வெற்றி தரும் கோமேதகம்! (Post No.7395)

Written by S Nagarajan

Date – 29th December 2019

Post No.7395

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

மாலைமலர் 28-12-2019 நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை. நவரத்னங்கள் பற்றிய தொடரி இதுவே இறுதிக் கட்டுரை!

வெற்றி தரும் கோமேதகம்!

ச.நாகராஜன்

வெற்றிக்கு ஒரு கல் கோமேதகம்

நவரத்தினங்களுள் தனி இடத்தைப் பெறுவது கோமேதகம்! ஏனெனில் சுகபோக வாழ்வையும் வெற்றியையும் தருவது அது!

வெற்றிக்கான கல்லான கோமேதகத்தை பழங்கால நாகரிகத்தினர் அனைவரும் போற்றி அணிந்தனர். இது கண் திருஷ்டியிலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்றும், பயங்கரமான தீய கனவுகளைப் போக்கும் என்றும் அவர்கள் நம்பினர். இதை அணிந்தால் தோல் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கி விடும் என்பதும் அவர்களது நம்பிக்கை. ஒருவருக்கு அபாயம் வரும் போது இதன் ஒளி மங்கி விடும்; ஆகவே உடனேயே தக்க தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் அவர்கள் நம்பினர்.

இத்தாலியில் இதை விதவைகளின் கல் என்று அழைத்து வந்தனர். ஏனெனில் பெரும்பாலும் கணவனை இழந்த விதவைகளே தங்களின் பெரும் இழப்பால் ஏற்பட்ட சோகத்திலிருந்து மீள கோமேதக நெக்லஸை அணிந்து வந்தனர்; கொண்டை ஊசியிலும் கோமேதகக் கல்லைப் பதித்துப் பயன்படுத்தினர்.

கோமேதகம் அணிவோருக்குக் காதலில் வெற்றி, நம்பிக்கை, விசுவாசம், தம்பதியினரிடம் பரஸ்பர அன்பு, தீக்காயங்களிலிருந்து பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படுகிறது.

ஜோதிட சாத்திரம் கூறும் பலன்கள்

ஜோதிட சாத்திரத்தின் படி சாயா கிரகமான ராகு கிரகத்திற்கு உரியது கோமேதகம். ராகுவைப் போற்றித் துதிக்கும் ராகு அஷ்டோத்தர சத நாமாவளியில் 19வது நாமமாக கோமேதாபரண ப்ரியாய நமஹ என்று கூறப்படுவதால் கோமேதக ஆபரணத்தை அணிந்தவர் ராகு என்பது பெறப்படுகிறது.

ராகு தசை நடக்கும் காலத்திலும் ஒரு ஜாதகத்தில் ராகு தீய பலன்களைக் கொடுக்கும் இடத்தில் இருந்தாலும் கோமேதகத்தை அணிந்தால் கெட்ட பலன்கள் நீங்கும்; நல்ல பலன்கள் ஓங்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு  ராகு கிரகத்திற்கு உரிய கோமேதகம் பரிந்துரைக்கப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள்  கேதுவிற்கு உரியதாக உள்ள வைடூரியம் அணியலாம்.

எண் கணிதத்தின் படி ராகுவின் எண் 4 ஆகும். நான்கு எண்ணில் பிறந்தவர்களும் (பிறந்த தேதி 2,13, 22 ஆகிய தேதிகள்) கூட்டு எண் நான்கைக் கொண்டிருப்பவர்களும் கோமேதகத்தை அணியலாம்.இதனால் காரியசித்தியும் தெய்வ பலமும் கை கூடும்.

தெய்வீகக் கல் கோமேதகம்

தேவி பாகவதம் தேவியின் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள பிரகாரங்களை வர்ணிக்கிறது. இதில் கோமேதக பிரகாரம் பத்மராக பிரகாரத்திற்கு மேல் செம்பருத்தி மலர் போல பிரகாசித்து ஒளிர்வதாகக் கூறப்படுகிறது. இங்கு 32 சக்திகள் நானாவித சஸ்திரங்களைக் கொண்டு கோமேதக மணிகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டவாறு இருக்கின்றனர்.

சிலப்பதிகாரம் ஊர் காண் காதையில் (190ஆம் வரியில்) ‘இரு வேறு உருவவும்’ என்று கூறப்படுகிறது. ஆகவே இரு வண்ணமுடைய கோமேதகமே சிறந்தது என்பது வலியுறுத்தப்படுகிறது.

ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்

பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை:-

மஞ்சளுடனான சிவப்பு வண்ணம் கலந்த கல் இது.

இது கோமேதகம் என ஏன் அழைக்கப்படுகிறதெனில் இது கோமயம் போல இருப்பதால் தான்.

நல்ல ஒரு கோமேதகம் என்பது : 1) பசுவின் தெளிந்த சிறுநீரின் வண்ணத்தை ஒத்திருக்கும் 2) ஒளி ஊடுருவதாய் இருக்கும் 3) எண்ணெய் பூச்சு பூசப்பட்டது போல இருக்கும் 4) சமனான பரப்புடன் இருக்கும் 5) கனமாக இருக்கும் 6) அடுக்கு அடுக்காய் (layers) இருக்காது 7) வழவழப்பாய் இருக்கும் 8) ஒளி பிரகாசிப்பதாய் இருக்கும்.

விலக்கத்தக்க கோமேதகம் என்பது 1) இரண்டாவது வண்ணம் இல்லாமல் ஒரு வண்ணத்துடன் மட்டுமே இருக்கும் 2) இலேசானதாய் இருக்கும் 3) கரடுமுரடாய் இருக்கும் 4) தட்டையாய் இருக்கும் 5) ஒரு அடுக்கு இருப்பது போல இருக்கும் 6) ஒளி இருக்காது 7) மஞ்சள் நிறக் கண்ணாடியைப் பார்ப்பது போல இருக்கும்.

ஒவ்வொரு ரத்தினமும் தனக்கென உள்ள பிரதானமான வண்ணத்தைத் தவிர ஒரு உப வண்ணத்தையும் கொண்டிருக்கும். இந்த வண்ணம் 1) வெள்ளை 2) சிவப்பு 3) மஞ்சள் 4)கறுப்பு ஆகிய வண்ணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட கல்லும் கோமேதகமே.

பிரதானமாக உள்ள மஞ்சள் வண்ணத்துடன் மேலே கூறப்பட்ட எந்த வண்ணத்தையும் நல்ல கோமேதகம் கொண்டிருக்கலாம்.

மிக மிகச் சிறந்த கோமேதகம் என்பது கனமாயும், அதிக பிரகாசத்துடனும், எண்ணெய் பூசப்பட்டது போன்ற தோற்றத்துடனும், மிருதுவாகவும், ஒளி ஊடுருவதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட சிறந்த கோமேதகம், அதை அணிபவருக்கு செல்வத்தைத் தரும்; அதிர்ஷ்டத்தையும் தரும்.

அதிக பித்தம் இருந்தால் பித்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கும்.

ரத்த சோகையை நீக்கும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதிக பசி எடுக்க வைக்கும். தோலுக்கு நலம் பயக்கும். ஆயுளை அதிகரிக்கும்.

நல்ல கோமேதகம் இமயமலையில் சிந்து நதி உள்ள சிந்து மாநிலத்திலும் சிந்து சாகரத்திலும் கிடைக்கும். நல்ல கோமேதகம் தானா என்பதை நெருப்பை மூட்டித் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது கோமேதகத்தை நெருப்பில் வாட்டினால் அதன் நிறம் மாறிக் கொண்டே இருக்கும். இதை வைத்து அறிந்து கொள்ளலாம்.

