“சரி! உனக்கு என்ன வேண்டும். சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறாய்?’ “ஐயோ, சம்பளமா! வேண்டவே வேண்டாம். இரண்டு வேளை சாப்பாடு, தங்க இடம். அது போதும்”
வித்யாபதி மனம் இரங்கினார்.
“உன் பெயர் என்ன?”
“உகனா”
“சரி, உகனா, உன் வேலையை ஆரம்பி”
உகனா வேலையை ஆரம்பித்தான். அறைகள் சுத்தப்படுத்தபப்ட்டன. சுவடிகள் சரியாக அடுக்கி வைக்கப்பட்டன. மாதாஜியின் வேலையில் பாதி குறைந்து விட்டது.
ஒரு நாள் வித்யாபதி பயணமாகப் புறப்பட்டார். உகனாவும் கூட வந்தான்.
“நீ எதற்கு” என்று கேட்டார் வித்யாபதி.
“நான் எதற்கா? பின் யார் உங்கள் பெட்டியைத் தூக்குவதாம்?”
உகனாவும் கூடவே பெட்டியைத் தூக்கிக் கொண்டு சென்றான்.
சிறிது நேரம் கழித்து வித்யாபதிக்கு களைப்பாக இருந்தது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார்.
“ஒரெ தாகமாக இருக்கிறது. உகனா!”
“இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன். இங்கேயே உட்கார்ந்திருங்கள்”
என்ற உகனா சற்று தூரம் சென்றான்.
தன் காலால் தரையை அமுக்கினான்.
என்ன ஆச்சரியம். பூமி பிளந்து ஒரு நீரோடை உருவாகி ஓட ஆரம்பித்தது. அதிலிருந்து ஒரு குவளையில் நீரை எடுத்துக் கொண்டு சென்று வித்யாபதியிடம் கொடுத்தான் உகனா.
வித்யாபதி நீரைக் குடித்தார்.. கங்கை ஜலமோ? தேவாமிர்தம் தோற்றது!
“உகனா! நீ யார் உண்மையைச் சொல்!” என்றார் வித்யாபதி.
“அட, இந்த நீர் இனிக்கிறது. அவ்வளவு தான்!” என்றான் உகனா.
“அதிருக்கட்டும். நீ யார்? உண்மையைச் சொல்!” என்றார் வித்யாபதி மீண்டும்.
சிவனார் மனம் கனிந்தார். உகனா சிவபிரான் தோற்றத்தில் காட்சி அளித்தார்.
வித்யாபதி திடுக்கிட்டார். “இதுவா நான் பூஜை செய்த லட்சணம்! சிவபிரானையா நான் வேலை வாங்கினேன்?”
விக்கி விக்கி அழுதார் வித்யாபதி.
“வித்யாபதி! கவலைப்படாதே! உனக்கு இன்னும் நான் வேலைக்காரனாக இருந்து சேவை செய்யத் தயார். நானாகத் தான் உன்னிடம் வந்தேன். உன்னுடைய அற்புதமான பாடல்களை நீ பாடி நான் கேட்க வந்தேன். உனக்கு தரிசனம் தந்தாயிற்று. நான் வருகிறேன்.”
“ஐயோ! அது முடியவே முடியாது. இது தான் பக்தியின் பலன். இது தான் எனது பூஜை பலித்ததற்கு அடையாளம். நீங்கள் என்னை விட்டுப் போகவே கூடாது.”
“சரி, வித்யாபதி! நான் சம்மதிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் உகனாவாகத் தான் இருப்பேன். நான் யார் என்பதை யாரிடமும் நீ சொல்லக் கூடாது.”
வித்யாபதி சம்மதித்தார்.
உகனா வித்யாபதியுடன் சேர்ந்து வாழ அவர் தனது பூஜையை மகிழ்ச்சியுடன் செய்து வந்தார்.
ஆனால் ஒரு நாள் வித்யாபதியின் மனைவி மிஸ்ரைன் ஏதோ ஒரு காரணத்தினால் கோபம் கொண்டு உகனாவை அடித்து விட்டாள்.
இதைப் பார்த்த வித்யாபதி துடிதுடித்து விட்டார்.
“ஆஹா! இவரை யார் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். நாம் ஆராதிக்கும் தெய்வத்தையே நீ அடித்து விட்டாயே” என்று உரக்கக் கத்திப் புலம்பினார்.
அவ்வளவு தான்! அந்தக் கணமே உகனா மறைந்து விட்டான்.
கொடுத்த வாக்கை மீறியதால் உகனாவை இழந்த வித்யாபதி பெரும் துக்கத்தை அடைந்தார்.
பாடினார்:
“உகனா! தும் பின் ரஹ்யோ ந ஜாய்!”
“உகனா நீ இல்லாமல் எப்படி வாழ்வது?”
அப்புறம் உகனாவைக் காணவே காணோம்!
வரலாறு கூறும் செய்தி இது தான்:
பின்னர் கங்கா நதி தனது போக்கை மாற்றிக் கொண்டு நான்கு மைல்கள் கடந்து வித்யாபதி வீட்டிற்கு வந்தது. அவரது பக்தியை உலகிற்கு உணர்த்தியது.
கங்கையையும் சிவபிரானையும் தன்னிடம் வரச் செய்த சிவ பக்தரான வித்யாபதி ஒரு அபூர்வ கவிஞர் தான்!
பீஹாரில் வாழ்ந்த கவிஞரான வித்யாபதி வாழ்ந்த காலம் 1352-1448.
இவர் 96 வயது வரை வாழ்ந்து நூற்றுக்கணக்கான பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். இவரது வாழ்க்கை சரிதம் பல அபூர்வ சம்பவங்களைக் கொண்டதாகும்
following programmes were broadcast on 13th July 2025 according to schedule
GNANAMAYAM 13 JULY 2025 BROADCAST PROGRAMMES
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .
***
Prayer by Mrs Jayanthi Sundar Team- Ms Madhumita
***
Vaishnavi Anand and Latha Yogesh from London present World Hindu News in Tamil
***
Alayam Arivom -Talk about Mrs Brhanayaki Sathyanarayanan
Topic- Chennai Villivakkam Temple
****
Talk by Prof Suryanarayanan M.Phil.
Former Principal, Saraswathi Narayanan College, Madurai
Topic- இலக்கிய இயற்கை இன்பச் சுற்றுலா”
****
Book Review: Gomathi Karthikeyan from Chennai
****
SPECIAL PROGRAMME:
Ms Renuka Sundaram Reciting her Tamil Poems.
She has been writing poems in Tamil from her childhood and now crossed 70, still writing poems; she has written poems on over 85 topics. She has translated short stories into English.
Previously worked as senior stenographer
Pitman shorthand translator and tutor
writing contents in web sites for past ten years
taking spoken English classes
***
ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 13-7-2025
நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .
உலக இந்துமத செய்தி மடல்- லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி மடல்.
***
ஆலயம் அறிவோம் திருமதி திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன்
சொற்பொழிவு தலைப்பு- சென்னை நகர வில்லிவாக்கம் திருத்தலமாகும்.
