சபரிமலை அய்யப்பன் கோவிலை ஆட்டிப்படைக்கும் இரண்டு பிரச்சினைகள்

ஞானமயம் வழங்கும் (14 9 2025) உலக இந்து செய்திமடல்

Written by London Swaminathan

Post No. 14,988

Date uploaded in London –  15 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும்  லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மாதம் 14-ம்  தேதி 2025-ம் ஆண்டு

****

SABARIMALAI TEMPLE CONTROVERSY

ILAYARAJA DONATION TO KOLLUR MOOKAMBIKAI TEMPLE

சபரிமலை: தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்;

கேரள ஹைகோர்ட் கண்டனம்

கேரளத்தில் மேலும் ஒரு இந்து விரோத நடவடிக்கை நடந்திருக்கிறது. இதற்கு கேரள ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே பம்பையில், இருபதாம் தேதி கடவுள் நம்பிக்கை  இல்லாதவர்கள் நடத்தப்போகும் ஐயப்ப  சங்கமக் கூட்டத்தினை இந்துக்கள் கண்டித்து வருகின்றனர்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க முலாம் பூசிய தகடுகளை அகற்றிய தேவசம்போர்டுக்கு, கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலின் புனிதமான சந்நிதானத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள துவாரபாலக சிலைகளில் பொருத்தப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளை அகற்றி சென்னைக்கு அனுப்பிய திருவிதாங்கூர் தேவசம் போர்ட்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தச் செயல், முந்தைய நீதிமன்ற உத்தரவுகளை மீறியது என்று குற்றம் சாட்டி, அந்தத் தகடுகளை உடனடியாக சபரிமலைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கோவிலின் தங்கப் பொருட்கள் தொடர்பான அனைத்து வேலைகளும் சந்நிதானத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் 2023 ஜூன் 20 அன்று வழங்கப்பட்ட உத்தரவை தேவசம் போர்ட் மீறியுள்ளது.

, “இது முற்றிலும் தவறானது; முன் அனுமதி பெற போதிய நேரம் இருந்தும் ஏன் செய்யப்படவில்லை?” என்று கேள்வி எழுப்பி, போர்ட் தலைவர் பி.எஸ். பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேவசம் போர்ட் தலைவர் பி.எஸ். பிரசாந்த், தகடுகள் சேதமடைந்ததால், மண்டலம் காலம் முன் சரிசெய்ய சென்னைக்கு அனுப்பியதாக விளக்கம் அளித்தார். கோவில் தந்திரி (முக்கிய புரோகிதர்) அனுமதி அளித்ததாகவும், சிறப்பு ஆணையரின் அனுமதி தேவையில்லை என்றும் அவர் வாதிட்டார்.

Board போர்ட்,  இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது, ஏனெனில் சரிசெய்யும் பணி ஏற்கனவே தொடங்கியுள்ளது.

இது சபரிமலை கோவிலில் முதல் முறை அல்ல; பக்தர்கள் இந்தச் சம்பவத்தை கண்டித்து, கோவில் சொத்துகளின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம், பக்தர்களின் நம்பிக்கைக்கு இது சவாலாக மாறியுள்ளது..

****

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்குத் தடை கோரிய மனு தொடர்பாக விளக்கமளிக்கக் கேரள அரசுக்கும், திருவிதாங்கூர்  தேவசம் போர்டுக்கும் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

பம்பையில் வரும் 20ம் தேதியன்று சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடத்த திருவிதாங்கூர்த் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டுக்குத் தடை விதிக்கக்கோரி ஹைந்தவீயம் அமைப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது..

அந்த மனுவில், மாநாட்டைத் தேவசம்போர்டு நடத்துவதாகக் கூறி கேரள அரசே நடத்துவதாகவும், ஒரு மதசார்பற்ற அரசு மாநாடு நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிமன்றம் மனு தொடர்பாக விளக்கமளிக்கக் கேரள அரசுக்கும், திருவிதாங்கூர்த் தேவசம் போர்டுக்கும் உத்தரவிட்டது.

****

மூகாம்பிகை கோவிலுக்கு இளையராஜா வைர கிரீடம் நன்கொடை

கர்நாடகா மாநிலத்திலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள வைர கிரீடம், தங்க வாள் மற்றும் நகைகளை காணிக்கையாக இளையராஜா வழங்கினார்.

பிரபல இசை அமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜா, கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த நகைகளை காணிக்கையாக வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தனது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவுடன் உடுப்பியில் உள்ள  புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு வருகை தந்த இளையராஜா, அம்மனுக்கு இரண்டு வைர கிரீடங்கள், ஒரு நெக்லஸ், மற்றும் வீரபத்ர சுவாமிக்கு ஒரு தங்க வாள் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கினார்.

கோவில் வட்டாரங்களின் கூற்றுப்படி, இந்த காணிக்கைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.8 கோடி இருக்கும்.

இளையராஜா புதன்கிழமை காலை, கோவிலுக்கு சென்று பூசாரிகள் முன்னிலையில் கோயிலுக்கு நகைகளை வழங்கினார்.

*****

வரலாறு கொண்டாடும் தருணம்! சுவாமி விவேகானந்தர் குறித்து பிரதமர் TWITTER பதிவு

சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றியது, வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் முன்பு, 1893–ம் ஆண்டு சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது; அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893ம் ஆண்டு இதே நாளில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை ஒரு திருப்புமுனை தருணமாக கருதப்படுகிறது. நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்தி உலக அரங்கில் இந்திய கலாசாரம் பற்றி அவர் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இது உண்மையிலேயே நமது வரலாற்றில் மிகவும் கொண்டாடப்படும் தருணங்களில் ஒன்று, எனக் குறிப்பிட்டுள்ளார்.

****

கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி : ஐகோர்ட் கேள்வி

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்த விபரத்தை மனுவாக தாக்கல் செய்யும்படி, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மண்டபத்தில் மீது ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து, தமிழக அரசு, கடந்த 2022 மே 15ல் அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து, சபாநாயகர் கோவில் செயலர் சிவராம தீட்சிதர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொது தீட்சிதர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், வழக்கறிஞர் கே.ஹரிசங்கர் ஆஜராகி, ஹிந்து அறநிலையத் துறை அறிக்கையில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளுக்கான உரிய விளக்கங்கள் இடம்பெற்ற அறிக்கையை தாக்கல் செய்தனர்.அதையடுத்து, ”கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய, தீட்சிதர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படும்,” என, மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, அறிநிலையத் துறை சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், ”கனகசபை மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதை பொது தீட்சிதர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்; தற்போது, அதை மாற்ற முடியாது,” என்றார்.

