நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்! – 1 (Post No.12,152)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,152

Date uploaded in London –  19 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

15-6-23 மாலைமலர் இதழில் வெளிவந்த கட்டுரை

முதல் பகுதி இங்கு வெளியிடப்படுகிறது. 

நட்சத்திரங்களில் ஒளிந்திருக்கும் ஆன்மீக ரகசியங்கள்! – 1 

ச.நாகராஜன் 

நாம் அனைவருமே நட்சத்திர மனிதர்கள் தாம்!

நாம் எல்லோரும் நட்சத்திரங்களினாலேயே ஆக்கப்பட்டிருக்கிறோம் – ‘வீ ஆர் ஆல் மேட் ஆஃப் ஸ்டார்ஸ்’ (We are all made of Stars – Moby) என்ற ஆகப்பெரும் அமெரிக்க இசைக்கலைஞரான மோபியின் பாடல் உலகையே கலக்கி ஆட்டி வைத்தது அனைவரும் அறிந்ததே

 நம் உடலில் உள்ள கார்பன், நைட்ரஜன் அணுக்கள் மற்றும் இதர மூலகங்கள் அனைத்தும் 450  கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சென்ற தலைமுறை நட்சத்திரங்களினாலேயே உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நவீன அறிவியலும் ஒத்துக் கொண்டிருக்கிறது.

வானில் நட்சத்திரங்களின் சஞ்சாரம் தட்ப வெப்ப நிலையையும் , மனிதர்களின் மனோநிலையையும் பாதிக்கிறது என்பதையும் அறிவியல் ஒப்புக் கொண்டு விட்டது.

இதே கருத்தை இந்திய நாகரிகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே கண்டுபிடித்துக் கூறியது தான் அதிசயம்.

புவியில் உள்ள மனிதர்களைப் பாதித்து நல்லதையும் கெட்டதையும் நல்கும் 28 நட்சத்திரங்களில் காலப்போக்கில் நமது சுழற்சியிலிருந்து வெளியில் சென்று விட்ட அபிஜத் நட்சத்திரத்தை விட்டு விட்டு மீதியுள்ள அஸ்வினி முதல் ரேவதி முடிய 27 நட்சத்திரங்களை நமக்குப் பலன் தரும் தாரகைகளாக நமது அறநூல்கள் பட்டியலிட்டுள்ளன.

சங்க காலத் தமிழகத்தில் வானவியல் உச்சகட்டத்தில் இருந்ததை அதில் நாம் காணும் சுமார் 150க்கும் மேற்பட்ட அதிசயிக்கத்தக்க அற்புதமான வெவ்வெறு பாடல்களில் வரும் வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. அவைகள் தரும் உண்மைகளோ நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

இந்தப் பின்புலத்துடன் வானில் ஒளிரும் சில நட்சத்திர இரகசியங்களையும் அதிசயங்களையும் பார்க்கலாமா?

திருவாதிரை நட்சத்திரம்

27 நட்சத்திரங்களில் இரண்டே இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு என்ற அடைமொழியைக் கொண்டிருக்கின்றன. அவை திருவாதிரையும் திருவோணமும் தான். திருவாதிரை சிவபிரானுக்கும் திருவோணம் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனுக்கும் உரியது.

பல இரகசியங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரம்மாண்டமான நட்சத்திரம் தான் திருவாதிரை! பிரம்மாண்டம் என்றால் எப்படிப்பட்ட பிரம்மாண்டம்? இரண்டுகோடியே ஐம்பது லட்சம் சூரியன்களைத் தன்னுள்ளே அடக்கி வைக்கக் கூடிய அளவு அது பெரியது.  சூரியனோ பூமியை விட பதிமூன்று லட்சம் மடங்கு பெரியது. அப்படியானால் திருவாதிரை பூமியை விட எத்தனை கோடி மடங்கு பெரியது! கணக்கிட்டுப் பாருங்கள்!!

பீடல்ஜியஸ் (Betelgeuse) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் திருவாதிரையானது, செக்கச் செவேலென்று ஒளிரும் உக்கிரமான ஒரு நட்சத்திரம் என்று சொல்வதைத் தவிர வேறு எப்படி வர்ணிக்க முடியும்? அமெரிக்காவில் மவுண்ட் வில்ஸன் ஆப்ஸர்வேடரியிலிருந்து நூறு அங்குல டெலஸ்கோப்பை வைத்து இதைப் பார்க்கும் விஞ்ஞானிகள், “அது ஒளிர்கிறது! பல கோடி சூரியன்கள் ஒன்றாக ஆகி எரிவது போல எரிகிறது” என்கின்றனர்.

முக்கண்ணன் தனது உக்கிரமான பார்வையினால் மன்மதனை எரித்தான் என்பதை பட்டி தொட்டிகளிலேல்லாம் காலம் காலமாக நாம் கேட்டு வரும் வில்லுப்பாட்டு கூறுகிறது. காம தகனம் கதையைக் கேட்காதோர் இல்லை!

கடுமையான கோடைகாலம் முடிந்தவுடன் வசந்த காலம் வர காம உணர்வும் எழுகிறது. இந்த உணர்வு எழுவது எப்போது? சூரியன் மறைந்தவுடன் தனுர் ராசிக்குரிய நட்சத்திரங்கள் எழுகின்ற வேளையில் தான்.

வில்லுடனும் அம்புடனும் குறிக்கப்படுவது இந்த தனுசு ராசி. இந்த ராசிக்குரிய நட்சத்திரங்களே மலர் கணையைத் தொடுக்கும் வில்லுடன்  கூடிய மன்மதனைக் குறிக்கிறது.

