காளிதாசன் காவியங்களில் விஷ்ணு கொடி, வாகனம்!- Part 5 (Post No.14,837)

Written by London Swaminathan

Post No. 14,837

Date uploaded in London –  6 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

காளிதாசன் காவியங்களில் விஷ்ணு கொடி, வாகனம்  !- Part 5

சங்கப்புலவர்களும் காளிதாசனும் விஷ்ணு பற்றியும் அவருடைய அவதாரங்கள், கொடி, வாகனம் அவனுக்குப் பிரியமான துளசி  உதளியான பற்றி சொல்லும் விஷயங்களை மேலும் விரிவாக விஷ்ணு ஸஹஸ்ரநாம உரைகள் ஆழ்வார் பாடல்களில்  மற்றுமுள்ள பக்தி இலக்கியங்களில் காண்கிறோம்.

பக்தி இயக்கம் என்பது ரிக் வேத காலத்திலியேயே துவங்கி விட்டது அப்போதிட்ட விதைகள் மரமாக வளர்ந்து பூத்துக்குலுங்கிப் பழங்களைக் கொடுத்தது  காளிதாசன் காலத்தில்- பரிபாடல் பாடிய சங்க காலத்தில்– என்றால் மிகையாகாது . ராமாயணம் இயற்றிய வால்மீகி  ராமனை அவதாரம் என்று சொல்லவில்லை ஆனால் காளிதாசன் அவன் விஷ்ணுவின் அவதாரம் என்றும் அவனது வாகனம் , கொடி, மனைவியர்  இவை இவை என்றும் சொல்கிறான் . ரகு வம்ச காவியத்திலிருந்தும் சங்க இலக்கிய நூல்களிலிருந்தும் சில பாடல்களை மட்டும் காண்போம்.

अथात्मनः शब्दगुणम्गुणज्ञ्यः

पदम्विमानेन विगाहमानः।

रत्नाकरम्वीक्ष्य मिथः स जायाम्

रामाभिधानो हरिरित्युवाच॥ १३-१

athātmanaḥ śabdaguṇamguṇajñyaḥ

padamvimānena vigāhamānaḥ |

ratnākaramvīkṣya mithaḥ sa jāyām

rāmābhidhāno harirityuvāca || 13-1

ராமன் என்ற ஸ்ரீ ஹரி என்று சொல்லும் ஸ்லோகம் இது . ராமன் சிங்கையில் விமானத்தில் ஏறிக்கொண்டு கடலினை காண்பித்து சீதையிடம் பேசும் காட்சி இது

****

त्रस्तेन तार्क्ष्यात्किल कालियेन मणिम् विसृष्टम् यमुनौकसा यः|

वक्षःस्थलव्यापिरुचम् दधानः सकौस्तुभम् ह्रेपयतीव कृष्णम्॥ ६-४९

trastena tārkṣyātkila kāliyena maṇim visṛṣṭam yamunaukasā yaḥ |

vakṣaḥsthalavyāpirucam dadhānaḥ sakaustubham hrepayatīva kṛṣṇam || 6-49

இந்துமதி சுயம்வர கட்டத்தில் ஒரு மன்னரை அறிமுகப்படுத்திய தோழி அந்த மன்னன் யமுனை நதியில் வாழும் காளியன் என்னும் பாம்பு கொடுத்த டீ ரத்தினத்தை மார்பில் அணிந்து விஷ்ணு கெளஸ்துப மணியை மார்பில் அணிந்து போல இருக்கிறது என்கிறாள் . இதை யமுனை, கிருஷ்ணன் அடக்கிய காளியன், விஷ்ணு அணியும் ரத்தினம்  முதலியன வருவதைக் கவனிக்க வேண்டும்.

****

स्वासिधारापरिहृतः कामम् चक्रस्य तेन मे।

स्थापितो दशमो मूर्धा लभ्याम्श इव रक्षसा॥ १०-४१

svāsidhārāparihṛtaḥ kāmam cakrasya tena me।

sthāpito daśamo mūrdhā labhyāmśa iva rakṣasā || 10-41

ராவணன் ஒரு அரக்கன் என்பதை புறநானூறு குறிப்பிட்டத்தை முந்தைய கட்டுரையில் கண்டோம் இந்த ரகுவம்ச பாடல் அவனை ராக்ஷஸன் என்றும் அவனது பத்தாவது தலை தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் வெட்டப்படும் என்றும் தேவர்களுக்கு விஷ்ணு உறுதி  தருகிறார்  முன்னொரு காலத்தில் கடும் தவம் இயற்றிய ராவணன் ஒன்பது தலைகளைத் தியாகம் செய்தபோது பிரம்மா தோன்றி வரம் கொடுத்து ஒன்பது தலைகளையும் மீண்டும் கொடுத்ததாக ஒரு வரலாறு உண்டு. இதில் ராவணன் ஒரு அரக்கன், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் ஆகியன  வருவதைக் கவனிக்க வேண்டும்.

***

யாதவப் பெண்ணுக்கு காளை மாடு  காட்டிய கணவன்!

கிருஷ்ணனும் தெய்வ மாலும் (திரு மால் /விஷ்ணு/ ஹரியும் ) ஒன்று என்பதைக் காட்டும் வருணனை கலித்தொகையில் முல்லைக்கு காலையில் வருகிறது ஆயர்கள் -அதாவது யாதவ இடையர் வீட்டுப் பெண்மணிகள்  காளை அடக்கும் போட்டியில் (ஜல்லிக்கட்டு/ மஞ்சசுவிரட்டு) யார் வெல்கிறாரோ அவரையே

கல்யாணம் செய்வது வழக்கம் காளை அடக்கும் போட்டி, முதல் முதலில் பாகவதத்தில் வருகிறது

 கலி .107-22

ஒரு யாதவ பெண் தான் வளர்த்த காளையை மைதானத்துக்குள் அனுப்பினாள்; அந்தக் காலத்தில் ஆண்களும் தலையில் பூக்களை அணிவது வழக்கம்; காளையை அடக்க வந்த ஆண்மகனின் பூ மாலை காளையின் கொம்பில் சிக்கிக்கொண்டது அதை யாதவ இளைஞன் அடக்கியபோது துள்ளிக்குதித்த காளையின் கொம்பில் சிக்கி இருந்த அந்தப் பூ மாலை , யார் அந்தக் காளையை வளர்த்து போட்டிக்கு அனுப்பினாளோ அவள் மீது போய் விழுந்தது உடனே தோழியர் அனைவரும் பாராட்டி விஷ்ணுவே/ திருமாலே உனது கணவனைக் காட்டிவிட்டார் என்று சொல்லி மகிழ்கிறார்கள் இதை முல்லைக் கலி  பாடிய சங்கப்புலவர் சித்தரிக்கிறார் ; இதில் யாதவர்கள் வணங்கும் கிருஷ்ணனே மால் என்று வருவதைக்க  கருத்திற்கொள்ள வேண்டும்  .

வருந்தாதி
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன்   30
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, ‘திண்ணிதா,
தெய்வ மால்காட்டிற்று இவட்கு எனநின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு

வருந்தவேண்டாம். உன் கூந்தலில் அவன் பூ விழுந்தது எனக் கேட்டு “இவளுக்குத் தெய்வம் காட்டிய வழி” என்று எண்ணிக்கொண்டு உன் தாய் தந்தையரும், அண்ணன்மாரும் திருமணம் செய்துதர உறுதி பூண்டுள்ளனர். உன் விருப்பம் நிறைவேறும்.

