Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அபாயமான தீவிரவாதிகளின் கூட்டம்! ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு தேவை – 2
ச.நாகராஜன்
தப்லிகிக்கும் தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பு
ஃப்ரெட் பர்டன், ஸ்காட் ஸ்டீவர்ட், மும்தாஜ் அஹ்மத், ஷிரீன் கான் பர்கி (Fred Burton, Scott Stewart, Mumtaz Ahmad and Shireen Khan Burki) ஆகியோர் தப்லிகி ஜமாத்திற்கும் ஜிஹாதிஸமிற்கும் இடையே உள்ள தொடர்பை இப்படி விவரித்துள்ளனர் : “அவர்கள் தங்களுக்கிடையே ஒரே முக்கியமான கொள்கையையும் இறுதியான குறிக்கோள்களையும் (தார் இஸ்லாமை விரிவுபடுத்துவது மற்றும் உலகளாவிய காலிபேட்டை (Global Caliphate) உருவாக்குவதை) பகிர்ந்து கொள்கின்றனர்.“
இப்படியாக தப்லிகி ஜமாத் (TJ), அல் கொய்தா லக்க்ஷர்- இ- தொய்பா ஆகி ) ஜிஹாதி அமைப்புகளுக்கு ஒரு வளமான செழிப்பான ஆள்சேர்க்கும் பணியை மறைமுகமாகச் செய்கிறது.
அல்கொய்தாவை பாகிஸ்தான் முழுவதும் எல்லா மதரஸாக்களிலும் ஆள் சேர்க்கும் பணியிலும் மசூதிகளில் நிதி சேர்க்கும் பணியிலும், TJ உதவுகிறது.
அலெக்ஸ் அலெக்ஸியவ் (Alex Alexiev) கூற்றுப்படி “80 சதவிகித இஸ்லாமிய தீவிரவாதிகள் தப்லிகி அணியிலிருந்து வருகின்றனர். பிரெஞ்சு உளவுப்பிரிவு அதிகாரிகள் இவர்களை தப்லிகி ஜமாத்தின் முன்கூடத்தில் உள்ளவர்கள் என்கின்றனர்.”
பாட்ரிக் சுகாதியோ (Patrick Sukhadeo) கூறுகிறார்: “TJ ஒரு ரகசிய ஸ்தாபனம். அதில் உள்ள முக்கியமானவர்கள் அது எப்படி இயங்குகிறது என்பதைச் சொல்வதில்லை. அது அரசியல் சார்ந்த அமைப்பு இல்லை என்று சொல்லப்பட்ட போதிலும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் உள்ள அரசியல்வாதிகளுடனும் மற்றும் ராணுவத்தினரிடமும் அவர்கள் தொடர்பைக் கொண்டுள்ளார்கள்.
தப்லிகி ஜமாத் யுனைடெட் கிங்டத்தில் அப்பே மில்ஸ் மசூதியை (Abbet Mills Moasque) மிகப் பெரிய மசூதியாக விரிவுபடுத்துவதில் முயற்சி செய்து வருகின்றனது. இந்தத் திட்டம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவே, இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அமெரிக்க அரசாங்கம தப்லிகி ஜமாத்தை 2001 செப்டம்பர் முதல் மிகவும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தப்லிகி ஜமாத்தின் உபதேசங்களும் நம்பிக்கைகளும் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளில் சேர்வதற்கான அஸ்திவாரமாக அமைந்துள்ளது என்கின்றனர் அமெரிக்க அதிகாரிகள்.
Who is Vedamurti Devavrat Mahesh Rekhe? 19-Year-Old Vedic Scholar whom PM Modi praised for…
Vedamurti Devavrat Mahesh Rekhe, a 19-year-old Vedic scholar from Varanasi, has successfully completed the Dandakrama Parayanam, a challenging recitation of 2000 mantras in Shukla Yajurveda in 50 days without interruption. PM Modi praised him for his remarkable achievement.
Indian culture is as deep as its thousands of years old history with ancient vedas, puranas and other scriptures detailing the many ways of life. A young Indian man has drawn from one of the most sacred Sanskrit text, Shukla Yajurveda, to achieve a remarkable feat even Prime Minister Narendra Modi praised him for.
Indian culture is as deep as its thousands of years old history with ancient vedas, puranas and other scriptures detailing the many ways of life. A young Indian man has drawn from one of the most sacred Sanskrit text, Shukla Yajurveda, to achieve a remarkable feat even Prime Minister Narendra Modi praised him for.
Vedamurti Devavrat Mahesh Rekhe, a 19-year-old Vedic scholar from Varanasi, has successfully completed the Dandakrama Parayanam, one of the most challenging recitations from Shukla Yajurveda, also known as the Vajasaneyi Samhita and one of the two main branches of the Yajurveda, one of the four Vedas. Rekhe is garnering immense praise countrywide for his rare achievement while it marks a historic moment for followers of Vedic tradition.
The young scholar shares the deep devotion to vedic tradition with his father and guru, Vedabrahmasri Mahesh Chandrakant Rekhe who is one of the top Vedic authorities and the chief examiner of the Shukla Yajurveda Madhyandina branch. The young prodigy went through years of tough training. The father-son duo, with their efforts and contribution is bringing the ancient Hindu tradition back to life as only a handful of masters have dedicated their life in living the ideals of Vedas.
Rekhe has completed the Dandakrama Parayanam, a recitation consisting of 2000 mantras of the Shukla Yajurveda’s Madhyandini branch, in 50 days without a pause. The recitation includes various Vedic verses and sacred words which he recited flawlessly with complete discipline.
How has PM Modi praised him?
Sharing his overwhelming emotions for the act on X, PM Modi said, “What 19 year old Vedamurti Devavrat Mahesh Rekhe has done will be remembered by the coming generations! Every person passionate about Indian culture is proud of him for completing the Dandakrama Parayanam, consisting of 2000 mantras of the Shukla Yajurveda’s Madhyandini branch, in 50 days without any interruption. This includes several Vedic verses and sacred words recited flawlessly. He embodies the finest of our Guru Parampara.”
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Words beginning with DA
தத்தாத்ரேயர்
அத்ரி முனிவருக்கும் அனுசுயா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் .பிரம்மா , விஷ்ணு , சிவன் மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் தத்தாத்ரேயர் ஆவார். இவரைத் திரிமூர்த்தி எனவும் அழைப்பர். இவரைத் திருமாலின் வடிவமாகவும் கருதுகின்றனர். கார்த்தவீரிய அருச்சுனன் இவரிடம் வரம் பெற்றான் தத்தா ,’தத்தகுரு என்பன இவருடைய மற்ற பெயர்கள். அவர் மூன்று தலைகள் , ஆறு கைகளுடன் உள்ளார். இது பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரைக் குறிக்கின்றன; ஆறு கைகளில் விஷ்ணுவின் சங்கு,சுதர்சன சக்ரம், பிரம்மாவின் ஜபமாலா, தாமரை சிவனின் திரிசூலம் டமருகம் உள்ளன . நான்கு நாய்கள் மற்றும் ஒரு பசு அவரைச் சுற்றி காணப்படுகின்றன; விலங்குகளிடம் அன்பாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார், மகாராஷ்டிர மஹான் துக்காராம், இவரைப் போற்றிப்பாடியுள்ளார்
Dattatreya
Son of Atri and Anasuya (anasuuyaa). A saint in whom a portion of Brahma, Vishnu and Shiva was incarnate. Shown with three faces of the three Gods, surrounded by Four Dogs (four vedas). He had three sons Soma, Datta and Durvasa, to whom also a portion of the divine essence was transmitted. He was the patron of Kartavirya and gave him a thousand arms. (He can be compared with Egyptian and Greek Gods. The Rosetta Stone (which helped us to decipher the Hieroglyphs) compares Egyptian God Thoth to the Greek God Hermes Trismegistus.)
தாது -தாது பந்திகள்
வடநாட்டிலுள்ள வைஷ்ணவ இயக்கம் . 400 ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சிலிருந்து பருத்திக்கொட்டைகளைப் பிரிக்கும் தொழிலாளி தாது தயாள் துவக்கிய இயக்கம் ராஜஸ்தானில் பரவியது அவரைப்பின்பற்றுவோர் தாது பந்திகள் எனப்படுவர். வெள்ளை நிறத்தொப்பியையும் ஜெப மாலையையும் இவர்கள் கொண்டு செல்கிறார்கள் . குஜராத்தில் பிறந்து ராஜஸ்தானுக்குச் சென்றதால் இன்றும் ராஜஸ்தானில் இவரது சீடர்கள் உள்ளார்கள். அவர் சுமார் 5000 பக்திப்பாடல்களை இயற்றினார்.