 கீழ்வானத்தில் அதாவது கிழக்கே திருவாதிரை நட்சத்திரம் எழ மேல் வானத்தில் தனுர் ராசி நட்சத்திரங்கள் மறைகின்றன, ருத்ரனின் பார்வை பட்டு மன்மதன் மறைகிறான்; எரிந்து போவதாகப் புராணங்கள் கூறுகின்றன! எப்போதும் தேவ- அசுர நட்சத்திரங்கள் நேர் எதிரெதிராக 180 டிகிரியில் இருப்பதை நாம் அறிந்தால் மன்மதனின் மறைவு நமக்கு நன்கு புரிய வரும்.

இதை ரெட் ஜெயண்ட் என்று அனைவரும் புகழ்கின்றனர். எகிப்திய பிரமிடிற்கும் திருவாதிரைக்கும் உள்ள தொடர்பை ஓரியன் மிஸ்ட்ரி உள்ளிட்ட பல ஆங்கில நூல்கள் விவரிக்கின்றன. படித்தால் பிரமிப்பு தான் ஏற்படும்!

இது 642 ஒளி ஆண்டுகள் தூரத்தில் புவியிலிருந்து இருக்கிறது.

ஒரு ஒளி ஆண்டு என்பது ஆறு லட்சம் கோடி மைல்கள் ஆகும்!

விநாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் செல்லும் ஒளி என்பதை அடிப்படையாகக் கொண்டு கணக்கைப் போட்டால் ஒரு ஆண்டிற்கான மைல்களாக ஒளி செல்லும் தூரமாக வருவது இது!

திருவோணம் நட்சத்திரம்

“மூவுலகும் ஈரடியா முறைநிரம்பா வகை முடியத்

தாவிய சேவடி” கொண்ட திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கேட்கிறார்!

மகாபலி என்ற அசுரன் இந்திரனுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அப்போது கச்யப முனிவருக்கும் அதிதிக்கும் மகனாக மகாவிஷ்ணு புரட்டாசி மாதம் சுக்ல பட்சத்தில் 12ஆம் நாள் அபிஜித் என்ற சுபயோக வேளையில் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். அவர் வாமனனாக குள்ள வடிவம் எடுத்து மகாபலி நடத்திய யாகத்திற்குச் சென்றார். அங்கு மகாபலி அவரிடம் என்ன வேண்டும் என்று கேட்க மூன்று அடி நிலம் வேண்டும் என்கிறார் வாமனன். உடனே தந்தேன் என்கிறான் மகாபலி.

தனது முதல் இரு அடிகளால் பூமியையும் ஏனைய அனைத்து உலகங்களையும் அளந்த வாமனன் மூன்றாவது அடி வைக்க இடம் எங்கே என்று கேட்கிறார். அதற்குத் தன் தலையில் அந்த அடியை வைக்குமாறு மகாபலி சொல்ல மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து அவனைப் பாதாள லோகம் சேர்க்கிறார் வாமனனான மஹாவிஷ்ணு.

இது மலையாளத்தில் ஓணம் பண்டிகையாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதை மஹாவிஷ்ணு.

ஆங்கிலத்தில் அக்கிலா எனப்படும் நட்சத்திரத் தொகுதி திருவோணத்தைக் குறிக்கிறது.

இதன் மேல் பக்கத்தில் மூன்று நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன. அது கருடனின் தலைப்பகுதியை உருவாக்கும் மூன்று நட்சத்திரங்களாக ஒளிர்கின்றன.

இந்த நட்சத்திரத் தொகுதியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான பால் வீதி என்பது காசியோபியா நட்சத்திர மண்டலத்தில் ஆரம்பித்து சிரியஸ் நட்சத்திரத்தைத் தாண்டி தென் மண்டலத்தில் போகிறது.

பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் தூரம் இது பரவி இருக்கிறது.

இந்தப் பால்வீதி மண்டலத்தைப் பார்த்துப் பிரமித்துப் போன விஞ்ஞானி வில்லியம் ஹெர்ஷல், “இருண்ட வானத்தில் தங்கத் துகள்களை இரு கைகளாலும் ஒருவன் வாரி இறைத்தது போல பால் வீதி மண்டலம் உள்ளது” என்கிறார்.

அறிவியல் வியக்கும் இந்தப் பால்வீதியே அனந்தசயனம் அதாவது பாம்பணை! கற்பனைக்கெட்டா தூரம் இந்த லட்சக் கணக்கான நட்சத்திரங்கள் படுக்கை போலப் பரவி இருப்பதை வானில் பார்ப்பதே தனி ஒரு ஆனந்தம் தான்!

இங்குள்ள முக்கிய நட்சத்திரங்களே குடை விரித்த பாம்பு போலத் தோற்றமளிக்கின்றன! அங்குள்ள வானநடுவரையால் கடக்கப்படும் திருவோண நட்சத்திரமே திருமால் வாமனாக அவதரித்த நட்சத்திரம்.

கருடனின் உருவத்தில் மூன்று நட்சத்திரங்களாக தலைப்பகுதியில் உள்ளவையே வாமனனின் பாதங்கள்.

இப்படி புராணத்தையும் அறிவியலையும் இணைக்கும் அற்புத நட்சத்திரமே திருவோணம்.

