பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் (Post No.4584)

Written by London Swaminathan 

 

Date: 5 JANUARY 2018

 

Time uploaded in London- 8-12 am

 

 

 

Post No. 4584

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் பெயர் வைக்கும் முறை (மநு நீதி நூல்- part 10)-

 

second chapter 149 (2-30)

  1. குழந்தை பிறந்த பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது நாள் தந்தையானவர் பெயர்சூட்டு (நாமதேயம்) வைபவத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது நல்ல நாளில் நல்ல திதியில் முகூர்த்த நாளன்றும் வைக்கலாம்.

 

150.பிராமணர் பெயரில் மங்களத்தையும், க்ஷத்ரியர் பெயரில் பலத்தையும், வைஸ்யர் பெயரில் பொருளையும் (செல்வம்) சூத்திரர் பெயரில் தாழ்வையும் கட்டும் சொற்கள் இருக்க வேண்டும்

 

 

151.பெயரின் இரண்டாவது பகுதி பிராமணர்களுக்கு சந்தோஷத்தைக் காட்டும் சொல்லும் (ஸர்ம), க்ஷத்ரியர்களுக்குப் பாதுகாப்பைக் காட்டும் சொல்லும் (வர்ம), வைஸ்யர்களுக்கு சுப வாழ்க்கை (பூதி) பற்றியும் சூத்திரர் பெயரில் சேவை (தாஸன்) தொடர்பான சொல்லும் இருக்கலாம்.

152.பெண்களுடைய பெயர் எளிதில் உச்சரிக்கத் தக்கதாகவும் சுபச் சொல் உடையதாகவும் , மங்களம் தருவதாகவும், நன்மை தரும் சொல்லாகவும், கெட்ட பொருள் தராததாகவும், உயிர் எழுத்தில் நெடிலில் முடிவதாகவும் இருக்க வேண்டும் (எ.க.கருணா, சீதா, கீதா)

153.குழந்தை பிறந்த நாலாவது மாதத்தில்  வீட்டை விட்டு வெளியே வந்து குழந்தையைச் சூரியனுக்குக் காட்டும் நிகழ்ச்சியும் ஆறாவது மாதத்தில் அன்ன ப்ராஸ்னம் எனப்படும் உணவூட்டும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யலாம்; இது தவிர அந்தந்த குடும்பத்தின் பழக்க வழக்ககங்களுக்கு உரித்தான சடங்குகளையும் மூன்றாவது மாதம் முதல் செய்யலாம்.

 

154.இருபிறப்பாளர் ஜாதிகளில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் முடி இறக்கல் முதல் ஆண்டிலோ மூன்றாவது ஆண்டிலோ செய்யப்பட வேண்டும் என்று வேத விதிகள் சொல்கின்றன. கருவுற்ற காலத்தில் இருந்து எட்டாவது ஆண்டில் பிராமண பையனுக்கும், பதினோராம் வயதில் க்ஷத்ரிய மாணவர்களுக்கும், 12-வது ஆண்டில் வைஸியப் பையனுக்கும் உபநயனம் (பூணூல்) செய்விக்க வேண்டும்

 

  1. பிரம்ம தேஜஸை விரும்பும் பிராமணக் குழந்தைகள் அதை 5 வயதிலும், பலத்தை விரும்பும் க்ஷத்ரியர் ஆறு வயதிலும், தனத்தை விரும்பும் (வணிகத்தில் வெற்றி பெற விரும்புவோர்) வைஸ்யர் எட்டு வயதிலும் பூணூல் (உபநயனம்) போட்டுக்கொள்ளலாம்.

 

  1. இவ்வாறு பூணூல் (உபநயனம்) போட்டுக்கொள்ள பிராமணனர், க்ஷத்ரியர், வைஸ்யருக்கு முறையே 16, 22, 24 வயது வரை அனுமதி உண்டு.(ஸாவித்ரியை வழிபடும் உரிமை)

 

157.மேலே குறிப்பிட்ட கால வரம் புக்குள் செய்யாவிடில் அவர்கள் விராத்தியர்கள் என்று அழைக்கப்படுவர்.

அவர்களுக்கு ஸாவித்ரியை வழிபடும் உரிமை இல்லை.

158.இவர்கள் மீண்டும் இரு பிறப்பாளராக சில சடங்குகளைச் செய்யலாம். அப்படிச் செய்து மீண்டும் வராதோருடன் ஏனையோர் திருமண உறவுகளையோ வேதச் சடங்கு செய்யும் உறவுகளையோ வைக்கக் கூடாது. துன்பம் வந்த காலத்தும் உதவக் கூடாது

வைதீக கார்யங்களில் இருந்து நீக்கிவைக்கப்பட வேண்டும் பெண் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.(2-40)

 

159.இனி எந்தெந்த வர்ணத்தார் என்ன மேலாடை, கீழாடை அணிய வேண்டும் என்பதைக் காண்க. பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர் முறையே கருப்பு மான் தோல் (கிருஷ்ண சாரம்), புள்ளி மான் தோல், ஆட்டின் தோல் ஆகியவற்றை மேலாடையாகவும், சணல்,  பட்டு நூல், ஆட்டின் மயிர் (கம்பளியை) ஆகியவற்றால் ஆன உடைகளை கீழாடைகளாகவும் அணிக(2-41)

160.இடையில் சுற்றிக்கொள்ள இந்த மூன்று வர்ணத்தாரும் முறையே மிஞ்சிப் புல் (முங்கா புல்), வில்லின் ஞாணைப் போன்ற முறுவல் புல் (மூர்வா), சணல் நார் ஆகியவற்றை மேடு பள்ளமில்லாமல் பின்னி அரை ஞாண்  மேல் அரை ஞாண் கட்ட வேண்டும் 2-42

 

161.மேற்சொன்னவை கிடைக்கவில்லை என்றால் மூன்று வர்ண பிரம்மச்சாரிகளும் தருப்பை, நாணல், சவட்டைக் கோறை ஆகியவற்றினால் ஆன ஞாணை மூன்று அல்லது ஐந்து வடமாக, (குல வழக்கப்படி), ஒரு முடிச்சுடன் அணியலாம்

2-43

 

162.மூன்று வர்ணத்தாரும் போடும் பூணூல் முறையே வலதுபுறம் செல்லும்; பஞ்சு நூல், சணல் நூல், வெள்ளாட்டின் மயிர் ஆகியவற்றால் இருக்க வேண்டும். 2-44

 

 

எனது கருத்து

மனு சொல்லக்கூடிய பெயர் சூட்டும் முறை ஆய்வுக்குரியது. எப்போது வரை இந்த முறை பின்பற்றப்பட்டது என்பதை கிடைக்கும் நூல்களைக் கொண்டு ஆராயலாம். அம்புலி மாமா போன்ற சிறுவர் நூல்களில் கூட மானர் பெயர் என்றால் வர்மன் என்றும் வைஸ்யர் என்றால் தனஎன்ற சொல்லும் இருப்பதைக் காணலாம். ஆனால் இது அப்படியே பின்பற்றப்படவில்லை. மஹாபாரதப் பெயர்களை- சிந்து சம்வெளிப் பெயர்களுடன் (ஊகம் தான்) ஒப்பிட்டுக் காட்டிய எனது ஆய்வுக் கட்டுரையில் சேனன் என்று 24, வர்மன் என்று 13, கேது என்று 9 etc. முடிவதைக் காட்டினேன். ஆனால் அங்கும் கர்ணன், துரோணன் என்றும், கசாப்புக் கடைக்காரனுக்கு தர்மவியாதன் என்றும் பெயர் இருப்பது ஆய்வுக்குரியது. சங்க காலத் தமிழர் பெயர் கள் வேறு விதமாக உள்ளன. ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

 

மநு என்பவர் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் அல்ல; அதற்கு மிகவும் முந்திய காலத்தில் வாழ்ந்தவர். ஏனெனில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல உப ஜாதிகள் தோன்றிவிட்டன. வெறும் 4 வர்ணம் மட்டும் இருக்கவில்லை!

 

இரண்டாவது சுவையான விசயம் மூன்று வர்ணத்தார் (சூத்திரர் தவிர) பூணுல் போட்டுக் கொண்டது, வெவ்வேறு வகையான ஆடைகளை அணிந்தது,  அரை ஞாண் கயிறு அணிந்தது என்பதெல்லாம் எக்காலம் வரை நீடித்தது?

 

மஹாராஷ்டிரத்திலும் (அம்பேத்கர் பூமி), தமிழ்நாட்டிலும் மட்டும் எப்படி அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சூத்திரர் முத்திரை குத்தினர் என்பதும் ஆராயப்பட வேண்டியது. மற்ற எல்லா மாநிலங்களிலும் நான்கு அல்லது அவர்களின் உட் பிரிவுகளுடன் ஜாதிகள் இருந்தன. இவ்விரு மாநிலங்களில் மட்டும், பிராமணர் அல்லாதார் அனைவரும் சூத்திரர் என்று சொல்லி அம்பேத்கர் கட்சி, திராவிடக் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடின. இது ஜாதி வெறியை வளர்க்கவும் வேரூன்றச் செய்யவும் காரணமா? என்றும் ஆராய வேண்டும்

 

மநுதர்மம்—- ஜாதியின் பெயரால் வேற்றுமை பாராட்டியது தவறு என்று சொல்லும் தர்மவான்கள்’, இன்று ஜாதியின் பெயரால் சிலருக்கு விஷேச சலுகை தருவது எவ்வகையில் நியாயம் என்பதையும் இதயத்தைத் தொட்டு ஆராய வேண்டும்; பணக்காரர்களும் ஜாதியின் பெயரால் உரிமை பெறுவது நியாம என்றால் மநு ஆயிரம் மடங்கு மேலானவர் என்று ஆகிவிடும்; ஏனெனில் அவர் ஆரம்பதில் எழுதிய ஸ்லோகங்களிலேயே விருப்பு வெறுப்பற்ற காம க்ரோதம் இல்லாதவர்களுகே இந்த சாஸ்திரம் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்.

 

அரசியல் சட்ட அமலாக்கத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த ஜாதிவாரிச் சலுகைகள் இருக்க வேண்டும் என்று சொன்ன புதிய மநுவையும் — அம்பேத்காரையும் — காற்றில் பறக்கவிட்ட அரசியல்வாதிகள் அல்லது அவரது கட்சியினர் மநுவைக் குறைகூறினால் உலகம் கைகொட்டிச் சிரிக்கும் என்பது எமது துணிபு.

 

to be continued………………………………….

