Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Indra , Copper idol from Nepal.
தமிழ் நிகண்டில், குமார சம்பவத்தில், இந்திரன்
தமிழ் மொழியில் மிகப்பழைய நிகண்டு (அகராதி) திவாகரம். உலகின் முதல் நிகண்டாகிய அமரகோசத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இது எழுதப்பட்டது . அமரகோச ஸம்ஸ்க்ருதச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளது; கிட்டத்தட்ட சம்ஸ்க்ருத அகராதி வரிசையை பயன்படுத்தியுள்ளது; திவாகரம் தொகுத்தவர் சில விஷமங்களையும் செய்துள்ளார் . நூலில்
ஸம்ஸ்க்ருதச் சொற்களே அதிகம் உள்ளன. ஆகையால் சம்ஸ்க்ருத நிகண்டுகளின் தமிழ் வடிவம் என்றே சொல்ல வேண்டும் . அமர கோசம் படித்தவர்களுக்கு இது விளங்கும்.
இந்திர ன் பற்றி திவாகரம் நிகண்டு சொல்லும் சொற்கள் :-
பின்னர் சம்ஸ்க்ருத அமரகோச நூலில் உள்ளத்தைப் போலவே அவரது மனைவி, வாகனம் , மகன், நகர் முதலியவற்றை அதே வரிசையில் சொல்கிறார்; பொதுவாக சம்ஸ்க்ருத நூலை அப்படியே காப்பி அடித்திருக்கிறார். சில இடங்களில் சொற்களைத் தமிழ்ப் படுத்தியுள்ளார்; அதிலும் சம்ஸ்க்ருதம் உளது!
உதாரணத்துக்கு சஹஸ்ராக்ஷன்= ஆயிரங்கண்ணன் ; இதில் ஆயிரம் என்பது சம்ஸ்க்ருத சஹஸ்ரம் என்பதன் மருவு என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
****
இனி காளிதாசனின் குமார சம்பவத்தில் வரும் இந்திரனைக் காண்போம்: இந்திரன் வரும் இடங்கள்—1-20; 2-11; 2-63/4; 3-2; 3-11;3-22;7-45;7-71
“பிறகு ஆகண்டலன் / இந்திரன் தனது கால்களைத் தொடையின் மீதிருந்து அகற்றி STOOL ஸ்டுலின் மீது வைத்துவிட்டு மன்மதனிடம் பேசினான்.
ஐராவதத்தைத் தொட்டுத் தடவிக் கொடுத்தாததால் சொர சொரப்பாகிப் போன கைகளால் தொட்டு மன்மதனை ஆசீர்வதித்தான் 3-11
இதில் இந்திரன் மட்டுமின்றி அவனது ஐராவதம் என்னும் யானை ஆகியவற்றையும் சேர்த்துவிட்டான் கவிஞன் 3-22
****
இந்திரன் தலைமையில் வந்த லோகபாலர்கள் எளிய உடைகளை அணிந்துகொண்டு அதிக படம் காட்டாமல் கூப்பிய கரங்களுடன் சிவ பெருமானச் சந்திக்க நந்தி தேவனிடம் அனுமதி கோரினார்கள் .
இந்திரன், சப்த ரிஷிக்கள், சிவ கணங்கள் எல்லோரும் வந்தார்கள். புரூஹூதா என்ற சொல்லினையும் வ்ருத்ர ஹன் என்ற சொல்லினையும் அடுத்தடுத்த ஸ்லோகங்களில் காண்கிறோம் 7-45; 7-46
இரண்டாவது சர்க்கத்தில் அடுத்தடுத்த ஸ்லோகங்களில் பாகசாசன , சதமகம் இந்திரன் 2-63;2-64 என்ற சொற்களைக் காளிதாசன் பயன்படுத்துகிறான் இதில் சதமகம் இந்திரன் என்று சொல்லினுக்கு உரை எழுதியோர் க்ரது என்றால் யாகம் என்றும் ஞானம் என்றும் பொருள் என்கிறார்கள் சதக்ரது என்பதற்கு நூறு அஸ்வமேத யாகம் செய்தவர் என்ற பொருள் பிற்காலத்தில் வந்ததென்றும் வேதகாலத்தில் நூறு குணங்கள் /ஞானம் என்றே பொருள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
குமார சம்பவ நூலில் இந்திரனுக்குப் புதிய சொற்களை காளிதாசன் பயன்படுத்தியதை கண்டோம்; இவை தமிழில் பரிபாடலில் அதிகம் பயன்படுத்தப்பட்டன .
Sanskrit slokas are taken from sanskrtdocuments.org
மஹாராணிகள் கர்ப்பம்தரித்தால் இந்திரன் முதலான எட்டு தேவர்களும் கர்ப்பத்தில் பிரவேசிப்பார்கள் என்று மனு கூறுகிறார்; அதாவது எட்டு லோகபாலகர்கள் எண்திசைகளை ஆளுவது போல பிறக்கப்போகும் ராஜ குமாரனும் எட்டுத் திசைகளை வெல்வான் என்பது பொருள்.
अथ नयनसमुत्थं ज्योतिरत्रेरिव द्यौः
सुरसरिदिव तेजो वह्निनिष्ठ्यूतमैशम्।
नरपतिकुलभूत्यै गर्भमाधत्त राज्ञी
गुरुभिरभिनिविष्टं लोकपालानुभावैः॥ २-७५
atha nayanasamutthaṁ jyotiratreriva dyauḥ
surasaridiva tejo vahniniṣṭhyūtamaiśam|
narapatikulabhūtyai garbhamādhatta rājñī
gurubhirabhiniviṣṭaṁ lokapālānubhāvaiḥ || 2-75
குப்தர்களின் அலஹாபாத் சமுத்திர குப்தன் கல்வெட்டும் மதுராவிலுள்ள சந்திர குப்தன் கல்வெட்டும் மன்னரின் வெற்றியை இந்திரனோடு ஒப்பிடுகின்றன
***
கிழக்கு திசைக்கு அதிபன்
स ययौ प्रथमं प्राचीं तुल्यः प्राचीनबर्हिषा|
अहिताननिलोद्धूतैस्तर्जयन्निव केतुभिः॥ ४-२८
sa yayau prathama.n praacii.n tulyaH praaciinabarhiShaa |
ahitaananiloddhuutaistarjayanniva ketubhiH|| 4-28
இந்திரனுக்கு ப்ராசீனபர்ஹி – கீழ்திசைக்கு அதிபதி என்று பெயர் உண்டு; அதைக் கவிஞன் இங்கு பயப்படுத்தக் காரணம் ரகுவும் இந்திரனைப்போன்றவன்; ஆகையால் முதலில் கிழக்கு திசையிலுள்ள மன்னர்களை வெல்லப்புறப்பட்டான் என்பது காளிதாசனனி பாடல் .
இது மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும், கால்டுவெல் கும்பலுக்கும் மரண அடி கொடுக்கும் பாடல். இன்று வரை யாகங்களிலும் பூஜைகளிலும் இந்திரன் கிழக்கு திசைக்கு அதிபன் என்றே புரோகிதர்கள் பூஜை செய்து வருகிறார்கள் . இது இந்துக்கள் கங்கைச் சமவெளியிலிருந்து மேற்கு நோக்கிச் சென்று சுமேரியா, எகிப்தில் நாகரீகத்தை நிலைநாட்டிவிட்டுப் பின்னர் இன்னும் மேற்கேயுள்ள கிரேக்கம் ரோமானிய பிரதேசங்களில் நாகரீகத்தைப் பரப்பினார்கள் என்று காட்டுகிறது. ஏனெனில் ரிக்வேதத்தில் முப்பது நதிகளின் பெயர்கள் இருந்தாலும் நதிகள் ஸுக்தத்தில் கிழக்கிலுள்ள கங்கையில் துவங்கி மேற்கில் ஆப்கானிஸ்தான் வரையுள்ள நதிகளைக் குறிப்பிடுகிறார்கள். இதனால் இந்திரனை கிழக்குத் திசையோன் என்று கவியும் சொல்கிறார்.