இந்த நட்சத்திர விசித்திரத்தைப் பார்த்த குலசேகரத்தாழ்வார், “மாதவனை வணங்குகிறேன். எவருடைய நட்சத்திர வடிவமானது குளிர்ந்த அலைகளையுடைய பாற்கடல் போலப் பரந்திருக்க, அதன் நடுவே பாம்பணையில் பள்ளி கொண்டிருப்பதாகத் தோற்றமளிக்கிறதோ அந்த மாதவனை வணங்குகிறேன்” என்கிறார். – முகுந்தமாலை செய்யுள் 39)

*** 

–          தொடரும்

QUIZ இந்துமதப் பத்து QUIZ (Post No.12,151)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,151

Date uploaded in London – –  18 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Brahma Stamp issued by Laos

வெளிநாட்டில் இந்து மதம் பற்றிய கேள்விகள்

1.தன்வந்திரி படத்துடன் தபால்தலை வெளியிட்ட நாடு எது ?

2.பிள்ளையார் படத்துடன் கரன்சி நோட்டு வெளியிட்ட நாடு எது ?

3.விஷ்ணுவின் வாகனத்தை அந்தநாட்டு ஏர்லைன் ஸுக்குப்  பெயர் சூட்டிய நாடுஎது?

4. ஈரான் நாடு ஏர்லைன்ஸில் உள்ள பறவை என்ன ?

5. இந்தியாவுக்கு வெளியே வேறு எந்த நாட்டில் அயோத்யாவை ராமன்

ஆண்டான்?

6. இந்தியாவுக்கு வெளியே திருவெம்பாவை எந்த நாட்டில் பாடப்படுகிறது?

7.பூமிபுத்ரா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் எந்த நாட்டில் பயன்படுத்தப்படுகிறது ?

8.ஸ்ரீ என்ற பெயரை எந்தெந்த நாடு எப்படி பயன்படுத்துகின்றன?

9.அங்கோர்வாட் எங்கே இருக்கிறது ? அதன் சிறப்பு என்ன?

10.பிரம்ம தேசத்தின் தற்காலப்பெயர் என்ன?

xxxxx

விடைகள்

1. நேபாளம்

2இந்தோநேஷியா

3. கருடா ஏர்வேஸ் , இந்தோனேசியா

4. வேதத்தில் சொல்லப்படும் மர்ம ஹோமா பறவை

5. தாய்லாந்து நாட்டில்

6. தாய்லாந்து நாட்டில்

7.மலேசியாவில்

8.இலங்கையில் ‘சிறி’ என்றும் மலேசியாவில் ‘செரி’ என்றும் பிரிட்டனில் ‘ஸர்’ என்றும் பயன்படுத்துகின்றன. இதுவே தமிழில் ‘திரு’ என்று மருவியது.

9.கம்போடியாவில் இருக்கிறது.அது உலகிலேமிகப்பெரிய இந்துக் கோவில் ; ஆனால் இப்போது சம்பிரதாய வழிபாடு இல்லை.

10.மியன்மார்; பிரம்மா என்பது பர்மா ஆனது; இப்போது மியன்மார் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுவிட்டது .

—subham—

tags —இந்து மதம், வெளிநாட்டில், கேள்வி பதில் , க்விஸ் 

More Information about Plants in Hinduism- Part 3 (Post No.12,150)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,150

Date uploaded in London – –  18 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Paarijaatam

Nyctanthes arbor tristis

This is the fragrant flowered tree which Krishna brought down from heaven and gave his wife Sathyabhama ( bhaamaa).

Xxxx

Plantain – Banana

Musa paradisiaca

Some people claim that this is the wish granting tree (Kalpaka Vrksha or Kalpa taru) and not coconut. But both the trees are fully used. No part is wasted.

In many pujas, bowers made up of four plantain trees are used as pillars. They are considered auspicious. Tamils use them in all the wedding halls. During Ganesh Chaturthi and Sarasvati Puja, little plants are used to decorate prayer place. There is no Puja without bananas in South India. Women are advised to worship this tree on the fourth of Kartik month . it is also worshipped on third of Shravan.

Fourth- Chaturthi

Third – Trtyai

When placed near the entrances of wedding halls and Puja halls along with its long leaves and laden with fruits, this tree forms an emblem of plenty and prosperity. Tamils eat on the plantain leaves. They are used as plates. They are environmentally friendly and the leaves are eaten by cattle.

Xxxx

Rui

Calotropis gigantia (Giant Milkweed) –Erukku in Tamil.

It is seen as bushes all over India . The leaves are offered to Mangal Gauri. A wreath of the same is put around Hanuman’s neck in North India. In Tamil Nadu, the garlands of this flower are sold in street corners during Ganesh Chaturthi. Every idol will have the Erukam Pu garland.

In some parts of India , the bride garlands the bridegroom with this Maalaa/garland.

If a man loses two wives and goes for the third wife, then he is married to this plant first and then the plant is destroyed. It means the third wife will live longer and avoid early death.

This plant represents Sun (surya) according to Puranas. The twigs are used as fire wood in Havans (fire ceremonies).

On Ratha Saptami day, Hindus put the leaves on their shoulders with rice and take bath.

Xxx

Shami

Prosopis spicigera (Vanni in Tamil)

This is the tree on which the Pandavas deposited their arms, while they were serving King Viraat. It is worshipped on Dsara day and its leaves are said to be dear to Lord Ganesh. In Tamil Nadu, several Ganesh statues are installed under this tree. Madurai Meenkashi temple Vaani Mara (Shami Tree ) Pillaiyar/Ganesh is famous. Dried twigs of Shami Tree are used in Havans, Yagas and Yajnas.

xxx

Til

Sesamum indicum (El in Tamil)

Detailed article is in this blog. (Read ‘Use of water sesamum gives severe blow to Max Muller Gangs’)

Xxx

Tulsi

Ocimum sanctum

Most favourite plant of Vishnu and all his avatars. Tulsi leaves are given in all Vishnu temples as Prasad. It is eaten with devotion. It has very good medicinal properties.  South Indian Vishnu temples put them in water and distribute it to devotees. The plant purifies the atmosphere and destroys mosquitoes. Tulsi marriage (Wedding of Tulsi Plant) is celebrated in North India. The wooden seeds are used as garland.

