புராணத்துளிகள்: 49 அக்னிகள்! 28 நரகங்களின் பெயர்கள் (Post No.9546)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9546

Date uploaded in London – –  –29 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புராணத் துளிகள் இரு பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. மிகப் பரந்து விரிந்து கிடக்கும் 18 புராணங்களில் உள்ள சில சிறந்த பகுதிகளைத் தொகுத்துத் தருவதே நமது நோக்கம். அந்த வகையில் மூன்றாம் பாகத் தொகுப்பு இப்போது தொடர்கிறது.

புராணத்துளிகள் மூன்றாம் பாகம்-அத்தியாயம் 6 கட்டுரை எண் 9478 வெளியான தேதி 11-4-2021

புராணத்துளிகள் : மூன்றாம் பாகம் – அத்தியாயம் 7

ச.நாகராஜன்

21. 49 அக்னிகள்!

ஸ்ரீ   மைத்ரேயர் விதுரனுக்குக் கூறியது:-

தக்ஷருடைய பதினான்காம் புதல்வியைப் பற்றி உனக்குச் சொல்கிறேன். அவள் அக்னியின் மனைவி. அவள் அவனுக்கு மிகவும் உதவியாக இருந்தாள். ஆகையால் அக்னி தேவன் அவளிடத்தில் மிகுந்த பிரியத்துடன் இருந்தான். அவள் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். அவர்களின் பெயர்கள் முறையே பாவகன்,பவமானன், ஸுசி. அம்மூவரும் தேவதைகளை உத்தேசித்துக் கொடுக்கப்படும் சருபுருடோசம் முதலிய ஹவிர்ப்பாகங்களைப் புஜிக்கும் தன்மை உடையவர்கள். அந்த மூவரே த்ரேதாக்னிகளுக்கு பிரியமுள்ள தேவதைகள் ஆனார்கள். அவர்களிடத்து 45 அக்னிகள் உண்டானார்கள். அவர்களோடு பித்ருக்கள் மூவரும் பிதாமஹன் ஒருவனும் சேர்ந்து 49 அக்னிகள் என்று கூறப்படுகிறார்கள். வைதிகர்கள் யாகங்களிலும் வேதோக்தமான மற்ற கர்மங்களிலும் எந்த அக்னிகளின் பெயரைச் சொல்லி ஆக்னேயமென்ற யாகங்களை நடத்துகிறார்களோ, அவர்களே இந்த 49 அக்னிகளாம்.

         ஸ்ரீமத் பாகவதத்தில் நான்காம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயம்

Xxxx

22.பிரகலாதன் தன் விளையாட்டுத் தோழர்களுக்குக் கூறியது

பிரகலாதன் தன்னுடன் விளையாட வரும் பிள்ளைகளைப் பார்த்துக் கூறலானான்: “ அறிவுள்ள ஒரு மனிதன் இந்த  மனிதப் பிறவியிலேயே இளமை முதற் கொண்டு பகவானை அடைவதற்குரிய தர்மங்களைக் கடைப்பிடித்தல் வேண்டும். ஜன்மாந்தரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மா இருக்க கூடாது. மனிதப் பிறவி கிடைப்பதற்கு அரிய ஒன்று. இனியும் மனிதப் பிறவியையே பெறுவோம் என்கின்ற நிச்சயம் இல்லை. ஆகையால் இப்போது நேரிட்டிருக்கின்ற இந்த மனிதப் பிறவியிலேயே பகவத் தர்மங்களைக் கடைப்பிடிப்பீர்களாக! சப்தாதி விஷயங்களை அனுபவித்த பின்னர் கடைசியில்  தர்மங்களைக் கடைப்பிடிக்கலாமே என்று நினைக்க வேண்டாம். அதுவரையில் இந்த சரீரம் நிலைத்திருக்கும் என்கின்ற நிச்சயம் இல்லை. ஆகையால் இளமை முதற்கொண்டே பகவானை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நிலையற்றதாக இருந்தாலும் கூட இந்த மனிதப் பிறவியே புருஷார்த்தத்தை நிறைவேற்றிக் கொடுக்கும். பகவத் தர்மங்களைச் சிறிது செய்தாலும் கூட அவன் மோக்ஷத்தை அடைவான். பகவத் தர்மத்தைச் செய்ய ஆரம்பித்து நடுவில் சரீரம் அழிந்து போனாலும் கூட கெடுதி உண்டாகாது. இந்த மனிதப் பிறவியில் பகவானின் பாதங்களைப் பணிவதே உரியதாம்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ஏழாம் ஸ்கந்தத்தில் ஆறாம் அத்தியாயம்

Xxxx

23. 28 நரகங்களின் பெயர்கள்!

நாரதர் நாராயணரை நோக்கி நரக வேதனை பற்றியும் அதற்கு உயிர்கள் செய்வனவற்றைப் பற்றியும் கேட்க நாராயணர் நாரதருக்குக் கூறுவது:-

(நரகங்களைப் பற்றி நாராயணர் கூறுவதில் முதலில் நரகங்களின் பெயர்கள் மட்டும் இங்கு தனியே தரப்படுகிறது)

1.தாமிஸ்ரம் 2. அந்த தாமிஸ்ரம் 3. ரௌரவம் 4. மகா ரௌரவம்        5. கும்பீபாகம் 6. காலசூத்திரம் 7.அசிபத்திரம் 8. பன்றி முகம்          9. அந்தகூபம் 10. கிரிமி போஜனம் 11. அக்னிகுண்டம் 12. வஜ்ரகண்டகம் 13. சான்மலி 14. வைதரணி 15. பூயோதம் 16. பிராணரோதம்          17. விசஸனம் 18. லாலாபக்ஷம் 19.சாரமேயாதனம் 20. அவீசி         21. பரிபாதனம் 22. க்ஷாரகர்த்தமம் 23. ரக்ஷோகணம். 24.சூலப்ரோதம் 25. தந்தசூகம் 26. வடாரோதம் 27. பர்யாவர்த்தனகம் 28. சூசீமுகம்

இப்போது என்னால் சொல்லப்பட்டனவும் சொல்லப்படாதனமுவான அநேக விதமான பாப பேதங்களுக்குத் தக்கபடி நரக பேதங்களும் அவைகளில் அனுபவிக்கப்படும் துன்ப பேதங்களும் உள்ளன.

(குறிப்பு :- எந்த பாவங்களுக்கு எந்த நரகம் என்பது தனியே தரப்படும்)

  • ஸ்ரீ தேவி பாகவதத்தில் எட்டாம் ஸ்கந்தத்தில் 22,23ஆம் அத்தியாயங்கள்

***

tags-  புராணத்துளிகள், 49 அக்னிகள், 28 நரகங்கள், 

Salary of Hindu Queen 2400 years ago;Panini Titbits -4 (Post No.9545)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9545

Date uploaded in London – –28 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Yesterday I posted how far Bharata travelled in seven days? That is Panini Titbits-3; here is titbits part 4.

