16.சுமேரியா, எகிப்துக்கு இந்தியாவின் நீலக்கல் ஏற்றுமதி!
17.சிந்து சமவெளியில் மக் டொனால்ட்!
18.மெகஸ்தனீஸ், அர்ரியன், ப்ளினி பொய் சொல்வார்களா?
19.அமரு சதகம் : சமஸ்கிருத காதல் கவிதைகள்
20.நிர்வாண முஸ்லீம் சாமியார்களுக்கு மரண தண்டனை
21.வீணான ஒரு ஆராய்ச்சி! வேனன் கதை!
22.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அஸீரிய மன்னன்
அளித்த தடபுடல் விருந்து!
23.தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை
24.அரசனின் குணநலன்கள்: கம்பனும் காளிதாசனும்
25.லண்டனில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வரலாறு
26.புற நானூற்றின் கடவுள் வாழ்த்தில் சுவையான விஷயங்கள்
27.தமிழனுக்கு வானவியல் தெரியுமா?
28.அரிய பஞ்சமுக வாத்யம்!
29.இந்து கலைக்களஞ்சியம்: பிருஹத் சம்ஹிதா!
30.ஜராதுஷ்ட்ரர் வாழ்வில் நடந்த அற்புதங்களும் கந்த சஷ்டிக் கவசமும்
31.இந்திய வரலாற்றில் அராஐகம் !
32.கடவுள் பெயர் என்ன? எல்/அல்- ஈலா- இடா – அல்லா!!!
33.இளவரசர் ஹாரிக்கு ‘பஞ்ச கன்யா’ பெண்கள் வரவேற்பு
****************************
முன்னுரை
வரலாறு என்பது வெறும் ‘ஆட்சி ஆண்டுகள்’ நிறைந்த புள்ளி விவரப் பட்டியல் இல்லை. உலக வரலாற்றில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அவைகளைப் படித்தால் நமக்கு வரலாற்றின் மேல் தனிப்பற்று ஏற்படும். மேலும் இந்தியாவின் செல்வாக்கு பல நாடுகளில் இருக்கும்போது, அதை நாம் ஆராய்ந்தால் மேலும் பல அற்புதமான ஒற்றுமைகள் வெளிப்படும். எங்கோ உள்ள மடகாஸ்கர் தீவில் ஊர்ப்பெயர்களில் பாதி சம்ஸ்க்கிருதப் பெயர்களாகவும், இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மனின் யாகத் தூண் (யூபம்) கல்வெட்டுகள் இருப்பதும், இந்தோனேஷியா முழுதும் அகஸ்தியர் சிலைகள் கிடைப்பதும் நம்மை வியப்பில் ஆழ்த்தாமல் இராது.
துருக்கி- சிரியா எல்லையில் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்த்தில் வேதகாலத் தெய்வங்களின் பெயர்கள் இருப்பதும். எகிப்தில் அமர்நா என்னும் இடத்தில் தசரதன் என்ற மன்னரின் (ராமாயண தசரதன் அல்ல) கடிதங்கள் உள்ளதும் நம்மை மேலும் மேலும் ஆராய்ச்சி செய்யத் தூண்டும் . இந்தப் புஸ்தகத்தில் இந்தியாவுக்கும் தென் அமெரிக்க நாடுகளில் உள்ள இன்கா, மாயன் நாகரீகங்களுக்கும் இடையேயான ஒற்றுமைகள் விளக்கப்பட்டுள்ளன. அவர்கள் முகத்தைப் பார்த்தவுடனேயே அவர்களை இந்தியர்கள் என்றான் கொலம்பஸ். உண்மையில் தென் கிழக்கு ஆசியா முதல் தென் அமெரிக்கா வரை இந்தியக் கட்டிடக் கலையும், இந்தியர் முகச் சாயலும் இருப்பது எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்க வல்லது. என்னுடைய பிளாக்குகளில் கடந்த பத்தாண்டுகளில் வெளியான மேலும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன
இந்த நூலில் இந்திய- மாயா நாகரீக (Indo- Mayan Links) தொடர்பு பற்றியும் இன்கா (Inca Civilization) நாகரிக தொடர்பு பற்றியும் நிறைய விஷயங்கள் உள்ளன. இந்தத் தொடர்புகளை நீங்களும் மேலும் ஆராயலாம்.
அன்புள்ள
லண்டன் சுவாமிநாதன்
லண்டன் , ஏப்ரல் 2023
அட்டைப்படம் – மாயா காலண்டர் ; கல்லால் ஆனது
Xxx
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title- இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக
அற்புத ஒற்றுமைகள் (book title)
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – April 2023
Subject –History
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 7000 articles in English and Tamil and 99 Tamil and English Books
Visited Countries
India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece
Xxxx
HOW TO BUY THE BOOK
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.
Whilst I have dealt with the gurus as historical personages about whose existence we have trustworthy records, I have no knowledge that Krishna of Mahabharata ever lived. My Krishna has nothing to do with any historical person. I would refuse to bow my head to the Krishna who would kill because his pride is is hurt or the Krishna whom the non- Hindus portray as a dissolute youth. I believe in Krishna of my imagination as a perfect incarnation, spotless in every sense of the word, the inspirer of the Gita, and the inspirer of the lives of millions of human beings. But if it was proved to me that the Mahabharata is history in the same sense that modern historical books are, that every word of the Mahabharata is authentic and that the Krishna of the Mahabharata actually did some of the acts attributed to him, even at the risk of being banished from the Hindu fold, I should not hesitate to reject that Krishna as God incarnate. But to me the Mahabharata is a profoundly religious book, largely allegorical, in no way meant to be a historical record. It is the description of the eternal duel going on within ourselves, given so vividly as to make us think for the time being that the deeds described there in were actually done by the human beings. Nor I do regard the Mahabharata as we have it now as a faultless copy of the original. On the contrary, I consider that it has undergone many emendations .
Young India 1-10-1925
xxxx
My comments
This shows Gandhiji’s poor knowledge in History and religion. His wrong judge ment of Krishna and Mahabaharata shows he has never read Swami Vivekananda. I am pretty sure a lot of people would have objected or rebutted to his views in those days.–subham–
மஹாராஷ்டிர மாநில புனிதத் தலங்களைத் தொடர்ந்து காண்போம்.
மும்பை நகரத்தில் மட்டுமே இருபது புகழ்மிகு இந்துக் கோவில்கள் உள்ளன. இதோ அவற்றின் பெயர்கள் :-
1.சித்தி விநாயகர் கோவில்
2.மகாலெட்சுமி கோவில்
3.மும்பாதேவி கோவில்
4. குட்டி சபரிமலை கோவில்
5. ஹரே கிருஷ்ணா கோவில் கோவில்
6.வைஷ்ணவ தேவி கோவில்
7.பாபுல்நாத் சிவன் கோவில்
8.வாகேஸ்வரர் சிவன் கோவில்
9.ராதா கோபிநாத் கோவில்
10.பாலாஜி/ வெங்கடேஸ்வரா கோவில்
11.சுவாமிநாராயண் கோவில்
12.பிரபாதேவி கோவில்
13.கண்டேஸ்வரர் ஹனுமான் கோவில்
14.இச்சாபுரி கணேஷ் கோவில்
15.ஆர்ய சமாஜ் கோவில்
16.சிருங்கேரி மடம் கோவில்
17.சுவர்ணா கோவில்
18.ஸஹர் ஐயப்ப சிவா பார்வதி கோவில்
19.BAPS சுவாமிநாராயண கோவில்
20.சமணர் கோவில் (Jain Temple)
மும்பை அருகிலுள்ள எலிபெண்டா தீவு குகைக் கோயில் மற்றும் மேலே குறிப்பிட்ட பாபுல்நாத், வாகேஸ்வரர் சிவன் கோவில்களை ஏற்கனவே தரிசித்தோம் (இதே தொடரில் முந்தைய பகுதிகளைக் காண்க)
இப்பொழுது முக்கிய கோவில்களை மட்டும் தரிசிப்போம்.
