பில்லியன் டாலர் பிறந்த நாள் விழா: இந்துக்கள் கண்டுபிடிப்பு!

baba-birthday-1

Sri Sathya Sai baba’s Sahasra Chandra Darsana Festival

Research paper No 1672; Dated 24th February 2015

Written by London swaminathan

நாகரீகம் வாய்ந்த ஒரு சமுதாயம்தான் “ரோட்டி, கப்டா, அவர் மகானு”க்கு (உணவு, உடை, உறைவிடம்) மேல் சிந்திக்க முடியும். 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வேத இலக்கியங்களைப் படைத்து அவற்றை வாய்மொழி மூலமாகவே பாதுகாக்க வேண்டும் என்றால் அது எத்தகைய ஒரு உயரிய சிந்தனை உடைத்தாயிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். 1500 ஆண்டுகளுக்கு முன்னரே ‘பெர்fயூம்’ செய்வது எப்படி என்று (வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதா) நூல் எழுத வேண்டுமானால் அவர்கள் நாகரீகத்தில் எவ்வளவு முன்னேறி இருக்க வேண்டும்?

இதே இந்துக்கள்தான் பிறந்த நாள் கொண்டாடும் வழக்கத்தையும் உலகிற்குக் கற்பித்தார்கள். இன்றோ, அது மேல் நாட்டில் பில்லியன் டாலர் ‘பிஸினஸ்’ ஆகிவிட்டது. பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள், பிறந்த நாள் ‘கேக்’, திடுக்கிடும் ‘சர்ப்ரைஸ் பார்ட்டி’கள், பிறந்த நாள் பலூன், உணவு படைப்பு என்று இப்படி எத்தனையோ தொழில்கள் வளர்ந்துவிட்டன. எப்படி ‘பெர்Fயூம்’ (ஸெண்ட்) செய்வது நம் நாட்டில் துவங்கி இன்று பிரான்ஸ் நாட்டில் பில்லியன் டாலர் வணிகம் ஆனதோ அதே போல இந்த பிறந்த நாள் வைபவ விஷயங்களும் மேலை நாடுகளில் பெரும் வணிகம் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் மூல காரணம் இந்துக்கள் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?

நாம் எப்படி துவக்கினோம்?

கிருஷ்ண ஜயந்தி

ராமர் ஜயந்தி (ராம நவமி)

ஹனுமன் ஜயந்தி

சங்கர ஜயந்தி, ராமானுஜ ஜயந்தி, ரமண ஜயந்தி, ராமகிருஷ்ண ஜயந்தி, மத்வ ஜயந்தி என்று ஆரம்பித்து வைத்தோம். மாற்று மதத்தினரும் இதைப் பிடித்துக் கொண்டார்கள்.

புத்த ஜயந்தி

ஏசு ஜயந்தி (கிறிஸ்துமஸ்)

முகமது ஜயந்தி (மிலாடி நபி)

என்று அவரவர் கொண்டாடத் துவங்கினர். நாம் இதற்கும் மேலாக ஒரு படி போனோம்:

(ஜயந்தி என்றால் பிறந்த நாள்)

தேவர் ஜயந்தி

காந்தி ஜயந்தி

நேரு ஜயந்தி (குழந்தைகள் தினம்)

ராதா கிருஷ்ணன் ஜயந்தி (ஆசிரியர் தினம்)

என்று மனிதர்களுக்கும், புனித மகான்களுக்கும் கொண்டாடத் துவங்கினோம்.

Sahasra_Chandra_Darshanam_Yagnam_Mahotsavam

புத்தகத்துக்கு பிறந்த நாள் விழா!!!

பின்னர் இதற்கும் மேலாகப் போனோம்:

கீதா ஜயந்தி என்று பகவத் கீதை உலகில் தோன்றிய நாளையும் கொண்டாடத் துவங்கினோம். உலகில் புத்தகத்துக்கு ஜயந்தி (பிறந்த நாள்) கொண்டாடும் ஒரே இனம் இந்துக்கள்தான்!

பிறந்த நாள் கொண்டாடுவது 40 சம்ஸ்காரங்களில் ஒன்றாக இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஆண்டு நிறைவில் ஆயுஷ் ஹோமம் என்று பெரிய ஹோமம் நடத்துவோம் அல்லது கோவிலுக்கு குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் விசேட அபிஷேக ஆராதனைகளை செய்வோம். இப்போதெல்லாம் மேலை நாடுகள் போல ‘கேக்’கும் வெட்டத் துவக்கி விட்டோம்.

ஆனால் இந்துக்கள் இத்தோடு நிற்கவில்லை. தினமும் பிராமணர்கள் சொல்லும் வேத மந்திரத்தில் நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க (பஸ்யேம சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம், மோதாம சரதஸ் சதம், ப்ரப்ரவாம சரதஸ் சதம்…..) என்று சொல்வதால் 100 ஆண்டுகள் வரை என்ன என்ன பிறந்த நாள் விழா என்று சாத்திரங்கள் பட்டியலே போட்டுக் கொடுத்துவிட்டன. உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இத்தகைய அதிசயத்தைக் காண இயலாது.

bday-cake1

ஜயந்தி நாட்கள்

கிருஷ்ண ஜயந்தி (ஸ்ரீ ஜயந்தி, கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி)— சிராவண மாத கிருஷ்ண பக்ஷ எட்டாம் நாள்(அஷ்டமி)

ராம ஜயந்தி (ராம நவமி)–சித்திரை மாத சுக்ல பக்ஷ ஒன்பதாம் நாள் (நவமி)

சங்கர  ஜயந்தி- வைகாசி மாதம் சுக்லபக்ஷ பஞ்சமி

கீதா ஜயந்தி- மார்கசீர்ஷ சுக்லபக்ஷ ஏகாதசி

ஹனுமன் ஜயந்தி – சித்திரை மாத பௌர்ணமி (சித்ரா பௌர்ணமி)

ராமானுஜ ஜயந்தி — சித்திரை திருவாதிரை நட்சத்திர நாள்

மத்வ ஜயந்தி —- விஜய தசமி நாள் (ஆஸ்வீன சுக்ல பக்ஷ தசமி)

புத்த ஜயந்தி – வைகாசி மாத பௌர்ணமி (வைகாசி விசாகம்)

ஏசு ஜயந்தி (கிறிஸ்துமஸ்)- டிசம்பர் 25

காந்தி ஜயந்தி- அக்டோபர் 2

நேரு ஜயந்தி (குழந்தைகள் தினம்)- நவம்பர் 14

ராதா கிருஷ்ணன் ஜயந்தி (ஆசிரியர் தினம்)- செப்டம்பர் 5

முக்கியமான பெரியோர்கள் ஏப்ரல்/மே மதாம் வரும் (சித்திரை/வைகாசி) தேதிகளில் பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டதால் ஆங்கில தேதி மாறி மாறி வரும்)

card-display

உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்

போன வாரம் லண்டன் முருகன் கோவிலில் நடந்த ஒரு சதாபிஷேகத்துக்குப் போனேன். அங்கு லண்டன் முருகன் கோவில் தலைமை குருக்கள் திரு.நாகநாத சிவம் நல்ல சொற்பொழிவு ஆற்றி ஒரு நூலையும் எல்லோருக்கும் கொடுத்தார். அது விக்ரமசிங்கபுரம் செல்ல மணி பட்டர் எழுதியது. அவர் சொல்லும் அபூர்வ விஷயங்களைக் காண்போம்:

61- ஆவது பிறந்த தினம் – சஷ்டி அப்த பூர்த்தி

70- ஆவது பிறந்த தினம் – பீம ரத சாந்தி

81- ஆவது பிறந்த தினம் – சதாபிஷேகம்

100- ஆவது பிறந்த தினம் – பூர்ணாபிஷேகம்

இது மட்டுமல்ல. இதற்கிடையில்

பீம சாந்தி – 55 ஆவது பிறந்த தினம்

உக்ர ரத சாந்தி -60 ஆவது பிறந்த தினம்

சஷ்டிதம அப்த பூர்த்தி- 61 ஆவது பிறந்த தினம்

பீம ரத சாந்தி — 70 ஆவது பிறந்த தினம்

ரத சாந்தி – 72 – ஆவது பிறந்த தினம்

விஜய சாந்தி –78 ஆவது பிறந்த தினம்

ப்ர பௌத்ர சாந்தி – பேரனுக்கு ஆண்குழந்தை பிறந்தவுடன். அப்போது கனகாபிஷேகமும் செய்வர்.

சதாபிஷேகம் – 80 ஆண்டு 8 மாதம் முடிந்த பின்னர்

ம்ருத்யுஞ்சய சாந்தி – 85 ஆவது பிறந்த தினம்

100 வயது –பூர்ணாபிஷேகம்.

இதற்கான காரணம், முறைகள் ஆகியவற்றையும் செல்லமணி பட்டர் விளக்கி இருக்கிறார்.

Greetingcardsretaildisplay

சுருக்கமாக சதாபிஷேகம் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். கிருஷ்ணர் வணங்கக் கூடிய ஆறு பேர் யார் யார் என்று நேற்று நான் எழுதிய கட்டுரையில் சஹஸ்ர சந்திர தர்ஸி என்பதை விளக்கி இருந்தேன். யார் ஒருவர் மூன்றாம் பிறை சந்திரனை ஆயிரம் முறை பார்க்கிறார்களோ அவர் கிருஷ்ணர் வணங்கக்கூடிய அளவுக்கு பெரிய மஹான். சத்ய சாய் பாபாவும் பெரிய அளவில் சஹ்ஸ்ர சந்திர தர்சன – சதா பிஷேக விழாவைக் கொண்டாடினார். அவர் நமக்கெல்லாம் இதன் அருமை பெருமை புரிய வேண்டும் என்று அதைச் செய்தார்.

29 நாட்களுக்கு ஒரு முறையே பிறை தரிசனம் கிடைக்கும் ஆதலால் 1000 முறை தரிசிக்க 80 ஆண்டு எட்டு மாதம் ஆகிவிடும். இந்த பிறந்த நாள் விழாக்களில் சஷ்டிதம அப்த பூர்த்தியின் போது மீண்டும் ஒரு முறை மனைவிக்கு தாலி கட்டுவதும் உண்டு. இந்து முறைப்படி ஆண்டுகள் எண்ணிக்கை 60. இதற்குப் பின்னர் மீண்டும் 60 ஆண்டுகள் வாழ்வது லட்சியம். மஹாத்மா காந்தியும்கூட நா

ன் இந்து முறைப்படி 120 ஆண்டுகள் வாழ விருப்பம் என்று சொல்லி இருந்தார்.

ஆக எல்லா ஜயந்திகளையும் நாம் கொண்டாட முடியவிட்டாலும் 60, 80, 100 ஆகிய ஆண்டுகளில் கொண்டாடலாம். உலகம் இந்துக்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. நாம் கற்பித்த இந்த விழாவை இன்று உலகில் உள்ள எல்லா மதத்தினரும் கொண்டாடுகிறார்கள்.

baba

நூறாண்டுக் காலம் வாழ்க!

நோய் நொடி இல்லாமல் வாழ்க!!

புதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற சோதிடம்!!

perched on a brach

Written by London swaminathan

Research Article No.1669; Dated 23 February 2015.

வராகமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவிகள் ஆரூடம்

சகுனம் என்றால் பறவை என்று சம்ஸ்கிருதத்தில் அர்த்தம். இதை வைத்து தான் சகுனம் பார்ப்பது, நல்ல சகுனமா?, கெட்ட சகுனமா? என்ற சொற்றொடர்கள் உருவாயின. தமிழ் நாட்டில் கிளி ஜோதிடம் உண்டு. ஊருக்கு ஊர் இத்தகைய கிளி சோதிடர்களைக் காணலாம். ஆனால் வராகமிகிரர் கூறுவது வாலாட்டிக் குருவி ஜோதிடம்!

பஞ்சாங்கங்களில் காணப்படும் பல்லி சொல்லுக்குப் பலன், பக்ஷி சாஸ்திரம் ஆகியவை நமக்குத் தெரியும். ஆனால் வராஹமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவி விஷயம் நமக்குத் தெரியாது. சங்கத் தமிழர்களுக்கு இதில் நம்பிக்கை உண்டு. பல்லி சொல் கேட்டு, காட்டுப் பன்றி கூட வெளியே போக பயந்த சங்க இலக்கியப் பாடலை ஏற்கனவே கொடுத்துள்ளேன். வராஹமிகிரரோ நரி ஜோதிடம், பறவைகள் ஜோதிடம் எல்லாவற்றுக்கும் பல அத்தியா யங்களை ஒதுக்கியுள்ளார். அவர் ஒரு விஞ்ஞானி. இருந்தபோதிலும் 1500 ஆண்டுக ளுக்கு முன்னர் இந்தியாவில் நிலவிய எல்லா விஷயங்களையும் தொகுத்து அளிப்பது அவர் தம் பணி.

Whit browed WagtailBP1

இனி, வாலாட்டிக்குருவிகள் பற்றி அவர்தம் பிருஹத் சம்ஹிதா – என்னும் அற்புதமான சம்ஸ்கிருத கலைக் களஞ்சியத்தில் சொல்லும் சுவையான சில விஷயங்களை மட்டும் காண்போம்.

“வாலாட்டிக் குருவிகளைப் பார்ப்பது பற்றி பழங்கால முனிவர்கள் சொன்னதை இதோ எடுத்துரைக்கப் போகிறேன்.

“முகம் முதல் கழுத்து வரை கறுப்பாக இருக்கும் வாலாட்டிகளுக்கு சம்பூர்ணம் என்று பெயர். இதை முதலில் கண்டால் உங்கள் ஆசை அபிலாஷைகள் நிறைவேறும்.

“வெள்ளைக் கழுத்து, அதில் கறுப்புப் புள்ளிகளுடன் உடைய வாலாட்டிக் குருவிகளுக்கு ரிக்தா என்று பெயர். அதைப் பார்த்தால் ஏமாற்றமான செய்திகளே கிடைக்கும்.

“மஞ்சள் நிறத்திலுள்ள வாலாட்டிக் குருவிகளுக்கு கோபிலா என்று பெயர். அதைப் பார்த்தால் தொல்லைகளே வரும்.

“கீழ்கண்ட இடங்களில் வாலாட்டிக் குருவிகளைப் பார்த்தால் மங்களகரமான செய்திகளே கிடைக்கும்:– பூ, பழம் உடைய மரங்கள், கோவில், நல்லோர் கூடிய சபைகள், பசு,யானை, குதிரை, பாம்பு ஆகியவற்றின் முதுகில் அமர்ந்த பறவைகள், புனித ஏரி, ஆறு,குளங்கள், யாக சாலைகள், மாட்டுத் தொழுவம் ஆகியன

yellow wagtail

காதலன், காதலி கிடைக்க……………..

“வண்டல் மண்ணில் பறவையைப் பார்த்தால்- இனிய உணவு

மாட்டுச் சாணத்தில் பறவையைப் பார்த்தால் – பால், தயிர், வெண்ணெய்

புல் தரை – துணிகள்

வண்டிகள் மீது – நாட்டுக்கு சேதம்

வீட்டுக் கூரை- செல்வம் இழப்பு

தோல் முதலியன – சிறை வாசம்

ஆடு, செம்மறி ஆட்டின் முதுகு மேல் பறவையைப் பார்த்தால் – காதல் கைகூடும்; காதலன் – காதலி உடனே சேருவர்!

on buffalo

எதிரிடைப் பலன்கள்

வாலாட்டிக் குருவிகளை கீழ்கண்ட இடங்களில் பார்த்தால் கெட்ட செய்திகளே கிடைக்கும்:–

சாம்பல்- எலும்புகள் மீது, சுடுகாட்டில், மண்ணாங்கட்டியில், கழுதை, ஒட்டகம், எருமை முதுகின் மேல், வீட்டுக் காம்பவுண்ட் சுவர் மீது

சிறகு அடிக்கும் நிலையில், மாலை வேளையில்

ஆனால் தண்ணீர் குடிக்கும் நிலையிலும் காலை நேரத்திலும் பார்த்தால் நல்ல செய்தி வரும்.

Ruby_Jewel

புதையல் வேண்டுமா?

வாலாட்டிக் குருவிகள் புணரும் இடத்தில் பூமியைத் தோண்டிப் பார்த்தால் புதையல் கிடைக்கும்.

உணவைக் கக்கும் இடத்தில்  மைகா/ அபிரகம் கிடைக்கும்.

மலஜலம் கழிக்கும் இடத்தில் நிலக்கரி கிடைக்கும்

விதி விலக்கு

எல்லா விதிகளுக்கும் சில விதிவிலக்குகள் இருக்கும்; எல்லா நோய்களுக்கும் மருந்துகள் இருக்கும். அதே போல எல்லா பாபங்களுக்கும் பரிகாரம் உண்டு.

வராஹமிகிரர் சொல்லுகிறார்: மேற்கண்டவற்றில் ஒரு அரசன் தீய நிமித்தங்களைக் கண்டாலும், அவன் பிராமணர்களையும் குரு மார்களையும், புனித மகான்களையும் வணங்கினாலோ ஒரு வாரத்துக்கு மாமிச உணவு சாப்பிடாமல் இருந்தாலோ தீமைகள் வாரா.

என் கருத்து:

இந்த நூலில் சொன்ன வாலாட்டிக் குருவி எது என்பதை முதலில் நாம் சரியாக இனம் காண வேண்டும். நான் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தழுவி எழுதியுள்ளேன். பின்னர் அதை நம்புவதும் நம்பாததும் தனி நபரின் அனுபவத்தில் தெரியும்.

இது ஒரு புறம் இருக்க, பொய்யோ நிஜமோ, நம்முடைய முன்னோர்கள் 2000 ஆண்டுக ளுக்கு முன்னர் இயற்கையை எவ்வளவு கூர்ந்து கவனித்துள்ளனர் என்பதை நினைக்கையில் வியப்பு மேலிடுகிறது.

இளமையும் முதுமையும் சேர்ந்து இருக்க முடியுமா!

blind and lame

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

Nyayangal Part 16

Written by S Nagarajan

Article No.1667; Dated 22 February 2015.

by ச.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

अन्धपंगुन्यायः

Andha pangu nyayah

அந்த பங்கு நியாயம்

அந்தகன் – குருடன் பங்கு – முடவன்

குருடனும் முடவனும் பற்றிய நியாயம் இது.

நடக்க முடியாத முடவன் குருடனின் தோள்களின் மீது ஏறி உட்கார்ந்து கொள்ள, பார்க்க முடியாத குருடனுக்கு அந்த முடவன் வழி காட்டிச் சென்றான்.

 

நல்ல ஒற்றுமையுடன் இணைந்து வாழக் கற்றுக் கொண்டால் குறைகளை எல்லாம் வென்று வெற்றி பெறலாம் என்பதை வலியுறுத்த வந்த நியாயம் இது!

 

பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்கள் நிஜமாகவே இந்த நியாயத்திற்கான சரியான உதாரணமாகத் திகழ்கின்றனர். இவர்களில் ஒருவர் குருடர். இன்னொருவர் முடவர். முடவர் குருடரின் தோள்களில் அமர்ந்து வழிகாட்டுவார். வெண்பா பாடுவதில் வல்லவர்களான இவர்களில் ஒருவர் முதல் இரண்டு அடிகளைப் பாட அடுத்தவர் அடுத்த இரண்டு அடிகளைப் பூர்த்தி செய்வது வழக்கம். அருமையான பாடல்களை இவர்கள் இயற்றியுள்ளனர்!

BurundiBlindLame

  अर्दधजरतान्यायः

arddha jarata nyayah

 

அர்த்த ஜரதா நியாயம்

இரண்டு எதிரிடையான நிலைகள் – எடுத்துக்காட்டாக இளமையும் முதுமையும் – ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும் நியாயம் இது.

இரண்டு எதிரெதிர் விஷயங்கள் ஒரே ஒரு இடத்தில் இருக்க முடியாதல்லவா! சில பேர்களிடத்தில் அபூர்வமாக இரு எதிரெதிர் நிலைகள் இருந்தால் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். ஆனால் அதே சமயத்தில் இளமையும் முதுமையும் நிச்சயமாக ஒருவரிடத்தில் இருக்கவும் முடியாது. ஆக, அதையும் இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது!

अर्दधवैशसन्यायः

 

arddha vaisasa nyayah

அர்த்த வைஷச நியாயம்

ஒரு மிருகத்தை இரண்டாக வெட்டுவது பற்றிய நியாயம் இது.

ஒரு  மனிதன் கோழி ஒன்றின் தலையையும், கழுத்தையும், கால்களையும் வெட்டினான். ஆனால் அதன் வயிற்றை மட்டும் அப்படியே வெட்டாமல் விட்டிருந்தான். ஏனெனில் அது தானே முட்டையிடும் பகுதி! முட்டை வெளியில் வர வேண்டும் என்பதற்காக அதை மட்டும் வெட்டவில்லை!

 

எள்ளி நகைப்பதற்குரிய விஷயம் அல்லவா இது! அப்படிப்பட்ட முட்டாளின் புத்தியை என்னவென்று சொல்வது! இப்படி முட்டாள்தனமான, அபத்தமான, விநோதமான, விஷயத்தை ஒருவன் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

boat best

अहिभुक्-कैवर्तन्यायः

ahibhuk kaivarta nyayah

அஹிபுக் கைவர்த நியாயம்

 

அஹிபுக்கும் படகோட்டியும் என்னும் நியாயம் இது.

இந்த நியாயத்திற்குப் பின்னால் ஒரு குட்டிக் கதை உண்டு.

அஹிபுக் என்ற ஒருவன், ஆற்றைக் கடந்து எதிர்க்கரைக்குச் செல்வதற்காக படகு ஒன்றில் ஏறினான்.

 

படகிலோ ஏராளமான பேர்கள் இருந்தனர். அஹிபுக்கிற்கு பயம் வந்து விட்டது. படகில் செல்லும் போது தான் வேறு யாராவது ஒரு ஆளாக மாறி விட்டால் என்ன செய்வது. தன்னை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்ற பயம் அவனுக்கு! ஆகவே “புத்திசாலித்தனமாக” ஒரு  கயிறை எடுத்துத் தன் காலில் கட்டிக் கொண்டான். ஆஹா, கயிறு காலில் இருந்தால் அது அஹிபுக்! தன்னைத் தானே மெச்சிக் கொண்டவன் தூங்க ஆரம்பித்தான். படகும் நகர ஆரம்பித்தது.