Xxxx

Umbar

Ficus glomerata (aththi in Tamil)

It is the seat of Tri Murti Dattatreya  (already discussed in this blog)

The three Ficus plants that are praised in Vishnu Sahsranama as Vishnu are  (Vata/Nyagrodha, Pipal/Asvatta and Udumbara/Ficus glomerata . (Please read articles already posted here)

They are all found in Rig Veda, later Indus-Sarasvati Civilization and in all the later and modern temples.

The amazing role of plants in Hinduism shows that they cared for nature, environment and at the same time stressed their importance as medicines. They played a great psychological role as well. All mentally sick patients in Western countries are given lithium tablets which damage their general health; where as in India they are asked to go round temples with trees or groves and they become normal within a year.

Every Tamil temple in South India has a Nandavana (garden) attached to it. Tamils worship specific trees in different temples, known as Sthala Vrksha. Seven holy forests are also popular in Hindu scriptures.

Tulsi and Vilva (Bilva) play a big role in Vishnu and Shiva temples. No culture in the world gives such respect to hundreds of trees. The Kurukshetra Banyan (Vata) tree stands as a monument where from Krishna gave Bhagavad Gita.

Long live trees and forests

—subham—

Tags- trees, plants, role, in Hinduism, worship, banana

‘ரம்’ ‘ரம்’ குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,149)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,149

Date uploaded in London – –  18 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில்  8 ‘ரம்’ உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  . எல்லா சொற்களும் ‘ரம்’ என்று முடியும்

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்.

   1   2
8       
        
        
7  ரம்   3 
        
        
6     4 
   5    

1.இந்தியர்களுக்கு 1947 ஆகஸ்ட் 15ம் தேதி கிடைத்தது ,

2.இப்படி ஒரு இலக்கண நூல் இருந்ததாகப் பகர்வர்  ,

3.மட்டும் என்பதன் சம்ஸ்க்ருதம் 

4.தொல்காப்பியயருக்கு இது தெரியும் என்று பனம்பாரனார் பகர்வார் ,  5.மாதந்தோறும்  ,

 6.தெலுங்கு பேசும் இடம்  ,

7.ஐயர்கள் முழங்குவது 

8.நரிகளுக்குத் தெரிந்தது

Xxxxxx

Answers

1.சுதந்திரம், 2.காதந்திரம், 3.மாத்திரம் 4.ஐந்திரம்,  5.மாதாந்திரம் , 6.ஆந்திரம் , 7.மந்திரம் , 8.தந்திரம்

   சு1   கா2
8 த     
 ந் ந் ந்  
  திதிதி   
7மந்திரம்தித்மா 
  திதிதி   
 ந் ந் ந்  
ஆ6  தா  ஐ4 
   மா5    

–subham—

Tags- rum, rum, crossword, tamil

தாய் நாடு பற்றி அதர்வண வேதத்தில் 60 துதிகள்! (Post No.12,148)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,148

Date uploaded in London –  18 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

தாய் நாடு பற்றி அதர்வண வேதத்தில் 60 துதிகள்! 

ச.நாகராஜன் 

தாய் நாடு என்ற அதி அற்புதமான கருத்து உலகில் பாரதத்தில் தான் முதன் முதலாக ஏற்பட்டிருந்ததை  வேதங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

அதர்வண வேதத்தில் 10வது காண்டத்தில் 60 செய்யுள்கள் உள்ளன.

மாதிரிக்கு இதோ சில:-

ச நோ பூமிவிஸ்ருஜதாம் மாதா புத்ராய மே பய:  -|| (20)

கிரயஸ்தே ஹிமவந்தோ பரண்யம் தே ப்ருதிவிஸ்யோநமஸ்து |

மாதா பூமி புத் ரோஹம் ப்ருதிவ்யா: ||  (22)

பூமே மாத்ராநிர்தோஹி மா பத்ரயா சுப்ரதிஷ்டிதம் ||

இவை அனைத்திலும் அன்னை பூமிக்கு மகன் நான்; அன்னையை வணங்குகிறேன் என்ற கருத்து இருப்பதைப் பார்க்கலாம்.

ரிக் வேதத்திலும் பூமியை நமது அன்னையாக வணங்குகின்ற ஸ்லோகங்கள்/ துதிகள் உள்ளன.

இந்த வேத துதிகளே வந்தே மாதரம் என்ற எழுச்சி மிக்க துதியை நமக்கு வழங்கியது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி இவற்றினால் ஊக்கம் பெற்றே இந்த அற்புதமான முழக்கத்தை நமக்குத் தந்து சுதந்திரத்திற்கான எழுச்சியை ஊட்டினார்.

மகாகவி பாரதியாரும் வாழிய பாரத மணித்திருநாடு, வந்தே மாதரம் என்ற எழுச்சி மிகு பாடல்களை நமக்கு அளித்து உத்வேகமூட்டினார்.

ஒவ்வொரு புனிதமான சடங்கிலும் ஒவ்வொரு ஹிந்துவும் புனிதமான அனைத்து நதிகளையும் துதித்து அழைத்து வணங்குகிறான்.

அந்த நதிகள் கிழக்கேயும், மேற்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பாய்ந்து ஓடுகின்றன.

கங்கே ச யமுனே சைவ சரஸ்வதி

நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு ||

இப்படி கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி என அனைத்து புனித நதிகளையும் அழைக்கிறோம்.

