Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கவிஞர் ஜெஃப்ரி சாசர்.
CHAUCER GEOFFREY யார்?
ஆங்கிலக் கவிஞர்களில் முன்னணியில் நிற்கும் கவிஞர் ஜெப்ரி சாசர். இவர் வாழ்ந்த காலம் 1340 முதல் 1400 வரை என்று கருதப்படுகிறது. ஆங்கில மொழிக்கு ஒரு பாதை , வகுத்துக் கொடுத்தவர் இவர். இவருக்குப்பின் வந்த ஆங்கிலக் கவிஞர்கள் ஒவ்வொருவரும் இவருக்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் கடன் பட்டவர்களே. சாசர் வகுத்த உத்திகளில் ஒன்றையாவது அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். சாசர் எழுதிய புகழ் பெற்ற நூல் CANTERBURY TALES.
லண்டனில் ஒரு மதுபான வியாபாரியின் மகனாகப் பிறந்த சாசர் எங்கு கல்வி கற்றார் யாரிடம் கல்வி கற்றார் என்பது தெரியவில்லை. ஆனால் இவரது கவிதைகள் இவரது மேதாவிலாசத்தை காட்டுகின்றன.
17 வயதானபோது சாசர் கிளாரன்ஸ் நகர பிரபுவின் DUKE OF CLARENCE மனைவி LADY ELIZABETHக்கு பணிவிடை செய்பவராக அமர்ந்தார். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் படைவீரனாகச் சேர்ந்து பிரான்ஸுக்குச் சென்று பல போர்களில் பங்கு கொண்டார். பிரெஞ்சுக்காரர்கள் இவரைப் பிடித்து ஓராண்டு காலத்துக்கு கைதியாக வைத்திருந்தனர். 1360ஆம் ஆண்டில் இவரைப் பணயத்தொகை கொடுத்து மீட்டு வந்தனர்.
1366இல் இவர் JOHN OF GAUNTஇன் மூன்றாவது மனைவியின் சகோதரிகளில் ஒருவரை மணந்தார். இதன் பின்னர்தான் அவர்கள் இருவருக்கும் புரவலராக இருந்து ஆதரித்தார்.
1367ஆம் ஆண்டில் அரசவையில் VALET பதவி கிடைத்தது. அப்போது இவருக்கு வயது 27. விரைவிலேயே அரசரின் ESQUIREஆக மாறினார். 1369ஆம் ஆண்டில் மீண்டும் பிரான்ஸுடன் மோத போர்க்களம் ஏகினார்.
அடுத்த பத்தாண்டுக்காலம் — பொறுப்பேற்று ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.
ஒருமுறை GENOA நகருக்குச் சென்றபோது இவர் இதாலியக் கவிஞர்கள் பொக்கஸியொவையும் பெட்ராக்கையும், சந்தித்ததாகத் தெரிகிறது.
1377ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இரண்டாவது ரிச்சர்டு பதவிக்கு வந்தார். அவர் பிரென்ச் இளவரசி மேரியை மணமுடிக்க விருன்பினார். இந்த திருமணத்தை ஏற்பாடு செய்ய சாசர் தூது சென்றார்.
1382ஆம் ஆண்டில் லண்டன் துறைமுகத்தில் சுங்க அதிகாரியாக பதவி ஏற்றார். 1386இல் அவர் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். (KNIGHT OF THE SHINE OF KENT)
சாசருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வந்த JOHN OF GAUNT வெளிநாடு சென்றபோது, சாசரின் எதிரிகள் அவரிடம் இருந்த அனைத்துப் பதவிகளையும் பறித்தனர். இருந்த போதிலும் RICHARD மன்னர் —- அரசுப்பொறுப்பினை ஏற்றவுடன் சாசருக்கு ஆண்டுக்கு 20 பவுண்டு வீதம் ஓய்வூதியம் தந்தார். அந்தக் காலத்தில் 20 பவுண்டு என்பது பெருந்தொகை.
லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள வீட்டில் CHAUCER வாழ்ந்தார். அவர் WESTMINSTER கதிட்ரலில் அடக்கம் செய்யப் பட்டார்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
திருக்குறளுக்கு தற்காலத்தில் சிறந்த உரைநூல் இதோ!
ச.நாகராஜன்
1
கவிராஜ பண்டித ஜெகவீர பாண்டியனார் நமது சம காலத்தில் வாழ்ந்த சிறந்த தமிழ் அறிஞர்; தமிழ்ப் புலவர். மணியாச்சிக்கு அருகில் உள்ள ஒட்டநத்தம் என்ற ஊரில் 10-3-1886இல் இவர் பிறந்தார்.
தமிழின் பால் அளவற்ற ஈடுபாடு கொண்ட இவர் மதுரையில் மேலமாசி வீதியில் வாழ்ந்து வந்தார்.
திருவள்ளுவர் பால் அளவற்ற ஈர்ப்பு கொண்ட இவர் தனது இல்லத்திற்கு திருவள்ளுவர் நிலையம் என்றே பெயரைச் சூட்டினார்.
தனது நூல்களைப் பதிப்பிக்க தனது அச்சகம் ஒன்றை உருவாக்கினார். அதற்குப் பெயர் வாசுகி அச்சகம். அந்தக் காலத்தில் கம்போஸிங் எனப்படும் அச்சுக் கோர்ப்பிற்கு எழுத்து அச்சுக்களை எடுத்துக் கோர்க்க வேண்டும். அதையும் இவரே செய்தார். இவரது மகன்களையும் அந்தப் பணியில் ஈடுபடுத்தினார்.
அற்புதமான தமது நூல்களைத் தானே பதிப்பித்தார்.
கவிராஜ பண்டிதரை உரிய முறையில் தமிழகம் பாராட்டவில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. 17-6-1967இல் அவர் மறைந்தார்.
அந்தக் காலத்தில் எனது தந்தையார் மறைந்த தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் புத்தகங்களைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பது வழக்கம். அவருடன் புத்தகம் வாங்கச் செல்கிறார் என்றால் தவறாமல் நானும் கூடவே செல்வது வழக்கம். டவுன்ஹால்ரோடில் உள்ள பாரதி புத்தக நிலையத்தில் உரிமையாளரான திரு சுவாமிநாதன் கல்லாவில் அமர்ந்திருப்பார். நாங்கள் உள்ளே சென்றவுடன் அன்பான வரவேற்பு இருக்கும். புத்தகங்கள் அனைத்தும் தெரிவு செய்யப்பட்டவுடன் அவற்றை அடுக்கிக் கட்டி வீட்டுக்கு அனுப்பி விடுவார் பில்லுடன். பணத்தை கடையிலிருந்து புத்தகத்தைக் கொண்டு வருபவர் வாங்கிக் கொள்வார்.
இப்படி ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஒரு நாள், பாரதி புத்தக நிலையத்திலிருந்து திரும்பி வரும் போது மேலமாசி வீதியில் ஒரு வீட்டிற்குள் நுழைந்தார் என் தந்தையார். யார் வீடு என்று நான் கேட்ட போது, ‘உள்ளே வந்து பார்’ என்றார்.
உள்ளே எங்களை அன்புடன் வரவேற்றவர கவிராஜ பண்டித ஜெகவீரபாண்டியனார்.
நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவரது அச்சகத்தைக் காண்பித்தார். எளிமையான தமிழ் அறிஞர். மடை திறந்த வெள்ளம் போல் தமிழ் செய்யுள்களும், கருத்துக்களும் பாய்ந்து வந்ததைப் பார்த்து பிரமித்தேன். வழக்கம் போல புத்தகக் கட்டு ஒன்று உருவானது. அதை அவரே வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பணமும் தரப்பட்டது.
அந்தப் புத்தகங்களைப் படித்த போது தமிழ்க் கடலின் விஸ்தீர்ணம் ஓரளவு புலப்பட்டது. அவரது அறிவின் ஆழத்தை அளக்கவே முடியாது என்றும் தோன்றியது.