****
சொற்பொழிவு : பேராசிரியர் எஸ் சூரிய நாராயணன் M.Phil.
Former Principal, Saraswathi Narayanan College, Madurai
தலைப்பு —“இலக்கிய இயற்கை இன்பச் சுற்றுலா”
****
புஸ்தக விமர்சனம் ;
நூலை விமர்சிப்பவர் —சென்னை கோமதி கார்த்திகேயன்
BOOK REVIEW BY GOMATHI KARTHIKEYAN, CHENNAI
****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:
சென்னை ரேணுகா சுந்தரம் இயற்றிய கவிதைகள்
கவிஞர் திருமதி. ரேணுகா சுந்தரம் மிகவும் துடிப்பானவர். சுறுசுறுப்பானவர். எளிமையானவர்.; பழகுவதற்கு இனிமையானவர்.
இவரது பெற்றோர் இவருக்கு வாசிப்பின் அவசியத்தை ஏழு வயதிலிருந்தே வலியுறுத்தி வந்திருக்கின்றனர்.
96 வயதான இவரது தந்தை ஒரு புல்லாங்குழல் கலைஞர். நல்ல தரமான மூங்கில்கள் கொண்டு, புல்லாங்குழல் செய்யும் வித்தையும் அறிந்தவர்.
கவிஞரும் தன் ஏழு வயதிலிருந்தே கவிதைகள் புனைய ஆரம்பித்துள்ளார்.
2012-ஆம் வருடம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களிடமிருந்து விருது பெற்றுள்ளார்.
பல்வேறு முகநூல் குழுக்களில் இணைந்து, கவிதைப் போட்டிகளில் பரிசுகள், சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.
தமிழில் உள்ள சிறுகதைத் தொகுப்புகளை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். பள்ளிக் குழந்தைகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ஆங்கில திறன் வளர்பயிற்சி கொடுக்கின்றார்.
கவிஞரின் ‘எல்லாமே கவித்துவமே’ என்னும் இனிய கவிதைகள் கொண்ட தொகுப்பு முதல் முறையாக மொத்தமாக அச்சில் வெளி வரும் நான்கு கவிதைத் தொகுப்புகளில் ஒன்றாகும்.
இவரது கவிதைகள் எளிமையானவை.எல்லோரும் படித்து இன்புறும் வண்ணம் எளிய நடையில் அமைந்தவை.
எழுபத்துமூன்று வயதான இவர். முகநூலில் தனது பேரன் பேத்திகளின் பதின்ம வயதில் தான் தனது மொத்த கவிதைகளையும் அன்றாடம் பதிவேற்றி வந்துள்ளார். தற்போது எழுபத்து மூன்று வயதாகும் நிலையிலும் பன்முகத்துறைகளில் சிறப்புடன் ஈடுபட்டு வெற்றி கண்டு வருகிறார்.
86 தலைப்புகளின் கீழ் கவிதைகள் புனைந்துள்ளார். அனைத்தும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையானவை.
தெருவோர சிறுவர்கள் எழுதிய எளிய நாட்குறிப்பு வரிகள், தமிழாய் தமிழுக்காய், வான்மறை கூறும் வாழ்க்கை வழிமுறைகள், எது அழகு? ஆகிய தலைப்பின் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன.
******
Anchored by London Swaminathan from London and Kalyanji from India.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(collected from popular national dailies)
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 13-ம் தேதி 2025-ம் ஆண்டு .
முதலில் இந்தியச் செய்திகள்!
முதலில் இந்தியச் செய்தி
அமர்நாத் குகைக்கோவிலுக்கு 5-வது யாத்திரை குழு பயணம்
ஜம்மு காஷ்மீரில் 38 நாட்கள் நடைபெறும் இந்த வருடாந்திர யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆண்டு 3.5 லட்சத்துக்கும் அதிகமானார் யாத்திரைக்காக ஆன்லைனில் பதிவு செய்து உள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் நேரடி கவுண்ட்டர்களில் பதிவு செய்து செல்கிறார்கள்.
இதுவரை பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. புதிதாக 7 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட 5-வது குழு அமர்நாத் யாத்திரையை தொடங்கி உள்ளது. இதில் 1587 பெண்கள் மற்றும் 30 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரவு முழுவதும் கனமழை பெய்து கொண்டிருந்தபோதும், யாத்ரீகர்கள் உற்சாகமாக பயணத்தை தொடங்கி உள்ளனர்.
****
தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம்
புத்த மதத் தலைவர் தலாய் லாமா, 90–வது பிறந்த நாளை சென்ற வாரம் கொண்டாடினார். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஆன்மிக தலைவரான தலாய் லாமா, அங்கிருந்து வெளியேறி நம் நாட்டின் ஹிமாச்சலின் தரம்சாலாவில் வசித்து வருகிறார்.
.இதில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜு, ராஜிவ் ரஞ்சன் சிங், அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு, பள்ளி குழந்தைகள் உட்பட வெளிநாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள், இசை கச்சேரி உள்ளிட்டவை நடந்தன. இதில் தலாய் லாமா பேசுகையில், ”மக்களின் அன்பு தான், அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் சேவை செய்ய என்னை துாண்டுகிறது,” என்றார்.
தலாய் லாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, தைவான் அதிபர் லாய் சிங்-டே உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தன் மறைவுக்கு பின், அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் அதிகாரம் போட்ராங் அறக்கட்டளைக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதை கண்டித்த மத்திய அரசு, புதிய தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் போட்ராங் அறக்கட்டளைக்கு இருப்பதாக தெரிவித்தது.
தலாய் லாமா, பண்டைய ஞானத்திற்கும், நவீன உலகத்திற்கும் இடையிலான ஒரு உயிருள்ள பாலம் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜு,புகழாரம் சூட்டினார். தலாய் லாமா இந்தியாவில் இருப்பதைக் கண்டு ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணர்வதாகவும் கிரண் ரிஜு தெரிவித்தார்.
*****
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி, மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.இதுபற்றிய விவரம் வருமாறு:
திருப்பதி தேவஸ்தானத்தில உதவி நிர்வாக அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர் ராஜசேகர் பாபு. அண்மையில் ஹிந்து மதத்தில் இருந்து மாற்று மதத்திற்கு மாறினார். மதம் மாறிய அவர், வாரம்தோறும் சொந்த ஊரான புத்தூர் சென்று அங்குள்ள சர்ச்சில் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்ததாக தெரிகிறது..
திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிபுவர்கள் ஹிந்துவாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. இந்த நிபந்தனையை ராஜசேகர் பாபு மீறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பான அறிக்கையையும் அவர்கள் தேவஸ்தான நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர்.
அறிக்கையின் அடிப்படையில் ராஜசேகர் பாபுவை தேவஸ்தான நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கான உத்தரவை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா பிறப்பித்து இருக்கிறார்.