பக்தர் ராதா தரப்பில் வழக்கறிஞர் சி.கனகராஜ் ஆஜராகி, ”கடந்த 3ம் தேதி, சிதம்பரம் கோவிலில் நேரில் ஆய்வு செய்தேன். கோவிலில் பொருத்தப்பட்ட, 55 கண்காணிப்பு கேமராக்களில், 25 மட்டுமே இயங்குகின்றன. கடந்த 2016 மே 1 முதல், சிதம்பர ரகசிய வழிபாடு நிறுத்தப்பட்டு உள்ளது. ஆய்வு செய்ததில், 16க்கும் மேற்பட்ட குறைபாடுகள் உள்ளன. இவற்றை பட்டியலிட்டு, அறிக்கையாக தாக்கல் செய்துள்ளேன்,” என்றார்.

அப்போது குறுக்கிட்ட பொது தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர், ‘அறிக்கையில் கூறப்பட்ட விபரங்களின் நகல் வழங்கப்படவில்லை. பக்தர் என கூறி கொண்டு, அறநிலையத் துறைக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்’ என, குற்றம்சாட்டினர்.

இதையடுத்து நீதிபதிகள், ‘கனகசபை மண்டபத்தில் ஏறி தரிசனம் செய்ய, யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக, பொது தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். பக்தர் ராதா தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைக்கும் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை அக்., 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

****

திருப்பரங்குன்றத்தில் ஆடு , கோழி  பலியிடத் தடை

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, மாடு, கோழி போன்ற விலங்குகளைப் பலியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. சில இஸ்லாமிய அமைப்புகள் மலை மீது ஆடு, கோழி பலியிட முயற்சிப்பதால், இதற்கு பக்தர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது மத நல்லிணக்கத்தைக் காக்கும் அரசின் நோக்கம் என்றும், எந்தப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

*******

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

ஆஸ்திரேலியா விமான நிலையத்திற்கு மல்லிகைப்பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகை நவ்யா நாயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிபி மலையின் இஷ்டம், நந்தனம், அழகிய தீயே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். இவர் சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதை இரண்டு முறைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக நவ்யா நாயர் சென்றிருந்தார். அப்போது தனது தந்தை கொடுத்த மல்லிகைப் பூவில் ஒரு பகுதியைத் தலையில் சூடிய நவ்யா நாயர், மீதமுள்ள பூவைப் பையில் எடுத்துச் சென்றார்.

கொச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்றபின் அங்கிருந்து மெல்போர்னுக்கு விமானத்தில் பயணித்தார். இந்நிலையில் விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள், சட்டத்திற்கு எதிராகப் பூ எடுத்துச் சென்றதாகக் கூறி ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

xxxxxx

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பாரதி நினைவு தினம் செப்டம்பர் 11  ஆம் தேதி நாடு முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது

‘முண்டாசுக் கவிஞர்’ மகாகவி சுப்ரமணிய பாரதியார்  நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்வின் போது, தில்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டார்கள்.

பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாகவி பாரதியாரின் 104ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையிலும் பாரதியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள பாரதியாரின் உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

****

சத்குரு’ பேசுவது போல அச்சு அசல் ‘வீடியோ’: பெண்ணிடம் ரூ.3.75 கோடி ‘சைபர்’ மோசடி

பெங்களூரு: ஆன்மிகவாதி சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுவது போல, அச்சு அசல் ‘வீடியோ’ வெளியிட்டு, 57 வயது பெண்ணிடம், 3.75 கோடி ரூபாயை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.முதலீடு கர்நாடக மாநிலம், பெங்களூரு, சி.வி.ராமன் நகரை சேர்ந்த, 57 வயது பெண், கடந்த பிப்ரவரி 25ம் தேதி, முகநுாலில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, கோவை ஈஷா நிறுவனர் சத்குரு, ‘ஆன்லைன் டிரேடிங்’ எனப்படும், இணையதளம் வாயிலாக செய்யப்படும் வர்த்தகம் குறித்து பேசுவது போல வந்த வீடியோவை பார்த்தார்.

வீடியோவில் குறிப்பிடப்பட்ட, ‘வாட்ஸாப்’ எண்ணை தொடர்பு கொண்டு, வங்கி எண் உட்பட அனைத்து விபரங்களையும் கொடுத்தார்.

இதையடுத்து, அந்த பெண்ணை வலீத் என்பவர் தொடர்பு கொண்டு, ‘ஆன்லைன் டிரேடிங்’ குறித்து விளக்கினார்.

வலீத் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்த அப்பெண், பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தார்.

‘ஸ்விட்ச் ஆப்’ அந்த செயலியில், அவர் பல லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியதாக காண்பித்தது. இதை நம்பியவர் ஏப்ரல் 23ம் தேதி வரை, 3.75 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தார்.

இந்த தொகையை சில நாட்களுக்கு முன், அவர் எடுக்க முயற்சித்தபோது, எடுக்க முடியவில்லை.

இதுகுறித்து, வலீத்திடம் கேட்டார். அதன்பின், அவரது மொபைல் போன், ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், சைபர் போலீசாரிடம் புகா ர் தெரிவித்தார்.

போலீசார் கூறுகையில், ‘சைபர் மோசடி நடந்து, பல மாதங்களுக்கு பின், அப்பெண் புகார் அளித்துள்ளார். பணத்தை மீட்பது சவாலான விஷயம். இருப்பினும், பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

‘சத்குரு பேசுவது போல் அச்சு அசல் தொழில்நுட்பத்தில் போலியான வீடியோவை உருவாக்கியுள்ளனர். அதை பார்த்து, உண்மையிலேயே அவர் பேசுவதாக அப்பெண் நினைத்து, முதலீடு செய்துள்ளார்’ என்றனர்.

****

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும்  லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு செப்டம்பர் மாதம் 21–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு  மணிக்கும்,

இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags – World Hindu News, 14 -9-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi, Latha

ஆலயம் அறிவோம்! ஆழ்வார் திருநகரி(Post No.14,987)

 WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 14, 987

Date uploaded in London – 15 September 2025 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-9-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்

பாடியாடிப் பணிந்து பல் படிகால் வழியேறிக் கண்டீர்

கூடி வானவரேத்த நின்ற திருக்குருகூர் அதனுள்

ஆடுபுட்கொடி யாதி மூர்த்திக்கு அடிமை புகுவதே

                                                                                      – நம்மாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரி தலமாகும்.

மூலவர்: ஆதிநாதன், ஆதிப்பிரான், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

தாயார்: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி இருவருக்கும் தனித்தனியே கோவில்கள் உள்ளன

தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்

விமானம் : கோவிந்த விமானம்

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகும் வழியில் 35 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது.

இத்தலத்திற்கு தாந்த க்ஷேத்திரம், வராஹ க்ஷேத்திரம், சேஷ க்ஷேத்திரம், தீர்த்த க்ஷேத்திரம் என்று பல பெயர்கள் உண்டு.

இத்தலத்தைப் பற்றிய புராண வரலாறுகளும் சரித்திர வரலாறுகளும் பல உண்டு.