Dadu- daadhu
The founder of a Vaishnavite sect who taught that bhakti/devotion is more efficacious than subjugation of the passions, charity or knowledge. Dadu was originally a cotton cleaner in Ajmer; he lived around 1600 CE. His followers are called dadu-panthis. They wear a white cap and carry a rosary.Born in Gujarat, Dadu moved to Rajasthan. Dadu’s compositions were recorded by his disciple Rajjab and are known as the Dadu Anubhav Vani, a compilation of 5,000 verses. Another disciple, Janagopal, wrote the earliest biography of Dadu.
***
தக்கோபா –புத்தரின் உடல் பாகங்கள் அல்லது சாம்பல் அல்லது பயன்படுத்திய பொருட்களைச் சுற்றி எழுப்பப்பட்ட கூம்பு வடிவிலான கட்டிடம்
Dagoba
A conical structure surmounting relics of buddha.
****
தைத்யர்கள், தானவர்கள்
இருவரும் அசுரர் குலத்தினர் ;தேவர்களுக்கும் கடவுளர்க்கும் எதிரிகள். காஸ்யப மகரிஷிக்கும் திதி என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்கள் தைதயர்கள் ; தாய் வழிப்பெயர்: திதி – தைத்ய . தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்தபோது தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளியே வந்தார் ; அதைப்பறிக்க தைத்யர்கள் முயன்ற போது விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அவர்களது கவனத் தைத் திசை திருப்பினார்
தானவர்கள்: காஸ்யப மகரிஷிக்கும் தணு என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்கள் . தங்கள் பலத்தைத் தவறான வழிகளில் பயன்படுத்தினர். பாதாள லோகத்தில் வசித்தனர்.
Daityas and Danavas – daityaas, daanavaas
Demons ; they are enemies of gods. They are descendants of Kashyapa Maharishi and Diti. From Diti, the word Daitya is derived, a matronymic name. At the churning of the milky ocean to bring out Amrita / ambrosia, they tried to seize the cup of amrita from the hand of Dhanwantari. But Lord Vishnu assuming a beautiful female form fascinated and deluded them. Devas got the Amrita.
Danavas – enemies of god/devas, who incapable of steadiness and animated by ambition, put forth their strength against the gods; a class of mythological giants and inhabitants of underworld/ Patala . Daityas and Danavas are generally associated, and are hardly distinguishable
***
தக்ஷன்
பிரம்மாவிடமிருந்து பிறந்தவன் ; அவனுக்கு 27 பெண்கள்; அவர்கள் அனைவரும் சந்திரனை மணந்து நட்சத்திரங்கள் ஆயினர் . பிரசுத்தி என்னும் பெண் மூலம் பிறந்த 24 பேரில் ஒருத்தி சதி ; அவளை சிவ பெருமான் மணந்தார். தக்ஷன் நடத்திய வேள்விக்கு சிவனுக்கும் சதிக்கும் அழைப்பிதழ் அனுப்பவில்லை ; இருந்த போதிலும் சதி அந்த யக்ஞத்துக்கு வந்து தக்ஷனை கேள்வி கேட்டாள் ; அவளை அவமானப்படுத்தி கணவனையும் திட்டியதால் அவள் யாக குண்டத்தில் விழுந்து உயிர்த் தியாகம் செய்தாள்; விஷயத்தைக் கேள்விப்பட்ட சிவ பெருமான் அங்கு வந்து வீர பத்ரனைப் படைத்து யாகத்தை அழித்தார் . வீரபத்திரன் தட்சனின் தலையை வெட்டி யாக குண்டத்தில் போட்டு அவனுக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தினார் இவையனைத்தும் தேவாரப்பாடல்களிலும் பாடப்படுகின்றன.
Daksha
A celebrated Prajapati, born from the thumb of brahma. He had twenty-seven daughters and Chandra /moon married them. They are the 27 stars in the heaven. He had another 24 daughters through his wife Prasuti. One of his daughters Sati was married to lord Shiva. when Daksha organised a great sacrifice/ yajna neither shiva nor sati was invited. However, Sati attended it and sacrificed herself in the fire pit following an argument. Shiva came and destroyed Daksha’s sacrifice. Vira Bhadra created by Shiva cut off the head of Daksha and threw it into the fire pit. Shiva replaced Daksha’s head with that of a goat.
***
தமம்
தன்னையடக்கல் ; புலன் இன்பங்களில் ஈடுபடாமல் மனத்தைக் கட்டுப்படுத்துதல் ; மன உறுதி; வானப்ரஸ்தாஸ்ரமத்துக்குப் போவோருக்கான பத்து யமங் களில்/கட்டுப்பாடுகளில் இதுவும் ஒன்று.
Dama
Dama (दम).—[dam bhāve ghañ]
1) Taming, subduing.
2) Selfcommand, subduing or curbing the passions, selfrestraint; Mahābhārata (Bombay) 1.1.2; Bhagavadgītā (Bombay) 1.4; (nigraho bāhyavṛttīnāṃ dama ityabhidhīyate).
3) Drawing the mind away from evil deeds or curbing its evil propensities; (kutsitātkarmaṇo vipra yacca cittanivāraṇaṃ sa kīrtito damaḥ).
4) Firmness of mind,
Dama (दम) refers to one of the ten Yamas (disciplines) prescribed for forest dwelling, as mentioned in the Vaikhānasasmārtasūtra
***
தமயந்தி
காதல் கதைக்கும் கற்புக்கும் இலக்கணமாகத் திகழும் இளவரசி. விதர்ப்ப நாட்டு மன்னன் பீமனின் மகளான தமயந்தி, நிடத நாட்டு மன்னனான நளன் மீது காதல் கொண்டு, அன்னப்பறவை மூலம் தூது அனுப்பினாள். மன்னன் கூட்டிய மன்னர்கள் கூட்டத்திலிருந்து ஸ்வயம்வரம் மூலம் நளனைத் தேர்ந்தெடுத்து மணந்தாள் . அங்கு நளன் போலவே வேடமணிந்து வந்த தேவர்களையும் புறக்கணித்தாள்; ஆயினும் திருமணத்துக்குப் பின்னர் சொல்லொணாத் துயரம் அனு பவித்து மீண்டும் நளனை அடைந்தாள். மஹாபாரதத்திலும் புராணங்ககளிலும், தமிழ்ப் பாடல்களிலும் இவர்களுடைய நீண்ட கதை உள்ளது.
Damayanti
The daughter of Bhima, king of Vidharba. She married Nala, king of Nishada through Swayamvara/ princess selecting her own husband from the gathering of kings. Both of them were separated and reunited after a lot of sufferings. Damayanti rejected even the Devas who came dressed exactly like Nala. Her great story is available in Mahabharata, Puranas and Tamil poems.
***
தாமோதரன் – கிருஷ்ணனின் பெயர்களில் ஒன்று. வளர்ப்புத் தாயாரான யசோதை அவனுடைய உதரத்தில்/ வயிற்றில் தாமத்தைக் / கயிற்றைக் கட்டியதால் தாமோதரன் எனப்பட்டான் தாம+ உதர= தாமோதர. இந்தப் பெயர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புற நானூற்றுப் புலவரின் பெயராக வந்தது குறிப்பிடத்தக்கது.
Damodara
A name given to Krishna because his foster mother Yasodha tried to tie him up with a rope/ dama round his belly/udara
Daama+Udara= Damodara.
This name is one of the names of poets in 2000 year old Tamil anthology Purananuru.
***
தண்டகாரண்யம்
மிகவும் பரந்து விரிந்த இந்தக் காடு (ஆரண்யம்) கோதாவரி நதி தீரத்தில் உள்ளது. இங்கு ஒரு பர்ணசாலை (இலை, தழைகளால் ஆன குடிசை) அமைத்து ராமபிரான் வாழ்ந்து வந்தார். ராமாயணத்தில் மிகவும் பேசப்படும் இந்தக் காட்டில்தான் அரக்கன் ராவணன், சீதா தேவியைத் தூக்கிச் சென்று இலங்கையில் சிறை வைத்தான். இதன் வருணனை வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.
நிறைய வன விலங்குகளும் ராக்ஷஸர்களும் ஆ ஸ்ரமம்ங்களும் இருந்த காட்டுப்பகுதி இது.
Dandaka aranya
Dandaka forest is an extensive forest near river Godavari in South India. It lies between Rivers Godavari and Narmada.It is frequently mentioned in the Ramayana. Rama was living in a hermitage in this forest when Ravana carried off Sita devi. According to Ramayana it was full of wild beasts and Rakshasas (demons). Hermitages were also deep inside the forest.
Dandaka + Aranya= Dandakaaranya.