அந்தப் புத்தகங்களுள் ஒரு குறிப்பிடத் தகுந்த புத்தகம் திருக்குறட் குமரேச வெண்பா.
இன்றளவும் அந்தத் தொகுதிகள் எனக்குத் துணையாக இருந்து வருகின்றன.
2
திருக்குறட் குமரேச வெண்பா என்பது 1330 குறட்பாக்களுக்கு ஒரு விரிவுரை. இது புதுமையான ஒரு விரிவுரை. ஒவ்வொரு குறளுக்கும் ஒரு சரிதம் உண்டு. 1330 குறட்பாக்களுக்கு 1330 நேரிசை வெண்பாக்கள். தெய்வ வணக்கமும் அவையடக்கமும் சேர்த்து மொத்தம் 1332 நேரிசை வெண்பாக்கள்.
அவர் நூலின் முகவுரையில் (7-8-1938 தேதியிட்ட பதிப்பு இது) குறிப்பிடுவது இது:-
“தெய்வப் புலமைத் திருவள்ளுவப் பெருந்தகை அருளியுள்ள திருக்குறளின் கருத்துக்களுக்குப் பொருத்தமான சரிதங்களை இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களினும், காந்தம், பாகவதம் முதலிய புராணங்களினும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களினும், வேறு பல நூல்களினும் இருந்து தெரிந்து எடுத்து எமது குலதெய்வமாகிய குமரேசனது முன்னிலையில் விண்ணப்பித்து அவற்றிற்கு விடை கூறும் முறைமையில் குறள்களை உதாரணமாக எடுத்துக் காட்டி இற்றைக்கு மூன்று வருடங்கட்கு முன்னரே இந்த நூலை முடித்து வைத்தும் வெளிப்படுத்தக் கூசி விலகி இருந்தேன். இங்ஙனம் இருப்ப, அறிஞர் பலர் இந்நூலுட் சில பாக்களைக் கேட்டு மகிழ்ந்து இதனை அச்சில் ஏற்றி அனைவருக்கும் உபகரிக்க வேண்டும் என்று என்பால் அன்பால் என்னைத் தூண்டினர். அன்னார் வேண்டுகோளைச் சிரமேற் கொண்டு இது பொழுது இதனை வெளியிடுகின்றேன்.விழுமிய உரையுடன் கெழுமித் தெளிவாய் வெளி வருகின்றது.”
சரிதங்களைக் குறட்பாவில் அமைத்துத் திருக்குறள்களோடு இணைத்துத் தனிச்சீரும் சேர்த்து அமைக்கப்பட்ட இந்த வெண்பாக்களைப் படிப்பதே ஒரு சுகானுபவம். 1-1-1957இல் இந்த நூல் மூன்றாம் பதிப்பைக் கண்டது.
முதல் குறளுக்கான அவரது குமரேச வெண்பா இது:-
பூவுலகோ டெங்குமேன் பூண்ட துமைகேள்வன்
கோமுகித்த தன்மை குமரேசா – மேவும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இதற்கான விரிவுரையை அவரே மிக அழகுறத் தெளிவாகத் தருகிறார்.
நீத்தார் பெருமை அதிகாரத்தில் வரும் முதல் குறளுக்கான குமரேச வெண்பா இது:-
மண்டு புகழ் மாணிக்க வாசகரின் மாண்பினை நூல்
கொண்டு புகவ் வானேன் குமரேசா – கொண்ட
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
மாணிக்கவாசகரது பெருமையை நூல்கள் ஏன் உவந்து புகழ்கின்றன? எனில், ஒழுக்கத்து நீத்தார் பெருமை பனுவல் துணிவு விழுப்பத்து வேண்டும் என்க.
சில குறள்களுக்கு நான்கு சரிதங்கள் கூடத் தரப்படுகின்றன.
அருமையான இந்த நூல் தற்காலத்திற்கேற்றபடி எளிய தமிழில் அழகிய எடுத்துக் காட்டு கதைகளுடன் தரப்பட்டுள்ளதால் இதுவே காலத்திற்கேற்ற நாம் படிக்க வேண்டிய திருக்குறள் விரிவுரை என்பதை அறுதியிட்டு உறுதி கூறலாம்.
சற்று யோசனை செய்து பார்த்தால் வியந்து போவோம். 1330 குறளுக்கும் பொருத்தமான கதையை புராண, இதிஹாச, இதர நூல்களிலிருந்து எடுத்து ஒரு நேரிசை வெண்பாவில் முதல் இரண்டு அடிகளில் அடக்கி அதற்குரிய குறளை கீழ் இரண்டு அடிகளில் தருவது என்றால் அது சாமானிய செயலா, என்ன! இறைவன் திருவருளும் திருவள்ளுவரின் ஆசியுமே காரணம் எனலாம்,
கண்ட உரைகளைப் படிக்காமல் திருக்குறளுக்கான சரியான உரை இதுவே. இதை அன்பர்கள் கண்டிப்பாகப் படித்துப் பயன் பெற வேண்டும்.
3
கவிராஜ பண்டிதரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு விட்டதால் அவற்றை இணையதளத்திலிருந்து, இலவசமாக, தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அன்பர்கள் தவறாது இந்த நூலைப் படிக்க வெகுவாக நான் பரிந்துரை செய்கிறேன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -49
Xxxx
PANINI Sutra 5-1-58
பாணினி சூத்திரம் 5-1-58
Commentators give names of several books; ashtakam is another name for Ashtadhyayi.10 chapter Vyagra Panchako Atheetha. Already we saw Satapata brahmanam.
Dasakam Vaiyagra patheeyam
Thrikam kasakruthsnam
Tamils also followed them and gave their books names such as
Ainkuru nuru, Pathitrup paththu
சம்ஸ்க்ருதத்தில் எண்களை வைத்து நூல்களை அழைப்பது வேத காலத்திலேயே இருந்ததை சதபத பிராஹ்மணம் முதலிய பல நூல் களிலிருந்து அறிகிறோம் . இதைப் பின்பற்றி தமிழர்களும் ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து என்றெல்லாம் பெயர் சூட்டினர்
Xxx
5-1-59
Pankthi
It becomes Panthi in Tamil
பங்தி என்பது வரிசை; பத்துப் பத்தாக வரிசை.
இதை இப்பொழுதும் பந்தியில் உட்கார்ந்து சாப்பிடு என்கிறோம்.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து, பந்தி வஞ்சனை செய்யாதே என்ற பழமொழிகளையும் நாம் அறிவோம்.
Xxx
5-1-69
Panini used Dakshina
Till this day we use it in Pumas, Temples
தட்சிணை என்று 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தியதை இன்றும் நாம் கோவில்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்துகிறோம்
Xxx
5-1-70
Sthaali
In Tamil Thaazi
Nowadays they use it for a plate of meals in Indian Restaurants.
ஸ்தாலி என்பதை தாழி , முதுமக்கள் தாழி என்ற சொற்களில் காணலாம். புறநானூற்றிலும் உளது
ஹோட்டல்களில் தாலி என்பதை இப்பொழுது ஒரு பிளேட் சாப்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். முன் காலத்தில் கலயத்தில் உண்டனர். தட்டில் அல்ல .
வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்தாற்போல- Tamil Proverb
Xxx
5-1-74
Yojanam
Yojanai distance is used in Tamil poems
Varttika adds Krosa
யோஜனை என்ற தூரம் சிலப்பதிகாரம், மணிமேகலை காலம் முதல் பாடல்களில் உள்ளது .
குரோசம் என்ற தூரம் கம்ப ராமாயணம் முதலியவற்றில் வருகிறது
Xxx
5-1-75
Pathika = Pedestrian
பதிக என்பதை பிரயாணி , பாதசாரி என்ற பொருளில் பாணினி பயன்படுத்தினார்
இன்றும் ஆங்கிலத்தில் ‘பெடெட்ஸ்ரியன்’ என்ற சொல் உளது
பதம்/அடி = பாத்/ஆங்கிலம்= சங்க இலக்கியத்தில் ‘அதர்’ என்போம்.