படகோட்டி விசித்திரமான செய்கைகளை உடைய அஹிபுக்கை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்தான். அவன் தனக்குத் தானே புலம்புவதையும் கயிறு கட்டித் தனக்கென்று ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொள்வதையும் கண்டு புன்முறுவல் பூத்தான். படகு நகரத் தொடங்கியதும் அஹிபுக் தூங்குவதைப் பார்த்த அந்தப் படகோட்டி, அஹிபுக்கின் காலில் கட்டி இருந்த கயிறை அவிழ்த்துத் தன் காலில் கட்டிக் கொண்டான். படகு கரை சேர்ந்தது. அஹிபுக்கும் விழித்தான். என்ன ஆச்சரியம்! படகோட்டியின் காலில் கயிறு கட்டி இருந்தது. தான் ‘படகோட்டியாக’ மாறி விட்டதைக் குறித்து அவன் மனமகிழ்ந்தான்.

இப்படிப்பட்ட முட்டாள்களைக் குறிக்க – அஹிபுக்குகளைக் குறிக்க –  இதை விட வேறு எந்த நியாயம் தான் பொருத்தமானதாக இருக்க முடியும்!

boat1

अग्न्यानयनन्यायः

agnyanayana nyayah

அக்ந்யானயன நியாயம்

அக்னியைக் கொண்டு வரச் சொல்லும் நியாயம் இது.

ஒருவன் அக்னியை எடுத்துக் கொண்டு வா என்று சொல்லும் போதே அந்த அக்னியை ஒரு பாத்திரத்தில் அல்லது பானையில் வைத்து எடுத்துக் கொண்டு வா என்று சொல்வதாகத் தானே அர்த்தம். அக்னியை பாத்திரத்தில் வைத்துக் கொண்டு வா என்று ஒவ்வொரு முறையும் சொல்வது அவசியமுமில்லை; பழக்கமும் இல்லை, அல்லவா!

homa agni

அது போல ஒரு விஷயத்தைக் குறிப்பிடும் போது இயல்பாகவே அதைச் சார்ந்த இன்னொரு விஷயமும் அதில் அடங்கி இருந்தால் இந்த நியாயம் அப்போது அங்கு பயன்படும்!

 

camphor_burning

***********

கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர் யார்?

Marble_Krishna_

Written by London swaminathan

Article No.1666; Dated 21 February 2015.

நாம் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரும் யார் யார் யாரையோ கும்பிடுகிறார். வியப்பாக இருக்கிறது அல்லவா? கள்ளக் கிருஷ்ணனின் இந்த ரகசிய செயலைக் கண்டு பிடித்தது வேறு யாரும் இல்லை. கிருஷ்ணனின் மனைவி ருக்மிணிதான் இதைக் கண்டுபிடித்தார்.

ஒரு நாள் கிருஷ்ணரும் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்? என்று கேட்டாள். கிருஷ்ணர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொன்னார்:

நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி

வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ

மாஸோபாவாசீச பதிவ்ரதா ச

ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே

பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: தினமும் அன்னதானம் செய்வோர், தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், வேதம் அறிந்தவர்கள், சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து—சதாபிஷேகம் செய்துகொண்டோர் – மாதா மாதம் உபவாசம் இருப்போர், பதிவ்ரதையான பெண்கள்.

அவர் சுருக்கமாகச் சொல்லி முடித்தாலும், பெரியோர்கள் இதற்குச் சொல்லும் விளக்கத்தை நாம் அறிந்தால்தான் அந்த ஆறு வகையான மக்களின் முழுப் பெருமையையும் நாம் அறிவோம்:

அக்னியில் க்ருஷ்ணன்

யாகத் தீயில் தோன்றிய கிருஷ்ணன்     உருவம்

(1).நித்ய அன்ன தாதா: அந்தக் காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கும் வருமானத்தில் அல்லது நிலத்தில் அறுவடையாகும் விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியை மன்னருக்குக் கொடுத்து விட வேண்டும். மீதி ஐந்து பகுதிகளை அவர் ஐந்து பேரைப் பாதுகாக்கப் (பஞ்ச யக்ஞத்துக்கு) பயன்படுத்தவேண்டும். திருவள்ளுவரும் கூட:-

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)

பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.

மனு ஸ்மிருதியில் 3-72 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருகிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.

அதிதி தேவோ பவ: (விருந்தாளி என்பவன் இறைவனுக்குச் சமம்) – என்று வேதம் கூறுகிறது. தர்மர் நடத்திய ராஜ சூய யாகத்தில் புகுந்து பரபரப்பை உண்டாக்கிய கீரி சொன்ன கதை எல்லோருக்கும் தெரியும். இப்படி தினமும் அன்னதானம் செய்வோர், இது தவிர அன்னக்கொடி ஏற்றி ஆயிரக்கணக்கானோருக்கு அன்னம் இடுவோர் ஆகியோரை க்ருஷ்ணன் வணங்குகிறார். இவர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் அன்னம் இடுகிறார்கள்!!

(2).தருண அக்னிஹோத்ரி: அந்தக் காலத்தில் ஏழு வயதில் பூணூல் போட்டவுடன் பிராமணச் சிறுவர்கள் சமிதாதானம் என்று தினமும் அக்னி வளர்த்து சமித்துக்களை நெய்யுடன் அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குருகுலம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் இளைய பருவத்திலேயே திருமணமும் நடந்துவிடும். பின்னர் அவர்கள் தினமும் ஔபாசனம் என்ற அக்னி காரியத்தைச் செய்து வருவர். இப்படித் தவறாமல் செய்துவரு வோரை கிருஷ்ணனே வணங்குகிறார் நாம் வணங்கத் தயக்கம் உண்டோ!

(ஆனால் இப்படிப்பட்டவர் இப்பூவுலகில் எங்கே இருக்கிறார் என்று என்னைக் கேட்டுவிடாதீர்கள்).

ராதா கல்யாணம், ஆலங்குடி

ஆலங்குடி ராதா கல்யாணம்

(3).வேதாந்த வித்:- வேதங்கள் நான்கு. அதன் முடிவில் இருப்பது உபநிஷத் (வேத+ அந்தம்/முடிவு). அதை உணர்ந்தவர்கள் வேதாந்திகள். அஹம் பிரம்மாஸ்மி, தத்வம் அஸி போன்ற ஞான உணர்வு படைத்தவர்கள். அந்த வேதாந்திகளையும் கிருஷ்ணன் வணங்குகிறார்!

அந்தக் காலத்தில் ஒருவரை இவர் படித்தவர் என்று அறிமுகப் படுத்திவைதால் அவர் ஒழுக்கசாலி- கற்கக் கசடு அற- கற்ற பின் நிற்க அதற்குத் தக – என்ற இலக்கணம் அவர்களுக்குப் பொருந்தும் இப்பொழுது கற்றோரையும்- சிறைச் சாலைகளில் அதிகம் காணலாம்.

(நான் இங்கிலாந்தில் உள்ள சிறைச் சாலைகளுக்குச் சென்று இந்து சமயக் கைதிகளைக் கண்டு ஆறுதல் வழங்குவதுண்டு. பெரும்பாலோர் படித்து தவறு செய்தவர்களே!! ஆனால் ஏனைய மதத்தினரை ஒப்பிடுகையில் சிறைகளில் இந்துக்கள் தொகை மிகமிகக் குறைவு)

(4).ஆயிரம் பிறை கண்ட அபூர்வ சிகாமணி: சிவனுடைய தலையில் இருப்பது மூன்றாம் பிறைச் சந்திரன். அதை மாதம் தோறும் அமாவாசைக்குப் பின்னர் மூன்றாம் நாளில் காணலாம். அடுத்த முறை காண 29 நாட்கள் காத்திருக்க வேண்டும் இப்படி ஆயிரம் முறை காண 81 ஆண்டுகள் பிடிக்கும். அப்பொழுது அவர்கள் சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். அத்தகையோரையும் கண்ணபிரான் வணங்குவார். இந்த பிறைச் சந்திரனைக் காணும் வழக்கத்தை ஏனைய மதத்தினரும் நம்மிடமிருந்து கற்றனர்.

krishna

ஒருவர் ஆயிரம் முறை சந்திரனைக் காண வேண்டுமானால் ஆயிரம் தடவை சிவனை நினைத்திருக்க வேண்டும். அடடா! மேகம் மறைக்கிறதே. இன்னும் சந்திரனைக் காணவில் லையே என்று ஏங்கி சிவனை நினைத்து நிற்பர். இன்னும் பலர் அவர்களது இஷ்ட தெய்வத்தையும் குல தெய்வத்தையும் வேண்டிக் காத்திருப்பர். ஆகையால்தான் கிருஷ்ணன் அவ்வளவு மதிப்பு தருகிறான்.

(5) மாத உபவாசி: மாதம் தோறும் குறைந்தது இரண்டு ஏகாதசிகளாவது உபவாசம் – உண்ணா நோன்பு—கடைப் பிடிக்க வேண்டும். அதையும் ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும். இது தவிர சிவராத்ரி, சங்கட ஹர சதுர்த்தி, கந்த சஷ்டி போன்ற முக்கிய காலங்களிலும் உபவாசம் இருக்கவேண்டும். இப்படி இருப்போர் கண்ணனால் வணங்கப் படுவர். இது எளிதல்ல.இப்படி இருப்போர் மிகமிகக் குறைவு.

எங்கள் லண்டனில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர், குஜராத்திகள் இதைக் கடைப் பிடிக்கின்றனர். வெங்காயம், உள்ளிப் பூண்டு என்ற பெயர்களைக் கேட்டால் கூட ஓடிப் போய் விடுவார்கள். அவர்களை நாமும் வணங்குவோம். “யாகாவாராயினும் நா காக்க” — என்று வள்ளுவன் சொன்னது உணவுக்கும் பொருந்தும் என்க.

(6)இறுதியாக கண்ணன் கை எடுத்துக் கும்பிடுவது யாரை என்றால் பதிவ்ரதா விரதம் அனுசரிக்கும் கற்புக்கரசிகளை!! உலகில் வேறு எங்கும் இல்லாத ஒரு அணுகு முறை இந்து மதத்தில் மட்டும் உண்டு. சாத்திரத்தில் சொல்லபட்ட எல்லா விஷயங்களையும் மூன்று வகையில் அனுஷ்டிக்க வேண்டும். தமிழ் மொழியில் இதற்கு முன்று அற்புதமான சொற்களை படைத்து வைத்துள்ளனர்: உண்மை,வாய்மை, மெய்மை (மனோ, வாக், காயம்). இந்த மூன்று உறுப்புகளாலும் வேறு ஒரு ஆடவனையும் நினையாது கனவனை மட்டுமே தெய்வம் போலக் கருதுபவர் “பெய் எனப் பெய்யும் மழை” — என்பான் பொய்யா மொழிப் புலவன் வள்ளுவன் (குறள் 55).

கிருஷ்2

அட! இப்படிப் பத்து கற்புக்கரசிகளைக் கண்டுபிடித்து வறண்ட பகுதிகளில் எல்லாம் மழை பொழியச் செய்துவிடலாமே! அவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் போட்டுவிடலாமே என்று சிலர் நினைக்கலாம். இதன் தாத்பர்யம் என்னவென்றால் அவர்களிடம் அவ்வளவு மகத்தான சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் எளிதில் அதைப் பிரயோகிக்க மாட்டார்கள்.

