
Research article written by London Swaminathan
Date: 27 September 2017
Time uploaded in London- 7-03 am
Post No. 4249
Pictures are taken from various sources such as google, Facebook friends, newspapers and Wikipedia for non-commercial use; thanks.

நட்சத்திரங்கள் (stars) என்பன யாவை? அவைகள் என்ன? விஞ்ஞானம் சொல்கிறது- “அவை எல்லாம் சூரியன்கள்; சில நட்சத்திரங்கள் சூரியனை விட கோடி மடங்கு பெரியவை. அவற்றின் ஒளி பூமியை அடையவே பல லட்சம் ஆண்டுகள் ஆகும் என்பதால் நாம் கருகாமல் இருக்கிறோம்; சூரியன் என்பது மஞ்சள் ( a mediocre yellow star) வகை நட்சத்திரம்; அதாவது நடுத்தர நட்சத்திரம்”. இது விஞ்ஞான புத்தகத்தில் உள்ள செய்தி.
ஆனால் சமய நூல்கள் என்ன சொல்கின்றன? நட்சத்திரங்கள் புண்யாத்மாக்களின் ஆவி, ஆன்மா; இறந்து போன மன்னர்கள் நட்சத்திரங்கள் ஆவதாக எகிப்தியர்களும் கிரேக்கர்களும் நம்பினர். மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, அமேசான் காடு வாழ் பழங்குடி மக்களும் இதையே சொல்லுவர். ஆனால் அவர்கள் எல்லோரும் கெட்ட, நல்ல மனிதர்கள் எல்லோரும் இறந்த பின்னர் இப்படி ஆவார்கள் என்று சொல்லுவர். இந்து மதமோ புண்ய ஆத்மாக்கள் மட்டும் நட்சத்திரங்கள் ஆவர் என்கிறது.

மஹாபாரத வன பர்வத்தில் அர்ஜுனனின் விண்வெளிப்பயணம் (Inter Galactic Space Travel by Arjuna)பற்றிய சுவையான விஞ்ஞான விஷயம் வருகிறது. இதையே சாகுந்தலத்தில் காளிதாசனும் பேசுகிறான். மாதலி என்னும் விண்வெளி பைலட்டிடம் (விமானியிடம்) அர்ஜுனன் ஒரு கேள்வி கேட்கிறான்; அடக் கடவுளே! இது என்ன விண்கலத்திற்கு வெளியே நான், பறக்கும் ஒளிப் பிழம்புகளைக் காண்கின்றேனே! இவை எல்லாமென்ன?
மாதலி சொல்கிறான்: அர்ஜுனா! இவைகளைத்தான் மக்கள் பூமியில் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர். இவைகள் எல்லாம் இறந்து போன புண்ய ஆத்மாக்கள்”.
இது மிகவும் அபூர்வமான வருணனை. பிரபஞ்சத்தில் ஒரு நட்சத்திர மண்டலத்தில் இருந்து மற்ற ஒரு நட்சத்திர மண்டலத்துக்குப் போகும் வித்தையை இந்துக்கள் அறிந்திருந்தனர். ஐன்ஸ்டைன் (Einstein) முதலியோர் ஒளிதான் மிகவும் (Light is the fastest thing) வேகமான பொருள்; அதை மிஞ்சும் எதுவும் இல்லை. யாரும் ஒளியின் வேகத்தை நெருங்கக்கூட முடியாது. அப்படி பயணம் செய்தால் அவர்கள் நித்திய மார்கண்டேயர்கள்; அவர்கள் முதுமையே எய்த மாட்டார்கள் (Ever young, never die) என்று சொன்னார்கள். ஆனால் இந்துக்கள் மனோ வேகத்தில் செல்லும்– விண்வெளி பயணம் செய்யும் வித்தையை அறிந்து இருந்தனர். நாரதர் போன்றோர் திரி லோக சஞ்சாரி. நினைத்த மாத்திரத்தில் விண்வெளியில் (capable of Inter Galactic Travel) எங்கும் செல்லலாம்.

