Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- Part 23 (Post.15,155)

Written by London Swaminathan

Post No. 15,155

Date uploaded in London –  6 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Part 23 

மானசா தேவி வழிபாடு

வங்காளத்திலும் அருகிலுள்ள பீஹார், அஸ்ஸாம் மாநிலங்களிலும் பாம்புகளுக்கு அதி தேவதையான மனசா அல்லது மானசா தேவியை வழிபடுகிறார்கள்; பார்வதியின் இன்னும் ஒரு உருவம் மனசா தேவி;. விஷக் கடிகளிலிருந்து விடுபட இந்த தேவி அருள்புரிகிறாள் . ருக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் கவிதை புனைந்த பெண் புலவரின் பெயர் சர்ப்ப ரஜினி ;அதாவது நாக ராணி . சிந்து சமவெளி முத்திரைகளில் ஒன்றில் இவள் இருக்கிறாள்; இரு புறமும் பாம்புகள் வழிபடும் தேவி அல்லது ஒரு தெய்வம் அந்த முத்திரையில் உள்ளது; சபரி மலை வரை இன்றும் நாக தேவதை வழிபடப்படுகிறாள். மகாராஷ்டிரம், கர்நாடக மாநிலங்களில் நாக பஞ்சமி தினத்தன்று பாம்புகளையே வழிபடுகிறார்கள் அது மட்டுமல்ல, இந்து மதத்தில் பாம்புகளுடன் எல்லா தெய்வங்களும் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்புடைவர்கள்தான்; மேலும் பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில் பாம்புகளையும்  ரிஷிகளான ஜரத் காரு, ஆஸ்தீகர், மன்னரான ஜனமேஜயர் ஆகியோர் பெயரையும் சொல்லி சந்தியா வந்தனம் செய்கிறார்கள். ஆக ரிக் வேத காலத்தில் துவங்கிய பாம்பு வழிபாடு 5000 ஆண்டுகளாக நீடித்து வருவது கண்கூடு கிரேக்கநாட்டிலும் பாம்புரணி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விஷ்ணு படுத்திருக்கும் அனந்தன் அல்லது வாசுகி என்னும் நாகத்தின் சகோதரி மனசாதேவி.

மானசா தேவி வழிபாட்டில் கள்ளிச்செடி

மானசா தேவி வழிபாடு தற்போது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அதிகம் காணப்படுகிறது பாம்புகளின் ராணி அவள்.

சக்தி தேவியை இந்த ரூபத்தில் வழிபட்டால், பாம்புகளிடலிருந்து ஆபத்து வராது என்பது நம்பிக்கை. பாம்புகளின் தலைவியான மானசா தேவி எப்படிப் பெண்களைக் காப்பாற்றினாள் , குழந்தைகளை விஷக்கடியிருந்து காப்பாற்றினாள் என்று ஊருக்கு ஊர் பல்வேறு கதைகள் இருக்கின்றன.

இவளை விஷ ஹரி (விஷத்தைக் கொல்லுபவள் ) என்றும் நூல்கள் போற்றும் அவர் காஷ்யப முனிவரின் மகள் ;வாசுகியின் சகோதரி மற்றும் ஜரத் காரு  முனிவரின் மனைவியுமாவார்.

நாக தேவதையான மானசா தேவியைப் பற்றிய கதை என்னவென்றால் ஒரு பெண்மணியின் கணவர் இந்த தேவியை வழிபடாமல் உதா சீனம் செய்தார் என்றும் அவருடைய குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தவுடன் தேவியை வழிபட்டார் என்றும்  மனசா தேவி அவர்களனைவரையும் காப்பாற்றினாள் என்றும் சொல்கிறது.

மானசா தேவி. ஏழு நாகபாம்பை கொண்ட விதானத்தின் மீதுள்ள தாமரையின் மீது அமர்ந்திருப்பார். சில நேரம் தன் மடியில் தன் மகன் ஆஸ்திகனை  வைத்திருப்பதைப்  போலவும் இருப்பார்.

நாகர் என்ற பெயரில் பாம்பு உருவத்துடன் சிலைகள் இருப்தை நாம் தமிழ் நாட்டின் பெரும்பாலான கோவில்களில் காண்கிறோம் .இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் கள்ளி வகைச் செடி (Cacti) களையும் பாம்பு தேவியாக வழிபடும் வழக்கமாகும்  இந்த வழக்கம் வங்காளத்தில் இன்றும் இருக்கிறது. மானசா தேவிக்கு அதிகமான கோவில்கள் இருப்பது வங்காளம்  மற்றும் அதை ஒட்டிய ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் மாநிலங்களாகும் . ஆயினும் மானசா தேவி கோவில்கள் ஆந்திரம் முதல் ஹரித்வார் வரை காணப்படுகின்றன.

இடதுபுறம் கருடன்; அதன் தலையில் நாமம்! வலது புறம் நாகம்; இது எகிப்தின் கண் சின்னம் 

சிந்து வெளி முதல் சபரிமலை  வரை பாம்பு வழிபாடு

அதிசயச் செய்தி: சுமேரியாவில் தமிழ்?

ரிகவேதத்தில் 27 பெண் கவிஞர்களின் பெயர்களைக் காணலாம். அவர்களில் ஒருவர் பெயர் சர்ப்பராக்ஞி (பாம்பு ராணி). சர்ப்பராக்ஞீ என்ற தெய்வமும்  தைத்ரீயம் முதலிய பிராமண நூல்களில் வருகிறது. தைமத என்ற பாம்புத் தெய்வத்தின் பெயரும் இருக்கிறது. இதை டியாமத் என்ற பாம்புத் தெய்வமாக பாபிலோனியர்கள் வணங்கினர். ஆக வேத கால தெய்வங்கள் 5000 ஆண்டு பழமை உடையவை என்பது நிரூபணம ஆகிவிட்டது.

அதர்வண வேதத்தில் வரும் அலிகி, விலிகி என்ற சொற்களுக்கு பொருள் விளங்காமல் இருந்தது. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் வேதங்கள் 6000 ஆண்டுப் பழமை உடையவை என்று நிரூபிக்கும் புத்தகத்தில் அலிகி, விலிகி ஆகியன சம்ஸ்கிருதம் அல்ல, அவை அக்கடியன் மொழிச் சொற்கள் என்று எழுதி இருந்தார். இதை இப்போது ஆராய்ந்த டாக்டர் பகவத்சரண் உபாத்யாயா, டாக்டர் நாவல் வியோகி முதலானோர் இந்தச் சொற்கள் கி.மு 3000இல் ஆட்சி செய்த ஆலால, வேலால (தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்) என்ற இரண்டு அசீரிய மன்னர்கள் என்று கண்டுபிடித்தனர். பாம்பு விஷத்துக்கும் நாம் ஆலகாலம்  என்கிறோம். இவைகள் உண்மை என்றால் அதர்வண வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன் என்றாகிவிடும். மொழி இயல் ரீதியில் இதற்கு மிகவும் முற்பட்டது ரிக் வேதம். உலகின் மிகப் பழைய மத நூல். ஆகவே அது 6000, 7000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று திலகர் எழுதியது சரி என்றாகிறது.

சுமேரியாவின் வரலாற்றை எழுதிய பெரோருஸ் என்ற கிரேக்க ஆசிரியர் ஆதிகால மன்னர்களின் பெயர்களை அளிக்கிறார். ஊர்த்வரேதஸ் (ஒட்டரடெஸ்) மற்றும் துமுசி என்ற பெயரில் இரண்டு மன்னர்கள் சுமேரியாவை ஆண்டனர். ஒரு துமுசி இடையர், மற்றொரு துமுசி மீனவர். ராமன், கண்ணன் ஆகிய மன்னர்களை நாம் எப்படி தெய்வம் ஆக்கினோமோ அப்படி இவர்களை அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்டார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்கலாம். ஏனெனில் துமுசி என்பதை தமிழி என்று வாசிக்கும்படி ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்கிறது. அதைப் பிற்காலத்தில் டம்முஸ் என்றும் சம்மட என்றும் பல வகையாக எழுதினர். டம்முஸ் என்பதும் தமிழன் என்பதை ஒட்டி வருகிறது.

இது தவிர சுமேரிய மொழிக்கு சிறிதும் தொடர்பில்லாத சுமுகன் என்ற தெய்வப் பெயரும் இருக்கிறது. இது விநாயகப் பெருமானைக் குறிக்கும் தூய சம்ஸ்கிருதச் சொல். பெரோரஸ் என்ற ஆசிரியரின் பெயரையும் வர ருசி என்றும் படிக்கலாம். அவர் சில மன்னர்களின் தலைநகரம் பத்தர்குரு என்று எழுதிவைத்தார். இந்த பத்தர்குரு புராணங்களில் மிகவும் போற்றப்படும் உத்தரகுரு ஆகவும் இருக்கக் கூடும்

—subham—

Tags– மானசா, மானசா, வங்காளம், சப்ப ரஜினி , பாம்பு ராணி , சிந்து சமவெளி முத்திரை, ரிக் வேதம், Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- Part 23 

கீதையின் 12 கட்டளைகள்! (Post No.15,154)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,154

Date uploaded in London –   6 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

29-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

கீதையின் 12 கட்டளைகள்! 

ச. நாகராஜன்

 உலகின் ஆகப் பெரும் இதிஹாஸமான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைகிறது பகவத் கீதை. 700 அருமையான ஸ்லோகங்கள் கொண்டது இது. 

ஆழம் காண முடியாத அற்புத மெய்ஞானத்தைக் கொண்ட கீதை, பகவான் ஶ்ரீ கிருஷ்ணராலேயே நேரில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது.

