Nirmala ji visited famous Hindu temples of Lord Shiva (sung by Saints Sambandar and Appar 1400 years ago) in Thirukona malai, Nallur Kandaswamy Temple in Jaffna. She visited tooth relic of Buddha at Kandy and paide respects to Buddhist saints. She attended other secular events. All news papers in Sri Lanka gave huge publicity for her.
Please see the photos taken from Newspapers:
According to 1000 year old Gita Govindam of Poet Saint Jayadeva, Gautama Buddha was Vishnu’s Ninth Avatar.
Nirmalaji visited Buddha’s tooth relic at Kandy and paid respect to Buddhist saints.
22. The stability of the world depends on those men alone, who are skilled in the arts and who display kindness to kinsfolk, compassion to others, deceit towards evildoers, friendship to good people, diplomacy to kings, honesty to the learned, bravery to foes, patience with elders and tact with women.
எல்லோரிடமும் அன்பு காட்டுதல்—
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு- 80
அன்பு இருக்கும் உடல் உயிருள்ள உடல்; அது இல்லாவிட்டால் அது பிணம் ( தோல் போற்றிய எலும்புக்கூடு)
xxx
பெரியார் துணைக்கு ஏங்கு—
உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்-442
இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக
23. Association with good people removes dullness of the intellect, infuses one’s speech with truth, confers dignity, removes sin, gives clarity and joy to the heart and brings fame in all directions. Tell me, what does it not do for men?
உண்மையுரைப்பிக்கும் உயர்மதியை யுண்டாக்கும்
ஒண்மைதிகழ் மானத்தை ஓங்குவிக்கும் — எண்மை
மறத்தையழிக்கும் மனத்தைக் கொழிக்கும்
புறத் தெங்குங் கீர்த்தி பொலிவிக்கும் திறத்த பல
சொல்லியென் மேலோர் தொடர்பு போல் நன்மை செய
வல்ல தொன்றெங்கு மிலை மற்று –-23
ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–
சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.
திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் (குறள் 416)
கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.
இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:
ஆழ்ந்த கல்விகற்ற, நவ ரசங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் புலவர்களின் புகழ் என்றும் குன்றாது. அப்பேற்பட்ட புலவர்கள் என்றும் வெல்வர். அவர்களுடைய புகழ் அழியும் என்ற பயமே இல்லை.
‘கவி’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் புலவர் என்ற பொருளும் , நெடுநோக்குடைய அறிஞர் என்றும் பொருளும் உண்டு. உண்மையில் வேத காலக் கவிஞர்கள் அப்படித்தான் இருந்தனர்.
Poets are Great men!
May There be glory to wise men who are learned and accomplished poets.. there is no fear that their fame shall wither or perish- 24
24. Victorious are the fortunate great poets, who have mastered the Rasas. Their body of fame knows no fear of old age and death.
உள்ளதொன்றுரைகின்ற ஒண் கவியாற் பாவாணர்
எள்ளும் மரணபவ மின்றியே – வில்லரிய
சத்தியமா ஞானியர் போல் தாவாத கீர்த்தியொடு
நித்தியமா வாழ்வார் நிசம் –24
—- subham —-
Tags- Nitisataka part 8, bhartruhari part 8, 4 languages, respect, poets
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 47
108.மருதநர் மடம் ஆஞ்சநேயர் கோவில்
Maruthanamadam Anjaneyar Kovil – Jaffna
மேலும் ஒரு ஆஞ்சனேயர் கோவில் பற்றிக் காண்போம்.. யாழ்ப்பாணத்திலுள்ள மருதன மடம் அனுமார் கோவில் அதன் கோபுரத்தாலும் 72 அடி உயர அனுமனின் கம்பீரமான சிலையாலும் புகழ் பெற்று விளங்குகிறது.. யாழ்ப்பணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
காங்கேசன் துறை நோக்கிப் பயணம் செய்யும் எவரும் கோபுரத்தையும் அனுமார் சிலையையும் பார்க்காமல் இருக்க முடியாது..மருதனமடம் ஆஞ்சநேயர் கோவிலின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, , பிரமிக்க வைக்கும் 72 அடி உயர அனுமன் சிலை ஆகும். கலங்கரை விளக்கம் போல இந்த கோபுர அமைப்பை தொலைவிலிருந்து பார்க்க முடியும்..