இப்படி ரஸ ஜல நிதி கூறுவதைத் தவிர ஏனைய பல நூல்களும் கோமேதகத்தின் அருமை பெருமைகளை விளக்குகின்றன.

பதார்த்த குண சிந்தாமணி என்னும் நூல் கோமேதகம் அணிந்தால் பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும், மலக் கட்டறுக்கும், குஷ்ட நோய்கள் நீங்கும், வாத நோய் நீங்கும், உடல் ஒளி ஓங்கும் என்று கூறுகிறது.

அறிவியல் தகவல்கள்

இது சிலிகேட் கனிம வகையைச் சார்ந்ததாகும்.

மோவின் அளவுகோல் படி இதன் கடினத்தன்மை : 6.5 – 7.5

இதன் ஒப்படர்த்தி (Specific Gravity) : 3.1 – 4.3

இதன் இரசாயன  பொது வாய்பாடு : X3Y2(SiO4)3

செயற்கைக் கற்களும் கிடைக்கும் இடங்களும்

கோமேதகத்தில் அரிய பல வகைகள் உண்டு. இவற்றை தொழிலகப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

கோமேதகத்தின் அரிய பல வகைகள் தாய்லாந்து, சீனா, அமெரிக்கா, பிரேஜில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கிடைக்கிறது.

நியூயார்க் மாகாணத்தின் அதிகாரபூர்வமான மாநில ரத்தினம் கார்னெட் (New York State Gemstone : Garnet) ஆகும்!

செயற்கை முறையில் தயாரிக்கப்படும் கார்னெட் உள்ளிட்ட வகைகள் ஏராளமாகத் தயாரிக்கப்படுவதால் இயற்கையாகக் கிடைக்கும் கோமேதகத்தைத் தேர்வு செய்ய விரும்புவோர் கவனத்துடன் தக்க நிபுணர்களை நாடுவது நலம்.

இந்தியாவில் மேற்குப் பகுதியிலும் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கோமேதக தாது ஏராளமாகக் கிடைக்கிறது. ஆனால் பாதுகாப்பற்று இருப்பதாலும் இப்படி ஒரு அரிய வகை ரத்தின தாது இருப்பது அதன் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் இருப்பதாலும் இந்த தாது திருடப்படுவது வருந்தத்தக்க விஷயம்.

பொதுவாகவே ஒரு அரிய வகைக் கல்லையோ அரிய தாதுக்கள் கொண்ட மண்வளத்தையோ உரிமையாகக் கொண்டிருப்பவர் அதன் மாதிரியை (Sample) இதற்கெனவே அமைந்துள்ள ஜெம்மாலஜி சோதனைச்சாலைகளில் சோதனை செய்து என்ன வகை, என்ன விலை பெறும் என்பதைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.

பொதுவாகவே ஒரு நவரத்னக் கல்லை அணியும் போது அதை பசும்பாலில் நனைத்து, பின்னர் தண்ணீரில் அலசி அணிவது மரபு. கல்லுக்குரிய கிழமையன்று அணிவது சிறப்பாகும். மாணிக்கம் – ஞாயிறு; முத்து – திங்கள்; பவளம் – செவ்வாய்; மரகதம் – புதன்; கனக புஷ்பராகம் – வியாழன்; வைரம் – சுக்ரன்; இந்திரநீலம் – சனி என்று இப்படி அணிவது சிறப்பாகும்.

பரம்பரை பரம்பரைச் சொத்தாக வருகின்ற நவரத்னக் கற்கள், மற்றும் மாலைகளை வீட்டின் உள்ளே பெட்டியில் வைத்துப் பூட்டாமல் அதைச் சுத்தம் செய்து துலக்கி, தேவையெனில் சோதனைச்சாலையில் அதன் மதிப்பையும் அரிய தன்மைகளைப் பற்றியும் அறிந்து கொண்டு அவற்றை அணிந்து நல்ல பலன்களைப் பெற்று மகிழலாம்.

முடிவுரை

நவரத்தினங்களைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடருக்கு வாசகர்கள் பெருமளவில் உற்சாக ஆதரவு தந்தனர். குறிப்பாகத் தாய்மார்களும் ஆர்வத்துடன் இவற்றைப் படித்து வந்தனர். வாசக அன்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரைத் தொடரை எழுத ஊக்குவித்த மாலைமலர் சி.இ.ஓ. (C.E.O) திரு ரவீந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் பயன்படக் கூடிய ஒரு தொடர் பற்றிச் சிந்தித்து அதை உங்கள் முன் வழங்கி இருப்பதிலிருந்தே சமுதாயம் மேம்படுவதற்கான கலைகளையும் துறைகளையும் ஊக்குவிக்கும் அவரது பாராட்டப்பட வேண்டிய சமுதாய நோக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட ஆசிரிய குழுவினர் கட்டுரைகளை நல்ல முறையில் வெளியிட ஆர்வத்துடன் உதவியுள்ளனர். மாலைமலர் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

தொலைபேசியில் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டோர் என்னிடம் பேசி விளக்கங்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் உரிய கற்களைப் பெற்று நலமாக வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.

கற்களை அணிந்தவுடன் ஏற்பட்ட நல்ல பலன்களை மகிழ்ச்சியுடன் தொலைபேசி மூலம் பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

நமது பூர்வ ஜென்ம கர்மங்களுக்கு ஏற்ப நல்லவையும் தீயவையும் இப்பிறவியில் அவ்வப்பொழுது நமக்கு அமைகின்றன. ஆனால் தீயவற்றைப் போக்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடவும் இறைவன் அருளியுள்ள வழிகள் மணி, மந்திரம், ஔஷதம்.

இந்த மூன்றுமே உடனுக்குடன் பலன் அளிக்கும் என்பதால் முன்னோர்கள் அரிய பல சாத்திரங்களை வகுத்து நமக்கு வழி காட்டி அருளியுள்ளனர்.

ஏழாம் நூற்றாண்டு நூலான ரஸ ஜல நிதி, தமிழின் பழம் பெரும் காப்பியமான சிலப்பதிகாரம் (அடியார்க்கு நல்லார் உரை), ரத்தின சாஸ்திரம், தேவி பாகவதம், கருட புராணம், சிவ புராணம், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் பதார்த்த குண சிந்தாமணி உள்ளிட்ட நூல்கள் பல அரிய செய்திகளை வழங்குகின்றன.

1930இல் இங்கிலாந்தில் வெளியான Amulets and Superstitions என்ற சிறந்த ஆய்வுப் புத்தகம் சர்.இ.ஏ. வாலிஸ் பட்ஜ் (Sir E.A. Wallis Budge) அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூல் பழம் பெரும் நாகரிகத்தினர் மணிகளை எப்படிப் பயன்படுத்தினர் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது.

1905ஆம் ஆண்டு வெளியான Precious Stones என்ற புத்தகம் நவரத்தினங்களைப் பற்றிய அரிய செய்திகளைத் தருகிறது. இதை எழுதியவர் ஏ.ஹெச்.சர்ச் (A.H.Church F.R.S) என்பவர். அறிவியல் பூர்வமாகவும் கலை நோக்குடனும் விலை மதிப்பற்ற அபூர்வ மணிகளைப் பற்றி இவர் விளக்கி எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட இன்னும் பல நூல்களையும் ஆராய்ந்து ஒப்பு நோக்கி நவரத்தினங்களைப் பற்றிய செய்திகளை வழங்க முடிந்தது. இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

காலம் கடந்து நின்று எப்போதும் ஜொலிக்கும் மணிகள் மனித குலத்தின் பொக்கிஷம்!