பகுதி 15
100 ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகங்களைப் பார்த்தால் இப்போதுள்ள புகழ்மிகு கோவில்களின் பெயர்களே இரா. அப்போது அவைகள் பிரசித்தமாகவில்லை அல்லது கட்டப்படவே இல்லை என்று பொருள்.
61..மும்பா தேவி கோவில்
மும்பை என்ற பெயருக்கே காரணமாக அமைந்த மிகப்பழைய கோவில் இது. துர்கா தேவியின் வேறு பெயர் மும்பா தேவி. மதுரைக்கு மீனாட்சி, காஞ்சிக்குக் காமாட்சி, காசிக்கு விசாலாக்ஷி என்பது போல ஒவ்வொரு ஊருக்கும் உரித்தான கடவுள் உண்டு. அவ்வகையில் மும்பை நகரின் தெய்வம் மும்பா தேவி . விவசாயிகளும், மீனவர்களும், சந்திர வம்ச க்ஷத் ரியர்களும் காலா காலமாக வழிபடும் தெய்வம் அவள் . தற்போதைய கட்டிடங்கள் 1675-ம் ஆண்டு கட்டப்பட்டவை. ஒரு மேடை மீது காட்சி தரும் தேவிக்கு கிரீடம், நகைகள் ஆகியன அழகு சேர்க்கின்றன. கருங்கல்லிலான தேவிக்கு முகத்தில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டுள்ளது கோவிலுக்குள் பிற தெய்வச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்திருக்கும் இக்கோவிலுக்கு செவ்வாயன்று நிறைய பக்தர்கள் வருகின்றனர்.
Xxx
62.சித்தி விநாயகர் கோவில்
பிள்ளையார், எல்லா இந்துக்களுக்கும் முதற் கடவுள் என்ற போதிலும் மஹாராஷ்டிர மக்களுக்கு தேசீய கடவுளும் ஆகும். வங்காளத்தில் துர்கா பூஜை போல மஹாராஷ்டிரத்தில் கணேஷ் சதுர்த்தி ஒரு வாரத்துக்குக் கொண்டாடப்படும். மும்பை நகர சித்தி விநாயகருக்குக் கூடுதல் சிறப்பு என்னவென்றால் பாலிவுட் நடிகர் நடிகையரும் அரசியல்வாதிகளும் வருகை தந்து கோவிலின் பெருமையை உயர்த்திவிட்டனர் ; எல்லோருக்கும் வரம் தரும் சக்தி உடையவர் என்பது இதன் பொருள். 1801-ம் ஆண்டில் கட்டப்பட்டது.
இங்குள்ள பிள்ளையார் வலம் சுழி பிள்ளையார் இந்த மாநிலத்தின் பெரிய வரும்படி தரும் கோவில்களில் இதுவும் ஒன்று. அந்தக் காலத்திலேயே ஆண்டு வருமானம் 25 கோடிரூபாய் . கோவிலின் மரக்கதவுகளில் பல தெய்வ உருவங்களைக் காணலாம் . தங்கத் தகடுகளுக்கு இடையே கர்ப்பக்கிரகம் ஜொலிக்கும். அதிகமான பக்தர்கள் வரும் கோவில் இது.
Xxx
63.மகாலெட்சுமி கோவில்
மும்பை நகருக்குச் செல்லுவோர் சித்தி விநாயகர் கோவிலையும் மஹா லக்ஷ்மி கோவிலையும் தரிசிக்காமல் வர மாட்டார்கள். உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகர்களில் பம்பாயும் ஒன்று. இதற்குக் காரணம் மஹாலெட்சுமியும் மும்பா தேவியும் என்பது மக்களின் நம்பிக்கை இந்து சமய வணிகர் தாக்ஜி தாதாஜி இந்தக் கோவிலை 1831ம் ஆண்டில் கட்டினார் இங்கு மூன்று தேவிகள் காட்சி தருகின்றனர். மகாலெட்சுமியானவள் கைகளில் தாமரை மலர்களை ஏந்தி நிற்கிறாள்; மஹா காளியும் மஹா ஸரஸ்வதியும் இருபுறங்களில் நிற்கிறார்கள் . மூவரும் தங்க வளையல்கள், மூக்குத்திகள், இரத்தின மாலைகளுடன் ஜொலிக்கின்றனர் வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும் ஆஸ்வீன மாத பெரிய நவராத்ரியும் (தமிழக கணக்குப்படி புரட்டாசி நவராத்ரி) மிகப்பெரிய பண்டிகைகள் . கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் மின்விளக்குக்களால் அலங்கரிக்கப்படுகிறது.
இந்தக்கோவில் பற்றி செவி வழிக் கதைகளும் உலவுகின்றன. பிரிட்டிஷ் கவர்னர் ஹார்ன்பி என்பவர் வோர்லி, மலபார் என்னும் இரண்டு இடங்களை இணைக்க ஒரு கடற் பாலம் கட்டுவதற்குத் திட்டமிட்டு அந்தப் பணியை ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்ற தலைமை என்ஜினீயரிடம் ஒப்படைத்தார். ஆனால் பாலம் கட்ட முடியாதபடி பல இடையூறுகள் தலையெடுத்த வண்ணமிருந்தன. ஒரு நாள் ராம்ஜியின் கனவில் மகாலெட்சுமி தோன்றி, தான் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடப்பதைத் தெரிவித்தாள். முஸ்லீம் படை எடுப்பாளர்களால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந்த சிலைகளை ராம்ஜி மீட்டு, கோவில் கட்ட வழிவகை செய்தார் . பின்னர் பாலம் கட்டும் பணி இனிதே நிறைவேறியது . ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக்கோவில், இன்று ஏராளமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.
Xxx
64..ஹரே கிருஷ்ணா கோவில்
ஹரே கிருஷ்ணா ( ISKCON ) இயக்கத்தை துவக்கிய பக்தி வேதாந்த பிரபுபாதா இந்தக் கோவிலுக்கு அஸ்திவாரமிட்டார் கிருஷ்ண பரமாத்மா , ராதா தேவி உருவங்களுடன் கிருஷ்ண லீலைகளும் இங்கே இருக்கினறன. கோவிலின் சிறப்பு என்னவென்றால் மான், மயில்,,குரங்கு, பசுக்கள் ஆகியன அவற்றின் இயற்கைச் சூழ்நிலையில் இங்கே திரிகின்றன . ஜன்மாஷ்டமி விழாக்காலத்தில் பெரிய பக்தர் கூட்டம் காணப்படும் . கையினால் வரையப்பட்ட கிருஷ்ண லீலை ஓவியங்கள் , கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.
XXX
65.பாலாஜி – வெங்கடேச்வர சுவாமி கோவில்
பாலாஜி கோவில், தமிழ்நாட்டு கோபுரம் போல பெரிய உயரமான கோபுரத்துடன் திகழ்கிறது. ஏனைய மராட்டிய கோவில்களின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது . Nerul நெருள் ரயில் நிலையத்துக்கு அருகில் குன்றின் மேல் அமைந்த இந்தக் கோவில், பக்தர்களுக்கு திருப்பதியை நினைவுபடுத்தும். தென்னிந்திய மக்களைக் கவர்ந்து இழுக்கும் கோவிலுக்குள் ராமானுஜர், ருக்மிணி , லட்சுமி, ராம , லட்சுமண, ஹனுமான் சந்நிதிகளும் இடம்பெற்றுள்ளன 60 அடி உயர கோபுரமும், உள்ளே அமைந்த நந்தவனமும் (தோட்டமும்) கோவிலுக்கு அழகு சேர்க்கின்றன .