முன்னதாக, இதே காரணங்களுக்காக தேவஸ்தான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் 18 பேர் பணியிடம் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
****
திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 7 காலை கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேக விழாவில் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடாதிபதி ஜகத்குரு, திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், கந்தபுரி ஆதீனம் வாமதேவ ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 157 அடி உயர ராஜகோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது.
கடலோரத்தில் அலைகடலென திரண்ட பக்தர்கள், முருகனுக்கு அரோகரா என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
ராஜகோபுரத்துக்கு மட்டும் தங்க குடத்தில் புனித நீர் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கும்பாபிஷேகம் முடிந்தவுடன் 20 பெரிய ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஹெச்சிஎல் HCL நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடிக்கு கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.
ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பிரமாண்ட யாகசாலையில் 71 ஓம குண்டங்கள் அமைத்து 700 கும்பங்கள் வைக்கப்பட்டு 96 மூலிகைகள் இடப்பட்டு பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் செல்வம் சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் ராஜா சிவாச்சாரியார் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்தனர்.
திருச்செந்துார் கோயில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் சிறப்பு வழிபாடு
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் வழிபாடு நடத்தினார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் பங்கேற்றார். அவருக்கு, கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கருவறை விமானத்திற்கான மாலை, வஸ்திரம், புனித நீரை தொட்டு ஆசீர்வதித்தார். பின்னர், அவர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.
சிருங்கேரி சுவாமிகளுக்கு திருச்செந்துார், ராமேஸ்வரம், பழநி கோயில்களில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் உரிமை உண்டு..சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய 2 கிலோ எடை வெள்ளி பாத்திரம் ஒன்றை அதிகாரிகளிடம் சுவாமிகள் வழங்கினார். மடத்திற்கு திரும்பிய சுவாமிகள் சந்திர மவுலீஸ்வரர் பூஜை செய்தார்.
*****
மொழி பிரச்னையில் மிகுந்த கவனம் அவசியம்;
மோகன் பாகவத்
‘மொழி பிரச்னையில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் தலைவர், பொதுச்செயலருக்கு அடுத்த,
அதிகாரம் மிக்கவர்கள் மாநில அமைப்பாளர்கள்தான். ஆண்டுதோறும் மாநில அமைப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள்தான், ஆர்.எஸ்.எஸ்., செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து செயல்படுத்தப்படும்.
முக்கியத்துவம் வாய்ந்த, ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளர்கள் கூட்டம், கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில், டில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, தமிழகத்தை சேர்ந்த மாநில அமைப்பாளர்கள் பிரஷோபகுமார், ஆறுமுகம், இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் அரசியல், சமூக சூழல், சந்திக்கும் சவால்கள், சாதித்தவை குறித்து, மாநில அமைப்பாளர்கள் எடுத்துரைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகள்,
ஆப்பரேஷன் சிந்துார், நீடிக்கும் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
நுாற்றாண்டு விழாவையொட்டி ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பணிகளை கிராமங்கள், வார்டுகள் அளவில் கொண்டுச் செல்ல, நாடெங்கும் 58,964 ஒன்றியங்கள், 44,055 நகரப் பகுதிகளில், ஹிந்து மாநாடுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, ஆர்.எஸ்.எஸ்., தேசிய செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர் தெரிவித்தார்.
****
ஒரு சோகச் செய்தி
ஆசியாவின் மிகவும் வயதான யானை ‘வத்சலா’ மரணம்
ஆசியாவின் மிக வயதான யானையான ‘வத்சலா’, (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது. காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ‘வத்சலா’ ஒரு பாட்டி போல செயல்பட்டு குட்டிகளை கவனித்துக்கொண்டது என பன்னா புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது.
வத்சலா யானைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தனது எக்ஸ் பதிவில், “‘வத்சலாவின்’ நூற்றாண்டு கால தோழமை முடிவுக்கு வந்தது. ‘வத்சலா’ பன்னா புலிகள் காப்பகத்தில் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது. அது வெறும் யானை அல்ல; அவள் நம் காடுகளின் அமைதியான பாதுகாவலர், தலைமுறைகளுக்கு ஒரு தோழி, மத்தியப் பிரதேசத்தின் உணர்ச்சிகளின் சின்னம். புலிகள் காப்பகத்தின் இந்த அன்பான உறுப்பினர் தனது கண்களில் அனுபவங்களின் கடலையும், கைகளில் அரவணைப்பையும் சுமந்து வாழ்ந்தார். வத்சலா இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவளுடைய நினைவுகள் நம் மண்ணிலும் இதயங்களிலும் என்றென்றும் வாழும். ‘வத்சலா’வுக்கு பணிவான அஞ்சலிகள்!” என்று மத்திய பிரதேச முதலமைச்சர் கூறினார்.
*****
சுருக்கமான செய்திகள்
நாடு முழுதும் ஜூலை பத்தாம் தேதி குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது . மடாதிபதிகள் சாதுர்மாஸ்ய விரதத்தைத் துவங்கினார்கள் . அதாவது மழைக்காலத்தில் வெளியே செல்லக்கூடாதென்பதற்காக அவர்கள் ஒரே இடத்தில் முகாமிட்டு பக்கதர்களுக்கு அருளாசிகள் வழங்குவார்கள் அப்போது காலை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து சம்பிரதாய தெய்வீகக்கலைகளைப் பரப்பி கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்குவது வழக்கம்
****
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, சுவாமி தரிசனம் செய்தார்.
காஞ்சி சங்கர மடம், வியாசராஜ மடம், ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் ஆகிய பழம்பெரும் ஆசிரமங்களின் மடாதிபதிகள் மற்றும் அவர்களுடன் வருகை தரும் 4 பேருக்கு ஏழுமலையான் கோயிலில் வருடத்தில் ஒருநாள் சிறப்புத் தரிசன வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் வியாச ராஜமட பீடாதிபதி சரஸ்வதி தீர்த்த சுவாமியுடன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஏழுமலையானை வழிபட்டார்.
****
மகாவதார் நரசிம்மா படத்தின் டிரைலர் வைரல்!
Hombale Films தயாரித்துள்ள மகாவதாரம் நரசிம்மா படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக உள்ள Hombale Films கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட வெற்றி படங்களைத் தயாரித்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் மகாவதாரம் நரசிம்மா என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளது. அஸ்வின் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஜூலை மாதம் 20 –ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags–World Hindu Tamil News, 13 7 2025, Latha, Vaiishnavi, Gnanamayam Broadcast
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
13-7-2025 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்
ஹர சம்போ மஹாதேவ விஸ்வேஸ அமரோ வத்ஸலா
சிவ சங்கர சர்வாத்மன் நீலகண்ட நமோஸ்துதே
அகத்தியர் இயற்றிய சிவ ஸ்தோத்திரம்
ஓ ஹரனே, சம்போ, மஹாதேவனே, விஸ்வேஸனே, தேவர்களை நேசிப்பவனே, சிவனே, சங்கரா, எல்லா ஆன்மாக்களின் உள்ளும் நிறைந்திருப்பவனே நீல கண்டனே நமஸ்காரம்.