அசோகவனத்தில் சீதையைக் கண்ட அனுமன் கெஞ்சுகிறான்: தாயே உங்களைக் காணாமல் ராமன் தவிக்கிறான். என் முதுகில்/ தோளில் ஏறி அமருங்கள். அடுத்த நிமிடம் இராமனிடம் சேர்ப்பிக்கிறேன் என்று. சீதை சிரிக்கிறாள். என் கற்பின் ஆற்றலால் ஈரேழு புவனங்களையும் எரிக்கும் ஆற்றல் எனக்கு உண்டு. ஆயினும் கணவனின் வில் ஆற்றலுக்கு இழுக்கு உண்டாக்கும் எதையும் செய்ய மாட்டேன் என்கிறாள்.

நமக்கும் தெரியும் ராவணன் வதம் — என்பதே இராமாவதாரத்தின் நோக்கம் என்று.

உலகில் ஏழு நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண அணுகுண்டைப் பிரயோகிக்கிறார்களா? இல்லையே. இது போல பெண்களிடம் உள்ள மகத்தான ஆற்றலை அவர்கள் அரிதே பயன்படுத்துவர்.

அந்தக் காலத்தில் எல்லா பெண்களும் திரிகரண சுத்தியுள்ள (சொல், செயல், சிந்தனை = மனோ வாக், காயம்) கற்புக்கரசிகளாக இருந்தார்கள். இதனால்தான் மனு சொன்னார்:

எங்கு பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வம் வாழும். எங்கு பெண்கள் மதிக்கப்பட வில்லையோ அங்கு என்ன நல்லது செய்தாலும் அதற்குப் பலன் இல்லை (மனு 3-56)

மரியாதைக் குறைவாக நடத்தப்பட்ட பெண்கள் சாபம் இட்டால் அந்தக் குடும்பங்கள் அடியோடு அழிந்து போகும் (மனு 3-59)

கிருஷ்3

தந்தைமார்கள், கணவன்மார்கள், மைத்துனன்கள், சகோதர்கள் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடிக்க வேண்டுமானால் பெண்களை மதிப்போடு நடத்துங்கள். அவர்களை ஆடை அணிகலன்களால் அலங்கரியுங்கள் (மனு ஸ்மிருதி ஸ்லோகம் 3-55).

இப்படியெல்லாம் பாரட்டப்பட்ட பதிவிரதைகளை கண்ணன் வழிபடுவதில் வியப்பேதும் உண்டோ.

கண்ணன் வணங்கும் ஆறுவகை மக்களை எங்கெங்கெலாம் நீங்கள் காணுகிறீர்களோ அங்கெங்கெல்லாம் நிலத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிடுங்கள்!! உங்களுக்கும் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

மன்னிக்க வேண்டுகிறேன்! மரங்களே!

deodar-tree1

Deodar (Deva+ Taru) trees of the Himalayas (English word Tree came from Sanskrit Taru)

Research Paper written by London swaminathan

Research Article No.1664; Dated 21 February 2015.

இயற்கையை மதிக்கக் கற்றுக் கொடுப்பது பாரதப் பண்பாடு! இயற்கையை ‘மிதி’க்கக் கற்றுக் கொடுப்பது மேற்கத்தியப் பண்பாடு!

எங்கள் லண்டனில் அண்டர்கிரவுண்ட் (மெட்ரோ) ரயில்களில் “கால்களை உட்காருமிடத்தில் வைக்காதீர்கள்” – என்று எழுதிப் போட்டிருக்கும். ஆனால் மாணவர்களும் இளைஞர்களும் எதிரே இருக்கும் ஆசனத்தில் கால்களை வைத்தே உட்காருவர். அவர்கள் உட்காந்திருக்கும் இடத்தையும் யாரோ ஒருவன் இப்படி அசுத்தம் செய்திருக்கிறான் என்பதை ஏன் அவர்கள் அறிவதில்லை?

ஏன் என்றால் இயற்கையை மதிக்கும் “விஷ்ணு பத்னி நஸ்துப்யம்” – போன்ற விஷயங்களை அவர்கள் தாய் தந்தையர் கற்பிக்காததுதான்.

ebony-tree2

கருங்காலி (எபனி) மரம்

அந்தக் காலத்தில் எல்லா இந்துக்களும் காலையில் எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்று காலையில் நினைவுகூற வேண்டிய நல்ல விஷயங்களைப் பாடல் வடிவத்தில் நினைவு கூறுவர். அதில் ஒரு ஸ்லோகம்:

ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே – என்று சொல்லும்

பொருள்:–நீராரும் கடலுடுத்த நிலமடந்தையே! என் கால்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதைப் பொறுத்தருள்க – என்று சொல்லிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்திருப்பர்.

சிறு வயது முதலே, இந்துக்கள் — நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகள். அவைகளை “உயிர் வாழத் தேவையான அளவு மட்டுமே” பயன்படுத்த வேண்டும் என்ற பெரிய தத்துவத்தைப் போதித்தனர். மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த — ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் மந்திரமான – “ஈஸாவாஸ்யம் யத் ஸர்வம்” – என்ற மந்திரமும் இதே கருத்துடைத்தே!

kadamba

கடம்ப மரம்

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிகிரர் எழுதிய, அற்புதமான ஸம்ஸ்கிருத என்சைக்ளோ பீடியா – பிருஹத் சம்ஹிதா — வில் இறைவனின் திரு உருவங்களைச் சமைப்பதற்கு மரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது. அதில் உள்ள சில சுவையான விஷயங்களை மட்டும் தருகிறேன்.

2_vilvam_tree

வில்வ மரம்

1.இறைவனின் திரு உருவத்தைச் செதுக்க தெரிந்தெடுக்கப்பட்ட மரத்தை முதலில் பூக்களால் பூஜித்து வழிபடவேண்டும் .உணவு படைக்க வேண்டும்.

2.பிராமணர்கள் கோவில் கட்டுவதானால் தேவதாரு, சந்தனம், வன்னி மரம், மதூக மரம் ஆகிய மரங்களால் சிற்பம் செய்யலாம்;

க்ஷத்ரியர்களாக இருந்தால் அரச மரம், கடிர மரம், வில்வ மரம், அரிஷ்ட மரம்

வைஸ்யர்களாக இருந்தால் ஜீவக (வேங்கை), சிந்து, கடிர ,ச்யாந்தன மரங்கள்

சூத்திரர்களாக இருந்தால் திண்டுல்க, கேசர, அர்ஜுன (மருத மரம்), சார்ஜ, மாமரம், சால (ஆச்சா) மரங்களால் சிற்பம் செய்யலாம்

(இதிலிருந்து அக்காலத்தில் நான்கு ஜாதியினரும் கடவுள் சிற்பங்களை நிர்மாணித்து வழிபட்டது தெரிகிறது.)

vengai3

வேங்கை மரம்

  1. வெட்டுவதற்கு முன்பாக மரத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பால், சாதம், கஞ்சி, ஊதுபத்தி, சாம்பிராணி முதையவற்றைப் படைத்துவிட்டு மரத்தில் வசிக்கும் தேவர், அசுரர், பேய்கள், சிவ கணங்கள், முன்னோர்கள், கணபதி, சிவன் ஆகியோரை வழிபட்டுவிட்டு மரத்தைத் தொட்டுக்கொண்டே கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்:

“ஓ, மரமே! ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வணங்குவதற்காக உன்னைத் தெரிந்தெடுத் துள்ளோம். உனக்கு நமஸ்காரம். சாஸ்திர விதிகளின்படி செய்வதால் இதை தயவுசெய்து ஏற்றுக் கொள்வாயாக.உன்னிடத்தில் வசிக்கும் அனைவரும் நான்படைத்த படையல்களை ஏற்றுக் கொண்டு வேறு ஒரு மரத்திற்குச் சென்று வசிப்பார்களாக. எங்களை மன்னித்துவிடு. உன்னை வணங்குகிறேன்”

–அத்தியாயம் 59,பிருஹத் சம்ஹிதா

jamblon_03

ஜம்பூ (நாவல் மரம்); ஜாம்பூத்வீபம் = நாவலந்தீவு

naval

நாவல் பழம்

எவ்வளவு பணிவு பாருங்கள்! இது மூட நம்பிக்கை அல்ல. சங்க இலக்கியச் சன்றுகளை ஏற்கனவே கொடுத்து இருக்கிறேன். ஒரு பெண் பாலும் நெய்யும் ஊற்றி வளர்த்த மரத்தின் கீழ் காதல் செய்ய மறுக்கிறாள். ஏனெனில் அது அவளுடைய சகோதரியாம். இதே போல உலக மஹா கவிஞன் காளிதாசனும் சகுந்தலாவுக்கும்- இயற்கைக்கும் உள்ள உறவு முறையை சாகுந்தலத்தில் வருணித்திருப்பதையும் முந்தைய ஆய்வுக் கட்டுரைகளில் தந்து விட்டேன். சகுந்தலா என்றாலே – பறவைப் பெண் – என்று சம்ஸ்கிருதத்தில் பொருள். இது பாரதீய சிந்தனையின் மகத்தான உயர்வைப் பிரதிபலிக்கிறது. இமயம் முதல் குமரி வரை இது எதிரொலிப்பது என் காதுகளில் எப்போதும் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கிறது.

shami-puja

வன்னி மரத்துக்கு (ஷாமி மரம்) பூஜை;சுவாமி கணப்தி சச்சிதானந்தா

வனஸ்பதி சிவ பெருமான்

பாரதீயனுக்கு எப்போது இந்த சிந்தனை மலர்ந்தது என்பதை எண்ணும் போது இன்னும் வியப்பு மேலிடுகிறது. மோசஸ் பத்து கட்டளைகளைப் பெறுவதற்கு முன், ஹோமர் இலியட், ஆடிஸி காவியங்களை எழுதும் முன், சரஸ்வதி நதி தீரத்திலும், கங்கை நதி தீரத்திலும், அகத்தியன் மூலமாக காவிரி நதிதீரத்திலும் ஒலித்த யஜூர் வேதத்தில் – பிறவா யாக்கைப் பெரியோன் ஆன சிவ பெருமானை “வனங்களின் அதிபதி” (வனானான் பதி) என்றும் மரங்களின் அதிபதி என்றும் கூறப்பட்டுள்ளது. அப்போதே இந்த சிந்தனை பூத்துவிட்டது.

இமயம் முதல் குமரி வரையுள்ள – கங்கை முதல் காவிரி வரையுள்ள — சிவன் கோவில்களில் தினமும் நடக்கும் அபிஷேகத்தின்போது ருத்ரம்-சமகம் என்ற யஜூர்வேத மந்திரத்தைச் சொல்லி சிவனுக்கு அபிஷேகம் செய்வர். அதில்தான் மேற்கூறிய மந்திரங்களும் ஓம் நம சிவாய என்ற அற்புத மந்திரமும் வருகிறது. மேலும் சிவனையே காடாக வருணித்து அவன் தலை முடியெல்லாம் பசுமையாகக் காட்சியளிப்பதாகவும் மந்திரம் சொல்லுவர். அதில் அவனை உயிரினங்களனை த்துக்கும் இறைவன் என்னும் “பசுபதி” என்ற சொல்லும் வரும்.

gsv_vanni

வ்ருக்ஷானாம் ஹரிகேசேப்ய: பசூனாம் பதயே நம:

என்றும் நமோ வ்ருக்ஷேப்யோ ஹரிகேசேப்யோ என்றும் போற்றுவர். இன்னும் பல இடங்களில் நீ பச்சிலை, நீ செடி,கொடி புதர் என்றும் சொல்லுவர்.

