சுமேரிய கல்யாணம்- இந்து திருமணம் ஒப்பீடு (Post No.3723)

Picture of a Traditional Tamil Wedding

 

Written by London swaminathan

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:- 20-55

 

Post No. 3723

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாபிலோனியா, மெசபொடோமியா, சுமேரியா என்றெல்லாம் அழைக்கப்படும் பகுதி இராக், சிரியா, துருக்கி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் நாடுகளாகும். அருகாமையிலுள்ள வேறு சில நாடுகளின் பகுதிகளும் இந்த வரம்பிற்குள் வரும். அங்கு சுமார் 3000, 4000 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருமணத்தை இந்துக்களின் திருமணத்துடன் ஒப்பிடுவதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கம்.

 

1.1மத்தியக் கிழக்கு (Middle East) அல்லது அருகாமைக் கிழக்கு (Near east) என்று அழைக்கப்படும் இப்பகுதிகளில் கல்யாணத்தை நடத்தும் பொறுப்பு தந்தையிடமே இருந்தது.

 

இந்துமதத்திலும் தந்தைதான் இதை ஏற்பாடு செய்வார். ஆனால் பெண் அல்லது மாப்பிள்ளையை முடிவு செய்வதில் தாயார் பெரும் பங்காற்றுவார். இது காளிதாசன் முதலியோர் எழுதிய நாடகங்களிலிருந்தும், புராணக் கதைகளிலிருந்தும் தெரிகிறது.

 

2.பெண்கள் 13 வயது முதல் 19 வயதுக்குள்ளாக கல்யாணம் செய்தனர். ஆண்கள் வயது, திருமணத்தின்போது 10 வயது கூடுதலாக இருந்தது.

இந்துக்களும் பெண்ணின் வயது 10 முதல் 20 வரை குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். (உ.ம். வால்மீகி ரா மா யணம், சிலப்பதிகாரம்).

 

3.ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டத்து. ஆனால் முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாவிடில் இரண்டாவது மனைவிக்கு அனுமதி உண்டு.

இந்துக்களின் மனு தர்ம சாத்திரமும் இதையே செப்பும். அரசர்கள் மட்டும் அருகாமை நாட்டு உறவு நீடிக்கவும், படைபல உதவிக்கும் என பல மனைவியரை மணந்தனர். ஆனால் ராமன் போன்ற மன்னர்கள் “இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” என்று சொன்னார்கள்.

 

4.முதலில் சம்மதம், பின்னர் கல்யாணம் என்ற நடைமுறை இருந்தது.

பெண்ணுக்கு பணம் (சீதனம்) கொடுக்க வேண்டும்.

 

நிச்சயதார்த்தம் பின்னர் திருமணம் என்பது இந்துக்களின் வழக்கம்.

சங்கத் தமிழ் நூல்களிலும், சம்ஸ்கிருத நூல்களிலும் பெண்ணுக்கு சீதனம் கொடுக்கும் வழக்கம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

 

5.திருமண ஒப்பந்தம் எழுத்தில் இருந்தது. ஆனால் வாய்மூலம் சொன்னாலும் அதுவும் ஏற்கப்பட்டது. சுமேரியாவில் திருமணத்தைப் பற்றி சட்ட விதிகள் இருந்தன.

 

இந்துக்களும் நிச்சயதார்த்த்தின்போது பத்திரிக்கை படிக்கும் வழக்கம் உண்டு. இரு தரப்பினரும் அதை கைமாற்றிக்கொள்வர். சில நேரங்களில் இந்தப் பெண், இந்தப் பையனுக்குத்தான் என்று சொல்லிவிட்டால், வார்த்தை மாறாமல் அதை மதித்து நடந்தனர். இந்துக்களின் நீதி நூல்களில் திருமண விதிகள் உள்ளன.

 

6.மெசபொடோமியாவில் இ ருதரப்பாரும் பெண்ணுக்குக் கொடுத்த சீதனம் பற்றி எழுதி வைத்தனர். பெண்ணின் சொத்து குழந்தைகளையே சாரும். குழந்தை இல்லாவிடில் கணவருக்கும் பங்கு உண்டு. பெண்ணுக்கான  சீதனத்தை குழந்தை பெறும்வரை தவனை முறையில் செலுத்தினர்..

இந்துமத்தில் இது பற்றி விதி இல்லாவிடினும் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைப் போடுவர். ஆடி, கிருத்திகை, வளைகாப்பு, குழந்தை பிறப்பு, தலை தீபாவளி என்று ஏதேனும் ஒரு சாக்கில் கொடுப்பர். அதை எல்லாம் மொத்த சீதனக் கணக்கில் சேர்ப்பர். இடை க்  காலத்தில் ஆண்களுக்கு கிராக்கி அதிகம் இருந்ததால் ஆண்களுக்கு   வரதட்சிணைப் பணம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. பழங்காலத்தில் இவ்வாறு இல்லை.

 

6.சுமேரிய, பபிலோனிய திருமணங்கள், 5 முதல் 7 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் என்னென்ன சடங்குகள் நடந்தன என்ற விவரம் இல்லை.

 

இந்துக்களின் திருமணம் ஐந்து நாட்களுக்கு நடந்தது. இப்பொழுது அது இரண்டு நாட்களாகச் சுருங்கிவிட்டது. இந்துக்களின் 5 நாள் சடங்குகளும் நீதி நூல்களில் உள்ளன.

 

 

7.பெண்ணின் முகத்தை மூடியிருக்கும் திரையை, மாப்பிள்ளை அகற்றுவது முக்கிய சடங்காக இருந்தது.

 

இந்த வழக்கம் வட இந்திய இந்துக்களிடையே  – குறிப்பகத் தமிழ்நட்டுக்கு – வடக்கில் இன்றும் உள்ளது. தமிழ்நாடு ஏனைய எல்லா மாநிலங்களையும் விட வெப்பம் அதிகமான இடம் என்பதால் காலப்போக்கில் இந்த வழக்கம் விடுபட்டுப் போயிருக்கலாம். மாப்பிள்ளையும் வேட்டி துண்டுடந்தான் நிற்பார்; வடக்கில் குளிர் என்பதால் ஆணும் கூட உடம்பு முழுதும் மூடியிருப்பார்.

8.பெண்களின் தோழிகள் அந்தப் பெண் கன்னிப் பெண் தான் என்பதை உறுதி செய்யும் வழக்கம் இருந்தது.

 

இந்துக்களிடையேயும் இவ்வழக்கம் இருந்தது. முதல் இரவுக்குப் பின்னர் அந்த வேஷ்டி முதலிய துணிகளை நாவிதனுக்குத் தானம் செய்துவிடுவர். அந்தக் காலத்தில் அவர்கள்தான் மருத்துவச்சி; மகப்பேறு வேலைகளைக் கவனித்து வந்தனர். ஆகையால் ஏதேனும் இசகு பிசகு இருந்தால் அவர்கள் மூலம்  கிசு ,கிசு ஊர் முழுதும் பரவிவிடும்.

 

  1. திருமணத்தின் முக்கிய நோக்கம் சந்ததி விருத்தி என்று நூஜி (Nuzi) முதலிய இடங்களில் உள்ள களிமண் (Clay tablets) கல்வெட்டுகள்/ பலகைகள் சொல்கின்றன.

 

இந்துக்களின் வேத மந்திரங்களும் இதையே வலியுறுத்துகின்றன. காளிதாசனும் ரகு வம்ச மன்னர்களின் 14 குண நலனகளை அடுக்குகையில் சந்ததி விருத்திக்காகவே ரகுவம்ச மன்னர்கள் திருமணம் செய்தனர் (செக்ஸ் இன்பத்துக்காக அல்ல) என்று அடிக்கோடிட்டுக் காட்டுவான்.

 

10.குழந்தையின்மை/ மலட்டுத் தனமை என்பது அக்காலத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது ஹமுராபி (Hammurabi Code) மன்னனின் சட்ட ஷரத்துகளில் ஒரு மணப்பெண், ஒரு அடிமைப் பெண்ணையும் கண்வனுக்கு அளிக்கலாம் என்று சொல்லியிருக்கிறது.

 

இது இந்துமதத்தில் இல்லை. ஆனால் மன்னர்களுக்குக் குழந்தை இல்லையென்றால் உறவினர் மூலம் குழந்தை பெற அனுமதி உண்டு. அம்பா, அம்பாலிகா மூலமே வியாசர், திருதராஷ்டிரனும் பாண்டுவும் பிறக்க உதவினார்.

 

11.கனவனுடனோ, அல்லது கணவனும் மனைவியும் பெண்ணின் தந்தை வீட்டிலோ வசிக்கும் இரண்டு வகையான ஏற்பாடுகள் இருந்தன. குழந்தை இல்லாமல் இருக்கும் போது கணவன் இறந்துவிட்டால் மாமனார் தனது மகன்களில் வேறு ஒருவனுக்குக் கல்யாணம் செய்யும் ஏற்பாடு இருந்ததை நூஜி களிமண் படிவங்கள் காட்டுகின்றன.

 

அர்ஹல்பா (Arhalba) என்ற மன்னன் தான் இறந்தால் தனது சகோதரனைத் தவிர வேறு எவரையும் தன் மனைவி மணக்கக் கூடாது என்று உயில் எழுதிவைத்ததை உகாரித் (Ugari) களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

 

12.ஹிட்டைட் (Hittite) களிமண் பலகைகள் வேறு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் 2 முதல் 4 ஆண்டுகள் வரை திருமணம் செய்துகொள்ளாமலேயே கூடி வாழ்ந்தால், அதை சட்டபூர்வமாக கருதலாம் என்று சொல்கின்றன.

இது இந்துமத்தில் இல்லை

 

14.விவாக ரத்து பற்றி, சொத்து பிரிவினை பற்றி சட்ட விதிகள் இருந்தன. பெண்களுக்கு எதிராகவே பல சட்ட விதிகள் இருந்தன.

இந்து சட்ட நூல்கள் (மனு முதலான நீதி நூல்கள்) விவாக ரத்து, சொத்துக்களின் பாகப் பிரிவினை பற்றி விரிவாகச் சொல்கின்றன. இது விஷயத்தில் வேற்றுமை பாராட்டவில்லை

.

13.இந்துக்கள் இறைவனுக்கு ஆன்டுதோறும் கல்யாண உற்சவங்கள் நடத்துவது போல ((மதுரை மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம், ஆண்டாள் போன்றவை) சுமேரியாவிலும் கடவுளர் கல்யாண மஹோத்சவங்கள் நடந்துவந்தன.

 

 

இப்போது முஸ்லீம் சட்ட விதிகள் இருக்கும் அந்த நாடுகளில் முன்காலத்தில் தலாக், தலாக் விவாக  ரத்து, ஐந்து மனைவி திருமணம் முதலியன இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

 

Source for Middle East: “ Dictionary of the Ancient Near East” by  British Museum.

 

–Subham–

 

சொந்த தங்கையை மணந்த மன்னர்கள்- எகிப்திய அதிசயங்கள் 19 (Post No.3722)

Menkaure and his wife

Written by London swaminathan

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:- 9-18 am

 

Post No. 3722

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்திய பாரோக்கள் (பர ராஜ = மன்னர்கள்) சொந்த தங்கைகளையே திருமணம் செய்துகொண்டனர். இதனால் அவர்கள் பலவகை மரபியல் நோய்களுக்கு உள்ளானார்கள். மேற்காசியாவை ஆண்ட ஹிட்டைட்டுகள் (Hittites) இப்படி யாரேனும் திருமணம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்தார்கள். இவை எல்லாம் வரலாற்றில் காணப்படும் சுவையன செய்திகள்!

 

எகிப்திய சரித்திரத்தில் பழைய ராஜ்யம், நடு / மத்திய ராஜ்யம், புதிய ராஜ்யம் (Old, Middle and New Kingdoms) என்றும் குழப்பமான (அராஜக= அரசனற்ற) காலங்களை இடைப்பட்ட காலம்  (Intermediate Periods) என்றும் வரலாற்றாசிரியர்கள் பிரித்துள்ளனர். புதிய ராஜ்யத்தின் துவக்கத்தில் இரண்டாம் அஹோதேப் ( Ahotep II மஹாதேவி என்பது இப்படித் திரிந்திருக்கலாம்) தனது சகோதரனையே  கல்யாண ம் செய்துகொண்டார். அவருடைய பெயர் தா அல்லது காமோசி (Taa or Kamose) என்று நம்பப்படுகிறது.

 

(மோசி/மோசஸ்/ மூசு பலா,  தேப்/தேவி பற்றிய எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காணவும்)

 

அவர்களுக்குப் பிறந்த மகன் ஆமோசியும் (Ahmose) தனது தங்கையை திருமணம் செய்துகொண்டான். அவளுடைய பெயர் ஆமோசே நவரதிரி Ahmose Nefertiry (நவ ரதி).

 

அவர்களுக்குப் பிறந்த மகன் ஆமெனோதேப் ( Amenhotep) சமணதேவன்). அவன் தனது சகோதரி மேர்யாடாமுனை (Merytamun மாரி அம்மன்) மணந்தான்.

statue of Hatshepsut

இதற்குப் பின்னர் ஆண்ட மன்னன் துதமோசிக்கு (Thutmose) ஹட்சேப்சுத் (சத்ய சுதா Hatshepsut) என்ற மகள் பிறந்தாள். அவள் தனது ஒன்றுவிட்ட சகோதரனை கல்யா ணம் செய்துகொண்டாள். அவன் மன்னனான போது அவன் பெயர் இரண்டாம்  துதமோசி.

 

 

இந்தக் காலகட்டத்தில் சகோதர-சகோதரி கல்யாணம் நடைபெற்ரது உண்மை என்பதும், இது சம்பிரதாய சடங்கு அல்ல– உண்மையான திருமணம் என்பதும் உறுதியாகிவிட்டது.