முன்னொரு காலத்தில் பிரம்மா திருமாலை நோக்கி பூமியில் தவம் செய்ய சிறந்த ஒரு இடத்தைத் தெரிவிக்குமாறு வேண்ட அவர் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்த இந்த இடத்தைச் சொல்லி இங்கு அதிப்பிரான் என்ற திருநாமத்தோடு தான் எழுந்தருளி இருப்பதையும் கூறினார். இங்கு வந்து தவமியற்றிய பிரம்மாவுக்கு திருமாலே குருவாக வந்து உபதேசித்து அருளினார். அதனால் இந்தத் தலத்திற்கு குருகூர் என்ற பெயர் ஏற்பட்டது.

நம்மாழ்வாரின் மூதாதையரான திருவழுதி வளநாடனின் பாட்டனாராகிய குருகன் என்ற அரசன் இதைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தமையால் இது குருகாபுரி என்ற பெயர் பெற்றது என்று வரலாறு கூறுகிறது.

குருகு என்பதற்கு நாரை, கோழி, சங்கு ஆகிய பல பொருளுண்டு, இங்கு குருகாகிய சங்கு வந்து மோட்சம் பெற்றதால் இது குருகூர் என்ற பெயரைப் பெற்றது என்றும் கூறுவர்.

வேதம் தமிழ் செய்த மாறன் என்றும் சடகோபன் என்றும் அறியப்படும் நம்மாழ்வாரின் அவதார மகிமையால் ஆழ்வார் திருநகரி என்ற பெயரை இத்தலம் பெற்றது.

இங்கு ஆழ்வார் சந்நிதியும் ஆதிப்பிரான் சந்நிதியும் தனித்தனியே உள்ளது. பெருமாள் சந்நிதியிலிருந்து 60 அடி தூரம் தள்ளி ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.

வேடன் ஒருவன் தனது தவத்தால் சங்கன் என்னும் முனிவனாக மறுபிறப்பில் பிறந்து தவம் செய்து கொண்டிருந்த போது அவனைச் சந்தித்த நாரதர் அவனிடம் அவன் தவம் இயற்றும் காரணத்தைக் கேட்டார். அவன் எட்டுத் திக்கும் காவல் புரியும் ஒரு காவலனாக ஆக தவம் செய்வதாகக் கூறினான். நாரதர் அவனை நோக்கி, அதை விட மேலான பதமளிக்கும் நாராயணனைக் குறித்துத் தவம் செய்யுமாறு கூறினார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சங்கன் கேட்க,

“நீ சங்கரக உவர்க் கடலில் பிறந்து குருகூரில் ஏறி அங்கு ஆதிநாதனை 1000 ஆண்டுகள் சூழ வருவாயாக” என்று கூறினார். அவனும் அப்படியே செய்ய ஆரம்பித்தான். ஆயிரம் ஆண்டுகள் கழியவே ஆதிப்பிரான் கருட வாகனத்தில் தேவியருடன் காட்சி அளித்தார். சங்கினங்களுடன் சங்கன் ஏறி வந்த துறைக்கு திருச்சங்கணித்துறை என்று பெயர் வழங்குகிறது. அதை இன்றும் காணலாம்.

ராமாவதாரத்தில் ஶ்ரீ ராமர் தன் அவதாரத்தை முடிக்க இருக்கும் போது அவரைப் பார்க்க எமன் வந்தான். அப்போது ராமர் யாரையும் உள்ளே அனுமதிக்காதே என்று லட்சுமணனிடம் ஆணையிட்டார். அந்தச் சமயம் பார்த்து துர்வாச முனிவர் ராமரைப் பார்க்க வரவே அவரது சாபத்திற்கு அஞ்சி லட்சுமணன் அவரை உள்ளே அனுமதித்தான்.

துர்வாசரை உபசரித்து அனுப்பி விட்டு வந்த ராமன் லட்சுமணனை நோக்கி, “என் ஆணையை மீறி மரம் போல நின்றதால் நீ மரமாக இருக்கக் கடவாய்” என்று சாபமிட்டார்.

“எப்படி அண்ணா உங்களை விட்டுப் பிரிவேன்” என்று லட்சுமணன் வருந்திப் புலம்ப, ராமன், “வருந்தாதே. சீதையைக் காட்டில் வாழச் செய்த பாவம் போக 16 ஆண்டுகள் அசையாத பிம்பமாய் நான் பிறக்க வேண்டியுள்ளது. அப்போது நான் மரமாக இருக்கும் உன் மடி மீது அமர்ந்து கொள்வேன்” என்று கூறி அருளினார்.

அதன்படியே லட்சுமணன் இங்கு வந்து ஒரு புளியமரமாக ஆனான்.

அங்கு காஸ்யப முனிவர் காரி என்ற பெயரில் ஒரு குறுநில மன்னராகப் பிறந்தார். அங்கே உடையநங்கை என்ற மங்கை அவருக்கு மனைவியாக ஆனாள். அந்த தம்பதிகளுக்கு விஷ்ணு பிரான் நம்மாழ்வாராகப் பிறந்தார். அவர் புளிய மரமாக இருந்த லட்சுமணனின் மடி மீது ஏறி 16 ஆண்டுகள் யோக நிஷ்டையில் இருந்தார்.

புளியமரத்தின் பொந்தில் 16 ஆண்டுகள் அமர்ந்து பின்னரே வாய் திறந்து அருளினார் நம்மாழ்வார்..

சேஷனான லட்சுமணனே இங்கு புளியமரமாக இருப்பதால் இது சேஷ க்ஷேத்திரம் என்ற பெயரைப் பெற்றது.

ஆழ்வார் தங்கி தவம் செய்த புளியமரம் ஏழு கிளைகளோடு உள்ளது. ஆழ்வார் கோவிலைச் சூழ இருந்த பகுதிக்கு ஶ்ரீ பராங்குச சதுர்வேதி  மங்கலம் என்று பெயர்.

இங்கு நம்மாழ்வாரின் விக்ரஹம் எந்தவிதமான  உலோகத்தாலும் செய்யப்படவில்லை. தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி அதில் ஆழ்வார் தனது சக்தியைப் பிரயோகிக்க, அதனால் உருவானது இந்த விக்ரஹம்.

வேதத்தின் சாரத்தை திருவாய்மொழியாக நம்மாழ்வார் அருளிச் செய்த தலம் இதுவே. நம்மாழ்வார் 11 பாக்களில் இத்தலத்தை மங்களாசானம் செய்து அருளியுள்ளார்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தைத் தொகுக்க முனைந்த நாதமுனிகள் மதுரகவி ஆழ்வாரின் வம்சத்தாரிடம் கண்ணி நுண் சிறுத்தாம்பைப் பெற்று அதை பன்னீராயிரம் முறை ஜெபித்தார்.

உடனே நம்மாழ்வாரே பிரத்யட்சமாக எழுந்தருளி ஒரு திரையிட்டு அதனுள் அமர்ந்து கொண்டு நாலாயிரம் பாக்களையும் நாதமுனிக்கு அருளினார்.

வராஹ அவதாரத்தைப் பார்க்க விரும்பிய சில முனிவர்கள் இத்தலத்தில் கடும் தவம் புரிந்தனர். அவர்களின் தவத்தை மெச்சி வராஹ நாராயணன் தன் மடியில் பூமிப்பிராட்டியுடன் காட்சி தந்தார்.