மருதனமடம் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி பூஜைகள் தவிர, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த நாட்கள் அனுமாருக்குப் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன,
கோவிலின் மண்டபம் மிகப்பெரியது ; வண்ண, வண்ண சிலைகளும் ஓவியங்களும் அலங்கரிப்பதோடு மிகவும் சுத்தமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இது ராமாயண காலத்துடன் நேரடி தொடர்புடையது அல்ல; ஆயினும் ராமாயணத்தில் அனுமன் கதாபாத்திரம் இல்லையேல் கதையே இல்லை என்பது நமக்குத் தெரியும். கண்ணகி மதுரையை எரித்து அதர்மத்தை அழித்தாற்போல , இலங்கையில் அதர்மத்தை அழிக்க உதவியவன் அவன். ஆகவே இலங்கைத் தமிழர்கள் என்று மறவாத மா வரன் ஆஞ்சனேயன் ; இந்து மதத்தில் ஒரே மஹாவீரன் பட்டம் பெற்றவன் அனுமன்தான். சமண மதத்தில் 24ஆவது தீர்த்தங்கரராக வந்த மஹாவீரர் என்ற மற்றொரு மாவீரனையும் உலகமே போற்றும்.
XXXXX
109. சீதா தேவி கோவில் , நுவரெலியா
இலங்கையிலுள்ள ராமாயண திருத்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்றது நுவரெலியா சீதை அம்மன் கோவில் ஆகும் இலங்கைத் தீவின் நடுநாயகமாகத் திகழ்வது மலையகம். இங்கு சீதா எலிய என்னும் இடத்தில் சீதை அம்மன் கோவில் அமைந்துள்ளது.. நுவரெலியா நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கோவில் இருக்கிறது இங்கேதான் இராவணன் சீதா தேவியை சிறை வைத்திருந்த அசோக வனம் இருந்தது எலிய என்றால் சமவெளி என்று அர்த்தம் . அருகில் சீதா கொண்ட என்ற ஓடை இருக்கிறது அங்குள்ள பள்ளங்களை ராவ ணனின் யானைகள் நின்ற கால் சுவடுகள் என்பர். இன்னும் சிலர் அனுமனின் கால் சுவடுகள் என்பார்கள். ஹக்கலா தாவரவியல் பூங்காவிலிருந்து 1 கிமீ தொலைவில் கோவில் உள்ளது. கோவில் அருகிலுள்ள கருப்பு நிற மண், இலங்கை நகருக்கு அனுமன் எரியூட்டியதால் ஏற்பட்டது என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஓடையில் மூன்று சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.. காலை பூஜை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை பூஜை பிற்பகல் 2 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடக்கிறது.
கோவில் சுவர்களில் ராமாயணக் காட்சிகளை ஓவியமாக வைத்துள்ளார்கள். அமைதியான சூழ்நிலையிலுள்ள சிறிய கோவில்தான் இந்த கோவிலில் ராமர், சீதா தேவி, லக்ஷ்மணன், அனுமன் , கிருஷ்ணர், கணேசர் ஆகியோரைத் தரிசிக்கலாம் .
சிவமயம் சங்கர சுவாமி இந்தக் கோவிலை ஸ்தாபித்தார். 5000 அடி உயர த்தில் அமைந்த இந்த மலைப் பிராந்தியத்தில் காட்டு மலர்கள் அதிகம் பூக்கின்றன. அவகைகளை பூஜைக்குச் சீதா தேவி பயன்படுத்தியதால் மலர்களுக்குக் கூட சீதா தேவியின் பெயர்கள்தான் !
இலங்கை அரசாங்கம் 2023ல் சீதா தேவி கோவில் தபால் தலையையும் வெளியிட்டு ராமாயணத்தைச் சிறப்பித்துள்ளது.
Xxxx
110.ருமசெல்ல / ராமா சைல அனுமார் மலை Rumasalla Mountain / Raama Saila= Herb Mountain
இலங்கையின் தென் கோடியில் இந்து மஹா சமுத்திரத்தின் கடலோரமாக காலி GALLE நகரம் இருக்கிறது. அங்கே அனுமார் சிலையும் அனுமன் மலையும் இருக்கிறது . ராம சைல = என்பது இப்போது ரூம செல என்று மருவிவிட்டது . சைலம் என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு மலை என்று பொருள் . இது ராமாயண சுற்றுலாவில் முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.
கடற்கரைப் பக்கத்தில் அடர்ந்த மலை, காடு , பீச்/ BEACH கடற் கரை அனைத்தும் கொண்டது ராம சைலம்.
லட்சுமணன் மூர்ச்சை அடைந்த போது அவனை உய்ப்பிக்க அனுமன் இம்மலைக்குச் சென்று சஞ்சீவி பர்வதத்தை/ மலையைக் கொணர்ந்தான் என்பது ராமாயணம் அறிந்தோருக்கு நன்கு தெரியும். உலகில் ரிக் வேதத்துக்கு அடுத்தபடியாக மூலிகை வைத்தியம் வருவது ராமாயணத்தில்தான் . . அனுமன் கொண்டு வந்த இமயமலைத் துண்டுகள் ஐந்து இடங்களில் விழுந்ததாகவும் அதில் ஒரு மருந்து மலை இங்கே விழுந்ததால் இது ராம சைல = RAMA SAILA = RUMA SALLA என்று பெயர் பெற்றதாகவும் பக்கதர்கள் பகர்கிறார்கள் .