கண்ணதாசனின் அதீத உளவியல் ஆற்றல்! -2 (Post No.4577)

MAHATMA GANDHI SHOT DEAD

Date: 3 JANUARY 2018

 

Time uploaded in London- 6-50 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4577

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

முதல் கட்டுரை எண் 4551 – 27-12-2017 அன்று வெளியாகியுள்ளது. அதைப் படித்து விட்டு இங்கு தொடரவும்.

 

 

கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவியல் ஆற்றல்! -2

 

 

ச.நாகராஜன்

6

சேலத்தில் கவிஞர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள். அவர் ‘அமைச்சர்’ என்ற இதழின் நிர்வாகியான அருணாசலம் என்ற அருணனிடமும் (அருணாசலம் பின்னாளில் அருணோதயம் பதிப்பாளர் ஆனார்), கவிஞரின் எழுத்துக்களைத் தொலைபேசி வாயிலாகக் கேட்டு அவர் சொல்லச் சொல்ல எழுதி வந்தவருமான கற்பூரபாண்டியனிடமும் தான் கண்ட கனவைத் துயரத்துடன் விவரிக்கிறார்.

 

“28-1-1947 அன்று இரவு பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டேன். மகாத்மா காந்தியை யாரோ சுட்டு விடுகிறார்கள்’ என்றார் கவிஞர்.

“அந்த மனிதருக்கா அப்படி ஆகும்” என்று அவர் கூற்றை மறுத்து இருவரும் கேலி செய்கிறார்கள்.

ஆனால் 30-1-1947 இரவு 7 மணி செய்தியில் வானொலி மகாத்மா காந்திஜியை கோட்ஸே சுட்டுக் கொன்றதை அறிவித்த போது அனைவரும் விக்கித்துப் போயினர்.

 

7

மழை இல்லாத காலத்தில் எல்லாம் கவிஞர் மழை பொழிக என்று சொன்னவுடன் மழை பெய்தது.

1972இல் வரலாறு காணாத வறட்சியைத் தமிழகம் கண்டது. ஏரி, குளம், ஆறு அனைத்தும் வறண்டன.

மக்கள் தவிதவித்துப் போயினர்.

 

கம்பன் விழாவில் கலந்து கொள்ள பாண்டிச்சேரி சென்றார் கவிஞர். உடன் சென்றவர் அவர் உதவியாளர் இராம. கண்ணப்பன்.

 

பாண்டிச்சேரியிலும் மழை இல்லை.ஒரே வறட்சி.

விழாவின் இறுதி நாளன்று பேசிய கவிஞர் சொன்னார்:” நான் கண்னனை வணங்குவது உண்மை எனில் புதுச்சேரி எல்லையைக் கடக்கு முன் மழை பெய்ய வேண்டும். பரந்தாமன் இங்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்.”

அவர் வாக்கு பொய்க்கவில்லை.

வருணன் அதைக் கேட்டான். ஓடி வந்தான்.

பேச்சை முடித்து கவிஞர் திண்டிவனம் வந்து சேர்ந்த போது புதுச்சேரி மழையில் மிதப்பதாக்ச் செய்தி வந்தது!

இன்னும் இரு சம்பவங்கள்.

 

ஒன்று மதுரை அன்பர் ஒருவர் குமுதம் இதழுக்கு ஒரு கடிதம் எழுதி கவிஞர் மதுரையில் மழை. பெய்யப் பாட வேண்டும்” என்றார்.

 

கவிஞரும் பாடினார்:

 

23 வரிகள் கொண்ட பாடல்.

அதில் முதல் ஆறு வரிகளையும் கடைசி ஆறு வரிகளையும் இங்கு தருகிறேன்:

ஞானம் தூங்கினால் நல்லறம் தூங்குமே

நலங்கள் தூங்கினால் நானிலம் தூங்குமே

கானம் தூங்கினால் கலைகளும் தூங்குமே

கலைகள் தூங்கினால் காவியம் ஏங்குமே

தானம் தூங்கினால் தவங்களும் தூங்குமே

தவங்கள் தூங்கினால் தருமமும் ஏங்குமே ….

 

வண்ணமாம் மின்னல்கள் வளரொளி நடனங்கள்

காணத் துடிக்கிறோம் கவின் மழை பொழிக நீ!

தேனின் துளிகளைத் தேசத்தில் ஊற்றுக.

சேரும் நதிகளில் திருப்புனல் காட்டுக

ஆனினம் உயிரினம் அனைத்தும் வாழவே

ஐய பெய்கவே, அம்மையே பெய்கவே!

 

ஏதோ வருணன் தனது உயிர் நண்பன் போலப் பாடலைப் பாடி விட்டார் கவிஞர்.

மழை பெய்யுமா? குமுதம் இதழைப் படித்த மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

பெயதது. கொட்டோ கொட்டு என்று மழை பெயதது.

வருணன் தன் உற்ற நண்பனைக் கைவிடவில்லை.

குமுதம் என்று மதுரையை அடைந்ததோ அன்றே மழை!

நண்பருக்கும் ஆச்சரியம், மக்களுக்கும் ஆச்சரியம்.

நன்றியை அனைவரும் தெரிவித்தனர்.

இதே போல சென்னையில் வானதி பதிப்பகத்தார் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ஒரு விசேஷ கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

கவிஞரும் அதில் பங்கேற்றார்.

 

பனிரெண்டு அறுசீர் விருத்தச் செய்யுள்களை அங்கு அவர் பாடினார்.

 

வான் முட்டும் கோபுரங்கள்

வானுக்குச் செய்தி சொல்வீர்!

தேன்முட்டும் இதழாள் சக்தி

தேவியைத் துயிலெ ழுப்பீர்!

கான்முட்ட மழைபொழிந்து

காவிரி பெருகி ஓடி

மீன்முட்டும் வெள்ளக் காடாய்

வியன் நிலம் ஆவதாக!

என்று இறுதி விருத்தத்தை முடித்தார்.

கவியரங்கம் முடிந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து கிளம்பினார் கவிஞர். தியாகராய நகர் வருவத்ற்குள் அடை மழை கொட்டியது.

இப்படிப் பல சம்பவங்கள்!!

 

இந்தச் சம்பவங்கள் கட்டுக் கதை அல்ல! அவரது உதவியாளராக இருந்த இராம கண்ணப்பன், “கண்ணதாசனின் அர்த்தமுள்ள அனுபவங்கள்” என்ற நூலில் இவற்றைத் தெரிவிக்கிறார்.

(புத்தக வெளியீடு: கங்கை புத்தக நிலையம், தி.நகர், சென்னை – 17 – முதல் பதிப்பு டிசம்பர் – 1991 – 181 பக்கங்கள்)

நமது நன்றி இராம கண்ணப்பனுக்கு உரித்தாகுக!

 

 

 

8

குமுதம் இதழில் வாரம் ஒரு கவிதையை எழுதி வந்தார் கவிஞர்.

ஒரு இதழில் கவிதை ஒன்று வெளியானது.

தாலாட்டுக் கவிதை அது.

கவிஞரின் அண்ணனான ஏ.ஏல்.சீனிவாசனுக்கு பேரக்குழந்தை பிறந்தது.கவிஞருக்கும் பேரன் தானே! பாடினார்:

 

 

அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்

கண்ணை விழித்திந்த காசினியைப் பார்க்குங்கால்

என்ன துயர் வருமோ எங்கெங்கே அடி விழுமோ

மோதல் வருமோ முறைகெடுவார் துயர் வருமோ

இந்த வயதினிலே இப்பொழுதே தூங்குவதே

சுகமான தூக்கம், அவன் சுகமாகத் தூங்கட்டும்”

 

துரதிர்ஷ்டவசமாக ஒரே வாரத்தில் குழந்தை இறந்தது.

அப்படியே தூங்கட்டும்; அவனை எழுப்பாதீர் என்று எழுதியதில் அறம் வைத்துப் பாடி விட்டேனோ. சுகமாகத் தூங்கட்டும் என்று சொல்லிய போது ஒரே நீள் தூக்கமாகப் போயிற்றே!

 

 

கவிஞரின் மனம் சமாதானம் அடையவில்லைல். புலம்பினார்.

அவனை எழுப்பாதீர், அப்படியே உறங்கட்டும்

என்றே நான் எழுதியதன் ஈரம் உலரவில்லை

அறம்பாடி விட்டேனோ அறியேன் சிறுகுருவி

திறம்பாட முடியாமல் செத்த கதை பாடுகிறேன்”

 

கண்ணதாசனின் கதறலை அடுத்த இதழ் குமுதம் தாங்கி வந்தது. மக்களும் சேர்ந்து அழுதனர்; கவிஞனின் சொந்தத் துக்கத்தில் பங்கு கொண்டனர்.

 

 

9

கவிஞனின் வாக்குப் பொய்க்காது என்பது அவர் அடிக்கடி சொல்லும் ஒரு வரி.

அதை ஏனையோரும் ஏற்றனர்; அதன் நிரூபணத்தையும் அடிக்கடி பார்த்து வந்தனர்.

அவரது சக்தி அபூர்வமான ஒன்று. தமிழை அருவியெனக் கருத்து வெள்ளத்துடன் கொட்டியதில் மட்டும் விஞசவில்லை கண்ணதாசன்.

 

 

கண்ணனின் அருள் தாங்கி ஒரு அருள் சக்தியும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

சமீப காலத்தில் தமிழகம் கண்ட ஒரு “சக்தி” பெற்ற “கவிஞர்” அவர் என்பதுடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்வோம்.

***

எனது நன்றி : இராம கண்ணப்பன் அவர்களுக்கு – பல நல்ல விஷயங்களை அப்படியே காற்றோடு போக விடாமல் எழுத்திலே பதிவு செய்தமைக்காக!

 

(இந்த இரு கட்டுரைத் தொடர் முற்றும்)

 

 

பத்து உலக மஹா இலக்கிய அதிசயங்கள் (Post No.4575)

Written by London Swaminathan 

 

Date: 2 JANUARY 2018

 

Time uploaded in London- 8-21 AM

 

 

Post No. 4575

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

உலக மஹா அதிசயம் இந்தியாவில் நடந்தது. அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.  இது இந்திய நாகரீகத்தின் தனித் தன்மையைக் காட்டுகிறது. அதற்குப் பின்னர் மேலும் சில அதிசயங்கள் நடந்தன. சுருக்கமாக விளம்புகிறேன்.

 

ஒரு நாட்டின் நாகரீக முன்னேற்றத்தைக் காட்டும் அளவுகோல் எது?