 காலம் காலமாக லக்ஷக்கணக்கானோரை ஊக்கி ஆன்மீக உயரத்தில் ஏற்றிய இதன் பெருமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

கீதையில் சொல்லப்படும் முக்கியமான கட்டளைகள் பன்னிரெண்டு.

அவற்றைக் கீழே காணலாம். 

உத்தரேத் ஆத்மனாத்மானம்  (அத்தியாயம் 6ஸ்லோக எண் 5)

ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.

ஆத்ம முன்னேற்றத்திற்கு ஒருவன் முயற்சி செய்து தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.

உத்திஷ்ட யசோ லபஸ்வ (அத்தியாயம் 11ஸ்லோக எண் 33)

 எழுந்திரு, புகழை அடை. வெற்றி பெறு.

எழுந்திரு. எதிரிகளை வென்று புகழை அடை என்ற கிருஷ்ணனின் உபதேசம் ஆழ்ந்த பொருளைக் கொண்டது. யசஸ் என்ற வார்த்தை ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்ட வார்த்தை.

 க்லைப்யம் மா ஸ்ம கம: (அத்தியாயம் 2ஸ்லோக எண் 3)

பேடித்தனத்தை அடையாதே!

சோம்பேறித்தனம்,மயக்கம் ஆகியவற்றை உதறித் தள்ளு என்பது கிருஷ்ணனின் உபதேசமாக அமைகிறது.

 கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (அத்தியாயம் 2ஸ்லோக எண் 47)

 கர்மம் செய்யத்தான் உனக்கு உரிமை உள்ளது. ஒரு போதும் அதன் பலனில் இல்லை.

மிக முக்கியமான தத்துவம் இங்கு உபதேசிக்கப்படுகிறது. வேலை செய், வேலை செய் – இதுவே உனக்குள்ள கடமை. அதன் பலனை எதிர்பார்க்காதே. \

 மாம் ஏகம் சரணம் வ்ரஜ (அத்தியாயம் 18ஸ்லோக எண் 66)

என் ஒருவனையே சரண் அடை.

அற்புதமான இந்த உபதேசம் கடைசியில் கிருஷ்ணரது இறுதி உரையாக அமைகிறது. இறைவனை சரண் அடைந்து விட்டால் மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்! நேரடியாக இறைவன் கூறும் இந்த உரை மனித குலத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமான உபதேசம் ஆகும்.

 ந சாந்திம் ஆப்னோதி காமகாமி (அத்தியாயம் 2ஸ்லோக எண் 70)

 இன்பங்களை நாடும் இச்சை உள்ளவனுக்கு அமைதி கிட்டாது.

 சம்சயாத்மா வினஷ்யதி (அத்தியாயம் 4ஸ்லோக எண் 40)

 சந்தேகப்படுபவன் அழிந்துபடுவான். சத்திய உரையில் சந்தேகம் கூடவே கூடாது.

 ச்ரத்தாவான் லபதே ஞானம் (அத்தியாயம் 4ஸ்லோக எண் 39)

 சிரத்தை உள்ளவனுக்கு ஞானம் கிட்டும்.

சிரத்தை என்ற வார்த்தை ஆழ்ந்த பொருள் கொண்டது. உறுதியான நம்பிக்கையோடு இறைவனின் சொற்களை ஏற்று நடப்பவனுக்கு மெய்ஞானம் கிட்டும்.

 ச்ரேயான் ஸ்வதர்மோ (அத்தியாயம்18ஸ்லோக எண் 47)

 ஒருவன் சொந்த தர்மத்தையே கடைப்பிடிக்க வேண்டும். இது அவனுக்கு வேண்டியதைத் தரும்.  .

 ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் (அத்தியாயம் 6ஸ்லோக எண் 40)

எவன் ஒருவன் நல்ல காரியங்களைச் செய்கிறானோ அவனுக்கு துர்கதி என்பதே கிடையாது.

அவன் நல்லதையே அடைவான் – எப்போதும்! இது கிருஷ்ண பகவானின் வாக்குறுதி.

 மாம் அனுஸ்மரயுத்த ச (அத்தியாயம் 8ஸ்லோக எண் 7)

என்னை நினை; யுத்தம் செய்!

அற்புதமான இறைவனின் இந்தக் கூற்று பலவித பிரச்சினைகள் நிறைந்த உலக வாழ்க்கையில் ஒருவன் எப்படி நடக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறது. அவனை நினைத்து பிரச்சினைகளோடு போராடு. அனைத்தும் தீரும் என்பதே அருளுரை.

 மன்மனா பவ (அத்தியாயம் 9ஸ்லோக எண் 34)

என்னவனாக ஆகு.

சுருக்கமாக பகவத் கீதையின் மொத்த சாரத்தையும் இந்த இரண்டு சொற்களில் அடக்கி விடலாம். கிருஷ்ணரது மனதிற்குப் பிடித்தவனாக ஆகி விடு. அத்தனை குணங்களையும் கொண்டு விடு என்பதே இதன் பொருள்.

 இந்தப் பன்னிரெண்டு கட்டளைகளையும் ஒருவன் தினமும் மனதில் பதித்து அதன்படி நடப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

 மிகுந்த ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ள இந்தக் கட்டளைகளே ஒருவனுக்கு இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய சுகங்களைத் தரும். பரலோக முக்தியையும் அளிக்கும். இதில் ஐயமில்லை. ஏனெனில் இது இறைவனின் வாக்காகும்.

***

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- Part 22 (Post.15,153)

Written by London Swaminathan

Post No. 15,153

Date uploaded in London –  5 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part 22

Snake Goddess Manasa Devi (manasaa)

Manasā (मनसा).—Name of a daughter of Kaśyapa, sister of the serpent king, Ananta, wife of the sage जरत्कारु (jaratkāru) and mother of the sage अस्तिक (astika); so मनसादेवी (manasādevī).

Indus Valley Seal of Sarpa Rajni (Rig Veda Poetess name in Tenth Mandala Hymn 189)

Snake Goddess is worshipped during Vedic time and in Harappan Civilization.  She is also seen in Egypt, Greece and in the Middle East.

Manasa Devi is worshipped mainly in Bengal and adjacent states of Bihar and Assam. She is another form of Parvati, wife of Shiva.

Manasa is greatly revered in Bengal , where she is believed to ward off poisonous snakes. She is the daughter of Kasyapa and Kadru and sister of Ananta or Vasuki according to local legends. Lord Vishnu lies on the snake bed in the middle of milky ocean, and he is said to rest between cosmic emanations.

Manasa stands upon or is shaded by a seven headed snake. Her symbols or attributes are snake and water jar.

She is the wife of Jarat kaaru . she is also called Jagad gauri, Nityaa (eternal) and Visha -haraa. Visha haraa means one who has the special power of counter acting the venom of serpents.

Snake worship originated in India. All the words for snakes in ancient languages are derived from Sanskrit and Tamil (Naga-S/Nake, Sarpa- Serpent),  Oviyar- Ophis, Uraga, Pannaga). All Hindu Gods and Goddesses have snakes as their ornaments. Egypt followed Hindus and we see snakes over the heads of Pharaohs. Snake and Garuda are seen with Vaishnavite Naamam symbol in Wedget/Udget .

***

Stories of Manasa Devi are told in different ways in Bengal. The gist of the stories is one gentle man ignored Manasa Devi worship and he lost his children due to snake bites. Ultimately they were saved through the worship of Mansa.

From Rig Veda, Indus Valley to Sabarimalai in Kerala, we see snake worship.

The greatest wonder is Brahmins worship snakes with reverence in daily oblation Sandhyavandana with a mantra beginning with Narmadaayai Namah….

(Mandhata’s son Purukutsa married Devi Narmada and the latter was the sister of Nagaas of Rasatala. Nagaas were afraid of Gandharvas as some six crore Gandharvas resided in Rasatala tormenting Nagaas by hunting their ‘Ratnas’(jewels) from their hoods. The Nagaas prayed to Bhagavan Vishnu and the latter assured that the son of Mandhata viz. Purukutsa would destroy all the Gandharvas at the instance of Narmada Devi. As professed, Purukutsa eradicated Gandharvas and the Nagaas gave a boon to Narmada that whosoever bathed in the River or even recited the following would be safe from ‘sarpa-visha’ or the poison of serpents; the relevant Shloka or stanza to be recited states:

Narmadaayai Namah Pratarnarmadaayai Namo nishi,

Namostu Narmadey tubhyam traahi maam Visha Sarpatah

(Devi Narmada! My salutations to you in the day or night, do safeguard me from the fear of Serpents and their poisonous bites!) The full mantra includes the names of great seers Jarat kaaru, Aastika and the King Janamejaya)

The Harappan seal with a goddess surrounded by snakes on either side shows Snake Goddess was worshipped from 2000 BCE or before that, because Nagaraani is in the Vedas as well.

***

Story of Manasa Devi (from old article) 

Chand was a merchant who did not believe in the Goddess Manasa devi. As a result, he lost all his sons due to snake bites. But yet he was very obstinate and never paid reverence to the Goddess. He got one more son who was the apple of his eyes. He was still obstinate in not worshipping Manasa and Manasa Devi was also relentless and she bit his son on his wedding day in spite of his precautions. His newlywed wife Vehula did not allow his body to be cremated. She was fasting till her body became a skeleton but never stopped her prayers to Manasa. She begged to Manasa for the restoration of his husband’s life. At last Manasa relented and gave his life back.

 It is the belief of many that a person supposed to be dead by a snake bite, really lives in a state of suspended animation for a long time after.

