இந்துக் கடவுளரில் அதிகம் அடி வாங்கியவர் சிவன்தான் என்று மதுரைத் தமிழ் அறிஞர் .சொ சொ மீ சுந்தரம் இன்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டார் துர்க்கை அம்மன் குறித்து உரை நிகழ்த்திகையில் இதையும் குறிப்பிட்டார். எளிதில் வசப்படும் சிவன், , கருணை காரணமாக எல்லோருக்கும் உடனே வரம் தருகிறார்.
பாசுபதம் பெறச் சென்றபோது அர்ஜுனன் வில்லால் அடித்தான். கண்ணப்பன் செருப்போடு அவர் மீது காலை வைத்தான். மாணிக்கவாசகர் முதுகில் பாண்டியன் அடித்த போது அந்த அடியையும் வாங்கினார் என்றார்
(இத்தோடு சாக்கிய நாயனார் கல்லால் அடித்ததையும், .தருமி பொற்கிழி வழக்கில் சிவனை நக்கீரர் சொல்லால் அடித்ததையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம் )
சொ சொ மீ சுந்தரம் , 51 ஆண்டுகளுக்கு சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசித்தவர் .மூன்று முறை கயிலை சென்று தரிசனம் செய்தவர்..
போகாத கோவில் இல்லை; பேசாத நாள் இல்லை ..
பட்டி மன்றம் புகழ், மதுரைத் தமிழ் அறிஞர் .சொ சொ மீ சுந்தரம் லண்டனுக்கு வருகை புரிந்துள்ளார் .
இன்று 10-7-2023 அன்று லண்டன் ஈலிங் பகுதியில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோவிலில் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோவில், லண் டன் கனக துர்க்கை அம்மன் கோவில் வரலாறுகளை அழகுபடச் சொன்னார்
(மதுரை தினமணி அலுவலத்தில் எனது தந்தை ஆண்டுதோறும் நடத்தீய பட்டி மன்றங்களில் சுமார் 40 , 50 ஆண்டுகளுக்கு முன்னர் சொ சொ மீ சுந்தரம் பேசியது இன்றும் நினைவில் நிற்கிறது )
தான் ஆஸ்திரேலியா சென்றாலும் அங்கும் யாழ்ப்பாணத் தமிழர் கோவில்களையே கண்டதாகவும் அவர்களுடைய இந்து மத சேவையை வணங்குவதாகவும் சொ சொ மீ சுந்தரம் குறிப்பிட்டார்.
லண்டன் கனக துர்க்கை வழிபாடு 1991ல் துவங்கி, முதல் கும்பாபிஷேகம் 1999லும் , இரண்டாவது கும்பாபிஷேகம் 2011 ஆம் ஆண்டிலும், இப்போது மூன்றாவது கும்பாபிஷேகம் சென்ற ஜூன் மாதத்திலும் நடந்ததை எடுத்துரைத்ததார் .
முன்னதாக பட்டர் பேசுகையில் இன்று ஆலயத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் குருபூஜை என்பதை அறிவித்தார் . அதைக் குறிப்பிட்டும் பேசிய சொ சொ மீ சுந்தரம் , இத்தகைய குருபூஜைகள் தமிழ்நாட்டுக் கோவில்களில் அரிதாகிவிட்டது என்றார்.. சுந்தரர்– ஏயர்கோன் கலிக்காம நாயனார் மோதல் பற்றியும் பின்னர் சிவ பெருமானின் கருணைக்கு அவர் ஆளானதையும் சுவைபட விளக்கினார்
18-7-2023 வரை காலை 11 மணிக்கும், மாலை 7 மணிக்கும் 60 நிமிட சொற்பொழிவுகளை சொ சொ மீ சுந்தரம் வழங்குகிறார்.
பெங்களூரு நகரிலிருந்து 50 மைல் தொலைவில் விதுரர் அஸ்வத்த / அரச மரம் இருக்கிறது. மஹாபாரத புகழ் விதுரர் , யுத்தத்துக்குப் பின்னர் தென்னாட்டுக்கு வந்த பொழுது நட்ட அரச மரம் என்று கருதப்படுகிறது. இதனால் இது வழிபாட்டுக்குரிய இடமாககே கருதப்படுகிறது. இதே போல புத்தரின் போதி /அரச மரம் இலங்கை வரை சென்றதை நாம் அறிவோம். பழைய மரம் பட்டுப்போவதற்குள் புதிய மரம் முளைப்பதால் தொடர்ச்சி காணப்படுகிறது. மஹாபாரத யுத்தம் கலியுகம் துவங்கும் முன் நடந்ததால் விதுர அஸ்வத்த மரம் குறைந்தது 5000 ஆண்டு பழமை உடைத்து. .கெளரிபி டானூர் அருகில் இது இருக்கிறது. இங்கும் குழந்தை பிறக்காதோர், நாக தோஷம் விலகுவதற்காக வைத்த எண்ணற்ற நாகர் சிலைகளைக் காணலாம்.
அரச மரத்தில் பிரம்மா , விஷ்ணு, சிவன் மூவரும் உறைவதாக இந்துக்கள் கருதுவதால் இந்துக்கள் அதைச் சுற்றி வலம் வந்து வணங்குவார்கள் . அதன் கீழ் பிள்ளையார் அல்லது நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்
சிக்கபலபூர் வட்டாரத்தில் பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமன் நிறுவிய பீமலிங்கேஸ்வர் சிவன் கோவில் இருக்கிறது ; இதிஹாஸக் கதையாலும், கலை அம்சத்தாலும் இந்தக் கோவில் சிறப்பு பெறுகிறது.
