இரண்டு எதுகை அகராதிகள் !!

Written by London swaminathan

Article No.1845; Date: 4 May 2015

Uploaded at London time: 15-54

ஊத்தங்கரை பி.ஆர்.அப்பாய்  செட்டியார் தொகுத்த எதுகைத் தமிழ் அகராதியையும் இசைப் பேரறிஞர் பாபநாசம் சிவன் தொகுத்த வடநூல் சொற்கடல் என்ற சம்ஸ்கிருத எதுகை (யதி) அகராதியையும் இரண்டு கட்டுரைகளில் கண்டோம். இந்த மூன்றாவது கட்டுரையில் இரண்டு அகராதிகளிலிருந்தும் சில எதுகைகளைக் காண்போம்:–

முதலில் தமிழ் எதுகை

அசைஇ=வருந்தி, இளைப்பாறி, இருந்து,இளைத்து

அளைஇ=கலந்து

இரீஇ=இருந்து, இருத்தி

கடைஇ=முடுகி, செலுத்தி

குரீஇ=பறவை,குருவி, புள்

குலைஇ=குலவி

குவைஇ=பரவி,குவித்து

குழீஇ=திரண்டு

கொளீஇ=கொளுத்தி

சினைஇ=சினந்து

செரீஇ=செருகி

தடைஇ=தடவிப்பார்த்து,சரிந்து

தரீஇ=தந்து

தலைஇ=சொரிந்து

தழீஇ=தழுவி, உள்ளடக்கி, அணத்து

துழைஇ=துழாவி

தொலைஇ=அழித்து

நிலைஇ=நிலைபெற்று

நிறீஇ=நிறுத்தி

நினைஇ=நினைந்து

சம்ஸ்கிருதத்தில் சில எதுகைகள்:-

ராஜிகா=கருங்கடுகு

தாடகா=தாடகை(அரக்கி)

ஏடகா=பெண் செம்மறியாடு

ரேணுகா=பரசுராமன் தாய், அரேணுகம் என்னும் தக்கோலம்

ஸூதிகா=பிள்ளை பெற்றவள்

யூதிகா=முல்லை, மாது

வேதிகா=யாக குண்டம்

பாதுகா=பாதரட்சை, காலணீ

கோதிகா=நீருடும்பு

ராதிகா= ராதை

மேனகா=அப்சரஸ், பார்வதியின் தாய், இமவான் மனைவி

தேனுகா=பெண்யானை, ப்சௌ

கோபிகா=இடைச்சி

பூமிகா= காவிய முன்னுரை, நாடக அலங்காரசாலை

மாமிகா=என்னுடையவள்

காமுகா=காமப் பேய் பிடித்தவன்

தாரகா=நட்சத்திரம்,கண்ணுட் கருவிழி, காப்பவள்

காரிகா=இலக்கணவுறுப்பு, செயல், தாத்பர்யம்

கைரிகா= மலை விளை தாதுப் பொருள்

சீரிகா= சேலை

சைரிகா=திருட்டு

சாரிகா=கிளி

சீருகா=சுவற்றுக்கோழி

காலிகா=சண்டி, தேள், காக்கை, ரோமாவளி, கறுப்பு, மேகக்கூட்டம்

கேலிகா=விளையாட்டு

சூலிகா=சுருண்ட மயிர், பார்வதி

தூலிகா=தராசுக்கோல், சித்திரம் எழுதும் கோல்,தூரிகை

நாலிகா=தண்டு, காம்பு, நரம்பு

நீலிகா=கருநொச்சி, அவுரி, ஏவல்

பாலிகா=விவாஹம்,உபநயனாதிகளில் வைக்கும் பஞ்ச பாலிகை, கொட்டைக் கொல்லைப்பொம்மை

மாலிகா=மலர் மாலை, ஒரு ஆறு, மணி மாலை

வாலுகா=வால்மிளகு, ஏலச் செடி, வாலுரிவை

ஜீவிகா=பிழைப்பு, ஜீவனோபாயம்

தேவிகா=விளையாட்டு

நாவிகா=ஓடம்

வாசகா, வாசிகா =ஆடாதோடை

காசிகா=ஒரு நூல்

ஏஷிகா=எழுதுகோல்

தூஷிகா=கண்மலம்

மூஷிகா=பெண் எலி

நாஸிகா=மூக்கு

லாசிகா=நாட்டியக்காரி

இவ்வாறு ஒரு மொழியைப் படிக்கையில், படிக்கும் ஆர்வமும் ஏற்படும்; படிப்பதும் எளிதாகும். இதை வைத்து விளையாட்டும் விளையாடலாம்.

நான் என் மகன்களுடன் ரயிலில் பயணம் செய்கையில் ஆங்கிலத்தில் சொல் விளையாட்டு விளையாடுவோம். “ஷன்” என்று முடியும் சொற்கள் (Words ending TION) என்று தீர்மானிப்போம்: ஒருவர் எஜுகேஷன் education என்பார், அடுத்தவர், அட்ராக்சன் attraction என்பார், அடுத்தவர் கான்ஸ்டர்னேஷன் consternation என்பார். இப்படி நிறைய ரவுண்டுகள் ஆன பின் திடீரென ஒருவர் திணறுவார். உடனே அவர் ‘அவுட்’ (out).

கடைசி ஆள் இருக்கையில் அவர் எல்லோரையும் மீண்டும் சேர்த்துக்கொண்டு புதிய விகுதி (முடியும் ஒலி) ஒன்றைச் சொல்லுவார். எடுத்துக்காட்டாக அவர் மெடெர்னிடி maternity என்று சொல்லி “டி”—யில் முடியும் சொற்கள் என்பார். உடனே அடுத்தவர் பி(ட்)டிpity என, அதற்கடுத்தவர் ஷ்யூரிட்டி surity அதற்கடுத்தவர் கன்Fஎட்டி confetti  என்று — இப்படிப் போய்க்கொண்டே இருக்கும் (‘போர்’  boredom அடித்து நிறுத்தும் வரை அல்லது இறங்க வேண்டிய ரயில்வே ஸ்டேஷன் வரும் வரை). இதனால் சொல் வளம் மிகும். சில புதிய சொற்களைக் கற்கும் வாய்ப்பு ஏற்படும். தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் இவ்விளையாட்டை விளையாட வேண்டுமானால் இப்படிப்பட்ட எதுகை அகராதிகள் உதவும்.

வாழ்க அகராதி தொகுத்தோர்; வளர்க அவர்தம் புகழ்!!