XXX
66. சுவாமி நாராயணர் கோவில்
சுவாமி நாராயண பக்தர்களில் இரண்டு பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் தனித்தனியே கோவில்களைக் கட்டி வழிபடுகின்றனர். இந்த சுவாமி நாராயண கோவில் மிகவும் பழமையானது சுவாமி நாராயண சம்பிரதாயத்தினர்ன் நடத்ததும் இக்கோவில் 1903ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது சுவாமி நாராயணனுடன், கிருஷ்ணா, லட்சுமி நாராயணன், ராதா, கணஷ்யாம் சிலைகளும் அலங்கரிக்கின்றன ஜன்மாஷ்டமி , ராம நவமி பண்டிகை காலங்களில் பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.
XXX
67. குட்டி சபரிமலை
கனிஜூர்மங் என்னும் இடத்தில் மலை மீது அமைந்த குட்டி சபரிமலை கோவிலில் ஐயப்ப சுவாமி, சபரி மலை போலவே அமர்ந்துள்ளார். கேரளத்திலுள்ள ஐயப்பன் கோவிலை நினைவுபடுத்தினாலும், ஒரு பெரிய வித்தியாசம் இந்தக் கோவிலுக்கு எப்போதும் வரலாம்.செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடை பெறுகின்றன.. இப்போது கோவில் இருக்கும் இட்டத்திற்கு அருகில் பெரிய தேவி கோவில் இருந்தது. வெளிநாட்டு இந்து விரோதக் கும்பல்கள் அதை அழித்தன . இப்போதும் பாழடைந்த கோவில் பகுதிகளைக் காணலாம். அதன் அருகில் ஐயப்ப சுவாமி கோவில் தற்காலத்தில் கட்டப்பட்டது.
XX
68. மாதா வைஷ்ணவ தேவி கோவில்
ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் இருக்கும் வைஷ்ணோ தேவி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற பெரிய தலம் . அந்தக் கோவில் ஒரு குகைக்குள் இருப்பதால் ஊர்ந்து சென்றுதான் கோவிலுக்குள் நுழைய முடியும். அதே பாணியில் மும்பை நகர வைஷ்ணவ தேவி கோவில் அமைக்கப்பட்டுள்ளது . நகரின் நடுப்பகுதியில் இருக்கிறது. இந்தக் கோவில் மாறுபட்ட புதிய அனுபவத்தை நல்கும் இடமாகத் திகழ்கிறது
(ஏனைய மும்பை நகர கோவில்களின் விவரத்தை அறிய அந்தந்த இணை ய தளத்துக்குச் செல்லவும்)
தொடரும்……………………………….
Tags- சித்தி விநாயகர் கோவில் ,மகாலெட்சுமி கோவில் ,மும்பாதேவி கோவில் , மும்பை நகர கோவில்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் எண் 64
இசைத் தமிழில் இராமாயணத்தை இயற்றிய எம்பெருமான்!
ச.நாகராஜன்
ஆதி கவியாகிய வால்மீகி இயற்றிய இராமாயணத்தைப் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு கவிஞர்கள் யாத்துள்ளனர்.
இதைத் தமிழில் வெண்பாவாகவும், கீர்த்தனையாகவும், கும்மியாகவும் யாத்துப் பெருமை சேர்த்த கவிஞர்கள் பலர்.
இசைத் தமிழில் இராமாயணத்தை இயற்றியவர் எம்பெருமான் என்னும் கவிஞர் ஆவார்.
இவரை ஆதரித்து அதை இயற்றுவிக்க ஊக்குவித்தவன் நல்லதம்பிக் காங்கேயன் என்னும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த கீழ்கரைப் பூந்துறை நாட்டு அதிபன் ஆவான்.
சங்ககிரி துர்க்கத்தில் இடையர் குலத்தில் எம்பெருமான் என்ற கவிராயர் ஒருவர் இருந்தார். அவர் இளமையில் மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் தங்கி கல்வி பயின்றார். தமிழில் நன்கு தேறினார். தெய்வ பக்தியுள்ள பெரியோர்களது அன்பின் கனிவை அவர் வியந்து பாராட்டுவார்.
மதுரையில் கல்வி, கேள்வியில் சிறந்த பூங்கோதை என்னும் நற்குண மாதினை அவர் மணம் புரிந்தார். அக்காலத்தில் மதுரையை அரசாண்டவர்கள் பாண்டியர்கள்.
பின்பு பாண்டிய நாடு நாயக்கர் வசமாயிற்று. என்றாலும் கூட கிருஷ்ணப்ப நாயக்கர் அரசராக அரசாண்ட போது அவரால் எம்பெருமான் போற்றப்பட்டார். அவரிடம் விடை பெற்றுத் தன் சொந்த ஊருக்கு அவர் வந்தார்.
அவரது ஊர் கொங்கு மண்டல இருபத்து நான்கு நாட்டிற்கும் தலைமையாய் ஏழு சுற்றுக் கற்கோட்டை உடைய கடிஸ்தலமாய், அந்த மண்டலத்தில் அரசு இறை செலுத்தாத குற்றம் போன்றவற்றைச் செய்தவர்களைச் சிறை வைக்கும் அரணுள்ள இடமாகத் திகழ்ந்தது.
மற்றைய சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், பட்டக்காரர்கள் முதலானோர் நாயக்கரது சமஸ்தான பிரதிநிதி காவலரைக் காண அங்கு வருவர்.
அப்போது எம்பெருமான் அவர்களிடம் இராமாயணத்தில் பொதிந்துள்ள ரகசியங்களையும் உள்ளுறைப் பொருளையும் நன்கு விளக்குவார். அதைத் தேன் துளியைப் பருகுவோர் போல அனைவரும் கேட்டு ஆனந்திப்பர்.
அவர்கள் அனைவரும் இராமாயணத்தை சுருக்கமாகச் சொல்லி மகிழ்விக்க வேண்டும் என்று எம்பெருமானை வேண்டினர்.
கீழ்கரைப் பூந்துறை நாட்டு அதிபனாக அப்போது மோரூரில் நல்லதம்பிக் காங்கேயன் என்பவன் சிறப்புற ஆட்சி செய்து விளங்கினான். அவரிடம் எம்பெருமான் அன்பு பாராட்டினார். எம்பெருமானுக்கு அந்த சங்ககிரி மோரூரில் காணி பூமி இருந்தது.
அவரிடம் காங்கேயர், “இராமாயணம் பாடுக” என்று வேண்டினார்.
“இராமபிரான் அருள் இருப்பின் அது நிறைவேறும்” என்று மகிழ்ச்சியுடன் எம்பெருமான் விடை பகர்ந்தார்.
ஒரு நாள் அக்கோட்டையுள் விளங்கும் ஶ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதியை அடைந்து தனது இராமாயணம் இயற்றும் எண்ணத்தை விண்ணப்பித்தார்.
“உலகமாதா” என்ற சொல் தோன்ற அதை மங்கலச் சொல்லாகக் கொண்டு தக்கையிசையால் இராமாயணம் பாடத் தொடங்கினார்.
காண்டங்கள் மற்றும் சில படலங்கள் தலைப்பில் வெண்பாவாகவும் மற்றையன தக்கை ஒற்றை இரட்டை என்னும் குடகம் முதலிய வரிப்பாட்டுகளும் ஆங்காங்கே அமைத்து ஆறு காண்டமாய் இராமாயணத்தை கம்பரின் கருத்தைத் தழுவிப் பாடினார்.