மஹாபாரத காலத்தில் இதற்கு ஏக சக்ர புரம் Ekachakrapuram என்று பெயர் இருந்ததாம். அங்கு மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த பகாசுரன் Bakasura என்பவனை பீமன் கொன்ற பின்னர், சிவனை நோக்கி தவம் புரிந்ததாகவும், சிவன் அவர் முன் தோன்றியதாகவும் ஸ்தல புராணம் சொல்லும்.சிவனுக்கு பீமன் ஒரு கோவிலைக் கட்டினார்.
கைவர நாராயண தட்டய்யா Saint Narayanappa (1730-1840 ADನಾರಾಯಣ ತಾತ)
தெலுங்கு, கன்னட மொழிகளில் விஷ்ணுவின் புகழ் பாடிய புலவர் கைவர நாராயண தட்டய்யா , அருகிலுள்ள குகையில் சிறுத்தை, புலி சூழ தவம் செய்தாராம். ஜீவ சமாதி சடங்கின்படி அவர் உயிருடன் புதைக்கப்பட்டார். அவருடைய யோகி நாராயண ஆஸ்ரமம் இந்த ஊரில் இருப்பது கூடுதல் சிறப்பும் ஆகும்.
Amara Narayana Temple அமர நாராயணா கோவில்
இங்கு அமர நாராயணர் கோவில் , கன்யகா பரமேச்வரி Kanyakaparameshwari Temple கோவில்களும் இருக்கின்றன. குன்றில் பீமன்- பகாசுரன் சண்டையைக் காட்டும் காலடிச் சுவடுகளும் காணப்படுகின்றன.
xxxxx
25.விஸ்வ சாந்தி ஆச்ரமம் BHAGAVAD GITA MANDIR
பெங்களூர் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில், தும்கூர் ரோட்டில் உள்ள விஸ்வ சாந்தி ஆச்ர மம் 1982ல் கேசவ்தாஸ் சுவாமிகளால் உருவாக்கப்பட்டது. தற்காலக் கோவில் என்றாலும் இங்கே குறிப்பிட்டத்தக்க பல கடவுள் சிலைகள் உள்ளன.விஷ்ணுவின் அவதாரமான விட்டல் சிலை 36 அடி உயரத்துக்கு கம்பீரமாகக் காட்சி தருகிறது .சந்தோஷி மாதா சந்நிதி, காயத்ரி, துளசி மாடம் ,, விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், 7 புனித நதிகளைக் குறிப்பிடும் 7 நதி தேவதைகள், அஷ்ட லெட்சுமி, துர்கா சிலைகளும் இருக்கின்றன
எல்லாவற்றுக்கும் மேலாக 700 பகவத் கீதை ஸ்லோகங்களை பல மொழிகளில் பொறித்து வைத்துள்ள பகவத் கீதை மந்திரும் இருக்கிறது. கிருஷ்ண அர்ஜுன ரதம் பெரிய அளவில் முகப்பில் காட்சி தருகிறது.
XXXXX
. 26.நான்கு முக மலையில் 4 கடவுள்
பெங்களூர் நகரிலிருந்து 56 கி.மீ தொலைவில், தும்கூர் ரோட்டில் 4600 அடி உயரமுள்ள அதிசய மலை இருக்கிறது கிழக்கிலிருந்து பார்த்தால் நந்தியாகவும், மேற்கிகிலிருந்துபார்த்தால் கணபதியாகவும்,, தெற்கிலிருந்து கண்டால் லிங்கமாகவும், வடக்கிலிருந்து கண்டால் படம் விரித்தாடும் பாம்பாகவும் காட்சி தரும் . கர்நாடகம் முழுதும் பாம்பு/ /நாகர் வழிபாடு உண்டு. இந்த இடத்தின் பெயர் சிவகங்கே..
கங்காதரர் சிவன் கோவிலும் ஹொன்னாதேவி அம்மன் கோவிலும் பாதாள கங்கை என்னும் இயற்கை நீரூற்றும் இருப்பதால் புனிதத்துவம் மிக்க இடமாகக் கருதப்படுகிறது.
XXXX
பெங்களூர் நகரிலிருந்து 70 கி.மீ தொலைவில் சித்த கங்கா க்ஷேத்ரம் இருக்கிறது . இது ஒரு குன்று. வீரசைவத் துறவி சித்தலிங்கேஸ்வரர் சமாதி அடைந்த இடம். ஒரு இயற்கை நீரூற்றும் உள்ளது .
Xxxxx
27.தேவராயண துர்கா Devarayana Durga
தேவராயண துர்கா ஒரு மலை. துர்க என்றால் கோட்டை. இந்தக் குன்றில் பல கோவில்கள் இருந்தாலும் யோக நரசிம்மர் போக நரசிம்மர் கோவில்கள் மிகவும் பிரசித்தமானவை . நிறைய பக்தர்களை ஈர்க்கும் கோவில். இந்த இடம் துமக்கூர் அருகில் இருக்கிறது. மலையில் உள்ள வற்றாத நாமதா சிலுமே என்ற இயற்கை ஊற்று பற்றி ஒரு கதையும் உண்டு. சீதாதேவிக்குப் பொட்டு வைக்க தண்ணீர் இல்லாததால் ராம பிரான் தனது அம்பால் ஒரு ஊற்றை உண்டாக்கினார் என்பதும் அதுவே இன்றும் தண்ணீரை வழங்குகிறது என்பதும் நம்பிக்கை..