 

எகிப் தி ய மன்னர்களின் பெயர்களில் உலகம் முழுதும் தெரிந்த மன்னன் துதன்காமுன் Tutankhamun (துஷ்டகாமினி). அவனும் அவனுடைய ஒன்றுவிட சகோதரி அங்கசேனாமுன்னை (தேவ சேனா/ தெய்வானை என்பது போன்ற ஒரு சம்ஸ்கிருதப் பெயர் என்பது என் துணிபு) கல்யாணம் செய்துகொண்டான்.

 

(துதன் காமுனின் ரத்தின- தங்கப் புதையல் அப்படியே கிடைத்ததால் அவன் பெயர் உலகம் முழுதும் பரவியது அவன் இளம் வயதில் இறந்ததால் அவனை BOY KING பாய் கிங் — மாணவ அரசன் — என்பர்).

 

அப்பாவும் மகளும் திருமணம் செய்துகொண்ட அபூர்வ நிகழ்ச்சிகளும் உண்டு. மூன்றாம் அமனோதேப் Amenhotep (சமண தேவன்), இரண்டாம் ரமேஸஸ் Ramesses II (ராம சேஷன், ரமேசன்) ஆகியோர் தங்களுடைய மகளைத் திருமணம் செய்தனர். ராமசேஷனுக்கு பிண்டாநட் Bintanat  (விந்தியாநாத்) என்ற மகள் பிறந்தாள்

 

Akhenaten and his wife Nefertiti

பழைய ராஜ்யத்தில் (OLD KINGDOM) இப்படி நடந்ததற்கான குறிப்புகள் உள்ளன. ஆனால் உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் டாலமி (PTOLEMY II) காலத்தில் மீண்டும் 200 வருடங்களுக்கு இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது. டாலமி காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டாகும் (இந்தியாவில் அசோகன் ஆண்ட காலத்தை ஒட்டி)

 

அரசர் அளவில் இப்படி நடந்தபோதும் சமுதாயத்தில் இப்படி நடந்ததாகத் தகவல் இல்லை. ஆகவே இது சமுதாயம் வெறுத்த ஒரு வழக்கம் என்றே கருதப்படுகிறது. இது எப்படித் தெரிகிறதென்றால் புதிய சாம்ராஜ்யத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசர் கல்லறைப் பணியில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி, அவனுடைய தாயாருடனும் மகளுடனும் கள்ள த் தொடர்பு வைத்துக்கொண்டதோடு வேறு ஒரு பெண்ணை தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்ததாக அவன் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவனுடைய பெயர் நபாமுன் (நவமுனி).

 

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. மன்னர்கள் மட்டும் எப்படி குடும்ப உறுப்பினர்களை யே அனுபவித்தனர்? இதற்குக் காரணம் என்ன?

 

பெண்வழி (Female line) அரச மரபு இருந்ததால் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே ராஜபோகத்தை வைத்துக்கொள்ள அப் படிச் செய்தனர் என்பது ஒரு ஊகம்.

 

வெளியிடத்தில் பெண் எடுத்தால் அரசாட்சி கை மாறிவிடுமோ என்ற அச்சம் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது எகிப்தில் இருப்பதே ஒரு ராஜ குடும்பம்- அந்த ராஜ குடும்பத்திலேயே  உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று கருதி இருக்கலம். இப்பொழுதும் கூட சில ஜாதியினர் தங்கள் ஜாதிக்குள்ளேயே — ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே — திருமணம் செய்வதைப் பார்க்கிறோம். தமிழர்கள் அத்தை, மாமன் மகள், மகன்களை க் கட்டுவதைக்கூட  வெளிநாட்டினர் COUSIN MARRIAGE கஸின் மேரேஜ் என்றுதான் இன்றும் சொல்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு புதுமை.

 

தெய்வங்களின் கதைகளிலும் இப்படி வருவதாலும் எகிப்திய அரசர்கள் தெய்வங்கள் என்று கருதப்பட்டதாலும் இப்படி நடந்ததாகக் கருதுவோரும் உண்டு. பைபிள் கூறும் முதல் மனிதனாகிய ஆதாம் அவன் இடுப்பு எலும்பில் உருவான ஏவாளையே (ADAM AND EVE) மனைவியாகக் கொண்டான். அதாவது மகளையே மணந்தான்!

 

ஆதாம்- ஏவாள் ஆகிய இருவருக்குப் பிறந்த சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் மணந்ததாலும் புணர்ந்ததாலும்  மக்கள் பெருகினர் என்று பைபிள் வாக்குவாதத்தில் ஈபடுவோர் செப்புவர்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இது போன்ற பல குறிப்புகள் உண்டு.

எகிப்தைப் பொறுத்தமட்டில் எல்லா காரணங்களும் ஊகங்களே; உறுதியான காரணம் எதுவும் எழுதப்படவில்லை.

 

xxxxxxxxxxxxxxxxxxx சுபம் xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

My Research Articles on Egypt

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

 

Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014

 

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

 (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

 

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

14 october 2012

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

POST No. 716 dated 21 Novemeber 2013

சுமேரியாஎகிப்தில் இந்திரன் வழிபாடு!

15 September 2014

 

எகிப்திய அதிசயங்கள் 17 கட்டுரைகள்

 

1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017

2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017

 

3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)posted 18-2-2017

 

4.எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017

 

5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017

6.எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on  21-2-2017

 

7.எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017
8.மனித முகம்சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on  23-2-2017

9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

posted on  24-2-2017

 

10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)posted on  25-2-2017

 

11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11posted on  27-2-2017

 

12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on  2-3-2017

 

13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687)posted on  3-3-2017

 

14.மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on  4-3-2017

15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)

posted on  5-3-2017

 

16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on   6-3-2017

 

17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)

18. எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா?-எகிப்திய அதிசயங்கள் -18 (Post No.3716)  Posted on12-3-20117

xxxx

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)  BY S NAGARAJAN; posted on  Date: 14 May 2016

5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு (Post No. 3487) by S Nagarajan, posted 27-12-2016

 

 

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)

 

எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா?-எகிப்திய அதிசயங்கள் -18 (Post No.3716)

Written by London swaminathan

 

Date: 12 March 2017

 

Time uploaded in London:- 6-39 am

 

Post No. 3716

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

எகிப்தின் மீது படை எடுத்த HYKSOS ஹிக்ஸோஸ், வெளிநாட்டினர் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் ஆசியாவில் எங்கிருந்து என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. என்னுடைய கருத்து அவர்கள் இந்தியர்கள் என்பதே.

 

எகிப்தியர்களுக்கு குதிரை என்றால் என்ன என்று தெரியாது. ஹிக்ஸோச் கி.மு 10 வாக்கில் எகிப்துக்குள் நுழைந்த பின்னர்தான் அவர்கள் குதிரையைப் பயன்படுத்தத் துவங்கினர். அதற்கு முந்தைய 1500 ஆண்டுகளுக்கு குதிரையும் தெரியாது; ரதமும் (தேர்) தெரியாது. ஆயினும் கி.மு.1500 முதல் குதிரை ரதங்களின் படைகளில் எகிப்திய பாரோக்கள் சண்டை போடுவது போல படங்கள் இருப்பதால் ஹிக்ஸோஸ் படை எடுப்பதற்கு முன்னரே குதிரை வியாபாரிகளாகப் போயிருக்க வேண்டும். இலங்கைக்குள் குதிரை வியாபாரம் செய்யப்போன தமிழர்கள், ஆட்சியைக் கைப்பற்றிய செய்தி மஹா வம்சத்தில் இருக்கிறது.

IMG_1464

துருக்கியில் கிடைத்த (கி.மு.1300) சம்ஸ்கிருத கையேட்டில், குதிரைப் பயிற்சி எல்லாம் சம்ஸ்கிருதக் கட்டளைகளில் இருப்பதால் அக்காலத்திலேயே நம்மவர் துருக்கிவரை சென்று சம்ஸ்கிருத மொழி   மூலம் பயிற்சி தந்தது தெரிகிறது. இது தொல்பொருட் துறை சான்று என்பதால் மறுப்பதற்கில்லை.

 

துருக்கி என்ற நாடு இன்று முஸ்லீம் நாடாக இருந்த போதிலும் துருக்கி, சிரியா, இராக், ஈரான் முதலிய நாடுகள் இந்துக்களின் ஆதிக்கத்தில் அவ்வப்பொழுது இருந்து வந்தது. துரக (குதிரை) என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்தே துருக்கி என்ற சொல் வந்தது. இந்தக் காலத்துக்குப் பின்னர் எகிப்து – இந்துக்கள் தொடர்பு நல்ல ஆதாரங்களுடன் அமைந்துள்ளது. துருக்கி-சிரிய பகுதியை ஆண்ட தசரதன் என்ற மன்னன் எழுதிய கடிதங்கள் எகிப்தில் உள்ளன.

 

இனி ஹிக்ஸோஸ் (Hyksos) ஆட்சி பற்றி சற்று விரிவாகக் காண்போம்:

 

” பின்னர் கிழக்கு திசையிலிருந்து திடீரென்று இனம் தெரியாத ஆட்கள் வெற்றி முழக்கத்துடன் நம் தேசத்தின் மீது படை எடுத்தனர். பலத்தைப் பயன்படுத்தி நம் மன்னர்களை அவர்கள் வென்றனர். கருணையின்றி நம்முடைய நகரங்களை எரித்தனர்; கடவுளரின் கோவில்களை தரை மட்டமாக்கினர். நாட்டு மக்களை வெறுப்புடன் கொடூரமாக நடத்தினர்” — இவ்வாறு எகிப்து வரலாற்றை எழுதிய மனீதோ (Manetho) எழுதி இருப்பதாக முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோசபஸ் (Josephus) எழுதியுள்ளார்.

 

இதை அப்படியே நம்பிவிடக்கூடாது. ஏனெனில் ஹிக்ஸோஸ் படை எடுத்தது மனீதோவுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு!

மனீதோவின் புத்தகம் முழுதும் கிடைக்காததால் அவர் சொன்னதாக மற்றவர் எழுதி இருப்பதைப் பார்க்கிறோம்.

Pottery from Hyksos period

இவ்வளவுக்கும் இன்றுவரை அவர்கள் யார் என்பதற்கான தொல்பொருத் துறை தடயங்களோ, உறுதியான தகவல்களோ இல்லை. 15ஆவது 16ஆவது வம்சங்கள் ஆண்டபோது இவர்கள் இருந்ததால் சமகாலத்திய எழுத்துகள் கிடைத்துள்ளன. மனீதோ எழுதியதாக மற்றவர்கள் மேற்கோள் காட்டுவதைத்தான் நாம் நம்ப வேண்டியுள்ளது.

 

அதிலிருந்து கிடைக்கும் குறிப்புகள்:

  1. ஹிக்ஸோஸ் கடல் வழியாக (SEA PEOPLE) வந்த வெளிநாட்டினர்.

2.இந்தச் சொல்லின் பொருள் வெளிநாட்டு ஆட்சியாளர். இதற்கான எகிப்திய சொல்லை கிரேக்கர்கள் ஹிக்ஸோஸ் என்று எழுதத் துவங்கினர்.

  1. அவர்கள் நைல் நதி டெல்டாவில் அவரிஸ் என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

4.அவர்களுடைய ஆட்சி தெற்கில் நூபியா NUBIA வரை பரவியது

6.அவர்கள் கொடூரமானவர்கள்.

7.இறுதியில் எகிப்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.

இவர்கள் கி.மு 1650 முதல் கி.மு.1550 வரை சுமார் 100 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

 

சில மன்னர்களின் பெயர்கள்

சகிர் ஹர — ??

க்யான் (ஞான) –கி.மு.1620

அசுர அபோபி –கி.மு.1595-1555

கமுதி (கௌமுதி) – – கி.மு. 1555- 1545

சேஷி (சசி)

(பெயர்களில் சம்ஸ்கிருத சாயல் இருப்பதைக் கவனியுங்கள்)

இதெல்லாம் நடந்தது நடு ராஜ்யத்துக்கும் இரண்டாவது இடைவெளிக் காலத்துக்கும் இடையே ஆகும். அவர்களை கி.மு 1520 ஆம் ஆண்டில் விரட்டி அடித்தவுடன் எகிப்தில் புதிய ராஜ்யம் ஆட்சி செய்யத் துவங்கியது.

இக்காலத்திய கல்வெட்டுகள் இரண்டு கிடைத்தன. தீப்ஸ் THEBES நகர மன்னர் காமோசி, தலை நகர் ஆவரிஸ் AVARIS வரைக்கும் 1540ல் சென்றார். ஹிக்ஸோஸ் மன்னர் அசுர அபோபிஸ்,  , கோட்டையைவிட்டு வெளியே வரவில்லை. பின்னர் கி.மு 1520ல்  காமோசிக்குப் பின்னர் ஆண்ட  அமோசி சென்று அவர்களை விரட்டினார்.

 

எங்கிருந்து வந்தனர்?

 

இவர்கள் எந்த இனத்தவர் என்பதற்கான துப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஹகா கசுட் Heqa Khasut என்றால் வெளிநாட்டு ஆட்சியாளர்- இது கிரேக்க மொழியில் ஹிக்ஸோஸ் ஆனது. சில காகிதங்களில் ஆவர்கள் Aamu ஆமு (ஆசிய நாட்டவர்) என்று சொல்லப்படுகிறது. அவர்களுடைய பெயர்களில் அசுர என்ற சொல் வருவதால் அவர்கள் செமிட்டிக் மொழியினர் என்று ஊகிக்கப்படுகிறது.

 

1985 ஆம் ஆண்டுவரை இரண்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ததில் அவர்கள் பைபிளில் குறிப்பிடப்படும் கானனைட் (Cananite) தொடர்புடையோர் என்பது தெரிகிறது. பானை ஓடுகள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றைக் கொண்டு இதை அறிந்தனர்.

