காந்திஜி நிறுவிய இயற்கை மருத்துவ நிலையம் (Post No.12,069)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,069

Date uploaded in London – –  1 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரிலிருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் உருளி காஞ்சன் (Uruli Kanchan) கிராமம்  இருக்கிறது. இங்கு நாடு முழுதும் புகழ்பெற்ற இயற்கை வைத்திய ஆஸ்ரமம் (Naturopathy Centre) இருக்கிறது . இதற்கு நிசர்க் உபசார ஆஸ்ரமம்( நிசர்கோபசார ஆஸ்ரமம்) என்று பெயர். இதை மஹாத்மா காந்தி 1946-ம் ஆண்டில் நிறுவினார். காந்திஜிக்கு இயற்கை மருத்துவம் மிகவும் பிடிக்கும். அவரும் தன் வாழ்நாளில் அதைப் பின்பற்றினார் . காந்திஜியின் சீடரான மணிபாய் தேசாய் இதை திறம்பட நடத்தி வந்தார். அவர் 1993-ல் காலமானார். கோவிட் வைரஸ் என்னும் சீன வைரஸ் நாடு முழுதும் பரவிய போது கஷ்ட திசைக்குள்ளான இந்த நிலையம் 75 ஆண்டுகளாகத் தன்னுடைய சேவையை அளித்து வருகிறது.

மணிபாய் தேசாய் 1960ம் ஆண்டுகளில் இதே இடத்தில் சிறந்த வகை பசு, காளை மாடுகளை உருவாக்கும் மற்றோர் அமைப்பையும் (BAIF- Bharatiya Agro Industries Foundation) ) இந்த கிராமத்தில் நிறுவினார்.

சின்ன கிராமம் ஆனாலும், இதற்கு இந்த ஆஸ்ரமம் துவங்கும் முன்னரே பலவகையில் பெயர் கிடைத்தது. வெள்ளைக்காரர்கள் ஆரம்ப காலத்தில் போட்ட ரயில்  பாதை இந்த வழியாகச் சென்றது மட்டுமல்ல. ஜெஜூரி என்னும் ஊரிலுள்ள புகழ்பெற்ற கண்டோபா கோவிலுக்குப் போவதற்கு மக்கள் இறங்கிய ரயில் நிலையம் இது. மேலும் துகாராம் என்னும் மஹானின் பல்லக்கு ஆண்டுதோறும் பண்டரீபுரத்துக்கு இவ்வழியாகச் சென்றது.

இந்த கிராமத்தில் மஹாத்மா காந்தி 1946 மார்ச் மாதத்தில் 7 நாட்கள் தங்கினார் .அவருடைய இளம் சீடராக இருந்தவர் மணிபாய் . அவர் இந்த கிராமத்தை பலவகைகளில் முன்னேற்றி ஒரு உதாரண கிராமமாக மாற்றினார் . மலை அடிவாரத்திலுள்ள இந்த கிராமத்துக்கு அருகிலேயே நதியும் ஓடுவதால் கரிசல் பூமியில் நல்ல விளைச்சலும் உண்டு.

ஞாயிற்றுக் கிழமைகளில் திறந்த வெளியில் சந்தையும்  கூடும்.

இந்த இயற்கைச்  சூழ்நிலையில்  இயற்கை வைத்திய நிலையம்/ ஆஸ்ரமம் 1946-ல் துவக்கப்பட்டது .

இயற்கை மருத்துவம் என்றால் என்ன ?

மனிதனை இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ வைத்தால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம்; அத்தோடு நோய்கள்  வந்தாலும் அதை இயற்கை மூலமாகவே குணப்படுத்தலாம் என்பது இயற்கை மருத்துவம் ஆகும் .

இங்கே வரும் நோயாளிகளுக்கு தண்ணீர் வைத்தியம், மண் வைத்தியம் ,  சுவாசப் பயிற்சிகள், நடைப் பயணம், சூரிய ஒளி வைத்தியம், பட்டினி சிகிச்சை என்று பலவகைகளில் சிகிச்சை தந்து நோயாளிகளின் மன , உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறார்கள் . இங்கே வரும் நோயாளிகளில் 97 சதவிகிதத்தினர் குணமடைவதாக ஆஸ்ரம புள்ளி விவரம் கூறுகிறது. இங்கே வந்து ஆஸ்ரமத்தில் தங்கியும் சிகிச்சை பெறலாம் . வெளி நோயாளிகளாகவும் (out Patient) சிகிச்சை பெறலாம் .

ஆஸ்ரமத்தில் தங்குவோரின் ஒரு நாள் எப்படி இருக்கும் என்பதை ஆஸ்ரம தகவல் குறிப்பே தெரிவிக்கிறது:-

காலை 5.00AM          துயில் எழுதல்

5.15-6.00AM     பொதுவான யோகப்பயிற்சி (யோக சாதன ஹாலில்)

6.00- 6.45 AM   நோய்க்குத் தகுந்த விசேஷப் பயிற்சி (பிரேரண மந்திர் )

6.15-7.00AM     சக்தி தரும் யோகப்பயிற்சி (யோக சாதன ஹாலில்)

7.15-7.30AM     மூலிகை தேநீர்

7.30-10.30AM மஸாஜ் (Massage) மற்றும் நீர் வைத்தியம்

8.00-9.00AM     பழரசம்

10.30-12.00PM இயற்கை உணவு (Lunch மதிய உணவு)

மத்தியானம்

12-2.15PM         மதிய ஓய்வு

2.15-2.45PM     நோய்க்குத் தகுந்த சிகிச்சை

3.00-3.15 PM    மூலிகை தேநீர் (Herbal Tea)

3.00-5.00PM     நீர் வைத்தியம் (Hydrotherapy treatments)

4.00-4.30PM     பழரசம்

4.30-5.30PM     ஆரோக்கியம் தொடர்பான சொற்பொழிவுகள்

மாலை /இரவு

5.30-6.30PM     இயற்கை உணவு (Dinner மாலை உணவு)

6.30-7.15PM     ஓய்வு, பொழுதுபோக்கு நேரம்

7.15-7.45PM     பிரார்த்தனை (Yogasadhana Hall)

7.45-8.30PM     தியானம் (Yogasadhana Hall)

8.30-9.30PM     பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிகள்

9.30PM விளக்கணைப்பு ; உறங்கும் நேரம் Bed Time

Xxx

சிகிச்சை வகைகள்

Mud Therapy மண் சிகிச்சை

உடல் முழுதும், சுத்தம் செய்த மண்ணைப்பூசி அளிக்கும் சிகிச்சை. பூமிக்கு ஆறு அடிக்குக் கீழேயுள்ள மண்ணை எடுத்து பல வகைகளில் சுத்தப் படுத்தி பின்னர் பயன்படுத்துவர்; அதிலுள்ள இயற்கையான தாதுப் பொருட்கள் (Minerals and Salts)  சொறி , சிரங்கு முதலிய தோல் நோய்களை (psoriasis, eczema, dermatitis etc. ) குணப்படுத்த மிகவும் உதவுகிறது.

xxx

Hydrotherapy தண்ணீர் வைத்தியம்

வெவ்வேறு உஷ்ண நிலையில் உள்ள நீரைப் பயன்படுத்தி மருத்துவம் செய்வார்கள். நீருக்கள் அமர  அல்லது படுக்க வைத்தோ . இடுப்பளவு தண்ணீரில் நிற்க வைத்தோ , இனிமா கொடுத்தோ , நீராவி குளியல் மூலமோ சிகிச்சை தருவர் சில நேரங்களில் நீர் ஒத்தனம் கொடுக்கப்படும்.