********************
என்னுடைய பழைய கட்டுரைகள்
இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்!
(This article is available in English as well in my blogs: INDRA FESTIVAL IN THE VEDAS AND TAMIL EPICS: swami.) 11 -8-2012
சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!
ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியவர்—லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1289; தேதி:– 15th September 2014.
This article was already published in English.
தொல்காப்பியத்தில் இந்திரன் 14 -6-2013
Indra in the oldest Tamil Book 14-6-2013
AINDRA GRAMMAR, PANINI AND TOLKAPPIAR (Post No.7266)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
MaduraiV.Santanam, Freedom Fighter and News Editor Dinamani News paper, passed away on the Independence Day 15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.
இந்த நூறாண்டுகளும் மஹிமை வாய்ந்த ஒரு பொற்காலமாக விளங்கியது.
சங்கடமான ஒரு காலகட்டத்தில் தோன்றி கோடிக்கணக்கானோருக்கு அனுக்ரஹம் செய்து ஆன்மீகத்தைப் புதிய உயரத்திற்குக் கொண்டு சென்ற மகான் இவர்.
நாத்திகம் வளரத் தொடங்கிய காலத்தில் எங்கு பார்த்தாலும் கோவில் கோபுர உச்சியிலிருந்து திருப்பாவை- திருவெம்பாவை பாடல்கள் ஒலிபெருக்கியில் முழங்கும்.
ஆங்காங்கே வேதபூர்வமான யாகங்கள் நடைபெறும். அஷ்ட கிரஹ சேர்க்கையின் போது மக்களுக்கு அபயம் அளித்து வேயுறு தோளி பங்கன் பதிகத்தைப் பாடச் சொல்லி அருளினார் பெரியவர். தமிழகமெங்கும் ஞானசம்பந்திரின் கோளறு பதிகம் பரவியது!
இளையாத்தங்குடியில் சதஸ், மதுரைக்கு அருகில் நாராயணபுரத்தில் சதஸ் என்று ஏராளமான வித்வத் சதஸ்கள்.
ஆன்மீக புத்தகங்களோ ஆயிரக் கணக்கில் வெளியாகி உள்ளன இந்த கால கட்டத்தில்
V SANTANM STANDING; A N SIVARAMAN SITTING ON THE FLOOR.
ஊன்றிப் பார்த்தால் இவரது ஆசியுடனோ, இவர் ஊக்கியதாலோ பெரும்பாலான புத்தகங்கள் மலர்ந்திருப்பதைக் காணலாம்.
கிரீஸ் ராணி முதல் இந்திய தலைவர்கள் வரை அனைவரும் இவரது ஆசியைப் பெற ஓடோடி வந்ததை வரலாறு கூறுகிறது.
இவரது ஆன்மீகப் பணியில் மிக மிக முக்கியமான ஒரு பங்கை ஆற்றினார் திரு வெ. சந்தானம்.
ஆம், பெரியவாள் எதைப் பேசினாலும் எந்தப் பணியைத் தொடங்கினாலும் அதை தினமணி நாளிதழில் பிரசுரித்து அதை நாடெங்கும் மூலை முடுக்குகளில் கூடக் கொண்டு சேர்த்தார் அவர்.
இதனாலும் இயல்பான அவரது பக்தியினாலும் காஞ்சி பெரியவாளுக்கு சந்தானம் என்றால் தனி ஒரு பிரியம் உண்டு. எப்போது அவரது தரிசனத்திற்குச் சென்றாலும் அருகில் அழைத்து வைத்துக் கொள்வார்.
மதுரையில் சேதுபதி ஹைஸ்கூலில் அவர் தங்கி இருந்த போது அங்கிருந்து மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போகும் வழியில் வடக்கு மாசி வீதி வீட்டில் இருந்த (நம்பர் 20) எங்களுக்கு ஒரு நாள் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
“இது தான் சந்தானம் வீடா?” என்று கேட்டவாறே அவர் எங்கள் வீட்டின் முன் வந்து நின்று கொண்டிருக்க பக்தி பரவசத்துடன் அவரைப் பணிந்து வணங்கினோம்.
தினமணி அலுவலகத்திற்கு அவர் விஜயம் செய்ய அவரை பகுதி பகுதியாக அழைத்துச் சென்றார் என் தந்தை. ப்ரிண்டிங் பற்றி நுணுக்கமான கேள்விகளை அவர் கேட்க அனைவரும் அசந்து போனார்கள்!
இளையாத்தங்குடி சதஸ் பற்றிய செய்திகளை மிக மிக விரிவாக தினமணி வெளியிட்டதால் ஆன்மீகப் பரபரப்பு தமிழகத்தில் தொடர்ந்து நிலவியது.
நன்றாக அனைத்துப் பாடல்களையும் பாடுபவர்களுக்கு தங்கக் காசு அளிப்பது என்ற ஒரு திட்டத்தை அவர் தொடங்கவே எல்லா குழந்தைகளும் தீவிரமாக பாடல்களைக் கற்று தங்கக் காசுகளைப் பெற்றன.
மதுரையில் இதற்கு மாபெரும் தூணாக விளங்கினார் சந்தானம்.
திருப்பாவை இசைப் பள்ளியை திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் மிகத் திறமையாக நடத்தினார். இங்கு நூற்றுக் கணக்கான பெண்கள் சேர்ந்தனர்.
இவர்களை வைத்து ஆன்மீக, புராண நாடகங்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை திறம்பட கதை வசனம் பாடல்கள் அமைத்து அவர் இயக்கிய விதமே தனி.
வெளி ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குக் கூட தந்தையார் செல்வதுண்டு; தலைமை தாங்குவதுண்டு. நாங்களும் கடயம் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று கலா நிகழ்ச்சியைக் கண்டு களித்தோம்.
இன்னொரு குறிப்பிடத்தகுந்த திருப்பாவை இசைப்பள்ளியை ஶ்ரீ பாலகிருஷ்ண ஐயங்கார் நடத்தினார். இவரது மனைவியார் சீதாலெட்சுமியும் மகள்கள் அம்மாளு, பத்மா மற்றும் சீதாலெட்சுமியின் தம்பி ராஜா ஆகியோர் பக்கபலமாகவும் விளங்கினர். மிக்க வறுமையான சூழ்நிலையில் இவர்கள் இருந்த போதும் இசைக்கும் ஆன்மீகத்திற்கும் இந்தக் குடும்பம் செய்த தொண்டு மகத்தானது.
தங்கக் காசு பெற மகத்தான போட்டி உண்டு.
திருப்பாவை – திருவெம்பாவை பள்ளிகளை மேற்பார்வையிட்டு தங்கக் காசுகளை விநியோகம் செய்வது மாயவரம் திரு ராமமூர்த்தி ஐயரின் பொறுப்பு.
இவர் மதுரைக்கு வரும் போது எங்கள் வீட்டில் தங்குவது, சாப்பிடுவது வழக்கம். இவர் பாரபட்சமின்றி அனைவருக்கும் தங்கக் காசுகளை அள்ளிக் கொடுப்பார்.
அதிகாலையில் நான்கு மணியிலிருந்தே மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாதத்தில் கூட்டம் அலை மோதும். அங்கு ஞானப்பால் வழங்கப்படும். அதையும் தினமும் சென்று வாங்கி தரிசனத்திற்குப் பிறகு அருந்துவோம்.
மதுரையை ஆன்மீக மதுரையாக ஆக்கிய பெருமை பெரியவாளையே சேரும்.
இப்படி மதுரை மட்டுமல்ல தமிழக பட்டி தொட்டி கிராமம், நகர் என்று ஒரு ஆன்மீகப் புரட்சியையே செய்தார் பெரியவர்.
அதில் செய்திகளை உரிய இடத்தில் சேர்ந்து உரியவர்களை பங்கு பெறச் செய்தவர் சந்தானம் என்பதை அனைத்து மக்களும் கூறுவது வழக்கமானது.
