துறவிக்கு, வேந்தனுக்கு, வீரனுக்கு எவர் துரும்புக்குச் சமம்-part 1 (Post No.14,478)

Written by London Swaminathan

Post No. 14,478

Date uploaded in London –  6 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 7

13. இவர்க்கு இது துரும்பு

தாராள மாகக் கொடுக்குந் தியாகிகள்

     தமக்குநற் பொருள் துரும்பு,

தன்னுயிரை யெண்ணாத சூரனுக் கெதிராளி

     தளமெலாம் ஒருதுரும்பு,

பேரான பெரியருக் கற்பரது கையினிற்

     பிரயோச னந்துரும்பு,

பெரிதான மோட்சசிந் தனையுள் ளவர்க்கெலாம்

     பெண்போகம் ஒருதுரும்பு,

தீராத சகலமும் வெறுத்ததுற விக்குவிறல்

     சேர்வேந்தன் ஒருதுரும்பு,

செய்யகலை நாமகள் கடாட்சமுள் ளோர்க்கெலாஞ்

     செந்தமிழ்க் கவிதுரும்பாம்.

வாராரும் மணிகொள்முலைவள்ளிதெய் வானையை

     மணம்புணரும் வடிவேலவா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள்

கச்சினாலிறுக்கப் பெற்ற மணிமாலை யணிந்த

முலைகளையுடைய வள்ளிக்குந் தெய்வயானைக்குங் கணவனே!,  அளவு செய்யாமல்

வழங்கும் வள்ளல்களுக்கு நல்ல பொருள்கள் துரும்பு போலாகும்;  தன்னுடைய உயிரைப் பொருளாக நினையாத வீரனுக்குப் பகைவரின் படைகளெல்லாம் ஒரு துரும்புக்குச் சமம்,  புகழ்பெற்ற பெரியோர்களுக்குத் தாழ்ந்த

மக்கள் கையாற் பயன்பெறுதல் துரும்புக்கு நிகராகும்,  உயர்ந்த வீடுபேற்றிலே நினைவுள்ளவர்களுக்குப் பெண்களாற் பெறும் இன்பம் துரும்புக்கு நேராகும்; எல்லாவற்றையும் வெறுத்துவிட்ட துறவிக்கு வெற்றியையுடைய அரசன் ஒரு துரும்புக்கொப்பாவான்.

 நன்மை தருங் கலை வடிவமான நாமகளின் அருள்

பெற்றவர்கட்கெல்லாம் செந்தமிழிலே செய்யுள் செய்தல்

துரும்பெனலாகும்—குமரேச சதகம்

****

குருபாததாசர் சொன்ன துரும்புகளை உண்மையென நிரூபித்த சில சம்பவங்களைப் பார்ப்போம் :

துறவிக்கு வேந்தன் துரும்பு!

போந்த உதாரனுக்குப் பொன் துரும்பு சூரனுக்குச்

சேர்ந்த மரணம் சிறு துரும்பு – ஆய்ந்த

அறிவோர்க்கு நாரியரும் துரும்பாமில்லத்

துறவிக்கு வேந்தன் துரும்பு”

பொருள்; வள்ளல் குணம்படைத்தவனுக்கு தங்கமும் துரும்பு போலாகும். வீரனுக்கு மரணம் துரும்பு; கற்று அதன் பயனாக ஞானம் அடைந்தவனுக்கு பேரழகிகளும் துரும்புதான். உலகையே துறந்தவனுக்கு அரசன் ஒரு துரும்புதான்.

யாருக்கு யார் துரும்பு. என்று அவ்வையாரின் இந்த செய்யுள் அழகாக விளக்குகிறது. எல்லோருக்கும் வாரி வழங்கும் உதார குணம் படைத்த வள்ளலுக்கு தங்கம் (பொன்) துரும்புக்குச் சமம். செத்தும் கொடுத்தான் சீதக்காதி பற்றிய கட்டுரையில் செத்த பிறகும் கல்லறையில் இருந்து தங்க மோதிரம் கொடுத்த கதையைப் பார்த்தோம். கர்ண மாமன்னன் தனது கவச குண்டலங்களைக் கழற்றிக் கொடுத்ததை அறிவோம்.

திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்தவர் ஏலேல சிங்கன். அவர் பெரிய வணிகன். எவ்வளவு தானம் செய்தும் பணம் சேர்ந்துகொண்டே இருந்தது. அவைகளை எல்லாம் தங்கக் கட்டிகளாக மாற்றிக் கடலில் எறிந்தாராம். அவைகளை சுறாமீன்கள் விழுங்கின. அவற்றைப் பிடித்த மீனவர்கள் மீன்களின் வயிற்றை அறுத்துப் பார்த்தபோது தங்கக்கட்டிகளில் ஏலேல சிங்கன் முத்திரை இருபதைப் பார்த்து மீண்டும் அவரிடமே சேர்ப்பித்தனர் என்றும் அறிவோம்.

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்” என்ற பெரிய புராண வரிகளையும் நினைவு கூறுதல் பொருத்தம்.

ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டாவர்கள்

நாடும் பொருளான நட்பே பராபரமே”— என்பார் தாயுமானவர்.

“ சங்கநிதி பதும நிதி இரண்டும் தந்து

தரணியொடு வானாளத் தருவரேனும்

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்— என்பார் அப்பர்.

பகவத் கீதையில் கண்ணபிரானும் யோகிகளுக்கு “சமலோஷ்ட காஞ்சனம்” (ஓடும் பொன்னும் ஒன்றே) என்பார் (அத்தியாயம் 6—8, அத்தியாயம் 14-24)

வீரன் பற்றி சேக்ஸ்பியர்

வீரனாகப் பிறந்தவனுக்கு சாவு (மரணம்) என்பது துரும்புக்குச் சமம்.  –கோழைகள் பலமுறை சாகின்றனர்; வீரனுக்கோ ஒரே முறைதான் சாவு—என்று ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் பிரபல ஆங்கிலக் கவிஞர்–நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர் கூறுகிறார். அதாவது வீரனுக்கு ஒரே முறை மரணம். கோழைகளுக்கு ஆயிரம் முறை மரணம். வீரர்கள் இறந்தபின்னர் சுவர்க்கத்துக்குப் போகிறார்கள் என்று பகவத் கீதையும் புறநானூறும் கூறுவதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் கொடுத்துள்ளேன்.

“Cowards die many times before their deaths; The valiant never taste of death but once.”?— சேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர் நாடகம்

விவேகனந்தர் – பெண்கள் கதை

கசடறக் கற்று அதற்குத் தக நிற்போருக்கு பேரழகிகளும் துரும்புக்குச் சமம். வெளிநாட்டில் இருந்தபோது, சுவாமி விவேகானந்தரை மயக்கி அவப் பெயர் உண்டாக்க எத்தனையோ பெண்களை அனுப்பிப் பார்த்தும் அவர் மயங்கவில்லை. இன்னொரு பணக்கார அமெரிக்க மாது தனது “சொத்து சுகம் அனைத்தும் தங்களுக்கே” என்று (கெட்ட எண்ணத்துடன்) அர்ப்பணித்தபோது ‘நன்றி, சகோதரி’ என்று சொல்லி உதறிவிட்டார். விசுவாமித்திரர் போன்ற தவ சீலர்களும் முதலில் மேனகைக்கு மயங்கி தனது தவம் எல்லாவற்றையும் இழந்து, பின்னர் மீண்டும் தவம் செய்து, வசிஷ்டர் வாயால் ‘பிரம்ம ரிஷி’ பட்டம் பெற்றனர்.

அலெக்ஸாண்டர்—இந்துத் துறவி கதை

துறவிக்கு வேந்தனும் துரும்பு என்பதற்கு அலெக்ஸாண்டர்-இந்துத் துறவி சந்திப்பு ஒரு நல்ல உதாரணம். நிர்வாண சாமியார்களுடன்  அலெக்ஸாண்டர் என்ற எனது பழைய கட்டுரையில் இரண்டு சுவையான சம்பங்களை எழுதியுள்ளேன். இந்து மதத்தின் மீதும் இந்து சந்யாசிகளின் மீதும் பேரன்பு கொண்ட அலெக்ஸாண்டர் வலுக்கட்டாயமாக ஒரு இந்து சந்யாசியைக் கொண்டுபோக முயன்றபோது அவர் தீக்குளித்தார்.(மேல் விவரங்களை எனது கட்டுரையில் காண்க).

அகஸ்தியர்- நகுஷன் கதையும் நல்ல உதாரணமாகும். கடுமையான தவம் இயற்றி இந்திரன் பதவியை பெற்றவன் நகுஷன் என்னும் மாமன்னன். இவனை சப்தரிஷிகளும் சுமந்து செல்லும் அளவுக்குப் பேறு பெற்றான். ஒரு முறை பல்லக்குச் சமச் சீராகச் செல்லாததற்குக் காரணம் என்ன என்று கோபத்துடன் கேட்டான். அகஸ்த்ய மஹரிஷி குள்ளமாக இருப்பதால் பல்லக்கு ஆட்டம் கண்டது என்பதை அறிந்தவுடன் அவரை காலால் ஒரு உதைவிட்டு “வேகம் வேகம்” (ஸர்ப்ப ஸர்ப்ப) என்றான். சம்ஸ்கிருதத்தில் ‘ஸர்ப்ப’ என்றால் வேகம் என்றும் பாம்பு என்றும் இரண்டு பொருள் உண்டு. உதைபட்ட அகஸ்தியர், அரசனை ஸர்ப்பமாகப் போகக் கடவாய் என்று சாபம் இட்டார். அவன் பல்லக்கில் இருந்து பூலோகத்தில் விழுந்தான்; பாம்பாகப் பிறந்தான். இறுதியில் மன்னிப்புக் கேட்டபோது யுதிஷ்டிரன் (தர்ம புத்ரர்) மூலம் சாப விமோசனம் கிடைக்கும் என்று சொல்லி கோபம் தணிந்தார். துறவிக்கு வேந்தனும் துரும்பு அல்லவா?