Bengalese plant a milky white plant (Euphorbia Lingularum) on these days on a raised mound of earth in the courtyards of their houses and worship Goddess Manasa Devi. They worship her to get immunity from snake bites or avoiding bitten by snakes. If anyone has died due to snake bite in the family all of them join in worship and they pour milk in the ant hills where snakes live.

Hindus, by not killing the snakes, the vital animal in the food production chain, increase the production of food grains. The snakes keep even frogs and toads in control which freely enters every home during rainy season. 

Villagers don’t fear snakes even when it enters a house; they simply trap it in a box or pot and release it in the field. They know the value of it.

Manasa Devi

The serpent worship is universal. There is no ancient culture without a serpent God. Whether it is Egyptian or Mayan, Indus or Vedic, Minoan or Babylonian we see serpents with Gods and Goddesses. But Hindus are the only race in the world who maintains this culture until today. We have Naga panchami celebrations celebrated throughout India where live snakes are worshipped. Hindus respect Nature and Environment and use the natural resources to the minimum.

Snake Goddesses such as Manasa Devi and Naga Yakshi are worshipped in India. The Vedas has an authoress named as Serpent Queen. She was one of the 27 women poets of Rig Veda and her poem is in the Tenth Mandala (10-189). Her name is SARPA RAJNI (Serpent Queen)

We have two more references to this lady in Taitriya and Aitareya Brahmanas. Sarpa Vidya (science of snakes) is mentioned in Satapatha and Gopatha Brahmanas. (see Vedic Index of name and subjects by authors AB Keith and AA Macdonell, page 438 for more details).

Aligi is the name of a kind of snake in the Atharva Veda (V-13-7) and Viligi, another snake, is also mentioned in the same hymn. Earlier scholars like AA Macdonell and AB Keith mentioned them as snakes in their Vedic Index Volumes. Bala Gangadhara Tilak did lot of research and told us that these were from the Akkadian languages. He dated the Vedas to 6000 BC. Modern research by scholars Dr Bhagawatsharan Upadhyaya and Dr Naval Viyogi showed that they were not snakes, but kings of Assyria- Aligi (Alalu) and Viligi (balalu) of 3000 BC.

Garuda with Vaishnavite Naamam on head.(left); Snake/Naaga (on left); Eye in the middle . Egyptian Symbol Wedjet

Atharva Veda in Sumeria 3000 BC

Taimata is twice mentioned in Atharva Veda (V-13-66; V-18-4) as a species of snake according to Whitney and Bloomsfield. Once again, the old Vedic translations are wrong. Actually Taimata is nothing but Tiamat found in Babylonian literature as a Goddess. May be it is the corrupted form of Sanskrit DEVA MATA (Goddess).

More research shows many Sanskrit words in Sumerian and Babylonian literature such as Berorus (Vara Ruci), Ottaretas (Urdhwaretas), Mesopotamian god Dumuzi/Tammuz/Sammata (fish God). They are pure Sanskrit words. One and the same god was called in different names by different cultures at different times and that too in corrupted forms. When we read Sumerian names we have to remove prefixes Nan, Nin,Sin. They are equal to Sri, Sow etc. Future research will prove that they have migrated from India in the remotest time.

Naga Yakshi worshipped in all the Ayyappan temples including Sabarimalai and other goddess temples found in the Middle Eastern countries around 3000BC. We see them in Indus valley and the Vedas as well.

My conclusion can be summarized as follows:

1.     Vedic translations of Aligi, Viligi and Taimata are wrong and they were all really people, may be people with snake totem (Nagas).
2. Since Atharva Veda mentions Kings who lived around 3000 BC, it must be dated around that period. Rig Veda is (linguistically) older than Atharva Veda.
3. We see snake gods or goddesses in all ancient cultures. In India, we see it from Vedic days. They are worshiped until today proving that Indian culture is the oldest living culture.
4. Last but not the least; such continuity is possible only when this worship originated in India. So we can safely conclude that Hindus went to different parts of the world taking their culture. Like we lost the whole of South East Asia after 1300 year Hindu rule, we lost the Middle East long before that.

Tamil Version follows…………..

To be continued……………………………..

Tags- Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- Part 22  , Snake Goddess, Manasa devi, Alii, Viligi, Harappan, Rig Veda, Atharva Veda, Tiamath

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 11(Post.15,152)

Written by London Swaminathan

Post No. 15,152

Date uploaded in London –  5 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 பரணி

ஒரு நட்சத்திரம் ; இப்போதுள்ள 27  நட்சத்திர வரிசை அஸ்வினி, பரணி, கார்த்திகை, என்று துவங்குகிறது

Bharani – name of a star. The current 27 stars of hindu astrology begins with Asvini ,Bharani ,Krttika …………………..

***

பிருந்தாவனம்

இது கிருஷ்ணர் பிறந்து விளையாடிய இடம் கோகுலத்திற்கு அருகில் உள்ளது. இன்னும் ஒரு அர்த்தம் சன்யாசிகளை சமாதி அடைந்த பிறகு புதைத்து அந்த இடத்தில் துளசியை வளர்ப்பார்கள் அதற்கும் பிருந்தாவனம் என்று பெயர் பிருந்தா என்றால் துளசி.

Brindaavan– also spelt Vrindaavan-   Forest near Gokula in Uttarpradesh. Brindaa means Tulsi ; holy basil plant. It was the play ground of Lord Krishna.

Another meaning- When an ascetic dies or attains Samaadhi, he is buried and not cremated. They grow a Tulsi/Brindaa plant there and it is called Brindaavanam. People visit such places and pay their respects.

***

பிரம்மச்சாரி

இது மாணவர் பருவம்; குருகுலத்தில் குருவின் காலடியில் அமர்ந்து வேதங்களை, சாத்திரங்களை கற்கும் காலம்; இதில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். அதற்கு கிரகஸ்த ஆசிரமம் என்று பெயர். இந்துக்களின் நான்கு பருவங்களின் இது ஒன்று; பிரம்மச்சரியம், கிரக ஆசிரமம் வானப்பிரஸ்தம், சந்நியாயம் என்பன அந்த நான்கு கட்டங்கள்/ பருவங்கள்.

பிரம்மச்சர்யம் – பெண்களை நினையாதபடி வாழும், கல்யாணம் செய்து கொள்ளாமல், இருக்கும் நிலை

Brahmachaari- Student ; Brahmacharyam – Student life; being celebate ; remaining without marrying.

Boys go to teacher’s house, stay with him,and learn Vedas and Shastras/scriptures. After graduating they get married and that is called Grhastaasram. Hindus divied one’s life into four stages: Brahmacharyam, Grahastha Ashram, Vaanaprastham, and Sanyaasam

***

பிரம்மம்

பிரம்மம் என்பது கடவுளை குறிக்கும் அதில் ஆண் பெண் பெண் அலி இன்று வேறுபாடு இல்லை .

Brahman- God; no gender neither man, nor woman nor eunuch.

**

பிரம்மா என்பது  மும்மூர்த்திகளில் ஒருவர் பிரம்மா. அவரு டைய தொழில் படைப்பு

Brahmaa- One of the Hindu Triad: Brahmaa, Vishnu, Sadasiva.

Brahmaa is the God of Creation.

**

Picture of Brahma

பிராமண என்பது ஒரு ஜாதியின் பெயர், ஆங்கிலத்தில் பிரம்மம் பிரம்மா, பிராமண, என்பதை எழுதுகையில் குழப்பம் இருக்கும். அறுதொழில் அந்தணர்.

பூசுரர் பிராமணர்களின் மற்றொரு பெயர்; அதாவது பூலோக தேவர்கள் ;பிராமணர்கள் நான்கு ஜாதிகளின் முதன்மையான வர்ண த்தின  அவர்களுக்கு அறுதொழில் உண்டு  வேள்வி செய்தல், வேட்பித்தல், வேதத்தை ஓதுதல் ஓதுவித்தல் ((கற்றல் கற்பித்தல்)),  தானம் வாங்குதல், தானம் கொடுத்தல் என்பன இதில் அடங்கும் .

Braahmana- A caste; Top of the Hindu Four fold Varna System: Brahma, Kshatriya, Vaishnav and Shudra.Brahmana has a six -fold duties. Priestly caste.

Bhu Surar- Devas on earth is another name for Brahmins.

Picture of a Brahman

**

பிரம்மஹத்தி என்பது பிராமணர்களை கொலை

செய்தால்  ஏற்படும் பாவம் ஆகும். பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக  பல கோவில்களில் இந்திரன் முதலானோர் வணங்கிய  செய்தி புராணங்களில் இருக்கிறது.

Brahmahatti: One gets this SIN when one kills a Brahmin. Indra and many kings went to many shrines to get them released from this type of sin.

**

பிரம்ம ராட்சஸ் என்பது அகாலத்தில் உயிர்நீத்த பிராமணர்களின் ஆவி ஆகும்; அகாலம் என்றால்  உரிய காலத்துக்கு முன்னே இறந்தவர்கள் இப்படி ஆவியாகத் திரிவார்கள்.

Brahma Rakshas (rakshasa)- If a brahmin dies by suicide or any other means before his actual life span, he roams like a spirit or ghost living  on trees or in water sources.

**

புத்தி -அறிவு

Buddhi – Intelligence

***

புதன் ஒரு கிரகம்

Budha- A planet; Mercury.

***

பூதம்

ஐந்து இயற்கை சக்திகளை பஞ்ச பூதம் என்பார்கள். இன்னும் ஒரு பொருள்- சிவபிரானுடைய கணங்கள் ஆகும் இது தவிர பேய் பிசாசு ஆகியவற்றுடன் பூதத்தையும் சேர்த்து சொல்வார்கள்.