Kautilya in his Arthasastra gives interesting information about Hindu Queen’s salary during his time. Here in Britain we pay taxes and a big amount is given to the British quees every year from our tax payment. Hindus in ancient India one sixth of their income to the king. Queen was also given a share from this. According to available inscriptions, we know that the queens  did Dhana and Dharma (Charity)  and special endowments were created in her name.

The queen was called Mahishi in Sanskrit. She had an official position in Hindu polity. She was crowned jointly with the king. Panini mentioned the chief queen as Mahishi, Sutra 4-4-48 and the special term ‘Maahisa’ must have referred to her allowances in the civil list, which was fixed by convention.

In the same ‘gana’ after Mahishii comes Prajaavatii, mother of princess, and her salary was called ‘praajaavata’.

Kautilya also mentions both the Chief Queen and the mother of princes

Raaja Mahishii

Kumaara maatri in the Civil List.

Queen received 48,000 silver panas and the

Mother of princes 12,000 silver panas

—Arthasastra 5-3

The Chief Queen,’ajja Mahish’i is frequently mentioned in the Jataka stories and distinguished from ‘pajaapatii’, corrupted from Sanskrit Prajaavatii, a title applied to all other queens except the chief queen.

xxx

Royal Harem

Panini mentions the phrase

‘Asuuryam pasyaa’ applied to women who lived in the seclusion of the palace where they could not see even the sun. The commentators interpret the term as ‘Raaja daaraah’ or the royal harem. Asoka called it Orodhana which corresponds to Sanskrit Avarodhana..

This shows how advanced we were in civilization 2700 years ago.

–subham—

Tags – Hindu queen, salary, harem, Panini and Kautilya, Mahishi

பெண்கள் வாழ்க-19; பூமி எனது தாய்; நான் அவள் மகன் (Post No.9544)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9544

Date uploaded in London – –28 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

(பெண்கள் வாழ்க தொடர் மார்ச் 22, 2021ல் துவங்கியது. முதல் கட்டுரை எண் 9410)

மாதா பூமி – புத்ரோ அஹம் பிருதிவ்யா

(பூமி எனது தாய்; நான் அவள் மகன் )

—அதர்வண வேத மந்திரம்

xxxஉலகில் வேறு எந்த மதமும் சொந்த தாயை தெய்வநிலைக்கு உயர்த்தவில்லை. இது இந்து மதத்தின் மகத்தான சிறப்பாகும். உணவுக்கும் கல்விக்கும் ஏற்பாடு செய்யும் தந்தையைக் கூட

to be continued………………………………………….

tags- பெண்கள் வாழ்க 19, சுயம்வரம், தமயந்தி, இந்துமதி, திரவுபதி

மே மாத (2021) நற்சிந்தனை காலண்டர் (Post.9543)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9543

Date uploaded in London – –28 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ப்லவ வருஷம் சித்திரை/வைகாசி  மாதம்

31 நீதி வெண்பா மேற்கோள்கள் /பொன்மொழிகள்

பண்டிகை/ விடுமுறை தினங்கள் – மே 1- மே தினம் , 14- அட்சய திருதியை, பரசுராம ஜெயந்தி, ரம்ஜான் , 17-சங்கர ஜெயந்தி,

25-வைகாசி விசாகம், 26-புத்த பூர்ணிமா, காஞ்சி மஹா பெரியவா ஜெயந்தி, சந்திர கிரஹணம்  (அக்கினி நட்சத்திரம் ஆரம்பம்- மே 4, முடிவு-28)

XXXX

ஏகாதசி மே 7, 22/23; அமாவாசை மே 11; பெளர்ணமி 26;

முஹுர்த்த தினங்கள் – 9,14,17, 23,24,28

XxxX

xxx

மே 1 சனிக்கிழமை

மந்திரங்கள் ஐந்தெழுத்துக்கு ஓப்பாகா–

ஆமந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே

சோமசுந்த ரற்கு என்றே சொல்.

xxx

மே 2 ஞாயிற்று க்கிழமை

பெரியோரைச் சேரின் துன்பம் நீங்கும்; சத் சங்க மஹிமை-‘பெரியோ ரிடம்சேரில் அக்கணமே போமென்று அறி’

xxx

மே 3 திங்கட் கிழமை

நீற்றின் பெருமை-  சீராம் வெண்ணீற்றுத் திரிபுண்டரம் விடுத்தே

பேரான முத்தி பெறவிரும்பல்

xxx

மே 4 செவ்வாய் க்கிழமை

அடியார்கள் தியானத்தில் ஆண்டவர்களை எதிர்பார்ப்பர்–

கந்தமிகும் பூவலரப் பார்க்கும் பொறிவண்டு அரனன்பர்

தேவரவைப் பார்ப்பர் தௌிந்து.

xxx

மே 5 புதன் கிழமை

கற்றவர்க்கு நிகரில்லை–‘கல்லார் பலர்கூடிக் காதலித்து வாழினும்நூல்

வல்லான் ஒருவனையே மானுவரோ’

xxx

மே 6 வியாழ க்கிழமை

சேர்ந்த இடத்தின் பயன்- ‘சந்தனத்தைச் சேர்தருவும் தக்கமணம் கமழும்’

xxx

மே 7 வெள்ளி க்கிழமை

இனிய சொல்லே இன்பம் பயக்கும்–

அன்பறிவு சாந்தம் அருளுடையார் நல்வசனம்

இன்பமிகும் சீதள மாமே

xxx

xxx

மே 8 சனிக்கிழமை

. தீயோர் சொல் மிகவும் வருத்தம்- வெய்யகதிர்

எல்லோன் கிரணத் தெரியினிலும் எண்ணமிலார்

சொல்லே மிகவும் சுடும்.

xxx

மே 9 ஞாயிற்று க்கிழமை

தானம் மூவகை–

தானறிந்தோருக் குதவி தன்னால் அமையும்எனில்

தானுவந்து ஈதல் தலையாமே – ஆனதனால்

சொன்னால் புரிதலிடை சொல்லியும் பன்னாள்மறுத்துப்

பின்னாள் புரிவதுவே பின்.