இதனால் மடத்தைச் சேர்ந்த பலரும் எங்கள் இல்லத்திற்கு வருவது வழக்கமானது. காஞ்சி பெரியவரின் பூர்வாசிரம சகோதரர் ஶ்ரீ சாம்பமூர்த்தி உள்ளிடோர் இதில் அடங்குவர்.
காஞ்சி பெரியவரின் நூறாண்டு வாழ்க்கையில் அவரது மகத்தான பணிகளை ஒருவர் தொகுக்க நினைத்தால் அவர் பார்க்க வேண்டியது தினமணி இதழ்களைத் தான்!
ஒரு முறை எனது தந்தையாரும் எம்.எஸ், வெங்கட்ராமனும் அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜாவா குட்டி ஸ்கூட்டரை ஆளுக்கு ஒன்றாக வாங்கினர்.
அதை எனது தந்தையார் (தைரியமாக) ஓட்ட அவருடன் பின்னால் நான் உட்கார, இளையாத்தங்குடி சென்றோம். மிக அதிகாலையில் ஆசாரியாளின் அனுக்ரஹம் பெற்று நேராகத் திருவையாறு சென்றோம்.
இப்படி ஒரு குட்டி ஸ்கூட்டரில் நீண்ட நெடிய பயணம்! ஆனால் இளையாத்தங்குடி பெரியவாள் தரிசனமே என்றும் கண் முன்னால் நிற்கிறது.
மாபெரும் ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்து கொண்டு சென்னையிலிருந்து சகோதரருடன் திருப்பதி சென்றென். அங்கிருந்து பெரியவர் திருத்தணி அருகே கேம்ப் செய்திருப்பதைக் கேட்டு பெரியவரை தரிசிக்கச் சென்றேன். என்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் பெரியவர் கேட்ட கேள்வி – ‘சந்தானத்திற்கு நன்றாகக் காது கேட்கிறதோ’ என்று தான். அவ்வளவு நுணுக்கமாக அவர் தந்தையாரைப் பற்றி அறிந்தவர். எனது தந்தைக்கு ஒரு காதில் கேட்கும் சக்தி குறைந்து வருவதைக் கூட நுட்பமாக அவர் கவனித்திருக்கிறார்!
SRI V. SANTANAM
இப்படி ஏராளமான அனுபவங்கள்!
உலகமே போற்றும் காஞ்சிப் பெரியவரை அருகிலிருந்து தரிசனம் செய்யும் பாக்கியமே பாக்கியம்.
பெரியவருக்கும் எனது தந்தைக்குமான நெருக்கமான தொடர்பு தமிழகத்தை ஆன்மீகத்தில் உயர்த்தியது என்றால் அது மிகையல்ல!
**
TAGS- KANCHI PARAMACHARYA, VISIT TO DINAMANI, MADURAI, V SANTANAM, PART 6
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Indra in Indus Valley; chakra is his name; written on top with wheel/chakra symbol
காளிதாசன் ரகுவம்சத்தில் சொன்ன பல ஸ்லோகங்களை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஐந்தாறு வரிகளில் சொல்லிவிட்டார். சங்க காலத்துக்கு முன்னர் காளிதாசன் வாழ்ந்ததற்கு இதுவும் ஒரு சான்று . பகுதி ஒன்றில் சங்க இலக்கியப் பாடல்களை கொடுத்துள்ளேன்
இதோ ரகுவம்சம் : (From Sanskritdocuments.org)
स पूर्वतः पर्वतपक्षशातनं ददर्श देवं नरदेवसंभवः|
पुनः पुनः सूतनिषिद्धचापलं हरन्तमश्वं रथरश्मिसंयुतम्॥ ३-४२
sa pūrvataḥ parvatapakṣaśātanaṁ
dadarśa devaṁ naradevasaṁbhavaḥ|
punaḥ punaḥ sūtaniṣiddhacāpalaṁ
harantamaśvaṁ ratharaśmisaṁyutam || 3-42
(இளவரசன் ரகு, அவனுடைய தந்தை திலீபன் நூறு யாகங்களைச் செய்தால் தனது பதவி போய்விடுமே என்று அஞ்சி, இந்திரன் அதைக் கெடுக்க வந்து அஸ்வமேத குதிரையைத் திருடிய கட்டம் இது.)
மலைகளை பிளந்த இந்திரனை ரகு கிழக்கு திசையில் கண்டான் ;அஸ்வமேத குதிரையைத் தனது தேரில் கட்டி இழுத்தான்; அந்தக்கு திரையோ முரண்டு பிடித்தது .
இதில் இரண்டு விஷயங்கள் உ ள்ளன ; இந்திரன் திசை கிழக்கு. அவன் பறக்கும் மலைகளை வெட்டி வீழ்த்தியவன் (கோத்ரபித்). [3-42]
குதிரையைத் திருடியவன் இந்திரன்தான் என்று ரகு, அங்க அடையாளங்களை வைத்துக் கண்டுபிடித்தான் . பச்சைக் நிறக் குதிரைகள், இமைக்காத கண்கள் , நூற்றுக்கும் மேலான கண்கள் ; உடனே உரத்த குரலில் இந்திரனை அதட்டினான்.
****
मखांशभाजां प्रथमो मनीषिभिस्त्वमेव देवेन्द्र सदा निगद्यसे|
अजस्रदीक्षाप्रयतस्य मद्गुरोः क्रियाविघाताय कथं प्रवर्तसे॥ ३-४४
வேத வேள்விகளில் கொடுக்கப்படும் அவிஸ் என்னும் பலியில் பெரும்பங்கு உனக்கு கிடைப்பதாக அறிஞர்கள் செப்புவர்; அப்படி இருக்கையில் என் தந்தை செய்யும் வேள்விக்கு கெடுதல் செய்வது ஏன்? (இதில் தேவேந்திர என்ற பெயர் வருகிறது.)
तथा विदुर्मां मुनयः शतक्रतुं द्वितीयगामी न हि शब्द एष नः॥ ३-४९
hariryathaikaḥ puruṣottamaḥ smṛto maheśvarastryambaka eva nāparaḥ|
tathā vidurmāṁ munayaḥ śatakratuṁ dvitīyagāmī na hi śabda eṣa naḥ || 3-49
இந்திரன் சொன்னான்: புருஷோத்தமன் என்ற பெயர் விஷ்ணு ஒருவருக்கே பொருந்தும்; பரமேச்வரன் என்ற பெயர் முக்கண்ணன் சிவனுக்கே பொருந்தும்; அதேபோல ரிஷி முனிவர்கள் சதக்ரது என்றால் எனக்கே பொருந்தும் என்று ஒப்புக்கொண்டுள்ளார்கள். (அதாவது ரகுவின் தந்தை திலீபன், நூறு வேள்விகளைச் செய்யக்கூடாது; செய்ய விடமாட்டேன் என்பது பொருள்)
சதக்ரது– யாரேனும் ஓருவர் நூறு அஸ்வமேத யாகம் செய்தால் அவருக்கு இந்திரனின் பதவி கிடைத்துவிடும். இதனால் யாரையும் 100 யாகம் செய்யாதவாறு மண், பெண், பொன் பதவி ஆசைகளைக் காட்டி அவர்களை இந்திரன் விழுத்தாட்டி விடுவானாம். இந்திரன் பிருஹஸ்பதியின் கீழ் 100 அஸ்வமேதம் செய்தவன் அவன் பெயர் சதக்ரது (நூறு செய்தவன் = சதக்ரது).
***
அஹல்யா-இந்திரன் கதை -விக்ரம. 2-8-௨ ல் வருகிறது ; இதைத் திரு ப்பரங்குன்ற ஓவியத்தில் முன்னரே கண்டோம் .
பிடவஜஸ்-ரகு.3-59;14-59- பொருள்- அவனுடைய ஓஜஸ் எங்கும் பரவியது.