அதனால் இது வராஹ க்ஷேத்திரம் என்ற பெயரைப் பெற்றது.

இங்குள்ள கோவிலில் உள்ள திருமஞ்சன மண்டபம், கண்ணாடி மண்டபம் மிகவும் வேலைத்திறம் கொண்டவையாகும்.

இங்குள்ள கல்நாதஸ்வரம் ஒரு அதிசய இசைக்கருவியாகும். இதன் நீளம் ஒரு அடி. மேல்பாகம் கால் அங்குலமும், அடிப்பாகம் ஒரு அங்குலமும் குறுக்களவைக் கொண்டது. அடிப்பாகம் பித்தளைப் பூணால் செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் அளிக்கப்பட்டது. இதற்கு மோகன வீணை என்று ஒரு பெயர் உண்டு.

ராமானுஜர் உள்ளிட்ட பெரும் மகான்களும், வைணவ ஆசாரியர்களும் பக்தர்களும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர்.

இதன் பெருமையை கவிச்சக்கரவர்த்தி கம்பரும் பாடியுள்ளார்.

சடகோபனைப் போற்றி சடகோப அந்தாதி என்ற நூலையும் கம்பர் இயற்றினார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ ஆதிநாதரும் ஆதிநாத வல்லியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

–subham–

பாரதி போற்றி ஆயிரம்- மூன்றாம் பாகம் (Post.14,986)

Bharatiyar Statue in Delhi 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,986

Date uploaded in London – 15 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

பாரதி போற்றி ஆயிரம்

மூன்றாம் பாகம் 

ச. நாகராஜன்

(இந்த நூலைத் தொகுத்தவர்) 

22 கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய 254 பாடல்கள் முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.

 2 கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய 324 பாடல்கள் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.

 இந்த மூன்றாம் பாகத்தில் கே.பி.அறிவானந்தம் மற்றும் 27 கவிஞர்கள் இயற்றிய 422 பாடல்கள் இடம் பெறுகின்றன.

மூன்றாம் பாகம்

பிற்சேர்க்கை

கவிஞர்கள், பாடல்களின் பட்டியல்

கவிஞர்கள்

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம்   87 பாடல்கள்

(பகுதிகள் 71 முதல் 78 முடிய)

புலவர் கு.பொ.பெருமாள்                    283 பாடல்கள்

(பகுதிகள் 79 முதல் 88 முடிய)       

கலைமாமணி புலவர் நாகி,
புதுச்சேரி – 9
     1 பாடல்

தமிழ்மாமணி புலவர்         

சீனு. இராமச்சந்திரன், புதுச்சேரி-9             2 பாடல்கள்        கலைமாமணி இலந்தை இராமசாமி
கனடா   1 பாடல்

கவியோகி வேதம்
சென்னை                  1 பாடல்

பாவலர் எஸ். பசுபதி,
கனடா                 1 பாடல்

கலைமாமணி கல்லாடன்
புதுச்சேரி          2 பாடல்கள்

பாவலர் அண்ணா. தருமலிங்கம்
புதுச்சேரி    1 பாடல்

புலவர் செ. இராமலிங்கன்
புதுச்சேரி          1 பாடல்

புலவர் துரை. மாலிறையன்
புதுச்சேரி
         2 பாடல்கள்

பாவலர் சூரிய விசயகுமாரி
புதுச்சேரி         2 பாடல்கள்

கவிஞர் தே. சனார்த்தனன், 
புதுச்சேரி          1 பாடல்

பாவலர் வே. முத்தையன்,
புதுச்சேரி           1 பாடல்

பாவலர் கி. பாரதிதாசன்,
பிரான்சு.               1 பாடல்

கவிஞர் வ. பழனி,
புதுச்சேரி                  1 பாடல்

கவிஞர் மு. தியாகராசன்,
புதுச்சேரி           1 பாடல்

கவிஞர் இராச.தியாகராசன், புதுச்சேரி
         2 பாடல்கள்

புலவர் மு. இறைவிழியனார்
ஆசிரியர்

‘நற்றமிழ்’ – புதுச்சேரி
                          1 பாடல்

பாவலர் சிவ. இளங்கோ
புதுச்சேரி             2 பாடல்கள்

கவிஞர் முனைவர் உரு. அசோகன்
புதுச்சேரி  2 பாடல்கள்

கவிஞர் ந. இராமமூர்த்தி,புதுச்சேரி           2 பாடல்கள்

ஹா.கி.வாலம் அம்மையார்                    1 பாடல்

ப.ஜீவானந்தம்                                1 பாடல்

தேனம்மை லட்சுமணன்                      2 பாடல்கள்

கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி                1 பாடல்

மன்னை பாஸந்தி                           10 பாடல்கள்

ச.நாகராஜன்                                  9 பாடல்கள்

**

மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நல்ல விதமாக மேம்படுத்தினால் வரும் அபூர்வ பலன்கள்! (Post.14,985)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,985

Date uploaded in London – 15 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை நல்ல விதமாக மேம்படுத்தினால் வரும் அபூர்வ பலன்கள்! 

ச. நாகராஜன் 

உபநிடதம் கூறும் சத்தியம்! 

மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ: என்று அமிர்த பிந்து உபநிடதம் கூறுகிறது.

மனமே தான் பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் காரணம் என்பது இதன் பொருள். 

மனதிற்கும் உடலிற்கும் உள்ள தொடர்புக்கான ஒரு சோதனை! 

மூன்றாம் நெப்போலியன் அரசாண்ட சமயத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை ஹிப்நாடிஸம் என்ற தனது நூலில் பாரன் நில்ஸ் போஸ் (BAARON NILS POSSE) என்பவர் விவரித்துள்ளார்.

உடலுக்கும் மனதிற்கும் உள்ள தொடர்பை அறிவதற்காக மரணதண்டனை அடைந்த ஒரு கைதியை தன் பரிசோதனைக்காக ஒரு விஞ்ஞானி கேட்க மூன்றாம் நெப்போலியன் சம்மதித்து அந்தக் கைதியை விஞ்ஞானியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டான்.

கைதிக்கோ தன் மரணம் நிச்சயம் என்ற நினைப்பு.  விஞ்ஞானி ஒரு நாளைக் குறிப்பிட்டு அன்று அவன் கழுத்திலிருந்து ரத்தம் எடுக்கப் போவதாகவும் அப்போது மரணம் சம்பவிக்கும் என்று கைதியிடம் கூறிவிட்டார்.

குறிப்பிட்ட நாள் வந்தது. அவன் கண்களை இறுகக் கட்டி ஒரு டேபிளின் மீது அவனைக் கிடத்தி கட்டி விட்டார் விஞ்ஞானி. அவன் காது மட்டும் எதையும் கேட்கும் நிலையில் வைக்கப்பட்டது. அந்த நிலையில் ஒரு சிறிய ஊசியை எடுத்து கைதியின் கழுத்தில் ஒரு சிறிய கீறு கீறினார் விஞ்ஞானி.

