹ்யமமேத்யாதபி காஞ்சனம்

நீசாதப்யுத்தமாம் வித்யாம் ஸ்த்ரீரத்னம் துஷ்குலாதபி

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 16

 

புறநானூற்றிலும் மநு ஸ்ம்ருதியிலும் இதற்கு இணையான கருத்துக்கள் உள்ளன.

 

xxx

 

பெண்களின் அழகு எது?

“குயிலின் அழகு இனிமையாகக் கூவுதலில் இருக்கிறது;

பெண்களின் அழகு கற்பில் உள்ளது (கணவனைத் தவிர யாரிடமும் விருப்பமின்மை);

அவலட்சணமான தோற்றம் உள்ளவரிடத்தில் அழகு என்பது அவருடைய அறிவுதான்;

யோகிகளுக்கு அழகு மன்னிப்பதில் உள்ளது”.

 

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் ஸ்த்ரீணாம் ரூபம் பதிவ்ரதம்

வித்யா ரூபம் குருபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம்

–சாணக்கிய நீதி, அத்தியாயம் 3, ஸ்லோகம் 9

 

திருக்குறளிலும் கற்பு மற்றும் கணவனைத் தொழுவது பெரிதும் போற்றப்படுகிறது. அதே போல குணம் என்னும் குன்றேறி நின்றார் உடனே மன்னித்துவிடுவர் என்றும் வள்ளுவன் கூறுவான்.

 

 

 

xxxx

 

 

பெண்களை தூய்மையாக்குவது எது?

வெண்கலத்தை சாம்பலால் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பித்தளையை அமிலத்தைத் தேய்த்து சுத்தப்படுத்தலாம்;

பெண்களுக்கு மாதவிடாய் (விலக்கு) வந்தால் சுத்தமாகிவிடுவர்

ஒரு நதியை வேகமாக ஓடும் தண்ணீர் சுத்தமாக்கும்.

பஸ்மனா சுத்யதே காம்ஸ்யம் தாம்ரமம்லேன சுத்யதி

ரஜஸா சுத்யதே நாரீ நதீ வேகேன சுத்யதி

–6-3

 

XXXX

யார் பாபம் யாருக்கு?

நாட்டு மக்கள் செய்த பாபம் அரசனைச் சாரும்;

அரசன் செய்த பாபம் புரோஹிதனைச் சாரும்;

மனைவி செய்த பாபம் கணவனைச் சாரும்;

மாணவன் செய்த பாபம் ஆசிரியரைச் சாரும்;

 

ராஜா ராஷ்ட்ர க்ருதம் பாபம் ராக்ஞஹ பாபம் புரோஹிதம்

பர்தா ச ஸ்த்ரீக்ருதம் பாபம் சிஷய பாபம் குருஸ்ததா

6-9

 

XXX

கல்யாணம் கட்டாதே!

கெட்ட அரசன் ஆளும் நாட்டைவிட காடே மேல்;

கெட்ட நண்பனைவிட, நண்பனில்லாததே மேல்;

கெட்ட மாணவனை விட மாணவன் இல்லாதததே மேல்;

கெட்ட மனைவியைவிட மனைவி இல்லாததே மேல்.

 

வரம் ந ராஜ்யம் ந குராஜராஜ்யம் வரம் ந மித்ரம் ந குமித்ரமித்ரம்

வரம் ந சிஷ்யோ ந குசிஷ்யசிஷ்யோ வரம் ந தாரா குதார தாராஹா.

6-12

 

–Subham–

 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!! (Post No.4683)

Date: 31 JANUARY 2018

 

Time uploaded in London- 7-17 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4683

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

 

 

ஷாக்கிங்! ஷாக்கிங்!!

 

வைரமும் இல்லை; முத்தும் இல்லை; எல்லாம் தப்பு!!!

 

ச.நாகராஜன்

 

1

நிஜமாகவே ஏமாந்து போனேன். நண்பர் வைரமுத்துவிடம் வைரம், முத்து இன்ன பிற ரத்தினங்கள் இருக்குமோ என்று ஒரு நப்பாசை இருந்தது.

ஆனால் ஷாக்கிங், ஷாக்கிங்! இவரிடம் வைரமும் இல்லை; முத்தும் இல்லை; வெறும் ஓட்டாஞ்சல்லி தான் இருக்கிறது என்று தெரிந்து விட்டது!

ஆண்டாள் தமிழை ஆண்டாள்;

தமிழ் இதயங்களை ஆண்டாள்! உண்மைத் தமிழர்களின் இதயங்களைத் தான் சொல்கிறேன்.

போலிகளை அவள் வேண்டாள். (வேண்ட மாட்டாள்!)

 

 

2

மனிதர் ‘பெய்யெனப் பெய்யும் மழை என்று எப்படி குமுதத்திற்குத் தலைப்புக் கொடுத்தாரோ தெரியவில்லை.

ராங் டைடில்!

“உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்

தன்னம்பிக்கை தளரவிடாதே

இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்

மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே!

 

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு

உலகின் வாயில் இரட்டை நாக்கு

எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்

உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது!

என்று 22-5-1997 குமுதம் இதழில் ‘பெய்யெனப் பெய்யும் மழை கவிதைத் தொடரில் எழுதிய போது மயங்கிப் போனேன்.

மனிதர் உண்மையத் தான் சொல்கிறாரோ என்று!

“இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்

இலக்கியம் இல்லை லேகியம் என்றது…

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்

வடுக பட்டி வழியுது என்றது

 

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்

காதில்பூ வைக்கிறான் கவனம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்

குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது

 

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது

இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு

உலகின் வாயைத் தைப்பது கடினம்

உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்

 

   _ 22-5-1997 குமுதம் இதழில் வெளியான 68 வரிகள் கொண்ட உலகம் என்ற கவிதையில் சில வரிகள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளது.

 

அடடா, எவ்வளவு ‘இழிமொழி எல்லாம் அனாவசியமாக வாங்கி இருக்கிறார் என்று தோன்றியது.

 

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் உலகம் அவரை ஏன் உலகம் இப்படிப் பழிக்கிறது என்று எனக்குப் புரிகிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகார்; வையத்து

அலகையா வைக்கப்படும்

 

ஆம் இவரை உலகம் அலகையா – பேயாக வைத்து விட்டது இன்று!

சூடிக் கொடுத்த நாச்சியாரை உலகம் கொண்டாட, இவர் தன் வழி தனி வழி என்றார். உலகம் செய்ய வேண்டிய மரியாதையை இன்று செய்து விட்டது!

 

 

3

இவர் ஆண்டாளைப் பற்றிச் சொன்னதற்கு பக்தி லெவலில் சென்று மறுப்புரை கொடுக்கிறார்கள்.

அந்த அளவுக்கு இவர் தகுதியானவர் தானா! இல்லை என்று அல்லவா தோன்றுகிறது!!

இலக்கிய மட்டத்தில் கூட இவருக்கு இவ்வளவு மறுப்புரை தேவை இல்லை; வரலாற்று ரீதியாக கூட இவருக்கு இவ்வளவு ஆதார உரைகள் தேவை இல்லை.

தமிழ்ப் பைத்தியம் என்று நினைத்திருந்தேன்; ஆனால் தமிழைத் தவற விட்டு விட்டார் என்பது இப்போது எனக்குப் புரிகிறது!