 

படங்களைப் பார்க்கையில் அவர்கள் குதிரை பூட்டிய ரதங்களில் வருவதும், புதுவகை வில்லைப் பயன்படுத்துவதும் தெரிகிறது. இதை இதற்கும் முன்னர் பாலஸ்தீனம், சிரியா  ஆகிய இடங்களில் காணலாம். புதிய ஆட்சியைப் பிடித்த அவர்கள் எகிப்திய கலாசாரங்களின் பல அம்சங்களை ஏற்று அவர்களோடு இணைந்துள்ளனர்.

 

கிழக்கு மத்திய தரைக் கடலோர நாடுகளான கிரீஸ், துருக்கி, பாலஸ்தீனம், சிரியா ஆகிய பகுதிகளை லெவான்ட் LEVANT என்று அழைப்பர். அதன் தென்பகுதிலிருந்து இவர்கள் வந்தனர் என்பது சிலரின் கணிப்பு.

 

13-ஆவது வம்சம் ஆட்சி பலவீனமானபோது பல நாடோடிக் குழுக்கள் எகிப்துக்குள் புகுந்து குடியேறினர் அவர்களே பின்னர் இப்படி ஆட்சியைக் கைப்பற்றினர் என்பர் மற்றும் சிலர். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் எகிப்து நீண்ட தொலைவு கடல் வாணிபம் செதுள்ளது. கிரேக்க நாட்டிலும், அருகிலுள்ள தீவுகளிலும் இவர்களுடைய பரிசுப் பொருட்கள் கிடைத்தன. வாசனைத் திரவிய பாட்டில் மூடிகளில் மன்னர் க்யான் KHYAN (ஞானி?) பெயர் உள்ளது. அவர்கள் அருகாமை நாடுகளுடன் நட்புறவுடன் வாழ இப்படிப் பரிசுகளை அனுப்பியது குறிப்பிடத் தக்கது.

 

அவரிஸ் AVARIS என்ற தலைநகரில் ஹிக்ஸோஸ் அரண்மனையில்,  கிரேக்க நாட்டு மினோவன் MINOAN பாணி ஓவியங்கள் இருக்கின்றன. எகிப்தியர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிவர்கள்; ஆனால் ஹிக்ஸோஸ் கடலாதிக்கம்  செலுத்தினர்..

 

குதிரைகளை எகிப்துக்குள் கொண்டுவந்தவர்கள் என்பதாலும், ஞான், அசுர, யக்ஷ (Hykso) போன்ற சப்தம் உடைய பெயர்கள் இருப்பதாலும் இவர்கள் இந்திய நிலப் பரப்பிலிருந்து புறப்பட்டவர்களாக இருக்கலாம்.

 

தீப்ஸ் என்னும் தெற்கத்திய நகரிலிருந்து தன்னாட்சி செய்துவந்தோர் எகிப்திலிருந்து ஹிக்ஸோசை வெளியேற்றி முன்னைவிட சக்தி வாய்ந்த எகிப்தியப் பேரசை உருவாக்கினர்.

xxxx

 

 

My Research Articles on Egypt

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

 

Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014

 

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

 (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

 

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

14 october 2012

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

POST No. 716 dated 21 Novemeber 2013

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

15 September 2014

 

எகிப்திய அதிசயங்கள் 17 கட்டுரைகள்

 

1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017

2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017

 

3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)posted 18-2-2017

 

4.எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017

 

5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017

6.எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on  21-2-2017

 

7.எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017
8.மனித முகம்சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on  23-2-2017

9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

posted on  24-2-2017

 

10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)posted on  25-2-2017

 

11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11posted on  27-2-2017

12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on  2-3-2017

 

13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687)posted on  3-3-2017

 

14.மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on  4-3-2017

15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)

posted on  5-3-2017

 

16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on   6-3-2017

 

17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)

 

 

 

xxxxx

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)  BY S NAGARAJAN; posted on  Date: 14 May 2016

 

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)

 

எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)

Picture of Ka (Brahma)

Written by London swaminathan

 

Date: 8 March 2017

 

Time uploaded in London:- 21-32

 

Post No. 3705

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

எகிப்தில் (NTR) இந்திரன்

 

எகிப்து நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் ஹைரோகிளிபிக்ஸ் (hieroglyphs) என்ற சித்திர எழுத்தை எழுதினர். இதில் கடவுள் என்பதற்கான சித்திரம் — ஒரு கம்பில் சின்ன துணி சுற்றப்பட்ட படம் ஆகும். இதைத்தான் இந்திரத்வஜத்தின் முன்னோடி என்று சொன்னேன் (த்வஜம் = கொடி) ஏன் தெரியுமா? அந்த சித்திர எழுத்துக்கான ஒலி “ntr” என்.டி.ஆர் என்பதாகும். பழங்கால மொழிகளில் உயிர் எழுத்தை (vowel) எழுதமாட்டார்கள். நாமாகப் போட்டு நிரப்பி பின்னர் அதை வாசிக்கவேண்டும். என் டி ஆர் NTR என்பதில் உயிர் எழுத்துக்களைப் போட்டால் வரும் ஒலி இன் டி ர (INTIRA இந்திரன்)!! ஆக கடவுள் என்றால் எகிப்திய மொழியில் இந்திரன்!

God in Egypt (NTR = Intra) Indra Dwaja in Egypt

 

பிரம்மா வழிபாடு

 

தத் (THOTH) என்ற எகிப்திய தெய்வம் மொ”ழிக்கும் வார்த்தைகளுக்கும் படைப்புக்கும்” உள்ள தெய்வம். இதன் பங்கு பணிகளைப் படித்தால் அப்படியே பிரம்மாவுக்கு உள்ள எல்லாம் இருக்கும்.  பிரம்மாவுக்கு ஹம்சம் வாஹனம். அங்கு மற்றொரு நீர்ப்பறவையின் (IBIS) முகத்தை தத்– துக்குப் பொருத்தி இருக்கிறார்கள்.

 

 

தத்-தின மனைவி பெயர் செஷட் (Seshat). இவள் எழுத்துக்கு அதிதேவதை. நமது சரஸ்வதியை செஷட் என்று உச்சரிக்கிறார்கள்!

 

க  (KA) என்னும் எழுத்து பற்றி ரிக் வேதத்தில் ஒரு மந்திரம் இருக்கிறது. க என்பது பிரம்மாவைக் குறிக்கும் . எகிப்தில் க என்பதை பிராமி, தமிழில் உள்ளதைப் போலவே சித்திரத்தில் காட்டினர்!

நாராயணன் என்பதை நுன் (Nun) என்று வழிபட்டனர். நுன் என்பதே நாம் சொல்லும் பாற்கடல்; பரந்தாமன் அங்கே தானே பள்ளிகொண்டிருந்தார்.

 

தத்தாத்ரேயர் வழிபாடு

எகிப்திய எழுத்துக்களைப் படிக்க உதவிய ரோஸட்டா கல்வெட்டில் தத் என்ற தெய்வம் கிரேக்க நாட்டின் ஹெர்ல்மிஸ் ற்றைஸ்மெஜிச்டஸுக்கு  (Hermes trimegistus))  என்று கூறியுள்ளனர். ஹெர்மிஸ் பற்றிப் படித்தால் அப்படியே இந்து தெய்வமான தத்தாத்ரேயரின் குணங்கள் முழுதும் இருக்கும் இதில் தத் என்ற சொல் வருவதைப் பாருங்கள் (தத்– தாத்ரேயர்)

 

ட்ரைமெஜிஸ்டஸ் என்றால் மூன்று குணங்கள் ஒன்றானது. ததாத்ரேயர் பிரம்ம-விஷ்ணு-சிவன் மூன்று அவதாரங்களின் சங்கமம். மேலும் கிரேக்க தெய்வம் “அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி” போன்ற கருத்துக்களைச் சொன்னதாகவும் என்சைக்ளோபீடியா கூறும். இவை இந்துமத உபநிஷத வாக்கியங்கள் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

 

காயத்ரீ, சூர்ய வழிபாடு

 

இந்த வரிசையில் எழுதிய 16 கட்டுரைகளில் ஹதோர் (Hathor) என்னும் தேவி சவிதுர் என்னும் வேத கால தெய்வம் என்பதையும், ஹோரஸ் (Horus)  என்பது சூர்யஸ் என்பதன் திரிபு என்றும் விளக்கி இருக்கிறேன். ஆக, அங்கு காயத்ரீ, சூர்ய வழிபாடும் இருந்தன.

 

எகிப்தில் பவித்ரம் (Ankh)

எகிப்தியர் அங்க் (Ankh) என்ற அடையாலத்தை உபயோகித்தனர். இதன் தோற்றம் மர்மமானது என்று எகிப்தியல் நிபுணர்கள் கூறுவர். இது இந்துக்கள் பூஜை காலத்தில் பயன்படுத்திய பவித்ரம் ஆகும்.

 

விஷ்ணுவை நரசிம்மாவதார ரூபத்தில் வழிபட்டனர் ஆனால் அந்த தெய்வத்தைப் பெண் தெய்வமாக்கி, ஷெகாமட்  (ஜகன் மாதா) என்று பெயர் தந்தனர். இந்துக்கள் கூட நாராயணன் என்பதை நாராயணி (துர்கா) ஆக வழிபடுவதுண்டு.

 

விஷ்ணுவை நரசிம்மாவதார ரூபத்தில் வழிபட்டனர் ஆனால் அந்த தெய்வத்தைப் பெண் தெய்வமாக்கி, ஷெகாமட்  (ஜகன் மாதா) என்று பெயர் தந்தனர். இந்துக்கள் கூட நாராயணன் என்பதை நாராயணி (துர்கா) ஆக வழிபடுவதுண்டு.

Picture of Sekhemet -Narasimha avatar

எகிப்தில் திருமூலர் கருத்துகள் என்ற கட்டுரையில் திருமூலர்  பாடலை ஒட்டிய கருத்துகள் இருப்பதையும் சுட்டிக்காட்டினேன்.

 

எகிப்தில் மாதா (ma’at) பிதா (Ptah) என்ற தெய்வங்கள் வழிபடுவது பற்றியும் முன்னரே எழுதியுள்ளேன். உடம்பைக் கூடாகவும் ஆன்மாவைப் பறவையாகவும் சித்தரிக்கும் எகிப்தின் வழக்கத்தையும் திருக்குறளில் இருப்பதைக் காட்டினேன்.

 

ஆசிரிஸ் – சேத் பகைமை

 

ஆசிரிஸ் – சேத்  (Osiris Vs Seth) பகைமை என்பது பருவ காலங்களின் மாறுபாட்டைக் காட்டுவது போன்றது. நமது ஊரில் இந்துக்கள் காம தகனம், ஹோலி முதலிய பண்டிகைகளைக் கொண்டாடுவது போல அவர்களும் ஆசிரிஸ்- செத் மோதலை பண்டிகை யா

கக் கொண்டாடுவர்.

 

இந்துக்களைப் போலவே கோவிலகளுக்கு நிலம் அளித்து அதற்கு வரிவிலக்கும் தந்தனர்.

 

இந்துக்கள் கோவில்களுக்கு சிவப்பு வெள்ளை அடிப்பது போல அரணமனைச் சுவர்களுக்கு சிவப்பு-வெள்ளை வர்ணம் பூசினர்.

 

எகிப்திய பிரமிடுகளின் சுவர்களில் உள்ள விஷயங்கள், மரணப் புத்தகத்திலுள்ள விஷயங்கள் முதலியன வேத மந்திரங்களைப் போல இருப்பதையும்,  நட்சத்திரங்கள் பற்றிய அவர்களுடைய நம்பிக்கைகள் நம்மைப் போலவே இருப்பதையும்  முன்னரே காட்டிவிட்டேன்.

 

xxxxxxxxxxx

My Research Articles on Egypt

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

 

Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014

 

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

 (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

14 october 2012

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

POST No. 716 dated 21 Novemeber 2013

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

15 September 2014

 

 

எகிப்திய அதிசயங்கள் 16 கட்டுரைகள்

 

எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017

 

எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017

 

எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648) posted 18-2-2017

 

எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017

 

ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017

 

எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on  21-2-2017

 

எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017

 
மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on  23-2-2017

எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

posted on  24-2-2017

 

பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670) posted on  25-2-2017

 

பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11, posted on  27-2-2017

 

வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on   2-3-2017

 

 

சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687) posted on  3-3-2017

 

மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்? எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on  4-3-2017

 

சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)

posted on  5-3-2017

 

விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on   6-3-2017

 

 

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)  BY S NAGARAJAN; posted on  Date: 14 May 2016

 

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)
 

விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696)

Written by London swaminathan

 

Date: 6 March 2017

 

Time uploaded in London:- 6-10 am

 

Post No. 3696

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

இந்துக்களின் தெய்வங்களான பிள்ளையார், அனுமார், ஹயக்ரீவர், நரசிம்மர், வராகாவதாரம் முதலிய உருவங்களை மேலைநாட்டினர் பார்த்தால் மனதுக்குள் சிரிப்பார்கள்; இது என்னடா? இவர்கள் எல்லாம் (STONE AGE) கற்காலத்தில், (Iron Age)உலோக காலத்தில், ஆதிகாலத்தில் (Primitive) வாழ்கிறார்களா? என்று உள்ளுக்குள் நகைப்பார்கள். ஆனால் அவற்றின் தத்துவங்களை விளக்கினால்   வியப்பார்கள்; நம்மை மதிப்பார்கள். இது போலத்தான் எகிப்திய தெய்வங்களும். 120-க்கும் மேலான முக்கிய தெய்வங்களின் பட்டியல் உள்ளது. எகிப்திய தெய்வங்களைப் பற்றிய தனி புத்தகங்களும் உள்ளன. இவைகளைப் புரிந்துகொள்ள இந்துமதம் மிகவும் துணை புரியும். ஆனால் 5000 ஆண்டுக் காலமாக வாழும் இந்துமதம் போலன்றி மத்திய கிழக்கில் வணங்கப்பட்ட 3000 தெய்வங்களும், எகிப்தில் வணங்கப்பட்ட சுமார் 200 தெய்வங்களும் மியூசியங்களில் காட்சிப் பொருள்களாகிவிட்டன!!!