****

மார்பில் லெட்சுமி , கெளஸ்துப மணி கருடன்

பரிபாடல் 1 

எரிமலர் சினைஇய கண்ணை; பூவை

விரிமலர் புரையும் மேனியை; மேனித்

திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்

தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை

எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை 10

சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்

ஏவல் உழந்தமை கூறும்,

நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

பொருள்

எரியும் தீ போலப் பூக்கும் தாமரை-மலர் போன்ற கண்ணை உடையவன்.

பூவை என்னும் காயாம்பூ பூத்திருப்பது போன்ற ஒளிர்-நீல-நிற மேனியை உடையவன்.

அந்த மேனியில் திருமகள் நிமிர்ந்து அமர்ந்திருக்கும் மார்பினை உடையவன்.

அந்த மார்பில் தெரிப்பாக மணி ஒளிரும் பூணினை (கவச-அணிகௌவுத்துவ-மணி) உடையவன்.

பெரிய மலை பற்றி எரிவது போன்ற பொன்னிழையாலான உடுக்கை-ஆடை உடையவன்.

கருடச்சேவல் அழகு தரும் கொடியை வலப்புறம் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருப்பவன்.

உன் ஏவலின்படி உழைத்துக்கொண்டிருப்பவர்கள் நாக்கு வல்லமை பெற்ற (வடமொழி மந்திரத்தை வளமாக ஓதும் வல்லமை) அந்தணர்கள். அவர்கள் ஓதும் அருமறையின் பொருளாக விளங்குபவன். இப்படி விளங்குபவனே!

****

தசரதன் மனைவியர் கர்ப்பமாக இருக்கும்போது கண்ட கனவுகள்

गुप्तम् ददृशुरात्मानम् सर्वाः स्वप्नेषु वामनैः।

जलजासिकदाशार्ङ्गचक्रलाञ्छितमूर्तिभिः॥ १०-६०

guptam dadṛśurātmānam sarvāḥ svapneṣu vāmanaiḥ।

jalajāsikadāśārṅgacakralāñchitamūrtibhiḥ || 10-60

விஷ்ணுவின் அவதாரத்தைக்கோடி காட்டும்

சங்கு சக்ர சாரங்க கதையுடன் உள்ள இளைஞர்களைக் கனவில் கண்டனர்.

हेमपक्षप्रभाजालम् गगने च वितन्वता।

उह्यन्ते स्म सुपर्णेन वेगाकृष्टपयोमुचा॥ १०-६१

hemapakṣaprabhājālam gagane ca vitanvatā।

uhyante sma suparṇena vegākṛṣṭapayomucā || 10-61

ஒளியை வீசிக்கொண்டு பறக்கும் கருடன் தங்களை சுமந்து செல்வதாகவும் மேகங்கள் பின் தொடர்வதாகவும் கனவு கண்டார்கள்.

बिभ्रत्या कौस्तुभन्यासम् स्तनान्तरविलम्बितम्।

पर्युपास्यन्त लक्ष्म्या च पद्मव्यजनहस्तया॥ १०-६२

bibhratyā kaustubhanyāsam stanāntaravilambitam।

paryupāsyanta lakṣmyā ca padmavyajanahastayā || 10-62

லட்சுமி தனது மார்பில் கெளஸ்துப மணி விளங்க தாமரைப்பூ விசிறி கொண்டு வீசி உபசரிப்பதாகவும் கனவில் தெரிந்தது.

அடுத்த ஸ்லோகத்தில் சப்த ரிஷிகள் உபசரித்த கனவு வருகிறது இதையெல்லாம் அவர்கள் கணவன் தசரத சக்கரவர்த்தியிடம் சொன்னவுடன் அவர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தார்.

****

அகநானூறு 175

கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன் 10

ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த

வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என

மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,

நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்

போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல், 15

திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு

மண் பயம் பூப்பப் பாஅய்,

தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?

இப்போது வானம் மின்னுகிறது. செழியன் கைவண்மை மிக்க வள்ளல். அவன் வலிமை மிக்க சக்கரம் கொண்ட தேரில் சென்று ஆலங்கானம் என்னுமிடத்தில் போரிட்டான். அப்போது அவன் வேல்கள் மின்னியது போல வானம் மின்னுகிறது. அப்போது அவன் முரசு முழங்கியது போல இடி முழங்குகிறது. சக்கரத்தைக் கையிலே கொண்ட திருமால் மார்பில் உள்ள ஆரம் போல வானவில்லை வளைத்துக் காட்டுகிறது. மண்ணெல்லாம் விளைச்சல் பயன் தருமாறு மழை பொழிகிறது. அவர் வருவேன் என்று சொன்ன காலம் இதுதானே?

நான்கு தெய்வங்களின் கொடிகள் வாகனங்கள் பற்றி சங்கப்புலவர் நக்கீரர்

புறநானூறு 56

காளைமாட்டு ஊர்தி,

தீ போன்று விரிந்த செஞ்சடை,

கையில் கணிச்சி ஆயுதப் படை,

கழுத்தில் நீலநிற நஞ்சுமணி

ஆகியவற்றை உடைய சிவபெருமான் (1)

இவன் கூற்றுவன் போல் சினம் கொண்டவன்.

கடலில் வளரும் சுழல்சங்கு போன்ற வெண்ணிற மேனி,

கலப்பை ஆயுதப் படை,

பனைமரக் கொடி

ஆகியவற்றை உடைய பலராமன் (2)

இந்தப் பலராமன் போல் வலிமை கொண்டவன்

கழுவிய மணிக்கல் போன்ற நீலநிற மேனி,

கருடப்பறவைக் கொடி

ஆகியவற்றை உடைய திருமால் (3)

திருமால் போல் இகழ்வாரை அழிக்கும் புகழ் கொண்டவன்

மயில் கொடி,

மயில் ஊர்தி

ஆகியவற்றுடன் வெற்றியாளனாக விளங்கும் முருகன் (4)

முருகன் போல் எண்ணியதை முடிக்கும் திறனாளன்.

இப்படி நான்கு பெருந் தெய்வம் போல்

ஆற்றல் மிக்க உனக்கு செய்யமுடியாதது என்று ஒன்று உண்டா?

இல்லை.எனவே

இரப்போருக்கு வேண்டிய பொருள்களைக் குறைவின்றி வழங்குவாயாக.

யவனர் தந்த பொன்-கிண்ணத்தில்

மகளிர் நாள்தோறும் ஊட்டும் தேறலை உண்டு

மகிழ்ந்து இனிதாக வாழ்வாயாக.

வாளோக்கிய மாறனே!

இருளகற்றும் சூரியன் போலவும்,

மேற்குத் திசையில் காணப்படும் வளர்பிறை நிலாப் போலவும்

நிலைபேற்றுடன் உலகில் வாழ்வாயாக.

பாடல்

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி,

அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;

மண்ணுறு திரு மணி புரையும் மேனி,       5

விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,

பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என

ஞாலம் காக்கும் கால முன்பின்,

தோலா நல் இசை, நால்வருள்ளும்,                 10

கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;

வலி ஒத்தீயே, வாலியோனை;

புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;

முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;

ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்   15

அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,          20

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!

அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்

வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்

தண் கதிர் மதியம் போலவும்,

நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!    25

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

****

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை

மதுரை மருதன் இளநாகனார் பாடிய முந்தைய பாடலில் மன்னனை முருகனுக்கும் சிவனுக்கும் ஒப்பிடுகிறார் . இதிலிருந்து இன்னுமொரு விஷயம் தெளிவாகத்தெறிகிறது ; காளிதாசன் சங்க காலத்துக்கு முந்தையவன் ஏனெனில் அவன் மன்னர்களை வேத கால இந்திரன், அக்கினி, வருணன் , யமனுக்கு ஒப்பிடுகிறான் ; தமிழ் தெரியாத வடகத்தியர்களும் வெளிநாட்டுக்காரர்களும் காளிதாசனைக் குப்தர்  காலத்தில் வைப்பது பொருந்தாது என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

****

ஆதிசேஷன்படுக்கையில் விஷ்ணு

பிரம்மாவை வருணிக்கும் பாடலில் ஆதிசேஷன் என்னும் பாம்புப்  படுக்கை வருகிறது அதை அடுத்ததாகக் காண்போம்

–subham–

Tags- காளிதாசன் காவியங்கள், விஷ்ணு கொடி, வாகனம் ,சங்கப்புலவர் நக்கீரர், அகநானூறு 175,யாதவப் பெண், காளை மாடு,   கணவன், கலித்தொகை

கிளி அலெக்ஸ் சொல்லும் – ‘I AM SORRY’ என்று! (Post.14,836)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,836

Date uploaded in London – 6 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-5-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

கிளி அலெக்ஸ் சொல்லும் – ‘I AM SORRY’ என்று! 

ச. நாகராஜன் 

காட்டிலும் சரி, வீட்டுத் தோட்டங்களிலும் சரி, கிளிகளின் கிக்கீ சத்தத்தைக் கேட்டு ஆனந்திக்கிறோம்.

ஆனால் அவை பற்றிய அதிசய உண்மைகளை நாம் அறிந்திருக்கிறோமா?

சந்தேகம் தான்!

எடுத்துக்காட்டிற்கு ஒன்று. கிளியின் அதிக பட்ச ஆயுள் எவ்வளவு தெரியுமா?.

நூறு ஆண்டுகள்! எழுபது, எண்பது வருடங்கள் என்பதெல்லம் பெரிய அளவில் உள்ள கிளிகளுக்கான சாதாரண ஆயுள் காலம்!

ஆயிரம் மிருகக்காட்சிசாலைகளில் 1,30,000 கிளிகளை ஆரய்ந்ததில் 217  கிளி வகைகளின் ஆயுட்காலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஃபிக் பேரட் இரண்டு வருடத்திலிருந்து 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. மற்ற பல வகைகள் மூளை பெரிதாக இருக்க இருக்க அதிக ஆண்டுகள் வாழ்கின்றன!!

சரி, அவை நாம் பேசுவதைப் புரிந்து கொள்கிறதா? 

புரிந்து கொள்ள முடியாது என்பதே பெரும்பாலோருடைய பதில் 

ஆனால் அவை நாம் பேசுவதைப் புரிந்து கொள்கின்றன!

அவை நம்மிடம் ‘சாரி’என்று கூடச் சொல்கின்றன. 

கிளிகள் தமக்குள் ஒன்றுடன் ஒன்று சைகை தொடர்பு மொழியில் கூட பேசுகின்றன. 

மனிதர்களுடன் வாழும் போது அவை தமது சூப்பர் மூளை திறனை உபயோகித்து மனிதன் பேசும் மொழியைப் புரிந்து கொள்கின்றன.

போஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுத் துறை பெண்மணியான ஐரீன் பெப்பர்பெர்க் (IRENE PEPPERBERG) லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்குப் பல தகவல்களைத் தெரிவித்துள்ளனர். 

பெப்பர்பெர்க் வளர்க்கும் கிளிக்கு அலெக்ஸ் என்று பெயர். அலெக்ஸுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் நன்கு தெரியும். அந்த வார்த்தைகள் சுட்டிக் காட்டும் பொருள்கள், செயல்கள், வண்ணங்கள் ஆகியவற்றை அது சரியாகப் புரிந்து கொள்கிறது. ஒரு பொருளைத் தந்தால் அதன் வடிவம். வண்ணம், அந்தப் பொருள் எதனால் உருவாக்கப்பட்டது போன்ற அனைத்து விஷயங்களும் அதற்கு அத்துபடி. பெரியது, சிறியது, அதே மாதிரி உள்ளது, வேறு மாதிரியாக உள்ளது – இவை அனைத்தையும் அது உணர்கிறது.

 ப்யூஜெட் ஸவுண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணைப்பேராசிரியரான எரின் கால்பெர்ட் ஒய்ட் (Erin Colbert-White, Associate Professor, University of Puget Sound) “கிளிகள் நிச்சயமாக அனைத்து பொருள்களைச் சுட்டிக் காட்டும் வார்த்தைகளை உணர்கின்றன” என்கிறார்.

“தாங்கள் கற்ற வார்த்தைகளை திறமையுடன் சமயத்திற்கேற்றபடி அவை பயன்படுத்துவது பிரமிப்பை ஊட்டும்” என்று கூறும் அவர், நீங்கள் அறைக்குள் நுழைந்து அதைப் பார்த்து ஹலோ என்றால் பதிலுக்கு அதுவும் ஹலோ என்று சொல்லும்” என்கிறார்! 

பெப்பர்பெர்க்கின் ஒரு அனுபவம் இது : ஒரு சமயம் குறும்புக்கார ஆப்பிரிக்கப் பறவையான அலெக்ஸின் மூக்கில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காபி கோப்பையை அவர் பிடுங்கினார். அவருக்குக் கோபம் வந்தது. ஏன் இதை எடுத்தாய் என்று கோபத்துடன அவர் கூறினார். பின்னர் அலெக்ஸ் வருத்தப்படக் கூடும் என்று எண்ணிய அவர் ஐ ஆம் சாரி என்றார். பதிலுக்கு அலெக்ஸும் ஐ ஆம் சாரி என்றது.

 அன்றிலிருந்து எப்போதெல்லாம் பெப்பர்பெர்க் அலெக்ஸின் குறும்புத்தனங்களைச் சுட்டிக் காட்டுகிறாரோ அப்போதெல்லாம் அது ஐ ஆம் சாரி என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டது.

 அன்போடு அதனிடம் ‘ஐ லவ் யூ’  என்று சொல்ல ஆரம்பித்தபோது அதுவும் பதிலுக்கு ஐ லவ் யூ சொல்ல ஆரம்பித்தது. 

மனிதரின் மொழியை விலங்குகளும் பறவைகளும் புரிந்து கொள்கின்றனவா என்ற இந்த ஆராய்ச்சி ஐம்பது வருட காலமாகத் தொடர்கிறது. ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி கண்டபாடில்லை. 

ஆனால் பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா என்று இனி பாட வேண்டிய அவசியம் இல்லை. (எம்ஜிஆர் சரோஜாதேவி பணத்தோட்டம் கண்ணதாசன் பாடல்)

 பேசுவது கிளியே தான்!

***

If you want all the world to know, tell your wife- Part 5 (14,835)

Written by London Swaminathan

Post No. 14,835

Date uploaded in London –  5 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One Thousand Proverbs on Woman, Wife, Daughter– Part 5

81.Whosoever is tired of happy days let him take a wife.

82.A woman can take away more from a house in her apron more than a man bring into it in a hay cart.

83. A woman eats bitterness.

84. When there is a good woman in the house joy laughs from the window.

85.When women make the bread and do the washing they have the devil in their body.

—Dutch proverbs

86.An only daughter becomes a bitch.

87.A daughter carries out of the house, but a son brings into the house.

88. When the daughter is the height of your knee, let her dowry chest come up to her breast.

89.It is better to live at a daughter’s foot-end than at a son’s head-end.