அதே சமயம் அருகில் இருந்த ஒரு குழாயிலிருந்து கீழே உள்ள பாத்திரத்தில் நீர் சொட்டும்படி செய்யப்பட்டது. மற்றபடி எங்கும் நிசப்தம். குழாயிலிருந்து தண்ணீர் சொட்டும் சப்தத்தைக் கைதி தெளிவாகக் கேட்டான். கண்கள் கட்டப்பட்டு காது மட்டும் கேட்கும் நிலையில் இருந்த அவன் தனது ரத்தமே உடலிலிருந்து வெளியே குபுகுபுவென விழுந்து சொட்டுவதாக எண்ணினான். இந்த நிலை தொடர்ந்தது. சரியாக ஆறே நிமிடங்களில் கைதி இறந்து விட்டான்! ஊசியின் மிருதுவான கீறல் மட்டுமே அவன் மீது பட்டது. ரத்தம் ஒரு சொட்டுக் கூட அவன் உடலிலிருந்து வரவில்லை. இருந்தாலும் ஆறே நிமிடங்களில் அவன் இறந்து விட்டான். காரணம் என்ன? குழாயிலிருந்து விழுந்த தண்ணீர் சத்தத்தைக் கேட்டு தன் ரத்தமே உடலிலிருந்து வெளியேறுவதாக அவன் நம்பியதால் தான்! தனது சாவு நிச்சயம் என்று அவன் நம்பி விட்டான். அதனாலேயே அவன் இறந்தும் போனான்.

மனதிற்கும் உடலிற்கும் உள்ள தொடர்பு அவ்வளவு வலிமையானது; நுட்பமானது! மனம் என்ன நினைக்கிறதோ அது உடலைப் பாதிக்கிறது. 

அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள்! 

இப்போது நவீன அறிவியல் பலவித சோதனைகளை மேற்கொண்டு மனதிற்கும் உடலுக்கும் உள்ள வலுவான தொடர்பை  இன்னும் அதிகமாக நிரூபிக்கிறது. 

பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் உள்ள உடல்நல அறிவியல் பிரிவு

கூறுகின்ற ஆய்வு உண்மைகள் வியக்க வைக்கின்றன.

மூளை இயல் நிபுணர்கள் செரிப்ரல் கார்டெக்ஸ் எனப்படும் மூளை மேலுறையையும் அட்ரினல் மெடுல்லா என்ற பகுதியையும் இணைக்கும் Neural Network எனப்படும் நரம்புப் பின்னலமைப்பு தான், ஒரு அவசர காலத்தில் உடனடியாக செயல்படும் பகுதி எனக் கண்டுபிடித்துள்ளனர். இதுவே மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை உறுதியாக்கும் சான்றாக விளங்குகிறது. 

மன அழுத்தம், மனச் சோர்வு இதர மன நிலைகள் ஆகியவை உடல் அங்கங்களின் செயல்களை மாற்றக் கூடியவை.  உளவியல் சார்ந்த நோய்களுக்கும் இது காரணமாக அமைகிறது என்பது அவர்களது கண்டுபிடிப்பாகும்.

இந்தக் கண்டுபிடிப்பு Proceedings of the National Academy of Sciences (PNAS) இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

 மோசமான இந்த உளவியல் நோய்களைப் போக்க யோகா, தியானம் உள்ளிட்டவை எப்படி உதவுகிறது என்பதையும் மூளை இயல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

“நாங்கள் கண்டுபிடித்துள்ளது மிகவும் குறைந்த அளவு தான். இன்னும் கண்டுபிடிக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என்றும் அவர்கள் வியப்புடன் கூறுகின்றனர். 

நல்ல தொடர்பு தரும் நல்ல பலன்கள்! 

மனதிற்கும் உடலுக்கும் ஒரு நல்ல தொடர்பு இருந்தால் அதனால் விளையும் நற்பலன்கள் பல. 

அவையாவன:

மன அழுத்த நிர்வாகம்: மனம் – உடல் தொடர்பு அன்றாட மன அழுத்த நிலையைச் சமாளிக்க உதவும்.

அதிகமான இதயத் துடிப்பு, தசைகளின் இறுக்கம் இவற்றை உடனடியாக அறியலாம். இதை உடனடியாக அறிவது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும். 

தூக்கத்தில் நல்ல முன்னேற்றம்:

மனத்தையும் உடலையும் இசைபட இருக்க வைத்தால் நல்ல உறக்கம் ஏற்படும். உடலின் தசை பாகங்கள் ஓய்வு பெறப் பெற நல்ல தூக்கம் ஏற்படும். 

நல்ல மனம் – உடல் தொடர்பு ஏற்பட்டால் தன்னைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம். உணர்ச்சியைத் தூண்டும் ஒரு நிலை ஏற்படும் போது அதை சுலபமாகக் கட்டுப்படுத்தி நிதானமாகச் செயல்பட முடியும். இந்தத் தன் உணர்வானது நமது பழக்கவழக்கங்களை அன்றாடச் செயல்பாடுகளில் மாற்றத்தை நல்ல விதமாக விளைவிக்கும். 

உணவுத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவற்றில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இதன் விளைவாக மொத்த உடல் நலம் மற்றும் மன நலம் கூடும், 

இதனால் ஜீரண உறுப்புகள் நன்கு செயல்பட்டு சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணமாகும். ஆரோக்கியம் மேம்படும்.  

மனம் – உடல் தொடர்பை நல்ல விதமாக மேம்படுத்த வழிகள்

நல்ல மனம் – உடல் தொடர்பை எப்படி அடைவது, மேம்படுத்துவது என்ற கேள்வி இப்போது எழலாம்.

 அதற்கான வழிகள் இவை தான்: 

தியானம்

மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடல் நலம் கூடவும் தொடர்ந்து சீராக குறிப்பிட்ட வேளையில் தியானம் செய்வது மிகவும் நல்லது. 

உடல்பயிற்சி

தினமும் உடல் பயிற்சி செய்வது எண்டார்பினை ஊக்குவிக்கும் விளைவுகளைச் செய்கிறது. அது மனநிலையை எப்போதும் மேம்பட்ட நிலையில் வைக்கும். மனச்சோர்வு, கவலை, அழுத்தம் ஆகியவற்றை நீக்கும்.

சமச்சீர் உணவு

நல்ல சத்துள்ள உணவு நமது உடல் மற்றும் மனதின் மீது நேரடியாக நல்ல விளைவுகளை ஏற்படுத்த வல்லது. சமச்சீர் உணவைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தால் நமது மனம் தெளிவடையும். உணர்வுகள் நிலையாக இருக்கும். உடலில் சக்தி கூடும்.

தேவையான தூக்கம்

மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டது. தூக்கமின்மை பலவித உடல் கோளாறுகளுக்கு ஆரம்பமாக அமைகிறது. நல்ல தூக்கம் மூளையைத் திறம்படச் செயல்பட வைக்கிறது. அன்றாடம் நல்ல தூக்கத்தைக் கொள்வது உடல்- மனம் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. 