அந்த நாட்டின் இலக்கியங்கள் ஆகும்.

அதிசயம் 1

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மொழியில் சுமார் 450 புலவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேலான கவி தைகளை எழுதினர். அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் இன்னும் 400 புலவர்கள் கவிபாடினர். அவர்கள் பாடியவை ஆயிரத்துக்கும் மேலான துதிப் பாடல்கள் ஆகும். இது முதல் அதிசயம் ஆகும். ஏனெனில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு 850 புலவர்கள் கூட்டாகக் கவி பாடியதில்லை. சங்க இலக்கியப் புலவர்கள் அத்தனை பேருடைய பெயர்களும் நம்மிடம் இருக்கின்றன இதே போல உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதம் பாடிய 400 கவிஞர்களின் பெயர்களும் நமக்குக் கிடைத்தன.

அதிசயம் 2

இரண்டாவது உலக அதிசயம் இதிலுள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை! உலகில் வேறு எங்கும் இவ்வளவு பெண்பாற் புலவர்களின் குழுவைக் காண முடியாது. தமிழில் குறைந்தது 25 பெண்பாற் புலவர்களையும் வேதத்தில் குறைந்தது 20 பெண் புலவர்களையும் காண்கிறோம்.

 

இந்த இரண்டு அதிசயங்களும் காட்டும் உண்மை என்ன?

உலகிலேயே மிகப் பழமையான நாகரீகம் இந்து அல்லது இந்திய நாகரீகமே. எந்த ஒரு நாடும் இவ்வளவு அறிஞர் பெருமக்களை அக்காலத்தில் அளிக்கவில்லை.

 

பழமையான நாகரீகம் என்பதோடு மிகவும் முனேறிய நாகரீகம் என்பதும் இதனால் அறியப்படுகிறது.

 

தமிழர்களுக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்கர்கள் எழுதி இருந்தாலும் தமிழர்களைப் போல அவர்கள் மாபெரும் சங்கம் வைத்து மொழியை வளர்க்கவில்லை . வேதங்களோ கிரேக்க மொழிக்கு மிக மிக முந்தியவை.

அதிசயம் 3

மூன்றாவது இலக்கிய அதிசயம் வேதங்களைப் பாதுகாத்த முறையாகும்; பிரமாண்டமானதொரு இலக்கியத்தை — அதாவது 400 க்கும் மேலான புலவர் பாடியவை- ஆயிரத்துக்கும் மேலான துதிகளைக் கொண்டவை — உலகில் எங்குமே வாய் மொழியாகப் பாது காக்கப் படவில்லை இதுவும் இந்திய மக்களின் அறிவாற்றலுக்குச் சான்று பகரும்.

 

   

அதிசயம் 4

நாலாவது அதிசயம் பிரம்மாண்டமான இலக்கியக் குவியலாகும். தமிழர்களும், கிரேக்கர்களும், எபிரேயர்களும் எழுதுவதற்கு முன்னதாக பிரம்மாண்டமான துதிப்பாடல் தொகுப்பை- சமய உரை நடைத் தொகுப்பை– வேத கால இந்துக்கள் உருவாக்கிவிட்டனர். அதாவது நான்கு வேதங்களில் மட்டுமே 20,000 க்கும் மேலான மந்திரங்கள்; அதற்குப் பின்னர் பிராமண இலக்கியங்கள், ஆரண்யகங்கள் உபநிஷத்துக்கள் என்னும் உரை நடை இலக்கியங்கள் தோன்றின. இதையும் ஒப்பற்ற முன்னேற்றம் என்று சொல்லலாம்.

 

எகிப்திய நாட்டில் பபைரஸ் (Papyrus) என்ற புல்லில் பல நூல்கள் உள. சுமேரியாவில் – மத்திய கிழக்கில் — 60,000 களிமண் பலகைகள் (Clay Tablets) உள. ஆயினும் இலக்கியம் என்று சொல்லும் நயமுள்ள பகுதிகள் மிகச் சிலவே.

 

அதிசயம் 5

ஐந்தாவது அதிசயம் உபநிஷத்துக்கள் என்னும் தத்துவ நூல்களாகும். இந்தியாவில்  இந்த தத்துவ நூல்கள் உருவாகிய சில நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜொராஸ்டர், மோஸஸ், மஹாவீரர், புத்தர், கன்பூசியஸ் என்று உலகின் பல பகுதிகளில் மஹான்கள் தோன்றினர்.

 

அதிசயம் 6

ஆறாவது அதிசயம் மிக நீண்ட மன்னர் பட்டியலும், குருமார்கள் (Long List of Kings and Teachers) பட்டியலும் ஆகும். 140 தலைமுறைகளின் வரிசை அப்படியே புராணங்களில் உள்ளன. ஐம்பதுக்கும் மேலான ‘குரு’க்களின் பெயர்கள் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் உள்ளன. இப்படிப்பட்ட நீண்ட பட்டியல் உலகில் வேறெங்கும் இல்லை; வரலாற்று ஆசிரியர்களாகக் கஷ்டப்பட்டு நமக்குக் கொடுத்த பட்டியல்தான் உள்ளது– கி.மு இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் பெரோரஸஸ் (Berossus) முதலியோர் கொடுத்த வரலாற்றுப் பட்டியல் பல முரண்பாடுகளுடன் இருந்ததை வரலாற்று ஆய்வாளர்கள் தட்டிக்கொட்டிச் சரிப்படுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் முன்னதாக கிரேக்க ஆசிரியர்கள் நம்முடைய 140 தலை முறை பற்றி வியப்போடு எழுதிவைத்துள்ளர்.

 

அதிசயம் 7

ஏழாவது இலக்கிய  அதிசயம் அசோகர் கல்வெட்டுகளாகும் . கி.மு மூன்றாம் நூற்றன்டில் திடீரென  ஆப்கனிஸ்தான் முதல் இலங்கையின் தென்கோடி வரை பிராமி லிபியில் (Brahmi script) பாலி மொழியில் கல்வெட்டுகள் தோன்றியதாகும். இதில் மிக முக்கியமான உண்மை வெளியாகியது. இந்தியர்கள் மஹா மேதாவிகள் — பட்டி தொட்டி தோறும் எழுத்தறிவு மிகுந்து இருந்தது. கர்நாடகத்தில் கூட அசோகர் கல்வெட்டுகள் கிடைத்து இருக்கின்றன. சீன யாத்ரீகர் குறிப்பிடும் காஞ்சீபுரக் கல்வெட்டுகள் மட்டும் படை எடுப்பில் அழிந்துவிட்டன. எழுத்தறிவு இருந்ததால்தான் இப்படி கல்வெட்டுகளைக் காண முடிகிறது. இது உலக அதிசயம் (Brahmi script from Afghanistan to Kandy in Sri Lanka). இப்படிப்பட்ட பெருநிலப்பரப்பில் உலகில் வேறு எங்கும் 2300 ஆண்டுகளுக்கு முன் காணக் கிடைக்காது. இந்தியர்கள் எந்த அளவுக்கு எழுத்து அறிவு பெற்று இருந்தனர் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

அதிசயம் 8

எட்டாவது உலக அதிசயம் பிராமி என்னும் எழுத்தாகும். இந்த லிபி மூலம் தமிழ் உள்பட தெற்காசிய எல்லா மொழிகளுக்கும் லிபியை/ எழுத்தை அளித்த இலக்கிய அதிசயம் ஆகும். இது பீனிசிய எழுத்தில் இருந்து வந்ததாகவும் வரவில்லை என்றும் இரு வேறு கருத்தூக்கள் உண்டு– ஆயினும் இதைக் கண்டு வெளிநாட்டினர் வியக்கின்றனர். ஏனெனில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய சம்ஸ்கிருத எழுத்து முறைக்குத் தக, அகர (alphabet) வரிசைப்படி, இந்த எழுத்து முறை அமைந்துள்ளது– மற்ற மொழி எழுத்துக்கள் இப்படி அமையவில்லை என்பது அவர்கள் கூற்று.

 

 

அதிசயம் 9

ஒன்பதாவது உலக மஹா இலக்கிய அதிசயம் பாணினியின் அத்புதமான ஸம்ஸ்கிருத வியாகரணம் ஆகும் அஷ்டாத்யாயீ என்னும் இந்த இலக்கண நூலைக் கண்டு வியக்காதோர் உலகில் இல்லை. பாரதி தனது பாடல்களில் வேத முரசு உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்று சொன்னதோடு பாணினியையும் உபநிஷத்துக்களையும் தனியாகப் புகழ்ந்து பாடியுள்ளார். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் வேறு எந்த மொழிக்கும் இலக்கண நூல் என்பதே இல்லை; இலக்கணம் இருந்ததா (?!?!) என்பதும் ஐயப்பாடே.

 

அதிசயம் 10

பத்தாவது உலக மஹா இலக்கிய அதிசயமும் இந்தியாவில் நிகழ்ந்ததே! மொழி தொடர்பான விஷயங்களை உவமையாகக் காட்டுவது, எண் தொடர்பான அடையாளக் குறியீடுகளை (Number symbolism) வைத்துப் பாடுவது. மொழி இயல் கருத்துக்களை (Linguistic remarks) வேதம் போன்ற துதிப்பாடல்களில் கூடச் சேர்ப்பது வேறு எங்கும் காணாப் புதுமை ஆகும். ஒரு சமுதாயம் இலக்கியத்திலும் மொழியிலும் (Language), மொழி இயலிலும் (Linguistics)  வளர்ச்சி அடைந்தால்தான் இத்தைகய ஜாலங்களைச் செய்ய இயலும். சொல் வேட்டுவர்களையும் வில் வேட்டுவர்களையும் ஒருங்கே கண்ட நாடு இது— அரசர்களும் கவி பாடிய நாடு இது. சங்கேத மொழியில் பாடுவதே (Secret, hidden language) எங்கள்  தொழில் என்று வேத கால முனிவர்கள் ஆடிப்பாடிய நாடு இது. இப்படிப்பட்ட ரஹஸிய விஷயங்கள் இருந்ததால் வேதத்தை எழுதாக் கற்பு என்றும் மறை (Secret, hidden meaning) என்றும் மொழி பெயர்தான் தமிழன்.

 

இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த  அ திசயங்கள். எகிப்திலும் பாபிலோனியாவிலும் கல் ஓவியம் இருக்கலாம்; சொல் ஓவியம் இல்லை. ஒரு தத்துப் பித்து ஜில்காமேஷை (Gilgamesh) வைத்துக் கொண்டு கூத்தாடலாம். ஆனால் ரிக் வேதத்தின் க டைசி துதிப்ப்பாடலுக்கு அது ஈடு இணையாகாது.