Bhuta

Natural element. Pancha Bhutas are Fire, Water, Air, Earth, Sky/vacuum

Also used for ghosts; another meaning- Shiva’s attendants; Bhuta kaala- Past tense.

***

பலிபீடம் என்பது கோவிலில் சுவாமிக்கு முன்னர் பலி கொடுப்பதற்காக உள்ள பீடம். இதில் சோற்றினால் ஆனா  படைப்பினை  நாள் தோறும் படைப்பார்கள்.

பொதுவாக கிராம தேவதைகளுக்கு  வெட்டப்படும் ஆடு, (எருமை)  மாடுகளை பலி என்பார்கள்

Bali Preetam

In the temples, cooked rice is offered on a stone in front of the shrine. Actually, it is meant for birds, insects and animals.

In the villages goats, sheep and other animals are also offered to God and they are called Bali.

*** 

புவனம் இதில் ஈரேழு = 14 புவனங்கள் இருக்கின்றன; மேலே ஏழு கீழே ஏழு ஆக மொத்தம் 14 புவனங்கள் உள்ளதாக புராணங்கள் கூறும். த்ரிபுவனம் என்று சொல்லும்போது மூன்றினை மட்டும் குறிப்பார்கள்:பூலோகம் புவர் லோகம் சுவர்லோகம் . 

ஈரேழு 14 புவனங்கள்  யாவை?

மேலேயுள்ள ஏழு புவனங்கள்:

பூர், புவர்,ஸ்வர்,  மஹர், ஜனஸ், தபஸ், சத்ய  –இவை ஏழும் மேலே உள்ளன.

கீழேயுள்ள ஏழு லோகங்கள் அல்லது புவனங்கள் :-

அதல , விதல, சுதல தலாதல , மஹாதல ரஸா தல , பாதாள   

Bhuvana

The universe is divided into fourteen planetary systems. Seven planetary systems, called Bhūr, Bhuvar, Svar, Mahar, Janah,Tapa,, Sathya lokas  are upward planetary systems, one above the other. There are also seven planetary systems downward, known as Atala, Sutala, Vitala, Mahatala, Talatala, Rasaatala, and Pataala

 A world, the number of worlds is either three, as in त्रिभुवन (tribhuvana) or fourteen; इह हि भुवनान्यन्ये धीराश्चतुर्दश भुञ्जते (iha hi bhuvanānyanye dhīrāścaturdaśa bhuñjate) Bhartṛhari 3.23 (see loka also);

cf. also अतलं सुतलं चैव वितलं च गभस्तिमत् । महातलं रसातलं पातालं सप्तमं स्मृतम् ॥ रुक्मभौमं शिलाभौमं पातालं नीलमृत्तिकम् । रक्तपीतश्वेतकृष्णभौमानि च भवन्त्यपि । पातालानां च सप्तानां लोकानां च यदन्तरम् । सुशिरं तानि कथ्यन्ते भुवनानि चतुर्दश (atalaṃ sutalaṃ caiva vitalaṃ ca gabhastimat | mahātalaṃ rasātalaṃ pātālaṃ saptamaṃ smṛtam || rukmabhaumaṃ śilābhaumaṃ pātālaṃ nīlamṛttikam | raktapītaśvetakṛṣṇabhaumāni ca bhavantyapi | pātālānāṃ ca saptānāṃ lokānāṃ ca yadantaram | suśiraṃ tāni kathyante bhuvanāni caturdaśa) || Vahni. P.; भुवनालोकनप्रीतिः (bhuvanālokanaprītiḥ) Kumārasambhava 2.45; भुवनविदितम् (bhuvanaviditam) Meghadūta 6..

To be continued…………………

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL  இந்துமத கலைச்சொல் அகராதி– Part 11 

பெரிய சிந்தனையாளராக ஆக 6 நிலைகள்! (Post.15,151)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,151

Date uploaded in London –   5 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

12-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

MOTIVATION

 பெரிய சிந்தனையாளராக ஆக 6 நிலைகள்!

 ச. நாகராஜன் 

ஒரு விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் அல்லது ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். என்ன செய்வது?

பிரபல உளவியல் நிபுணர்களான லிண்டா எல்டர் மற்றும் ரிச்சர்ட் பால்  சிந்தனா முறையில் ஆறு நிலகள் உள்ளன என்கின்றனர்.

ஆறு நிலைகள் என்னென்ன? 

முதலாவது நிலை எப்போதாவது சிந்திக்கும் நிலை 

தன்னிடம் ஏற்கனவே படிந்து கிடக்கும் கருத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் தக்கபடி முடிவை எடுப்பது. செம்மறியாட்டுக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று இவரைச் சொல்லலாம். இவரிடம் தவறான கருத்துக்கள் பலவும் மண்டிக் கிடக்கும். சோதனை செய்து  உறுதி செய்யப்படாத கொள்கைகளும் இவரிடம் இருக்கும். இப்படிப்பட்ட ஆசாமிகள் தான் உலகில் மிக மிக அதிகம்.பார்ப்பதை எல்லாம் நம்புவது, படிப்பதை எல்லாம் உண்மை என்று சொல்வது ஆகியவை இவரது இயல்பாகும். எதையும் சுயமாக ஆராய்ந்து உண்மையை அறியாத நிலை இது.

 அடுத்த நிலை சவாலான சிந்தனையாளர் நிலை

 இவர் தன்னுடைய நம்பிக்கைகள் பற்றியும் கருத்துக்கள் பற்றியும் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொள்பவர்.

தனது நம்பிக்கைகளை எல்லாம் எழுதி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக இது உண்மையா என்று கேள்வி கேட்டு ஆராயலாம்.

அப்போது தனது உண்மையான நிலை என்னவென்று புரியும் 

ஆரம்பநிலை சிந்தனையாளர்

அடுத்த நிலை தனது கருத்துக்களையும் ஊகங்களையும் சோதனை செய்து ஆராயும் நிலை. இது தனது நம்பிக்கைகள் தோன்றிய ஆரம்ப இடத்தைப் பற்றி கேள்வி கேட்கும் நிலை. தான் நினைப்பது தான் இந்தக் கருத்தைப் பற்றிய உண்மையா அல்லது வேறு சில உண்மைகளும் உண்டா?

ஒவ்வொன்றையும் பற்றி அலசி ஆராய்ந்து பல்வேறு உண்மைகளைத் திரட்டும் நிலை இது.

 அடுத்த நிலை உயர் அறிதல் நிலை.

மெடாகாக்னிஷன் (Metacognition) என்று இதைச் சொல்வார்கள். இந்த நிலையில் உங்கள் சிந்தனையைப் பற்றியே நீங்கள் சிந்தனை செய்வீர்கள். எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதைப் பற்றி வேறு பல இடங்களிலிருந்து ஆதாரத்தையும், துல்லியமான தகவலையும் சேர்க்கும் நிலை இது. சேகரிக்கப்படும் அனைத்துத் தரவுகளும் தனது முந்தைய நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகிறதா, மாறிப் போகிறதா, அப்படியானால் ஏன் என்று அலசிப் பார்க்கும் நிலை இது. 

அடுத்த நிலை மிக முன்னேறிய சிந்தனா நிலை.

இந்த நிலையானது உங்கள் கருத்துக்கள் உண்மையுடன் ஒத்துப் போகிறதா என்று ஆராயும் நிலை. இதில் கருத்துக்களின் ‘அறிவார்ந்த நேர்மை’ (Intellectual Integrity) ஆராயப்படுகிறது. பற்பல சிந்தனையாளர்களின் சிந்தனை ஓட்டம், செய்தித்தாள்களில் வரும் செய்திகள், விவாதங்களின் முடிவுகள் ஆகிய அனைத்தும் தொகுக்கப்பட்டு அவற்றில் முக்கியமானவை மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் நிலை இது

 இறுதி நிலை உயர் சிந்தனையாளர் நிலை.

உலகைப் பற்றிய அனைத்தையும் அறிந்து கொண்டு மேன்மையான ஒரு சத்தியம் உங்களுக்கு வழிகாட்ட, இறுதி முடிவை எடுக்கும் நிலை இதுவே.

மதம், ஜாதி, அந்தஸ்து ஆகிய அனைத்தையும் தாண்டி உண்மை, மேன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் நிற்கும் நிலை இது.

 இந்த நிலைக்கு வரும் போது நீங்கள் வாழ்க்கையின் மிக உயரிய நிலையில் நிற்கிறீர்கள்.

 இந்த ஆறு நிலைகளை ஆங்கிலத்தில் “Unreflective Thinker;‘Challenged Thinker’, ‘Beginning Thinker; ‘Practicing Thinker; ‘Advanced Thinker; ‘Master Thinker’ என்று சொல்லலாம்.

 அருணகிரிநாதரே முருகனைத் தொழும் போது. “அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே” என்கிறார்.

அறிவால் அறிந்து, பின்னர் முருகனின் இரு தாளைப் பிடிப்பவர்களே உயர் நிலையை அடைந்த உண்மை அடியார் என்று சொல்லும் போது, சாதாரண பிரச்சினைகளை அறிவால் அறிய வேண்டாமா, என்ன?

மாஸ்டர் திங்கராக ஆவோம்; மகத்தான வெற்றி பெறுவோம்!

**

லலிதா சஹஸ்ரநாமத்தில் உணவு வகைகள் ! (Post.15,150)

Image of Paayasam

Written by London Swaminathan

Post No. 15,150

Date uploaded in London –  4 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

லலிதா சஹஸ்ரநாமத்தில்  ரத்தினக் கற்கள், புனித நகரங்களின் பெயர்கள், புஷ்பங்கள் என்ற தலைப்புகளில் மூன்று கட்டுரைகளை படித்தீர்கள் ; இப்போது தேவிக்குப் பிடித்த உணவு வகைகள், அதாவது நைவேத்யங்கள் என்ன என்ன என்பதைக் காண்போம். அகஸ்தியரிடம் ஹயக்ரீவர் சொன்ன நாமங்களைப் பார்த்தால் நாம் இறைவிக்கு என்ன படைக்கலாம் என்ற தெளிவான கருத்து உருவாகும்.