To be continued………………………………
Tags – கர்நாடக மாநிலம், 108 , புகழ்பெற்ற, கோவில்கள் – 4, அரச மரம், வழிபாடு, விதுரர், பீமன், ஊற்று , நான்கு முக மலை
2.மாணிக்கவாசகர் காலத்தில் நடந்த நரி-பரி திருவிளையாடலை யார் முதலில் குறிப்பிடுகிறார். அதிலிருந்தது நமக்குத் தெரிவது என்ன ?
xxxxx
3.மாணிக்கவாசகர் கால பாண்டிய மன்னர் யார்?
XXXXX
4.மாணிக்கவாசகர் பற்றி இன்றுவரை துலங்காத மர்மம் என்ன?
XXXXX
5.மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் தவிர அவர் வேறு என்ன நூல்
பாடினார்?
xxxxx
6.மாணிக்கவாசகர் பாடிய நூலில் அவரே குறிப்பிடும் மன்னர் பெயர் என்ன ?
xxxxx
7. திருவாசகத்தை முழுதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? சைவத் திருமுறைகளில் அது எங்கே இடம்பெறுகிறது?
Xxxxxx
8.மாணிக்கவாசகரின் திருவாசக முதல் பாடலிலும் கடைசி பாடலும் உள்ள ஒற்றுமை என்ன?
xxxx
9.மாணிக்கவாசகரின் எந்தப் பாடலில் டார்வினின் பரிணாமக் கொள்கையும் (Theory of Evolution )இந்துக்களின் மறுபிறப்புக் கொள்கையும் (Reincarnation or Rebirth) வருகிறது?
Xxxxx
10.மாணிக்கவாசகரின் எந்தப்பாடலில் BIG BANG THEORY பிக் பேங் என்ற வானியல் அண்ட வெடிப்புக் கொள்கை வருகிறது ?
Xxxxx
விடைகள்
1.மாணிக்கவாசகரின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது; அவர் பிறந்த திருவாதவூரின் பெயரால் வாதவூரார் என்றும் இறைவன் கொடுத்த பெயரால் மாணிக்க வாசகர் என்றும் அழைக்கப்படுகிறார்
(என் ஆராய்ச்சிக்கட்டுரையில் வாதவூர் இறைவன் பெயர்தான் அவர் அம்மா, அப்பா சூட்டிய பெயர் என்று காட்டியுள்ளேன்;அவருடைய இயற்பெயர் வேதபுரீஸ்வர சத்தியதாசன்= பொய் அடிமைஇல்லாத புலவர்)
xxx
2.தருமி என்ற பிராமணப் புலவருக்கும் நக்கீரருக்கும் ஏற்பட்ட சண்டையைப் பாடிய அப்பர் பெருமானே தே வாரத்தில் நரி- பரி அதிசயம் பற்றியும் பாடுகிறார் (காண்க- மாணிக்கவாசகர் காலம் எது?) அதிலிருந்தது நமக்குத் தெரிவது மாணிக்கவாசகரின் காலம் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தியது.
மேற்கோள்கள்:-
1.தருமி பொற்கிழி கதை
நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்
– திருப்புத்தூர் தாண்டகம், அப்பர் தேவாரம்
2.நரி—பரி லீலையும் அப்பர் தேவாரத்தில் வருகிறது.
–
நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
–(4-33 அப்பர் தேவாரம்,திருவாரூர் பதிகம்)
xxxxxx
3. அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகர் வாழ்ந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அப்படி ஒரு பாண்டியனைக் காணமுடியவில்லை. இருந்த போதிலும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் மன்னர் பட்டியலைக் கொண்டு பார்த்தால் இவருக்குப் பின்னரே சம்ப்ந்தர் கதை வருகிறது. மாணிக்கவாசகருக்கும் சம்பந்தருக்கும் இடையே பெரிய மன்னர் வரிசை இருக்கிறது!
Xxxxxx
4.பெரிய புராணமும் திருத்தொண்டத்தொகையும் குறிப்பிடும் நாயன்மார் பட்டியலில் இவர் பெயர் நேரடியாக இல்லை. அதே போல மாணிக்கவாசகர் பாடல்களிலும் தேவார மூவர் பெயர் நேரடியாக இல்லை.; இது ஏன் என்றே தெரியவில்லை.
xxxxxxx
5.பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்றவுடன் அவர் திருக்கோவை பாடியதாக சொல்லுவார்கள்
xxxxxx
6.பெரிய வரகுணன் ; (இது இரண்டு பாண்டியர்களுக்கு இருந்த பெயர்.).
xxxxxxx
7.ரெவரெண்ட் ஜி .யூ .போப் G U Pope என்ற கிறிஸ்தவ மத பிரச்சாரகர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அது எட்டாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது .
xxxxx
8.ஓம்காரம்
திருவாசகத்தின் முதல் பாடலிலும் (சிவபுராணம்), கடைசி பாடலிலும் ஓம்காரம் ஒலிக்கும்.
இதே போல பாரதியின் பாஞ்சாலி சபதமும் ஓம் காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்
xxxxx
9.புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
யாப்பிலக்கணம் காரணமாக, பரிணாம வளர்ச்சியின் வரிசை சிறிது மாறியிருப்பதைக் காணலாம். டார்வினின் பரிணாமக் கொள்கை
xxxxxxx
திருவண்டப் பகுதியில் மாணிக்கவாசகர் — எண்ணற்ற பலகோடி நட்சத்திர மண்டலங்களிருப்பது பற்றி பாடி வியக்கிறார்:
அண்டப்பகுதியின் (UNIVERSE IS EGG SHAPED) உண்டைப் பிறக்கம் (BIG BANG)
அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி
ஒன்றனுக்கொன்று (GRAVITY SUSTAINS IT )நின்றெழில் பகரின்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவைதான்நம்புங்கள்! பாகம் 2 –
அத்தியாயம்5
ச.நாகராஜன்
பாராட்டு, பாராட்டு!
