Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
3-7-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
யமபயம் நீங்க தமிழகத்தில் உள்ள நான்கு காலசம்ஹாரத் தலங்கள்!
ச. நாகராஜன்
யமபயம் போக நான்கு திருத்தலங்கள்!
பயத்தில் அதிபயங்கரமான பயம் யம பயம்!
யமன் என்ற சொல்லைக் கேட்டாலேயே யார் தான் பயப்படாமல் இருக்க முடியும்?
ஊழி காலம் தொட்டு இன்று வரை யமன் பிடியில் அகப்படாமல் யாராலாவது இருக்க முடியுமா?
முடியும். நான்கு பேருக்காக சிவபிரான் அருள் புரிந்து காலனை சம்ஹாரம் செய்த தலங்கள் நான்கு உள்ளன. அங்கு சென்று வழிபட்டால் யமபயம் நீங்கும். சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளை அங்கு நடத்துவது பாரம்பரியப் பழக்கம்.
இதோ அந்த நான்கு தலங்களில் நிகழ்ந்த காலசம்ஹார சம்பவங்கள்:
திருக்கடையூர்
மாயவரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள
புகழ் பெற்ற இந்தத் தலம் பற்றி அனைவரும் அறிவர்.
மிருகண்டு மகரிஷிக்கு மார்க்கண்டேயன் என்னும் மகன் பிறந்தான்.
அவனுக்கு பதினாறு வயது தான் ஆயுள் காலம் என்பதை அறிந்த அவன் சிவனை வழிபட ஆரம்பித்தான். பதினாறாவது வயதில் ஆயுள் முடியும் காலத்தில் வந்த யமன் அவன் மீது பாசக்கயிறை வீச, சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்தான் மார்கண்டேயன் .அவன் மீது யமன் வீசிய பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. கொண்டார் கோபம் சிவபிரான். தன் இடது காலால் அவனை எட்டி உதைத்து அவனை அழித்தார்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காலசம்ஹார சிற்பம் உள்ளது. இங்கு சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹார உற்சவம் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.
திருவெண்காடு
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகே 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவெண்காடு.
சுவேதாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இந்தத் திருத்தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபிரானின் 108 தாண்டவ வடிவங்களில் 43வது வடிவமாகிய அகோரமூர்த்தி வடிவத்தில் அவர் இங்கு தரிசனம் தருகிறார்.
இந்தத் தலத்தைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது.
“சபபாத கரோபூமன் தஹ்யமான சராக்னி நருத்ரேநேவ வினிர்தக்த ஸ்வேதாரண்யே யதாந்தகஹா” இதன் பொருள்: யமனை சுவேதாரண்ய க்ஷேத்திரத்தில் சுவேதாரண்யர் வதம் செய்ததைப் போல ராமர் கரதூஷணை வதம் செய்தார்.
சுவேத மஹரிஷியின் இருபத்தோராவது வயதில் அவருக்காகவும் சுவேத ராஜாவுக்காகவும் இரு முறை கால சம்ஹாரம் நடைபெற்றது. இதைப் பற்றி கூர்ம புராணத்தில் ‘சுவேதன் கூற்றினைக் கடந்த அத்தியாயம் ‘என்ற அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.
திருவீழிமலை
இந்தத் திருத்தலம் கும்பகோணத்திலிருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்தத் தலத்தில் தான் சிவபிரான் கடும் பஞ்சம் நிலவிய காலத்தில் ஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் படிக்காசு கொடுத்து அருளினார். அதை வைத்து அவர்கள் பஞ்சம் நீங்க வகை செய்து அருளினர்.
இத்தலத்தில் சிவபிரான் சுவேதகேது என்னும் ராஜரிஷிக்காக அவரது பத்தொன்பதாவது வயதில் எமனைக் காலால் எட்டி உதைத்து சுவேதகேதுவை சிரஞ்சீவியாக வாழ அருள் புரிந்தார். எமபயம் நீக்கும் தலம் என்பதால் பக்தர்களின் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.
திருவையாறு
தஞ்சாவூரிலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவையாறு.
புகழ் பெற்ற இந்தத் திருத்தலத்தில் ஔத்தாலக மஹரிஷிக்காக சிவபிரான் எமனை கால சம்ஹாரம் செய்தார்.
த்வாரபாலகர்களின் மேல் பாலுள்ள சங்க நிதியைக் கொண்டு யமனை சம்ஹாரம் செய்து அவனை யமலோகத்தில் விழும்படி செய்தார்.