அகத்தியர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் சென்னை நகரில் அமைந்துள்ள வில்லிவாக்கம் திருத்தலமாகும்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இது.
இறைவர் மூலவர் : அகஸ்தீஸ்வரர்
உற்சவர் : ஸோமாஸ்கந்தர்
அம்மன் : ஸ்வர்ணாம்பிகை
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : அங்காரக தீர்த்தம்
சென்னையில் அமைந்துள்ள இத்தலம் பற்றிய புராணக் கதை ஒன்று உண்டு.
சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கயிலையில் திருமணம் நடந்த போது அந்த தெய்வீகத் திருமணத்தைப் பார்க்க தேவர்களும் ரிஷிகளும் ஒருங்கே அங்கு கூடினர். இதனால் வடதிசை தாழ தென் திசை உயர்ந்தது. இதை சமப்படுத்த அகத்தியரை தென் திசை ஏகுமாறு சிவபிரான் பணித்தார். தெற்குப் பக்கம் வந்த அகத்திய மாமுனிவர் வில்லிவாக்கத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்கினார். இங்கு அகத்தியருக்கு சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளித்தனர்.
முன்னொரு காலத்தில் வில்லிவாக்கம் பகுதியில் வாழ்ந்து வந்த வில்வலன், வாதாபி என்ற இரு அசுரர்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தி வந்தனர். அவர்களில் வாதாபியை அகத்தியர் அழித்தார். ஆனால் வில்வலனை தீயவழியிலிருந்து திருத்தி நல்வழிப்படுத்தினார். அவனை நல்வழிப்படுத்திய இடமாதலால் இப்பகுதி வில்லிவாக்கம் என்ற பெயரைப் பெற்றது.
அகத்திய முனிவரின் பெருமை எல்லையற்றது. பதினெட்டு சித்தர்களில் இவர் முதன்மையானவர். தமிழ் மொழியை உருவாக்கியவர். “ஆதியில் தமிழ்நூல் அகத்தியர்க்கு உணர்த்திய மாதொருபாகன்” என்/று சேனாவரையர் தொல்காப்பிய உரையின் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுவதால், சிவபெருமானே இவருக்கு தமிழ் மொழியை உபதேசித்தார், என்பது பெறப்படுகிறது.
பொதிகை மலையில் தவம் செய்தவர். ஆகவே பொதிகை முனி என்ற பெயரைப் பெற்றவர். கும்பத்தில் பிறந்ததால் கும்ப முனி என்ற பெயரும் இவருக்கு உண்டு. அகத்தின் உள்ளே ஈசனைக் கண்டதால் இவர் அகத்தியர் என்று அழைக்கப்படுகிறார்.
தமிழகத்தில் மட்டும் அகத்தியருடன் தொடர்பு கொண்ட நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. நான்கு வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அத்தோடு அகநானூறு,
புற நானூறு, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை உள்ளிட்ட சங்கத் தமிழ் நூல்களிலும் இவரைப் பற்றிய அற்புதமான செய்திகள் ஏராளம் உள்ளன.
இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். அகத்தியம் என்ற நூல் மட்டும் 12000 பாக்களைக் கொண்டுள்ளது. இவரது மனைவி லோபாமுத்திரை அம்பாளின் தனிப் பெரும் கருணைக்கு ஆளானவர்.
இப்படிப்பட்ட மாமுனிவருடன் தொடர்பு கொண்ட தலமாக
வில்லிவாக்கம் விளங்குகிறது.
வில்லிவாக்கத்தில் உள்ள தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. இதைப் பற்றிய வரலாறு ஒன்று உண்டு.
அங்காரகன் என்னும் செவ்வாய் கிரகத்தால் உலகிற்குப் பல தீமைகள் ஏற்படுவதைக் கண்ட ரிஷிகள் நைமிசாரண்யத்தில் ஒருங்கு கூடினர்.
யாகம் ஒன்றை நடத்தத் தீர்மானித்தனர். யாகத்தில் விஸ்வாமித்திர மஹரிஷியும் கலந்து கொண்டார்.
யாகத்திலிருந்து ஒரு பெரும் பூதம் கிளம்பி அங்காரகனை நோக்கிச் சென்றது. அங்காரகன் தன் பெயரில் ஒரு தீர்த்தம் அமைத்தால் கொடும் செயல்களைச் செய்யாமல் இருப்பதாகக் கூறவே இந்திரன் முதலானோர் இங்கு ஒரு தீர்த்தத்தை அமைத்து அதில் நீராடினர். அங்காரகனின் தீமைகளும் அகன்றன.
அங்காரக தீர்த்தத்தின் கரையில் செவ்வாய் காட்சி அளிப்பதால் இதை மக்கள் செவ்வாய் கோவில் என்றும் அழைக்கின்றனர்.
அம்பாள் திருமணக் கோலத்தில் காட்சி தருவதால் ஸ்வர்ணாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். அம்மன் சந்நிதி முகப்பில் மகாலட்சுமி, சரஸ்வதி சந்நிதி உள்ளது.
அம்பிகையின் நேரடிப் பார்வையில் குரு பகவான் அமைந்துள்ளார்.
அகத்தியர் வழிபட்ட தலம் என்பதால் சிவபிரான் அகத்தீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டு மூலவராக இருக்கிறார்.
பொதுவாக கிழக்கு நோக்கிய கோவிலின் வாயில் அமைந்திருக்கும் ஆனால் இங்கு கோவிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
தென்புற வாயிலின் எதிரே உள்ள தனி கோவிலில் வீரபத்திரர் காட்சி தருகிறார். கோரைப்பற்களுடன் இடது கையில் தண்டத்துடன் வீரபத்திரர் காட்சி தர, அருகே வணங்கிய கோலத்தில் தட்சன் இருக்கிறான். இங்கு முன் மண்டபத்தில் பத்திரகளை சந்நிதி உள்ளது.
சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அகத்தியருக்கு காட்சி அருளியது ஒரு ஆடி மாத செவ்வாய்க்கிழமை என்று ஐதீகம் கூறுவதால் மக்கள் செவ்வாய்க் கிழமையன்று திரளாக இங்கு வந்து வழிபடுகின்றனர்.
அத்துடன் இங்கு அங்காரக தோஷம் நீங்கவும் பக்தர்கள் பெருந்திரளாக செவ்வாய்க் கிழமையன்று வந்து கூடி வழிபடுகின்றனர்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்வர்ணாம்பிகை அம்மையும் அகஸ்தீஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
13-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
MOTIVATION
ஒரு நகரையே மகிழ்ச்சி நகராக மாற்ற உங்களால் முடியும்! இதோ வழி!!
ச. நாகராஜன்
எப்போதும் அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் இருக்கும் நபர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
ஆனால் ஒரே ஒரு நபரால் ஒரு நகரையே மகிழ்ச்சி நகரமாக ஆக்கவும் முடியும், தெரியுமா? அதற்கு ஒரு வழியும் உண்டு!
