GOOD CARTOONS 1962025; POSTED BY LONDON SWAMINATHAN ON 19 JUNE 2025
METRO, LONDON CARTOON

FOLLOWING TWO ARE FROM DECCAN CHRONICLE.


–SUBHAM-
TAGS–CARTOONS, 19625
GOOD CARTOONS 1962025; POSTED BY LONDON SWAMINATHAN ON 19 JUNE 2025
METRO, LONDON CARTOON

FOLLOWING TWO ARE FROM DECCAN CHRONICLE.


–SUBHAM-
TAGS–CARTOONS, 19625
Posted by Tamil and Vedas on June 19, 2025
https://tamilandvedas.com/2025/06/19/good-cartoons-1962025/
LONDON METRO NEWPAPER DATED JUNE 17,2025
POSTED BY LONDON SWAMINATHAN ON 19-6-25
BULLET POINTS
#
பதினெட்டு அடி நீள மலைப் பாம்பு இங்கிலாந்தில் லின்கன் ஸைர் வட்டாரத்தில் ஒரு சர்ச்சுக்கு வெளியே காணப்பட்டது . பாம்புகளை மீட்கும் ஏஜென்சிக்குப் பொது மக்கள் போன் செய்தவுடன் அவர்கள் வந்த போது மேலும் மூன்று மலைப்பாம்புகள் மீட்கப்பட்டன.
இவை தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் வகை ; விஷம் கிடையாது ஆனால் யானை முதல் மனிதர் வரை எவரையும் நசுக்கி எலும்புகளை நொறுக்கிக்கொல்லும் அசுர பலம் கொண்டவை.
சங்க இலக்கியத்தில் மலைப்பாம்பு கொன்ற யானை வருணனைகள் உள்ளன. இது பற்றி எனது கட்டுரைகள் இதே பிளாக்கில் உள்ளன
மேலை நாடுகளில் விஷ ஜந்துக்களை வளர்த்து வேண்டாதபோது தெருக்களில் விடும் அயோக்கியர்கள் அதிகம் . ஓநாய் போன்ற நாய்களும் மலைப்பாம்புகளும் மனிதர்களைக்கொல்லும் செய்திகள் மேலை நாடுகளில் அதிகம்.
நேற்றுவரை வளர்த்துக் கொஞ்சிய கோழிகளையும் ஆடுகளையும் மாடுகளையும் வெட்டிக்கொன்று சாப்பிடுபவோரை வள்ளுவரும் கண்டிக்கிறார் ; இதுகள் மேலை நாடுகளில் மிக மிக அதிகம் . நாய்களையும் பூனைகளையும் வளர்த்துவிட்டு அவைகளைக் கருணைக்கொலை செய்யும் ஈவு இரக்கமற்ற படு பாவிகள் மேலை நாடுகளில் அதிகம் .
BULLET POINTS
AN 18 FEET LONG PYTHON WAS FOUND LEFT IN ENGLAND IN BRITAIN.
IT FOUND WITH TWO OTHER PYTHONS.
14 FT, AND 11 FT.
ONE MORE WAS FOUNND AT A DISTANCE. THE 18 FT PYTHON WAS FOUND OUT SIDE A CHURCH. PUBLIC INFORMED ANIMAL WELFARE AGENCIES
THEY ARE RETICULATED PYTHONS FOUND IN SOUTH EAST ASIA.
IN WESTERN COUNTRIES BAD AND IRRESPONSIBLE PEOPLE RAISE VARIOUS DANGEROUS AND POISONOUS ANIMALS AND ABANDON THEM WHEN THEY DONT WANT THEM.
THEY KILL DOGS AND CATS ALSO WHICH WERE PETS UNTIL THE DAY BEFORE.
PYTHONS ARE NOT POISONOUS, BUT THEY SQUEEZE AND KILL HUMAN BEINGS AND ANIMALS AS AS BIG AS ELEPHANTS. IT IS REPORTED IN 2000 YEAR OLD SANGAM TAMIL LITERATURE.