இதைக் கேள்வியுற்ற மதுரை சமஸ்தானாதிபதிகள் கவிராயர் மீதும் காங்கேயன் மீதும் மிக்க மதிப்பு கொண்டு அவர்களைப் போற்றினர்.
“பாடுக” என்று கேட்டுக் கொண்ட காங்கேயனை நன்றி மறவாமல் ஆங்காங்கே தனது இராமாயணத்தில் அவர் சிறப்பித்திருக்கிறார்.
மேற்கு ரங்கம் என்று புகழ்ந்து பேசப்படும் சங்ககிரி ஶ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதியில் எம்பெருமானின் இராமாயணம் அரங்கேற்றப்பட்டது என்பர்.
நல்லதம்பிக் காங்கேயன் பல பிரபந்தங்கள் கேட்டிருக்கிறான். திருச்செங்கோட்டிற் பல கற்பணிகளும் கட்டளைகளும் செய்திருக்கிறான். அவனுடைய சிலாசாசனம் ஒன்று இதோ:
இது செங்கோட்டு வேலர் கற்பக்கிரக வடசுவரில் உள்ளதாகும்.
ஸ்வஸ்தி ஶ்ரீ சகாப்தம் தருஎ உயக (1521) இதன் மேற் செல்லா நின்ற சார்வரி சித்திரை மாதம் கீழ்கரைப் பூந்துறை நாட்டில் மோரூரில் இருக்கும் வேளாளக் கண்ணர்களில் திருமலை அத்தப்ப நல்லதம்பிக் காங்கேயன் உபயம்.
இதனால் இவரது காலம் கி.பி. 1590-1600 என்று ஆகிறது.
இவரது மூதாதையர் திருமலை காங்கேயனுடைய சாசனம் ஒன்றும் சித்தளந்தூரில் உள்ளது. அது வருமாறு:
ஸ்வஸ்திஶ்ரீ வியாதிஹ்ருதய சாலிவாஹன…. தசருரு…..- ந் மேல் செல்லா நின்ற சுபானு வருஷம் கார்த்திகை மாசம் உஙஉ பௌர்ணமையும் ஞாயிற்றுக்கிழமையும் பெற்ற புண்ணிய காலத்தில் ஶ்ரீமன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ராசமார்த்தாண்டன் பூவக்ஷண ……. எம் மண்டலமும் கொண்டருளிய ஶ்ரீ வீரபிரதாபர் கிருஷ்ணராயர் மஹாராயர் பிதுருவிராச்சியம் பண்ணி யருளா நின்ற காலத்து முளவாய் சாந்த எயிநூர்ச்சாவடி செங்கோல் செலுத்தும் திரியம்பக உடையார் காரியத்துக்கு கடவரான சாம நயனார்க்கு நடக்கிற காலத்தில் எழுகரைப் பூந்துறை நாட்டு மோரூரில் திருமலை காங்கைய சீமையான சிற்றளுந்தூரில் என் காணி சொத்தில் ….
(No 138-1915)
இப்படிப்பட்ட அருமையான சம்பவத்தை கொங்குமண்டல சதகம் தனது 64ஆம் பாடலில் போற்றிப் புகழ்கிறது.
பாடல் வருமாறு:
அம்புவி மெச்சுகுன் றத்தூரி லாயரி லாய்கலைதேர்
எம்பெரு மானைக் கொடுதக்கை யென்னு மிசைத்தமிழால்
நம்பு மிராம கதையையன் பாக நவிலவிசை
வம்பவிர் தார்ப்புய னல்லய னுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் :
குன்றத்தூரான சங்ககிரி துர்க்கத்தில் இடையர் குலத்தில் உதித்துச் செந்தமிழ்ப் புலமை வாய்ந்த எம்பெருமான் என்னும் கவிராயனைக் கொண்டு இசைத் தமிழில் இராமாயண கதையை இயற்றுவித்த நல்லதம்பிக் காங்கேயனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாம்.
I have already covered The Babulnath Temple and Walkeshwar Temple in the previous parts posted here.
If you look at 100 year old books many of them temples would not even figure there. Some are built recently or some have become more famous recently. Let us look at some popular temples.
xxxx
Part 14
61. Mumbadevi Temple
The city of Mumbai derives its very name from one of its oldest temples, the Mumbadevi Temple. This temple is considered to be one of the greatest holy places to visit dedicated to the worship of Goddess Mumba, an incarnation of Goddess Durga. Mumba Devi is the patron goddess of the native communities of Mumbai like the agricultural and fishermen (Koli) community and the Somvanshi Kshatriya community. The temple was constructed in 1675. The goddesses’ idol is decked up with traditional jewellery and crown, placed atop a beautiful altar. The idol of Mumba Devi is made from black stone while her face is painted orange. Inside the temple complex, other deities are also placed. Lot of devotees visit the temple on Tuesdays, which is considered to be auspicious.
The temple is open from Tuesday to Sunday .
Xxx
62.Siddhivinayak Temple
One of the most popular temples is the Siddhivinayak Temple located in the Prabha Devi area of Mumbai. It is dedicated to the worship of Lord Ganesha . It was constructed in the year 1801. Lord Ganesha, is with his consorts named Siddi and Riddhi housed in a small mandap. The key highlight of the temple is the unique trunk of the Ganesha idol, which is on the right side, instead of the usual left side. Siddhivinayak Temple is considered to be the richest temple in India receiving an annual donation of over Rs 25 crores. The temple also has a unique architecture with images of deities carved intricately on the wooden doors, while the roof of the sanctum is constructed of gold plates. The temple remains open on all days. Visits by Bollywood actors and politicians made it more popular.
xxx
63.Mahalakshmi Temple
Mahalaxmi Temple is one of the most famous temples of Mumbai situated on Bhulabhai Desai Road in Mahalaxmi area. It is dedicated to Mahalakshmi . The temple was built in 1831 by Dhakji Dadaji, a Hindu merchant. The temple contains images of the Tridevi goddesses Mahakali, Mahalakshmi, and Mahasaraswati. All three images are adorned with nose rings, gold bangles and pearl necklaces. The image of Mahalakshmi is in the center shown holding lotus flowers.
The festival of Mahalaxmi is wonderful in Navaratri
The iconic structure, built nearly three centuries ago, witnesses at least 50,000 visitors in its lean season and over 5 lakh during the festive season of Navratri
Navratri: Navratri is celebrated two times at the Mahalakshmi temple of Mumbai. Chaitra Navratri is celebrated during the Hindu month of Chaitra, the months of March and April. Ashwin Navratri is celebrated during the Hindu month of Ashwin, the months of September and October. The temple is beautifully decorated with colourful lights, bright flowers, fresh garlands, from the Gabhara to the main gateway.
Constructed in 1771 AD, this shrine has several folklores surrounding it. It is believed that the three deities of Goddesses Mahalakshmi were immersed into the Arabian Sea, near Worli to prevent the destruction of the idols by the Muslim invaders.
Later, during the British rule, Lord Horneby planned to join the two hill creeks of Worli and Malabar and Shri Ramji Shivji Prabhu was appointed as the chief engineer for the task. Shri Ramji along with his colleagues tried several times but failed to connect the creeks due to the waves. One night Goddess Mahalakshmi appeared in his dreams and instructed him to bring out the immersed idols from the creeks of Worli and place them on the top of a hillock. Shri Ramji did the same and after that, he was able to construct the bridge. Later he built the temple on the hillock where the deities are still worshipped with great pomp.