இப்போது அங்கு இரண்டு அனுமன் சிலைகள் உள்ளன . ஜப்பானியர் கட்டிய சமாதான/ அமைதி பகோடாவில் PEACE PAGODA இந்துக் கடவுளருடன் ஆஞ்சனேயர் சிலையும் இருக்கிறது . விஷ்ணு , முருகன் சிலைகளும் ஜப்பானியர் கட்டிய புத்த விஹாரத்தில் இருக்கின்றன. இங்கு 150 வகையான மூலிகைகள் வளருவதை தாவரவியல் அறிஞர்கள் பட்டியலிட்டுள்ளதால் ராமாயண மருந்து மலை / சஞ்சீவி மலையின் பகுதி இதுவே என்பதும் உறுதியாகிறது
To be continued…………………………………
—SUBHAM—–
TAGS — இராமாயண தலங்கள், இலங்கை, ரூமசெல்ல , ராம சைல , ஆஞ்சனேயர் , சஞ்சீவி பர்வதம், மலை, மூலிகை, மருந்து மலை ,Part 47,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதியஇராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – பாகம் 2
பெங்களூர்நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின்உரிமையாளர்திருராஜேஷ்தேவராஜ்இந்த நூலைவெளியிட்டுள்ளார்.
நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:
1.தைலமாட்டுப் படலம்
2. கங்கைப் படலம்
3. குகப் படலம்
4. வனம் புகு படலம்
5. சித்திரகூடப் படலம்
6. பள்ளிபடைப் படலம்
பிற்சேர்க்கை
இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் மூன்றாவது நூலாக அமைகிறது.
நூலுக்கு வழங்கிய முன்னுரையில், “இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எளிதாக்கி மக்களிடையே கொண்டு செல்ல பல உபந்யாசகர்கள், சான்றோர்கள், சொற்பொழிவாளர்கள் அயராது பாடுபடுகின்றனர். இந்த வரிசையில் என்னுடைய சிறு முயற்சியாக பாலகாண்டத்தையும் அயோத்யா காண்டத்தையும் தொகுத்து வழங்கியுள்ளேன். கம்பரின் அயோத்தியா காண்டத்தைத் தொகுத்து இப்போது வழங்கியுள்ளதில் இந்த இரண்டாம் பாகம் மலர்கிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆங்காங்கே கம்பரின் இனிய கவிதைகளோடு இராமாயண வெண்பா, அருணாசலக் கவிராயரின் இராமநாடக கீர்த்தனை உள்ளிட்ட நூல்களிலிருந்து பாடல்களைத் தந்து ஒப்பிட்டு அவர் ஒவ்வொரு காட்சியையும் விவரிப்பது பல நூல்களின் சாரத்தை ஒருங்கே சேர்ந்து அருந்திய மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த நூலுக்கு திரு ச.நாகராஜன் அணிந்துரை வழங்கியுள்ளார்.
அதில் ஒரு பகுதி இது:
“மொழிவளம் மொழிகுவேனோ மொழிகதைத் தருண முன்னிப்
பொழிவளம் புகலு கேனோ! பொருள் வளம் புடைத்து விம்மிக்
என்று ‘கம்பராமாயண கௌஸ்துப மணி மாலையில்’ கம்ப பக்தர் பேராசிரியர் கே.என். சிவராஜ பிள்ளை கம்பனை வியந்து பாராட்டுகிறார்.
ஆனால் இந்த வேக யுகத்தில் கம்பனை இனம் காட்ட ஒருவர் வேண்டுமே! இந்த வகையில் தான் இராமாயணக் கடலில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டு ஆராய்ந்து அதில் உள்ள பல நல் முத்துக்களைக் கண்டு அவற்றை உலகினருக்கும் தரவல்ல ஒருவராகத் திகழ்கிறார் திரு ஆர். சேஷாத்ரிநாதன்.
அவரது இராமாயண ஈடுபாடும் ஆய்வும் பாராட்டுக்கு உரியது.”
*
பிற்சேர்க்கையில் அவர் இந்த நூலை எழுத உதவிய நூல்களின் பட்டியலைத் தருகிறார்.
காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.
அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.
இந்த நூல் பற்றிய விவரங்களைwww.pustaka.co.inஇணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம். படிக்க, டிஜிடல் வடிவத்தில் நூலைப் பெற, அச்சுப் பதிப்பாகப் பெற என இப்படி மூன்று விதங்களில் இந்த நூலைப் பெறலாம்.
19. Armlets and necklaces shining like the moon, do not adorn a person. Nor do baths, perfumes, flowers and decked hair. Refined speech alone adorns the person bearing it. All ornaments fade away; the ornament of speech is the only lasting one.
நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.
நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ
ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.
ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.
நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.
இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்
குஞ்சியகுங் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல- நெஞ்சத்து
நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்
கல்வியழகே அழகு- நாலடியார்
சிகை அலங்காரமோ, கரை போட்ட ஆடை அலங்காரமோ, மஞ்சள் முதலிய அலங்காரப் பூச்சுகளோ அழகல்ல. கல்வி கற்று நடு நிலையில் நிற்பதே அழகு.
இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது
உணர விரித்துரையாதார் – குறள் 650
கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு விளக்கமுடியாதவர்கள்
மலர்ந்தும் மணம் வீசாத மலர்களைப் போன்றவர்கள்.
சொல் அழகு
மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு
–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)
பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்றமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு
–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)
பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.
சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.
20. Learning is enhanced beauty. It is a hidden, guarded treasure. It gives enjoyment, fame and happiness. It is the greatest of great things. When travelling to foreign lands, it is a friend. It is the supreme deity. It is learning, not wealth that is venerated by kings. A person who is bereft of learning is indeed a beast.
கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;
அவனுடைய ரஹஸிய செல்வம் அது;
வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது.
‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;
வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்; கல்வியே உயர்ந்த கடவுள்.
மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர்– குறள் 410
பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)
வ்ரீடா சேத் கிமு பூஷணைஹி ஸுகவிதா யத்யஸ்தி ராஜ்ய்ரேன கிம் 1-21
பர்த்ருஹரியின் நீதி சதகம் பர்த்ருஹரி பாடல் 21
பாடல் 21-ன் பொருள்
மன்னிக்கும் குணம் உள்ளவனுக்கு கவசம் எதற்கு?
கோபம் உள்ளவனுக்கு எதிரிகள் எதற்கு?
ஒருவனுக்கு அறிவு இருந்தால் தீயதை எரிக்க தீ எதற்கு?
உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?
தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?
நல்ல விவேகம் இருந்தால் பணம் எதற்கு?
நல்ல குணங்கள் இருந்தால் ஆபரணங்கள் எதற்கு?
கவிதையை ரசிக்கத் தெரிந்துவிட்டால் அவனுக்கு ராஜ்யம், அரசாட்சி எதற்கு?
21. When one has forgiveness, what need is served by an armour? When there is anger, why do people need (other) enemies? What use is there for fire when kinsfolk exist (to cause destruction)? What purpose can medicines serve when there is a friend (to help healing)? If there are evil people, serpents are not necessary and neither is wealth, when there is defect-free learning. What is the use of ornaments when one has modesty, and if one has beautiful poetry, even kingship has no value.
மன்னிக்கும் குணம்–
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்- 314
உனக்கு துன்பம் விளைவித்தவர்க்கு நன்மைகள் பல செய்து அவர்கள் வெட்கப்படும்படி செய்க; அவர் செய்த கெடுதிகளையும் மறக்க.
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றமாகும் இறைக்கு- குறள் 436
தன்னுடைய குற்றத்தை ஆராய்ந்துவிட்டு, மற்றவர் குற்றத்தை
ஆராய்க; இதில் என்ன கஷ்டம்?
பொறுமையே சட்டை பொறாமை பகைவர்
வெறுமை மனத்தாயத்தார் வெந்தீ மறுவிலா நேசர்
மருந்து நிலவுலகிற் பொல்லாத
நீசரரவம் நிசம் –
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடனுறைந்தற்று- 890
ஒரே கருத்து இல்லாதவருடன் வாழ்தல், குடிசையில் பாம்புடன் வசிப்பது போலாகும்.
கோபம் பற்றி வள்ளுவன்
சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்- 306
(சேர்ந்தாரைக் கொல்லி= ஆஸ்ரயாசஹ)
கோபப்பட்டவனை கோபம் என்னும் நெருப்பே அழித்துவிடும்; அவனுக்குத் துணையாக நின்றாரையும் அழித்துவிடும் (நெருப்பு போல)
—–subham——-
Tags- Bhartruhari, Part 7, 4 languages, Slokas 19,20, 21
PTI Story is published in The New Indian Express and The Week
Vasundhara Raje had reportedly stayed inside the temple for the entire duration of the counting of votes of the 2013 assembly polls – which she won – and stayed there till the results were declared.
Published: 02nd November 2023 07:58 PM | Last Updated: 02nd November 2023 07:59 PM
By PTI
BANSWARA: Around election time, a temple in Rajasthan’s Banswara district becomes a favourite of politicians seeking some divine intervention.
Former chief minister Vasundhara Raje is said to be a firm believer of the temple deity, Maa Tripura Sundari, who the devout say helps people seeking power or an “empire” (samrajya).
