நல்லதற்கும் கெட்டதற்கும் காரணம் – ‘சுமதி’, ‘குமதி’! (Post No.12090)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,090

Date uploaded in London –  June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதச் செல்வம்

நல்லதற்கும் கெட்டதற்கும் காரணம் – சுமதி’, ‘குமதி!

ச. நாகராஜன்

சுமதி – குமதி

ஒருவனுக்கு நல்லது நடக்கிறது அல்லது கெட்டது நடக்கிறது.

ஒருவன் பணக்காரனாக இருக்கிறான். இன்னொருவன் ஏழையாக

இருக்கிறான்.

இதற்குக் காரணம் என்ன? சுமதி – குமதி தான்!

சு- மதி என்றால் நல்ல மனம்

கு -மதி என்றால் கெட்ட மனம்.

ஒரு கோத்ரத்தில் பிறந்தவன் தனது சுற்றத்தையும் குடும்பத்தினரையும் நன்கு பரிபாலிக்கிறான். வயதானவன் இளம் வயதினருடன் சகவாசம் வைத்துக் கொண்டால் பெண்கள் அவனை ஏற்பதில்லை. ஒரு பெண் ஆணைப் போல நடக்க ஆரம்பித்தால் அந்தக் குடும்பம் விநாசம் அடைகிறது.

சுபாஷிதம் இதோ:

சர்வஸ்ய தே சுமதிகுமதி சம்பதாபத்திஹேது

ஏகோ கோத்ரே ப்ரபவதி புமான் ய: குடும்பம் பிபர்தி |

வ்ருத்தோ யூனா சக பரிசயாத் த்யஜ்யதே காமினீபி:

ஸ்த்ரீபும்வச்ச ப்ரபவதி யதா தத்தி கேஹம் விநஷ்டம் ||

நல்ல மனிதனின் குணங்கள் என்னென்ன?

இயல்பாகவே அமைந்திருக்கும் நல்ல குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதன்.

மற்றவர்களுக்கு உதவி செய்வது, மற்றவர்களின் துன்பங்களைக் காணச் சகிக்காமல் இருப்பது, தயையுடனும் தாக்ஷிண்யத்துடனும் எப்போதும் இருப்பது – இவை கொண்டிருந்தால் அவனே நல்ல மனிதன்.

பரோபகாரஷீலத்வம் பரதுக்காசஹிஷ்னுதா |

தயாப்ரத்வம் தாக்ஷிண்யம் சதாம் ச்வாபாவிகா குணா: ||

திருமணத்தில் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன?

ஒரு திருமணம் நிச்சயிக்கப்படும் போது பலரும் பலவற்றிற்கும் முதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

மணப்பெண் நல்ல வரனை – கணவனை எதிர்பார்க்கிறாள்.

மணப்பெண்ணின் அம்மாவோ வருகின்ற மாப்பிள்ளை நல்ல செல்வம் உடையவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்.

மணப்பெண்ணின் தந்தையோ தனது மாப்பிள்ளை நன்கு படித்திருக்க

வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

நட்பும் சுற்றமும் நல்ல குடும்பமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் திருமணத்திற்கு வரும் பொதுவான நண்பர்களும் தெரிந்தவர்களும் சாப்பாடு நன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.(மற்றதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?!)

வரம் வரயதே கன்யா மாதா வித்தம் பிதா ஸ்ருதம் |

பாந்தவா: குலமிச்சந்தை பிஷ்டான்னமிதரே ஜனா: ||

சம அந்தஸ்து தேவை திருமணத்தில்!

இரு குடும்பங்கள் திருமணத்தால் இணைகின்றன.

அது நன்கு அமைய வேண்டுமெனில் இரு குடும்பமும் சம அளவு செல்வத்தைக் கொண்டிருத்தல் வேண்டும்.  இரு குடும்பங்களும் சமுதாயத்தில் சம அந்தஸ்தைக் கொண்டிருக்க வேண்டும். சமமான நட்பு வட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அந்த திருமணம் நல்ல முறையில் அமையும். ஒரு ஏழைக் குடும்பமும்  பணக்காரக் குடும்பமும் சம்பந்தம் செய்து கொண்டால் அது சிறப்பாக அமையாது.

யயோரேவ சமம் வித்தம் யயோரேவ சமம் குலம் |

த்யோமைத்ரீ விவாஹஸ்ச ந து புஷ்டவிபுஷ்டயோ:

ஒரு ரிஷி என்பவர் யார்?

உலக வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் நல்லவர்கள் பேசும் போது அர்த்தமானது அவர்கள் பேசும் சொற்களைத் தொடர்ந்து அதற்கான அர்த்தம் ஏற்படுகிறது.

ஆனால் ஒரு ரிஷி பேசும் போதோ அவர்கள் பேசுவதே அர்த்தம் ஆகிறது.

அதாவது அவர்கள் பேசுவது அப்படியே நடக்கும்!

லௌகிகானாம் ஹி சாதூனாமர்த்தம் வாகனுதாவதி |

ருஷீணாம் புனராத்தானாம் வாசமர்தோநுதாவதி ||

***

Leave a comment

Leave a comment