விஞ்ஞானிகளும் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறார்கள்; நாம் எல்லோரும் (We were all star dust once) நட்சத்திரத் துகள்களே; 1500 கோடி வருடங்களுக்கு முன்னால் பிரபஞ்சம் மாபெரும் வெடிப்பில் (Big Bang) சிக்கியது. அப்போது பறந்த துகள்களே சூரிய மண்டலம், கிரஹங்கள்; அதில் தோன்றிய நாம் எல்லோரும் ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் பகுதியே”.
ஆயினும் இந்துக்கள் சொல்லுவது போல இறந்த ஆன்மாக்கள் என்பதற்கு அறிவியல் விளக்கம் கிடைக்கவில்லை. உலகில் இவ்விஷயத்தில் இந்துக்களே முன்னோடி. ஏனெனில் வடக்கு வாநத்தில் ஒளிரும் புகழ்மிகு, எழில் மிகு, நட்சத்திரக் கூட்டத்துக்கு சப்தரிஷி மண்டலம் என்று பெயரிட்டு ஏழு ரிஷிகளின் பெயரைச் சொன்னார்கள். இன்றும் பிராமணர்கள் த்ரிகால சந்தியாவந்தனத்தில் தினமும் மூன்று முறை அந்த ஏழு ரிகளை வணங்குகின்றனர். அது மட்டுமல்ல. அதில் வசிஷ்டர் அருகில் இருக்கும் அருந்ததி நட்சத்திரத்தை எல்லாப் பெண்களும் கற்புக்கரசியாக வணங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.
2200 ஆண்டுகளுக்கு முன் தமிழர் இயறிய புற நானூறும் அதற்குப் பின் எழுந்த சிலப்பதிகாரமும் சப்தரிஷி மண்டலத்தையும் அருந்ததி நட்சத்திரத்தையும் விதந்து ஓதுகின்றன. ஆக, தமிழர்களுக்கும் இவ்விஷயம் தெரியும்

அது மட்டுமின்றி துருவ நட்சத்திரம், (Pole Star) தென் வானத்தில் உள்ள அகஸ்திய (Canopus) நட்சத்திரம், திரி சங்கு (Southern Cross) நட்சத்திரம், சந்திரனின் பாதையில் உள்ள 28 (27+ அபிஜித்= 28) நட்சத்திரங்கள்
ஆகியவற்றுக்கும் புனித அந்தஸ்து வழங்கியது இந்து மதமே.
மற்ற எல்லா கலாசாரங்களும் சப்த ரிஷி மண்டலத்தை பெருங்கரடி (Ursa Major= Great Bear) என்றும் பறக்கும் பட்டம் (kite) என்றும் மன்னரின் தேர் (Dipper, Chariot) என்றும் அழைத்தன. நாம் மட்டுமே புனித அந்தஸ்து கொடுத்தோம்.
இப்போது யஜூர் வேதம் சொல்லும் செய்தி இவை எல்லாவற்றையும் விடச் சுவையாக உள்ளது. யஜூர் வேதத்தில் இரண்டு பகுதிகள் உண்டு அதில் சுக்ல யஜூர் வேதத்தின் ஒரு பகுதியான சதபத பிராமணத்தில் இந்தச் செய்தி வருகிறது.
சதபத பிராமணம் ஒரு பெரிய என்சைக்ளோபீடியா; அது சொல்லாத விஷயமே இல்லை. ஆனால் எல்லாம் வேடிக்கையாக இருக்கும்; வெள்ளைகாரர் களுக்கு அதைப் பார்த்து ஏக குஷி! இதுதாண்டா, உலகிலேயே மிகப்பெரிய உளறல் மூட்டை; இதை வைத்தே இந்துமதத்தை ஒழித்துவிடலாம் என்று 100 ஆண்டுகளுக்கு முன் கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் கொக்கரித்தனர். ஆனால் இந்துக்களுக்கோ இது மிகப் பெரிய புனித நூல்; இதில்தான் அஸ்வமேத, புருஷ மேத, ராஜ சூய யக்ஞங்கள் பற்றி உள்ளன. ரிக் வேதம் மூன்று நட்சத்திரம் பெயரையே சொல்லும்; ஆனால் யஜுர் வேதமோ 28 நட்சத்திரத்தின் பட்டியலைத் தரும். உலகில் வேறு எந்த நூலிலும் — எகிப்திய , பாபிலோனிய, மாயன், சீன — நூல்களில் விரிவான பட்டியல் இல்லை. சீனர்கள் நம்மிடம் இரவல் வாங்கியதாக வெள்ளைத்தோல் “அறிஞர்களும்” செப்புவர்.