And politicians across party lines, from village heads to ministers, are regular visitors to the Tripura Sundari temple in Umrai village
“Maa Tripura Sundari blesses devotees who seek ‘samrajya’, which is visits by those wishing to contest the assembly polls has increased,” Nikunj Mohan Pandya, a priest at the temple, told PTI.
Polling in all 200 assembly constituencies in Rajasthan will take place on November 25 and counting will be held on December 3.
“Those wishing for ‘samrajya’ and success in politics visit the temple and pray to Maa Bhagwati (Tripura Sundari). Leaders from different political parties visit the temple. Some have immense faith, and regularly visit and offer prayers. Sadhna is performed at the temple,” he said.
Pandya said that erstwhile kings and rulers would offer prayers before every important battle.
Raje, who often visits the temple, had reportedly stayed inside the temple for the entire duration of the counting of votes of the 2013 assembly polls – which she won – and stayed there till the results were declared.
Chief Minister Ashok Gehlot and several state ministers have also visited the temple this year.
Temple manager Jagesh Panchal said that Prime Minister Narendra Modi has also visited the temple when he was the Gujarat chief minister.
Apart from him, former president Pratibha Patil, many union ministers, CMs of other states have also come for darshan.
On Thursday, Union Minister of Tribal Affairs Arjun Munda offered prayers at the temple.
Pandya said that renovation of the temple has been done from time to time by Panchal samaj, who manage the temple.
Major development works outside the temple were also done during Raje’s tenure as CM.
Deputy leader of opposition Satish Poonia, who also frequents the temple, told PTI, “The place of Tripura Sundari is full of energy. People visit and pray to the goddess so that they can work with more enthusiasm in service of the people in society.”
He said the idol of Tripura Sundari inspires people and that he has strong faith in the deity.
Apart from politicians, a large number of regular devotees also offer prayers at the temple.
Located at a distance of 14 km from Banswara district headquarters, the Tripura Sundari temple is said to be centuries-old but the exact date of its establishment is unclear.
It is said that earlier there used to be three forts named Shaktipuri, Shivpuri and Vishnupuri around the temple and since it was situated in the middle of the forts, Goddess Bhagwati was named Tripura Sundari.
In the sanctum sanctorum, there is a black-coloured grand and attractive idol of the deity with eighteen arms, carrying different weapons in each.
Other small idols, called Das Mahavidya, are also present.
Shri Yantra is engraved at the bottom of the idol, which has its own special tantric significance.
“For centuries, the temple has been a famous worship centre for ‘Shakti’ seekers. People from far and wide come and bow their heads at this Shaktipeeth. During Navratri festival, special programmes take place every day in the temple’s courtyard,” he said.
Priest Ganesh Sharma said, “Due to Jagat Janani Tripura Sundari Shaktipeeth, this place is alive, energetic and powerful.”
President of the temple trust Kanti Lal and general secretary Natwar Lal said that a lot of development work has been done over the years.
They said that people from all over Rajasthan and other states, including Madhya Pradesh, Gujarat, Maharashtra, visit the temple.
During Navratri, special programmes are organised and lakhs of devotees visit the temple, they added.
Ashok Panchal, former president of the trust said, “Whatever wish is asked in this temple, it is definitely fulfilled by Maa Tripura. Due to its importance, many big leaders of the country have come to the temple to bow their heads before the goddess,” he said.
—-subham—-
Tags- Tripura Sundari, Rajasthan, Banswara, Election Time
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 46
105.நாகர் கோவில் கப்பல் திருவிழா
தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் மரத்திற்குக் கீழே நாகர் சிலைகள் இருப்பதைக் காணலாம். இலங்கையில் நாகர் / பாம்பு சிலைகள் தனி சந்நிதிகளிலேயே காணப்படுகின்றன. இலங்கையில் நாகர் வழிபாட்டுக்குப் புகழ்பெற்ற ஊர் நாகர் கோவில் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவில் போலவே ஊர்பெயரும் கோவிலும் உடைத்து.
இந்த ஊர் ஒரு காலத்தில் நாகர் ஆட்சியின் தலைநகராக இருந்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு; இதை மெய்ப்பிக்கும் வகையில் பழங்காலக் காசுகளும் இந்த ஊரில் கிடைத்துள்ளன.
பருத்தித்துறை நகரிலிருந்து 12 மைல் தொலைவில் நாகர்கோவில் இருக்கிறது இதன் அருகில் இருக்கும் வல்லிபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட தங்க கல்வெட்டில் நாகர் ஆட்சி பற்றியும் குறிப்பு உளது. அருகில் செம்பியன்பட்டு முதலிய ஊர்கள் இருப்பது ஒரு காலத்தில் நடந்த சோழர் ஆட்சிக்கும் சான்று பகர்கின்றன .