 

வேத காலத்தில் 30, 40 தெய்வங்களுடன் இருந்த இந்துமதம், பின்னர் எப்படி நூற்றுக் கணக்கான தெய்வங்களை உருவாக்கியதோ, வேத காலத்தில் இருந்த நாலே ஜாதி எப்படி இன்று 4000 ஜாதிகளாக மலர்ந்தனவோ அதுபோல எகிப்தின் 5000 ஆண்டுக்கால வரலாற்றில் தெய்வங்கள் பல்கிப் பெருகின. இந்து மதத்தில் எப்படி தலபுராணங்களில் ஒவ்வொரு ஊரிலும் தெய்வம் பற்றிக் கதைகள் உளவோ அதுபோல எகிப்திலும் உள்ளூர் தெய்வங்கள் வளர்ந்தன. ஆனால் இந்து மதத்திலுள்ள, உயரிய கருத்துக்கள் — மனிதனும் தெய்வமே= அஹம் பிரம்மாஸ்மி, தத்வமஸி — போன்ற தத்துவார்த்த கருத்துகள் அங்கே வளர்ந்ததாகத் தெரியவில்லை. புராண அளவில் கதைகள் நின்றனவே அன்றி உபநிஷதம் கண்ட உண்மைப் பொருள் அளவுக்குப் போகவில்லை.

மூன்றடுக்கு தெய்வங்கள்

 

எகிப்திய தெய்வங்களைப் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1.தேவதைகள் குடியிருக்கும் சில பொருள்களுக்கு (Fetishes) மந்திர சக்தி உண்டு என்று எண்ணி அவைகளை வழிபடுதல்.

2.மனித உருவிலுள்ள கடவுளர் (Gods in Human forms)

3.மிருகங்கள், பறவைத் தெய்வங்கள் (Zoomorphic Gods)

 

நிறைய பேருக்கு கடைசி வகைதான் எகிப்திய தெய்வங்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அதவது, நாய், பூனை, ஆடு, சிம்மம், கொக்கு, வாத்து, வண்டு, கழுகு குரங்கு, முதலை, காளை முதலியவற்றின் படங்களைப் பார்த் தவுடன் அது மனதில் பதிந்துவிடுகிறது.

இயற்கையை அவர்கள் போற்றியதை இந்த தெய்வங்கள் பிரதிபலிக்கின்றன. மகிழ்ச்சி, இன்பம் என்ற கருத்தை வெளிப்படுத்த அவர்கள் வரைந்த சித்திர எழுத்து ‘பசுவும் கன்றும்!’

 

கடவுள், இறைவன், ஆண்டவன் என்றெல்லாம் தமிழில் பொதுவாகச் சொல்லுவது போல எகிப்திய மொழியில் NETJER நெட்ஜெர்  என்று தெய்வத்தை அழைத்தனர்.

 

வேத காலத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு அம்சம் (Truth and Order) உண்மையும் ஒழுங்கும்.

 

ஆங்கிலச் சொற்களான உண்மையும் ஒழுங்கும் —-TRUTH ட்ரூத்,  RHYTHM ரிதம் ஆகியன எல்லாம் சம்ஸ்கிருதச் சொல்லான ருதம் ‘RTAM’  என்பதிலிருந்து வந்தவையே. இது வேதகாலச் சொல். இதை எகிப்தியரும் நம்பினர்.

ஆரம்பகால தெய்வங்கள்:

ஆதம் ATUM = படைப்புக்கடவுள்

ரே RE =சூரியக் கடவுள்

ஹதோர் HATHOR, ஈஸிஸ்/ ஐஸிஸ் ISIS = தேவி

நெய்த்NEITH == போர் தேவதை

ப்தா PTAH (பிதா) = சக்திக் கடவுள்

ஆசிரிஸ் OSIRIS

சேத் SET = தீமையின் கடவுள்

ஹோரஸ் HORUS = மன்னர் கடவுள்

பிற்கலத்தில் பல புராணக் கதைகளை உருவாக்கி ஆசிரிஸ் – சேத் – ஹோரஸ் பகைமையைக் காட்டினர்.

இது இந்து மதத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் இடையே பிற்காலத்தில் மோதல்களை உண்டாக்கியதற்குச் சமம்.

தத் (THOTH) என்னும் கடவுள் மொழிகளின் கடவுள்; ஹெர்மாபாலிஸ் என்ற நகரில் வழிபடப்பட்டார்.

மாதா(Ma’at) என்ற இளம்பெண் உண்மை, நேர்மை, ஒழுங்கு /கட்டுப்பாடின் தெய்வமாக வழிபடப்பட்டாள். எகிப்தில் மனிதர்களின் தோற்றத்துடன் தொடர்புடைய கடவுள் மாத் (ஆ). கடவுள் உலகைப் படைக்க முடிவு செய்தவுடன் மாதாவை கையில் தூக்கி உதட்டில் முத்தமி ட் டார். ஒரு சதுப்பு நிலத்திலிருந்து நீர்ப்பறவை குரல் எழுப்பியவுடன் படைப்பு துவங்கியது என்பது எகிப்திய கதை.

 

பல தெய்வங்கள் — ஆசிரிஸ் உள்பட — மேற்காசியாவிலிருந்து வந்தவை. இதனால் காலப்போக்கில் எகிப்திய கடவுளரின் பங்கு பணிகள் மாறின.

 

இந்துக்களுக்கு வேதம் என்பது ரகசியப் பொருள் உடைய மந்திரங்கள்; அதன் மேலோட்டமான இலக்கிய அர்த்தத்தைப் பார்க்கக்கூடாது என்பது தெரியும். அதனால் சங்க காலத்  தமிழர்கள், வேதங்களை மறை (ரஹசியம்) என்று மொழி பெயர்த்தனர். அது போல எகிப்திலும் ரஹசியப் பெயர் உடைய ஒரு சக்தியைக் கண்டு (He whose Name is Hidden) தெய்வங்களும் பயந்தன என்ற வழக்கு உண்டு.

 

மிக சக்தி வாய்ந்த ஹோரஸ் என்ற தெய்வத்தை பருந்து வடிவில் (கழுகு) சித்திரம் வரைவர். இந்தப் பருந்துகூட பெரிய கடவுளின் (HIDDEN GOD) அரண்மனையில் மதில்சுவரில் உட்கார்ந்து இருக்கும் என்பர். இதை இந்து மதத்திலுள்ல பிரம்மன் அல்லது தேவி பாகவதத்தில் வரும் திருமூர்த்திகளும் வணங்கும் தேவிக்கு ஒப்பிடலாம்.

 

எகிப்திய வரலாற்றில் இந்த மறைந்திருக்கும் தெய்வம் (He whose Name is Hidden) யார் என்பதை எழுதாவிடிலும் சிலர் அமன் (AMUN) என்னும் தெய்வம்தான் என்று சிலர் சொல்லுவர். இந்துக்களின் அம்மன் அல்லது பிரமன் இப்படித் திரிந்திருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் பிதா, சவிதுர் (ஹதோர்) ஹோரஸ் (சோலஸ்= சோலார்= சூர்ய), ரே முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் அவர்களின் கடவுளர் பெயர்களில் உள்ளன.

நட்சத்திரக் கடவுள்கள் (Star Gods= Stellar Deities)

 

நட்சத்திரங்கள் என்பன புண்யாத்மாக்கள், தேவர்கள் என்று இந்துக்கள் கருதினர் (Vanaparva in Mahabharata). பிரமிடுகள் கட்டத் துவங்கியதிலிருந்து இந்த நம்பிக்கை வலுப்பட்டது. இறைவனான மன்னன், இறந்தவுடன் நடசத்திரங்களுக்கு அப்பால் பயணம் செய்வான் என்று நம்பினர். இதனால் நட்சத்திரங்களை நோக்கி பிரமிடின் சாளரங்களை அமைத்தனர். குறிப்பாக சிவனுடன் தொடர்புடைய ORION ஒரியன் (ஓரையன்=அரையன்) நட்சத்திர மண்டலம் இவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அங்குதான் சிவனுடைய ஆருத்ரா நட்சத்திரமும், மிருக சீர்ச நட்சத்திரமும் உள்ளன.

 

கட்டாய குருமார் (PRIEST SERVICE) சேவை

 

சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் கட்டாய ராணுவ சேவை உள்ளது போல ஆரம்பகாலத்தில், உயர் பதவியிலுள்ள எல்லோரும், கோவில்களில் கட்டாயமாக குருமாராக (குருக்களாக ) இருக்கவேண்டும் என்று இருந்தது. இது நம்பூதிரிகளைப் போல ஒரு குறிப்பிட்ட காலம் செய்ய வேண்டிய பணி. பின்னர் குருக்கள் வேலை தனித் தொழிலாக பரிணமித்தது. எல்லா கோவில்களிலும் ராஜாதான், கொள்கை அளவில் தலைமை குருக்கள். அங்கு வேலை பார்க்கும் குருக்கள் ராஜாவின் பிரதிநிதி. சில கோவில்கள் காலப்போக்கில் மிகவும் பிரபலமாகி அதன் குருக்களும் செல்வாக்குடையவர் ஆயினர்.

 

1.மெம்பிஸ் (Priest of Ptah of Memphis) நகர பிதா கோவில் குருக்கள்

2.ஹீலியோபாலிஸ் ரே (Priest of Re of Heliopolis) கோவில் குருக்கள்

3.தீப்ஸ் நகர அமன் (Priest of Amun of Thebes) கோவில் குருக்கள் – ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்

 

முதலில் கடவுள் என்பவர் ராஜாவின் ஆள், பொதுமக்களுக்குத் தொடர்பில்லை என்று இருந்தது. ஆனால் காலப்போக்கில் கடவுள் எல்லோருக்கும் தொடர்புடையவர், எல்லோரையும் கட்டுப்படுத்துபவர் என்ற கொள்கை வளர்ந்தது. இதனால் கோவில்கள் செல்வாக்கும் செல்வமும் பெற்றன.

 

எகிப்தில் தத்துவக் கருத்துகள் (Philosophical) காணப்படவிடினும்  உண்மை, நீதி, நேர்மை, ஒருவரை ஒருவர்  மரியாதையுடன் நடத்துவது ஆகியன இருந்தன. எகிப்தியர்களுடைய நம்பிக்கைகள் என்ன என்பதை மிகவும் பிற்காலத்தில் எழுந்த கிரேக்க நூல்கள் மூலமே அறிய முடிகிறது.

 

முக்கிய தெய்வங்களின் பட்டியலையும் பங்கு பணிகளையும் அடுத்த பகுதியில் இந்து சமய தெய்வங்களுடன் ஒப்பிட்டு ஆராய்வோம்.

 

to be continued…………………………..

 

சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் -15 (Post No.3693)

Written by London swaminathan

 

Date: 5 March 2017

 

Time uploaded in London:- 6-50 am

 

Post No. 3693

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

எகிப்தில் பயன்படுத்தப்பட்ட சித்திர எழுத்துக்கு ஹைரோக்ளிப்ஸ் (Hieroglyphs)  என்று பெயர். இது கிரேக்கர் உருவாக்கிய சொல். இதன் பொருள் புனித எழுத்து (Sacred writing). இது முதல் முதலில்  கி.மு.3200 ல் காணப்பட்டாலும் கி.மு.2800 முதலே பெரிய வாக்கியங்கள் உள்ள கல்வெட்டுகள் கிடைத்தன.

 

சிந்து சமவெளி எழுத்து பற்றி ஐம்பதுக்கும் மேலான விசித்திரமான விளக்கங்கள் இருப்பது போல ஆளாளுக்கு மனதில் தோன்றியதை எல்லாம் எழுதிக்கொண்டிருந்தனர். ஒரு பிரெஞ்சுக்காரர் ரோசட்டா கல்வெட்டு (Rosetta Stone) எனும் கல்வெட்டைக் கண்டுபிடித்தவுடன் குழப்பம் நீங்கியது; புதிரும் விடுபட்டுப் போனது! காரணம் அதில் மூன்று மொழிகளில் ஒரே விஷயம் எழுதப்பட்டிருந்ததால் எகிப்திய எழுத்துக்களின் பொருள் விளங்கியது.

அதுவரை அது பொரிவிலாங்காய் உருண்டையாக (பொருள் விளங்கா) இருந்தது!

 

இதுபற்றிய சில விநோத விஷயங்களைக் காண்போம். இதில் எகிப்தியரின் புத்தி எவ்வளவு கூர்மையானது என்பது தெரியும். ஆயிரம் பட எழுத்துக்களை (symbols) உபயோகித்து பல விஷயங்களை எழுதினர்.

இதில் மெய்யெழுத்துக்களை (consonants) மட்டுமே எழுதினர்; உயிர் எழுத்துக்களை (Vowels) உபயோகிக்கவில்லை. இதனால் எகிப்தியரின் பெயர்கள் எல்லாம் குத்துமதிப்பானவையே. நூற்றுக்கு நூறு சதம் உச்சரிப்பு யாருக்கும் தெரியாது.

 

முதலில் ஒரு படத்தை வரைந்தனர்.அதில் என்ன காண்கிறோமோ அதுதான் அதன் பொருள். பின்னர் அந்த சப்தத்தைக் கொண்டு புதிய சொற்களை (Symbol=Syllable=Sound) உருவாக்கினர்.