Path= (P) Athar in Tamil literature.
Xxx
5-1-77
Varttika adds
Madhu,
Maricha black pepper by land route
It shows Kerala connection
பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டது காத்யாயன வரருசியின் ‘வார்த்திகம்’ என்னும் நூல். அதில் மிளகு , தேன் முதலியன தரை வழி வணிகப் பொருட்களில் வருகிறது. ஆக 2400 ஆண்டுகளுக்கு முன்னரே, மைசூர், கேரள மாநிலங்களுடன் வணிகத் தொடர்பு இருந்ததை அறிய முடிகிறது.
Xxx
5-1-78
Kaala
For time, duration is used in Tamil literature
Kaala becomes Chrono
கால என்பதை சங்கத் தமிழ் நூல்கள், திருக்குறளில் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சொல்லுவது போல தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்துக்கும் மூல மொழி ஒன்றுண்டு. அதிலிருந்து ‘கால’ வந்தது. ர=ல விதிகளின்படி அது ‘க்ரோனோ’ என்று ஐரோப்பிய மொழிகளில் உரு மாறுகிறது .
2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி மஹா மேதாவி. எதையும் தர்க்க ரீதியில் , விஞ்ஞான ரீதியில் வாதிடுவதை அவரது பிரம்மாண்டமான மஹா பாஷ்ய உரையில் காணலாம். அவரது உத்தியை தமிழில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் உரை எழுதியோர் அப்படியே பின்பற்றுகின்றனர். அதாவது ‘தடை எழுப்பி விடை காணும் உத்தி’.. பதஞ்சலி ஒரு நாளைக்கு மாணவர் படிக்கும் பாடத்தை ஒரு நாள் syllabus சிலபஸ் என்று தனித்த தனியே எழுதினார். அதற்கு ஆஹ்னிகம் / ஒரு பகல் என்று பெயர். அஹஸ் என்றால் பகல். இதிலிருந்தே தமிழ் ‘பகல்’ வந்தது. இரவு என்பதும் சம்ஸ்க்ருத சொல்லே. ராத்திரி என்பது ‘இரவு’ என மருவியது
Ahnikam one day lesson
Ahas =pakal
Xxx
5-1-81
Panini used Maasa for Month
Vayas for Age
Maasa= Month
Vayas =Age. ஏஜ் /வயது என்பதன் தமிழ் மரூ உ =அகவை Agevai
மாச என்பது மாதம் என தமிழில் வரும், வயஸ் என்பது வயது என வரும் . இதே போல ஆங்கிலமும் ‘ச’ ஒலியை ‘த’ ஒலியாக மாற்றும். ஆகவே தமிழும் ஸம்ஸ்ருதமும்தான் உலக மொழிகளின் ஊற்று, தோற்றுவாய். (All ancient languages came from Tamil and Sanskrit)
Xxxx
5-1-87
Raatri, Ahas says Panini
ராத்ரி , அஹஸ் — மேலே விளக்கப்பட்டுள்ளது .
Becomes Iravu and Pahal
Seen already
Xxx
5-1-94
Vaarttika adds Chaturmaasya.
It is the Four Month vow.
All monks follow this even today.
The four months cover the monsoon rain period in India.
This is the four month discussed through out Akam (Family and Sex) literature in Tamil.
Wives are waiting for their husbands to return home before the rainy period. Kalidasas Meghadutam also covers this period. Kalidas’ book is the first travelogue in the world. That is the only book on Meteorology.
வார்த்திகக்காரர் சாதுர்மாஸ்ய / 4 மாத மழைக்கால விரதம் பற்றிக் கூறுகிறார். இன்றும் சந்யாசிகள் 4 மாதத்துக்கு இடம் பெயரால் இருந்து விரதம் அனுஷ்டித்து அதை வியாச பவுர்ணமியில் நிறைவு செக்கிறார்கள். அதாவது இந்தியப் பருவக்காற்று விஞ்ஞானம் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே பதிவாகிவிட்டது. காளிதாசனின் அற்புதமான மேக தூத நூல் உலகின் முதல் பயண நூல் மட்டுமல்ல. தென் மேற்குப் பருவக்காற்று உஜ்ஜயினி முதல் இமய மலை வரை எப்படிச் செல்கிறது என்பதையும் காட்டுகிறது. அவன் மாபெரும் வானிலை விஞ்ஞானி . அவர்க்கு முன்னோடி வார்த்திகம்/ நோட்ஸ் எழுதிய வரருசி. இது சங்கத் தமிழ் நூல்களில் குறைந்தது 1000 பாடல்களில் வருகிறது. எல்லா காதல் பாடல்களும் மழைக்கால அறிகுறிகள் வந்துவிட்டதே; இன்னும் காதலன் செய்த பிராமிஸ்/ promise படி வரவில்லையே என்பதாக இருக்கும்.
Xxx
5-1-102
Yoga is used by Panini
English word Yoke comes from this.
யோகம் என்பதை ஆங்கில ‘யோக்’ yoke சொல்லில் காணலாம் .
யோக் = இணை ; இதை உடல் உறவுச் சொல்லிலும் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். இடக்கர் அடக்கல் கருதி அச்சொல்லை நான் இங்கே எழுதவில்லை
Xxx
5-1-104
Samaya is used by Panini
It is time or duration
Tamils also use this.
சமயம்/ நேரம் என்ற சொல்லை இன்றும் பயன்படுத்துகிறோம். இது 2700 பழமையான ஸம்ஸ்க்ருதச் சொல்.
Xxx
5-1-105
Rtu ருது
Six Rtus are in ancient Tamil literature as well.
‘Rtu Samharam’ is written by Kalidasa, which covers all the Six Rtus.
Rhythm is linked to this word.
ருது = பெண் ருது /பருவம் அடைந்து விட்டாள். பாட்டில் நல்ல ரிதம் (ஆங்கிலம்) இருக்கிறது. தமிழர்கள் ஆறு பருவங்களை பின்பற்றினர் என்பதெல்லாம் வேத காலச் சொற்கள். சம்ஸ்க்ருதத்தில் உள்ள ஆறு ருதுக்களை , தமிழர்கள் சங்க இலக்கியத்தில் அப்படியே பின்பற்றுகின்றனர். காளிதாசன் எழுதிய முதல் நூல் ‘ருது சம்ஹாரம்’. உலகில் பருவங்கள் பற்றி எழுந்த முதல் நூலும், கடைசி நூலும் இதுவே. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அற்புதமான இயற்கை வருணனை நூல் இது. இதற்கெல்லாம் மூலம் வேதம் மற்றும் பாணினி சொல்லும் ருது. இது ஆங்கிலத்தில் ‘ரிதம்’ ஆனது.
Xxx
5-1-111
Vaarttika adds Swarga, Punyaahavachanam
வார்திகக்காரர் இன்றும் குழந்தை பிறந்த பத்தாவது நாளில் நடக்கும் ‘புண்யாஹ வசன’ சடங்கை உதாரணமாகக் காட்டுகிறார். ‘சுவர்க்கம்’ என்ற சொல்லையும் எடுத்துக்காட்டில் தருகிறார்.
புண்ய, வசனம் (சினிமா) என்ற சொற்களை இன்றும் நாம் சர்வ சாதாரணமாக பயன்படுத்துத்துகிறோம்.
‘சொர்க்க’ தமிழில் ‘துறக்கம்’ ஆகும். இதுவரை நான் நூற்றுக் கணக்கான இடங்களில் ‘எஸ்’ என்பது ‘த’ ஆக மாறும் என்று காட்டியுள்ளேன். அதே விதிகளின்படி சுவர்க்கம் =துறக்கம் ஆகிறது தமிழ் மொழியில் .
These words are used until today.
Punyaha vachanam is purifying ceremony celebrated until today.
It is good to see it has been there for at least 2400 years.
Xxx
5-1-115
Thulya is used by Panini.