திருவள்ளுவரும் இந்தக் கதையை மனதில் வைத்து,

“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும்” (899)

என்பார். உயர்ந்த கொள்கை உடையோர் கோபம் அடைந்தால் பெரிய மன்னர்களும் அரச பதவியை இழப்பர் என்பது இதன் பொருள். வேனன் போன்ற கொடியோர் அழிந்ததை புராணத்தில் அறிகிறோம்.

பிராமணத் த்வேஷிகளான நந்த வம்ச அரசர்களை , பார்ப்பான் சாணக்கியன் வேருடன் அழித்ததையும் வரலாற்றில் படிக்கிறோம். அவர் சாலையில் நடக்கும் போது ஒரு புல் தடுக்கியது. அதைப் பார்த்து நந்த வம்ச அரசன் சிரித்தான். இதனால் கோபம் அடைந்த உலக மகா அறிவாளி , சாணக்கியன், அந்தப் புல்லை வேருடன் பிடுங்கினாராம். இது போல உன் வம்சத்தையும் வேரறுப்பேன் என்று சொல்லிவிட்டு,  மயில் வளர்க்கும் ஜாதியைச் சேர்ந்த சந்திர குப்தனைப் பயிற்றுவித்து மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து அலெக்ஸாண்டர் படையையும் கூட மிரளவைத்தார்.

To be continued………………………………..

யூனிபார்மில் சிவப்புக் கறைகள் இருக்கலாமா? (Post No.14,477)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,477

Date uploaded in London – –6 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

27-3-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள சிறு கதை!

யூனிபார்மில் சிவப்புக் கறைகள் இருக்கலாமா? 

ச. நாகராஜன்

அசோசியேஷனே அல்லோலகல்லோப் பட்டது! 

பெரிய விழாவின் மத்தியில் ஒரு திருட்டு! எல்லோரும் ஸ்டேஜைப் பார்த்து இருந்த போது, அசோசியேஷன் ஆபீஸ் விழாக் கோலத்தில் திறந்திருக்க, உள்ளேயிருந்த ஆறு லட்ச ரூபாயைக் காணோம்.

செக்ரட்டரி அலறி விட்டார். 

ஆபீஸ் அருகில் இருந்த ஒரு வீடும் திறந்திருந்தது. அதில் பூஜை அறையில் இருந்த வெள்ளி விளக்கையும் காணோம்.

வட்டமான காம்ப்ளெக்ஸைச் சுற்றி இருந்த நான்கு கேட்டுகளையும் மூடச் சொல்லி விட்டார் செக்ரட்டரி.

வருடாந்திர விழா முடிந்து பரிசு கொடுக்கும் சமயத்தில் நடந்த இந்த திருட்டை எப்படிக் கண்டுபிடிப்பது? விழாவில் அனைவரும் தந்த கலெக்‌ஷன் பணம் போய் விட்டதே!

திடீரென்று மேடையின் மீது ஏறினார் ஒரு டிராஃபிக் கண்ட்ரோல் ஆபீஸர். அவரது யூனிபார்மே அனைவருக்கும் ஒரு தைரியத்தைத் தந்தது. யங் அண்ட் எனர்ஜடிக்!

“யாரும் பயப்பட வேண்டாம்! திருடனை உடனே கண்டுபிடித்து விடலாம்”. என்ற அவர் டிராபிக் அதிகமாக இருந்ததால் தான் உள்ளே வந்ததாகவும் அப்போது இதைக் கேள்விப்பட்டு சங்கடப்படுவதாகவும் கூறினார்.

இங்கிருந்து வெளியே போன ஒரு ஆளின் மீது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அவன் கொஞ்ச தூரம் கூடப் போயிருக்க மாட்டான். யாராவது ஒரு ஸ்கூட்டரில் என் கூட வந்தால் பிடித்து விடலாம் அவனை” என்றார் அவர்.

அனைவரும் ஓகே, பலே, சபாஷ் என்றனர். பலரும் கூட வரத் தயாராயினர்.

அந்தச் சமயம் பார்த்து மேடையில் ஏறினான் டிராபிக் கண்ட்ரோலில்  ஆபீஸராக வேலை பார்க்கும் சீனு.

அவனைப் பார்த்த ஆபீஸர், “கூட வருகிறீர்களா?‘வாருங்கள்” என்றார்.

மேடை மீது ஏறிய சீனு அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

அவன் கண் ஜாடை காட்ட கீழே இருந்து வந்த இன்னும் இரண்டு பேர் அவரைப் பிடித்துக் கொண்டனர்.

“இப்படி நமக்கு உதவி புரிந்த இந்த ஆபீஸருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அதோ அவர் ஓரத்தில் வைத்திருக்கும் பேக் பேக்கைத் திறந்து பாருங்கள் என்றான் சீனு.

அவசரம் அவசரமாக அங்கிருந்தோர் அதைத் திறந்து பார்க்க ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டு பன்னிரெண்டும் பார்ட் பார்ட்டாக பிரிக்கப்பட்ட குத்துவிளக்கும் இருந்தன.

‘ஆஹா’ என்று கூவினர் அங்கிருந்த அபார்ட்மெண்ட் சொந்தக்காரர்கள்.

சீனு கொடுத்த கயிறால்  செக்ரட்டரி அந்த டிராபிக் ஆபீஸர் கையைக் கட்டினார்.

“எப்படிப்பா கண்டுபிடிச்சே, இவன் தான் திருடன்னு?”

“சார்! அவன் போட்டிருக்கிற யூனிபார்ம் என்னோடது. அதில் இருக்கும் இரண்டு சிவப்புக் கறைகளைப் போக்க லாண்டரியில் தர வீட்டு வாசலில் வைத்திருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் லாண்டரிக்காரர் வந்து எடுத்துப் போவார். இங்கு ஒரே களேபரமாக இருக்கவே, அதைப் பயன்படுத்தி சாதகமாக என் டிரஸைப் போட்டு நாடகமாடி ஸ்கூட்டரில் தப்பிப் போகத் திட்டமிட்டு விட்டான் இந்த பலே திருடன். எனது சிவப்புக் கறைகள் இரண்டு இவனைக் காட்டிக் கொடுத்து விட்டன” என்ற சீனுவை அனைவரும் கை தட்டிப் பாராட்டினர்.

யாரோ ஒருவர் கூப்பிட்டதால் போலீஸ் வேன் கேட் வாசலில் வந்து நிற்க செக்ரட்டரி அதை அவசரமாகத் திறக்கச் சொன்னார்.

‘போலீஸ் நிஜமான போலீஸா என்று பாருங்கள்’ என்று அனைவரும் சொல்ல ஒரே சிரிப்பு!

திருடனைப் போலீஸ் கைது செய்ய, சீனுவை சூபர் ரியல் ஆபீஸர் என்றனர் அனைவரும்!

**

Pictures of 2500 Indian Stamps!- Part 29 (Post No.14,476)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,476

Date uploaded in London – –5 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 29

Stamps posted today include YEAR 1985 STAMPS

MORE INDIRA GANDHI , 1985STAMPS, BOUGAINVILLEA, WOOD DUCK, TATYA TOPE, VASUDEO BALVANT PHADKE, HALLEY ‘S COMET, SOUTH ASIAN COUNTRY FLAGS, WORLD COMMUNICATION YEAR, MADRAS TO PENANG MAP, NANA SAHIB, LEPROSY CONGRESS, BABA KANSHIRAM, ARTILLERY JUBILEE, CALCUTTA MEDICAL COLLEGE, GIRL WATCHING TV, ST STPHEN’S HOSPITAL, CHILDREN’S DAY, PRESIDENT WATCHING FLEET, SHYAMA SHASTRI, NEHRU, BORDER ROAD ORGANISATION, TRIANGLE STAMP, FESTIVAL OF  INDIA, YAUDHEYA COIN, ASSAM RIFLES, BABA JASSA SING, POTATO RESEARCH, CALCUTTA ST XAVIERS COLLEGE, MINICOY LIGHT HOUSE, FERGUSSON COLLEGE, JAIRAMDAS DOULATRAM, MASTER TARA SINGH, RAVISHANKAR MAHARAJ, BEGUM HAZRAT MAHAL, MANGAL PANDEY.