உலகிலேயே அதிசயமான மதம் இந்துமதம் ஒன்றுதான் . பெண்களை தெய்வமாக வணங்குவதும், குணங்களை பெண்பால் சொற்களில் அழைப்பதும், இயற்கைச் சக்திகளை தாயாக வருணிப்பதும் இந்துமதம் ஒன்றுதான் .

வேத மாதாவாவான காயத்ரீயை மந்திரம் சொல்லி நாள்தோறும் வழிபடும் இந்துக்களின் எண்ணிக்கை பல கோடிகள் ஆகும் அதிதி என்ற பெண் கடவுள்தான் கடவுளர் அனைவருக்கும் தாய் என்று ரிக் வேதம் இயம்புகிறது. காயத்ரீ மந்திரம் ஒன்றினை மட்டும் 4 வேதங்களும் பகர்கின்றன.

இன்னும் ஒரு அதிசயம்! உலகிலேயே அதிகமான வகை நைவேத்தியங்கள், பிரசாதங்கள் , கோவில் தொடர்பான , இறைவன் தொடர்பான உணவு வகைகள் உள்ளதும் இந்து மதம் ஒன்றில்தான் . இந்தக் கிழமைக்கு என்ன பிரசாதம், இந்தப் பண்டிகைக்கு என்ன பட்சணம், இந்தக் கோவில் என்ன பிரசாதம் வாங்க வேண்டும் என்ற பட்டியலை எழுத ஒரு புஸ்தகமே தேவை

பூரி ஜெகந்நாதருக்கு ஒரு நாளில் செய்யப்படும் படைப்புகளின் எண்ணிக்கை:- பூரி ஜெகநாதர் கோவிலில் தினமும் 56 வகையான உணவுகள் சமைக்கப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படுவது வழக்கம்.

***

இப்போது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்களைக் கேளுங்கள் :

குடான்ன ப்ரீதா மானசா

தேவிக்குப் பிடித்தது வெல்லம் கலந்த சக்கரைப் பொங்கல் ஆகும் ; இப்போதும் வீடுகளிலும் கோவில்களிலும் வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்கிறோம் . பஜனைகளில் கூட அடுப்பே இல்லாமல் அவலையும் வெல்லத்தையும் கலந்து பிரசாதம் தருகிறார்கள்.

ஆண்டாளோ திருப்பாவையில் கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா  பாடலில் அக்காரை அடிசில் பற்றிப்படுகிறார்

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே

தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

அதிலும் நெய்யைக் கலந்து அது கையில் வழியும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று ‘ரெசிப்பி’யும் கொடுக்கிறார்; இதனால் பெருமாள்  கோவில்களில் மார்கழி மாதத்தில் அந்த திருப்பாவை வரும் நாளில் தடா தடா-வாக — அதாவது அண்டா அண்டாவாக- சர்க்கரைப் பொங்கலை நைவேத்யம் செய்கிறார்கள்.

***

பாயஸான்ன ப்ரியா

இன்னும் ஒரு நாமத்தில் அம்பாளுக்குப் பாயசம் பிடிக்கும் என்று வருகிறது . பாயாசங்களில் நிறைய வகைகள் உண்டு ; எதுவாகிலும் அதில் இனிப்பு இருக்கும் முந்திரி , திராட்சை, ஏலக்காய் முதலியனவும் இருக்கும் . பருப்பினை வேகவைத்து வெல்லம்  போட்டு நைவேத்யம் செய்வது வழக்கம்; இது பருப்புப் பாயசம் ;மலையாள தேசத்தில் பகவதி அம்மனுக்கு சக்கப்பிரதமன் என்னும் பலாப்பழ பாயாசத்தையும் படைக்கிறார்கள் அதன் சுவையே தனி. அதில் தேங்காயை நெய்யில் வறுத்தும் போட்டிருப்பார்கள்; முந்திரிப் பருப்புக்குத் தேவையே யில்லை.

சேமியா, ஜவ்வரிசி, அவல் பாயாசங்கள் , அடைப்பிரதமன் — முதலிய எதைக்கொடுத்தாலும் பக்தியோடு கொடுத்தால் போதும் ; திருப்பதி லட்டுதான் தேவை என்பதல்ல

***

மது ப்ரீதா  

மது ப்ரீதா என்று ஒரு நாமம் வருகிறது . இதற்கு உரை எழுதியோர் தேன் போன்று இனிமையானவள் என்றும் தேனினைப் பிரியமாக உண்ணுபவள் என்றும் சொல்கிறார்கள் ; ஆயுர்வேத, சித்த வைத்திய நூல்களில் மது என்னும் தேனைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன பஞ்சாமிர்தத்தில் கலக்கிறோம் மருந்துப்பொடிகளைத் தேனில் குழைத்து உண்ணும்படி வைத்தியர்கள் கூறுவார்கள்

மது நமக்கு மது நமக்கு மதுரமிக்க தமிழ் நமக்கு என்று பாரதியார் ஆடிப்பாடி கூத்தாடியதிலேருந்தே தமிழின் சுவையும் மதுவின் சுவையும் இனிமையிலும் இனிமையானது என்பதை அறியலாம் . இந்தச் சொல் வேதங்களிலும் புழங்குவதால் குறைந்தது 5000 ஆண்டுகளாக இதன் பெருமையை இந்துக்கள் அறிந்ததையும் அறிய முடிகிறது. வேதத்தில் அபூர்வ மருத்துவர்களாக வருணிக்கப்படும் அஸ்வினி தேவர்களுக்கும் பெயர் மதுச் சாட்டை; சம்ஸ்க்ருதத்தில் மது கஸஹ . நாம் சொல்லும் கசை, கசையடி என்பதெல்லாம் தமிழ் அல்ல .

ரிக்வேதத்தில் முதல் மண்டலத்தில் அருமையான பத்து துதிகளை நமக்குச் சொல்லிப் புகழ்பெற்ற புலவரின் பெயர் மத்துச் சந்தஸ் ; அதாவது தேனினும் இனிய செய்யுட்களை நமக்குக் கொடுத்தவர் ; இது தவிர சதபத பிராஹ்மண நூலில் மது பிராஹ்மண என்ற நூலினையும் குறிப்பிடுகிறார்கள். தாமரை மலரில் மொய்க்கும் அறுகாலியாக – ஆறுகால்  தேனீயாக நான்  உன்னைச்  சுற்றிவரவேண்டும் என்று ஆதிசங்கரர்  முதல் நாராயண தீர்த்தர் வரை பலரும் சம்ஸ்க்ருதத்தில் கவிமழை பொழிந்திருக்கிறார்கள்

பாஸ்கர ராயர் உரையினை நமக்குத் தமிழில் நல்கிய கணேச அய்யர் வேத வாக்கியத்தையும் நமக்கு மேற்கோளாகத் தந்துள்ளார் –யன் மதுனா ஜுஹோதி மஹதீமேவ தத் தேவதாம் ப்ரீணாதி 

***

தத்யன்னா சக்த ஹ்ருதயா

மதுவை அடுத்து வரும் நாமம் இது . அம்மன் என்றால் இனிப்பு மட்டும்தான் அவளுக்குப் பிடிக்கும் என்று நினைத்து விடக்கூடாது . புளிப்புடைய தயிரில் செய்யப்பட அன்னமும்—தத்யோன்னம்– என்னும் தயிர் சாதமும் அவளுக்குப் பிரியமானதே ; ஆகையால் இதையும் நிவேதனம் செய்யலாம்.

தயிரில் நீர் கலந்தால் மோர்; அதன் பெருமையைக் கூறும் சுபாஷித ஸ்லோககங்கள் நிறையுள்ளன.

நாமங்களுக்குப் பெரியோர்கள் எழுதிய உரைகளைப் படித்தால் மேலும் பல நிவேதனைப்   படைப்புகளை நாம் அறியலாம்

பிள்ளையார் என்றால் கொழுக்கட்டை, முருகன் என்றால் பஞ்சாமிர்தம் சிவன் என்றால் வெண்பொங்கல், பெருமாள்  என்றால் புளியோதரை, அனுமார் என்றால் வடை, கிராம தேவதை என்றால் சத்து மிக்க கஞ்சி, ஐயப்பன் என்றால் நெய்யப்பம்  என்பது போல அம்பாள் என்றால் சர்க்கரைப் பொங்கல், பாயசம் என்று சொல்லலாம் .

–subham—

Tags- லலிதா சஹஸ்ர நாமம் , உணவு வகைகள் நைவேத்யம் பிரசாதம்  சர்க்கரைப் பொங்கல்,பாயசம் ,தயிர் சாதம் , கூடாரை வெல்லும்

மதுரை மீனாட்சி கோவிலில் நவரத்தினக் குவியல்!-3 (Post.15,149)

Madurai Collector Rose Peter gave it to Goddess Meenakshi after the miracle.