பிரபல அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளரும் புலிட்ஸர் விருது பெற்றவருமான ஆர்ட் புச்வால்ட் (ART BUCHWALD –தோற்றம் 20-10-1925 மறைவு 17-1-2007)தி இம்பாஸிபிள் ட்ரீம் (THE IMPOSSIBLE DREAM என்ற கட்டுரையில் இந்த வழியைத் தந்துள்ளார்.
இதை முயன்று பார்த்து தானும் மகிழ்ச்சி அடைந்து மற்றவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தோர் பலர்.
அவரது கட்டுரையின் சுருக்கத்தைப் பார்ப்போம்.
டாக்ஸி நின்றது. நண்பருடன் சென்ற நான் டாக்ஸியிலிருந்து இறங்க முயன்றேன். அப்போது என் நண்பர் டாக்ஸி டிரைவரைப் பார்த்து, “நன்றி! மிக அருமையாக வண்டியை ஓட்டினீர்கள். உங்களுடையது சூப்பர் ஜாப்” என்றார்.
டிரைவர் ஒரு நிமிடம் திகைத்தார். பின்னர் கேட்டார்:” நீங்கள் என்ன ஒரு வேடிக்கையாக இதைச் சொல்கிறீர்களா அல்லது …” என்று இழுத்தார்.
“இல்லை இல்ல, நிஜமாகவே நீங்கள் அருமையாக வண்டியை ஓட்டினீர்கள். அதைத் தான் சொன்னேன்” என்றார் நண்பர்.
டிரைவர் சிரித்தவாறே வண்டியைச் செலுத்தலானார்.
நான் நண்பரைக் கேட்டேன்: “என்ன இதெல்லாம்?”
நண்பர் கூறினார்: “பரபரப்பான இந்த நகரத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொண்டு வர நான் முயற்சி செய்கிறேன்>
“அது எப்படி முடியும்? ஒரு ஆள் ஒரு நகரத்தை மாற்றி விட முடியுமா என்ன?” – இது நான்.
“ஒரு ஆள் இல்லை. அந்த டாக்ஸி டிரைவர் இருபது பேரையாவது இன்று சவாரிக்கு அழைத்துச் செல்வார். இப்போது நான் சொன்ன பாராட்டினால் அவரும் நிச்சயமாக இன்னும் ஒருவருக்கேனும் நன்றியுடன் அன்பைப் பொழிவார். அப்படியே அந்த அன்பு தொடர் சங்கிலியாகி நகர் முழுவதும் பரவும் இல்லையா?”
“ஒரு டாக்ஸி டிரைவர் இதைச் செய்வாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் செய்யாவிட்டால்…?.”
நண்பர் பதில் அளிக்க ஆரம்பித்தார்: “அதனால் ஒன்றும் மோசமில்லை. இன்று நான் குறைந்தபட்சம் பத்து பேரையாவது பார்ப்பேன், அவர்களை மகிழ்ச்சியுறச் செய்வேன், இன்று இல்லையேல் நாளை இன்னொரு டாக்ஸி டிரைவர். இந்த சிஸ்டத்தை நான் நன்கு ஆராய்ந்து வைந்துள்ளேன். பத்துப் பேரில் ஒருவர் இதைப் பிடித்துக் கொண்டு இன்னொரு பத்து பேரை ஊக்குவித்தால் பத்துப் பத்தாக இதன் மடங்கு பெரிதாகும் இல்லையா? நாம் மதிப்புக் கொடுப்பது பணத்திற்கு மட்டும் தான். அதற்கு அப்பாலும் ஒன்று இருக்கிறது. அது தான் பாராட்டு. மனம் நிறைந்த உண்மையான பாராட்டு! இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் நல்ல பணியாளர்களை அலுவலகத்தில் கூட யாரும் பாராட்டுவதில்லை.”
நாங்கள் இப்போது பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் கட்டும் இடத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தோம். அங்கு சுவர் அருகில் நின்று கொண்டிருந்த கொத்தனாரைப் பார்த்து நண்பர் கூவினார்: “அடடா! அருமையான வேலை! இது எப்போது முடியும்?”
சந்தேகக் கண்ணோடு அந்தக் கொத்தனார் என் நண்பரைப் பார்த்து, “அக்டோபர் மாதம்” என்றார்.
“மிக நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். உண்மையாகவே நீங்கள் கர்வப்பட வேண்டும். எனது வாழ்த்துக்கள்” சொல்லியவாறே நகர்ந்தார் நண்பர்.
நான் கேட்டேன் : “ஆனால் நீ ஒரே ஒரு ஆள் தானே இப்படிச் செய்வது?”
என்னை இடைமறித்த நண்பர் கூறினார்;”ஆமாம். அது எனக்குத் தெரியாதா என்ன? எனது வார்த்தைகளை அந்தக் கொத்தனார் ஜீரணிக்க கொஞ்ச நேரம் ஆகும். அப்புறம் இன்று நாள் முழுவதும் கட்டிடப் பணியாளர்களிடையே மகிழ்ச்சி தான், போ!…. சரி சரி, இதோ அங்கே ஒரு நல்ல பெண்மணி வருகிறார், பாரேன்!”
அந்தப் பெண்மணி அருகில் வந்ததும் பெரிதாக கும்பிடு போட்டு நண்பர் நமஸ்தே என்று கூற. அவர் சிரித்தவாறே மகிழ்ச்சியுடன் நகர்ந்தார்.
நான் சொன்னேன்: “அது ஒரு பள்ளிக்கூட ஆசிரியை தான்! நிச்சயமாக எனக்கு ஒன்று தெரிகிறது, இப்போது! இன்று அவரது கிளாஸே வேற லெவல்ல இருக்கும்.”
நண்பர் சிரித்தார். நானும் சிரித்தேன்!
‘The Impossible Dream’ என்ற ஆர்ட் புச்வால்டின் கட்டுரையை பலர் கையில் எடுத்துச் சென்று நண்பர்களிடம் காண்பிப்பது உங்களுக்குத் தெரியுமோ?
நகரத்தை மகிழ்ச்சி நகரமாக ஆக்க முயல்வோர் அவர்களே தான்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவிளையாடல் புராணத்தை (தி வி பு) 1994-ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்து பக்கம் பக்கமாக எழுதிவைத்த எனக்கு இப்போது ஒரு தெளிவான சித்திரம் கிடைத்து விட்டது; வில்சன் என்ற ஆங்கிலேயர் ஏசியாட்டிக் ஜர்னலில் எழுதிய ஆராய்சசிக் கட்டுரையில் 74 பாண்டிய மன்னர்கள் பெயர்களை ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்; அது 1963- ஆம் ஆண்டில் வெளியான மீனாட்சிகோவில் கும்பாபிஷேக மலரில் வெளியாகியுள்ளது. அவர் பரஞ்சோதி முனிவரின் தி.வி.பு. விலுள்ளதை அப்படியே கொடுத்துள்ளார்; முனிவரோ கந்த புராணத்தில் உள்ளதை மொழிபெயர்ப்பதாக எழுதியுள்ளார்.