குற்றால அருவியில் குளித்தால் எப்படி இருக்குமோ அப்படி கனத்த வேகத்தில் உடலில் தண்ணீரைப் பாய்ச்சி அளிக்கும் சிகிச்சையும் உண்டு .

(Immersion Bath, Under water Massage, Hip Bath, Jacuzzi Hip Bath, Spinal Spray, Vichy Shower, Circular Jet, Douche, Enema, Steam Bath, Arm and Foot Bath, Packs and compress)

Xxx

Yoga Therapy யோகாசன சிகிச்சை

மனதும் உடலும் ஒருமித்து செய்யப்படும் ஆசனங்கள் யோகாசன சிகிச்சையில் வழங்கப்படுகிறது ; ஆசனங்கள் செய்வதால் மனம் தானாகவே அதில் ஒருமிக்கிறது ; இதனால் மனதும் உடலும் சம நிலையில் , அமைதியான நிலையில் இருக்கும். தியானம் மட்டும் செய்கையில் மனம் அலை பாயும். ஆனால் ஆசனத்துடன் தியானம் செய்கையில் மனம் ஒருமுகப்படும்.

இந்த கேந்திரத்தில் வயது, நோயின் தன்மைக்கு ஏற்ப நான்கு வகைப் பிரிவுகள் பின்பற்றப்படுகின்றன.

Xxxx

Physiotherapy உடற்பயிற்சி சிகிச்சை

நரம்புத் பிடிப்புகள், தசைப்பிடிப்புகள் , கீல்வாதம், மூட்டு வலி, உடலின் சில உறுப்புகளை அசைக்க முடியாமல், திருப்ப முடியாமல் ஏற்படும் இறுக்கம் (musculoskeletal and neurological disorders.) ஆகியவற்றைக் குணப்படுத்த சிலவகை உடற்பயிற்சிகள் உண்டு. அவைகளை, நோயாளிகளின் நிலையைப் பரிசோத்தித்த பின்னர் தகுந்த முறையில் கொடுப்பார்கள். இன்னும் சிலருக்கு கருவிகள் மூலம் வெப்ப சிகிச்சை (Heat Therapy, Heat Pads, Hot Water Bottles) அளிப்பர்.

Xxxx

Acupuncture ஊசி முனை வைத்தியம்

நோயாளியின் உடல் வாகுக்கு ஏற்றமுறையில் சில இடங்களில் ஊசியைக்குத்தி அங்கே செல்லும் நரம்புகளில் இருக்கும் சக்தியைத் தூண்டி விடுவார்கள் . உடலில் பல சக்தி வாய்க்கால்கள் இருக்கின்றன. அவை அடைபட்டு ஓடாமல் இருக்கையில், ஊசியைக் குத்தி அடைப்பை நீக்கி மீண்டும் சக்தியை ஊட்டச் செய்வது ஊசி முனை சிகிச்சை ஆகும்

ஆஸ்த்மா, ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, ஆர்த்தரைடீஸ் முதலிய நோய்களுக்கு இது கை கண்ட மருத்துவம் ஆகும்.

Xxx

மஹாராஷ்ரம் வரை பயணம் செய்து சிகிச்சை பெறத் தயாராக இருப்பவர்கள், மேல் விவரம் அறிய, தொடர்பு முகவரி :-

Contact Info

NISARGOPCHAR ASHRAM, Uruli Kanchan – 412202, District – Pune, Maharashtra (India)

+91 20 2692 6298

+91 20 2692 6230

+91 96 0709 5588

enquiry@nisargopcharashram.org

அறை வாடகை, சிகிச்சைக்கான கட்டணங்களை வெப்சைட் மூலம் அறியலாம்..

–Subham —-

Tags- காந்திஜி , இயற்கை மருத்துவம் , நிலையம் , உருளி காஞ்சன் , நிசர்கோபசார ஆஸ்ரமம்

காங்கிரஸின் நீதி பரிபாலனம்! (Post No.12,068

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,068

Date uploaded in London –  1  June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

காங்கிரஸின் நீதி பரிபாலனம்!

ச.நாகராஜன்

புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணித்தது மன்னிக்க முடியாத தவறான செயல்.

சுதந்திரம் பெற்ற போது திருவாவடுதுறை ஆதீனம் டில்லிக்கு செங்கோலை எடுத்துச் சென்று கொடுத்ததைத் திரித்தும், மறைத்தும், பொய் சொல்லியும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் செய்து வரும் பிரச்சாரம் மிக மிகத் தவறான உண்மைக்குப் புறம்பான ஒன்று.

இதில் பெரும் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது இவர்கள் எல்லாம் படித்தவர்களா, தேச பக்தி உள்ளவர்களா என்பதை ஆயிரம் முறை நமக்கு நாமே கேட்டுக் கொண்டு மனச்சலிப்பை அடைய வேண்டிய நிலையை அடைய வேண்டியதாக இருக்கிறது.

எந்த நல்ல காரியத்தைச் செய்தாலும் உடனே அதை எதிர்ப்பது எதிர்க்கட்சியின் வேலை இல்லை. தேசத்துரோக எதிரிக் கட்சிகளின் வேலை தான் அது.

இதை நிச்சயமாக தேசபக்தி உள்ள சோஷியல் மீடியா நண்பர்களும், தனி ப்ளாக்கில் எண்ணங்களைப் பதிவு செய்வோரும் எதிர்த்து உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டும்.

நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும்.

காங்கிரஸின் பழைய நல்ல பாரம்பரியம் போயே போய் விட்டது.

அதற்குத் தொடக்கம் எமர்ஜென்ஸி காலம் என்றே சொல்லலாம்.

1973இல் இந்திரா காந்தி அவர்கள் ஏ.ஏன். ரேயை இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமித்தார். J M Shelet, K S Hegde A N Grover – ஜே.எம். ஷெலத், கே.எஸ்,ஹெக்டே, ஏ.என். க்ரோவர் ஆகிய சீனியர்களைப் புறம் தள்ளி ஒதுக்கி அவர் ஏ.என்.ரேய நியமித்தார்.

இதனால் மனம் வெறுத்துப் போன மூன்று சீனியர் நீதிபதிகளும் தங்கள் ராஜிநாமா கடிதத்தைச் சமர்ப்பித்தனர்.

இதற்கு பாராளுமன்றத்தில் பதில் அளித்த காங்கிரஸ், “ யார் தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும் என்பதை அரசே நிர்ணயிக்கும். அதன் வேலையே அது தான். எங்களது கொள்கைக்கு உகந்தவர்கள் யாரோ அவர்களையே நாங்கள் நியமிப்போம்” என்று கூறியது.

ஆனால் இன்றோ அவர்கள் உரத்த குரலில் நீதி அமைப்பு சுதந்திரமாக இருத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர்.

1975ஆம் ஆண்டு நீதிபதி ஜக்மோஹன் சின்ஹா ஒரு தீர்ப்பை வழங்க வேண்டி இருந்தது.

தேர்தல் ஊழல் பற்றிய கேஸ் அது. ராஜ் நாராயண் Vs இந்திராகாந்தி கேஸ் அது.

நீதிபதி சின்ஹாவுக்கு ஒரு போன் வந்தது.

“நீங்கள் இந்திராகாந்திக்கு எதிராகத் தீர்ப்பை வழங்கினால், உங்கள் மனைவி அடுத்த கர்வ சௌத் விரதம் அனுஷ்டிக்க மாட்டார்” என்றது போன் கால்.

அதாவது சின்ஹா உயிரோடு இருக்க மாட்டார் என்று அர்த்தம்.