***
தண்டநீதி (தண்டனை கொடுத்தல்)
பல பிரச்சினைகளை சமாளிக்க நீதி சாஸ்திரம் நான்கு உபாயங்களை/ உத்திகளைக் கூறுகிறது; அவை சாம-தான-பேத-தண்ட என்ற நான்கு வழிமுறைகள்.
சாம – அரசர்கள் சமாதானம் பேசி அமை தியாகப் பிரச்சினைகளைத் தீர்த்தல்;
தானம் – பரிசுகள், பணம் முதலியன கொடுத்து எதிரிகளை சமாளித்தல்;
பேதம் – எதிரிகளிடையே வேற் றுமையை/ மோதலை உருவாக்கி பலவீனப்படுத்தல்;
தண்டம் – எதிரிகளுக்கு கடுமையான தண்டனை கொடுத்தல்.
Danda niti (neethi)
Rod of Punishment. Danda means Rod, Stick. Hindu kings use fourfold methods to solve internal and external problems; they are four – sama, dana, bheda, danda.
Saama – peaceful way; Dhaana-pacifying the opponents by gifts, donation, prizes; Bheda- creating division among enemies or opponents and weaken them and Danda- punishing the enemies (with rod).
To be continued…………………..
Tags:- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL; இந்துமத கலைச்சொல் அகராதி-22, Dattatreya, Dandaka, Damayanti
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Jvaradeva ஜ்வரதேவேர்
Jvaradeva is a form of Lord Shiva. He destroyed Bhasmaasura . He is described in the Agamas as having three legs, three heads nine eyes and six arms. His images are found in many shiva temples including Madurai, Tirupparankundram, Mayiladuthurai, Kumbakonam, Tirunelveli, Bhavani etc.
Jvaradeva or Jurakareśvara is depicted in the Adi Kumbeswarar Temple (Ādi Kumbheśvara) in Kumbakonam (Kumbhakonam), representing a sacred place for the worship of Śiva.—Jvvradeva is a three-headed image of Śiva with four hands. The three heads include two animal heads emerging laterally from behind the human head. The head on the right is that of a lion while the other one seems to be that of an antelope. He holds triśūla (trident) in the right hand and small vessel in the left hand.
Jvāra-deva is also depicted in the Meenakshi Temple in Madurai . Jvāra Deva is a three-headed image of Śiva with four hands. At present only two hands remain which hold triśūla (trident) in the right hand and small vessel in the left hand. When seen as a dancer, the hasta held in the hand of Jvāra Deva is somewhat muṣṭi or kapittha while holding the trident and kuvi-patāka/alapadma while holding the kamandalu. There were specific mantras and rituals to propitiate Jvara in case the deity afflicted any individual.
Later Vaishnava texts like Harivamsa gives a sectarian view of Krishna encounter with Jvara deva wherein the leader of the Vrishnis created a Narayana-jvara to fight against the original Jvara deva.
In the Vedic hymns to Rudra he is often regarded as the greatest of healers due to his perfect control over all disease-causing entities. Additionally, he was identified with the Self which is the curer of all maladies. He is described Beshajam and Bishak, that is medicine and doctor.
Appar also sings about it in Vaitheeswaran Koil 1400 years ago. He rightly composed this verse in Vaitheeswaran temple. Vaitheeswaran means Mr Doctor or Me Medicine man.
Here is the Tevaram verse :
Alas, alas I have wasted many, many days not hailing
Him of Pullirukkuvelur! He is the Lord whom Devas
Hail with a thousand names; unto the servitors who part not
From Him. He secures the wealth of salvation; becoming
Mantra, Tantra and Medicine too. He cured the malady
Well-nigh impossible to cure; He is the martial one who held
The strong bow with which He gutted with fire
The triple hostile towns.
Pullirukkuvelur= Now called Vaitheeswaran Koil near Mayuram
The verse is in the Sixth Tirumurai Tevaram of Appar.
There is a separate shrine for Dhanvanari in this temple. He is the Father of Medicine. He taught Ayurvveda to Charaka who gave us the book Charaka Samhita. Dhanwantari appeared with the Cup of Amrita when Devas and Asuras churned the Milky Ocean to get ambrosia.
ஜ்வரதேவேர் சிவனின் ஒரு வடிவம் ஆகும் . பஸ்மாசுரனை அழிக்க சிவன் எடுத்த ரூபம் இது ஆகம நூல்களில் இவருடைய வடிவம் வருணிக்கப்படுகிறது . அவருக்கு மூன்று தலைகள் , மூன்று கால்கள், ஆறு கைகள், ஒன்பது கண்கள் உள்ளன . சில இடங்களில் கைகளில் உள்ள பொருள்கள் மாறு படுகின்றன
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு என்ற இடத்தில் அமைந்துள்ள வீரபத்ரேஸ்வரர் கோயில், திருநெல்வேலி , மதுரை, திருப்பரங்குன்றம், , மயிலாடுதுறை, பவானி உள்பட எண்ணற்ற சிவன் கோவில்களில் ஜ்வரதேவர் சன்னதி உள்ளது.
கும்பகோணத்தில் ஆதி கும்பேஷ்வரர் கோவிலிலும் இவர் சிலை உள்ளது. மூன்று தலைகளில் இரண்டு தலைகள் பிராணிகளுடையவை ; சிங்கம், மான் ஆகியவற்றின் தலைகள் மனித தலைக்கு இரு புறமும் நீட்டிக்கொண்டு இருக்கின்றன. ஒரு கையில் தீர்க்க கலசம் இன்னொன்றில் திரிசூலம் காணப்படுகின்றன.
சிவபெருமான் உடலுக்கு வரும் நோய்களையும் பிறவிப்பிணி என்னும் நோயையும் தீர்ப்பவர் என்று கருத்து வேதத்திலேயே உள்ளது; அவரை டாக்டர் என்றும் மருந்து என்றும் அழைக்கும் பிஷக், பேஷஜம் என்ற சொற்கள் யஜுர் வேத ருத்ர மந்திரத்திலேயே வருகிறது வைத்தீஸ்வரன் என்ற அவருடைய பெயரும் இதை மெய்ப்பிக்கிறது.
அவருக்கு ஏன் இத்தனை கால், கை ,தலை, கண்கள் என்ற விளக்கம் தெரியவில்லை. அவருக்கான மந்திரங்களும் வழிபாட்டு முறைகளும் உள்ளன
ஜுரம் என்றால் காய்ச்சல்; ஆகவே நோய்களைத் தீர்ப்பதற்கு இவரை கஷாயம் வைத்து வழிபடுவதும் உண்டு.
பிற்கால வைஷ்ணவ நூலான ஹரிவம்சத்தில் கிருஷ்ணன் உருவாக்கிய ஜூர தேவர் இவருடன் சண்டையிட்டதாகவும் கதைகள் இருக்கின்றன.
***
அப்பர் காட்டும் டாக்டர் சிவ பெருமான் இதோ
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
பொருள் :
ஆயிரம் நாமங்கள் பாடி தேவர்களாளல் போற்றப்பட்ட பெருமானை,
கிடைக்கப்பெறாத செல்வமாகிய வீடு பேறு இன்பத்தை தனது அடியவர்களுக்கு கிடைக்க செய்பவனை,
தீராத நோய்களையும் தீர்ப்பவனை, திரிபுரங்கள் திக்கெட்டும் எரிகையில் போரிட்டு அதனை வென்றவனை,
வைத்தீஸ்வரனை இத்தனை நாள் போற்றிப் பாடாமல் இருந்து விட்டேனே என்று புலம்புகிறார் அப்பர்.
(புள்ளிருக்கு வேளூரான்- வைத்தீஸ்வரன் கோவில் மூலவர் ; தாயார் : தையல் நாயகி)
உலக மருத்துவத்தின் தந்தையான தன்வந்தரிக்கு இந்தக்கோவிலில் தனி சந்நிதி இருப்பதும் மருத்துவத் தொடர்பைக் காட்டுகிறது . கடலைக் கடைந்தபோது அமிர்த கலசத்துடன் தோன்றிய அவர்தான் ஆயுர் வேதத்தைக் கற்பித்தார் . அவர் சரகருக்கு இதை உபதேசிக்கவே அவர் நூலாக அதை நமக்கு அளித்தார்.
–subham—
Tags- Dhanwantari Hinduism through 500 Pictures in Tamil and English-29, படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்- 29 ,Jvaradeva , ஜ்வரதேவேர், Vaitheeswaran Koil
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அபாயமான தீவிரவாதிகளின் கூட்டம்! ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு தேவை – 1
ச.நாகராஜன்
ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு தேவை. ஏனெனில் அவர்கள் சகிப்புத்தன்மை என்ற போலியான ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டு சோம்பேறிகளாகவும், தூங்குமூஞ்சிகளாகவும், எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் “ மிக மிக பரந்த மனப்பான்மை” கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதை மாற்ற வீட்டுக்கு விழிப்புணர்வுள்ள ஒரு ஹிந்து வீரன் வேண்டும். இவன் அர்ஜுனனைப் போலத் திகழ வேண்டும். அப்போது தான் ஹிந்து. மதம் இந்த நாட்டில் இருக்கும். இந்த பாரத தேசம் ஹிந்து ராஷ்ட்ரமாக ஆக முடியும்.