xxx

மே 10 திங்கட் கிழமை

உயர்ந்தோர் கைம்மாறு கருதார்–

எல்லோர் தமக்கும் இனிதுதவல் அன்றியே

நல்லோர் தமக்குதவி நாடாரே

xxx

மே 11 செவ்வாய் க்கிழமை

நல்லோரை அறிய வாக்கு– வாக்குநயத் தாலன்றி கற்றவரை மற்றவரை

ஆக்கைநயத் தால்அறியல் ஆகாதே

xxx

மே 12 புதன் கிழமை

தீயோர் நண்ணிய நல்லோர்க்கும் தீமையே–

நல்லொழுக்கம் இல்லார் இடம்சேர்ந்த நல்லோர்க்கும்

நல்லொழுக்க மில்லாச்சொல் நண்ணுமே

xxx

மே 13 வியாழ க்கிழமை

உண்மையை சிலரே விரும்புவர்–

சத்தி யம் எக்காலும் சனவிருத்த மாகுமே

எத்தயபொய் யார்க்கும் இதமாகும்

xxx

மே 14 வெள்ளி க்கிழமை

துயருண்டு இல்லத்தில்– மாசுபுரி

மாயா மனைவியராம் மாக்கள் மகவென்னும்

நாயால் கடிப்பித்தல் நாடு.

xxx  

மே 15 சனிக்கிழமை

விருப்பு பல்வகைத்தது–

கல்லார் பகைசேர் கலகம் விரும்புவர்

நல்லார் விரும்புவர் நட்பு.

xxx

மே 16 ஞாயிற்று க்கிழமை

. நீத்தார் நுகர்ப்பொருள் நண்ணலாகாது– கற்றருளை

வேட்ட பெரியோர்  பெருமையெலாம் வேறொன்றைக்

கேட்ட பொழுதே கெடும்.

xxx

மே 17 திங்கட் கிழமை

தீயொழுக்கம் தீமையே நல்கும்–

சீலம் குலம்அடியாள் தீண்டின்கெடும் கணிகை

ஆலிங்கனம் தனநா சமாகும்

xxx

மே 18 செவ்வாய் க்கிழமை

மணமகன் இவனாவான்-

பெண்ணுதவுங் காலைப் பிதாவிரும்பும் வித்தையே

எண்ணில் தனம்விரும்பும் ஈன்றதாய் – நண்ணிடையில்

கூரியநல் சுற்றமும் குலம் விரும்பும் காந்தனது

பேரழுகு தான்விரும்பும் கண்.

xxx

மே 19 புதன் கிழமை

. அடிய வர்பொருள் கவர்தலாகாது–

அந்தோ புரமெரித்த அண்ணலடி யார்பொருள்கள்

செந்தீயினும் கொடிய தீக்கண்டாய்

xxx

மே 20 வியாழ க்கிழமை

தீயோர் கேண்மை தீயவே பயக்கும்–

நிந்தையிலாத் துயர் வரும் நிந்தையரைச் சேரிலவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே

xxx

மே 21 வெள்ளி க்கிழமை

தீயவர் நற்சொல் ஏற்கார்–

கன்மமே பூரித்த காயத்தோர் தம்செவியில்

தன்மநூல் புக்காலும் தங்காதே

xxx

மே 22 சனிக்கிழமை

நல்லோர் நண்ணம்பற்கு உயிருமளிப்பர்– நூலின் நெறி

உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்தும் மாற்றுவரே

மற்றோர் புகல மதித்து

xxx

மே 23 ஞாயிற்று க்கிழமை

இவர்களுக்கு இவையில்லை–

ஆசைக்கில்லையாம் மானம்.

xxx

மே 24 திங்கட் கிழமை

தீயவருக்கு இடம்கொடுக்கக் கூடாது–

நன்றறியாத் தீயோர்க் கிடமளித்த நல்லோர்க்கும்

துன்று கிளைக்கும் துயர்சேரும்

xxx

மே 25 செவ்வாய் க்கிழமை

இதற்கு இதுவழகு–

கண்ணுக்கு இனிய சபைக்குமணி கற்றோனே

xxx

மே 26 புதன் கிழமை

நல்லவர் தீயவர் கல்வியின் பயன் —

வல்லவர்பால் கல்வி மதம்ஆ ணவம்போக்கும்

அல்லவர்பால் கல்வி அவையாக்கும்

xxx

மே 27 வியாழ க்கிழமை

நல்லதாயினும் எண்ணிச்சொல்லுக–

இதமகித வார்த்தை எவர்கேனும் மேலாம்

இதமெனவே கூறிலிதமன்றே

xxx

மே 28 வெள்ளி க்கிழமை

மூவகையினர் ஈகைத்தன்மை—

உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே

மத்திமர்தாம் தெங்குதனை மானுவரே – முத்தலரும்

ஆம்கமுகு போல்வர் அதமர் அவர்களே

தேம்கதலியும் போல்வார் தேர்ந்து.

xxx

மே 29 சனிக்கிழமை

மூவகையார் தன்மைகள்—

உற்ற மறையகத்தின் உய்க்குமவன் உத்தமனே

மற்றம் மறைபகர்வோன் மத்திமனே – முற்றிழையே

அத்தம் உறலால் புகல்வான் அதமனென

வித்தக நூலோதும் விரித்து

மே 30 ஞாயிற்று க்கிழமை

நல்லதாயினும் எண்ணிச்சொல்லுக–

இதமகித வார்த்தை எவர்கேனும் மேலாம்

இதமெனவே கூறிலிதமன்றே

xxx

மே 31 திங்கட் கிழமை

கற்றவராயினும் தீயோர் தீயவரே–

தீயவர்பால் கல்வி சிறந்தாலும் மற்றவரைத்

துயவரேன்று எண்ணியே துன்னற்க

xxx

BONUS VERSES…………………………………..

அழகைக்கொடுப்பன—

அன்னமனையாய் குயிலுக்கு ஆனவழகு யின்னிசையே

கன்னல் மொழியார்க்கு கற்பாமே – மன்னுகலை

கற்றோர்க்கு அழகு கருணையே ஆசைமயக்கு

அற்றோர்க்கு அழகு பொறையாம்.

xxx

துன்பத்திலும் நல்லவர் நல்லவராவார்–

 நலிந்தாலும் உத்தமர்பால்

நற்குணமே தோன்றும் நயந்து

xxx

tags–  மே மாத,  நற்சிந்தனை,  காலண்டர், 

திருக்குறளில் அந்தணரும் வேதமும்! (Post No.9542)

Hindu Saivite Valluvar

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9542

Date uploaded in London – –  –28 APRIL  2021   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருக்குறளில் அந்தணரும் வேதமும்!

ச.நாகராஜன்

Hindu Valluvar from Englishman’s book

உலகம் முழுமைக்கும் வாழ்வாங்கு வாழும் வழியைச் சொல்லும் திருக்குறள் இந்து மதத்தின் அற நூலே ஆகும். அது இந்து மதம் பெரிதும் போற்றும் வேதத்தைப் போற்றும் நூல். ஆகவே வேதம் மற்றும் இந்து மதத்தின் கொள்கைகளான வேதமே அறத்தின் அடிப்படை, புனர்ஜென்மம் உண்டு போன்றவற்றை மறுக்கும் பகுத்தறிவுவாதிகளும் புனர்ஜென்மத்தை மறுக்கும் செமிடிக் மதங்களைச் சார்ந்தோரும் அதைத் தங்களுடையது என்று சொல்வது முடியாத காரியம் – உண்மையின் அடிப்படையில் – திருக்குறளின் அடிப்படையில்!