இப்படி ஏராளமான நன்மைகளை நல்ல மனம்- உடல் தொடர்பு மூலம் அடையலாம். மோட்சத்திற்கே இது வழி வகுக்கும் என்று உபநிடதம் கூறும் போது மற்றவையெல்லாவற்றையும் அடைய முடியாதா என்ன?

***

From the Bitterness of Disease man learns the Sweetness of Health -Part 2 (Post No.14,984)

Written by London Swaminathan

Post No. 14,984

Date uploaded in London –  14 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

2Proverbs on Doctors2

Part Two

Make much of a physician through necessity.

Where there are three physicians there are two atheists.

Every idiot, priest, jew, monk, actor, barber and old woman fancy them physicians.

–Latin proverbs

Better no doctor at all than three.

Before a doctor can cure one, he will kill ten.

Wait with your pains till the doctor comes.

The doctor cures when he can smell money.

The doctor demands his fees whether he has killed the illness or the patient.

A beggar does not hate another beggar as much as one doctor hates another.

Ask the patient, not the doctor, where the pain is.

In Padua there are more doctors than patients.

–Polish

The more doctors, the more diseases- Portuguese

If you wish to die soon, make your physician your heir.

Romanian

Six men give a doctor less to do than one woman.

A draught of water on a salad deprives the doctor of a ducat; a draught of water on an egg deprives him of two.

Don’t take every ill to the doctor, or every quarrel to the lawyer or every thirst to the pitcher.

When doctors fast it is bad for the cure.

From the bitterness of disease man learns the sweetness of health.

Spanish

No one becomes a good doctor before he has filled a churchyard.

The doctor who would heal another’s hurt should not show his own.

With a young lawyer you lose your inheritance; with a young doctor your health.

–Swedish

Time is the best doctor – Yiddish

When you are ill, call in any doctor.

Nature is better than a middling doctor.

To take no medicine is as good as a middling doctor.

When you shut out the sun coming through the window, the doctor comes in at the door.

The unlucky doctor treats the head of a disease, the lucky doctor its tail.

The son of a great doctor usually dies of disease.

–Chinese

The doctor who prescribes gratuitously gives a worthless prescription.

A doctor from a distance is like blind eye.

The house that does not open to the poor shall open to the physician.

He that sinneth before his maker will behave himself proudly before a physician.

Do not dwell in a town where the chief man in it is a physician.

A physician afar off is a blind eye.

Honour a physician before thou hast need of him.

The physician who  accepts no fee is worth no fee.

A physician whose services are obtained gratis is worth nothing.

Wait not to honour the physician until thou fallest sick.

The best of physicians is worthy of Gehenna

The best of physicians will go to Hades.

—Hebrew

To be continued……………………….

Tags- Proverbs, doctors, Part 2

LARGEST PUMPKIN IN 2025

 LARGEST PUMPKIN IN 2025

POSTED BY LONDON SWAMINATHAN ON 14 9 2025 FROM METRO NEWSPAPER.

RAINBOW IN WEMBLEY SEPTEMBER 2025 (VIEW FROM MY HOUSE)

–SUBHAM–

TAGS- LARGEST PUMPKIN, RAINBOW, LONDON

Ancient Tamil Encyclopaedia -Part 6; One Thousand Interesting Facts (Post No.14,983)

Written by London Swaminathan

Post No. 14,983

Date uploaded in London –  14 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

52

Aambi = Mushroom, fungi ஆம்பி

Puram 61-2; Madu. 91; Perum.157;

****

53

ARI-PARI-KARI-MARI-KEERI (ALL ANIMALS)

அரி – கரி- பரி -மறி-  கீரி-

Tamil is a beautiful language like Sanskrit.

Ari – lion

Pari- horse (also Ivuli, Kuthirai, Puravi)

Kari (elephant; scores of words are in Sangam Tamil Books)

Mari – Male of Sheep, Deer etc)

Keeri- Mongoose.

Varippuli – Tiger

***

54

Ari- Lion அரி

Though lions did not  live in South India during Sangam age, Tamils knew it threw its appearance in palaces and statues. We find many words for lion in Tamil Sangam literature.

Ainkurunuru-265, 268 (here the word ARI is interpreted as boar as well; but later literature used Ari for lions. E.g. Ari AAsanam= Simhasanam= Lion Throne)

One must know ARI also meant Rice, Eye, Beauty, Gems inside anklet according to Sangam Age Tamil Words Index)

***

55.

Aravu Umil Mani /Naga ratna / Cobra Jewel

Nāgaratna (ನಾಗರತ್ನ):—[noun] a gem supposed to be in the hood of a serpent.

Naga is a Sanskrit word for Snake. English words S/Nake (naaka) and Serpent (Sarpa) are derived from Sanskrit.

But Tamils used both Naaga and Tamil word Aravu in many places.

Naga Ratna is used in both Sanskrit and Tamil.

In Sangam literature Akam.72; 92; 192; Puram.294.

Kumara Sambhavam of Kalidasa: 2:38, 5:43, Raghuvamsam 6:49, 10:7, 11:59, 11:68,13:12, 17:63;Rtu Samharam 1:20

·        Tamil Aka Nanuru 72, 92, 138, 192, 372

·        Pura Nanuru 172, 294, 398

·        Kurunthokai 239

·        Natrinai 255

·        Kurinchipattu Lines 221,239

This is not an exhaustive list. We find such references in innumerable places.

அரவுமிழ் திருமணி – அகம் 192; புறம்.294

நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்”

–அகம் 72

உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்
திருமணி விளக்கிண் பெறுகுவை”

–அகம் 92

We find it also in Shakespeare and Brhat Samhita of Varahamihira.

ப்ரமர சிகி கண்ட வர்ண: தீபசிகாசப்ரப: புஜங்கானாம்

பவதிமணி கில மூர்த்தனியோஅனர்கய சஹ விக்னபா:

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82

இதன் பொருள் என்ன?

பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருப்பதாச் சொல்லுவர். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்;  ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்; அது விலை மதிக்க ஒண்ணாதது.

“Sweet are the uses of adversity, Which like the toad, ugly and venomous,

Wears yet a precious jewel in his head”

Shakespeare’s ‘As You Like It’ Act 2:1.13-14

****

56

BAT வாவல், வௌவால்

Narrinai நற்றிணை 87 BY Nakkannaiyar நக்கண்ணையார்

The sharp toothed is imagined to dream in its sleep.

Hindus reported first in the world that animals do dream like human beings.

Kuru 172 BY Nakkannaiyar

The bat of expanding wings and of slight flight is said to seek in the eveningfor trees bearing fruits.

Narrinai 279

The bats are said to feed on the neem fruits, and being satiated, fly to the iruppai trees seeking sweeter fruits there.

Ainkuru .339, 378

The bat is a bird / animal of the eveningsand  its flight reminds the parted heroine the approach of the desolate evening.