இப்படிச் சொல்பவர்களை ஹிந்து பைத்தியங்கள் என்று கூறும் நிஜப் பைத்தியங்கள் நிறைய உண்டு.
சில செய்திகளை இவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
6-9-2025 தேதியிட்டு க்ளோபல் ஹிந்து ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் (Global Hindu Heritage Foundation) ஆந்திர முதல் அமைச்சருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.
அதில் அபாயகரமான கூட்டமான Deviant Tablighi Jamaat கூட்டம் திருப்பதி அருகே கூடுவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறது.
திருப்பதி ஜில்லாவில் சந்திர மண்டலாவில் அகலரலா கிராமத்தில் தப்லிகி இஜிதிமா (Tabligi Izithima) ஒன்று நடத்தப்பட இருப்பதை இது எதிர்த்து அனுமதி வழங்கக்கூடாது என்று கடிதம் அனுப்பி இருக்கிறது.
தப்லிகியின் நோக்கம் என்ன?
Mission of Tabligi! என்ன?
Tabligi Izithima என்றால் அர்த்தம் என்ன?
போதகர்களின் கூட்டம் (Gathering of Preachers) என்பதே இதன் அர்த்தம்.
பிரச்சாரக் குழு அல்லது போதனை செய்யும் குழு என்றும் அர்த்தம் கூறலாம்.
இந்த தபிலிகி ஜமாத் குரான் மற்றும் ஹடித் உரைகளைப் பின்பற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று.
இஸ்லாமிய இறைதூதரான நபிகள் நாயகம் அவர்களின் உபதேச உரைகளின் படி வாழ்வதற்காக திரும்பி வந்து உபதேசத்தைக் கடைப்பிடிக்க இது ஊக்குவிக்கிறது. அது மட்டுமின்றி தவா (DAWAH) என்னும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அறைகூவல் விடுக்கவும் இது ஊக்குவிக்கிறது.
இறைதூதர் முகம்மது நபி அவர்களின் முக்கிய போதனைகளை மனதில் கொண்டு மசூதிகளுக்குச் சென்று பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொள்ளவும் உபதேச உரைகளைக் கேட்கவும் இது ஞாபகப்படுத்துகிறது.
ஒவ்வொரு செயலும் அல்லாவை சந்தோஷப்படுத்த வேண்டும், ஒருவனைத் திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட இந்த வழியில் ஒரு சிறிதளவு விலகினாலும் கூட அல்லாவின் கடுமையான கோபத்திற்கு ஆளாவார். தனது குழுவில் ஒரு அங்கத்தினராக அவரை ஏற்றுக் கொள்ளமாட்டார்.
அதாவது குரானின் உரைப்படி செயலாற்ற இந்தக் குழு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.
சரி குரான் என்ன சொல்கிறது என்றும் அஹ்லே சுனா நால் ஜமாத்லபாஹேன் ஜமியா மஜ்ஜித் ட்ரஸ்ட் (AHLE SUNNAH WAL JAMATHLABAHEEN JAMIA MASJID TRUST) என்ன சொல்கிறது என்றும் பார்ப்போம்.
பாவங்களை மன்னிக்கச் சொல்லும் இந்த மஜ்ஜித் டிரஸ்டின் அறிவுரை குரானில் எழுதப்பட்டிருப்பதற்கு நேர் எதிராக உள்ளதாகும்.
அதாவது அவர்கள் தபிலிகியின் உண்மையான நோக்கத்தைச் செய்வதற்கு முனைபவர்கள் அல்ல.
இந்தக் கூட்டம் அரசையும் மக்களையும் தவறான வழியில் கொண்டு செல்வதற்கான ஒரு உள்நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்தக் கூட்டம் குழுமுவதற்கான உண்மையான காரணத்தை இது மறைக்கிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 37
Item 222
Akanānūru 17 composed by poet Kayamanār has interesting information about Tamil girls’ games and a few similes.
The poet’s name itself is interesting. We don’t know his given name. It is only a name given by the compilers of Akananuru anthology. It means Tank or water source. Because he has used this Kayam/water source in one of his poems, they named him Mr Tank or Mr Lake.
***
223
We come across the games played by Tamil girls 2000 years ago. They played ball games and jugglery with bean seeds.
Ball game originated in India. They made balls with flowers or cloth. It is like our ball badminton. But they did not use a net; they simply played throw and catch and jugglery.
With the big seeds from the bean plants, they played jugglery. Depending upon the skill of the player they used more seeds; throwing them up and catching them before they fell on the ground and at the same time more seeds are picked up from the ground. This type of jugglery is seen in Covent Garden in London and other town centres around the world.
***
224
The similes used by the poet is also interesting. The flowers from the silk cotton tree (Ilavam in Tamil) falling on the ground in the gusty wind are compared to the flame in the mud lamp. And the bare tree left with a few flowers is compared to a few stars in the morning sky. It is true that we see bright planets like Venus and Jupiter and bright stars like Sirius, Betelgeuse or Canopus when the sun is rising in the horizon.
Other scenes with salt vendors carts, Ya trees with torn barks are not uncommon. But the poet talks about jewels as well. Anklets in girls’ feet, bangles in her friends’ wrists.
***
225.
Last but not the least poet appreciates the courage of the teenage girl saying that she is too intelligent for her age. The reason for this is earlier she complained pain in her limbs when she played ball game and bean seed game. Now she is ready to run away with a youth along the arid, desert like region what Tamils call Paalai land.
சிறுமுதுக்குறைவி too intelligent for her age :வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும் throwing ball game; இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்juggling with large bean seeds
***
226
Akanānūru 18, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero
Akanānūru 18 composed by the most celebrated Sangam poet Kapilar has not much interesting details. The message of the poem is that the lover should come and meet the lady love in daytime instead of dangerous nighttime. If something happens to him she will die and we, her friends, will be in agony. And the hazards in his way are described graphically: flooded wild river in the mountain, floods dragging rut elephants, but courageous wild boar crossing it in spite of crocodiles lying on the rocks. When he comes to the meeting place, we are shown beautiful flowering trees with honeycombs
Indirectly saying ‘get married soon without taking great risk’. Kapilar is very good in portraying nature.
***
227
Akanānūru 19 composed by Porunthil Ilankeeranār has nothing new except a comparison between the owl and makuli drum. Both emit similar sounds. One more point should be noted. The owls don’t hoot without meaning; they speak with meaning like drums, says the poet. The hero speaking to himself about leaving his wife on a business trip; we come across Makuli drum, a musical instrument.
***
228
Speaking Drums
African tribes use drums to convey messages. Different types of beating convey different messages for their tribe at a distance. Here also Tamil commentators add such messages in the commentary for this verse. Tamil commentators hear the drums saying குத்திப்புதை, சுட்டுக்குவி meaning stab and bury; burn and pile up (see Manikkanar commentary in Varthamanan Pathippakam publication)
Three Old Articles written by me from Year 2014
தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் செய்திகள்
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1386; தேதி நவம்பர் 3, 2014.
தமிழில் முரசு, பணை, முழவு, பறை பற்றிய பல சுவையான செய்திகள் இருக்கின்றன. முதலில் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியச் செய்திகளைக் காண்போம்.
1.அரசனுக்குப் பத்து அடையாளச் சின்னங்கள் உண்டு. அதில் ஒன்று முரசு. சங்கத் தமிழ் நூல்களில் முரசுடை மூவேந்தர் என்று சேர சோழ பாண்டியர் பாராட்டப்படுவர். மாணிக்கவாசகப் பெருமான் சிவபெருமானை அரசனாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் பாரதியார், பாரத மாதாவை ராணியாக வைத்துப் பாடிய திருத் தசாங்கத்திலும் முரசு பற்றிய பாடல்களைக் காணலாம் (தச + அங்கம் = தசாங்கம்)
இன்பான் மொழிக் கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பான் முழங்கு முரசு இயம்பாய் — அன்பாற்
பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை (திருத் தசாங்கம், திருவாசகம்)
2.கோட்டை வாயில் கொத்தளங்களில் முரசுகள் வைக்கப்படிருந்தன. கம்ப ராமாயண பால காண்ட, திரு அவதாரப்படலத்தில் கம்பனும் அயோத்தி மாநகர கோட்டையின் மேல் முரசுகள் முழங்கியதைப் பாடினன்.