–Subham—

Tags Part 29, 2500 Indian Stamps, MORE INDIRA GANDHI, 1985  STAMPS, BOUGAINVILLEA, WOOD DUCK, TATYA TOPE, VASUDEO BALVANT PHADKE, HALLEY ‘S COMET, SOTH ASIAN COUNTRY FLAGS, WORLD COMMUNICATION YEAR, MADRAS TO PENANG MAP, NANA SAHIB, LEPRSY CONGRESS, KANSHIRAM, ARTILLERY JUBILEE, CALCUTTA MEDICAL COLLEGE, GIRL WATCHING TV, ST STPHEN’S HOSPITAL, CHILDREN’S DAY, PRESIDENT WATCHING FLEET, SHYAMA SHASTRI, NEHRU, BORDER ORGANISATION, TRIANGLE STAMP, FESTIVAL INDIA, YAUDHEYA COIN, ASSAM RIFLES, BABA JASSA SING, POTATO RESEARCH, CALCUTTA ST XAVIERS COLLEGE, MINICOY LIGHT HOUSE, FERGUSSON COLLEGE, JAIRAMDAS DOULATRAM, MASTER TARA SINGH, RAVISHANKAR MAHARAJ, BEGUM HAZRAT MAHAL, MANGAL PANDEY.

GNANAMAYAM 4TH MAY, 2025 SUNDAY BROADCAST SUMMARY

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 1 PM (British Summer Time)

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

GNANAMAYAM 4TH MAY, 2025 SUNDAY BROADCAST SUMMARY

4-5-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar .

***

World Hindu News in Tamil  presented by Vaishnavi Anand from London and Gomathi Karthikeyan from Chennai.

***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on TIRU KOKARNAM TEMPLE near PUDUKKOTTAI 

****

Professor S Suryanarayanan, Former Principal, Madurai Saraswathy Narayanan College spoke on God seen by Three Great Saints.

****

SPECIAL EVENT-

English Talk by Sri Prasanna Lakshmi Narasimha, London.

I T Leader and Scholar in Vedic Scriptures

Topic- Adi Sankara- A great Philosopher 

****

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் .

****

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த் மற்றும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயன்

***

ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —

தலைப்பு –புதுக்கோட்டை அருகில் உள்ள திருக்கோகர்ணம்

****

சொற்பொழிவு நிகழ்த்தியவர்  –

பேராசிரியர் எஸ். சூர்யநாராயணன் , முன்னாள் பிரின்சிபால், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தலைப்பு – கடவுளைக் காட்டிய மூவர்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி: லண்டனிலிருந்து ஆங்கில சொற்பொழிவு நிகழ்த்தியவர்-

திரு. பிரசன்னா லெட்சமி நரசிம்மா

ஐ டி அதிகாரிஇந்துசமய அறிஞர்.

தலைப்பு —  மாபெரும் தத்துவ ஞானி ஆதிசங்கரர் 

*****

Anchored by London Swaminathan from London and Kalyanji from India.

****

JOIN US ON EVERY SUNDAY.

—subham—

Tags- GNANAMAYAM ,4-5-2025, BROADCAST, SUMMARY

உலக இந்து செய்திமடல் : மே 4- ஆம் தேதி 2025 (Post No.14,475)

Written by London Swaminathan

Post No. 14,475

Date uploaded in London –  5 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஞானமயம் வழங்கும் மே 4- ஆம் தேதி

உலக இந்து செய்திமடல்  

****

Collected from popular newspapers and edited for broadcast.

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்

அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை மே 4- ஆம் தேதி 2025-ம் ஆண்டு

காஞ்சிபுரத்தில் புதிய சங்கராச்சாரியார் தீட்சை பெற்றார்

காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய மடாதிபதியாக ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா  பொறுப்பேற்றார்

காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதிக்கு சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டது.

2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அட்சய திருதியை நாளில் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்கினார். அதன்பின், இளைய மடாதிபதிக்கு சன்யாச தீட்சை வழங்கி, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் சூட்டப்பட்டது.

தீட்சை வழங்கும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய பீடாதிபதிக்கு தீட்சை வழங்கும் வழிபாடுகள் காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. காலை 6:00 மணியில் இருந்து, 7:30 மணிக்குள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில், இளைய மடாதிபதியான, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவிற்கு 71வது மடாதிபதியாக சன்யாச தீட்சை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.தீர்த்த அபிஷேகம்

தீட்சை பெறுவதற்கு முன்பு திருக்குளத்தில் இறங்கிய கணேச சர்மா தனது கடுக்கண், மோதிரம், பூணூால், அரைஞாண் கயிறு ஆகியவற்றை துறந்து, மகிழ்ச்சியுடன் சந்நியாசத்தை ஏற்றார். அதன் பின் வேத மந்திரம் முழங்க காலை 6:30 மணிக்கு சன்யாச தீட்சை வழங்கினார் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தீட்சை வழங்கிய பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை ஸ்ரீகணேச சர்மாவுக்கு விஜயேந்திரர் வழங்கினார்.

தொடர்ந்து இளைய மடாதிபதி தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்ததால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்கள் செய்தார். காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கணேச சர்மாவுக்கு, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாமம் சூட்டினார். பின் இருவரும் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

சந்நிதியில் தரிசனம்

தொடர்ந்து காலை 8.00 மணி முதல் 9.00 வரை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சந்நிதி மற்றும் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் சந்நிதியில் தரிசனம் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் இருந்து ஸ்ரீமடத்திற்கு ஊர்வலம் துவங்கியது. மடம் வந்தடைந்ததும் ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர சுவாமி சந்நிதியில் தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பீடாதிபதிகள், ஸ்ரீ சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்நிதி, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிஜி மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தனர்.

பிருந்தாவன் மண்டப மேடைக்கு சுவாமிகள் வருகை தந்தனர். வேத மந்திரம் முழங்க காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவருக்கு சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு கோவில்களில் இருந்து வந்த பிரசாதங்களை இளைய பீடாதிபதி பெற்றுக்கொண்டார்.

பக்தர்களுக்கு தரிசனம்

மாலையில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்தார்கள்

விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

சிறப்பு ஏற்பாடுகள்

சன்யாச தீட்சை வழங்கும் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் கோவில் தெற்கு வாசல் வழியாக வந்து, நவராத்திரி மண்டபம் வழியாக மாடத்துக்கு வந்து, அங்கிருந்து திருக்குளத்தில் நடந்த நிகழ்ச்சிகளை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பார்வையாளர் மாடத்தில் 3 அகண்ட திரைகள் வாயிலாகவும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் ஆகியோருக்கு திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த நகரும் தெப்பத்தில் அமந்து நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், கச்சபேஸ்வரர் கோவில், பஜனை மண்டபம், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கர மடம் உள்ளிட்ட இடங்களில் இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோயில் வளாகமும, சங்கர மடமும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பெயரில் திராவிட் ஏன்?

புதிய பீடாதிபதிக்கு பெற்றோர் வைத்த பெயரின் கடைசியில்  தி ராவிட்  என்ற வார்த்தை இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு குடி பெயர்பவர்கள், தங்கள் பெயருடன்  தி ராவிட்  என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொள்வர்.

இவரது முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் வலங்கைமான் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு குடி பெயர்ந்தவர்கள். அதனால் தான் அவரது பெயரிலும்  தி ராவிட்  என்ற வார்த்தை இருக்கிறது.

****

பொன்முடியின் பதவி பறிப்பு– இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி

தமிழக அமைச்சரவையில் பதவி வகித்த பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரின் பதவிகளும் பறிக்கப்பட்டன நீதி மன்றத்தின் கடுமையான விமர்சனம்,  எச்சரிக்கை ஆகியவற்றை அடுத்து தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை எடுக்கும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார்.

இந்து மதத்தையும் பெண்களையும்  அமைச்சர் பொன்முடி வசைபாடியதால் இந்துக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . ஆகவே பொன்முடியின் பதவி நீக்கம் இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

***

பாரதத்தின் கலாச்சார பெருமை  பற்றி நடிகர் ரஜினிகாந்த்

இன்றைய இளைஞர்கள் நாட்டின் கலாச்சாரம், பெருமைகள் குறித்து தெரியாமல் இருக்கிறார்கள். நாட்டின் உன்னதமான கலாச்சாரத்தை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.

பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்..

லதா ரஜினிகாந்த்தின் ஃபீஸ் ஃபார் சில்ட்ரன் (peace for children) அமைப்பு சார்பில் ‘பாரத சேவா’ என்ற புதிய அமைப்பின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

இந்த திட்டத்தை ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காணொளி மூலம் பேசிய ரஜினிகாந்த்,

செல்போன் யுகத்தில் இளைஞர்கள், பெரியவர்கள் என சிலர் நம் பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமலேயே மேற்கத்திய கலாச்சாரம்நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறினார்.

ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றக் கூடிய மக்கள் அதில் நிம்மதி இல்லை என்று சொல்லி பாரதத்தின் கலாச்சாரத்தை பின்பற்றிக் கொண்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த்

தெரிவித்தார்.

****

கேதார்நாத்பத்ரி நாத்  கோவில்கள் திறப்பு

இமயமலை மீதுள்ள கேதார்நாத்  , பத்ரி நாத் ஆகிய  இரண்டு புனிதத்தலங்களும் பக்தர்களுக்குத் திறந்துவிடப்பட்டன. இவை இரண்டும் ஆறு மதங்களுக்குத் திறக்கப்பட்டிருக்கும்; பின்னர் பனி பெய்வதால் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும்

கேதார்நாத் சிவன் கோவில் மே மாதம் 2-ம் தேதி திறக்கப்பட்டது ; பத்ரிநாத் விஷ்ணு கோவில் இன்று திறக்கப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள் உள்ளன .

கேதார்நாத் கோவில் சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும் ; இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோவிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது.