90. The daughters of the house are nothing but ornaments of the front garden and articles for sale.

91.It is better to die at a wicked daughter’s bed-foot than a good daughter in law’s bed head.

92. A daughter in law is the mother in law’s medicine.

93. The daughter and the buck-wheat, the frying pan and the small cauldron are the ruin of the farm.

94.You cannot know a girl before she has become the wearer of the bonnet

(in old times married women used to wear bonnets)

(Married Tamil Hindu women wear a toe ring called METTI and North Indian Hindu women wear Red colour Kunkum in the parting of hair on head)

95.A girl without a needle is like cat without a claw.

96.Young girl and wheaten bread  quickly grow old.

97.A man always gets a wife.

98.If you want all the world to know, tell your wife.

99. A dove when a girl; a club when a wife

100. He who knocks his wife about properly will be forgiven a hundred sins.

–Estonian proverbs

To be continued……………………..

Tags- thousand proverbs, women, daughter, wife, part 5

Pictures of 2500 Indian Stamps! – Part 71 (Post No.14,834)

Written by London Swaminathan

Post No. 14,834

Date uploaded in London –  5 AUGUST, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 71

***

Pictures of 2500 Indian Stamps continued……………………

Cards and covers, MINI STAMP SHEETS

IF YOU WANT INDIAN AND FOREGN STAMPS, PLEASE E MAIL ME.

IF YOU WANT TO DESIGN LOGOs, EMBLEMS, PLEASE CONTACT ME.

IF YOU WANT HINDU NAME FOR UR CHILDREN, I CAN HELP YOU.

I have got 25,000 stamps with beautiful designs.

–subham—

Tags- Indian stamps, MINI STAMPS, 25,000, PART 71, Cards and Covers

London Swaminathan’s 150th Book is on Sale Now!

Two Books on Tiru Vilaiyadal Puranam in Tamil by London Swaminathan

149th and 150th book.

திருவிளையாடல் புராணத்தில் தமிழர்  வரலாறு பற்றிய அதிசயச் செய்திகள்- BOOK TITLE

Two Books on Tiru Vilaiyadal Puranam in Tamil by London Swaminathan

149th and 150th book.

திருவிளையாடல் புராணத்தில் தமிழர்  வரலாறு பற்றிய அதிசயச் செய்திகள்- BOOK TITLE

பொருளடக்கம்

1.திருவிளையாடல் புராணத்தில் அதிசயச் செய்திகள்

2.முருகன் ஊமையாகப் பிறந்தது ஏன்?

3.வாட் போட்டி, பாட்டுப் போட்டியில் இலங்கைப் பாடகி,

வட நாட்டுப் பாடகர்!

4.இறந்தோர் பூமிக்கு வருவது உண்மையே!

5.மதுரையில் செட்டி தெரு!

6.சம்பந்தரும், அப்பரும் பொய் சொன்னார்களா? புறநானூற்றில் தி.வி.பு.!

7.மதுரை பற்றி ஞான சம்பந்தரும், சேக்கிழாரும் போடும் புதிர்கள்!

8.பாண்டியர் வரலாற்றில் தீர்க்கப்படாத மர்மங்கள்

9.பாண்டியர் வரலாற்றில் தீர்க்கப்படாத மர்மங்கள்-௨

10.தமிழும் சம்ஸ்க்ருதமும் ஒன்னு! அதை அறியாதவன் வாயில மண்ணு!

11.தமிழ் மொழியின் மந்திர சக்தி

12.யாக குண்டத்தில் தோன்றிய மீனாட்சியும் திரவுபதியும்

13.நம்பியை நம்பாதே! தி. வி. பு. ஆராய்ச்சிக் கட்டுரை

14.நம்பியை நம்பாதே! – பகுதி 2

15.புதிய ஆராய்ச்சி- கர்நாடகத்தை ஆண்ட ஆலவாய் பாண்டியர்கள்

16.காரவேலனிடம் தோற்ற பாண்டியன் பெயர் என்ன? 54 பாண்டிய மன்னர்களை காணோம்!

17.திருவிளையாடல் புராணம் உண்மையே!

18.தமிழ் மன்னர்கள் இமய மலைக்குச் சென்றது ஏன்?  தங்கமோ தங்கம்!

*******************

மதுரையில் சிவபெருமான்,  பிட்டுக்கு மண்சுமந்த லீலையை  அட்டைப்படத்தில் காணலாம் .

முன்னுரை

திருவிளையாடல் புராணம் (தி.வி.பு) பற்றி நான் வெளியிடும்  இரண்டாவது புஸ்தகம் இது . இதில் வரலாற்றுப் புதிர்களை விடுவிக்க முயற்சி செய்துள்ளேன். மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்கிறேன். முதல் பகுதியில் சாமுத்ரிகா லட்சணம்,  அஸ்வ சாஸ்திரம் என்னும் குதிரை நூல், நவரத்தினங்களின் வகைகள் மற்றும் அவற்றை அணிவதால் கிடைக்கும் பலன்கள் , பரஞ்சோதி முனிவரின் சொற் சிலம்பம், உவமை நயம் முதலியவற்றை எழுதினேன் .

வரகுணன் என்ற பெயர் பாண்டியர் வரலாற்றில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது;  இந்தக் குழப்பத்தைத் தீர்க்க அப்பர்,  சம்பந்தர்  ஆகியோர் பாடிய தேவாரப் பாடல்கள் நமக்கு உதவுகின்றன. தி.வி.பு. எழுதிய பரஞ்சோதி முனிவரும் அவர்களை நம்பி, மாணிக்க வாசகர் காலத்துக்குப் பின்னர், சம்பந்தரை வைத்தார். அப்படியிருப்பினும் அறிஞர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்ட சிலர் தேவாரப் பாடல்களை அலட்சியம் செய்து புதுக் கருத்துக்களை, பொய்யுரைகளை எழுதி வந்தனர்; எழுதியும் வருகின்றனர். அந்த வாதங்களுக்கு இந்த நூல் வேட்டு வைக்கும். பாண்டியர் வரலாறு மகாவம்சத்தில் துவங்கி மெகஸ்தனீஸ், பிளினி வழியாக வந்து முஸ்லிம்களை  அழைத்து மோசம்போனே சுந்தர பாண்டியன் காலம் வரை 1500 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கிறது ; கல்வெட்டு, செப்புப் பட்டயங்களை ஆராய்ந்தால், இரண்டு தி.வி.பு.க்களுக்கு மூல நூலான சம்ஸ்க்ருத நூல்களை ஆராய்ந்தால், மேலும் பல அதிசயச் செய்திகள் வெளியாகும். அதற்காக மடாதிப திகளும் ஆதீன கர்த்தர்களும் ஆராய்ச்சி மகாநாடுகளைக் கூட்ட வேண்டும் என்ற வேண்டுகோளையும் நூலில் வைத்துள்ளேன். இந்த நூல் கட்டுரை வடிவில் பல வாரங்களில் எழுதப்பட்டதன் தொகுப்பு என்பதால், சில விஷயங்கள் திரும்பத் திரும்ப வந்திருக்கக்கூடும்; வாசகர்கள் அதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

London , July 2025

swami_ 48 @ yahoo.com,  swaminathan.santanam @ gmail.com

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – திருவிளையாடல் புராணத்தில்

நவ ரத்தினங்களும், சாமுத்ரிகா லட்சணமும்

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – July 2025

Subject – Religion

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and over 148 Tamil and English Books.