மகவான்- ரகு., குமார . சுமார் பத்து இடங்களில் வரும் சொல்
மஹேந்திர –ரகு. விக்ரம.,. சாகுந்தலம் – சுமார் பதினைந்து இடங்கள்
இந்தப்பெயரை இந்தியா முழுதும் இன்றும் காணலாம்.
மருத்வத்– விக்ரம
இந்திரனின் தேரோட்டி மாதலி– ரகு
Indra with Saci
பாகசாசன – விக்ரம– பாக என்ற அசுரனை அழித்தவன்
புரந்தர— கோட்டைகளை உடைத்தவன் –ரகு., விக்ரம.
புரூஹுத -ரகு.
சக்ர – இந்த முத்திரை சிந்து சமவெளியில் உள்ளது
சுரேந்திர = சுரர் என்னும் தேவர்களின் தலைவன் = தேவேந்திரன்
துராசாஹா —
வஜ்ர பாணி — வஜ்ராயுதத்தைக்கையில் உடையவன்
வாசவ
வ்ருத்ரஹன்– வ்ருத்ரன் என்ற அசுரனைக்கொன்றவன்
****
இந்திரனுக்கு பெயர்கள்
அமரகோசத்தில் இந்திரனுக்கு முப்பத்தாறு பெயர்கள் உள்ளன
இந்திரன் மனைவிக்கு மூன்று பெயர்கள் –
Indra’s wife – சசி , இந்திராணி , புலோமஜா அல்லது பெளலோமி
Indra’s son மகன் — ஜயந்த
Indra’s city நகரம் – அமராவதி
Indra’s garden தோட்டம் -நந்தன
Indra’s Palace அரணமனையின் பெயர் – வைஜயந்த
Indra’s horse குதிரை -உச்ச்சைச்ரவஸ்
Indra’s elephant யானை – ஐராவத
இதில் வியப்பான விஷயம் நான்கு தந்த யானை என்று நக்கீரர் வருணிக்கும் உருவம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டுமே உள்ளது
Indra’s driver தேரோட்டி – மாதலி
Indra’s weapon ஆயுதம் – வஜ்ரா ஆயுத
Indra’s bow வில் — இந்திரா தனுஷ் என்று வானவில்லுக்குப் பெயர்
கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, லாவோஸ், வியட்நாம் முதலிய நாடுகளில் யானை மீது வரும் இந்திரன் சிலைகள் உள்ளன ; மங்கோலியா, லாவோஸ் ஆகியன வஜ்ராயுதம் பொறித்த தபால்தலைகளை வெளியிட்டன. நிவேதிதா உருவாக்கிய கொடியில் இந்த ஆயுதம் உள்ளது . பாரதியாரும் பாடியுள்ளார்.
இந்திரன் நடத்திய யுத்தங்கள் (ரிக் வேத செய்யுட்களில் )
Indra’s battles are listed in the Rig Veda: 1-53-8, 1-100-18, 1-103-3, 1-104-3, 1-130-8, 1-133-2/5, 1-174-7/8, 1-82-4, 2-20-6/7, 3-10-6, 4-38-5, 4-30-15, 4-30-20, 4-30,31, 5-70-3, 6-18-3, 6-25-2, 6-47-20, 5-29-10, 8-96-13, 10-22-8.
ரிக் வேதத்தில் 250 துதிகளில் இந்திரனைப் போற்றுகின்றனர் ; ஆயினும் இது ஒரே ஒரு தேவரைக் குறிக்கும் சொல் அல்ல என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்ற அறிஞர்கள் பகர்ந்துள்ளார்கள். தமிழிலும் தொல்காப்பியர் வேந்தன்/ அரசன் என்ற பொதுப்பெயரையே இவருக்கு அளித்துள்ளார் இதன்பொருள் யார் தலைமைப் பதவியில் உள்ளாரோ அவர் இந்திரன்.
***
Indra in Ellora cave
அமரகோசத்தில் வரும் இந்திரன் பெயர்கள்
வ்ரத்ரஹன் – விருத்திரன் என்ற பிராமணனைக் கொன்றவன் (வெள்ளைக்காரர்கள் இதில் பிராமணன் என்ற சொல்லை விட்டுவிட்டுவார்கள்; ஏனெனில் இதில் ஆரிய-திராவிட வாதத்துக்கு செமை அடி கிடைக்கிறது .)
புரந்தர :–கோட்டைகள் அல்லது ஊர்களை அழித்தவன் ; சிவனுக்கும் இந்தப் பெயர் உண்டு . வெள்ளைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம் இந்தச் சொல். ஏனெனில் சிந்து சமவெளியில் சிவன் வழிபாடு இருப்பதாக எழுதியோர், சிவனும் புரங்களை அழித்தான் என்பதை மறைத்துவிட்டு, இந்திரன் மட்டும் திராவிடக் கோட்டைகள் அல்லது ஊர்களை அழித்தான் என்று கதை கட்டியதால் அவர்களுக்குப் பிடிக்காத சொல் இது!
ஜிஸ்னு :– எப்போதும் வென்றான்
லேகாச்ரவா :–எழுதுவதில் மன்னன் ; இதுவும் வெள்ளைக்காரர்களுக்கு செமை அடி கொடுக்கும் சொல். ஆரியர்களுக்கு எழுதத் தெரியாது என்றும் அவர்கள் கதை கட்டினார்கள் ; மஹாபாரதம், ராமாயணம் முதல் திருவிளையாடல் புராணம் வரை அம்புகளில் பெயர் இருந்த சம்பவங்கள் உள்ளன. மஹாபாரதத்தை பிள்ளையார் எழுதினார் என்பதும் இந்துக்கள் அறிந்ததே!
Indra in South East Asian countries.
சதமன்யு : –நூறு யாகங்களை செய்தவன்; நூறு எதிரிகளை வென்றவன் .
திவஸ்பதி :–தேவலோக அதிபதி
ஸ்வர்க்கபதி :–சுவர்க்கத்தின் தலைவன்
உலுக :–ஆந்தை
உக்ரதன்வன் :– பயங்கர வில்லினை உடையவன்
வாசவ :–வசுவிலிருந்து பிறந்தவன்
வ்ரிஷ :–கட்டிளங் காளை; அல்லது மழையை உண்டாக்குவோன்
வாஸ்தோஸ்பதி :–வாஸ்து — மனையின் தலைவன்
சுரபதி / தேவபதி :–தேவர் தலைவன்
பலாராதி :–வலன் என்று அசுரனின் எதிரி
சசிபதி :–சசியின் கணவன்
ஜம்பவேதின் :–அரக்கர்களின் எதிரி
ஹரிஹயஹ :–பச்சைக்குதிரையில் செல்பவன்
ஸ்வரான :–தேவர்களை ஆள்பவன்
மகேந்திர : மகத்தான இந்திரன்; கண்டி முதல் காஷ்மீர் வரை இன்றும் மக்கள் இப்பெயர்களை சூட்டுகின்றனர்
நமுசிசூதன : நமுசி என்ற அரக்கனைக் கொன்றவன்
ஸ்வர்க்கபதி :–சொர்க்கத்தின் தலைவன்
சஙகிரந்தன :–எதிரிகளுக்கு அச்சமூட்டுவோன்
துஸ்சுவன –கெட்டவர்களை நசுக்குபவன்
துரசஹ :–விரைவாகப் பயணிப்பவன்
மேகவாஹன :–மேகத்தை வாகனமாக உடையவன் .
ஸஹஸ்ராக்ஷ :–கண்ணாயிரம்
வ்ருத்தஸ்ரவஹ :–அறிஞர்களுக்கிடையே புகழுடையோன்
கோத்ரபித் – மலை பிளந்தவன்
ருவிக்சன ,கோவிதா , சூத்ர மான் , பிருதஸ் ரவாஸ் என்ற பெயர்களும் பிற இடங்களில் காணப்படுகின்றன. .
***
இந்திரன் குறித்து பரிமேலழகர் செய்த தவறு! By London Swaminathan; Post No. 748 dated 17th December 2013.