அந்தணர் என்ற சொல்லை இரு முறையும் அந்தணன் என்ற சொல்லை ஒரு முறையும் 1330 குறள்களில் திருவள்ளுவர் கையாளுகிறார்.

குறள் எண் 8 – அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

                பிறவாழி நீந்தல் அரிது

அறவாழி அந்தணன் என்பது இங்கு இறைவனைக் குறிக்கிறது. அவனது தாளைப் பணியாதார்க்கு பிறவிக் கடலைக் கடப்பது அரிது.

குறள் எண் 30 – அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

                 செந்தண்மை பூண்டொழுகலான்

எல்லா உயிர்களிடத்தும் செம்மையான அருள் கொண்டு இருக்கும் அறநெறி வழி நிற்போர் அந்தணர் எனப்படுவர்.

குறள் எண் 543 – அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

                  நின்றது மன்னவன் கோல்

அந்தணர் போற்றும் வேதத்திற்கும் அறத்திற்கும் அடிப்படையாக நின்று அமைவது மன்னவனின் செங்கோலே!

‘மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல்என்ற மணிமேகலை வரிகளை பரிமேலழகர் தனது உரையில் சுட்டிக் காட்டுகிறார்.

இது தவிர பார்ப்பார் கண் என்ற சொல்லை ஒரு இடத்தில் -குறள் எண் 285இல் – எதிர்பார்ப்பவரிடத்தில் –  என்ற பொருளில் பயன்படுத்துகிறார்.

அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார் கண்

அடுத்து குறள் எண் 134. இதில் பார்ப்பான் என்ற சொல் பார்ப்பனன் என்ற பொருளிலும் ஒத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல் என்ற பொருளிலும் மிகத் தெளிவாக அமைகிறது.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

கற்ற வேதத்தை ஒருவேளை மறந்து விட்டான் என்றாலும் கூட அதை மீண்டும் ஓதிக் கொள்ளலாகும். ஆனால் பார்ப்பானின் பிறப்பு ஒழுக்கம் குன்றினால் கெட்டு விடும். இங்கு பரிமேலழகர் தனது உரையில், “அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும் என்கிறார்.

ஆக வேதம் ஓதுதலை மறப்பினும் கூட பிறப்பு ஒழுக்கத்திலிருந்து ஒரு நாளும் ஒரு பார்ப்பான் விலகக் கூடாது என்று வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

அடுத்து மறைமொழி என்று வேதத்தை ஒரு குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர். குறள் எண் : 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

Brahmin Valluvar with Punul/ Sacred thread

சான்றோரின் பெருமையை நிலவுலகில் அவரால் கூறப்படும் மறைமொழி காட்டி விடும். மறைமொழி என்பது வேதம்.

ஆனால் சிலரோ இதைத் திரித்து பழமொழி என்கின்றனர். பழமொழியை யார் வேண்டுமானாலும் கூறலாம் என்பதால் மறை மொழி என்பதற்கு வேதம் என்ற பொருளே சிறந்தது.

மணக்குடவர் தன் உரையில் “ கல்வி உடைய மாந்தரது பெருமையை அவரால் சொல்லப்பட்டு நிலத்தின் கண் வழங்கும் மந்திரங்களே காட்டும் என்கிறார்.

பரிமேலழகரும் மந்திரங்கள் என்ற பொருளையே கூறுகிறார். ஆக மறைமொழி என்பது வேத மந்திரங்கள் என்பது தெளிவாகிறது.

அடுத்து மறை என்ற சொல்லை ஏழு இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

குறள் எண் 847இல் அருமறை சோரும் அறிவிலான் என்று வள்ளுவர் கூறுவதற்கு பொருளாக பரிமேலழகர் “பெருதற்கு அரிய உபதேசப் பொருளைப் பெற்றாலும் உட்கொள்ளாது போக்கும் புல்லறிவாளன் என்கிறார். ஆக இங்கு மறையை உபதேசப் பொருள் என்றே கொள்ளலாம்.

குறள் எண் 590இலும் 695இலும் மறை என்பது ரகசியம் என்ற பொருளில் வருகிறது. குறள் எண் 1076இலும் “தாம் கேட்ட மறை என்பதற்கு தாம் கேட்ட இரகசியங்களை எல்லோருக்கும் சொல்லும் கயவரை, ‘பறை என்கிறார்.

குறள் எண் 1138இலும்1254இலும் ‘மறை இறந்து மன்று படும் காமமானது மறைத்திருத்தலையும் மீறி ஊர் உலகிற்கு வெளிப்படும் என்கிறார்.

குறள் எண்1180இலும் (காமத்துப் பால் கண்விதுப்பழிதல் அதிகாரத்தில்) ‘மறைபெறல் என்ற வார்த்தை மறைத்து வைத்திருத்தல் என்ற பொருளில் வருகிறது.

அடுத்து அவி என்ற வார்த்தையை இரு இடங்களில் வள்ளுவர் பயன்படுத்துகிறார்.

குறள் எண் : 259

அவி சொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று

வேள்வித் தீயில் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அவி என்பது நெய் முதலிய வேள்வியில் இடுவனவாம். அந்த வேள்வியினால் வரும் பயனை விட இந்த விரதத்தால் வரும் பயன் பெரிது என்பது

பரிமேலழகர் உரை.

இன்னொரு குறள் : எண் 413

செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின்                     ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

இந்த பூமியில் செவி உணவாகிய கேள்வியினை உடையவர்கள் அவியை உணவாகக் கொண்ட ஆன்றாரோடு – தேவர்களோடு – ஒப்பாவார்.

அறிவால் நிறைந்தவர் என்பதால் ஆன்றார்; துன்பம் அறியாதவர் என்பதால் தேவர் – இது பரிமேலழகர் உரை.

(தேவரை மனம் போன போக்கில் நடக்கும் கயவரோடு ஒப்பிடும் ஒரு குறளும் உண்டு. குறள் எண் 1073 – “தேவர் அனையர் கயவர்!”)

ஆக திருவள்ளுவர் காட்டும் சமுதாயம் வேதம் நிறைந்த தமிழ்நாடு என்பதை அறிகிறோம். அதில் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றாமல் வாழ வேண்டும் என்று வள்ளுவர் அறிவுறுத்துவதைக் காண்கிறோம். அந்தணர் என்போர் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் அருளாளர் என்பதையும் அறிகிறோம்.