பாராட்டுவது என்பது உலகில் பலருக்கும் கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்தியாவிலோ ஒருவருக்குப் பாராட்டு கிடைத்தது என்றால் அது மிகப்பெரிய அபூர்வமான விஷயம் தான்!
பாரிஸில் உண்மையாக நடந்த நிகழ்ச்சி இது.
ஒரு சமயம் ஒபேரா அரங்கம் ஒன்றில் ஒரு பிரபல பாடகர் வருவதாக இருந்தது. ஆகவே டிக்கட்டுகள் அனைத்தும் விற்பனையாகி அரங்கமே நிரம்பி வழிந்தது.
நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கும் தருணத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் மைக்கைப் பிடித்தார். “அன்பார்ந்த ரசிகர்களே! நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் பாடகருக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் கூட அவருக்குப் பதிலாக இன்னொருவர் வந்து உங்களை மகிழ்விப்பார்” என்றார் அவர்.
கூட்டத்தினருக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. பலர் உறுமினர். பலர் கொதித்தனர்.
பதிலியாக வந்தவர் தனது திறமையைக் காட்டலானார். அற்புதமாக அந்த நிகழ்ச்சி இருந்தது. நிகழ்ச்சி முடிந்தது. ஆனால் அரங்கத்தில் ஒரே மௌனம் தான். யாரும் கைதட்டவில்லை.
திடீரென்று பால்கனியிலிருந்து ஒரு இளம் குரல் சத்தமாகக் கேட்டது. “அப்பா! ரொம்ப அருமை! அற்புதம்” என்றது அந்தக் குரல்.
ஒரு நிமிட தாமதத்திற்குப் பின்னர் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.
நம் அனைவருக்குமே தேவையாக இருப்பது நமக்காக நம்மைப் பாராட்டிக் கைதட்ட முதலாவதாக ஒரு ஆள் வேண்டும் என்பது தான்!
*
திணிக்கப்படும் சந்தர்ப்பங்கள், திடீர் முடிவுகள்!
மீன் பிடிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ஒருவர் ஏரிக்குப் போன போதெல்லாம் அவரால் ஒரு மீனைக் கூடப் பிடிக்க முடிவதில்லை.
ஆனால் அவருக்குத் தெரிந்த ஒருவரோ எப்போதுமே மீன் நிரம்பிய கூடையுடன் தான் ஏரியிலிருந்து திரும்புவது வழக்கம்.
தனக்கு மட்டும் ஏன் மீன் கிடைப்பதில்லை, அவருக்கு மட்டும் எப்படி மீன்கள் இந்த அளவில் கிடைக்கிறது என்பது மட்டும் அவருக்குப் புரியவில்லை.
ஒரு நாள் தன் நண்பரை அணுகிய அவர், “ராம்! உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு மீன்கள் கிடைக்கின்றன?” என்றார்.
அதற்கு ராம், “என்னுடன் படகில் ஏறுங்கள்” என்றார்.
நண்பரும் ராமின் படகில் ஏறினார். மிகப் பெரிய ஏரியின் நடுவில் படகு சென்றது. நின்றது.
ராம் தனது பையிலிருந்து ஒரு டைனமைட்டை எடுத்தார். பொருத்தினார். அதை ஆகாயத்தில் தூக்கி எறிந்தார். அவ்வளவு தான்! படார் என்ற சத்தத்துடன் அது வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்த வெடிப்பினால் இறந்து போன மீன்கள் ஏராளமாக நீரில் மிதக்க ஆரம்பித்தன. ராம் தனது வலையை விரித்தார். மீன்கள் அனைத்தையும் அதில் பிடித்தார். பின்னர் அள்ளித் தன் கூடையில் போட்டார்.
“பார்த்தாயா! இது தான் என் வழி!“ என்றார் ராம் தனது நண்பரிடம்.
நண்பர் அரண்டு போனார்.
அடுத்த டைனமைட்டை ராம் எடுத்தவுடன் நண்பர் அலறினார்.
“ஓ! இது தப்பு, தப்பு! உன்னை ஜெயிலில் வைக்க நானே ஏற்பாடு செய்வேன்” என்றார் நண்பர்.
ராம் தான் எடுத்த டைனமைட்டைப் பொருத்தி நண்பரிடம் தூக்கிப் போட்டார்.
“இப்படி நாள் முழுவதும் கத்திக் கொண்டே இருக்கப் போகிறாயா? அல்லது மீன்களைப் பிடிக்கப் போகிறாயா?” என்றார்.
உடனடியாக முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திலிருந்தார் நண்பர்.
டைனமிட்டைத் தூக்கி வானத்தில் எறிந்தார். புகார் செய்ய இருந்தவர் மீன் பிடிக்கும் பங்காளி ஆனார்.
வெடிப்பான முடிவுகள் சில சமயம் வாழ்க்கையில் துடிப்பாக எடுக்கப்பட வேண்டியிருக்கிறது!
வாழ்க்கையே இப்படித் தான்!
எதிர்பாராத, நாம் விரும்பாத, நாம் வரவேற்காத, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள் உடனடியாக முடிவை எடுக்கத் தூண்டுகின்றன.
நாம் கேட்காமலேயே இவை நம் மீது திணிக்கப்படுகின்றன.
சீக்கிரமாக, வேகமாக, உடனடியாக, திடீரென்று, சிந்திக்க, ஆலோசிக்க, அடுத்தவரிடம் யோசனை கேட்க முடியாதபடி உடனடியாக முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது.
