
RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN
swami_48@yahoo.com
Date: 4 September 2018
Time uploaded in London – 6-34 am (British Summer Time)
Post No. 5392
TAMIL WORDS IN THE RIG VEDA
உலகின் மிகப்பழைய நூல் ரிக்வேதம். கி.மு 1700 முதல் கி.மு.6000 வரை பலராலும் தேதி குறிப்பிடப்பட்ட நூல். இந்துக்களைப் பொறுத்தமட்டில் இதன் பழமைக்காக மதிக்கவில்லை. வேதம் இன்றி இந்து மதம் இல்லை. இந்தப் பெருமைமிக்க நூலில் நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன. மொழியியல் விதிகளைப் பயன்படுத்திப் பார்த்தால் மறைந்திருக்கும் மேலும் பல தமிழ்ச் சொற்கள் மேலுக்கு வரும்.
எதற்காக இந்த ஆராய்ச்சி?
நிறைய பேர் ரிக் வேத ஸம்ஸ்க்ருதம் பழமையானது என்றும் அதற்குப் பின்னர் வந்த பாணினி-காளிதாசன் கால ஸம்ஸ்க்ருதம் வேறு என்றும் சொல்லுவர். ஓரளவுக்கு அது உண்மைதான். இது எல்லாப் பழைய மொழிகளுக்கும் பொருந்தும். பழங்கால தமிழ், ஆங்கிலம் ஆகிய எந்த மொழியின் பழைய இலக்கணமும் வேறு; சொற்களின் பொருளும் வேறு.

இவ்வளவு பழமை வாந்த நூலில் உள்ள சொற்களை நாம் இன்றும் பயன்படுத்துவது வியப்புக்குரிய விஷயம்!
இதோ சில தமிழ்ச் சொற்கள்:-
எண்கள் பற்றி:-
ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண்களில்முதலில் மண்டலம், பின்னர் மந்திரத் துதியின் எண், அதிலுள்ள மந்திர வரியின் எண் என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இந்த எண்களை எடுக்க உதவிய நூல் பகவான் சிங்கின் ‘வேதிக் ஹரப்பன்ஸ்’ Vedic Harappans என்ற நூலாகும்.
உஷ் ட் ர – ஒட்டகம் (ரிக். 1-138-2; 8-5-37;8-6-48)
கர்தப- கழுத (ர=ல)/ கழுதை (1-29-5; 3-53-23)
காகம்பிர- காகம் (6-48-17)
மயூர- மயில் (1-191-4; 3-45-1; 8-1-25)
சிம்ஹ- சிங்கம் (5-44-1)
உட்ச- ஊற்று (2-16-7)
கூப – கூவம்/ கிணறு 1-105-17
குல்யா – குளம் , கால்வாய்
நீர் – நீர்
பூமி-புவி 2-14-7
யூப – 5-2-7 சங்கத் தமிழ்
புஷ்ப/ பூ – அதர்வ 8-712
பலி- 1-70-9
மது- தேன் 1-90-6
மத்ஸ்ய/ மச்ச – 10-68-8
ரத்ன- 1-20-7
ரஜ்ஜுப் பொருத்தம் – ரஜ்ஜு 1-162-8
ராஜசூயம்- அதர்வ – 4-8-1
புறநானூற்றின் அடிக்குறிப்பில் ராஜசூயன் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் உள்ளது
சங்கு- அதர்வ 4-10-1
களம்- நெல் அடிக்கும் களம் (10-48-7)
XXXX

சில சொற்களை அப்படியே தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளனர். அது ரிக்வேத காலம் முதல் இன்று வரை புழக்கத்தில் இருப்பதும் வியப்புக்குரிய செய்தி. இதோ சில சொற்கள்:
ரிஷபம் (6-16-47) (இடபம்/விடை – தேவாரத்தில்
வாரணம் (யானை) – ஆண்டாள் வாரணம் ஆயிரம்
கபி/கவி – குற்றாலக் குறவஞ்சி (10-86-5)
கோ (3-1-23)- கோவலன்/ கோபாலன் சிலப்பதிகாரம்
xxx
இன்னும் சில சொற்கள் சர்வ சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பத்திரிக்கைகளிலும் புழக்கத்தில் இருக்கின்றன.
ஸர்ப- சர்ப்பம்/பாம்பு (10-16-6),serpent
ம்ருக (மான்) – மிருகம்
மேஷ- மேட ராசி/ மேஷராசி
வராக – வராஹ அவதாரம்
ஹம்ச- அன்னம் (2-34-5)
ஆரண்யப் பசு – காட்டு மிருகம்/ எருமை (10-90-8) ;ஆரண்யம் (காடு) என்ற சொல் வேதாரண்யம் முதலிய ஊர்ப்பெயர்களில் காணப்படும்
பாச (கயிறு)- 2-27-16)
பஹு அன்ன – நிறைய உணவு
(பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ)
அன்னம் – உணவு இப்பொழுதும் புழக்கத்தில் உள்ள சொல் – அன்ன தானம்
அங்குச- அங்குசம் (8-17-10)
கச (கசையடி)- (5-83-3)
தண்ட – தடி (8-33-6)
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – தமிழ்ப் பழம்ழொழி
பந்தன – கட்டுதல் (5-12-4); ரக்ஷா பந்தன்
தான்ய – தானியம் (5-53-13)
பீஜ – விதை (ப=வ) (5-53-13)
சகன் – சாணம் (அதர்வண வேதம் 3-14-4)
வது/ பெண்5-37-3
ஸ்வப்ன – சொப்பனம் – 2-28-10
வசனம், வாக்கியம், வார்த்தை

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?
ரிக் வேதம் என்பது உலகிலேயே பழைய நூலாக இருந்தாலும் அவற்றிலுள்ள சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் தவிர நூற்றுக் கணக்கான சொற்கள் உள்ளன. இன்னும் ஆங்கிலத்தில் நமக்குத் தெரிந்த சாதாரன சொற்களையும் ஒப்பிட்டால் அடுத்த நிமீடமே நமக்கு ஏறத்தாழ ஆயிரம் ரிக்வேதச் சொற்கள் தெரிந்து விடும். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு அறிஞர்கள் வேதங்களைப் பற்றி எழுதியுள்ளனர். இப்படி வெளிநாட்டுக்காரர்களே வேதத்தைப் படிக்க இயலுமானால் நம்மால் முடியாதா? இதை உணர்ந்து அனைவரும் முறையாக வேதத்தைப் பயிலல் வேண்டும்.
நிற்க
நான் ஒரு புதிய கருத்தை வெளியிட்டு வருகிறேன். பரஞ்சோதி முனிவர்கள் முதலானோர் மறைமுகமாக வெளியிட்ட கருத்து அது. அதாவது தமிழும் ஸம்ஸ்ருதமும் சிவ பெருமானின் உடுக்கையின் இரண்டு பக்கங்களில் இருந்து பிறந்தன. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகள்.
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர்
கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்

கடவுள் தந்த தமிழ்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)
அவ்வாறில்லாவிடில் சிவ பெருமான், அகத்தியனை வடக்கிலிருந்து அனுப்பித் தமிழுக்கு இலக்கணம் செய்யக் கேட்டிருக்க மாட்டார். இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் முதலிய பல அம்சங்களில் இரண்டும் ஒன்றே!

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்க்ருதம்!!
–subham–