ஔத்தாலகர் பற்றி மஹாபாரதத்தில் சல்ய பர்வத்தில் கதாயுத்த பர்வத்தில் காணலாம். கோசலத்தின் வடபாகத்தில் இவர் ஒரு வேள்வியைச் செய்த போது சரஸ்வதியை நினைக்க சரஸ்வதி ஆறாக அங்கு வந்தாள்.
சிவபிரானின் திருநாமங்கள்
சிவபிரானுக்கு காலாந்தகர், காலாரி, காலசம்ஹார மூர்த்தி, காலகாலன், அந்தகனுக்கு அந்தகன், கூற்றினை உதைத்தர் என்று பல பெயர்கள் உண்டு.
அதற்குக் காரணமான மேற்கண்ட நான்கு தலங்களில் நாம் சிவ வழிபாடு செய்தால் யம பயம் நீங்கும் என்பது அறுதியிட்ட உறுதி!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்ற துதியில் மனிதர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குக் கேள்வி- பதில் வடிவத்தில் ஆதி சங்கரர் பதில் அளிக்கிறார் . அவற்றில் 31 பதில்களை இந்த மாத காலண்டரில் காண்போம்.
அக்டோபர் மாத பண்டிகைகள் – 1-ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை; 2- விஜய தசமி, காந்தி ஜெயந்தி; 10-கர்வா சவுத் 20- தீபாவளி; 22- கந்தஷஷ்டி துவக்கம்; 27-கந்தசஷ்டி சூரசம்ஹார விழா.
அமாவாசை-21; பௌர்ணமி-6; ஏகாதச- 3, 17.
முகூர்த்த தினங்கள்- 19, 20, 24, 27,31.
**************
அக்டோபர் 1 புதன் கிழமை
ஏற்க வேண்டியது என்ன?
குருவின் போதனையை ஏற்கவேண்டும்
***
அக்டோபர் 2 வியாழக் கிழமை
தவிர்க்க வேண்டியது என்ன?
கெட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும்
***
அக்டோபர் 3 வெள்ளிக் கிழமை
யார் குரு?
எவர் ஒருவர் சத்தியத்தை அறிகிறாரோ, எவர் ஒருவர் மாணவர்களின் நலனைச் சிந்திக்கிறாரோ அவர்தான் குரு
***.
அக்டோபர் 4 சனிக் கிழமை
அவசரமாக செய்ய வேண்டியது என்ன ?
ஜனன மரணச் சூழலிலிருந்து விடுபட்டு முகிதி அடைய வேண்டிய செயலை உடனே செய்யவேண்டும்.
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.
****
Prayer -MRS BHUVANESWARI RAJASEKARA SIVACHARYA
***
NEWS BULLETIN
S. Swaminathan from London presented World Hindu News in Tamil
****
MRS CHITRA NAGARAJAN from Bengaluru spoke on
Koothanur Saraswathi Temple
****
PROFESSOR S SURYANARAYANAN SPOKE ON
TAMIL NUMBERS GIVE INTERESTING INFORMATION
***
Song by Miss Pratidha Sathya Narayanan
***
SPECIAL EVENT-
TALK ON NAVARATRI FESTIVAL
By MAYILADUTHURAI SRI RAGHAVAN
MAYILADUTHURAI RAGHAVAN
Mayiladuthurai Raghavan, is a dedicated professional in the IT sector.
For the past 16 years, he has been delivering Upanyasams (discourses), Pravachanams (lectures), and devotional discourses in Tamil at various venues, covering a wide range of topics on a particular focus on Parashakti Sri Lalita Ambika Kamakshi.
His expertise has been recognized, and he had the privilege of presenting on Sri Sankara TV during numerous auspicious occasions. Two of his programs, each spanning over 10 months, have been particularly well-received.
“Sri Thyagaraja Vaibhavam” delved into the divine leelas (divine plays) of Sri Parameswara, who resides in Thiruvarur as Sri Thyagaraja’s Uttarayana and Dakshinayana.
“AcharyalumAmbikaiyum” provided insightful explanations of Devi Stotras (hymns to the Divine Mother) composed by the revered Adi Shankaracharya.