வேள்வி, அவி சொரிதல்,  ஆகிய வேத கால பழக்கங்களையும் தேவர் பற்றியும் கூட வள்ளுவர் குறிப்பிடுவதையும் பார்க்கிறோம்.

வள்ளுவர் பாரதீய பண்பாட்டின் அடிப்படையில் குறளைப் படைத்திருக்கிறார் என்பதற்கான சான்றுகளில் மேலே காட்டும் குறள்களும் நல்ல சான்றாகும்.

ஒரு சின்ன உண்மை:-

1967க்குப் பின்னர் வந்த திருக்குறளுக்கான உரைகளில் 99 சதவிகித உரைகளை ஒரு நகைச்சுவைக்காகப் படிக்கலாமே தவிர, பொருள் விளங்கிக் கொள்ளப் படிக்கக் கூடாது. எப்படி எல்லாம் வள்ளுவரைத் திரிக்கலாம் என்பதை “கயிறு திரித்துப் பழக்கப்பட்ட “உ.பி.க்களின் உரைகளிலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உ.பி.களுக்கு ஜால்ரா போடும் “தமிழ் அறிஞர்களின் உரைகள் மற்றும் கட்டுரைகளிலும் கண்டு திடுக்கிடலாம்!

வள்ளுவரை இவர்களிடமிருந்து காப்பாற்றுவோம் – நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள!

***

Tamil Valluvar

tags– அந்தணர், அந்தணன், மறைமொழி, பார்ப்பான், திருக்குறள்

How many miles did Bharata travel in 7 days to reach Ayodhya? (Post No.9541)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9541

Date uploaded in London – –27 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

We read about Bharata’s travel in Valmiki Ramayana. He travelled for seven days and reached Ayodhya. His mother’s country Kekaya was in Afghanistan but near Iranian border. So let us calculate how far he travelled. He travelled by chariot drawn by horses. Some interesting information is available in Panini’s grammar book Ashtadhyayi and its commentaries .

Panini mentioned various terms where bulls were used to draw chariots or carts,

Rathya- bulls to draw chariots 4-4-76; in the tad- vahati section

Saakata- bulls for carts,4-4-80

Baalika and Sairika – bulls for ploughs

Panini refers to different types of chariots drawn by horse or camel or ass in addition to bulls.4-3-122

Chariots were drawn by even number of horses two or four;

Sometimes a leader was yoked in front and it was called Prastha,8-3-92

But in the sculpture’s of Bharhut, Sanchi and Mathura we see 2 or 4 horses or bulls drawing the chariots or carts.

Apart from chariots Panini mentioned riders of bulls, camels and horses.

Horse distance

Aasviina denoted the length of journey made in one day by a horse,5-2-19

In the Atharva Veda 6-131-3 the Aasviina distance is mentioned immediately after 3 or 5 yojanas and appears to have exceeded five yojanas.

The Arthasastra defines precisely the Aasviina distance, as it was needed to calculate the travelling done by Government servants, and for determining the marches of cavalry or for other purposes.

The Aasviina distance in the Arthasastra is as follows—

Quality of horse — Chariot Horses —- Riding Horses

Average — 6 yojanas/31 miles— 5 yojanas/ 25-5 miles

Middle –     9 yojanas/46 miles —- 8 yojanas/41 miles

Best —     12 yojanas/61 miles — 10 yojanas/ 51 miles

The Aasviina distance in the Atharva Veda was between 5 and 8 yojanas.

Patanjali also confirmed 8 yojanas for the best horse per day.

If we take the highest number for the best horse, then Bharata would have covered at least 420 miles between Ayodhya and his home country Kekaya near Iranian border.

The roads between big cities were in good condition.

We read such things in Nala Damayanti charita   as well. Rtuparnan, and Nalan were great drivers. Tamil poem says they travelled 700 Kathams before one said ‘’Mm’’.

Kaikeyi was also a great driver and she got the boons when she drove the chariot of Dasaratha in such a way and made Dasaratha won the battle against Sambara.

So my research showed that Bharata travelled at least 420 miles; to be precise 7 days X61 miles per day= 427 miles.

But the actual distance between Kandahar city (Gandhaara) and Ayodhya is 1000 miles. So I think Bharat would have crossed rivers and took the short cut. Being a prince he would have got waiting chariots on both the banks of every river. Another possibility is that in his time Kekaya’s sovereignty might have covered Pakistan region as well.

Xxx Subham xxxx

tags — Chariot, Horse, distance, Bharat, Kekaya, Aodhya, Asvina, Kautilya

Index 64- London Swaminathan Articles posted in March  2018 (Post No.9540)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9540

Date uploaded in London – –27 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

March  2018,  Index 64

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9500 PLUS POSTS.

Xxxx

March 2018 English articles

Plan Your Day- Chanakya s Advice;Post 4798, March 1,2018

Strange Beliefs of Sangam Tamil Poets and Chanakya,4802,2/3

If you sing Ahiri Raga, you won’t get Food, 4805;3/3

Chanakya on Vedic Interpretation, 4809; 4/3

(From 5th to 12th March,travel in India)

Veda is the Root of Dharma, 4811,13/3

Short Story- Fate can be changed by Good Action,4815,14/3

Genetics and other Sciences in Chanakya Niti, 4818,15/3

Hindu Saint Gnanananda and Planet Mars, 4822,16/3

Adi Shankara, Andal and Alangium hexapetalum,4825;17/3

Do you want to see Gods Third Eye?4828;18/3

English collector saw Lord Rama in Madurantakam, 4831;19/3

Natural Wonder near Villupuram,4837;21/3

Superstitious Students’ ‘attack’ on Hindu Gods ,4841;22/3

Beautiful Srimushnam Temple, 23/3; post 4844

My visit to Vadalur Vallalar Ashram, 4847;24/3

Visit to Five Famous Shiv Temples, 4850;25/3

A friend in need is a friend indeed,4852;26/3

30 Beautiful Quotations from Kalhana’s Rajatarangini, 4856,27/3

Chanakya and Tamil poet Vvalluvar on Education,4859,28/3

Anecdotes about Christian Preachers, 4862,29/3

Poor Preacher, Baptist fish, Fool’s Signature, 4866;30/3

Three Curses on Ravana, 4869;31 March 2018

xxx

 மார்ச் 2018, இண்டெக்ஸ் 64

பண மோசடி பற்றி வள்ளுவன், சாணக்கியன் விநோதக் கணக்கு ,

போஸ்ட் 4797, மார்ச் 1, 2018

மயிர் நீப்பின் வாழாக்  கவரிமான் , 4800, 2/3

கல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன் ,வள்ளுவன், சாணக்கியன்

ஒரே கருத்த, 4804, 3/3

சங்கப் புலவர்களும் சாணக்கியனும், 4808, 4/3

(5ம் தேதி முதல் இந்தியப்பயணம் )