Xxxx
64. ISKCON Temple
The ISKCON Temple was constructed by Acharya Bhaktivedanta Swami Prabhupada, the founder of the Hare Krishna Movement. The temple was built in the year 1978 and is one of the most beautiful places to seek solace and spirituality in the city. One of its main highlights is that it is home to several animals and birds like peacocks, monkeys, and cows providing them with a safe haven to thrive. The temple is carved from beautiful white marble while the interior of the temple is beautified with hand-drawn paintings depicting the Legends of Krishna and especially the divine love of Krishna and Radha.
Janmashtami is a day of huge celebrations in the temple.
xxx
65. Balaji Temple
(Shree Venkateshwara Swami Temple)
The Balaji Temple is situated at Nerul on a hilltop, very close to the railway station, and bears great resemblance to the Balaji Temple at Tirupati. This temple is highly revered by the South Indian community of the region.
Inside the complex are many other temples dedicated to different deities like Ramanuja, Rukmini, Lakshmi, Rama, Lakshman, and Hanuman. Balaji Temple was inaugurated in 1990 by the Director of Nehru Planetarium S. Venkata Varadan. The temple also houses gardens and a 60-feet high gopuram, a vast and ornate entrance tower.
66. Swaminarayan Temple
Among the oldest and most religious sites in Mumbai is the Swaminarayan Temple. It is more than 100 years old dedicated to the worship of Lord Krishna. It is owned and managed by the Swaminarayan Sampradaya. The temple was initially built in the year 1863, but it underwent renovation in 1903. The temple houses beautiful idols of other deities such as Krishna, Ghanshyam, Radha, and Laxminarayan. The festival of Janmashtami and Ram Navami attracts a large number of devotees.
67. Mini Sabarimala
The Mini Sabarimala Temple is one of the most sacred places to visit in Mumbai. It is dedicated to Lord Ayyappa and is nestled on the top of a hill rock in Kanjurmang. This temple bears great resemblance to the Sabarimala Temple in Kerala.
However, unlike the temple in Kerala, the mini Sabarimala Temple of Mumbai can be visited at all times of the year. The temple hosts special poojas on Tuesdays and Fridays adding to the charm of the place. It is believed that there was a small temple and an idol of the Devi long before the construction of this temple, which was plundered and destroyed by the foreign invaders and the ruins of them can be still seen near the temple.
68. Mata Vaishnodevi Temple
Mata Vaishnodevi Temple of Mumbai is almost a perfect replica of the famous Vaishnodevi Temple in Jammu. Located in the middle of the city, making a visit to this temple ensures a unique experience. The original temple requires devotees to hike through a cave and cross streams of water to reach the inner sanctum. In this temple too, you will need to crawl through the caves to witness the idol of the Devi, which is also very similar to the one in Jammu.
( for other temples of Mumbai, please go to their websites)
டேய் கிழவா! உனக்கு 60 வயசு ஆனதும் மூளை குழம்பிப் போச்சுடா! டேய் கிழவா உன் ஆஸ்ரமக் கன்னுக்குட்டிக்குக் கொடுத்த விஷ ஊசியை உனக்குக் கொடுத்து கொல்லனும்டா — இவ்வாறு காந்திஜிக்கு தினமும் நூற்றுக் கணக்கில் கடிதங்கள் வந்தன .
ஆஸ்ரமத்தில் வலியால் துடித்த கன்றுக்குட்டியைக் கொல்ல காந்திஜி அனுமதித்தார்; தெரு நாய்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் கொல்லலாம் என்றார் ; குஜராத்தில் வயல்களில் புகுந்து சேதப்படுத்தும் குரங்குகளைக் கொல்லலாம் என்றார் . வெறிநாய் கடித்து என் மகனுக்கு ஹைட்ரோ போபியா என்னும் பயங்கர நோய் வந்தால் அவனையும் கொல்ல அனுமதிப்பேன் என்றும் எழுதினார். நவஜீவன், யங் இந்தியா, ஹரிஜன் ஆகிய பத்திரிகைகளில் இது பற்றி அவர் எழுதிய கட்டுரைகள், பிராணி நல ஆர்வலர்களையுயும் , சமண மத பக்தர்களையும் கொதித்து எழச் செய்தது. உடனே நாள் தோறும் அவருக்கு ஏராளமான “காதல் கடிதங்கள்” வரத்துவங்கின . இது பற்றி காந்திஜி எழுதியதைப் படியுங்கள்:-
அஹிம்சை எனும் கொள்கையை ஆதரிக்கும் சில கோபாவேச பக்தர்கள் இந்திய தபால் இலாகாவின் வருமானத்தைப் பெருக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டனர். நாள் தோறும் எனக்கு ஏராளமான கடிதங்களை எழுதிக் குவிக்கின்றனர் அவை அனைத்தும் என் மீது சேற்றை அள்ளி வீசுகினறன. அவர்கள் அஹிம்சைக்குப் பதிலாக ஹிம்சையையே ஆதரிக்கின்றனர் . ஆஸ்ரமக் கன்றுக்குட்டி சர்ச்சையை அவர்கள் நிறுத்தப் போவதில்லை சிலர் மிகவும் அன்பாக என்னை வசை பாடுகின்றனர். டேய் கிழவா , உனக்கு 60 வயசு ஆனவுடன் மூளை தேஞ்சு போச்சுடா என்று எழுதினார்கள். இன்னும் சிலர் டேய் கிழவா, உன்னை சசூன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோதே உன்னை HOPELSS CASE ஹோப்லஸ் கேஸ் (இனிமே இது பிழைக்காது) என்று தீர்மானித்து டாக்டர்கள் விஷ ஊசி கொடுக்காம போய்ட்டாங்க. அப்படி உனக்கு விஷ ஊசி ஏத்தி உன்னை கொன்னு இருந்தா, ஆஸ்ரம கன்னுக்குட்டி விஷ ஊசியிருந்தது தப்பிச்சு இருக்கும்; குரங்கு இனமும் உன்னோட அழிவு வேலையிலிருந்து தப்பிச்சு இருக்கும் — எனக்கு தினமும் கத்தை கத்தையாக வரும் “காதல் கடிதங்களில் ” இருந்து சில மாதிரிகளை மட்டும் கொடுத்துள்ளேன் இப்படி நிறைய கடிதங்கள் வ,ர வர நான் நவஜீவன் பத்திரிகையில் , வாட்டி வதைக்கும் பிரச்சனை பற்றி எழுதியது மிகவும் சரியே என்ற நம்பிக்கை என்னுள் வலுவடைந்து கொண்டே வருகிறது.
பித்துப் பிடித்து இப்படி எழுதும் மக்கள் அஹிம்சையை ஆதரித்துப் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது அவர்களுக்கு ஏன் விளங்கவில்ல?. அஹிம்சையின் ஆணி வேரை அல்லவா அவர்கள் பிடுங்கி எறிகிறார்கள் ?
தீவிர எதிர்ப்பு காட்டும் வேறு வகையான கடிதக் கொத்தும் வருகின்றன. அவ்வகைக் கடிதங்களில் ஒன்றை மட்டும் காண்போம்
நீங்கள் கன்றுக்குட்டி சம்பவம் பற்றி எழுதியவை பல விளக்கங்களைக் கொடுத்தன. ஆயினும் ஒரு சம்சயம் (டவுட் DOUBT ) ஒரு கொடுங்கோலன் இருக்கிறான். அவன் மக்களுக்கு சொல்லொணாத துயரம் தருகிறான் அவனை அடக்க வேறு வழியே இல்லை; அப்போது அவனையும் கொல்லுவது அவசியம்தானே? அது அஹிம்சைதானே ? கன்றுக்குட்டியைக் கொன்ற விஷயத்தில் , அப்படிச் செய்ப்பவரின் நோக்கம்/ மனப்பாங்கு தான் முக்கியம் என்கிறீர்களே . அதே அடிப்ப டையில் .கொடியவர்களையும் தீர்த்துக் கட்டலாமே ; விவசாயிகளின் நிலங்களை அழிக்கும் ஜந்துக்களை அழிப்பது தவறு இல்லை என்றும் சொல்கிறீர்கள் அப்படியானால் மனித சமுதாயத்துக்கு தீங்கு செய்யும் கொடிய மக்களையும் அழிக்கலாமே ; அதுவும் அஹிம்சைதானா ?