–லண்டன் சுவாமிநாதன் தமிழ் வேதமான திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரில் பரிமேலழகர் எழுதிய உரையே மேலானது என்பது அறிஞர் உலகம் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட முடிவு. ஆயினும் யானைக்கும் கூட அடி சறுக்கும் என்பது போல அவரும் சில தவறுகளைச் செய்திருக்கிறார். இன்று ஒரு குறளை மட்டும் காண்போம்:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி (குறள் 25)
‘ஐம்புல ஆசைகளை அறவே ஒழித்த ஒருவனுடைய ஆற்றலுக்கு தேவர் கோமான் இந்திரனே சான்று பகர்வான்’ என்பது இதன் பொருள்.
இந்தப் பொருளை எழுதி அதற்குப் பின் ஒரு ஆச்சர்யக் குறியையோ கேள்விக்குறியையோ போட்டுவிட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். பரிமேலழகர் இது இந்திரனைக் கிண்டல் செய்து எழுதிய இகழ்ச்சிக் குறிப்பு என்று கொண்டுவிட்டார். அவன் அகல்யை இடத்தில் நடந்துகொண்ட ஒரு சம்பவத்தை வைத்துப் பலரும் இந்திரனை தவறாக எடைபோட்டுவிட்டனர்.
இந்துமத நூல்களிலும் புத்தமத வேதப் புத்தகமான தம்மபததிலும் இந்திரனை உயர்வாகவே கூறியுள்ளனர். பதின்மர் உரையில் மணக்குடவர் எழுதிய உரையில் இதை இகழ்ச்சிக் குறிப்பாகக் கொள்ளாமல், பாராட்டும்படியாகவே எழுதியுள்ளார். இதை டாக்டர் எஸ்.எம்.டயஸ் அவர்கள் எழுதியுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டு மணக்குடவர் உரையே திருவள்ளுவரின் மொத்த அணுகுமுறைக்கு இசைவாக இருக்கிறது என்றும் எழுதியிருக்கிறார்.
எனது கருத்து: “இந்திரன் அவனுடைய பிரம்மசர்யத்தால் தேவர்களுக்கு தேஜஸை (ஒளியை) உண்டாக்கினான்”- என்று அதர்வ வேதம் கூறுகிறது ( அதர்வணம் 11-5-19).
“இந்திரன் மிகவும் கவனமாக/விழிப்பாக இருந்ததால் தேவர்களுக்கு எல்லாம் இறைவன் ஆனான்” – என்று புத்தர் தம்மபதத்தில் (2—10) கூறுகிறார்.
பூமியில் யாராவது தவம் செய்தாலோ, நூறு அஸ்வமேத யாகம் செய்தாலோ, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று இந்திரன் நடுங்கத் துவங்கி மண், பெண், பொன் ஆசைகளால் துறவிகளைக் கவிழ்த்துவிடுவான். ஆகையால் மணக்குடவரும் மற்றவர்களின் தவ வலிமை இந்திரனை நடுங்கச் செய்வதே “ இந்திரனே சான்று பகர்வான்” என்பதன் பொருள் என்கிறார். பரிமேலழகர் சொல்லுவது போல இந்திரனை வள்ளுவர் பகடி செய்யவில்லை.
மணக்குடவர் உரை: ஐந்து= நுகர்ச்சியாகிய ஐந்து. இந்திரன் சான்று என்றது இவ்வுலகின் கண் மிகத் தவம் செய்வார் உளரானால், அவன் தன் பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு.
பரிமேலழகர் உரை: ஐந்தும் என்னும் முற்றும்மையும் ஆற்றர்க்கு என்னும் நான்கனுருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று அவித்தானது ஆற்றல் உணர்த்தினானாகலின் ‘இந்திரனே சாலுங் கரி’ என்றார்.
To be continued………………………..
Tags- காளிதாசன் காவியங்கள், இந்திரன், சங்கத் தமிழ் நூல்கள் ஒப்பீடு – பகுதி 2 , அமரகோசம், இந்திரனுக்கு 35 பெயர்கள், பரிமேலழகர் தவறு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் (10 -8-2025) உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமைஆகஸ்ட் பத்தாம் தேதி 2025-ம் ஆண்டு .
****
முதலில் தேசீயச் செய்திகள்
துர்கா பூஜை பந்தல்களுக்கு மான்யம்!
நாடு முழுதும் நேற்று ரக்ஷா பந்தன் விழாவை இந்துக்கள் கொண்டாடினர் . மீண்டும் வேதங்களை படிக்கத் துவங்கும் ருக் வேத- யஜுர் வேத உபாகர்மா நிகழ்ச்சியையும் நேற்று பிராமணர்கள் கொண்டாடினர் .
அடுத்து வரும் ஜன்மாஷ்டமி என்னும் கிருஷ்ணன் பிறந்த நாள் விழா மற்றும் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடவும் இந்துக்கள் பெரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் . இதற்கிடையில் அக் டோபரில் நடைபெறப்போகும் தசரா பண்டிகைக்கு யானைகள் ஊர்வலத்தை கர்நாடகம் ஏற்பாடு செய்துள்ளது அதே நேரத்தில் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் துர்காஷ்டமி விழாவுக்கு நிறைய நன்கொடைகள் அறிவிக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்பத்தியுள்ளது
மேற்கு வங்க முதலமைச்சர் திருமதி மமதா பானர்ஜீ கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன
துர்கா பூஜை குழுக்களுக்கு அரசு மானியம் அறிவித்து மத அரசியல் செய்கிறார் என்று அவைகள் சாடியுள்ளன . மம்தா பானர்ஜி த்ருணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவி ஆவார்.
கொல்கத்தா: பண்டிகை காலத்தை முன்னிட்டு சுமார் 40,000 துர்கா பூஜை குழுக்களுக்கு தலா ரூ.1.10 லட்சம் மானியம் அரசு வழங்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
.இது குறித்து பாரதீய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. மேற்கு வங்க பாஜ எம்எல்ஏ அக்னிமித்ரா பால் கூறுகையில்,‘‘கோயில்களைக் கட்டுவதும், பூஜைக்கு மானியங்கள் வழங்குவதும் ஒரு அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க முடியாது. சாலைகள் அமைப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பதிலாக, மம்தா பானர்ஜி மத அரசியலில் மும்முரமாக இருக்கிறார். என்றார்.
***
இந்துமத சன்யாசினி சாத்வி விடுதலை
மாலேகானில் 2008-ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேரையும் என்ஐஏ N I A கோர்ட் விடுவித்தது.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்., 29ல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
. 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி ஜூலை 31) தீர்ப்பை அறிவித்தார்.
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ”மாலேகானில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை” என நீதிபதி தெரிவித்துள்ளார்.
****
மைசூர் அரண்மனை நோக்கி புறப்பட்ட கஜப்படை
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது .தசரா விழாவில் முக்கிய அம்சமான யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், அரண்மனை நோக்கி வழி அனுப்பி வைக்கப்பட்டது.
414-வது மைசூர் தசரா விழா முன்னிட்டு யானைகள் படையை மைசூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் எச்.சி. மகாதேவப்பா ,நாகர்ஹோளே பூங்காவின் நுழைவாயிலான வீரனஹோசஹள்ளி அருகே வழி அனுப்பி வைத்தார்.
பாரம்பரியத்தின் படி, மைசூர் அரண்மனை பூசாரிகள் குழு வீரன ஹோச ஹள்ளி கேட் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, துலாம் ராசியின் புனிதமான நாளில் யானைகளுக்கு விடைகொடுத்தனர். இந்த ஆண்டு வனத்துறை சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. பத்து கலைக்குழுக்கள் வெவ்வேறு நடன நிகழ்ச்சிகளுடன் கூட்டத்தை மகிழ்வித்தன. தசரா கஜ படையின் முதல் குழுவில் அம்பாரியை சுமக்கும் கேப்டன் அபிமன்யு மற்றும் இரண்டு பெண் யானைகள் அடங்கும். அவை, ஏனைய யானைகளுடன் மைசூர் நகரை நோக்கிப் புறப்பட்டன
****
சிவலிங்கம் கண்டுபிடிப்பு
1500 ஆண்டு பழைமையான சிவலிங்கம் காஷ்மீர் அனந்தநாக். கார்கோட்நாக் அருகில் கண்டெடுக்கப்பட்டது .