அனைவரது உள்ளத்திலும் இல்லத்திம் மகிழ்ச்சி தர வல்ல மணிகளை வணங்கிப் போற்றி விடை பெறுகிறேன்.

நன்றி! வணக்கம் !!

அன்பன்

ச.நாகராஜன், பெங்களூரு 19-12-2019

அஸ்திகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம்! (Post No.7386)

Written by london swaminathan

Date – 26th December 2019

Post No.7386

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

அஸ்தி கரைப்பதில் உள்ள விநோதங்கள் பற்றி 17-5-1992ல் தினமணியில் எழுதினேன்.

இந்தியாவிலேயே பல தலைவர்கள் தங்கள் அஸ்தியை என்ன செய்ய வேண்டும் என்று  சொன்னதை எல்லோரும் அறிவர்.அத்தலைவர்களின் அஸ்தி கலசங்கள் ஊர் ஊராக ஊர்வலம் விடப்பட்டதையும் அறிவர் . புத்தரின் அஸ்திக்கும் எலும்புக்கும், பல்லுக்கும் போட்டா போட்டி காட்டா குஸ்தி நடந்ததையும் படித்திருக்கிறோம். நேருஜியின் அஸ்தி அவரது விருப்பப்படி நாடு முழுதும் விமானத்திலிருந்து தூவப்பட்டது .

காந்திஜிதியின் அஸ்தி நாடு முழுதும் புனித நதிகளில் கரைக்கப்பட்டது.

அஸ்தி என்பது  இறந்தவரின் உடலை எரித்த பின்னர் கிடைக்கும் சாம்பலும்  எலும்பும் ஆகும்.

இந்தப் பின்னணியில் இந்தக் கட்டுரையும் இன்று  வரை சுவை குன்றவில்லை.

Tags – அஸ்தி , கரைத்தல், விநோதங்கள்

New Delhi: Prime Minister Narendra Modi after paying tribute to the ashes (‘Asthi Kalash’) of former prime minister Atal Bihari Vajpayee, before their distribution to all BJP state presidents for immersion in their respective states, at the party headquarters in New Delhi on Wednesday, Aug. 22, 2018. BJP President Amit Shah, party leaders Rajnath Singh, Sushma Swaraj and Vajpayee’s foster son-in-law Ranjan Bhattacharya are also seen. (PTI Photo/Atul Yadav) (PTI8_22_2018_000068B)
train with Gandhi’s ash coming to Kanpur

உதவிக் குறிப்புகள்! – 2 (Post No.7383)

Written by  S Nagarajan

Date – 26th December 2019

Post No.7383

contact – swami_48@yahoo.com

pictures are taken from various sources; thanks.

wrஉதவிக் குறிப்புகள் 1 வெளியான தேதி : 21-12-2019  கட்டுரை எண் : 7365

உதவிக் குறிப்புகள்! – 2

ச.நாகராஜன்

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக நான் படித்து வந்த பல நல்ல புத்தகங்களில் முக்கிய பகுதிகளை ஒரு நோட்புக்கில் தனியே எழுதி வைத்துக் கொள்வது என் பழக்கம். அவற்றில் சில குறிப்புகளை இங்கே தொடர்ந்து பார்க்கலாம்.

HELPFUL HINTS

குறிப்பு எண் 3 :

From the book : How to Win Friends & Influence People

By Dale Carnegie  (First Edition October 1936)

Part I – Fundamental Techniques in handling people   :   P 70

1) Develop a deep, driving desire to master the principles of human relations.

2) Read each chapter twice before going on to the next one.

3) As you read, stop frequently to ask yourself how you can apply each suggestion.

4) underscore each important idea.

5) Review this book each month.

6) Apply these principles at every opportunity. Use this volume as a working handbook to help you solve your daily problems.

7) Make a lively game out of your learning by offering some friend a dime or a dollar every time he catches you violating one of these principles.

8) Check up each week on the progress you are making. Ask yourself what mistakes you have made, what improvement, what lessons you have learned for the future.

9) Keep a diary in the back of this book showing how and when you have applied these principles.

Part II Six ways to make people like you P 133

  1. Become genuinely interested in other people.
  2. Smile
  3. Remember that a man’s name is to him the sweetest and most important sound in the English language.
  4. Be a good listener. Encourage others to talk about themselves.
  5. Talk in terms of the other man’s interest.
  6. Make the other person feel important – and do it sincerely.

Part III Twele ways to win people to your way of thinking  P 218

  1. The only way to get the best of an argument is to avoid it.
  2. Show respect for the other man’s opinions. Never tell a man he is wrong.
  3. If you are wrong, admit it quickly and emphatically.
  4. Begin in a friendly way.
  5. Get the other person saying “yes,yes” immediately.
  6. Let the other man do a great deal of the talking.
  7. Let the other man feel that the idea is his.
  8. Try honestly to see things from the other person’s point of view.
  9. Be sympathetic with the other person’s ideas and desires.
  10. Appeal to other nobler motives.
  11. Dramatize your ideas.
  12. Throw down a challenge.

Part IV : Nine ways to change people without giving offense or arousing resentment

P 253

  1. Begin with praise and honest appreciation.
  2. Call attention to people’s mistakes indirectly.
  3. Talk about your own mistakes before criticizing the other person.
  4. Ask questions instead of giving direct orders.
  5. Let the other man save his face.
  6. Praise the slightest improvement and praise every improvement. Be “hearty in your approbation and lavish in your praise.”
  7. Give other person a fine reputation to live up to.
  8. Use encouragement. Make the fault seem easy to correct.
  9. Make the other person happy about doing the thing you suggest.

Part VI : Seven Rules for making your home life happier P 299

  1. Don’t nag.
  2. Don’t try to make your partner over.
  3. Don’t criticize.
  4. Give honest appreciation.
  5. Pay little attentions.
  6. Be courteous.
  7. Read a good book on the sexual side of marriage.

எனது குறிப்பு : டேல் கார்னீகியின் இந்தப் புத்தகம் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ள புத்தகமாகும். இன்றும் இது விரும்பிப் படிக்கப்படுகிறது. ஒவ்வொரு யோசனையும் அதைக் கடைப்பிடிப்போருக்கு அபார பலனைத் தரும் ஒன்றாகும்.

****

கற்பணிக் கோவிலும் எண்கோணமான குளமும் அமைத்த கட்டி முதலி! (Post No.7379)

கற்பணிக் கோவிலும் எண்கோணமான குளமும் அமைத்த கட்டி முதலி! (Post No.7379)

written by S  Nagarajan

Post No.7379

Date uploaded in London- 25-12-2019

contact – swami_48@yahoo.com

pictures are used from various sources; thanks.

ச.நாகராஜன்

தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் உலகோர் வியக்கும் வண்ணம் அமைக்கப்பட்டவை. சில சிற்பங்களைப் பார்க்கும் போது சிற்பிகளே வியந்து போற்றும் கோவில்கள் பல உள்ளன.