 

 

இவர் சேர்ந்த இடமே சரியில்லை.

போலித் தமிழில் கொச்சை வார்த்தை பேசுபவர்களிடம் இச்சகம் கொண்டவர் இவர்; இச் ச(ஜ)கத்தை அவர்களிடம் கண்டவர் அவர்.

 

‘இவர் யார் என்றால் மனைவி; அவர் யார் என்றால் துணைவி;

‘இவள் யார் என்றால் துணைவிக்குப் பெண்; உனக்கு யார் என்றால் துணைவிக்குப் பிறந்த பெண்.

‘போதை முடிவுக்கு வந்து விட்டதா?

 

இப்போதைக்கு முடிவு தான்! (இப்போதைக்கு – அதாவது தற்காலிகமாக இப்போதைக்கு – மதுவுக்கு முடிவு தான்!)

இப்படி கொச்சையாகப் பேசி சொந்தக் கூட்டத்திடம் கை தட்டல் வாங்குபவர்களின் சேர்க்கை இவரை என்ன செய்யுமோ அதைச் செய்து விட்டது.

வேசி; தாசி! அடடா, என்ன தமிழ் அறிவு!

வேசிக்கும் தாசிக்கும் “இன்னிசைத் தமிழை எளிமை செய்தவர் தரும் விளக்கம் புல்லரிக்க வைக்கிறது.

 

 

4

 

இல்லாத ஒரு ஆய்வுக் கட்டுரையைக் கேடயமாக்கி தமிழையும் தமிழ்ப் பெண்ணையும் இழிவு படுத்திய இவருக்கு மறுப்புரையே தேவை இல்லை; இவரைப் பற்றிய மதிப்புரை தான் தேவை!

 

அதுவும் கிடைத்து விட்டது!

உலகளாவிய விதத்தில் இப்படி இழிவு பட்ட ஒரு கவிஞரை இனிமேல் தான் தமிழகம் காண வேண்டும்.

காணாது.

 

 எட்டிய மட்டும் காதைக் குடைந்து தோண்டி காதை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரார் இன்று இல்லை.

ஆகவே இவர் கவிஞர் என்று சொல்லிக் கொள்ளலாம். வில்லிப்புத்தூரிலும் சென்று பேசலாம் – வீ ரமாக, கோரமாக!

இவர் தமிழை இன்னும் எளிமைப் படுத்தினால்! ஒரேயடியாக தமிழ் …. !!!!

 

 

5

அது சரி, தினமணி வைத்தியநாதனுக்கு என்ன ஆயிற்று!

(திரு ஏ.என்.எஸ், எனது தந்தையார் இருந்த ஸ்தானத்தில் இப்படி ஒருவரா!)

 

ஐயகோ! கலியின் கொடுமையா? காலிகளின் சேர்க்கையா!

தினமணி என்ற ஒளி கொடுக்கும் சூரியனை இருள் கவ்வச் செய்து விட்டாரே! தினமணிக்கு கிரகண காலம்!!

 

6

ஒரே ஒரு வழி தான்! இவர்களை இனம் கண்டு கொண்டாயிற்று!

இவர்களை ஒதுக்குங்கள்; உள்ள வேலையைப் பாருங்கள்!

“அப்படி இருந்தால் அதுவும் தப்பு

இப்படி இருந்தால் இதுவும் தப்பு

கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்

தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும்

என்று எழுதி இருக்கிறார் அல்லவா! (உலகம் கவிதை வரிகள்)

இப்போது புரிந்து விட்டது இதில் கூறியுள்ள ஜந்து யார் என்று!

“வைரமும் தப்பு; முத்தும் தப்பு – இவர்

தரமும் தப்பு; தமிழும் தப்பு

 

 

7

குரைப்பது கடிக்காது!

தெய்வீக ஆண்டாளும் சேமமுற இருப்பாள்; தெய்வத் தமிழும் தனது தெய்வத் தன்மையுடன் சிறந்து வாழும்.

 

 

8

ஒன்றும் தெரியாதார் உச்சத்தில் ஏறினார்

    அன்றும் இராவணன் உண்டு; இரண்யன் உண்டு

நன்று செய்யாதார் நலிந்தே செத்தார்

    நாயகன் தோன்றுவான் யுகம் தோறும்!

 

இப்போதைக்கு இவர் போதையில் ஆட்டம்

     போட்டாலும் பொட்டென வீ ழ்வார்

எப்போதைக்கும் வெல்வது அறம் தான்!

      ஆண்டாள் என்றுமே ஆள்வாள்!!

***

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்! (Post No.4679)

Date: 30 JANUARY 2018

 

Time uploaded in London- 6-45 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4679

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST

WITH YOU.

 

 

((நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை, அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

இலக்கியத் திருட்டு

காப்பி அடிக்கும் எழுத்துக் கலைவாண(ஞ)ர்கள்!

 

ச.நாகராஜன்

 

1

கவிஞர் கண்ணதாசன் எழுதியதைத் தன் பெயரில் போடத் துடித்த கலைஞர்கள் காலத்திலிருந்து இன்று வரை காப்பி அடிக்கும் கலைவாணர்கள் பெருகியே வந்திருக்கிறார்கள்.

இதை ஒரு குற்றமாக அவர்கள் நினைப்பது இல்லை என்பது தான் மெய்; வருத்தப்பட வைக்கும் விஷயமும் இது தான்!

இதில் ஒரு அற்ப ஆசை; தானும் ஒரு படைப்பாளி தான் என்பதை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதே அடி மனத்து ஆசை.

புரிகிறது; ஆனால் இது பெரும் தவறல்லாவா! ஒரிஜினல் படைப்பாளிக்கும் படிப்பவர்களுக்கும் இழைக்கும் மாபெரும் துரோகமல்லவா?!

 

 

படித்ததில் பிடித்ததை நண்பர்களுக்கு அனுப்பலாம்; தளங்களில் வெளியிடலாம்- உரியவரின் அனுமதி பெற்று; அது இந்தக் கால கட்டத்தில் மிகவும் கஷ்டம் என்றால், படித்த நல்ல விஷயத்தைப் பகிர வேண்டும் என்ற ஆவல் அதிகமாகி இருந்தால், அதை எழுதியவர் யார், அதை வெளியிட்ட பத்திரிகை அல்லது இணையதளம் எது, அதை விரும்பக் காரணம் என்ன என்பதையும் சேர்த்து வெளியிட வேண்டும். உள்ளதை உள்ளபடி வெளியிட்டால் போதும்; என் அபிப்ராயம் எல்லாம் எதற்கு என்றால், அதுவும் சரிதான், படைப்பை அப்படியே அதை எழுதியவர், வெளியிட்ட தளம், பத்திரிகை எது என்பதுடன் வெளியிட வேண்டும்.

இது குறைந்த  பட்ச கர்டஸி.(Courtesy)

 

2

நாளுக்கு நாள் எனது படைப்புகளை உடனுக்குடன் “திருடி” என் பெயரை ‘கட்’ செய்து விட்டு, தங்கள் பெயரில் வெளியிடும் சாமர்த்தியசாலிகள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.