****
ஏற்கனவே நான் கண்டுபிடித்தது :
1.இப்போதுள்ள மதுரையின் வரலாறு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்குகிறது . மெகஸ்தனிஸ் இதை உறுதி செய்கிறார் ; பிளினி (75 CE), மதுரை தலைநகர் மாற்றம் பற்றிச் சொல்லியுள்ளார்.
2.பாணபத்த்ரன் – வரகுணன் என்பவர் முதலாவது வரகுணன் ; இவர்களை தேவாரத்தில் சம்பந்தர் பாடியுள்ளதால் இவர் ஒன்பதாம் நூற்றாண்டு வரகுணன் இல்லை.
3.மேலும் நரி-பரி லீலையையும், மண் சுமந்த லீலையையும் அப்பர் பாடியுள்ளதால் சம்பந்தருக்கு 200 ஆண்டு முன் வாழ்ந்தவர் மாணிக்க வாசகர்.
4.கடலில் அழிந்து போன தென் மதுரையில் இலங்கை விஜயனும் மந்திரிகளும் பெண் எடுத்ததை மஹாவம்சம் கூறுகிறது . இது நடந்தது 2600 ஆண்டுகளுக்கு முன்னர்.
5.எனது புதிய கண்டு பிடிப்பு
தோற்றுப்போன பாண்டிய மன்னன் யார்?
ஒரிஸ்ஸாவில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி புரிந்த சமண மன்னன் காரவேலன் மஹா உத்தமன்; நீதிமான்; கட்டிடக் கலைஞன்; கலை ரசிகன் ; இவனைப் பற்றிய அரிய செய்திகளைக் கூறும் ஹத்திகும்பா குகைக் கல்வெட்டு ஒரிஸ்ஸாவில் உள்ளது; பிராகிருத மொழியில், பிராமி லிபியில், 17அடி நீளத்துக்கு பொறித்துள்ளனர் ;பல வரிகள் அழிந்தாலும் பாண்டியர் பற்றிச் சொல்லும் வரிகள் தெளிவாகவே உள்ளது.
அந்தக் கல்வெட்டில் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. இந்தக் கட்டுரைக்குத் தேவையான விஷயங்கள் இரண்டுதான்; 1.அவன் வடக்கிலும் தெற்கிலும் பல மன்னர்களை வென்றான்; ஆந்திரத்திலுள்ள சதகர்ணி மன்னனையும் தமிழ் நாட்டில் பாண்டிய மன்னனையும் வென்றான்; 113 ஆண்டுக் காலமாக இருந்த தமிழக கூட்டணியை (த்ரமிள சங்கடன்) அவன் முறித்து, உடைத்ததாகக் கல்வெட்டு கூறுகிறது இந்தக் கூட்டணியை சேர சோலா பாண்டியர்கள் அசோகனின் கலிங்கப் படை எடுப்பின்போது ஏற்படுத்தி இருக்க வேண்டும் 2.பின்னர் பாண்டிய மன்னனிடமிருந்து சிவப்பு ரத்தினக் கற்கள், முத்துக்கள், உடைகள், பிற பரிசுப் பொருட்கள் கப்பமாக வந்தன . இந்த வரிகள் தெளிவாக இருப்பதால் அறிஞர்கள் எவரும் இதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால் தோற்றுப்போன பாண்டிய மன்னன் யார் என்றும் சொல்லவில்லை . தி.வி.பு.வில் சமணர் படையெடுப்புகள் பற்றிய செய்திகள் உள்ளன; அவற்றைக் காலக்கணக்கு வரிசையில் வைத்துப் பார்த்தால், இரண்டு பாண்டிய மன்னர்களில் ஒருவர் என்று அடையாளம் காண முடிகிறது.
Hathigumpha Cave Inscriptions
LINE 11
(… lost …) And the market-town (?) Pithumda founded by the Ava King he ploughs down with a plough of asses; and (he) thoroughly breaks up the confederacy of the T[r]amira (Dramira) countries of one hundred and thirteen years, which has been a source of danger to (his) Country (Janapada). And in the twelfth year he terrifies the kings of the Utarapatha with (… lost …) thousands of
LINE 13 (… lost …) (He) builds excellent towers with carved interiors and creates a settlement of a hundred masons, giving them exemption from land revenue. And a wonderful and marvellous enclosure of stockade for driving in the elephants (he)(… lost …) and horses, elephants, jewels and rubies as well as numerous pearls in hundreds (he) causes to be brought here from the Pandya King.
****
54 பாண்டியர்கள் மாயம் !
தி.வி.பு கதைகள் தொடர்புடைய 20 பாண்டிய மன்னர்கள் பற்றி கதை சொன்ன பரஞ்சோதியார், வேறு 54 பாண்டியர் பெயர்களை மட்டும் சொல்கிறார். ஒருவேளை இவர்களில் ஒருவர் தோற்றுப்போனவராக இருக்க முடியும்.
வெள்ளைக்கார வில்ஸனுக்கு இருந்த அக்கறைகூட நம்மவர்க்கு இல்லை; அவர் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே 74 பாண்டியர்களையும் ஆங்கிலக் கட்டுரையில் எழுதிவிட்டார்.
****
இதோ எனது ஆராய்ச்சி முடிவுகள்:-
குலசேகர பாண்டியன்
கிமு. மூன்றாவது நூற்றாண்டில் இப்போதுள்ள மதுரையை நிறுவினான்.
மலையத்வஜ பாண்டியன் – சூர சேன நாட்டு இளவரசி காஞ்சனமாலாவை மணந்தவன்.
ராணி மீனாட்சி
ஆணவம் என்ற மூன்றாவது முலையுடன் பிறந்தாள்; திக் விஜயம் செய்து ஏழு திசைகளை வென்றாள் ; எட்டாவது திசையில் தோற்றுப்போனாள். தெய்வீக ஆணழகன் சுந்தர பாண்டியனைக் கண்டவுடன் ஆணவம் என்னும் மூன்றாவது முலை மறைந்தது; அவனை மணம் புரியவே குழந்தை பிறந்தது ; காலம் கிமு. மூன்றாவது நூற்றாண்டு. ஆதாரம்- மெகஸ்தனீசின் இண்டிகா என்னும் நூல்.
உக்கிரகுமாரன்
இவனை முதுகுடுமிப் பெருவழுதியுடன் ஒப்பிடலாம் ; அவன் யாக யக்ஞப் பிரியன்; நாடு முழுதும் யாகத்தைச் செய்து யூபஸ்தம்பங்களை நட்டவன். அதே போல உக்கிரகுமாரன் செய்ததாக பரஞ்சோதி செப்புகிறார்; ரகு வம்சத்தில் காளிதாசனும் இவனை வருணிக்கிறார். யாகம் செய்து அவப்ருத ஸ்நானம் செய்ததால் எப்போதும் ஈர வேஷ்டியுடன் தோன்றுவான் என்கிறார் காளிதாஸ். காலம் கிமு. மூன்றாவது அல்லது இரண்டாம் நூற்றாண்டு.