Furthermore, he has delivered Pravachanams on a wide array of subjects in various locations, Some of the most significant among these include:
1. Devi BhagavathaNavaham: A nine-day discourse on the Devi Bhagavata Purana
2. Sri Kamakshi Vaibhavam: Anine-day discourse on the glories of Sri Kamakshi Ambal
3. Sri Rajarajeshwari Vaibhavam: A nine-day discourse on the divine leelas of Sri Lalita Rajarajeshwari
4. Sri Lalitopakhyanam: A complete discourse on the Sri Lalitopakhyana for 28 days
5. Shiva Leelarnavam: Afive-day discourse on the divine leelas of Sri Parameswara
My Upanyasams have been presented in various cities across India, including New Delhi, Kolkata, Palakkad, Mumbai, Bangalore, and numerous locations in Tamil Nadu.
Additionally, he has regularly conducted Pravachanams at the branches of the Kanchi Kamakoti Sri Mutt in New Delhi and Bangalore.
Mayiladuthurai Raghavan, is a dedicated professional in the IT sector.
For the past 16 years, he has been delivering Upanyasams (discourses), Pravachanams (lectures), and devotional discourses in Tamil at various venues, covering a wide range of topics on a particular focus on Parashakti Sri Lalita Ambika Kamakshi.
His expertise has been recognized, and he had the privilege of presenting on Sri Sankara TV during numerous auspicious occasions. Two of his programs, each spanning over 10 months, have been particularly well-received.
“Sri Thyagaraja Vaibhavam” delved into the divine leelas (divine plays) of Sri Parameswara, who resides in Thiruvarur as Sri Thyagaraja’s Uttarayana and Dakshinayana.
“AcharyalumAmbikaiyum” provided insightful explanations of Devi Stotras (hymns to the Divine Mother) composed by the revered Adi Shankaracharya.
Furthermore, he has delivered Pravachanams on a wide array of subjects in various locations, Some of the most significant among these include:
1. Devi BhagavathaNavaham: A nine-day discourse on the Devi Bhagavata Purana
2. Sri Kamakshi Vaibhavam: Anine-day discourse on the glories of Sri Kamakshi Ambal
3. Sri Rajarajeshwari Vaibhavam: A nine-day discourse on the divine leelas of Sri Lalita Rajarajeshwari
4. Sri Lalitopakhyanam: A complete discourse on the Sri Lalitopakhyana for 28 days
5. Shiva Leelarnavam: Afive-day discourse on the divine leelas of Sri Parameswara
My Upanyasams have been presented in various cities across India, including New Delhi, Kolkata, Palakkad, Mumbai, Bangalore, and numerous locations in Tamil Nadu.
Additionally, he has regularly conducted Pravachanams at the branches of the Kanchi Kamakoti Sri Mutt in New Delhi and Bangalore.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து லண்டன் சுவாமிநாதன் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு
திருவண்ணாமலை கோவிலில் கட்டுமானங்களுக்கு ஐகோர்ட் தடை
சென்னை: ‘திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் உள்ளே, வெளியே, எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரே, 6.40 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந் தனர். இந்த வழக்குகள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, மனுதாரர் டி.ஆர்.ரமேஷ் ஆஜராகி, ”கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது என, இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும், புராதன கோவிலின் உள்ளே கட்டுமான பணி நடக்கிறது,” எனக் கூறி, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
இதை பார்வையிட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வணிக வளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, இந்த நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வராமல், அறநிலைய துறை கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் செயல் கண்டனத்திற்குரியது.
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோவிலின் நான்காவது பிரகாரத்தில், சுற்றுச்சுவருக்கு மிக அருகில், க்யூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் காத்திருப்பு கூடம் கட்டப்படுகிறது. இது, அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த கட்டுமானங்கள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்கும் வகையில், ஆவண, ஆதாரங்களுடன், அறநிலைய துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்., 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
அதுவரை, நான்காம் பிரகாரத்தில், க்யூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் காத்திருப்பு கூடம் மட்டுமின்றி, கோவிலின் உள்ளே மற்றும் வெளியே, எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள அறநிலைய துறைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. அக்டோபர் 5-ம் தேதி கோவிலில் ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
****
தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு; கோவில்கள் பட்டியலை தர உத்தரவு
தமிழகத்தில், ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள் எவை; உட்படாத கோவில்கள் எவை என்பது தொடர்பாக, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்யவோ தடை விதிக்கக் கோரி, அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
மேலும், முறையாக அர்ச்சகருக்கு படித்த நபர்களை தகுதியின் அடிப்படையில் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில், உறுப்பினர் நியமனத்தில் தமிழக அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே கருத்து முரண்ஏற்பட்டது.