தொழிலாளர்கள் குழி தோண்டிய போது இந்த சிவ லிங்கம் கிடைத்தது. இந்த சிவலிங்கத்துடன் மேலும் பழைய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சில பொருட் களும் கிடைத்தன.
கார்கோட் நாக்கில் புனித நீரூற்று உள்ளது. காஷ்மீர் பண்டிட் ராஜாவான துர்லப வர்த்தனன் அங்கு அமர்ந்துதான் தியானம் செய்துள்ளார் அவர் நினைவாக கார் கோடக சாம்ராஜ்யம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த வம்சத்தில் தான் மாமன்னன் சாம்ராட் லலிதாதித்வ முக்திபிடா தோன்றினார்.
****
ஆர் எஸ் எஸ் R S S நூற்றாண்டு விழா
டில்லியில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் நடக்கும் மூன்று நாள் கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசவிருக்கிறார். அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், நடிகர்கள் முதலியோர் இதில் கலந்துகொள்கிறார்கள் .
ஆா்.எஸ்.எஸ். எனும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் மராட்டிய மாநிலம், நாகபுரியில் டாக்டா் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவா்களால் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்த ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு விழா தொடங்கி உள்ளது.
அரசியலில் இருந்து விலகி தேசத்திற்காக தானாக முன்வந்து சேவை செய்யும் தொண்டா்கள் அமைப்பை உருவாக்க வேண்டும். தனிநபா் ஒழுக்கம், நேரம் தவறாமை, தேச பக்தி, சேவை மனப்பான்மை, ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் உருவாக வேண்டும். என்று சிந்தித்தார். அதற்காக தினமும் சந்திக்கும் ஷாகா (கிளை) நடைமுறையை உருவாக்கினார்.
ஹிந்து சமுதாயத்தில் ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதிலும், தீண்டாமை இழிவுகளை இல்லாமல் செய்வதிலும் ஆா்.எஸ்.எஸ். வெற்றி பெற்றுள்ளது.
1963-இல் புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின்போது பண்டித ஜவஹா்லால் நேரு அரசு அழைப்பின் பேரில், முழு சீருடை அணிந்த 3,000 ஸ்வயம்சேவகா்கள் பங்கேற்று சிறப்பித்தனா்
ஆா்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சிகள், பயிற்சி முகாம்கள், நிகழ்ச்சிகள், விழாக்கள் அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியிலேயே நடத்தப்படுகின்றன.
****
இந்தியா ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வகுருவாக ஏற்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய மோகன் பாகவத், நமது நாடு 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறினாலும், உலகிற்கு அதுவொன்றும் புதிதல்ல எனவும், ஏற்கனவே இதுபோல பல நாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவில் உள்ள ஆன்மிகமும், மத நம்பிக்கையும் உலகின் மற்ற நாடுகளில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா ஆன்மிகம் மற்றும் மத நம்பிக்கையில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வ குருவாக ஏற்கும் என்றும் மோகம் பாகவத் தெரிவித்தார்.
நாம் துணிச்சலான மற்றும் அனைவரையும் சமமாகப் பார்க்கும் சிவபெருமானைப் போல மாற வேண்டும். என்றும், அவர் உலகின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் அவர் கூறினார்.
***‘
அடுத்ததாக தமிழ்நாட்டுச் செய்திகள்
திருவிழாவிற்கு அனுமதி கொடுப்பது பற்றி ஐகோர்ட் உத்தரவு
‘கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்களை நீதிமன்றத்தை நாடச் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆகஸ்ட் 12ம் தேதி வரை ஆடி பெருந்திருவிழா நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், சூலுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்திருந்தார்.
கடந்த ஜூலை 7ம் தேதி அளித்த விண்ணப்பம், இதுவரை பரிசீலிக்கப் படவில்லை’ எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:—-
“ அனுமதி கோரி, ஜூலை 7-ல் விண்ணப்பம் செய்துள்ளார். அதன் மீது, இதுவரை உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, திருவிழாவுக்கு தகுந்த நிபந்தனைகளுடன், சூலுார் போலீசார் அனுமதி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்களை பெற்றால், அவற்றை ஏழு நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பரிசீலிக்காமல், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக, மாவட்ட எஸ்.பி.,க்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்ற கோவில்கள், சொற்ப நிதியை வசூலித்து, பூஜைகள், திருவிழாக்களை நடத்துகின்றன. விழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்காததால், வசூலித்த தொகையை வழக்குக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், கோவில் திருவிழா செலவை, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் ஏற்க வேண்டி வரும். விழா நடக்கும் நாட்களில், உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இம்மனு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
***
தென்காசி கோபுர கலசம் இடிந்து விழுந்தது
தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த சிமெண்ட் கலசம் பெயர்ந்து விழுந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் முறையாகப் பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படும் நிலையில் கும்பாபிஷேக விழா அண்மையில் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள ஒரு சிறிய சிமெண்ட் கலசமானது தனியாகப் பெயர்ந்து விழுந்தது.
நல்ல வேளையாக கோபுரத்தின் கீழ் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
****
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்:
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வழி நடத்திய, ‘குருவின் மடியில்’ என்ற தியான நிகழ்ச்சி, கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின், தேவார பண்ணிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது: ஒரு மொழி நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்றால், அதனைச் சுற்றியுள்ள கலாசார அம்சங்களை, உயிர்த் துடிப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாசாரத்தில் ஆன்மிக தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள், நாயன்மார்களின் பெயர்களை தமிழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்.
யோகா, தியானம் செய்வதற்கு எல்லாம் தற்போது நேரமில்லை என, மக்கள் கூறுகிறார்கள். ஆனால், நம் நாட்டின் பிரதமரே தினமும் யோகப் பயிற்சி செய்கிறார். நாம் வெறும் ஏழு நிமிடங்களில் செய்யக்கூடிய, ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ இலவச செயலியை பயன்படுத்தி, மனநலத்திற்காக தியானத்தை செய்ய வேண்டும். என்று, சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.
இந்நிகழ்ச்சி, தமிழ்நாட்டில், 112 இடங்களிலும், வெளிநாடுகளிலும் என, மொத்தம் 128 இடங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
***
சென்னையில் நூல் வெளியீட்டுவிழா
சென்னை சம்ஸ்க்ருதக்கல்லூரி வளாகத்தில் ஆதிசங்கரர் திக்விஜயம் தமிழாக்கம் நூல் வெளியீட்டுவிழா மதுரை நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சோமசேகர சிவாசாரியார், முனைவர் சுரேஷ் விஸ்வநாத சிவாசாரியார், உடையாளூர் கல்யாணராமபாகவதர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
வேதாகம அகாடமி நிறுவனர் சிவஸ்ரீ கல்யாண்ஜி வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் லண்டன் ராஜகோபால் நன்றி கூறினார்.
அகச்சமயம் உள்ளிட்ட சமயபேதங்கள் ஏற்பட்ட காலசூழல்கள் பற்றியும், தற்காலத்தில் ஸநாதனதர்மம் என்ற விருக்ஷமாக அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்றவேண்டும் என்பது பற்றியும் குருநாதர் அவர்கள் ஆசியுரை வழங்கினார்கள்
***
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags- World Hindu, News bulletin, in Tamil, Gnanamayam, 10-8-2025, Broadcast
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
10-8-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
வழங்கியவர் பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம்
திருப்பனந்தாள்
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும்
போழ் இளவெண்மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த
தாழ் சடையான் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் சோழமண்டலத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் திருத்தலமாகும்.