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

*****

பொருளடக்கம்

1. பரஞ்சோதி முனிவரின் சொற்சிலம்பம்

2.உவமைகளும் உருவகங்களும்

3. தமிழ் எழுத்துக்கள் 49 சங்கப் புலவர்களாகப் பிறந்தனர்

4.தமிழில் மிக நீண்ட வாக்கியம்!

5.வைகை நதி உவமை

6.மதுரைக்கு எண் 12 “NUMBER TWELVE”  என்று ஏன் பெயர் வந்தது ? 

7.திருவிளையாடல் புராணத்தில் குதிரை சாஸ்திரம்- பகுதி 1 

8.பஞ்சகல்யாணி: திருவிளையாடல் புராணத்தில் குதிரை சாஸ்திரம்- பகுதி 2

9.குதிரைகளின் சாமுத்ரிகா லட்சணம்-பகுதி 3

10. தமிழ் இசைக் கருவிகள்

11.ஐயர் – ஐயங்கார் மோதல்! நால்வரும் பாடிய ஒரே திருவிளையாடல்!!

12. முதல் எழுத்து எது?

13.கம்பனுக்கும் பரஞ்சோதிக்கும் திராவிடநாடு தெரியாது !

14 முத்துமாலை அணிந்தால் ஆயுள் வளரும்; பணம் சேரும்! பரஞ்சோதி தகவல்

15.ஒரு படி தானியத்துக்கு ஒரு படி முத்து!

16.நவரத்தினங்கள் பற்றிய அரிய செய்திகள்

17.ரத்தினக் கற்களை அணிந்தால் செல்வம் பெருகும்

18.மலைகளில் மேரு, மனிதர்களில் பிராமணர் உயர்வு: பரஞ்சோதி முனிவர்

19.சிவனுக்கு எதைக் கொடுத்தால் நமக்கு என்ன தருவார் ?

20.திருவிளையாடல் புராணத்தில் 32 சாமுத்ரிகா லக்ஷணம்

**********

அட்டைப்படத்தில் திருவிளையாடல் புராண காட்சிகளைக் காணலாம்.

முன்னுரை

திருவிளையாடல் புராணம் ஒரு கலைக் களஞ்சியம். இந்த நூல் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டு மதுரை மாநகரில் அரங்கேற்றப்பட்டது.   இது சம்ஸ்க்ருத மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதை புலவரே நமக்கு எடுத்துரைக்கிறார் . சிலப்பதிகாரம் போல ஏராளமான விஷயங்களை பரஞ்சோதியார் தெரிவிக்கிறார். கம்பனின் நடையையும் பல இடங்களில் பின்பற்றுகிறார். அவர் சொல்ல வந்ததோ மதுரையிலும் அதன்  சுற்றுப்பகுதிகளில் சிவ பெருமான் நடத்திய 64 திருவிளையாடல்கள் ஆகும் ; ஒவ்வொரு திருவிளையாடலைச் சொல்லும்போதும் புதிய விஷயங்களை நமக்கு அளிக்கிறார் . பாடல் வடிவில் படித்தால் இலக்கிய நயத்தை ரசிக்கலாம் ; புரிந்து கொள்ள முடியாத இடங்களை வேங்கடசாமி நாட்டாரின் உரையிலிருந்து அறியலாம் ஆயினும் ஒரு இடர்ப்பாடு அவருடைய உரை பழங்கால நடையில் இருப்பதால் பலரும் தொடர்ந்து படிக்க முடியாமல் திணறுவார்கள் . நான் முடிந்தவரை எளிய தமிழில் விளக்கம் கொடுத்துள்ளேன். நவ ரத்தினங்களின்  வகைகள் அவற்றின் பலன்கள்  , குதிரைகளின் வகைகள் , அவைகளுக்குள்ள லட்சணங்கள் மற்றும் மனிதர்களின் சாமுத்ரிகா லட்சணம் , நாடுகளின் பட்டியல் என்று பல விஷயங்களைக்  கூறுகிறார்.

இலக்கிய விஷயங்களை எடுத்துக்கொண்டால் அவரை உருவகப்பிரியர் என்று சொல்லலாம் பல உருவகங்களை நமக்குக் கொடுத்து சொற் சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார் . அவற்றைப் படமாகப் போட்டால் அதன் அருமை பெருமையை உணரலாம்.

தமிழில் திருவிளையாடல் புராணம் திரைப்படமாக வந்தவுடன் ஏராளமான பாமர மக்களும்  இந்த நூலில்  கவனம் செலுத்தினர்; அது போன்ற சினிமா  படங்களையும்  எடுக்கவேண்டும்.

மதுரை நகரம் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பற்றிய அரிய விஷயங்களையும் பட்டியலிட்டுள்ளார்; அவர் கூறும் வரலாற்று விஷயங்களைத் தனிப் புத்தகமாக எழுதியுள்ளேன்.  அதில் அவர் மாணிக்க வாசகர் காலம் பற்றிய புதிர், வரகுணன் பற்றிய புதிர்  முதலியவற்றை  விடுவிக்கிறார் . இந்த நூலைப் படிப்போர் அந்த நூலினையும் படித்தால் பரஞ்சோதி முனிவரின் பல்துறைப் புலமை, அறிவாற்றல் புலப்படும். இன்னும் ஆராய வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதால் எதிர்காலத்தில் ஆராய்ச்சி மகாநாடுகளைக் கூட்டி பல்துறை வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு கோணங்களில் ஆராய வேண்டும் . கம்பன் புகழைப் பரப்பியது போல பரஞ்சோதி முனிவரின் பெருமையையும் மதுரை அரசாளும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் புகழையும் பரப்புவோமாக!

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

ஜூலை  2025    

swami _ 48 @yahoo. com

swaminathan. santanam@ gmail.com

******************************

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1) Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun2

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

44.Medical Wonders in Hindu Scriptures

45.Hidden Secrets in Vishnu Sahasranama

46.My Research Notes on Viveka Chudamani

47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit

48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!! 

49. Dreams in Hindu Literature 

50.History: A Bundle of Facts and Fabrications

51.Tamil and Sanskrit Proverbs around the World

52.Hindu Beliefs in Shakesperean Plays

****

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

 36.முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73.இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

76. ஆந்திரம், தெலுங்கானாவில்

புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)

77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை

78. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்

79.அவ்வை ,பாரதி முதல் பாபா, மோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)

81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்     

82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா

84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு

85.பஸ், ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்

86.கனவுகள், கல்வெட்டுகள் , தமிழ் பற்றிய  புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை

88.தமிழ், சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த

ஜெர்மானிய அறிஞர்கள்

89. நான்கு நாடுகளில் நான் சென்ற கோவில்கள் 

90. வெளிநாட்டுப் பழமொழிக் கதைகளும்

நம் நாட்டுக் கதைகளும்!

91. சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை

92. இந்துமதத்தில்  விஞ்ஞானம் புதிய  செய்திகள்

93.திருவிளையாடல் புராணத்தில் நவ ரத்தினங்களும்,

சாமுத்ரிகா லட்சணமும்

94. திருவிளையாடல் புராணத்தில் தமிழர் வரலாறு

பற்றிய அதிசயச் செய்திகள்

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

xxx

***** 

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

****

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

Tags- 149th, 150th  book, by  London swaminathan, Tiruvilaiyadal Puranam

காளிதாசன் காவியங்களில் விஷ்ணு அவதாரங்கள்!- Part 4 (Post No.14,833)

Written by London Swaminathan

Post No. 14,833

Date uploaded in London –  5 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரசுராமன்

விஷ்ணுவின் பல அவதாரங்கள் சங்கத் தமிழ் நூல்களிலும் காளிதாஸனிலும் பாடப்படுகின்றன .

