
Post No. 8317
Date uploaded in London – – –10 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தியாவில் இரண்டாம் தரக் குடிமக்களாக ஹிந்துக்கள் இருக்கும் அவலம்!
ச.நாகராஜன்

ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழும் அவலம் மிகக் கேவலமான ஒன்று.
மிகப் பழம்பெரும் பண்டைய வேதங்கள், இதிஹாஸ புராணங்கள், தர்ம சாஸ்திரங்களின் வழி காட்டுதலின் படி ஹிந்துக்கள் வழி வழியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஹிமாலயம் முதல் குமரி முனை வரை ஆயிரக் கணக்கில் ஆலயங்கள், புனித தீர்த்தங்கள், நதிகள், மலைகள், மகான்களின் சமாதிகள் போன்றவை உள்ளன.
இவை அனைத்தையும் மதித்து அதன் புனிதம் கெடாமல் பாதுகாக்க வேண்டிய கடமை ஹிந்துக்களுக்கு உண்டு.
இந்த அரசாங்கத்திற்கும் உண்டு.
ஆனால் நடப்பது என்ன?
ஹிந்துக்களின் நிலையை சற்று விரிவாக அலசிப் பார்ப்போம்.
- குர் ஆனை அரசுப் பள்ளிகளில் கற்பிக்கலாம்; ஆனால் வேதம் உள்ளிட்ட ஹிந்து புனித நூல்களை பள்ளிகளில் கற்பிக்கக் கூடாது.
- கீதையை ஒரு பள்ளியில் சொல்லித் தந்தால் வகுப்புவாதம் மதவாதம் என முத்திரை குத்தப்படுகிறது.
- பைபிளுக்கும் குர் ஆனுக்கும் இந்த மதவாதம் கிடையாது. அது மைனாரிடி ரைட்ஸ்! செகுலரிஸம்!!
- அமர்நாத்திற்குச் செல்ல ஒரு ஹிந்து அரசுக்கு வரி கட்ட வேண்டும்.
ஆனால் ஹஜ் யாத்திரை செல்ல முஸ்லீம்களுக்கு அரசே மானியம் தரும்!
- கல்கத்தாவில் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் முஸ்லீம்களுக்கு மட்டும் தனியாக – பிரத்யேகமாக – நான்கு ஹாஸ்டல்கள் உண்டு. ஆனால் ஹிந்துக்களுக்கு இப்படி தனிச் சலுகைகள் ஏதும் கிடையாது!
- முஸ்லீம் மாணவிகள் போர்டு தேர்வில் பாஸ் செய்தவுடன் அவர்களுக்கு அரசு ஸ்காலர்ஷிப் உண்டு. ஆனால் ஹிந்து மாணவிகளுக்கு அப்படி ஒரு சலுகையும் கிடையாது.
- பிரைமரி எஜுகேஷன் மட்டத்தில் 50 % மதிப்பெண்கள் எடுத்த ஒரு முஸ்லீம் மாணவிக்கு பணச் சலுகை உண்டு. ஆனால் அதே தேர்வை எழுதி 95% மதிப்பெண்கள் பெற்ற ஒரு ஹிந்து மாணவிக்கு அந்தச் சலுகை கிடையாது!
- விசேஷ வட்டியில்லாக் கடனுதவி முஸ்லீம் மாணவ,மாணவியருக்கு உண்டு.
ஹிந்து மாணவ, மாணவியருக்குக் கிடையாது!

9. ஹிந்துக் கோவில்கள் அதில் அதற்கு வரும் பணத்திற்கு – வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும். ஆனால் ஒரு சர்ச்சோ, ஒரு மசூதியோ அதற்கு வரும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டாம்!
10. ஹிந்து ஆலயங்களின் வருவாயை அரசு மனம் போன போக்கில் ஆலயத்திற்கு அல்லாமல் இதர வழிகளில் செலவழிக்கலாம். ஆனால் மசூதி, சர்ச் வருவாயைத் தொடக் கூட முடியாது.
11. பூனை, ஆடு, நாய் ஆகிய விலங்குகளின் பாதுகாப்பைப் பற்றிப் பேசி அதற்கான உதவியைச் செய்தால் நீங்கள் ஒரு சமூக நல ஆர்வலர். ஆனால் அதே சமயம் பசுவை வதை செய்யாதே என்று சொன்னால் நீங்கள் ஒரு மதவாதி.
12. பாரத் மாதா கீ ஜெய் என்று சொன்னால் நீங்கள் ஒரு அரசியல் வாதி!
தேசபக்தர் இல்லை. வந்தேமாதரம் கீதத்தைப் பாடினால் நீங்கள் செகுலரிஸத்திற்கு எதிரி. ஆனால் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொன்னால் அது பேச்சு சுதந்திர உரிமை. அதை யாரும் பறிக்கக் கூடாது!
13. M.F. ஹுஸைன் சரஸ்வதியை நிர்வாணமாகவோ அல்லது இன்னும் கேவலமாகவோ வரையலாம். சென்னை லயோலா கல்லூரியில் ஹிந்து தெய்வங்களை எவ்வளவு இழிவு படுத்தி கண்காட்சி நடத்த முடியுமோ அவ்வளவு நடத்தலாம். கம்யூனிஸ்டுகள் துர்க்காதேவியை ‘செக்ஸ் ஒர்க்கர்’ என்று பேசலாம். ஒரு நடவடிக்கையும் கிடையாது. ஆனால் அதே சமயம் நபியைப் பற்றியோ ஏசு பற்றியோ யாரும் ஒரு வார்த்தை தவறாகப் பேசக் கூடாது. நபிகளின் படத்தைத் தெரியாமல் – விவரம் அறியாமல் – பிரசுரித்ததற்காக கலாட்டா, கல்லெறி, பத்திரிகை அலுவலக மறியல் எல்லாம் நடந்தது உண்டு. ஆனால் ஹிந்துக்களை இழிவு படுத்தும் ஊர்வலங்கள், கண்காட்சிகள் நடத்த தாராள அனுமதி உண்டு. ஏனெனில் செகுலர் தேசத்தில் இதற்கு உரிமை உண்டு!
அடடா, என்ன ஒரு செகுலரிஸம்!
என்ன ஒரு ஹிந்து எதிர்ப்பு மனப்பான்மை!
என்ன ஒரு தாழ்வாக மூன்றாம்தரக் குடிமகனாக ஹிந்து பெரும்பான்மை நாட்டில் ஹிந்துக்கள் வாழ வேண்டியிருக்கிறது?!
ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்; தங்கள் குழந்தைகளுக்கு இது பற்றிச் சொல்ல வேண்டும்!
நாளைய இந்தியாவிலாவது சம உரிமை பெற்ற ஹிந்துவாக வாழ வழி செய்ய வேண்டும்!
சிந்திப்போமா, செய்வோமா?!

tags — இரண்டாம் தரக் குடிமக்கள், ஹிந்துக்கள்