விஷ்ணுவையும் இப்படி வருணிப்பர். புகழ் பெற்ற விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நீ ஆலமரம், அரசமரம், அத்தி மரம் என்று போற்றுவர் (ந்யக்ரோதோ அஸ்வத்த உடும்பரா).

gsv_paraay

Following is taken From Face book posting by Akila Kalaichelvan: Compare this with point No.2

சிற்பங்கள் செய்யப்பட்ட மரங்கள்
பலா, தேக்கு, கருங்காலி, சந்தனம், மாவலிங்கை என்பன முதல் வகை. செண்பகம், தும்பை, வன்னி, மருது, கருவேம்பு, முள்பூ மருது, துவளை, மருக்காரை, பல முள்ளிப் பாலை, இலுப்பை, வேங்கை, வேம்பு ஆகியன இரண்டாம் வகை மரங்களாகும். வெட்பாலை, மராமரம் அல்லது ஆச்சம், வாகை, எலுமிச்சை, காசா, வெள்ளைக் கருங்காலி, அசோகம், கருவேம்பு ஆகியவை மூன்றாம் பிரிவு மரங்களாகும். முறளம், நமை, சுரபுன்னை, திப்பிலி, கடம்பு, நீர்க்கடம்பு, செண்பகம், மஞ்சம், பச்சிலை, கொங்கு ஆகியன நான்காம் வகையைச் சேர்ந்த மரங்களாகும். இத்தனை வகை மரங்கள் கூறப்பட்டிருப்பினும் பெரும்பான்மையாக இலுப்பை, ஆச்சம், வேங்கை, தேக்கு, மகிழம், வாகை, சந்தனம், கருமருது, புள்ளமருது ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

மரங்களை வளர்ப்போம்!! மரங்களை மதிப்போம்.

acacia catechu_tree (1)

அகேசியா கடேச்சு

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே !

Lava-Kusa-The-Warrior-Twins-2010

Post No 1662; Dated 20th February 2015

by S Nagarajan

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 5

by ச.நாகராஜன்

ஒன்பது பாடல்கள்; நான்கு பாடகர்கள்!

 

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் ராமனுக்குப் பாடலே இல்லை; ஆனால் ராவணனுக்கோ மூன்று பாடல்கள்! மொத்தம் 9 பாடல்கள் இடம் பெற்றன. டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் ஆகியோர் தங்கள் குரல் வளத்தால் பாடல்களுக்கு மெருகேற்றினர்.

லவகுசா

அடுத்து 1963ஆம் ஆண்டு லவகுசா திரைப்படம் தெலுங்கிலும் தமிழிலுமாக இரு மொழிகளில் வந்து ஆந்திராவையும் தமிழ்நாட்டையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

வழக்கம் போல என்.டி.ராமாராவ் தான் ராமர்! சீதையாக அஞ்சலி தேவி நடித்துப் புகழ் பெற்றார். இசை கே.வி.மஹாதேவன். பாடல்கள் தமிழ் படத்திற்கு ராமன் புகழ் ஏ.மருதகாசி! படத்தை இயக்கியவர்: புல்லையா.

இதில் தெலுங்குப் படத்தில் 37 பாடல்கள் பாடப்பட்டு அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தின. தமிழிலோ ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே என்ற பாடல் சிரஞ்சீவி வரம் பெற்று இன்றும் கூட எல்லா இல்லங்களிலும் மகிழ்ச்சியுடன் கேட்கப்படுகிறது.

மருதகாசியின் அற்புதமான சொற்கள் உள்ள பாடலுக்கு ஜீவனுள்ள இசையை கே.வி.மஹாதேவன் தர அதை அப்படியே உயிரோடு குரலில் காட்டி விட்டனர் பி.சுசீலாவும். பி.லீலாவும்!

முழுப்பாடலும் திரைப்படத்தில் பாடப்பட்டபடியே இங்கு தரப்படுகிறது :-


best lavakusa

ஜகம் புகழும் புண்ய கதை

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே

இந்தக் கதை கேட்கும் எல்லோருமே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்

அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை

கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்

கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

 

ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

 

best lava 2

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை

ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே

காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே

கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே

தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே

தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே

பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்

பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்

சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்

சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்

காதலினால் இருவர் கண்களும் கலந்தன

காதலினால் இருவர் கண்களும் கலந்தன

கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்

அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்

அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்

அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

 

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

 

lava-kusa-05

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு

மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே

மகர தோரணத்தால் அலங்கரித்தாரே

மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி

மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்

வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும்

மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்

மரண மூர்ச்சை அடைந்த பின்னர்

ராமனையும் அழைக்கச் செய்தாள்

தந்தையுனை வனம் போகச் சொல்லி

தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார்என்றாள்
 சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்

சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்

விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த

தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே

மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே

மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

ramayana in one picture

(ஒரே படத்தில் ராமாயணம்!! ஒரே பாட்டில் ராமாயணம்!!)

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்

அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே

அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே

ஐயனும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்

அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்

அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை

ராமபிரான் மீது மையல் கொண்டாள்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை

ராமபிரான் மீது மையல் கொண்டாள்

கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை

மானபங்கம் செய்து விரட்டி விட்டான்

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்

ஜானகி தேவியை சிறையெடுத்தான்

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்

ஜானகி தேவியை சிறையெடுத்தான்

நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி

தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்

ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்

வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்

ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்

அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ

setu bridge

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்

கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்

கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்

வானர சேனையுடன் சென்றான்

விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்

வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்

கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்

அரசுரிமை கொண்டான்

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

telegu lava

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்

ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்

ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

இப்படி அழகுற சம்ஸ்கிருத ஸ்லோகத்துடன் பாடல் முடிகிறது.

ஒரு கோடி வசூல்; விருதுகள் பல

 

26 தியேட்டர்களில் இது வெளியிடப்பட்டு 16 தியேட்டர்களில் 175 நாட்களும் மற்ற தியேட்டர்களில் 100 நாளும் ஓடி திரைப்படச் சரித்திரத்தில் ஒரு சாதனையை ஏற்படுத்தியது. அந்தக் காலத்தில் டிக்கட்டின் விலை சராசரியாக இருபத்தி ஐந்து பைசா என்று வைத்துக் கொண்டால் படம் வசூலித்த மொத்த தொகையான ஒரு கோடி ரூபாய் என்பது எவ்வளவு பெரிய தொகை என்பதையும் எத்தனை பேர்கள் படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர் என்பதையும் நினைத்து பிரமிக்கத் தான் முடியும்.

lavakusa-telugu

ஏராளமான விருதுகளை படம் அள்ளிச் சென்றது.

ராம, சீதாவிற்கும், லவகுசர்களுக்கும் மானஸீக நமஸ்காரம் செய்து திரைப்படத்தில் ராமருடனான நமது பயணத்தைத் தொடர்வோம்!

ramapriya ramanuja dasi

***********

பாரதியை வியக்கச் செய்த சிவபக்தன் – உலக மஹா அறிஞன் பாணினி!

maheswara-sutrani

Research Paper written by London swaminathan

Research Article No.1660; Dated 19th February 2015.

“வாக்யகாரம் வரருசிம் பாஷ்யகாரம் பதஞ்சலீம்

பாணினீம் சூத்ரகாரம் ச ப்ரணதோஸ்மி முனித்ரயம்”

வரருசி, பதஞ்சலி, பாணினி ஆகிய மூன்று முனிவர்களையும் வணங்குகிறேன் என்று சொல்லி எல்லோரும் சம்ஸ்கிருதம் கற்பர்.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உலக மகா இலக்கண வித்தகன் பாணினியை எண்ணி எண்ணி இன்று வரை உலகம் வியந்து கொண்டே இருக்கிறது. உலக இலக்கண தந்தை என்று பலரும் போற்றும் பாணினி சுமார் 4000 சூத்திரங்களுடன் செய்த அஷ்டாத்யாயி (அஷ்ட அத்தியாயங்கள் = 8 பிரிவுகள்) என்ற நூலை விட விஞ்ஞான முறைப்படி இன்று வரை நூல் எழுதியவர் எவருமிலர்.

“சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்ற சொற்றொடருக்கு எல்லாம் இலக்கணமாகத் திகழ்ந்தவன் வான் புகழ் வள்ளுவன். அந்த வள்ளுவனையும் விழுங்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு ரத்தினச் சுருக்கமாக எழுதியவன் பாணினி. இதை உலகிலுள்ள யாருமே நம்பமுடியாது என்னும் அளவுக்கு எழுதினார் என்று பாணினியின் புகழ் பாடுகிறார் சொற்தேரின் சாரதியாம் சுப்பிரமணிய பாரதி!

“நம்பருந்திறலோடொரு பாணினி ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்……………………..”

-என்று பாரதி தனது சுயசரிதை என்னும் கவிதையில் பாராட்டுகிறார்.

இந்தியவியல் நிபுணர் கோல்ட்ஸ்டக்கர், பண்டார்கர், டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ, பாடக் ஆகியோர் பாணினி வாழ்ந்த காலம் கி.மு ஏழாம் நூற்றாண்டு என்றும், சரித்திரப் பேரறிஞர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி கி.மு ஆறாம் நூற்றாண்டுக்கு முன் என்றும் உறுதிபட நிறுவியுள்ளனர்.

ஆரியதரங்கிணி ஆசிரியர் கள்யாணராமன் சொல்கிறார்:

“ஒவ்வொரு மொழியும் வளர சில காலம் பிடிக்கும். இலக்கியம் தோன்றிய பின்னர் இலக்கணம் தோன்றும் — அதற்கு உரை என்பது இலக்கண் நூலுக்குச் பல காலம் தள்ளியே தோன்றும். வரருசி ,பதஞ்சலி ஆகியோரின் காலத்தைப் பார்க்கையில் பாணினி ஏழாம் நூற்றாண்டு என்பது சரியே!”

என் கருத்து: கி.மு.முதல் நூற்றாண்டில் தோன்றியதாகப் பலராலும் எண்ணப்படும் தொல்காப்பியத்துக்கு 1200 ஆண்டுகளுக்குப் பின்னரே உரை எழுந்தது. அதைப் பார்க்கையில் பாணினி இன்னும் முன்னதாக அதாவது கி.மு.800 முதல் 1000 வரையான காலத்தில் இருந்திருக்க வேண்டும்.

nataraja (1)

சிவபெருமான் தந்த இலக்கணம்

வர்ஷ என்ற ஒரு ஆசிரியரிடம் பாணினி கல்வி கற்றார். அவருடைய ஊர் சாலதூர்ய. அது இப்பொழுது பாகிஸ்தானில் இருக்கிறது. அவருக்கு படிப்பு வரவில்லை. குருவின் மனைவி சொன்னார், “பிள்ளாய்! வெளி உலகில் சென்று கொஞ்சம் பொது அறிவு பெற்று வாராய்!” – என்று. பாணினி புறப்பட்டார் இமயமலைக்கு. கடும் தவம் இயற்றினார். சிவனுக்கு மகிழ்ச்சி! உன் தவம் கண்டு மகிழ்ந்தோம், மகனே, என்ன வரம் வேண்டும், என்று கேட்டார். வகுப்பில் மக்குப் பிள்ளை என்று என்னை ஏசி விட்டார்கள். பொன் வேண்டாம், பொருள் வேண்டாம், பெண் வேண்டாம், மண்ணாளும் அரச பதவியும் வேண்டாம். யாம் வேண்டுவது மொழி அறிவு மட்டுமே என்றார்.