பெண்கள் ஸ்டார்ஸ்!!!
“ஸ்த்ரீகள் நட்சத்திரங்கள். தேவலோகம் செல்லுபவர்களுக்கு நன்மை செய்வார்கள்; புருஷர்களுக்கு இவர்கள் நட்சத்திரங்கள் போலா வார்கள்”- 6-5-4-9
இது ஜம்புநாதன் அவர்களின் மொழி பெயர்ப்பு (யஜூர்வேதக் கதைகள், பக்கம் 78)
ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள விஷயத்தை நான் பகர்வேன்:-
“தெய்வீக கிழவிகள், வெட்டப்படாத இறக்கைகளுடன், கடவுளுக்கு நெருக்கமாக இருப்பார்கள். அவர்கள் ஆங்கிரஸ் போல, சட்டியில், பூமியின் மடியில், சுடுவார்கள்; இப்போது அவர்கள் உதவியுடன் புரோகிதர்கள் வறுக்கிறார்கள்; ஆனால் இவைகள் எல்லாம் நிச்சயமாக நட்சத்திரங்கள்.- பெண்கள் உண்மையிலேயே நட்சத்திரங்கள். சொர்க லோகத்துக்குச் செல்லும் ஆண்களுக்கு இவர்களே ஒளிகாட்டும் விளக்குகள்; இந்த நட்சத்திரங்களைக் கொண்டே அவர்கள் சுடுகிறார்கள் (வறுத்து எடுப்பர்).
ஒருவர் இப்படி மேல் உலகங்களுக்குச் செல்லுகையில் –அதுதான் சிறந்த புகலிடம்; அதுதான் லட்சியம். அங்கே சுட்டெரிக்கும் சூரியனே, இறந்துபோன நல்லவர்கள். அங்குள்ள மிகப்பெரிய ஒளி பிரஜாபதி அல்லது சொர்கம். இப்படி மேல் உலகங்களுக்குப் போனால் அதுவே சிறந்த அடைக்கலம்; அவர்கள் லட்சியத்தை அடைந்துவிட்டனர்.
–சதபத பிராமணம் 1-9-3-10

தைத்ரீய பிராமணமும் (1-5-2-6) நட்சத்திரங்களை கடவுளரின் வீடுகள் என்று கூறும். யார் இதைப் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் அந்த வீட்டை அடைவார்கள்.
சதபத பிராமணத்தில் உள்ள விஷயங்களை அப்படியே அர்த்தம் செய்யக்கூடாது; அதன் மறைபொருளை பெரியோர் மூலம் அறியவேண்டும். வேத இலக்கியம் முழுதையும் கற்றோருக்கே அதன் பொருள் விளங்கும்; வெள்ளைகாரர்களுக்கு அர்த்தம் புரியாததால் இதை மொழி பெயர்த்து சிரி சிரி என்று சிரித்து விட்டனர். ஆனால் இதில்தான் எல்லா விஷயங்களும் இருப்பதால் அவர்களால் இதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. மொழி இயல், உளவியல், தாவரவியல், விலங்கியல், வானியல் என்று எல்லாவற்றையும் தொட்டுச் செல்லுகிறது சதபதம்; வெள்ளைக்கா ர்கள் கூட இதற்கு கி.மு 850 முத கி.மு 1000 வரை கால கணித்துள்ளனர். நாமோ அனாதி காலம் தொட்டு வழங்கி வருவதாக நம்புகிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சதபத பிராமணம் சொல்லிய வழியே சோழ மன்னன் பெருநற்கிள்ளியும், கரிகால் சோழனும் ராஜசூய யக்ஞமும், பருந்து வடிவ யாக குண்டமும் வைத்த செய்தி புற நானூற்றில் உள்ளது (எனது பழைய கட்டுரைகளில் முழு விவரம் காண்க)
ராஜ சூய யாகத்தைப் பார்த்த அவ்வையாருக்கு பேரானந்தம்; “அடப் பாவி மகன்களே! எப்போது பர்த்தாலும் சண்டை போட்டு ஒருவனை ஒருவன் வீரம்பேசி அழிந்தீர்களே; இன்று சேர சோழ பாண்டிய மன்னர்களை ஒரே மேடையில் பார்க்கையில் எனக்கு வரும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை; இன்று போல நீங்கள் என்றும் ஒற்றுமையுடன் இருப்பீர்களாக” என்று அடி மன த்தின் ஆழத்திலிருந்து வாழ்த்திய செய்தியை புறநானூற்றில் காண்க.
வேதங்கள் புரிய வேண்டுமானால் புற நானூற்றையும், பதிற்றுபத்தையும், பரிபாடலையும் பயில வேண்டும்

சங்கத் தமிழ் நூல்களும், திருக்குறளும் உள்ளவரை இந்து மதம் வாழும்.
TAGS:– சதபத பிராமணம், பெண்கள் நட்சத்திரம், வனபர்வம், விண்வெளிப் பயணம்
–சுபம்–