அதற்கு உடனே சின்ஹா பதில் கூறினார்: நல்ல வேளையாக என் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்னால் இறந்து விட்டார்.” என்று!

சின்ஹாவின் வரலாற்றுப் பிரசித்தமான தீர்ப்பு தேசத்தை ஒரு கலக்கு கலக்கியது.

காங்கிரஸின் மணிமகுடம் ஆடியது.

மகுடம் கழன்று தரையில் விழாமல் இருக்க எமர்ஜென்ஸி – அவசரநிலை பிரகடனம் அவசரம் அவசரமாய்ச் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகப் பிடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

இந்திரா காந்தியும் காங்கிரஸும் தேசத்தைக் காப்பாற்ற இந்த அவசர நிலை என்று கூறியபோதும் கூட அனைவருக்கும் தெரிந்தது – இது இந்திராகாந்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் செய்த செயல் என்று.

1976இல் ஏ.என். ரே தனக்கு நீதிபதி பதவியை அளித்ததற்கான நன்றிக் கடனைத் தீர்த்தார். ஷிவ்காந்த் சுக்லா Vs ஏடிஎம் ஜபல்பூர் வழக்கில் வழக்கை விசாரிக்க அவர் அமைத்த பெஞ்ச் அவரது அடிப்படை உரிமை அனைத்தையும் பறித்தது.

அதில் ஒரே ஒரு தைரியமான நீதிபதி தான் இருந்தார். அவர் பெயர் நீதிபதி H R கன்னா.

அவர் சக நீதிபதியைப் பார்த்துக் கேட்டார்: “நீங்கள் கண்ணாடியில் உங்களை உங்கள் சொந்தக் கண்ணால் பார்க்க முடியுமா? என்று!

(Can you see yourself in the mirror with your eyes)

ஆதாரம் :இணையதளப் பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்ட தேதி 8-4-2023

Find the Indian Rockets and Satellites in the Crossword (Post No.12,067)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,067

Date uploaded in London – –  31 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

If any word is split into two lines, it is shown with ……… dots (in the answers). No abbreviation like Insat, IRRS etc are used. Only names of persons or missions are used.

SCHANDRAYA
WA…B…AK OP…RA
ARHHAMHAT…N
YYAGL IHAM
AATEPUNGUJ
METMA I   
  A NLARAS
  BHASKARA
MANGALYAAN

ANSWERS

1.Swayam , 2.Chandrayaan , 3.Rohini ,4.Arya…..bhatta ,5.Kalpana, 6.Pra…..tham , 7.Jugnu, 8.Megha, 9.Saral, 10.Bhaskara ,11.Mangalyaan

S 1C2HANDR3AYA
WA4BAK5 OP6RA
ARHHAMHATN
YYAGL IHAM
AATEPUNGUJ 7
METM8A I   
  A NLARAS9
  B10HASKARA
MANGALYAAN

— subham—-

Tags- Space, Satellites, India, Crossword

முருகா என்று அழைக்கவா, குமரா என்று அழைக்கவா? (Post No.12,066)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,066

Date uploaded in London – –  31 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 அறுபடை வீடுகள் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரிந்த முருகன் தலங்கள்தான். அவை தவிர நூற்றுக் கணக்கான புகழ் பெற்ற முருகன் கோவில்கள் இருக்கின்றன. அதற்குச் சான்று 500 ஆண்டுகளுக்கு முன்னரே அவற்றை அருணகிரி நாதர் பாடிப் பரவியுள்ளார்.  கீழேயுள்ள  கட்டங்களில் காணப்படும் 25 முருகன் கோவில்கள் என்ன என்ன?

அறு படை  வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருத்தணி, பழனி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றைத் தேடாதீர்கள்.

திலைத்கிரி
ம்ல்தி
ர்ருதுருதி
வூநாகைரைக்ருதி
ழுர்யூவாறுசிருச்ர்
ள்ளியூ ர்ணைசிகா
ள்லூர்
ளிலைசிஞ்சேம்ம்
யிழிசி
லைலிராவிகாம்நா
கிரிர்ம்வி
ம்புசீஞ்கா

Answers

வள்ளியூர், வள்ளிமலை, வழுவூர், வி ராலிமலை, மது ரை, ம யில ம், மயிலை, திருவக்கரை, திருவருணை, ஊதிமலை, வய லூ ர், சிக்கல், இலஞ்சி,

சிறுவாயூர், கதிர்காமம், ரத்னகிரி, சேலம், கருர்,  நா கை, திருச்சி, சிதம்பரம், அவிநாசி, சீர்காழி,  காஞ்சீ புரம்,  கனக கிரி

—subham—-

Tags – முருகன் கோவில்கள்

குணப்படுத்த முடியாத நோயாளிகளைக் கொல்லலாம்: காந்திஜி (Post No.12,065)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,065

Date uploaded in London – –  31 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

ஆஸ்ரமத்திலுள்ள கன்றுக்குட்டி யைக்  குணப்படுத்தவே முடியாது என்று டாக்டர்கள் கை விரித்தனர். அதற்கு விஷ ஊசி  போட்டுக் கொல்லுங்கள் என்றார் காந்திஜி.  அதுவும் இரண்டே நிமிடத்தில் செத்தது. உடனே ஆமதாபாத்திலும்,  நாடு முழுவதிலும் அஹிம்சா வாதிகள் போர்க்கொடி தூக்கினர். காந்திஜியை வசை மாரி பெய்து கடித மழை பெய்தனர். வச வுகளைக் கண்ட காந்திஜி நவஜீவன்  என்ற தன்னுடைய பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதினார் . அதன் சுருக்கம் பின்வருமாறு (தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்)

xxxx

ஒரு கவிஞர் பாடினார்

அன்பின் பாதை ஒரு அக்கினிப் பரீட்சை

கோழைகள் அதிலிருந்து ஓடிவிடுவர்

அஹிம்சை என்பதும் அன்புப் பாதை. அதை ஒருவர் தனிக்கத்தான் கடக்கவேண்டும் .

ஆனால் ஒருவர் ஒரு நியாயமான கேள்வியை என்னிடம் கேட்கலாம். கன்றுக்குட்டிக்கு பின்பற்றிய நீதியை மனிதர்களுக்கும் பின்பற்றுவீர்களா? ஐயா காந்திஜியே, உம்ம விஷயத்தில நீ இதைக் கடைப்பிடிப்பியா?

இதோ என் பதில்– ஆமாம்; அப்படித்தான் செய்வேன் . அதே விதி, இந்த இரண்டு கேள்விக்கும் பொருந்தும்.

யதா பிண்டேததா பிரஹ்மாண்டே  (பிண்டத்தில் இருப்பது பிரஹ்மாண்டத்திலும் இருக்கிறது ); இதற்கு  விதிவிலக்கு என்பதே இல்லை ; கன்றுக்குட்டியைக் கொன்ற முறை தவறானது; வன்முறை/ ஹிம்சை மிக்கது .