—SUBHAM–
#TAGS- FOUR PYTHONS, RESCUED, LINCOLNSHIRE, ENGLAND, மலைப் பாம்பு
Posted by Tamil and Vedas on June 19, 2025
https://tamilandvedas.com/2025/06/19/four-pythons-in-the-street-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/
கடலுக்கடியில் பிரம்மாண்டமான கணவாய்கள் வசிக்கின்றன இவைகளை ஆங்கிலத்தில் ஸ்க்குவிட் என்று சொல்லுவார்கள் முதல் தடவையாக ஒரு குட்டி கணவாயைப் படம் பிடித்துள்ளனர்; இது கண்ணாடி போல இருக்கும் ; உடனினுள்ளே உள்ள உறுப்புகளைக் காணாலாம்; தென் அட்லான்டிக் கடலில் இதைக் கண்டுபிடித்தனர் இது 23 அடி நீளத்துக்கு வளரும்
POSTED BY LONDON SWAMINATHAN ON 19-6-2025
–SUBHAM–
TAGS- GIANT SQUID, கணவாய்கள்
Posted by Tamil and Vedas on June 19, 2025
https://tamilandvedas.com/2025/06/19/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4/
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நத்தை இனம் ஒன்றுக்கு மாடர்ன் ஆர்ட் ஓவியர் பாப்லோ பிக்காஸோவின் பெயர் சூட்டப்பட்டது இதன் அங்க அமைப்பு, உறுப்புகள் பாலாவின் ஓவியம் போல சிக்கலால் இருப்பதால் இந்தப் பெயர் அவுசான் பிக்காஸோ என்பது புதிய நத்தை இனத்தின் பெயர் ஆகும்.
POSTED ON 19-6-25 BY LONDON SWAMINATHAN
தாய்லந்தின் தேசீய பூங்கவில் இது கண்டு பிடிக்கப்பட்டாது
—SUBHAM–
PABLO PICASSO, SNAIL, THAILAND
Posted by Tamil and Vedas on June 19, 2025
https://tamilandvedas.com/2025/06/19/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b2%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b8%e0%af%8b-%e0%ae%a8%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-picasso-snail/


Post No. 14,663
Date uploaded in London – 19 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அய்யர் – ஐயங்கார் மோதல்; நால்வரும் பாடிய ஒரே திருவிளையாடல் !
திருவிளையாடல் புராணத்தில் உள்ள 64 திருவிளையாடல்களில் , சிவ பெருமானின் ஒரே ஒரு லீலையை மட்டுமே, நால்வரும் பாடியுள்ளனர். அதாவது அப்பர் ,சுந்தரர்,, சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவார, திருவாசகத்தில் பாடியுள்ளனர்.
SOURCE BOOK:
MADURAI TEMPLE COMPLEX, A V JEYACHANDRUN, MADURAI KAMARAJ UNIVERSITY, 1985
மதுரைப் பல்ககலைக்கழக வெளியீட்டில் ஏ வி ஜெயச்சந்திரன் கொடுத்த பட்டியல் சரியென்றால் , மாணிக்க வாசகர், தேவாரம் பாடிய மூவருக்கும் முன்னால் வாழ்ந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்; மேலும் வரகுணன், பாணபத்திரன் ஆகியோரும் சம்பந்தருக்கு முன்னால் வாழ்ந்தது தெளிவாகும் ;
ஏனெனில் திருமுகம் என்னும் சிபாரிசுக் கடிதத்தை பாணனுக்கு சிவ பெருமான் கொடுத்தது, நரியைப் பரியாக்கியது முதலிய சம்பவங்களை அப்பர் அல்லது ஞான சம்பந்தர் பாடியதாக ஜெயச்சந்திரன் பட்டியல் காட்டுகிறது .
இதில் என்ன அதிசயம் என்றால் நால்வரும் பாடிய சமபவங்கள் இருபது, முப்பது திருவிளையாடல்களுக்குள் அடங்கி விடுகிறது; ஆனால் விருத்த குமாரன் பாலனாகிய நிகழ்ச்சியை மட்டும் நால்வரும் பாடியுள்ளனர். அப்படியானால் அது சுமார் 1500 அல்லது 1600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கவேண்டும். ஏனெனில் அப்பர்- சம்பந்தர் காலம் கி பி 600 CE என்பது உறுதியாகிவிட்டது.