பத்ரிநாத் அல்லது பத்ரிநாராயணா கோவில் என்று அழைக்கப்படும் கோவிவில் விஷ்ணு பிரதான கடவுளாகும். வைணவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இந்தக் கோவிலும் ஒன்றாகும்.

இவை இரண்டும் சார்தாம் எனப்படும் நான்கு புனித தலங்களுள் இரண்டாகும் .  ஏனைய இரண்டு கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகும் ; ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்க்தர்கள் நான்கு தலங்களையும் ஒரே பயணத்தில் தரிசிப்பது வழக்கமாக இருக்கிறது 

****

அடுத்ததாக  அட்சய திருதியை செய்திகள்

ஒரே பந்தலில் எழுந்தருளி அருள்பாலித்த 12 பெருமாள்கள்!

அட்சய திருதியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் 12 பெருமாளின் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பகோணம் நகரைச் சுற்றிலும் 12 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. அட்சய திருதியையொட்டி 12 கோயில்களிலிருந்தும் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்றனர்.


தொடர்ந்து டி.எஸ்.ஆர்.பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பந்தலில் 12 பெருமாள்களும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை!

அட்சய திருதியை ஒட்டி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்து இந்திய நகைக் கடை உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அக்ஷய என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு அழியாதது என்று பொருள்அந்த தினத்தில் எதைச்  செய்தாலும் .எதை  வாங்கினாலும் அதாற்கு அழிவு கிடையாது என்பது இந்துக்களின் நம்பிக்கை.

தங்கத்தின் விலை அதிகரித்துக்  காணப்படும்  நிலையிலும், அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை அதிகரித்தே காணப்பட்டது.

கடந்த ஆண்டு அட்சய திருதியையை ஒட்டி 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 20 டன் எடையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டோ இந்திய அளவில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சென்னையில் காலை 6 முதல் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நகை விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

****

மங்களூரு ஹிந்து ஊழியர் படுகொலை ; விஸ்வ ஹிந்து பரிஷத் பந்த் அறிவிப்பு

மங்களூருவில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஊழியர்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தட்சிண கன்னட மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், மங்களூரு அருகே ஹிந்து அமைப்பை சேர்ந்த சுஹாஸ்செட்டி என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். பஜ்பே பகுதியில் சென்றபோது மர்ம நபர்கள்  , அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியாது.  படுகொலை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

சுஹாஸ்செட்டி படுகொலையைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்தது.

தட்சிண கன்னட மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் மங்களூரு நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

பெங்களூருவில் இருந்து வந்த நான்கு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் கேஎஸ்ஆர்டிசி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

****

கோவிலை மறைத்து தி மு க BANNER பேனர் ; பக்தர்கள் கடும் அதிர்ச்சி

வேலூரில் கோவில் வழியை மறைத்து கட்சி விளம்பர பேனர் வைத்துள்ள திமுக-வினரால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் கஷ்டத்துக்குள்ளானார்கள். 

காட்பாடி அருகேயுள்ள காங்கேய நல்லூர் கிராமத்தில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

அங்குள்ள கிருபானந்தவாரியார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் இந்த விநாயகர் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்

அந்த கோவிலின் வழியை மறைத்து திமுக விளம்பர பேனரை வைத்த திமுக-வினர், அதன் அருகேயே தண்ணீர்ப் பந்தலும் அமைத்துள்ளனர்.

இதனால் கோவிலுக்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளான பக்தர்கள், திமுக-வினர் இந்துக்களை அவமதிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருவதாகக் குற்றச்சாட்டினர்.

****

மதுரையில் சித்திரைத் திருவிழா

நூறு உலக அதிசயங்களில் ஒன்று மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகும் . அங்கு நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. மீனாட்சி கல்யாணம், பின்னர் நடக்கும் தேர்த்திருவிழா,. அழகர்கோவிலில் இருந்து 13 மைல் நடந்து வரும் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியன விழாவின் முக்கிய நாட்கள் ஆகும் ; இந்த விழாவில் மதுரை பெருமாள் கோவில் விஷ்ணு, திருப்பரங்குன்றம் முருகன் ஆகியோரும் பவனி வருவார்கள் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் சமய ஒற்றுமையை வளர்ப்பதற்காக மாமன்னர் திருமலை நாயக்கர் பல விழாக்களை இணைத்து  இந்த பெரிய விழாவினை உருவாக்கினார்

லட்சக் கணக்கான மக்களை ஈர்க்கும் இந்த சித்திரைத் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கிவிட்டது.

மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 8-ம் தேதி காலை  நடக்கிறது. அன்றிரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் பவனி வருவார்.

மே 9 ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெறும்;

அழகர்கோவில் மலையில் இருந்து மே 10ம் தேதி கள்ளழகர், மதுரைக்கு புறப்படுகிறார். மே 12-ம் தேதி காலை அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் விழா நடக்கிறது.

****

ராமர் பாலத்தில் 1 கி.மீ., ‘வாக்கிங்’: கப்பல் நிறுவனம் சுற்றுலா ஏற்பாடு!

ராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என, நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கும், ‘சுபம்’ என்ற தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறினார்.

நாகை-யில் இருந்து காங்கேசன் துறைமுகம் வரை, பிப்., 22 முதல் செவ்வாய்கிழமை தவிர்த்து, வாரம் ஆறு நாட்கள் பயணியர் கப்பல் இயக்கப்படுகிறது.

இருவழி கட்டணம், தற்போது 8,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பயணியரை மேலும் ஊக்குவிக்க, புதிய பேக்கேஜ் அறிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஐந்து இரவுகள், ஆறு நாட்கள் தங்குவதோடு, உணவு, தங்குமிடம், வாகனம் உட்பட ஒரு நபருக்கு 30,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக ராமர் பாலத்தில் ஒரு மணி நேரம் நடந்து செல்லலாம். ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்களை பார்வையிடும், கலாசார, ஆன்மிக சுற்றுலாவாக இது இருக்கும்.

நாகையில் இருந்து காங்கேசன் துறையை அடைந்து, அங்கிருந்து சீதாவனம், சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வாடிகா, ராவணன் குகைகள், பழங்கால பிரசித்தி பெற்ற கோவில்கள், புராண இடங்கள் மற்றும் ராமர் பாலத்தை பார்வையிடும் வகையில் சுற்றுலா அமையும்.

ஜூன் 1 முதல், 250 பேர் பயணிக்கும் வகையில், புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது. கப்பல், மூன்று மணி நேரத்தில் காங்கேசன் துறையை சென்றடையும்.

*****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து  வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு

மே மாதம் 11 ஆம் தேதி

லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்

வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, Hindu news, 4th May 2025, Vaishnavi Anand, broadcast

ஆலயம் அறிவோம்! திருக்கோகர்ணம் (Post No.14,474)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 474

Date uploaded in London –5 May 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

4-5-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பட்ட உரை

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.



பொற்கிரி வில்லியின் மெய்யொரு பாதி
      
பொருந்திய மெய்யுருவே
புண்ணிய அன்பர்தம் நெஞ்சக மாமலர்
      
பொழியு மதுத்தெளிவே
கற்குடி மங்கையர் வேண்டிய வாழ்வுகள்
      
நல்கு திருக்கவுரீ
காவலர் நாவினும் நெஞ்சினும் நின்று
      
நலந்திகழ் சேயொளியே
கற்பக நாடியர் உள்ள நிறைந்தருள்
      
கருணையின் வாரிதியே
கரிமுகன் வேலவன் எனும் இரு மதலையர்
      
கனிவொடு தழுவனையே
சிற்பரை கோகன சங்கரன் அம்பிகை
      
செங்கோ செங்கீரை
தென்தமிழ் நாடுடையாய் பெரு நாயகி
      
செங்கோ செங்கீரை.      

–    கவிராஜபண்டிதர் கனகராஜையர் புகழ் ஓங்குக!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோகர்ணத் திருத்தலமாகும்

இது புதுக்கோட்டையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

மூலவர் : திருக்கோகர்ணேஸ்வரர்

இறைவி : பிரகதாம்பாள்

தல விருட்சம் : மகிழ மரம்

தீர்த்தம் : கபில தீர்த்தம்

இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகளும் சரித்திர சம்பவங்களும் உண்டு.

ஒருமுறை இந்திரனால் சாபம் பெற்ற காமதேனு தன் சாபம் நீங்குவதற்காக கபில முனிவரின் உபதேசப்படி இத்தலத்தில் உள்ள சிவபிரானுக்கு தினமும் தன் காதுகளில் கங்கை நீரை நிரப்பி வந்து அபிஷேகம் செய்து வந்தது.

கோ என்றால் பசு. கர்ணம் என்றால் காது.

பசுவானது காதுகளில் கங்கை நீரைக் கொண்டு வந்ததால் இந்தத் தலம் திருக் கோகர்ணம் என்ற பெயரைப் பெற்றது.

ஒரு நாள் காமதேனுவை வழிமறித்து புலி ஒன்று அதைக் கொல்ல முயன்றது. காமதேனுவோ தான் சிவ வழிபாட்டிற்காகச் செல்வதாகவும் வழிபாட்டை முடித்து விட்டுத் தானே வந்து இரையாவதாகவும் புலியிடம் உறுதி கூறியது. தான் கூறிய படியே காமதேனு, வழிபாட்டை முடித்து விட்டு புலியிடம் வந்து தன்னை இரையாக்கிக் கொள்ளலாம் என்று கூறியது,  காமதேனுவின் இறை வழிபாட்டை மெச்சி சிவபிரான் தானே நேரில் காட்சி அளித்தார்.