Thulaa rasi and its emblem Balance, which is Thula, is known to all
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன்
ஸ்ரீ ராமரின் எல்லையற்ற கருணை:
இடம்: சுப்ரீம் கோர்ட். துளஸி பீடத்தின் ஸ்தாபகர் தர்ம சக்ரவர்த்தி, பத்ம விபூஷன் ஜகத்குரு ஸ்ரீ ராமபத்ராசார்யா, ஸ்ரீ ராம ஜன்மபூமி வழக்கில் வாதியாக வந்து அமர்ந்திருக்கிறார். சர்ச்சையில் இருக்கும் அயோத்யா ராம ஜென்ம இடத்தைப் பற்றிய குறிப்புகளை, மேற்கோளுக்கு மேல் மேற்கோளாக சாஸ்திரங்களிலிருந்து அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் அவர்.
நீதிபதியாக அமர்ந்திருந்தவர் ஒரு முஸ்லீம். அவர், துளைக்கும் ஒரு கேள்வியை வாதியின் முன் வைத்தார்:” நீங்கள் எப்போதுமே வேதம் சொன்னதையே நிரூபணமாகக் கேட்பவர்கள். குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய இடத்தில் தான் ஸ்ரீ ராமர் பிறந்தார் என்பதற்கு வேதத்தில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?”
ஜகத்குரு ஒரு விநாடி கூட தாமதிக்கவில்லை. ஞானக் கண்ணைக் கொண்ட அவர், “ஓ! இருக்கிறதே, அதை என்னால் கூற முடியும்” என்றார். உடனே ரிக் வேதத்தில் உள்ள ஜைமீனிய சம்ஹிதாவிலிருந்து பல குறிப்புகளைக் கூற ஆரம்பித்தார். ஒரு குறிப்பிட்ட திசையில், சரயு நதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை, அதுவும் அது ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருப்பதை, ஸ்ரீ ராம ஜென்ம பூமியாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கூறினார் அவர். வழக்கில் சர்ச்சைக்குரிய இடமாகச் சொல்லப்பட்ட இடம் அந்த இடத்தில் அப்படியே இருந்தது. கோர்ட்டாரின் உத்தரவுப் படி ஜைமினீய சம்ஹிதா நீதிபதிக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. அவர் கூறிய விவரணம் அனைத்தும் அதில் அப்படியே இருந்தது. சர்ச்சைக்குரிய இடமானது சம்ஹிதா கூறியபடி அதே இடத்தில் தான் இருந்தது.
அந்தக் குறிப்பானது ஹிந்துக்களுக்கு சாதகமாக வழக்கை மாற்றியது. முஸ்லீம் நீதிபதி கூறினார்:” இன்று நான் பாரதீய அறிவின் அதிசயத்தைக் கண்ணால் பார்த்தேன். எப்படி கண்பார்வையற்ற ஒருவர் அள்ள அள்ளக் குறையாத வேத ஞானத்திலிருந்து மேற்கோளை அனாயாசமாகக் கூற முடிகிறது என்பதைப் பார்த்தேன். இது தெய்வீக சக்தியே தான் அல்லவா?”
ஸ்ரீ ராமபத்ராசார்யாஜி இரண்டு மாதக் குழந்தையாக இருக்கும் போதே கண்பார்வையை இழந்து விட்டார். இப்போது அவருக்கு 22 மொழிகள் தெரியும். 80 புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
நன்றி Truth Volume 88 No 13 Reprinted again in Truth Volume 89 No 1 dated 16-4-2021
***
இதன் ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்புவோருக்காக மூலக் கட்டுரை கீழே தரப்படுகிறது.
Lord Sri Rama’s Grace Infinite:
The scenario in the Supreme Court was as follows:– Dharma Chakravarty, Founder of the Tulsi Peeth, Padma Vibhushan, Jagadguru Sri Rambhadracharya was present, as the plaintiff in the Sri Ram Janmabhumi case, who was quoting references after references from the Shastras in favour of Sri Ram Janmasthan at the disputed site in Ayodhya.
The person sitting on the chair as Judge was a Muslim by religion. He asked a piercing question to him, “You always ask for Vedic references as proof. Can you cite a reference from the Vedas to prove that Sri Ram was born in Ayodhya at the same very place?”
Without wasting a second, the Prajna Ckakshu saint (one endowed with the eyes of wisdom) said, “Yes Sir, I can”… and he started quoting references from Jaiminiya Samhita of the Rig Vedas, pointing from a specific site in the Saryu river, in a particular direction at a definite distance identifying as the place of Sri Ram Janmasthan, that has been clearly indicated. The disputed site exists at just that
place. On the basis of Court orders, Jaiminiya Samhita was produced before him and all the descriptions quoted were found to be accurate. The disputed site exists at that very place.
And the statement turned the course in favour of the Hindus. The Muslim Judge acknowledged, “Today I have witnessed the wonder of Bharatiya wisdom…how a person who is devoid of physical eyes was extensively quoting from the inexhaustible source of the (Vangmay) Veda Shastras? Is it not the Divine Powers?”
Sri Rambhadracharyaji lost his vision, just at the age of two months. Today he knows 22 languages, and has already written eighty books. (Truth Vol. 88, No. 13)
***
tags- ஸ்ரீ ராம ஜென்ம பூமி, ராமபத்ராசார்யாஜி, ஜைமீனிய சம்ஹிதா,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
I already gave some words from London Times Word Watching column from 1994. In those days I used to cut it out and write marginal noes on the basis of linguistic similarity with Tamil or Sanskrit. Some words are from actual news items of London Times.
More words are given below :-
Aratus
315-240 BCE. He joined the court circle of Antigonus II Gonatas
Compare the name with Gonanthan of Kashmir in Kalhana’s Rajatarangini
Xxx
Cavally
Various species of tropical fish. Also known as horse mackerel, from the Portuguese Cabala, Carani caballus
Cyboum caballa
In Tamil Kayl, kaayal are fish.
TIMES dated 21-2-1994
B =V change is universal
Xxx
Hath= has
Th = s
Hath in poetry is has
I have been showing how English and Tamil follow this rule for 2700 years (from Panini’s date)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மர்மமும் திகிலும் நிறைந்த திரைப்படங்களைத் தயாரித்து உலகப்புகழ் பெற்ற ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் ALFRED HITCHCOCK லண்டனில் 1899ஆம் ஆண்டில் பிறந்தார். கட்டுப்பாடும் கண்டிப்பும் நிறைந்த ஒரு கத்தோலி க்கப் பள்ளிக்கூடத்தில் படித்தார்.
இவரது சிறு வயதில் நடந்த சில நிகழ்ச்சிகளே இவரை மர்மக்கதை இயக்குநராக மாற்றியது. ஹிட்ச்காக்கிற்கு 5 வயது. அவரது தந்தை கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்து அருகாமையிலுள்ள ஒரு போலீ ஸ் நிலையத்தில் கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பினார். HITCHCOCK மகிழ்ச்சியோடு அதை வாங்கிக்கொண்டு ஓடிப் போனார். காவல் நிலையத்தில் அதை வாங்கிப் படித்த போலிஸ்காரர் HITCHCOCKஐ பிடித்து லாக் அப்பில் அடைத்து கதவைப் பூட்டினார். HITCHCOCKஐ பயம் பற்றிக்கொண்டது. அவருக்கு அழுகை பொத்துக் கொண்டு வருவதற்குள் சில நிமிடங்களுக்குள்ளேயே அறைக்கதவைத் திறந்துவிட்டார் போலீ ஸ்காரர். அத்தோடு சில வார்த்தைகளையும் உதிர்த்தார். “அப்பனே வீட்டில் விஷமம் செய்யும் பையன்களுக்கு நாங்கள் தரும் தண்டனை இது”. என்று எச்சரித்தார். ஆனால் எதற்காக தனது தந்தை இப்படிப்பட்டதொரு அதிர்ச்சி வைத்தியம் தந்தார் என்பது ஹிட்ச்காக்கிற்கு தெரியவே இல்லை. இப்படி அவரது வாழ்க்கையே திகிலுடன் தொடங்கியது.