பரசுராமன்- ராமன் மோதலை காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் விரிவாகவே பாடுகிறான் (ரகு வம்சம் 11-ஆவது சர்க்கம்). காளிதாசன் பிருஹுபதி என்ற பெயரில் பரசுராமனை மேகதூதத்திலும் (59) குறிப்பிடுகிறான். 

பரசுராமன் பற்றிய குறிப்பு சங்கத் தமிழில் அகம்-220 ல் காணாலாம்.

இதை மருதன் இளநாகனார் பாடியதால் சங்க காலத்தின் கடைசி கட்டத்தில் (200-300 CE)  இது பாடப் பெற்றிருக்க வேண்டும் .

நான்கு முக்கியச் செய்திகள் இதில் உள்ளன

மழுவாள் நெடியோன் = பரசுராமன்

ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ,

தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும்,

கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்,

கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய,

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன்     5

முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி,

கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின்,

அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும்….”

1..கெடுதி செய்யாத வேள்வித் தீ செல்லூரில் எரிந்தது.

2..“மழுவாள் நெடியோன்” என்னும் பெயர் கொண்டவன் யானைப்படையுடன் வந்து தாக்கிய அரசர்களை பூண்டோடு அழித்தான்.

3..வேள்விக்கு நடப்பட்ட வேள்வித்தூண் நாற்புறமும் கயிறுகளால் கட்டி நிறுத்தப்பட்டிருந்தது. அது காணத்தக்க பொலிவு கொண்டதாக விளங்கியது. வேள்வித் தூண் – யூபஸ்தம்பம் .

4.அந்த வேள்வித்தூண் போன்றது உன் மார்பு.

ஆனால் அந்தத் தூணைப் போல அனைவராலும் காணமுடியாத மார்பு உன்னுடையது; நினைத்தாலும் நடுங்கவைக்கும் மார்பு அது.

****

பலராமன் – கண்ணன் ஜோடி

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடலில் நீங்கள் இருவரும் இருபெருந் தெய்வங்களாகிய பலராமனும், திருமாலும் போல ஒன்றிப் பகைவர்கள் அஞ்சுமாறு தோன்றுகிறீர்கள் என்று சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனையும்  பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியையும் புகழ்கிறார். .

செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,

அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,                  10

வரைய சாந்தமும், திரைய முத்தமும்,

இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;

பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,

நீல் நிற உருவின் நேமியோனும், என்று                    15

இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,

இதில் மேலும் சில செய்திகளையும் தமிழ்ப்புலவர்கள் கொடுக்கின்றனர் . பலராமன்  நிறம்  வெள்ளைக் கலர் (வாலியோன்); கிருஷ்ண நிறம் நீலம் சேர்ந்த கருப்பு . பலராமன் கொடி பனைக்கொடி ; கிருஷ்ணன் கொடி புள் கொடி என்பது வேறு பாடல்களில் வருகிறது

கிருஷ்ணனும் பலராமனும் ஆதிகாலத் தமிழ் நாட்டில் கோவிலில் ஒருங்கே வழிபடப்பட்டனர் . காலியான/ வெற்றிடமான  பலராமன்  சந்நிதிகளை இன்றும் சில கோவில்களில்  காணலாம் . பலராமனை லாங்கலின்,  ஹலப்ருத் (மேகம் 61, 51) என்று காளிதாசன் அழைக்கிறான் அதாவது கலப்பையை ஏந்தி; காடு திருத்தி நாடாக்கிய பெரும் விவசாயி; அவன் இந்தியா முழுதும் விவசாயத்தைப் பரப்புவதற்காக மஹாபாரத யுத்த காலத்தில் பயணம் செய்தான் . இந்தக் காளிதாசனின் கலப்பை ஏந்தியவன் என்ற சொல்லைத் தமிழ்ப்புலவர்களும் பாடுகின்றனர்.

பலராமன், கிருஷ்ணன்  – பரி  2-20-27 ; 15-13/4,

பலராமன்  மட்டும் பாடப்பட்ட இடங்கள்  – கலி  105-11/12; பரி  15-19 to 21

பனைக்கொடி  , நாஞ்சிலோன்=ஹல ப்ருத்   பரி  13-35; புறம்  58-14; கலி104-7; பரி 1-4; கலி 105-11;பரி 13-33

***

இடைக்குல கண்ணனை மேகதூதத்தில் முன்னரே கண்டோம் .அகநானூற்றில் கண்ணன் லீலைகள் உளது 

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்

வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5

மரம் செல மிதித்த மாஅல் போல,

…..

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,              10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை…………”

வட நாட்டில் ஓடும் தொழுனை என்ற  யமுனை ஆற்று மணலில் அண்டர் என்னும் இடையர் குல மகளிர் தழையாடை உடுத்திக் கொள்வதற்காகக் கண்ணன் மரத்தில் ஏறிக் கிளைகளை மிதித்து வளைத்துக் கொடுத்தான் என்று பிற்காலப் புலவரான மருதன் இளநாகன் பாடுகிறார்  . இது  கோபியரின் புடவைகளை குருந்த மரங்களில் கண்ணன் ஒளித்துவைத்ததையும் தொலைவில் அண்ணன் பலராமன் வருவதைக்கண்டவுடன் அவசர அவசரமாக புடவைகளைத் திருப்பிக்கொடுத்ததையும் கூறும் பாகவதக் கதையின் தமிழாக்கம் ஆகும் —அகம் 59

பரிபாடல் பாடிய அந்துவன் பற்றி இளநாகன் குறிப்பிடுவதால் அவன் மிகவும் பிற்காலப் புலவன் என்பதும் அந்துவன் முருகனைப் பாடிய செய்தியும் உளது .

தொழுனை என்ற மர்மப் பெயரை யாரும் விளக்கவில்லை! கோபியர் தொழுது மன்றாடியதால் தொழுனை என்ற பெயர் வந்தது போலும்!

***

புறம் 174,

அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,

சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,

இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து

இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்

அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,5

அரசு இழந்திருந்த அல்லல் காலை,

முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது

இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி

மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,

பொய்யா நாவின் கபிலன் பாடிய,           10

மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்

செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட

எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,

அரு வழி இருந்த பெரு விறல் வளவன்

மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை 15

புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!

விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,

சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்

ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,

உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,     20

ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்

கவலை நெஞ்சத்து அவலம் தீர,

நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!

கல் கண் பொடிய, கானம் வெம்ப,

மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,        25

கோடை நீடிய பைது அறு காலை,

இரு நிலம் நெளிய ஈண்டி,

உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.- புறம் 174,

SOLAR ECLIPSE

இந்தப் புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார் ; அவரால் பாடப்பெற்ற மன்னன் பெயர் ஸ்ரீ கிருஷ்ணா =மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.

கிருஷ்ணன் எப்படி சூரியனை மறைத்த இருளை அகற்றி சூரியனை வெளிக்கொணர்ந்தாரோ SOLAR ECLIPSE அது போல காட்டில் ஒளிந்து கொண்டிருந்த சோழ மன்னனை நீ மீட்டுவந்து அரசுக்கட்டிலில் ஏற்றினாய் என்ற உவமை உள்ளது. அப்படிக் கிருஷ்ணனாகிய நீ என்ற சிலேடையை வைத்துள்ளார் . சோழமன்னன் சூரியகுலத்தவன் என்பதால் அவனை சூரியனுக்கு ஒப்பிட்டார் ; பாடல் முழுதும் சிலேடை நயமும் உவமை நயமும் உளது ; கபிலனை புலவர் குறிப்பிடுவதால் அவர் காலத்துக்குப் பிற்பட்டவர் நப்பசலையார் என்ற செய்தியும் உளது

இதிஹாஸக் கிருஷ்ணன் மஹாபாரத யுத்தத்தில் சூரிய கிரகணத்தைப் பயன்படுத்தி ஜயத்ரதனை வீழ்த்தினார் .