சிவனுக்கு ஒரே குஷி! அட இப்படி ஒரு ஒரு பிள்ளையா? என்று வியந்து எடுத்தார் உடுக்கையை! ஆடினார், ஆடினார். உடுக்கையை அடித்த அடியில் இமய மலை குகைகள் எல்லாம் எதிரொலித்தன. பாணினிக்கோ 14 ஒலிகள் மட்டுமே காதில் விழுந்தன. அதிலிருந்து பிறந்தது உலக மகா சம்ஸ்கிருத இலக்கணம்.

அந்த 14 ஒலிகளை வைத்துக் கொண்டே சம்ஸ்கிருத இலக்கணத்தை வரைந்தார். அத்தனையும் அறிவியல் முறைப்படி அமைத்தார்.

14 மஹேஸ்வர சூத்திரங்கள்

அ இ உண்

ருலுக்

ஏ ஓங்

ஐ ஔச்

ஹயவரட்

லண்

ஞம ஙணநம்

ஜ்ஜபஞ்

கடத ஷ்

ஜபகடதச்

க ப ச ட த

சடதவ்

கபய்

சஷஸர்

ஹல்

–இதி மாஹேச்வராணி சூத்ராணி

இதில் சம்ஸ்கிருத எழுத்துக்கள் எல்லாம் இருக்கின்றன. இதைப் பயன்படுத்தி எப்படி சம்ஸ்கிருத சந்தி விதிகள் முதலியவற்றைக் கற்கலாம் என்பதை இன்னும் ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இதை வைத்து 281 ‘காம்பினேஷன்’ போடலாம்!

பாணினிக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருத மொழி இருந்தது. அவரே தனக்கு முந்தைய இலக்கண கர்த்தாக்களுக்கு கும்பிடும் போடுகிறார். அவர்கள் பெயர்களை மட்டுமே நாம் அறிவோம். நூல்கள் கிடைத்தில.

இன்றும் பிராமணர்கள் ஆண்டுதோறும் பூணூல் மாற்றும் விழாவில் (உபாகர்மா), வேதத்தை மீண்டும் துவக்கும் நாளில் இந்த 14 சூத்திரங்களைச் சொல்லிவிட்டுத்தான் “அக்னி மீளே புரோகிதம்: என்று வேத பாடம் துவங்குவர்.

பாணினிக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மஹா பாஷ்யம் என்ற பெயரில் மாபெரும் உரை எழுதிய பதஞ்சலி,  — பகவான் என்று போற்றுகிறார் பாணினியை.

இலக்கியம் எழுதிய தாக்ஷீ புத்திரனை உலகமே மகரிஷி என்று போற்றியது. பாணினியின் தாய் பெயர் தாக்ஷீ என்று பதஞ்சலி சொல்லுவார். கையில் தர்ப்பையை வைத்துக் கொண்டு கிழக்கு முகம் நோக்கி அமர்ந்து வடமொழி இலக்கணத்தை எழுதினார்.

ஒரு புள்ளி, கால் புள்ளி, கமா இடத்தைக் கூட வீண் அடிக்காமல் ரத்தினச் சுருக்கமாக, முத்து முத்தாக சூத்திரங்களை எழுதினார். காலப்போக்கில் மக்களுக்கு விளங்காமல் போய் விடுமே என்று வரருசியும், பதஞ்சலியும் உரை எழுதினர்.

இவருடைய இலக்கணம், வேத கால சம்ஸ்கிருதத்தை ஒட்டி உள்ளது என்று ஆன்றோரும் சான்றோரும் பகர்வர். புத்தர் மஹாவீரர் ஆகியோர் காலத்துக்கு முன் வாழ்ந்ததால் அவர்தம் பெயர்கள் பாணிணீயத்தில் இல்லை. 500 ஊர்கள் பெயர்களைச் சொல்லுவதால் இவருடைய பூகோள அறிவும் பாரத்வாஜரின் 51ஆவது தலை முறை போன்ற சொற்றொடர்களை எடுத்துக் காட்டாக விளம்புவதால் அவர்க்கு முன் பாரத நாடு பல்லாயிரம் ஆண்டுகள் இருந்ததும் வெள்ளிடை மலை என விளங்கும்.

nataraja

ஆயிரம் பொற்காசு

காஷ்மீரில் ஒரு மன்னன், எல்லோரும் பாணினி புத்தகத்தைப் பயில வேண்டும் என்று கட்டளையிட்டு அதில் தேறியவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்தான்.

சீன யாத்ரீகர் யுவாங் சுவாங், 1400 ஆண்டுகளுக்கு முன் பாணினியின் சிலையைக் கண்டதாக எழுதி வைத்துள்ளார். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு எழுத்தாளனுக்கு சிலை. மன்னனுக்கு அல்ல, நடிகனுக்கு அல்ல! இலக்கண வித்தகனுக்கு!!! எண்ணிஎண்ணி இறும்பூது எய்யலாம்!!

உலகில் பெரும்பகுதியினர் கோவண ஆண்டிகளாகவும், சுமேரியா, எகிப்து முதலிய நாடுகளில் உப்பு-புளி-கணக்கு, இறந்தோர் புத்தகம், ஜில்காமேஷ் என்று அரிச்சுவடி விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கையில் பாரத மக்கள் உபநிஷத தத்துவங்களையும், வியத்தகு இலக்கணம் அகராதிகள்,மொழி இயல், சொற் பிறப்பியல் முதலியன கண்டதும் ஒப்பிடற்பாலது

இன்று போய் நாளை வாராய்!

01cp_sampoorna_ram_1129781f

Research Paper written by ச.நாகராஜன்

Research Article No.1658; Dated 18th February 2015.

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 4

ச.நாகராஜன்

ராமனை தோள் வலி கூறுவதன் பயன்!

காலம் காலமாக பாரத மக்களிடம் இருந்து வரும் நம்பிக்கையை அப்படியே சுருக்கமாக மஹாகவி கம்பன் இப்படிக் கூறுகிறான்:

“நாடிய பொருள் கை கூடும்ஞானமும் புகழும் உண்டாம்

 

வீடியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

 

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய

 

ராமன் தோள் வலி கூறுவோர்க்கே!”

ராமன் தோள்வலியைக் கூறி மக்களிடம் உத்வேகம் ஊட்ட ஜனரஞ்சக ஊடகமான

 

திரைப்படம் முன் வந்தது.

பக்திப் படங்களில் ஒரு திருப்பம்!   

 

1958-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று தமிழகத்தில் ஏராளமான தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டன. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சம்பூர்ண ராமாயணம் திரைப்படம் அரங்கங்களில் வெளியிடப்பட மனத்தைக் கொள்ளை கொண்ட இதிஹாஸத்தின் திரை வடிவைப் பார்க்க ரசிகர்கள் அலை மோதினர்.

எம்.ஏ. வேணு தயாரிக்க கே.சோமு இயக்க திரைப்படக் கதை, வசனத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்க ராமராக என்.டி.ராமாராவும், பரதனாக நடிகர்திலகம் சிவாஜிகணேசனும், சீதையாக பத்மினியும், ராவணனாக டி.கே.பகவதியும் மண்டோதரியாக சந்தியாவும் தோன்ற படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

திரைப்படத்தை எள்ளி நகையாடியவர்கள் கூட அது அரும் பங்கை ஆற்றவல்லது என்று ஒத்துக் கொள்ளுமளவு படம் அனைவரின் மனதிலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.


ravana

மஹாதேவனின் இசை; மருதகாசியின் பாடல்கள்!

ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்த நடிப்பால் படம் களை கட்டிய போது இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. இசை அமைத்தவர் கே.வி.மஹாதேவன்.

பாடலை எழுதியவரோ கவிஞர் ஏ.மருதகாசி. ராமன் பாடல்களுக்கும் இவருக்கும் நிறையப் பொருத்தம் இருப்பதாகத் திரையுலகே முத்திரை குத்தி விட்ட ஒரு பெரும் கவிஞர் மருதகாசி.

படத்தின் வில்லனாக இருக்கும் ராவணனை அறிமுகப்படுத்தும் காட்சியே அமர்க்களமாகப் படமாக்கப்பட்டிருந்தது. ராவணனுடைய சபையில் வீணை இசைத்துப் பாடி பரிசு பெற விழையும் வெளிநாட்டுப் பாடகன் ஒருவனை ராவணன் வரவேற்றுப் பாட வைக்கும் காட்சி அது.

வீணைக் கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே

 

உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே

ஆனந்தகான அமுத மழையே

 

பொழிந்து மனம் தனை உருக வழி செய்த

வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி)

மோஹன ராகத்தில் அற்புதமான பாடல், திருச்சி லோகநாதனின் குரலில், மலர இதைத் தொடர்ந்து

ராவணன் சபையினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து ஒவ்வொரு ராகமாக விவரிக்கும் காட்சி இடம் பெறுகிறது.

காலையில் பாடும் ராகம் பூபாளம்

உச்சியில் பாடும் ராகம் சாரங்கா

மாலையில் பாடும் ராகம் வசந்தா

இரக்கத்திற்கான ராகம் நீலாம்பரி

மகிழ்ச்சிக்கான ராகம் தன்யாசி

யுத்தத்திற்கான ராகம் கம்பீர நாட்டை

வெண்பா பாட சங்கராபரணம்

அகவல் இசைக்க தோடி

 

தாழிசைக்கு கல்யாணி

 

என ராவணன் முடிக்க கயிலை நாதனைக் கானத்தால் கவர்ந்த ராகம் எது என மண்டோதரி (சந்தியா) வினவ காம்போதியை வீணையில் ராவணன் இசைக்கிறான்.

 

அற்புதமாக இப்படி ராவணனின் ஏற்றத்தைச் சித்தரிக்கக் காரணம் அப்படிப்பட்ட ஏற்றமுடையவன் தவறாக, அயலான் மனைவியை அபகரித்த பெரும் பாவத்தைச் செய்து அழிந்தான் என்பதை வலியுறுத்தவே தான்!


Sampoorna-Ramayanam

கம்பனின் ராவணன்

 

கம்பன் ராவணனை மிக அழகாகச் சித்தரிப்பான்.அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதைத் தன் காவியத்தின் லட்சிய வாசகமாக வைத்து எப்படிப்பட்ட பெரும் ராவணேஸ்வரன் தன் செய்கையால் இப்படி வீழ்ந்து பட்டான் என்பதைத் திறம்பட எடுத்துரைப்பான்.

 

தாரணி மௌலி பத்து.

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நா

சங்கரன் கொடுத்த வாள்.

முக்கோடி வாழ் நாளும் முயன்றுடைய பெரும் தவமும் கொண்டவன்! – இது தான் ராவணன்.

ஆனால் தேவியைக் அபகரித்து வந்ததைப் பாவம் என்று சொல்லி அவளை விடுவிக்க அனைவரும் ஆலோசனை கூறுகையில்,

 

“ஆவியை விடுவேன் அல்லால் தேவியை விடுவேன் அல்லேன்” என்று அகங்காரத்துடன் மொழிந்தவன் ராவணன்.’என்னையே நோக்கி நான் இந்த நெடும் பகையைத் தேடிக் கொண்டேன்’ என்கிறான்! தன் வீரத்தின் மீது அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை!


rama fb

போர், பெரும் போர்!