சர்ச்சைக்குரிய நபர்களை அந்த கமிட்டியில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டாம்’ என, தமிழக அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில், மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலய சுவாமிகளை உறுப்பினராக நியமிக்க உத்தரவிடுகிறோம்.
அந்த கமிட்டியின் மூலம், தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றி தினசரி பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை, பின்பற்றாமல் பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை என்பதை மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும். அந்த அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2026 ஜனவரிக்கு ஒத்தி வைத்தனர்.
****
கேரளா அரசு நடத்திய அய்யப்ப சங்கம கூட்டம் தோல்வி
கேரளத்தில் சபரிமலையில் பம்பையில் ஏற்பாடு செய்யப்பட அய்யப்ப சங்கம மகாநாடு படுதோல்வி என்று கேரளத்தில் எதிர்க்கட்சிகளாகவுள்ள காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக ட்சியும் கருத்து தெரித்துள்ளன. ஏழு கோடி ரூபாய் செலவில் தேவ ஸ்வம்போர்டும் மார்க்ஸ்சிஸ்ட கட்சி தலைமையிலுள்ள அரசும் ஏற்பாடு செய்த இந்த மஹாநாட்டிற்கு 4000 பேர் பதிவு செய்ததாக தேவஸ்வம் போர்டு அமைச்சர் வாசவன் கூறினார் ஆனால் பத்திரிக்கைகளும் டி வி சானல்களும் ஆட்களே இல்லாத நாற்காலி வரிசைகளை படமாக வெளியிட்டு மகாநாடு பிசுபிசுத்தது என்று எழுதின; இது பற்றி அமைச்சரிடம் கேட்டபோது பிரதிநிதிகள் வெவ்வேறு இடங்களுக்குக்குச் சென்ற போது நாற்காலிகள் காலியாக இருந்ததாவும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இது பற்றி தவறான செய்தி வெளியிட்டதாகவும் கூறி மழுப்பிவிட்டார்.
பாரதீய ஜனதாக் கட்சி போட்டி அய்யப்ப பக்தர் மாநாடு நடத்தி அண்ணாமலையை சிறப்பு விருந்தினராக அழைத்தது
அந்தக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் பிரமாணப்பத்திரத்தை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயனை வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கேரள மாநிலம் பந்தளத்தில் நடந்த சபரிமலை சமரக்ஷண சங்கமத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றும், பிரம்மச்சாரியான ஐயப்பனின் புனிதத்தைக் காக்கும் ஒரு தெய்வீக நிகழ்ச்சி என்றும் தெரிவித்தார்
கம்யூனிஸ்டுகள் மற்றும் அவர்களின் கூட்டணியான திமுக, தேர்தல் சமயத்தில் நடத்தும் அரசியல் நாடகத்தால், லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடக் கூடாது என்றும், சனாதன தர்மத்தைப் பாதுகாக்க ஒரு தீர்மானமான அரசியல் மாற்றத்திற்கான நேரம் தான் இது என்றும் தெரிவித்தார்.
நாடு ழுமுவதும் நவராத்திரி விழா களைகட்டியுள்ளது. இதையொட்டி, வட மாநிலங்களில் பெண்கள் ஒன்று கூடி குஜராத்தை பாரம்பரியமாக கொண்ட கர்பா நடனம் ஆடுவது வழக்கம். இதில் முஸ்லீம் இளைஞர்களும் புகுந்து லவ் ஜிகாது நடத்தி இந்துக்களை மதம் மாற்றி கல்யாணம் செய்துகொள்வது பல இடங்களில் நடந்தது இதனால் சக்தி தேவியை நடுவில் வைத்து நடனம் ஆடும் GARBHA கர்பா நடனத்தில் முஸ்லீம்களை அனுமதிக்க வேண்டாம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்துள்ளது
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெளியே மிகப்பெரியா போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. கர்பா நடனத்தின் போது தேவியைக் குறிக்கும் சிலைகளையோ அடையாளங்களையோ வைத்து காலில் காலணி இல்லாமல் ஆடுவது பாரம்பர்ய வழக்கம் . தற்காலத்தில் பாலிவுட் கும்பல்கள் புகுந்து சினிமாப்பாட்டுகளைப் போட்டு ஆட்டம் நட்த்தி வருகின்றன் கேளிக்கையை விரும்பும் இந்துப் பெண் கள் இதில் சென்று லவ் ஜிஹாத்தி ல் மாட்டிக்கொண்டு கட்டாய மதமாற்றத்தில் சிக்கி முஸ்லீம்களாக மாற்றப்படுவதால் நாடு முழுதும் இந்த எச்சரி க்கையை விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ளது.