சிற்ப வேலைகளைச் செய்ய முன் வரும் சிற்பிகள் இந்தக் கோவில்களைத் தவிர வேறு எந்தக் கோவில் சிற்பமானாலும் செய்வோம் என்று சொல்லும்படியான கோவில்களில் தாரமங்கலம் – தாடிக்கொம்பு கோவில்களில் உள்ள சிற்பங்கள் அற்புதமானவை.

தாரமங்கலம் கோவிலின் முன் மண்டபத்தில் ஒரு தூணில் ராமரும் இன்னொரு தூணில் வாலியும் செதுக்கப்பட்டிருக்கின்றனர்.

வாலியின் சிலை அருகில் சென்று கண்ணைப் பொருத்திப் பார்த்தால் ராமர் தெரிவதில்லை.

ராமரின் சிலையின் அருகில் சென்று கண்ணைப் பொருத்திப் பார்த்தால் வாலி தெரிகிறான்.

மறைந்திருந்து ராமர் வாலியை வதம் செய்தது அனைவரும் அறிந்த ஒன்றே! அதை சிற்பக் கலையில் நிஜமாகவே வடித்துக் காட்டி இருப்பதை அதிசயத்துடன் இன்றும் பார்க்க முடிகிறது.

இதே போலத் திருச்செங்கோட்டிலும் (திருநண்ணா), பவானியிலும் பல கற்பணிகள் நடந்துள்ளன. அங்கு பல கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருவாபரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.அர்ச்சர்கர்களுக்குத் திருமடம் அளிக்கப்பட்டுள்ளது. வேதாகம பாடசாலை வைத்துக் கல்வி கற்பித்ததோடு அதில நன்கு படித்துத் தேறியவர்களுக்கு விசேஷ பரிசுகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன; திருவிழாவும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆற்றூர், அந்தியூர் ஆகிய இடங்களில் கோட்டைகள், ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வணங்காமுடிக் கட்டி முதலி, சீயாலகட்டி முதலி, இம்முடிக்கட்டி முதலி என பல தலைமுறையினர் தாரமங்கலம் முதலிய பல இடங்களைக் கட்டி ஆண்டிருக்கிறார்கள்.

பாண்டியர், நாயக்கர்,மைசூர் அரசர்கள் காலத்தில் இவர்கள் வீரத்துடன் திகழ்ந்து போற்றப்பட்டிருக்கின்றனர்.

வேளாள வகுப்பினரின் திருப்பணி பற்றி திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை, சேலம் மானுவல் (Salem Manual), கெஜட், கோயமுத்தூர் மானுவல் ஆகியவற்றில் அவர்களது சரித்திரத்தைப் பார்க்கலாம்.

அவர்கள் பற்றிய கற்சாசனங்களும் கூட வெவ்வேறு இடங்களில் உள்ளன.

இப்படிப்பட்ட அரிய வீரர்களுள் கட்டி முதலியும் ஒருவர்.

கொங்கு மண்டல சதகம் தனது 74ஆம் பாடலில் அவரைப் போற்றிப் புகழ்கிறது.

பாடல் இதோ:-

கற்றார் வியப்புறு கற்பணிக் கோயில் கமலநன் னீர்

வற்றா துயரட்டக் கோணக் குளமும் வகுத்ததன்றிச்

சுற்றார் சதுரங்கம் வில்கயல் வேங்கை தொடர் கொடிகள்

மற்றார்க் கிலையெனப் பெறுகட்டி யுங்கொங்கு மண்டலமே

                                                    -கொங்குமண்டல சதகம் பாடல் 74

பாடலின் பொருள் :- சிற்ப நூல் வல்லுநர்கள் வியப்புறும் வண்ணம் கற்பணிக் கோவிலும் எண்கோண வடிவில் குளமும் செய்ததோடு மட்டுமன்றி, சதுரங்கம், வில், மீன், புலி ஆகிய விருதுக் கொடிகளையும் மற்றவர்க்கு இல்லை என்னும்படியாக, சிறப்பாகக் கொண்ட கட்டி முதலியும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவரே என்பதாகும்.

***

பர்மா,மலேயாவில் சம்ஸ்கிருதம் (Post No.7377)

பர்மா,மலேயாவில் சம்ஸ்கிருதம் (Post No.7377)

Written by LONDON SWAINATHAN

Post no. 7377

Date 24 December 2019

Uploaded from London

Pictures are taken from various sources; thanks

வியட்நாமில் வியத்தகு சம்ஸ்கிருத அறிவு -2

பழங்கால மொழிகளான சம்ஸ்கிருதம், தமிழ், கிரேக்கம், லத்தின், சீனம் ,எபிரேயம்(ஹீப்ரூ ) ஆகியவற்றில் ஸம்ஸ்க்ருதத்தில்தான் இலக்கியம் அதிகம். அதன் பரப்பளவும் அதிகம். ஸிரியா , துருக்கி, மங்கோலியா, மத்திய ஆசியா, இந்தியா, ஹென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் சம்ஸ்கிருத மொழிக்கு கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் எண்ணிக்கையில் சுமேரிய மொழி கல்வெட்டுகளே அதிகம். அவை கியூனிபார்ம் லிபியில் எழுதப்பட்டு களிமண் பலகைகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

நேற்று கம்போடியாவில் சம்ஸ்கிருத கல்வெட்டு இலக்கியம் அடைந்த உன்னத நிலையைக் கண்டோம். உலகில் கல்வெட்டுகளிலும் பெரிய இலக்கியம் படைத்த மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. எகிப்தில் சித்திர எழுத்துக்களிலும், சுமேரியாவில் களிமண் பலகை கியூனிபார்ம் எழுத்துக்களிலும் இலக்கியம் உண்டு.கிரிஸ் என்னும் கிரேக்க நாட்டில் கி.மு. 800-க்குப்பின்னர் இலக்கியம் உண்டு. தமிழக கல்வெட்டுகளில் எட்டாம் நூற்றாண்டு நந்திவர்மன் திருவெள்ளரைப் பாடல் கல்வெட்டு, பின்னர் மெய்க்கீர்த்தி பாடல் கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆனால் கம்போடியாவில் கிடைத்த கவிதை அளவுக்கு எங்குமில்லை.

கம்போடியா சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் ராமாயணம் ,மஹாபாரதம், புராண , பவுத்த, சமண, தத்துவ நுல்களைக் குறிப்பிடுகின்றன. மநுவின் சட்ட புஸ்தகத்தைச சொல்லிவிட்டு ஒரு முழு ஸ்லோகத்தையும் ஒரு கல்வெட்டு மேற்கோள் காட்டுகிறது.

வாட் திபேதி கல்வெட்டில் (எண் .78), நீண்ட சம்ஸ்கிருத சொற்றோ டர்கள் , அதியுக்தி (மிகைப்படக் கூறல் ), அனுபிராச (ஒரே வரியில் அசைச் சொற்கள் மீண்டும் வருதல்) ஆகியவற்றைக் காணலாம். இது கௌட பாணி எனப்படும்.

கம்போடிய கல்வெட்டு இலக்கியம் சம்ஸ்கிருத இலக்கியத்தில் ஒரு ஒப்பற்ற அத்தியாயம் ஆகும். சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இரண்டாம் ஜெயவர்மன், யசோ வர்மன் கல்வெட்டுகள் உன்னதமானவை. இதே போல சம்பா என்னும் வியட்நாம் தேசத்தில் பத்ரவர்மன், ஏழாம் ஜெய இந்திரவர்மன் கல்வெட்டுகளை பார்க்கவும்.