இப்படி அவர்கள் பெயரில் வெளியாகியுள்ள திருட்டுக் கட்டுரை எனது உடனடி கவனத்திற்கு சில மணி நேரங்களுக்குள்ளாகவே தெரிவிக்கப்பட்டு விடுகிறது.

 

 

சுமார் எட்டாயிரம் பேர்கள் தினசரி எனது கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதும், இவர்களுள் பெரும்பாலானோர் மிகவும் நல்லவர்கள், வல்லவர்கள், அதி புத்திசாலிகள், ஸ்மார் பீபிள் என்பதும் ஒரு காரணம் – இது உடனடியாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்படுவதற்கு

 

3

எனது எழுத்துக்களை திருடிய சில “திருடர்கள்”, திருடிகள் பற்றி எழுத வேண்டாம் என்று தான் இத்தனை நாள் இருந்தேன். ஆனால் சமீபத்திய “காதல் எத்தனை வகை” என்ற எனது கட்டுரை திருடப்பட்டு வெளியிடப்பட்ட விதம் தான் என்னை வருத்தமுறச் செய்தது, கோபமுறச் செய்தது.

 

 

அதில் என் பெயரை வெளியிடவில்லை; பரவாயில்லை!

வெளியிட்ட www.tamilandvedas.com தளத்தின் பெயர் வெளியிடப்படவில்லை, பரவாயில்லை.

ஆனால் போஜ மஹாராஜன் எழுதிய சிருங்காரபிரகாஸம் என்ற அரிய நூலை 1908 பக்கங்களையும் கைப்பிரதியாக எழுதி அதை ஆராய்ந்து உலகிற்கு வெளியிட்டாரே பேரறிஞர் டாக்டர் வி.ராகவன், அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை.

 

 

அந்தப் பகுதியை கட் செய்து விட்டார் “உத்தம வில்லன்”!

ஏன் அப்படிச் செய்தார் என்பது தான் தெரியவில்லை!

தன் பெயரில் வெளியிட்ட இந்தக் கட்டுரையை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஹெல்த்கேர் இதழ் ஆசிரியரும் என் நண்பருமான ஆர்.சி. ராஜா,” நன்றி கூட இல்லையே” என்று வருத்தப்பட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் – இதை எடுத்துப் போட்டவரின் தளத்தின் லிங்கை அனுப்பி!

என்ன சொல்லித் திட்டுவது? படிப்பவர்கள் தாம் தீர்மானித்துத் திட்ட வேண்டும்.

 

சிலர் தனக்கு வந்த மெயிலிலிருந்து அப்படியே அனுப்பி விடுகிறார்கள் – அவர்களுக்கு ‘லிஃப்ட்” ஆனது தெரியாது!

ஆகவே உடனடியாக யாரையும் திட்ட முடியாது!

 

4

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தை சென்னையில் இருந்தால் காலையில் கேட்பது வழக்கம். காரணம், சுமார் இருநூறுக்கும் (இன்னும் அதிகமாகவே) மேற்பட்ட  அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளை நான் அளித்திருப்பதாலும் இன்னும் அளித்து வருவதாலும், அந்தச் சிந்தனைகள் ஒலிபரப்பப்படுவதை  கேட்பேன்.

ஒரு நாள். ஒரு ஒலிபரப்பு என்னை திடுக்கிட வைத்தது.

ஒரு டாக்டர். ஜானகி என்று பெயர். எனது நூறு அறிவியல் கட்டுரைகளைத் தொகுத்து ‘வியப்பூட்டும் விஞ்ஞானப் புதுமைகள் நூறு” (நவம்பர் 2005 வெளியீடு) என்று ஒரு நூலாக வெளியிட்டிருந்தேன்.

 

 

அதில் பத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து  மாற்றாமல் அம்மையார் அனுப்ப, அதை நமது வானொலி நிலையமும் ஏற்றுக் கொண்டிருந்தது.

உடனடியாக புரோகிராம் எக்ஸிகியூடிவிடம் (திரு செல்வகுமார் அருமையான நண்பர்; சிறந்த நிர்வாகி; நல்லனவற்றைத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்) விஷயத்தைச் சொன்னேன்.

அவர் சிரித்தார். ‘என்ன செய்வது? எல்லா நூல்களையும் என்னால் படிக்க முடியாதே! இப்படி ஒரு டாக்டர் செய்யலாமா’, என்று வருந்தினார்.

பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நான் ஊகித்தேன்.

 

5

பாக்யாவில் கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து சுமார் 19 வருடங்களாக வாரம் தோறும் எழுதி வருகிறேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தினத்தந்தியில் அப்படியே எனது அறிவியல் கட்டுரை காப்பியாக ஒரு  முறை வந்ததை தற்செயலாகப் பார்த்துத் திடுக்கிட்டேன். என்ன செய்வது?

 

 

6

இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகை தினக்குரல். சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சுளா ரமேஷ் அவர்களின் குழுமத்திலிருந்து வெளியாகும் சினேகிதி பத்திரிகையில் மாதம் ஒரு கட்டுரை எழுதுவது எனது வழக்கம். அதில் வெளியான 64 கலைகள் பற்றிய எனது கட்டுரை அப்படியே வெளியாகி இருந்தது. ஆனால் இந்தப் பத்திரிகையில் எனது பெயரும், கட்டுரை எடிட் செய்யப்படாமலும் வந்திருந்தது. இதை எனது சம்பந்தி திரு சேஷாத்ரிநாதன் அவர்கள் சுட்டிக் காட்டினார்.

திருட்டு உலகிலும் ஒரு நல்ல குரல்!

 

 

எனது சம்பந்தி சந்தேகாஸ்பதமாக இருக்கும் கட்டுரைகள் என்னுடையது தானா என்று சுலபமாகக் கண்டுபிடிக்க ஒரு வழி வைத்திருக்கிறார்.

 

 

இதை அவர் சொன்ன போது சிரித்து மகிழ்ந்தேன்.

காப்பி அடிக்கப்பட்டுள்ள கட்டுரையின் சில முக்கிய சொற்றொடர்களை அப்படியே கூகுளில் போடுவாராம். எனது ஒரிஜினல் கட்டுரை வெளியான தளம்/ அல்லது பத்திரிகை, வெளியான தேதி உள்ளிட்டவை வந்து விடுமாம். உடனடியாக எனக்குத் தெரியப்படுத்துவார்.

இது போல எனது நண்பர்கள் பலரும் உடனடியாக போனில் கூப்பிட்டுச் சொல்லி விடுகிறார்கள்!

 

7

ரவி என்று ஒரு ஆசாமி. அப்படியே அப்பட்டமான காப்பியாளர். எனது கட்டுரையைத் தன் போட்டோவுடன் போட்டுக் கொண்டார். இதைச் சுட்டிக் காட்டிய போது, “இதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அவருக்கு காப்பிரைட், திருட்டு இலக்கியம் என்றெல்லாம் பாடமா எடுக்க முடியும்? இதற்கு தண்டனை உண்டு என்றவுடன் ஆசாமி வழிந்தார்; வழிக்கு வந்தார்.

 

 

8

ஒரு நல்ல ஆன்மீக மாதப் பத்திரிகை. ‘அமிர்தமாக வர்ஷிக்கும்’ நல்ல கருத்துக்களைக் கொண்டது. இதில் ஒரு கட்டுரை வந்தது. இதைச் சுட்டிக் காட்டியவுடன் ஆசிரியர் வருத்தப்பட்டார். ஏனெனில் இப்படி ஒரு காப்பி கட்டுரையைத் தான் வெளியிட்டு விட்டோமே என்று!

