புற்று நோய்- அணுகுண்டு- கதிரியக்கம் (Post No.7238)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 20 NOVEMBER 2019

Time  in London – 7-24 am

Post No. 7238

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

`அணுக்கதிரியக்க ஆபத்து` என்ற தலைப்பில் 16-2-1992 தினமணியில் நான் எழுதினேன். இதிலுள்ள அணு உலைகள் பற்றிய  புள்ளி விவரம் மாறி விட்டது. ஆனால் கதியக்கக் கழிவுப் பிரச்சனை, புற்று நோய் ஆபத்து முதலியன நீடிக்கவே செய்கிறது.

யுரேனியம், ப்ளூட்டோனியம், தோரியம் முதலிய மூலகங்கள் பற்றி நான் எழுதிய கட்டுரைகளில் மேலும் விவரம் உள்ளது. அவைகளையும் வாசிக்கவும்.

யுரேனிய அதிசயம்- கழுதை …

3 Dec 2018 – யுரேனிய அதிசயம்- கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை (Post No.5728). Written by London Swaminathan swami_48@yahoo.com. Date: 3 December 2018. GMT Time uploaded …

tamilandvedas.com › tag › தோரியம்



தோரியம் | Tamil and Vedas

10 Oct 2018 – யுரேனியம் போன்ற கதிரியக்க மூலகங்களைப் பயன்படுத்துகையில் அபாயகரமான கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் வருகின்றன.

tamilandvedas.com › tag › ஏமாறாதே



ஏமாறாதே | Tamil and Vedas

10 Oct 2018 – யுரேனியம் போன்ற கதிரியக்க மூலகங்களைப் பயன்படுத்துகையில் அபாயகரமான கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் வருகின்றன.

க்யூரியம் | Tamil and Vedas

16 Dec 2018 – 5783. Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. அதிசய க்யூரியம், அதிசய அமெரிஷியம்; …

tamilandvedas.com › 2018/12/20 › அழகிகள…



அழகிகளைக் கொன்ற ரேடியம் (Post No …

20 Dec 2018 – ரேடியம், கதிரியக்கம் உள்ள வெள்ளி நிற உலோகம். யுரேனியமும், தோரியமும் இயற்கையில் தேய்ந்து போகும் போது ரேடியம் …

Tags –

கதிரியக்கம், அணுகுண்டு, அணு உலை, அணுக்கழிவு, யுரேனியம்

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1 (Post No.5159)

Written by S NAGARAJAN

 

Date: 29 JUNE 2018

 

Time uploaded in London –   6-35 AM (British Summer Time)

 

Post No. 5159

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாக்யா 29-6-18 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு பதினேழாம்) கட்டுரை

இகிகை – நீண்ட நாள் வாழ ஜப்பானிய ரகசியம்! – 1

.நாகராஜன்

 

ஜப்பானில் லட்சக்கணக்கானோர் காலையில் படுக்கையிலிருந்து இகிகை-கொள்கையுடன் (Ikigai) எழுந்திருக்கின்றனர்.

இகிகை என்றால் “உயிருடன் இருப்பதற்கான காரணம்” என்ற கொள்கையாகும். அப்படியே மொழி பெயர்ப்பது என்றால் “நீ காலையில் விழித்தெழுவதற்கான காரணம்” என்று சொல்லலாம்.

எதற்காக வாழ்கிறோம் என்ற நம்பிக்கையும்  வாழ்க்கை என்பதற்கு நாம் தரும் மதிப்புகளுமே இகிகை.

இகிகை எதையும் உங்களிடம் வலியச் சுமத்தாது. வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் மதிப்புகள் சுயமாகவே எழும்.

 

ஜப்பானில் உள்ள ஓகினாவா தீவில் தான் இகிகை தோன்றியது. அங்கு தான் உலகில் நூறு வயதை எட்டிய ஏராளமானோர் இருக்கின்றனர். நூறு வயது வாழ்வை அடைய இகிகை தான் காரணமா?

 

உலகில் நூறு வயதை எட்டியோரைப் பற்றி ஆராய்ந்து டான் ப்யூட்னர் என்பவர் ப்ளூ ஜோன்ஸ்: லெஸன்ஸ் ஆன் லிவிங் லாங்கர் ஃப்ரம் தி பீப்பிள் ஹூ ஹாவ் லிவ்ட் லாங்கஸ்ட் (Dan Buettner : Blue Zones: Lessons on Living Longer from the people Who’ve Lived the Longest) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் நூறு ஆண்டு வாழ இகிகை தான் காரணம் என நம்புகிறார்.