இதே போல ரிக்வேதத்தில் சூரியனை அத்ரி மகரிஷி வெளிக்கொணர்ந்தார் என்ற பாடலும் உளது.

****

வராஹ அவதாரம்

குமார சம்பவ ஸ்லோகத்தில் (6-8) வராஹ அவதாரத்தைக் காளிதாசன் வருணிக்கிறார்;  நாட்டிலேயே மிகப்பெரிய வராஹ அவதார சிலை குப்தர்கால உதய கிரி குகையில் (400 CE)  உள்ளது .காளிதாசன் பாடியதால் இது உருவாக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.

வராஹஅவதாரம்  பரி  2-16/19; 3-21/3; 3-34/6; 4-22/4

பரி பாடல் முழுதும் குறைந்தது நான்கு இடங்களிலாவது வராஹ அவதாரம் பாடப்பட்டுள்ளது 

****

பரசுராமன்

கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள்  அணியுமிடம்  தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது. –

கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்    20

செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,

அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே

இருங் கிளைத் தலைமை எய்தி,சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியதுபுறநானூறு 378

அகநானூற்றில் ராமயணம்

கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,

……………………………………

வென் வேற் கவுரியர் தொல் முது கோடி

முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,

வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த     15

பல் வீழ் ஆலம் போல,

ஒலி அவிந்தன்றுஇவ் அழுங்கல் ஊரே..

மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடல்

காளிதாசன் மூன்று ரகுவம்ச சர்க்கங்களில் ராமாயணத்தை அற்புதமாகச் சுருக்கிக் கொடுத்துள்ளான் .12 ஆவது சர்க்கத்தில் வால் மீகியின் ஐந்து காண்டங்களின் சாரத்தை சுருக்கிக் கொடுக்கிறான்  .

To be continued…………………………………

Tag– பரசுராமன் , காளிதாசன் காவியங்களில், விஷ்ணு, அவதாரங்கள், Part 4

ராமாயணத்தில் வரங்கள் (29) ஹேமாவுக்கு ஸ்வயம்பிரபா செய்த உதவி! (Post No.14,832)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,832

Date uploaded in London – 5 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (29)

ராமாயணத்தில் வரங்கள் (29) ஹேமாவுக்கு ஸ்வயம்பிரபா செய்த உதவி!

ச. நாகராஜன்.

கிஷ்கிந்தா காண்டத்தில் ஐம்பத்தோராவது ஸர்க்கமாக அமைவது ‘ஸ்வயம்பிரபை செய்த ஸத்காரம் என்ற ஸர்க்கமாகும்.

ஹனுமானைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஸ்வயம்பிரபை யாரும் நுழைய முடியாத குகையில் நுழைந்திருக்கும் நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்கிறாள்.

முதலில் தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஸ்லோகங்கள் இவை: 

துஹிதா மேருசாவர்ணேஹம் தஸ்யா: ஸ்வயம்பிரபா |

இதம் ரக்ஷாமி பவனம் ஹேமாயா வானரோத்தம் ||

வானரோத்தம – வானர ச்ரேஷ்டரே!

அஹம் – நான்

மேருசாவர்ணே – மேருசாவர்ணியின்

ஸ்வயம்ப்ரபா – ஸ்வயம்பிரபை என்ற

துஹிதா – பெண்

தஸ்யா – இந்த

ஹேமாயா: – ஹேமையினுடைய

இதம் – இந்த

பவனம் – மாளிகையை

ரக்ஷாமி – காத்து வருகிறேன்

மம ப்ரியசஹி ஹேமா ந்ருத்தகீதா விஷாரதா |

தயா தத்தவரா சாஸ்மி பவனோத்தமம் ||

ந்ருத்தகீதா விஷாரதா – நடனம், கீதம் இவற்றில் வல்லவளான

ஹேமா – ஹேமை

மம – எனது

ப்ரியசஹி – உயிர்த்தோழி

தயா – அவளாலே

தத்தவரா அஸ்மி – கேட்டுக்கொள்ளப்பட்டவளாக ஆனேன்

ச – அதனால்

பவனோத்தமம் – அழகான (இந்த) மாளிகையை

ரக்ஷாமி – காத்துக் கொண்டிருக்கிறேன்

      கிஷ்கிந்தா காண்டம், 51வது ஸர்க்கம் ஸ்லோகங்கள் 16, 17 

மேருசாவர்ணியின் பெண்ணான ஸ்வயம் பிரபா தெய்வப் பெண்ணான ஹேமை கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த குகையையும் அதில் உள்ள அழகிய மாளிகை உள்ளிட்டவற்றையும் காத்து வருகிறாள்.

இதைச் சொல்லி விட்டு ஹனுமானிடம் அவர் வந்த காரியம் பற்றிக் கேட்கிறாள் ஸ்வயம்ப்ரபா.

பிறகு நடக்கும் சுவையான சம்பவங்களை அடுத்து வரும் ஸர்க்கங்கள் விளக்குகின்றன.

**

Pictures of 2500 Indian Stamps! – Part 70 (Post No.14,831

Mukesh Anniversary

Written by London Swaminathan

Post No. 14,831

Date uploaded in London –  4 AUGUST, 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

PART 70

***

Pictures of 2500 Indian Stamps continued……………………

MINI STAMP SHEETS

 IF YOU WANT INDIAN AND FOREGN STAMPS, PLEASE E MAIL ME.

IF YOU WANT TO DESIGN LOGOs, EMBLEMS, PLEASE CONTACT ME.

IF YOU WANT HINDU NAME FOR UR CHILDREN, I CAN HELP YOU.

I have got 25,000 stamps with beautiful designs.

–subham—

Tags- Indian stamps, MINI STAMPS, 25,000, PART 70

FIVE EGGS POEM IN TAMIL ஐந்து முட்டைகள், இரண்டாம் உலகப்போர்

POSTED ON 4-8-2025

ஐந்து முட்டைகள், இரண்டாம் உலகப்போர், ஹிட்லர், சர்ச்சில்,ஸ்டாலின் கோயரிங், ரூஸ்வெல்ட்  

FROM OLD TAMIL MAGAZINE- SHAKTI; FROM AMERICAN MAGAZINE PICTURE POST.

SECOND WORLD WAR LEADERS  CHURCHIL, HITLER, ROOSEVELT , STALIN, GOERING

–SUBHAM–

TAGS-ஐந்து முட்டைகள், இரண்டாம் உலகப்போர், ஹிட்லர், சர்ச்சில்,ஸ்டாலின் கோயரிங், ரூஸ்வெல்ட்  

Hindu Gods in Gupta Inscriptions (Post No.14,830)

Delhi Iron Pillar with Gupta inscription

Written by London Swaminathan

Post No. 14,830

Date uploaded in London –  4 August 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Varaha Avatara in Udayagiri Caves, Gupta Period.

Kings of Gupta dynasty were great Hindus. Their rule is considered the Golden period of India. According to Chinese pilgrim and others, people slept leaving their house doors open. No theft, no robbery was reported; it was Rama Rajya. The kings called themselves Parama Bhagavatas, i.e. great followers of Lord Vishnu. But they donated liberally to all faiths. Their gold coins are in all museums of the world. British museum has displayed it at the entrance of the coin section.