ஒரு நிகழ்ச்சி பாடுவதற்குரிய அதிசயமாக மாறுவதற்கு 200 அல்லது 300 ஆண்டுகள் தேவை. மேலும் தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு சிவ பெருமான் எழுதிக்கொடுத்த கவிதையை நக்கீரன் என்ற பார்ப்பனப் புலவன் ஆட்சேபிக்கவே சிவ பெருமானே நேரில் வந்ததையும் அப்பர் பாடியள்ளார் ;ஆக இவை எல்லாம் சங்க காலத்தில் நடந்ததையும் மதுரையில் சங்கம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் ஒரு அமைப்பு இருந்ததும் உறுதியாகிறது.
தொல்காப்பியர் ச என்னும் எழுத்தில் எந்தச் சொல்லும் துவங்கக்கூடாதென்று தடை போட்டதைத் தமிழர்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டதையும் அறியமுடிகிறது .
****
ஐயர் – ஐயங்கார் மோதல்!

கதைச் சுருக்கம் பின்வருமாறு
விருத்த குமாரன் பாலன் ஆகிய திருவிளையாடல்
விக்ரம பாண்டியர் ஆட்சியில் விரூபாக்ஷர் – சுபவிரதை தம்பதியினர் மதுரையில் வாழ்ந்தார்கள். அவர்கள் அந்தணர் குலத்தவர். இத்தம்பதிகளுக்கு இறைவன் அருளால் கெளரி என்ற பெண் குழந்தை பிறந்தது. சைவ சமயத்தில் பற்றுடன் இருந்த குழந்தை திருமண வயதிற்கு வந்தாள்.
அடியார்களுக்கு அன்னமிடுவதை வழக்கமாக கொண்டிருந்த குடும்பத்தினர் என்பதால், ஒரு நாள் வைணவ இளைஞன் ஒருவன் விரூபாக்ஷர் இல்லத்திற்கு வந்து உணவு அருந்தினான். அவன் வைணவன் என்றாலும் விரூபாக்ஷர் அவனிடம் அன்பு கொண்டு மகளை திருமணம் செய்து கொடுத்தார்.வைணவ இளைஞனின் குடும்பத்தினர் சைவ பெண்ணான கெளரியை ஏற்க வில்லை. கெளரி இள வயதிலேயே முக்தியை வேண்டி சிவபெருமானை வணங்கினார்.
கெளரியின் புகுந்த வீட்டினர், அவளை தனியறையில் அடைத்து வெளியே சென்ற நேரத்தில் அப்பூட்டுகளை உடைத்து அடியாராக வந்தார் சிவபெருமான். அவருக்கு மனதார உணவுகளைப் படைத்து அளித்தாள் கெளரி . அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தானே குழந்தையாக மாறினார். கெளரி யின் புகுந்த வீட்டினர் அடைக்கப்பட்டிருந்த கதவுகள் திறந்து கிடைப்பதையும், கெளரி குழந்தையோடு இருப்பதையும் கண்டு கோபம் கொண்டனர்.
குழந்தை சிவபெருமானாக காட்சியளித்து கெளரி க்கு முக்தி அளித்தார்.
****
இதை தமிழ் அறிஞர் கி.வா. ஜகந்நாதனின் அற்புதமான விளக்கத்துடன் காண்போம்.