பதில் சொல்லடா, தமிழா! Tamil Q & A , 4812, 13/3

ஆஹிரி ராகம் பாடினால் ஆகாரம் கிடைக்காது ,4814,14/3

ஜோதிடம் பலிக்குமா? குட்டிக்கதை, 4817, 15/3

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ! 4819, 15/3

உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா, 4821, 16/3

ஞானானந்த தபோவனம் அதிசயம் – செவ்வாய் கிரஹ ஞானிகள் ,4824,17/3

ஆண்டாளும் ஆதிசங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம், 4827, 18/3

நெற்ரிக் கண் !சூடான தோசை, சுவைமிகு சிங்கப் பெருமாள் கோவில், 4830, 19/3

குஞ்சித பாதம் என்றால் என்ன? 4833, 20/3

வெள்ளைக் காரர்களுக்கு காட்சி  கொடுத்த இராம பிரான் 4834, 20/3

சென்னைக்கு அருகில் ஒரு இயற்கை அதிசயம் ,4838, 21/3

மயிலம் முருகன் கோவில் தரிசனம், 4840, 22/3

இந்துக் கடவுள் மீது மாணவர் தாக்குதல், 4843,23/3

பின்னு செஞ்சடையாள் , பேரழகி சிலை உடைய திருமுட்டம், 4846, 24/3

நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்? 4849, 25/3

ஐந்தே நாட்களில் ஐந்து சிவாலய தரிசனம், 4853, 26/3

ஒளி வீசும் தமிழ்நாடு, ஓலா, ஊபர் , Fast track call taxis, 4855, 27/3

செம்புலப் பெயல் நீரார் செப்பியதை கம்பனும் வள்ளுவனும் செப்பினர் ,4858, 28/3

வீடு பற்றிய முப்பது பழமொழிகள் , 4861, 29/3

அன்பிற்கும் அவதி உண்டோ ?- ராவணன் , 4863, 29/3

கனிமொழி பற்றிக் கம்பன், 4865, 30/3

நடப்பது நடந்தே தீரும்- கம்பன் பிலாஸபி /தத்துவம், 4868, 31/3

–subham–

tags- Index 64, March 2018 posts

பெண்கள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள்: பெண்கள் வாழ்க-18 )Post.9539)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9539

Date uploaded in London – –27 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பெண்கள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள்; பெண்கள் வாழ்க Part 18;இந்தியப் பெண்களைவிட மேல்நாட்டுப் பெண்கள் கூடுதல் ‘சுதந்திரத்துடன்’ வாழ்வது உண்மைதான். ஆனால் இந்தியப் பெண்களைவிட இன்பமான மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு வாழ்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனெனில் விவாகரத்தும் தனிமையாக (separation; single mothers)  

tags – பெண்கள் , மேல்நாட்டு அறிஞர்கள், பெண்கள் வாழ்க-18, 

விளக்க முடியாத தற்செயல் ஒற்றுமை சம்பவங்கள் (Post 9538)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9538

Date uploaded in London – –  –27 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FIRST PART OF THIS TALK WAS BROADCAST LAST MONDAY 19-4-2021; THIS IS SECOND PART

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 26-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

விளக்க முடியாத தற்செயல் ஒற்றுமை சம்பவங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. கார்ல் ஜங் கனவுகளைப் பற்றியும் ஆவிகளைப் பற்றியும் தற்செயல் ஒற்றுமைகள் பற்றியும் ஆராய ஆரம்பித்தார். மனதிற்கு நான்கு பண்புகள் உள்ளன என்பது அவரது கண்டுபிடிப்பு. 1) Sensing ஐம்புலன்கள் மூலமாகச் சுற்றுப்புறத்தை அறிதல் 2) Thinking  சிந்தித்தல் 3) Feeling உணர்தல் 4) Intuiting உள்ளுணர்வு மூலமாக ஆழ்மன ரீதியாக விஷயங்களைப் பகுத்துப் பார்த்தல் ஆகியவையே அந்த 4 பண்புகள்.

52 சீட்டுகள் உள்ள ஒரு சீட்டுக் கட்டில் 13 கார்டுகளை ஒருவர் தான் நினைத்த வரிசைப் படி எடுக்க வேண்டுமெனில் 635,000,000,000 தடவைகளில் ஒரே ஒரு முறை தான் இந்த வாய்ப்பு உண்டு என்கிறது புள்ளி இயல் துறை அறிவியல். ஒரே ஒரு முறை ஒருவர் சீட்டுக் கட்டைக் குலுக்கிப் போட்டுத் தான் நினைத்த 13 சீட்டுக்களை எடுத்து நம்மிடம் காட்டினால் வியப்பினால் விழிகள் பிதுங்கி விடும் இல்லையா?

இப்படி நம்ப முடியாத விஷயங்கள் திடீரென்று ஓரிடத்தில் நடந்தால் அதை வெறும் தற்செயல் ஒற்றுமை சம்பவம் என்று ஒதுக்கி விட முடியாது என்று ஜங் கூறினார். அவர் கூறிய இந்த சிங்க்ரானிசிடி தத்துவத்தை ஒப்புக் கொண்ட ஏராளமானோர் இது பற்றி ஆராயத் தொடங்கினர். இவை அதிகாரபூர்வமாக சரி பார்க்கப்பட்டு இப்போது பதிவு செய்யப்படுகின்றன.

சில சம்பவங்களைப் பார்ப்போம்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் பிரபல நடிகரான அந்தோனி ஹாப்கின்ஸ் (Anthony Hopkins ) ‘தி கேர்ல் ஃப்ரம் பென்ட்ரோவ்கா (The Girl from Petrovka) என்ற படத்தில் கோஸ்ட்யா என்ற பாத்திரத்தை நடிப்பதாக இருந்தது. அவர் முதலில் அந்த புத்தகத்தைப் படிக்க விரும்பினார். ஆனால் லேசில் அது கிடைப்பதாயில்லை. ஒரு நாள் லண்டனில் டியூப் ஸ்டேஷனில் அவர் உட்கார்ந்திருந்த போது அருகில் யாரோ ஒருவர் விட்டுவிட்டுப் போயிருந்த புத்தகத்தைப் பார்த்தார். அது என்ன என்று எடுத்துப் பார்த்தால், அது அவர் மிகக் கஷ்டப்பட்டு தேடிக் கொண்டிருந்த அதே புத்தகம் தான். அதில் என்ன விந்தை என்றால் அந்தப் புத்தகத்தில் அதை எழுதிய ஜார்ஜ் பைபெர் (George Feifer) கையெழுத்திட்டிருந்தது தான்!