மண்ணியாற்றுக்கு சமீபத்தில் உள்ள இந்த பிரசித்தி பெற்ற தலம் கும்பகோணத்திற்கு வடகிழக்கே 10 மைல் தூரத்திலும் ஆடுதுறை ரயில் நிலையத்திற்கு வடக்கே 6 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. தேவாரத் தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 39வது தலமாக இது அமைகிறது
இறைவனின் திருநாமங்கள் : அருண ஜடேஸ்வரர், தாலவனேசுவரர்,
அம்மன் : பிருஹன்நாயகி,, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி
சுவாமியின் வலப்பக்கம் முதலில் உள்ள அம்பிகைக்கு பாலாம்பிகை என்று பெயர். உபதேசத்தின் பின்னர் இவருக்கு விருத்தாம்பிகை என்று பெயர் ஆகும்.
தல விருட்சம் : பனை மரம்
இது ஆதியில் ஐந்து கிளையைக் கொண்டதாக இருந்தது. உள் பிரகாரத்தின் பின்னுள்ளது,
இரண்டு பனை மரங்கள் கிழக்கு பிரகாரத்தில் உள்ளது. பனைமரம் தல விருட்சமாக அமைவதால் இந்தத் தலத்தின் பெயர் திருப்பனந்தாள் என்று ஆயிற்று. தாலம் என்றால் பனை. ஆகவே இங்குள்ள இறைவனின் பெயர் தாலவனேசுவரர் என்று ஆயிற்று.
தீர்த்தம் : பிரஹ்ம தீர்த்தம் – கோவிலுக்குப் பின்னே உள்ளது.
சூரிய தீர்த்தம் – புழுதிகுடி மடத்திற்குப் பின்னே உள்ளது. இங்கு பைரவர் காவலாக இருக்கிறார்.
தர்ம தீர்த்தம், – இது ஒரு குளம். நத்தம் என்னும் குளத்தைச் சார்ந்தது.
சேஷ தீர்த்தம் – குளம். அக்கினி மூலை, பாலூரில் உள்ளது
காக தீர்த்தம் – இதுவும் குளம். நைருதி மாரியம்மன் கோவில் பக்கத்தில் உள்ளது.
ஸத்திய நதி – மேற்கே உள்ளது.
கஜகாதம் – குளம். வீராக்கண்குளம் எனப்படும்.
நாக தீர்த்தம் – வாயு மூலையில் கோவிலின் உள்ளே குளமாக உள்ளது.
தாடகா தீர்த்தம் – வீரியம்மன் குளம் எனப்படும் இது வடமேற்கே உள்ளது.
சந்திர தீர்த்தம் – வடக்கே கிணறாக உள்ளது.
நாரை வாய்க்கால் – இது மேற்கே உள்ளது.
இத்தலம் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
இத்தலத்தில் தாடகை என்ற ஒரு யக்ஷ ஸ்திரீ மூன்று வருடம் பூஜித்து மாலை சார்த்தி பதினாறு கைகளைப் பெற்றாள். பூஜைக்காக பெற்ற இந்த பதினாறு கைகளும் பூஜை முடிந்த பின்னர் மறையுமாம். இந்த தாடகை ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல. புத்திரனை வேண்டி இவள் இங்கு பூஜித்தாள். இவள் மாலை சாத்தும் போது ஆடை நெகிழவே இறைவன் இவளுக்காகத் தனது திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டார்.
இங்குள்ள தாடகா தீர்த்தத்திற்கு காவலாக வீரசண்டிகை இருக்கிறாள்.
இவரை ராவணனின் பாட்டி என்றும் சிலர் கூறுகின்றனர்.
இறைவன் வளைந்த நிலையிலேயே இருப்பதைப் பார்த்த மணிமுடிச்சோழன் என்னும் மன்னன் யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்து வளைந்த தலையை நிமிர்த்த முயன்றான். ஆனால் முடியவில்லை.
திருக்கடையூரில் பிறந்த குங்கிலிய நாயனார் வளைந்திருக்கும் தலையைப் பார்த்து, ஈசனின் தலையை அரசனின் சேனையாலும் நிமிர்த்த முடியாமல் இருப்பதை எண்ணி, வருந்தினார்.
ஒரு கயிற்றைத் தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசனின் கழுத்தில் கட்டி, ‘ஒன்று உன் தலை நிமிர வேண்டும். அல்லது நான் உயிரை இங்கேயே விட வேண்டும்’ என்று கூறி கயிறை இழுத்தார். உடனே அக்கணமே ஈசனின் தலை நிமிர்ந்தது. இதனால் அரசன் மிகவும் மகிழ்ந்து நாயனாரைப் போற்றினான்.
இந்த வரலாறு இங்குள்ள பதினாறு கால் மண்டபத்தில் சிற்ப வடிவில் உள்ளது.
இது சூரியன் பூஜித்த தலமும் ஆகும்.
இங்கு பிரம்மா, ஐராவதம், சூரியன், சந்திரன், நாக கன்னிகை,, ஒரு வேடராஜனான சங்குகன்னன், தர்மசேன மஹாராஜா, கு ங்குலியக் கலய நாயனார், வணிகனான யக்ஞகுப்தன், ஒரு காகம் உள்ளிட்டோர் ஈசனை வழிபட்டுள்ளனர்..
கோவில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள கோவில் ஏழு அடுக்குகளுடன் விளங்குகிறது. ராஜகோபுரத்தை அடுத்து பதினாறு கால் மண்டபமும், வடக்கில் வாகன மண்டபமும், இரண்டாவது கோபுரத்தை அடுத்து வௌவால் நெற்றி மண்டபமும் சிற்ப வேலைபாடுகளுடன அழகுறத் திகழ்கின்றன.
இத்தலத்திற்கு வழமொழியில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாக இரு தல புராணங்கள் உள்ளன.
இங்கு ஶ்ரீ குமரகுருபர ஸ்வாமிகளால் ஏற்படுத்தப்பட்ட காசி மடம் என்னும் சைவ மடம் மிகவும் பிரபலமாக உள்ளது. சைவ சமயத் தொண்டை இது தொடர்ந்து செய்து வருகிறது.
இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், பாடல் இயற்றி வழிபட்டுள்ளார்.
திருமணத் தடை நீங்கவும், புத்திரப் பேறு பெறவும் வழிபட இந்தத் தலம் சிறந்த தலம் என்பது ஐதீகம்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ப்ரஹன் நாயகி அம்மையும் அருண ஜடேஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புதிய தொடர்!அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 5
ச. நாகராஜன்
6
ஸ்வாமிஜி: மறைவு
ஒரு நாள் ஆஸ்பத்திரியில் அவர் என்னைப் பார்த்து, “நீ லட்சம் பேருக்குப் பேசுவடா! என்றார். நான் திகைத்துப் போனேன். மதுரை கோவிலில் தெற்கு ஆடி வீதியில் உள்ள தெய்வ நெறிக்கழகத்தில் ஞாயிறு தோறும் நடக்கும் ஸத் ஸங்கத்தில் ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றி ஒரு பத்து நிமிடம் பேசுவது எனது வழக்கம்.
அங்கு நூறு பேர்கள் வருவர். பின்னர் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பங்கேற்ற போது அங்கும் சுமார் நூறு பேர் இருப்பார்கள், பேசுவது வழக்கம். பின்னாளில் ஶ்ரீ சத்ய சாயி சேவா தளத்தில் மதுரை நகர அமைப்பாளராக இருந்த போது ஸத்ஸங்க கூட்டங்களில் பேசுவேன்.
விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் ஆயிரம் பேர் குழுமி இருக்க அங்கு பேசினேன். இந்த இடங்களில் எல்லாம் கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டோரின் எண்ணிக்கையை உத்தேசமாகக் குறித்துப் பார்ப்பது என் வழக்கமானது. ஆனால் ஆயிரம் எங்கே, லட்சம் எங்கே?
ஒரு நாள் ஜெயா டிவியில் அழைப்பு வர அங்கு சென்றேன். பேட்டி மற்றும் உரைகள் என அடிக்கடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்..