துவக்க கால மன்னர் பெயர்கள் கொஞ்சம் கரடுமுரடானவை; பின்னர் வந்தோரின் பெயர்கள் அர்த்தபுஷ்டியுள்ளவை; மிருதுவான ஒலி படைத்தவை என்பது எகிப்தியல் அறிஞர்களின் கருத்து.

 

எல்லா பழைய கலாசாரங்களிலும் மன்னரை காளை, சிங்கம் அல்லது புலி என்று வருணிப்பர். ஆனால் எகிப்தியர் மட்டும் ஹோரஸ் (HORUS) என்னும் தெய்வத்தைக் குறிக்கும் கழுகை ( Falcon பருந்து, Eagle கருடன்) மன்னரின் சின்னமாகப் பயன்படுத்தினர். சித்திரங்களைப் பயன்படுத்துவதில் எகிப்தியருக்கு நிகர் எகிப்தியரே! தங்க நிறமான பருந்து வானத்திற்கு உச்சியில் பறப்பது சூரியனை நோக்கிச் செல்லும் பறவையாக அவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

 

எகிப்தியர்கள் அன்றாடம் காணும் பறவைகள், மிருகங்கள், பொருள்களையே சித்திரமாக வரைந்தனர்.

 

எகிப்தில் வேதப் பசு

 

ரிக்வேதத்தில் தாய்பசுவுக்கும் கன்றுக்கும் இடையேயுள்ள அன்பை பெரிதும் புகழ்வர். ‘வத்ச’ என்றால் கன்று. இதனிடத்தில் தாப்பசு காட்டும் அன்பை ‘வாத்சல்யம்’ என்பர். இந்தச் சொல்லை மக்களின் பாசத்துக்கும் அன்புக்கும் பயன் படுத்தினர் இந்துக்கள். இந்த சின்னம்தான் எகிப்தியர், “மகிழ்ச்சியான, சந்தோஷமான” என்பதற்குப் பயன்படுத்தினர். வேத கால ரிஷிகளும் எகிப்தியரும் எந்த  அளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தினர் என்பதற்கு  இது ஒரு எடுத்துக்காட்டு.

தொடுவானம், மலை, சூரிய உதயம் — ஆகியவற்றை அவர்கள் எப்படிப் பயன்படுத்தினர் என்பதைக் கண்டால் அவர்களின் புத்தி தீட்சண்யம் விளங்கும்; அறிவுக்கூர்மை பொலிவுறும்.

 

மலை என்பதை இரண்டு முகட்டுடன் வரைந்தனர். இது மலை. அதன் இடையில் மூன்றாவது முகட்டை (சிகரத்தை) வரைந்தால் அது வெளிநாடு என்று பொருள்! அந்த முகட்டுக்குப் பதிலாக இரண்டு சிகரங்களுக்கிடையே சூரியன் போன்ற வட்டத்தை வரைந்தால் அது தொடுவானம், சூரியன் உதயம். அதற்கு மேல் சூரியன் கிரணங்கள் இருப்பது போல வரைந்தால் சூரியன் உதிக்கும் மலை. பிறகு இதையே ஐடியோக்ராமாக IDEOGRAM — அதாவது இந்த எண்ணத்தை, வேறு பொருளை உணர்த்தும் சின்னமாக — பயன்படுத்தினர். புகழுடன் தோன்றல், மன்னன் தோன்றுதல், உயர்நிலை என்றெல்லாம் பொருள் கொண்டனர்.

 

மன்னன் என்பவன் சூரியனைப் போன்றவன் (Solar Dynasty-Surya Kula) என்று சங்கத் தமிழ் பாடல்களும், சம்ஸ்கிருதப் பாடலகளும் போற்றுகின்றன.

 

தோன்றிற் புகழோடு தோன்றுபவர் மன்னன் அல்லாவா!

 

எல்லா மொழிகளும் வளர்ந்தது போலவே எகிப்திய மொழியும் 5000 ஆண்டுகளில் வளர்ந்தது. ஆகவே ஒரு சித்திர எழுத்து துவக்க கால எழுத்தா, பிறகால எழுத்தா அது எந்த இடத்தில் வருகிறது என்பதை எல்லாம் அறிதல் வேண்டும்.

 

லண்டனில் மாலை நேரக் கல்லூரிகளில் கூட ஹைரோகிளிபிக்ஸ் கற்பிக்கிறார்கள். எகிப்திய கல்வெட்டுகளைப் படித்தறிய  நீண்டகாலப் பயிற்சியும், அதன் பின்னுள்ள எகிப்திய வரலாறும் அவர்களுடைய கலாசாரமும் தெரிந்திருக்க வேண்டும். இப்படி இல்லாவிட்டால் இப்பொழுது சிந்து சம்வெளி எழுத்துக்களைப் பற்றி எல்லோரும் பிதற்றுவது போல நாமும் பிதற்றுவோம்.!!

 

……………….to be continued

மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்? எகிப்திய அதிசயங்கள் -14 (Post No.3689)

Written by London swaminathan

Date: 4 March 2017

Time uploaded in London:- 8-09 am

Post No. 3689

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com
11 ஆவது வம்சாவளி அரசர்கள், நடு ராஜ்ய (MIDDLE KINGDOM) காலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் கால அரசர்களில் சிறந்தவர் நெபபத்ரெ மண்டுஹோதப் (NEBHEPETRE MONTUHOTEP- நவபத்ரி மண்டூக தேவன்) அவர் நீண்ட காலம் (2055-2004 BCE) அரசாட்சி செய்தார்.

இதற்கு முன்னர், பாரோ என்பவர் கடவுளின் அவதாரம் என்று கருதப்பட்டது. இப்பொழுது அவர் ஒரு பெரிய அதிகாரி என்று நிலைமை மாறிவிட்டது.

உண்மையில் 11-ஆவது வம்சாவளியில் அதிகாரியாக இருந்த ஒருவர் மன்னராகி (பாரோ- ஆகி) 12ஆவது வம்சத்தைத் துவக்கிவைத்தார்.
12-ஆவது வம்சாவளியின் சிறப்பமசம் எல்லா மன்னர்களும் நீண்டகாலம் ஆட்சி செய்தனர்.
(வெள்ளைக்கார்களின் இந்திய விரோதப் போக்கிற்கு இங்கே ஒரு எடுத்துக்காட்டு உள்ளது. புராணங்களில் உள்ள வரலாற்றை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துவிட்டு புதிய வரலாறு எழுதினர் வெள்ளைக்காரர்கள். ஆனால் எகிப்தில் உள்ள விஷயங்களை — முன்னுக்குப் பின்னாக முரணாகவுள்ள விஷயங்களை ஒடடுப் போட்டு உண்மைபோல எழுதி வருகின்றனர். இந்திய புராண மன்னர்கள் எல்லோரும் 60 முதல் 90 ஆண்டு ஆட்சி புரிந்தனர். ஆனால் இந்திய அரசர்களின் சராசரி ஆட்சிக் காலம் 20 ஆண்டுகள் மட்டுமே என்று வெளிநாட்டினர் பொய் வரலாறு எழுதினர். அதை மாற்றி உண்மை வரலாறு எழுதுவது நமது கடமை)
இந்த ஆட்சிக் காலத்தில் எகிப்தின் ஆதிக்கம் வெளிநாடுகளுக்குப் பரவியது. புதிய கலைகள் வளர்ந்தன; புதிய பாணி பின்பற்றப்பட்டது. பழைய ராஜ்யத்தில் “பிரம்மாண்டம்” என்று அளவுக்கு மதிப்பு கொடுத்தனர். நடு ராஜ்யத்தில் அளவு சின்னதானாலும் அதில் கலைவேலை நுணுக்கமாக மாறியது.

 

சிறந்த மன்னர் சேஷாத்ரி

12-ஆவது வம்சாவளியில் குறிப்பிடத்தக்கவர் சென்வர்ச்ரேட் SENWOSRET (சம்வத்சர சிரேஷ்டன்) கி.மு 1965-1920

இவர் இளவரசராக இருந்தபோது லிபியாவில் போர் செய்துகொண்டிருந்தார். அப்போது மன்னன் அமணமேத (Amenemhet I) படுகொலை செய்யப்பட்ட செய்தி வந்தது. உடனே எகிப்துக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றினார். இவருடைய பெயர் கிரேக்க புத்தகங்களில் சேஷாச்த்ரி (Sesostris) என்று எழுதப் பட்டுள்ளது!

இதற்கு அடுத்து வந்த 13-ஆவது வம்சம் எகிப்திய வரலாற்றில் மிகப்பெரிய மாறுதல்களை உண்டாக்கின. ஆசியாவிலிருந்து ஹிக்ஸோஸ் (HYKSOS) என்பவர் உள்ளே புகுந்தனர். இவர்கள் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பது என் கருத்து. அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்?

இறந்தவர்களுடன் படகுகளையோ கப்பல்களையோ புதைக்கும் வழக்கம் நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளிலும், பிலிப்பைன்ஸிலும் இருந்தது. ஆயினும் மிகப்பழமையான தடயங்கள் எகிப்திலிருந்தே கிடைத்துள்ளன (கி.மு.2500).
ஆஹா (ஹோர் Hor Aha) என்ற மன்னன் கி.மு.3150-ல் ஆண்டான். அவனுடைய கல்லறை சக்கராவில் இருக்கிறது. அருகில் இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்கள் உண்டு. ஒரு கிராமப்புற காட்சியின் பொம்மைகளை செய்துவைத்துள்ளனர். இர்ணடாவது ஒரு படகு புதைக்கப்பட்டது. மன்னன் மேலுகத்துக்க்ப் போன பின்னர் நட்சத்திரங்களுக்கு இடையே படகில் பவனி வரவும், அப்படி பவனி வருகையில் பழைய கிராமப்புற காட்சிகளை நினைவுகொள்ளவும் இந்த ஏற்பாடு. இது எல்லாம் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் செய்துள்ளனர் எகிப்தியர்!

கீஸா (பெரிய) பிரமிடு மூலம் வரலாற்றில் அழியா இடம்பெற்ற கூஃபு (கிரேக்கர்கள் கீயாப்ஸ் CHEOPS என்பர்) ஒரு பெரிய கப்பலையும் விட்டுச் சென்றுள்ளார். மன்னர் தனது மறு உலக வாழ்வில் பயன்படுத்த இதைப் பிரமிடில் ஓரிடத்தில் புதைத்து வைத்தனர். இது இப்போது (GIZA SOLAR BOAT MUSEUM) மியூசியத்தில் உள்ளது.

143 அடி நீளமும் 20 அடி அகலமும் உடைய இந்தப் படகு, உண்மையில் பயன்படுத்திய படகு அல்ல. மன்னருக்காக அடையாளபூர்வமாகச் செய்யப்பட்டது. மேலும் இதை பூமியிலிருந்து 1954ல் எடுத்தபோது தனித் தனியாகக் கிடைத்தது. அதை படகுகள் பற்றி ஆராய்ச்சி செய்து அதன்படி ஒட்ட வைத்துள்ளனர். அதாவது வரலாற்றை “உருவாக்கியுள்ளனர்” (RECONSTRUCTED).

இதில் பழைய கயிறுகள் கூட அப்படியே உள்ளன. இது தைக்கப்பட்ட (Sewn) படகு. அதாவது கயிறு கொண்டு கட்டப்பட படகு. ஆணிகள் அல்லது மர ஆணிகள் (குச்சிகள்) (neither riveted nor nailed) பயன்படுதப்படவில்லை. ஒமான் கடற்கரையில் இன்றும் இத்தகைய படகுகள் உள்ளன. பாலைவனம் போன்ற பகுதிகளைக் கடக்கையில் அவைகளைப் பிரித்து துண்டு துண்டாக எடுத்துக் கொண்டு போய் பின்னர், மீண்டுமிணைத்து படக்காக்கிக் கொள்ளலாம்!

1991-ஆம் ஆண்டில் அபிதோஸ் (ABYDOS) நகரில் பா லைவனப் பகுதியில் ஒரு அரிய கண்டுபிடிப்பு! அதவது 12 படகு வடிவக் கல்லறைகள்!

 

உண்மையில் ஒவ்வொரு கல்லறையிலும் ஒரு படகு காணப்பட்டது. இந்த கல்லறைகள் செங்கற்களால் செய்யப் பட்டவை. சராசியாக ஒவ்வொரு கல்லறையும், 86 அடி நீளம். அதில் 75 அடி நீளமுள்ள மரத்தினால் ஆகிய படகு. பகிற்குள்ளும் செங்கற்களை நிரப்பி மேலே காரை கொண்டு பூசி வெள்ளை அடித்துள்ளனர். 2000 ஆம் ஆண்டில் இதைத் தோண்டி ஆராய்ந்தனர். இவைகளும் தைக்கபட்ட (sewn) படகுகள். ஆனால் உண்மையில் நதியில் பயன்படுத்தக் கூடியவை. வெறும் பொம்மைப் படகுகள் (not Models) அல்ல. மன்னர்கள் அல்லது அதிகாரிகளை ப் படகுகளோடு புதைப்பதில்லை. அவர்கள் அருகில் அல்லது கொஞ்சம் தொலைவில் புதைக்கப்படுவர்.

புதைக்கப்பட் ட இடம் தெரியாமல் இருக்க அந்த இடங்களை சம தரை போலக் காட்டி இருக்கின்றனர் இது போல சக்கரா, ஹெல்வா (Helwan) ஆகிய இடங்களிலும் படகுப் புதையல்கள் கிடைத்தன.

பல இடங்களில் யாருக்காக இந்தப் படகுகள் என்று பெயர் எழுதாமலேயே புதைத்துள்ளனர். பொதுவாக மன்னர்கள் புதைக்கப ட்ட இடங்களில் அவர், மேல் உலகத்தில் பயன்படுத்துவதற்காக துணிமணிகள், நாற்காலிகள், உணவு, பானங்கள் ஆகியவற்றை விட்டுச் சென்றனர். ஒரு வேளை இந்தப் படகுகள் மூலம் அவைகள் மேலும், மேலும் வரும் என்று கருதி இருக்கலாம்.