வேதத்தில் மொழி, மொழி இயல் பற்றி வரும் குறிப்புகளையும்        உலக நலன் பற்றி வரும் வேதத் துதிகளின் எண்களையும் குறிப்பிட்டு கட்டுரையை முடிப்பேன்

 

மொழி இயல் கூறும் துதிகள்

RV 1-164, 4-58, 8-59, 8-100, 10-71, 10-114, 10-125, 10-177

 

மொழி / பேச்சு பற்றிய துதிகள்

RV 1-164, 10-71, 4-3, 10-125

உலக நலன் பற்றிய துதிகள்

10-191, , YV 36, AV 19-60, AV 7-69, AV 3-30,

 

வாழ்க இந்தியா! வளர்க இலக்கியம்!!

 

–SUBHAM–

‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)

Written by London Swaminathan 

 

Date: 1 JANUARY 2018

 

Time uploaded in London- 6-59 AM

 

 

Post No. 4572

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

‘அஜீர்ணே போஜனம் விஷம்’- உணவு பற்றி சாணக்கியன் எச்சரிக்கை (Post No.4572)

சாணக்கியனின் நீதி சாஸ்திரம் ஒரு மருத்துவ நூலன்று; அப்படியும் கூட அவன் போகிற போக்கில் மூலிகைகள் பற்றியும் உணவு பற்றியும் பல அறிவுரைகளை வழங்குகிறான்.

 

 

ஒருவனுடைய உடலைப் பார்த்தாலேயே அவன் சாப்பிடும் உணவைக் கண்டுபிடித்து விடலாம் என்பார் சாணக்கியன்.

என்ன சரியான கணிப்பு!

 

தொந்தியும் தொப்பையுமாக இருந்தால் ஆசிய (Asian) நாட்டவர் என்று கண்டு பிடிக்கலாம். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் அரிசிச் சோறு அவர்களை இப்படி ஆக்கி விடுகிறது. இது போல ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளோ, குறிப்பாக நாம் அளவுக்கு அதிகமாக எதைச் சாப்பிடுகிறோமோ, அது நம் உடலில் எதிரொலிப்பதைப் பார்க்கலாம்.

முழு ஸ்லோகம்:-

ஒருவன் நடத்தையைப் பார், அவன் குடும்பத்தைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய பேச்சைப் பார், அவன் ஊரையும் நாட்டையும் சொல்லி விடலாம்;

ஒருவனுடைய அங்க அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பார், அவனுடைய அன்பை/ காதலைச் சொல்லிவிடலாம்;

ஒருவனுடைய உடலைப் பார், அவன் சாப்பிடும் உணவைச் சொல்லி விடலாம்.

ஆசாரஹ குலமாக்யாதி தேசமாக்யாதி பாஷணம்

சம்க்ரமஹ ஸ்னேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம்

 

—–அத்தியாயம் 3, ஸ்லோகம் 2

xxx

 

தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு

அருகில் நெருப்பு இல்லாவிட்டாலும் உடலை எரிக்கக்கூடிய, தகிக்க வைக்கக் கூடிய விஷயங்கள் ஆறு:

கெட்ட உணவு (வாய்க்கு ருசியான, ஆனால் உடம்புக்கு ஒவ்வாத உணவு ) சிற்றூரில் வசித்தல், கீழ்மட்டத்தில் உள்ளவனுக்கு சேவை செய்தல், எரிந்து விழக்கூடிய மனைவி, முட்டாளான மகன், விதவையான மகள்  – இந்த ஆறும் உடலை தகிக்க வைக்கும்.

குக்ராமவாஸஹ குலஹீனஸேவா குபோஜனம் க்ரோதமுகீ பார்யா

புத்ரஸ்ச மூர்க்கோ விதவா ச கன்யா வினாக்னினா ஷட் ப்ரதஹந்தி காயம்

—அத்தியாயம் 4, ஸ்லோகம் 8

 

xxxx

 

அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் !

இப்போதெல்லாம் கல்யாணத்துக்குப் போனால் சீக்கிய குருத்வாரா லங்கார் (Langar) போல 24 மணி நேரமும்  சாப்பாடு போடுகிறார்கள். அங்காவது  குறைவான அயிட்டம் (items )கள்தான்- வகைகள் தான் கிடைக்கும். கல்யாணத்திலேயோ, ஒரு குடும்பத்துடன் மற்றொரு குடும்பம் போட்டி போட்டுக்கொண்டு 30, 40 வகைகளை பரிமாறி அவர்களுடைய பணத்தையும் வீணடித்து நம்முடைய வயிற்றையும் பாழடைய வைக்கிறார்கள். நாமும் வேண்டாம் என்று சொல்வதில்லை; கிடைக்கக் கிடைக்க வயிற்றில் திணிக்கிறோம்; முன் சாப்பிட்ட உணவு இன்னும் செமிக்கவில்லை என்பதை அறிந்தும் உண்கிறோம். அவை எல்லாம் வயிற்றில் விஷமாகிப் போனது அடுத்த சில நாட்களில் நமக்குத் தெரிகிறது; புரிகிறது.

 

அஜீர்ணத்தில் சாப்பிடுவது விஷம் ஆகும்;

பாராயணம் செய்யாத படிப்பு விஷம் ஆகும்;

சபையில்  நிற்பது ஒரு ஏழைக்கு விஷம் ஆகும்;

வயதான மனிதனுக்கு இளம் பெண் விஷம் ஆகும்.

 

 

விஷம் என்பதைப் பொருந்தாது, ஏற்காது என்று பொருள் கொள்ளலாம்.

அனப்யாஸே விஷம் சாஸ்த்ரம் அஜீர்ணே போஜனம் விஷம்

திவம் ஸபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

xxxx

திருப்தி வேண்டும்

ஒருவன் தனக்குக் கிடைத்த உணவு, வாய்த்த மனைவி, சம்பாத்தித்த செல்வம் மூன்றிலும் திருப்தி அடைய வேண்டும். இதற்கு நேர் மாறாக எப்போதும் திருப்தி அடையக் கூடாத மூன்று விஷயங்களும் உண்டு:-படிப்பு, தானம் செய்தல், தவம்.

 

ஸந்தோஷ த்ரிஷு கர்தவ்யஹ ஸ்வதாரே போஜனே தனே

த்ரிஷு சைவ ந கர்தவ்யோ அத்யயனே தப தானயோஹோ

—அத்தியாயம் 7, ஸ்லோகம் 4

பிரிட்டனில் டெலிவிஷன் பார்ப்போர் எல்லோருக்கும் பால் மக்கென்னாவைத் (Paul McKenna)  தெரியும். பெரிய மனோ வஸிய நிபுணர். (Hypnotist);  நாலு பேரை மேடைக்கு அழைப்பார்; நீ மைக்கேல் ஜாக்ஸன், நீ மடொன்னா, நீ பீட்டில்ஸ்  பாடகர் என்று ஒவ்வொருவரிடமும் ஒன்றைச் சொல்லிவிட்டு கையைச் சொடுக்குவார். அவர்கள் அடுத்த நொடியில் அவர் யார் பெயரை சொன்னாரோ அது போலவே நடிப்பர்.

 

அவரே தமிழ் நாட்டில் இருந்தால் நாலு பேரில் ஒருவரை எம்.ஜி.ஆர், ஒருவரை சிவாஜி கணேசன், ஒருவரை ரஜினிகாந்த், இன்னும் ஒருவரை கமலஹாசன் என்று சொல்லிவிட்டு ஹிப்னாடிஸம் செய்த அடுத்த நொடியில் கேள்வி கேட்டால் அந்தந்த நடிகர் போலப் பேசுவார்.

அவர் உடல் இளைக்க ஒரு சில வழிமுறைகளைச் சொன்னார்; நினைவில் உள்ளதை மட்டும் தருகிறேன்:

எந்த ஒரு உணவுப் பண்டம் கிடைத்தாலும் அதை டெலிவிஷன் பார்த்துக் கொண்டோ, பாட்டுக் கேட்டுக் கொண்டோ, புஸ்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடாதீர்கள். உணவுப் பண்டத்தைப் பாராட்டி, சீராட்டி, கொஞ்சிக் குலவிப், போற்றிப் புகழ்ந்து  அணு அணுவாக ரஸித்து, ருஸித்து, அனுபவித்து உண்ணுங்கள்.

 

இறைவன் உங்களுக்கு அதைக் கொடுத்தானே என்று எண்ணி மகிழுங்கள்.

இதுவே வயிற்றின் பசியை ஆற்றிவிடும் என்று நம்பி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள்.

 

நாளடைவில் கொஞ்சமாகச் சாப்பிடுவீர்கள்; வயிறு நிறைந்த திருப்தியும் ஏற்பட்டுவிடும்.

 

நீங்களும் பின்பற்றிப் பாருங்கள்.

 

–சுபம்—

 

 

பிள்ளைமார் வாழ்க! (Post No.4567)

Picture of Meenakshi sundaram pillai from wikipedia

 

Date: 31  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-38 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4567

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தேசம், தெய்வம், தமிழ் போற்றிய உத்தமர்கள்

 

பிள்ளைமார் வாழ்க!

 

ச.நாகராஜன்

 

1

இந்தக் கட்டுரையின் தலைப்பில் ஒரு குறை இருக்கிறது. அதை இந்தக் கட்டுரையின் கடைசி வரியில் நிவர்த்தி செய்து விடுகிறேன்.

 

ஜாதிப் பேரைச் சொல்லலாமா என்று சிலர் ஆதங்கப்படலாம்.

அட, தமிழுக்கும், ஹிந்து மதத்திற்குகும் தேசத்திற்கும் தொண்டு இழைத்தவர்களைப் பாராட்ட ஜாதிப் பெயரைச் சொல்வதில் என்ன ஐயா, தவறு?

 

பிள்ளைமார் சமூகத்தை எடுத்துக் கொண்டால் அது ஆற்றிய பெரும் சேவையை பெருங் களஞ்சியமாக அல்லவா தொகுக்க வேண்டியிருக்கும்!

 

இருந்தாலும் ஒரு சில பெயர்களையாவது நினைத்துப் பார்க்கலாமே!

தமிழன் எப்போதும் நன்றி மறக்கமாட்டான், இல்லையா?