இப்படி ஆரம்பிக்கும் தாய்நாட்டு வணக்கம் உலகம் தழுவிய பெரும் அன்புத் தழுவலாக மாறுகிறது.

மாதே மே பார்வதி தேவி பிதா தேவோ மஹேஸ்வர: |

பாந்த்வா சிவபக்தஸ்ச ஸ்வதேசோ புவனத்ரயம் |

“அன்னை பார்வதி; தந்தை சிவபிரான். சிவபக்தர்கள் அனைவரும் உறவினர்கள்; சுய தேசம் பூமி முழுவதுமே” என்பது எவ்வளவு பொருள் பொதிந்தது!

லோகாஸ் ஸமஸ்தா சுகினோ பவந்து! |

சர்வே ஜனா சுகினோ பவந்து ||

என்பது தான் வேத முழக்கம்.

உலகம் அனைத்தும் நலமுடன் இருக்கட்டும் |

அனைத்து மக்களுடன் சுகத்துடன் இருக்கட்டும் |

இதுவே வேத பிரார்த்தனை!

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்

வேறொன்றறியேன் பராபரமே என்றார் தாயுமானவர்.

ஆக இது போன்ற ஏராளமான வேத துதிகளை நாம் அறிந்தோமானால் தாய் நாடு பற்றிய கருத்து முதலில் தோன்றியது பாரத தேசத்தில் தான் என்பதும் அது அப்படியே உலகம் தழுவிய உலக நலன் பிரார்த்தனையாக மிளிர்ந்து ஒளிர்கிறது என்பதும் நமக்குத் தெரியவருகிறது!

வஸுதைவ குடும்பகம் என்ற கோஷத்தை என்றுமே ஒரு பாரதீயன் விட மாட்டான் என்பது தான் உண்மை!

***

QUIZ கர்நாடகப் பத்து QUIZ (Post No.12,147)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,147

Date uploaded in London – –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

1. கர்நாடக மாநிலத்தில் புகழ் பெற்ற அரண்மனை எது?

2.கர்நாடகத்தில் சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இடங்கள் எவை?

3.இந்த மாநிலத்தில் காவிரிநதி உற்பத்தியாகும் இடம் எது ?

4. கர்நாடகத்தில் புகழ் பெற்ற கிருஷ்ணன் கோவில் எது?

5.தங்கச்சுரங்கம் உள்ள இடத்தின் பெயர் என்ன?

6.இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக் கல் சிலை எங்குள்ளது?

7.கொல்லூரின் புகழ் பரவக் காரணம் யாது?

8.ஆதி சங்கரர் நிறுவிய மடம் எங்கே இருக்கிறது ?

9.துவைத மத ஸ்தாபகர் யார் ? அவர் கர்நாடகாவில் எங்கே பிறந்தார் ?

10.கர்நாடகத்தில் கன்னடம் முக்கிய மொழி; வேறு என்ன மொழிகள் முக்கியமானவை ?

 xxxxx

விடைகள்

1.மைசூரிலுள்ள மஹாராஜா அரண்மனை

2.பேலூர், ஹளபேடு , ஹம்பி

3.குடகு, தலைக்காவேரி

4.உடுப்பியிலுள்ள கிருஷ்ணன் கோவில்

5.கோலார்

6.சிரவண பெலகோலாவில் மலை மீதுள்ள கோமடேஸ்வரரின் சிலை ஒரே கல்லினால் ஆனது.. அதன் உயரம் 58 அடி .

7.மூகாம்பிகை அம்மனின் அழகிய விக்ரகம் அங்கே இருக்கிறது. அந்தக் கோவிலுக்கு தமிழ் நாட்டின் முதலைச்சர் M G R .  வைரவாள் கொடுத்தவுடன் தமிழ்நாட்டில் அந்த அம்மனின் புகழ் பரவியது . பின்னர் முதலமைச்சராக வந்த ஜெயலலிதா தங்கம் கொடுத்தார் 

8.சிருங்கேரி

9.மத்வர் ; அவர் உடுப்பி தாலுகாவில் உள்ள பாஜக கிராமத்தில் பிறந்தார்.

10.கர்நாடகத்தில் கன்னடம் முக்கிய மொழி; துளு , கொங்கணி ஆகிய மொழிகளுடன் தமிழும் பேசப்படுகின்றன ; எல்லைப்பகுதியில் மராத்தி பேசப்படுகிறது.

–subham—

Tags – கன்னடம், மைசூரு, கர்நாடகம், கொல்லூர்

More Information about Plants in Hinduism -Part 2 (Post No. 12,146)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,146

Date uploaded in London – –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 1 was posted yesterday. 

Kush grass

Eragrotis cynosuroides

It is considered sacred . it is used as a mat to the pitris/departed souls. The eldest son of Rama was named Kush aster this grass.i  In the Chaturmass Mahatmya this grass is associated with planet Ketu. This grass is used in ceremonies, and in sharaddhas/ funeral rites .

Xxxxx

Kushmand

Cucurbita maxima or pepo

This fruit represents buffalo demon, Mahisasura , sacrificed on the Dasara day. It is also considered a great merit/ punya to hollow this fruit, fill it up with gold and jewels and to present it to a brahmin priest as a gupta dhan or secret gift. Vrat Kaumudi book calls this creeper a goddess and recommends its worship.

In the Padma purana, saint Narada recommended to King Chandrasen  for worship .

King Chandrasen was the chief of the  Kaayastha  Prabhus, a twice born caste of  Bombay, Baroda and Central India.