 

ப்யூட்னர் தனது புத்தகத்தில் வலியுறுத்தும் ஒரு முக்கிய விஷயம் இகிகை என்பது ஓகினாவா தீவில் உள்ளவர்களுக்காக மட்டுமே உள்ள ஒன்று அல்ல என்பது தான். நீடித்து 100 வயது வாழும் சார்டினா மற்றும் நிகோயா தீபகற்பத்தில் வாழ்பவர்களும் கூட இந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்களே, இகிகை என்ற வார்த்தையால் அதை அவர்கள் குறிப்பிடுவதில்லை”  என்கிறார் அவர்.

 

இகிகை என்பது மூன்று விஷயங்களைக் கொண்டது.

  • நீங்கள் உங்கள் வாழ்க்கை என்பதற்குத் தரும் ஆதாரமான மதிப்புகள் 2) நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்கள் 3) நீங்கள் சிறந்து விளங்கும் விஷயங்கள். இவை இணைவது தான் உங்களின் இகிகை.

 

உங்கள் குறிக்கோளை நீங்கள் வாழ்க்கையில் இழந்து விட்டால் அது மிகவும் மோசமான விளைவுகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது என்பது பல ஆய்வுகளின் முடிவுகள்.

 

அமெரிக்க பழங்கால இதிகாச ஆராய்ச்சியாளரான ஜோஸப் காம்பெல், “நான் எனது மாணவர்களிடம் வலியுறுத்தும் ஒரு விஷயம்; உனக்கு அளிக்கப்பட்ட வரங்களைப் பின்பற்று; அவை என்ன என்று கண்டுபிடி; அப்படியே அதைப் பின்பற்று” என்கிறார்.

 

உங்களுக்கு இயல்பாக அமைந்த திறமைகள் தான் உங்களுக்கு (இறைவனால் ) அளிக்கப்பட்ட வரங்கள்!

ஹெக்டர் கார்சியா என்பவர் இகிகை; தி ஜபானீஸ் சீக்ரட் டு  எ லாங் அண்ட் ஹாப்பி லைஃப் என்ற புத்தகத்தின் இணை எழுத்தாளர். (Hector Garcia, Co-author : Ikigai: The Japanese Secret to a Long and Happy Life).

 

“மனிதகுலம் தோன்றியதிலிருந்து பார்த்தால் பொதுவாக பணத்தின் பின்னால் ஓடுவதே வழக்கமாக இருக்கிறது. ஆனால் சிலரோ பணத்திற்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் அதை விட பெரிய விஷயங்களுக்கு ஆசைப்படுகின்றனர். வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான இந்த விஷயத்திற்கு ஏராளமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு குறிப்பிடப்படுகின்றன” என்கிறார் அவர்.

உங்களுக்கு உங்களின் இகிகை- ஐக் கண்டுபிடிக்க ஆவலாக இருக்கிறதா?

அதற்கு நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன:

  • நீங்கள் எதை மிக மிக அதிகமாக விரும்புகிறீர்கள்? (வெறித்தனமான ஆசை என்கிறோமே அது தான்)
  • உலகத்தின் தேவை என்ன? ( அதற்கான உங்களது பணி)
  • நீங்கள் எதில் மிகவும் சிறந்து விளங்குகிறீர்கள்? (உங்களது திறமை)
  • எந்தப் பணியில் நீங்கள் சம்பாதிக்க முடியும்? (உங்கள் தொழில்)

 

இந்த நான்கும் இணைந்தது தான் உங்களது இகிகை!

இதை மட்டும் நீங்கள் கண்டுபிடித்து விட்டால் சந்தோஷமாக நீண்ட காலம் நீங்கள் வாழலாம்.அதாவது உங்கள் இகிகை-ஐ கண்டுபிடிப்பது உங்களின் முதல் காரியமாக இருக்க வேண்டும்!

அதை எப்படிக் கண்டுபிடிப்பது?

 

 

நான்கு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்:

  • எதை நான் விரும்புகிறேன்?
  • எதில் நான் சிறந்து விளங்குகிறேன்?
  • இப்போது எந்த வேலையில் எனக்குப் பணம் கிடைக்கிறது?
  • உலகத்தின் இன்றைய தேவை என்ன?

இந்த நான்கையும் இணைத்து உங்களின் இகிகை எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

 

 

அதன் வழியில் உங்களின் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ளுங்கள். நீண்டகாலம் அமைதியாக சந்தோஷமாக வாழலாம். இது தான் ஜப்பானிய ரகசியம்!