Written by London Swaminathan

Post No. 15,149

Date uploaded in London –  4 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Pendants with Gem Stones

Third part (Last Part)

அருள்மிகு மீனாட்சியம்மனின் திருவடிகளைத் தாங்கும் இரண்டு மிதியடிகள் கோவிலில் உள்ளன  இதன் பின்னால் ஒரு கதை உள்ளது .1812 ஆம் ஆண்டில் ரோஸ்  பீட்டர் என்ற ஆங்கிலேயர்  மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தார் . அக்காலத்தில் கோவில் மேற்பார்வையும் கலெக்டரிடம் இருந்தது ; பீட்டர் , குதிரை மேலிருந்தபடியே கோவிலை வலம் வருவார் அவருக்கு மீனாட்சி அம்மனின் அருள் கிடைத்தது . அது ஒரு அதிசய சம்பவம் !

ஒரு நாள் மதுரையில் இடைவிடாது இடி மின்னலுடன் பெருமழை பெய்து கொண்டிருந்தது .  இடிகள் காது செவிடுபட இடித்தன  இடை இடையே மின்னல்கள் மின்னின  அப்போது பீட்டர் ரோஸ் மேல் மாடியில் ஒரு கட்டிலில் அயர்ந்து தூங்கிக்  கொண்டிருந்தார்  அப்போது ஒரு சிறுமி கைதட்டி அவரை எழுப்பிவிட்டு மிகவும் விரை வாக கீழே இறங்கி ஓடினார் துரையும் திடுக்கிட்டு எழுந்து அந்த சிறுமியை பின் தொடர்ந்தார்; மாளிகைக்கு வெளியே வந்தார், அடுத்த நிமிடம் அவர் தங்கியிருந்த மாடியில் இடிவிழுந்தது.  மாடியில்  இருந்த கட்டி லும்  முறிந்து  போயிருந்தது அதிர்ச்சியடைந்த பீட்டர் அந்த சிறுமியைத்  தேடினார்

சிறுமி எங்கும் தென்படவில்லை. முடிவில் அந்தச்  சிறுமி, கோவில் கோபுரத்துக்குல்  நுழைவது  போல ஒரு காட்சி துரை யின் கண்ணுக்குத் தோன்றியது.  இந்த மீனாட்சிதான்  தன்னை காப்பாற்றினார் என்று எண்ணி மகிழ்ந்தார் .பின்னர் குருக்களிடம் இதுபற்றி பேசி மீனாட்சி அம்மன் எழுந்தருளும் போது அவரது காடிகள் போல பயன் படுத்துவதற்காக இரண்டு மிதியடிகளை செய்து கொடுத்தார். இதிலும் மரகதக் கற்களும் பலச்ச வைரமும் முத்தும் நீலமும் வைடூரியமும் பதிக்கப்பட்டுள்ளன . அம்மன் குதிரை வாகனத்தில் புறப்படும் போது இவைகளை பொருத்துக்கிறார்கள் ; தான் இறந்த பின்னரும் அம்மன் கோவிலைப்  பார்த்த வண்ணம் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று பீட்டர் ரோஸ் துரை வேண்டிக் கொண்டார். அவ்வாறே  கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள மேங்காட்டுப்  பொட்டலில் (Near Y M C A)  துரையை அடக்கம்  அடக்கம் செய்தார்கள்.

***

தங்க சந்தனக் கும்பா

Vibhuti Figure with Diamonds

கோவில் உள்ள தங்க சந்தனக் கும்பா மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்கநாத நாயக்கரால்  கொடுக்கப்பட்டது; அதில் தெலுங்கு மொழியில் விளக்கம் உள்ளது இதன் எடை  49 தோலா பொற்றாமகரைக் குளத்தின்  மேற்குக் கரையில் கிளிக்கூண்டு மண்டபத்தின் பக்கத்திலுள்ள ஊஞ்சல்   மண்டபத்தில் வெள்ளிக்கிழமைதோறும் அம்மன் அப்பன்  ஊஞ்சல் காட்சி நடைபெறும் .இந்த சாமியின் திருவுருவத்தையும் அம்மனின் திருவுருவத்தையும் தனித்தனி தங்கத்தில்  திருமலை நாயக்கர் செய்து கொடுத்தார் .

சாமி உருவத்தின் எடை – 323 தோலா .

அம்மன் உருவத்தின் எடை-196 தோலா .

ஒரு தோலா – 11. 66 க்ராம்

1 tola = 11. 66 grams. More gramsely, it’s 11. 6638 grams

Roman Coins Garland is below

நாகர் ஒட்டியாணம்

இடுப்பில் கட்டுவதற்காக பெல்ட் போல உள்ள நாகர் ஒட்டியாணம்  தங்க  இழைகளால் பின்னப் பெற்றது; இந்த ஒட்டியாணத்தின்  நடுவில் ஐந்துதலை நாகம் உள்ளது; பெல்ட்டை  மாட்டுவதற்கு இரண்டு பக்கமும் சதுரம் சதுரமாக  அமைப்பு உள்ளது; .இதிலும் 113 உயர்ந்த ஜாதி மாணிக்கக் கற்கள், 8  மரகத கற்கள், 28  பலச்ச வைரங்கள் , 66 முத்துக்கள்  எல்லாம் பொருத்தப்பட்டுள்ளன . எடை – 33 தோலா .

நீல நாயக பதக்கம்

மன்னார் திருமலை நாயக்கர் பெரிய நீலப் பதக்கம் ஒன்றையும் செய்து கொடுத்து இருக்கிறர் . இது பெரிய

 நீலக் கற்கள் உள்ளன.  ஏழாவது எட்வர்ட் அரசர் இந்தியா வந்திருந்தபோது ,மதுரை கோவிலைப்  பார்க்க வந்திருந்தார். இதில் உள்ள நீலக் கற்கள் பட்டை தீட்டப்படாத போதும் பளபள ப்புடன் இருப்பதைக் கண்டு தாயாரான விக்டோரியா மகாராணிபார்த்து  மகிழ்வதற்காகலண்டனுக்கு கொண்டு  சென்றார் என்றும் பின்னர் கோவிலில் சேர்த்தார் என்றும் சொல்வார்கள். எடை – 21 தோலா .

My comments

Please check whether the cunning British returned the actual sapphires .

***

திருமஞ்சன கொப்பரை

Bracelets and anklets of Gods

திருமஞ்சன கொப்பரையை   ஒரு நீராகக் கப்பலின் உரிமையாளரான காட்ச்  சகோதரர் கொடுத்துள்ளார்.,  மீனாட்சியம்மனின் சிறப்பைக்  கேட்டு தனது நீராவிக்கப்பலு க்கு ஃப் S S M  மீனாட்சி எனப் பெயரிட்டார். எதிர்பார்த்தபடி பெரிய லாபம் கிடைத்ததால்  பெரிய வெள்ளிக் கொப்பரையை செய்து கோவிலுக்கு கொடுத்தார் ;இன்றும் விழாக் காலங்களில்  அம்மனுக்கு அபிஷேகத்துக்கு உரிய பொருள்கள் இதில் நிரப்பப்படுகிறது ; கொப்பரையில் ஆங்கில மொழியில் விளக்கமாக எழுதியும் இருக்கிறார்கள்

இதனுடைய எடை 3020 தோலா ஒரு தோலா – 11. 66 க்ராம்

ஒரு தோலா – 11. 66 க்ராம்

1 tola = 11. 66 grams. More gramsely, it’s 11. 6638 grams.

***

இரண்டு பெரிய தங்கக்  குடங்கள்

செட்டிநாட்டு நகரத்தார்கள்  இரண்டு பெரிய தங்கக்  குடங்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள் ஒவ்வொரு குடமும்  இரண்டரைக்  கிலோவுக்கு மேல் எடை உடையது; மீனாட்சியம்மனுக்கு தங்கக்  காசுமாலையும் கொடுத்திருக்கிறார்கள் இவைகளிலும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

தங்க காசுமாலை

தங்க காசுமாலையின் எடை – 23 தோலா; 53   காசுகள் உள்ளன.

அவைகளில் மரகதமும் சிவப்புக் கல்லும் பாதிக்கப்பட்டுள்ளன.

***

வைரக் கிரீடம்

பி  டி ராஜன்  தலைமையில் நடந்த கும்பாபிஷேகத்தின்போது  கோவில் செலவில் வைரக்  கிரீடம் செய்து வைக்கப்பட்டது.

அது 3500 கிராம் தங்கத்தில் அமைந்தது.வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட  399  காரட் எடையுள்ள  3345 வைரங்கள் , 600 காரெட் எடையுள்ள  4100 சிவப்புக் கற்கள்  பதிக்கப்பட்டுள்ளன விலைமதிக்க முடியாத எட்டரை காரட் மரகதக்  கல்லும் அதே எடையுள்ள ஒரு மாணிக்கக் கல்லும் இந்த வைர கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளன.வைர கிரீடத்தின் உயரம்  14  அரை அங்குலம்;   சுற்றளவு 20 அங்குலம் . நுணுக்கமான கலை வேலைப்பாடுகளுடன் சாஸ்திர ரீதியில் கிரீடத்தை வடிவமைத்துள்ளார்கள்.

***

தங்கக் கவசம்

மீனாட்சியம்மனுக்கு தங்கக் கவசம் இல்லாத ஒரு குறை இருந்தது அண்மைக் காலத்தில் 7000 கிராம் (ஏழு கிலோ) எடை  தங்கத்தில் நுட்பமாக செய்யப்பட்ட கவசமும் செய்திருக்கிறார்கள் ; கோவில் செலவில் இது செய்யப்பட்டது.

முதல் முதலாக 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி இதையும் வைரக் கிரீடத்தையும் சேர்த்து அணிவித்தார்கள். அக்காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

My comments- December 11 was Tamil Poet  Bharatiyar’s Birth Day.

அதன் பிறகு திங்கட்கிழமை மாலை வேளையில்  தங்கக் கவசமும் வைரக் கிரீடமும்  அம்மனுக்கு சாத்தப்படுகிறது . பணம் கட்டினாலும் இதை சாத்துகிறார்கள்.