3.முரசுகள் மூவகைப்படும்: கொடை முரசு, படை முரசு, மண முரசு என்னும் மூவகை முரங்களும் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கு மாகலின் முரசு முழங்கு நெடுநகர் எனப்பட்டது என்று பதிற்றுப்பத்து பாடலுக்கு (2-7) உரை எழுதிய மி.பொன். இராமநாதன் செட்டியார் கூறுவர்.
4.போரில் முழக்கப்படும் வெற்றி முரசினைத் தெய்வமாகவே கருதி வீரர்கள் வழிபட்டதை சங்க இலக்கிய நூல்களில் பரக்கக் காணலாம். வீரர்கள் தாம் பெற்ற வெற்றி மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டே சென்று முரசை வழிபாட்டனர் என்று பதிற்றுப்பத்து (2-17-5/10) கூறும்
5.முரசில் உறையும் தெய்வத்துக்கு மாமிசம், ரத்தம், சோறு கலந்த பிண்டம் பலியாகத் தரப்பட்டது. இது பற்றி பதிற்றுப்பத்து (3- வரி30/39) உரையில் செட்டியார் அவர்கள் கூறுவதாவது:- தன் படை வீரர்கட்கு கடிய சினம் தோன்றுமாறு பேரொலியுடன் உச்சரிக்கப்படும் மந்திரத்தால் அரிய வெற்றியினைத் தரும் மரபுடைய முரசுறைக் கடவுளை வணங்கும் பொருட்டு, அக்கடவுளை வழிபடுவோன் பெறுதற்கரிய பிண்டத்தினைத் தன்கையில் ஏந்தி நின்றான். அப்பிண்டத்தைக் கண்டு கொடிய கண்களையுடைய பேய்ப் பெண் கைபுடைத்து நடுங்கினாள். அப் பிண்டம் போன்றே இரத்தம் கலந்த, நிறைந்த கள்ளினையுடைய பெரிய பலியினை எறும்பும் மொய்க்காது. பருந்தும் காக்கையும் மட்டுமே உண்ணும்.
6.முரசு வைக்கப்படும் கட்டில் புனிதமானது. மோசிகீரனார் என்ற சங்கப் புலவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர அரசனைப் பாடி பரிசில் பெற வந்தார். வந்த களைப்பில் முரசுக் கட்டிலில் படுத்து உறங்கிவிடார். இந்தக் குற்றத்துக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆயினும் புலவரின் நிலைமை கண்ட மன்னன் அவருக்கு கவரி வீசி மேலும் நன்றாகத் தூங்க உதவினான். வறுமை கண்டு மனம் இறங்கி அவருக்குப் பரிசு கொடுத்தான் என்று சங்க இலக்கியம் (புறம்.50) மூலம் அறிகிறோம்.
7. முரசுக்குப் போர்த்தும் தோல் வீரம் மிகுந்த காளை மாட்டின் தோலாக இருக்க வேண்டும் என்பது தமிழர் கொள்கை புலியைக் கொன்ற காளை மாட்டின் தோலை வைத்து முரசு தயாரிப்பர். புனை மருபு அழுந்தக் குத்திப் புலியொடு பொழுது வென்ற கனை குரல் உருமுச் சீற்றக் கதழ் விடை (காளை) உரிவை (தோல்) போர்த்த துனை குரன் முரசத் தானை (படை) – என்று சிந்தாமணிச் செய்யுள் கூறும்.
8.இனி ஆ.சிங்காரவேலு முதலியார் அபிதான சிந்தாமணி எனப்படும் தமிழ் என்சைக்ளோபீடியாவில் (கலைக்களஞ்சியம்) சொல்லும் சுவையான செய்திகளைக் காண்போம்: வீர முரசு, நியாய முரசு, தியாக முரசு என்று முரசு, மூன்று வகைப்படும். இதனை ‘’இமிழ் குரல் முரசு மூன்றுடனாளும் தமிழ் கெழு கூடல்’’ என்பதால் அறிக. இதனுள் வீர முரசினை நீராட்டிக் கடலேற்றி ஒலி நெடும் பீலியும், ஒண் பொறி மணித்தாரும் (மயில் தோகை + மாலை ), பொலங் குழை உழிஞையும் பொலியச் சூட்டி ( உழிஞைப் பூ) குருதிப் பலியீந்து (ரத்தம் கலந்த சோறு) பூசித்தல் பண்டைய வழக்கு (புறநானூறு பாடல் 50).
9. புறப் பொருள் வெண்பா மாலையில் முரசவாகை என்னும் துறை — பலியைப் பெறும் முரசு பற்றிக் கூறும் துறை என்றும் —பொன்னால் செய்த உழிஞை அணிந்து ஆடு வெட்டி பலி கொடுக்கும் முரசின் தன்மையைக் கூறும் துறை முரச உழிஞை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
.
வள்ளுவர் யார்:–
10.வள்ளுவர் யார்:– திருக்குறளை யாத்து உலகப் புகழ்பெற்ற — தமிழுக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்த — வள்ளுவர், பறை அறிவிக்கும் ஜாதியைச் சேர்ந்தவர் என்று பழைய நூல்கள் பகரும். இது பற்றி சிங்கார வேலு முதலியார் (அபிதான சிந்தாமணி) கூறுவதாவது: பழங்குடியினரில் பாணரை அடுத்து திராவிடரால் மதிக்கப்படவர் இவ்வகுப்பினர். இவர் அரசர் பால் கருமத் தலைவராயும், யானை மேலிருந்து முரசு அறைந்து அரசாணை சாற்றுவோராயும் (அதாவது அரசரின் உத்தரவுகளை யானை மீது ஏறிச் சென்று அறிவிப்போர்) விளங்கினர். இக்குடியினர் இன்றும் உளர்.
இவர் பறையில் சற்று உயர்ந்தவர். இவர்கள் பறையர்களுக்குப் புரோகிதர்கள்— இவர்கள் பிராமணர்கள் புரோகிதர் ஆகாமுன் பல்லவ அரசர்களுக்குப் புரோகிதம் செய்திருந்தவர்கள். இவர்களில் சிலர் புரோகிதம் செய்தும் சோசியம் சொல்லியும் வாழ்கிறார்கள். இவர்களிர் சிலர் தாசிரியராகவும் பூணூல் தரிப்பவராகவும் இருப்பர். இவர்களில் லிங்கதாரிகளும் உண்டு. இவர்களில் இரண்டு பிரிவுகள்: -அறுபது கக்ஷி, நாற்பது கக்ஷி. முதல் கூறியவன் நந்திக்குருக்களின் சந்ததியான்; மற்றவன் சிதம்பர சாயுச்சிய ஐயங்கார் வகையினன்; திருப்பணாழ்வார் குலம் என்பர். இவர்கள் திருவள்ளுவரைத் தங்களினத்தவர் என்பர் (தர்ஸ்டன்)
(அதாவது தர்ஸ்டன் என்பவர் ஜாதிகள் பற்றிச் சேகரித்து ஆங்கிலத்தில் ஏராளமான தொகுதிகளாக வெளியீட்டதில் இருந்து முதலியார் மொழி பெயர்த்தது)
11.தோல் இசைக் கருவிகள் என்ற தலைப்பில் தமிழ்ச் சொற்றொடர் அகராதி (வீ ஜெ செல்வராசு) தரும் தகவல்:–
12. ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது போன்ற செய்தி, இரண்டு சங்கப் பாடல்களிலும் வருகிறது. பாலைவனம் வழியாக அல்லது காடு வழியாக வணிகர்கள் செல்வர். கொள்ளையர் தாக்குவர் என்பதாலும், ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்பதாலும் வண்டிகளில் தொடர்ச்சியாகச் செல்லுவர். இவர்களை மரம் அல்லது குன்று உச்சியில் இருந்து உளவு பார்க்கும் கள்ளர்கள் தண்ணுமை என்னும் பறையை முழக்கிக்கொண்டு வந்து தாக்குவர். இது பற்றி குறுந்தொகை (390) அகநானூறு (63) ஆகிய பாடல்களில் கருவூர்க் கண்ணம்புல்லனாரும், உறையூர் முதுகொற்றனும் சில செய்திகளைத் தருவர்:–
காதலனும் காதலியும் பாலைவனம் வழியே போவதைக் கண்ட பெரியோர், “சூரியன் மறைந்து விட்டான், பொழுது சாய்ந்துவிட்டது, ஆறலைக் கள்வரின் தண்ணுமை ஒலி கேட்கத் துவங்கும். போகாதீர்கள்”.