வேங்கையானது காமதேனுவை வழிமறித்த இடமே இன்று வேங்கைவாசல் என்று அழைக்கப்படுகிறது.

காமதேனு தன் கொம்பால் பாறையைக் கீறி ஏற்படுத்திய சுனையில் எப்போதும் நீர் வற்றாமல் இருக்கிறது. இதுவே இன்றும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தத் தலத்திற்கு கபில வனம்,மற்றும் வகுளாரண்ய க்ஷேத்திரம் என்ற பெயர்களும் உண்டு. வகுளாரண்யம் என்றால் மகிழ வனம் என்று பொருள்.

கோவில் தெற்கு நோக்கி இருக்கிறது. சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. மலையைக் குடைந்து உருவாக்கிய ஒரு குகையில் கோகர்ணேஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

இங்குள்ள ஏழடி உயரமுள்ள கங்காதரர் சிலை அழகுற அமைந்துள்ள ஒன்றாகும்.

இங்கு அறுகோண சுக்கிர வார மண்டபமும் அதில் 12 ராசிகளின் வடிவமைப்பும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள அம்மனே தொண்டை மன்னர்களின் குலதெய்வமாகும். அம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ள மண்டபமும், சாலையிலிருந்து கோவிலுக்குள் செல்லும் நீண்ட பிரகாரமும் மதுரை நாயக்கர் பாணியில் அமைக்கப்பட்டவை. வெளி பிரகாரத்தின் தூணில் மன்மதன்,ராவணன் உள்ளிட்டோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தின் மேற்கூரையில் ராமாயணக்காட்சிகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.

மகிழவனேஸ்வரர், மங்களநாயகி, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனி சந்நிதிகள் இங்கு உண்டு. நவகிரகங்களின் விக்ரஹங்கள் இங்கு இல்லை. மாறாக சூரியன் சந்திரன் சிலைகள் மட்டுமே இங்கு உள்ளன.

கோவிலின் மேற்குப் பகுதியில் சுப்ரமண்யர், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, பிரம்மா,பைரவர் ஆகியொருக்கு சந்நிதிகள் உள்ளன.

இங்குள்ள ஜுரேஸ்வரர் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று முகங்களுடன் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் எந்த வியாதியானாலும் குணமாகும் என்பதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வழிபடுவது வழக்கம்.

பிரகதாம்பாள் சந்நிதியில் அணையா விளக்கு ஒன்று எப்போதும் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கும் இதைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

1912ம் ஆண்டு புதுக்கோட்டையை ஆட்சி செய்து வந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஒரு முறை கடற்பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது திடீரென கப்பலின் ஒரு பகுதி தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அப்போது உறக்கத்தில் ஆழ்ந்திருந்த மன்னரை சிறு பெண்ணொருத்தி எழுப்பி கப்பல் தீப்பற்றி எரிகிறது என்று கூறி அவரைக் காப்பாற்றினாள். தூக்கத்திலிருந்து தன்னை எழுப்பிக் காப்பாற்றியது தனது குலதெய்வமான பிரகதாம்பாளே என்று உணர்ந்த மன்னர் நன்றி தெரிவிக்கும் விதமாக அம்மன் சந்நிதியில் இந்த அணையா விளக்கை ஏற்றி தொடர்ந்து இது எரிந்து கொண்டிருக்குமாறு செய்தார். இந்த விளக்கில் 1912 ஶ்ரீ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. 

புதுக்கோட்டை அம்மன் காசுக்குப் பெயர் பெற்ற ஊர். 1738ம் ஆண்டு வாக்கில் அச்சிடப்பட்ட இந்த அம்மன் காசுகள் 1948ம் ஆண்டு வரை  பிரபலமாக புழக்கத்தில் இருந்தன. இந்தக் காசின் ஒரு புறம் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால் இது அம்மன் காசு என்ற பெயரைப் பெற்றது. காசின் இன்னொரு பக்கத்தில் விஜய என்று தெலுங்கு மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும்.

விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயர் இத்தலத்திற்கு வந்து பிரகதாம்பாளை வணங்கி ஏராளமான நகைகளை அம்மனுக்குக் காணிக்கையாக அளித்திருக்கிறார். 

இங்கு அவதரித்த சதாசிவபிரம்மேந்திரர் பற்றிய ஏராளமான சுவையான செய்திகள் உண்டு. இவரை 1730 முதல் 1769 வரை தொண்டை மண்டலத்தை ஆண்டை விஜயரகுநாத தொண்டைமான்,

தான் பட்டத்திற்கு வந்த எட்டாம் ஆண்டு ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரைத் தனது குருவாக வரித்துக் கொண்டான். புதுக்கோட்டை மன்னருக்கு சதாசிவ பிரம்மேந்திராள் தட்சிணாமூர்த்தி மந்திரத்தை மணலில் எழுதிக் காட்டினார். இது இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் பாதுகாக்கப்படு வருகிறது. உரிய பூஜைகளும் நடத்தப்படுகிறது. அவரது கட்டளைப்படியே கோபாலகிருஷ்ண சாஸ்திரிகள் என்பவரைத் தனது அரசவை குருவாக மன்னன் ஏற்றுக் கொண்டான். இவரால் தசரா விழா புதுக்கோட்டையில் விமரிசையாகக் கொண்டாடும் பழக்கம் ஆரம்பமானது.

சதாசிவபிரம்மேந்திராளின் உருவம் சுக்ர வார மண்டபத்தில் தூண் ஒன்றில் செதுக்கப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை சமஸ்தானம் கவிராஜபண்டிதர் நா.கனகராஜையர் அவர்கள் ‘திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை இயற்றி பிரகதாம்பாளைப் போற்றித் துதிக்கிறார்.

காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னை பிரகதாம்பாளும் திருக்கோகர்ணேஸ்வரரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

**

S Nagarajan Article Index for April 2025 (Post No.14,473)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,473

Date uploaded in London – –5 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Article Index April 2025

1-4-25 14333 சமர்த்த ராமதாஸர் – 1(ஞானமயம் 30-3-25 ஒளிபரப்பு உரை)

2-4-25 14336சமர்த்த ராமதாஸர் – 2 (ஞானமயம் 30-3-25 ஒளிபரப்பு உரை)

3-4-25 14339 S Nagarajan Article Index for March 2025 

4-4-25 14343 உலகின் அதிசய இடங்கள்! ரோஸ் ஐஸ் ஷெல்ப்! (Ross Ice

           Shelf) (Kalkionline 13-3-25 கட்டுரை)

5-4-25 14346 தூக்கம் – எவ்வளவு உங்களுக்குத் தேவை? Kalkionline 12-3-25

           கட்டுரை)

6-4-25 14350 ஹிந்து ராஷ்ட்ரம் ஒன்றே குழப்பங்கள் தீர ஒரே தீர்வு

           –  மகான்களின் தீர்மானம்!

7-4-25 14355. நூல் அறிமுகம் : இரு நூல்கள் கந்தபுராணம் அற்புதத்

             திருப்பாடல்கள்நால்வர் பாடிய நாதன்

              திருநாமார்ச்சனை

7-4-25 14357 ஆலயம் அறிவோம் – வடுவூர் கோதண்டராமர் கோவில்

             (ஞானமயம் 6-4-25 ஒளிபரப்பு உரை)

8-4-25 14361 ராம நாம மஹிமை – 1 (ஞானமயம் 6-4-25 உரை)

9-4-25 14365 ராம நாம மஹிமை – 2 (ஞானமயம் 6-4-25 உரை)

10-4-25 14369 கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள் – நூல்

           அறிமுகம்

11-4-25 14373 பாகிஸ்தானிய பத்திரிகையாளரின் வியப்பு! கும்பமேளா

              மனித குலத்தின் மிகப்பெரிய கூட்டம்! (15-3-25 Kalkionline

            கட்டுரை)

12-4-25 14377 27500 மகள்களுக்கு ஒரு அப்பா! 

13-4-25 14381இந்திய நாகரிகத்தில் வானவியல் கண்ட உச்சம்!          

                           (17-3-25 Kalkionline கட்டுரை)

14-4-25 14385 ரமண மஹரிஷியின் முதல் மேலை நாட்டு பக்தர்! 