இன்று லண்டன் ஈலிங் பேட்டையில் இருக்கும் கனக துர்க்கை அம்மன் கோவிலில்( KANAGA THURKAI AMMAN TEMPLE, CHAPEL ROAD, EALING, LONDON ) மதுரைத் தமிழ் அறிஞர் பேராசிரியர் சொ .சொ .மீ . சுந்தரம் அவர்கள் திருமீயச்சூர் லலிதாம்பிகை பற்றி சொற்பொழிவாற்றுகையில் கேட்ட செய்தி:—
அவர் காலை மாலை சொற்பொழிவுகளை கோவிலுக்குள் நடத்துகிறார் சரியாக ஒரு மணி நேரம் மட்டுமே ; காலி 11 மணி; மாலை 7 மணி
அனைவரும் வருக ; இறை அருள் பெறுக
ALL ARE WELCOME; TAMIL TALK; DONT MISS IT ; UNTIL 18TH JULY 2023 AT EALING KANAGA DURGA TEMPLE IN LONDON. 11 AM AND 7 PM; TWICE A DAY FOR JUST ONE HOUR.
அவர் காலை மாலை சொற்பொழிவுகளை கோவிலுக்குள் நடத்துகிறார் சரியாக ஒரு மணி நேரம் மட்டுமே ; காலி 11 மணி; மாலை 7 மணி
அனைவரும் வருக ; இறை அருள் பெறுக
XXXXX
சொ .சொ .மீ . மேலும் கூறியதாவது
திருமீயச்சூர் அதிசயங்கள்
தாமரை இலையில் வைக்கப்பட்ட பிரண்டை பிரசாதம் ; பிரண்டைஅல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) பல அபூர்வ மருத்துவ குணங்கள் உள்ள தாவரம்/ மூலிகை .
இங்குள்ள ஸ்படிக லிங்கத்தில் ஒரு கோடு/ ஸ்வர்ண ரேகை இருக்கிறது.
சம் பந்தரால் பாடல் பெற்ற தலம் ( ஆகையால் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முந்தியது
பெயர் காரணம்
சூரியனுடைய தேர் டிரைவர் DRIVER அருணனுக்கு கால் நொண்டி. அவனை சூரியன் கிண்டல் செய்யவே சூரியனுக்கு கருமை நிறம் ஏற்பட வேண்டும் என்று சிவன் சாபமிட்டார். பின்னர் அந்த சாபம் நிறைவேற இறைவனும் இறைவியும் உதவினர். கருப்புப் புள்ளிகளால் ஒளி இழந்த சூரியன் மீண்டும் ஒளிபெற்றதால் மீயச் சூர் ஆனது
வலது காலை மடித்து மேலே வைத்துக்கொண்டு இடது காலைத் தொங்கவிடும் அபய ஹஸ்த தேவியை வேறு எங்கும் காண முடியாது .
திருவாரூர் அல்லது கும்பகோணத்திலிருந்து செல்லலாம்.
இன்னும் ஒரு அதிசயம் சூரியன் ஒளி கிரணங்கள் ஆண்டுதோறும் சித்திரை மாத 21ம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு சிவலிங்கம் மீது படுகிறது..
சூரியனுக்கு தனி சந்நிதி உள்ளது.
இறைவி பெயர்- லலிதாம்பிகை, மேகலாம்பிகை
சிவா பெயர் – மேகநாத சுவாமி, முயற்சிநாதர்
கோவில் இளங்கோயில், திருக்கோயில் என்று இரண்டு பகுதிகளாக இருக்கிறது. சுவாமி சந்நிதிக்கு வலது புறம் லலிதாம்பிகை சந்ந்நிதி இருக்கிறது
அபூர்வ சிற்பங்கள் நிறைந்த கோவில் . லலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய கோவில்
சுமார் 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண்ணின் கனவில், அம்பிகை தோன்றி கொலுசு சார்த்தும் படி சொல்லவே அவரும் வெள்ளிக் கொலுசுடன் கோவிலுக்கு வந்தார்.ஆனால் அங்குள்ள பட்டரோ கொலுசை நுழைக்க அந்த விக்ரகத்தில் துவாரம்/ இடைவெளி இல்லையே என்று சொல்லி அனுப்பிவிட்டார். பின்னர் அடித்த மழை ஒன்றில் தொங்கும் காலிலே வெள்ளம் செல்ல, ஒரு இடைவெளி இருப்பது தெரிந்ததாம்.அடடா, இந்தக் காலில் கொலுசை நுழைத்து இருக்கலாமே என்று எண்ணிக்கொண்டு, மடித்து வைக்கப்பட்ட காலை நோக்கியபோது அங்கும் கொலுசை போடுவதற்கு வசதியாக இடைவெளி இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த அம்மையார் வந்து கொலுசுகளை லலிதாம்பிகைக்கு சாத்தினார். இப்பொழு கொலுசு சார்த்துவது ஒரு காணிக்கையாக அமைந்து எல்லோரும் சாத்துகின்றனர்
( இது பற்றி, நான் சென்று வந்த பின்னர் எழுதிய கட்டுரையில் முழு விவரம் கொடுத்துள்ளேன். அந்த விதிகளின் படியுள்ள கொலுசுகளை மட்டுமே கோவில் நிர்வாகம் ஏற்கும் ).
கொல்லூரிலும் சோட்டாணிக்கரையிலும் கோவில் ஏற்பட்ட வரலாறுகளையும், லலிதா சஹஸ்ரநாமத்துக்கு உரை எழுதிய பாஸ்கர ராயர் வாழ்வில் ஏற்பட்ட அதிசயங்களையும் சொ .சொ .மீ . விரிவாக எடுத்துரைத்தார்.