மேலும் இவர் படித்த கல்விக்கூடத்தில் தவறு செய்தால் பிரம்படி கொடுப்பது வழக்கம். ஆனால் பிரம்பு தண்டனையை நாளின் துவக்கத்திலோ வகுப்புகள் முடியும்போதோ வாங்கி அனுபவிக்கும் சுதந்திரம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் மாலையில் பள்ளிக்கூடம் முடியும்வரை பிரம்படி பெறுவதை/ தண்டனையை/ ஒத்திப்போடுவார்கள். அப்போது நாள் முழுதும் அவர்கள் மாலையில் தனக்குக் கிடைக்கப்போகும் பிரம்படி பற்றியே பேசிக்கொண்டு ஒருவித திகிலுடன் சஸ்பென்ஸுடனும் இருப்பார்கள். பிரம்படியைவிட இந்த திகில் தான் அவர்களுக்கு பெரிய தண்டனை. இதையெல்லாம் பார்த்த HITCHCOCK அவர்களுக்கு சஸ்பென்ஸ் / திகில் விஷயத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. இதே உத்தியை அவர் திரைப்படத்தில் கையாண்டு வெற்றியும் பெற்றார்.
HITCHCOCKக்கிற்கு 14-வயதானபோது தந்தை இறந்ததால் அவர் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி வேலைக்குப் போனார். திரைப்படம் பார்ப்பதும் படம் வரைவதும் அவரது பொழுதுபோக்குகள். நாளடைவில் திரைப்படத்தின் ஆர்வம் அதிகமாகிக்கொண்டே வந்தது. அந்த தருணத்தில் ஒரு அமெரிக்க திரைப்பட நிறுவனம் லண்டனில் ஒரு பிரபல நாவலை திரைப்படமாக்கப் போவதாக விளம்பரம் வெளியிட்டிருந்தது. உடனே தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க விரும்பிய HITCHCOCK அந்த நாவலை படித்து அதற்குத் தேவையான அட்டைகளை வரைந்தார். அந்தக் காலத்தில் ஊமைப்படங்களே இருந்ததால் இடையிடையே எழுத்து வடிவத்தில் கதையின் முக்கிய பகுதிகள் வரும். இதற்காக HITCHCOCK அழகாக கட்டம் கட்டி அதற்குள் வாசகங்கள் எழுதிய அட்டைகளைப் பார்த்த அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் உடனே அவருக்கு வேலை கொடுத்தது. அப்போது அவருக்கு வயது 20.
மூன்று ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தபின் அவரே ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த திரைப்படம் நிறைவுபெறவேயில்லை. பிரிட்டனில் அப்போதுதான் திரைப்பட்த் தொழில் வளரத் தொடங்கியிருந்தது. ஆனால் அமெரிக்காவிலுள்ள ஹாலிவுட்டிலோ நல்ல முன்னேற்றம் கண்டிருந்தது. ஆகையால் HITCHCOCK அமெரிக்கா பயணமானார். அங்கு திரைப்படத் தொழிலில் வேலை பெற்றதோடு அதே நிறுவனத்தில் பணியாற்றிய ALMA REVILLE என்ற பெண்ணையும் மணந்தார்.
1925ஆம் ஆண்டில் THE PLEASURE GARDEN என்ற படத்தை இயக்கினார். அடுத்த ஆண்டு இவர் எடுத்த THE LODGER என்ற படம் வெற்றி நடைபோட்டது. இதுதான் அவரது முதலாவது திகிலூட்டும் திரைப்படம். அதுவரை அமெரிக்க திரைபடத்திற்கு அடுத்த நிலையில் இருந்த பிரிட்டிஷ் திரைப்படங்கள் “THE LODGER” வெளியானவுடன் புகழ்பெறத் துவங்கின. இது பேசாத ஊமைத் திரைப்படம்.
இந்த நேரத்தில் முதலாவது பேசும் திரைப்படம் THE JAZZ SINGER அமெரிக்காவில் வெளியானது. இது திரைப்படத் தொழிலில் பெரும் புரட்சி செய்தது. பிரிட்டிஷ் படத்தயாரிப்பாளர்கள் இந்த புதுமையை மக்கள் விரும்புவார்களோ மாட்டார்களோ என்று பயந்து கொண்டிருந்த நேரத்தில் BLACKMAIL என்னும் படத்தில் பேச்சுக்களையும் இசையையும் HITCHCOCK பயன்படுத்தினார். அதுதான் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் திரைப்படம். HITCHCOCK அந்தப் படத்தில் தோன்றினார். ஒரு இயக்குநரே படத்தில் காட்சி தந்த முதல் திரைப்படம் அதுதான். அதிலிருந்து ஒவ்வொரு திரைப்படத்திலும் HITCHCOCK வரும் காட்சிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அவ்வளவு பெயர் புகழ் அவருக்கு. REBECCA, STAGE FRIGHT, THE BIRDS என்று பல படங்களில் அவர் தோன்றினார்.
1934ஆம் ஆண்டில் அவர் எடுத்த THE MAN WHO KNEW TOO MUCH என்ற படமும் 1936இல் எடுத்த THE THIRTY NINE STEPS என்ற படமும் பெரும் புகழை ஈட்டித்தந்தன. உடனே அவருக்கு ஹாலிவுட்டில் இருந்து அழைப்புகள் வரத்துவங்கின. இதே நேரத்தில் இரண்டாவது உலகப்போர் தொடங்கிவிடவே பிரிட்டனிலுள்ள ஸ்டுடியோக்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. போர்க்காலத்தில் இவர் எடுத்த FOREIGN CORRESPONDENT, LIFE BOAT ஆகிய படங்கள் ஜெர்மனியை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டியதன் தேவையை உணர்த்தியது. SUSPICION என்ற படம் சிறந்த நடிகைக்கான OSCAR விருதையும் வென்றது.
லண்டனில் உள்ள WESTMINSTER CATHEDRAL கோபுரம் அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவியின் சிலை ஆகியவற்றின் உச்சியில் இவர் படம் எடுத்த சண்டைக் காட்சிகள் மயிர்கூச்செரியும் காட்சிகள். ஒவ்வொரு படத்திலும் புதுப்புது உத்திகளை கையாண்ட இவர் உலகப்புகழ் பெற்ற டைரக்டரானார். 1955இல் ஹாலிவுட்டில் குடியேறி அமெரிக்கப் பிரஜையாக மாறினார்.
இவருடைய படத்தில் வரும் காட்சிகள் நினைவிலிருந்து நீங்காது நிற்கும். அமெரிக்காவில் SOUTH DAKOTA மாநிலத்தில் 4 அமெரிக்க ஜனாதிபதிகளின் உருவங்கள் பிரம்மாண்டமான அளவிற்கு மலையில் செதுக்கப்பட்டன. அதை பயன்படுத்தி NORTH BY NORTHWEST என்ற படத்தில் ஆபிரஹாம் லிங்கன் சிலையின் தலைமீது சண்டை நடைபெறும் காட்சிகளை படமாக்கினார். இது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது. NOTORIOUS, STRANGERS ON A TRAIN ஆகியவையும் இவரது புகழ்பெற்ற படங்கள்.
ஒவ்வொரு காட்சிக்கும் இவர் அவ்வளவு அக்கறை செலுத்தினார். உயிரையே கொடுத்தார் என்பதற்கு இவரது புகழ்பெற்ற படமான PSYCHO ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கதாநாயகி குளிக்கும்போது கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். இந்த காட்சி 45 விநாடிகளே படத்தில் வருகிறது. ஆனால் இதற்கு அவர் எடுத்துக்கொண்ட நாட்கள் ஏழு நாட்கள். பல்வேறு காட்சிகளை தனியே எடுத்த பின்னர் ஒட்டுப்போட்டுக் காட்டிய இந்தக் காட்சியை பார்த்தவர்களுக்கு கண்களால் கண்டதைவிட கற்பனை செய்து கொண்டது அதிகம். HITCHCOCKஇன் திறமை நமது கண்களையே ஏமாற்றிவிடும்.