 

2

 

உலகில் சமீப கால வரலாற்றில் முறைப்படுத்தப்பட்ட ஆவணம் நிருபிக்கும் உத்தம அவதார புருஷர் வடலூர் வள்ளலார் என்று மிக்க பக்தியுடன் அழைக்கப்படும் வடலூர் இராமலிங்கம் பிள்ளை! (தோற்றம் 18-12-1822 ஒளி உருவமாக மறைந்த தேதி 5-12-1879) அவர்களின் அருட்பா பற்றி அறிமுகமே வேண்டாம். கொல்லாமையையும் அனைவருக்கும் அன்ன தானத்தையும் வலியுறுத்திய மகான் ஒளி உருவமாக மறைந்தார்.

அவரது பெருமையை முழுதுமாகச் சொல்ல முடியுமா, என்ன?

 

3

தமிழ் இலக்கியத்திற்கு மகத்தான சேவை செய்த ஏராளமானோரில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நிறைய பேர்கள் உள்ளனர்.

 

சமீப காலத்தில் வாழ்ந்த மகா வித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை மறந்தோம் என்றால் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே லாயக்கில்லை என்பது உண்மை.

இவரது பெருமையை இவரது அற்புதமான சீடர் மஹாமஹோபாத்யாய உ.வே. சாமிநாதையர் விரிவாக எழுதியிருக்கிறார். (இரண்டு தொகுதிகள் உள்ள நூல்)

ஐயர், பிள்ளை என்ற ஜாதி பேதம் அங்கு இல்லை. தமிழால் பிணைக்கப்பட்டனர் இருவரும். தனது குருவின் பெருமையை இறுதி வரை ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர் அவர்கள்.

 

பின்னாளில் வந்த பிசாசுகளே ஜாதி வேற்றுமையை எங்கும் கிளப்பி அது இன்று பெரிய பூதமாக மாறி நம்மை அழித்து வருகிறது.

 

மகா வித்துவான்  (தோற்றம் 6-4-1815 மறைவு 1-2-1876) சுமார் ஒரு லட்சம் பாடல்களைப் பாடியுள்ளார்.

 

ஒரு லட்சம் பாடல்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தமிழ் இலக்கணத்தின் அனைத்து அம்சங்களையும் சுட்டிக் காட்டி இறை புகழ் வெளிப்படுத்தும் ஒரு லட்சம் என்ற பிரம்மாண்டமான எண்ணிக்கை கொண்ட பாடல்களை அவர் யாத்துள்ளார்.

 

95க்கும் மேற்பட்ட புராணங்கள், இதர இலக்கியங்கள்!!

தமிழுக்குப் பெருமை! தமிழருக்குப் பெருமை!! பொதுவான இலக்கிய உலகிற்கே உலகளாவிய அளவில் பெருமை.

 

பிள்ளைமார்களுக்கும் பெருமை (ஆனால் சரியான விதத்தில் அவரைக் கொண்டாடாமல் விட்டு விட்டார்களோ!)

கவிச் சக்கரவர்த்தி கம்பன் பத்தாயிரம் பாடல்களைப் புனைந்து கவி சிகரத்தில் ஏறினான்.

 

ஆனால் மகா வித்துவானோ ஒரு லட்சம் பாடல்களைப் புனைந்துள்ளதால் அவரை “பத்துக் கம்பன்” என்று அழைக்கிறார்கள்.

இவரை என்ன சொல்லிப் புகழ? என்ன பட்டம் தந்தாலும் அது சற்று சிறிதாகத் தானே இருக்கும்!

 

4

அடுத்து இசையும் தெய்வமும் தமிழருக்கு ஒன்றே!

இசை உலகில் மிக பிரம்மாண்டமான அரிய சாதனை புரிந்த ஒரு சக்கரவர்த்தி இருக்கிறார்.

 

அவர் தான் நாதசுர சக்கரவர்த்தி!

திருவாவடு துறை ராஜரத்தினம் பிள்ளை!

டி. என். ராஜரத்தினம் பிள்ளை ( தோற்றம் 27-8-1898 மறைவு 12-12-1956) அவர்களின் பெருமையை முற்றிலும் எழுத்தில் வடிக்க முடியுமா?

 

என் தந்தையார் (தினமணி வெ.சந்தானம் அவர்கள்) அவரைப் பற்றிக் கூறுகையில், “அவர் ஒரு இடத்தில் வாசிக்க வரப் போகிறார் என்றால் முன் கூட்டியே (தஞ்சை ஜில்லாவில்) அனைத்து கிராம மக்களுக்கும் தெரிந்து விடும். நடந்தும், வண்டி கட்டிக் கொண்டும் அலை அலையாக மக்கள் வருவர். பல மைல்களுக்கு அப்பால் வரும் போதே நாதசுரத்தின் சுநாதம் அனைவரையும் மயக்கும். மயங்கி நிற்போம்” என்று கூறினார்.

(இந்த சந்தர்ப்பத்தில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களும் அவரது மாப்பிள்ளை மௌனகுருசாமி அவர்களும் என் தந்தையார் மீது வைத்திருந்த மதிப்பையும் மரியாதையையும். பற்றையும், பாசத்தையும் இங்கு நன்றியுடன் நினைவு கூர்கிறேன்)

பெரிய புத்தகமாக எழுத வேண்டிய நாதசுர சக்ரவர்த்தியின் வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியை இங்கு சுட்டிக் காட்ட விழைகிறேன்.

 

இதை எழுதியவர் நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன்.

கலைமகள் 1994ஆம் ஆண்டு தீபாவளி மலரில், “சுத்த மத்யமம் உத்தம மத்யமம் ஆனது எப்படி?” என்ற கட்டுரையில் வரும் ஒரு பகுதியே இது:

இன்றைய நிலையில் இந்த நாகசுர வாத்தியத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் அவர் என்று சொல்லலாம்!

 

முன்பெல்லாம் – அதாவது திருவாவடுதுறையார் ஒழுங்கு பண்ணுவதற்கு முன்பாக, நாகசுரத்தில் சுத்த மத்யமம் பேசாது. வாசிப்பில் அது சுத்த மத்யமாகவும் இல்லாமல், பிரதி மத்யமாகவும் இல்லாமல், இரண்டிலும் சேராத – இரண்டுக்கும் இடைப்பட்டதாக – இரண்டும் கெட்டானாக, ஒன்று ஒலிக்கும்.

அதை எப்படி அழைப்பது? வித்வான் அதைச் செல்லமாக, செல்ல மத்யமம் என்று அழைத்தார்கள்!

 

ஆனால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையவர்கள் நாகசுரத்தில் சுத்த மத்யம் சுகமாகப் பேசும். அது எப்படி? அது தான் பிள்ளையவர்கள் வாசிப்பில் மட்டுமல்லாது – வாத்தியத்திலும் செய்த புதுமை!

 

பிள்ளையவர்கள் என்ன செய்தார் தெரியுமா? நாகசுரம் தயார் செய்யும் ஆச்சாரியார் ஒருவரைத் தம்முடன் வைத்துக் கொண்டார். தம் கையில் ஒரு நாகசுரத்தை எடுத்துக் கொண்டார்.

 

துளைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிப் போட்டுக் கொண்டே வந்தார். அவ்வப்போது அதில் வாசித்துப் பார்த்தார். ஒரு சின்னக் குழாய் மாதிரி செய்து நாகசுரத்தோடு பிட் அப் செய்து கொண்டார். வாசித்தார்; பல மாதங்கள், பல நாகசுரங்களை இப்படித் துளையிட்டு வாசித்து அசுர சாதனை செய்தார். முயற்சி வீண் போகவில்லை.

 

ஒரு நாள் சோதனையில் சுத்த மத்யமம். உண்மையிலேயே சுத்தமயமாக, உத்தமமாக வாசித்தது. பிள்ளையவர்களுக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. அந்த நாகசுரத்தையே வாசிப்புக்கு ஏற்ற நாகசுரமாக்கினார். வாசித்தார். வாழ்நாள் முழுதும் – இசையை உபாசித்தார்; நாதோபாசனை புரிந்தார்.

இன்று நாகசுர வித்வான்களுக்கு எல்லாம் அருமையான நாகசுரம் கிடைத்திருக்கிறது, அற்புதமாக வாசிக்கிறார்கள் என்றால், அது திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் கருணைக் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.

 

*

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எப்படிப்பட்ட இசை மேதையின் கடின உழைப்பையும் நாத உபாசனையையும் சுட்டிக் காட்டி விட்டார்!

 

 

5

கட்டுரை நீண்டு கொண்டே போகிறது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தில் மிகச் சிறிய அளவே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே, கட்டுரையின் அடுத்த பகுதியையும் எழுத வேண்டியது தான்!

 

அது சரி, கட்டுரை தலைப்பில் உள்ள தவறை நிவர்த்தி செய்கிறேன் என்றீர்களே, அதை செய்வீர்களா என்று கேட்கிறீர்களா.

 

‘இந்தக் கட்டுரையின் கடைசி வரி’ என்று எழுதி விட்டேன், அல்லவா, அதைச் செய்து தான் ஆகவேண்டும்.

காலக்ஸி போன்ற பிள்ளைமார்கள் நிரம்பி இருக்க அவர் தம் பெருமையை ஒரு கட்டுரையில் அடக்க முடியவில்லை.

தலைப்பில் பிள்ளைமார் வாழ்க என்று எழுதியதில் ஒரு வாழ்க

தான் இருக்கிறது. ஒரு வாழ்க எங்காவது போதுமா?

வாழ்க, வாழ்க, வாழ்க…. என்று அல்லவா எழுதி இருக்க வேண்டும்! இப்போது நிவர்த்தி செய்து விட்டேன், தவறை! பிள்ளைமார் வாழ்க, வாழ்க, வாழ்க…!!!

 

***         (அடுத்த கட்டுரை தொடரும்)

 

நாய் 6, காகம் 5, சேவல் 4 சொல்லிக் கொடுக்கும்! சாணக்கியனின் விநோத போதனை (Post 4560)

Written by London Swaminathan 

 

Date: 29 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-15 am

 

 

Post No. 4560

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

உலக மஹா அறிவாளி,

உலகின் முதல் முழு நீளப் பொருளாதார புத்தகம் எழுதிய மேதாவி, அவிழ்த்த குடுமியை லட்சியம் நிறைவேறும் வரை  முடிய மாட்டேன் என்று  என்று வீர சபதம் செய்த பார்ப்பான்,

மகத சாம்ராஜ்யத்தை உருவாக்கியும் குடிசையில் வாழ்ந்த ஏழைப் ப்ராஹ்மணன்

சாணக்கியன் ஆவான்.