கெளரி என்னும் பெண் ஒரு வைணவனை மணந்து கொள்கிறாள். அவள் சைவக் குடும்பத்தில் பிறந்தவள். சிவபெருமானை பூசை செய்கிறாள். அவள் சிவனை பூசை செய்கிறாள் என்பதனால் புக்ககத்தார் பல இடையூறு செய்கிறார்கள் . அவள் இறைவனுடைய திவ்ய தரிசனத்தைப் பெறுகிறாள். இந்தக் கதை சைவத்துக்கும் வைணவத்துக்குள் உள்ள முரண்பாட்டைக் காட்டுவதாக முதலில் தோன்றும். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் பழங்காலத்தில் இருந்த ஒற்றுமை நன்கு விளங்கும் . இப்படி நான் சொல்வது நேர் விரோதமாகத் தோன்றலாம் . ஆனால் சற்று விளக்கினால் இந்த உண்மை புலனாகும். திருமணம் செய்வது என்பது அக்காலத்தில், இந்தக் காலத்தைப் போல திடீரென்று நினைத்துச் செய்வது அன்று. நன்றாகக் குலம் கோத்திரம் விசாரித்து, பழகின இடத்தில் பெண்ணைக் கொள்ளவோ , பெண்ணுக்குப் பிள்ளையைக் கொடுக்கவோ செய்வார்கள். கெளரியையும் அப்படித்தான் அந்த வைணவ குடும்பத்தில் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வைணவன் என்று தெரிந்தும் சைவ குடும்பத்தினர் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்திருக்கினார்கள் . இதனால் அக்கால மக்கள் சைவ வைணவ பேதமின்றி இணைந்து வாழ்ந்து வந்தார்கள் என்பதும் சமய பேதம் திருமணத்துக்குத் தொடர்புக்குத் தடையாக இருக்கவில்லை என்பதும் தெரிகின்றது அல்லவா ?
வைணவர்கள் சிவ பூசையைச் செய்துவந்த கெளரியத் துன்புறுத்திநார்கள் என்பது சமயம் காரணமாக அமைந்தது அன்று. அது அவர்களாவது கொடிய இயல்பு காரணமாக அமைந்தது அதற்கு ஒரு வியாஜ்யம் சிவ பூசை. அவர்கள் திடீரென்று வைணவர்கள் ஆகவில்லை முன்பே வைணவர்களாக இருந்தவர்களே . அது தெரிந்தே திருமணம் செய்து கொடுத்திருக்க வேண்டும் . அந்தக் காலத்தில் வேறுபாடு இல்லாமல் சைவர்களும் வைணவர்களும் திருமணம் புரிந்து கொண்டார்கள் என்பதை இந்த வரலாறு காட்டுகிறது. இவற்றைத் தெரிந்து கொள்ள தல புராணங்கள் உதவி செய்கின்றன.
****
என் கருத்து
முதலில் ஏறத்தாழ சங்க காலத்தில் இருந்த பெயர்களைக் கவனியுங்கள் ; எல்லாம் சம்ஸ்க்ருதம் ! பிராமணர் குடும்பத்தில் இப்படி என்று எவரும் சொல்ல முடியாது சிலப்பதிகார கதா நாயகன் பெயர் கோபாலன் ( ப= வ மாற்றம் உலகெங்கிலும் உண்டு ; சங்க காலச் சொற்களிலும் இது உண்டு ; சபை= அவை ; பாண்டில்= வண்டி). கண்ணகி கோபாலன் அப்பா அம்மா பெயர் நமக்குத் தெரியாது மஹா நாயகன், மஹா சார்த்தன் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்களை மட்டுமே நமக்கு இளங்கோ விட்டுச் சென்றுள்ளார் ; பிள்ளைமார் ஜாதியில், செட்டியார் ஜாதியில் திலகவதி, புனித வதி, பரமதத்தன் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் இருந்ததையும் தேவாரம் நமக்கு காட்டுகிறது.
இன்னும் ஒரு அதிசயம்
உலகில் விருந்தோம்பல் என்பதை ஒரு பண்பாகக் கருதியது இந்தியாவில் மட்டுமே; இது அதிசயத்திலும் அதிசயம் ; தமிழ், சம்ஸ்க்ருத நூல்கள் இதற்கு ஒரு அத்தியாயம் ஒதுக்கி பல ஸ்லோககங்ளை அல்லது வெண்பாக்களை அல்லது குறள்களைக் கொடுத்துள்ளது ; சீதையும் கண்ணகியும் இப்படி விருந்து படைக்கும் வாய்ப்பு இல்லாமற் போனதே என்று வருத்தப்படும் பாடலகளை கம்பனும் இளங்கோவும் பாடியுள்ளார்கள்; மேலும் பஞ்ச யக்ஞம் – தினமும் செய்யும் ஐவேள்வி –என்பது இந்து மத சடங்கு! உலகில் வேறு எந்த மதத்திலும் எந்த கலாசாரத்திலும் இது இல்லை; இந்துக்கள் மட்டுமே செய்த சடங்கு. ஏனைய மதத் தலைவர்கள் கதையில் கருணை என்ற தலைப்பில் சில விஷயங்கள் இருந்த போதிலும் அவர்கள் அதைத் தினசரிக் கடமையாகச் செய்ததாக எழுதவில்லை .