மூன்றாம் இந்திரவர்மனின் வியட்நாம் கல்வெட்டு அவன் அறிந்த சாஸ்திரங்கள் பற்றிப் பகர்வதைக் பார்ப்போம் :-

மீமாம்ச ஷட் தர்க்க ஜினேந்திர சூர்மிஸ்

ச காசிகா வ்யாகரநோதக  -அவ் காகாஹா

ஆக்யான சைவோத்தர கல்ப மீனாஹா

பதிஷ்ட ஏதவ்ஸ்  இதி சக்தவீணாம்

பொருள்

ஒரு மீன் தண்ணீரில்  எவ்வளவு சுலபமாக நீந்துமோ அவ்வளவு சுலபமாக மன்னன் நீந்திக்  கரைகண்ட  விஷயங்கள் — பவுத்த தர்மம், பாணினியின் இலக்கணம், காசிகா உரையுடன், ஆக்யானம், சைவர்களின் உத்தர க ல்பம், மீமாம்சம் முதலிய அறுவகை தத்வ தரிசனங்கள் . இது எல்லாம் கி.பி.918-ல் ஆடசி புரிந்த இந்திரவர்மன் பற்றியது. தென்கிழக்காசிய நாடுகள் எல்லாவற்றிலும் அரசாங்க மொழி சம்ஸ்கிருதமாக இருந்ததை நூ ற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

மலாயாவில்

மலேயாவில் கெடா என்னும் கடாரத்தில் களிமண் பலகைப்  பொறிப்பில் மஹாயான புத்த மத ஸ்லோகங்கள் மூன்று, சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இவைகளின் மூல நூல் சம்ஸ்கிருதத்தில் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு சுலோகங்கள் சீன மொழிபெயர்ப்பில் கிடைத்தன.

சுங்கை பாடுவில் கிடைத்த துர்கா, சிவன், நந்தி சிலைகள் அங்கு சைவ சமயம் தழைத்தோங்கியதைக் காட்டுகிறது.

மலாயாவில் நாலாம் நூற்றாண்டிலேயே இந்து மதம் பரவியது அங்குள்ள குப்தர் கால சிலைகளிலிருந்து தெரிகிறது. மத்தியப் பகுதியில் 7, வடக்கு வெல்லஸ்லி மாகாணத்தில் 4, லிகோர் பகுதியில் 5, சய்யாவில் 2, கடாரம், தக்கோலத்தில் ஒவ்வொன்று என சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்தன. இவை துண்டு துண்டாக இருப்பதால் அதிக விஷயத்தைச் சொல்லாவிடினும் சம்ஸ்கிருத மொழியின் தாக்கத்தையும் வீச்சையும் காட்டும்.

கடாரம், பெராக் ஆகிய இடங்களில் இந்துக் கடவுள் சிலைகள் கிடைத்தன. மிக முக்கியக்கண்டுபிடிப்பு பெரா க்கில் கண்ட கார்னிலியன் (Cornelian Seal) முத்திரை ஆகும். இதில் ஐந்தாம் நூற்றாண்டு எழுத்தமைதியில் விஷ்ணுவர்மன் என்ற அரசனின் பெயர் உளது.

பர்மாவில்

பர்மாவின் தற்போதைய பெயர் மியன்மார் .இங்கு அசோகர் புத்த மதத்தைப் பரப்பியதாக ஒரு நம்பிக்கை உளது. அதை புத்தகோஷரும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதிவைத்துள்ளார். ஆனால் இதற்கு இலக்கியச்  சான்றுகளைத் தவிர வேறு சான்றுகள் கிடைக்கவில்லை.

பர்மாவில் பாகான் (Pagan or Bagan) நகரம் கி.பி.849ல் ஸ்தாபிக்கப்பட்டதாக வரலாறு கூறும்.இதன் அப்போதைய பெயர் அரிமர்தனபுரம். அநிருத்தன்/ அனவ்ரதன் என்ற மன்னன் 1044-ல் பதவி ஏற்ற பின்னர் பர்மாவின் ஆதிக்கம் வலுத்தது. அவன் அரக்கன் பிரதேசத்தை வென்றான். இந்தியாவில் வங்கம் வரை ஆதிக்கத்தைப் பரப்பினான். அவனது ஆடசியில் புத்த மதம் பரவியது. அவன் இந்தியாவின் வைசாலி பிரதேச இளவரசியை மணந்தான். அவர்களின் புத்திரன் கியான் சித்த/ ஞான சித்தன் பதவி ஏற்றான் . அவனுடைய மகளை வங்காள இளவரசன் பட்டகேர காதலித்து அது சோகக்கதையாக முடிந்தது இந்தக் கதை பர்மாவில் நாடகம், கவிதை, காவ்யம் என  மலர்ந்தது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு இந்தியாவுடன் நல்லுறவு நீடித்தது. 1271 வாக்கில் குப்லாய்கானின் மங்கோலிய படைகள் பர்மாவை ரத்தக்களரியில்  மிதக்கவிட்டது

இந்திய இலக்கியத்தில் பர்மா முதல் சுமத்ரா வரையான பகுதியை சுவர்ண பூமி என்று வருணித்துள்ளனர்.

பர்மாவில் மெய் சேத்தி (MYAZEDI INSCRIPTION)

 என்னும் இடத்தில் அதிசயமான விநோதமான 4 மொழிக்கல்வெட்டு இருக்கிறது. இந்தியாவில் குஜாராத்தில் கிர்னார் மலையில் அசோகன், ருத்ரதாமன் , ஸ்கந்த குப்தன் கல்வெட்டுகள் இருப்பது போன்றது இது. ஆனால் கிர்னார் குன்று 800 ஆண்டு கால வரலாற்றைக் கூறும். இதுவோ ஒரே வரலாற்றைக் கூறும் .

இதில் பாலி மொழிப பகுதியில் சம்ஸ்கிருதப் பெயர்கள் உள . த்ரி புவன ஆதித்ய மஹாராஜா, அவனது மனைவி லோகவாதன்சா தேவி, அவர்களுடைய மகன் யாழ குமாரன் ஆகிய பெயர்கள் இருக்கின்றன. யாழ குமாரன், தங்க புத்தர் தானம் செய்த விஷயம் இதில் இருக்கிறது.

மெய்சேதி கல்வெட்டின் காலம் கி.பி.1113.

இந்த வினோதமான, அதிசயமான நான்கு மொழிக் கல்வெட்டில்

பாலி மொழியில் 41 வரிகளும்

பர்மிய மொழியில் 39 வரிகளும்

மோன் மொழியில் 33 வரிகளும்

பியூ  மொழியில் 26 வரிகளும் இருக்கின்றன.கிட்டத்தட்ட ரோசட்டா ஸ்டோன் (Rosetta Stone) போன்றது.

பர்மாவின்  சாவலுமின் (SAWLUMIN INSCRPTION)

 ( கல்வெட்டும் சுவையானது. இதில்  சம்ஸ்கிருத வரிகள் உள்பட 5 மொழிகள் உள்ளன.இது வெவ்வேறு பகுதிகளில் துண்டு துண்டாகக் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது ஒட்டிவைக்கப்பட்டுள்ளன.கடைசி பகுதி 2013ல் தான் கிடைத்தது. பாலி , சம்ஸ்கிருதம், பர்மிய, மோன் , பியூ மொழிகளில் வாசககங்கள் காணப்படுகின்றன. இது  சாவ்  லு என்ற மன்னன் பற்றியது. காலம் கிபி.1052

—subham—

குத்துச் சண்டை மன்னன் (Post No.7371)

குத்துச் சண்டை மன்னன் (Post No.7371)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 22 December 2019

Time in London – 13-59

Post No. 7371

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நா ன் 27 ஆண்டுகளுக்கு முன்னர்  தினமணி யில் குத்துச் சண்டை

வீரர் முகமது அலி பற்றி எழுதிய கட்டுரையை இணைத்துள்ளேன்.