அவன்,  பர்த்ருஹரி, திருவள்ளுவன் போன்றோருக்கெல்லாம் முன்னதாக எழுதிய சாணக்கிய நீதியில் ஒரு புதிர் போடுகிறான். பின்னர் அவனே 6 ஸ்லோகங்களில் புதிரையும் விடுவித்து விடுகிறான்.

வாழ்க்கையில் வெற்றி பெற இந்த 20 குணங்களையும் ஒருவன் பின்பற்றினால் போதும் என்றும் சொல்கிறார்..

ஸிம்ஹாத் ஏகம் பகாத் ஏகம் சிக்ஷேச்சத்வாரி குக்குடாத்

வாயஸாத்பஞ்ச சிக்ஷேச்ச ஷட் சுனஸ்த்ரீணி கர்தபாத்

–சாணக்ய நீதி , அத்தியாயம் 6, ஸ்லோகம் 14

 

சிங்கத்திடம் இருந்தும் கொக்கிடமிருந்தும் ஒவ்வொரு குணத்தைக் கற்றுக்கொள்க;

சேவலிடமிருந்து நான்கு, காகத்திடமிருந்து ஐந்து, நாயிடமிருந்து ஆறு, கழுதையிடமிருந்து மூன்று குணங்களைக் கற்றுக் கொள்க.

 

இப்படிச் சொல்லிவிட்டு, சாணக்கியன் நிறுத்தி இருந்தால் ஆளாளுக்கு ஒவ்வொரு வியாக்கியானம் செய்திருப்பர். நல்ல வேளையாக அவரே பின் வரும் ஸ்லோகங்களில் விளக்கமும் சொல்லிவிடுகிறார்.

வாழ்க்கையில் வெற்றி பெற 20

குணங்கள்- சாணக்கியன் பட்டியல்

 

ஆனால் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி குணங்களைக் கற்பிப்பதில் இவர்தான் முதல்வர் என்று நினைக்க வேண்டாம். பாகவத புராணத்தில் 24 இயற்கைப் பொருட்களை, பிராணிகள், பறவைகளை குரு என்று தத்தாத்ரேயர் சொன்னதை முன்னரே கொடுத்துள்ளேன்.

 

விவேக சூடாமணியில் 13 இயற்கைப் பொருட்களை ஆசிரியராகப் பாடி இருப்பதையும் கொடுத்துவிட்டேன்.

 

வில்லியம் வோர்ட்ஸ்வர்த் (William Wordsworth) என்ற ஆங்கிலக் கவிஞன், புத்தகங்களைத் தூக்கி எறிந்து விட்டு இயற்கை அன்னையிடம் வாருங்கள்; எல்லா முனிவர்களையும் விட அதிகம் கற்றுக் கொடுப்பாள் என்று சொன்னதையும் எழுதிவிட்டேன்,

சாணக்யன் (370 BCE) சொல்லுவதைக் காண்போம்:-

 

ப்ரபூதம் கார்யமல்பம் வா யன்னரஹ கர்துமிச்சதி

ஸர்வாரம்பேண தத்கார்யம் சிம்ஹோதகம் ப்ரசக்ஷதே – 15

 

சிங்கத்திடம் கற்கும் முதல் பாடம்- சிறியதோ பெரியதோ, ஒரு காரியத்தைச் செய்து முடிக்க முழு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும்  காட்ட வேண்டும் – ஸ்லோகம் 15

 

இந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத் பண்டிதோ நரஹ

தேசகாலபலம்ஞாத்வா ஸர்வகார்யாணி ஸாதயேத் –16

 

 

கொக்கு போல காத்திருந்து பெற வேண்டும்–தக்க இடம், தகுந்த காலம், தன்னுடைய சக்தி ஆகையவற்றைக் கொக்கிடம் கற்க.

ப்ரத்யுத்தானம்ச யுத்தம் ஸம்விபகம் ச பந்துஷு

ஸ்வயமாக்ரம்ய புக்தம் ச சிக்ஷேசத்வாரி குக்குடாத் –17

 

சேவலிடம் நான்கு குணங்களைக் கற்கவும்: அதி காலையில் எழுந்திருத்தல், தாக்குதலைச் சமாளிக்க ஆயத்த நிலையில் இருத்தல், கிடைத்ததைப் பகிர்ந்து கொடுத்தல், போட்டிக்கிடையே தானே சேகரித்து உண்ணல்.

கூடம் ச மைதுனம் தார்ஷ்ட்யம்  காலே காலே ச சம்க்ரஹம்

அப்ரமத்தம விஸ்வாசம் பஞ்ச சிக்ஷேச்ச வாயஸாத்– 18

 

கீழ்கண்ட ஐந்து குணங்களை காகத்திடம் கற்கவும்: ரஹசியமாக புணர்தல், துடுக்குத்தனம்,  காலாகாலத்தில் சேகரித்து வைத்தல், கவனமாக/ உஷாராக இருத்தல், மற்றவர்களை எளிதில் நம்பாது திருத்தல்

பஹ்வாசீ ஸ்வல்பஸந்துஷ்டஹஸுனிதோ லகுசேதனஹ

ஸ்வாமிபக்தஸ்ச சூரஸ்ச ஷடேதே ஸ்வானதோ குணாஹா-19

 

பொருள்

நல்ல அளவு உணவு அருந்தல், கொஞ்சம் கிடைத்தாலும் திருப்தி அடைதல், நன்றாகத் தூங்கல் , சிறிய சப்தம் கேட்டாலும் விழித்தல், விசுவாசமாக இருத்தல், துணிச்சல் ஆகிய குணங்களை நாயிடம் இருந்து கற்க வேண்டும்

ஸுஸ்ராந்தோபி வஹேத் பாரம் சீதோஷ்ணம் ந ச பஸ்யதி

ச்ஸந்துஷ்டஸ்சரதே நித்யம் த்ரீணி சிக்ஷேச்ச கர்தபாத் – 20

 

மூன்று குணங்களைக் கழுதையிடம் கற்கவும்: என்ன களைப்பு இருந்தாலும் தொடர்ந்து வேலை செய்தல், குளிர், வெப்பம் பற்றிக் கவலைப்படாது இருத்தல், எப்போதும் திருப்தியுடன் காணப்படுதல்.

 

ய ஏதான் விம்சதி குணானாசரிஷ்யதி மானவஹ

கார்யா அவஸ்தாஸு ஸர்வாஸு அஜேயஹ ஸ பவிஷ்யதி –21

 

எல்லா விதமான பணிகளிலும் ஒருவன் இந்த 20 குணங்களையும் பின்பற்றினால், அவனை வேறு யாரும் வெல்ல முடியாது.

சாணக்கியன் இந்த ஒரு நீதி நூலில் மட்டுமே 330-க்கும் மேலான கவிதைகளைப் பொழிந்துள்ளான், வேறு பல நூல்களிலும், உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்திலும் ஆயிரத்துக்கும் மேலான பொன்மொழிகளை உதிர்த்துள்ளான்!

 

வாழ்க சாணக்கியன்!!! வளர்க அவர்தம் புகழ்!!!

 

சுபம்-

 

பத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்! (Post No.4559)

Date: 29  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-13 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4559

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

அதிசயப் புலவர் கவி காளமேகம் பற்றிய முந்தைய கட்டுரை எண் 4525 ; வெளியான தேதி 21-12-17- இதைப் படித்து விட்டுத் தொடரவும்.

 

      யம கண்டம் ஏறிப் பாடிய கவி காளமேகத்தின் அதிசயப் பாடல்கள்! –

குடத்திலே கங்கை அடங்கும்!!

 

ச.நாகராஜன்

 

 

6

பத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்!

 

அதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் தயாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.

அனைவரும் பதைபதைக்க அமர்ந்திருந்தனர்.

 

 

சமஸ்யா பூரணம் என்பதைப் பற்றி ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார். மீண்டும் அதை இங்கு விவரிக்கவில்லை.

 

ஈற்றடியாக ஒரு புதிரைக் கொடுத்து அதை விடுவிக்கக் கூறுவது சிறந்த புலவருக்கான ஒரு பரீட்சை – இதுவே சமஸ்யா பூரணம்.

‘குண்டக்க மண்டக்க’ என்று இந்தக் காலத்தில் கூறுவது போல  எதிராளியை மடக்குவதற்காகவே எதையாவது கூறி அதை ஈற்றடியாக அமைத்து முதல் மூன்று அடியைப் பூர்த்தி செய்யச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தது.

 

சமஸ்யா என்ற வார்த்தையே தமிழில் சமிசை ஆக ஆகி விட்டது.

 

முதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.

திருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.

பத்து பெரும் அவதாரங்களை நான்கு அடி கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா?

 

ஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.

பத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன? அரை வெண்பா போதுமே என்றார் அவர்.

கூட்டம் அயர்ந்து போனது.

பாடலைப் பாடினார் காளமேகம்:

மெச்சுபுகழ் வேங்கடவா! வெண்பாவிற் பாதியிலென்

இச்சையிலென் சென்ம மெடுக்கவா – மச்சாகூர்

மாகோலா சிங்காவா மாராமா ராமாரா

மாகோபா லாமாவா வாய்

 

கூட்டம் திகைத்தது. “மாகோலாசிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்”! என்ன இது?

காளமேகமே விளக்கினார்:

 

மெச்சு புகழ் – தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய

வேங்கடவா – திருவேங்கடம் உடையானே!

வெண்பாவில் பாதியில் – ஒரு வெண்பாவில் பாதியில்

என் இச்சையில் – எனது விருப்பப்படி

உன் சென்மம் எடுக்க – உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற

வா – வந்து அருள்வாயாக!

மச்சா – மச்சாவதாரத்தைச் செய்தவனே

கோலா – வராஹாவதாரத்தைச் செய்தவனே

கூர்மா – கூர்மாவதாரத்தைச் செய்தவவே

சிங்கா – நரசிங்கனே

வாமா – வாமனனே

ராமா – பரசுராமா!

ராமா – தசரத ராமா!

ராமா – பலராமா!

கோபாலா – கிருஷ்ணா

மா ஆவாய் – இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே!

மச்சம் – மீன்; கூர்மம் – ஆமை; கோலம் – பன்றி; வாமனம் – குறள்; மா- குதிரை (இந்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்)

 

சபையோர் ஆரவாரம் செய்ய அதி மதுரம் தலை கவிழ்ந்தார்.

 

 

7

 

Ancient Zodiac of Egypt

 

ஒரே வெண்பாவில் 12 ராசிகளை அடக்குங்கள்!

