இயேசு இறந்தது காஷ்மீரிலா? -1

jesus 1

இயேசு மரணம் பற்றிய ஆய்வு

இயேசு இறந்தது காஷ்மீரிலா?! -1

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 24 September 2015

Post No: 2184

Time uploaded in London :– 8-07 am

(Thanks  for the pictures) 

 

.நாகராஜன்

jesus 2

பியர்ஸ் ஜெர்விஸ்: இயேசு இந்தியா வந்தார்

இயேசுவின் மறைவு குறித்துக் காலம் காலமாக ஏராளமான புத்தகங்கள் வெளியாகி வந்துள்ளன. வெளியாகி வருகின்றன.

இந்தப் புத்தகஙள் அனைத்துமே  ஏராளமான ஆதாரங்கள் பலவற்றைத் தருவதால் தான் இந்த விஷயம் குறித்து அனைவரும் ஆவலுடன் இன்று வரை படிக்கின்றனர்.

‘Naked They Pray’ என்ற புத்தகத்தை Pearce Gervis என்பவர் எழுதியுள்ளார். கங்கை நதிப் பகுதியில், கங்கையில் சுற்றி வர நீர் ஓட நடுவில் தீவு போன்ற ஒரு பகுதியில் ஏராளமான சாதுக்களைத் தான் கண்டதாகவும் அவர்களில் பலர் ஆயிரம் வருஷங்களுக்கு மேல் வாழ்ந்து வருவதாகவம், தான் சந்தித்த ஒருவர் பல நூறுஆண்டுகள் வயதானவர் என்று அவர் குறிப்பிடுகிறார்.

அவர் இயேசுவைப் பற்றித் தனது புத்தகத்தில் 72ஆம் பக்கத்தில் குறிப்பிடுவது  இது:-

“I know that there was a belief, now among many peoples, that Jesus Christ, between the age of twelve and twenty-nine was in India, his years there being recorded in Hindu and Buddhist Shastras as well as in certain Yoga manuscripts; that he went to Puri, to South India, and Banares to study the Vedas and Laws of Manu, to the Himalayas where it is said that he studied in the solitary places the different paths of liberation, the art of contemplation and meditated there until found the perfect realization of this oneness with GOD.”

இயேசு கிறிஸ்து இந்தியா வந்ததை இது போன்ற பல நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆன்மீக பொக்கிஷங்களை இங்கிருந்து அவர் அள்ளிச் சென்றதும் தெளிவாகிறது.

பியர்ஸ் ஜெர்விஸ் மட்டுமல்ல, இன்னும் பல ஆராய்ச்சியாளர்கள் இயேசுவின் இந்திய வருகை பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்!

jesus 3

 நிகோலய் நோடோவிச்சின் ஆய்வு

நிகோலய் நோடோவிச் (Nicolai Notovich)  என்ற ரஷியர் இந்திய இயல் பற்றி ஆராய்ந்த ஒரு ஆராய்ச்சியாளர். தன் ஆய்வுகளுக்காகப் பல முறை அவர் இந்தியா வந்துள்ளார். 1887ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்த போது ஜோஜி-லா (Zoji la pass) கணவாயில் புத்த மடாலயம் ஒன்றில் விருந்தாளியாகத் தங்கினார். அங்கிருந்த புத்த குரு ‘ஈசா’ வைப் பற்றிய பல விவரங்களைத் தந்தார். பைபிள் சொல்வதும் இந்து மதம் உபதேசிக்கும் கருத்துக்களும் ஒன்றாக இருப்பதைக் கண்ட அவர் ஈசா என்பது இயேசு என்பதை ஊகித்து மேற்கொண்டு ஆராயலானார்.

16 ஆண்டுகள் மேரியுடன் இயேசு கிறிஸ்து, துருக்கி, பாரசீகம், மேற்கு ஐரோப்பா, (ஒருவேளை இங்கிலாந்திலும் கூட), பயணப்பட்டு காஷ்மீருக்கு அருகில் உள்ள ஒரு இடத்தை வந்தடைந்தார்.அங்கு மேரி மரணமடைந்தார். காஷ்மீரிலேயே வாழ்ந்த இயேசு மக்களுக்கு நல்வழி போதித்தார்; அங்கேயே மரணமடைந்தார்.

சிலுவையில் அறைந்த பிறகு உயிர் பிழைத்த இயேசு நிஸிபிஸ் அரசாங்க அழைப்பை ஏற்று நிஸிபிஸுக்கு வந்ததாக பாரசீக அறிஞரான எஃப் முகம்மது (F.Mohammed) தனது நூலான ஜமி-உத்-டுவாரிக் (Jami-ut-tuwarik) என்ற நூலில் தெரிவிக்கிறார். இந்த இடம் துருக்கியில் நுசேபின் (Nusaybin(( என்று அழைக்கப்படுகிறது. இதே கருத்தை இமாம் அபு ஜஃபார் முகம்மத் என்பவர் தனது டஃப்ஸி- இபின் – இ – ஜமீர் –அட் – டுப்ரி (Tafsi-Ibn_i-Jamir-at-tubri) என்ற நூலில் வலியுறுத்துகிறார்.

இந்தக் கருத்துக்கள் சரிதானா என்பதைப் பலரும் ஆராயப் புறப்பட்டனர்.

jesus 4

ஜெர்மானியர் கெர்ஸ்டனின் நூல்

ஹோல்ஜெர் கெர்ஸ்டென் (Holger Kersten) என்பவர் ஒரு ஜெர்மானியர். இவர் ஜெர்மானிய மொழியில் ‘Jesus Lived in India’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதில் முகம்மது மற்றும் அபு ஜஃபார் முகம்மத் ஆகிய இருவரின் கருத்துக்களும் சரியே என்று அவர் கூறுகிறார். துருக்கியிலும் பாரசீகத்திலும் கூறப்படும் ‘யுஸ் ஆஸப்‘ தான் இயேசு என்று கெர்ஸ்டன் தன் ஆய்வில் கண்டுபிடித்தார்.

மேலும், இயேசு காஷ்மீருக்கு வந்து பல காலம் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தார் என்றும் கெர்ஸ்டன் கூறுகிறார்.

இப்படிப் பல ஆய்வாளர்கள் இயேசு காஷ்மீரில் இறந்தார் என்று கூறும் போது இயேசு இறந்த இடம் பற்றிய குறிப்பு ஏதாவது உள்ளதா என்ற சுவாரசியமான கேள்வி எழும்புகிறது.

இயேசு கிறிஸ்துவின் கல்லறையையே கண்டு பிடித்து விட்டோம் என்றார் இன்னொரு ஆய்வாளர்.

இன்றும் அந்தக் கல்லறை இருக்கிறது. அது பற்றி இன்னொரு கட்டுரையில் காண்போம்.

*******************