கட்டுரை வெளியான தேதி   – 23 பிப்ரவரி 1992.

அவர் பிறந்த தேதி – 17 ஜனவரி 1942

அவர் இறந்த தேதி – 3 ஜூன் 2016

NEW YORK, USA – CIRCA 2016: A postage stamp printed in Togo showing Muhammad Ali, circa 2014

இசைபட வாழ வைக்கும் வைடூரியம்! (Post No.7369)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 22 December 2019

Time in London – 6-33 am

Post No. 7369

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

21-12-2019 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

ச.நாகராஜன்

இசைபட வாழ வைக்கும் வைடூரியம்

நீங்கள் ஒரு இசைக் கலைஞரா, பேச்சாளரா, கல்லூரியிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்ப்பவரா, உங்கள் சொல்லை மற்றவர் மதித்து நடக்க வேண்டிய தலைமை இடத்தில் இருப்பவரா, உங்களுக்கெனவே இருக்கிறது வைடூரியம் என்னும் அபூர்வ ரத்தினம். நவ ரத்தினங்களுள் ஒன்றான இதை ஆங்கிலத்தில் கேட்ஸ் ஐ – (Cat’s Eye) என அழைக்கின்றனர். தோன்றில் புகழொடு தோன்றுக என்று ஆணையிட்ட வள்ளுவர் ஈதல் இசைபட வாழ்தல் -அதாவது புகழுடன் வாழ்தல் – உயிருக்கு ஊதியம் என்ற ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

குரல் வளம் சிறக்கவும் இசைபட – புகழுடன் – வாழவும் பெரிதும் உதவுவது வைடூரியம்!

இலக்கியம் புகழும் வைடூரியம்

பழைய காலத்திலிருந்தே அனைத்து நாகரிக மக்களும் கொண்டாடிய கல் வைடூரியம்.

செய்வினை, மந்திர சக்தி, மரணம் ஆகியவற்றிலிருந்து இது ஒருவரை காப்பாற்ற வல்லது என்று பழைய நாகரிகத்தினர் பெரிதும் நம்பினர். அராபியர்களோ பெரும் யுத்த களத்தில் இதை அணிந்தால் மறைந்து இருந்து மாயாவியாகப் போர் புரிய முடியும் என்று நம்பினர்.

சிலப்பதிகாரத்தில், ஊர் காண் காதையில் “தீதறுக் கதிரொளி தெள் மட்டு உருவவும்” என்று குறிப்பிடப்படும் வரியினால் (வரி 189) ‘குற்றமற்ற கதிரவனின் ஒளி போலவும் தெளிந்த தேன் துளி எனச் சொல்வதற்கு ஒத்த உருவமும் உடையது வைடூரியம்’ என்பது தெரிய வருகிறது.

இராமாயணத்தில் அயோத்தி நகரமும் இலங்கையும் வைடூரியக் கற்களினால் ஜொலிப்பது பல இடங்களில் அழகுற வர்ணிக்கப்பட்டுள்ளது.

ரஸ ஜல நிதி தரும் சுவையான செய்திகள்

வைடூரியம் பற்றி மிகப் பெரும் பண்டைய நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை : –

இந்தக் கல் காம-பூதி நாட்டின் எல்லையில் உள்ள மிக உயரமுடைய மலையான விதுர மலையில் தோண்டி எடுக்கப்படுகிறது. (காம-பூதி என்பதைக் கம்போடியா என அறிஞர்கள் ஆய்வு செய்து சொல்கின்றனர்). இந்தக் கல்லின் உள்ளே பார்த்தால் ஊஞ்சலாடும், கழுத்தைச் சுற்றி அணியும் துணி போன்ற குறி தெரியும்!

வைடூரியத்தின் வகைகள்

இந்தக் கல் மூன்று வகையாக இருக்கிறது. 1) மஞ்சளுடன் கறுப்பு வண்ணம் கலந்திருப்பது 2) சிவப்புடன் நீல வண்ணம் கலந்திருப்பது 3) வெள்ளையுடன் கறுப்பு வண்ணம் கலந்திருப்பது

வைடூரியம் மூன்று விதங்களில் கிடைக்கும் 1) பச்சை மூங்கில் இலை வண்ணத்துடன் இருப்பது 2) மயிலின் கழுத்தில் ஜொலிக்கும் வண்ணத்துடன் இருப்பது 3) பூனையின் கண்ணில் இருக்கும் கபில வண்ணம் போல இருப்பது.

இந்த அனைத்து வகைகளிலும் சிறந்த வைடூரியம் என்று கூறப்படுவதன் குணாதிசயங்கள் இவை :- கனமாக இருப்பது, வழ்வழுப்புடன் இருப்பது, பொதுவான குறைகளான கோடு, கீறல், பள்ளம். புள்ளி போன்றவை இல்லாமல் இருப்பது (முந்தைய பல ரத்தினங்களுக்காக சொல்லப்பட்ட குறைகள் இருக்கக் கூடாது),ஒளி ஊடுருவிப் பிரகாசிப்பது ஆகியவை கொண்ட கற்களை அணியலாம்.

கறுப்பு வண்ணத்துடன் இருப்பது, நீர் வண்ணம் கொண்டது, தொப்பி வடிவம் கொண்டது, இலேசானது, கரடுமுரடாக இருப்பது, சிவப்பு வண்ணத்துடன் கூடிய, ஊஞ்சலாடும் கழுத்தைச் சுற்றி அணியும் துணி போன்ற தோற்றத்துடன் இருப்பது ஆகியவை விலக்கப்பட வேண்டியவையாகும்.

நல்ல ஒரு வைடூரியத்தை அணிந்தால்,

ரத்தக்கசிவு, ரத்தப்போக்கு நீங்கும்,

அறிவு மேம்படும்,

ஆயுள் நீடிக்கும்,

வலிமை கூடும்,

பித்தத்தினால் ஏற்படும் அனைத்து வியாதிகளும் நீங்கும்,

ஜீரண சக்தி கூடும்,

மலம் இளகி நீங்கும்.

ஒரு நல்ல வைடூரியத்தை எப்படிக் காண்பது எனில் அதை உரைகல்லில் வைத்து உரசிப்பார்த்தால் அது ஒளி விட்டுப் பிரகாசிக்கும்.

இப்படிப்பட்ட அரிய செய்திகளை ரஸ ஜல நிதி மூலமாக அறிகிறோம்!

கேட்ஸ் ஐ என்ற வார்த்தை எப்படி வந்தது?

க்ரைசோபெரில் (Chrysoberyl) என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்தக் கல்லின் நடுவே ஒளியைப் பாய்ச்சினால் உள்ளே பூனையின் கண்ணைப் போல இருக்கும் வடிவைக் காணலாம். அதனால் தான் இது கேட்ஸ் ஐ என்ற பெயரைப் பெற்றது.  கேட்டோயர் (chatoyer) என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்தது கேட்ஸ் ஐ என்ற வார்த்தை.