14-4-25 14386 ஆலயம் அறிவோம் : சேய்ஞலூர், திரு ஆப்பாடி தலங்கள்

            ஞானமயம் 13-4-25 உரை)

15-4-25 14391 பத்ராசல ராமதாஸர்! – 1 ( 13-4-25 ஞானமயம் உரை)

16-4-25 14396 பத்ராசல ராமதாஸர்! – 2 ( 13-4-25 ஞானமயம் உரை)

17-4-25 14399 சிவஞானபோதம் – மூலமும் உரையும் – நூலாசிரியர்

               சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம்

18-4-25 14403 உலகின் அதிசய இடங்கள்! – மெடியோரா ( MATEORA) –

            கிரீஸின் மலை அடர்ந்த காடு! (19-3-25 Kalkionline கட்டுரை)

19-4-25 14407 மாற்றி யோசித்தால்! (ள்) (ன்) 20-3-25 கல்கிஆன்லைன்

            சிறுகதை)

20-4-25 14411 சிலிர்க்க வைக்கும் ஶ்ரீ நகர் (மாலைமலர் 29-3-25 கட்டுரை)

21-4-25 14415 ஜெய் ஜெய்பூர் – 1 (மாலைமலர் 6-4-25 கட்டுரை)

21-4-25 14416 ஆலயம் அறிவோம்! – திருப்புறம்பயம் தலம் (ஞானமயம்

               20-4-25 ஒளிபரப்பு உரை)

22-4-25 14422 ஜெய் ஜெய்பூர் – 2 (மாலைமலர் 6-4-25 கட்டுரை)

23-4-25 14425 கந்தபுராணக் கட்டுரைகள் – பகுதி 1 – பதிப்பாசிரியர் சிவஶ்ரீ

            தில்லை s.கார்த்திகேயசிவம்

24-4-25 14429 கந்தபுராணத்தில் சிவபரத்துவம் – தொகுதி 1

            நூலாசிரியர் : சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் 

25-4-25 14433 நீடித்து வாழ சுவாச ரகசியம்! (21-3-25 கல்கிஆன்லைன்  

            கட்டுரை)

26-4-25 14436 கந்தபுராணத்தில் சிவபரத்துவம் – தொகுதி 2

            நூலாசிரியர் : சிவஶ்ரீ தில்லை s.கார்த்திகேயசிவம் 

27-4-25 14440   அதிகம் டிவி பார்ப்பதினால் ஏற்படும் 15 தீய விளைவுகள்! 

            (ஹெல்த்கேர் ஏப்ரல் 25 கட்டுரை)

28-4-25 14444   கேட்பது நாம். பதில் சொல்வது அறிஞர்கள் ( 22-3-25

            கல்கிஆன்லைன் கட்டுரை)

28-4-25 14445   ஆலயம் அறிவோம் சிம்மாசலம் வராக லட்சுமி நரசிம்மர்

           கோவில் (ஞானமயம் 27-4-25 ஒளிபரப்பு உரை)

29-4-25 14449 நிறைய விமான விபத்துக்கள்! விமானப் பயணம்

            மேற்கொள்வது அபாயமா? (25-3-25 கல்கிஆன்லைன்

                                 கட்டுரை                                                                                                                                            30–4-25 14453 துக்காராம் மஹராஜ்  1 (ஞானமயம் 27-4-25 ஒளிபரப்பு

             உரை)

**

Non -Vegetarians go to Hell says Tamil Poet Valluvar (Post.14,472)

Written by London Swaminathan

Post No. 14,472

Date uploaded in London –  4 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

If flesh you eat not, life’s abodes unharmed remain;
Who eats, hell swallows him, and renders not again– Kural 255

The spirit of not eating flesh keeps secure the precious like of a being. And the merciless flesh eater who stifles the life breath of an animal is for ever hurled into the very jaws of hell- Tirukkural 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு—255

Tirumular, a later poet also supports Valluvar

கொன்றிலாரை கொலச் சொல்லிகூறினார்

தின்றிலாரை தினச் சொலி தெண்டித்தார்

பன்றியாய் படியில்பிறந்து ஏழ் நரகு 

ஒன்றுவார் அரன் ஆணை! இது உண்மையே!

Those who ask others to kill animals (for meat)

Those who force others to eat meat

Will be born as pigs and suffer in seven types of hell

This is the order by Lord Siva! True indeed!

***

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை,

வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்,

செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை,

நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே  —திருமந்திரம் > முதல் தந்திரம் > 6 கொல்லாமை > பாடல்: 198

English translation of verse 198:

The men who shouted,”Kill and stab,”

Them with strong ropes Death’s ruffians bind;

And stationing them at the fire-gates of Hell,

The agents yell, “Stand, go; and in the fire pit roast.”

*****

Manu also says the same

वर्षे वर्षेऽश्वमेधेन यो यजेत शतं समाः ।
मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समम् ॥ 5-५३ ॥

varṣe varṣe’śvamedhena yo yajeta śataṃ samāḥ |
māṃsāni ca na khāded yastayoḥ puṇyaphalaṃ samam ||5- 53 Manu ||

If a man performs the Aśvamedha Sacrifice every year, for a hundred tears,—and another does not eat meat,—the merit and reward of both these are the same.—(5-53.) 

****

Who goes to Hell according to Arnagirinatha

ஓது வித்தவர் கூலிகொ டாதவர்

     மாத வர்க்கதி பாதக மானவர்

          ஊச லிற்கன லாயெரி காளையர் …… மறையோர்கள்

ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்

     ஆர்த னக்குமு தாசின தாரிகள்

          ஓடி யுத்தம ரூதிய நாடின …… ரிரவோருக்

கேது மித்தனை தானமி டாதவர்

     பூத லத்தினி லோரம தானவர்

          ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை …… யிகழ்வோர்கள்

ஏக சித்ததி யானமி லாதவர்

     மோக முற்றிடு போகித மூறினர்

          ஈன ரித்தனை பேர்களு மேழ்நர …… குழல்வாரே

 Meaning ………

Those who have not paid the fees to their teachers,

 those who do great harm to the venerable sages,

 those youngsters who burn themselves away with lust,

 those fools who are out to ravage the towns of practitioners of scriptures,

A those who are impertinent to everyone,

 those who rush to virtuous people to exploit them and gain unfairly,

those who do not give even a morsel of charity to seekers,

 those in this world who speak one-sidedly (with prejudice),

those who speak derisively of the worshippers of Lords SivA and VishNu,

 those who do not meditate single-mindedly,

 those who indulge in excessive passion and carnal pleasure,

 and all such dishonorable people will suffer, being tossed about in seven kinds of hell.

*****

Hell and Heaven figure prominently in Hindu mythology. We read about them in the oldest book in the world, the Rig Veda! There is not a single religious scripture without a reference to the hell. References to Hell are found in the Sangam Tamil literature and post Sangam Tamil book Tirukkural, the Tamil Veda.

Though later Hindu scriptures refer to various hells, only one hell is mentioned in the Rig Veda. It is a dark place; but no mention of torture or suffering is there. We read, “knowing he beholds all creatures; he hurls the hated and the irreligious into abyss” (RV 9-73)

In Manu Smrti, the Hindu Law Book, 21 hells are enumerated. Some of the name of the hells are: Darkness, Frightful, Burning, Place of Spikes, Frying Pan, Thorny Tree, Sword Leaved Forest and Place of Iron Fetters.

A liar would go to Raurava (dreadful) hell. He who kills a cow would go to the Rodha hell (hell of obstruction).

A horse stealer falls into the red hot iron hell. The wicked person who eats food before offering it to gods or ancestors or guests falls into where, instead of food, saliva is given to him. ( My comments: If people followed this rule and shared their food there woudn’t be any poverty, any beggar or communism in the world!).

Manu Smrti refers to hell in at least twenty places.

***

TREE CUTTING – A SIN!

He who cuts down trees goes to the Hell of Sword Leaved Trees. So much environmental awareness was there during Manu’s days! Manu has listed the hells to fit each crime perfectly. He is a great law maker.

Siva Purana gives a list of 28 types of hell. Each one has five levels!

Scriptures like Bhagavad Gita have lot of references and one of them is as follows:

The gateway of this HELL leading to the ruin of the soul is three fold, lust, anger and greed Therefore these three, one should abandon. The man who is released from these, the three gates to darkness, Arjuna, does what is good for his soul and then reaches the highest gate.

Bhagavad Gita (16-21) says,

The Triple Gate of Hell

trividham narakasyaedam

dvaram nasanam atmanah

kamah krodhas tatha lobhas

tasmad etat trayam tyajet

The gateway of this hell leading to the ruin of the soul is threefold, lust, anger and greed. Therefore, these three, one should abandon (BG 16-21)

****

HEAVEN & HELL

Heaven is not a distant world; it is here, in this world, for us to make good by work for universal welfare. Hell is not a distant world; it is here, in this world, if we do not make good by work for universal welfare.- Bhasa in his drama , Second Century BCE

****

HELL in Tamil Literature

Tamils have pure Tamil words for the hell, not Tamilized Sanskrit words. This shows that the belief was very old and independent of any Puranic influence. Alaru and Nirayam are found in Tirukkural (Tamil Veda) and Pura Nanuru (Sangam Tamil Book).

NIRAYAM (hell) – Aka Nanuru-67, Pura Nanuru -5

There are more references to Heaven in Tamil. They looked more at the positive side of the life.

From the Tamil Veda Tirukkural:

ALARU (hell):- Kural 255, 835 and 919

“Abstinence from meat-eating contributes to this maintenance of life. Therefore if  a man has once committed the sin of eating meat the HELL which swallowed him will not open its mouth again to release him _ Kural 255

The delicate shoulders of harlots with fine jewels are a HELL into which are plunged the ignorant vile- 919

Jeevaka Chintamani, one of the Five Tamil Epics, also has reference to hell in several places (E.g.1235).

In post Sangam literature we have a  lot of references to hell.

Tamil and Sanskrit inscriptions curse those who defile or harm the inscriptions or the things mentioned in it to go to hell.

It is very interesting to see the belief of sinners going to hell is found from the Rig Veda to latest poems in Tamil.