Xxxx

Naaral , coconut tree

Cocos nucifera

It is considered an auspicious offering to the gods. It is worshipped as Lakshmi . The tree is called Kalpa Vriksha , wish fulfilling tree . All the parts of the tree are used. It is sold in all the temple towns for offering to god. It is placed on top of a metal pot with mango leaves and offered to god, ascetics and other leaders as Poorna (Puurna) Kumbha to honour them. Fishermen community in the West Coast of India offer to Vedic God Varuna every year.

Xxxx

Neem

Melia azadirachta

Its leaves are eaten on the new year day Gudi paadva, Ugadi days. Tamil Hindus use it in all village goddess Maariamman temples. It is considered an antidote to smallpox and infectious diseases. Its medicinal properties are well known. The oil of the neem is a well known remedy for leprosy and other skin diseases. During epidemic of small pox, festoons of the fresh leaves of this tree are hung on the doors of Hindus’ houses.

Xxxx

Nivadung

Euphorbium pentandra

Panchdhaari

It is worshipped as goddess Manasa in Bengal. During Divali , boys of the Patheri Prabhu caste play with this plant making lamps out of it.

Xxxx

Padma

Lotus

It has got scores of names in Sanskrit. Hindu girls’ names are mostly flower names, particularly lotus names. Lakshmi and all Hindu goddesses are associated with this flower. Also national flower of India.

Xxx

Pan

Piper betel

Betel is derived from Tamil word Vetrilai . Hindus chew it with betel-nuts and spices. It is used in all Hindu ceremonies in the south. It is offered to gods. Of late, betel leaves garlands are offered to lord Anjaneya   in all Hanuman temples . it is good for digestion. It is also offered paan / beedaa.

To be continued…………………………

 tags – plants, hinduism, coconuts, betel leaves, Maraiamman

D for Dharma Crossword (Post No.12,145)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,145

Date uploaded in London – –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

All the words begin from centre. If u follow the colour, you may easily fill the gaps. These words have  ‘D’ as the initial letters. Though Sanskrit, they r well known throughout India.

    1    2
8         
          
          
          
7   D    3
          
          
          
6         
         4
    5     

1Unshakable, immovable, fixed – name of a boy and polestar

2Shortened name of Dattareya and Given in Sanskrit. One of the three Ds given by God to Devas Asuras and Humans

3.Bmae of an Asana; name of a month

4.Wealth

5. The danavas are a mythological race of Asuras, the half-brothers to the Devas and Daityas

6.Ambassador, Messenger

7.Flag

8.Smoke

Answers

1.DHRUVA , 2.DHATTA, 3.DHANUR, 4.DHANAM,

5.DHANAVA, 6.DHUTA, 7.DWAJA, 8.DHUMA

    A1    A2
A8   V   T 
 M  U  T  
  U R A   
   HHH    
A7JAWDHANUR3
   HHH    
  U A A   
 T  N  N  
A6   A   A 
    V    M4
    A5     

—subham—

tags – d for dharma, crossword

QUIZ சங்கீத (முத்து சுவாமி தீட்சிதர்) பத்து QUIZ (Post No.12,144)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,144

Date uploaded in London – –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

1.சங்கீத மும்மூர்த்திகள் யாவர் ?

2.சங்கீதம் கற்க வருவோருக்கு தீட்சிதரின் க்ருதியைத்தான் முதலில் சொல்லித் தருவார்கள் . அது என்ன பாடல் ?

3.தீட்சிதரின் காலம் என்ன? பிறந்த ஊர் எது?

4.ஒவ்வொரு பாடகரும் இறுதியில் ஒரு முத்திரை வைப்பர்; எதை வைத்து தீட்சிதர் க்ருதி என்று கண்டுபிடிக்கலாம் ?

5.தீட்சிதர் பாடிய முதல் க்ருதி எது ? எங்கே பாடினார் ?

6.காஞ்சிபுரத்தில் யாரிடம் தீட்சிதர் தத்துவம் கற்றார்?

7.தீட்சிதரை தஞ்சாவூரில் சந்தித்த பிரபல பாடகர் யார் ?

8.எட்டயபுரத்தின் வறட்சியைக் கண்டு மனம் நொந்து,

 என்ன கீர்த்தனை பாடி மழையை வருவித்தார் ?

9.கங்கையில் தீட்சிதருக்கு என்ன கிடைத்தது ?

10.நவாவர்ண கிருதிகள் என்பது என்ன ?

XXX

விடைகள்

1. தியாகராஜ சுவாமிகள், முத்து சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்

2. ஹம்சத்வனி ராகத்திலுள்ள ‘வாதாபி கணபதிம் பஜே ‘.

3. பிறந்த ஊர் திருவாரூர் . அவர் வாழ்ந்த காலம் 1775-1835.

4. அவர் பாடல்கள் அனைத்தும் ‘குரு குஹ’ என்ற முத்திரையுடன் முடியும் .

5.திருத்தணியில் முருகன் மீது பாடினார். மாய மாளவ கெளல ராகம் ;

‘ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதி ஜயதி’.

6.உபநிஷத் பிரம்மன்

7.சாமா சாஸ்திரிகள் (சியாமா சாஸ்திரிகள்)

8.ஆனந்தாமிர்தகர்ஷினி – அமிர்தவர்ஷினி ராகம்

9. வீணை கிடைத்தது

10. திருவாரூரில் குடிகொண்டுள்ள அன்னை கமலாம்பாள் மீது தீட்சிதர் பாடியவை நவாவர்ண கிருதிகள். தேவியானவள் ஸ்ரீ சக்ரத்தில் ஒன்பது முக்கோண  கோட்டையின் நடுவில்  அமர்ந்திருப்பது நவ ஆவரணம் எனப்படும் . இதில் அவர் வெவ்வேறு சம்ஸ்க்ருத வேற்றுமைகளை (விபக்தி) வைத்துப்  பாடினார் . தீட்சிதர் சுமார் 440 கிருதிகளைப் பாடியுள்ளார் .