இன்னும் ஒரு அதிசயம்
யார், யாருக்கு விருந்து படைத்தார்கள் என்பதைக் கதை காட்டுகிறது வந்தவன் வைணவன் என்பது அவன் போட்டிருந்த பட்டை நாமத்தில் தெரிந்திருக்கும். அப்படியும் சைவ பிராமணன் வீடு அவருக்குச் சோறு படைத்தது . வேண்டாம் என்று நினைத்திருந்தால் இன்றைய உணவு முடிந்துவிட்டது என்று சொல்லி கழித்துக்கட்டி இருக்கலாம் .
மேலும் இதற்கு மனு நீதி நூலில் ஒரு சான்றும் உள்ளது ; மூன்று ஜாதிக்காரர்கள் குருகுலத்தில் படிக்க வந்தபோது தினமும் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் ; வாத்தியார் வீட்டுக்கும் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் எந்த எந்த ஜாதி பவதி பிக்ஷாம் தேஹி என்பதை எப்படிச் சொல்லவேண்டும் என்ற பெர்முடேஷன் காம்பினேஷனையும் permutation combination மனு ஸ்ம்ருதி கொடுத்துள்ளது . பவதி பிக்ஷாம் தேஹி = தாயே பிச்சை போடுங்கள்! பிக்ஷாம் தேஹி பவதி; பிக்ஷாம் பவதி தேஹி
****
இன்னும் ஒரு செய்தி
விக்ரம பாண்டியன் என்பவன் அப்பருக்கும் முன்னால் வாழ்ந்த பாண்டியன் . அபிஷேக பாண்டியனின் மகன். அபிஷேக பாண்டியனை நான் நெடுஞ்செழியன் என்று கண்டுபிடித்தேன்; விக்ர ம பாண்டியனின் மகன் ராஜ சேகரன் ஆண்டபோது கரிகாலன் குறிப்பு வருகிறது ஆக இவர்களனைவரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர்கள் . ஏனெனில் மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் மதுரை நெடுஞ்செழியன் 2200 ஆண்டுகளுக்கு முன்னிருந்தவன்; கரிகாலனும் ஏறத்தாழ அதே காலத்தில் இருந்தவன் . ஆகவே விருத்த குமாரன் கதையும் அதே காலத்தைச் சேர்ந்ததே ; இதை நால்வரும் பாடியதில் வியப்பில்லை.
*****
வரகுணன் , மன்னர் பெயர் அல்ல அது இந்திரன் போல பட்டப் பெயர்
வரகுணன் கல்வெட்டுகளை ஆராய்ந்து கட்டுரை எழுதிய அனைவரும் அவனது தமிழ்ப் பெயர்களையும் தளவாய்புரம் செப்பேட்டுக் கட்டுரைகளில் எழுதியுள்ளனர் . இதிலிருந்து நல்ல குணமுள்ள எல்லா மன்னர்களையும் வரகுணன் என்று குறிப்பிட்டது தெரிகிறது . மேலும் எல்லா வரகுணன்களும் சிவ பக்தர் இல்லை என்பதை நம்மாழ்வார் பாசுரம் காட்டுகிறது. அவர் வரகுணமங்கை என்று பெயர் சொல்லிப் பாடிய பாசுரத்தில் விஷ்ணுவே வருகிறார்; அந்த ஊரிலும் விஷ்ணு கோவில் மட்டுமே உள்ளது ஆகவே மாணிக்க வாசகரின் திருக்கோவையாரில் வரும் வரகுணன் நமக்குத் தெரியாத , அதாவது வரலாற்றில் அறியாத வரகுணன் ஆவான்; இதை அப்பர் சம்பந்தர் பாடிய தேவாரத்தாலும் அறிகிறோம் . சுந்தரர் குறிப்பிடும் மூர்த்தி நாயனார் போல இவரூம் வரலாறு அறியாத பாண்டிய மன்னனே!