(Mr Rajendra Gupta has commented that NIRAYA for hell is a Sanskrit word. Thanks)

–Subham–

Tags- non vegetarians, hell, Tirukkural, Tirumular, Rig Veda, Manu Smriti, Arunagirinathar

Pictures of 2500 Indian Stamps!- Part 28 (Post No.14,471)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,471

Date uploaded in London – –4 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 28

Stamps posted today include

MAHABALIPURAM, GD BIRLA, WADIA, VINOBA BHAVE, FOUR FORTS OF INDIA, MRS INDIRA GANDHI, TWO ROSES, VARANASI, ROCKGARDEN, POSTAL INSURANCE, VISHNU SAHEB, KAKA KALELKAR, INDO-SOVIET JOINT FLIGHT, FERGUSON COLLEGE, JATINDRA MOHAN SENGUPTA, RAJENDRA PRASAD,PARADKAR, CHILDREN’S DAY,Olympics.

–Subham—

Tags Part 28, 2500 Indian Stamps, MAHABALIPURAM, GD BIRLA, WADIA, VINOBA BHAVE, FOUR FORTS OF INDIA, MRS INDIRA GANDHI, TWO ROSES, VARANASI, ROCKGARDEN, POSTAL INSURANCE, VISHNU SAHEB, KAKA KALELKAR, INDO-SOVIET JOINT FLIGHT, FERGUSON COLLEGE, JATINDRA MOHAN SENGUPTA, RAJENDRA PRASAD,PARADKAR, CHILDREN’S DAY,RAM NATH CHOPRA, jatindra mohan sengupta. 23rd Olynpics stamps.

நரகத்துக்குப் போவோர் யார்? யார் ? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-6 (Post No.14,470)

Written by London Swaminathan

Post No. 14,470

Date uploaded in London –  4 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 நரகத்துக்குப் போவோர் யார்? யார் ? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-6 (Post No.14,470)

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-6

நரகத்துக்குப் போவோர் பற்றி குருபாததாசர்

யார், யார் நரகத்துக்குப் போவார்கள் என்று மனு, திருமூலர், கம்பன், அருணகிரிநாதர் பாடி இருக்கிறார்கள். குமரேச சதகம் எழுதிய குருபததாசரும் இந்த விஷயத்தை விடவில்லை . அவரது பட்டியலில் மேலும் சில பாவிக்களும்  சேர்ந்துள்ளனர்

முதலில் பாடலை பார்ப்போம்

18. நரகில் வீழ்வோர்

மன்னரைச் சமரில்விட் டோடினவர், குருமொழி

     மறந்தவர், கொலைப்பாதகர்

மாதா பிதாவைநிந் தித்தவர்கள் பரதாரம்

     மருவித் திரிந்தபேர்கள்

அன்னம் கொடுத்தபே ருக்கழிவை யெண்ணினோர்

     அரசடக்கிய அமைச்சர்

ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர்

     அருந்தவர் தமைப்பழித்தோர்

முன்னுதவி யாய்ச்செய்த நன்றியை மறந்தவர்

     முகத்துதி வழக்குரைப்போர்

முற்றுசிவ பத்தரை நடுங்கச்சி னந்தவர்கள்

     முழுதும்பொய் உரைசொல்லுவோர்

மன்னொருவர் வைத்தபொருள் அபகரித்தோர் இவர்கள்

     மாநரகில் வீழ்வரன்றோ

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள்

அரசர்களைப் போரிலே கைவிட்டு ஓடிய கோழைகளும்,

குரு/ ஆசிரியர் ஆணையை மறந்தவர்களும்,

கொலை செய்த பாவிகளும், பெற்றோரைப் பழித்தவர்களும், அயலார் மனைவிகளைக் கலந்து திரிகின்றவர்களும், உணவளித்தவர்கட்குக் கெடுதி  நினைத்தவர்களும், அரசர்களை அழித்த மந்திரிகளும், இறைவர் திருக்கோயிலைப் பழித்தவர்களும்,  நட்பைக் கெடுத்தவர்களும், உயர்ந்த துறவிகளை இகழ்ந்தவர்களும்,

துன்பமுற்ற காலத்திலே துணைபுரிந்த நன்றியை மறந்து விட்டவர்களும்,  தம்மைப் புகழ்ந்து கூறுவோர் சார்பாக (ஓரவஞ்சகமாக) வழக்குக் கூறுகின்றவர்களும், முதிர்ந்த

சிவனாடியவரை மனம் கலங்கக் கோபித்தவர்களும்

முழுப்பொய் கூறுவோர்களும், (தம்மிடம்) நிலையாக ஒருவர் வைத்த பொருளைக் கவர்ந்தவர்களும், ஆகிய இவர்கள்

கொடிய நரகில் வீழ்வார்கள் அல்லவா?

இவற்றில் பெரும்பாலானவற்றை முன்காலத்தில் வள்ளுவர், திருமூலர், மனு ஆகியோரும் செப்பியுள்ளனர்

***

மாமிசம் தின்போர் நரகத்துக்குப் போவார்கள்-   திருமூலர் எச்சரிக்கை

இதோ அந்தப் பாடல்

கொன்றிலாரை கொலச் சொல்லிகூறினார்

தின்றிலாரை தினச் சொலி தெண்டித்தார்

பன்றியாய் படியில்பிறந்து ஏழ் நரகு 

ஒன்றுவார் அரன் ஆணை! இது உண்மையே!

Those who ask others to kill animals (for meat)

Those who force others to eat meat

Will be born as pigs and suffer in seven types of hell

This is the order by Lord Siva! True indeed!

***

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை,

வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்,

செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை,

நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே  —திருமந்திரம் > முதல் தந்திரம் > 6 கொல்லாமை > பாடல்: 198

English translation of verse 198:

The men who shouted,”Kill and stab,”

Them with strong ropes Death’s ruffians bind;

And stationing them at the fire-gates of Hell,

The agents yell, “Stand, go; and in the fire pit roast.”

xxxx

மாமிசம் தின்பவன் நரகத்துக்குப் போவான் என்பதை வள்ளுவரும் அடித்துக் கூறுகிறார்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.–255

If flesh you eat not, life’s abodes unharmed remain;

Who eats, hell swallows him, and renders not again.-255

xxxx

இதோ வள்ளுவர் கிண்டல் !

வள்ளுவர் புத்த மதத்தினரைக் கிண்டல் செய்கிறார் ; ஏனெனில் அவர் தீவிர ஹிந்து; பெளத்தர்கள் மற்றவர்கள் அடித்துக்கொன்று கொடுத்தால் சாப்பிடுவார்கள் ; இலங்கையில் புத்த குருமார்கள் இதற்காகவே சாலை  ஓரங்களில் காத்து நிற்பார்களாம்; மஹா பாவிகள் !

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

‘We eat the slain,’ you say, by us no living creatures die;

Who’d kill and sell, I pray, if none came there the flesh to buy?

நான் ஹாங்காங் சென்ற பொழுது பய பக்தியுடன் புத்தர் கோவிலுக்குப் போனால், எல்லோரும் பன்றிக்குட்டியைத் தோலுரித்து பாலிதீன் கவர்களில் போட்டுக்கொண்டு வந்து படையல் செய்ததைப் பார்த்து திகைத்து நின்றேன் ; புத்தர் மட்டும் உயிரோடு இருந்தால் 100 முறை தற்கொலை செய்துகொள்வார்.

 xxxx

நூறு அஸ்வமேதம் செய்யும் பலன் , மாமிசம் தின்னாத புண்ணியவானுக்குக் கிடைக்கும் என்று மனுவும் (5-53) செப்புகிறார்

வர்ஷே வர்ஷே அஸ்வமேதேன யோ யஜேத சதம் சமாஹா

மாம்சானி ச ந காதேத் யஸ்தயோஹோ புண்யபலம் சமம் –மனு –5-53

वर्षे वर्षेऽश्वमेधेन यो यजेत शतं समाः ।
मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समम् ॥ 5-५३ ॥

varṣe varṣe’śvamedhena yo yajeta śataṃ samāḥ |
māṃsāni ca na khāded yastayoḥ puṇyaphalaṃ samam ||5- 53 Manu ||

If a man performs the Aśvamedha Sacrifice every year, for a hundred tears,—and another does not eat meat,—the merit and reward of both these are the same.—(5-53.) 

xxxx

அருணகிரிநாதர்:  தரும்  பட்டியல்

யார், யார் நரகத்துக்குப் போவார்கள் என்று ஒரு சுவயான பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்: 

ஓதுவித்தவர் கூலிகொடாதவர்

மாதவர்க்கு அதிபாதகமானவர்

ஊசலில் கனலாய் எரி காளையர்         மறையோர்கள்

ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்

ஆர்தனக்கும் உதாசினதாரிகள்

ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு

ஏதும் இத்தனை தானம் இடாதவர்

பூதலத்தினில் ஓரமதானவர்

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்

ஏகசித்த தியானமிலாதவர்

மோகமுற்றிடு போகிதம் ஊறினர்

ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே

பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் க்உம்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.

****

இதோ கம்பன் தரும்  பட்டியல் :-

உய்ய,’நிற்கு அபயம்’என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்

கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்து இலானும்,

மை உறு நெறியின் நோக்கி மாமறை வழக்கில் நின்ற

மெய்யினைப் பொய் என்றானும்மீள்கிலா நரகின் வீழ்வார்.         6.4.115

பொருள்

நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன்   என்று   வந்த  ஒருவனுடைய உயிரினைத்   தன்னுயிராகக் கருதிப்   பேணிக் காப்பாற்றாத   கீழ்மகனும், நன்றி மறந்தவனும்,   சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும்   உண்மை   நெறியைப்  பொய் என்று கூறுபவனும்; மீண்டு  வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவர்.

xxx

விவேக சிந்தாமணி தரும்  பட்டியல்

விவேக சிந்தாமணி எழுதிய ,பெயர் தெரியாத ஆசிரியர்,  வேறு ஒரு பட்டியலை நம் முன் சமப்பிக்கிறார்

தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்,

அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,

சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்,

செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.