***

Close up pictures of Gem Crowns

நவரத்தினங்களின் மகிமைகளை  தமிழில் சிலப்பதிகாரம் , திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களிலும் அதற்கு முன்னால் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட பிருஹத் சம்ஹிதா   என்ற நூலிலும் காணலாம். இங்கு சொன்னபடி மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஆபரணங்கள் செய்து கொடுத்த பெருமக்கள் இவ்வுலகத்தில் அழியாத புகழும் புண்ணியமும்  பெற்றிருக்கிறார்கள்;  அவர்கள் புகழ் ஓங்குக!

(மு தங்கவேல் தேசிகர் 1974-ம்  ஆண்டு கும்பாபிஷேக மலரில் எழுதிய கட்டுரையை சுருக்கிக் கொடுத்துள்ளேன். முக்கியமாக ஆபரணங்களின் எடையை எழுதும் போது முழு எண்ணாக கொடுத்தேன். கால், அரை போன்றவற்றை விட்டுவிட்டதால் உண்மையில் நான் எழுதிய எடையை விட கூடுதலாகவே எடை இருக்கும்)

Coral Garlands

–subham—

Tags- Third part, Jewels in Madurai temple, தங்க மிதியடிகள் தங்கக் கவசம் , வைரக் கிரீடம் ,ரோஸ் பீட்டர், மதுரை மீனாட்சி கோவில், நவரத்தினக் குவியல்!-3

அனைவரையும் கவர ஒரு வழி நூஞ்சி! (Nunchi) (Post No.15,148)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,148

Date uploaded in London –   4 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-8-25 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

MOTIVATION : NEW TECHNIQUE

அனைவரையும் கவர ஒரு வழி நூஞ்சி! (Nunchi) 

ச. நாகராஜன் 

உடல் பேசும் மொழி வார்த்தைகளை விட சக்தி வாய்ந்தது!

–    ரிக்கி ஜெர்வெய்ஸ்

ஒரு புன்னகை, நண்பரை உருவாக்கும்!  –      ஃப்ராங்க் டைகர்

அனைவரையும் கண் பார்வையினாலேயே எடை போட்டு அவர்களைக் கவர ஒரு வழி இருக்கிறது! அது தான் நூஞ்சி!! 

தென் கொரியாவில் இது இளமைப் பருவத்திலிருந்தே அனைவருக்கும் கற்றுத் தரப்படுகிறது.

 நூஞ்சி என்ற தென்கொரிய வார்த்தைக்கு கண்ணின் ஆற்றல் அல்லது கண்ணின் சக்தி என்று பொருள். கண்ணினால் பார்த்தவுடனேயே ஒருவரை அளந்து விட வேண்டும்! அவர்களின் நடை, உடை பாவனையையும் உடல் பேசும் மொழியையும் வைத்து சுலபமாக ஒருவரைப் புரிந்து கொள்வதோடு அவரை நம் பக்கம் கவர்ந்து இழுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக பெரிய பார்ட்டிகளிலும், சமூக விழாக்களிலும் இது நமக்குப் பெரிதும் உதவும். பல புதிய நண்பர்களை உருவாக்குவதோடு வெற்றிக்கும் வழி வகுக்கும்.

தனிப்பட்ட நபர்களிடம் நட்பும், வேலை பார்க்குமிடத்தில் அனைவரிடமும் நல்லுறவும் நமக்குத் தேவை.

 ஒருவரைப் புதிதாகப் பார்க்கும் போது அவரையே அதிகமாகப் பேசும்படி அவருக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். இது நூஞ்சியின் அபாரமான உத்தி. அவர்களைப் பற்றிய ஏராளமான விவரங்கள் சிறிதும் முயற்சி இல்லாமலேயே உங்களுக்குக் கிடைக்கும்.

 பேச்சு என்பது உணர்வுகளையும் தகவல்களையும் பெறும் ஒருவிதமான தொடர்பு தான். ஆனால் பேசாமலேயே பேச்சு அற்ற தொடர்புகள் நமக்குத் தரும் விவரங்களும், அறிவுரைகளும் ஏராளம்.

 ஒருவர் சந்தோஷமாக இருக்கிறாரா, உங்களுடன் மேலும் பேச விரும்புகிறாரா என்பதை எல்லாம் அவர்கள் கண்களும் முகமும் உடலுமே காட்டி விடும்.

சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒரு முறை பார்த்து விட்டு வேகமாக சிந்திக்க நூஞ்சி உதவுகிறது.

 பார்ட்டியில் உள்ள சைகைகள், ட்ரெண்ட்,, புதிய வார்த்தைகள் ஆகியவற்றையும் நூஞ்சியினால் பெற முடியும்.

 எல்லாவற்றிற்கும் மேலாக நம்மைப் பற்றி இன்னும் கொஞ்சம் புரிதல் கூடும்; உள்ளுணர்வு ஆற்றல் அதிகரிக்கும்.

 பேச்சுக்கு வேண்டிய மொழி ஆற்றல் ஒரு பக்கம் என்றால் உணர்ச்சிகளைப் “படிக்கும்” உணர்வு மொழி நமக்குத் தேவை. இது தான் மற்றவர்களுடன் நாம் மகிழ்ச்சியுடன் பழகி வெற்றி பெற உதவும்.

 சுருக்கமாகச் சொல்லப் போனால் நமது அன்புக்குரியவர்கள், நண்பர்கள், உறவினர்கள், சகாக்கள் ஆகியோருடனான நமது உறவு மேம்படுவதோடு நமது சுயமதிப்பையும் நம்மை சமூகத்தில் உயர் அந்தஸ்தும் பெற வழி வகுப்பது நூஞ்சி.

 நூஞ்சியை வளர்த்துக் கொள்வது எப்படி?

இதோ இருக்கிறது வழிகள்:

 முதலில் யாரைப் பற்றியும் நாமாக ஒரு அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது. திறந்த மனதுடன் ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டும். ஒரு புதியவருடன் பழக வேண்டும்.

 ஒரு அறையில் நீங்கள் நுழையும் போது அங்கு ஒரு புதிய ஊக்கமூட்டும அதிர்வலைகளை உண்டு பண்ண வேண்டும்.

 அனைவரையும் கண் பார்வையாலேயே நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். புன்னகையுடன் கூடிய மலர்ந்த முகம் இதற்குத் தேவை.

 மற்றவர்களை நிறையப் பேசும்படி ஊக்குவிக்க வேண்டும். இதனால் ஏராளமான புதுச் செய்திகள் உங்களுக்குக் கிடைக்கும்.

பேசுகின்ற சொற்களை விடப் பேசாமல் மற்றவர்களது உடலும் உணர்ச்சியும் காட்டும் தகவல்கள் ஏராளம். இதை உன்னிப்பாகக் கவனித்தல் அவசியம்.

 ஒருவரைப் பாராட்டுவதில் அதிக உற்சாகம் கொண்ட ஹீரோவாகவும், ஒருவரை எதிர்மறையாக விமரிசிப்பதில் ஜீரோவாகவும் இருத்தல் வேண்டும்.

 கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் கொண்டு வாயை மட்டும் மூடி வைத்துக் கொண்டால் வாழ்க்கை முழுவதும் நூஞ்சியால் வெற்றி தான்!

 இந்த நூஞ்சியை ஜப்பானிய மொழியில் சாஷி என்கின்றனர்.

 வாஞ்சையுடன் அனைவருடனும் பழக ஒரு வழி நூஞ்சி!

**

மதுரை மீனாட்சி கோவிலில் நவரத்தினக் குவியல்!-2 (Post.15,147)

Written by London Swaminathan

Post No. 15,147

Date uploaded in London –  3 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

SECOND PART

மீனாக்ஷி அம்மனின் தலைப்பாகைக் கிரீடம்

அடுத்ததாக திருவிழா காலத்தில் அம்மன் குதிரை வாகனத்தில் வரும்போது போர் வீரன் போல தோற்றமளிப்பதற்காக குதிரை வாகன தலைப்பாகை கிரீடம் பொருத்தப்படும் . இதை திருமலை நாயக்கர் செய்துகொடுத்துள்ளார் . அதிலும் நவரத்தின கற்கள் இருக்கின்றன

தலைப்பாகைக்  கிரீடத்தின் எடை 113  தோலா

ஒரு தோலா = 11 . 66  கிராம் 

332  நன் முத்துக்களும் 472  சிவப்புக் கற்களும் 158  பலச்ச வைரமும் 27  மரகதங்களும் இந்த கிரீடத்தை அலங்கரிக்கின்றன.

***

திருமுடிச் சாத்து

திருமுடிச் சாத்து  என்ற ஒரு கிரீடத்தையும் திருமலை நாயக்கர் செய்து கொடுத்துள்ளார் .இது அம்மனுக்கு சாத்தப்படுகிறது .பெண்கள் தங்கள் தலைமுடியை உச்சிக்கொண்டை போடாமல் , அப்படியே பின்பக்கமாக வாரி சடையாக பின்னி தொங்கப்போடுவது போன்ற அமைப்பில் இக்கிரீடம் அமைந்துள்ளது . இதன் எடை  83 தோலா; 324 சிவப்புக் கற்களும் 116 பலச்ச வைரமும் மூன்று நீலக் கற்களும், இரண்டு மரகதங்களும் 694 முத்துக்களும் , இரண்டு வைடூரியங்களும் கிரீடத்தில் பதிக்கப்பட்டு உள்ளன

ஆவணி மூல விழாவில் சுந்தரேஸ்வரர்  கூலி  ஆளாக வைகைக் கரைக்குச் செல்வார் அப்போது தலையில் கூடையும் தோளில்  மண் வெட்டியும் தாங்கியிருப்பார் ;இவைகளெல்லாம் தங்கத்தாலானவை

 திருவிளையாடற்புராணத்தில் பரஞ்சோதி முனிவர் சொன்னே கரும்பனும் விரும்ப நின்ற கட்டழகும் என்ற திருமேனி நம் மனக்கண்ணில் தோன்றும்; இவைகளின்  எடை-

கூடை – 25 தோலா  தங்கம் ;

கூடையைத் தாங்கும் சுமையடை – 84  தோலா  தங்கம்;

மண்வெட்டி- 19  தோலா  தங்கம்

அவைகளில்  பலச்ச  வைரங்கள் , மரகதக் கற்கள்  பதித்துள்ளனர்.