வயலட் ஜெஸ்ஸாப் (Violet Jessop) என்பவர் ஒரு நர்ஸ். அவருக்கு மிஸ் அன்சிங்கபிள் (Miss Unsinkable) என்ற பட்டப் பெயர் கிடைத்தது? எப்படி என்று பார்ப்போம். 1912இல் பயணப்பட்டு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலைப் பற்றி அனைவரும் அறிவோம். அதில் பயணித்து தப்பியவர் வயலட். அது மட்டுமல்ல 1916இல் விபத்துக்குள்ளான இன்னொரு கப்பலான ஹெச் எம் ஹெச் எஸ் பிரிட்டானிக் (HMHS Britannic) என்ற கப்பலிலும் பயணப்பட்டு அதற்கு நேர்ந்த விபத்திலிருந்தும் அவர் பிழைத்தார். மூன்றாம் முறையாக ஆர் எம் எஸ் ஒலிம்பிக் என்ற கப்பலில் அவர் பயணப்பட்ட போது அந்தக் கப்பல் ஒரு போர்க்கப்பலுடன் மோதியது. நல்ல வேளையாக யாரும் இறக்கவில்லை. இப்படி மூன்று முறை பிழைத்த இவரை “தி அன் சிங்கபிள் என்று அழைப்பது நியாயம் தானே!

அடுத்து முதலாம் உலக மகாயுத்தம் பத்து லட்சம் பிரிட்டிஷ் உயிர்களைப் பலி வாங்கியதை உலகம் அறியும். அதில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் பலி 17 வயதான போர்வீரரான ஜான் பர் (John Parr) என்பவர். அந்தப் போர் முடிந்தவுடன் கடைசி பலியாக ஆவணப்படுத்தப்பட்டவர் 30 வயதான் ஜார்ஜ் எட்வின் எலிஸன் (George Edwin Ellison) என்பவர். இதில் வேடிக்கையான தற்செயல் ஒற்றுமை என்னவெனில் இந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி 15 அடி தூரத்தில் செயிண்ட் சிம்போரியன் மிலிடரி சிமெட்ரி (Saint Symphorien Military Cemetery) கல்லறையில் புதைக்கப்பட்டிருந்தது தான். ஆரம்பமும் முடிவும் அந்தக் கல்லறையில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தது!

    2014ஆம் ஆண்டில் மலாசியன் ஏர் ஃபிளைட்ஸ் இரு கோரமான விபத்துகளைச் சந்தித்தது. முதல் விமானம் உக்ரேனியரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அடுத்த விமானம் இந்தியன் ஓஷியனில் பறக்கும் போது எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி காணாமல் போய் விட்டது. இரண்டும் மலாசிய விமானங்கள் தாம். குறுகிய கால இடைவெளியில் இரு விமானங்களும் விபத்துக்குள்ளாயின. அதில் நெதர்லாந்தைச் சேர்ந்த சைக்கிள் ஓட்டும் வீரரான மார்டன் டி ஜோங்கே (Maarten de Jonge) இந்த இரு விமானங்களிலும் பயணப்பட்ட டிக்கட்டை பதிவு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் இதை விட மலிவான கட்டணத்தில் வேறு விமானங்களில் பறக்க  வாய்ப்புக் கிடைக்கவே இந்த இரு விமான டிக்கட்டுகளை கேன்ஸல் செய்தார். அதிசயமாக இந்த விமானங்களில் பறக்காமல் தப்பித்தார்.

    80 வயதான ஸு வெய்பாங்க் (Xu Weifang ) சீனாவில் ஜியான்ஸு (Jiangsu) மாகாணத்தில் வசிப்பவர். ஒரு நாள் எட்டு வயதான ஒரு சிறுவன் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த போது அவனைக் காப்பாற்றினார். அவர் வயதானவர் என்பதோடு அப்போது பல காயங்கள் ஏற்பட்டு உடல் நலமும் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தச் செய்தியை வெளியிட்ட நியூஸ் வீக் பத்திரிகை கூடுதலாக ஒரு தகவலையும் தந்தது.  30 வருடங்களுக்கு முன்னர் ஜூ வெய்பாங்க் தான் காப்பாற்றிய சிறுவனின் தந்தையையும் நீர் விபத்தில் மூழ்காமல் காப்பாற்றி இருக்கிறார்.

இப்படி அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டே போகலாம்.

சென்ற வாரம் சிங்க்ரானிசிடி உரையை முடித்த பின்னர் மறுநாள் வந்த செய்தி இது.  Prince Philip died  at 9.00 am on the 9th April , the 99th day of the year at the age of 99.

பிரின்ஸ் பிலிப் ஏப்ரல் 9ஆம் தேதி ஒன்பது மணிக்கு தனது 99ஆம் வயதில் 99ஆம் நாளன்று காலமானார்!

இப்படிப்பட்ட தற்செயல் ஒற்றுமை செய்திகளை ஒவ்வொன்றாக ஆராய ஆரம்பித்த ஜங் அவற்றைச் சரிபார்த்து தொகுக்கவும் செய்தார்.

பிரபல கணித மேதையான வாரன் வீவர் தான் எழுதியுள்ள லேடி லக்: தி தியரி ஆஃப் ப்ராபபலிடி என்ற நூலில், லைஃப் இதழில் வெளியான ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

  நெப்ராஸ்காவில் பீட்ரிஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு சர்ச்சில் தேவாலய இசைப்பாடல் ஒத்திகைக்காக 15 பேர் குழுமத் திட்டமிட்டனர். 1950ஆம் ஆண்டு மார்ச் முதல் தேதியன்று மாலை ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு அவர்கள் அங்கு வர வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட்து. அங்கு வர வேண்டிய 15 பேரும் சற்று தாமதமாக வந்தனர். பாதிரியாரும் அவரது மனைவி மற்றும் மகளும் தாமதமாக வந்ததற்கான காரணம் பாதிரியாரின் பெண்ணின் உடையை அயர்ன் செய்ய பாதிரியாரின் மனைவி சிறிது நேரம் கூட எடுத்துக் கொண்டார் என்பது தான். வரவேண்டியவர்களுள் ஒரு பெண் தன் ஜாமெட்ரி வரைபடத்தை முடிக்கச் சிறிது நேரம் ஆனது. இன்னொருவரின் கார் ஸ்டார்ட் ஆக தாமதமாகி விட்டது. இரண்டு பேர் அவர்களுக்குப் பிடித்த ரேடியோ புரோகிராமில் லயித்து அதில் ஈடுபட்டு அது முடிந்தவுடன் வந்தனர்.