ஒரு தாய் தன் மகளிடம் கூறுகிறாள்:
காதலனுடன் அவள் போய்விட்டாள் என்பதற்கு நான் வருந்தவில்லை. களவுத் தொழிலை உடைய எயின மறவர் இசைக்கும் தண்ணுமை ஒலி கேட்டு இவள் பயப்படுவாளே என்றுதான் வருந்துகிறேன்.
இது பழைய தமிழகத்தின் நிலையைப் படம்பிடித்துக் காட்டும். இரவுநேரத்தில் வறண்ட பாலை வழியாகச் செல்வோரை கள்ளர்கள் பறை ஒலி எழுப்பிக் கொண்டு வந்து தாக்குவர். அவர்கள் ஒலி கொடுப்பது மற்றவர்களை நடுங்கச் செய்யவும், தனது கூட்டத்தினருக்கு செய்தி கொடுக்கவும் என்று சொல்லலாம்.
பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1387; தேதி நவம்பர் 3, 2014.
உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் முல்லர் கி.மு. 1200-க்குக் கீழ் இதை யாரும் கொண்டு வரவே முடியாது என்று எழுதிவிட்டுச் சென்றார். இப்போது வேத கால சரஸ்வதி நதி நீர் பாலை வனத்துக்கு அடியில் செல்வதும், அதை ரேடியோ ஐசடோப் முறையில் ஆராய்ந்து அதன் பழமையைக் கண்டதும் வேதத்தை மெதுவாக கி.மு. 1700-க்குக் கொண்டு சென்றுள்ளது. இந்துக்களைச் சீண்டுவவதையே பொழுது போக்காக – தொழிலாகக் கொண்ட அமெரிக்க ‘அறிஞர்களும்’ ரிக் வேதத்தின் பழைய பகுதி கி.மு 1700 என்று எழுதத் துவங்கிவிட்டனர்.
ஆனால் ஸ்ரீகாந்த் தலகாரி போன்றோர் ரிக்வேத மன்னர் வம்சாவளிகளை வரிசைப்படுத்தி இது இன்னும் பழமையுடையது என்று நிரூபித்து வருகின்றனர். இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் உலகில் முரசு, டமாரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்ததும் நாமே என்று சொல்லத் தோன்றுகிறது. ஆயினும் எகிப்து போலவோ, பாபிலோனியா போலவோ நம்மால் “படம் காட்ட” முடியவில்லை!! ( நம்மிடையே படங்கள் இல்லை!!)
எது எப்படியாகிலும் இலக்கியச் செய்திகளில் நம்மை விஞ்ச எவரும் இல்லை இத்துறையில் — சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள அதிசய தமிழ் முரசுச் செய்திகளைத் தனியே தந்துவிட்டேன்.
பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும். அதாவது பூமியில் பெரிய குழி வெட்டி அதன் மீது மிருகத்தின் தோலைப் போர்த்தி அதை வாசிப்பது பூமி துந்துபி என கீத், மக்டொனல் தயாரித்த வேதிக் இண்டெக்ஸ் கூறும். இது மஹாவ்ரத யாகம் செய்யும்போது வாசிக்கப்படும் – துஷ்ட சக்திகளை விரட்ட இதன் இசை ஒலி உதவும் — சூரியன் தென் திசை செல்லுகையில் வட கோளார்த்தத்தில் இருளும் குளிரும் சூழும். அப்போது இது நிகழும்.
மஹா வ்ரத யாகம் பற்றி அக்னிஹோத்ரம் ராமானுஜாச்சாரியார் என்னும் பேரறிஞர் எழுதிய விஷயம் இந்து நாளேட்டில் வெளியாகி இருக்கிறது. அப்போது வேத கால இன்னிசைக் குழு (ஆர்க்கெஸ்ட்ரா) வாசித்தது. ஏராளமான வாத்தியங்களின் பெயர்களை வேத கால இலக்கியங்களும் அதற்குப் பின் எழுந்த அமர கோஷம் போன்ற நிகண்டுகளும் அள்ளித் தருகின்றன. இதோ மஹவ்ரத யாக இன்னிசை நிகழ்ச்சி:
‘ வேத யாகங்களில் உத்காதா, ஹோதா, அத்வர்யூ என்று பல பொறுப்புகளில் புரோகிதர்கள் இருப்பர். இவர்களில் உத்காதா நாற்காலியில் அமர்ந்து இருக்க, ஹோதா ஊஞ்சலில் ஆடுவார்; அத்வர்யூ பலகையில் அமர்வார். அப்போது சுமார் 100 கம்பி கொண்ட வானா என்ற இசைக்கருவி உள்பட சுமார் 20 வகை இசைக்கருவிகள் இசைக்க, பெண்கள் வட்ட வடிவில் நின்று கால்களால் தாளமிட்டு நகர்வர். அவர்கள் தலைகளில் நீர்க்குடங்கள் இருக்கும் அதாவது கரக ஆட்டம் ஆடுவர். இதுதான் கரக ஆட்டத்தின் தோற்றம்!!
வாண என்ற இசைகருவியே தமிழில் — பண், பாண, யாழ் பாண — என்ற சொற்களை கொடுத்ததா என்று ஆராய்தல் நலம். வேதத்தில் உள்ள யசஸ் – தமிழில் இசை என்று மாறியது. இரண்டுக்கும் புகழ், புகழ் பாடுதல் என்ற பொருள்கள் உண்டு. இது போன்ற நூற்றுக் கணக்கான சொற்களைப் பார்க்கும் எனக்கு, இரண்டு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து உதித்தன என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. நிற்க.
(வேதத்தில் எந்தெந்த இடங்களில் இந்தக் குறிப்புகள் உளது என்று அறிய விரும்புவோர் எனது ஆங்கிலக் கட்டுரையைக் காண்க)
ஆடம்பரம் – தோன்றிய வரலாறு
வேதத்தில் ‘’ஆடம்பர’’ என்னும் டமாரம் பற்றியும் வேறு பல முரசுகள் பற்றியும் செய்திகள் உள. தமிழில் “அவர் ஆடம்பரமாக கல்யாணம் செய்தார், ஆடம்பரமாக வாழ்கிறார்” — என்று சொல்லுவோம். உண்மையில் இந்த ஆடம்பரம் என்னும் கொட்டு கொட்டிக் கொண்டு நிகச்சிகள் செய்ததையே அப்படி சொல்கிறோம் என்றே தோன்றுகிறது. ஆக ஆடம்பரம் என்ற சொல் அத்தகைய நிகழ்ச்சிகளில் வாசிக்கப்படும் வாத்யமாகும்.
துந்துபி= தும் தும் பி = என்ற சொல்லில் இருந்து டமாரம், ட்ரம் என்ற சொற்கள் உருவானதையும் காணலாம். அமளி துமளி என்பதில் துமுல என்பது வடமொழிச் சொல். அதாவது “அமர/சமர துமுல” என்பது போர்க்கள ஒலியாகும். இவை எல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயத்தில் உள. இதில் இருந்தே “டமல்சுவஸ்” என்ற ஆங்கிலச் சொல்லும் உருவானது.
போர்க்களத்தில் பீஷ்மர் சங்கு ஊதி போரைத் துவக்கினார். அப்போது யார் யார் என்ன சங்கு ஊதினர், பணவ கோமுக வாத்தியங்கள் திருதராஷ்ட் ரர்களின் நெஞ்சையும் விண்ணையும் மண்ணையும் எப்படி அதிரச் செய்தன என்றெல்லாம் பகவத் கீதை முதல் அத்தியாயம் எடுத்த எடுப்பிலேயே வருணிக்கிறது. இதில் துமுல, பணவ (சங்க இலக்கியத்தில் பணை= முழவு= முரசு) என்ற சொற்களைக் காண்க. போர்க்களத்தில் முரசு கொட்டும் வழக்கம் வேத கால வழக்கம் என்பது ரிக்வேதத்தில் ஐயம் திரிபற உறுதியாகிறது.
ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களை நாம் அன்றாடம் தமிழ் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். பூமி என்றும் அதையே தமிழ்ப்படுத்தி புவி என்றும் சொல்லுகிறோம்
வேதம் கூறும் லம்பர, வனஸ்பதி, ஆடம்பர ஆகிய டமாரங்கள் தவிர சிவனின் டமருகம் தான் சம்ஸ்கிருத மொழியின் மூல எழுத்துக்களான 14 மாஹேஸ்வர சூத்ரங்களைக் கொடுத்தது என்பர் ஆன்றோர். அதையே தமிழுக்கும் மறைமுகமாகச் சொல்வர் பரஞ்ஜோதி முனிவர். வடமொழியைப் பாணிணிக்கும் அதற்கு இணையான தமிழ் மொழியை குட முனிக்கும் (அகஸ்தியர்) கொடுத்தவனே என்று சிவனைப் புகழ்வார் பரஞ்சோதி. ஆக தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தில் வந்தவை என்பது இப்பாட்டில் இருந்து தெள்ளிதின் விளங்கும். இதனாலன்றோ ஆழ்வார்களும் நாயன்மார்களும் இவ்விரு மொழிகளைக் கண் எனப் போற்றினர்.‘’டாம்டாம்’’ என்ற ஆங்கிலச் சொல்லும் (தமுக்கு அடித்தல்) இந்தியர் உருவாக்கிய சொல்லே. இதை ஆங்கில அகராதியில் காணலாம். நான் சிறு வயதாக இருக்கையில் மதுரையில் தொற்று நோய்கள் (அம்மை, காலரா) பரவும்போதும் , 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் இப்படி தமுக்கு அடித்துச் சொன்னதை கேட்டிருக்கிறேன். வள்ளுவர் யானை மீது இருந்து பறை அறிவித்து அரசு ஆணைகளை வெளியிட்டவர் என்பதை முன் ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.
நாமும் தமுக்கு அடிப்போம்: தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்று!!
நாமும் பறை கொட்டுவோம்: தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண் என்று!
தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய்தி
Date: 10 AUGUST 2019
Post No. 6756
ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் முரசு அடித்து செய்திகளைப்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தட்சிணை – தட்சிணா அல்லது தட்சிணை குருவுக்கும் புரோகிதருக்கும் கொடுக்கும் காணிக்கை அல்லது கட்டணம் அல்லது பரிசுப்பொருள். பிரஜாபதியின் மனைவிக்கும் இந்தப் பெயர் அதாவது யாகத்தையே கணவனாக உருவகித்து தட்சிணையை மனைவியாக உருவகம் செய்யும் சொல். தற்காலத்தில் பெண்களும் இப்பெயரைச் சூட்டிக்கொள்கிறார்கள்
Dakshina -Fees or gifts or presents given to the priest who performed a Puja or Homa . Also, feminine name. One of Prajapathi’s wife had this name where the fees/Dakshina is personified as a woman.
****
தட்சிணாயணம்-சூரியனின் தென் திசைப்பயணம் – ஆடி மாதம் துவங்கி ஆறு மாதங்கள் தட்சிணாயண காலம்- எனப்படும். ஜூலை மாதம் நடுவில் இருந்து ஜனவரி மாதம் நடுவரை உள்ள ஆறு மாத காலம். இதற்கு எதிர்ப்பதம் உத்தராயணம்: ஜனவரி மாத மத்தியில் இருந்து ஜூலை மாத மத்தி வரை உள்ள காலம். உத்தராயண காலம் அதிகம் புண்ணியம் படைத்ததாக கருதப்படுகிறது.
DAKSHINAAYANA- Dakshina means South. Sun’s apparent southward journey time. It is six months from Mid July and Mid January. Uttarayana is from Mid January to Mid July. Uttarayana is considered holier than Daksinayana.
***
தானம் / நன்கொடை: இதில் பலவகை உண்டு. கல்வியை ஒருவருக்கு இலவசமாக அளிப்பது வித்யா தானம்; பசுமாட்டினை கொடுத்தால் அது கோதானம்; தங்கத்தைக்க கொடுத்தால் அது ஸ்வர்ண தானம் ;பணம் காசை கொடுத்தாலும் தானம் செய்தார்கள் என்று சொல்வார்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுக்கப்படுவது தானம் இதில் 16 வகை இருக்கிறது. தானம் செய்தால் மேல் உலகத்திலும் அடுத்த ஜென்மத்திலும் பலன் உண்டு என்றும் இந்துக்கள் நம்புகிறார்கள்
Dhanam -dhaanam
English word donation is derived from this Sanskrit word. Anything given to deserving people without expecting anything from them is Dhaanam. Hindus believe such a donation will benefit them in the next word or future births. There are various types of Dhanams. Gold, land, food grains and money are the main ones. Scriptures list sixteen types of such Dhanams.
***
தர்ப்பை
இது ஒரு புல்லின் பெயர் எல்லா சடங்கு களிலும் இந்துக்கள் இதைப் பயன்படுத்துவார்கள்; தர்ப்பையில் பாய்கள் செய்து அதில் அமர்ந்து தியானம் செய்வதும் உண்டு இது புனிதமான ஒரு தாவரம். மோதிர விரலுக்கு அணிவதற்காக பவித்ரம் செய்வார்கள்; தர்ப்பணம் முதலிய சடங்குகளுக்கு கூர்ச்சம் செய்வார்கள்.
Dharbha
Holy grass; Hindus use it in all their ceremonies whether it is auspicious or not. They make different ring like shapes with it. Pavitram is for the ring finger. It is used in purification ceremonies as well. Dharba mat is used for meditation. Koorcham shape is used for inauspicious ceremonies.
***
தீர்க்க சுமங்கலி நீண்டகால திருமண வாழ்வு பெரியோர்கள் மனமார்ந்த பெண்களே ஆசீர்வதிக்கும் போது தீர்க்க சுமங்கலி ஆக இருங்கள் என்று வாழ்த்துவார்கள்.
Dirgha Sumangali
Long lived married life. When married women seek blessings from elders or saints, they are blessed with these words.
***
திரவியம் அல்லது திரவியம் யாகத்திற்கான பொருள்களை திரவியம் என்பார்கள் அதை சுத்தப்படுத்துதல் திவ்யசுத்தி.
Dravyam
Material used for fire ceremonies (Homa, Havan, Yaga, Yajna); purifying such materials is called Dravya Suddhi
***
தியானம் மனத்தை ஒருமுகப்படுத்தி ஒரே விஷயத்தை சிந்தித்தல் கவனம் சிதறாமல் செய்யும் முறை
Dhyana
It is meditation. Focussing the mind on a particular thing or object or God is Dhyaana.
***
தேவி
இந்துக்களின் பெண் தெய்வங்களுக்கு பின்னொட்டாக வரும் சொல்; பொருள்- இறைவி ; அரசிகளுக்கும் இதை பயன்படுத்துவார்கள்
உதாரணம் – விஷ்ணு பத்னிக்கள் ஸ்ரீ தேவி, பூதேவி ; ராமா பிரான் மனைவி- சீதா தேவி ; பாண்டிய ராணி – பூதப்பாண்டியன் தேவி – புறநானூறு
Devi
All Hindu goddesses are called Devis; also queens.
Examples: Sri Devi, Bhu Devi along with Vishnu. Bhuta Pandyan Devi in 2000 year old Sangam Tamil Book Purananuru.
***
தபித்தி
ரிக்வேதம் குறிப்பிடும் ஒரு அரசன் பெயர் தபித்தி . அவனை அசுரர்களும் தஸ்யுயூக்களும் தூக்கிச் சென்ற போது அரசனை இந்திரன் காப்பாற்றினான். அசுரர்களை அழித்து அவர்களுடைய குதிரை, ரதம், பசுக்களை தபித்திக்கு இந்திரன் அளித்தான்.
Dabhiti
A king mentioned in the Rig Veda who was saved by Indra from being carried off by the Asuras and Dasyus. Indra burnt all their weapons in a kindled fire and enriched Dhabiti with their cattle, horse and chariots.
***
ததிக்ராவண்
ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் தெய்வீக குதிரைக்கு ததிக்ராவண் என்று பெயர். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்தில் ததிக்ராவண் பற்றிய மந்திரம் வருகிறது
இந்த மந்திரம் யஜுர்வேத தைத்ரீய சம்ஹிதையில் வருகிறது .
பொருள்-
அனைத்துலகத்தையும் தாங்குபவனும் அளப்பவனும் ஜெயசீலனும் சகல வித்தைகளும் ஆதாரமான ஹயக்ரீவ வடிவம் எடுத்தவனுமான வேகவானுமாகிய பரம புருஷனுக்கு வந்தனம் செய்கிறேன் . நம்முடைய முகத்தினையும் மற்ற இந்திரியங்களை நன் மனம் உடையவர்களாக அவர் செய்ய வேண்டும் . நம்முடைய ஆயுளை இடையூறு இல்லாமற் காக்கவேண்டும்
அஸ்வ- குதிரை; இந்த இடத்தில் ஹயக்ரீவன் என்பது – குதிரை முகக் கடவுள்.
Dadhikra
Divine horse in Rig Veda. Brahmins around the world recite the mantra of Dadhikra thrice a day. It is described as straight going, the graceful moving, the resplendent, rapid, the destroyer of enemies like a heroic prince.