 

போர் எனில் இது போர். புண்ணியத் திருப்போர். அறத்திற்கும் மறத்திற்கும் இடையே நடந்த கடும் போர்! அது எப்படி இருந்தது?

 

விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர்

கண் போர்த்தன கடல் போர்த்தன படி போர்த்தன கலையோர்

எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே

திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான்!

 

(யுத்த காண்டம் – கம்ப ராமாயணம்)

ஆனால் அண்ணலின் கடும் அஸ்திரங்கள் அவனை வீழ்த்த, ஆயுதமின்றி இருக்கும் ராவணனை நோக்கி,

 

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை;

 

இன்று போய் போர்க்கு நாளை வா”

 

(யுத்த காண்டம் – கம்ப ராமாயணம்)

 

என்று  ராமன் கூறுகிறான். ‘பெரும் காற்றில் பறந்த பூளைப் பூக்களைப் போல உன் துணைப் படைகள் பறந்தே போயின; இன்று போய் (இன்னும் போர் புரியும் எண்ணம் இருக்குமானால்) நாளை வா; (இல்லையேல் சரணாகதி எனில் உடனே சரண் அடை”)’ என்கிறான் ராமன்!

ramarama

சிவனிடம் முறையீடு!

 

போர்க்களக் காட்சியை அடுத்து ராவணன் மனம் சோர்ந்து அரண்மனை திரும்புகிறான்.

 

சிவனுக்கு சாம கானம் இசைத்தவன்; சிவ பக்தனான ராவணன் சிவனிடம் முறையிடும் காட்சி அடுத்து இடம் பெறுகிறது.

 

டி.கே.பகவதி வீணை இசைக்கும் காட்சியில் இன்று போய் நாளை வாராய் என்ற அற்புதமான பாடல் மலர்கிறது. பாடலைப் பாடியவர்  சிதம்பரம் ஜெயராமன்.

 

கே.வி,மஹாதேவன் இசை அமைத்த திலங் ராகப் பாடல் இன்றளவும் ஜீவன் உள்ளதாய் அனைவராலும் விரும்பிக் கேட்கப்படுகிறது.

“இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ!

மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்?

 

எண்டிசை வென்றேனே! அன்று இன்னிசை பொழிந்துனைக் கண்டேனே” (பாடல்- ஏ.மருதகாசி)

அற்புதமான பாடல்; அற்புத இசை; அற்புத நடிப்பு.

அனைவரின் மனமும் தவறு செய்த பேரரசனுக்காக ஒரு கணம் உருகவே செய்கிறது, காட்சி அமைப்பால்!

 

மக்களை மனம் கவர்ந்த ராமர் என் டி ராமாராவ் என்றால் சீதை பத்மினி தான்; பரதன் சிவாஜி கணேசன் தான். இராவணன் டி.கே பகவதி தான். தசரதன் நாகையா தான்!

அனைவராலும் பார்க்கப்பட்ட நல்ல படமாக அமைந்த சம்பூர்ண ராமாயணம் திரைப்பட வரலாற்றில் பக்திப் படங்களில் ஒரு மைல் கல்!

-தொடரும்

குறிப்பு: படம் வெளியிடப்பட்ட ஆண்டாக 1956 என சில தளங்களும் பத்திரிகைகளும் குறிப்பிட்டாலும் கூட, 1958 என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது சிவாஜிகணேசனின் அதிகாரபூர்வமான இணையதளமும் அதைச் சுட்டிக்காட்டும் விக்கிபீடியா தரும் விவரத்தின் அடிப்படையிலும் தான்!

 

-தொடரும்

பாலைவனத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பது எப்படி?

ja,mbu fruits

Research Paper written by London swaminathan

Research Article No.1656; Dated 17th February 2015.

வராகமிகிரர் என்னும் மாமேதை 1500 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சம்ஸ்கிருத என்சைக்ளோபீடியா – பிருஹத் சம்ஹிதையில் – கூறிய அரிய பெரிய அபூர்வ விஷயங்களைக் கண்டோம். இன்று மேலும் சில விஷயங்களைத் தொட்டுக் காட்டுவேன்.

வறண்ட பூமிகளிலும் பாலைவனப் பிரதேசங்களிலும் வளரும் சில மரங்கள் முதலியவற்றைக் கொண்டு தண்ணீர் கண்டு பிடிக்கும் உத்தி / டெக்னிக் இது. வராஹமிகிரர் ஒரு விஞ்ஞானி. ஆகையால் மாய மந்திரம் – அண்டாகா கசும் அபூர்வ கா குசும் – என்று மம்போ ஜம்போ –வுக்குப் போகாமல் அறிவியல்பூர்வ முறையில் இதை அணுகியுள்ளார்.

சிலவகை மரங்கள் அதிக இலைகளுடன் காணப்படும். அவற்றின் செழுமை, மற்றும் பாம்புப் புற்றுகள், தவளை இவைகளைப் பார்த்து நிலத்துக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதா, எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதைச் சொல்கிறார்.

எப்படி எண் திசைக்கும் காவல் தெய்வங்கள் இருக்கிறதோ அதே போல எட்டு திசைகளில் பூமிக்கடியில் உள்ள தண்ணீருக்கு அந்தக் காலத்தில் பெயர்கள் இருந்தன என்பதையும் இவர்தம் நூல் செப்புகிறது.

Bassia latifolia_clip_image002

இலுப்பை வகைத் தாவரம்

உடம்பிற்குள் எப்படி ரத்த நாளங்கள் ஓடுகின்றனவோ அப்படி வானத்திலும் நிலத்துக்கு அடியிலும் நீரோட்டம் உண்டு என்றும் இவர் சொல்கிறார்.

எறும்பும், பாம்புப் புற்றுகளை உண்டாக்கும் கறையான் களும் காற்று மண்டலத்தில் உள்ள ஈரப் பதத்தின் மூலம் தண்ணீர் பெறும் என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை. அவைகள் ஈரப்பதம் இருக்கும் இடத்தில் புற்று உண்டாக்கும். ஈரப்பசை இல்லாவிடில் புற்று உதிர்ந்து விடும். இதை எல்லாம் அறிந்து மனு, சாரஸ்வதர் என்ற இரு அறிஞர்கள் நூல்களை எழுதியதாகவும் அதையே தான் பின்பற்றுவதாகவும் சொல்லுவார். அந்த நூல்கள் இன்று கிடைக்காவிடினும் உரைகாரர்கள் பல விஷயங் களை நமக்கு எடுத்துரைக்கின்றனர்.

1500 ஆண்டுகளுக்கு முன் இதை வராகமிகிரரும், அவருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள் என்றால் அதற்கு நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்திருந்தால்தான் இப்படி நூல் எழுத முடியும். மேலும் வேறு எந்த மொழியிலும் இது போல நூல்கள் இருந்ததாக யாம் அறியோம்.

2_vilvam_tree

வில்வ மரம் பற்றியும் வராகமிகிரர் சொல்கிறார்

சுமார் 125 ஸ்லோகங்களில் இவர் தரும் தகவல்களை தாவரவியல் துறையினரும், நீரியல் துறையினரும் ஆராய்ந்து கிராம மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தால் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்காலாம். மேலும் இதில் செலவு என்பது கிணறு வெட்ட மட்டுமே ஆகும். பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க பணமோ கருவிகளோ தேவை இல்லை.

125 பாடல்கள், அதற்கான உரைகள் முழுதையும் எழுதினால் அது புத்தக உருப் பெறும் என்பதால் ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காட்டுவேன்.

தண்ணீர் இல்லாத இடத்தில் ஒரு நாவல் (ஜம்பூ) மரத்தைக் கண்டால் சுமார் 15 அடி ஆழத்தில், கிழக்கு திசையில் ஐந்து அடி தூரத்தில் தண்ணீர் இருக்கும். அதன் அருகில் எறும்புப் புற்று (பாம்புப் புற்று) இருந்தால் தென் திசையில் 15 அடி ஆழ்ழத்தில் இனிய சுவை உடைய நீர் இருக்கும்.

இவ்வாறு நிறைய மரங்கள் பெயர்களைச் சொல்லி அவர் நீர் இருக்கும் திசை,ஆழம் எல்லாம் சொல்லுகிறார்.

மரத்தின் பழங்கள், இலைகள் முதலியன அசாதரண வடிவத்தில் இருந்தாலும் நிலத்தடி நீர் இருக்கும் என்கிறார்.

kadamba

கடம்ப மரம்

ஒலி மூலம் நிலத்தடி நீர் கண்டுபிடித்தல்!

சப்தம் மூலம் பூமிக்கடியிலுள்ள தண்ணீரைக் கண்டுபிடிக்க வும் வழி சொல்லுகிறார்!! பூமியைக் காலால் தட்டும்போது நல்ல, உரத்த ஒலி வருமானால் சுமார் 27 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கும். கண்டங்கத்தரிச் செடி முள் இல்லாமல் வளர்ந்தால் அதுவும் நிலத்தடி நீரின் அறிகுறி என்றும் பகருவார் வராகமிகிரர்.

அவர் நிறைய மரங்கள், புல், செடி, கொடி வகைகளைச் சொல்லுவதாலும், பழைய கால நீட்டல் அளவை சொற்களைப் பிரயோகிப்பதாலும் செயல் முறையில் பரிசோதித்து நிறை குறைகளை அறிய வேண்டும்.

இது பயனுள்ள ஒரு துறை என்பதால், ஆர்வத்துடன் ஆராய வேண்டிய அத்தியாயம் இது. வெளிநாடுகளில் இன்ன தாவரங்கள் இருந்தால் பூமிக்கடியில் இன்ன இன்ன உலோகங்கள் கிடைக்கும் என்னும் தாவர இயல் துறை நன்கு வளர்ந்திருக்கிறது. பழங்கால நூல்களில் உள்ள ரகசியங்களை நாம் கற்றோமானால் செலவு இல்லாமல் கனிமச் சுரங்கங்களைக் கண்டு பிடிக்கலாம்.

kantankattari

கண்டங்கத்தரி

நம்முடைய முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து அதன் ரகசியங்களை எழுதிவைத்துள்ளனர். சூரியன் சந்திரன் ஆகியவற்றின் போக்கைக் கண்டுபிடித்து கிரஹணம் முதலியவற்றைச் சொன்னவர்கள் எறும்பையும் தவளையையும் கண்டு பல சாத்திரங்களைச் செய்துள் ளனர்! இதை எண்ணி எண்ணி வியப்பதைவிட செயல் முறையில் பயன்படுத்த வேண்டும்.

எனது ஆங்கிலக்கட்டுரையில் கூடுதல் தாவரங்களின் பெயர்களைக் கொடுத்து இருக்கிறேன். முழு விவரம் வேண்டுவோர் பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 54-ஐக் காண்க.

சிந்து சமவெளியில் மக் டொனால்ட்!

indus4

Research Paper written by London swaminathan

Research Article No.1653; Dated 16th February 2015.

சிந்து சமவெளி நாகரீகம்- சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் 25  கட்டுரைகளுக்கு மேல் எழுதிவிட்டேன். நான் வலியுறுத்துவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆரிய-திராவிடம் என்னும் பிரிவினைக் கண்ணோட்டத்தில் பார்க்காது புதிய கோணத்தில் பார்க்க வேண்டும். அப்போதாவது அந்த சிந்து வெளி எழுத்தின் மர்மத்தைத் துலக்க முடியுமா, புதிரை விடுவிக்க முடியுமா என்று பார்ப்போம் என்பதே.