இந்தக் கடிதத்துக்கு காந்திஜி எழுதிய பதில் :
இந்தக் கடிதம் எழுதியவர் என் கருத்தை தவறாகப் புரிந்து கொண்டு இருக்கிறார் என்பதை இதைப் படிக்கும் விவேகமுள்ள வாசகர்கள், அறிந்திருப்பார்கள் . மனிதனைக் கொல்வதும் அஹிம்சை என்று சொல்வதற்கு என்னுடைய விளக்கங்களை பயன்படுத்த வாய்ப்பே இல்லை. எங்கெல்லாம் உயிர்வதையைத் தடுக்க முடியுமோ அங்கெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றுதான் விவசாயிகள் பிரச்சனையில் கூட நான் எழுதினேன் .அப்படி விவசாயிகள் உயிர் வதை செய்தால் அதை மன்னிக்கலாம் ; ஆனால் அதுவும் ஹிம்சைதான் ; விவசாயி தனக்காக வோ சமுதாயத்துக்காகவோ அதைச் செய்கிறான். இப்படி செய்வதும் அஹிம்சையின் வரம்பில் வராது . ஆஸ்ரமத்திலுள்ள கன்றுக்குட்டியைக் கொன்றது அந்த வாய்பேசாத ஜீவனின் நலனைக் கருதிதான். அதன் நலனே அப்போது நம் கொள்கை .
இப்போது குரங்குத் தொல்லையை விவாதிப்போம் மனிதனுக்கும் குரங்குக்கும் வித்தியாசம் உண்டு. குரங்கின் உள்ளத்தை மாற்ற வழி யில்லை ; கொடிய மனிதனின் மனதையும் மாற்றித் திருத்த மார்க்கம் உண்டு.. ஆகையால், நம்முடைய நலனுக்காக ஒரு கொடியவனைக் கொல்லுவது அஹிம்சை ஆகாது.
இப்போது மனப்பாங்கு/ நோக்கம் என்பதை விளக்குவேன்; என்ன நோக்கத்துக்காக இதைச் செய்கிறோம் என்பது அஹிம்சையின் ஒரு அம்சம்தான். அதுவே முழு இலக்கணம் என்று எண்ணிவிடக்கூடாது.
நம்முடைய சுயநலத்துக்காக ஒரு ஜீவனை (உயிரை) அழிப்பது ஹிம்சையே; எவ்வளவு உன்னதமான எண்ணத்துடன் செய்தாலும் ஹிம்சைதான். தீய எண்ணம் கொண்ட மனிதன் வாய்ப்பு கிடைக்காததாலோ, பயத்ததாலோ செயலில் இறங்காமல் இருப்பதும் ஹிம்சையே. ஆனால் அவன் செயலில் இறங்கவில்லை ஆகையால் நோக்கத்துக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாட்டையும் அஹிம்சையின் வரையறைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.அவனுடைய பல செயல்களைக் கவனித்தே அவன் நோ க்கம் என்ன என்பதை அறியவேண்டும் .
யங் இந்தியா 18-10-1928
xxx
(காந்தி இறப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே, அவர் எவ்வளவு சர்ச்சைக்கு உள்ளானார் என்பதை அவரது எழுத்துக்களும் கடிதங்களும் காட்டுகின்றன.)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
அறிவியல் நிரூபிக்கும் ஒளிவட்ட ஆற்றல்!
ச.நாகராஜன்
தாய்லாந்தில் பாங்காக்கில் அகில உலக மாநாடு ஒன்றில் மஹரிஷி அத்யாத்ம விஸ்வவித்யாலயம் 101வது ஆய்வுப் பேப்பரைச் சமர்ப்பித்துள்ளதில் (Maharshi Adhyatma Vishwavidyalay presents its 101st Research paper at an International Conference in Thailand) யுனிவர்ஸல் அவ்ரா ஸ்கேனர் (UAS – Universal Aura Scanner) மூலம் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
இதை சனாதன் ப்ரபாத் (Sanatan Prabhat 1-15 April 2023) வெளியிட்டது. இந்தக் கட்டுரையை கல்கத்தாவிலிருந்து வாரம் தோறும் வெளி வரும் ‘ட்ரூத்’ ஆங்கில வார இதழ் பதிவு செய்ததோடு பின் குறிப்பாக சென்னையில் ஒளிவட்டம் சம்பந்தமாக நடந்த பழைய ஆராய்ச்சிகளைப் பற்றிய விவரங்களையும் தந்துள்ளது.
அதைக் கீழே பார்ப்போம்.
AURA AROUND BEINGS என்ற தலைப்பில் Hindustan Times தனது 20-2-1984 இதழில் வெளியிட்ட கட்டுரையின் சில பகுதிகளை ‘ட்ரூத்’ ஆங்கில வார இதழ் Volume 54 Issue no 45 இல் பிரசுரம் செய்துள்ளது.
புவியில் இருக்கின்ற அனைத்துப் பொருள்களுக்கும், உயிர் வாழ் ஜீவன்களுக்கும் – அது இலையாக இருந்தாலும் சரி, கல்லாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி – ஒரு ஒளிவட்டம் – அவ்ரா உண்டு.
இந்த மர்மமான ஒளிவட்டம் உயிர் வாழ்கின்ற ஜீவன்களிடத்தில் பிரகாசமாக உள்ளது. உயிரற்ற பொருள்களில் சற்று மந்த ஒளியுடன் இது இருக்கின்றது.
உயிர் வாழ் மனிதர்களிடத்தில் அவர்களது ஆன்மீக, மன, உளவியல் ரீதியான முன்னேற்றத்திற்குத் தக்கபடி இந்த பயோ – எனர்ஜி – உயிரியல் ஆற்றல் அல்லது ஒளிவட்டம் அமைந்துள்ளது.
ஒரு யோகியின் ஒளிவட்டம் மிக பிரகாசமாக இருக்கும். இறக்கப் போகின்ற ஒரு மனிதனிடத்தில் இது மிகவும் மங்கலாக ஒளி மங்கி இருக்கும்.
சென்னை அரசு மருத்தவமனை (The Government General Hospital , Madras GH) ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பை இப்போது கண்டுபிடித்துள்ளது.
இந்த மருத்துவமனை அவ்ரா எனப்படும் ஒளிவட்டத்தை போட்டோவாக எடுக்கவும் அதை ஆய்வு செய்யவும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது.
இது பற்றி மூளையியல் பிரிவின் தலைவரான டாக்டர் பி. நரேந்திரன் (Dr P. Narendran, Head of the Institute of Neurology, GH) குறிப்பிடுகையில், இதற்கான விசேஷ வடிவமைப்புடன் கூடிய ஒரு இயந்திரம் தயாரிக்கப்பட்டிருப்பதோடு ஆயிரம் பேர்களது ஒளிவட்டத்தை போட்டோ எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பல லட்சம் ரூபாய் செலவில் இந்த இயந்திரம் அமைக்கப்பட்டதாக டாக்டர் நரேந்திரன் தெரிவித்தார்.
இதன் முடிவு என்னவெனில் எவர்களெல்லாம் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்களோ அவர்களது ஒளிவட்டமானது ஆரோக்கியமற்ற நோயாளிகளின் ஒளிவட்டத்திலிருந்து மாறுபட்டு இருப்பதைக் காண்பிக்கிறது என்றார்.