பொருள்

தந்தை சொல் மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து பின்பற்றாது இருப்பவன், அழிவில்லாத மெய்ஞான குருவின் உபதேசத்தை மறந்தவன், வேதநெறிப்படியான வாழ்க்கையிலிருந்து விலகியவன் ஆகிய நால்வரும் நரகத்தின் வாயிலில் சென்று சேர்வது உண்மை (நிச்சயம்).

xxxx

மனு நீதி நூல் தரும் பட்டியல்

யார் ஒருவன் அனுமதியில்லாமல் வேதத்தைக் கற்கிறானோ அவன் வேதத்தைத் திருடியவன் ஆவான்; அவன் நரகத்துக்குப் போவான் -2-116

அண்ணனுக்கு முன்னர் திருமணம்  செய்துகொள்ளும் தம்பி, அதை அனுமதித்த அண்ணன், அவர்களுக்குப் பெண் கொடுத்தவர்கள், அந்தத் திருமணத்தை நடத்திவைத்த புரோகிதர் ஆகிய ஐவரும் நரகில் வீழ்வார்கள் –மனு நீதி நூல் மூன்றாவது அத்தியாயம்-172

சிரார்த்தத்தில் புசித்து மீதியுள்ள அன்னத்தைக் கீழ்ஜாதிக்காரர்களுக்குக் கொடுத்தால் அந்த மூடன் கால சூத்ரம் என்னும் நரகத்தில் வீழ்வான் – 3-149

பிராமணர்கள், கீழ்ஜாதிக்காரர்களுக்கு நேரடியாக தருமதத்தை உபதேசிக்கக்கூடாது (வேறு ஒருவரைக் கொண்டு சொல்லித்தரலாம்) இதை மீறி தருமங்களையும் விரதங்களையும் உபதேசித்தால் இருவரும் அசம்விருதம் என்னும் நரகத்தில் வீழ்வார்கள் 4-81

ஸ்லோகங்கள் 4-87 முதல் நான்கு ஸ்லோகங்களில் 21 வகை நரகங்கள் பற்றி மநு எச்சரிக்கிறார்; ஒரு பேராசையுள்ள , சாஸ்திர விரோதமான அரசனிடமிருந்து, ஆட்சியாளரிடமிருந்து பரிசுகளைப் பெறும் பிராஹ்மணன் 21 வகை நரகங்களுக்குச் செல்வான் என்று மநு நீதி நூல் எச்சரிக்கிறது.

நரகங்களின் பெயர்கள் –தாமிஸ்ரம், அந்த தாமிஸ்ரம், மஹாரௌரவம் ,ரௌரவம், காலசூத்ரம், நரகம், மஹா நரகம், சஞ்ஜீவனம்,  தபனம் , மஹாவீசி,  சப் பிரதாபனம், சங்காதம், க்கோலம், குட்மலம்,  பிரதிமூர்த்திகம், லோஹங்கு, ருஜிஷம், பந்தானம், ஷால்மலீணாதி, அசிபத்ர வனம், லோகாதாரகம் ஆகிய நரகங்களில் வீழ்வார்கள் 4-87 TO 4-90

இந்த 21 வகை நரகங்களின் ஸம்ஸ்க்ருத அர்த்தத்தைப் பார்த்தால் விநோதமாக இருக்கும். ஏன் இப்படியெல்லாம் பெயர்கள் இடப்பட்டன என்பது நூல்களிலிலிருந்து ஆழமாக ஆராயப்பட வேண்டியவை. மநு தர்ம நூலுக்குப் பல உரைகள் இருப்பதால் அவைகளில் விளக்கம் கிடைக்கும்.

நரகங்களின் சம்ஸ்க்ருதப் பெயர்களின் மொழி பெயர்ப்பு:-

இருள், குருட்டு இருள், பெரிய புள்ளி மான், மான், காலம் என்னும் நூல் இழை, பெரிய நரகம், மீண்டும் உயிர்கொடுத்தல், அடித்துக்கொண்டு போதல், எரிச்சல், பெரிய எரிச்சல், நசுக்குதல், அண்டங்காக்கை இடம்,  மொட்டு போல மூடுதல், நாற்ற பூமி, இரும்பு முட்கள், கசடு, விரட்டி அடித்தல், முள் ஆறு, வாள் இலை மரக் காடு, இரும்பை வைத்து வெட்டும் நரகம்.

அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் என்சைக்ளோபீடியா நரகங்கள் பற்றிய விஷயத்தை விவரமாகச் சொல்கிறது:

பல புராணங்கள் 21 அல்லது 28 நரகங்களின் பெயர்களையும் அதில் என்ன என்ன பாவம் செய்தோர் புகுவர் என்றும் விவரங்கள் உள்ளன.

****

ஒரு பிராம்மணனைக் கொல்ல இன்னொரு பிராமணன் ஆயுதம் எடுத்தால் அவன் தாமிஸ்ரம் (முழு இருட்டு) என்ற நரகத்தில் விழுவான் 4-165

கொக்கு போலவும் , (ருத்திராட்ச) பூனை போலவும் கபட வேஷம் போடும் பிராமணன் அந்த தாமிஸ்ரம் என்னும் கடும் இருட்டு நரகத்துக்குப் போவான் (கொக்கு, பூனை கதைகள் பஞ்ச தந்திரக்கதைகளில் உள்ளது ) 4-197

எவன் பூஜை செய்து தானம் அளி க்கிறானோ எவன் பூஜை செய்து தானம் பெறுகிறானோ அவர்கள் இருவரும் சொர்கத்துக்குப் போவார்கள்; இவ்வாறு பூஜா பூர்வமாகக் கொடுக்காதவனும் தானம் வாங்கியவனும் நரகத்துக்குப் போவார்கள்  4-235

கடந்த காலத்தில் ஒருவன் செய்த வினைகள் எப்படி ஒருவனை நரகத்துக்கு இட்டுச் செல்லும்? அங்கே எப்படி யமன் சித்திரவதை செய்வான்? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் 6-61

நீதிமன்றத்தில் பொய் சாட்சி  சொல்பவன்  நரகத்தை அடைவான் 8-75

நியாயமற்ற தண்டனைகளைக் கொடுக்கும் மன்னன் சொர்க்கத்துக்குப் போகமாட்டான் 8-127

ஒரு மன்னன், மக்களுக்குப் பாதுகாப்பு வழங்காமல் வரி வசூலித்தாலோ , அபராதம் விதித்தாலோ நரகத்தை அடைவான் 8-307

துன்பப்படும் மக்கள் மன்னனை குறைகூறினால் அவன் பொறுத்துக்கொள்ள வேண்டும்; அப்போது அவனுக்குச் சுவர்க்கம் கிட்டும்;  பொறுத்துக்கொள்ளாவிடில் நரகம் கிட்டும் 8-313

ஆண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் தந்தையை (இறந்த பின்னால்) புத் என்னும் நரகத்திலிருந்து விடுவிப்பதனால் அவனை புத்ரன் என்கிறோம் 9-138

முறையான பயிற்சி பெற்ற புரோகிதன், யாகக் கிரியைகளைச் செய்யவேண்டும் . அவர் வேதத்தில் கரைகண்டவராகவும் முத்தீ பேணுபவராகவும் இல்லாவிடில் நரகமே கிட்டும் 11-37

ஒரு பிராமணனை ஒருவன் மிரட்டினால் அவன் நூறு ஆண்டுகள் நரகத்தில் கிடப்பான்; அடித்தாலோ ஆயிரம் ஆண்டுகள் நரகத்தில் கிடப்பான் 11-207

ரத்தம் சொட்ட வைத்தால் அத்தனை துளிகளுக்கு ஏற்ப பல்லாயிரம் ஆண்டுகள்  நரகத்தில் கிடப்பான் 11-208

பன்னிரெண்டாவது — கடைசி- அத்தியாயத்தில் — தீய வினைகள் புரிந்தார் யமலோகத்தில் துன்பம் அடைவதை விவரிக்கிறது  அங்கு தீயவன் மேலும் ஒரு உடலைப் பெறுவான் ; தீய செயல்களுக்கான தண்டனை  முடிந்தவுடன் அந்த உடல் பஞ்ச பூதங்களில் கரைந்து விடும்12- 16/22

மாபாதகம் செயதோர் நீண்டகாலம் பயங்கர நரகங்களில் உழல்வார்கள் (தீவினைர்களுக்கேற்ப என்னென்ன மிருகங்களாகப் பிறப்பார்கள் என்பதை அடுத்துவரும் ஸ்லோகங்களில் மனு விவரிக்கிறார் ) 12-54

காம சம்பந்தமான பாவங்களைச்  செய்வோர் தாமிஸ்ரம், அசிபத்ரம் என்னும் நரகங்களில் வெட்டப்பட்டும், கட்டப்பட்டும் சித்ரவதைகளை அனுபவிப்பார்கள் -12-75

—SUBHAM—

Tags- குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-6,  நரகத்துக்குப் போவோர், வள்ளுவர், மனு, திருமூலர், அருணகிரிநாதர் , நரகம், குருபாததாசர் , கம்பன்