***
ததீசி ரிஷி
மஹாபாரத காலத்துக்கும் முந்திய ரிஷி . தேவர்களின் வேண்டுகோளின்படி இவர் தன்னையே தியாகம் செய்தார். இவருடைய முதுகெலும்பினைக் கொண்டு இந்திரன் வஜ்ராயுதம் செயது காலகேய தானவர்களையும் அவர்களுடைய தலைவனானான விருத்திராசுரனையும் கொன்றான்
Dadhicha
A celebrated ancient sage who sacrificed himself and gave his backbone to Indra with which he made his powerful Vajraayudha. He used it to kill Kalkeya Danavas and their leader Vritra. This was related by Lomasha rishi to Yuthisthira when the Pandavas were visiting Agastya rishi’s hermitage.
To be continued………………………………
Tags- ததீசி ரிஷி, தட்சிணை Dabhiti , Darbha, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL; இந்துமத கலைச்சொல் அகராதி- 21
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் —திருக்குறள் 280
பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை; உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.
மொட்டை அடித்துக்கொண்டதால் மட்டும் சந்யாசி ஆகிவிடமுடியாது
xxx
புத்தர் உரைப்பதும் அஃதே
தம்மபதம் 266, 270):– ஒருவர் மஞ்சள் உடை தரித்து யாசகம் செய்து வாழ்வதால் புத்த பிட்சு ஆகிவிடமாட்டார். நேர்மையான பாதையை ஏற்று மாமிச உணவைத் தவிர்ப்வரே புத்த பிட்சு எனப்படுவார்
வள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர், அருணகிரிநாதர் ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது. இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.
காடுகள் புக்கும் தடுமாறி … காடுகளில் புகுந்து தடுமாறியும்,
காய்கனி துய்த்தும் … காய், பழவகைகளைப் புசித்தும்,
காயம் ஒறுத்தும் … தேகத்தை விரதங்களால் வருத்தியும்,
காசினி முற்றும் திரியாதே … உலகம் முழுவதும் திரிந்து
அலையாமல்,
சீவன் ஒடுக்கம் … சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும்
பூத வொடுக்கம் … ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும்
தேற உதிக்கும் … நன்றாக உண்டாகும்படி,
பரஞான தீப விளக்கம் காண … மேலான ஞான ஒளி
விளக்கத்தினையான் காணும்படி,
எனக்குன் சீதள பத்மம் தருவாயே … எனக்கு உன் குளிர்ந்த
தாமரை அடிகளைத் தந்தருள்க.
பாவ நிறத்தின் தாருக வர்க்கம் … பாவமே உருவெடுத்த
தாருகாசுரன் கூட்டத்தினர்
பாழ்பட உக்ரம் தருவீரா … பாழ்பட்டொழிய கோபம் காட்டிய வீரனே,
பாணிகள் கொட்டும் பேய்கள் … போர்க்களத்தில் கைகளைக்
கொட்டும் பேய்கள்
பிதற்றும் பாடலை மெச்சும் கதிர்வேலா … உளறும்
பாடல்களைப் பாராட்டும் ஒளி வேலனே,
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்கும் … அன்னங்கள் நிற்கும்
வயல்கள் சூழ்ந்த
சோலை சிறக்கும் புலியூரா … சோலைகள் விளங்கும்
புலியூரனே (சிதம்பரேசனே),
சூரர் மிகக்கொண்டாட … சூரர்கள் மிகக் கொண்டாடும்படியாக
நடிக்கும் தோகை நடத்தும் பெருமாளே. … நடனமாடும்
மயிலினை நடத்தும் பெருமாளே.
* சீவன் என்பதில் உள்ள (சீ) இரு மாத்திரை நெடில். அதனை ஒரு மாத்திரை
குறில் எழுத்தாக (சி) ஒடுக்கினால், சீவன், சிவன் என்று ஆகிவிடும்.
***
சங்கரரும் சாடுகிறார்
தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:
“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
—பஜகோவிந்தம்
( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).
பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.
***
திருமூலரின் திருமந்திரம்
நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே
பூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா? நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.
புத்தர் பேருரை
உச்சுக்குடுமி, மொட்டை, ஜடாமுடி, காவித்துணி, மஞ்சள் உடை, நிர்வாண கோலம் இவைகளால் ஒருவன் துறவி ஆகிவிட முடியாது என்று புத்தர், வள்ளுவர், திருமூலர், ஆதிசங்கரர் முதலிய பல தீர்கதரிசிகள் எடுத்துரைத்தத்தைக் கண்டோம். புத்தர் மூன்று இடங்களில் இதைச் சொல்வது குறிப்பிடத்தக்கது இன்றைய பெளத்த துறவிகள் புத்தர் சொன்னதைக் கடைப்பிடிப்பதில்லை என்பதை உலகெங்கிலுமுள்ள புத்த குருமார்களைக்கண்டால் புரியும்.
புத்தர் தம்மபதத்தில், மூன்று இடங்களில் இக்கருத்தை வலியுறுத்துகிறார் (தம்மபதம் 141, 264, 393)
நீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந்தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்தியாவில் உள்ள ஹிந்துக்களுக்காக ஒரு பிரார்த்தனை!
ச. நாகராஜன்
சமூக ஊடகம் தரும் குறிப்பு இது:
“இன்று நாம் தேவியையும் மகாதேவனையும் இந்த உலகில் உள்ள ஒவ்வொவருக்கும் அவர்களுக்கு என்று ஒரு தேசத்தைத் தருமாறு வேண்டிக் கொண்டோம்.
கிறிஸ்தவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட தேசங்கள் உண்டு. முஸ்லீம்களுக்கு 57 நாடுகள் உள்ளன. புத்த மதத்தினருக்கு எட்டு அல்லது ஒன்பது நாடுகள் உள்ளன. யூதர்களும் ஒரு நாட்டைத் தாங்கள் கொண்டுள்ளனர்.
ஆனால் நூறு கோடி ஹிந்துக்களான நமக்கு என்று ஒரு நாடும் இல்லை.
நூறு கோடி ஹிந்துக்களான நமக்கு நமது என்று சொந்தம் கொண்டாட ஒரு அங்குல இடம் கூட இல்லை என்பது மிகப் பெரிய துரதிர்ஷ்டமாகும்.
மனித குலத்தின் மிகப் பெரும் துரோகிகளான காந்தியும் நேருவும் செய்த துரோகத்தினால் நூறு கோடி ஹிந்துக்களுக்கு ஒரு அங்குல இடம் கூட இல்லை.
நாங்கள் தேவியையும் மகாதேவனையும் எங்கள் நாடு என்று சொந்தம் கொண்டாட ஒரு தேசத்தைக் கொடு என்று வேண்டுகிறோம்.
எங்களுக்கு என்று ஒரு தேசத்தைக் கொடு – எங்கே ஒரு மசூதியும் மதரஸாவும் இல்லையோ எங்கு ஒரு முஸ்லீம் கூட இல்லையோ அப்படிப்பட்ட இடம் ஒன்றை – எங்களுக்கென்று ஒரு நாட்டைக் கொடு!
அவர்களால் நாங்கள் மிகவும் ஓய்ந்து போய்விட்டோம். நொந்து போயிருக்கிறோம்.
உலகமே எங்களை விட்டு நழுவிப் போய் விட்டது.
இது தான் எங்களது கடைசிப் புகலிடம்.
இதையும் அவர்கள் அபகரிக்கப் பார்க்கிறார்கள்.
“எங்களைக் காப்பாற்று; எங்கள் குழந்தைகளைக் காப்பாற்று; மனித குலத்தின் எதிரிகளாயும் சனாதன தர்மத்தின் எதிரிகளாயுமுள்ள அவர்களை மொத்தமாக அழி” என்பதே தேவியிடமும் மகாதேவனிடமும்எங்களின் ஒரே பிரார்த்தனை.
யதி நரசிங்கானந்தின் (Yati Narsinghanand) இந்த பிரார்த்தனை ஹிந்து ராஷ்டிரம் உருவாக வேண்டும் என்ற கருத்தை இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்படுத்தியுள்ளது.
தெலிங்கானா மகராஷ்டிர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நரசிங்கநாத்தின் இந்த பிரார்த்தனையை எதிர்த்து எப்.ஐ. ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இஸ்லாமிய அமைப்புகள் ஜம்மு காஷ்மீர், கேரளா, மேற்கு வங்கம், வட கிழக்கு பிராந்தியங்கள் உள்ளிட்ட இடங்களில் ஹிந்துக்களுக்குச் சொல்லவொண்ணா தொந்தரவுகளைக் கொடுத்து அவர்கள் வாழ்வதையே கேள்விக்குறி ஆக்கும் இந்த நேரத்தில்ஹிந்து ராஷ்டிரம் வேண்டும் என்ற தேவை – DEMAND – உருவாவதில் ஆச்சரியம் இல்லை!