 

 

சென்ற வாரம் எனது சம்பந்தி அனுப்பிய கட்டுரை ஒன்று வந்தது. மஞ்சுளா ரமேஷ் ஞான ஆலயம் குழுமம் நடத்தும் ஜோஸிய இதழான ஸ்ரீ ஜோஸியத்தில் நவம்பர் 2017 இதழில் வெளியான கட்டுரை ஒன்றை அப்படியே ஒரு பெண்மணி தன் பெயரில் இணைய தளத்தில் வெளியிட, அது “உலா” வந்தது! ஆனால் ஒரிஜினல் கட்டுரையில் நான் கொடுத்திருந்த ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகங்களை (என்னென்ன கிழமைகளில் என்னென்ன செய்யலாம்?) வெட்டி விட்டார்.

 

9

கட்டுரை நீண்டு விட்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

அனுமதியுடன் பிரசுரியுங்கள், உரிய கட்டுரையாளரின் பெயரைப் போடுங்கள், அது வெளியான பத்திரிகை அல்லது தளத்தின் பெயரைச் சுட்டிக் காட்டுங்கள் என்று தான் சொல்லலாம்; இதற்கு அதிகமாக என்னத்தைச் சொல்ல, காப்பி அடிக்கும் கலை(ஞ)-வாணர்-களுக்கு?!

1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது :

‘திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க  முடியாது!’

 

10

ஒழிக்க முடியாவிட்டாலும் கூட கண்டிக்கலாம் இல்லையா?

இப்படி இலக்கியத் திருடு செய்யும் குருடர்களை ஒரு வார்த்தை கண்டித்து எழுதிப் போடுங்கள்.

வெட்கமடைபவர்கள், அப்புறம் அதில் ஈடுபடமாட்டார்கள், உரியவரின் பெயரை வெளியிடுவார்கள்!

அத்துடன் எனது நலம் விரும்பிகள் செய்வது போல ஒரிஜினல் படைப்பாளருக்கு இப்படிச் செய்பவர் யார் என்பதைத் தெரிவிக்கலாம்!

***

 

 

‘எல்லாம் நன்மைக்கே’ கதை (Post No.4676)

WRITTEN by London Swaminathan 

 

Date: 29 JANUARY 2018

 

Time uploaded in London – 7-22 am

 

Post No. 4676

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

ஒரு ராஜாவிடம் ஒரு மந்திரி பணியாற்றினார். நாட்டில் எது நடந்தாலும் ‘எல்லாம் இறைவன் செயல்- எல்லாம் நன்மைக்கே’ என்று சொல்லி, சுருக்கமாகப் பேசி முடித்து விடுவார். ராஜாவுக்கு அவ்வளவு திருப்தி இல்லை. ஒரு முறை பழத்தை நறுக்கும்  போது    ராஜாவின் கை விரல் வெட்டுப்பட்டு விட்டது. மந்திரியிடம் காட்டி என்ன சிகிச்சை செய்யலாம்? என்று கேட்டார். அவர் “எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்று பேச்சைத் துவங்கினார்.

அரசனுக்கு வந்ததே கோபம்! யார் அங்கே? இந்த அமைச்சரைக் கொண்டு சிறையில் அடையுங்கள் என்று உத்தவிட்டான். ராஜாவின் கட்டளைப்படி மந்திரியும் சிறையில் தள்ளப்பட்டார்.

வைத்யரை அழைத்தார். அவர் வந்து மூலிகைகளைக் கசக்கி சாறு பிழிந்து ஒரு கட்டும் போட்டார்.

 

நாட்கள் உருண்டோடின. ஒரு நாள்,  நாட்டு மக்கள் மன்னரைச் சந்தித்து முறையிட்டனர்:

“மன்னர், மன்னவா! எங்கள் கிராமங்களுக்குள் வன விலங்குகள் புகுந்து ஆடு, மாடுகளைக் கொன்று குவிக்கின்றன. தாங்கள் அவைகளை வேட்டையாடி எங்களைக் காப்பாற்ற வேண்டும்.”

 

இதைக் கேட்ட மன்னவன் புடை சூழ, படை சூழ வேட்டைக்குப் புறப்பட்டான். காட்டு விலங்குகளை வேட்டை ஆடினான். வழக்கமாக வரும் மந்திரியோ சிறையில் போடப்பட்டதால் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லை. எல்லோரையும் ஓய்வு எடுக்க சொல்லிவிட்டு ஒரு மரத்தடியில் போய்ப் படுத்தார். திடீரென்று ஒரு சிங்கம் அவர் மீது பாய்ந்தது. அவர் காயங்களின் மீதான கட்டுகளைக் குதறிவிட்டு, அவரைக் கொல்லாமல் போய் விட்டது. மன்னர் பயந்து நடுங்கி, தன் படை சூழ நாட்டுக்குத் திரும்பி வந்தான். சிறையில் அடைத்த அமைச்சரை அழைத்து இதற்கு என்ன விளக்கம் என்று கேட்டான்.

அவர் வழக்கமான பல்லவியை ஆரம்பித்தார்—“எல்லாம் நன்மைக்கே- எல்லாம் இறைவன் செயல்- ஆண்டவன் அருள்- நீங்கள் காயப்பட்டு இருந்ததால் சிங்கம் உங்களைச் சாப்பிடாமல் சென்றுவிட்டது. பொதுவாக சிங்கம்  இறந்த விலங்குகளையோ காயம் அடைந்த விலங்குகளையோ உண்ணாது. ஆகையால் அது உங்களை விட்டது அதான்! நான் நீங்கள் விரல் வெட்டப்பட்ட அன்றே சொன்னேனே- எல்லாம் நன்மைக்கே என்று”.

 

உடனே அரசன் கேட்டான்: “அது சரி; நான் உங்களை சிறையில் அடைத்தேனே.அதுவும் நன்மைக்கோ!” என்று சொல்லி நகைத்தான்.

 

மந்திரி சொன்னார்

 

“ஆமாம்; அன்று நீங்கள் வேட்டைக்குப் போனபோது நான் மட்டும் அருகில் இருந்து இருந்தால் என் உடலைக் குதறி இருக்கும்; என் உடம்பில் காயம் ஏதும் இல்லாததால் என்னைச் சாப்பீட்டிருக்கும்.”

 

இந்தக் கதையை கிருபானந்த வாரியாரும் உபந்யாசங்களில் சொல்லுவார் –கொஞ்சம் மாற்றங்களுடன்.

 

அமைச்சர் சிறையில் இருந்த போது அரசன் மட்டும் வேட்டைக்குச் சென்றதாகவும், அவரை நரபலி கொடுக்கும் காபாலிகர் கடத்திச் சென்று காளிக்குப் பலிகொடுக்கும் முன், அவர் கைகளில் காயம் இருப்பதைப் பார்த்து விடுதலை செய்ததாகவும் சொல்லுவார். ஏன் எனில் காளிக்குப் பலி கொடுக்கும் உடல் சிறிதும் காயம் இன்றி இருக்க வேண்டும் என்பது காபாலிகரின் நம்பிக்கை!