(மகாபாரதத்திலும் பாகவதத்தில் இது போல ஜாதி விட்டு ஜாதி மாறி கல்யாணம் நடந்த செய்திகளும் உள்ளன )
–subham—
Tags- விருத்த குமாரன் பாலன், வரகுணன், விக்ரம பாண்டியன், கி.வா.ஜகந்நாதன் , அய்யர் – ஐயங்கார் மோதல், நால்வரும் பாடிய ,திருவிளையாடல்,
Posted by Tamil and Vedas on June 19, 2025
https://tamilandvedas.com/2025/06/19/%e0%ae%90%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/
WRITTEN BY S NAGARAJAN
Post No. 14,662
Date uploaded in London – –19 June 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதம்
தகப்பனை விஞ்சிய பிள்ளை!
ச. நாகராஜன்
சம்ஸ்க்ருத மொழியில் லட்சக்கணக்கில் உள்ள சுபாஷிதங்களில் சில இதோ:
தகப்பனை விஞ்சிய பிள்ளையின் செயல்கள்!
கும்ப: பரிமிதம்ப: பிபத்யசௌ கும்பசம்பச்வோம்மோதிம் |
அப்ரதிரிச்யதே ஸுஜன்மா கஸ்சித் ஜனகம் நிஜேன சரிதேன ||
ஒரு குடம் மிகவும் குறைந்த அளவு தண்ணீரையே தன்னிடத்தில் கொள்கிறது. ஆனால் குடத்தில் பிறந்த முனிவரோ என்றால் (அகத்தியரோவெனில்) ஒரு கடலையே குடித்து விட்டார்.
ஒரு நல்ல புத்திரனானவன் சில சமயம் தனது தகப்பனாரையே தனது செயல்களால் விஞ்சி விடுகிறான்.
வெள்ள நீருக்கும் யுவதிக்குமான சிலேடை!
குரு கம்பீராஸ்யதாம் கல்லோலௌர்ஜனய லோகவிப்ராந்திம் |
தீத பயோதர லக்ஷ்மீ: கஸ்ய ந சரணைர்விலங்கஸ்யாமி |\
இது வெள்ள நீருக்கும் ஒரு யுவதிக்குமான சிலேடை பாடலாக அமைகிறது.
வெள்ள நீர் : நீ நீரில் மிகுந்த ஆழத்தைக் கொண்டிருக்கலாம். உனது அலைகளால் மக்களை நடுங்கச் செய்யலாம். ஆனால் ஒன்றைக் குறித்துக் கொள் – எப்போது மேகக்கூட்டத்திலிருந்து நீர்ச் செல்வமானது வற்றுகிறதோ அப்போது நீ வறண்டு போகிறாய். அப்போது யாருடைய காலடிகளால் நி துகைக்கப்படாமல் இருக்கப் போகிறாயோ?
கர்வம் பிடித்த அழகி : நீ உனது அழகு அலைகளால் மக்களை ஏமாற்ற பெரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒன்றைக் குறித்துக் கொள் : உனது நிமிர்ந்து நிற்கும் மார்பகங்களின் அழகு தேயும் போது யாருடைய காலடிகள் தான் உன் மீது தூக்கப்பட்டு நீ இகழப்படாமல் இருக்கப் போகிறாய்?
வார்த்தைகள் அதே தான். ஆனால் அது வெள்ள நீருக்கும் யுவதிக்கும் பொருத்தமாக இந்த சிலேடைப் பாடலில் அமைந்துள்ளது!
ஒழுக்கம் கெட்ட பெண் அழிவையே நாடுவாள்!
குலபதனம் ஜனகர்ஹா பந்தனமபி ஜீவிதவ்யசந்தேஹம் |
அங்கீகரோதி குலடா சததம் பரபுருஷசம்சக்தா: ||
தன் கணவனை விட மற்ற ஆண்களிடம் ஈடுபாடு கொண்டிருக்கும் ஒரு பெண்ணானவள் நிரந்தரமாகத் தன் குடும்பத்தின் அழிவையும் மற்றவர்களால் நிந்திக்கப்படுவதையும், சிறை வைக்கப்படுதையும் ஏன், அவள் உயிரோடு இருப்பதே சந்தேகமாவதையும் வரவேற்கிறாள்.