Narrinai 218

The companion tries her best to console the pining heroine but in spite of all her attempts, the latter feels for her miserable loneliness at nights. the evening begins with its usual accompaniments, the darkness slowly setting in after sunset, the bats are flying hither and thither and the nocturnal owl screeching in the neem tree. The heroine broods, thinks of what is to follow them and immediately feels more miserable and asks her companion whether she will have to hear also the voice of the anril from the palmyra tree

***

57

BEAR எண்கு (கரடி)

Akam. 81

The bear searching for its food in the ant hill.

Nar.336, 383

The bears surrounding an ant hill to scoop out their food in it look like dark clouds  around a mountain cliff .

Akam 171

The bears are said to come in groups and feed on iruppai flowers which are fleshy and juicy like fruits.

Akam.149

The iruppai flowers are white in colour and has holes as if perforated. The long-handed bears come in herds and feed on them, after exhausting their food in the anthills.

Akam.331

Mamulanar – maamuulanaar – is tamil wordsworth . he is very much interested in describing the colours, smells and the shapes of the plant world.

The bears visit in a group like a herd of sheep  and feed on iruppai flowers the tall iruppai trees  with red tender leaves shed their white flowers resembling cone likepieces cut out of ivory.

Malaipadukadam -line 501

The bear has the epithet uumai/dumb  which refers to the fact that the beast makes no loud  noise like the other animals  and consequently deserves to be called dumb or comparatively silent.

Narri.  125

The bear that draws out its food from the ant hill  and breathes hard  seems to bellow like the noise  at a smithy.

Enku for bear is not used by the modern Tamils. No tamil would understand ENKU; now they use Karadi for bear which was not used before.

****

58.

BEE தேனீ,  அறுகால் பறவை/SIX FOOT BIRD, தாதுண் பறவை /POLLEN EATING BIRD, வண்டு

From Rig Veda to modern poetry, we find bees.

Tamils also use the description Six Legged Bird for Bees.

In Narrinai 290  bees are compared with men visiting various women

Akananuru -4-10; 46

Ainkurunuru – 90

Narrinai 290 men are like bees visiting many women , 277- the remarks of the lonely heroine against the unsympathetic bee that do not take interest in informing the hero of her desolate condition in spite of emotional ppeals made to them .

Kuruntokai 2, 392, 265

Purananuru – 70; narrinai -55; akam 332 -six legged.

The bees buzz and the frogs croak in the pastoral region- ainkurunuru.

AKAM 88-Elephant’s flow of rut attracts bees, and their humming sound is musical enough to attract  the animal called asunam  which listens to it and mistakes it for the tune of yaaz/ lyre.

AKAM 134- hero sees the bees humming and sucking nectar from the flowers along with their mates and gets down his chariot and ties up the tongues of he bells so as to prevent them from sounding and disturbing the happy life of the insects in those flowers.

Kuru.265- when the bee hums over the kantal bud and tries to penetrate into it, the bird slowly yields to it and blossoms with fragrance like the dutiful and grateful men welcoming with delight the noble gentlemen with whom they are acquainted.

Narr.1- the acquaintance with nob men of high qualities is as sweet as the honey gathered by the bees from the lotus flowers  and stored in the honeycomb on the lofty branch of a sandal wood tree in a high mountain.

In

Kaliththokai 66, there are picturesque descriptions of the bees. The word  used is VARI VANDU.

xxxx

Kalidasa – Sakuntala; 3-23; 4-7; 5-1, 8; shadpata 1-23; 3-23; 5-19;

Kumarasambhava – 3-36; shadpata 5-9

Vikramaorvaseeyam 4-22, 21; 2-23

Raghuvamsa – shadpata – 6-59; 8-55; 9-26; 11-27

Raghuvamsa- elephant rut/ beetle – 5-43; 6-7; 30-57; 12-102

Bhasa’s Svapnavasavadatta also mentioned it.

***

59

DRAGON FLY தும்பி

Poet’s name is Thumbi Cer where the word  Thumbi means dragon fly.

In Kuru. 392 and   Nar.177,  heroine addresses the dragon fly and expresses to them for feelings of sufferings in the absence of her lover.

60

Snake devouring Moon சங்க இலக்கியத்தில் கிரகணம்

Though Hindus knew the science behind Lunar and Solar eclipses , they told the illiterate Tamils that Rahu and Ketu devouring the Moon or Sun. Both the planets are described as snakes. This is found in all the Sanskrit books. Tamils also followed their northern counter parts.

Moon devoured by snake- Pari.10-76;Akam-114, 313; Kuru.395

அரவு செறி உவவுமதி – பரி.10-76;  அரவு நுங்கு மதி – அகம்.114, 313; குறு.395;

61

Tamils Strange belief; Thunder will burn snakes

Thunder strikes at snakes and they are burnt alive.

அரவு எறி உறும்- அகம்.182; புறம்.126, 366.

***

62.

சப்தரிஷி URSA MAJOR CONSTELLATION எழுமீன்

Sapta Rishi- Ursa Major- Great Bear- Dipper- Constellation- Seven Stars= Seven Seers

Narrinai.231; Pari.5

The verse says that Tamils worshipped the Seven Stars. Brahmins worship them thrice a day in Sandhyavandanam. 2700 year ago, Panini mentioned the Seven Rishis in the same order like in Sandhyavandanam.

ஏழு ரிஷிகளை பிராமணர்கள் இன்றும் தினமும் மூன்று வேளை சந்தியா வந்தனத்தில் வணங்குகிறார்கள் . அவர்கள் சொல்லும் அதே வரிசையில்  பாணினி  தனது சூத்திரத்தில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியுள்ளார் . அந்த எழுவரையும் தமிழர்கள் கும்பிடுவது நற்றிணைப் பாடலில் 231 உள்ளது

கைதொழு மரபின் எழுமீன் போலப்  — பாடியவர் இளநாகனார்

ஐந்தாவது பரிபாடலில் சப்த ரிஷிகள் மற்றும் வர்களுடைய மனைவிமார் பற்றிய குறிப்பும் சிவபெருமான் முப்புரங்களை எரித்த செய்தியும் வருகிறது.

To be continued………………………………………

Tags- Ancient Tamil Encyclopaedia -Part 6; One Thousand Interesting Facts, Bees, Lion, Ursa Major, Sapta Rishi, Stars, Naga Ratna, Cobra Jewel, Kalidasa, Bear, Eclipse, Moon, Snake

பாரதி போற்றி ஆயிரம் -இரண்டாம் பாகம் (Post.14,982)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,982

Date uploaded in London – 14 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாரதி போற்றி ஆயிரம் இரண்டாம் பாகம்

ச. நாகராஜன்

(இந்த நூலைத் தொகுத்தவர்)

22 கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய 254 பாடல்கள் முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.

2 கவிஞர்கள் பாரதியைப் போற்றிப் பாடிய 324 பாடல்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.

அடுத்த மூன்றாம் பாகத்தில் 422 பாடல்கள் இடம் பெறுகின்றன.

**

நூலை வெளியிட்ட நிறுவனம்

இங்கிருந்து நூலைப் பெறலாம்.