—subham—

Tags– மழை , அமிர்தவர்ஷினி, எட்டயபுரம், முத்து சுவாமி தீட்சிதர் , நவாவர்ணம் , கிருதிகள், வாதாபிம் , குருகுஹ

வெற்றி பெறச் சொல்ல வேண்டிய மூன்று ரதங்களின் பெயர்கள்! (Post No.12,143)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,143

Date uploaded in London –  17 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

வெற்றி பெறச் சொல்ல வேண்டிய மூன்று ரதங்களின் பெயர்கள்!

ச.நாகராஜன்

மூன்று ரதங்களின் பெயர்கள்

அம்பாளைப் பற்றிய சகல விவரங்களையும் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் 1000 நாமங்கள் தருகின்றன.

அதில் மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே நமக்கு வெற்றி கிடைக்கும் என்கின்ற ரகசிய செய்தி ஒன்றும் உண்டு.

யாருடைய ரதங்கள் அந்த  மூன்று?

அம்பாள், மந்த்ரிணீ மற்றும் வாராஹீ.

அம்பாளுடைய ரதம்- சக்ரராஜ ரதம்.

மந்த்ரிணீயுடைய ரதம் – கேய சக்ர ரதம்

வாராஹியினுடைய ரதம் – கிரி சக்ர ரதம்.

இந்த மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே சொன்னவருக்கு வெற்றி தான்! கேட்டாலும் கேட்டவருக்கு வெற்றியே!

சக்ரராஜ ரதோயத்ர தத்ர கேய ரதோத்தம: |

யத்ர கேய ரதஸ் தத்ர  கிரி சக்ர ரதோத்தம: ||

ஏதத் ரத த்ரயம் தத்ர த்ரை லோக்யமிவ ஜங்கமம் |||

ஸம்பத்கரீ

66வது நாமமாக ஸஹஸ்ர நாமத்தில் வருவது இது:

ஸம்பத்கரீ சமாரூட சிந்துவ்ரஜ சேவிதா

இதன் பொருள்:

ஸம்பத்கரீ தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட யானைகளின் கூட்டத்தால் வணங்கப்படுபவள்.

ஸம்பத்கரீ தேவியானவள் அம்பாளின் சதுரங்க சேனை பலத்தில் யானை சைன்யத்திற்கு அதிகாரி.

அம்பாளின் ஆயுதங்களில் அங்குசத்திலிருந்து உருவானவள் இவ்ள்.

ஸம்பத்கரியின் வாகனமான யானைக்கு ரணகோலாஹலம் என்று பெயர்.

சுகசம்பத்யமான சித்த விருத்திக்கு ‘ஸம்பத்கரீ’ என்று பெயர். அதற்கு ஆதாரமான சப்தாதி விஷயங்களை யானைகளுக்கு சமமாக சொல்லப்பட்டிருக்கிறது.  அவைகளால் வணங்கப்படுபவள் என்பது பொருள்.

சுக சம்பத்கரீ என்றால் என்ன?

ஞானம் (அறிவு) ஞாத்ரு (அறிகின்றவன்), ஞேயம் (அறியப்படும் பொருள்)

 ஆகிய இந்த மூன்றுக்கும் த்ரிபுடீ என்று பெயர்.

இந்த மூன்றின் வித்தியாசங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை சம்பந்தப்படுத்தும் ஞான ரூபமான சித்தவிருத்திக்கு ‘‘சுக சம்பத்கரீ’ என்று பெயர்.

அஸ்வாரூடா

67வது நாமமாக வருவது இது:

அஸ்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி கோடிபிராவ்ருதா

அஸ்வாரூடா தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட கோடி கோடிக் கணக்கான குதிரைகளைக் கொண்டவள்.

அம்பாளுடைய சதுரங்க சேனா பலத்தில் அஸ்வாரூடா தேவி குதிரை சைனியங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டவள்.

அம்பாளுடைய ஆயுதங்களில் பாசத்திலிருந்து ஆவிர்பவித்ததால் அஸ்வாரூடா தேவியின் குதிரைக்கு அபராஜிதம் என்று பெயர்.

மந்த்ரிணீ, தண்டிணீ

அம்பாளுடைய சக்திகளில் மிக முக்கியமாக அருகிலேயே இருப்பவர்கள் இருவர்.

1) மந்த்ரிணீ 2) தண்டிணீ

மந்த்ரிணீ, தண்டிணீயைத் தாண்டி அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் அம்பாளை அணுக முடியாது.

இவர்களே மிக முக்கியமானவர்கள்.

ஸம்பத்கரீ, அஸ்வாரூடா போன்றவர்கள் இவர்களுக்கு உட்பட்டுத்தான் இருப்பர்.

இந்த இருவரும் எப்போதும் அம்பாளின் சந்நிதியில் இருப்பதாகவும் அம்பாளின் சேவையில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மந்த்ரிணீ தேவதை அம்பாளுக்கு பிரதான மந்திரி ஸ்தானம் வகிப்பவர். சங்கீதத்திற்கு அதிஷ்டான தேவதை ராஜ ச்யாமலை மற்றும் ஸங்கீத ச்யாமலை என்று பெயர். மந்த்ரிணீயிடம் அம்பாள் தனது ராஜ்ய பொறுப்பு அனைத்தையும் தந்து விட்டதாக 786வது நாமத்தின் மூலமாக நாம்

அறிய முடிகிறது. (மந்த்ர்ணீ ந்யஸ்த ராஜ்ய தூ:- 786)

சக்ரராஜ ரதம்

சக்ரராஜ ரதாரூட ஸ்ர்வாயுத பரிஷ்க்ருதா (68வது நாமம்)

இதன் பொருள்:

சக்ரராஜ ரதத்தில் ஆரூடமாயிருக்கும்படியான சம்ஸ்த ஆயுதங்களினால் அலங்கரிக்கப்பட்டவள்.