***
அமெரிக்காவில் அனுமார் சிலை குறித்து சர்ச்சை
ஹனுமன் சிலை குறித்து அதிபர் டிரம்ப் ஆதரவாளர் சர்ச்சையை உண்டாக்கியுள்ளார் . டிரம்ப்பின் இந்திய விரோதப் போக்கினைப் பயன்படுத்திக்கொண்டு அவர் இந்துக் கடவுள் ஹனுமார் குறித்து அவதூறு பரப்பிவருகிறார் .
அமெரிக்காவில், ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் ஹனுமன் சிலை குறித்து டெக்சாஸ் குடியரசுக் கட்சித் தலைவர் அலெக்சாண்டர் டங்கன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒற்றுமை சிலை என்றும், நாட்டின் 3வது உயரமான சிலை என்றும் ஹனுமன் சிலை போற்றப்படுகிறது.
அமெரிக்காவின் TEXAS டெக்சாஸ் மாகாணத்தின் சுகர்லேண்டில் உள்ள ஸ்ரீ அஷ்டலட்சுமி கோவிலில், 90 அடி உயர ஹனுமன் சிலை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அலெக்சாண்டர் டங்கன் என்பவர், ‘டெக்சாசில் பொய்யான ஹிந்துக் கடவுளின் ஒரு பொய்யான சிலையை ஏன் அனுமதிக்கிறோம்’ என எக்ஸ் வலை தளப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு, ஹிந்து அமெரிக்க அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது ஒரு கிறிஸ்துவ நாடு’ என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் பைபிளில் இடம்பெற்றுள்ள சில வாசகங்களையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். அலெக்சாண்டர் டங்கன் குறிப்பிட்டுள்ளதாவது;
என்னை தவிர வேறு கடவுள் உனக்கு இருக்கக்கூடாது. வானத்திலோ, பூமியிலோ, கடலிலோ உள்ள எந்த ஒரு சிலையையோ அல்லது உருவத்தையோ நீ உனக்கு உருவாக்கிக் கொள்ளக்கூடாது.கடவுள் பற்றிய உண்மையை அவர்கள் பொய்யாக மாற்றிவிட்டார்கள். கடவுளின் உண்மையான சத்தியத்தை மறைத்து, படைத்தவரை வணங்குவதற்கு பதிலாக, அவர் உருவாக்கிய உலகத்தையும், பொருட்களையும் வணங்க ஆரம்பித்தார்கள். கடவுள் என்றைக்கும் புகழப்படுவதற்கு உரியவர்.
இவ்வாறு அலெக்சாண்டர் டங்கன் தமது பதிவில் கூறியுள்ளார்.
எக்ஸ் வலை தள பதிவோடு, கோயிலில் உள்ள அனுமன் சிலை வீடியோவையும் அவர் இணைத்துள்ளார்.
அலெக்சாண்டர் டங்கனின் கருத்துக்கு அமெரிக்க ஹிந்து பவுண்டேஷன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் ஒன்றையும் டெக்சாஸில் உள்ள குடியரசுக் கட்சி அலுவலகத்துக்கு எக்ஸ் வலைதள பதிவின் மூலம் அனுப்பி உள்ளது.
******
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து லண்டன் சுவாமிநாதன் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு அக்டோபர் மாதம் 5–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 28 -9-2025, Gnanamayam, Broadcast, London swaminathan
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் பூந்தோட்டம் என்னும் ஊரிலிருந்து சுமார் அரைகிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கூத்தனூர் என்னும் திருத்தலம் ஆகும்.
தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கு என்று அமைந்த ஒரே திருத்தலமாக இது திகழ்கிறது.
இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவி நான்கு திருக்கரங்களுடன், தாமரை மலரில் பத்மாசனத்தில் வெண்மையான ஆடை அணிந்து அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள், அவளது இடது கீழ்க் கரத்தில் ஒரு புத்தகமும் வலது கீழ்க் கரத்தில் சின்முத்திரையும் திகழ்கிறது. வலது மேல் கரத்தில் அக்ஷர மாலையும் இடது மேல் கரத்தில் அமிர்தகலசமும் திகழ்கிறது.