 

எல்லாம் இறைவன் செயல் என்பதற்கு இது போல ஏராளமான கதைகள் உண்டு.

 

–சுபம்—

TAGS– எல்லாம் நன்மைக்கே, இறைவன் செயல், மந்திரி,

காபாலிகர், நரபலி

விதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் (Post No.4668)

WRITTEN by London Swaminathan 

 

Date: 27 JANUARY 2018

 

Time uploaded in London – 12-41

 

Post No. 4668

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
(என் வாசகர்கள் தமிழர்கள்; அதாவது நல்லவர்கள்; எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆகையால் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

விநாச காலே விபரீத புத்தி

‘விநாச காலே விபரீத புத்தி’ என்றால் என்ன பொருள்? ஒருவருக்குக் கெட்ட காலம் வந்தபோது மனது தடுமாறி தவறான முடிவு எடுப்பார்கள். அதனால் அவருடைய அழிவை அவரே தேடிக்கொள்வர். அதாவது கனியன் பூங்குன்றன் புறநானூற்றில் செப்பியது போல ‘தீதும் நன்றும் பிறர்தரா வாரா’. அதாவது நமக்கு நாமே நன்மையும் செய்து கொள்ளலாம். தீங்கும் இழைத்துக் கொள்ளலாம்.

 

விதி கெட்டுப் போனால் மதி கெட்டுப் போகும் – என்பதே ‘விநாச காலே விபரீத புத்தி’யின் மொழி பெயர்ப்பு.

 

நான் ‘தினமணி’யில் வேலை பார்த்த காலத்தில் 1975 ஜூன் 25ல் நாட்டில் எமர்ஜென்ஸி (Emergency) எனப்படும் அவசர நிலை பிரகடனமாயிற்று. எதிர்க் கட்சித் தலைவர்களைச் சிறையிலிட்டார் அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி. உடனே மக்கள் இயக்கத்தை முன்னின்று நடத்திய ஜெயப் பிரகாஷ் நாராயணன் அளித்த பேட்டியில் ‘விநாச காலே விபரீத புத்தி’ என்றார். அவர் சொன்னது எவ்வளவு சரி என்பதை அதற்குப் பின் வந்த நிகழ்ச்சிகள் விளக்கின.

 

 

அப்போது இது சாணக்கிய நீதியில் உள்ள வரிகள் என்று எனக்குத் தெரியாது. இதோ சாணக்கிய நீதியின் முழு வரிகள்:

 

ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ

ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ

ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய

விநாச காலே விபரீத புத்திஹி

-சாணக்கிய நீதி, அத்யாயம் 16, ஸ்லோகம் 5

 

பொருள்:

உலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை; யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது புத்தி பேதலித்து விடும்.”

(தங்க நிற மான் ஒன்றைப் பார்த்து சீதா தேவி ஆசைப்பட்டதால், ராமாயணம் எனும் கதை வளர்ந்தது பற்றிய குறிப்பு இது )

 

xxx

முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு!

 

சாணக்கியனுடைய இன்னொரு கொள்கையும் மிகவும் செயல்முறைக்கு உகந்தது. சிலருக்குப் புரியும் வகையில் பதில் தந்தால்தான் புரியும்; சில இடங்களில் ஆடுற மாட்டை ஆடிக்  கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்  கறக்கனும். ஆகவே சாணக்கியன் செப்புவது யாதெனில்,

 

“நல்லது செய்தால் நல்லது செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோருக்கு வன்முறை மூலம் பதில் தர வேண்டும். இதில் தவறேதும் இல்லை. கெட்டவர்களாக இருந்தால் அவர்களைக் கெட்டவர் போல இருந்தே மடக்க வேண்டும்.”

 

ஸம்ஸ்க்ருதத்தில் அவன் ஸ்லோகம் பின்வருமாறு,

க்ருதே ப்ரதிக்ருதம் குர்யாத் ஹிம்ஸனே ப்ரதிஹிம்ஸனம்

தத்ர தோஷோ ந பததி துஷ்டே துஷ்டம் ஸமாசரேத்

-சாணக்கிய நீதி, அத்யாயம் 17, ஸ்லோகம் 2

 

 

பாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்மைத் தாக்கினால், தாக்குதல் மூலம் பதிலடி தர வேண்டும். அதாவது முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்!

 

ஆனைக்கும் பானைக்கும் சரி!

 

‘ஆனைக்கும் பானைக்கும் சரி’ என்னும் கதையை நாம் அனைவரும் சிறு வயதிலேயே கேட்டிருக்கிறோம். இந்த ஸ்லோகத்துக்கு மிகவும் பொருத்தமான கதை அது. இதுவரை நீங்கள் கேட்டது இல்லை என்றால் இதோ மிக மிக  சுருக்கமாக அந்தக் கதை:–

 

ஒரு ஊரில் ஒருவர் வீட்டில் கல்யாணம் ஏற்பாடாகி இருந்தது. கல்யாண ஊர்வலத்தில் யானையையும் ஊர்வலத்தில் விட ஆசைப்பட்டார் ஒருவர். யானை வளர்ப்பவரிடம் சென்று ஒரு யானையை ஊர்வலத்துக்கு வாடகைக்கு எடுத்தார். அவருடைய துரத்ருஷ்டம், யானை பாதி வழியிலேயே இறந்து விட்டது.

 

யானையின் சொந்தக்காரன் வந்த போது யானை இறந்த தகவலைச் சொல்லி, ‘ஐயா, யார் தவற்றினால் அது இறந்திருந்தாலும் போகட்டும். நான் அதன் மதிப்பு எவ்வளவோ அவ்வளவை உங்களுக்குத் தந்துவிடுகிறேன்’ என்று யானையைக் கடன் வாங்கியவர் சொன்னார். ஆனால் அந்த முட்டாளோ  எனக்குப் பணம் ஏதும் வேண்டாம்; அதே போன்ற ஒரு யானை வேண்டும்; அல்லது செத்துப் போன யானையை உயிர்ப்பிக்க வேண்டும் என்று  சொல்லிவிட்டு பிடிவாதமாக நின்றான்.

 

யானைக் கடன் பெற்றவரோ பதில் சொல்ல முடியாமல் தவித்தார். அப்போதுது அவருடைய  நண்பர் ஒருவர் அவர் காதில் ஏதோ கிகிசுத்தார்.

உடனே யானையைக் கடன்பெற்றவர் சொன்னார்: ‘’கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள நாளை மதியம் வீட்டுக்கு வாருங்கள். யானையைக் கொடுத்து விடுகிறேன்’’ என்றார். மறு நாள் காலையில் கதவின் பின்புறத்தில் புதிய பானைகளையும் பழைய பானைகளையும் அடுக்கி வைத்திருந்தார். மறுநாள் யானைக் கடன்காரன் வந்து கதவைத் தட்டியபோதும் கதவு திறக்கவில்லை. பதிலும் இல்லை. உடனே யானையக் கடன் கொடுத்தவன் அந்த வீட்டின் கதவை ‘தடால்’ என்று எத்தி உதைந்தான்; கதவும் திறந்தது. கதவுக்குப் பின்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பானைகள் யாவும் சுக்கு நூறாய் உடைந்தன. உடனே வீட்டுக் காரன் குய்யோ முறையோ என்று கூச்சலிட்டான. ‘’இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பானைகள்; ஆகவே எனக்கு இப்போதே அந்தப் பானைகள் வேண்டும்’’ என்றான். உடனே யானையைக் கடன் கொடுத்தவன் அதற்கான நஷ்ட ஈட்டைத் தருவதாகச் சொல்லி மன்றாடினான். ஆனால் அவனோ ‘’நீ இறந்து போன யானைதான் திரும்ப வேண்டும் என்றாய்;  நான் உடைந்து போன பானைகளைத் தானே திரும்பக் கேட்கிறேன்’’ என்றான்.