ஆனால் நிஜ வாழ்வில் நம்முடைய சொந்த பந்தங்கள் நோய்வாய்ப்பட்டால் இந்த விதியைப் பின்பற்றி  மரணத்தைக் கொடுப்பதில்லை ; ஏனெனில் அவர்களுக்கு உதவி செய்ய சில வழிகள் நம்மிடம் உள்ளன. மேலும் அவர்களுக்கு சிந்தித்து முடிவு எடுக்கும் ஆற்றல் உள்ளது.  ஒரு உதாரணத்தைப் பார்ப்போம் என் நண்பருக்கு நோய் வந்துவிட்டது அவருக்கு இனி என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது; அவரும் உயிர்பிழைக்க வாய்ப்பே இல்லை ; அவர் நினைவற்ற நிலையில் இருக்கிறார் ; வலியால் துடித்துக் கொண்டு இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . இந்த நிலையில் அவருடைய உயிரை முடித்துவைப்பதை நான் ஹிம்சை என்று கருதவில்லை.டாக்டரின் கத்தியும் கொலைகாரன் கத்தியும்

ஒரு நோயாளியிடத்தில் அவனது நோயைக் குணப்படுத்த,அறுவைச் சிகிச்சை மருத்துவர் கத்தியால் உடற்பகுதிகளை வெட்டி சிகிச்சை தருகிறார் ; இதே போல சில தருணங்களில் ஒருவர் மேலும் ஒரு படி சென்று , நோயாளியின் நலனுக்காக அவரது உயிரைத் துண்டிக்கும் தேவை ஏற்படலாம். சிலர் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம். நீங்கள் சொன்ன முதல் உதாரணம் உயிரைக் காப்பாற்ற நடந்தது; இரண்டாவதில் உயிரை எடுக்க அல்லவா செய்தீர்கள் என்று .; இதை ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இரண்டிலும் குறிக்கோள் ஒன்றுதான் என்பது புலப்படும் கஷ்டப்படும் ஆன்மாவை அதிலிருந்து விடுவிப்பதுதான் .ஒரு சிகிச்சையில் வலி ஏற்படுத்திய பகுதியை டாக்டர் வெட்டி எடுத்தார்  இன்னொரு சிகிச்சையில் வலியை  நிறுத்த முடியாத உயிரை நீக்கினார் அப் போது அந்த உடலுக்கு/ சவத்துக்கு இன்பமோ துன்பமோ இல்லை. இன்னும் சில சம்பவங்களையும் கற்பனை செயது பார்ப்போம். அங்கும் கொல்லாமல் விடுவதே ஹிம்சை; கொன்று தீர்ப்பதே அஹிம்சை எனப்படும் . என்னுடைய மகளின் நோக்கத்தை அறிய நேரமே இல்லாத ஓர் நொடிப்பொழுதில் அவளை ஒருவன் தாக்குகிறான் ; அவளை என்னாலும் காப்பாற்றும் நிலை இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள் . அப்பொழுது (மானத்தைக் காப்பாற்ற) அவளை நான் கொன்றுவிட்டு, அந்த முரடனை என் பலத்தைக் கொண்டு சமாளிப்பேன் . இது அஹிம்சையே.

ஆனால் பெரிய தொல்லை என்னவென்றால் , நம்முடைய அஹிம்சாவாதிகள் அஹிம்சை என்பது வணங்கப்படவேண்டிய ஒரு வஸ்து / ஒரு தாயத்து என்று கருதிக்கொண்டு  அதைப் பின்பற்றுவதில் தடைகளையே போடுகிறார்கள் .

முடிவாக ஒன்று சொல்கிறேன் கோபத்தின் காரணமாகவோசுயநலத்தின் காரணமாகவோ ஒருவருக்கு தீங்கு செய்வது , தீங்கு செய்ய விரும்புவது , எதனுடைய உயிரையும் வாங்குவது ஹிம்சை எனப்படும்; இதற்கு நேர் மாறாக , ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர், ஒருவனுடைய உடல் ரீதியிலான, ஆன்மீக ரீதியிலான நன்மையை மனதில் கொண்டு, ஒருவருடைய உயிருக்கு முடிவுகட்டினால் அது அஹிம்சை எனப்படும்.; ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் தனித்தனியே பார்த்து, அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து,  முடிவு செய்ய வேண்டும் ; இறுதியாக ஒரு செயல் ஹிம்சையா அஹிம்சையா என்பது அதன் நோக்கத்தையே சார்ந்தது ஆகும்.

(நவஜீவன் பத்திரிகையில் மஹாத்மா காந்தி எழுதிய கட்டுரையின் சுருக்கம்)

–SUBHAM—

TAGS-  காந்தி, ஹிம்சை எது, அஹிம்சை எது, நோயாளி, கொல்லலாம் , கன்று, விஷ ஊசி

தாந்தேயின் அபார நினைவாற்றல் சக்தி! (Post No.12,064)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,064

Date uploaded in London –   31 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –

அத்தியாயம் 2

ச.நாகராஜன்

தாந்தேயின் அபார நினைவாற்றல் சக்தி! 

இத்தாலிய கவிஞரான தாந்தே (1265-1321) அபார நினைவாற்றல் சக்தியைக் கொண்டவர். அவரது டிவைன் காமடி (Divine Comedy)  என்ற கவிதை உலகப் பிரசித்தி பெற்றது. இத்தாலிய மொழியின் தந்தை என்றும் அவர் புகழப்படுகிறார்.

ஒரு நாள் அவர் ஃப்ளோரென்ஸ் நகர் வீதியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது ஒருவன் அவரை அணுகி, “உலகில் சுவையான உணவு எது?”

என்று கேட்டான்.

அவனைச் சரியாகக் கவனிக்காமலேயே “முட்டை தான்” என்று பதில் கூறியவாறே நடந்தார் தாந்தே.

ஒரு வருடம் கழிந்தது. அதே நபர் அதே வீதியில் கவிஞர் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அவரிடம் வந்து, “எதனுடன்?” என்று கேட்டான்.

முந்தைய வருட சம்பவத்தைப் பற்றி தாந்தே நினைத்தாரா இல்லையா யாருக்கும் தெரியாது, ஆனால்  அவர், “உப்புடன்” என்று பதில் கூறியவாறே நடந்தார்.

விக்டர் ஹ்யூகோவின் கேள்விக் குறி?

பிரான்ஸ் நாட்டில் நாடகம், கவிதை, இலக்கியக் கட்டுரைகள் ஆகியவற்றின் படைப்பிற்குப் பெயர் பெற்றவராகத் திகழ்ந்தார் அறிஞர் விக்டர் ஹ்யூகோ (1802-1835) 

அவரது எழுத்துக்கள் ஐரோப்பா முழுவதும் பரவி அவருக்குப் புகழைத் தந்தது.  நாடர்டேம் டீ பாரிஸ் என்ற நாவலும் லெஸ் மிஸரபிள்ஸ் என்ற அவரது நாவலும் குறிப்பிடத் தகுந்தவை. 1862இல் அவர் லெஸ் மிஸரபிள்ஸ் நாவலை பிரசுரத்திற்காக தனது வெளியீட்டாளரிடம்  அனுப்பினார். ஆனால் அது வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றதா இல்லையா என்று அவருக்குத் தெரியவில்லை.

ஆவல் உந்த ஒரு கேள்விக்குறியை இட்டு ஒரு பேப்பரை தனது பப்ளிஷரிடம் அவர் அனுப்பினார்.

உட்னேயே பதில் வந்தது ஒரு பேப்பரில் – அதில் இருந்தது ஒரு ஆச்சரியக் குறி மட்டுமே!

அபாரமான வரவேற்பு என்று புரிந்து கொண்டார் விக்டர் ஹ்யூகோ.

 பிகாஸோவின் (PABLO PICASSO) பயம்!

பாப்லோ பிகாஸோவுக்கு உயில் எழுதுவது என்றால்  பயம். தன் உயிலைத் தான் எழுதினால் உடனே தனக்கு மரணம் சம்பவிக்கும் என்று அவர் நம்பினார். ஆகவே அவர் உயில் எழுத மறுத்தார்.

1881ஆம் வருடம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அவர் பிறந்தார்.

1973 ஏப்ரல் 8ஆம் தேதி அவர் மறையும் போது அவருக்கு வயது 92.