ஹெக்டர் கார்சியா மற்றும் ஃப்ரான்செஸ்க் மிரல்லெஸ் ஆகியோர் (Hector Garcia & Francesc Miralles : Ikigai – The Japanese Secret to a Long and Happy Life) இகிகை பற்றிய தங்கள் நூலில் இகிகைக்காக பத்து விதிகளைத் தொகுத்துத் தந்துள்ளனர்.

 

 

  • எப்பொதும் செயலூக்கத்துடன் இருங்கள். ரிடையர் ஆகாதீர்கள்.
  • மிக மிக அவசரம் என்பதை விட்டு விடுங்கள்; சற்று மெதுவாக நிதானமாக வாழ்க்கையைக் கொண்டு செலுத்துங்கள்.
  • 80 சதவிகிதம் வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள்
  • நல்ல நண்பர்களை உங்களைச் சுற்றி இருக்க விடுங்கள்.
  • உங்கள் உடலை நல்ல உடல் பயிற்சியைத் தினசரி செய்வதன் மூலம் கட்டுக்கோப்புடன் அழகாக வைத்திருங்கள்.
  • புன்சிரிப்புடன் உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரையும் அரவணையுங்கள்
  • இயற்கையுடன் ஒன்றுங்கள்.
  • நமது நாளை ஜொலிக்க வைக்கும் எதற்கும், நமது வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ வைக்கும் எதற்கும் நன்றி தெரிவியுங்கள்.
  • நிகழ்காலத்தில் – இந்தக் கணத்தில் வாழுங்கள்

10) உங்கள் இகிகை படி வாழுங்கள்!

இன்னும் இகிகை பற்றிச் சற்றுப் பார்ப்போம்.

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

..

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டு வீசப்பட்டது. அணுகுண்டையும் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனையும் சம்பந்தப்படுத்தி அவர் தான் அணுகுண்டு வெடிக்கக் காரணம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் நேரடியாக அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தில் ஈடுபடவில்லை.

 

 

ஹிட்லர் மின்னல் வேகத்தில் ஆக்கிரமித்து நாடுகளைக் கைப்பற்றும் சமயத்தில் ஜெர்மனியில் அணுகுண்டு தயாரிக்கப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைப் பற்றிக் கவலைப்பட்ட லியோ ஜிலார்ட் மற்றும் யூஜின் விக்னர் (Leo Szilard and Eugene Wigner) ஆகிய விஞ்ஞானிகள் எதாவது செய்ய வேண்டுமென நினைத்தனர். ஜிலார்ட் அமெரிக்க ஜனாதிபதியான ருஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் ஐன்ஸ்டீனையும் கையெழுத்திடச் செய்தார். ஜிலார்டுக்கு அதிகாரவர்க்கத்திடம் செல்வாக்கு இல்லை என்பதே இதற்குக் காரணம்.

 

 

அணுகுண்டு சோதனை வெற்றி பெற்றது.

அணுகுண்டுகள் போடப்பட்டு இரண்டாவது உலக மகா யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது.

 

அணுகுண்டு போடப்பட்ட பின்னர் ஒரு வருடம் ஐன்ஸ்டீன் அதைப் பற்றிய கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு வருடம் கழித்து நியூயார்க் டைம்ஸ் அவரது கருத்தாக, “ரூஸ்வெல்ட் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் அணுகுண்டு போட அனுமதித்திருக்க மாட்டார்” என்பதை வெளியிட்டது.

 

 

ஐன்ஸ்டீன் பின்னர், “நான் அணுகுண்டை ஜப்பானுக்கு எதிராகப் பயன்படுத்துவதை எப்போதுமே எதிர்த்து வந்தேன்” என்று கூறினார்.

1954, நவம்பரில், ஐன்ஸ்டீன் இறப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் அவர் அணுகுண்டு தயாரிப்பு பற்றிய தனது முத்தாய்ப்பான கருத்தை இப்படிச் சொன்னார்: “ நான் எனது வாழ்க்கையில் ஒரு பெரிய தவறைச் செய்தேன். ரூஸ்வெல்ட்டிற்கான கடிதத்தில் அணுகுண்டு தயாரிக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்து கையெழுத்திட்டது தான் அது. ஆனால் அதிலும் ஒரு நியாயம் இருந்தது, ஜெர்மானியர்கள் அதை செய்யும் அபாயம் இருந்தது.”

(“I made one great mistake in my life… when I signed the letter to President Roosevelt recommending that atom bombs be made; but there was some justification – the danger that the Germans would make them.”)

ஐன்ஸ்டீன் செய்த தவறு என்று அவரே ஒத்துக் கொண்டது அணுகுண்டு தயாரிப்பு பற்றித் தான்!

***