பறவைகள் BIRDS என்ற இவரது படமும் மிகவும் பயங்கரமான படம். திடீரென்று ஏராளமான பறவைகள் மனிதர்களைத் தாக்குவதாகக் கதை. இதில் கதாநாயகியை வீட்டிற்குள் பறவைகள் தாக்கும் காட்சிக்கு இயந்திரப் பறவகளை பயன்படுத்த முடியவில்லை. இதற்காக உண்மையான பறவைகளைப் பிடித்து பயிற்சி தந்து 7 நாட்கள் படமாக்கினார். அதில் கதாநாயகி பட்ட துன்பம் கொஞ்சமோ நஞ்சமோ அல்ல. ஒரு பறவை உண்மையிலேயே அவள் கண்ணைக் கொத்திக் கொடுமைப்படுத்தியது. அவ்வளவு கஷ்டபட்டு எடுக்கப்பட்ட படம். அந்த அளவுக்கு புகழையும் தந்தது.
HITCHCOCK அவர்கள் 81 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து 1980ஆம் ஆண்டில் இறந்தார்.
இவரது படங்கள் “NEW WAVE” புதிய அலைப் படங்களைத் தாயாரித்த இயக்குநர்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
13 Jun 2016 — (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com. jam 2 … பின்னர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் இதே பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார். jam5.
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து 6-5-2021 அன்று சித்திரை மாத சதய நன்னாளில் அப்பர் குருபூஜை தினத்தன்று சிவஞான சிந்தனை வழிபாட்டு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை:-
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இன்று சித்திரை மாதம் சதய நக்ஷத்திர நன்னாள். இதுவே தான் அப்பர் பெருமானின் குரு பூஜை தினம். சைவ சமயம் தழைக்கச் செய்த அதிசய புருஷர்களுள் பெரும் நாவலராக 81 வயது வரை வாழ்ந்து அனைவருக்கும் நல்வழி காட்டிய சொல்லரசர் திருநாவுக்கரசர் ஆவார். திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து ஏராளமான அற்புதங்களைச் செய்த துறவிக்கரசு அவர்; பல்வேறு இன்னல்கள் வந்தாலும் கூட அவற்றையெல்லாம் சிவனருளால் சிதறச் செய்து கல்லோடு மிதந்த ஞானப் பெருந்தகை அவர். இன்னும் அவர் புகழை ஆர்கலியது கடந்தோன், சொல் வேந்தன், வாகீசர், தாண்டகச் சதுரர், மெய்ஞானம் பூத்தவன், தண்டமிழ் பாடினார் என்பன போன்ற 55க்கும் மேற்பட்ட புகழ் மொழிகளால் சிவபுண்ணியத் தெளிவு, பரமதி திமிர பானு, அம்பர்ப் புராணம், ஆதித்தபுரி புராணம், புலியூர்ப் புராணம், பழனித்தல புராணம், காசி ரகசியம், திருவிளையாடல் புராணம்,சிவ ரகசியம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நூல்கள் போற்றிப் புகழ்கின்றன.
அவர் வாழ்ந்த காலத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடித்தோர் சற்று பயந்து வாழ வேண்டிய காலமாக இருந்தது. திருநீறைத் தரித்தவரைக் கண்டால் தோஷம்; சிவாய நம என்ற நாமத்தை உச்சரிப்பவரைக் கண்டால் தீட்டு என்று இப்படி சமணர்கள் வாழ்ந்ததோடு விபூதி பூசியவரைக் கண்டபோது ‘கண்டு முட்டு’ என்றும் சிவ நாமத்தை உச்சரிக்கக் கேட்டால் ‘கேட்டு முட்டு’ என்றும் கூறுவது வழக்கம்.
அப்படிப்பட்ட காலத்தில் அந்த சமணர்களோடு வாழ்க்கையின் முற்பகுதியைக் கழித்துப் பின்னால் சிவனருளால் அவன் தாள் வணங்கித் தானும் உய்ந்து மற்றவரையும் உய்ய வழி வகுத்தார் அவர்.
பன்னிரு திருமுறைகளில் நான்கு, ஐந்து, ஆறு ஆகிய மூன்று திருமுறைகளில் அவர் பாடிய சில பதிகங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. திருமுறை கண்ட புராணத்தில் உமாபதி சிவாசாரியார் ‘கூற்றாயினவாறு’ என்பது தொடங்கி ‘புகலூர்ப் பதிகம்’ ஈறாக சுமார் 16000 பதிகங்களை நாவுக்கரசர் பாடி அருளியதாகக் குறிப்பிடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனார் ஏழ் எழுநூறு என்று கூறுவதால் 4900 பதிகங்கள் அவர் காலத்தில் கிடைத்திருந்ததை அறிகிறோம். இன்றோ நமக்கு கிடைத்துள்ளவை சுமார் 312 பதிகங்களே. 3066 பாடல்களே!
ஆனால் இவற்றைப் பாடிப் பரவினாலேயே போதும்- சிவனருள் சித்திக்கும்; தெய்வ நற்றமிழ் நம் உள்ளிருந்து ஊற்றெடுத்துப் பெருகும்.
ஏராளமான இனிய சொற்களை, அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை, நாவுக்கரசர் தனது பாடல்களிலே நமக்குத் தருகிறார். அந்தச் சொற்களில் பொதிந்திருக்கும் பொருளும், இன்பமும் வர்ணனைக்கு அப்பாற்பட்டிருக்கும். ஊன்றிப் படித்தாலேயே புரியும்!
ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு பார்க்கலாம். நிலா என்ற சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் அதை அப்பர் சுவாமிகள் 34 இடங்களில் பயன்படுத்துகிறார்.
வெண்ணிலா, இள நிலா, தனி நிலா, பனி நிலா, ஒளி நிலா, முகிழ் நிலா, மணி நிலா, தெண் நிலா, மதி நிலா, நீள் நிலா, சில் நிலா என இப்படி பல நிலாக்களை அவர் நமக்குக் காண்பிக்கிறார். போழ் நிலா என்று ஒரு சொற்றொடர். அதாவது மறைந்து துண்டமாய்த் தோன்றும் சந்திரன் என்று இதற்குப் பொருள். இப்படி ஒவ்வொரு சொல்லாக எடுத்து அதன் சுவையைச் சொல்லப் போனால் தேனினும் இனிய சொல் என்று சொல்ல ஆரம்பித்து தேவர் தம் அமிர்தம் என்று சொல்லி முடித்து விடலாம்.
அவரது பாக்களில் உள்ள ஒரு சொல்லுக்குக் கூட நாம் ஆராய்ந்தே உரிய பொருளைக் காண முடியும். இதற்குத் தான் நாம் வல்லார் உதவியை – இதிலேயே ஊறித் திளைக்கும் சிவாசாரியர்களின் உதவியை, ஆதீனங்களின் உதவியை, அறிஞர்களின் உதவியை நாட வேண்டி வரும்.
உதாரணத்திற்கு ஒரு பாடலை இங்கு எடுத்துக் காட்ட் விழைகிறேன்.
திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரில் அருளிய ஒரு பாடல் இது.
பாடல் இது தான்:
“வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச்
சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்று இருக்கின் அல்லால்
மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலாப் பேதை நெஞ்சே”
இங்கு சிவாய நம என்று சொல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி ஆணை இடுவதை அறியமுடிகிறது.
ஆனால் வைத்த பொருள் என்கிறாரே அது என்ன?
பொருள் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டால் தமிழ் என்னும் பெருங்கடலில் மூழ்கி அர்த்தத்துடன் வெளியே வருவது என்பது சாதாரணமான ஒரு காரியம் அல்ல.