I have written about banyan trees in Kolkatta, Adyar (chennai), Thimmamma Marrimanu in Kadiri Andhrapradesh, Bhagavad Gita banyan tree in Kurukshetra,Cholti klan village (in Punjab )banyan tree etc. Now one more tree very near Bengaluru has come to my knowledge when I started writing about 108 temples in Karnataka in Tamil
Another famous Peepal Tree (Asvaththa) is also in Karnataka which is older than Buddha’s odhi tree.
Banyan tree (Ficus bengalensis) is found in Rig Veda as Maha Vriksha and Peepal Tree (Ficus religiosa) is found in Indus -Sarasvati River Civilisation seals. Both the trees along with Udumbara (Ficus glomerata) are given as Vishnu’s names in Vishnu Sahasranama.
In Tamil Banyan tree is Aala maram; Peepal tree is Arasa maram.
Now let us move on to newer information.
xxxx
Following is from bangalore tourism website
Dodda Alada Mara: Bangalore’s 400 year old Banyan Wonder.
One of the main tourist attractions in Bangalore is Dodda Alada Mara. Approximately 28 kms from the city, you can spot this magnificent giant tree just a little off the main road to Mysuru.
Dodda Alada Mara or The Big Banyan Tree, is a ginormous 400-year-old banyan tree (Ficus benghalensis), located in the village of Kethohalli in Bangalore. Dodda Alada Mara boasts of being the second largest banyan tree in India.
This massive tree is characterised by aerial prop roots that have matured into thick, woody trunks, identical to the main trunk with the passage of time. Using these prop roots, the Big Banyan Tree has spread laterally over an area of 3 hectares. After the primary trunk had succumbed to disease in the 2000s, it now appears like a grove of trees, with prop roots interlacing with each other.
Located on the Bangalore-Mysore Highway, Dodda Alada Mara stands tall as a symbol of bygone era in the present times. If you are someone who appreciates flora and fauna in their natural habitat, the Big Banyan Tree is the perfect place to unwind yourself. You can soak in nature’s beauty at this place. It offers you an opportunity for an impromptu trip with friends or even solo.
Spiritual Visit: As the tree itself is holy to the Hindus, a lot of devotees visit Dodda Alada Mara to pray amidst its calm and peaceful surroundings. There is also a small temple dedicated to Lord Muneshwara in the lap of this giant tree.
How to reach the Big Banyan Tree or Dodda Alada Mara
You can reach Dodda Alada Mara by travelling approximately 7 kms off the road at the Kumbalagodu Junction on Bangalore-Mysore Road. Buses are available from Majestic (Kempegowda) Bus Station to Kengeri and from Kengeri to Dodda Alada Mara.
You can find direct buses from KR Market, Bangalore to Dodda Alada Mara as well.
Nearest metro railway stations are RV College metro station and Kengeri Metro Station, from where one can hire a taxi or even take autorickshaws to Dodda Alada Mara. You can also hire a private cab from top car rental companies in Bangalore to reach Dodda Alada Mara easily.
Best Time to Visit Dodda Alada Mara
The best time to visit Dodda Alada mara is after the monsoon and just before summer in the months of January to April. Weather around these months is pleasant and less humid, offering visitors a peaceful day to enjoy the natural beauty of the Dodda Alada Mara.
One can visit Dodda Alada Mara on all days of the week, throughout the year.
Xxxxxx
(following is from Be on the Road Website)
Dodda Alada Mara (which literally translates into Big Banyan Tree) is a 400 year old Banyan tree that is located in the village of Ketohalli, a little distance away from the busy Mysore road. Over the years, this single tree, which is still growing has spread itself to an area of 3 acres, making itself one of the largest of its kind.
There is no entry fee and the place is open all days between 8 AM and 5 PM. The only thing to worry about are the monkeys who steal food packets and fruits from the visitors. As long as you are not carrying any open food, you should not have any trouble from the monkeys. There are a lot of chairs in the campus for you to sit there and soak in its relaxed aura.
How to get there: Head straight on Mysore road and when you come to the traffic light next to Raja Rajeshwari Dental and Medical College, turn right to a small road that leads you directly onto a railway crossing. Dodda Aladamara is about 7 kms away from this railway crossing. There are a lot of nurseries located on this road and it might be a great place to stop by if you are interested in gardening.
Xxxxx
Oldest Peepal Tree (Aswatha Vriksha)
Oldest Peepal Tree (Aswatha Vriksha) with Huge Importance (from Trip Advisor)
After visiting Ghati Subramanya Temple, we went to Holy place of Viduraswatha by road which took almost an hour by private vehicle. People mostly visit this place for religious reasons. The place is developed all around a large ‘Peepal tree’ with innumerable ‘naga’ (serpent) idols. It’s believed that one affected by ‘Sarpa dosha’ based on horoscope, when ‘naga prathistapana’ is done at this place, such a person will be relieved of that ‘dosha’ completely for one’s life. This is the reason that you will find so many ‘naga’ idols installed at every bit of this place.
Vidurashwatha Temple history dates back to Dwapara Yuga (say 5000 years+) and it is associated with Vidura of Mahabharata. The peepal tree there was planted during the Dwapara Yuga by Sage Maitreya. The worship of the ‘Aswatha Vriksha’ (Peepal tree) was taken over by Vidura after the war of Mahabharata and hence the temple got the name Vidurashwatha Temple.