இந்த உயில் எழுத மறுத்ததால் அவருக்கும் குடும்பத்தாருக்கும் நேர்ந்த சங்கடங்கள் பல.

அவரது விதவை மனைவியான ஜாக்குலினுக்கும் அவரது நான்கு குழந்தைகளுக்கும் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டு அது பல வருடங்கள் நீடித்தது. அவரது படைப்புகள் பற்றிய ஆராய்ச்சியில் இது கொண்டு விட அங்குமிங்குமாக சிதறிக் கிடந்த அவரது 60000 கலைப் படைப்புகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

எண்பது வருட கால உழைப்பில் உருவானவை அவை.

ஒரு சமயம் உணவு விடுதி ஒன்றில் அவர் இருந்த போது ஒரு பெண்மணி அவரை அணுகி தனது கைக்குட்டையில் எதையாவது எழுதுமாறு வேண்டினார். அதற்கு எவ்வளவு பணம் சொன்னாலும் தருவதாக உறுதி கூறினார்.

அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிகாஸோ அப்படியே செய்தார்.

“எவ்வளவு பணம்?” என்று அந்தப் பெண்மணி கேட்க பத்தாயிரம் டாலர் தாருங்கள் என்றார் பிகாஸோ.

விக்கித்துப் போன அந்தப் பெண்மணி, “அதை நீங்கள் முடிக்க ஆன நேரம் முப்பது விநாடிகள் தானே” என்று கேட்டார்.

“இல்லைஇல்லைஅதற்கு எனக்கு நாற்பது வருடங்கள் ஆயின” என்று பதில் சொன்னார் பிகாஸோ.

***

Killing an incurable Patient is Good –Gandhiji (Post No. 12,063)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,063

Date uploaded in London – –  30 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

(The killing of an ailing calf in the Ashram caused  a great commotion in certain circles in Ahmedabad and some angry letters having been addressed to Gandhiji on the subject, he critically examined the question in the light of the principle of non violence ( ahimsa) in an article in the Navajivan, the substance of which is given below)

A poet has sung

“The pathway of love is the ordeal of fire,

The shrinkers turn away from it”

The pathway of ahimsa, that is of love, one has to tread all alone.

But the question may very legitimately be put to me: Would I apply to human beings the principle I have enunciated in connection with the calf? Would I like it to be applied in my own case? My reply is Yes; the same law holds good in both the cases. The law of

Yathaa Pinde, thathaa Brahmaande (as with one, so with all) admits of no exceptions, or the killing of the cow was wrong and violent. In practice however we do not cut short the sufferings of our ailing dear ones by death because aa a rule we have aways means at our disposal to help them and because they have the capacity to think and decide for themselves. But suppose in the case of an ailing friend I am unable to render any aid whatever and recovery is out of the question and the patient is lying in an unconscious state in the throes of fearful agony then I would not see any himsa  (violence) in putting an end to his suffering by death.

Doctor’s Knife and Murderer’s Knife

Just as a surgeon does not commit himsa but practises the purest ahimsa when he wields his knife on his patient’s body for the latter’s benefit, similarly one may find it necessary under certain imperative circumstances to go a step further and sever life from the body in the interest of the sufferer. It may be objected that whereas the surgeon performs his operation to save the life of the patient, in other case we do just the reverse. But on a deeper analysis it will be found that the ultimate object sought to be served in both the cases is the same, viz. to relieve the suffering soul within from pain. In the one case you do it by severing the diseased portion from the body, in the other you do it by severing from the soul the body that has become an instrument of torture to it. In either case it is the relief of the soul within from pain that is aimed at, the body without the life within being incapable of feeling either pleasure or pain. Other circumstances can be imagined in which not to kill would spell himsa,  while killing would be ahimsa. Suppose for instance that I find my daughter – whose wish at the moment I have no means of ascertaining – is threatened with violation and there is no way by which I can save her, then it would be the purest form of ahimsa on my part to put an end to her life and surrender myself to the fury of the incensed ruffian.

But the trouble with our votaries of ahimsa is that they have made of ahimsa a blind fetish and put the greatest obstacle in the way of the spread of true ahimsa in our midst.

Xxxxx

To conclude then, to cause pain or wish ill to or to take the life of any living being out of anger or a selfish intent is himsa. On the other hand, after a calm and a clear judgement to kill or cause pain to a living being with a view to its spiritual or physical benefit from a pure, selfless intent may be the purest form of ahimsa. Each such case must be judged individually, on its own merits. The final test as to its violence or non violence is after all the intent underlying the act.

–subham—

Tags- surgeon’s knife, killing patient, Gandhiji , himsa , ahimsa

மேலும் 30 காந்தி பொன்மொழிகள் (Post No.12,062)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,062

Date uploaded in London – –  30 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 ஜூன் 2023 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் – ஜூன் 2 வைகாசி விசாகம்;  21- சர்வதேச யோகா தினம்; 29- பக்ரீத்

அமாவாசை – 17; பெளர்ணமி – 3; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 13, 29

சுப முஹூர்த்த நாட்கள் – 5,8,9,28

Xxx

சென்ற மே மாத காலண்டரில் 31  காந்திஜி பொன்மொழிகளைக் கண்டோம்.இதோ மேலும் 30 பொன்மொழிகள் .

ஜூன் 1 வியாழக்கிழமை

125 ஆண்டுகள் வாழ ஆசை

125 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன் என்று நான் பேசியது வெற்றுப் பேச்சல்ல; சிந்தித்த பின்னரே சொன்னேன்.  ஈஸா வாசியோபநிஷத்தின் மூன்றாவது மந்திரத்தில் 100 ஆண்டுகள் வாழ மனிதன் ஆசைப்பட்ட வேண்டும் என்று வருகிறது. ஒரு வியாக்கியானத்தில் 100 என்பது உண்மையையில் 125 ஆண்டு என்றுள்ளது.

.xxx

ஜூன் 2 வெள்ளி க்கிழமை

யக்ஞம் என்றால் என்ன ?

எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் மற்றவர் நலனை உத்தேசித்து செய்யும் எல்லாப்பணிகளும் யக்ஞம் எனப்படும்.அது இக, பர நலன் ஆக இருக்கலாம். சொல், செயல், சிந்தனையில் செய்யும் எல்லா வேலைகளும் இதில் அடக்கம்; அது மட்டுமல்ல; மனிதர் நலன் மட்டுமன்று; எல்லா உயிரினங்களையும் பற்றியது இது.

Xxx

ஜூன் 3 சனிக்கிழமை

இதனால்தான் பகவத் கீதையும் சொல்கிறது : யக்ஞம் செய்யாமல் சாப்பிடுபவன் திருட்டு உணவைச் சாப்பிடுவதாகும் என்று.

xxx

ஜூன் 4 ஞாயிற்று க்கிழமை

இன்று நாம் பார்ப்பது உண்மையான இந்து மதமல்ல .இது கேலிக்கூத்து ஆகும். அதனாலேதான் நான் வக்காலத்து வாங்க வேண்டி வருகிறது ; இல்லாவிடில் அதுவே தன்னை விளம்பரப்படுத்தும். .