Gupta inscriptions frequently depict and refer to various Hindu deities, particularly Vishnu and Lakshmi, alongside other gods and goddesses. The Gupta period saw a flourishing of Hindu art and iconography, solidifying the forms of many deities that are still recognized today. Vishnu is prominently featured, with inscriptions often associating Gupta rulers with him and emphasizing their role as his representatives on Earth.

Here’s a more detailed look:

•          Vishnu:

Gupta rulers often identified themselves with Vishnu. For example, an inscription from Govindnagar, Mathura, refers to a pillar dedicated to Vishnu. Vishnu’s boar avatar, Varaha, is also depicted in the Udayagiri caves, showcasing his importance.

•          Lakshmi:

The goddess Lakshmi, often associated with wealth and prosperity, is also frequently depicted in Gupta art and inscriptions. She is sometimes shown as Rajya-Lakshmi, associated with kingship and the coronation ritual, highlighting her role in legitimizing the ruler’s authority.

•          Other Deities:

Besides Vishnu and Lakshmi, other deities found in Gupta inscriptions and art include:

•          Karttikeya (Skanda Kumara, Mahasena): The god of war, often depicted with a peacock.

•          Shiva: Depicted with his mount, Nandi, and associated with the Udayagiri caves.

•          Brahma: The creator god, also found in the Udayagiri caves.

•          Adityas, Agni, Vayu, Vasus, Rudras, Rishis: Various deities and sages from the Vedic tradition are also represented.

In the Gupta epigraphs, the exploits of a king equalled to those of Indra . it is seen in inscriptions of Samudra Gupta and Mathura stone inscription of Chandra Gupta. Tamils also called the king, Indra. Tolkappiam named Indra as King, Venthan in Tamil.

In the Kusana and Gupta sculptures, Varuna is represented  as riding a crocodile and bearing a noose, pasa, of chastisement. He is also mentioned in the Mathura stone inscription. The Mathura pillar inscription of Chandragupta II is an important historical document from the Gupta period in ancient India. It records the installation of two Shiva Lingas by Udita Acharya in the “year 61 following the era of the Guptas”. This corresponds to approximately 380 CE, though some scholars like Harry Falk suggest a date of 388 CE. The inscription is found on a pillar in Mathura and is also known as the Lakulisa Mathura Pillar Inscription.

Neither Kalidasa nor Sangam Tamil poets mentioned the world Linga. But both have praised Linga shaped Kaliash. This shows Kalidasa lived before Sangam or Gupta age.

Kalidasa refers to the deity Surya having seven horses, all green in colour harnessed to his chariot—haridasva-Raghu 3-22.

Oldest Post- Vedic reference to Vishnu is in Panini’s Ashtadhyayi 4-3-98

An ambassador of the Indo Greek king Antialklidas named Heliodorus called himself bhagavata and erected a Garuda pillar in Besnagar in second century BCE.

Imperial Guptas called themselves Parama Bhagavatas according to Gadhwa stone inscription of Chandra Gupta II. Gupta coins also had the title paramabhagavatas.

This also shows Kalidasa lived long before the Guptas. A court poet always follows the state religion. But Kalidasa was associated with Vikramaditya of first century BCE and he praised Shiva sky high as Jagadguru in Kumarasambhavam and Parents of the Earth in Raghuvamsa.

A four armed Vishnu figure carved on a panel at Udayagiri is dated in the Gupta era 82, i.e. 400 CE.

Allahabad pillar inscription of Samudra Gupta mentioned Vishnugopa of Kanchi

****

Vishnu in Delhi Iron Pillar Inscription

The king in Delhi Iron Pillar is now generally identified with the Gupta King Chandragupta II. This identification is based on several points:

The script and the poetic style of the inscription, which point to a date in the late fourth or early fifth century CE: the Gupta period.

The inscription describes the king as a devotee of the God Vishnu, and records the erection of a dhvaja (“standard”, or pillar) of Vishnu, on a hill called Viṣṇupada (“hill of the footprint of Viṣṇu”).  Other Gupta inscriptions also describe Chandragupta II as a Bhagavata (devotee of Vishnu). The names of the places mentioned in the inscription are also characteristic of the Gupta Era. For example, Dakṣiṇa Jalanidhi (the Indian Ocean) and Vaṅga (the Bengal region).

The short name ‘Candra’ is inscribed on the archer-type gold coins of Chandragupta II, while his full name and titles appear in a separate, circular legend on the coin.

A royal seal of Chandragupta’s wife Dhruvadevi contains the phrase Śrī Viṣṇupada-svāmī Nārāyaṇa (“Nārāyaṇa, the lord of the illustrious Viṣṇupada”).

***

Surya -Sun god

Kumara Gupta’s Mandasor stone inscription and Bandhuvarma mentioned the repairs to a sun temple.

Kalidasa mentioned Surya with the word Savita in Rtu Samhara. God Surya is in the Rig Veda where ten hymns are addressed to him .  Adi Sankara made it as one of the six faiths (shan matha) of Hindus. It is called Sauram. Surya became Solar in European languages is a well-known fact.

The tradition preserved in the Bhavishya Purana that the first sun temple was built in Sindhu on the Chandrabhaga by Samba, , son of Krishna by Jambavati . she brought Maga priests from Sakadvipa. Varahamihira also mentioned that Maga- Sakadvipa Brahmanas should be appointed as priests in sun temples- Brhat Samhita 60-19.

Even today Sun cult is followed by millions of Brahmins in their daily ritual of Sandhyavandana and Surya Namaskar . And surya is associated with lord Vishnu in the Vedas.

Kalidasa refers to a temple containing an image of the  Sun deity and mentions people returning from that shrine, at the feet of which, obviously the feet of the image, –paadamuulam—their attendance was required-Vik 5-4

A sun temple standing in Multan on the bank of the Chandrahaga river—chenab—was seen by Chinese pilgrim Huen Tsang. The same temple which was seen by Alberuni four hundred years later was destroyed by Aurangzeb in the 17th century. The temple built by Samba, Krishna’s son must have existed for thousands of years in Multan.

Gupta Kings and their Dates:

Gupta

(c. 240 – c. 280)

Ghatotkacha

(c. 280–319)

Chandragupta I

(c. 319–335)

Kacha

(c. 335)

Samudragupta

(c. 335–375)

(Ramagupta)

(c. 375)

Chandragupta II

(380–415)

Kumaragupta I

(415–455)

Skandagupta

(455–467)

Purugupta

(467–473)

Kumaragupta II

(473–476)

Budhagupta

(476–495)

Narasimhagupta

(495–530)

(Bhanugupta)

(c. 510)

Vainyagupta

(c. 507)

Kumaragupta III

(c. 530 – c. 540)

Vishnugupta

(540–550)

The Sanchi inscription of Chandragupta II is an epigraphic record documenting a donation to the Buddhist establishment at Sanchi in the reign of king Chandragupta II (circa CE 375–415). It is dated year 93 in the Gupta era.

Art historian C Sivaramamurty in his book  EPIGRAPHICAL ECHOS OF KALIDASA gives a long list of inscriptions where influence of Kalidasa is very evident. He placed Kalidasa before the Gupta era, saying literature comes first and then paintings and sculptures follow it.  Sangam Age poets also proved it correct by using 200++ imageries of Kalidasa in their poems.

–subham—

Tags- Gupta inscriptions, Hindu Gods, Delhi Iron Pillar, Allahabad, Mandasor, Mathura