புன்னகையுடன் கூடிய திருமுகமும், கருணை பொழியும் விழிகளும் பக்தர்களைப் பரவசப்படுத்துகிறது. அவளது மூன்றாவது கண் ஞான தீக்ஷையை அளிக்கிறது. பலிபீடத்தின் முன்னே அன்னம் உள்ளது.
கோவிலில் ஒரு பிரகாரமே உள்ளது. தென்மேற்குப் பகுதியில் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். இவர் ஸ்வயம்பு விநாயகர் ஆவார்.
சரஸ் என்றால் ஆறு என்று பொருள். வதி என்றால் உறைகின்றவள் என்று பொருள். ஆக சரஸ்வதி என்றால் ஆற்றில் உறைகின்றவள் என்று பொருளாகிறது.
ஸரஸ்வதி என்ற சொல்லுக்கு அழகான வியாக்யானம் ஒன்று உண்டு. ஸாரம் – ஸ்வ – இதி என்று இந்தச் சொல்லைப் பிரிக்க வேண்டும். ஸ்வ – அதாவது ‘தான்’ என்பதன் சாரத்தைத் தருபவள் என்று பொருள்.
அதாவது தன்னைத் தனக்கு உணர்த்தும் மேலான ஞானம் – அதைத் தருபவள் சரஸ்வதி. இதிலிருந்து சரஸ்வதி தருகின்ற ஞானம் வெறும் நூலறிவோ அல்லது உலக அறிவோ அல்ல, பிரம்ம ஞானம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
சரஸ்வதி தேவி ‘வாக்கிற்கும்” அதி தேவதை; நீருக்கும் அதி தேவதை!
ரிக் வேதம் சரஸ்வதி தேவியை நதிகளுள் சிறந்தவள், தேவதைகளுள் சிறந்தவள், அன்னைகளுள் சிறந்தவள் என்று புகழ்ந்து துதிக்கிறது.
இக்கோவில் எழுந்ததைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
கவிகளுள் சிறந்தவராக விளங்கிய ஒட்டக்கூத்தர் என்னும் கவிஞர் தினமும் கலைமகளைப் பூஜித்து வந்தார். பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தினமும் தக்ஷிணாவாஹினி எனப்படும் அரிசிலாறு நீரால் தேவிக்கு அபிஷேகம் செய்து வந்தார். அதனால் மகிழ்ந்த சரஸ்வதி தேவி தன் தாம்பூலத்தை ஒட்டக்கூத்தருக்கு அருள அவர் பெரும் கவிஞர் ஆனார். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவர் ஆனார். ஆஸ்தான கவிச்சக்கரவர்த்தி என்ற புகழையும் பெற்றார்.
சோழமன்னன் அவருக்கு இந்த இடத்தைத் தானமாக வழங்க அவர் இங்கு ஞான சரஸ்வதிக்கு ஒரு கோவிலை அமைத்தார். ஆகவே இந்த ஊரும் கூத்தனூர் என்ற பெயரைப் பெற்றது.
தீயவரிடம் சிக்கிக் கொண்ட ஒட்டக்கூத்தரை விடுவிக்க பரணி பாட வைத்து அவர்களிடமிருந்து சரஸ்வதி தேவி அவரை மீட்டாள். தன் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக “ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே” என்று கூத்தர் பாடினார்.
நான்கு வீதிகளின் நடுவே இந்தக் கோவில் அழகுற அமைந்துள்ளது.
இங்குள்ள கோவிலின் விமான கோபுரத்தில் ஐந்து கலசங்கள் அமைந்துள்ளது ஒரு தனிச்சிறப்பாகும்.
இதே சரஸ்வதி தேவி கவிச்சக்கரவர்த்தி கம்பரைக் காப்பாற்ற கிழங்கு விற்கும் பெண்மணியாகவும் மோர் விற்கும் பெண்ணாகவும் வந்தாள் என்றும் வரலாறு கூறுகிறது.
இன்னொரு சுவையான வரலாறும் உண்டு.
குடந்தையைச் சேர்ந்த சாரங்கபாணி தீக்ஷிதரின் மகன் புருஷோத்தமன் என்பவன் பிறவியிலிருந்தே பேசும் திறன் அற்றவனாக இருந்தான். இதனால் வருந்திய சாரங்கபாணி தீக்ஷிதர் இங்கு புருஷோத்தமனை அனுப்ப அவன் தினமும் சரஸ்வதி தேவியை வழிபடலானான். அவனது பக்தியை மெச்சிய சரஸ்வதி அவனுக்கு அருள் பாலிக்க அவன் பேசத் தொடங்கியதோடு சிறந்த அறிவாளியாக விளங்கினான்.