***

பொட்டுக்காறை

சிவகங்கையை ஆண்ட பவானி சங்கர் ராஜா சேதுபதி,  அம்மனுக்கு தங்க கொடியுடன் கூடிய பட்டை தீட்டாத மாணிக்கக் கற்கள் , மரகதக் கற்கள் பதித்து செய்யப்பட பொட்டுக்காறையொன்று செய்து கொடுத்துள்ளார்

இதன் எடை  53 தோலா; 331  சிறிய மாணிக்கக்   கற்களும் 116 44  பெரிய மரகதங்களும்  பதிக்கப்பட்டு உள்ளன . இதேபோல ராமநாத புர மன்னர் பாஸ்கர சேதுபதி கோவிலில் உள்ள ஆக்ஞா சித்த மூர்த்திக்கு பெரிய பதக்கம் ஒன்றைத் தங்கள் கொடியில்  கோர்த்து நன்கொடையாக கொடுத்துள்ளனர்; பதக்கத்தின் பின்பக்கத்தில் தமிழில்  இதன் விளக்கம் இருக்கிறது 1893  ஆம்    மூன்றாம் ஆண்டில் கொடுத்துள்ளார். இதிலும் எல்லா வகைக் கற்களும் உள்ளன.

***

பவளக்கொடி பதக்கம்

கடலில் உள்ள பவளக்கொடி போல கிளை கிளையாக அமைக்கப்பட்டுள்ளது;ரத்தினம் பதித்த ஒரு வளையமும் பொருத்தப்பட்டுள்ளது ;அதன் எடை 11 தோலா 6 4 மாணிக்கக் கற்கள் ,25 முத்துக்கள் வளையத்தில் பதிக்கப்பட்டுள்ளன.

பவள தாழ் வடம்

இதைத் தவிர பவள தாழ் வடம் ஓன்றும்  உள்ளது இதை  கர்நாடக திப்பு சுல்தானுக்கு அமைச்சராக பணிபுரிந்த பூர்ணையா என்பவர் மீனாட்சி அம்மனுக்குக் கொடுத்திருக்கிறார் பெரிய உருண்டை வடிவத்தில் முதிர்ந்து விளைந்த பளபள ப்பும் சிவப்பு நிறமும் கொண்ட 28 பவள மணிகளை 27 தங்க குண்டுமணிகளுக்கு இடையிடையே வைத்து அமைத்துகே காட்டியுள்ளனர்  ; இதன் மொத்த எடை 43 தோலா .

***

நளச் சக்ரவர்த்தி பதக்கங்கள் /வாகனப் பதக்கங்கள்

நிடத நாட்டு மன்னன் நளச் சக்ரவர்த்தி கொடுத்த இரண்டு பெரிய பதக்கங்கள் இருக்கின்றன . இவை வெள்ளியும் தங்கமும் கலந்த பொன்னால் செய்யப்பட்டவை .எடை – 69 தோலா, 45 தோலா

ஒரு பதக்கத்தில் பட்டை தீட்டாத 79  பெரிய மாணிக்கக் கற்களும் 18 நீலக் கற்களும்,8 மரகதங்களும் 6 வைடூரியங்களும் இரண்டு கோமேதங்களும் பதித்துள்ளனர் . இன்னும் ஒரு பதக்கத்தில் பட்டை தீட்டாத 83  பெரிய மாணிக்கக் கற்களும் 12 நீலக் கற்களும்,7 மரகதங்களும் 6 வைடூரியங்களும் 3கோமேதங்களும் பதித்துள்ளனர். 

இவையிரண்டும் குந்தன கட்டிட வெளிப்பாட்டில் அமைந்தவை. கோவில் கருவூலப்பட்டியலில் இவைகளை வாகனப்பதக்கண்கள் என்று குறித்து வைத்துள்ளனர்

 திருவிழாக்  காலங்களில் உயரமான குதிரை, யானை, கற்பக மரம், பூதம் ,யாளி  நந்தி தேவர்  ஆகிய வாகனங்களின் சுவாமியை  எழுந்தருளப் பண்ணி வீதி வலம் வரும்போது இப்  பதக்கங்கள்நன்றாகத்  தெரியும் .

***

ரோமானிய காசுமாலை

சங்க  காலத்தில் தமிழ் நாட்டுக்கும் இத்தாலிக்கும்  இடையே பெரிய அளவில் ஏற்றுமதி- இறக்குமதி  வியாபாரம் நடந்ததை சங்க இலக்கியமும் தென்னிந்தியா முழுதும் கிடைத்த ரோமானிய  காசுகளும் காட்டுகின்றன . அந்தக்காலத்தில் கிடைத்த தங்கக்காசுகளை மக்கள் ரகசியமாக உருக்கி தங்க நகைகளாகச் செய்துவிட்டனர் இன்றோ அந்தத் தங்கக்காசு ஒவ்வொன்றின் மதிப்பும் அதிலுள்ள தங்கத்தின் மதிப்பை விட நூறு மடங்கு வி லைக்கு வெளி நாடுகளில் எல்லாம் ஏலம் போகிறது. நல்ல வேளை யாக திருவநந்தபுரம் , மதுரைக் கோவில்களில் ரோமானிய தங்கக்காசு மாலைகள் சுவாமி அம்மன் கழுத்தில் தொங்குகின்றன. அதில் லத்தீன் மொழி வாசகங்களும் உள்ளன; ஒவ்வொரு மன்னரின் பெயரையோ காசின் படத்தையோ வெளியிட்டால் இன்றைய மதிப்பினை அறியலாம். வரலாற்றினை  புதுக்கி எழுதவும் வழிபிறக்கும்

இந்த காசுமாலையில்  48 ரோமானியாக் காசுகளை 50 தங்கமணியுடன்  பட்டு கயிற்றில்  சேர்த்துக்  கட்டியுள்ளார்கள்

இதன் எடை 21  தோலா .

இதேபோல வேறு வெளிநாட்டுக்காரர்கள்  கொடுத்த காசுமாலையும் மீனாட்சிக்கு உண்டு . இங்கிலிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி காயின்ஸ் என ஆங்கில மொழி பொறித்த 73 தங்க காசுகளால் ஆன ஒரு காசு மாலையை ஆங்கிலேயர்கள் வழங்கினர் .  இதன் எடை ஆறு தோலா இந்த காசுமாலையில்  48 ரோமானியாக் காசுகளை 50 தங்கமணியுடன்  பட்டு கயிற்றில்  சேர்த்துக்  கட்டியுள்ளார்கள்

இதன் எடை 21  தோலா .

ஒரு தோலா – 11. 66 க்ராம்

1 tola = 11. 66 grams. More gramsely, it’s 11. 6638 grams

***

அடுத்ததாக தங்க  மிதியடிகள்

அருள்மிகு மீனாட்சியம்மனின் திருவடிகளைத் தாங்கும் இரண்டு மிதியடிகள் கோவிலில் உள்ளன  இதன் பின்னால் ஒரு கதை உள்ளது .1812 ஆம் ஆண்டில் ரோஸ்  பீட்டர் என்ற ஆங்கிலேயர்  மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தார் . அக்காலத்தில் கோவில் மேற்பார்வையும் கலெக்டரிடம் இருந்தது ; பீட்டர் , குதிரை மேலிருந்தபடியே கோவிலை வலம் வருவார் அவருக்கு மீனாட்சி அம்மனின் அருள் கிடைத்தது . அது ஒரு அதிசய சம்பவம் !


To be continued………………………

    மதுரை மீனாட்சி கோவில் ,நவரத்தினக் குவியல்!-2 ,

GNANAMAYAM 2nd November 2025 BROADCAST PROGRAMME



TRR

NEWS

Prayer

TRR

NEWS

Prayer

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer -MRS JAYANTHI SUNDAR TEAM – Akash Ramesh from London.

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND from London presents World Hindu News in Tamil

****

Sri S. Nagarajan from Bengaluru speaks on THIRUPPULLANI TEMPLE

****

SPECIAL EVENT-

Talk on Periyapuranam

By

Sri T R RAMESH,

President of Temple Worshippers Association

(Son of ‘ Sekkizar Adippodi’  Dr T N Ramachandran )

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 2nd  November 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் — திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் – Akash Ramesh from London.

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — Sri S. Nagarajan from Bengaluru

சொற்பொழிவு– தலைப்பு    திருப்புல்லாணி தலம்கோவில்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

பெரிய புராணத் சொற்பொழிவுத் தொடர்:

பேசுனர் – திரு T R  ரமேஷ் அவர்கள்,

(சேக்கிழார் அடிப் பொடி டாக்டர் T N  ராமச்சந்திரன் அவர்களின் புதல்வர்)

ஆலயம் செல்லுவோர் சங்கத் தலைவர்

—subham—

Tags-Gnanamayam Broadcast, 2-11- 2025, programme,