பொருள் என்ற சொல்லிற்கான பொருளை முதலில் பார்த்து விட்டுப் பின்னர் தான் வைத்த பொருள் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும், இல்லையா?
வள்ளுவரின் துணையை நாடுவோம் பொருளுக்கு என்ன பொருள் என்று அறிய! பொருள் என்றால் உண்மை அல்லது மெய்ப்பொருள். பொருள் என்றால் வினை. பொருள் என்றால் செய்தி. பொருள் என்றால் பயன். பொருள் என்றால் உறுதிக் குணம். பொருள் என்றால் சிறந்தது. பொருள் என்றால் சொற்பொருள் அல்லது உரை. பொருள் என்றால் பொருள் நூல் அதாவது economics. பொருள் என்றால் நூல் பொருள். பொருள் என்றால் உடைமை. பொருள் என்றால் பண்டம் அல்லது வஸ்து. பொருள் என்றால் செல்வம்.பொருள் என்றால் மதிப்பு. பொருளுக்கான இத்தனை பொருள்களையும் வள்ளுவர் தன் குறளில் ஏற்றி ஒன்றுடன் ஒன்றை இணைத்து அருமையாக ஒரு பொருள் மாலையைத் தொடுக்கிறார்.
அவரில் ஆழ்ந்து மூழ்கி,
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு (குறள் 5) என்பதைப் படித்து இறைவனை அறிவதே பொருள் என அறிகிறோம்.
பிறப்பென்னும் பேதைமை நீஙகச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358) என்றும் அவர் கூறுவதால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கலக்க வல்லது செம்பொருள் என்பதை அறிகிறோம்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவர் கூறுகிறார் (குறள் எண் 423)
இப்படிப்பட்ட செம்பொருள், மெய்ப்பொருள் எது?
தமிழை உடலாகக் கொண்ட தமிழாகரன், தமிழ் ஞான சம்பந்தன் இப்போது நமக்கு உதவி செய்கிறார். நமச்சிவாய பதிகத்தில் எது மெய்ப்பொருள் என்பதை அவர் கூறி அருளுகிறார்.
காதல் ஆகி,கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
ஆக இப்போது மெய்ப்பொருள் ஆவது நமச்சிவாய நாமம் என்ற ரகசியம் நமக்குப் புலப்படுகிறது.
இதை அப்பர் சுவாமிகளும் உறுதிப் படுத்துகிறார்:
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது ஜோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே (நான்காம் திருமுறை)
நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
சரி வைச்சபொருள் என்றால் என்ன?
திருப்பாதிரிப்புலியூரில் பாடிய பாடலைத் தவிர சிதம்பரத்தில் பாடிய பாடலிலும் அப்பர் பிரான் ‘வைச்ச பொருள்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற
பிச்சன் பிறப்பு இலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே
இப்படி இரு முறை அவர் குறிக்கும் வச்ச பொருள் எது?
வள்ளுவரின் குறள் ஒன்று நமக்கு நினைவுக்கு வருகிறது. ‘ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி’ என்கிறார் குறள் 226இல்! வைப்புழி என்றால் பிக்ஸட் டெபாஸிட். ஆக வைச்ச பொருள் என்பது நமச்சிவாய நாமத்தைச் சொல்லி டெபாஸிட் செய்வது தான்! அந்த ஃபிக்ஸட் டெபாஸிட் நமக்கு எப்போதும் ஆகும்; உதவிக்கு வரும்!
ஆக மெய்ப்பொருள் ஆகிய நமச்சிவாய என்னும் நாமத்தைச் சொல்லி அதை வைப்புழியாக, டெபாஸிட் செய்து வைப்பதைத் தான் அப்பர் பிரான் சொல்லியுள்ளார் என்பது தெளிவாகிறது.
வைத்த பொருள் நமச்சிவாய நாமம் தான்! ‘அது நமக்கு ஆகும்’ என்று அச்சம் ஒழிந்தார் அப்பர்.
மெய்ப்பொருளைக் கண்டு அதைச் சொல்லி அதைச் சேர்த்து பத்திரமாக வையுங்கள்; அது உமக்குப் பின்னால் இகத்திற்கும், பரத்திற்கும், ‘ஆகும்’ என்ற அற்புதக் கருத்தை அவர் இரு முறை வலியுறுத்தியுள்ளார்.
வள்ளுவப் பிரான் வழியில் மெய்ப்பொருள் காண விழைகையில் இந்த இரகசிய விஷயத்தை நாம் அடைகிறோம்; அறிகிறோம்.
ஆக வாழ்நாளில் முற்பகுதியில் சமணருடன் இருந்து தன் வாழ்வின் ஒரு பகுதியை வீணாக்கி விட்டதை எண்ணி அவர் ‘குறிக்கோளின்றிக் கெட்டேனே’ என்கிறார். தனது அனுபவத்தை நம்மிடம் முதலீடு செய்து நல்லக விளக்கு அது, நமச்சிவாய நாமம் அதை எந்திக் கொள்; பிறப்பு இறப்பு என்னும் இருவினையும் சேராது என்கிறார்.
இதை அடைவதற்கான வழிகளையும் அவர் தெளிவாகப் பலபடியாகக் கூறுகிறார்.
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்துத் தின்று உழலும்
புலையரேனும்
கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் நான் வணங்கும் கடவுளாரே.
சொர்க்கம் பூமி இரண்டின் ஆட்சி, சங்க நிதி பத்ம நிதி இவற்றைத் தந்தால் ஒருவனுக்கு எப்படி இருக்கும்! ஆனால் அப்பர் தெளிவு பட, ‘நீ சிவபிரான் பக்தனா?’ என்கிறார். ‘இல்லை’ என்றால் ‘உன் நிதியும் வேண்டாம்; நீயும் வேண்டாம்’ என்கிறார்! ஆ உரித்து தின்று உழல்பவனாக இருப்பினும் நமச்சிவாய என்று சொல்லும் சிவ பக்தன் எனில் அவன் நாம் வணங்கும் கடவுள் என்கிறார். இதுவே அவர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும், வழிகாட்டி அருளும் பாங்கு.
அவரது நெஞ்சத் துணிவையும் நமக்கு அவர் இந்த வழியில் ஊட்டுகிறார்.
கல்லிலே கட்டி அவரை கடலிலே பாய்ச்சிய போது அவர் கூறுகிறார்:
சொற்றுணை வேதியன் ஜோதி வானவன்,
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கை தொழக்
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே என்றார் அவர். கல் என்ன செய்யும்? கடல் தான் என்ன செய்யும், அவரை?!
சிவனருளால், அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம், ஏராளம். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அவர் நிகத்திய அற்புதங்களை ஒரே பாடலில் தனது திருக்களிற்றுப்படியாரில் கூறுகிறார்:
கொல்கரியின், நீற்றறையின், நஞ்சின், கொலைதவிர்தல்,
கல்லே மிதப்பாய்க் கடல் நீந்தல் – நல்ல
மருவார் மறைக்காட்டின் வாசல்திறப்பித்தல்
திருவாமூர் ஆளி செயல்.
கொல்கரியின் கொலை தவிர்தல் – திருவதிகைப் பதிகம்
நீற்றறையின் கொலை தவிர்தல் – மாசில் வீணையும் பதிகம்
நஞ்சின் கொலை தவிர்தல் – திருநனிபள்ளிப் பதிகம்
கல்மிதப்பின் கொலை தவிர்தல் – நமசிவாயத் திருப்பதிகம்
மறைக்கதவு திறப்பித்தல் – மறைக்காட்டுத் திருப்பதிகம் என இப்படி அற்புதங்களைச் சுட்டிக் காட்டும் திருப்பதிகங்களாக இவை ஆயின.
ஆட்சியாளருக்கே அவர் எச்சரிக்கை விடுக்கிறார்,துணிவுடன்
‘ஏழ் உலகும் விண்பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே’ என்று நம்மையும் தைரியப்படுத்தும் அவர் அதற்கான காரணமாக, ‘திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திருப்பாதிரிப்புலியூர்க் கடவுள் சுடரான் கழல் இணையே’ என்கிறார்.