நீசன் அடுத்தவன் குறையையே சொல்வான்!
குலசீலவ்ருத்த தோஷான் வித்யாதோஷாம்ஸ்ச கர்மதோஷாம்ஸ்ச |
கதயதி பரஸ்ய நீசோ ந து ஸ்மரத்யாத்மனோ தோஷான் |\
ஒரு நீசனானவன் மற்றவர்களின் குடும்பம், அவர்களின் ஒழுக்கம், நடத்தை, அறிவு, செயல்கள் ஆகியவற்றில் உள்ள குறைகளைப் பற்றி
மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறான்; ஆனால் அவன் தனது குற்றங்குறைகளை மறந்து விடுகிறான்.
***
Posted by Tamil and Vedas on June 19, 2025
https://tamilandvedas.com/2025/06/19/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-post-no-14/
ஏய் என்ன சொன்ன ? மூக்கைக் கிழிச்சிருவேன் கிழிச்சு ; ஒழுங்காய் பேசு ]
டேய் போடா ; ஒன்னைக் கொத்திக் கொத்தி சாப்பிடுவேன்டா.
பறவைகளுக்கும் கோபம் வரும்
அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாநிலத்தில் ஒருவர் எடுத்த புகைப்படத்தில் பறவைகளின் கோபம் வெளிப்பட்டதைக் காணலாம்
இவை வழுக்கைத்தலை கழுகு வகைப் பறவைகள் .
POSTED BY LONDON SWAMINATHAN ON 18TH JUNE 2025.
–SUBHAM–
TAGS– ANGRY RAGLES, ARIZONA, RUDE BIRDS
Posted by Tamil and Vedas on June 18, 2025
https://tamilandvedas.com/2025/06/18/angry-birds-from-arizona/
பற பற பற … பறவையா பைத்தியமா ?
இல்லை இல்லை ! பறவைப் பைத்தியம்
POSTED BY LONDON SWAMINATHAN ON 18TH JUNE 2025.
பற பற பற … பறவையா பைத்தியமா ?
இல்லை இல்லை ! பறவைப் பைத்தியம்
மாட் ட்ரெவெள்யான் என்பவர் கார்லயு பறவைகள் அழிந்து வருவது பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக பத்து அடி உயர பறவை முகமடிசெய்து அதையணிந்து கொண்டு 53 மைல் நடந்து சென்று பறவைகள் மீதான தனது அன்பினை வெளிக்காட்டினார்.
அன்பிற்கும் உண்டோ அடை க்கும் தாழ்?
அது பறவை முகமூடி மூலம் வெளிப்படும் !
—SUBHAM—
TAGS– BIRD LOVER, 53 MILE WALK, MATT
Posted by Tamil and Vedas on June 18, 2025
https://tamilandvedas.com/2025/06/18/giant-bird-costume-to-save-curlews-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%aa%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be/
சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம்!
பச்சை குத்த பல கோடி டாலர்; அவைகளை அழிக்க அதைவிட பல கோடி டாலர் செலவு. அமெரிக்க காமெடியனின் அவல நிலை ?
POSTED ON 18TH JUNE 2025.
COMEDIAN PETE DAVIDSON SPENT TWO LAK DOLLARS TO REMOVE TATTOOS
–SUBHAM–
TAGS COSTLY TATTOOS, REMOVAL, COMEDIAN, PETE DAVIDSON.
Posted by Tamil and Vedas on June 18, 2025
https://tamilandvedas.com/2025/06/18/comedian-pete-davidson-spent-two-lakh-dollars-to-remove-tattoos/
மலை முகட்டிலிருந்து குதிப்பதும் சாதனையே ! ஆண்டு 2024
POSTED ON 18-6-2025
மலை முகட்டிலிருந்து குதிப்பதும் சாதனையே ! ஆண்டு 2024
–SUBHAM–
TAGS- CLIFF DIVING, LEAP. JUMPING FROM TOP, THE RED MAGAZINE
Posted by Tamil and Vedas on June 18, 2025
https://tamilandvedas.com/2025/06/18/rare-pictures-of-cliff-jumping-from-magazine/