Xxxx

ஜூன் 5 திங்கட் கிழமை

நம்முடைய அற்புதமான கண்டுபிடிப்புகள்

பொருட்கள் விஷயத்தில் மேலை நாடுகள் அற்புதமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தது போல இந்து மதம் அதைவிட அற்புதமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து இருக்கிறது. இது சமயம், ஆன்மா சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்பு. ஆனால் அதை நாம் கண்டுகொள்ளவில்லை மேலை நாட்டு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நம் கண்களைக் கூசச் செய்துவிட்டது

Xxx

ஜூன் 6 செவ்வாய்க் கிழமை

இன்னொரு விஷயத்தைச் சொல்ல நான் மறந்துவிட்டேன்.40 ஆண்டுகளுக்கு முன்னரே மாக்ஸ்முல்லர் (MAX MULLER) சொன்னது என்னவென்றால் மறு பிறப்பு என்பது உண்மைதான் என்ற ஞானோதயம் ஐரோப்பாவில் உதயமாகிவிட்டது என்பதாகும்; நல்லதுதான் ; இது முழுக்க முழுக்க இந்துக்களின் கொள்கை .

Xxx

ஜூன் 7 புதன் கிழமை

ஆங்கிலேயர் சொன்ன தவறான கருத்து

நாம் இதற்கு முன்னர் ஒரே தேசமாக இருந்தது இல்லை என்று  ஆங்கிலேயர்கள் நமக்குக் கற்பித்துவிட்டு, நாம்  அப்படி ஒரே தேசமாக இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகும் என்றும் சொல்கிறார்கள் .இதற்கு ஆதாரமே  இல்லை; வெள்ளைக்காரர்கள் இங்கு வருவதற்கு முன்னரே நாம் ஒரே தேசமாக இருந்தோம் .

xxx

ஜூன் 8 வியாழக் கிழமை

சர் ஜகதிஷ்  சந்திர போஸின் (SIR J C BOSE) அற்புதமான ஆராய்ச்சியால் ஜடப்பொருட்களிலும் உயிர் இருக்கிறது என்பதை அறிகிறோம் .

XXX

ஜூன் 9 வெள்ளிக் கிழமை

எனக்குக் கோவிலா ?

ஒரு பத்திரிகை செய்தியைப் பார்த்தேன். எனக்கு ஒரு கோவில் கட்டி இருக்கிறார்கள் என்றும் அதில் நான் வழிபடப்படுகிறேன் என்றும் செய்தி கூறுகிறது இது அப்பட்டமான தனி நபர் ஆராதனை; யார் கோவிலை  கட்டினார்களோ அவர்கள், பணத்தை வீணடித்து இருக்கிறார்கள் ; அங்கு வரும் கிராம மக்களை தவறான பாதையில் செலுத்துகிறார்கள்;

நான் என்னுடைய வாழ் நாள் முழுதும்  எதைப்  போதித்தேனோ அதை கேலிச்  சித்திரம் வரைந்து கிண்டல் செய்வது போல இருக்கிறது

XXX

ஜூன் 10 சனிக் கிழமை

புனிதமான பூணூல்

நான் பூநூலைக் கழற்றிவிட்டேன் ஆயினும் பூணூல் அணியும் உபநயனம் சடங்கில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது பூணூலை அணிவது புதிய பிறவி எடுப்பது போலாகும் ; அதை அணிவதற்கு முன்னர் ஒரு பிறவி; அது உடல் ரீதியிலான பிறப்பு..   பூணூலை அணிந்தவுடன் எடுக்கும் பிறப்பு ஆன்மீகப் பிறப்பு ஆகும்

XXXX

ஜூன் 11 ஞாயிற்றுக் கிழமை

உண்ணாவிரத நோன்பு

இது ஒரு புனிதமான விரதம் ;உண்மையான உண்ணா நோன்பு உடலையும், உள்ளத்தையும் அதில் உறையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துகிறது

XxxX

ஜூன் 12 திங்கட் கிழமை

பிரார்த்தனை

உள்ளத்திலிருந்து எழும் பிரார்த்தனை பல அற்புதங்களைச்  செய்ய வல்லது . அது மேலும் ,மேலும் தூய்மையை நாடும் ஆன்ம எழுச்சியாகும்.; அப்படி கிடைக்கும் தூய்மையை  உன்னத பணிக்குப் பயன்ப டுத்துவது பிரார்த்தனை ஆகும்.

Xxx

ஜூன் 13 செவ்வாய்க் கிழமை

சம்ஸ்க்ருதம் படியுங்கள்

சம்ஸ்க்ருத மொழியின் மகத்தான சக்தி பற்றி விவேகானந்தர் சொன்னதை நானும் நம்புகிறேன். சம்ஸ்க்ருதம் கற்பது கஷ்டமானது என்ற தேவையற்ற பயம் நம்மிடையே இருக்கிறது.முயற்சியுள்ள ஒருவனுக்கு எந்த ஒரு மொழியைக் கற்பதற்குள்ள கஷ்டத்தை விட சம்ஸ்க்ருதம் கற்பதில் கஷ்டம் எதுவும் இல்லை.

Xxx

ஜூன் 14 புதன் கிழமை

காயத்ரீ மந்திரம்

காயத்ரீ மந்திரத்தைப்  பலமுறை ஜபித்து நோயைக் குணப்படுத்துவதானது பிரார்த்தனைக்கு நாம் கொடுத்துள்ள விளக்கத்துக்கு நல்ல உதாரணமாகும்; ஒரு தேசத்துக்கு ஆபத்து ஏற்படுகையில் அல்லது நாட்டுக்குக் கஷ்டம் ஏற்படுகையில் காயத்ரீ மந்திரத்தை சிரத்தையுடன், மனத்தை ஒருமித்து, சரியான முறையில் ஜபித்தால் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்

Xxx

ஜூன் 15 வியாழக் கிழமை

உண்ணாவிரதம் – நோன்பு (FASTING)

இந்துமத நூல்களில் நோன்பு, விரதம் பற்றி ஏராளமான விஷயங்கள் காணப்படுகின்றன பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் இன்றும்கூட எதற்கெடுத்தாலும் நோன்பு, விரதம் அனுஷ்டிப்பதை நாம் காண்கிறோம். தீங்கு எதுவும்  செய்யாத சடங்கு இது.

Xxxx

ஜூன் 16 வெள்ளிக் கிழமை

கிறிஸ்தர்களுக்கு விளங்குவதே இல்லை

கிறிஸ்தவ மத ப்ராட்டஸ்டன்ட் PROTESTANT பிரிவினருடன்தான் எனக்கு பெரிய பிரச்சனை; எனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் ஜாஸ்தி; அதுமட்டுமல்ல, அவர்கள் நட்பை     மிகவும் மதித்துப் போற்றுபவன் நான்.ஆனால் ஒரு உண்மையை இன்று பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்கிறேன். அவர்களை  அறிந்த  காலத்திலிருந்தே , அவர்களுக்கு நோன்பு, உண்ணாவிரதம் என்பதெல்லாம் பிடிக்கவில்லை என்பதை அறிந்தேன் ; இது ஏன் என்று எனக்கு விளங்கவேயில்லை .

Xxx

ஜூன் 17 சனிக் கிழமை

கடவுளின் குரல் VOICE OF GOD எனக்குக் கேட்கும் என்பது  புதிய தகவல் ஒன்றும் இல்லை; ஆனால் துரதிருஷ்டவசமாக அதற்கு ஆதாரம் காட்ட என்னால் முடிவதில்லை.ஆனால் கிடைக்கும் பலன்கள் மூலம் அதை அறிய முடிகிறது .

Xxx

ஜூன் 18 ஞாயிற்றுக் கிழமை

நான் திண்டாடித் திக்குமுக்கு தெரியாமல் தவித்த காலத்திலும் கடவுள் என்னை ஒருபோதும் கைவிடவில்லை . எனக்கு அவர் சுதந்திரமே தந்ததில்லை நான் நினைத்தற்கும் எதிராக என்னை சரியாக வழி  நடத்திச் சென்றார் . அவரை எவ்வளவுக்குச் சரண் அடிக்கிறோமோ அவ்வளவுக்கு ஆனந்தம் கிடைக்கும் .