ஒரு நாள் ஜெயா டிவி நிர்வாகம் என்னையே பேட்டி எடுக்கத் தீர்மானித்தது! ஸ்டுடியோவில் பல காமராக்கள் மேலிருந்து என் முன்னே தொங்க பேட்டியாளர்கள் இருவருடன் மேடையில் நான் இருந்த போது, டைரக்ட் செய்தவர் என்னைப் பார்த்து, “சார்,நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகிறது! நீங்கள் 96 லட்சம் பேருக்குப் பேசப் போகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்பிக்கலாமா?” என்றார்.
நான் உடனே சிரித்தேன். ஸ்வாமிஜி சொன்னது பலித்து விட்டதே! 96 லட்சம் பேர்!
“நீ லட்சம் பேருக்குப் பேசுவடா” – ஸ்வாமிஜியின் குரல் மனக்கண்ணில் தோன்றியது. “என்ன சார், சிரிக்கிறீங்க” என்று அவர் கேட்க, “சார்! ஒன்றுமில்லை, நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம்” என்றேன்.
ஸ்வாமிஜியின் வாக்கு ஒரு நாளும் பொய்க்காது.
இப்படி என் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவம் உண்டு. எனது அண்ணன் சீனிவாசனுக்கு மதுரை கோட்ஸில் வேலை. எனது தம்பி ஸ்வாமிநாதனுக்கு உபநயனம்!
திடீரென்று ஒரு நாள் அவர் உபநயனம் போட வேண்டுமென்று சொன்னார். அதன்படி அவரே அதை நடத்தியும் வைத்தார். எனது தம்பிகள் சூரியநராயணன், மீனாட்சி சுந்தர், தங்கை லலிதா ஆகியோருக்கும் அவரது அனுக்ரஹம் கிடைத்தது.
அவரது மேன்மை எப்படிப்பட்டது என்பதை உணர்த்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம். சபரிமலையிம் பிரதம தந்திரியான சங்கரரூ கண்டரூ ஸ்வாமிஜியின் மேல் அபார அன்பும் மதிப்பும் கொண்டவர்.
முக்கியமான சபரிமலை சம்பந்தமான சாஸ்த்ரோக்தமான விஷயங்களில் அவர் ஸ்வாமிஜியை கலந்தாலோசிப்பது வழக்கம்!
ஏற்கனவே ஸ்வாமிஜி பற்றிய எனது கட்டுரைகளில் ஒன்றில் குறிப்பிட்ட ஒரு சின்ன சம்பவத்தை இங்கே குறிப்பிடலாம்.
ஆயக்குடி சென்ற எங்கள் குழு அருகிலிருந்த குற்றாலம் சென்று குளிக்கலாம் என்று விரும்பியது. ஸ்வாமிஜியிடம் பெர்மிஷன் கேட்டோம். பதிலே இல்லை. கடைசியில் எனது தம்பி ஸ்வாமிநாதனை அவரிடம் அனுப்பி கடைசி முயற்சியைச் செய்தோம்.
ஸ்வாமிநாதன் அனுமதி கேட்க ஒரு நிமிடம் மௌனமாக இருந்த அவர், ராமாராவை அழைத்தார்.
“பத்திரமாக இவர்களைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள், மதுரையில் கொண்டு போய் விடுங்கள்” என்றார்.
அங்கிருந்து சந்தோஷத்துடன் செல்ல ஆரம்பித்தோம். நல்ல அடை மழை ஆரம்பித்தது. எதிரே ஒரு அடி தூரத்தில் கூட சாலை தெரியவில்லை. அப்படி ஒரு மழை. அலறி நொந்து போனோம். நடந்தோம், நடந்தோம் தென்காசியை நோக்கி அந்த மாலை வேளையில் அடைமழையில் நடந்தோம். தென்காசி வந்தவுடன் ஒரு தெருவின் மூலையில் நின்ற ராமாராவ் அவர்கள், “ஓய்! ராமகிருஷ்ண ஐயர்” என்று கூவினார். எதிரே இருந்த வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்து எங்களைப் பார்த்துத் திகைத்தார். “அட, மழையில் நனையலாமா?” என்ற அவரிடம் அருகிலிருந்த பிள்ளையார் கோவிலைக் காட்டி இதைத் திறந்து விடுங்கள். இரவு இங்கு தங்கி விட்டு அதிகாலை பஸ்ஸில் மதுரைக்குப் போய் விடுவோம்: என்றார்.
கோவிலில் மிகுந்த களைப்புடன் தங்கினோம். திடீரென்று ஒரு அலறல் _ நக்ஷத்திரம் ஒழுகறது டோய்” என்ற சத்தமான குரலைக் கேட்டு பயந்தே போனோம். மனநிலை சரியில்லாத ஒருவர் வானத்தைப் பார்த்துக் கத்திய ஆவேசக் குரல் தான் அது. இரவு முழுவதும் நடுக்கம் தான்!
அதிகாலையில் பஸ் வந்தது. எங்கள் குழுவில் இருந்த எண்ணிக்கையைச் சரியாகச் சொன்ன கண்டக்டர், “இவ்வளவு பேருக்குத் தான் சார் இடம்!” என்றார். தப்பித்தோம், பிழைத்தோம் என்று மதுரை வந்து சேர்ந்தோம்.
ஸ்வாமிஜியின் அனுக்ரஹத்தால் இந்த மட்டில் பிழைத்தோம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.
ஸ்வாமிஜியின் பூஜை சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் ஆயக்குடியில் இருந்த சீதாராமையர் குடும்பமே கவனித்துக் கொண்டது.
ஸ்வாமிஜியின் இல்லத்திற்கு மிக அருகிலிருந்த அவரது வீட்டில் அவரது மகன்களான அன்ந்தகிருஷ்ணன், சுப்பாமணி, சுந்தரம் மற்றும் அவர்களின் தங்கை விஜயலக்ஷ்மி ஆகியோர் வருகின்ற பக்தர்களையும் விருந்தினர்களையும் நன்கு கவனித்துக் கொள்வது வழக்கம். இவர்கள் அனைவரும் ஸ்வாமிஜியின் அனுக்ரஹத்தால் மிக நல்ல பதவிகளில் அமர்ந்து வளமாக வாழ்க்கை நடத்தியது குறிப்பிடத்தகுந்த விஷயம்!
ஸ்வாமிஜி தனது பணியை முடித்து விட்டதாக நினைத்து விட்டார் போலும்.
வீட்டில் இருந்த சந்தனைக் கட்டைகள் அடங்கிய மூட்டையை ஒரு நாள் சுட்டிக் காட்டி, “இதில் பாதி எனக்குப் போதும்” என்றார்.
ஸ்வாமிஜி தனது தாயாரிடம் அபாரமான பக்தி கொண்டவர்.
எங்களில் யார் உள்ளே சென்றாலும் முதலில் அவரது தாயாரை நமஸ்காரம் செய்யச் சொல்வார். பின்னர் தான் அவரை நமஸ்கரிக்க முடியும்!
அப்படிப்பட்ட வயதான தாயாரையும் அவர் பிரியத் துணிந்தது இறைவனின் சங்கல்பம் போலும்!
சந்தனக்கட்டையில் பாதி அவரைச் சேரும் தருணம் வந்தது. செய்தியை இன்னாருக்கு மட்டும் சொல்ல வேண்டும் என்பதைக் கூட அவர் சொல்லி விட்டார்.
எனது தந்தையார், எம்.எஸ், வெங்க்டராமன் ஆகியோர் பதறியவாறே ஆயக்குடி சென்று அவரது அந்திமக் கிரியையில் கலந்து கொண்டனர்.
அவர் இல்லை என்று எப்போதும் எங்களால் சொல்ல முடியாது.
ஒவ்வொரு கணத்திலும் அவர் கூடவே இருப்பது போன்ற உணர்வை எங்களுக்கு அனுக்ரஹித்து இருக்கிறாரே, அது தான் பரம அனுக்ரஹம்!
அடுத்து காஞ்சி பெரியவருடனான எனது தந்தையாரின் அனுபவத்தைப் பார்ப்போமா?