The temple is dedicated to Brahma, Vishnu and Shiva and the ‘Aswatha Vriksha’ is believed to represent these 3 Lords by the 3 parts of the tree viz. Bottom portion including roots by Brahma, middle Trunk portion by Vishnu and the top portion of the tree by Shiva and therefore this tree is called the King of all trees (‘Vriksha Raja’). A ‘sloka’ (verse line) to this effect is written on the main temple wall in Kannada. Apart from the above, the temple is also noted for numerous idols (murtis) of snake gods (Naga Devathas) as informed above.
Jallianwala Bagh of the South
Vidurashwatha is also known as the “Jallianwala Bagh of the South”. As recorded, on April 25, 1938, as a part of the freedom struggle of India, a group of villagers had congregated to organize a Satyagraha. Similar to that happened at Jallianwala Bagh, police fired indiscriminately at the group, resulting in the death of around 35 people. A memorial has been erected in this location to mark as a respect to the martyred people.
We had Lords’ darshan, moved around the place and felt blessed.
Tourist amenities available are practically scanty and the state government should do a lot in this regards to promote tourism.
Date of experience: February 2017
Xxxxx subham xxxxx
Tags —Banyan tree, peepal tree, near Bengaluru, Jallianwala Bagh of south,
1.மீனாட்சி கல்யாணத்தால் உண்டான நதியின் பெயர் என்ன?
xxxxx
2.கோவில் குளத்தின் பெயர் என்ன
xxxxxx
3.மீனாட்சி அம்மனுக்கு தங்கத்தில் காலணிகள் செய்த வெள்ளைக்கார கலெக்டர் பெயர் என்ன ?
xxxxxx
4.மதுரை மீனாட்சி கோவில் மதிலின் பெயர் என்ன ?
xxxxxx
5.மதுரை மீனாட்சி கோவிலுக்கு எத்தனை நுழை வாயில்கள் ?
xxxxxx
6.உயர்ந்த கோபுரம் எது ?
Xxxx
7.மீனாட்சி பிறந்த போது அம்மா, அப்பா என்ன கவலைப்பட்டார்கள் ?
xxxxx
8.மீனாட்சியின் ஒரிஜினல் பெயர் என்ன ?
xxxxxx
9.மீனாட்சி அம்மனின் தந்தை, தாயார் பெயர்கள் என்ன ?
xxxxx
10.முஸ்லீம் சுல்தானால் 40 ஆண்டுக்காலம் பூட்டிக்கிடந்த மீனாட்சி கோவிலை யார் மீண்டும் திறந்தார்?
xxxx
Answers விடைகள்
1.கல்யாணச் சாப்பாடு மிஞ்சிவிடுமே என்று பெண் வீட்டார் கவலைப்பட்டபோது, சிவனின் குட்டிபூதமான குண்டோதரன், அனைத்தையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டு தண்ணீர் தாக்கத்தில் தவித்தான் . சிவன் ‘வை கை’ என்று சொல்லி பூமியில் கையை வைக்கச் சொன்னார். ‘வை’ ‘கை’ நதி ஊற்றாகப் பொங்கி எழுந்தது.
Xxxxxx
2.பொற்றாமரைக்குளம் ; தங்கத் தாமரை மலர்ந்த இடம்.
Xxxxx
3.பீட்டர் ரோஸ் ; பெரிய மழையில் கட்டடத்தின் மீது இடி விழும் முன் பச்சைப் பாவாடையுடன் வந்து எழுப்பி, தன உயிரையே காப்பாற்றியதால் மீனாட்சிக்கு தங்கச் செருப்பு அணிவித்தார்.
Xxxxxx
4.கபாலி மதில் ; திருஞான சம்பந்தர் தேவாரத்தில் வருகிறது
Xxxxxx
5.ஐந்து ; 4 பெரிய கோபுரங்கள் + அம்மன் சந்நிதி வாயில்
Xxxxx
6.தெற்கு கோபுரம் . மொத்தம் சிறிதும் பெரிதுமாக 14 கோபுரங்கள் உள்ளன . தெற்கு கோபுரத்தின் உயரம் 170 அடி (சுமார் 52 மீட்டர்)
Xxxxx
7.அந்தச் சிறுமிக்கு 3 முலைகள் இருந்தன. ஆனால் அவள் தனக்குரிய கணவனைக் காணும்போது மூன்றாவது முலை மறைந்துவிடும் என்று அசரீரி எழுந்தது .அவர்களுடைய கவலையும் மறைந்தது. சுந்தர ஈஸ்வரர் என்னும் சொக்க நாதனைக் கண்டவுடன் அவருடைய மூன்றாவது மார்பகம் மறைந்தது
Xxxxx
8.தடாதகைப் பிராட்டி. சம்பந்தர் தேவாரத்தில் அங்கயர் கண்ணி ;
அங்கயர் கண்ணி = சம்ஸ்க்ருதத்தில் மீனாட்சி.
Xxxxxx
9.தந்தை – மலயத்வஜ பாண்டியன் , தாயார் – காஞ்சன மாலா
Xxxxx
10.விஜயநகர சாம்ராஜ்ய படைத்தலைவர் கம்பண்ண உடையார். அந்த அற்புதத்தை அவர் கூடவே வந்த அவருடை ய மனைவி கங்கா தேவி , மதுரா விஜயம் என்ற நூலில் ஸம்ஸ்க்ருத கவிதைகளாக எழுதி வைத்துள்ளார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காலன் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 6
ச.நாகராஜன்
12-6-2023 அன்று பகோடா, கொலம்பியாவிலிருந்து வந்த பத்திரிகை செய்தி இது:
கொலம்பியா அமேஸானில் கடந்த 40 நாட்களாகத் தொலைந்ததாகக் கருதப்பட்ட குழந்தைகள் காட்டிலிருந்த கொட்டைகள், வேர்கள், தாவரங்கள் உள்ளிட்டவற்றைச் சாப்பிட்டு உயிருடன் இருந்தனர். அவர்கள் அவற்றைச் சாப்பிடக்கூடியவை தான் என்பதை அறிந்திருந்தனர்- அவர்களது வளர்ப்பு அப்படி!