தொலைபேசி எண் : 91 99803 87852

**

முன்னுரையில் ஒரு பகுதி

பாரதியாரைப் போற்றி எழுதப்பட்ட ஒராயிரம் கவிதைகளை சேகரித்து, தொகுத்து www.tamilandvedas.com இணையதள ப்ளாக்கில் 11-12-2017 முதல் வெளியிட ஆரம்பித்தேன். இந்தப் பணி 7.5.2018இல் முடிவு பெற்றது.

மகாகவி பாரதியாரை அறிமுகப்படுத்தும் நல்ல நூல்களை அறிமுகப்படுத்திய எனது கட்டுரைகளின் தொகுப்பு இரு பாகங்களாக புஸ்தகா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. (மஹாகவி பாரதியாரை பற்றி அறிய உதவும் நூல்களும் கட்டுரைகளும் பாகம் 1 மற்றும் பாகம் 2)

அத்துடன் மஹாகவி பாரதியார் பற்றி அவ்வப்பொழுது எழுதிய எனது கட்டுரைகளின் தொகுப்பையும் புஸ்தகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

(அதிசய மஹாகவி பாரதியார்)

****

இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ள கவிதைகளும் கவிஞர்களும்!

கவிஞர்கள், பாடல்களின் பட்டியல்

கவிஞர்கள்

அருட் கவிஞர் அ. காசி

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம்

விண்வெளியிலிருந்து பெறப்படும் சூரிய சக்தி! (Post.14,981)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,981

Date uploaded in London – 14 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-6-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

விண்வெளி விந்தை!

விண்வெளியிலிருந்து பெறப்படும் சூரிய சக்தி! 

ச. நாகராஜன் 

விண்வெளியிலிருந்து பெறப்படும் சூரிய சக்தியை SBSP – SPACE BASED SOLAR POWER என்று கூறுகிறோம்.

சூரிய சக்தியை விண்வெளியில் சோலார் பவர் சாடலைட்டுகள் மூலமாகச் சேகரித்து அதை பூமிக்கு அனுப்புவதே இதன் அடிப்படைக் கொள்கையாகும். சூரிய பிரதிபலிப்பு இல்லை என்பதால் ஏராளமான சூரிய சக்தியை இதனால் சேகரிக்க முடியும்.

 நாளுக்கு நாள் அருகி வரும் ஆற்றலை நாம் பெறாவிட்டால் எதிர்கால உலகம் வளமாக இருக்காது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். 

இதை நன்கு உணர்ந்து கொண்ட சீனா இந்த சூரிய ஆற்றலை விண்வெளியிலிருந்து பெறக்கூடிய ஆய்வில் முன் நிற்கிறது.

 போகிற போக்கில் சீனாவிடமிருந்து நாம் இந்த சக்தியை விலை கொடுத்து வாங்கப் போகிறோமோ என்ற பயம் ஏற்படுகிறது என்று அமெரிக்க நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஏனெனில் சீனா இன்னும் இருபது ஆண்டுகளில் இதைத் தயாரிக்க ஆரம்பித்து விடும்!

 2050ம் ஆண்டிற்குள் இந்த அரிய ஆற்றலைப் பெற பட்ஜெட் தொகையாக 17.3 டிரில்லியன் டாலர்கள் வேண்டுமாம்! ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி என்ற எண்ணைக் குறிக்கும்! ஒன்றுக்கு பக்கத்தில் 12 பூஜ்யங்களைப் போட்டால் இந்த எண்ணைப் பெறலாம்!

 இந்தத் தொழில் நுட்பம் சற்று சிக்கலானது. சூரிய சக்தியை விண்வெளியில் சாடலைட்டுகளைப் பயன்படுத்திப் பிடித்து அதை பூமியை நோக்கிச் செலுத்தும் உத்தி இது. இதற்கு மைக்ரோவேவ் அல்லது அல்லது இன்ஃப்ரா ரெட் லேஸர் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்படும்.

இப்போது நாம் பெறும் சூரிய சக்தியைப் பெறுவது போலல்லாமல் இது வருடம் முழுவதும் இடைவிடாது நாள் ஒன்றுக்கு 24 மணிநேரமும் சூரிய சக்தியைப் பெற்று பூமிக்கு அனுப்பும். இப்போது பூமியில் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் சூரியத் தகடுகள் மூலம் பெறுவதைப் போல அதே பரப்பளவில் ஆறு மடங்கு அதிகமாக நாம் சூரிய ஆற்றலைப் பெற இந்த உத்தி வழி வகுக்கும்.

இது சூரிய ஆற்றலை உருவாக்குவது அல்ல என்று தெளிவு படுத்தும் சீன் மஹோனி எங்கு தேவையோ அங்கு இந்த சக்தியை டிரான்ஸ்மிஷன் செய்வதே இதன் பணி என்கிறார். இவர் அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் ஃப்ராண்டியர் பவுண்டேஷனின் நிர்வாக இயக்குநர் (Executive Director of  Space Frontier Foundation)

எந்த விதமான காலநிலையும் இதற்கு ஒரு பொருட்டல்ல; இரவு நேரத்திலும் பெறலாம், என்றும் வை-ஃபி போல இது செயல்படும் என்றும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தில்லாதபடி இது சூரிய ஆற்றலைத் தரும் என்றும் விளக்குகிறார்.

 நடக்க வேண்டியது என்ன என்பது இப்போது தெளிவாக இருக்கிறது. விண்வெளி ஆற்றலைப் பெரும் மாபெரும் போட்டியில் ஒரு கமிட்டி இன்னும் 120 நாட்களில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட வேண்டும் என்பது அமெரிக்க நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

 எதிர்கால உலகையும் புவி வாழ் மக்களையும் காக்கும் ஒரே சக்தி SBSP – SPACE BASED SOLAR POWER  – அதாவது விண்வெளியிலிருந்து பெறப்படும் சூரிய சக்தி தான்!

***

SWAMI VIVEKANANDA AND SANSKRIT GRAMMAR


Disciple: Have you studied the Ashtadhayayi of Panini?Swamiji: When I was in Jaipur, I met a great grammarian and felt a desire to study Sanskrit grammar with him. Although he was a great scholar in that branch, he had not much aptitude for teaching. He explained to me the commentary on the first aphorism for three days continuously, still I could not grasp a bit of it. On the fourth day the teacher got annoyed and said, “Swamiji, I could not make you understand the meaning of the first aphorism even in three days; I fear, you will not be much benefited by my teaching.” Hearing these words, a great self – reproach came over me. Putting food and sleep aside, I set myself to study the commentary on the first aphorism independently. Within three hours the sense of the com – mentary stood explained before me as clearly as anything; then going to my teacher I gave him the sense of the whole commentary. My teacher, hearing me, said, “How could you gather the sense so excellently within three hours, which I failed to explain to you in three days?” After that, every day I began to read chapter after chapter, with the greatest ease. Through concentration of mind everything can be accomplished — even mountains can be crushed to atoms.(The Complete Works of Swami Vivekananda/Volume 7/Conversations And Dialogues/V)

FROM FACEBOOK

–SUBHAM—

TAGS- SWAMI VIVEKANANDA , SANSKRIT GRAMMAR, Ashtadhayayi of Panini