 

இருவரும் நீண்ட நேரம் வாதாடியதால் ஊர் மக்கள், அவர்களை நீதி மன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். நீதி மன்றத் தலைவர் வழக்கு முழுவதையும்  கேட்டுவிட்டுச் சொன்னார்: “இருவரும் ஈட்டுத் தொகையை அளிக்க முன்வந்தும் மற்றவர்  அதை வாங்க மறுக்கிறீர்கள்; ஆகவே ஒருவரும் ஒருவருக்கும் ஈட்டுத் தொகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை; யானைக்கும் பானைக்கும் சரி! கோர்ட் முடிந்தது; விசாரணை முடிந்தது. அனைவரும் கலைந்து செல்லல்லாம்”.

 

இதுதான் யானைக்கும் பானைக்கும் சரி என்ற பழமொழியின் பின்னுள்ள கதை

 

–SUBHAM–

Love Jihad cases- பெற்றோர்கள் அறிய வேண்டிய ஜிஹாதி லவ் ! (Post No.4667)

Date: 27 JANUARY 2018

 

Time uploaded in London- 7-14 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4667

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(என் வாசகர்கள் தமிழர்கள்= நல்லவர்கள்; தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

நாட்டு நடப்பு

பெண்ணைப் பெற்ற ஹிந்து பெற்றோர்கள் அறிய வேண்டிய ஜிஹாதி லவ் !

 

ச.நாகராஜன்

 

1

காலம் கலி காலம். பெண்ணைப் பெற்று விட்ட ஹிந்து பெற்றோர்கள் ஏற்கனவே ஏராளமான விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதெல்லாம் அறிகிறார்களோ இல்லையோ, எக்கேடோ கெட்டுப் போகட்டும். கீழே இருப்பதை மட்டும் அவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். எதற்காக?

பெண்ணின் எதிர்கால நலனுக்காக!

 

2

எல்லா ஜிஹாதி லவ் கேஸ்களையும் அலசி ஆராய்ந்ததில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை உண்மைகள் உள்ளன.

  1. பெண் முதலில் மதத்தில் பற்றில்லாதவளாக இருந்தாள். மதத்தைப் பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாது.
  2. என்றாலும் அவளுக்கு அவனை மணம் புரிய வேண்டும் என்றவுடன் மதத்தைப் பற்றிப் பெரிதும் அக்கறை வந்து விடுகிறது (அவன் மதத்திற்காக)
  3. இன்னும் கூட அந்தப் பெண்ணுக்கு அவளது பெற்றோரின் மதம் பற்றி ஒன்றும் தெரியாது! ராமன், கிருஷ்ணன் என்றால் அவளுக்குச் சிரிப்புத் தான் வரும்! பாகிஸ்தான் ஷோக்களை அவள் விரும்பிப் பார்ப்பாள். ஆனால் அதே சமயம் மஹம்மது, அல்லா என்றாலோ சிரிக்கக் கூடாது என்பது நன்கு புரிந்து விடும். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அவர்கள் விஷயத்தில்!
  4. அநேக கேஸ்களில், அவளுக்கு யாராவது ஒருவர் தனக்கு புத்திமதி சொல்ல வருவார் என்பது தெரியும். ஆகவே அவளிடம் ரெடிமேட் பதில்கள் ஆலோசனைக்குத் தக்கவாறு ரெடியாக இருக்கும்.

 

  • நான் வயதுக்கு வந்தவள். எனக்கு நான் என்ன செய்கிறேன் என்பது நன்றாகத் தெரியும். ஆகவே உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு நீங்க போங்க. என் விஷயத்தில் அனாவசியமாகத் தலையிடாதீர்கள்!
  • பேசாமல் போகிறாயா, இல்லை உன்னை போலீஸில் கம்ப்ளெய்ண்ட் செய்யவா?

  • இந்தியாவில் எந்தச் சட்டமும் என்னைத் தடுக்காது
  • ஹிந்துக்கள் முஸ்லீம்களை விட பலதார மணத்தைக் கொண்டவர்கள். ஆதரித்தவர்கள். அது எனக்குத் தெரியும்
  • ஹிந்துக்கள் முஸ்லீம்களை விட அதிகமாகவே தலாக் செய்பவர்கள்
  • ஹிந்து தீவிரவாதமும் இருக்கிறது!
  • ஹிந்து மதத்தில் இல்லாத மூட நம்பிக்கைகளா! அதில் ஏராளம் இருக்கின்றன

பொதுவான ஒரு அம்சம் இந்த மாதிரிப் பெண்கள் பாலிவுட் சினிமாக்களை மிக அதிகமாகப் பார்ப்பவர்கள்.

 

 

  1. அந்தப் பெண் அந்தப் பையனுடன் உடல் ரீதியான உறவைக் கொண்டிருக்கிறாள்.
  2. அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தில் உள்ள எல்லா பெண்களையும் தெரியும். அவளது சகோதரிகள், உற்றார் சுற்றம் ஏன் அவளது மாமி, சித்தி உட்பட அனைவரையும்!
  3. முஸ்லீம்களில் ஆண்கள் அனைவரும் ஹிந்துக்களை விட பெண்களை அதிகம் போற்றுவதாக அவளுக்கு நம்பிக்கை உண்டு.

 

  1. இப்போது அவள் கடவுள் ஒருவரே என நம்புகிறாள்.
  2. உருவ வழிபாடு தப்பு என்று அவள் நினைக்கிறாள். இதனால் தான் லவ் ஜிஹாதியை அனைவரும் தாக்குவதாக அவள் நம்புகிறாள்
  3. நமது சொந்த மதத்தைப் பற்றி சரியான விதத்தில் சொல்லித் தராத பெற்றோராகிய நாம் தான் உண்மையில் தவறு செய்தவர்கள். அவர்களின் பெண்கள் மற்றும் ஆண்களைப் பாருங்கள். எதிலாவது லவலேசமும் விட்டுத் தருகிறார்களா?!

  1. அவர்கள் வீட்டு ஆண்களுக்குத் தெளிவான புத்தி உண்டு. அத்துடன் ‘தீர்மானமாகத் தான்’ அவர்கள் வருகிறார்கள்.
  2. முஹம்மதை கேலி செய்ய முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
  3. ஆனால் நமது வீட்டுப் பெண்களோ பாகிஸ்தான் கொள்கைகளுக்கு அடிமை!
  4. அவர்கள் வீட்டு ஆண்களுக்கு அல்லா விட்டுக் கொடுக்க முடியாதவர் என்பது நன்றாகவே தெரியும்.