50 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் –பின்னிஷ் ஆராய்ச்சியா ளர்கள், அதற்கு முன்னால் அதைத் தோண்டி எடுத்தவர்கள் என்ன சொன்னார்களோ அதையே சொல்லி ஆராய்ச்சி உலகத்தையே திசை திருப்பிவிட்டார்கள். இதனால் இன்று வரை அந்த எழுத்துக்களைப் படிக்க இயலவில்லை–  சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது.

இந்தக் கட்டுரையின் நோக்கம் அந்த முத்திரையில் இருப்பது — தனி நபர்களின் பெயர்களாக இருந்தால்  — அதை எப்படிப் படிப்பது என்ற ஒரு யோஜனைதான்.

InscriptH506

மக் டொனால்ட் (Mac Donald) என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். இதற்கு ஐரிஷ் மொழியில், டொனால்ட் மகன் என்று பொருள். இதே போல ஓ’ஷானஸ்ஸி (o’ Shaughnessy) என்ற பெயரும் அயர்லாந்தில் அதிகம் காணப்படும். ‘ஓ’ என்பது பேரன் என்ற பொருளில் வரும். அதாவது ஷானஸ்ஸியின் பேரன். இதை சிந்து சமவெளியிலும் பார்க்க முடியுமா? முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

சிந்து சமவெளியில் பல முத்திரைகள் ஒரு வட்ட வடிவ எழுத்துடன் துவங்கும். அதற்கு அடுத்தாற் போல், ஆங்கிலத்தில் ‘அபாஸ்ட்ரோபி’ (apostrophe) குறி போடுவது போல இரண்டு கோடுகள் வரும். படத்தில் காண்க. இதுவும் அயர்லாந்தில் உள்ளது போல இன்னாரது மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்கும் குறி ஈடாக இருக்கலாம்.

சிந்துவெளி முத்திரைகளில் உள்ள விஷயம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. சிலர் அது, உப்பு, புளி, மிளகு கணக்கு என்று எண்ணுகின்றனர். அதாவது இன்ன அளவு இன்ன பொருள்களை ஏற்றி அனுப்புகிறோம் என்ற (ஏற்றுமதி) விஷயம் என்பர். மற்றும் சிலரோ, இது தனி நபர்களின் பெயர்கள் பொறித்த டோக்கன் (Token) வில்லைகள், ஜப்பானில் இப்படி குடும்பத்திற்குக் குடும்பம் உண்டு என்பர். அது உண்மையானால், நான் எண்ணுவது போல மகன் அல்லது பேரன் என்பதைக் குறிக்க கோடுகள் பயன்பட்டிருக்கலாம். அல்லது என்ன ஊர் என்பதைச் சொல்லும் குறியாக இருக்கலாம்.

Indus_script.jpg3

இதை உறுதிப் படுத்த சில எடுத்துக் காட்டுகளைத் தருவேன். புறநானூற்றில் “மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்” என்று அப்பா பெயருடன் மகன் பெயர் வரும்.

இப்படிப் பல தலைமுறைகளின் பெயர்களைச் சொல்லும் வழக்கம் இந்தியாவில்தான் முதலில் இருந்தது. விஷ்ணு சஹஸ்ரநாமம் என்னும் புகழ் பெற்ற துதியில் ஐந்து தலை முறைகளின் பெயர்கள், ஒரே ஸ்லோகத்தில் வந்து விடுகிறது!

வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம்

பரசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம்

இதில் வசிஷ்டர், அவருடைய மகன் சக்தி, அவருடைய மகன் பராசரர், அவருடைய மகன் வியாசர், அவருடைய மகன் சுகர் ஆகிய ஐந்து தலைமுறைகளைச் சொல்லி வணங்குகின்றனர்.

இதே போல பிராமணர்கள் மாதப் பிறப்பிலும் அமாவாசையிலும் செய்யும் தர்ப்பணத்தில் தந்தை, தாத்தா (தந்தைக்கு தந்தை), கொள்ளுத் தாத்தா (பிதா, பிதாமஹான், ப்ரபிதா மஹான்)  என்ற மூன்று தலை முறைக்கு நீர்க்கடன் செலுத்துவர்.

ammonite-king.jpgthree generations

இந்த வழக்கம் உலகம் முழுவதும் இருந்தது. அஸ்ஸீரீயாவில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதத்தில் “பாலாவின் மகனான ஆடா”வின் அம்பு (Arrow of Ada, Son of Bala) என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.மு.1100 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. எட்டாம் நூற்றாண்டு மன்னர் ஒருவர் உருவத்தில் அந்த மன்னர், அவருடைய தந்தை மற்றும் தாத்தா பெயர் எழுதப் பட்டுள்ளது.

பெயர் வைக்கும் முறை உலகம் முழுதும் இந்திய முறையை ஒட்டியே இருந்தது. சம்ஸ்கிருதத்தில் ‘சு’மதி, ‘சு’கந்தி, ‘சு’கர்ணன் என்றெல்லாம் பெயர்கள் இருக்கும் இந்த “சு” என்பது நல்ல என்று பொருள்படும். இதையே தமிழ்ப் புலவர்களும் ‘நக்’கீரன், ‘நன்’னாகன், ‘நச்’செள்ளை, ‘நப்’பின்னை என்று வைத்துக் கொண்டனர். அதாவது முன் ஒட்டு Pre fix (நல்/ நற்) மூலம் பெயர் பெற்றனர். இதே போல வர்மன், சேன என்பதற்கு இணையாக மாறன், சேரன் என்று பின் ஒட்டுகளையும் (Suffix) பயன்படுத்தினர். வட மொழியில் சு= தமிழில் நல்.

kassite weapon 1275 BCE

அயர்லாந்தில் பெண்கள் “மக்”, “ஓ” என்ற எழுத்துக்களுக்குப் பதிலாக “நி” அல்லது “நிக்”  (Ni or Nic) எனப் பயன்படுத்தினர். சுமேரியாவிலும் “என்” என்ற முன் ஒட்டு ஆண்களுக்கும் “நின்”  (En and Nin) என்ற முன்னொட்டு பெண்ளுக்கும் பெயர்களில் வரும்.

அயர்லாந்தில் “மோர்” என்றால் பெரிய, “ஓக்” என்றால் (Mor and Og) இளைய (ஜூனியர்) என்பது பெயர்களில் ஒட்டிக் கொண்டுவரும். இதுவும் சம்ஸ்கிருத வழக்கே. தமிழில் இதை “முது”கண்ணன், “முது”கூத்தன் என்றும் “இள”நாகன், “இள”ங்கீரன் என்றும் பயன்படுதுவதைக் காணலாம். சம்ஸ்கிருதத்தில் மஹா மூலன், மஹா சாஸ்தா என்பர். இது சங்க இலக்கியத்தில் தமிழில் “மா”மூலன், “மா”சாத்தன் என (புறநானூற்றில்) வரும். சுருங்கச் சொல்லின் சம்ஸ்கிருதப் பெயர்களில் உள்ள முன் ஒட்டுகளை (Prefix) சுமேரியா, அயர்லாந்து, சங்கத் தமிழில் காணாலாம். உலகில் மிகப் பழைய இலக்கியமான வேதங்களில் இப்படிப் பெயர்கள் காண ப்படுவதால் நாமே உலகிற்கு இதைக் கற்றுத தந்தோம் என்றால் அது மிகையாகாது.

indus1

உலக மொழிகள் எல்லாம் தமிழில் இருந்தும் சம்ஸ்கிருதத்தில் இருந்தும் சென்றனவே என்றும், அவ்விரு மொழிகளும் பாரத மண்ணில், பாரத சிந்தனையில் பிறந்தவை என்றும் நான் இதே பிளாக்-கில் ஆய்வுக் கட்டுரை எழுதிவிட்டேன். நான் சொல்லும் மறுக்க முடியாத ஆதாரம் “சந்தி (புணர்ச்சி)” விதிகள் ஆகும். உலகில் இரண்டே மொழிகளில்தான் அது நடை முறையில் உள்ளது- இலக்கண விதிகளில் உள்ளது. சம்ஸ்கிருதமும் தமிழும் ஒரே மூலத்தில் உதித்தவை என்ற நம் முன்னோர் கருத்து மேல் நாட்டாரின் மொழிக் கொள்கைகளைத் தகர்த்து எறியும். இதற்கு சந்தி விதிகள் ஒன்றே போதும். உலகில் வேறு எங்காவது கொஞ்சம் மிச்சம் சொச்சம் சந்தி விதிகள் இருக்கிறதென்றால் அவைகள் எல்லாம் சம்ஸ்கிருத மொழியில் இருந்து தோன்றிய மொழிகளாக இருக்கும் (பிரெஞ்ச், லத்தீன், ஆங்கிலம் முதலிய மொழிகளில் கொஞ்சம் உண்டு. அவை எல்லாம் சம்ஸ்கிருத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளே என்பதை எல்லோரும் ஏற்பர்).

inscription

ஆகவே இந்த மொழிக் கொள்கைகளின் பின்னணியில் சிந்து வெளி முத்திரைகளை அணுகினால், ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) இல்லாமலேயே சிந்துவெளி முத்திரைகளைப் படித்து விடலாம்.

லண்டனுக்கு வரும் சொந்தக் காரர்களையும் நண்பர்களையும் பிரிட்டிஷ் மியூசியத்துக்கு அழைத்துச் செல்லும்போதெல்லாம் நான் ரோஸட்டா கல்வெட்டு (Rosetta Stone) பக்கத்தில் போய் ஒருமுறை பெருமூச்சுவிட்டு வருவேன். “இறைவா! எகிப்திய ஹைரோகிளிபிக்ஸைப் படிக்க இப்படி ஒரு மும்மொழிக் கல்வெட்டைக் கொடுத்தாயே! எங்கள் சிந்துவெளி முத்திரைகளைப் படிக்க ஒரு இருமொழிக் கல்வெட்டையாவது கொடுக்கக்கூடாதா! அதையும் என் கைகளில் கொடுத்தால் இலக்கிய நோபல் பரிசையே வாங்கிவிடுவேனே! என்று ஏங்குவேன்.

rosettastone-detail

Rosetta Stone in Ancient Greek, Demotic and Hieroglyphs, displayed in British Museum,London.

முடிவுரை: சிந்துவெளி முத்திரைகளில் Personal Name பெர்ஸனல் நேம்- கள் இருந்தால் ஐரிஷ் மொழி Formula பார்மூலாவை apply ளை செய்யுங்கள். உலகின் பழைய மொழிகள் எல்லாம்,ஆண்-பெண் பெயர்களில் முன் ஒட்டைப் பயன்படுத்டுவது சம்ஸ்கிருதத்தில் உள்ளது போலவே உள்ளது. சங்கத் தமிழ் புலவர் பெயர்களும் அப்படியே உள்ளன. ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் மனிதர்கள் பெயர்கள் என்று ஒன்று இருக்குமானால் அதற்கும் இதே பார்முலாவை Formula பயன்படுத்துங்கள்.

வாழ்க தமிழ் (வலக் கண்)! வளர்க சம்ஸ்கிருதம் (இடக் கண்)!!

swami_48@yahoo.com