சங்கரனுக்கே மீளா ஆளாய்த் தான் ஆனதைச் சொல்லும் அவர் நம்மையும் கூவி அழைத்து, தொண்டர் கூட்டத்தில் சேர வாரும் ஜெகத்தீரே என அழைக்கிறார்.
அவரது அன்பான அழைப்பை ஆணையாகவே பல தலங்களிலும் பட இடங்களிலும் அவர் கூறுகிறார்; வற்புறுத்துகிறார். ஏன், நம் மீது உள்ள அன்பினால், பரிவினால், பாசத்தினால்!
அவர் கூறிய அன்புரைகளில் அறிவுரைகளில் ஆணைகளில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்காட்டிற்காக இங்கு உங்கள் முன் வைக்கிறேன்.
திரு அங்க மாலையில் – தலையே நீ வணங்காய்! கண்காள் காண்மின் நெஞ்சே நீ நினையாய்!
இப்படி வாருங்கள், காணுங்கள், நினையுங்கள், வணங்குங்கள் என்ற அவரது அன்புரைகள், ஆணைகள் இது போல ஏராளம் அவரது பாடல்களில் பளிச்செனத் தென்படும்; அவற்றை ஏற்று உய்வோமாக.
இப்படிச் செய்வதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் பல நூறு பாடல்களில் அவர் கூறுகிறார். அவற்றையும் ஓதி உணர்வோமாக. சிவனடியார்க்கு சிவனைத் தொழுவதால் என்ன பயன்? ஒரே வரியில் கூறுவதென்றால அவர் வாக்காலேயே அதைக் கூறி விடலாம்.
“இன்பமே எந்நாளும் துன்பமில்லை”!
அப்பர் திருவடிகள் போற்றி!
இந்த வாய்ப்பினைக் கொடுத்த லண்டன் ஸ்ரீ கல்யா சிவாசாரியாருக்கு என் உளம் கலந்த நன்றியையைக் கூறி இங்கு குழுமியுள்ள கற்றறிந்த சிவனடியார்களுக்கு என் நமஸ்காரங்களைத் தெரிவித்து அமைகிறேன். நன்றி, வணக்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -48
Xxxx
5-1-15
Panini says Sarma for skin
S becomes D in Europe
Sarma = Derma
சர்மம் /தோல் = டெர்மடாலஜி
Dermatology
Xxx
5-1-20
Nishka is used by Panini
Important word of a coin
நிஷ்கா என்னும் நாணயம் பற்றியும் அதன் பல்வேறு மதிப்புகள் பற்றியும் பாணினி பேசுவதும் பல தகவலை யும் அவரது காலத்தையும் அறிய உதவுகிறது .
கல்யாணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளில் ஓதிவிடும் போது சொல்லும் ‘சதமானம்’
என்ற 100 பொற்காசு முதலியன 2700 ஆண்டுகளாக இருந்துள்ளது . இன்று வரை அம் மந்திரம் ஓதப்படுவது 2700 ஆண்டு பழமையானது !!
Xxx
5-1-21
Sata is used by Panini
Until today we use satam in many languages.
Tamil newspapers report satam adiththaar in cricket
Satapata Brahmana
கிரிக்கெட்டில் ஒருவர் சதம் அடித்தார் என்பதெல்லாம் 2700 ஆண்டுகளாகப் புழங்கும் சொல்!
Xxx
5-1-22
Sankhya for number
Used in all RSS Shakas
சங்க்யா என்றால் எண்ணிக்கை.
ஆர். எஸ்.எஸ். ஷாகாக்களில் வந்திருந்தோர் எண்ணிக்கையை கணக்கிட இந்தக் கட்டளை வாக்கியமே இன்றும் பயன்படுகிறது. சம்ஸ்கிருதம் ஒரு வாழும் மொழி, பயன்படும் மொழி என்பதற்கு லட்சக் கணக்கிலுள்ள ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்கள் எடுத்துக் காட்டுகள்.
Xxx
5-1-25
Varttika adds
Karsha pana
Kaasu Panam
கார்ஷா பணம் என்ற நாணயம் தான் காசு பண என்ற சொற்றோடரை உருவாக்கியது.
உலகெங்கிலுமுள்ள, குறிப்பாக ஐரோப்பா, இந்தியாவில் உள்ள நிதி தொடர்பான சொற்களில் ஸம்ஸ்க்ருதத்தைக் காணலாம்.
All monetary words in European and Tamil language are Sanskrit words
கார்சா = காசு= ஆங்கில CASH
பணம் = ஆங்கில MONEy
.
Xxx
5-1-27
Panini use all the numbers 100,20,1000
All coinage words.
பாணினி காலத்தில் 100, 20, 1000 மடங்கில் காசுகள் இருந்தன
1957 முதல் இந்தியா மீண்டும் 100 பைசா முறையைப் பயன்படுத்துகிறது
அதற்கு முன்னனர் ஒரு ரூபாய்க்கு 192 காசு
Xxx
5-1-29
Karshapan sahasrabhyam
1000 coins
Varttika adds Gold coins
100 coins
மேலே காண்க
Xxx
5-1-30
Different denominations of niskha
Xxx
5-1-34
Pana is in the Sutra
It is used in Tamil
P=M
Money
பணம்– மேலே காண்க
Xxx
5-1-38
Nimiththam is in the Sutra
Sign is the meaning
Used in omens, forecasts
நிமித்தம்- அறிகுறிகள் – இன்றும் ஜோதிடத்தில் மிகவும் பயன்படும் சொல்
Here Varttika adds medical terms
வார்த்திகம் வாத , பித்த, சிலேஷ்ம என்பதை எடுத்துக்காட்டுகிறது. திருவள்ளுவரும் மூன்று என்ற எண்ணால் இதைக் குறிப்பிடுகிறார்.
Vaata, Pitta, Sleshma
They are still used in Ayurveda, Siddha books.
Xxx
5-1-40
Putra
Puthalva is in Puram
புத்ர என்பதை சங்க காலப் புலவர்கள் புதல்வ என்று தமிழ் மயமாக்கிப் பயன்படுத்துகின்றனர் . காண்க புறநானூறு
Xxx
5-1-42
Bhumi is in the Sutra
It becomes Puvi in Tamil
M=V
பூமி என்பதை பழந்தமிழ்ப் புலவர்கள் புவி என்று மொழி இயல் விதிப்படி மாற்றியுள்ளனர்.
Xxx
5-1-42
Iswara is in the sutra
It is in all the siva Tamil temples.
ஈஸ்வர என்பது தமிழில் இறைவன் ஆகியது.
எல்லா சிவன் கோவில்களிலும் இறைவன் பெயர் ‘ஈஸ்வர’.
இதைப் பழைய வரலாறுகளில் ‘இறையனார்’ என்று காண்கிறோம் .
Xxx
5-1-44
Loka
Tamils can’t have l or r in the initial position and they add a vowel
A or U or E
Tamils change it to ULoka, ulakam
தமிழில் ல, ர ஆகிய எழுத்துக்கள் முதலில் வராது. அதற்காக எ, உ, இ என்பதைச் சேர்ப்பர்
லோக – உலக; லோகநாதன்= உலக நாதன் ; உலகம்= லோகம் என்பது பழந்தமிழ் நூல்களில் பயிலப்படுகிறது.
5-1-47
Laabha is used by Panini
All the merchants know this word and use it
லாபம் என்பதை பயன்படுத்தாத வணிகர் கிடையாது. இது பாணினி கால ஸம்ஸ்க்ருதச் சொல்
Xxx
5-1-54
Goshta is used for cattle shed;
In Tamil it is changed to Kottam
கோஷ்டம் என்பது கொட்டில் , மாட்டுக்கொட்டம் என்று மருவியது .
ஆங்கிலத்திலும் கோஷ்ட= கேட்டிள் ஷெட் cattle shed ஆனது.