ஒவ்வொரு வியாதிக்கும் ஒரு குறிப்பிட்ட ஒளிவட்டம் உருவாகிறது.
இந்த இயந்திரம் ஒரு மனிதனின் கை விரல்களிலிருந்து வெளிப்படும் ஒளிவட்டத்தையும் எடுக்கும் ஆற்றல் பெற்றது.
ஒரு டாக்டரின் ஒளிவட்டம் சற்று மங்கலாக இருந்தது. ஆனால் அவரோ ஆரோக்கியமாகவே மனதளவிலும் உடலளவிலும் இருந்தார். ஆனால் ஒரே வாரத்தில் அவர் மஞ்சள் காமாலை நோய்க்கு ஆளானார்.
இதுவும் இன்னும் சில இது போன்ற கேஸ்களும் வரப்போகும் வியாதியை முன்கூட்டியே ஒளிவட்டம் தெரிவிக்கிறது என்பதைக் காட்டுகிறது என்றார் டாக்டர் நரேந்திரன்.
இறந்த ஒருவரின் உடலை போட்டோ எடுக்கும்போது ஆறு மணி நேரத்திற்குப் பிறகு அந்த உடலிலிருந்து ஒளிவட்டம் நீங்குகிறது.
சம்பிரதாயமான பாரம்பரிய மகான்களின் படங்களும் தெய்வீக வடிவங்களின் படங்களும் அவர்களைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தோடு காணப்படும்.
ஹ்ருஷிகேசத்திலிருந்த் வந்த ஒரு பெரிய யோகி தன்னைப் போட்டோ எடுக்க சம்மதித்தார். அவரும் போட்டோ எடுக்கப்பட்டார்.
“அவரது ஒளிவட்டம் எவ்வளவு பிரகாசமாக இருந்ததென்றால், அந்த இயந்திரமே ஆட ஆரம்பித்தது!” என்றார் டாக்டர் நரேந்திரன்.
ஆக அறிவியலே நிரூபிக்கும் ஒரு அம்சமாக காலம் காலமாக ஹிந்து மதம் கூறிவரும் ஒளிவட்டம் திகழ்கிறது என்பது ஒரு சுவையான செய்தி தானே!
***
நன்றி & ஆதாரம் – கல்கத்தாவிலிருந்து வாரம் தோறும் வரும் ‘ட்ரூத்’ ஆங்கில வார இதழ் – Volume 91 Issue no 2 dated 28-4-2023
Mahatma Gandhi was criticised severely by a lot of animal lovers during his life time. He argued that killing monkeys, stray dogs, a calf in his Ashram and lunatic men is Ahimsa (non- violence) and it is not a violent act. He also said non vegetarians need not be forced to stop eating beef or fish. He said that he would not hesitate even to kill his son if he is rabid due to a dog bite. He supported mercy death of suffering, incurable patients. Whenever he wrote an article in Young India Navjivan and Harijan magazines, furious letters came to him. He called those letters ‘Love Letters’.
xxx
Here is what he said on controversial AHIMSA issues:
Some fiery champions of Ahimsa (non-violence), who seem bent upon improving the finances of the Postal Department, inundate me with letters full of abuse, and are practising Himsa in the name of Ahimsa. They would if they could prolong the calf controversy indefinitely. Some of them kindly suggest that my intellect has suffered decay with the attainment of the sixtieth year. Some others have expressed their regret that the doctors did not diagnose my case as hopeless when I was sent to the Sassoon Hospital and cut short my sinful career by giving me a poison injection in which case the poor calf in the Ashram might have been spared the poison injection and the race of monkeys saved from the menace of destruction. These are only a few characteristic samples from the sheaf-full of ‘love letters’ that I am receiving daily. The more I receive these letters the more confirmed I feel in the correctness of my decision to ventilate this thorny question in the columns of Navjivan. It never seems to have struck these good people that by this unseemly exhibition of spleen they merely prove their unfitness to be votaries or exponents of ahimsa and strike it at the very root. I turn however from these fulminations to one from among a batch of letters of a different order that I have received and I take the following from it:
“your exposition of the ethics of the calf incident has cleared up a lot of my doubts and shed valuable light on the implications of ahimsa. But unfortunately it raises a fresh difficulty. Suppose , for instance a man begins to oppress a whole people and there is no other way of putting a stop to his oppression; then proceeding on the analogy of the calf, would it not be an act of ahimsa to rid society of his presence by putting him to death? Would you not regard such an act as an unavoidable necessity and therefore as one of ahimsa? In your discussion about the killing of the calf you have made the mental attitude the principal criteria of ahimsa. Would not, according to this principle, the destruction of proved tyrants be counted as ahimsa, since the motive inspiring the act is of the highest? You say that there is no himsa in killing off animal pests that destroy a farmer’s crops; then why should it not be ahimsa to kill human pests that threaten society with destruction and worse?”
Xxxx
The discerning reader will have already perceived that this correspondent has altogether missed the point of my argument. The definition of ahimsa that I have given cannot by any stretch of meaning made to cover a manslaughter such as the correspondent in question postulates . I have nowhere described the unavoidable destruction of life that a farmer has to commit in pursuit of his calling as ahimsa. One may regard such destruction of life as unavoidable and condone it as such, but it cannot be spelt otherwise than as himsa. The underlying motive with the farmer is to subserve his own interest or, say that of society. Ahimsa on the other hand rules out such interested destruction. But the killing of the calf was undertaken for the sake of the dumb animal itself. Any way its good was the only motive.
The problem mentioned by the correspondent in question may certainly be compared to that of the monkey nuisance. But then there is a fundamental difference between the monkey nuisance and human nuisance. Society as yet knows no means by which effect to a change of heart in the monkeys, and their killing may therefore be held as pardonable, but there is no evil doer or tyrant who need be considered beyond reform. That is why the killing of a human being out of self interest can never find a place in the scheme of ahimsa.
To come now to the question of motive, whilst it is true that mental attitude is the crucial test of ahimsa, it is not the sole test. To kill any living being or thing save for his or its own interest is himsa, however noble the motive may otherwise be. And a man who harbours ill will towards another is no guilty of himsa because for fear of society or want of opportunity he is unable to translate his ill will into action. A reference to both intent and deed is thus necessary in order finally to decide whether a particular act or abstention can be classed as ahimsa. After all intent has to be inferred from a bunch of correlated acts.
கேரளத்தின் தென் கோடியில் துவங்கி மஹாராஷ்டிரத்தின் வட கோடி வரை செல்லும் 1000 மைல் நீளமுள்ள மலைத்தொடருக்கு புராணங்களில் சஹ்யாத்ரி என்று பெயர் . இதை நாம் இன்று மேற்குத் தொடர்ச்சி மலை என்று அழைக்கிறோம். இதன் ஒரு பகுதிதான் மஹாபலேஷ்வர். இந்த மலைப்பகுதியில் கிருஷ்ணா நதியும் அதன் நான்கு உப நதிகளும் உற்பத்தியாகின்றன. இவை சங்கமிக்கும் இடம் பஞ்ச கங்கா எனப் படுகிறது . இங்குள்ள நான்கு கோவில்கள் :
1.மஹா பலேஸ்வர்
2.கிருஷ்ணாபாய்
3.பஞ்ச கங்கா
4.அதிபலேஸ்வர்
ஓவ்வொரு கோவில் பற்றிய சுவையான செய்திகளைக் கேளுங்கள்:
57.மஹா பலேஸ்வர் கோவில்
மஹா பலேஸ்வர் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்தக் கோவிலை க்ஷேத்ர மகா பலேஸ்வர் என்பர். மகா பலம் உடைய சிவன் என்று பொருள். இந்த ஊர் புனே நகரிலிருந்து 124 கி.மீ; சாதாராவிலிருந்து 61 கி.மீ., கோலாப்பூரிலிருந்து 178 கி.மீ தூரத்தில் இருக்கிறது இது மிகவும் பழமையான கோவில் ; குறைந்தது 800 ஆண்டு வரலாறு உடையது . அருகில் கிருஷ்ணா பாய் கோவில், பஞ்ச கங்கா புனிதத் தலங்கள் அமைந்துள்ளன. கிருஷ்ணா, வீணா, கொய்னா, சாவித்ரி, காயத்ரி ஆகிய ஐந்து நதிகள் உற்பத்தியாகும் இடம் பஞ்ச கங்கா எனப்படும் ; சிறிது தொலைவிலியே அவைகள் சங்கமித்து கிருஷ்ணா என்னும் நதியாகப் பாய்கிறது.