புருஷோத்தம பாரதி என்று அழைக்கப்படலானார்.
இதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
இந்தக் கோவிலில் நவராத்திரி தினங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று ஏராளமான மக்கள் கூடி சிறப்பான வழிபாடு செய்வது வழக்கம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இங்கு வந்து தொழுது துதித்து நல்லறிவைப் பெறுகின்றனர். வித்யாரம்பம் என்று சொல்லும் கல்வி தொடங்கும் நாளையும் இங்கேயே செய்வது வழக்கம். கோவிலின் வெளியில் உள்ள கடைகளில் பூஜா திரவியங்களுடன், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது.
இசைக் கலைஞர்களும் வாத்திய கலைஞர்களும் இங்கு வந்து வழிபட்டுத் தங்கள் கலையைச் மேன்மையுறச் செய்து கொள்வது காலம் காலமாக நடைபெற்று வருகிறது.
பௌர்ணமி மற்றும் மூல நட்சத்திர தினங்களில் பக்தர்கள் திரளாக இங்கு கூடுவது வழக்கம். மூல நட்சத்திரம் சரஸ்வதி தேவியின் நட்சத்திரமாகும். நவமி சரஸ்வதிக்குரிய திதியாகும்.
இத்தலத்திற்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. இங்கு, கோவில்பத்து கூத்தனூரில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோமீட்டர் உள்ள அரசலாற்றுக் கரையில் பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து மெய்யறிவை அருளும் ஶ்ரீ ஞான சரஸ்வதி தேவி,
அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1-7-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை
இனி அனைவருக்கும் வேண்டும் ஹைப்ரிட் இண்டெலிஜென்ஸ்!
(HYBRID INTELLIGENCE) – இரட்டை அறிவு!
ச. நாகராஜன்
காலம் வேகமாக மாறுகிறது இல்லையா? அதன் ஓட்டத்தில் இனி அனைவருக்கும் தேவை ஹைப்ரிட் இண்டெலிஜென்ஸ்! (HYBRID INTELLIGENCE) -இரட்டை அறிவு!
இது இல்லாமல் யாரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
அது என்ன ஹைப்ரிட் இண்டெலிஜென்ஸ்?
ஏ ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு நமது வாழ்வில் நம்மைக் கேட்காமலேயே நுழைந்து விட்டதல்லவா?
ஆகவே நமது வாழ்வில் இதுவரை நாம் கற்றுவந்த கல்விக்கூட அறிவு மற்றும், பொது அறிவு ஆகியவற்றுடன் இனி இந்த மெஷின் அறிவும் தேவை ஆகிறது.
இதன் உதவி பிரம்மாண்டமானதாக அமையப் போகிறது.
ஒரு எடுத்துக் காட்டைச் சொல்லலாம்.
ஒரு மூளை ஆபரேஷனை மூளை சர்ஜரியில் நிபுணரான டாக்டர் செய்யும் போது அவருக்கு ஒரு சிக்கலான பிரச்சனை ஏற்படுகிறது.
இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா என்று ஆலோசிக்க ஆரம்பிக்கிறார். வெற்றியும் தோல்வியும் அவரது அப்போதைய முடிவில் தான் இருக்கிறது.
இனி அப்படி இல்லை. உலகில் அப்படிப்பட்ட பிரச்சனை எத்தனை பேருக்கு ஏற்பட்டது, அதை அவர்கள் எப்படி வெற்றிகரமாக எதிர்கொண்டு உரிய தீர்வைக் கண்டார்கள் என்பதை ஏஐயின் தரவு மூலம் ஒரு நிமிடத்தில் பார்த்து விடலாம்.
ஆகவே இனி நேச்சுரல் மற்றும் ஆர்டிபிஷியில் இண்டெலிஜென்ஸ் ஆகிய இரட்டை அறிவு தேவை!
நேச்சுரல் இண்டெலிஜென்ஸ் (NI)
இதை இன்று வரை நம்மிடம் இருந்து வரும் அறிவுத் தொகுப்பு என்று சுருக்கமாக விளக்கிவிடலாம்.\
நம்முடைய உயர்வைக் குறியாகக் கொள்ளல் உணர்ச்சி, எண்ணம்,உணர்வுக் கிளர்ச்சி (Aspiration, Emotion, Thought, and Sensation)இந்த நான்கும் தான் தனி மனித அறிவின்அடிப்படை அங்கங்கள்.