ஜோதிட சாத்திரம் கூறும் உண்மைகள்

ஒரு ஜாதகத்தில் கேது தசை நடந்தாலோ அல்லது கேது புக்தி நடந்தாலோ இதை அணிவது நலம் பயக்கும். கேது வைடூரிய ஆபரணத்தை அணிந்தவன் – வைடூர்ய விபுஷண தாரணாயாம் – என்று கேது தியான ஸ்லோகம் கூறுகிறது.

 சாயா கிரகம் எனப்படும் நிழல் கிரகமான இந்தக் கேதுவினால் ஏற்படும் சில தோஷ பலன்களை நீக்க வைடூரியம் அணியலாம்; உடனே தீய பலன்கள் நீங்கி விடும். குறிப்பாக சர்ப்ப கிரக தோஷம் என்ற தோஷத்தால் புத்திர பாக்கியம் தாமதப் படுவோர் இதை அணிந்தால் சீக்கிரமே புத்திர பாக்கியம் கை கூடும்.

வைடூரியத்தில் அதன் நடுவில் இருக்கும் கோடு தான் அதற்கு அழகூட்டுகிறது. இதை ரத்தின சாஸ்திரம் சூத்ரம் என்று அழைக்கிறது. இந்த சூத்ரம் இருபுறமும் முழுவதும் ஓடுவதாக இருக்க வேண்டியது அவசியம். இப்படி அணிந்தால் தைரியம் கூடும்; தெய்வ பலமும் சேரும்.

எண் கணிதத்தில் 7 என்ற எண்ணுக்குரியது வைடூரியம். ஆகவே 7 எண் (7,16,25 ஆகிய தேதிகள்) பிறந்த தேதியாக இருந்தாலோ அல்லது கூட்டு எண் ஏழாக அமைந்தாலோ வைடூரியம் நல்ல பலன்களை அளிக்கும்.

வைடூரியத்திற்கு கேது ரத்னம், சூத்ர மணி என்று வேறு பெயர்களும் உண்டு.

பிரபலங்களின் ஸ்பெஷல்!

இதை மோதிரமாகவோ பதக்கமாகவோ அணியாத பிரபலங்களே இல்லை எனலாம். குறிப்பாக வாக்கு சக்தியை இது கூட்டும், குரல் வளம் ஓங்கும் என்பதால் இசைக் கலைஞர்களும், பேச்சாற்றல் உள்ளவர்களும் இதை அணிகின்றனர்.

ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுவோர் இதை அணிவது வழக்கம். அத்துடன் அபாயகரமான விளையாட்டுக்கள் மற்றும் மலையேறுவது, சூதாடுவது போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு ஆபத்துக்களை விலக்கிப் பாதுகாப்பளிப்பதும் வைடூரியமே. சில அபூர்வமான வைடூரியக் கற்கள் இரு வண்ணங்களைச் சரி பாதியாகக் கொண்டிருக்கும். ஒரு பக்கம் இலேசான வண்ணம் மற்றொரு பக்கம் அடர்த்தியான வண்ணம் கொண்டிருக்கும் இந்த வகைக் கற்களை பால்-தேன் விளைவைக் (Milk and Honey effect) கொண்டிருப்பது என்று கூறுவர்.

அறிவியல் தரும் தகவல்கள்

இதன் ரசாயன சமன்பாடு : BeAl2O4                                   மோ அலகின் படி இதன் கடினத் தன்மை : 8.5                  இதன் ஒப்படர்த்தி (Specific Gravity ) :  3.5 – 3.84

அறிவியல் வளர்ச்சியால் வைடூரியம் செயற்கை முறையிலும் தயாரிக்கப்பட ஆரம்பித்து விட்டது. இது இயற்கையான வைடூரியம் போலவே தோற்றம் அளிக்கும். இயற்கை வைடூரியத்தையும் செயற்கையினாலான சிந்தடிக் வைடூரியத்தையும் அருகருகில் வைத்துப் பார்த்தால் எது இயற்கை, எது செயற்கை என்று இனம் காண்பது மிகவும் கடினம். வெவ்வேறு வண்ணங்களில் கூட செயற்கை வைடூரியம் கிடைக்கிறது. ஆனால் நமக்கு வேண்டிய நல்ல பலன்களுக்காக நாம் நாட வேண்டியது இயற்கையில் கிடைக்கும் வைடூரியக் கற்களை மட்டுமே தான்!

பலனை எதிர்பாராமல் ஃபேஷனுக்காக அணிபவர்கள் சிந்தடிக்கை நாடலாம்.

19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கன்னாட் டியூக் (Duke of Connaught) வைடூரியம் பதித்த மோதிரத்தை நிச்சயதார்த்த மோதிரமாக கொடுத்த போது இது மிகவும் பிரபலமானது.

வைடூரியத்தைப் பற்றிய சுவையான ரோமானியக் கதை ஒன்று உண்டு. வ்ரிணா என்ற ஒரு இளவரசி ரோம் நகரத்தை ஆண்டு வந்தாள். அவளிடம் வைடூரியப் பதக்கம் பதித்த மாலை ஒன்று இருந்தது. 

ஒரு பெரிய யோகி அவளிடம், ஒரு போதும் அந்தப் பதக்கத்தை அவள் அணியாமல் இருக்கக் கூடாது என்றும் மிகவும் மோசமான கால கட்டத்தில அந்தப் பதக்கம் அவளை அந்த நிலையிலிருந்து மீட்கும் என்றும் மிருகங்களுடன் பேசும் சக்தி அப்போது அவளுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு சமயம் மழை பொய்க்கவே நாடெங்கும் பஞ்சம் தலை விரித்தாடியது. இளவரசி ஏழ்மை நிலை அடைந்து வருந்தினாள். அனைத்து செல்வமும் இழந்த நிலையில் செய்வதறியாது அவள் திகைத்த போது  ஓவென அவள் அழ ஆரம்பித்தாள். அப்போது பூனையின் கண் போல கண்கள் கொண்ட ஒரு பல்லி அவள் அருகில் வந்து அவளிடம் பேச ஆரம்பித்தது. “இளவரசியே, அழாதே!  நதியின் வறண்ட கரைப் பகுதிக்கு செல். உனக்குத் தேவையானது அங்கு கிடைக்கும். இழந்த நிலையை நீ மீண்டும் பெறுவாய்” என்றது அது. உடனே வ்ரிணா தன் படை வீரர்களுடன் நதிக் கரையை அடைந்து அங்கு தோண்ட ஆரம்பித்தாள். என்ன ஆச்சரியம்! வைடூரியச் சுரங்கம் ஒன்றை அவள் கண்டாள். ஏராளமான வைடூரியக் கற்களை அவளால் வெட்டி எடுக்க முடிந்தது. அந்தக் கற்கள் மூலமாக இழந்த செல்வம் மீண்டும் வர பெரும் ராணியானாள் அவள். இந்தக் கதை ரோமானிய நாகரிகத்தில் மிகவும் பிரபலமாக சொல்லப்பட்ட கதை.

இதிலிருந்தே இழந்த செல்வத்தை மீண்டும் தரும் வைடூரியத்திற்கு ரோமானியர்கள் எவ்வளவு மதிப்புக் கொடுத்தனர் என்பதை அறியலாம்!

கிடைக்கும் இடங்கள்

இலங்கையின் பல பகுதிகளில் அருமையான வைடூரியம் கிடைக்கிறது.

பிரேஜில், சீனா, தாய்லாந்து, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இப்போது வைடூரியம் கிடைக்கிறது.