****
வீர பாண்டியன்
வேட்டையாடுகையில் புலி அடித்து இறந்தவன்.
****
அபிஷேக பாண்டியன்
இளம் வதிலேயே பட்டம் ஏற்றான்; இவனை நெடு டுஞ் செழியனுடன் ஒப்பிடலாம் . அவனும் இளம் வயதில் பட்டம் ஏற்றதாக சங்க இலக்கியங்கள் பகர்கின்றன . காலம் கிமு. இரண்டாம் நூற்றாண்டு.
****
விக்ரம பாண்டியன்
இதில்தான் முக்கிய விஷயத்தைப் பரஞ்சோதி தருகிறார். இதுதான் முதல் சமணர் படை எடுப்பு;
சோழர் படையுடன் சமணர் படை நுழைகிறது. ஒரிஸ்ஸாவிலிருந்து வந்தவர் வேண்டுகோளுக்கிணங்கவோ நிர்பந்தத்தாலோ சோழர்கள் வந்திருக்கலாம் ; இதை காரவேலன் படை எடுப்பு என்றும் கருதலாம் ; காலம் கிமு. இரண்டாம் நூற்றாண்டு.
So, this is the period of Kharavelaa’s Invasion ( second century BCE)
****
ராஜசேகர பாண்டியன்
கரிகால் சோழன் சபைப்புலவர் வைத்து ராஜ சேகர பாண்டியனுக்கு கரிகாற்சோழன் போல 64 கலைகளும் தெரியுமா? என்று சவால் விடுகிறான் ; இதன் மூலம் இவன் காலம் கிமு. இரண்டாம் நூற்றாண்டு என்று தெரிகிறது
****
குலோத்துங்க பாண்டியன்
சோழர்களும், கர்நாடக ஆளுப்பா (ஆலவாய்) பாண்டியர்களும் இந்தப் பெயரைப் பிற்காலத்தில் பயன்படுத்திய கல்வெட்டுகள் இருப்பதால் இந்தப் பெயர் உண்மை என்று தெரிகிறது . இவனுக்கு நிறைய மனைவியர் உண்டு .
***
அனந்த குண பாண்டியன்
இவன் சமணர்களுடன் கடுமையான மோதல்களில் ஈடுபட்டவன் . ஆகையால் காரவேலனுடைய காலம் உறுதியாகிறது ; இவை எல்லாம் இரண்டாம் கிமு. இரண்டாம் நூற்றாண்டுச் செய்திகள்.
2200 ஆண்டுகளுக்கு முன்னர் காரவேலன் தமிழ் நாட்டின் மீது படை எடுத்த காலமும் இதுதான். 113 ஆண்டு தமிழக கூட்டணியை அவன் முறித்து, உடைத்தது உறுதியாகிறது. தமிழ்ப் புலவர்கள் மோரியரின் தென் பகுதி முன்னேற்றம் குறித்தும் பாட புத்திரத்தில் கங்கை நதிக்கடியில் நந்தர்கள் தங்கத்தைப் புதைத்து வைத்திருப்பது குறித்தும் பாடியாதாலும் புலவர்களின் வரலாற்று அறிவும் தெளிவிவாகத் தெரிகிறது.
***
விக்ரம பாண்டியன் அல்லது அனந்த குண பாண்டியன் சமண மன்னன் காரவேலன் காலத்தவனாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து . அவன் நீதி தவறாதவன் என்பதால் பிடித்த நாடுகளைத் திருப்பிக்கொடுத்துவிட்டுக் கப்பம் மட்டும் பெற்றதை ஹத்திகும்பா கல்வெட்டு ஐயம் திரிபறக் காட்டுகிறது இந்தக் கல்வெட்டினால் தி.வி.பு கதைகளின் மன்னர்களின் காலமும் உறுதியாகிறது.
வாழ்க காரவேலன் ; வளர்க ராஜ நீதி
–சுபம்–
Tags- காரவேலன், ஹத்திகும்பா கல்வெட்டு,54 பாண்டியர்கள் மாயம், தோற்ற பாண்டிய மன்னன், பெயர்,வில்சன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
One of the greatest kings of Odisha (Orissa/Utkal/Kalinga) was Kharavela. He was portrayed as a just king and well versed in arts and architecture. He won several countries in the north and the south. Let us look at his victory over a Panyda king and try to identify his name. His inscription gives us very valuable information about 113 year old DRAVIDA/TAMIL FRONT. He broke that front and went up to the land’s southernmost point.
The Hathigumpha inscription, found in the Udayagiri caves near Bhubaneswar, Odisha, is a primary source of information about King Kharavela, who ruled Kalinga in the 2nd century BCE. The inscription, written in Brahmi script and Prakrit language, details Kharavela’s reign, including his military victories, public works, and patronage of Jainism.
The inscription provides a year-by-year account of Kharavela’s reign, highlighting his military campaigns, infrastructure projects (like canals), and welfare activities.
Besides the main Hathigumpha inscription, there are also shorter inscriptions (Minor Inscriptions of Kharavela) in the Udayagiri and Khandagiri caves, further detailing the patronage of Jain monks during and after Kharavela’s reign.
The seventeen lines cover about 15 feet by 5.5 feet of the stone’s surface
LINE 1
Salutation to the Arhats [Jinas]. Salutation to all the Siddhas. By illustrious Kharavela, the Aira (Aila), the Great King, the descendant of Mahameghavahana, the increaser (of the glory) of the Cheti (Chedi) dynasty, (endowed) with excellent and auspicious marks and features, possessed of virtues which have reached (the ends of) the four quarters, overlord of Kalinga,
LINE 11
(… lost …) And the market-town (?) Pithumda founded by the Ava King he ploughs down with a plough of asses; and (he) thoroughly breaks up the confederacy of the T[r]amira (Dramira) countries of one hundred and thirteen years, which has been a source of danger to (his) Country (Janapada). And in the twelfth year he terrifies the kings of the Utarapatha with (… lost …) thousands of
LINE 13 (… lost …) (He) builds excellent towers with carved interiors and creates a settlement of a hundred masons, giving them exemption from land revenue. And a wonderful and marvellous enclosure of stockade for driving in the elephants (he)(… lost …) and horses, elephants, jewels and rubies as well as numerous pearls in hundreds (he) causes to be brought here from the Pandya King.
Sangam Tamil Literature
Poets of Sangam Tamil literature sang about the southward march of the Mauryas (in Tamil Moriyar) . Tamil poets also sang about the mysterious gold treasure under the River Ganges during Nanda period. It shows their knowledge about North India from Nanda period to Maurya period.
All the three Tamil kings Chera, Choza, Pandya went up to the Himalayas according to Tamil literature. They did it with the help of mighty Satakarnis of Andhra (300 BCE to 100 BCE).
Tamil kings must have formed a confederation during Asoka’s time 268 to 232 BCE. But Ashoka stopped his southward march after killing 100, 000 people in Kalinga. Wisdom dawned upon him, and he started spreading Buddhism .If we deduct 113 years from this, we would get at mid-point of his rule 253-113=140 BCE.
