
WRITTEN BY KATTUKKUTY
Post No. 9275
Date uploaded in London – – 17 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சந்திர கிரகணம்
பூமி சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையே ஒரே நேர் கோட்டில்
இருக்கும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது. இந்த நேரத்தில் உணவு வயிற்றில் இல்லாமல் இருப்பது நல்லது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கும், மந்திரங்களை
உரு ஏற்றுவதற்கும் சந்திர கிரகணமே சரியான நேரம்.

சந்திரனின் ஆதிக்கம் உள்ள இடங்கள்
சந்திர ஆதிக்கம் உள்ள இடம் நீர் நிலை. கருத்தொரு மிக்க காதலர்கள் சந்திக்குமிடம் அந்தக் காலத்தில் ஆற்றங்கரை,இந்தக்
காலத்தில் கடற்கரை…..
சந்திரனுக்கு “ஔஷதி” எனப்பெயருண்டு. மருத்துவ செடிகளுக்கும்
கொடிகளுக்கும், இரவில் அல்லி பூப்பதற்கும் சந்திரனே காரணம்.
சந்திர ஆதிக்கம் உள்ளநேரம் “இரவு . மயக்கும் மாலை பொழுதே நீ போ, போ, இனிக்கும் இன்ப இரவே நீ வா வா”.கணவன் மனைவி
சண்டைகள் எப்பேர்ப்பட்டதாயினும் மறையச்செய்வது இரவே!!!
சந்திர ஆதிக்கம் உள்ளவை அல்லி மலர் வில் மீன், மான்,வண்டு…!!ஆகையினால் “மான் விழியாளே” எனவும், “மீன் விழியாளே”எனவும், “பிறை போன்ற மதியாளே” எனவும் “வில்லினை ஒத்த புருவத்தாளே”எனவும் கண் கரு வண்டுபோலே எனவும், நிலவு போன்ற முகம் என்றும்,
“அல்லித்தண்டு போன்ற கால்கள் உடையவளே”என்றும் வர்ணிக்கிறார்கள்,கவிஞர்கள். ஏனெனில் கற்பனையும், கவிதையும் கலைஞர்களும் சந்திரவயப் பட்டவர்களே!!!
சந்தினுக்கு “மதி”என்றும் பெயர்…..இந்த மதிக்கதிபதி சந்திரனே!!!
ஆங்கிலத்தில் “LUNA “ என்பார்கள் இந்த மதி கெட்டால் தமிழில்
“கிறுக்கன்”என்றும் “பைத்தியம்” ஆங்கிலத்தில் “LUNATIC” என்றும்
கூறகிறார்கள்.”கண்டவுடன் காதல்”, புருஷன் மனைவி அடிக்கடி
சண்டை, விவாக ரத்து, குழாயடியில் சண்டை, இதற்கும் “மதி
கெட்ட” சந்திரனே காரணம்!!!
திருமண பொருத்தம் பார்க்கையில், பெண்ணினுடைய சந்திரன்
நிற்கும் நட்சத்திரத்திற்கும், ஆணினுடைய சந்திரன் நிற்கும்
நட்சத்திரத்திற்குமே பொருத்தம் பார்க்கிறார்கள்.ஏனெனில் மனோ
காரகனாகிய சந்திரன் பொருத்தமானால் “மனதிருந்தால் மார்கமுண்டு” என ஒற்றுமையாக வாழ்க்கை நடத்துவார்கள்.
சிலர் ஜாதகங்கள் பார்க்கையில் லக்னம் சரியாக இல்லாவிட்டால்
“விதி கெட்டால் மதியைப் பார்” என்று சந்திரனை லக்னமாக
வைத்து பலன் கூறுவர்.
திருமணம் முடிந்தவுடன், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும்
தம்பதியினர் உல்லாசப் பயணமாக “தேனிலவு” சென்று
திருப்திகரமாக, திட்டமிட்டு குடும்பம் நடத்தவதற்கும் சந்திரனே
காரணம்.