ஒரு தாய் தன் மகளை குட்டித் தூக்கத்திலிருந்து எழுப்ப நேரமாகவே இருவரும் கிளம்பி வரச் சற்று தாமதமானது. இப்படியே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சின்னக் காரணம் அவர்கள் வருகையை தாமதப்படுத்தியது. அவர்கள் எழு மணி இருபது நிமிடங்களுக்கு வருவதற்குப் பதிலாக ஐந்து நிமிடங்கள் தாமதமாக ஏழு மணி இருபத்தைந்து நிமிடங்களுக்கு சர்ச்சுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டு சர்ச் இடிந்து விழுந்தது. அனைவரும் அதிசயமாக உயிர் தப்பினர். ஒவ்வொரு சின்னக் காரணத்தை வைத்துத் தங்களை தாமதப் படுத்தியது கடவுளே என்று அவர்கள் நம்பினர்.

   இந்தச் சம்பவத்தைத் தன் நூலில் குறிப்பிட்ட வாரன் வீவர் அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பத்து லட்சத்தில் ஒரு தரமே அனைவரும் தாமதமாக வரக்கூடிய இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறக் கூடும் என்று வியந்து எழுதினார்.

    உலகில் உள்ள அனைத்துமே பிரபஞ்சத்துடன் ஒன்றி இருப்பதால் மட்டுமே இப்படிப்பட்ட தற்செயல் ஒற்றுமைகள் ஏற்படுகின்றன என்பது ஜங்கின் முடிவு. பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கின்றன என்று ஜங் நம்பினார். இதைத் தொடர்ந்து சீன முறையான் ‘ஐ சிங்’கை ஆராய்ந்த அவர் துல்லியமாக அனைத்தையும் இறுதி வினாடி வரை கணித்து செயல்களை உள்ளது உள்ளபடி ‘ஐ சிங்’ விளக்குகிறது என்றார்.  ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜோஸப் பிக்லாக் என்பவர் ஒரு தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாடி வீடுகளில் ஒன்றின் ஜன்னலிலிருந்து ஒரு குழந்தை தவறிக் கீழே விழுந்த்து. சரியாக அந்த விநாடியில் அங்கு வந்த பிக்லாக் அந்தக் குழந்தையைக் கையில் ஏந்திப் பிடித்துக் கொண்டார்.குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதில் இன்னொரு அதிசயமும் உள்ளது. ஒரு வருடம் கழித்து அதே பிக்லாக் அதே தெருவில் நடந்த போது அதே மாடிவீட்டிலிருந்து அதே ஜன்னலிலிருந்து அதே குழந்தை மீண்டும் கீழே விழுந்தது.பிக்லாக் இந்த முறையும் குழந்தையைப் பிடித்துக் கொண்டார். குழந்தை மீண்டும் ஒரு முறை உயிர் தப்பியது.      இதே போல ஏராளமான இரட்டையர்கள் வாழ்வில் சம்பவங்கள் ஒரே விதமாக இருந்ததையும் அவர்கள் மரணம் ஒரே சமயத்தில் நிகழ்ந்ததையும் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.      

                                                        ஜங் தனது வாழ்க்கை வரலாற்றில் இப்படிப்பட்ட அமானுஷ்யமான சம்பவங்கள் ஒருவர் வாழ்வில் நிகழவில்லை என்றால் அவர் நிச்சயமாக ஏதோ ஒன்றை இழந்து விட்டார் என்று தான் அர்த்தம் என்கிறார். ஒரு மர்மமான உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று கூறும் ஜங் தான் வாழ்ந்த வாழ்க்கையும் வாழ்ந்த விதமும் திருப்திகரமான ஒன்று என்று கூறித் தன் நூலை முடிக்கிறார். தனது வாழ்க்கை வரலாற்றை தனது சகா ஒருவரிடமும் அனிலா ஜஃபே என்ற பெண்மணியிடமும் கூறி பதிவு செய்திருக்கிறார் ஜங். சில அத்தியாயங்களை அவரே தன் கைப்பட எழுதிக் கொடுத்தார். நூலின் பெயர் Memories, Dreams, Reflections. வியப்பான பல நூறு சம்பவங்கள் அடங்கிய வித்தியாசமான விஞ்ஞானி ஜங்கின் இந்த சுயசரிதை அனைவரையும் நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும் ஒன்று!        

  ஜங் தனது பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வந்த வீட்டில் அதன் வாயில் கதவில் VOCATUS ATQUA NON VACATUS DEUS ADERIT என்று பொறித்து வைத்திருந்தார்.                                                                      இதன் பொருள்: கூப்பிட்டாலும் சரி, கூப்பிடாவிட்டாலும் சரி, கடவுள் இருக்கிறார்.    

                                                                                         அவர் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது சாஞ்சியில் புத்தர் உபதேசம் செய்த இடத்திற்கு அருகில் சென்ற போது அவருக்கு ஆச்சரியகரமான ஒரு உயரிய உணர்வு தோன்றியது.                                                      அர்த்தமுள்ள தற்செயல் ஒற்றுமைகள் மூலம் எங்கும் பரவியிருக்கும் பிரபஞ்ச மனம் பற்றிய தத்துவத்தை அவர் உலகின் முன் வைத்தார்.                        இதையே ஹிந்து மதம் அனைவரின் முன்னும் தொன்று தொட்டு வைத்திருக்கிறது.                                                                            நமது மதத்தில் கொடுக்கப்படும் ஒரு கூடுதல் தகவல் என்னவெனில் அனைத்துமே கர்ம பலன்களாலும் இயற்கை நியதிகளாலும் நிர்ணயிக்கப்பட்டு விட்டன என்பது உண்மை தான் என்றாலும் சாதுக்களின் சங்கமும் இறை வழிபாடும் தீய சம்பவங்களை மாற்றுவதற்கான அருமையான வழிகள் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தான்! இந்தத் தற்செயல் ஒற்றுமைகள் இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்றோ என்னவோ!

நன்றி, வணக்கம்!

***

tags- தற்செயல் ஒற்றுமை part 2, சம்பவங்கள்

LONDON CALLING (HINDUS) 26-4-2021 (Post.9537)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9537

Date uploaded in London – –26 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FOLLOWING PROGRAMMES WERE BROADCAST ON MONDAY 26-4- 2021

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER

SONG BY MRS ANNAPURANI PANCHNATHAN from London- 5 mts

SHANMATHA TALK SERIES- SAURAM-  SUN WORSHIP– BY TIRUCHY MR K GANESAN-15 MTS

BENGALURU MR .S NAGARAJAN’S TALK ON CO INCIDENCE AND CARL JUNG – PART TWO;  10 MINUTES

PERIAZVAR PASURAMS  BY MRS DAYA NARAYANAN from London- 5

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -6

TOTAL TIME- APPR. 50 MINUTES

xxxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;

DAYS- SUNDAYS AND MONDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME, 6-30 PM INDIAN TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast2642021