கொலம்பியாவின் ராணுவத் துருப்புகள் கொலம்பியா காடுகளில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அவர்களால் குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடிந்தது – உயிருடன்!
ஒன்று முதல் 13 வயது முடிய இருந்த நான்கு குழந்தைகள் மே முதல் தேதி நடந்த ஒரு விமான விபத்தில் சிக்கிப் பிழைத்தனர். அந்தக் குழந்தைகளின் தாயார், விமான பைலட், இன்னும் ஒரு வயதானவர் ஆகியோர் விபத்தில் இறந்தனர்.
‘புதர்க் குழந்தைகள்’ என்று அந்தக் குழந்தைகளின் பாட்டனாரால் அழைக்கப்பட்ட குழந்தைகள் யுக்கா மாவைச் (Yucca Flour) சாப்பிட்டு உயிருடன் இருந்தனர். யுக்கா மாவு அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்தது. அத்தோடு அவர்களைத் தேடிச் சென்ற ஹெலிகாப்டர்கள் போட்ட உணவு பார்சல்களிலிருந்தவற்றையும் அவர்கள் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தனர்.
அமேஸான் பிரதேசத்தில் இருந்த கிழங்குகள், கொட்டைகள், வேர்கள் ஆகியவற்றையும் உண்டு அவர்கள் உயிருடன் இருந்தனர் என்று Luis Acosta of the National Indigenous Organaisation of Columbia கூறியது.
“நாம் இயற்கையுடன் ஒரு குறிப்பிட்ட தொடர்பைக் கொண்டிருக்கிறோம்” என்று ஜேவியர் பெடன்கோர்ட் (Javier Betancourt) என்ற இன்னொரு ONICE தலைவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “ காட்டில் வாழ்ந்து அதைக் காத்து வரும் குடிமக்கள் போல உலகம் இப்படிப்பட்ட விசேஷ தொடர்பை இயற்கையுடன் கொண்டிருக்க வேண்டும்” என்றார்.
பகோடாவில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரி ஒன்றில் குழந்தைகள் நல்ல உற்சாகத்துடனுன் ஆரோக்கியத்துடனும் இருக்கச் செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவும் (Gustavo Petro) இதர அதிகாரிகளும் சென்று பார்த்தனர்.
பாதுகாப்பு மந்திரி இவான் வெல்ஸ்குயஸ் (Defence Minister Ivan Velsquez குழந்தைகள் குழுவைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்ட 13 வயதான பெண்ணான லெஸ்லி முகுடியை (Lesly Mucutuy) புகழ்ந்தார்.
“அவளது தைரியத்தை போற்றுவதோடு நிற்காமல் அவளது தலைமையையும் நாம் உணர வேண்டும். அவளால் தான் – அவளது காடு பற்றிய அறிவினால் தான் – இதர மூன்று குழந்தைகளும் அவளது பாதுகாப்பினால் உயிருடன் இருந்தனர்” என்றார் அவர்.
லெஸ்லியின் ஒன்பது வயதான தங்கை சொலினி (Soleiny) “நிறையப் பேசுகிறாள்” என்று குழந்தைகள் காப்பக இயக்குநரான ஆஸ்ட்ரிட் சஸெரஸ் (Astrid Caceres) கூறினார்.
ஐந்து வயதான குழந்தை டியன் படிப்பதற்கு புத்தகங்கள் கேட்கும் போது ஒரு வயதான குழந்தை நர்ஸுகளுடன் நம்ப முடியாத அளவில் அமைதியுடன் இணக்கமாக இருக்கிறது” என்றார் அவர்.
இரண்டு இளம் குழந்தைகளின் தந்தையான மானுவல் ரானொகு (Manuel Ranoque) ஞாயிறு அன்று கூறுகையில், லெஸ்லி அவளது தாயார் நான்கு நாட்கள் வரை உயிருடன் இருந்ததாகத் தெரிவித்தாள்” என்றார்.
இறப்பதற்கு முன்னர், இடிபாடுகள் நிறைந்த அந்த இடத்திலிருந்து “போய் விடுங்கள்” என்று அவர் கூறினாராம்.
இதற்கு மேல் அவர் எதையும் கூறவில்லை.
அந்தப் பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் நூறு ராணுவ வீரர்களுடன் இணைந்து “ஆபரேஷன் ஹோப்” (Operation Hope) என்ற பெயரில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர்.
காடுகளின் அந்தப் பகுதி பற்றிய தகவல்கள் அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
ராணுவ ஹெலிகாப்டர்கள் குழந்தைகளின் பாட்டி அவர்களின் ஹுயிடோடோ (Huitoto) மொழியில் “ஒரே இடத்தில் இருக்குமாறு” கூறியதை ஒலிபரப்பியது.
இந்த விபத்தினால் காட்டில் இருந்த சமயத்தில் இரு குழந்தைகளின் பிறந்த நாளும் வந்தது. டியனுக்கு ஐந்து வயதானது. கிறிஸ்டினுக்கு ஒரு வயதானது.
குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் இனி தான் நடக்க இருக்கிறது’ என்று இயக்குநர் சஸெரஸ் கூறினார்.
அற்புதமான இந்த செய்தி உணர்த்தும் உண்மை – காலன் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – என்பதைத் தான்!
**
நன்றி : கல்கத்தாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழ் –