நாக தம்பிரான் சந்நிதியில் பாம்புடன்சிவன் இருக்கிறார். தம்பிரான் என்ற சொல்லை சிவபிரானுக்கும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பயன்படுத்துகிறார். கோவிலைச் சுற்றி நான்கு தீர்த்தங்கள் இருக்கின்றன அவை பல வியாதிகளைக் குணப்படுத்தும் என்று பக்தர்கள் நினைக்கிறார்கள். பாம்புக்கடிக்கும் பலவியாதிகளுக்கும் கைகண்ட மருந்தான மூலிகையும் இங்கே வளருகிறது
நாகர்கோவிலில் கப்பல் திருவிழா
புரட்டாசி மாதத்தில் இங்கு வரலாற்றுச் சம்பவம் ஒன்றினை நினைவுகூறும் கப்பல் திருவிழா நடக்கிறது பத்து நாள் உச்சவத்தில் முக்கிய விழா ஏழாம் நாள் இரவில் நடக்கும்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், போர்ச்சுக்கீசிய வணிகர்கள் வந்து பொருட்களை விற்றனராம். தங்களுக்கு ஊழியம் செய்ய 100 இளைஞர்கள் வேண்டும் என்று சொல்லி பொருள் ஆசை காட்டினராம். அதற்கு ஊர் மக்கள் இணங்கவில்லை. உடனே அவர்கள் வலுக்கட்டாயமாக 100 இளைஞர்களைப் பிடித்து கப்பலில் ஏற்றினர். உடனே அவர்கள் இறைவனை வேண்ட , ஆண்டவனே பாம்பு உருவத்தில் வந்து அதிசயம் நிகழ்த்தி பறங்கியரை அடி பணிய வைத்தார்.
கப்பல் தலைவன் பாய் மரத்தை அவிழ்த்து கப்பலை ஓட்டுவதற்கு முனைந்தபோது, விரித்த பாய் மரத்தில் ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது. அதனை அவன் கத்தியால் வெட்டியவுடன் நூற்றுக்கணக்கான பாம்புகள் அங்கே நெளிந்து அவனை அச்சுறுத்தின. உடனே கப்பலில் இருந்த இளைஞர்கள் இது நாக தம்பிரானின் செயல் என்றும் தங்களை விடுவித்தால் பிரச்சினை தீரும் என்றும் அறிவுரை சொன்னார்கள். கப்பல் மாலுமியும் அதற்கு இணங்கியபோது பாம்புகளும் மறைந்தன. அப்போது முதல், பக்தர்கள் நூற்றாண்டுக் கணக்கில் இவ்விழாவினைக் கொண்டாடிவருகின்றனர்.
இந்த தல புராணத்தில் சுவையான கூடுதல் செய்திகளும் உண்டு. நாகர்கோவில் இளைஞர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று மாலுமி கேட்டபோது, அவர்கள் வெள்ளை நிற விபூதியை நெற்றியில் அணிந்திருப்பார்கள் என்று மக்கள் சொன்னார்கள். அதுமட்டுமின்றி அவ்வாறு வெண் பொட்டு ஆட்களை விடுவித்த பின்னரும் கப்பல் நகரவில்லையாம். கப்பல் அறை எண் 18-ல் ஒரு முதிய மாதுவை வேலை செய்ய பிடித்து அடைத்துவைத்துள்ளார்கள். அந்த மாது இந்த ஊரைச் சேர்ந்தவள் என்று ஊர் மக்கள் சொல்லவே அந்தப் பெண்மணியயையும் பறங்கியர் விடுவித்தனர். கப்பலும் நகர்ந்தது.
கப்பல் உற்சவம் பற்றிய 2023 அறிவிப்பு
24.09.2023 ஆரம்பமாகி , .11 தினங்கள் இடம்பெறும் உற்சவத்தில் , 29 ஆம் திகதி பாம்பு திருவிழாவும், 30ஆம் திகதி கப்பல் திருவிழாவும், முதலாம் திகதி வேட்டைத் திருவிழாவும், இரண்டாம் ஆம் திகதி சப்பர திருவிழாவும், மூன்றாம் திகதி சமுத்திர தீர்த்தமும், புதன்கிழமை பட்டுத் தீர்த்தமும் இடம்பெறவுள்ளன.
இது விழாவில் வரிசைக்கிரமத்தில் என்ன என்ன நிகழும் என்பதை அறிவிக்கிறது தற்காலத்தில் பல ஊர்களில் நாக தம்பிரான் உற்சவங்கள் நடக்கின்றன.
xxx
இலங்கையில் 52 ராமாயண தலங்கள்
இலங்கையில் கன்னியா வெந்நீர் ஊற்றுகள், வில்லூண்டி தீர்த்தம், திருகோணமலை ராவணன் பாறை , பல அனுமார் தலங்கள் , சீதை கோவில், ராமர் பூஜித்த லிங்கங்கள் என 52 ராமாயண திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றைக் காண்போம். முதலில் அனுமார் கோவில்களில் துவங்குவோம் .