யுத்த காலத்தில் தேவிக்கு சமீபத்தில் சகல விதமான ஆயுதங்களும் சக்ர ராஜ ரதத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.

அம்பாளின் ரதத்தின் கொடிக்கு ‘ஆனந்த த்வஜம்’ என்று பெயர்.

இந்த ரதத்திற்கு 9 தட்டு உண்டு. 10 யோஜனை உயரம், 4 யோஜனை அகலம் கொண்ட ரதம் இது.

சக்ர ராஜ ரதம் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது இதுவே ஶ்ரீ சக்கரம் ஆகும்.

ஶ்ரீ சக்கரத்திலும் 9 பீரிவுகள் உண்டு.

1) த்ரைலோக்ய மோஹனம்

2) சர்வாசா பரிபூரகம்

3) சர்வசம்சேக்ஷாபணம்

4) சர்வ சௌபாக்யதாயகம்

5) சர்வார்த்தசாதகம்

6) சர்வரக்ஷாகரம்

7) சர்வரோகஹரம்

8) சர்வஸித்திப்ரதம்

9) சர்வானந்தமயம்

ஶ்ரீ சக்கரத்தில் உள்ள பிந்துவே அம்பாளின் இருப்பிடம்.

இதில் இருக்கும் ஆயுதங்கள் ஆத்ம ஞானம் அடைவதற்கான சாதனங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஆதமஞானம் அடைவது நிச்சயம். சக்தரஸித்தி ஏற்படுகிறது. அதுவே யோகம் என்று கூறப்படுகிறது.

சக்ர ராஜம் என்பது ஆறு அதாவது ஷட் சக்கரங்களை, ரத – ஆதாரமாகக் கொண்டது சக்ர ராஜ ரதம்.

இதை சக்ரேசத்வம் என்றும் கூறுவர்.

சகல ஆயுதங்களையும் கொண்டு அந்த ஷட் சக்கரங்களை அடக்க முடியும். இதை சுத்த வித்யா என்று கூறுவர்.

கேய சக்ர ரதம்

அடுத்து 69வது நாமம் இது:

கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா

இதன் பொருள்:

கேய சக்ரம் என்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் மந்த்ரிணீ தேவியால் வலம் வந்து சேவிக்கப்பட்டவள்.

இந்த ரதத்திற்கு 7 தட்டுகள் உண்டு.

கேய – பிரசித்தமான

சக்ர – சக்கரத்தை உடைய

ரதம் – ரதமான சூர்ய மண்டலம்

இதில் ஆரூடர்களாக இருக்கும்படியான மந்த்ரிணீ ஶ்ரீ வித்யா உபாசகர்களால் வணங்கப்படுபவள்.

இன்னொரு பொருள்

கேய – முக்கியமான

சக்ர ரதா – சக்ராகாரமான ரதத்தில் வீற்றிருக்கும் அம்பாளை

ஆரூட – புத்தியில் அநுசந்தானம் செய்யும்

மந்த்ரிணீ – மந்திர சித்தி உடையவர்களால் வணங்கப்படுபவள்.

கிரி சக்ர ரதம்

அடுத்த 70வது நாமம் கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா

இதன் பொருள்:

கிரி சக்ரம் என்கின்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் தண்டநாதையை முன்னிட்டிருப்பவள்.

கிரி என்றால் வராஹம் என்று பொருள். தண்டநாதையின் ரதம் வராஹ வடிவத்தில் இருப்பதால் அதற்கு கிரி சக்ர ரதம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

வாராஹிக்கு தண்டநாதை என்று பெயர்.

கிரி – கிரணங்கள் அதாவது சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றின்

சக்ரம் – சமூகமாகிய ரதத்தில்

ஆரூட – ஏறி இருந்தவளாக இருப்பினும்

தண்டநாத – யமனால்

அபரஸ்க்ருதா – ஸ்வாதீனம் செய்யப்படாதவள்.

அதாவது ஒரு யோகியானவன் சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றில் அகப்பட்டிருந்தாலும் கூட அவன் யம வாதனைக்கு உட்பட்டவன் அல்ல என்பது பொருள்.

வெற்றிக்கு வழி!

அம்பாளின் ரதம் மற்றும் முக்கிய இரு தேவதைகளின் ரதம் ஆகியவற்றின் பெயரை தினமும் கூறுவோம்; வெற்றியைப் பெறுவோம்.

*

குறிப்பு: மேற்கண்ட வியாக்யானங்கள் திரு ஜி.வி.கணேச ஐயர் அவர்களால் ஆர்யதர்மம் பத்திரிகையில் எழுதப்பட்டவை.

லலிதா சஹஸ்ரநாமத்தை பாஸ்கரராயரின் பாஷ்யத்திற்கு இணங்க அவர் அற்புதமாக விரிவுரை ஒன்றை ஆயிரம் நாமங்களுக்கும் எழுதினார்.

இது 1938ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி புத்தகமாக வெளி வந்தது.

அதில் தரப்பட்ட விளக்கத்தையே இந்தக் கட்டுரை மாறுதலின்றி தற்கால நடையில் தருகிறது. ஶ்ரீ ஜி.வி. கணேச ஐயருக்கு நமது அஞ்சலியும் நன்றியும் உரித்தாகுக!

***