தள்ளாத வயதில் பொல்லாத ஆசை! (Post No.4997)

Compiled by London Swaminathan 

 

Date: 10 May 2018

 

Time uploaded in London – 13-25 (British Summer Time)

 

Post No. 4997

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

2300 ஆண்டுகளுக்கு முன்னர், ரோமானிய செனட்டர் (ஆட்சி சபை உறுப்பினர்) கேடோ(CATO) வின் மனைவி இறந்தாள். உடனே கேடோ ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

 

அவரது மகன் கேட்டான்

அன்புள்ள அப்பா! நான் உங்களுக்கு என்ன தீங்கு இழைத்தேன்?

இப்படி ஒரு சின்னம்மாவைக் கொண்டு வந்திருக்கீறீர்களே!

 

கேடோ சொன்னார்

அன்புமிக்க மகனே!  நீ எனக்குப் பேரானந்தம் தருகிறாய்; இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆனந்தம் பெறவே சின்னம்மாவைக் கூட்டி வந்தேன்.

XXXXX

 

மாமியாரைத் தள்ளிவிட அருமையான பள்ளம்!

உலகின் மிக பிரம்மாண்டமான இயற்கை அதிசயம் அமெரிக்காவில் உள்ளது. அதன் பெயர் மாபெரும் ஆற்றுக் குடைவரை (GRAND CANYON). பல லட்சக் கணக்கான ஆண்டுகளாக கொலராடோ நதி ஓடி, ஓடி அறுத்த பள்ளம் அது. அதன் உச்சியில் இருந்து கீழே பார்த்தால் மனிதனின் சிறுமையும் இயற்கையின் மஹிமையும் புரியும்; புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானம் உண்டானதைப் போல, பித்தனுக்கும் கூட தத்துவ ஞானம் பிறக்கும். அப்பேற்பட்ட இயற்கை அதிசயம்.

 

இரண்டு தளபதிகள் அங்கே சந்தித்தனர்; ஒருவர் முதல் உலக மஹா யுத்தத்தில் பிரெஞ்சுப் படைகளின் தளபதி– அவருடைய பெயர் மார்ஷல் போச். (MARSHAL POCH) அவருடன் அமெரிக்க தளபதி கர்னல் ஜான் வைட் (COLONEL JOHAN R. WHITE) இருந்தார். இருவரும் இயற்கை அதிசயத்தின் ஆழ, அகல, உயரத்தைக் கண்ணால் அளந்தனர்.

 

கர்னல் வைட் நினைத்தார். நேச நாடுகளின் மாபெரும் தளபதியிடம் கருத்துக் கேட்போம்; அவர் சொல்லுவதை வருங்கால சந்ததியினர் அறிய பொன்னேட்டில் பொறிப்போம் என்று கருதி

“மார்ஷல், இது பற்றி தாங்கள் எண்ணுவது என்னவோ?” என்றார்.

 

மார்ஷல் சொன்னார்:

“என்ன அருமையான இடம்! மாமியார்களைத் தள்ளிவிட இதை விட ஆழமான பள்ளம் இல்லவே இல்லை!!!

XXXXXXX

அட 2 மனைவியா!! உனக்கு அதிர்ஷ்டமப்பா!

பிரிட்டனில் பிரபுக்கள் சபையில் லார்ட்/பிரபு ரஸ்ஸல் இருந்தார்.

அவரிடம் ஒருவர் ஆலோசனை கேட்டார்.

 

இருதார மணம் புரிவோருக்குக் கடுமையான ஒரு தண்டனையைச் சொல்லுங்கள்.

ரஸ்ஸல் பிரபு சொன்னார்,

அடச்சீ, நீ, தள்ளிப்போ!

 

இரண்டு மாமியார்களை விட பெரும் தண்டனையும் உண்டா?

XXXX

அதிக விசுவாசம் ஆபத்து!

ஒரு நாள் ஒரு பெண்மணிக்கு அதி பயங்கர கோபம்! நள்ளிரவைத் தாண்டியும்  கணவன் வீடு திரும்பவில்லை.

 

உடனே கணவரின் ஐந்து நண்பர்களுக்கும் தந்தி அடித்தார்.

 

ஜாக் (JACK), இன்னும் வீட்டிற்கு வரவில்லை; கவலையாக இருக்கிறது. அவர் இன்றிரவு உங்களுடன் தங்குகிறாரா?

 

இந்த தந்திக்குப் பதில் வரும் நேரத்தில், துரதிருஷ்டம் பிடித்த ஜாக் வீட்டுக்குள் நுழைந்தார்! ஐந்து விசுவாச நண்பர்களும், “ஆமாம், ஆமாம், ஜாக் எங்களுடன்தான் தங்குகிறார்” என்று வெவ்வேறு இடங்களில் இருந்து பதில் கொடுத்தனர் (அவரைக் காப்பாற்றும் முகத்தான்).

 

கணவனுக்கு செமை அடி!!!

 

XXXXXXXXXXXXXXXXXXXXX

ஒரு இளம் பெண் தேவை!

ஒரு மனைவி கணவன் படித்துவிட்டுக் கீழே போட்ட பத்திரிக்கையை எதேச்சையாக எடுத்தார்.

 

“ஏ வில்பர், நீயா பேனாவை வைத்து விளம்பரங்கள் மீது வட்டக் குறி (CIRCLED) போட்டு வைத்திருக்கிறாய்?

 

கணவன்;ஹலோ, டார்லிங்! என்ன விளம்பரம் அது? நினைவில்லையே!

 

“தனிமையில் வாடும் ஒரு ஆணுக்கு, ஒரு இளம் பெண் தேவை” என்ற விளம்பரம் எல்லாம் சர்க்கிள் போட்டு இருக்கிறதே! என்றாள் வயதான மனைவி.

 

கணவன்    -????????????????????

XXXX

மனிதர்கள் அயோக்கியர்கள்!!

ஒரு முறை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பிரபல டாக்டர் ரிச்சர்ட் செய்ன் என்பவரிடம் ஒருவர், மனிதப் பிறவிகளைப் பற்றிப் பேசி,  மிகவும் புகழ்ந்து தள்ளினார்.

அவரோ இடை மறித்துச் சொன்னார்

‘த்சு, த்சு த்சு அச்சச்சோ!’

மனிதர்கள் அயோக்கியர்கள். ஓடு காலிகள்; அப்படியில்லாவிடில் இவ்வளவு சட்டங்களும், இவ்வளவு மதங்களும் தேவைப் பட்டிருக்குமா?

 

XXX subham XXXX