So, we can guesss Kharavela broke the Dramila /Tamil Front around that time or even earlier.
54 Pandya Kings missing !!
Tiruvilayadal Puranam (T V P )written by Paranjothi Munivar 300 years ago provides is lot of historical information. He translated it from Sanskrit book Skanda Puranam. For some reason he skipped 54 Pandya kings and described all the 64 Leelas (Tiru Vilaiyadal in Tamil; Divine Sports in English) of Lord Shina during the reign of only twenty Panya Kings.
Generally, no poet sings the defeat of a king separately. They may mention it in other poems about victorious kings. In the TVP, we have references to several Jain invasions of Pandya country.
****
First Jain Invasion
Kulasekara Pandya
Established Madurai in present location around 3rd Century BCE
Malayadwaja (Mountain Flag) Pandya married Surasena Princess Kanchanamala around 3rd Century BCE
Soundara or Sundara or Sundareswara Pandya married Goddess Queen Meenakshi. She was mentioned by Megasthenes (350 to 290 BC). as Pandeyaa queen. Again around 3rd Century BCE.
****
Ukkirakumaran
Their son who may be compared to Mudu Kudumi peruvazuthi of Sangam Tamil Literature..
He was a great Yaga/Yajna enthusiast. Kalidasa of First century BCE praises him in his Raghuvansa as a Yaga Yajna supporter who always appear in the wet clothes because of Avabruda Snana (Yaga bathing).
We may place him in second century BCE
****
Veera Pandya
Killed by a tiger during hunting according to TVP.
Abhisheka Pandya
Took over the reign as a young boy.
Sangam literature also confirmed it and named him as Nedunchezian.
So this first Nedunchezian may be placed second century BCE.
****
Vikrama Pandya
Here comes the important detail
Jains invaded Pandya country with the help of Chozas
So, this is the period of Kharavelaa’s Invasion in second century BCE
****
Rajasekhara Pandya
A poet from Karikal Choza visited him; Karikal (Black Footed or Kalmasha Pada) belonged to second century BCE
****
Kulothunga Pandya
This name was chosen by Chozas and Alupas of Karnataka for their kings. This Pandya was famous for his number of wives. He is from second century BCE
Anatha Guna Pandya
Had lot of clashes with Jain invaders. from second century BCE
KHARAVELA DATE IS CONFIMED AS SECOND CENTURY BCE BY THE ABOVE REFRENCES.
****
Either Vikrama Pandya or Anantha Guna Pandya must be the contemporary of Great Jain King Kharavela. Because he was a just king, he gave back the kingdom to the Pandyas and accepted pearls, clothes, rubies and other gifts from the Pandyas as tributes which is confirmed by the Hathigumpha Inscription.
–Subham—
Tags- Kharavela, defeat of Pandyas, Hathigumpha cave Inscription, Jain invasion, Tamil confederation, Tamil front, tributes, 54 Pandya kings missing, Tiru Vilaiyadal Puranam, Paranjoti
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
30-6-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உபரத்தின ரகசியங்கள்!
அற்புத சக்தி வாய்ந்த கல் பச்சை (INDIAN JADE)
ச. நாகராஜன்
நவ ரத்தினங்கள் ஒன்பது. இவற்றை அணிவதால் ஏற்படும் நற்பலன்கள் ஏராளம்.
இதைத் தவிர உபரத்தினங்கள் என அழைக்கப்படும் ரத்தினங்களும் ஏராளம் உண்டு.
இங்கு கல்பச்சை என்று அழைக்கப்படும் உப இரத்தினக் கல்லின் மகிமையையும் அதை அணிவதால் நமக்கு ஏற்படும் நல்ல பலன்களையும் பார்க்கலாம்.
பச்சைக் கலரில் முப்பதுக்கும் மேற்பட்ட இரத்தினக் கற்கள் உள்ளன.
மரகதம் பச்சை வண்ணத்தில் உள்ளது. இதை ஜாதி பச்சை என்று கூறுவர்.
அடுத்து கல் பச்சை என்று கூறப்படுவது இந்தியன் ஜேடு (INDIAN JADE) என்று அழைக்கப்படுகிறது.
கல் படிக வகையைச் சார்ந்த இதை அனெஞ்சூரியன் (AVENTURINE)
என்று கூறுகிறோம்.
AVENTURINE என்பது இத்தாலிய வார்த்தையான A VENTURA என்பதிலிருந்து தோன்றியது. “தற்செயலாக” என்பது இதன் பொருளாகும்.
இது அதிர்ஷ்டத்தைத் தரும் ஒரு கல்லாகும். புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதிர்ஷ்டத்தைத் தரும் இது ஒரு வகை க்வார்ட்ஸ் கல் ஆகும்.
பிராண சக்தி அதிகம் உள்ள கல் இது.
எந்த வித நோயாக இருந்தாலும் இதை அணிந்தால் அற்புத நிவாரணத்தைக் கொடுக்கும் இது.
சிறுநீரகக் கோளாறுகள், இதயக் கோளாறுகள் உள்ளிட்டவற்றைச் சரிப்படுத்தும் தன்மை வாய்ந்தது இது.
இன்ன வியாதி என்று தெரியாதவர்கள் இதை அணிந்தவுடன் வியாதி இன்னதென்று அறிந்து சிகிச்சையை மேற்கொண்டு குணம் அடைவர்.
இதை அணிபவர்கள் உயரிய ஆன்மீக அனுபவத்தை அடைவர்.
இது மனதைச் சீர்படுத்துவதோடு உடலை ஆரோக்கியம் உள்ளதாக ஆக்கி உணர்ச்சி நிலையையும் சமப்படுத்துகிறது.
இரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத்தை நன்கு இயங்க வைப்பதோடு
ஆற்றலை அதிகப்படுத்துகிறது.
புத்திகூர்மையை அதிகப்படுத்துகிறது.
நிதி நிலைமை சீராகி செல்வ வளத்தைத் தருகிறது.
வெற்றியை அடைய அதிர்ஷ்டத்தைத் தருகிறது. இதை அணிந்து கொண்டு லாஸ் வேகாஸில் உள்ள காஸினோ சூதாட்ட களங்களுக்குச் செல்வது பலரது வழக்கமாகும். ரேஸில் பங்கு பெறுவோரும் இதை அணிவர். ஆகவே இதற்கு சூதாடுவோரின் கல் (GAMBLER’S STONE) என்ற பெயரும் உண்டு,
கவலைப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் இதை அணிந்தால் கவலை நீங்கி மன சாந்தி அடைவர்.
இது இந்தியாவில் சென்னை மைசூர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமாகக் கிடைக்கிறது.
இதை மோதிரம், மாலை, கங்கணம் போன்றவற்றில் அணியலாம்.
தியானத்தில் இந்தக் கல் பச்சையை அணிவது வழக்கம்.
12 ராசிக்காரர்களுக்கும் உகந்த கல் இது என்பது இதன் இன்னொரு சிறப்பாகும்.