மஹா பலேஸ்வர் கோவில் 16ம் நூற்றா ண்டில் சந்தராவ் வம்சத்தாரால் கட்டப்பட்டது ஐந்து அடி சுவரால் பிரிக்கப்படும் இந்தக் கோவிலில் உட்பிரகாரம், வெளிப் பிரகாரம் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.
உட்பகுதியில் சிவலிங்கம் அமைந்த கர்ப்பக்கிரகம் இருக்கிறது . ஆறு அடி உயரமுள்ள சிவ லிங்கத்தின் தலைப்பகுதியை காண முடிகிறது .
ஊரின் பெயருக்கு மற்றும் ஒரு பொருளும் கற்பிக்கப்படுகிறது . மாவலர் என்போரின் கடவுள் மாமலேஷ்வர் ; அது மருவி மஹா பலேஸ்வர என்று ஆகிவிட்டது என்பர். தேவகிரி மன்னன் சிங்கன் 1215ம் ஆண்டில் இந்தக் கோவிலை தரிசித்த வரலாற்றுக் குறிப்பு இந்தக் கோவிலின் பழமையைக் காட்டுகிறது. அவர், கிருஷ்ணா நதி தோன்றும் இடத்தைச் சுற்றி ஒரு குளம் வெட்டினார் கர்ப்பக் கிரஹத்திலுள்ள மஹாலிங்கம் ஸ்வயம்பு லிங்கம்; அதாவது மனிதர்கள் செதுக்கி உருவாக்காமல் லிங்க வடிவிலேயே கிடைத்த கல்.
இங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட 300 ஆண்டு பழமையான சிவனின் படுக்கை, கம்பளம், திரிசூலம், டமருகம் என்னும் உடுக்கை , ருத்ராக்ஷம் ஆகி னயனவும் குறிப்பிடத் தக்கவை . கோவிலுக்குள் தங்கத்தினால் ஆன ஒரு மேடை இருக்கிறது. இது ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சத்ரபதி சிவாஜி கொடுத்தது என்றும் அவரது தாயார் ஜீஜாபாயின் எடைக்கு எடை தங்கம் இதில் வார்க்கப்பட்டது என்றும் சொல்லுவர்
Xxxx
58.கிருஷ்ணா பாய் கோவில்
இது தான் பழ மையான கோவில் ; பஞ்ச கங்கா கோவிலுக்கு அணித்தே அமைந்தது கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்யப்பட இந்த இடத்தில் சிவலிங்கமும் இருக்கிறது இங்குதான் கிருஷ்ணா நதி உற்பத்தி ஆகிறது . பாண்டவர்கள் வசித்த இடம் என்றும் பெருமை உடைத்து.
(13 ஆண்டுகள் வனவாசம் இருந்த பாண்டவர்களும், 14 ஆண்டுகள் வனவாசம் இருந்த ராம, லெட்சுமணரும் இந்தியா, இலங்கை முழுதும் சுற்றி இருப்பார்கள் என்பது நம்பத்தக்கதே ; இதே போல அகத்தியரும் ஆதிசங்கரரும் இமயம் முதல் குமரி வரை வலம் வந்ததற்கு நமக்கு சான்றுகள் கிடைத்துள்ளன )
கிருஷ்ணா பாய் கோவிலின் கட்டி டம் கடைசியாக கட்டப்பட்டது 1888ம் ஆண்டு .கிருஷ்ணர் சிலையும் இங்கே நிறுவப்பட்டுள்ளது . இப்போது கோவில் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தாலும் சுவரில் பாசி படர்ந்த நிலையில் இருக்கும் பழைய வேலைப்பாடுகளைக் காண முடிகிறது . மிக அருகில் பசுமை நிறைந்த காடுகள் இருப்பதால், மலை ஏறும் குழுவினர் காடு மலை கடக்கும் பொழுதுபோக்கு இடமாகவும் மகா பலேஸ்வர் திகழ்கிறது .
XXX
59. பஞ்ச கங்கா கோவில்
கிருஷ்ணா ,கொய்னா , காயத்ரி, சாவித்ரி, வீணா என்ற ஐந்து நீரோடைகள் சங்கமிக்கும் இடம் பஞ்ச கங்கா கோவில் எனப்படும். இதை யாதவ அரசர் சிங்கதேவன் 13ம் நூற்றாண்டில் அமைத்தான் ஒரு பசுவின் முகத்திலிருந்து நீர் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது. அது ஐந்து நதிகளின் நீரையும் கொணர்வதாக ஐதீகம்
இந்தக் கோவில்கள் அனைத்தும் அடுத்தடுத்து உள்ளன.
XXX
60.அதிபலேஸ்வர் கோவில்
இது 400 ஆண்டு பழமையானது . பலேஸ்வர் ,அதிபலேஸ்வர் கோவில்களை இரட்டைச் சிவாலயங்கள் என்று அழைத்தாலும் தகும் . நல்ல அழகான நந்தி சிலையைக் காணலாம் . ஆத்ம லிங்கம் உற்சவ லிங்கம் அமைந்த இடம். இந்தக் கோவிலுக்கும் ஒரு கதை உண்டு மஹா பலி , அதி பலி என்ற இரண்டு அசுரர்களை விஷ்ணுவும் மகா மாயாவும் கொன்ற இடம் இது.
மஹா பலேஸ்வர் என்ற பெயரில் சிவனும், அதி பலேஸ்வர் என்ற பெயரில் விஷ்ணுவும் கோடீஸ்வரர் என்ற பெயரில் பிரம்மாவும் இங்கே குடிகொண்டுள்ளனர்.
இந்தக் கோவில் மிகவும் சிறியது ; இருண்ட பகுதிக்குள் அமைந்த லிங்கத்தைப் பார்க்க டார்ச் விளக்குடன் செல்ல வேண்டும். மிகவும் தாழ்வான வாசல் என்பதால் குனிந்து பயபக்தியுடன்தான் செல்லவேண்டும்.
மொத்தத்தில் 4 கோவில் என்று கணக்குக் காட்டினாலும் இவை அடுத்தடுத்து உள்ள இடங்களே. காடுகள் நிறைந்த இப்பகுதி நல்ல மனச்சாந்தியைத் தரும் இடமாகத் திகழ்கிறது . மலை ஏறும் சுற்றுலாப் பயணிகள் அந்த அமைதியைக் கெடுத்து, வணிக மையமாக மாற்றாமல் இருக்க வேண்டும் .
–SUBHAM—
TAGS– மஹா பலேஸ்வர் , பஞ்ச கங்கா, கிருஷ்ணா நதி, சஹ்யாத்ரி, தங்க மேடை, சிவாஜி, ஜீஜாபாய் , கோவில்கள் , பகுதி 14, மஹாராஷ்டிர , 108 புனித தலங்கள்