இந்தியாவில் திருவனந்தபுரம் மற்றும் மலபார் பகுதிகளிலும், ஒரிஸாவின் சில பகுதிகளிலும் வைடூரியம் கிடைக்கப் பெறுகிறது.

தேவி இருக்குமிடத்தில் வைடூரிய பிரகாரம்

தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தம் பதினொன்றாம் அத்தியாயம் மணித்வீபத்தைப் பற்றி வர்ணிக்கிறது.

மணித்வீபம் என்பது பிரம்ம லோகத்திற்கு மேல் உள்ள உலகம். இதில் தேவி வசிக்கிறாள். அவள் வசிக்குமிடத்தில் உள்ள பிரகாரங்கள் வர்ணிக்கப்படுகையில் வஜ்ர பிரகாரத்திற்கு மேலுள்ள பிரகாரமாக அமைவது வைடூரிய பிரகாரம். இங்குள்ள ராஜ மார்க்கம், வாபி, தடாகம், கால்வாய், மணல் எல்லாமே வைடூரியம் தான்! பிராம்ஹி, மாஹேஸ்வரி,கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதர்களும் வசிக்கும் இடம் இது. இவர்களோடு மஹாலக்ஷ்மியும் இங்கு வாசம் செய்கிறாள். பிரகாரத்தின் துவாரங்களில் திரிமூர்த்திகளுடைய வாகனங்களான அன்னம், கருடன், ரிஷபம் ஆகியவை வெகு ஜாக்கிரதையுடன் (எக்கணத்திலும் புறப்படச்) சித்தமாயிருக்கும்.

இன்னும் பல செய்திகளைத் தரும் இந்த வர்ணனை பிரமிப்பூட்டும் ஒன்று. லக்ஷ்மி வாசம் செய்யும் இடம் வைடூரிய பிரகாரம் என்பதை அறியும் போது செல்வ வளத்தை வைடூரியம் கொடுக்கும் என்ற இரகசியம் பெறப்படுகிறது.

செல்வ வளத்துடன் இசைபட வாழ அனைவரும் வைடூரியத்தை வணங்கி வரவேற்று அணிவோம்!

****

அடுத்த கட்டுரையுடன் இந்த நவரத்தினத் தொடர் நிறைவுறும்.

லண்டன் தேர்த் திருவிழாக்கள் (Post 7368)

லண்டன் தேர்த் திருவிழாக்கள் (Post No.7368)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 21 December 2019

Time in London – 18-39

Post No. 7368

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

லண்டனில் இரண்டு தேர்த் திருவிழாக்கள் என்ற கட்டுரையை 20 செப்டம்பர் 1992ல் தினமணியில் எழுதினேன். அதன் பிறகு ஆண்டு தோறும் எழுதி வருகிறேன் . 2019ல்  நடந்த ஹரே கிருஷ்ணா தேர் பற்றியும் கனக துர்க்கை அம்மன் கோவில், மகாலெட்சுமி கோவில்  தேர்கள்  பற்றியும் எழுதினேன். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்துடன் 20-09-1992 தினமணி கட்டுரையை இணைத்துள்ளேன்.

1992ல் 3 அல்லது 4 தேர்த் திருவிழாக்கள் மட்டுமே நடந்தன . இப்போது 25க்கும் மேலான தமிழக கோவில்கள்

இருப்பதால் இருபதுக்கும் மேலான ரத்த யாத்திரைகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.

உலகம் வியக்கும் கண்டுபிடிப்பு – கிரேக்க நாட்டில் சிந்து சமவெளிக் குரங்கு (Post.7366)

 Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 21 December 2019

Time in London – 8-53 am

Post No. 7366

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

உதவிக் குறிப்புகள்! – 1 (Post No.7365)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 21 December 2019

Time in London – 8-20 am

Post No. 7365

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக நான் படித்து வந்த பல நல்ல புத்தகங்களில் முக்கிய பகுதிகளை ஒரு நோட்புக்கில் தனியே எழுதி வைத்துக் கொள்வது என் பழக்கம்.

நூல்கள் ஒரு புறம் என்னுடன் இன்றும் இருக்கின்றன; என்றாலும் இந்தக் குறிப்புகளைப் படித்தால் நூலை முழுவதும் மீண்டும் படித்தது போல இருக்கும்; அத்துடன் இந்த நோட்டுப்புத்தகங்கள் என் கைவசம் இருப்பதால்.

தேவையான  சமையத்தில் தேவையான பகுதிகளைப் படிப்பதும் சுலபமாக இருந்தது – அன்பர்களுக்கு இதை வழங்குகிறேன்.

குறிப்பு எண் 1:

From the book : How I raised myself from Failure to Success

By Frank Bettger

P 267

Here is my list and the order in which I used them:

  1. Enthusiasm
  2. Order : Self Organisation
  3. Think in terms of other’s interests
  4. Questions
  5. Key Issues
  6. Silence : Listen
  7. Sincerity : deserve confidence
  8. Knowledge of my business
  9. Appreciation and praise
  10. Smile : Happiness
  11. Remember Names and Faces
  12. Service and Prospecting
  13. Closing the sale : Action

எனது குறிப்பு : ஃப்ராங்க் பெட்கர் உலகின் சாதனை படைத்த நம்பர் ஒன் சேல்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த 13 அடிப்படை பட்டியலை வைத்துக் கொண்டு பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் செய்தது போல அவர் வாரம் ஒன்றைத் தினமும் கவனக்குவிப்பு செய்து அதை வளர்த்துக் கொண்டு பயன் பெற்றார் ஃப்ராங்க் பெட்கர்.

வருடத்திற்கு 52 வாரங்களில் நான்கு முறை இந்தப் பட்டியலைக் கடைப்பிடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது அவரது அனுபவம்.

குறிப்பு எண் 2 :

From the book : How I raised myself from Failure to Success

By Frank Bettger

P 269

Franklin’s Thirteen Subjects

(Just as he wrote them down and the order in which he used them:

  1. Temperance : Eat not to dullness. Drink not to elevation.
  2. Silence : Speak not but what may benefit others or yourself; avoid trifling conversation.
  3. Order : Let all your things have their places; let each part of your business have its time.
  4. Resolution : Resolve to perform what you ought, perform without fail what you resolve.
  5. Frugality : Make no expense but to do good to others or yourself ; i.e., waste nothing.
  6. Industry : Lose no time; be always employed in something useful: cut off all unnecessary actions.
  7. Sincerety : Use no hurtful deceit; think innocently and justly, and, if you speak, speak accordingly.
  8. Justice : Wrong none by doing injuries or omitting the benefits that are your duty.
  9. Moderation : Avoid extremes; forbear resenting injuries so much as you think they deserve.
  10. Cleanliness : Tolerate no uncleanliness in body, clothes or habitation.
  11. Tranquility : Be not disturbed at trifles; or at accidents common or unavoidable.
  12. Chastify : Rarely use venery but for health or offspring; never to dullness, weakness or the injury of your own or another’s peace or reputation.
  13. Humility : Imitate Jesus and Socrates.

எனது குறிப்பு : ஃப்ராங்க் பெட்கருக்கு உத்வேகம் ஊட்டியவர் பெஞ்சமின் ஃப்ராங்ளின். அவர் கடைப்பிடித்த மேலே கூறிய 13 குணாதிசயங்களை பெட்கர் தனக்குத் தேவையானது போலச் சற்று மாற்றிக் கொண்டார்.

***