எகிப் திய சுவர் எழுத்துக்களில் மன்னரின் மறு உலகப் பயணம் (after life) பற்றியும், சூரிய தேவனின் வானுலகப் படகுப் பயணம் பற்றியும் எழுதி வைத்துள்ளனர். ஆகையால் நாம் இவற்றின் பயனை ஊகித்தறியலாம்.

அ ருகருகே புதைக்கப்ப ட்ட இரண்டு படகுகளின் அளவுகள் வித்தியாசப் படுவதால் ஒன்று மன்னரின் படகு, மற்றொன்று சூரியனின் படகு என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஊகிப்பர்.

 

5000 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் விட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கான விஷயங்கள் குறித்து புதுப் புது விஷயங்களுடன் பத்திரிக்கைகளும், புத்தகங்களும் வந்து கொண்டே ருக்கின்றன. மேலை உலத்தில் எகிப்தியவியல் (Egyptology) ஒரு கவர்ச்சிகரமான துறையாகும்.

–தொடரும்

 

சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687)

Written by London swaminathan

 

Date: 3 March 2017

 

Time uploaded in London:- 10-59 am

 

Post No. 3687

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் முதல் நாலு வம்சங்களின் ஆட்சி பற்றி இதுவரை பார்த்தோம். முப்பது வம்சங்களில் 5 முதல் 10 வரையுள்ள வம்சங்களின் சிறபுகளைச் சுருங்கக் காண்போம். நாலாவது  வம்சத்தின் இறுதியில் குடும்பச் சண்டை வலுத்தது. பெண்வழி அரசாட்சி மூலம் ஐந்தாவது வம்சம் வந்தது. செழிப்பும் அமைதியும் மிக்க பொற்காலம் இது. இந்தக் காலத்தில் பிரமிடுகளின் சுவர்களில் சமயச் சடங்குகள் பற்றி எழுதிவைத்தனர். இதுதான் எகிப்தின் பழமையான இலக்கியம். இதை பிரமிடு இலக்கியம் எனலாம். யூனஸ் (UNAS) என்ற அரசனைன் பிரமிடுகளிலும் அவனைத் தொடர்ந்து ஆண்டோரின் பிரமிடுகளிலும் சடங்குகள் (Pyramid Texts )பற்றிய குறிப்புகள் உள்ளன. எழுத்து வடிவிலுள்ள சமயச் சடங்குகளில் (Oldest written Rituals)இதுவே உலகில் பழமையானது.

நூறு ஆண்டு வாழ்ந்த மன்னன்!

 

இரண்டாம் பெபி (Pepy II) பற்றிய சில அதிசயச் செய்திகள்:-

 

இது தவிர இன்னொரு அதிசயமும் உண்டு. இரண்டாம் பெப்பி (Pepy II) என்ற மன்னன் 100 ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

இவன் ஆறு வயதில் பதவிக்கு வந்து 100 வயது வரை வாழ்ந்ததால் இவன் 94 ஆண்டுக்காலம் ஆட்சி புரிந்ததாக சொல்லப்படுகிறது. இது உண்மையானால் உலகில் இவனே நீண்ட காலம் ஆண்டவன் ஆவான்!

இவனுடைய காலம்: கி.மு2278 – 2184

 

அண்ணன் மேரென்றே (Merenre) ஆட்சியைத் தொடர்ந்து இவன் பதவி ஏற்றான். இன்னொரு அதிசயச் செய்தி. இவனது ஆட்சிக் காலத்தில் தெற்கத்திய படையெடுப்பில் குள்ளமாக வளரும் பிக்மி (pygmy) இன மக்களைப் பிடித்துவந்து ஆடவைத்தனர். ஆடும் குள்ளன் (Dancing Dwarf)  என்ற செய்தி பெரிய அதிசயமாகப் போற்றப்பட்டது.

எகிப்தில் கோவில் சொத்துகளுக்கு வரி விலக்கு!

இந்து மன்னர்கள் செய்தது போலவே, கோவில் நிலங்களுக்கு பெபி வரி விலக்கு அளித்தான். இவனது ஆட்சிக் காலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்கள் எழும்பின.

 

பெபி பற்றிய பல சுவையான செய்திகளில் ஒன்று இவன் பல பெண்களை மணந்தான். ஆயினும் அவர்கள் எல்லாம் இறந்தும் இவன் மட்டும் 100 வயது வரை வாழ்ந்தான். இவன் ஒருபால் புணர்ச்சியை (HOMO SEXUAL) விரும்பியவன். சஸ்நெட் (General Sasenet) என்ற படை த்தளபதியுடன் இவனுக்கு ஒருபால் காதல். இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அரண்மனையிலிருந்து வெளியேறி தளபதி வீட்டின் சுவர் ஏறிக்குதித்து அவனுடன் படுத்துவிட்டுக் காலையில் திரும்பிவிடுவான் என்று எகிப்தில் ஒரு செய்தி உலவியது.

இவன் கோவிலகளுக்கும் பிரபுக்களுக்கும் நிலங்களைத் தானமாக அளித்தான். பிரபுக்களுக்கு இப்படிக்கொடுத்தால் அவர்கள் விசுவாசமாக இருப்பர் என்ற நம்பிக்கை. இவன் நூபியா, சைனாய் (Nubia and Sinai) முதலிய பகுதிகளுக்குப் படை எடுத்துச் சென்று தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் கொண்டு தனது கட்டிடங்களை அலங்கரித்தான். ஆனால் இவன் பின்பற்றிய கொளகைகளே இவனுக்குப் பின்னர் நிலையற்ற ஆட்சியை உண்டாக்கியது. இவன் இறந்த பின்னர் சக்கரா என்னும் இடதிலுள்ள பிரமிடில் புதைக்கப்பட்டான். அங்குதான் சுவர் எழுத்துகள் – சமய இலக்கியப் படைப்புகள் தோன்றின.

ஆறாவது வம்சத்தின் இறுதியில் பிளவு அதிகரித்தது. நிச்சயமற்ற நிலை நீடித்ததால் அரசியல் குழப்பம் நீடித்தது. இதை எகிப்தியவியலாளர் முதல் குழப்ப காலம் (இடைவெளி First Intermediate Period) ) என்று சொல்லுவர். அரசாங்க அமைப்புகளும் மன்னரின் கரங்களும் பலவீனம் அடைந்தன. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்னும் பாங்கில் ஒரே சமயத்தில் பலர் வெவ்வேறு பகுதிகளில் ஆளத்துவங்கினர்.

 

 

ஆனால் வணிகமும் இலக்கியமும் வளர்ந்தன. குறிப்பாக 9, 10 ஆவது வம்சங்களின் ஆட்சிக்காலத்தில்.

 

எப்போதும் தென்பகுதியில்தான் எகிப்தின் உயிர்த் துடிப்பு இருக்கும். ஆங்கே தோன்றிய ஒரு இளவரசன் மீண்டும் எகிப்தை ஐக்கியப்படுத்தினான்.

 

சுவர்களில் எழுதிய அதிசயச் செய்திகள்:-

ஐந்தாவது, ஆறாவது வம்ச காலங்களில் சக்கரா என்னும்பி இடத்தில்ர உள்ள பிரமிடுகளின் சுவர்களிலும் கல்லறைகளிலும் எழுதப்பட்டவையே முதல் படைப்புகள் இவை கி.மு 2400 ஐ ஒட்டியவை. பழைய எகிப்திய மொழியில் எழுதப்பட்டவை. இதிலுள்ள ‘மந்திரங்கள்’ மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கை பற்றியவை. பாரோவின் ஆவி எப்படியெல்லாம் மேலுகம் செல்ல முடியும் என்றும் அதற்கு ஆஸிரிஸ் என்னும் தேவதை உதவும் என்றும் கூறும். சில’ மந்திரங்கள்’ கடவுளை மிரட்டும் (SPELLS) மந்திரங்கள்!

 

 

ஐந்தாவது வம்ச மன்னன் யூனஸ்(Unas), ஆறாவது வம்ச மன்னர்கள் Pepi I, Pepi II பெபி, திதி (Teti) , மேரென்ரே(Merenre) அவர்களுடைய மஹாராணிகள் ஆகியோர் கல்லறைகளில் இந்த ‘மந்திரங்கள் அல்லது கட்டளைகள் உள்ளன. சுமார் 800 மந்திரங்கள் (spells) வெளியிடப்பட்டுள்ளன.

 

இவைகளில் பல இந்து  மத வேத மந்திரங்கள் போல இருக்கின்றன. இறந்த ஆவி பற்றிய வேத மந்திரங்களுடன் இவற்றை ஒப்பிட்டு ஆராய வேண்டும்.

 

திதி (Teti) என்ற மன்னன் பற்றிய மந்திரம்:

“மன்னனே எழுந்திரு. தலையை நிமிர்த்து; உன் எலும்புகளையும் உறுப்புகளையும் எடு. மண்ணை உதறு. ரொட்டியையும் பீயரையும் எடுத்துக்கொள். சாதாரண மனிதன் கடக்க முடியாத வாசலில் நில்.

வாயிற்காப்போன் வந்து உன்னைக் கரம்பிடித்து , முத்தமிட்டு, அன்பாக, தந்தை (GEB) ஜெபிடம் அழைத்துச் செல்வான். மறைந்திருப்போர்கள், பெரியோர்கள் உனக்கு உதவுவர். உணவு தயாராகிவிட்டது. மாதாந்திர விருந்து தயாராகிவிட்டது”.

 

இந்துக்களும் முதல் 13 நாட்களுக்குப் பின்னர் மாதம்தோறும்  மூன்று நாட்கள் இறந்தோருக்கான கிரியைகளைச் செய்வர்.

ஒரு மந்திரம் சொல்கிறது: “வானம் தோன்றுவதற்கு முன்னரே பிரளயகால நீரில் மன்னன் தோன்றிவிட்டான். மஹா பிரளயத்தில் அரசன் இருவர் சண்டையில் (ஹோரஸ்- சேட்) தீர்ப்பு வழங்குவான்”.

 

பிரமிட் சுவர் (Pyramid Texts) இலக்கியம் பெரும்பாலும் சம்பாஷணை (Dialogue) வடிவில் இருக்கும். அதாவது மன்னன் (பாரோ) நட்சத்திர மண்டலத்தை தாண்டி பயனம் செய்வதற்கு முன்னர் தன் சேவகர்களுடன் கலந்துரையாடுகிறார் (இந்த இடத்தில் நான் மஹாபாரத வனபர்வத்தில் புண்யாத்மாக்கள் நட்சத்திர மண்டலங்கள் ஆவது பற்றி எழுதியதை நினைவுபடுத்துகிறேன். எனது முந்தைய கட்டுரைகளைப் படிக்கவும்)

 

நமது வேதங்களைப் போலவே, மறை (ரஹசிய) மொழிகளில் சம்பாஷணை இருக்கும்:  (எகிப்திய மந்திரம் 352):– ” ஓ, பசுவே! இரவில் உன்னுடைய நேரத்தில் அரசனுடன் ஒரு வல்லூறு (கழுகு) கர்ப்பம் அடைந்துவிட்டது”.

 

இதற்கெல்லாம் பொருள் சொல்ல ஆட்கள் இல்லை. ஆராய்ச்சியாளர்கள் ஊகத்திலேயே வண்டி ஓட்டுகின்றனர். இவைகளை மொழி பெயர்ப்பது இயலாத காரியம் என்பர் எகிப்தியவியலாளலர்.

 

எகிப்தியர்களுக்கு சிலேடையில் பேசுவது பிடிக்கும். இப்படி இருபொருள்பட அவர்கள் சித்திர எக்ழுத்துக்களை எழுதுகையில் அதைப் புரிந்துகொள்வது இன்னும் கடினம். அவர்கள் சிலேடையில் பேசுவதில்,  நம் காளமேகப் புலவருக்கு அண்ணன்கள்!!

 

ஊனஸ் பிரமிடில் முதலில் இவைகளைப் பார்த்தாலும், இவை அதற்கு முன்னரே வாய்மொழியாக இருந்திருக்க வேண்டும் முதலில் சுவரில் எழுதிவிட்டு, பின்னர் சவப் பெட்டியின், உட்புறத்தில் எழுதத் துவங்கினர்.

எப்படி வேதங்களை மொழி பெயர்க்கமுடியாதோ அப்படி எகிப்திய விஷயங்களையும் மொழி பெயர்க்கமுடியது. இது  ஒரு சிக்கலாலன புதிர்!

 

தேவி பாகவதத்தில் தேவியின் உலகம் எப்படி வருணிக்கப்படுகிறதோ அப்படி மேலுலகம் வருணிக்கப்படுகிறது “கடவுள் பிறந்த அந்த இடத்தில் எப்போதும் ஒளி இருக்கும். நான் கிழக்கு திசை நோக்கிச் செல்லுகிறேன்

 

வானத்தின் ரிஷபம் (காளை) மன்னன்;

நினைத்தமாத்திரத்தில் வெல்லுவார்.

அவர் எல்லா கடவுளிடத்திலும் உள்ளார்.

அவர் குடலையும் உறுப்பையும் திண்பார்

முழு உடலுடன் வந்தாலும் அவர் செய்வார்

அக்னித் தீவில் இருந்துகொண்டு. (எகிப்திய மந்திரம் 274)

 

 

ஓ ரே! வளைந்து செல்லும் நீர்வழியின் படகோட்டியிடம் என்னை ஒப்படை. அவன் படகு கொண்டு வரட்டும். அவன் அதில்தானே கடவுளரை கிழக்கு திசைக்கு அழைத்துச் செல்லுகிறான் (மந்திரம் 359)!@

 

இந்துக்கள் சம்சார சாகரம் (பிறவிப் பெருங்கடல்) என்று சொல்லுவதையும், வைதரணி என்னும் நதியை இறந்த ஆவிகள் கடக்க வேண்டும் என்று கூறுவதையும் ஒப்பிடுக; இந்துக்களின் மரணச் சடங்குகளில் ஒரு படகு பொம்மை செய்து வைப்பார்கள்.