பௌர்ணமி நிலவில் அம்மா கையினால் பால் சோறும் அல்லது
மோர் சோறும் ஊர்க் கதைகளையும், மந்திர தந்திர பேய்க்கதை
களையும் கேட்டு மகிழாதவர்களே கிடையாது !!!
சாப்பிடாத குழந்தைகளை அம்மா இரவு வாசலில், முற்றத்தில், மாடியில்
நின்று கொண்டு அம்புலிமாமா வா் வா என்பாட்டுப்பாடி சாப்பிட
வைப்பது தாய்மார்களின் கை வந்த கலை
சந்தரனின் வேறு பெயர்கள்
இந்து, விது,அம்புலி,பதி, நிசாகரன்,திங்கள், அலவன்,சோமன், குமுத
நண்பன்,உடுபதி, ரஜினிபதி,சசி,ஆலோன்,சகி, முயிலன்கூடு, சுதாகரன்,களங்கன்,பிறை உடுவின் வேந்தன், கலாநிதி,சுகுபராக.

சந்திரனைப் பற்றிய விஞ்ஞான விவரங்கள்
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் 2 லட்சத்து,52 ஆயிரத்து
உள்ள தூரம். 225மைல்கள்
சந்திரன் தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுக்கும் நேரம். 27 நாட்கள்,7 மணி48.5நிமிடம்
சந்திரன் பூமியை சுற்ற எடுக்கும் நேரம். 29 நாட்கள்,22 மணி,
44 நிமிடம், 12 வினாடிகள்
சந்திரனுக்கு சுய ஒளி உண்டா? கிடையாது சூரிய ஒளியை
பிரதிபலிக்கிறது
சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்தது –
1969- ஆம்வருடம் ஜூலை. 20 – ம் தேதி நீல் ஆர்ம் ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின்.சென்ற கலத்தின பெயர் – அப்பல்லோ 11.
சந்திரனைப் பற்றிய மற்ற விவரங்கள்
சந்திரனின் தாய் / தகப்பனார். அத்திரி மகரிஷி/ அனசூயை
சகோதரர்கள் தத்தாத்திரேயன் / துர்வாசர்
சந்திரனின் மகன். புதன்(குருவின் மனைவி தாரைமூலமாக
பரி வேடன்
கோத்திரம் – ஆத்திரேயம்
காரகன் – மனோகாரகன், தாயார் காரகன்
குணம் – சாத்வீகம்
சுபாவம் -சௌமியம்
தேவதை – பார்வதி
ப்ரத்யதி தேவதை – கௌரி
பாலினம் – பெண்
நிறம் – வெண்மை
ஜாதி – வைசியர்
தானியம் – பச்சரிசி
ரத்தினம் – முத்து
உலோகம் – ஈயம்
சின்னம் – முயல்,வானவில்,மேகம்,மீன்
ருசி – உப்பு ருசி
திக்கு – வட மேற்கு
பாஷை. தமிழ்
மலர் – வெள்ளரளி
பூதம் – நீர்
ருது – வர்ஷ ருது
மண்டலம் – சூரம்
உடல் அங்கம் – தோல்
நாடி – சிலேத்துமம்
சமித்து -முறுக்கு
தாது – ரத்தம்
தேசம் – யமுனா தேசம்
ராகம் – பைரவி
ஸ்வரம் – ம
ஆட்சி – கடகம்
உச்சம் – ரிஷபம்
நீசம் – விருச்சிகம்
நட்பு ராசிகள் – மிதுனம், சிம்மம் , கன்னி
நட்பு கிரகங்கள் – சூரியன், புதன்
சம கிரகங்கள் – செவ்வாய்,சூரியன்,குரு,சனி, சுக்கிரன்
பகை – ராகு, கேது
திசா ஆண்டுகள் – 10 ஆண்டுகள்
நட்சத்திரங்கள் – ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்

சந்திர ஷேத்திரங்கள்
சைவ சமய குரவர்களில் மிக வயதானவர் திரு நாவுக்கரசர். அவர்ஒரு
ஊருக்குள் நுழையும் போது, திரு நாவுக்கரசர், தண்ணீர் பந்தல், திருநாவுக்கரசர் சத்திரம், திருநாவுக்கரசர் பசு மாடு, திரு நாவுக்கரசர்
என எல்லாவற்றிற்கும் பெயரிடப்பட்டிருந்தது.ஆச்சரியப்பட்ட அவர்
விசாரித்து எழுதியவரின் வீட்டிற்கு சென்று விசாரிக்க, அவர் திடீரென
காலில் விழுந்து, நீங்களும் சிவனடியார் தானே, இவரைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லையா??? அவர் தொண்டு மாதிரி உலகில் யாரும் செய்யவில்லை. அவரை காணும் பாக்கியம் எனக்கு கிட்டவில்லை, இருந்தாலும், அவர் பெயரிட்டு வீடு சத்திரம், தண்ணீர் பந்தல் வைத்து ஆறுதலடைகிறேன்”, என்றார்.