ஆனால் நம் வீட்டுப் பெண்களுக்கோ கடவுள் ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கிறார் என்பது தெரியும் அல்லது ஒருவேளை கடவுளே இல்லை என்பதும் புரியும். அதனால் என்ன பெரிய நஷ்டம் இருக்கப் போகிறது.

 

  1. அவர்கள் வீட்டு ஆண்களுக்கு காதலை விட இஸ்லாமை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது புரியும். நம் வீட்டுப் பெண்களோ தங்களை ஹிந்துக்கள் என்று சொல்வதே கிடையாது. காதல் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதே அவர்களின் மந்திரம்!
  2. அவர்கள் வீட்டு ஆண்களுக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகை செய்ய வேண்டியது அவசியம் என்பது தெரியும். நம் வீட்டுப் பெண்களுக்கோ பிரார்த்தனை போன்ற மூட நம்பிக்கைகளில் நம்பிக்கையே இல்லை. அவர்களால் காயத்ரி மந்திரத்தையோ அல்லது மஹாம்ருத்யுஞ்சய மந்திரத்தையோ கூடச் சொல்ல முடியாது.

நன்றி : Truth ஆங்கில வார இதழ்

***

Truth 8-12-17 தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ள ஆங்கில மூலத்தைக் கீழே தருகிறோம்:

 

 

In almost-all Love Jihad cases we have dealt with till date, these are the common things [30/8/2017]

 

  1. Girl was non-religious earlier. She didn’t give a damn about religions. Typical PK style.

 

  1. However, she turns religious (for his religion) as soon as she decides to marry.

 

  1. She still doesn’t give a damn about her parents’ religion. She can still laugh at Ram/Krishna watching PK in coolness. But now she knows laughing at Muhammad or Allah is not cool.

 

  1. In many cases, she already knows that someone will try to counsel her. So she is fed the automatic replies like :–

 

– I am an adult and know what I am doing. You have no business poking in.

 

– I will go to police against you.

 

– There is no law in India that stops me from doing it.

 

– Hindus are more polygamous than Muslims.

 

– Hindus give more Talaq to their wives.

 

– Hindu terror also exists.

 

– Hindu religion is also full of superstitions.

 

  1. She is a big bollywood fan.

 

  1. She is in physical relationship with him.

 

  1. He knows her female family members well, her sisters, cousins and even some Mami or Chachi.

8..She believes Muslim men respect women more than Hindus.

 

9.She now believes God is one.

 

10.She now believes idol worship is wrong. And in all this, just blaming the Love Jihad rackets is wrong. Wrong are we who did not give our children enough conviction about our own faith. Look at their men and our girls.

 

  1. Their men come with clear mind.

 

  1. Their men know Muhammad can’t be mocked. But our girls find it cool to laugh at PK.

 

  1. Their men know Oneness of Allah can’t be compromised. Our girls know God is in hearts or may be he doesn’t even exist. What is the big deal anyway?

 

  1. Their men know Islam is to be kept above love. Our girls have not even called themselves as Hindus ever in life. And Love is beyond religions, is their Mantra.

 

  1. Their men know it is important to pray 5 times a day. Our girls don’t believe in superstitions. They can’t even recite Gayatri Mantra or Mahamrityunjay Mantra.

3

லவ் ஜிஹாதி கேஸ்கள் மிக அதிகமாகிக் கொண்டே வருகின்றன; அதாவது திட்டமிட்டு அதிகமாக்கப்படுகின்றன.

இதற்கான பட்ஜெட் தனியாகத் தயாரிக்கப்படுகிறது.

ஆகவே இதை காலத்திற்கேற்றவாறு எதிர்கொள்ள ஹிந்து மதமும் பெற்றோரும் தயாராக வேண்டும்.

‘ஹி ஹி , பெரிது பண்ணுகிறார்கள்’ என்று ஏளனம் செய்யும் பெற்றோர் முதலில் தன் வீட்டுப் பெண் சரியாக இருக்கிறாளா என்று பார்க்கும் போது பகீர் என பதைபதைத்தும் போகலாம்.

ஏமாற்றப்பட்ட பெண்கள் விடுதியில் விற்கப்படுகிறார்கள், அடிமைகளாக ஆக்கப்படுகிறார்கள், தற்கொலைப் படையில் சேர்க்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள் என்பன போன்ற பல செய்திகளை தினமும் கேட்க ஆரம்பித்து விட்டோம்.

ஆகவே, அனைவரும் விழிப்புடன் இருங்கள் என்பதே கட்டுரையின் சாரம்!

நம்மைச் சுற்றி நடப்பதை நன்கு உற்றுக் கவனிப்போம். அதற்குத் தக நமது உறவினர், நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

ராமனும், கிருஷ்ணனும், சிவனும் அம்பிகையும், விநாயகனும்,முருகனுமே நமது பாரம்பரியத் தெய்வங்கள்.

தொழுவோம்! உயர்வோம்!!

***

பத்து செட்டியார்கள், மூன்று திருடர்கள் கதை (Post No 4664)

WRITTEN by London Swaminathan 

 

Date: 26 JANUARY 2018

 

Time uploaded in London – 11-05 AM

 

Post No. 4664

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்

 

ஒரு ஊரில் பத்து செட்டியார்கள் துணி வியாபாரம் செய்து வந்தனர். அந்த ஊரிலுள்ள நெசவாளர்களிடம் புடவை, தாவணி, வேஷ்டி, துண்டு முதலியவைகளை வாங்கி பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பார்கள். ஒரு முறை அவர்கள் பக்கத்திலுள்ள பட்டணத்தில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு காட்டுப் பாதை வழியே கிராமத்துக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மூன்று திருடர்கள் கத்தி கம்புகளுடன் தோன்றி அவர்களை மிரட்டி எல்லாவற்றையும் பறித்துக் கொண்டனர்.

 

செட்டியார்கள் எப்போதும் இடுப்பில் பணம் முடித்து வைத்திருப்பார்கள் ஆகையால் வேட்டி சட்டையையும் அவிழ்க்கச் சொல்லி விட்டனர். அப்போது அவர்கள் தொந்தியும் தொப்பையுமாக இருப்பதைப் பார்த்து நாட்டியம் ஆடுங்கள் என்று திருடர்கள் உத்தரவிட்டனர். செட்டியார்கள் தங்களுக்கு நடனம் எதுவும் தெரியாது என்று சொன்னவுடன், ஏதேனும் ஆடாவிட்டால் கத்தியால் வெட்டுவேன் என்று மிரட்டியவுடன் ஒரு செட்டியார் மெதுவாக முன் வந்தார். உடனே மற்ற 9 செட்டியார்களும் அவருடன் சேர்ந்து மெதுவாக ஆடினர்.

செட்டியார்கள் வணிக பரிபாஷையில் பேசிக்கொள்ளும் வழக்கத்தை உடையவர்கள்; வாடிக்கையாளருக்குத் தெ ரியக் கூடாது என்பதற்காக விலைகள் தொடர்பான பரிபாஷை (ரகசிய/ சங்கேத மொழி) இது. அப்போது ஒரு செட்டியாருக்கு ஒரு யோஜனை தோன்றியது உடனே அதை ரஹசிய சங்கேத மொழியில் சொன்னார்.