 

எகிப்தியர்கள் சொல்லும் கீழ்திசை, புண்ணிய பூமியான இந்தியாவாக இருக்கும் என்பது என் கருத்து.

 

தொடரும்……….

 

வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684)

லண்டனில் கிடைத்த ரோமானிய கழுகு சிலை

 

Written by London swaminathan

 

Date: 2 March 2017

 

Time uploaded in London:-10-35 am

 

Post No. 3684

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்திலும் ரிக்வேதத்திலும் கழுகு, பருந்து, கருடன், ராஜாளி என்ற பறவைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் சில அதிசய விஷயங்கள் — அதிசய ஒற்றுமைகள் — தெரிய வருகின்றன.

 

அவை என்ன?

1.இரண்டு கலாசாரத்திலும் இந்த வகைப் பறவைகள், இறைவனுடனும் அரசனுடனும் சம்பந்தப் பட்டுள்ளன.

2.இரண்டு கலாசாரங்களிலும் மரணம், மரணமிலாப் பெருவாழ்வு ஆகியவற்றுடன் இப்பறவைகள் சம்பந்தப் பட்டுள்ளன.

3.இரண்டு கலாசாரங்களிலும், சூரியனுடன் உடனுள்ள தொடர்பு காட்டப் பட்டுள்ளன.

4.மிகப்பழைய குறிப்புகள் உள்ளன.

கருட வாஹனம்

முதலில் ரிக் வேதத்தைக் காண்போம்:

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (பிரிவுகள்) இருக்கின்றன

 

கீழ்கண்ட இடங்களில் ஸ்யேன, சுபர்ணா முதலிய சொற்களால் இப்பறவைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்திரன், வருணன் போல பருந்தையும் ஒரு தேவதையாக வைத்து ஒரு துதி உள்ளது (4-27).

ஏன் இப்படி பருந்து அல்லது கருடன் மீது பாடினார்கள் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது!

 

மஹா சுபர்ண என்று சதபத பிராமணத்தில் சொல்ல்ப்படுகிறது (12-2,3,7)

சகன் என்று ஒரு பறவை குறிப்பிடப்படுகிறது; இது பற்றி யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை; பருந்தோ, கழுகோ என்று சந்தேகத்துடன் எழுதுவர்! (தைத்ரீய சம்ஹிதை 3-2,1,1)

 

சுபர்ண

இதற்கு இரண்டு பொருள் உண்டு; நல்ல இறக்கை உடைய; நல்ல இலை உடைய.

 

இது கழுகு அல்லது கருடன் அல்லது பருந்து போன்ற பறவை என்று ரிக்வேத உரைகாரர் எழுதுவர்.(1-164-20; 2-42-2; 4-26-4;8-100-8;9-48-3

 

ஸ்யேன என்ற சொல்லாலும் இப்பறவையை வேதம் குறிப்பிடும். சுபர்ணாவின் அரசனே கருடன் என்று அதர்வண வேதம் சொல்லும்; புராணங்களில் கருடனே விஷ்ணுவின் வாஹனமாக அமைந்தது.

கழுகு  வடிவ யாக குண்டம்

விநோதச் செய்தி

 

அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் தனித்தனியே பிரிக்கும் சக்தி படைத்தது என்று காளிதாசன் சொன்னதை தமிழ்ப் புலவர்களும் சொல்லுவது பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். ஜைமினீய பிராமணம் என்னும் நூலில், கிரவுஞ்சப் பறவை போல கழுகும் தண்ணீரையும் பாலையும் பிரிக்கும் சக்தி படைத்தது என்று எழுதியுள்ளதாக (2-438) கீத்தும் மக்டொனால்டும் எழுதிய வேத இன்டெக்ஸ் கூறுகிறது

 

இது தவறான மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் சுபர்ண என்ற சொல்லுக்கு அன்னம் என்ற பொருளும் உண்டு என்று விஷ்ணு சஹஸ்ரநாம உரை சொல்லும் (பக்கம் 88, சஹஸ்ரநாம உரை, எழுதியவர் அண்ணா, ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4).

விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று “சுபர்ண” என்று சஹஸ்ரநாமத்தில்  வருகிறது.

 

 

பேரறிவு பேரின்பம் ஆகிய இரண்டு அழகிய இறக்கைகளை உடையவர் என்று பட்ட பாஸ்கரர் உரையில் இருக்கிறது. அவர் இது விஷ்ணுவின் ஹம்சாவதாரம் பற்றிய குறிப்பு என்பார்.

த்வா ஸுபர்ணா ஸயுஜா, ஸகாயா ஸமானம் வ்ருக்ஷம் பரிஷ்வஜாதே- முண்டகோபநிஷத் 3-1-1.

 

இதிலிருந்து பறவை என்ற பொதுப் பொருளிலும் கழுகு, கருடன், அன்னம் (ஹம்சம்) என்ற சிறப்புப் பொருளிலும் இச்சொல் கையாளப்ப ட்டது தெரிகிறது.

 

விட்டுணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு இடங்களில் சுபர்ணா என்ற சொல் விட்டுணுவைக் குறிக்கிறது. மற்றொரு இடத்தில் “வேதமாகிய இலைகளோடு கூடிய சம்சார மரத்தின்” என்று ஆதி சங்கரர் உரை சொல்லும். இதற்கு அவர் கீதையை மேற்கோள் காட்டுவார் (கீதை 15-1)

கழுகு  வடிவ யாக குண்டம்

சிந்து சமவெளியில்

 

சிந்து சமவெளியில் கருடன் போல முத்திரை கிடைத்தது.

 

இறந்துபோனவர் வீட்டில் அந்த ஆன்மா கடைத் தேறுவதற்காக 13 நாட்களுக்குள் ஒரு நாள் கருட புராணத்தைப் படிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. கருடன் அமிர்தம் எடுத்து வந்த கதை, மரகதம், மாணிக்கத்தை எடுக்கும் முறை, கரிகால் சோழன் முதலிய அரசர்கள் பருந்து வடிவில் யாக குண்டம் வைத்து, ராஜசூய யக்ஞம் முதலியன செய்ததை முன்னரே எழுதிவிட்டேன்.

 

ரோமானிய மன்னர்களின் சடலத்தைத் தகனம் செய்யும்போது சிதைத்தீக்கு மேலே ஒரு கழுகைப் பறக்கவிடுவர். மன்னரின் ஆவி சொர்க்கத்துக்கு/ வானுலகத்துக்குச் செல்லுகிறது என்பது இதன் பொருள். இது இந்துக்களின் நம்பிக்கை. மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை போல மேலே பறதுவிடும் என்பது இந்துமத நூல்களில் காணப்படுகிறது. தமிழ் வேதமாகிய திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் இதே கருத்தைக் காண்க:-

 

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு (338)

 

அழாஅம் உறைதலும் உரியம் – பராரை

அலங்கல் அம் சினைக் குடம்பைப் புல்லெனப்

புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு (கல்லாடனார், அகம்.113)

கீதை 2-22 இதே கருத்தை வேறு உவமையுடன் (நைந்த உடை) சொல்லும்

 

எகிப்தில் கழுகு/பருந்து

 

1.ஹோரஸ் HORUS (சூரிய என்பதன் திரிபுச் சொல்) என்ற இறைவனின் வடிவம்தாம் மன்னன் என்று சொல்லும் எகிப்திய கல்வெட்டுகளும் காகிதங்களும் அந்த ஹோரஸை ஒரு பருந்தாகவே FALCON காட்டியுள்ளன.

2.கி.மு.3000 முதல் வழிபடப்படும் ஹோரஸ் என்னும் சூரிய தெய்வத்தை இந்துக்கள் கருட வாஹனத்தைச் சித்தரிப்பதுபோல, பருந்து முகத்துடனும் , மனித உடலுடனுமே வரைவர்.

3.சில நேரங்களில் சூரியன் நடுவிலும் இரண்டு (SUN DISC WITH WINGS ) இறக்கைகள் பக்கவாட்டிலும் உள்ளது போலும் வரைவர்.

4.இந்தப் பறவையின் கண்கள் நல்ல தாயத்து என்று வரைந்து அதையும் அணிந்தார்கள். இந்துக்கள் கருடனைக் கண்டால் சுப சகுனம் என்பது போல!

உலகிலுள்ள பல பண்பாடுகளில் கழுகு, கருடன் பற்றியுள்ள நம்பிக்கைகள் (மாயன் Mayan, காதிக், Gothic, மெக்ஸிகோ Mexican ) இந்துமத நம்பிக்கைகளின் பிரதிபலிப்பே!

 

முடிவுரை:-

 

ரிக் வேதத்தின் காலம் கி.மு 4500 முதல் 6000 வரை என்று ஜெ ர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், இந்திய அறிஞர் பாலகங்காதர திலகரும் ரிக் வேதத்திலுள்ள வானியல் குறிப்புக்ளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். இதுவரை யாரும் அது தவறு என்று சொல்ல முடியவில்லை. நாமும் அந்த தேதியை ஒப்புக் கொண்டால் உலகில் கருடன்/கழுகு பற்றிப் பாடியவர்களில் நாமே முதல்வர் என்பதில் ஐயமில்லை.

 

அஸீரிய கழுகு தேவதை

கண்டபேரண்ட பட்சி (இரட்டைக் கழுகு) துருக்கி

 

–subam–

பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11

கீஸா  பிரமிடு

Written by London swaminathan

 

Date: 27 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 6-18 am

 

Post No. 3674

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

நாலாவது வம்சம்

 

நாலாவது வம்சாவளியின் சிறப்பு மாபெரும் பிரமிடுகளைக் கட்டியதாகும்.

மூன்றாவது வம்சத்தின் கடைசி அரசர் ஹூனீ (Huni). அவருடைய புதல்வி ஹெதபரிஸ் ((Hetepheres I)  நாலாவது வம்சத்தைத் தொடங்கி வைத்தார். ஸ்நெபரு (Sneferu) என்பவரை மணந்தார். அவரும் பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்பினார். ஆனால் அவருடைய மகனான குனம் கூஃபு (Khnum Khufu) என்பவர் கட்டிய பிரமிடுதான் கீஸாவின் பெரிய பிரமிடு ( Great Pyramid at Giza) என்று அழைக்கப்படுகிறது. ஸ்நெபெருதான் அதிகம் பிரமிடுகளை — மூன்று அல்லது நான்கு பிரமிடுகளைக் கட்டினார். 90 லட்சம் டன் கற்களை வெட்டிச் செதுக்கி இவைகளை அமைத்தார். இருந்தபோதிலும் கூஃபுவின் பிரமிட் மிகப்பெரியதாகையால், அதற்கே பெருமை முழுதும்!

 

பெரிய பிரமிடின் சிறப்புகள்

 

இது கீஸாவில் (Giza near Cairo) உள்ளது எகிப்தின் தலைநகரான கெய்ரோவைச் சுற்றித்தான் பிரமிடுகள் உள்ளன. பெரிய பிரமிடுதான் மிகப்பழைய பிரமிடு. இதன் காலம் கி.மு.2560.

 

இதன் உயரம் 481 அடி. மதுரை மீனாட்சி கோவிலைப் போல மூன்று மடங்கு உயரம்! இது ஆக்ரமிக்கும் பரப்பு 14 ஏக்கர். அதுவும் மீனாட்சி கோவிலின் பரப்புக்குச் சமமானதே. இந்த பிரமிடு உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று.

 

4500 ஆண்டுகளுக்கு முன்னர் இதைக் கட்டியபோது வெள்ளைச் சுண்ணாம்புக் கறகள் பள பளவென்று சூரிய ஒளியைப் பிரதிபலித்தது. காலை சூரிய உதயத்தின்போது பிரமிடின் ஒருபக்கம் ஒளிமயமாக ஜொலித்திருக்கும். மாலையில் சூரியன் மறையும் போது வானவில்லின் ஏழு நிறங்களும் ஒவ்வொன்றாகத் தோன்றி மறைந்திக்க வேண்டும். இமய ,மலையிலுள்ள கயிலை மலையை இத்தோடு ஒப்பிடலாம். அதுவூம் சூரிய ஒளி படப்பட நிறம் மாறிக்கொண்டே இருக்கும்!

இந்தப் பிரமிடின் பெயர் கூஃபு தொடுவானத்துக்குச் சொந்ததமானவர் (Khufu is belonging to the Horizon).

Ivory Statue of Khufu, கூஃபு மன்னரின் தந்தச் சிலை

 

பௌர்ணமி நிலவு உதித்த காலங்களில் இந்தப் பிரமாண்டமான பிரமிடு நிலவு ஒளியி வெள்ளை நிறத்தில் ஜொலித்திருக்கும். இதனால்தான் இது உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. மேலும் ஏழு அதிசயங்களில் காலாத்தால் அழியாதது பிரமிடு ஒன்றுதான்.

 

காலப்போக்கில் கீசா வட்டாரம் முழுதும் பிரமிடுகளால் நிரம்பி வழியத் தொடங்கியது. மன்னர்களின் கல்லறைகளை இவ்வாறு பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளைக் கற்களாலும், கடவுளரின் கோவில்களை கருங்கற்களாலும் கட்டினர். அருகிலேயே அதிகாரிகளின் மஸ்தபா (Mastaba)  கல்லறைகளும், மஹாராணியார், குழந்தைகளின் சிறிய கல்லறைகளும் இருக்கின்றன.