XXXX

ஜூன் 19 திங்கட் கிழமை

வைஷ்ணவ ஜனதோ பாடல்

சக மனிதர்களுக்கு எவன் சேவை செய்கிறானோ அவன் இருதயத்தில்தான் கடவுளும் இடம் பிடிப்பார். அடுத்தவன் படும் கஷ்டத்தைத் கண்டு எவன் கண்ணீர் சிந்துகிறானோ அவன்தான் உண்மை வைஷ்ணவன் என்று கடவுளைக் கண்ட, அறிந்த நரசிம்ம மேத்தாவும் பாடினார் .

XXXX

ஜூன் 20 செவ்வாய்க் கிழமை

நோன்பு நாளில் சூதாட்டம்

ஜன்மாஷ்டமி தினத்தில் நோன்பு இருப்பதாக கருதிக்கொண்டு சூதாட்டம் ஆடுகிறார்கள் இந்த வகை உண்ணாவிரதத்தில் பலன் இல்லை ; அதற்கு நேர்மாறாக மேலும் தாழ்ந்துதான் போவான் .

XXX

ஜூன் 21 புதன் கிழமை

ராம நாமத்தை முஸ்லீம்கள் எதிர்க்கக்கூடாது

என்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் நான் சொல்லும் ராமநாம ராமன் வரலாற்று புருஷனல்ல.அயோத்தி மன்னன் தசரதனின் மகனும் அல்ல. அவன் சனாதன புருஷன். அவனுக்கு சமமான இரண்டாமவன் எவனுமிலன் ; அத்தகைய ராமனையே நான் வணங்குகிறேன் ; அவன் உதவியையே நாடுகிறேன்; எல்லோருக்கும் உரியவன். முஸ்லீம்கள் அல்லது வேறு எவரும் அவன் பெயரை ஏற்க மறுக்கக் கூடாது. கடவுளை ராமநாமம் என்று கடவுளையே கட்டுப்படுத்த தேவை இல்லை அவர்கள் வேண்டுமானால் தனக்குள்ளே அல்லா என்று சொல்லிக்கொள்ளலாம் .

Xxx

ஜூன் 22 வியாழக் கிழமை

இந்து தர்மம் என்பது ரத்தினங்கள் நிறைந்த கங்கு கரை காணாத மஹா சமுத்திரம் ; எவ்வளவு ஆழமாக செல்கிறோமோ அவ்வளவு ரத்தினங்களைக் காணலாம்.

XXX

ஜூன் 23 வெள்ளிக் கிழமை

ராம- ராவண யுத்தம்

ராவணனை ராம பிரான் வெற்றி கொண்ட  நாளில் தசரா கொண்டாடுகிறோம். இந்த வெற்றி வன்முறை மூலம் கிடைத்த வெற்றியன்று ஆயுதமில்லாமல், கவசமில்லாமல், பலம் வாய்ந்த , தேரில் விரைந்து செல்லும் ராவணனை நீங்கள் எப்படிச் ஜெயிக்கப் போகிறீர்கள் என்று ராம பிரானை விபீஷணர்  கேட்டார். ராமர் சொன்னார்- நம்பிக்கையும் மனத்தூய்மையும் இந்த யுத்தத்தில் வெற்றி பெறும் .

Xxx

ஜூன் 24 சனிக் கிழமை

ராமரின் வில் என்பது புலனடக்கம் அவனது வெற்றி தீமையையழித்து நன்மை வெற்றி பெற்றதாகும்.

Xxx

ஜூன் 25 ஞாயிற்றுக் கிழமை

வெறி நாய்களைக் கொல்லுங்கள்

நாம் தவறிழைக்கும், பூரணத்துவம் பெறாத மனிதர்கள்.; வெறி நாய்களைக் கொல்லுவதைத்த தவிர நமக்கு வேறு வழியில்லை; மனிதர்களைக் கொல்லும் மனிதனைக் கொல்ல வேண்டிய தவிர்க்க முடியாத கடமை கூட சில நேரங்களில் நமக்கு வந்துவிடுகிறது .

Xxx

ஜூன் 26 திங்கட் கிழமை

தெரு நாய்கள்

தெரு நாய்களை ஒன்றுமே செய்யக்கூடாது என்ற நிலை நீடித்தால், விரை வில் அவைகளைக் கொன்று தீர்க்கும் அல்லது காயடிக்கும் வேலை, நம் முன்னால் வந்துவிடும். மூன்றாவது வழி உண்டு; நாய்கள் காப்பகம் அமைப்பதாகும் .

Xxx

ஜூன் 27 செவ்வாய்க் கிழமை

பிச்சைக்காரர்கள் வேண்டாம்

வீட்டு வாசலில் நிற்கும் பிச்சைக்காரனுக்கு ஒரு கவளம் சோறு போட்டுவிட்டு புண்ணியம் சம்பாத்தித்துவிட்டதாக எண்ணுகிறோம். இதன் மூலம் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கையைத்தான் நாம் அதிகரிக்கிறோம் ; பிச்சை என்னும் இழிதொழிலை ஊக்குவிக்கிறோம்;  சோம்பேறித்தனத்தையும் சாத்திரத்துக்கு ஒவ்வாததையும் அதிகரிக்கிறோம்

Xxx

ஜூன் 28 புதன் கிழமை

அதற்காக எல்லோரையும் பட்டினி போட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வயதானவர்களுக்கும் கண் பார்வை தெரியாத வர்களுக்கும் நாம் ஆதரவு தரவேண்டும் எல்லோரும் இப்பணியைச் செய்ய முடியாது அரசாங்கமோ, தலைவர்களோ இதைச் செய்யலாம். அ த்தகையோருக்கு தர்மசிந்தனையாளர்கள் நிதியுதவி செய்யலாம் .

XXXX

ஜூன் 29 வியாழக் கிழமை

நமக்குள் மஹா பாரதப் போர்

வரலாறு என்ற போர்வையில்  சித்தரிக்கப்பட்ட மஹாபாரதம் பற்றி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார் ; இது பல லட்சம் மக்களின் இதயத்தில் தினமும் நடக்கும் போராட்டமே.; பழைய பழக்க வழக்கங்களை உதறிவிட்டு , உள்ளத்தில் உறையும் தீமைகளை ஒழித்துவிட்டு, நன்மையை அதற்குரிய இடத்தில் அமர்த்தும் நோக்கம் மனிதனுடையதாகும்.

Xxx

ஜூன் 30 வெள்ளிக் கிழமை

வருணிக்க முடியாத ஒரு மஹா சக்தி எங்கும் வியாபித்துள்ளது. நான் அதை உணர்கிறேன்; ஆனால் கண்களால் கண்டேன் இல்லை ; காணமுடியாத அந்த சக்தி அதுவே உணரச் செய்கிறது. ஆனால் ஆதாரத்தைக் காட்டமாட்டேன் என்கிறது ; இதை ஐம்புலன்களால் அறிய முடியாது.; இது அதற்கெல்லாம் அப்பாற்பட்டது .

Source book- HINDU DHARMA, M K GANDHI, NAVAJIVAN PUBLISHING HOUSE, AHMEDABAD, 1950, RUPEES FOUR. தமிழாக்கம் – லண்டன் சுவாமிநாதன்

–சுபம் —

TAGS- காந்தி, பொன்மொழிகள், ஜூன் 2023, காலண்டர், பிச்சைக்காரர்கள், தெரு நாய்கள், ராம நாமம் , பிரார்த்தனை, உண்ணாவிரதம், நோன்பு, கிறிஸ்தவர்கள் , இந்துமதம், பூணூல், வைஷ்ணவன்

Mountains of India Crossword (Post no.12,061)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,061

Date uploaded in London – –  30 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Try to find the famous mountains of India. There are nine mountains, mostly with their popular Sanskrit names, are listed here.