உயர்வைக் குறியாகக் கொண்டு செயல்படுவது நமது நீண்ட கால லட்சியங்களைக் குறிக்கிறது. உணர்ச்சி என்பது நாம் எடுக்கும் முடிவுகளின் மீது செல்வாக்கு செலுத்துகிறது. எண்ணம் நமது தர்க்க ரீதியான அறிவு மற்றும் கற்றலை அமைக்கிறது. உணர்வுக் கிளர்ச்சி நமது பார்வையையும் அனுபவத்தையும் அடித்தளமாகக் கொண்டது.
ஆர்டிபீஷியல் இண்டெலிஜென்ஸ் (AI)
கணினி உதவியுடனான அமைப்புகள், மிகப்பெரும் தரவுகளைக் கொண்ட கணிப்பு நெறிமுறை ( algorithm),நுணுகிக் காண வேண்டிய வடிவமைப்புகள் – இவை அனைத்தும் கூடிய மனித அறிவு போன்ற மெஷின் அறிவு தான் செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.ஐ.
ஹைப்ரிட் இண்டெலிஜென்ஸ் (HI)
மேலே கூறிய இரண்டு இணைந்தது தான் ஹெச்.ஐ.
இது டாக்டர்களுக்கும் மருத்துவத் துறையில் உள்ள மற்றவர்களுக்கும் ஏன், எல்லோருக்குமே பெரிதும் பயன்படும்.
நிதி நிர்வாகம்
ஏ ஐ மூலம், ஸ்டாக் மார்கெட்டில் உள்ள ஸ்டாக் பற்றிய விவரங்கள், முதலீடு செய்வதில் உள்ள அபாயங்கள் உள்ளிட்டவற்றைத் தெரிந்து கொள்ளலாம். எந்த முதலீடு பயனைத் தரும் என்பதை ஏராளமான தரவுகள் மூலம் அறிந்து கொள்வதோடு நிதி நிர்வாகம் உலகத்தில் எந்தத் திசையில் போகிறது என்பதை அறிந்து கொண்டு அதற்குத் தக நமது வழிகளை அமைத்துக் கொள்ளலாம்,
வாகனங்கள்
வாகனங்களைச் செலுத்த சாலை விதிகளை இனி ஏ ஐயே பார்த்துக் கொள்ளும். டிராபிக் சிக்னலில் வாகனங்கள் தானே நிற்கும், தானே கிளம்பும். பாதசாரிகள் சாலையைக் கடந்தால் தானே ப்ரேக் போட்டு நிற்கும். இது இன்னொரு டிரைவர் போல வாகன ஓட்டுநருக்கு உதவியாக இருக்கும்.
தயாரிப்புத் துறை
தொழிற்சாலைகளில் இனி தரக் கட்டுப்பாடு, அசெம்பிளி ஆகியவை இதன் உதவியுடன் சுலபமாகிவிடும். கழிவுகள் குறைவாக இருக்கும்.
திறன் அதிகரிக்கும்.
டெலிவரிகள்
இப்போதே அமேஸான் பத்து நிமிடங்களில் கேட்டதை வீட்டில் டெலிவரி செய்கிறது, இனி ஒவ்வொரு டெலிவரியும் ரூல் படி திட்டவட்டமாக வேகத்துடன் செய்யப்படும்.
துடிப்பான நகரங்கள் (Smart cities)
ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு மேனேஜர் போலச் செயல்பட்டு அனைத்தும் தக்க விதிகளின் படி நடக்கும். நகரமே துடிதுடிப்புடன் செயல்படும்.
சைபர் பாதுகாப்பு
இனி சைபர் திருட்டு நடைபெற வாய்ப்பில்லை. சைபர் பயமுறுத்தல், சைபர் கொள்ளை என்பதெல்லாம் நடக்க முடியாதபடி ஏஐ அமைப்புகள் பார்த்துக் கொள்ளும்!
இவை அனைத்தையும் தனி மனித வாழ்வில் அறிந்து வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
ஆகவே இனி அனைவரும்க்கும் வேண்டுவது – ஹைப்ரிட் இண்டெலிஜென்ஸ். – இரட்டை அறிவு!