106.இலங்கையில் ஆஞ்சனேயர் கோவில்கள்
106.கொழும்பு நகர ஆஞ்சனேயர் கோவில் Panchamuga Anjaneyar Temple
கொழும்பு நகரத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் கல்கிசை பகுதியில் ஒரு அனுமன் கோவில் கட்டப்பட்டுள்ளது 1996ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தக் கோவிளுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. ராமர், அனுமன், விநாயகர், முருகனுடன் சமண மதத்தைச் சேர்ந்த பார்ஸ்வநாதர் சிலையும் இருப்பது ஒரு சிறப்பு.
இரண்டாவது சிறப்பு ஆஞ்சனேயருக்கு தனியாக தேர் உள்ள கோவில் இது. இங்கு நின்று அருள்புரியும் ஆஞ்சனேயர் , பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆவார் .
Panchamuga Anjaneyar Temple location / access
No 3/11, Sri Bodhirukkarama Road, (Vihara Lane) Kalubowila, Dehiwela,
Xxxx
107 .இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்
நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை நகருக்கு அருகிலுள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இலங்கை சின்மயா மடாலயத்தினரால் நிருவகிக்கப்படுகிறது. ராம- ராவணன் யுத்தத்தில் ராமருக்கு உதவ ஒரு படை இங்கே இருந்தது. ராமர் படை என்பது இறம்பொடை என்று மருவி விட்டது.
இந்த ஆலயம் சுவாமி சின்மயானந்தரின் விருப்பத்துக்கேற்ப 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் சுவாமிகள் இலங்கை வந்திருந்த போது, இந்த இறம்பொடையில் உள்ல வெவண்டன் மலைப் பகுதியைக் கண்டு, அதற்கு “இராம்போதை” (இராமர் பற்றிய அறிவு) என்ற பெயரையும் சூட்டி, மும்பையில் உள்ள குருகுல வேதாந்தக் கல்வி நிலையம் போன்று இலங்கையிலும் அதுபோன்ற ஆசிரமத்தை இவ்விடத்தில் அமைக்க வேண்டினார்..
1996 -ஆம் ஆண்டில் சுவாமி தேஜோமயானந்தர் இலங்கைக்கு வந்தபோது இவ்விடத்தில் பக்த அனுமன் ஆலயம் அமைக்க ஆசி வழங்கினார். 1997 ஆம் ஆண்டில் ஆலயத்துக்கான பூமி பூசை நடைபெற்றது. மகாபலிபுரத்தில் 18 அடி உயர அனுமர் சிலை வடிவமைக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டில் இவ்விடத்தில் பிரதிட்டை செய்யப்பட்டது. பின்னர் 2001 ஏப்ரல் 8 ஆம் நாள் குடமுழுக்கு நடைபெற்றது. பெளர்ணமி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆன்மீகப் பணிகளுடன் கல்வி, சமூகப்பணிகளையும் ஆலயத்தினர் செய்து வருகின்றனர்.
To be continued…………………….
—subham—
Tags- கப்பல் திருவிழா , நாகர்கோவில், நாக தம்பிரான், இலங்கை,part 46, இராமாயண, தலங்கள் , அனுமார், கோவில், ஆஞ்சனேயர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஆர்டிகிள் 370 என்ன சொல்கிறது?
ச.நாகராஜன்
இந்திய அரசியல் சாஸனத்தில் ஆர்டிகிள் 370 ஒரு முக்கியமான பிரிவாக அமைகிறது.
இது என்ன சொல்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டியது கடமையாகும்.
ஆர்டிகிள் 1 மற்றும் ஆர்டிகிள் 370 மட்டுமே ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என்று முதலிலேயே ஆர்டிகிள் 370 கூறி விடுகிறது.
அப்படியானால் இந்திய அரசியல் சாஸனத்தின் இதர பிரிவுகள்???
அங்கு செல்லாது என்று அர்த்தம்.
இனி ஆர்டிகிள் 370இல் உள்ள முக்கியக் அம்சங்களைப் பார்ப்போம்.
· ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கு இரட்டை குடியுரிமை உண்டு.
· ஜம்மு-காஷ்மீரின் தேசீயக் கொடி இந்திய தேசியக் கொடியை விட வேறானது.
· ஜம்மு-காஷ்மீரின் சட்டசபையின் ஆயுள் காலம் ஆறு வருடங்கள். ஆனால் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களில் உள்ள சட்டசபையின் ஆயுள் காலம் ஐந்து வருடங்கள் மட்டுமே தான்!
· ஜம்மு-காஷ்மீரில் உள்ள குடிமக்கள் இந்திய தேசீயக் கொடியை இகழ்ந்தால் அது குற்றமாகாது. அது போலவே இந்தியாவின் இதர தேசீய அடையாளங்களை இகழ்ந்தாலும் அது குற்றமாகக் கருதப்படமாட்டாது.
· ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கு இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் செல்லாது.
· ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்த மட்டில் இந்திய அரசு மிகவும் சில ‘எல்லைக்குட்பட்ட’ விஷயங்களில் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும்.
· ஜம்மு-காஷ்மீரில் ஒரு காஷ்மீரிப் பெண் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களைச் சேர்ந்த ஒரு ஆணை மணம் புரிந்தால் அந்தப் பெண்ணுக்கான காஷ்மீர் குடியுரிமை ரத்தாகி விடும்.
· ஆனால் அதே காஷ்மீரிப் பெண் ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆணை மணம் புரிந்தால் அந்த ஆணுக்கு ஜம்மு-காஷ்மீர் குடியுரிமை கிடைத்து விடும்.
· ஆர்டிகிள் 370 இருப்பதால் ஜம்மு-காஷ்மீரில் மட்டும் RTI எனப்படும் RIGHT TO INFORMATION சட்டப்படி செல்லுபடியாகாது. இதே போலத் தான் இங்கு RTE எனப்படும RIGHT TO EDUCATION மற்றும் CAG சட்டப்படி செல்லுபடியாகாது.
· ஆர்டிகிள் 370 இருப்பதால் ஒரு பாகிஸ்தானிய ஆண் தனக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும் என்று நினைத்தால் அவன் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்!
ஆனால் இது தற்காலிகமானது என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.
ஆனால் பற்பல வருடங்கள் கடந்தும் கூட இந்த தற்காலிக சட்டப்பிரிவு அப்படியே இருந்து வந்துள்ளது.
இதை ஆழ்ந்து படிப்போர் இது பாரபட்சமான ஒரு பிரிவு என்பதை நன்கு உணர முடியும்.
இதையொட்டிய ஒன்று தான் 35A என்ற பிரிவு.
ஆகவே இந்த தற்காலிகத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பது தான் மோடி அரசின் முடிவு. இதுவே இந்திய மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் உள்ளார்ந்த ஆசையும் கூட.
இதற்கு முதற்படி எடுத்து வைத்தது மோடி அரசு.
இதன் படி 35A இன் பல அம்சங்கள் நீக்கப்பட்டு விட்டன!
இன்னும் சில அடிப்படை உரிமைகள் ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்த மட்டில் இந்திய மக்களுக்கு கிடையாது. அங்கு சொத்து வாங்க முடியாது. வணிக நிறுவனம் ஆரம்பிக்க முடியாது. இவை போன்ற சர்ச்சைக்குரிய பல அம்சங்கள் உண்டு.
ஆகவே முழுவதுமாக ஆர்டிகிள் 370 மற்றும் 35A திரும்பப் பெறப்பட வேண்டும்.
அது சீக்கிரமே வரட்டும் என்பது தான் இந்திய மக்களின் ஒட்டு மொத்த ஆசை.
இது வேண்டாம் என்று கூறும் சிலரை அரசியல் ஆதாயத்தைத் தேட நினைக்கும் தேச விரோத சக்திகளோ என்று மக்கள் சந்தேகப்படுவது இயல்பே!
***
ஆதாரம், நன்றி :- கல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் TRUTH – VOLUME 84 ISSUE – 5 (DATED 17-3-2017), KASHMIR,
மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.
அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?
இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்
வெள்ளதால் /வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க
உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதென்னே
XXXX
SLOKA 17
இன்னுமொரு பாடல்
अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्
तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥
அதிகத பரமார்த்தான் பண்டிதான்மாவ மம்ஸ்தாஸ்
த்ருணம் இவ லகு லக்ஷ்மீர்நைவ தான் ஸம்ருணததி
அபிநவமதலேகா ஸ்யாமகண்டஸ்தலானாம்
ந பவதி பிஸந்துர் வாரணம் வாரணானாம்
எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை
அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்
முகம் கருத்த யானைகளை தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?
உண்மை வித்துவான்களைநீ உல்லிங்கனஞ் செய்யேல்
எண் மையதன்னார்க்குன் இருநிதியம் — நண்ணு மதைக்
கண்டுன் பாற் சேரார் கரியையொரு தாமரை நூற்
கொண்டே கட்டலாகுமோ கூறு –17
xxx
SLOKA 18
இன்னுமொரு பாடல்
अम्भोजिनीवनविहारविलासम् एव
हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां
वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥
அம்போஜினீவன விஹார விலாஸம் ஏவ
ஹம்ஸஸ்ய ஹந்தி நிதராம் குபிதோ விதாதா
ந த்வஸ்ய துக்தஜல பேதவிதௌ ப்ரசித்தாம்
வைதக்தீ கீர்த்திம் அபஹர்தும் அசௌ ஸமர்த்தஹ
பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.