நீங்கள் குறிப்பிட்ட அந்த சிவனடியார் நான் தான் எனக் கூறினார் அப்பர் . அந்த சிவனடியார், தடாலென்று காலில் விழுந்து’ என் பாக்கியமே, பாக்கியம் என் பெயர் அப்பூதி அடிகள் என் வீட்டில் தங்கி உணவருந்த வேண்டும்’ என வேண்டிக் கொண்டார் . தன் மனைவியையும், தன் குழந்தையையும் அப்பர் காலில் விழுந்து ஆசி வழங்கச் செய்தார்.
மகனின் பெயர் கூட திரு நாவுக்கரசு தான்!!! சாப்பிட இலை பறிக்க
சென்ற மகனை பாம்பு கடித்து இறக்க கணவனும் மனைவியும் பதறி
வாழை இலையால் மூடி மறைத்து கண்ணீர் வந்ததை மறைத்து
சிவனடியாருக்கு இலை போட்டனர். அமர்ந்த திரு நாவுக்கரசர்,
உங்கள் மகனையும் என் அருகில் அமரச் செய்யுங்கள் எனக் கூறினார்
கண்ணீர் மல்க அவன் வரமாட்டான் . பாம்பு கடித்து இறந்தான், எனகூற “நீத்தார் பதிகம்” என சிறுவனின் உடலைக் கிடத்திப் பாட
உயிரோடு எழந்தான் திருநாவுக்கரசு என்ற சிறுவன்.
அப்பேர் பட்ட
இடமே அப்பூதி அடிகளின் பிறந்த ஊரான “திங்களூர்”எனப் படும்
சிவ ஸ்தலம் !!! சந்திரனின் சாபம் தீர்ந்த இடம். சந்திர தோஷம் உடையவர்கள் அங்கு சென்றாலே சந்திர தோஷம் தீரும்
- திங்களூர்
- திருப்பதி இந்த ஸ்தலம் பற்றி திருமதி பிருஹன் நாயகி சத்ய நாராயணன் அவரகள் அருமையாக விவரித்திருக்கிறார்கள் tamilandvedasa.com ல் கண்டு மகிழ்க.
- நவ திருப்பதிகளில் ஒன்றான வர குண மங்கை
- நவ கைலாசங்களில் ஒன்றான சேரன் மா தேவி
- சென்னை அருகில் உள்ள சோமங்கலம்
சந்திர காயத்திரி
பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தன்னோ ஸோம: ப்ரசோதயாத்
சந்திரனின் ஸ்லோகம்
ததிஸங்க துஷாராபம் ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி ஸசினம் ஸோமம் ஸம்போர்மகுட பூஷணம்
மன அமைதியையும், மந்திர சக்தி சித்திக்கவும், வசீகர சக்தியையும் முக அழகையும் பெற சந்ததிரனை வணங்கி பெரும் பேறு பெற வாழ்த்தி வணங்கி விடை பெறுகிறேன். நன்றி, வணக்கம்

***
PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM FOR SRINIVASAN’S TALK.
***
tags- சந்திரன்-2, அம்புலி மாமா-2,