 

இராசிகளின் பெயர்களை ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள்!

 

அடுத்தாற்போல ஒரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.

ஒரு வெண்பாவில் அனைத்து ராசிகளும் வரவேண்டும்.முறையும் தொகையும் இருக்க வேண்டும். ஆனால் எந்த அடைமொழியும் இருத்தல் கூடாது. பாடுங்கள் பார்ப்போம் என்றார்.

 

காளமேகம் சிரித்தார். பாடலைப் பகர்ந்தார்:

 

பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க

டகஞ்சிங்க கன்னி துலாம்விர்ச் – சிகந்த

நுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்

வசையறு மிராசி வளம்

மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் (சிங்கம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் , மீனம் ஆகியவை பன்னிரெண்டும் ராசி வளம்.

 

கூட்டம் ஆரவாரித்தது.

8

 

 

Tri Murtis

ஒரு வெண்பாவில் மும்மூர்த்திகளின் அனைத்து விவரமும் அடக்க முடியுமா?

 

இன்னொரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.

இன்னும் கஷ்டமான பொருளைத் தந்து அவரைப் பாட முடியாதபடி மடக்க வேண்டும் என்று எண்ணி ஏராளமான விஷயங்களைக் கூறி அதை ஒரு வெண்பாவில் அடக்க வேண்டும் என்றார்.

அவர் கூறியது:

மும்மூர்த்திகளின் பெயர், அவர்கள் தின்னும் கறி, உண்ணும் உணவு, ஏந்துகின்ற ஆயுதம், அணிகின்ற ஆபரணம், ஏறுகின்ற வாகனம், வசிக்கும் இடம் ஆகிய இவை அனைத்தும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாட முடியுமா என்றார்.

இவ்வளவு விஷயங்களை ஒரு நாலடிப் பாவில் அடக்க முடியுமா?

 

முடியும் என்றார் காளமேகம். பாடினார் இப்படி:

சிறுவ னளைபயறு செந்நெற் கடுகு

மறிதிகிரி தண்டு மணிநூல் – பொறியரவம்

வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்

கற்றாழம் பூவே கறி

 

அனைவரும் பிரமிக்க காளமேகம் பாடலை விளக்கினார்.

வேதன் அரன் மாலுக்கு – பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு

கறி – கறி ஆவன

பயறு, சிறுவன், அளை – பயறு, பிள்ளை, வெண்ணெய் ஆகிய மூன்றும் தான்!

 

செந்நெல் கடுகு – நெல், விஷம், பூமி ஆகிய மூன்றுமே உணவாகும்.

தண்டு, மறி, திகிரி – தண்டம், மான், சக்கரம் ஆகிய மூன்றுமே ஆயுதங்களாகும்.

 

நூல், பொறி அரவம் ,மணி – உபவீதம், புள்ளியை உடைய பாம்பு, கௌஸ்துபம் மணி ஆகிய மூன்றுமே பூஷணம்

அன்னம், வெற்றேறு, புள் – அன்னம், வெள்ளிய இடபம், கருடன் ஆகிய இந்த மூன்றுமே வாகனங்களாகும்.

பூ, கல்தாழ், அம் – தாமரை மலர், கைலை மலை, ஆழ்ந்த பாற்கடல் ஆகிய இந்த மூன்றுமே வசிப்பிடமாகும்.

நான்கே வரிகள்.  அதில் அனைத்தையும் அடக்கிய காளமேகத்திற்கு யார் நிகர் ஆவார் என்று கூட்டம் ஆரவாரித்தது. சமஸ்யா (சமிசை) கேட்டவர் வெட்கம் அடைந்தார்.

ஆனால் அடுத்த தண்டிகைப் புலவர் எழுந்தார்.

 

 

9

Himalayas

ஈ ஏற மலை குலுங்கப் பாடுங்கள்!

 

ஈ ஏற மலை குலுங்கும்  என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.

எங்காவது ஈ ஏற மலை குலுங்குமா? இது என்ன இடக்கான அடியாக இருக்கிறதே என்று அனைவரும் நினைக்க, காளமேகம் கவி மழை பொழிந்தார்.

 

வாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்

தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்

பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த

புண்வாயி லீமொய்த்த போது

 

பொருளைக் காளமேகமே விளக்கினார்.

நாரணனை – ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்த நாராயணனை

பண்வாய் இடைச்சி – இசை போலும் சொல் உடைய  யசோதை பிராட்டி

பரு மத்தினால் அடித்த – பருத்த மத்தினால் அடித்த போது உண்டாகிய

புண் வாயில் –  புண்ணின் இடத்தில்

ஈ மொய்த்த போது – ஈ ஒன்று மொய்த்த போது

வாரணங்கள் எட்டும் –  எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் எட்டும்

மாமேருவும் – மகா மேரு மலையும்

கடலும் – ஏழு கடல்களும்

தாரணியும் – உலகங்களும் ஆகிய எல்லாம்

சலித்தன – அசைந்தன!

 

(சலித்தனவால் என்பதில் ‘ஆல்’ அசை. எல்லா உலகங்களும் அவற்றில் உள்ள திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் உள்ளிட்ட அனைத்தும் இறைவனது திரு வயிற்றில் வைத்துக் காக்கப்படுபவை ஆதலால் கண்ணன் அசைந்த போது அவையும் கூடவே அசைந்தனவாம்!)

எப்படி ஒரு அற்புதமான கற்பனை!

அனைவரும் கை தட்டிப் பாராட்டினார்கள்!!

 

 

River Ganga Mata (Ganges)

10

இல்லாத ஒன்றைச் சொன்னால் தான் இவர் அடங்குவார் என்று நினைத்தார் தண்டிகைப் புலவர்களில் ஒருவர்.

ஆகவே வேண்டுமென்றே குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.

அனைவரும் சிரித்தனர். குடத்தில் எப்படி கங்கை அடங்கும்?

காளமேகம் சொல் ஜாலக்காரர். பாடினார் இப்படி:

 

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை

இடத்திலே வைத்த விறைவர் சடாம

குடத்திலே கங்கை அடங்கும்.

 

கூட்டம் எழுந்து நின்று ஆரவாரித்தது. இறைவனின் ஜடா மகுடத்திலே கங்கை அடங்கும். உண்மை தான்.

கங்கை – கங்கா நதியானது

விண்ணுக்கு அடங்காமல் – ஆகாயத்திற்கு அடங்காமல்

வெற்புக்கு அடங்காமல் – மலைகளில் அடங்காமல்

மண்ணுக்கு அடங்காமல் – பூமிக்கு அடங்காமல்

வந்தாலும் – பெருக்கெடுத்து ஓடி வந்தாலும்

பெண்ணை இடத்திலே வைத்த – உமா தேவியை இடப்பாகத்திலே வைத்திருக்கும்

இறைவர் ஜடா மகுடத்திலே – சிவபிரானின் ஜடை மகுடத்திலே

அடங்கும் – அடங்கும்.

 

Boats in River Ganges

**

 

இப்படி அற்புதமான பொருளாழமும், சிக்கலான கருத்துக்களை நேர் படுத்தியும் அமைக்கப்படும் பாடல்கள் கொண்ட மொழி தமிழ் மொழி!

அதன் பெருமையை ஒருவராலும் முழுவதுமாக உரைக்க முடியாது!

***

சாணக்கியனின் புதிர்க் கவிதை! காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு! (Post No.4557)

சாணக்கியனின் புதிர்க் கவிதை! காலையில் சூது, மதியம் மாது, இரவில் களவு! (Post No.4557)

 

Written by London Swaminathan 

 

Date: 28 DECEMBER 2017 

 

Time uploaded in London- 6-46 am

 

 

Post No. 4557

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

சாணக்கியன்  ராஜ தந்திரி மட்டும் அல்ல; பொருளாதார நிபுணன் மட்டும் அல்ல; கவிஞனும் கூட! அவனது சாணக்கிய நீதியில் ஆங்காங்கு சில புதிர்க் கவிதைகளையும் பாடியுள்ளான்.

 

காலையில் சூதாடுங்கள்!

மதியம் பெண்களிடம் போங்கள்!

இரவில் திருடுங்கள்!

நல்ல போதனை ஐயா! போதையில் சொன்ன போதனையோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லாவா? மேலும் பார்ப்போம்.

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 11

ப்ராதர் த்யூதப்ரசங்கேன மத்யாஹ்னே ஸ்த்ரீ ப்ரசங்கதஹ

ராத்ரௌ சௌர்யப்ரசங்கேன  காலோ கச்சதி தீமதாம்

 

பொருள்

புத்திசாலிகள்/ அறிஞர்கள் காலையில் சூதிலும் மதியத்தில் மாது (மகளிர்) இடத்திலும், இரவில் திருட்டிலும் பொழுதைக் கழிக்கின்றனர்.

 

இதன் பொருள் வியாக்கியானக்காரர்களின்றி நமக்கு விளங்காது. இதோ அவர்கள் பகரும் உண்மைப் பொருள்:-

 

 

த்யூதப் ப்ரசங்க என்பது சூதாட்டம்– காலையில் அறிஞர்கள் மஹாபாரதம் படிப்பார்கள்

 

*தமிழில் நாம் வழங்கும் சூது என்ற சொல் சம்ஸ்கிருத ‘த்யூத’ என்பதுடன் தொடர்புடையது. இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்ததைக் காட்டும் ஆயிரக் கணக் கான சொற்களில் இதுவும் ஒன்று)

 

ஸ்த்ரீ ப்ரசங்க– என்பது பெண் பற்றியது; இங்கே பெண் என்பது உலக மஹா உத்தமி சீதையின் சரிதமான — ராமாயணத்தைக் குறிக்கும்; ஆகவே அறிஞர்கள் மதியத்தில் ராமாயணம் படிப்பார்கள் என்பது இதன் உண்மைப் பொருள்; ‘’ஸீதாயாஸ் சரிதம் மஹத்’’– என்பது ஆன்றோர் வாக்கு.

சௌர்ய ப்ரசங்க– என்பது திருட்டு பற்றியது; இது பாகவத புராணத்தைக் குறிக்கும். கிருஷ்ணனைவிட பெரிய திருடன் உண்டா? வீட்டில் வெண்ணை திருடினான்; காட்டில் கோபியர்களின் சேலைகளைத் திருடினான்; கும்பிடும் இடங்களில் எல்லாம் பக்தர்களின் உள்ளத்தைத் திருடினான்; மனம் கவர் கள்வன் அவன்; உள்ளம் கவர் செல்வன் அவன். ஆக, அறிஞர்கள் இரவு நேரத்தில் பாகவத புராணத்தைப் படித்து, போகும் வழிக்குப் புண்ணியம் தேடிக் கொள்வர்.