 

கூபூ பிரமிடு முதலியன, 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பூமாதேவியின் கிரீடம் போலத் தோன்றியிருக்க வேண்டும்.

 

வரலாற்றின் தந்தை என்று மேலை நாட்டினர் புகழும் ஹெரதாத்தஸ் (Herodotus)  ஒரு விநோதமான செய்தியை எழுதி வைத்துள்ளார்

கூஃபு என்ற மன்னரின் கிரேக்க மொழிப் பெயர் கீயாப்ஸ் (Cheops). கீயாப்ஸ் மன்னரின் கல்லறை ஒரு தீவு போன்ற இடத்தில் இருந்ததாகவும் அதற்கான தண்ணீர், நைல் நதியிலிருந்து கால்வாய் மூலம் கொண்டுவரப்பட்டதாகவும் எழுதி வைத்துள்ளார். அப்படி ஒரு நிலத்தடித் தீவு இல்லை. தண்ணீர் இருந்ததற்கான அறிகுறிகளும் இல்லை. காலம்தான் இந்தப் புதிருக்கு விடை காணும்.

மன்னர் கல்லறை உள்ள அறை சிவப்புக் கற்களால் (Red Granite) ஆனது. வேறு எந்தப் பிரமிடிலும் இல்லாதவாறு இங்கு மூன்று அறைகளுள்ளன. இவைகளை இணைக்க வழியும் இருக்கிறது. முதலில் வரைபடத்திட்டங்கள் மாற்றப் பட்டதால் மூன்று அறைகள் என்று நினைத்தனர்.

 

கீழ்மட்ட அறை பூமிக்கு 100 அடி ஆழத்தில் உள்ளது. இது பாதாள உலகம் எப்படி இருக்கும் என்பதைக் காட்ட இப்படி இருட்டாக கரடு முரடாக விட்டிருக்கலாம் என்று இப்போது நினைக்கின்றனர். மேல் அறையில் மன்னர் கல்லறை உள்ளது. அதிருந்து செல்லும் சாளரம் மூலமாக நேரடியாக நட்சத்திரத்தைக் காணலாம். முதலில் காற்று வருவதற்காக இப்படி இரண்டு திறந்தவெளிப் பாதைகள் வைத்ததாகக் கருதினர். இப்போது அவைகளுக்கு வேறு விளக்கம் கொடுக்கப்படுகிறது. இறந்த மன்னரின் ஆவி நேரடியாக நடசத்திரங்களை அடையவே இந்த அமைப்பு.

 

இது எப்படித் தெரிய வந்ததென்றால் ஐந்தாவது வம்சம் உருவாக்கிய பிரமிடுகளில் மன்னன் (எகிப்திய பாரோ) வானுலகத்துக்குப் போவது பற்றி எழுத்திலேயே எழுதி வைத்துள்ளனர். மேலும் கூஃபு பிரமிடின் அமைப்பும் ஒரு குறிப்பிட்ட சித்திர எழுத்தின் வடிவில் (Hieroglyph) அமைந்திருப்பது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்தின் பொருள்: உயரே போதல் (Ascension), அதாவது வானுலகப் பயணம் (Ascending to the Stars!)

 

எகிப்து முழுதும் அதிசயங்கள்தாம்; மேலும் மேலும் புதிய விளக்கங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எகிப்தியல் பற்றி மாதம்தோறும் வெளிவரும் பத்திரிக்கைகள் முத்லியன, இங்கே எங்கள் லண்டன் முதலான நகரங்களில் கிடைக்கின்றன. எப்போது திறன்ந்து பாரத்தாலும் புதிய அகழ்வாராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, புதிய விளக்கம் என்று பேழுதிக்கொண்டே இருக்கிறார்கள்!

இந்த அதிசயமான விஷயம் ஏற்கனவே வியாசர் சொன்னதுதான்!

 

இதோ நான் மூன்றாண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை:

நாம் எல்லோரும் நட்சத்திரங்கள் !!

 

ஆராய்ச்சிக் கட்டுரை:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1242: தேதி 19 ஆகஸ்ட் 2014.

நாம் அனைவரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் துகள்களாக இருந்தோம். இது ஒரு விஞ்ஞானச் செய்தி. ஆனால் புண்யம் செய்தவர்கள் எல்லோரும் நட்சத்திரங்கள் ஆவார்கள் என்பது மஹபாரதம் தரும் அதிசயச் செய்தி. நட்சத்திரங்கள் எல்லாம் கடவுள் என்பது எகிப்திய, மாயா நாகரீக வரலாறு தரும் செய்தி; அனைத்தையும் சுருக்கமாகச் சொல்வதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம்.

 

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது மஹாபாரத வனபர்வத்தில் வரும் அர்ஜுனனின் விண்வெளிப் பயணத்தைப் படித்து அதிசயித்துப் போனேன். ஆனால் அது ‘’சிம்பாலிக்’’க்காக (அடையாளபூர்வமாக) சொன்ன செய்தி என்று விட்டு விட்டேன். லண்டனுக்கு வந்த பின்னர் ராஜாங்க ஆஸ்தான விண்வெளி விஞ்ஞானி பாட்ரிக் மூர் (Patrick Moore’s Sky at Night)  நடத்தும் “இரவு நேரத்தில் வானக் காட்சி” என்ற கிரகங்கள்—நட்சத்திரங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து வந்தேன். ஒரு நாள் அவர் சொன்னார், “ நாம் எல்லோரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் துகள்களாக இருந்தோ என்று! மஹாபாரத வன பர்வ செய்தியை ஒப்பிட்டுப் பார்த்தபோது புல்லரித்தது.

 

அர்ஜுனனின் விண்வெளிப் பயணம்
அதாவது அர்ஜுனனை மாதலி என்ற சாரதி விண்வெளி ரதத்தில் ஐந்தாண்டுகளுக்கு சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் வர்ணனை மஹா பாரத வன பர்வத்தில் உள்ளது. அர்ஜுனன் ஒளிமிகுந்த ஆயிரக் கணக்கான ரதங்களைப் பார்த்து இவர்கள் யார் என்று கேட்கிறான். இந்த ஒளிமிகுந்த மக்கள் எல்லாம் புண்யம் செய்தவர்கள், இவர்களைத்தான் நீங்கள் நட்சத்திரங்களாக பூமியில் பார்க்கிறீர்கள் என்று மாதலி விளக்கம் தருகிறான். இதை பாட்ரிக் மூர் என்ற வானியல் அறிஞர் சொன்னதோடு ஒப்பிடுகிறேன்:

கோடி கோடி வருடங்களுக்கு முன் மாபெரும் வெடிப்பு (பிக் பேங் Big Bang) ஏற்பட்டது. அப்போது விரிவடையத் துவங்கிய பிரபஞ்சம் இன்னும் பலூன் போல விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதில் தோன்றிய ஒரு சின்னத் துகள் சூரிய மண்டலம். அதிலுள்ள ஒரு இம்மி அளவான பூமியில் அந்த நட்சத்திரத் துகள்கள் இறுகி மனித இனம் தோன்றியது என்பர் விஞ்ஞானிகள்.

அவர்கள் கணக்குப் படி நட்சத்திரங்கள் என்பது கோள உருவத்தில் சுற்றும் வாயுக் கோளங்கள். அதில் ஹைட்ரஜனும் ஹீலியமும் பிரதானமாக இருக்கின்றன. ஒவ்வொரு வினாடியிலும் கோடிக் கணக்கான ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால் அவை வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்கின்றன. சூரியனும் ஒரு சின்ன வகை நட்சத்திரம்தான்.

இதை எல்லாம் விஞ்ஞானம் சொன்னாலும் மாபெரும் வெடிப்பு BIG BANG  ஏன் நிகழ்ந்தது? அதன் முடிவு என்ன? என்பதை விஞ்ஞானத்தால் விளக்க முடியவில்லை. பாட்ரிக் மூர் சொன்னது போல நாம் எல்லோரும் நட்சத்திரத் தூசியாக இருந்ததை ஒப்புக் கொண்டாலும் அதற்குள் ஆத்மா ஒன்று இருப்பதை விஞ்ஞானம் ஒத்துக் கொள்வதில்லை. அங்குதான் மதம் வந்து கை கொடுக்கிறது!

வியாசர் எழுதிய மஹாபாரத வனபர்வத்தைப் படிப்பவர்கள் இன்றும் வியப்படைவார்கள். அவர் சொன்ன பல விஷயங்களுக்கு இப்போது விஞ்ஞான விளக்கம் கிடைக்கிறது. அவரை ஒரு விஞ்ஞானி என்று அறிஞர்கள் ஒப்புக் கொள்ள மறுத்தாலும், 5000 ஆண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞான புனைக் கதை (OLDEST SCIENCE FICTION WRITER) எழுதிய முதல் மனிதன் என்ற பட்டத்தையாவது கொடுக்க வேண்டும். நீண்ட விண்வெளிப் பயண வர்னணையை வன பர்வத்தில் படிக்கலாம். அது பற்றி தனியாக எழுதுவேன்.

சிவன் எனும் திருவாதிரை நட்சத்திரம்

 

இந்துக்களின் நட்சத்திர வழிபாடு
நாமும் அருந்ததி (Algol) , அதை ஒட்டியுள்ள சப்தரிஷி (Ursa Major)  மண்டலம், அகத்திய (Canopus) நட்சத்திரம், துருவ நட்சத்திரம் (Pole Star) , திரிசங்கு (Southern Cross) நட்சத்திரம் ஆகியவற்றை புனிதர்களாகவே வழிபடுகிறாம். வானில் தெரியும் ஏழு நட்சத்திரங்களான சப்த ரிஷி மண்டலத்தை “கை தொழு எழுவர்” என்று சங்கப் புலவர் புகழ்கிறார். கார்த்திகை (Pleiades) நட்சத்திரம், ரோகிணி (Aldebaran) நட்சத்திரம் ஆகியனவும் நம்மால் வழிபடப் படுகின்றன. சங்க காலத் தமிழர்கள் ரோகிணி நட்சத்திரத்தில் மட்டும் கல்யாணம் செய்ததை சிலப்பதிகாரமும் அகநானூறும் பாடுகின்றன.

இதே போல எகிப்தியர்களும் மாயா நாகரீக மக்களும், மன்னர்கள் இறந்த பின்னர் நட்சத்திரங்களாக மாறுகின்றனர் என்று எழுதி வைத்துள்ளனர். அண்மைக்கால ஆரய்ச்சியில் கியாப்ஸ்-குபு பிரமிட்டில் நட்சத்திரப் படங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 90 பிரமிடுகளில் மூன்று பெரிய, பழைய பிரமிடுகள் ‘’ஓரியன்’’ நட்சத்திர மண்டலத்திலுள்ள மூன்று நட்சத்திரங்களை நோக்கி அமைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அதாவது காற்றுப் போவதற்கான மூன்று ஓட்டைகள், அந்த மூன்று நட்சத்திரங்களை நோக்கி அமைந்துள்ளன. 1994 பிப்ரவரியில் பி.பி.சி. ஒளிபரப்பிய ஓரியன் மிஸ்ட்ரி (The Orion Mystery) என்ற டாகுமெண்டரியில் இது பற்றி விரிவாகக் காட்டினார்கள். அப்போது நான் எழுதி வைத்த ஆராய்ச்சிக் குறிப்புகளை இப்பொழுது சொல்வதற்குக் காரணம் உண்டு.

சிவன் என்னும் வேடன்

ஓரியன் நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஆருத்ரா (Betelgeuse)  நட்சத்திரம் சிவனுக்கு உரிய நட்சத்திரம். சிவ பெருமானை வேடனாக நாம் உடைகள் போட்டுக் காட்டுவதோடு அல்லாமல் ருத்ரம் என்னும் யஜூர்வேத மந்திரம் அவரை வேடனாகவே வருணிக்கிறது. இதே கதை சிறிது மாற்றத்தோடு கிரேக்க புராணத்திலும் இருக்கிறது. கிரேக்கர்களின் புராணக் கதைகள் சிதைந்து போன வடிவத்தில் இயற்றப்பட்ட இந்து புராணக் கதைகள் (Distorted version of Hindu Mythology)  என்று மாக்ஸ்முல்லர் கூறுவார். ஆக்வே நம்மிடம் காப்பி அடித்த கதைதான் ஓரியன் வேடன் கதை என்பதாகும்.

 

ஐதரேய பிராமணம் என்னும் வேதப் பகுதியில் ம்ருக வ்யாத (வேடன்) என்ற பெயரில் ஓரியன் நட்சத்திரம் வருணிக்கப்படுகிறது. அவர் பிரஜாபதி என்றும் அவர் மகள் ரோகிணியை துரத்திச் செல்கிறார் என்றும் பிராமணங்களில் எழுதப்பட்டுள்ளது. அப்போது சிரியஸ் (Sirius) வேடன் வடிவத்தில் அம்பு எய்ததாகவும் உள்ளது. அதர்வ வேதம் 27 நட்சத்திரங்களையும் பட்டியல் இடுகிறது. கிரேக்கர்கள் நூல்களை எழுதுவதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வேதகால கீதங்கள் சரஸ்வதி நதிதீரத்தில் ஒலிக்கத் துவங்கி விட்டன. ஆக வேடன் கதை இந்தியாவில் இருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஜனவரி மாதத்தில் தெரியும்கார்த்திகை, ரோகிணி, திருவாதிரை, மிருகசீர்ஷம், சிரியஸ் ஆகிய நட்சத்திரங்கள்

உதவிய நூல்கள்:
Page 308, Mahabharata, The Book of the Forest (Vana Parva), Translated by A B Van Buitenen
Page 141 of Fingerprints of the Gods by Graham Hancock
Page 174, Volume 2 of Vedic Index by A A MacDonnell and A B Keith.
Page 160, An Illustrated Dictionary of Classical Mythology by Gilbert Meadows.

 

தொடரும்……………