Across Down

2. This mountain range servers as a natural border between Maharashtra and Madhya Pradesh state. River Tapti originates here.

4. This is a mountain range in Kashmir region spanning the borders of Pakistan, China, and India, with the northwest extremity of the range extending to Afghanistan and Tajikistan.

5.Eastern Ghat mountain chain’s Sanskrit name (GO LEFT TO RIGHT)

6.sanskrit literature refers to its sandal wood trees and the Southern Breeze from it. (GO LEFT TO RIGHT)

7. Western Ghat mountain chain’s Sanskrit name

8.Ramayana says Hanuman started his journey from this mountain to Sri Lanka

xxxx

Down

1. Northern border of our country; mentioned from Rig Veda to Tamil Sangam literature; Kalidasa referred to it as the Measuring Rod of Earth in Kumarasambhava.

3. Guru Sikhar and Mount Abu are famous peaks here.

5.River Tambrabarani originates here; Place of famous Rishi/seer Agastya.

9.Agastya laid road route for the first time on this central India mountain range. Puranas describe this anecdote as Agastya belittled this range; he subdued the arrogance of this mountain that never allowed anyone to cross. (GO UP FROM DOWN)

Answers

1.HIMALAYA, 2.SATPURA, 3.ARAVALLI, 4.KARAKORUM, 6.MALAYA, 5.POTHIYA

5.PURVANCHALA, 7.SAHYADRI, 8.MAHENDRA, 9.VINDHYA

 answers: 

H 1   S 2A 3TPURA
I    R     
M K 4ARAKORUM
A    V    A
LAHCNAVRP 5Y
A    L   OH
Y AYALAM 6 TD
A    I   HN
  S 7AHYADRII
M 8AHENRA AV 9

-SUBHAM–Tags- Mountains, Crossword, Vindhyas, Satpura, Aravalli

புலவர் கண்ட பெண்! (Post No.12,060)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,060

Date uploaded in London –   30 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஒரு பெண்ணுக்கு கண்கள் ஏழுமுலை ஆறுகாது ஐந்துநெற்றி நான்கு! – புலவர் கண்ட பெண்! 

ச.நாகராஜன்

மதுரகவிராயர் என்ற ஒரு புலவர் தமிழின் பால் மிக்க பற்று கொண்டவர். இனிய தமிழ்ப் பாடல்களை அவ்வப்பொழுது சமயத்திற்கேற்றபடி உடனே புனைவார்.

அவருக்கு பிரம்பூர் ஆனந்தரங்கம் பிள்ளை என்பவர் பொருள் உதவி கொடுத்து ஆதரித்து வந்தார்.

ஒரு நாள் அவரைப் பார்த்த புலவர் கூறினார் : கர்ண ப்ரபுவே! ஆனந்த ரங்க மகிபாலா! உனது பிரம்பூரில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்குக் கண்கள் ஏழு, முலைகள் ஆறு, காதுகள் ஐந்து, நெற்றி நான்கு என்றார்.

ஆனந்தரங்கம் பிள்ளை அசந்து போனார். பாடலின் பொருளைக் கண்டுபிடித்துப் புலவருக்குப் பரிசுகள் தந்தார்.

பாடல் இதோ:

கார்படைத்த கரதலத்தான் றுரைதிருவேங் கடமளித்த கன்னாவெங்கும்

பேர்படைத்த வானந்த ரங்கமகி பாலாநின் பிரம்பூர் நாட்டில்

நேரிழைக்கு விழியேழு முலையாறு காதைந்து நெற்றி நான்கு

பாரிடத்திலிப் புதுமை கண்டுவந்தே னிதன்பயனைப் பகர்ந்திடாயே

பாடலின் பொருள்:

கார்படைத்த – மேகத்தின் தன்மையைக் கொண்ட

கரதலத்தான் – கையை உடையவனும்

துரை – துரையும் ஆகிய

திருவேங்கடமளித்த கன்னா – திருவேங்கடம் என்ற வள்ளல் ஈன்றெடுத்த கர்ணனே

பேர் படைத்த – எங்கும் பிரபலமாக உள்ள

ஆனந்தரங்க மகிபாலா – ஆனந்தரங்க பூபாலனே

நின் பிரம்பூர் நாட்டில் – உனது பிரம்பூர் நாட்டில்

நேரிழைக்கு – ஒரு பெண்ணுக்கு

விழி ஏழு – ஏழு கண்கள் உள்ளன

முலை ஆறு – மார்பகங்கள் ஆறு உள்ளன

காது ஐந்து – ஐந்து காதுகள் உள்ளன

நெற்றி நான்கு – நான்கு நெற்றிகள் உள்ளன

பார் இடத்தில் – இந்த பூமியில்

இப்புதுமை கண்டு வந்தேன் – இந்தப் புதுமையைக் கண்டு வந்திருக்கிறேன்

இதன் பயனை – இதன் பொருளை

பகர்ந்திடாய்- சொல்வாயாக

நேரிழை என்பதை பன்னிரெண்டு ராசிகளில் ஒன்றாக அமையும் கன்னி ராசி என்று பொருள் கொள்ள வேண்டும். ஒரு அழகியைக் கண்டேன் என்று பொருள்.

நேரிழைக்கு ஏழு கண்கள் என்பது ராசிகள் பன்னிரெண்டில்  கன்னி ராசிக்கு ஏழாவது ராசியாக அமையும் மீன ராசி என்று எடுத்துக் கொண்டு அவள் கண்கள் கெண்டை மீன் போல உள்ளன என்று பொருள் கொள்ள வேண்டும்.

அடுத்து முலை ஆறு என்பது ராசிகள் பன்னிரெண்டில் கன்னி ராசிக்கு ஆறாவது ராசியாக அமையும் கும்ப ராசி என்று எடுத்துக் கொண்டு அவளது திரண்ட மார்பகங்கள் குடம் போல அழகுற அமைந்துள்ளன என்று பொருள் கொள்ள வேண்டும்.

அடுத்து காதுகள் ஐந்து என்பது ராசிகள் பன்னிரெண்டில் கன்னி ராசிக்கு ஐந்தாவது ராசியாக அமையும் மகர ராசியை எடுத்துக் கொண்டு அவள் அழகிய மகர குண்டலங்களை காதில் அணிந்துள்ளாள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

அடுத்து நெற்றி நான்கு என்பதை ராசிகள் பன்னிரெண்டில் கன்னி ராசிக்கு நான்காவது ராசியாக அமையும் தநுசு என்று எடுத்துக் கொண்டு அவள் நெற்றி வில் போல அமைந்துள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

வில் போன்ற நுதல், மகர குண்டலங்கள் அணிந்த காது, குடம் போன்ற மார்பகம், கெண்டை மீன் போன்ற கண்கள் உண்ட பேரழகியை உன் பிரம்பூர் நாட்டில் கண்டேன் என்கிறார் புலவர்.

ஆனந்தரங்கம் பிள்ளைக்கும் மகிழ்ச்சி, அவரிடமிருந்து பரிசு பெற்ற மதுரகவிராயருக்கும் மகிழ்ச்சி, ஒரு புதிர்ப் பாடல் கிடைத்ததில் நமக்கும் மகிழ்ச்சி! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தமிழின்பத்தில்!!

***