 

சாணக்கியனின் கற்பனையும் சொல்லும் நயமும் எல்லோர் மனதையும் வெல்லும்!

 

என்  சொந்தக் கருத்து:–

 

கண்ணன் திருடிய கோபியர்களின் சேலைகள் எல்லாம் எங்கே போயிற்று? அவன் ஏன் அப்படித் திருடினான்? என்றால் எதிர்காலத்தில்

திரவுபதிக்கு உதவத்தான்! நூற்றுக் கணக்கானோர் முன்னிலையில் துச்சாதனன் அவிழ்க்கப் போகும் நேரத்தில் அவன் கை ஓயும் அளவுக்கு சேலை மழை பொழியவே கண்ணபிரான் திருடினான்!

வாழ்க சாணக்கியன் புகழ்; வளர்க கண்ணன் புகழ்!!

 

-சுபம்–

அன்றாட நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி! (Post No.4555)

Date: 28  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-04 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4555

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஸ்ரீ ஜோஸியம் (ஞான ஆலய குழுமத்திலிருந்து வெளியாகும் மாதப் பத்திரிகை) டிசம்பர் 2017இல் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி!

 

ச.நாகராஜன்

 

ஹிந்து வாழ்க்கை முறையில் ஜோதிடத்தின் இடம் தனி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று குழந்தை மனதில் பதியும் படி அவ்வை பிராட்டி அருளினார். அதே போல ஜோதிடர் இல்லாத ஊரில் ஒரு தினமும் கூட வாழாதே என்று முதுமொழி கூறுகிறது.

 

ருணதாதா ச தேவக்ஞ: ஸ்ரோத்ரிய: சுஜலா நதி

யத்ர ஹோதே ந வித்யந்தே ந தத்ர திவஸம் வஸேத்

 

பழைய காலம் தொட்டு வழங்கி வரும் இந்த சுபாஷித ஸ்லோகத்தின் பொருள்: கடன் தந்து ஆதரிக்காத ஒருவர், ஜோதிடர், வேதங்களை அறிந்த குருக்கள், நல்ல நீரைக் கொண்டு ஓடும் நதி – இவையெல்லாம் எங்கு இல்லையோ அங்கு ஒருவன் ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது.

அன்றாட வாழ்விற்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசிக்காமல் ஒரு நல்ல காரியத்தைக் கூடத் தொடங்காத பண்புடைய வாழ்வு ஹிந்துத்வ வாழ்வு.

 

புத்தாடைகளை எந்த நட்சத்திரத்தில் அணிய வேண்டும்?

அவிட்டம், புனர்பூசம்,ஹஸ்தம், சித்ரா, ஸ்வாதி, விசாகம், அனுராதா (அனுஷம்), பூசம், அஸ்வினி ஆகிய நட்சத்திர தினங்களில் புத்தாடைகளை அணிய வேண்டும் என்று முகூர்த்த மார்த்தாண்டம் என்ற நூல் விளக்குகிறது.

புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் புத்தாடை அணிய முகூர்த்த மார்த்தாண்டம் அறிவுறுத்துகிறது.

 

கடனை வாங்க வேண்டி இருந்தால் எந்த நாளில் வாங்க வேண்டும்?

 

வீட்டு லோன், படிப்பு லோன், கல்யாண லோன் என்று இன்று லோன் இல்லாத வாழ்க்கையே கிடையாது. வங்கிக் கடன் இன்று சர்வ சாதாரணமாக ஆகி விட்டது. கடனை வாங்குவதற்குக் கூட நமது நூல்களில் வழிகாட்டுதல்கள் உண்டு.

புதன்கிழமைகளில் ஒரு போதும் கடன் வாங்காதே என்று ராமாசார்ய டீகா அறிவுறுத்துகிறது.

வாங்கிய கடனைத் திருப்பித் தர உகந்த நாள் செவ்வாய்க்கிழமை.

ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஹஸ்த நட்சத்திரம் வரும் நாளில் கடனை ஒரு போதும் வாங்கக் கூடாது

.

திதிகளில் கொண்டாட்டமும், விலக்க வேண்டியவையும்

 

ஹிந்து வாழ்க்கையும் முறையில் திதிகளுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு.

அக்ஷய திருதியை – திருதியை

விநாயக சதுர்த்தி – சதுர்த்தி

வஸந்த பஞ்சமி – பஞ்சமி

ஸ்கந்த ஷஷ்டி – ஷஷ்டி

ரத சப்தமி – சப்தமி

கிருஷ்ண ஜயந்தி – ஜன்மாஷ்டமி – அஷ்டமி

ராம நவமி – நவமி

மஹா சிவராத்திரி – மஹா சதுர்த்தசி – சதுர்த்தசி

சித்ரா பௌர்ணமி – பௌர்ணமி

மஹாளய அமாவாசை – அமாவாசை

இப்படி திதிகளை வைத்தே பல முக்கிய தினங்களை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

எந்த திதியில் எதை விலக்க வேண்டும் என்பதற்கும் கூட நம் சாஸ்திரங்கள் தீர்க்கமான வழிகாட்டுதலைத் தருகின்றன.

ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய தினங்களில் எண்ணெய் மற்றும் மாமிசத்தை விலக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதியும் விஷ்ணு புராணமும் கூறுகின்றன

 

ஆக இப்படிப் பல்வேறு விதிகளை நமது நலன் கருதி இதனால் ஏற்படும் நன்மை தீமைகளைக் கால ஓட்டத்தில் பரீட்சித்ததாலும், உள்ளுணர்வாலும் கண்ட நம் முன்னோர்கள் அவற்றைப் பல்வேறு சாஸ்திர நூல்களில் கூறியுள்ளார்கள்.

இவை அனைத்தையும் படித்துத் தேர்ந்தவரே ஜோதிடர். ஆகவே தான் அவரிடம் ஒரு காரியத்தைத் தொடங்கு முன் அதை என்று செய்யலாம் என்பதைக் கேட்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்தது.

அவரும் நல்ல நாளைக் குறிப்பதோடு எதை எதைச் சேர்க்க வேண்டும், எதை எதை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் கூட விதிமுறைகளை வகுத்திருக்கும் மதம் ஹிந்து மதம் என்பது ஆச்சரியமான விஷயம்.

***

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 10 (Post No.4538)

Date: 24  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-20 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4538

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 10

 

ச.நாகராஜன்

18

மாக்ஸ் முல்லர் இந்தியா பற்றிய தனது பிரமாதமான புகழுரைகளை “India : What it Can Teach Us” நூலில் தெரிவித்துள்ளார்.

மிக அருமையான மேற்கோளான “If I were asked under what sky” என்று ஆரம்பிக்கும் மேற்கோளை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்.ஆகவே அதை இங்கு மீண்டும் தரவில்லை.

இது தவிர குறிப்பிடத்தகுந்ததாக இலங்கும் மூன்று  மேற்கோள்கள் கீழே தரப்படுகின்றன:

“The true history of the world must always be the history of the few; and as we measure the Himalaya by the height of Mount Everest, we must take the true measure of India from the poets of the Veda, the sages of the Upanishads, the founders of the Vedanta and Sankhya philosophies, and the authors of the oldest law-books, and not from the millions who are born and die in their villages, and who have never for one moment been roused out of their drowsy dream of life.”
― Friedrich Max MüllerIndia: What it Can Teach Us

*

“Whatever sphere of the human mind you may select for your special study, whether it be language, or religion, or mythology, or philosophy, whether it be laws or customs, primitive art or primitive science, everywhere, you have to go to India, whether you like it or not, because some of the most valuable and most instructive materials in the history of man are treasured up in India, and in India only.”
― Friedrich Max MüllerIndia: What Can it Teach Us? A Course of Lectures Delivered before the University of Cambridge

*

“Now let us look to the ancient inhabitants of India. With them, first of all, religion was not only one interest by the side of many. It was the all-absorbing interest; it embraced not only worship and prayer, but what we call philosophy, morality, law, and government, —all was pervaded by religion. Their whole life was to them a religion—everything else was, as it were, a mere concession made to the ephemeral requirements of this life.”
― Friedrich Max MüllerIndia: What it Can Teach Us

 

*

சுருக்கமாகச் சொல்லப் போனால் உலகின் வரலாறையே வேதத்திலிருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் மாக்ஸ்முல்லர்.

எதை எடுத்துக் கொண்டாலும் சரி, மதம், மொழி, பழைய வரலாறைச் சொல்லும் புராணம், தத்துவம், பழக்க வழக்கங்கள், சட்டம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சரி, நீங்கள் இந்தியாவிற்குத் தான் போக வேண்டும். ஏனெனில் இந்தியாவில், இந்தியாவில் மட்டும் தான் அந்த அறிவு பொக்கிஷமாகக் காக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்தியாவில் மதம் என்பது ஒரு அம்சம் மட்டும் என்பதல்ல; அது வழிபாடு, பிரார்த்தனை என்பது மட்டுமல்ல; தத்துவம், நீதி, சட்டம், அரசு ஆகிய அனைத்தும் மதத்தில் பரவி இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் மதம் தான்.

 

இப்படி இந்தியாவை ஓங்கிப் புகழ்ந்து ஹிந்து மதத்திற்குப் புகழாரம் சூட்டி விட்டார் மாக்ஸ்முல்லர்.

*

அறுபதாவது வயதில் இப்படி இந்தியாவை மாக்ஸ்முல்லர் புகழ்ந்த போது விவேகானந்தருக்கு வயது 20.

அவர் நரேந்திரன் என்ற பழைய பெயரிலிருந்து விவேகானந்தராக மாறி சிகாகோ கலைக் கழகத்தில்  சர்வ மத மகாசபையில் உலகம் வியக்கும் சொற்பொழிவை ஆற்றிய ஆண்டு 1893.

அப்போது விவேகானந்தரின் வயது 30.

மூன்று வருடங்கள் கழித்து 1896ஆம் ஆண்டில் 28-5-1896 அன்று விவேகானந்தரை மாக்ஸ்முல்லர் சந்தித்தார்.

இந்த சந்திப்பு பற்றியும் மாக்ஸ்முல்லர் பற்றியும் விவேகானந்தர் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளார்.

அதை அடுத்துப் பார்ப்போம்.

பிறகு ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்தால் மாக்ஸ்முல்லர் மர்மம் விடுபடும், இல்லையா?!

****               தொடரும்