 

 

தோம்தோம் ததிங்கிணதோம்

அண்ணமார்கள் திருபேர்

தம்பிமார்கள் புலிபேர்

ததிங்கிண ததிங்கிண ததிங்கிண தோம்

சவணம் சவணம் பேர்களைத்

திருவர் திருவர் தழுவிக்கிட்டா

தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம்

 

சவணம் தானே மீதிடா

கைகட்டி சவணம் கையைக்கட்டி

தோம் தோம் ததிங்கிண தோம்

நில்லடா, வாங்கடா, போங்கடா

தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம்

என்று ஒருவர் பாடினார்.

 

வர்த்தகர்களின் பரிபாஷையில் இருந்த கருத்து இதுதான்:-

செட்டியார் பரிமாறிக்கொண்ட கருத்து: “நாமோ பத்துப் பேர்; அவர்களோ மூன்று பேர்தான். நாம் ஆளுக்கு முன்று பேர் என்று சுற்றி வளைத்து திருடர்களைப் பிடிப்போம்”.

 

வர்த்தகர்கள் ஒன்று, மூன்று,  பத்து என்ற எண்களை முறையே சவணம், திரு, புலி என்று குறிப்பார்கள்.

 

முதலில் இருந்த செட்டி சொன்ன கருத்தை மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள்; ஆனால் பத்து திருடர்களும் ஏதோ பாட்டு என்று நினைத்து தத்தீம் தத்தீம் ததிங்கிண தோம் என்ற பல்லவியை மட்டும் பாடி மகிழ்ந்தார்கள்.

 

 

திருடர்களோ தனது கடுமையை எல்லாம் விட்டுவிட்டு ஜாலியாக சீட்டுக் கட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். மூவரும்  குடித்துவிட்டு, கும்மாளம் போட்டனர். இதுதான் தருணம் என்று மூன்று மூன்று பேராகச் சேர்ந்து பாடிக்கொண்டே திருடர்களைப் பிடித்து கயிற்றால் கட்டினார்கள்; ஒருவர் ஓடிச் சென்று பட்டணத்தில் உள்ள போலீஸ்காரர்களிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து பத்து திருடர்களையும் பிடித்தனர்.

இதுதான் “யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்” என்ற பழமொழிக்குப் பின்னால் உள்ள கதை!

–சுபம்—

 

மாணிக்கவாசகரின் 28 பொன்மொழிகள் (Post No.4660)

COMPILED by London Swaminathan 

 

Date: 25 JANUARY 2018

 

Time uploaded in London – 8-10 AM

 

Post No. 4660

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவ்ர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

பிப்ரவரி 2018 ‘நற் சிந்தனை’ காலண்டர்

(ஹேவிளம்பி- தை- மாசி மாதம்)

இந்த மாத காலண்டரில் மாணிக்க வாசகர் அருளிய திருவாசகத்திலிருந்து 28 பொன்மொழிகளைத் தந்துள்ளேன். படித்து இன்புறுக.

 

முக்கிய விழா – பிப்ரவரி 13- மஹா சிவராத்திரி

அமாவாசை- 15  (சூரிய கிரஹணம்; இந்தியாவில் தெரியாது)

ஏகாதஸி விரதம்-11, 26

 

பிப்ரவரி மாத முகூர்த்த தினங்கள்—4, 5, 7, 11, 18, 19, 26

 

பிப்ரவரி 1 வியாழக்கிழமை

 

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க

 

பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை

 

சிவனவனென்  சிந்தையுள் நின்ற அதனால்

அவனருளாலே அவன்றாள் வணங்கி

பிப்ரவரி 3 சனிக்கிழமை

 

புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகி

பல்விருகமாகி பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய் கண ங்களாய்

வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றவித் தாவரச் சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

பிப்ரவரி 4 ஞாயிற்றுக்கிழமை

 

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய்

பிப்ரவரி 5 திங்கட்கிழமை

 

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே

பிப்ரவரி 6 செவ்வாய்க்கிழமை

சொல்லற்கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

 

 

பிப்ரவரி 7  புதன்கிழமை

தாயிற் சிறந்த தயாவாவன தத்துவனே

–சிவ புராணம் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

பிப்ரவரி 8 வியாழக்கிழமை

மன்னு மாமலை மகேந்திர மதனில்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

 

பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை

மதுரைப் பெருநன் மாநகரிருந்து

குதிரைச் சேவகானாகிய கொள்கையும்

 

பிப்ரவரி 10 சனிக்கிழமை

தண்ணீர்பந்தர் சயம்பெறவைத்து

நன்னீர்ச் சேவகானாகிய நன்மையும்

–கீர்த்தித் திரு அகவல் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி

ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்

நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன

 

 

பிப்ரவரி 12 திங்கட்கிழமை

 

இன்னிசை வீணையில் இணைந்தோன் காண்க

 

பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமை

பத்தி வலையிற் படுவோன் காண்க

 

 

பிப்ரவரி 14  புதன்கிழமை

 

ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து

வாணுதற் பெண்ணென வொளித்துஞ் சேண்வயின்

–திருவண்டப்பகுதி (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

 

பிப்ரவரி 15 வியாழக்கிழமை

 

ஆத்த மானார் அயலவர் கூடி

நாத்திகம் பேசி நாத்தழும்பேறினர்

 

பிப்ரவரி 16 வெள்ளிக்கிழமை

உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்

கலாபேதத்த கடுவிடம் எய்தி

 

பிப்ரவரி 17 சனிக்கிழமை

 

ஆடக மதுரை அரசே போற்றி

கூடலிலங்கு குருமணி போற்றி

தென்றில்லை மன்றினுளாடி போற்றி

 

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை

 

ஐயா போற்றி அணுவே போற்றி

சைவா போற்றி தலைவா போற்றி

 

பிப்ரவரி 19 திங்கட்கிழமை

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

மானக் கயிலை மலையாய் போற்றி

 

 

பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை

புலிமுலை புல்வாய்க்கருளினை போற்றி

 

பிப்ரவரி 21  புதன்கிழமை

மூவா நான்மறை முதல்வா போற்றி

பேராயிரமுடைப் பெம்மான் போற்றி

–போற்றித் திரு அகவல் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

 

 

பிப்ரவரி 22 வியாழக்கிழமை

நாடகத்தாலுன்னடியார்

போனடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான்

மிகப் பெரிதும் விரைகின்றேன்

 

பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை

வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி

ஊனாகி யுயிராகி உண்மையுமாயின்மையுமாய்க்

கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே

 

பிப்ரவரி 24 சனிக்கிழமை

யானே பொய்யென் நெஞ்சும்

பொய்யென் அன்பும் பொய்

யானால் வினையே னழுதா

லுன்னைப் பெறலாமே

 

பிப்ரவரி 25 ஞாயிற்றுக்கிழமை

யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

 

பிப்ரவரி 26 திங்கட்கிழமை

பட்டிமண்டபமேற்றினை யேற்றினை

எட்டினோடிரண்டும் மறியேனையே

 

பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை

சடையுளே கங்கை வைத்த

சங்கரா போற்றி போற்றி

 

பிப்ரவரி 28  புதன்கிழமை

பிழைத்தவை பொறுக்கையெல்லாம்

பெரியவர் கடமை போற்றி

–திருச்சதகம் (மாணிக்க வாசகர், திருவாசகம்)

–subham–